2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - நடந்தது என்ன..? மிக எளிமையான விளக்கம்..!


04-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மையாக இந்தக் கட்டுரைதான் எனது தளத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு அறிமுகம் என்னும் தலைப்பில் முதலில் வெளிவந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு எழுதுவதற்கு எனக்கு அறிவு போதாததால் கிடைத்தத் தகவல்களை மட்டும் வைத்து சிலவற்றையும், பல எடுத்துக்காட்டுக் கட்டுரைகளையும் தொகுத்து அளித்திருந்தேன்.

இந்தக் கட்டுரையை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான திரு.என்.முருகன் அவர்கள், துக்ளக் இதழில் கடந்த டிசம்பர் மாதம் எழுதியிருக்கிறார். இப்போதுதான் படிக்க முடிந்தது.. படித்தவுடன் நிச்சயமாக இதனை எனது தளத்தில் பதிவு செய்தாக வேண்டும் என்கிற வெறியும் ஏற்பட்டுவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மிக எளிமையாக, மிகச் சுருக்கமாக அழகாகத் தொகுத்தளித்திருக்கிறார்..! முழுவதையும் படித்துப் பாருங்கள். இதுவரையில் நீங்கள் அறிந்திருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய சந்தேகங்கள் உங்களுக்குள் இல்லாமல் போகலாம்..!

இனி முருகன் ஸார் எழுதியிருப்பது :

நம் நாட்டில் தொலைபேசிகள் லேண்ட்லைன் எனப்படும் கம்பிகளின் மூலம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் 1994 வரை இயங்கி வநதது சரித்திரம். அதன் பின், முதல் முறையாக பிற நாடுகளில் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் புதிய கண்டுபிடிப்புகளினால் ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா டெலிபோன்களையும், கைப்பேசி எனப்படும் செல்போன்களையும் உருவாக்கக் கொள்கை முடிவு செய்யப்பட்டது.


இதே காலக்கட்டத்தில்தான், பொருளாதார தாராளமயக் கொள்கையும், பெரிய அளவில் அமலுக்கு வந்தது. இதனால், அதுவரை மத்திய அரசின் ஏக போகத்தில் இருந்த டெலிபோன் தொழிலில் தனியார் கம்பெனிகளையும் அரசு ஈடுபடுத்தியது.

ஒயர்லெஸ் செல்போன்கள் இயங்க, ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கதிர்கள் அவசியம். அதாவது வானவெளியில், இயற்கையிலேயே ரேடியோ ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரம் என்னும் அலைவரிசை உள்ளது. இது உலகெங்கிலும் வியாபித்திருப்பதால், இதை உபயோகித்து ஒயர்லெஸ் கருவிகள் மூலம் செல்போன்களை இயக்கலாம். இதைப் பன்னாட்டு டெலிபோன்கள் சங்கம் என்ற அமைப்பு எந்த நாட்டிற்கு எந்த அளவு அலைக்கதிர்கள் என்று நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யும்.

நம் நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 9 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 400 கிலோ ஹெர்ட்ஸ்வரை.

ஒரு நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் மற்ற நாடு இயங்கக் கூடாது. காரணம், ஒன்றையொன்று பாதித்து மொத்த உபயோகமும் தடைப்பட்டுவிடும். இது போன்ற அலைக்கதிர்களை பெரும்பாலும் இந்திய ராணுவம் பழைய காலங்களில் தங்கள் தொலைத் தொடர்புக்கு ஒயர்லெஸ் கருவிகள் மூலம் பயன்படுத்தி வந்தது. பின்னர் அவை தனியார் மற்றும் அரசு தொலைபேசி கம்பெனிகளின் செல்போன் உபயோகத்திற்கு ஒதுக்கிவிடப்பட்டன. இவற்றைத் தனியார் கம்பெனிகளுக்கு விடுவதில் 2001-ம் ஆண்டு குறிப்பிட்ட ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன்படி ஒரு குறிப்பிட்ட தொகை, அலைவரிசை லைசென்ஸ் தொகையாக வசூலிக்கப்பட்டது.

அந்த ஆண்டு முதல் தனியார் கம்பெனிகள் செல்போன்களை அறிமுகம் செய்தன. யாருமே எதிர்பாராதவகையில் செல்போன்களின் உபயோகம் நம் நாட்டில் அதிகரித்தது. இதில் உலகிலேயே நம் நாடு இரண்டாவது இடமென்றும், சைனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செல்போன்கள் உள்ள நாடு இந்தியா என்றும் ஒரு சர்வே கூறுகிறது.

