பா.ஜ.க.வுக்கு எவ்ளோ தைரியம்? முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

11-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கப் போவது தாத்தாவா? ஆத்தாவா? என்றெல்லாம் நாம் யோசித்துக் கொண்டிருக்கும்வேளையில், சத்தமே இல்லாமல் நாங்களும் போட்டீல இருக்கோம்ல்ல என்று உறுதிப்படுத்தியுள்ளது தமிழக பாரதீய ஜனதா கட்சி..!


தி.மு.க. கூட்டணியில் இன்னமும் யார், யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்ற பட்டியலே முடிவாகவில்லை.. ஆனால் ஆத்தா கட்சியிலோ எந்தக் கட்சிகள் கூட்டணியில் உள்ளனர் என்பதையே இன்னும் முடிவு செய்யவில்லை..

நிலைமை இப்படியிருக்கும் சூழலில் தமிழக பாரதீய ஜனதா கட்சியோ யார் தயவும் எனக்குத் தேவையில்லை. சென்ற தேர்தலைப் போலவே தனித்தே நின்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகளை வென்று ஆட்சிப் பீடத்தில் ஏறுவோம் என்ற அதீத நம்பிக்கையோடு தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் நேற்று வெளியிட்டுவிட்டது..! ஆச்சரியம்தான்.. மகா ஆச்சரியம்.. என்னே ஒரு தன்னம்பிக்கை..!

கொஞ்சம் முட்டாள்தனமானதுதான் என்றாலும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். உத்தரப்பிரேதச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும் இந்தக் கட்சியினருடன் கூட்டணி வைத்தால் தவித்த வாய்க்கு தண்ணிகூட கிடைக்காது என்பது புரிந்துதான் ஆத்தாவும், தாத்தாவும் நைச்சியமாக இவர்களைத் தற்போதைக்கு கழட்டிவிட்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒருவேளை.. நாளைய வரலாற்றில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்படும் சூழல் உருவானால் அப்போது இருந்த மனக்கசப்புகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இதே ஆத்தாகவும், தாத்தாவும் அத்வானியை நோக்கி ஓடுவதும் நிச்சயமாக நடக்கும்.

இப்போது பாரதீய ஜனதாவின் தேர்தல் கள வரலாற்றை கொஞ்சம் பார்த்துவிடுவோம்..!

1996 சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. பத்மநாபபுரம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் சி.வேலாயுதம் 4540 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் முதல் அக்கவுண்ட்டை ஏற்படுத்திக் கொடுத்தார்..

1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும் வெற்றி பெற்றார்கள்.

1999-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இடம் மாறிய பா.ஜ.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும், நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றார்கள்.

2001 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது பா.ஜ.க. 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 895,352  மொத்த வாக்கு சதவிகிதம் 3.19% வெற்றி பெற்றவர்கள் : காரைக்குடி-ஹெச்.ராஜா, மயிலாடுதுறை-ஜெகவீரபாண்டியன், மயிலாப்பூர்-கே.என்.லட்சுமணன், தளி-கே.வி.முரளிதரன்

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., மொத்தமாக 1,455,899 வாக்குகளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. இத்தேர்தலில் இதன் வாக்கு சதவிகிதம் 5.1.

2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் 2.3 சதவிகித வாக்குகளையே(711,790) பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. 2004 பொதுத் தேர்தலில் 5.1 சதவிகித வாக்குகளை வைத்திருந்து தற்போது 2.8 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது பா.ஜ.க.

2011 தமிழக சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இது :

கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவில் - பொன்.ராதாகிருஷ்ணன்.

பத்மநாபாபுரம் - சுஜித்.

விளவங்கோடு - ஆர்.ஜெயசீலன்.

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி - வி.ரங்கராஜன்.

திருச்செந்தூர் - ராஜகோபால்.

ஸ்ரீவைகுண்டம் - எஸ்.செல்வராஜ்.

நெல்லை (கிழக்கு)

திருநெல்வேலி - ஜி.முருகதாஸ்.

பாளையங்கோட்டை - எஸ்.கார்த்திக் நாராயணன்.

நாங்குநேரி - எம்.மகா கண்ணன்.

நெல்லை (மேற்கு)

ஆலங்குளம் - எஸ்.சுடலை ஆண்டி.

வாசுதேவநல்லூர் (தனி) - என்.ராஜகுமார்.

கடையநல்லூர் - ஆர்.பாண்டித்துரை.

தென்காசி - எஸ்.வி.அன்புராஜ்.

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் - என்.எஸ்.ராமகிருஷ்ணன்.

அருப்புக்கோட்டை - எஸ்.ஆர்.வெற்றிவேல்.

திருச்சுளி - பி.விஜய ரகுநாதன்.

மதுரை நகர்

மதுரை வடக்கு - எம்.குமாரலிங்கம்.

மதுரை புறநகர்

திருப்பரங்குன்றம் - ஆர்.கந்தன்.

மதுரை மேற்கு - கே.சீனிவாசன்.

சோழவந்தான் (தனி) - எஸ்.பழனிவேல்சாமி.

தேனி

ஆண்டிப்பட்டி - ஆர்.குமார்.

பெரியகுளம் (தனி) - எம்.கணபதி.

போடிநாயக்கனூர் - எஸ்.என்.வீராசாமி.

கம்பம் - பி.லோகன்துரை.
 
திண்டுக்கல் மாவட்டம்
 
பழனி - கே.தீனதயாளன்.

ஒட்டன் சத்திரம் - எஸ்.கே.பழனிச்சாமி.

நிலக்கோட்டை (தனி) - ராஜேந்திரன்.

நத்தம் - சி.குட்டியன்.

ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி (தனி) - சுப.நாகராஜன்.

திருவாடானை - சிவ மகாலிங்கம்.

முதுகுளத்தூர் - கே.சண்முகராஜ்.

சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி - வி.சிதம்பரம்.

திருப்பத்தூர் - சேக் தாவூத்.

சிவகங்கை - பி.எம்.ராஜேந்திரன்.

மானாமதுரை (தனி) - வி.விஸ்வநாத கோபால்.

புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி - சபாபதி.

திருமயம் - பி.வடமலை.

ஆலங்குடி - ஜெகன்நாதன்.

புதுக்கோட்டை - பழ செல்வம்.

திருச்சி நகர்

திருச்சிராப்பள்ளி கிழக்கு - பி.பார்த்திபன்.

திருச்சி புறநகர்

லால்குடி - எம்.எஸ்.லோகிதாசன்.

மனச்சநல்லூர் - எம்.சுப்பிரமணியன்.

முசிறி - எஸ்.பி.ராஜேந்திரன்.

கரூர் மாவட்டம்

அரவக்குறிச்சி - வி.எஸ்.சென்னயப்பன்.

கரூர் - எஸ்.சிவமணி.

குளித்தலை - ஏ.தனசேகரன்.

