அருண்ஷோரியும் ஊழல்வாதியே..! - ஆடிட்டர் குருமூர்த்தி தந்திருக்கும் ஆதாரம்..!

05-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எத்தனை முறை பேசினாலும், படித்தாலும், வாக்குவாதம் செய்தாலும், புதிது புதிதாக பல விஷயங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முளைத்தபடியேதான் உள்ளன.

இந்த ஊழலில் இருக்கும் சில நுணுக்கமான உள் அரசியலை ஆடிட்டர் குருமூர்த்தி ஜனவரி 14-ம் தேதியன்று சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் வெளிப்படுத்தியுள்ளார்.

குருமூர்த்தி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண்ஷோரியை காப்பாற்ற வேண்டி வார்த்தைகளை மடக்கிப் போட்டு, நீக்குப் போக்குடன் பேசி, ஒரே பாராவில் ஆட்சி மாற்றத்தைக் கடந்து வார்த்தை விளையாட்டைக் காட்டியிருக்கிறார். நீங்களும் படித்துப் பாருங்கள். நமக்குத் தேவையான, அவசியமான ஒரு விஷயம் இதில் உள்ளது..!

இனி ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது :


கபில்சிபல் ஒரு வாதத்தை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க. அரசு கடைப்பிடித்த நடைமுறையைத்தான் தற்போதைய காங்கிரஸ் அரசு பின்பற்றியுள்ளது என்கிறார். இது முழுப் பூசணிக்காயை மறைக்கும் முயற்சி என்பது மட்டுமல்ல.. இந்த அளவுக்கு கபில்சிபல் தன்னுடைய தரத்தைத் தாழ்த்திக் கொண்டு இந்த நாட்டுக்கே நிகழ்ந்துள்ள அவமானகரமான ஒரு விஷயத்தை, லஞ்ச ஊழலை மூடி மறைத்து வைத்துப் பேசுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர் என்னுடைய நண்பர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜ.க. அரசு கடைப்பிடித்த அணுகுமுறையில் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு உண்டு. 1994-ல் மெட்ரோ நகரங்களில் மட்டும் செல்லுலர் லைசென்ஸ்கள் கொடுக்கப்பட்டன. 1995-ல் ஏல முறைக்குவிட்டு, அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு, அதன் மூலம் பலர் லைசென்ஸ் பெற்றனர். அந்த நிறுவனங்கள் நஷ்டமடைய ஆரம்பித்தன.

1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாயை அந்த நிறுவனங்களால் அரசுக்குச் செலுத்த முடியாத நிலை இருந்தது. அந்நிறுவனங்களுக்குக் கொடுத்தக் கடனை வங்கிகளாலும் திரும்பப் பெற முடியவில்லை.

அதனால் அந்தச் சமயத்தில் ஏலத்தின் மூலம் இவ்வளவு பணத்தை நிர்ணயித்து, அதனை அரசாங்கத்தால் பெற முடியாத சூழ்நிலை இருந்ததால், வருவாய் அடிப்படையில் என்ற முறையை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அதாவது செல்லுலர் கம்பெனிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றனவோ, அந்த வருவாயில் எட்டு சதவிகிதத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. மேலும், அந்தக் கம்பெனிகள் கொடுக்க வேண்டியிருந்த மீதித் தொகையை நுழைவுக் கட்டணமாக அரசு மாற்றியது. அப்படி முடிவெடுத்தன் மூலமாகத்தான் செல்போன் சேவையில் ஒரு வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.

2001-ல் நம் நாட்டில் 1.3 கோடி பேர்தான் செல்போன் வைத்திருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2008-ல் 58 கோடியாக உயர்ந்துள்ளது. 2013-ல் கிட்டத்தட்ட 93 கோடியாக உயரப் போகிறது. ஆனால் 2003-ல் ஒரு தவறு ஏற்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிக்ஸட் போன்(Fixed Phone) லைசென்ஸ்தான் கிடைத்தது. அப்போது செல்லுலர் லைசென்ஸுக்கு அவர்கள் போகவில்லை.

ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் ஓயர் இல்லாத போனை வீட்டுக்குள் பயன்படுத்துவதுபோல வெளியிலும் பயன்படுத்துகிறவகையிலான  போன்களை விற்க ஆரம்பித்தார்கள். செல்லுலர் லைசென்ஸ் இல்லாமலேயே அவர்கள் இப்படி செய்தார்கள். சட்டப்படி அரசால் இதனை நிறுத்த முடியவில்லை. கோர்ட்டாலும் நிறுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 50 லட்சம் சந்தாதாரர்களை அந்த நிறுவனம் அதற்குள் சேர்த்துவிட்டது.


அவர்களையும் இந்த செல்லுலர் லைசென்ஸ் முறையின்கீழ் கொண்டு வருவதற்காக 2003-ல் அருண்ஷோரி - நாணயமான அமைச்சர் - அவருடைய நாணயத்தைப் பற்றி யாரும் குறை சொல்ல முடியாது. அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதனை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே அவர் செய்தது தவறு என்று எழுதியிருக்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 10000 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் 1500 கோடி ரூபாயைத்தான் அபராதமாக அவர் விதித்தார். அதில்தான் நான் தவறு காண்கிறேன்.

மற்றபடி அந்த அரசாங்கம் செய்த எந்த முடிவும் தவறானதல்ல. மேலும், பா.ஜ.க. ஆட்சியின்போது மந்திரிசபை கூட்டத்தின் மூலம்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. எந்தத் தனி மந்திரியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. யாரையும் விரல் நீட்டி இன்னார் தப்பு செய்தார் என்று கூற முடியாது. இன்னார் லஞ்சம் வாங்கினார் என்று கூற முடியாது. இதனை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவில் கருத்து வேறுபாடு எனக்கு இருந்தாலும், அதில் லஞ்சம் இருந்தது என்றோ, முறைகேடுகள் நடந்தது என்றோ சொல்வதற்கு இடமில்லை.