2001-ம் ஆண்டு முதலில் இரண்டு வகையான ஒயர்லெஸ் அலைக்கதிர்கள், சி.எம்.டி.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். அமல்படுத்தப்பட்டன. பெரிய கம்பெனிகள் சில சி.எம்.டி.ஏ. சர்வீஸைவிட ஜி.எஸ்.எம். வளர்ச்சியே சிறந்தது என்ற கணக்குடன் தங்களுக்கும் புதிய ஜி.எஸ்.எம். லைசென்ஸ்கள் வேண்டும் என்ற வகையில் காய் நகர்த்தின.

இதேவேளையில், இரண்டு விஷயங்கள் உருவாகின. ஒன்று செல்போன்களின் உபயோகம் மிகவும் அதிகமானது. மேலும் எஸ்.எம்.எஸ். என்ற செய்திக் குறிப்புகள் போக, புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற புதிய அம்சங்கள் விஞ்ஞான வளர்ச்சியினால் உருவாயின. இது போன்ற சேவைகளுக்கு அலைக்கதிர்களின் அடுத்தத் தலைமுறை, இரண்டாம் ஜெனரேஷன் எனப்படும் 2-ஜி திட்டமிடப்பட்டது.

இந்த 2-ஜி அலைக்கதிர் ஒதுக்கீடு வருவதைத் தெரிந்து கொண்டு ஏற்கெனவே டெலிபோன் வியாபாரத்தில் இங்கு இயங்கி வரும் இந்தியக் கம்பெனிகளும், வெளிநாட்டுக் கம்பெனிகள் சிலவும், டெலிபோன் வியாபாரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத பல கம்பெனிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கி, லைசென்ஸ் பெற முயற்சித்தன.

பல கோடி ரூபாய்கள் கை மாறி, பல விதிமீறல்களின் மூலம், சிலர் லைசென்ஸ் பெறுகின்றனர். இதில் நடைபெற்ற முறைகேடுகளில் முதன்மையானது 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட லைசென்ஸ் கட்டணத்தையே 2008-ம் ஆண்டிலும் வசூலித்ததுதான்.

2001-ம் ஆண்டு நம் நாட்டில் டெலிபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்தது. 2008-ம் ஆண்டு அது 35 கோடி சந்தாதாரர்களாக உயர்ந்தது. எனவே 2001-ம் ஆண்டு ஒரு செல்போன் கம்பெனியின் வியாபார வருமானம் எவ்வளவு இருந்திருக்க முடியுமோ அது சுமார் 88 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 2001-ம் ஆண்டு விதித்த லைசென்ஸ் கட்டணத்தைத்தான் நான் வசூலித்தேன் என்று அத்துறையின் அமைச்சர் கூறுகிறார்.

அது எவ்வளவு தூரம் தனியார் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தந்தது என்பதைக் கணக்கிட்டுள்ளது தணிக்கைத் துறையின் அறிக்கை. ஸ்வான் என்ற கம்பெனி இதற்கு முன் டெலிபோன் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. அமைச்சரின் உதவியுடன் 13 சரகங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வெற்ரிகரமாகப் பெற்ற கம்பெனி இது. ஒதுக்கீடு லைசென்ஸ் பெற்று சேவையை தொடங்கும் முன்னரேயே தனது பங்குகளில் 50 சதவிகிதத்தை ரூ.3597.50 கோடிக்கு விற்றுவிட்டது இந்தக் கம்பெனி. அதன்படி பார்த்தால் இக்கம்பெனியின் மொத்த மதிப்பீடு ரூபாய் 7195 கோடி.

இந்த மதிப்பீட்டைக் கூர்ந்து நோக்கினால், இந்தக் கம்பெனியிடம் செல்போன் சேவையை வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் கிடையாது என்பது தெரியும். அதாவது எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கான செல்போன் டவர்கள், மற்ற பல கருவிகள் வாங்க இது போன்ற ஒரு கம்பெனிக்கு 25000 கோடி முதல் 35000 கோடி வரை தேவைப்படலாம்..

இதில் எதையும் செய்யாமல், இக்கம்பெனிகளின் மதிப்பீடு ரூபாய் 7195 கோடி என்றால், அந்த முழுத் தொகையும் இந்தக் கம்பெனி பெற்ற 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரைசியின் மதிப்பீடுதான். அந்த மதிப்பீட்டிற்கு இந்தக் கம்பெனி அரசுக்குச் செலுத்திய லைசெனஸ் கட்டணம் ரூபாய் 1651 கோடி மட்டுமே..!