பெரம்பலூர் மாவட்டம்

குன்னம் - டி.பாஸ்கரன்.

அரியலூர் மாவட்டம்

அரியலூர் - பி.அபிராமி.

ஜெயங்கொண்டம் - எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

தஞ்சாவூர் மாவட்டம்

திருவையாறு - ஜெ.சிவக்குமார்.

தஞ்சாவூர் - எம்.எஸ்.ராமலிங்கம்.

ஒரத்தநாடு - ஏ.கர்ணன்.

பேராவூரணி - ஆர்.இளங்கோவன்.

கும்பகோணம் - பி.எல்.அண்ணாமலை.

பாபநாசம் - டி.மகேந்திரன்.

திருவாரூர் மாவட்டம்

திருத்துறைப்பூண்டி - பி.சிவசண்முகம்.

திருவாரூர் - டி.ஆர்.பின்கலன்.

நாகப்பட்டினம் மாவட்டம்

மயிலாடுதுறை - கே.வி.சேதுராமன்.

பூம்புகார் - நாஞ்சில் பாலு.

வேதாரண்யம் - எஸ்.கார்த்திக்கேயன்.

கடலூர் மாவட்டம்

விருதாச்சலம் - எம்.வேல்முருகன்.

நெய்வேலி - கற்பகம் மோகன்.

பண்ருட்டி - ஆர்.எம்.செல்வகுமார்.

கடலூர் - ஆர்.குணா என்ற குணசேகர்.

குறிஞ்சிப்பாடி - ஏ.எஸ்.வைரகண்ணு.

விழுப்புரம் மாவட்டம்

வானூர் (தனி) - துரை வெற்றிவேந்தன்.

உளுந்தூர்பேட்டை - வி.அருள்.

ரிஷிவந்தியம் - பி.ராஜசுந்தரம்.

சங்கராபுரம் - கே.ஜெயவர்மா.

காஞ்சீபுரம் மாவட்டம்

செங்கல்பட்டு - கே.டி.ராகவன்.

திருப்போரூர் - என்.கோபாலகிருஷ்ணன்.

உத்திரமேரூர் - கே.குருமூர்த்தி.

காஞ்சீபுரம் - எம்.பெருமாள்.

தாம்பரம் - வேதா சுப்பிரமணியம்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவொற்றியூர் - வி.வெங்கடகிருஷ்ணன்.

திருவள்ளூர் - ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன்.

ஆவடி - ஜெ.லோகநாதன்.

மாதவரம் - சென்னை சிவா.

மத்திய சென்னை

துறைமுகம் - எம்.ஜெய்சங்கர்.

வடசென்னை

பெரம்பூர் - ரவீந்திர குமார்.

ராயபுரம் - டி.சந்தர் என்ற சந்துரு.

வேலூர் கிழக்கு

ஆற்காடு - ஜி.தணிகாச்சலம்.

வேலூர் - டாக்டர் வி.அரவிந்த் ரெட்டி.

வேலூர் மேற்கு

ஆம்பூர் - ஜி.வெங்கடேசன்.

திருப்பத்தூர் - எம்.செல்வகுமார்.

திருவண்ணாமலை மாவட்டம்

செங்கம் (தனி) - ஏ.ஜெயராமன்.

திருவண்ணாமலை - ஏ.அர்ஜுனன்.

கலசபாக்கம் - கே.ரமேஷ்.

செய்யார் - டி.தமிழரசி.

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை (தனி) - சி.கே.சங்கர்.

பர்கூர் - கே.அசோகன்.

கிருஷ்ணகிரி - கோட்டீஸ்வரன்.

வேப்பனஹல்லி - வி.எஸ்.பிரேமநாதன்.

தர்மபுரி மாவட்டம்

பென்னாகரம் - கே.பி.கந்தசாமி.

தர்மபுரி - கே.பிரபாகரன்.

பாப்பிரெட்டிபட்டி - எஸ்.ஜெயக்குமார்.

அரூர் (தனி) - சாமிக்கண்ணு.

சேலம் நகர்

சேலம் மேற்கு - கே.கே.ஏழுமலை.

சேலம் வடக்கு - டி.மோகன்.

சேலம் தெற்கு - என்.அண்ணாதுரை.

சேலம் புறநகர்

மேட்டூர் - பி.பாலசுப்பிரமணியன்.

கங்காவள்ளி (தனி) - மதியழகன்.

ஆத்தூர் (தனி) - கே.அண்ணாதுரை.

ஏற்காடு (தனி) - பொன் ராஜா என்ற ராஜசெல்வன்.

ஓமலூர் - பி.சிவராமன்.

எடப்பாடி - பி.தங்கராஜு.

வீரபாண்டி - கே.எஸ்.வெங்கடாச்சலம்.

சங்கரி - பி.நடராஜன்.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் - எல்.முருகன்.

சேந்தமங்கலம் (தனி) - சி.ரமேஷ்.

பரமத்தி வேலூர் - கே.மனோகரன்.

குமாரபாளையம் - பாலமுருகன்.

ஈரோடு தெற்கு மாவட்டம்

ஈரோடு மேற்கு - பொன்.ராஜேஷ்குமார்.

ஈரோடு கிழக்கு - என்.பி.பழனிச்சாமி.

மொடக்குறிச்சி - டி.கதிர்வேல்.

ஈரோடு வடக்கு மாவட்டம்

அந்தியூர் - ஏ.பி.எஸ்.பார்குணன்.

கோபி - என்.சென்னையன்.

பவானிசாகர் (தனி) - என்.ஆர்.பழனிச்சாமி.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் வடக்கு - ஏ.பார்த்திபன்.

திருப்பூர் தெற்கு - என்.பாயிண்ட் மணி.

தாராபுரம் (தனி) - பி.கருணாகரன்.

மடத்துகுளம் - ஆர்.விஜயராகவன்.

உடுமலைப்பேட்டை - விஸ்வநாதபிரபு.

கோவை நகரம்

கோவை தெற்கு - சி.ஆர்.நந்தகுமார்.

சிங்காநல்லூர் - ராஜேந்திரன்.

தொண்டாமுத்தூர் - ஏ.ஸ்ரீதர்மூர்த்தி.

கோவை தெற்கு

பொள்ளாச்சி - வி.கே.ரகுநாதன்.

பல்லடம் - எம்.சண்முக சுந்தரா.

கோவை வடக்கு மாவட்டம்

கவுண்டம்பாளையம் - ஆர்.நந்தகுமார்.

நீலகிரி மாவட்டம்

உதகமண்டலம் - பி.குமரன்.

கூடலூர் (தனி) - அன்பு என்ற அன்பரசன்.

இந்தச் சூழலில் தனித்து நின்றே ஆட்சியைப் பிடிப்போம் என்று கூச்சப்படாமல் தைரியமாகச் சொல்லியுள்ள அக்கட்சியினரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

இது போலவே தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தனித்து நின்று தேர்தல் களத்தைச் சந்தித்தால்தான் அதனதன் உண்மையான செல்வாக்கே தெரியும். அப்படியில்லாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் உண்மையான வாக்கு வங்கிகளின் விவரம் நமக்குத் தெரியாமல் இருக்கிறது..!