ஆனால் 2001-ல் 1.3 கோடி பேர் மட்டும் செல்போன் பயன்படுத்தி வந்த நேரத்தில், என்ன விலைக்கு உரிமத்தைக் கொடு்த்தார்களோ, அதே முறையில் 58 கோடி பேராகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு மடங்கு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வளர்ச்சி இருந்த நேரத்தில் ஏன் பழைய முறையைப் பின்பற்றினார்கள்..?

அதுவும் 2006-க்குப் பிறகு எல்லா செல்போன் கம்பெனிகளுக்கும் நல்ல லாபம் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்தக் கம்பெனிகளின் பங்குகளின் விலையெல்லாம் உயர ஆரம்பித்தன. நம் நாட்டுக்குச் செல்போன்களை விற்பதற்கும் சரி, இங்கு முதலீடுகளைச் செய்வதற்கும் சரி.. வெளிநாட்டு நிறுவனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த காலம் அது.

செல்போன் வியாபாரம் அதிகமாகிவிட்டது. லாபமும் அதிகமாகிவிட்டது. ஆனால் லைசென்ஸ்களை மட்டு்ம் பழைய விலைக்கே அதாவது சுமார் 1600 கோடி ரூபாய்க்கே விற்றுவிட்டார்கள். ஏன் இந்த முடிவு? இது ஏதோ ரகசியமாக நடக்கவில்லை. எப்படி நடந்தது என்று கூறுகிறேன்.

சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்னிடம் வந்து கேட்டார். அரசாங்கம் குறிப்பிட்ட அந்த 25-ம் தேதிக்கு முன்னால் என்னால் அப்ளிகேஷன் போட முடியவில்லை. 1600 கோடி ரூபாய்க்கு இந்த லைசென்ஸை கொடுக்கிறார்களே, இதனுடைய விலை கிட்டத்தட்ட 13000 கோடி ரூபாய் என்று சொன்னார். எப்படி ஸார் இப்படி சொல்கிறார்கள் என்று கேட்டேன். அவர் இந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அட்டவணையையெல்லாம் போட்டுக் காண்பித்தார்.

அவர் 13000 கோடி ரூபாய் கொடுத்தால்கூட வெளிநாட்டுக்காரர்கள் அந்த விலைக்கு முதலீடு செய்யத் தயாராக இருப்பது பற்றி விவரங்களுடன் எனக்குச் சுட்டிக் காட்டினார். இதன் பிறகு அவர் நவம்பர் 2007-ல் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். “நான் 13000 கோடி ரூபாய் கொடுக்கத் தயார்” என்று.. எதை அரசு 1600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததோ, அதற்கு 13600 கோடி ரூபாய் தரத் தயார் என்று கூறி பேங்க் கியாரண்டியும் கொடுத்தார். அதற்குப் பிறகும் ஜனவரி 2008-ல் இதே லைசென்ஸை 1600 கோடி ரூபாய்க்கு விற்கிறோம் என்று பிடிவாதமாக விற்றார்கள்.

இது போபர்ஸ் போல ஏதோ ஒரு இருட்டறையில் உட்கார்ந்து கொண்டு செய்யப்பட்டது அல்ல. வெளிப்படையாக எல்லோர் எதிரிலும் நடந்துள்ள ஒரு விஷயம். 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அமைச்சர் ராசாவுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார். நீங்கள் செய்வது என்று தெரிந்த பிறகு, இப்படிச் செய்யக் கூடாது என்று கடிதம் எழுதுகிறார். அன்று இரவே ராசா அதற்கு பதில் எழுதுகிறார். “நான் செய்வது சரி என்று எனக்குத் தோன்றுகிறது..” என்று..


சோ கூறியதுபோல, பிரதமர் தவறு என்று சுட்டிக் காட்டியதை, ஒரு அமைச்சர் எனக்குச் சரி என்றுதான் தோன்றுகிறது என்று நான்கு மணி நேரத்திற்குள் பதில் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை எழுதிக் கொடுத்தது யார் என்றால், இப்போது அட்டர்னி ஜெனரலாக இருப்பவர்.. அப்போது சொலிஸிட்டர் ஜெனரலாக இருந்தார். அவர்தான் அந்தக் கடிதத்தைத் தயாரித்துக் கொடுத்தார். சட்ட அமைச்சகம் இதனைத் தவறு என்கிறது. ஆனால், அதே துறையைச் சேர்ந்த சட்ட வல்லுநர்க்ள் நடந்தது சரிதான் என்று எழுதிக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் வெளிப்படையாகவேதான் நடந்தது.

பிறகு இரண்டு மாதங்கள் பிரதமர் அமைதியாக இருக்கிறார். திடீரென்று ஜனவரி 4-ம் தேதி முழித்துக் கொண்டு, “உங்கள் கடிதத்தைப் பார்த்தேன்..” என்று மட்டும் எழுதியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. இதன் பிறகு பத்தாம் தேதி வாக்கில் எல்லாவற்றையும் அமைச்சர் முடித்துவிட்டார்.

ஆக பிரதமருக்குத் தெரியாமல், பிரதம மந்திரியிடம் கூறாமல் அவருக்குப் பின்னால் எதுவுமே நடக்கவில்லை. பத்திரிகைகளுக்குப் பின்னாலும் எதுவும் நடக்கவில்லை. பாராளுமன்றத்தின் பார்வையில் படாமல் எதுவும் னடக்கவில்லை. இந்தக் கொள்ளை வெளிப்படையாக, பகற்கொள்ளையாகத்தான் நடந்துள்ளது.

2009 அக்டோபர் 29-ம் தேதி தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தை சிபிஐ சோதனையிடுகிறது. அப்போது ராசாவை பதவி விலகுமாறு கோருகிறார்கள். “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? பிரதமரிடம் கலந்தாலோசித்துத்தான் நான் இதைச் செய்திருக்கிறேன்..” என்று ராசா கூறினார். ஆனால் இது பற்றி பிரதமர் வாயே திறக்கவில்லை.

