வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்

12-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெரிய இடத்து தயாரிப்பு என்றாலும், புதுமுக இயக்குநர் என்பதால் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் சென்றோம்.. படமும் அப்படித்தான் இருக்கிறது..!

 

ஏதோவொரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கச் சென்னைக்கு வருகிறார் சிவா. அதே நேரம் தன்னுடைய புகைப்படத் துறையின் ஆர்வத்தில், தமிழகத்தையே புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு தமிழகம் வருகிறார் லண்டன்வாசி பிரியா ஆனந்த். இவர்கள் இருவரிடமும் வீடு வாடகைக்கு உங்களுக்குத்தான் என்று சொல்லி நடுத்தெரு நாராயணன் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப்பாகிவிடுகிறார். இருவருமே ஒரே வீட்டில் தங்க வேண்டி வருகிறது.. 

அந்த அபார்ட்மெண்ட்டிலேயே குடியிருக்கும் லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஊர்வசியின் ரப் அண்ட் டைப் கேரக்டரை பார்த்து நாங்க ரெண்டு பேரும் தம்பதிகள் என்று பொய் சொல்லிவிடுகிறார்கள். வீட்டு ஓனர் வந்து தாம்தூம் என்று குதிக்கும்போது வாடகையை கரெக்ட்டா தந்திருவாங்க என்று சொல்லி ஊர்வசி காப்பாற்றுவதால் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி வாங்கி வேண்டும் என்ற காரணத்துக்காக ஒரே வீட்டில் தொடர்ந்து இருக்கிறார்கள். 

இடையில் பிரியா மீது சிவாவுக்கு காதல் வர.. அதே நேரம் பிரியா ஆல்ரெடி ஒரு காதலனுக்காக காத்திருப்பது தெரிய வர.. இவர்களது காதல் ஜெயித்ததா..? அந்த நடுத்தெரு நாராயணன் சிக்கினானா..? கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கிடைத்ததா என்பதெல்லாம் மிச்சம் சொச்சக் கதை..!

இதுலேயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே.. இது ரொம்ப ரொம்பச் சாதாரணமான கதைதான்.. எடுத்தவிதமும் ரொம்ப ரொம்ப சாதாரணம்தான்.. ஏதோ ஆங்காங்கே.. அப்பப்போ லைட்டா சிரிக்க வைக்கிறாங்க.. அவ்ளோதான்.. இது மாதிரியான நாடகத்தன்மையுடனான காட்சிகளையும், இயக்கத்தையும் பார்க்கும்போது இயக்குநர் இன்னும் தொட வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னு தெரியுது..!

லண்டன்ல பெரும் பணக்காரக் குடும்பத்துல பொறந்த பொண்ணு வெறும் 50000 ரூபாய்க்காக இங்க வீட்ல இருக்கேன்னு சொல்றதும்.. தேனில சாதாரண மலையோர குக்கிராமத்துல இருக்குற சிவா.. சென்னைக்கு ஓடி வந்து.. அதுவும் இவ்ளோ பெரிய ரிச்சான வீட்டுல இருக்கிறதும்.. அவங்கம்மா ஊர்ல தையல் மெஷினை வைச்சு ஓட்டிக்கிட்டிருக்கிறதையும் பார்த்தா.. கதை, திரைக்கதையோட ஒட்டவே இல்லை..! 

சிவா வழக்கம்போல அப்படியேதான் நடிச்சிருக்காரு.. என்னது இன்னிக்கு நைட்டே கிளம்புறியா..? என்னது நீயும் ஊருக்கு வர்றியா..? என்று சர்வசாதாரணமாக காமெடியன் கேரக்டர் கேட்பதை போல ரியாக்சன் கொடுக்கும சிவா அண்ணே.. எப்போ ஹீரோவா நடிப்பாருன்னு தெரியலை..! சீக்கிரமா அப்படி மாறினாத்தான் இன்னும் 10 வருஷத்துக்கு கோடம்பாக்கத்துல ரோடு போட முடியும்..! அப்பப்போ சின்னச் சின்னதா சிரிக்க வைக்கிற இந்த வித்தையே போதும்ன்னு நினைச்சா.. ம்ஹூம்.. அவருக்கே இது நல்லதாயில்லை..!

பிரியா ஆனந்த்.. ஹீரோயினின் அறிமுகமே தேவையில்லாத மாதிரி ஒரு காட்சில திடீர்ன்னு அறிமுகமாகுறாரு.. ஷட்டப் என்ற வார்த்தையை படம் முழுக்க அவ்வப்போது சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.. கோபப்படும்போது மட்டும்தான் நடிப்பை பார்க்க முடியுது..! அவரது அழகை காட்டுற மாதிரி ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எந்த ஷாட்டையும் வைக்கலை..! பாடல் காட்சிகளில் டிரெஸ்ஸிங்சென்ஸ் ஓவராகி நம் கவனம் திசை திரும்பியதுதான் மிச்சம்..!