இதைப் போலவே யுனிடெக் என்ற கம்பெனி, ரூ.6120 கோடி மதிப்பீடுள்ள 2-ஜி அலைவரிசைகளை 1651 கோடி செலுத்திப் பெற்றுள்ளது. இந்த வகையில் 2008-ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை 122 லைசென்ஸ்களை வழங்கியுள்ளது என்றால், அவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

மேலும் இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் தகுதியில்லாத கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல கம்பெனிகள் தவறான தகவல்களை அளித்திருந்தும், அவற்றை வேண்டுமென்றே, சரியானபடி ஆய்வு செய்து நிராகரிக்காமல், லஞ்ச ஊழல் காரணமாகவே லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுபோக, லைசென்ஸ் வழங்க தவறான ஒரு அணுகுமுறையும் கையாளப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிவரை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு 575 விண்ணப்பங்கள் வந்தன. அமைச்சரின் தலைமையில் அதிகாரிகள்கூட, 2007-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதிவரையிலும் பெற்றப்பட்ட விண்ணப்பங்கள்தான் பரிசீலிக்கப்படும் என்று கூறிவிட்டனர். அதன்படி 232 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த விண்ணப்பங்களின் குறைபாடுகளை எல்லாம் சரியாக ஆராயமல் ஒரே நாளில் 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இந்தக் கம்பெனிகள் இவ்வாறு லைசென்ஸ்களைப் பெறுவதற்குத் தேவையான தொகையை அன்றைய தினமே செலுத்த வேண்டும் என்ற பத்திரிகைச் செய்தியை மதியம் 2.45 மணிக்குத்தான் மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிடுகிறது. ஆனால் செலுத்த வேண்டிய கடைசி நேரம் மதியம் 3.30 மணி. அதாவது வெறும் 45 நிமிடங்களில்..!

நமது கிராமங்களில், கிராம அதிகாரிகளிடமோ அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திலோ வரி செலுத்தும்போதுகூட, இது போன்ற கோமாளித்தனமான அறிவிப்புகள் வருவதில்லை. அகில இந்திய அளவிலும் வேறு பல நாடுகளிலும் உள்ள பல டெலிபோன் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதைக் கூர்ந்து நோக்கும்போது, ஸ்பெக்ட்ரம் அலைக்கதிர் ஒதுக்கீட்டு நடைமுறையில் இது போன்ற கோமாளித்தனங்கள் நடந்திருப்பதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதைவிடவும் கேலிக்குரியது. சில கம்பெனிகள் அன்றைய தினத்தில்(10.-01-2008) 45 நிமிடங்களில் சரியான தொகைக்கு பேங்க் டிராப்ட்டை தொலைத் தொடர்புத் துறைக்கு கொடுத்துள்ளன. இந்த டிராப்ட்டுகள் ஏற்கெனவே பல தொடர்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்ததாம்..! ொரு கம்பெனியின் டிராப்ட் மும்பை வங்கி ஒன்றில் எடுக்கப்பட்டிருந்ததாம்.

ஆக, என்ன மாதிரியான அறிவிப்புகள் வரும் என்பதை இவர்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. அதாவது, சரியான சிபாரிசுடன் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தால், நடைமுறைகள் எப்படியிருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னரே தெரிவித்து விடுவார்கள் என்பது ஊழல் நடவடிக்கையி்ன அடிப்படை.

லைசென்ஸ் வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமை என்ற நடைமுறை என்றால் - பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்ட் - விண்ணப்பங்களை தபாலில் பெறப்படும்போது அவற்றை ரிஜிஸ்தரில் வரிசையாக எழுதி, வரிசையாக டோக்கன் எண்ணிட்டு அதன்படி வரிசைக்கிரமமாக பரிசீலனை செய்யப்படும்.

இதுவரையிலும் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறையில் இருக்கும் பழக்கம் இதுதான். லைசென்ஸ் கொடுக்கும்போது விண்ணப்பங்களை இதுபோல் பரிசீலனை செய்த பின் முதலில் LOI எனப்படும் Letter of Intent  என்ற முதற்கட்ட அனுமதி வழங்கப்படும்.