எது எப்படியிருந்தாலும், தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கும் பா.ஜ.க.வுக்கு எனது வாழ்த்துக்கள்..! ஒரு தொகுதியிலாவது இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், அதனை உண்மையான ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்..!

55 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st vote...

செங்கோவி said...

பாவம்ணே அவங்க..ரொம்ப ஓட்டாதீங்க!

Ramachandranwrites said...

நிச்சியம் தவறில்லை. பாஜக பெறும் ஓட்டுக்கள் எல்லாம் இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிர்த்த எண்ணங்கள்.

ஸ்ரீராம். said...

இழக்கறதுக்கு ஒண்ணுமில்லையே...என்ன பயம்?

Anand said...

We need the CM like Modi. Not like the selfish Karna and Jaya

baba said...

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்"

நண்பரே

இது உங்களுக்கே ஓவரா தெரியல ?

இன்னைக்கு பிஜேபி மற்றும் RSS இல்லையென்றால் இந்த காங்கிரசும், DMK மற்றும் இந்த போலி மதசார்பற்ற கட்சிகள் ( நோம்புக்கு போய் காஞ்சி குடிப்பார்கள், கிருஸ்துவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் வாழ்த்து சொல்லுவர்கள்) இந்தியாவை எப்பொழுதோ விற்று இருப்பார்கள் .

கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க.

ஆனந்த்
பமாகோ,மாலி.

ராஜ நடராஜன் said...

வேட்பாளர் பட்டியல் இப்பவே கண்ணைக்கட்டுதே:)

ஆனாலும் இந்த டீலிங்க எனக்குப் பிடிச்சது.

//எது எப்படியிருந்தாலும், தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கும் பா.ஜ.க.வுக்கு எனது வாழ்த்துக்கள்..! ஒரு தொகுதியிலாவது இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், அதனை உண்மையான ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்..!//

Unmai said...

நண்பரே

இது உங்களுக்கே ஓவரா தெரியல ?

இன்னைக்கு பிஜேபி மற்றும் RSS இல்லையென்றால் இந்த காங்கிரசும், DMK மற்றும் இந்த போலி மதசார்பற்ற கட்சிகள் ( நோம்புக்கு போய் காஞ்சி குடிப்பார்கள், கிருஸ்துவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் வாழ்த்து சொல்லுவர்கள்) இந்தியாவை எப்பொழுதோ விற்று இருப்பார்கள் .

கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க

நல்லதந்தி said...

//காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்//
உ.த. நாட்டு நடப்பை உண்மையாக புரிந்து வைத்திருக்கும் நீங்களே இப்படி எழுதலாமா?. ஏற்கனவே பிஜேபியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய், போலி மதசார்பின்மை பத்திரிக்கைகள் எழுதுவதை கொஞ்சமும் யோசிக்காமல் நம்பும் ஜனங்கள் இருக்கிறார்கள்.நீங்களும் அதையே செய்ய வேண்டுமா?

Trails of a Traveler said...

சமீபத்தில் குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வுக்கு மற்ற கட்சிகளை விட அதிகமாக முஸ்லிம் வாக்குகள் கிடைத்துள்ளன!
இதை நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது மதசார்பின்மை கொள்கையின்படி மறைதுவிட்டீர்களா?

Ram

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்படி போடு அருவாள...

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

ஒரு வாசகன் said...

//எது எப்படியிருந்தாலும், தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கும் பா.ஜ.க.வுக்கு எனது வாழ்த்துக்கள்..! ஒரு தொகுதியிலாவது இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், அதனை உண்மையான ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்//
வழிமொழிகின்றேன்

Arun Ambie said...

//"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்"//
அயோத்தியில் இராமர் கோவில் கட்டக்கூடாது என்பதைக் கொள்கையாக ஒரு கும்பல் வைத்திருக்கும் போது கோவில் கட்ட வேண்டும் என்ற கொள்கையில் என்ன தவறு??

காஷ்மீரில் முஸ்லிம்களை விரட்டியடிப்பது பாஜகவின் கொள்கை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் விரட்டப்பட்டது குறித்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் அவர்களைப் பற்றிக் கவலையே படாத கூட்டங்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன? சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பண்டிட்களுக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் என்று என்னென்ன காரணங்களின் அடிப்படையில் தீர்மானித்தீர்கள்?

குஜராத்தில் இஸ்லாமியர்களை மோடி அழிக்கிறார் என்று உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் பொய்களை மீண்டும் மீண்டும் கூவி பொய்களின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாரிக்கொண்டிருக்குக்ம் தீஸ்தா செதல்வாடை ஆதரிப்பது என்ன விதமான பத்திரிகை தர்மம்?

மதுரை சரவணன் said...

bjp thaniththu verriperum enbathai vida naatalumanraththirkkaana selvaakkai ippothe paarrka ithu adiththalamaaka amaiyum..valththukkal

மதுரை சரவணன் said...

bjp thaniththu verriperum enbathai vida naatalumanraththirkkaana selvaakkai ippothe paarrka ithu adiththalamaaka amaiyum..valththukkal

ஜோதிஜி said...

வாய்ப்பிருந்தால் வேட்பாளர்களைப் பற்றி குறிப்பு எழுதுங்க.

silandhy said...

பிஜேபி என்றதும் அம்பிகள் கூட்டம் என்ன வேகமாய் பாய்ந்தோடி வருகிறது?

PARAYAN said...

//குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும் இந்தக் கட்சியினருடன்
//

Really? LOL :)

ஆனந்தன் said...

அன்புள்ள உண்மைத்?????தமிழனுக்கு,
தங்களின் தொடர் ஜு.வி,ரிப்போர்ட்டர் மறு பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் வாசகன் நான்.
உங்களின் அரசியலில் தேவையான மாற்றம் குறித்த பார்வையிலும்,இலங்கைத்தமிழர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் குறித்தான பதிவுகளிலும் உங்களோடு ஒத்துப்போகுபவன் நான்.

ஆனால் இந்த பதிவு எங்கிருந்தும் மறு பதிவு செய்யாமல்,தங்களாலேயே பதிப்பிக்கப்படடுள்ளது என்பது கருத்தடக்கத்திலேயே தெறிகிறது.

ராமர் கோயில் தொடர்பாக அலகாபாத் உயர் நீதி மன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது தங்களுக்கு தெரியாதா?
இல்லை என்றால் சிறுபான்மைக்கு பிடிக்காத எந்த செயலும் மதச்சார்பின்மைக்கு எதிரானது எனும் காங்கிரஸ் வாதியா?

காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும்,
இதைப் படித்ததும் என்னால் வாயால் சிரிக்க முடியவில்லை

காஷ்மிரில் கோடிக்கணக்காண பக்த்தர்கள் வருகை தரும் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு,பக்த்தர்களின் வசதி கருதி அரசு அளித்த தற்காலிக இடத்தைக் கூட ஒப்புக்கொள்ளாமல் ரத்தசரித்திரம் எழுதியவர்கள் யார்???
அந்த மண்ணில் யார் யாரை விரட்டுகிறர்கள்?????

குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும் இந்தக் கட்சியினருடன்

அய்யா சாமி, கோத்ரா கலவரம்,அது தொடர்பான குற்றச்சாட்டு எல்லாம் தாண்டி,இன்றும் மோடியே முதல்வர்,முஸ்லிம் பெறும்பாண்மை தொகுதிகளிலும் பா.ஜ.க எம் எல் எக்களோடு.

1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது.???

போட்டியிட்டது 5 தொகுதிகள்.
கோவை சி.பி. ராதாகிருஷ்ணன்
நீலகிரி திரு மாஸ்டர் மாதன்
திருச்சி திரு ரங்கராஜன் குமார மங்கலம்
நாகர்கோவில் பொன் ராத கிருஷ்ணன்
தென் சென்னை திரு ஜனா கிருஷ்ணமூர்த்தி
1999-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இடம் மாறிய பா.ஜ.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும், நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றார்கள்.


போட்டியிட்டது 6
நாகர் கோவில் பொன் ராதாகிருஷ்ணன்
தென்காசி ஆறுமுகம்
சிவகங்கை H.ராஜா
நீலகிரி மாதன்
கோவை c.P.ராதாகிருஷ்ணன்
திருச்சி அரங்கராஜன் அவர்கள்

2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.


உங்கள் பார்வையிலும் கூட்டணி அமைத்தாவது வெற்றி?அதுதான் முக்கியமா?
தனித்துப் போட்டியிட்டால் குற்றமா?கேலியா?முட்டாள் தனமா?
12 வருடங்களாக அசைக்க முடியாத ஆட்ச்சியை வழங்கிய புரட்சித்தலைவரின் கட்சிக்கு,சட்டமன்ற தேர்தலிலேயே இவ்வளவு கூட்டணி?
தி.மு.க???????????????
சொல்லவே தேவையில்லை
என்றைக்கு அவர்கள் கூட்டணி இல்லாமல்?????????
அண்ணா காலம் தொடங்கி

தமிழக அரசியல் வரலாற்றில் பா.ஜ.க வாவது தன்னம்பிக்கையாய் மக்களை சந்திக்கிறதே,வாழ்க,வளர்க

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st vote...]]]

இதெல்லாம் தேவையா..? ரத்தக் களறியே நடந்துக்கிட்டிருக்கு.. அதுல வந்து தீக்குச்சி கேக்குறியே தம்பி..!?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
பாவம்ணே அவங்க. ரொம்ப ஓட்டாதீங்க!]]]

பாவம்தான்.. ஓட்டலையே.. அவங்க தைரியத்தை பாராட்டுறேன்.. மெச்சுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramachandranwrites said...
நிச்சியம் தவறில்லை. பாஜக பெறும் ஓட்டுக்கள் எல்லாம் இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிர்த்த எண்ணங்கள்.]]]

உண்மைதான். அதே சமயத்தில் பாஜகவும் ஒரு நச்சுப் பாம்பு என்பதையும் நாம் உணர வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
இழக்கறதுக்கு ஒண்ணுமில்லையே. என்ன பயம்?]]]

ஒரு பயமுமில்லை.. காசு, பணம்தானே.. போனா போகுது.. பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வந்து கொட்டீரப் போகுது.. அப்புறமென்ன அவங்களுக்குக் கவலை..?

உண்மைத்தமிழன் said...

[[[Anand said...

We need the CM like Modi. Not like the selfish Karna and Jaya]]]

ஆமாம்.. இங்க இருக்கிறவன் வயித்தைக் கிழிச்சு காண்பிக்கவா..? மோடிக்கு இந்த ரெண்டு பிசாசுகளுமே இருந்து தொலையட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[baba said...

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்"

நண்பரே இது உங்களுக்கே ஓவரா தெரியல?]]]

தெரியவே இல்லை..

[[[இன்னைக்கு பிஜேபி மற்றும் RSS இல்லையென்றால் இந்த காங்கிரசும், DMK மற்றும் இந்த போலி மதசார்பற்ற கட்சிகள் ( நோம்புக்கு போய் காஞ்சி குடிப்பார்கள், கிருஸ்துவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் வாழ்த்து சொல்லுவர்கள்) இந்தியாவை எப்பொழுதோ விற்று இருப்பார்கள் .
கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க.

ஆனந்த்
பமாகோ,மாலி.]]]

ஆமாமாம்.. எதிர்ப்பவர்களையெல்லாம் நடுரோட்டில் போட்டு எரித்துவிட்டுப் போயிருப்பார்கள்.. இவர்களுடைய மதச் சார்பின்மைதான் உலகத்துக்கே தெரிந்த விஷயமாச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

வேட்பாளர் பட்டியல் இப்பவே கண்ணைக் கட்டுதே:) ஆனாலும் இந்த டீலிங்க எனக்குப் பிடிச்சது.]]]

எனக்கும்தான் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Unmai said...

நண்பரே, இது உங்களுக்கே ஓவரா தெரியல?

[[இன்னைக்கு பிஜேபி மற்றும் RSS இல்லையென்றால் இந்த காங்கிரசும், DMK மற்றும் இந்த போலி மதசார்பற்ற கட்சிகள் ( நோம்புக்கு போய் காஞ்சி குடிப்பார்கள், கிருஸ்துவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் வாழ்த்து சொல்லுவர்கள்) இந்தியாவை எப்பொழுதோ விற்று இருப்பார்கள்.]]

கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க.]]]

இது அவருக்கே ஓவரா தெரியலையாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[நல்லதந்தி said...

//காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்//

உ.த. நாட்டு நடப்பை உண்மையாக புரிந்து வைத்திருக்கும் நீங்களே இப்படி எழுதலாமா? ஏற்கனவே பிஜேபியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய், போலி மதசார்பின்மை பத்திரிக்கைகள் எழுதுவதை கொஞ்சமும் யோசிக்காமல் நம்பும் ஜனங்கள் இருக்கிறார்கள். நீங்களும் அதையே செய்ய வேண்டுமா?]]]

குஜராத் கலவரத்தைத் தூண்டி விட்டதே மோடிதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.. வேறென்ன சொல்ல முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rohajet said...
பிஜேபி பட்டியல் பார்த்து அதற்கு வாழ்த்தியதற்கு உங்களுக்கு வாழ்த்துகள்.]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

சமீபத்தில் குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு மற்ற கட்சிகளைவிட அதிகமாக முஸ்லிம் வாக்குகள் கிடைத்துள்ளன!