கடைசியாக ஐந்து மாதங்கள் கழித்து பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தபோது, நான் பிரதமரை கலந்து பேசித்தான் செய்தேன் என்று ராஜா கூறுகிறாரே என்ற கேள்வியைக் கேட்டார்கள். அப்போது பிரதமர், அவர் இது பற்றி என்னிடம் பேசினார் என்றார். அதாவது பிரதம மந்திரியைக் கலந்துதான் ராஜா இப்படிச் செய்திருக்கிறார் என்று பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த ஊழலில் எந்த அளவுக்குப் பணம் பண்ணியிரு்ககிறார்கள் என்பதற்கு ஒரு உத்தேச மதிப்பீட்டைப் பார்ப்போம்.

லைசென்ஸ் பெற்றுள்ள ஆறு கம்பெனிகளுக்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அந்தக் கம்பெனிக்காரர்கள் செய்வது கட்டிடம் கட்டுவது.. புரோக்கர் தொழில் போன்றவை. தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் 300 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டது.

அது தவிர, இந்தப் புது லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள் 20 சதவிகிதப் பங்குகளை விட்டுத் தர வேண்டும். இந்த 20 சதவிகிதப் பங்குகளை ரூபாயில் பார்த்தால் இன்றைய மதிப்பு 2500 முதல் 3000 கோடி ரூபாய். ஆக, இந்த ஆறு கம்பெனிகளுக்கும் சேர்த்துப் பார்த்தால், பங்குகள் வழியாகக் கிடைத்த தொகை மற்றும் ஆரம்ப லஞ்சம் எல்லாமுமாகச் சேர்ந்து 25000 கோடி ரூபாய் வருகிறது. மீது ஐந்து பழைய கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்ட லைசென்ஸுக்கு எவ்வளவு என்று அனுமானம் இல்லை. இது நிச்சயமாக ஒரு மிகப் பெரிய ஊழல்.

இதில் நிச்சயமாக சோனியாகாந்திக்கும் பங்கு இருக்கிறது. பிரதமர் இதைச் செய்யக் கூடாது என்று சொன்ன பிறகு, யாரோ அவரிடம், நீங்கள் இதில் தலையிட வேண்டாம் என்று சொன்ன பிறகுதான் பிரதமர் உங்கள் கடிதத்தைப் பார்த்துவிட்டேன் என்று சொல்ல வேண்டி வந்தது.

அப்போதுகூட அவரால், நீங்கள் செய்வது சரியல்ல என்று திரும்பவும் எழுத முடியவில்லை. அதே சமயம் சரி செய்யுங்கள் என்று சொல்லவும் அவருக்குத் தைரியமில்லை. சோ கூறியதுபோல யாரோ ஒருவர் பிரதமரிடம் நீங்கள் இதில் தலையிடாதீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லக் கூடிய ஒருவர் அந்தக் கட்சியில் இருக்கிறார் என்றால் அது நிச்சயம் சோனியாகாந்திதான். எனக்கு இதெல்லாம்கூட அனுமானம்தான்.

ஆனால், எப்போது கபில்சிபல் முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைப்பதுபோல, இதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று கூறினாரோ, அப்போதே சோனியாகாந்திக்கும், காங்கிரஸுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் போயிற்று.

இந்த ஊழலில் முதலில் பலியாகப் போவது தி.மு.க. அரசாங்கமானால், இதற்கு ஒரு வழி பிறக்கும். இல்லையென்றால் இது அப்படியே மூடி மறைக்கப்படும். தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால், இந்த 2-ஜி ஊழல் அப்படியே மூடி மறைக்கப்படும்.

மாறாக, 2-ஜி பலியானால், நாட்டிலேயே 2-ஜி குறித்து பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு, எப்படி போபர்ஸ் ஊழல் எல்லா இடங்களிலும் பரவி, அதன் காரணமாக ஒரு பிரதம மந்திரியின் ஆட்சியே முடிவடைந்ததோ, எப்படி காங்கிரஸ் ஆட்சியைவிட்டு இறங்கியதோ.. அதுபோல இதிலும் வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்தான் 2-ஜிக்கு ஒரு டெஸ்ட்.

இனி நான்..!

ஏதோ காங்கிரஸ்காரர்கள் மட்டுமே பெரும் முதலாளிகளுக்காக முதுகை வளைந்து கொடுத்து நாய் போல் வாலாட்டி அவர்கள் போடும் எச்சில் பணத்திற்காக நாட்டையே விற்கிறார்கள் என்பதெல்லாம் ச்சும்மா பம்மாத்துதான்.. காங்கிரஸ் என்றில்லை.. பா.ஜ.க.வும் அதைத்தான் செய்திருக்கிறது.

இதோ குருமூர்த்தியே சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

[[[1999-ல் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாயை அந்த நிறுவனங்களால் அரசுக்குச் செலுத்த முடியாத நிலை இருந்தது. அந்நிறுவனங்களுக்குக் கொடுத்தக் கடனை வங்கிகளாலும் திரும்பப் பெற முடியவில்லை.]]]

செல்போன் லைசென்ஸை பெற்ற நிறுவனங்கள், 1600 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்த கம்பெனிகள் தங்களது இந்தத் தொழில் முதலீட்டுக்காக வங்கிகளில்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த அளவுக்கா இவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள்..? ஆச்சரியம்தான்.

நிச்சயமாக மொத்தத் தொகையில் கால்வாசியை கடனாகப் பெற்றிருப்பார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 400 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையைக் கட்ட இவர்களால் முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு சம்பாத்தியம் அப்போது கிடைக்கவில்லை. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அப்போது குறைவாகத்தான் இருந்தது. பயன்படுத்தும் கட்டணத்தை அதிகப்படுத்தியும் வசூல் செய்ய முடியவில்லை என்று நிறுவனங்கள் சொல்லியிருக்கலாம்.

சரி.. முதலில் இந்த அளவுக்கான கடன் எப்படி இவர்களுக்குக் கிடைத்திருக்கும்..? இதே அளவுக்கான தொகைக்கு யாராவது ஒருவர் ஷ்யூரிட்டி கொடுத்திருக்க வேண்டும். அல்லது அந்தப் பணத்துக்கு ஈடான சொத்துக்களை அடமானம் வைத்திருக்கலாம். இவர்கள் கடனை அடைக்கவில்லையெனில் அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து கடனுக்கு ஈடு செய்திருக்க வேண்டும். செய்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை.. ஆனால் அப்படியெல்லாம் வங்கிகள் செய்திருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். அப்படியொரு ஜனநாயக ரீதியான நடவடிக்கையை வங்கிகள் எடுக்காது என்பது உறுதியாகத் தெரிந்ததால்தானே அம்பானிகளே வங்கியில் நிதியுதவி பெற்று புதிய தொழிலை ஆரம்பிக்கிறார்கள்..!