இதைப் பெற்றுக் கொண்டவர்கள் டெபாசிட், லைசென்ஸ் தொகை, இருப்பிடச் சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு முழுமையாக லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால், இதன்படி Letter of Intent பெற்றவர்கள் அனைவரும் 2008-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று முக்கால் மணி நேரத்தில் அனைத்துச் சான்றிதழ்களையும் வழங்க வேண்டுமென்று அவர்களுக்கு பத்திரிகைச் செய்தி அனுப்பப்பட்டது.

இதன்படி பயில்வான்கள் போன்ற அடியாட்கள் கம்பெனிகளின் சான்றிதழ்களையும், வங்கி டிராப்ட்டுகளையும் கொண்டு வந்து முண்டியடித்துக் கொண்டு கெளண்ட்டரில் பணத்தைச் செலுத்திய கேலிக்கூத்து 2008-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருக்கிறது. அரசுக்கு வேண்டியவர்களுக்கும், கையூட்டுப் பெற்றவர்களுக்கும் செய்யப்பட்ட வசதி இது என்பது சொல்லாமலேயே தெரியும்..!

நன்றி : துக்ளக் - 01-12-2010

38 comments:

Sankar Gurusamy said...

Very much Shameful. That too one of our Tamil Minister is involved.. Shame on these parties.

http://anubhudhi.blogspot.com/

Trails of a Traveler said...

Bastards!

Ram

Indian Share Market said...

இந்த முறை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தோற்காவிடில், தமிழகத்தை மறந்து விடலாம். ஒருபுறம் 2G ஊழலில் நடவடிக்கை எடுப்பதாக பாவலா காட்டிக்கொண்டே, அதே ஊழல் கட்சியான தி.மு.க.விடம் கூட்டணி வைக்க முற்படும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோற்பது தான் சரியான முடிவாக இருக்க முடியும்.

பூவண்ணன் said...