இதை நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது மதசார்பின்மை கொள்கையின்படி மறைது விட்டீர்களா?]]]

எல்லா ஊரிலும் மக்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். தங்களுக்கென்று வந்த பின்புதான் நோய் எது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

அப்படி போடு அருவாள...

எனது வலைபூவில் இன்று : ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ]]]

உங்க ஓட்டையாவது பாஜகவுக்கு போட்டுவிடுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

//எது எப்படியிருந்தாலும், தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கும் பா.ஜ.க.வுக்கு எனது வாழ்த்துக்கள்..! ஒரு தொகுதியிலாவது இவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், அதனை உண்மையான ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்//

வழி மொழிகின்றேன்]]]

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

//"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்"//

அயோத்தியில் இராமர் கோவில் கட்டக் கூடாது என்பதைக் கொள்கையாக ஒரு கும்பல் வைத்திருக்கும்போது கோவில் கட்ட வேண்டும் என்ற கொள்கையில் என்ன தவறு??]]]

அருண்.. ஏற்கெனவே வழிபாட்டில் இருந்த மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டுவதைத்தான் கூடாது என்கிறோம்.

ஏற்கெனவே சிறிய கோவிலாக ராமர் கோவில் இருந்திருந்தால் நீங்கள் கட்டிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லியிருப்போம்.

ஏன் மசூதியை இடித்துவிட்டு கோவில் வேண்டும் என்கிறீர்கள்..?

[[[காஷ்மீரில் முஸ்லிம்களை விரட்டியடிப்பது பாஜகவின் கொள்கை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் விரட்டப்பட்டது குறித்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் அவர்களைப் பற்றிக் கவலையேபடாத கூட்டங்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன? சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பண்டிட்களுக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் என்று என்னென்ன காரணங்களின் அடிப்படையில் தீர்மானித்தீர்கள்?]]]

அது நிச்சயம் தவறுதான். அந்தத் தவறுக்குக் காரணம் அப்போதைய காஷ்மீரின் கையாலாகாத அரசும், மத்திய அரசும்தான்..

இப்போது நிலைமை மாறி ஆளை விட்டால் போதும். நாங்கள் பாகிஸ்தானுக்கே சென்றுவிடுகிறோம் என்று காஷ்மீர் முஸ்லீம்கள் சொல்லக் கூடிய அளவுக்குப் போய்விட்டது.

மறுபடியும் பண்டிட்டுகளை அங்கே குடி வைப்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் அங்கேயுள்ள முஸ்லீம்களுக்கு அதுதான் பூர்வகுடி என்பதையும் பாஜக உணர வேண்டும்.

காஷ்மீரத்துக்கென்று இருக்கும் தனி அரசியல் உரிமையை நீக்க வேண்டும் என்றும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டு, அங்கே போய் இந்திய தேசியக் கொடியை ஏற்றுகிறோம் என்று சொல்லி மறைமுகமாக அவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் கேவலத்தை செய்யும் பாஜகவை கண்டிக்காமல் வேறென்ன செய்வது..?

[[[குஜராத்தில் இஸ்லாமியர்களை மோடி அழிக்கிறார் என்று உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் பொய்களை மீண்டும் மீண்டும் கூவி பொய்களின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாரிக் கொண்டிருக்குக்ம் தீஸ்தா செதல்வாடை ஆதரிப்பது என்னவிதமான பத்திரிகை தர்மம்?]]]

குஜராத் பற்றி பல்வேறு உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகளை வாசித்துப் பாருங்கள். மோடி என்ன விதமான கிரிமினல்தனங்களைச் செய்திருக்கிறார் என்பது புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...
bjp thaniththu verriperum enbathai vida naatal umanraththirkkaana selvaakkai ippothe paarrka ithu adiththalamaaka amaiyum.. valththukkal]]]

இந்தத் தன்னம்பிக்கையை நானும் போற்றுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

வாய்ப்பிருந்தால் வேட்பாளர்களைப் பற்றி குறிப்பு எழுதுங்க.]]]

நிச்சயம் எழுதுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[silandhy said...

பிஜேபி என்றதும் அம்பிகள் கூட்டம் என்ன வேகமாய் பாய்ந்தோடி வருகிறது?]]]

எல்லாம் ஒரு பாசம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

//குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும் இந்தக் கட்சியினருடன்//

Really? LOL :)

முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க.. கலவரத்தின்போது ஊரைக் காலி செய்துவிட்டு போனவர்கள் எத்தனை பேர் திரும்பி வந்திருக்கிறார்கள் என்று கணக்கு கேட்டுச் சொல்லுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆனந்தன் said...

அன்புள்ள உண்மைத்?????தமிழனுக்கு,]]]

இந்த நக்கலெல்லாம் வேணாம்.. ச்சும்மா "பொய்த் தமிழனுக்கு" என்றே போட்டிருக்கலாம்..! தப்பில்லை..

[[[ராமர் கோயில் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது தங்களுக்கு தெரியாதா? இல்லை என்றால் சிறுபான்மைக்கு பிடிக்காத எந்த செயலும் மதச்சார்பின்மைக்கு எதிரானது எனும் காங்கிரஸ்வாதியா?]]]

அந்தத் தீர்ப்பில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு..! மீண்டும் அந்த இடத்தில் இடிக்கப்பட்ட மசூதி கட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலை..! இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலைமை வரும் என்றால், இரு தரப்பினருமே அந்தப் பகுதிக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை..!

[[[காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், இதைப் படித்ததும் என்னால் வாயால் சிரிக்க முடியவில்லை.]]]

பரவாயில்லை. நன்றாகவே சிரியுங்கள். தப்பில்லை. பாஜகவின் எண்ண ஓட்டமே அதுதான்..!

[[[காஷ்மிரில் கோடிக்கணக்காண பக்த்தர்கள் வருகை தரும் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு, பக்த்தர்களின் வசதி கருதி அரசு அளித்த தற்காலிக இடத்தைக் கூட ஒப்புக் கொள்ளாமல் ரத்தச் சரித்திரம் எழுதியவர்கள் யார்? அந்த மண்ணில் யார் யாரை விரட்டுகிறர்கள்?]]]

இது அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு ஒரு உதாரணம்.. மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் இதனை பக்குவமாக செய்து காட்டியிருக்கலாம். அரசியல் உள் நுழைந்ததினால்தான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது..!

[[[குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும் இந்தக் கட்சியினருடன்]]

அய்யா சாமி, கோத்ரா கலவரம்,அது தொடர்பான குற்றச்சாட்டு எல்லாம் தாண்டி, இன்றும் மோடியே முதல்வர், முஸ்லிம் பெறும்பாண்மை தொகுதிகளிலும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களோடு.]]]

இதுதான் காலத்தின் கொடுமை.. இப்போதைக்கு உயிருடன் இருக்கும் முஸ்லீம்களும் ஒருவித பயத்துடன் இருப்பதையே இது காட்டுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது.???