இப்போது இந்தச் சம்பவத்தில் இதற்குப் பின்பு நடந்ததென்ன? குருமூர்த்தி சொல்வதைப் பாருங்கள்..!

[[[அதனால் அந்தச் சமயத்தில் ஏலத்தின் மூலம் இவ்வளவு பணத்தை நிர்ணயித்து, அதனை அரசாங்கத்தால் பெற முடியாத சூழ்நிலை இருந்ததால், வருவாய் அடிப்படையில் என்ற முறையை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அதாவது செல்லுலர் கம்பெனிகள் எவ்வளவு சம்பாதிக்கின்றனவோ, அந்த வருவாயில் எட்டு சதவிகத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தது. மேலும், அந்தக் கம்பெனிகள் கொடுக்க வேண்டியிருந்த மீதித் தொகையை நுழைவுக் கட்டணமாக அரசு மாற்றியது. அப்படி முடிவெடுத்தன் மூலமாகத்தான் செல்போன் சேவையில் ஒரு வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.]]]

எப்பேர்ப்பட்ட முறைகேட்டை எவ்வளவு எளிதாக குருமூர்த்தி தாண்டிச் செல்கிறார் என்பதையும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்..!

அந்தக் கம்பெனிகளிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய பணமான 3700 கோடி ரூபாயை அப்படியே நுழைவுக் கட்டணமாக மாற்றி அவர்களுக்கு ஒரு ரசீது போட்டுக் கொடுத்து(இது என்னுடைய அனுமானம்) பிரச்சினையை முடித்திருக்கிறது அப்போதைய பா.ஜ.க. அரசு.

பொதுவாக எந்த ஒரு தொழிலிலும் நுழைவுக் கட்டணம் என்பது முதலில் உள்ளே நுழையும்போதே பெறப்பட வேண்டியது. ஆனால் இங்கே நடந்திருப்பதோ அப்படியே உல்டா. தொழில் நடத்த அனுமதி கொடுத்து.. அவர்களைத் தொழில் செய்ய வைத்து.. லாபம் பெற வைத்து.. குறைந்த லாபம் என்பதால் எதிர்பார்த்த பங்குத் தொகை வரவில்லை என்பதால் “வர வேண்டிய பங்குத் தொகையை உள்ளே வரும்போது கொடுத்திருக்க வேண்டிய நுழைவுக் கட்டணமாக நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். நீங்கள் அந்தப் பணத்தைத் தர வேண்டாம்” என்று கூசாமல் சொல்லி தப்பிக்க வைத்திருக்கிறார்கள் பா.ஜ.க. ஆட்சியாளர்கள். இதுவும் ஒரு வகையில் ஊழல்தானே..!

3700 கோடி ரூபாய் கட்டவில்லையெனில் அவர்களுடைய நிறுவனத்திற்கெதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாமே..? அவர்களுடைய சொத்துக்களை முடக்கியிருக்கலாமே..? கோர்ட்டில் அவர்களுக்கெதிராக திவால் நோட்டீஸை அரசே கொடுத்திருக்கலாமே..? செய்யவில்லை. காரணம்.. பிஸினஸ் லாபியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்..!?

ஸோ, காங்கிரஸ் அரசை குற்றம் சொல்லும் அதே சமயத்தில் இந்த 3700 கோடி ரூபாயை வசூல் செய்யாமல்விட்ட காரணத்தினால் நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்கு பா.ஜ.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்..! ஆ.ராசா எந்த அளவுக்குக் குற்றவாளியோ, காங்கிரஸ் அரசு என்ன மாதிரி குற்றம் செய்திருக்கிறதோ அதே குற்றத்தை அன்றைய பா.ஜ.க. அரசும் செய்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை..!

அதே சமயம்.. இன்னொன்றையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.. வங்கிகளில் வாங்கிய கடன்களைக்கூட கட்ட முடியாமல் இருந்த அந்த நிறுவனங்கள் அவற்றைக் கட்டியிருப்பார்களா..? இல்லையா..? என்பதை நாம் யோசித்துப் பார்ப்பதே முட்டாள்தனமாக இருக்கிறது. நிச்சயம் கட்டியிருக்க மாட்டார்கள் என்பதை நினைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. ஸோ.. மக்களுடைய அந்தப் பணமும் வாராக் கடனில் மூழ்கிப் போயிருக்கும்.. இந்த முறைகேட்டுக்கு யார் பொறுப்பேற்பது..? அன்றைய பா.ஜ.க. அரசைத்தானே குற்றம் சொல்ல வேண்டும்..!

இன்னொரு ஊழலையும் குருமூர்த்தி இங்கேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

[[[2003-ல் ஒரு தவறு ஏற்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிக்ஸட் போன் லைசென்ஸ்தான் கிடைத்தது. அப்போது செல்லுலர் லைசென்ஸுக்கு அவர்கள் போகவில்லை. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் ஓயர் இல்லாத போனை வீட்டுக்குள் பயன்படுத்துவதுபோல வெளியிலும் பயன்படுத்துகிறவகையிலான போன்களை விற்க ஆரம்பித்தார்கள். செல்லுலர் லைசென்ஸ் இல்லாமலேயே இப்படி செய்தார்கள். சட்டப்படி அரசால் இதனை நிறுத்த முடியவில்லை. கோர்ட்டாலும் நிறுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 50 லட்சம் சந்தாதாரர்களை அந்த நிறுவனம் அதற்குள் சேர்த்துவிட்டது.