நடுத்தெரு நாராயணனாக சந்தானம்.. இடைவேளைக்கு மிகச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் என்ட்ரியாகுறார்.. அதே மாதிரிதான்.. 2 வரி.. 3 வரில கமெண்ட் செஞ்சு சிரிக்க வைக்குறாரு.. “உன் வாழ்க்கையே அங்க டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.. இங்க உனக்கு ஃபுல்லு கேக்குதா..?” என்று சின்னச் சின்னதா இவர் கொடுக்குற பஞ்ச்சுலதான் இடைவேளைக்குப் பின்பு உட்காரவும் முடிகிறது..! 

அட்வான்ஸ் வாங்கினது நாராயணன்.. அதைப் பத்தி வீட்டு ஓனரும் கவலைப்படலை.. அவ்ளோ பெரிய குடியிருப்புல சட்டுன்னு யாராச்சும் குடி வந்திர முடியுமா..? வீட்டு ஓனருக்கோ.. குடியிருப்பு அஸோஸியேஷனுக்கோ தெரியாமல் ஒண்ணும் செய்ய முடியாது.. சரி.. லாஜிக் பார்க்க வேணாம்.. விட்ரலாம்..! லண்டன்ல பொறந்து வளர்ந்த பொண்ணு.. இங்க ஒரு பிளாட்ல ஒரு ஆம்பளையோட வீட்டை ஷேர் பண்ணிக்கிறான்னு சொல்லிட்டாலும் ஒண்ணும் தப்பில்லை. இதுல அதை மறைக்கவும் ஒரு ஆண்ட்டியை வைச்சுக்கிட்டு இவங்க படுத்துற பாடு.. தேவையா..? 

ஏற்கெனவே ஒருத்தனை லவ் பண்ணிக்கிட்டிருக்கேன். அவனைத்தான் கல்யாணமும் செஞ்சுக்க போறேன்னு சொல்ற பொண்ணு.. எதுக்காக திடீர்ன்னு டிராக் மாறி சிவாவை விரும்பணும்..? அப்படி முடியுமா..? சிவா எதுக்காக இன்னொருவரின் காதலியை ஒருதலையா காதலிக்கணும்..? அவ்ளோ பெரிய வீட்ல ஒரு பாத்ரூம், டாய்லெட்டா இருக்கப் போகுது..? டபுள், டிரிபுள் பெட்ரூமா இருக்க வேண்டிய வீடு.. இதுல அவங்க டைம் டேபிள் போட்டு பாத்ரூமையும், பெட்ரூமையும் யூஸ் பண்ணிக்கிறாங்கன்னு சொல்றதெல்லாம் டூ மச்சு..! அபார்ட்மெண்ட் வீடு மாதிரி செட் போட்டு எடுத்திருக்காங்கன்னு நல்லாவே தெரியுது.. செட்டுன்றதே போட்டதே தெரியக் கூடாதுன்னு சொல்வாங்க..! இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க யோசிச்சா தலைவெடிச்சு செத்துருவன்னு சாபம் விடுவாங்கன்றதால இத்தோட நிறுத்திக்கிறேன்..!

ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமென்றாலும் இதனாலேயே படம் ஓடிரும்ன்னு என்னால சொல்ல முடியாது.. அந்தத் மலையோர கிராமத்தை படம் புடிச்சதுக்காக மட்டும் மனுஷனை ரொம்பவே பாராட்டணும்..! இசை அனிருத்தாம்.. முதல் 2 பாடல்கள் எதுக்காக வந்துச்சுன்னே தெரியலை.. கடைசி 2 பாடல்களும் ஏன் போட்டாங்கன்னும் தெரியலை.. அந்த அளவுக்கு காட்சிகளுடன் ஒன்றாமல் ஏதோ ஸாங் போட்டாகணுமேன்னு நினைச்சு எடுத்திருக்காங்க போலிருக்கு..! 

படம் முடிஞ்ச பின்னாடி சென்னை கேங்பேங்குன்னு சொல்லி ஒரு பாட்டு ஓடுது.. இதுக்கே எப்படியும் லட்சத்துல செலவு பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்குப் பதிலா இதைவிட நல்ல கதையா தயாரிக்க ஸ்டோரி டீமுக்கு டயத்தையும், பணத்தையும் கொடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும்..! 