போட்டியிட்டது 5 தொகுதிகள்.
கோவை சி.பி. ராதாகிருஷ்ணன்
நீலகிரி திரு மாஸ்டர் மாதன்
திருச்சி திரு ரங்கராஜன் குமார மங்கலம்
நாகர்கோவில் பொன் ராத கிருஷ்ணன்
தென் சென்னை திரு ஜனா கிருஷ்ணமூர்த்தி.]]

[[1999-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இடம் மாறிய பா.ஜ.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும், நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றார்கள்.

போட்டியிட்டது 6.

நாகர் கோவில் பொன் ராதாகிருஷ்ணன்
தென்காசி ஆறுமுகம்
சிவகங்கை H.ராஜா
நீலகிரி மாதன்
கோவை c.P.ராதாகிருஷ்ணன்
திருச்சி அரங்கராஜன் அவர்கள்]]

[[2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.

உங்கள் பார்வையிலும் கூட்டணி அமைத்தாவது வெற்றி? அதுதான் முக்கியமா?
தனித்துப் போட்டியிட்டால் குற்றமா? கேலியா? முட்டாள்தனமா?
12 வருடங்களாக அசைக்க முடியாத ஆட்சியை வழங்கிய புரட்சித் தலைவரின் கட்சிக்கு, சட்டமன்ற தேர்தலிலேயே இவ்வளவு கூட்டணி?
தி.மு.க? சொல்லவே தேவையில்லை
என்றைக்கு அவர்கள் கூட்டணி இல்லாமல்? அண்ணா காலம் தொடங்கி...

தமிழக அரசியல் வரலாற்றில் பா.ஜ.க.வாவது தன்னம்பிக்கையாய் மக்களை சந்திக்கிறதே. வாழ்க.. வளர்க]]]

வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். இணையத்தளங்களில் இருந்து எடுத்தது.. அங்கேயே தவறா..?

பாஜகவின் தன்னம்பிக்கையை நானும் பாராட்டுகிறேன். அதனால்தான் ஒரு தொகுதியில் வென்றால்கூட அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறேன்..!

வருகைக்கு நன்றி நண்பரே..!

ஜீவன்சிவம் said...

நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்...நானும் பெரிய ரவுடி தான் பார்த்துகோங்க...

புதிய கோணங்கி ! said...

மாயவரத்தான் பிளீஸ் கம்மிங்!

உ தாவுக்கு மைனஸ் ஓட்டு போடனும்

Arun Ambie said...

//குஜராத் பற்றி பல்வேறு உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகளை வாசித்துப் பாருங்கள். மோடி என்ன விதமான கிரிமினல்தனங்களைச் செய்திருக்கிறார் என்பது புரியும்..!//
உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகள் பல இட்டுக்கட்டிய கட்டுக்கதைகளை அனுசரித்தே உள்ளன என்பது உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு வாய்தாவிலும் தெளிவாகிறதே. பேப்பர் படிப்பதில்லையா நீங்கள்?

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/5.html ஷோபா வின் தூற்று.காம் - பகுதி 5 க்கு எதிராக•.

pichaikaaran said...

வட மாநிலங்கள் பாணியில் , இங்கும் அனைத்து தொகுதிகளிலும் பிஜேபி, காங்கிரஸ் நேரடியாக மோதும் பரபரப்பான காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்தேன் . கடைசி நேரத்தில் காங்கிரசுக்கு கூட்டணி அமைந்து தொலைத்துவிட்டது . சோனியா , ராகூல் , அத்வானி போன்றோரின் முழுநேர பிரச்சார மோதலை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது

உண்மைத்தமிழன் said...

[[[ஜீவன்சிவம் said...
நான் ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போறேன். நானும் பெரிய ரவுடிதான்... பார்த்துகோங்க.]]]

ஓகே.. உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்படுகிறது நண்பரே.. நீங்கள் ரவுடி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[புதிய கோணங்கி ! said...
மாயவரத்தான் பிளீஸ் கம்மிங்!
உ தாவுக்கு மைனஸ் ஓட்டு போடனும்.]]]

ஐயா.. நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு.. இப்ப எதுக்கு மாயவரத்தானை கூப்பிடுறீங்க..? அவர் பாட்டுக்கு செவனேன்னு இருக்காரு.. நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன். எதுக்கு கோர்த்து விடுறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

//குஜராத் பற்றி பல்வேறு உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகளை வாசித்துப் பாருங்கள். மோடி என்ன விதமான கிரிமினல்தனங்களைச் செய்திருக்கிறார் என்பது புரியும்..!//

உண்மையறியும் குழுக்களின் அறிக்கைகள் பல இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளை அனுசரித்தே உள்ளன என்பது உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு வாய்தாவிலும் தெளிவாகிறதே. பேப்பர் படிப்பதில்லையா நீங்கள்?]]]

உங்களுடைய நம்பிக்கையை நான் குலைக்க விரும்பவில்லை அருண்..!

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...
http://powrnamy.blogspot.com/2011/03/5.html ஷோபா வின் தூற்று.காம் - பகுதி 5 க்கு எதிராக•.]]]

அடங்க மாட்டீங்களா சாமி..!?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

வட மாநிலங்கள் பாணியில், இங்கும் அனைத்து தொகுதிகளிலும் பிஜேபி, காங்கிரஸ் நேரடியாக மோதும் பரபரப்பான காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்தேன். கடைசி நேரத்தில் காங்கிரசுக்கு கூட்டணி அமைந்து தொலைத்துவிட்டது. சோனியா, ராகூல், அத்வானி போன்றோரின் முழு நேர பிரச்சார மோதலை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.]]]

கவலை வேண்டாம் பார்வை.. மூவரும் இரண்டு நாட்களாவது தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வார்கள். காத்திருங்கள்..!

Sailash said...

உண்மை தமிழன் அவர்களே , பாபர் மசூதி பிரச்னை ஆகட்டும், காஷ்மீர் பிரச்னை ஆகட்டும் , உங்களை போன்றவர்கள் என்றுமே உண்மையை ஒத்து கொள்ள போவது இல்லை . பாபர் மசூதி கோவிலை இடித்தே கட்டப்பட்டது என்று நீதி மன்றம் பல ஆய்வுகளின் முடிவு படி தீர்ப்பு சொல்லியும் நீங்கள் ஒத்து கொள்ள வில்லை , காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்றுவது கூட உங்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிரானதாக தெரிகிறது , அந்த இடத்தில சென்ற வருடம் எல்லோர் முன்னிலையிலும் பாகிஸ்தானின் தேசிய கோடி ஏற்றப்பட்டது , ஆனால் நமது தேசிய கொடியை ஏற்ற உங்களை போன்ற மகா அறிவுஜீவிகள் எதிர்ப்பு தெரிவிகிரீர்கள் , என்னாத்த சொல்ல ?? ஒன்று காஷ்மீர் நமது நாட்டின் பகுதி இல்லை என்று சொல்லி விஷயத்தை முடித்து விடுவோம், நமது தேசிய கொடியை கூட ஏற்ற முடியாத இடத்துக்கு நாம் ஏன் இத்துணை ராணுவ வீரர்களை பலியிட வேண்டும் ?? ஒரு இடத்தி தேசிய கொடியை ஏற்றுவது இஸ்லாமியர்களுக்கு எதிரானத நீங்கள் நினைத்தால் , கண்டிப்பாக உங்களுக்கு இஸ்லாமியர்களை பற்றி மிக கேவலமான எண்ணம் இருக்கிறது என்றே தெரிகிறது , மாற்றி கொள்ளுங்கள் !!