அவர்களையும் இந்த செல்லுலர் லைசென்ஸ் முறையின்கீழ் கொண்டு வருவதற்காக 2003-ல் அருண்ஷோரி - நாணயமான அமைச்சர் - அவருடைய நாணயத்தைப் பற்றி யாரும் குறை சொல்ல முடியாது. அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு. அதனை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே அவர் செய்தது தவறு என்று எழுதியிருக்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 10000 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் 1500 கோடி ரூபாயைத்தான் அபராதமாக அவர் விதித்தார். அதில்தான் நான் தவறு காண்கிறேன்.]]]

முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்த தவறு என்னவென்று பாருங்கள். லைசென்ஸ் பெற்றது வீட்டு டெலிபோன்களை விற்பதற்கு.. ஆனால் அவர்கள் விற்றது 2 கிலோ மீட்டர்களுக்குள் பேசக் கூடிய அளவுக்கான வாக்கிடாக்கி போன்களை..! இது ஏமாற்றுத்தனமில்லையா..? பொறுக்கித்தனமில்லையா..?

நமக்குச் சொந்தமான இடத்தில் 5 அடி தூரம் உள்ளே வந்து பக்கத்து வீட்டுக்காரன் தோண்டினாலே நமக்கு எப்படியிருக்கும்? ஆனால் ரிலையன்ஸ் என்னும் பகாசூரன் எவ்வளவு சாதாரணமாக 50 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்க்கும் அளவுக்கு இந்த வகை டெலிபோன்களை விற்றிருக்கிறார்கள் என்றால் எந்த லட்சணத்தில் அப்போதைய பா.ஜ.க. ஆட்சி நடந்திருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

இது கிரிமினல் குற்றமில்லையா..? ரிலையன்ஸுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? இதுவரையில் நீங்கள் லைசென்ஸ் இல்லாமல் சம்பாதித்தது போதும்.. இப்போது நாங்கள் உங்களுக்கு செல்லுலர் லைசென்ஸ் தருகிறோம். அதனை வைத்துக் கொண்டு அந்த 50 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்து புதிய நிறுவனத்தைத் துவக்குங்கள். இதற்குக் கண் துடைப்பாக 1500 கோடி ரூபாயை மட்டும் கட்டிவிட்டு போங்க என்று தட்டிக் கொடுத்து அனுப்பியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

நிச்சயமாக ரிலையன்ஸ் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியான 10000 கோடி ரூபாயை வசூலித்திருக்க வேண்டிய இடத்தில் வெறும் 1500 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்தால்போதும் என்று ஏதோ தனது மாமனார் வீட்டுச் சொத்தை கிரயம் செய்து கொடுப்பதுபோல தர்மம் அளித்திருப்பதை லேசுபாசாக கண்டித்துவிட்டு அதே அருண்ஷோரியை நாணயமானவர், நல்லவர் என்றெல்லாம் சொல்லும் இந்த குருமூர்த்தியை என்னவென்று சொல்வது..?

ஆ.ராசா மீதான முதல் குற்றச்சாட்டே ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வரக் கூடிய அளவுக்கான வியாபாரத்தை சில ஆயிரம் கோடிகளில் முடக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டார் என்பதுதான். அதே இழப்பைத்தானே அருண்ஷோரியும் இங்கே செய்திருக்கிறார்..! பின்பு எப்படி அருண்ஷோரி மட்டும் நியாயமானவராக, நாணயமானவராக குருமூர்த்தியின் கண்களுக்குத் தெரிகிறார் என்று தெரியவில்லை.

ஆ.ராசா மீது எந்த வகையான குற்றச்சாட்டைச் சுமத்தினார்களோ அதே அளவுக்கான குற்றச்சாட்டை இப்போது அருண்ஷோரியும் சுமந்தாக வேண்டும் என்பதை குருமூர்த்தியின் இந்த வாதமே உணர்த்துகிறது. மேலும் அன்றைய காலக்கட்டத்தில் செல்லுலர் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் அளித்த தொகை 1600 கோடி. அதிலும்கூட 100 கோடியை ரிலையன்ஸுக்கு விட்டுக் கொடுத்து அவர்களை வாழ வைத்திருக்கிறார் அருண்ஷோரி..!

[[[மற்றபடி அந்த அரசாங்கம் செய்த எந்த முடிவும் தவறானதல்ல. மேலும், பா.ஜ.க. ஆட்சியின்போது மந்திரிசபை கூட்டத்தின் மூலம்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. எந்தத் தனி மந்திரியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. யாரையும் விரல் நீட்டி இன்னார் தப்பு செய்தார் என்று கூற முடியாது. இன்னார் லஞ்சம் வாங்கினார் என்று கூற முடியாது. இதனை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். அப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவில் கருத்து வேறுபாடு எனக்கு இருந்தாலும், அதில் லஞ்சம் இருந்தது என்றோ, முறைகேடுகள் நடந்தது என்றோ சொல்வதற்கு இடமில்லை.]]]

இப்படி எதனை வைத்து முடிவெடுக்கிறார் குருமூர்த்தி..? புரியவில்லை.. ஆ.ராசாவும் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படிதான் நான் செயல்பட்டேன் என்று ஒரே வார்த்தையில் சொல்லித்தான் இத்தனை நாட்களாக டிராமா போட்டு வந்தார்.

இப்போது அதே தவறுகளையும், ஊழலையும் செய்திருக்கும் அருண்ஷோரிக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்தி மிகச் சுலபமாக தனது ஆதரவை அருண்ஷோரிக்கு வாரி வழங்குகிறார். அவர் நல்லவர். நாணயமானவர். பா.ஜ.க. ஆட்சியில் இதற்காக எந்த லஞ்சமும் யாருக்கும் வழங்கப்படவில்லை என்று சர்டிபிகேட்டும் வழங்குகிறார்.. முறைகேடுகள் என்று சொல்வதற்கே இடமில்லை என்று அக்மார்க் முத்திரை குத்துகிறார்..! பா.ஜ.க. மீது அவருக்கிருக்கும் பாசத்தின் காரணமாக அக்கட்சிக்கு இத்தனை நற்சான்றிதழ்களை வாரி வழங்கியிருக்கிறார் குருமூர்த்தி..!