முதல் பட இயக்குநர்.. அதுலேயும் பெண் இயக்குநர்.. பெண் இயக்குநர்களே இப்போ குறைவா இருக்குற சூழல்ல.. இப்படியாச்சும் ஒருத்தர் உள்ளாற வரட்டுமேன்னு நினைச்சீங்கன்னா கிருத்திகா உதயநிதிக்கு மோஸ்ட் வெல்கம் டூ தி கோடம்பாக்கம்ன்னு வாழ்த்துறேன்..! அடுத்தடுத்த படங்கள்ல அவங்க தன்னோட திறமையை மேம்படுத்தி இதைவிடவும் சிறப்பா கொடுக்கணும்னு எதிர்பார்ப்போம்..!

இந்தப் படத்துக்கு வரிவிலக்கு இல்லைன்னு அரசுத் தரப்பு சொல்லியிருக்கிறது பச்சை அயோக்கியத்தனம்.. இத்திட்டம் அமலில் இருக்கின்றவரையில் அதை சரிவர செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஜெயதலிதா இன்னமும் தனி மனித விரோதத்திலேயே ஆட்சி நடத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..! இந்த ஆட்சிக் காலத்தில் இதுவரையில் ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் படங்களுக்கு வரி விலக்கு கிடைப்பதே பெரும் பிரச்சினையாக இருக்கிறது..! இதையெல்லாம் கோடம்பாக்கத்தில் சங்கம் வைத்திருப்பவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் அடுத்த முறை ஆட்சி மாறி இவரோட அப்பா சி.எம்.மா ஆகிட்டாருன்னா... இதே சங்கத்துக்காரங்க விடியற்காலை நேரத்துலேயே வீட்டு வாசல்ல வந்து நிப்பாங்க.. அப்போ உதயநிதி அவங்ககிட்ட பேச வேண்டியது நிறையவே இருக்கும்ன்னு நினைக்கிறேன்..! 

எனிவே.. நிச்சயம் ஒரு தடவை பார்க்கக் கூடிய படம்தான்..!  நேரமும், வாய்ப்பும் கிடைச்சா பாருங்க தோழர்களே..!

6 comments:

Manimaran said...

நடுநிலையான விமர்சனம். அருமை.இந்தப்படத்துக்கும் வரிவிலக்கு இல்லையா..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

மிஸ்சியம்மா கதைய அப்படியே ரீமேக் செய்திருந்தாக்கூட நல்லா இருந்திருக்கும் :-))

இந்தியில இது போல நிறைய காமெடி படம் வந்திடுச்சு.

ஒரு வீட்டுல குடியிருக்க கணவன் மனைவியா நடிக்கிற கதைய இன்னும் எத்தினி நாளுக்கு தான் எடுப்பாங்களோஆவ்வ்!

AAR said...

“உன் வாழ்க்கையே அங்க டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.. இங்க உனக்கு ஃபுல்லு கேக்குதா..?” என்று சின்னச் சின்னதா இவர் கொடுக்குற பஞ்ச்சுலதான் இடைவேளைக்குப் பின்பு உட்காரவும் முடிகிறது

--
This is the dialogue you liked? very classy.

உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

நடுநிலையான விமர்சனம். அருமை.இந்தப் படத்துக்கும் வரிவிலக்கு இல்லையா..?]]]

இல்லைன்றதுதான் பிரச்சினை ஸார்..! இந்தத் திட்டம் எனக்கும் பிடிக்கலைதான். ஆனால் அமலில் இருக்கும்வரையில் நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டுமே..? அதுதானே நியாயம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

மிஸ்சியம்மா கதைய அப்படியே ரீமேக் செய்திருந்தாக்கூட நல்லா இருந்திருக்கும் :-))

இந்தியில இது போல நிறைய காமெடி படம் வந்திடுச்சு. ஒரு வீட்டுல குடியிருக்க கணவன் மனைவியா நடிக்கிற கதைய இன்னும் எத்தினி நாளுக்குதான் எடுப்பாங்களோ ஆவ்வ்!]]]

மொந்தை பழசா இருந்தாலும் கள்ளு புதுசா இருந்தா போதும்ண்ணே.. அந்த நம்பிக்கைலதான் இந்த மாதிரி படமெல்லாம் வருது..!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

“உன் வாழ்க்கையே அங்க டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.. இங்க உனக்கு ஃபுல்லு கேக்குதா..?” என்று சின்னச் சின்னதா இவர் கொடுக்குற பஞ்ச்சுலதான் இடைவேளைக்குப் பின்பு உட்காரவும் முடிகிறது

--
This is the dialogue you liked? very classy.]]]

படத்துல பாருங்க.. புரியும்..!