மேலும் குஜராத் , ஒரு நல்ல அரசாங்கத்தை பாரட்ட முடியாதரவர்களுக்கு முக போன்ற இன துரோகிகள் தான் தலைவர் ஆகா முடியும் , நமக்கு மோடி போன்ற தலைவர் கிடைக்க யோகிதை இல்லை , இன்றும் இலவச டிவிக்கு வோட்டு போடும் நமக்கு இவர்கள் தான் கிடைப்பார்கள் !!

ConverZ stupidity said...

//அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்
//

இதுக்கு பேரு தான் அறிவுஜீவித்தனம்-கிறது. உங்களுக்கெல்லாம் உண்மையான தேசபக்தி, நம்ம கலாசாரத்தோட மதிப்பெல்லாம் தெரியாது.

Try to stand out of the crowd and think out-of the box.

உண்மைத்தமிழன் said...

[[[Sailash said...
உண்மை தமிழன் அவர்களே, பாபர் மசூதி பிரச்னை ஆகட்டும், காஷ்மீர் பிரச்னை ஆகட்டும், உங்களை போன்றவர்கள் என்றுமே உண்மையை ஒத்து கொள்ள போவது இல்லை. பாபர் மசூதி கோவிலை இடித்தே கட்டப்பட்டது என்று நீதிமன்றம் பல ஆய்வுகளின் முடிவுபடி தீர்ப்பு சொல்லியும் நீங்கள் ஒத்து கொள்ளவில்லை. காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்றுவதுகூட உங்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிரானதாக தெரிகிறது. அந்த இடத்தில சென்ற வருடம் எல்லோர் முன்னிலையிலும் பாகிஸ்தானின் தேசிய கோடி ஏற்றப்பட்டது. ஆனால் நமது தேசிய கொடியை ஏற்ற உங்களை போன்ற மகா அறிவுஜீவிகள் எதிர்ப்பு தெரிவிகிரீர்கள். என்னாத்த சொல்ல? ஒன்று காஷ்மீர் நமது நாட்டின் பகுதி இல்லை என்று சொல்லி விஷயத்தை முடித்து விடுவோம், நமது தேசிய கொடியை கூட ஏற்ற முடியாத இடத்துக்கு நாம் ஏன் இத்துணை ராணுவ வீரர்களை பலியிட வேண்டும்? ஒரு இடத்தி தேசிய கொடியை ஏற்றுவது இஸ்லாமியர்களுக்கு எதிரானத நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக உங்களுக்கு இஸ்லாமியர்களை பற்றி மிக கேவலமான எண்ணம் இருக்கிறது என்றே தெரிகிறது. மாற்றி கொள்ளுங்கள்!!

மேலும் குஜராத், ஒரு நல்ல அரசாங்கத்தை பாரட்ட முடியாதரவர்களுக்கு மு.க. போன்ற இன துரோகிகள்தான் தலைவர் ஆகா முடியும், நமக்கு மோடி போன்ற தலைவர் கிடைக்க யோகிதை இல்லை, இன்றும் இலவச டிவிக்கு வோட்டு போடும் நமக்கு இவர்கள்தான் கிடைப்பார்கள்!]]]

பாபர் மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று கோர்ட் கூறும் ஆதாரம் எதை வைத்து..? வழி, வழியாக வந்த நம்பிக்கையை வைத்துதானே.. ஆனால் கண் முன்னே இடிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் அங்கே என்ன இருந்தது..?

காஷ்மீர் முஸ்லீம்களிடையே இந்தியர் என்கிற மனவொற்றுமையை ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. அவர்கள் அதனைச் செய்யாதபோது தவறுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்..! அங்கேயுள்ள முஸ்லீம்கள் அடக்குமுறைகளின் காரணமாகத்தான் பாகிஸ்தான் சலோ என்கிறார்கள்..! அடிப்படையான இந்த விஷயத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..!

நரேந்திர மோடி விஷயத்தில், குஜராத் முஸ்லீம்கள் ஏதோ ஒருவித பயத்துடன் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் அவர்களது வாக்குகள் மோடிக்குக் கிடைத்திருக்கிறது.. போதாக்குறைக்கு குஜராத்தில் மோடியை எதிர்க்கும் அளவுக்கு வல்லமை வாய்ந்த எதிரணித் தலைவர்கள் யாரும் இல்லை என்பதும் துரதிருஷ்டவசமானது..!

உண்மைத்தமிழன் said...

[[[ConverZ stupidity said...

//அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கும்//

இதுக்கு பேருதான் அறிவுஜீவித்தனம்கிறது. உங்களுக்கெல்லாம் உண்மையான தேசபக்தி, நம்ம கலாசாரத்தோட மதிப்பெல்லாம் தெரியாது.
Try to stand out of the crowd and think out-of the box.]]]

மிக்க நன்றி..! இந்திய தேசிய அபிமானத்தை நான் கைவிட்டு 2 வருடமாகிவிட்டது.. இதுக்கு மேல முடியலை பிரதர்..!

Sailash said...

[[[பாபர் மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று கோர்ட் கூறும் ஆதாரம் எதை வைத்து..? வழி, வழியாக வந்த நம்பிக்கையை வைத்துதானே.. ஆனால் கண் முன்னே இடிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் அங்கே என்ன இருந்தது..?
]]]]

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பெரும்பான்மை மக்களை நம்ப செய்வதே அறிவுஜீவித்தனம் , அதற்கு நீங்களும் பலிகட ஆகபட்டுலீர்கள், அந்த தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையானது அல்ல , ASI ஆய்வு படி , அங்கே மசூதிக்கு கீழ் கோவில் இருந்ததிர்கான எல்லா ஆதாரங்களும் வைக்க பட்டன , இது வரை 11 ஆய்வு செய்யப்பட்டு அனைத்தும் அந்த மசூதிக்கு கீழ் ஒரு கோவில் இருந்தது என்றே முடிவு வந்தது , அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் அந்த ஆய்வை அப்படியே ஒத்துகொண்டனர் , மூன்றாவது நீதிபதி கான் , அந்த மசூதிக்கு அடியில் கோவில் இருந்தது ஆனால் அந்த கோவில் இடிக்க பட்டு மசூதி கட்டப்படவில்லை ,ஆனால் இடிந்து இருந்த பயன்படுத்தாத கோவில் இருந்த இடத்தில மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பில் கூறியுள்ளார். நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்பது அந்த இடத்தில தான் ராமர் பிறந்தாரா என்ற கேள்விக்கு அது நம்பிக்கை அடிப்படையானது என்று நீதிபதிகள் சொல்கிறார்கள் .