தான் சார்ந்த, தான் விசுவாசமாக இருக்கும் நபர்கள் குற்றம் செய்தால், லேசாக ஏதோ கண்டிப்பதுபோல் கண்டித்துவிட்டு அவர்களைக் காப்பாற்றிவிடலாம் என்கிற குயுக்திதான் பத்திரிகையாளர் வேடத்தில் இருக்கும் இந்த ஆடிட்டர் குருமூர்த்தியின் வாதத்தில் இருந்து தெரிகிறது..!

அரசியல் உலகில் இங்கே யாரும் யோக்கியமில்லை என்பதை இதிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்..!

நன்றி : துக்ளக்

18 comments:

செங்கோவி said...

தலைப்பைப் பார்த்துட்டு, இந்தாளு அப்படி எல்லாம் பேச மாட்டாரே..அவங்களை விட்டுக்குடுக்க மாட்டாரே-ன்னு நினைச்சேன்..சரியாப் போச்சு...!

மு.சரவணக்குமார் said...

இன்னும் ஸ்பெக்ட்ரம்ல இருந்து வெளிய வரலையா நீங்க....கூட்டனியே போச்சுன்னு படம் காட்டீட்டு இருக்காங்க...அதைப் பத்தி எழுதுங்க

ssk said...

சிறப்பாக நமக்கு புரியாத விசயங்களை ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்.
பாஜக கூவுவதெல்லாம் தாங்கள் அடித்த கொள்ளை குறைவாக போய் விட்டதே என்ற வருத்தமாக இருக்கலாம்.
இங்கே அரசியல் என்றால் கொள்ளை அடிக்க லைசென்ஸ் என்று பொருளோ என்று நினைக்க தோன்றுகிறது.
ஆட்சி அதிகாரம் எல்லாம் பணக்காரனுக்கே.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்க எழுதி என்ன செய்ய போறீங்க? நாம கவலை பட்டு என்ன செய்றது? எல்லாம் இந்தியனோட தலைவிதி..

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

R.Gopi said...

”தல” கூட்டணி முறிவுன்னு “படம்” காட்டுறாரே... பின்னணி என்ன, இனி என்னென்ன நடக்கும்னு எளுதினா எங்கள போல பாமரனுக்கும் புரியுமில்ல...

எளுதுவீயளா?

சாமக்கோடங்கி said...

இது மிகத்தெளிவான ஆதாரம்.. அம்பானி குடும்பம் செல்வச் செழிப்போடு வாழ நாடே அடமானம் வைக்கப் பட்டு உள்ளது.. ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கடன் வாங்கினவன் வீட்டை எல்லாம் கூட ஜப்தி பன்றாணுக.,. அம்பானி குடும்பம் ஏழ்மையில் வாடுவது போலும், கடனைத் திரும்பத் தர முடியாதது போலவும், தர்மத்தின் அடிப்படையில், முடிவுகளை எடுத்தது போலவும், நடந்துள்ள பொறுக்கித் தனத்தை எவ்வளவு அழகாக மூடி மறைத்துள்ளார்கள்..?? அரசியல்வாதிகளை மட்டுமல்ல.. தவறுக்கு உடந்தையான அதிகாரிகளையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்..

பூவண்ணன் said...

அண்ணே இன்னொன்னு இருக்கு.வெளிநாட்டு கால் வந்தா நம்பர் வராது restricted அப்படின்னு வந்து பல்லாயிரம் கோடி அடிச்சாங்க.தனியார் கம்பெனி எல்லாம் வருமானம் வர எடத்தில தான் தொடர்பு கொடுக்கும் ஆனா அரசு நிறுவனம் ladakh அந்தமான் அருன்னாச்சல் என்று நஷ்டம் தரும் இடங்களிலும் landline ஆவது கொடுக்கும்.அந்த நஷ்டத்தை ஈடு கட்ட ஒவ்வொரு வெளிநாட்டு காலுக்கும் இவ்வளோ காசு தரணும்னு விதி.ஆனா அம்பானியோ மிட்டலோ டாட்டாவோ ஏன் கொடுப்பான்.ஏமாத்து என்று வெளிநாட்டு அழைப்புகளை மறைச்சு அடிச்சாங்க.பாவம் அவங்களுக்கு எல்லாம் இதுவரை பத்மஸ்ரீ பத்மபூஷன் தான் கடைச்சிருக்கு இதுக்காக.அபோல்லோ ரெட்டி கூட போன வருஷம் வாங்கினாரு.அடுத்த வருஷம் இவங்க எல்லோருக்கும் பாரத் ரத்னா தரலாம்
அடிசிகிட்ட அண்ணன் தம்பிங்க சுமூகமா பிரிய தொலைதொடர்பு ஒரு முக்கிய காரணம்.எண்ணெய் தான் வேணும்னு அடம் புடிச்சவர் தொலை தொடர்போடு ஒதுங்கிட்டார்ணா சும்மாவா
எண்ணெய் பத்தி பேசனா லட்சம் கோடின்றது பொய் கோடி கோடின்னு வரும்

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

தலைப்பைப் பார்த்துட்டு, இந்தாளு அப்படி எல்லாம் பேச மாட்டாரே. அவங்களை விட்டுக் குடுக்க மாட்டாரே-ன்னு நினைச்சேன். சரியாப் போச்சு...!]]]

எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்டுதான் செங்கோவி..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

இன்னும் ஸ்பெக்ட்ரம்ல இருந்து வெளிய வரலையா நீங்க. கூட்டனியே போச்சுன்னு படம் காட்டீட்டு இருக்காங்க. அதைப் பத்தி எழுதுங்க]]]

இன்னிக்குத்தான பூனைக்குட்டி வெளில வந்திருக்கு.. எழுதிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

நீங்க எழுதி என்ன செய்ய போறீங்க? நாம கவலைபட்டு என்ன செய்றது? எல்லாம் இந்தியனோட தலைவிதி..

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ.]]]

இந்தத் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலை நீங்களும், நானும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ssk said...

சிறப்பாக நமக்கு புரியாத விசயங்களை ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள். பாஜக கூவுவதெல்லாம் தாங்கள் அடித்த கொள்ளை குறைவாக போய் விட்டதே என்ற வருத்தமாக இருக்கலாம். இங்கே அரசியல் என்றால் கொள்ளை அடிக்க லைசென்ஸ் என்று பொருளோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆட்சி அதிகாரம் எல்லாம் பணக்காரனுக்கே.]]]

ஊழலில் எந்தக் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

”தல” கூட்டணி முறிவுன்னு “படம்” காட்டுறாரே... பின்னணி என்ன, இனி என்னென்ன நடக்கும்னு எளுதினா எங்கள போல பாமரனுக்கும் புரியுமில்ல...

எளுதுவீயளா?]]]

எழுதிருவோம் கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[சாமக்கோடங்கி said...
இது மிகத் தெளிவான ஆதாரம்.. அம்பானி குடும்பம் செல்வச் செழிப்போடு வாழ நாடே அடமானம் வைக்கப்பட்டு உள்ளது.. ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கடன் வாங்கினவன் வீட்டை எல்லாம் கூட ஜப்தி பன்றாணுக. அம்பானி குடும்பம் ஏழ்மையில் வாடுவது போலும், கடனைத் திரும்பத் தர முடியாதது போலவும், தர்மத்தின் அடிப்படையில், முடிவுகளை எடுத்தது போலவும், நடந்துள்ள பொறுக்கித்தனத்தை எவ்வளவு அழகாக மூடி மறைத்துள்ளார்கள்.? அரசியல்வாதிகளை மட்டுமல்ல. தவறுக்கு உடந்தையான அதிகாரிகளையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.]]]

எப்படி, யார் தண்டிப்பது. ஆள்பவர்கள்தான் எப்போதுமே ஆண்டவர்கள். அவர்களை அந்த ஆண்டவனே தண்டித்தால்தான் உண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[poovannan said...

அண்ணே இன்னொன்னு இருக்கு.

வெளிநாட்டு கால் வந்தா நம்பர் வராது restricted அப்படின்னு வந்து பல்லாயிரம் கோடி அடிச்சாங்க. தனியார் கம்பெனி எல்லாம் வருமானம் வர எடத்திலதான் தொடர்பு கொடுக்கும் ஆனா அரசு நிறுவனம் ladakh அந்தமான் அருன்னாச்சல் என்று நஷ்டம் தரும் இடங்களிலும் landline ஆவது கொடுக்கும். அந்த நஷ்டத்தை ஈடு கட்ட ஒவ்வொரு வெளிநாட்டு காலுக்கும் இவ்வளோ காசு தரணும்னு விதி. ஆனா அம்பானியோ மிட்டலோ டாட்டாவோ ஏன் கொடுப்பான். ஏமாத்து என்று வெளிநாட்டு அழைப்புகளை மறைச்சு அடிச்சாங்க. பாவம் அவங்களுக்கு எல்லாம் இதுவரை பத்மஸ்ரீ பத்மபூஷன் தான் கடைச்சிருக்கு இதுக்காக. அபோல்லோ ரெட்டி கூட போன வருஷம் வாங்கினாரு. அடுத்த வருஷம் இவங்க எல்லோருக்கும் பாரத் ரத்னா தரலாம். அடிசிகிட்ட அண்ணன் தம்பிங்க சுமூகமா பிரிய தொலைதொடர்பு ஒரு முக்கிய காரணம்.எண்ணெய் தான் வேணும்னு அடம் புடிச்சவர் தொலை தொடர்போடு ஒதுங்கிட்டார்ணா சும்மாவா எண்ணெய் பத்தி பேசனா லட்சம் கோடின்றது பொய் கோடி கோடின்னு வரும்.]]]

அந்தக் கோடியும் ஒரு நாள் தெருக்கோடிக்கு வந்தே தீரும்.. பார்த்துக்கிட்டே இருங்க பூவண்ணன் ஸார்..!

சமர்த்து said...

//கபில்சிபல்,அவர் என்னுடைய நண்பர்./// Awwwwwwwwww, neenga romba periya manusan anne, appuram nallavar kooda anne :)
//அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு.// Acho avar yaarunga sir.
//ஆனால் 1500 கோடி ரூபாயைத்தான் அபராதமாக அவர் விதித்தார்.// Meethi ungalukku theriyaama vasulithiruppar sir :)))))))). Nadappu yarukkume theriyarathillai.

//ஏன் பழைய முறையைப் பின்பற்றினார்கள்// ethaavathu puthu viyaabaara yukthi irukkumo? :) Namakkenna ippa theriyapoguthu.

//லைசென்ஸ் பெற்றுள்ள ஆறு கம்பெனிகளுக்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. //
Ada ippadiyum sollangala. Neenga solluratha parthaa intha company oru kattathula naanga tholil mattume seygindrom, engalukku oolal, 2g, 3g arasiyal ethuvume theriyaathu enbaargal polairukke!!

//சட்ட அமைச்சகம் இதனைத் தவறு என்கிறது. ஆனால், அதே துறையைச் சேர்ந்த சட்ட வல்லுநர்க்ள் நடந்தது சரிதான் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.// ada kadavule!!

//தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்தான் 2-ஜிக்கு ஒரு டெஸ்ட்// Anne pass Mark evalo, appuram result eppa varum, paper chasing patriyellam solluveenganu parthen.

//கோர்ட்டில் அவர்களுக்கெதிராக திவால் நோட்டீஸை அரசே கொடுத்திருக்கலாமே..? செய்யவில்லை. காரணம்.. பிஸினஸ் லாபியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்..// che che, appadi ellam irukkathu anne. Arasaangam enbathu thannai nambum oru niruvanathukku valarchikundaana valigalai koori athan moolam varigalai peruvathum, thamathu nattil velai vaaippinai perukkavum mattume valivagukkum nenga romba kodanji illatha maru pakkam pathi oru puthiya konam uruvakkureenga. mela padikka neram illai, porumayum illai. :) Pagirvirkku nandrigal anne.

சமர்த்து said...