உடனே எல்லா தீர்ப்பும் நம்பிக்கை அடிப்படையில் சொல்லிவிட்டது என்று சொல்லுவது அப்பட்டமான பொய் ,அது கம்யூனிஸ்ட் மற்றும் சௌதி அராபிய பணத்தில் இயங்கும் ஆங்கில ஊடகங்கள் சிரமேற்கொண்டு செய்த பிரசாரம் , அவளாவே !! அதை நீங்களும் நம்பிவிடீர்கள் !! முழுமையான தீர்ப்பு outlook ஆங்கில இதழ் வலை தலத்தில் இருக்கிறது , படித்து பாருங்கள்.

இந்தியாவில் ஆயிரகணக்கான கோவில்களை இடித்தே மசூதிகள் கட்டப்பட்டது என்பது வரலாறு , எவளவு கோவில்கள் இடிக்க பட்டது என்பதற்கு "வந்தார்கள் வென்றார்கள்" படிக்கவும் . அணைத்து மசூதிகளையும் ஹிந்துக்கள் கேட்கவில்லை , அவர்களில் மிக மிக புனித இடமாக கருதும் ஒரு இடத்தை கேட்கிறார்கள் , அது இஸ்லாமியர்களுக்கு எந்தவிததிலும் முக்கிய இடம் அல்ல . அதை கூட ஹிந்துக்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்பவர்களின் மனநிலையை பற்றி என்ன சொல்லுவது ?? ஹிந்துக்கள் பெருமான்மையாக இருக்கும் நாட்டில் அவர்களின் புனித இடமாக கருதும் ஒரு இடத்தை பெறுவது கூட இவளவு கஷ்டமாக இருபது எதனால் , நான் ஒரு முஸ்லிம் கூட இதில் ஹிந்துக்களுக்கு இருக்கும் நியாயத்தை பற்றி பேசி பார்த்தது இல்லை !!

உண்மைத்தமிழன் said...

[[[Sailash said...

[[[பாபர் மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்று கோர்ட் கூறும் ஆதாரம் எதை வைத்து? வழி, வழியாக வந்த நம்பிக்கையை வைத்துதானே. ஆனால் கண் முன்னே இடிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் அங்கே என்ன இருந்தது..?]]

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பெரும்பான்மை மக்களை நம்ப செய்வதே அறிவுஜீவித்தனம், அதற்கு நீங்களும் பலிகட ஆகபட்டுலீர்கள். அந்த தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையானது அல்ல. ASI ஆய்வுபடி, அங்கே மசூதிக்கு கீழ் கோவில் இருந்ததிர்கான எல்லா ஆதாரங்களும் வைக்கபட்டன. இது வரை 11 ஆய்வு செய்யப்பட்டு அனைத்தும் அந்த மசூதிக்கு கீழ் ஒரு கோவில் இருந்தது என்றே முடிவு வந்தது. அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் அந்த ஆய்வை அப்படியே ஒத்துகொண்டனர். மூன்றாவது நீதிபதி கான், அந்த மசூதிக்கு அடியில் கோவில் இருந்தது. ஆனால் அந்த கோவில் இடிக்கபட்டு மசூதி கட்டப்படவில்லை. ஆனால் இடிந்து இருந்த பயன்படுத்தாத கோவில் இருந்த இடத்தில மசூதி கட்டப்பட்டது என்று தீர்ப்பில் கூறியுள்ளார். நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்பது அந்த இடத்திலதான் ராமர் பிறந்தாரா என்ற கேள்விக்கு அது நம்பிக்கை அடிப்படையானது என்று நீதிபதிகள் சொல்கிறார்கள். உடனே எல்லா தீர்ப்பும் நம்பிக்கை அடிப்படையில் சொல்லிவிட்டது என்று சொல்லுவது அப்பட்டமான பொய். அது கம்யூனிஸ்ட் மற்றும் சௌதி அராபிய பணத்தில் இயங்கும் ஆங்கில ஊடகங்கள் சிரமேற்கொண்டு செய்த பிரசாரம். அவளாவே! அதை நீங்களும் நம்பிவிடீர்கள்! முழுமையான தீர்ப்பு outlook ஆங்கில இதழ் வலை தலத்தில் இருக்கிறது. படித்து பாருங்கள்.
இந்தியாவில் ஆயிரகணக்கான கோவில்களை இடித்தே மசூதிகள் கட்டப்பட்டது என்பது வரலாறு. எவளவு கோவில்கள் இடிக்கபட்டது என்பதற்கு "வந்தார்கள் வென்றார்கள்" படிக்கவும். அணைத்து மசூதிகளையும் ஹிந்துக்கள் கேட்கவில்லை. அவர்களில் மிக மிக புனித இடமாக கருதும் ஒரு இடத்தை கேட்கிறார்கள். அது இஸ்லாமியர்களுக்கு எந்தவிததிலும் முக்கிய இடம் அல்ல. அதை கூட ஹிந்துக்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்பவர்களின் மனநிலையை பற்றி என்ன சொல்லுவது? ஹிந்துக்கள் பெருமான்மையாக இருக்கும் நாட்டில் அவர்களின் புனித இடமாக கருதும் ஒரு இடத்தை பெறுவதுகூட இவளவு கஷ்டமாக இருபது எதனால். நான் ஒரு முஸ்லிம்கூட இதில் ஹிந்துக்களுக்கு இருக்கும் நியாயத்தை பற்றி பேசி பார்த்தது இல்லை!]]]

நண்பரே.. நான் தீவிரமான கடவுள் நம்பிக்கையுடையவன். ராமன் எங்கேயும் இருக்கிறான். அந்த இடத்தில் பாபர் மசூதி இருந்தபோதும் இந்த நாட்டில் ராமரின் பக்தர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அதனை இடிக்க வேண்டும். கோவில் கட்ட வேண்டும் என்று இப்போது பிரச்சினையில் ஈடுபடுவது இரு தரப்புக்குமே வில்லங்கத்தை அளிப்பதால் இரு தரப்பினருமே அதில் இருந்து ஒதுங்கியிருந்து அதுவொரு பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வைத்துக் கொண்டாடுவதே நாட்டு நலனுக்கு நல்லது.. எதையும் பொது நலன் நோக்கில் பாருங்கள். பாபர் மசூதியை இடித்ததினால்தானே கலவரம் வெடித்தது. இறந்து போன அப்பாவிகளை ராமரும், அல்லாவுமா வந்து காப்பாற்றினார்கள்..?