//ஆ.ராசா மீதான முதல் குற்றச்சாட்டே ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வரக் கூடிய அளவுக்கான வியாபாரத்தை சில ஆயிரம் கோடிகளில் முடக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டார் என்பதுதான். அதே இழப்பைத்தானே அருண்ஷோரியும் இங்கே செய்திருக்கிறார்..! பின்பு எப்படி அருண்ஷோரி மட்டும் நியாயமானவராக, நாணயமானவராக குருமூர்த்தியின் கண்களுக்குத் தெரிகிறார் என்று தெரியவில்லை.
//
Sari vidunga anne. Ungalukku theriyaathathaa, namma india makkalukku thaan evallo nalla manasu, ella oolalukkum manichuttom, maranthuttom endru sollittu appuram athe arasukku oottum poduraathu therinja visayam thaane.

//இப்படி எதனை வைத்து முடிவெடுக்கிறார் குருமூர்த்தி..?// anne enna oolal seithaalum, naam ellorum Indiyargal anne..

//அரசியல் உலகில் இங்கே யாரும் யோக்கியமில்லை என்பதை இதிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்..!//

Enna kodumai anee idhu. Innaikku Tamil nattula ethanai perukku "Thesiya Geetham" thukku porul theriyum.

Eluthinathu Bengali la oru bengaali thaannaalum, thesiya geethamaaga maarinathum ellarum onna elunthu ninnu kottathula paadurathilla. Arasiyalil idhellam sagajam anne.

Pothu makkalai patri onnu Mattum nalla puriuthu. oolal patriyum, arasiyal vaathigal patriyum ethuvum theriyalinaa ippadi namma ethaavathu puthusaa potta niraya visayam veliyil varugindrathu.

Thotraalum , vendraalum namma naattu arasiyal mannargalai patriyum , avargalin suthshamathai patriyum ippadi ella nattukkum theriyumbadi solli tharakoodaathu anne.

Evalavu surandinaalum, indiyargal kadum vidaa muyarchi ulla ulaipaaligal. Avargalai Oru naal Americave thirumbi parkkum endru Dr. APJ Abdul kalam sollirukkar anne.

உண்மைத்தமிழன் said...

[[[நல்லவனுக்கு சத்தியமா நல்லவன். said...

//கபில்சிபல்,அவர் என்னுடைய நண்பர்.///

Awwwwwwwwww, neenga romba periya manusan anne, appuram nallavar kooda anne :)

//அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு உண்டு.//

Acho avar yaarunga sir.

//ஆனால் 1500 கோடி ரூபாயைத்தான் அபராதமாக அவர் விதித்தார்.//

Meethi ungalukku theriyaama vasulithiruppar sir :)))))))). Nadappu yarukkume theriyarathillai.

//ஏன் பழைய முறையைப் பின்பற்றினார்கள்//

ethaavathu puthu viyaabaara yukthi irukkumo? :) Namakkenna ippa theriyapoguthu.

//லைசென்ஸ் பெற்றுள்ள ஆறு கம்பெனிகளுக்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. //

Ada ippadiyum sollangala. Neenga solluratha parthaa intha company oru kattathula naanga tholil mattume seygindrom, engalukku oolal, 2g, 3g arasiyal ethuvume theriyaathu enbaargal polairukke!!

//சட்ட அமைச்சகம் இதனைத் தவறு என்கிறது. ஆனால், அதே துறையைச் சேர்ந்த சட்ட வல்லுநர்க்ள் நடந்தது சரிதான் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.//

ada kadavule!!

//தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்தான் 2-ஜிக்கு ஒரு டெஸ்ட்//

Anne pass Mark evalo, appuram result eppa varum, paper chasing patriyellam solluveenganu parthen.

//கோர்ட்டில் அவர்களுக்கெதிராக திவால் நோட்டீஸை அரசே கொடுத்திருக்கலாமே..? செய்யவில்லை. காரணம்.. பிஸினஸ் லாபியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்..//

che che, appadi ellam irukkathu anne. Arasaangam enbathu thannai nambum oru niruvanathukku valarchikundaana valigalai koori athan moolam varigalai peruvathum, thamathu nattil velai vaaippinai perukkavum mattume valivagukkum nenga romba kodanji illatha maru pakkam pathi oru puthiya konam uruvakkureenga. mela padikka neram illai, porumayum illai. :) Pagirvirkku nandrigal anne.]]]

அண்ணே.. தமிழ்ல தட்டச்சு செஞ்சு பழகுண்ணே..! நல்லாயிருக்கும்..! அருண்ஷோரியையும் காப்பாத்தணும்.. ஊழல் நடந்திருப்பதையும் சொல்லணும்.. இந்தச் சிக்கல்ல மாட்டிக்கிட்டதால குருமூர்த்தி கொஞ்சம் மதி மயங்கிட்டாரு. அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நல்லவனுக்கு சத்தியமா நல்லவன். said...

Sari vidunga anne. Ungalukku theriyaathathaa, namma india makkalukku thaan evallo nalla manasu, ella oolalukkum manichuttom, maranthuttom endru sollittu appuram athe arasukku oottum poduraathu therinja visayamthaane.]]]

காசு வாங்கிட்டு அவங்களுக்கே ஓட்டைக் குத்தும் பொதுஜனம் தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்..?

[[[Enna kodumai anee idhu. Innaikku Tamil nattula ethanai perukku "Thesiya Geetham" thukku porul theriyum. Eluthinathu Bengali la oru bengaali thaannaalum, thesiya geethamaaga maarinathum ellarum onna elunthu ninnu kottathula paadurathilla. Arasiyalil idhellam sagajam anne.

Pothu makkalai patri onnu Mattum nalla puriuthu. oolal patriyum, arasiyal vaathigal patriyum ethuvum theriyalinaa ippadi namma ethaavathu puthusaa potta niraya visayam veliyil varugindrathu.

Thotraalum, vendraalum namma naattu arasiyal mannargalai patriyum, avargalin suthshamathai patriyum ippadi ella nattukkum theriyumbadi solli tharakoodaathu anne.

Evalavu surandinaalum, indiyargal kadum vidaa muyarchi ulla ulaipaaligal. Avargalai Oru naal Americave thirumbi parkkum endru Dr. APJ Abdul kalam sollirukkar anne.]]]

உங்களுடைய பொறுமையான, ஆர்வமான, மிக நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றிகள் தம்பி..!