ஸ்பெக்ட்ரம் பற்றி சில மாறுபட்ட கருத்துக்கள்.
2001 க்கு முன் வாங்கிய pager என்னிடம் முன்று உள்ளது.vcp ஒன்று உள்ளது.இன்று அதன் மதிப்பு என்ன.சும்மா கொடுத்தால் கூட யாரும் எடுத்து போக மாட்டார்கள்.ஸ்பெக்ட்ரம் ஒன்றும் அசையா சொத்து அல்ல நிலம் வீடு போல ஒவ்வொரு ஆண்டும் வட்டி குட்டி போட
இன்று மறு ஏலம் விடபட்டால் எவ்வளவு போகும் என்று பார்க்கலாம்.இதை விட புது தொழில்நுட்பம் வந்தால் அதற்கு ஒரு மதிப்பும் கிடையாது
NDA அரசாங்கம் டெலிபோன் ஏலம் எடுத்த கம்பனிகள் கட்ட வேண்டிய பல்லாயிரம் கோடிகளை துறை நஷ்டத்தில் போகிறது என்று தள்ளுபடி செய்தது(மகாஜன் மகன் 500 ரூபாய் நோட்டில் கஞ்ச அடிப்பதும் அவர் மருமகன் பல கோடி ரிலையன்ஸ் ஷேர் வைதிருபதற்கும் அடிப்படை).10 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ஒரு ரூபாய் அதிகம் வாங்காமல் 20 ஆண்டுகளுக்கு கொடுத்தது.அப்படி செய்யாமல் இப்போது மறு ஏலம் நடந்திருந்தால் மூன்று லட்சம் கோடி கிடைக்கும்.பழைய CAG ரிப்போர்ட்களை சற்று தூசி தட்டி படித்தால் எதனை ஆயிரம் கோடி நஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று புரியும்.
shourie முதல் ட்ராய் அதிகாரிகள் வரை இப்போதும் first come first serve முறை தான் சரி என்று வாதிடுகிறார்.பல லட்சம் கோடி கொட்டி உரிமை வாங்கினால் பேசுவதற்கு நிமிடத்திற்கு பல ரூபாய் தான் நாம் கட்ட வேண்டி வரும்.அரசாங்கம் கட்டும் HIG /LIG பிளோட்கள் இப்போது ஏன் அதிக விலையானது .நிலத்தின் விலை guidelines value படி வாங்கபடுவதால்.சினிமாகாரர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ஆயிரம் கோடி நஷ்டம் என்று யாரவது சொன்னால் எப்படி.
cdma முறையில் உள்ளே நுழைந்த ரிலையன்ஸ் (20 km வரை நடத்த தான் அனுமதி )திருட்டுத்தனமாக அகில இந்தியா ரோமிங் எல்லாம் கொடுத்தது.பல்லாயிரம் கோடி அடித்த பிறகு 500 கோடி பெனால்டி கட்டி (மந்திரிகளுக்கு/ட்ராய் அதிகாரிகளுக்கு எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தனரோ )சரி செய்து விட்டது.
நமக்கு மிக குறைந்த விலையில் கைபேசி பேச முடிவதற்கு முக்கிய காரணம் குறைந்த விலையில் துறை சம்பந்தப்பட்ட அடிப்படைகள் குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டது தான்.
இந்தியாவெங்கும் இருக்கும் அபோல்லோ மருத்துவமனைகள் ஒரு ரூபாய்க்கு பல ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இடத்தில கட்டப்பட்டது தான்.30% இலவசமாக செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் ஆனால் நடப்பது என்ன
PSBB பள்ளி அரசாங்கம் இலவசமாக கொடுத்த இடத்தில உள்ளது .எத்தனை ஏழை குழந்தைகளை சேர்த்து கொண்டுள்ளனர்ர்.சோ வின் தம்பி நடத்தும் பள்ளிக்கு(சென்னையின் அதிக கட்டணம் வாங்கும் பள்ளி)எத்தனை மான்யமோ
நாம் உபயோபடுதும் காஸ் cylinder ஒன்றுக்கு அரசாங்கம் 500 ரூபாய் மான்யம் அளிக்கிறது.அதை எடுத்து விட்டால் ஒரு லட்சம் கோடி ஒரு வருடத்திற்கு கிடைக்கும் . அபோல்லோ /PSBB போல spectrum குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களுக்கு உபயோகம் இல்லாமல் நாம் நிமிடத்திற்கு பல ரூபாய் கட்ட வேண்டி இருந்தால் தவறு.ஆனால் அந்த மான்யம் கைபேசி வைத்திருக்கும் அணைத்து மக்களுக்கும் வந்து சேர்கிறதா இல்லையா
டாட்டா/பிர்ல/அம்பானி தவிர துறையில் நாட்டமுடைய சாதாரண மனிதர்களுக்கும் பங்கு /நுழைய வேண்டுமானால் ராசா செய்ததை தவிர வேறு என்ன வழி.அவர் அதை வெளிப்படையாக தாழ்த்தப்பட்டவர் நடத்தும் கம்பனிகளுக்கு /பிற்படுதபட்டவர் நடத்தும் கம்பனிகளுக்கு என்று செய்திருக்க வேண்டும்.

Sivakumar said...

மிகச் சிறப்பான கட்டுரை. துக்ளக்கில் எப்படி இதை படிக்கத் தவறினேனோ.
"ஸ்பெக்ட்ரம் சர்ச்சை புகழ்" என்ன கூறப்போகிறார்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஊழலுக்கேல்லாம் ஊழல் .... நச் கட்டுரை

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

ஸ்ரீநாராயணன் said...

Badriyum karunandiyum, idhu ellam sagajam nu solluvanga. :-)

Kalee J said...

இந்த அழகில் மு.க, இந்த ராஜாவால் தான் ஏழை எளிய மக்கள் அலைபேசி உபோயோகிப்பதாக ஒரு கதை விட்டாரே, என்ன ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அதற்கு ஒரு திருட்டுத்தனமான கேவலமான சப்பைக்கட்டு. MGR அவர்கள் 1972 -லும் அதற்கு பிறகும் மு.க-வை பற்றி சொன்னதை எல்லோரும் கேட்டு இருந்தால் அந்த வார்த்தைகளை மறக்காமல் இருந்து இருந்தால் இந்தியா-விற்கு எவ்வளவு இழப்பு தடுக்க பட்டு இருக்கும்.

vignaani said...

Only one point on the long comment of Mr Manivannan:
That auction method followed in the initial stage of spectrum allotment in 1990's was recognised; and first-come-first method with the revenue-sharing method was followed since 2001 or so; This is what enaled low call charges for the user. Irregularities might have been there in the allotment during the period of Mr Mahajan; that can not justify the irregularities made in a bigger scale by Mr.Dayanidhi Maran and Mr.Raja.
Moreover, (i)the closing date of applications was foreclosed on a later date
(ii) the window was kept open for a mere 45 minutes for submission of the demand draft for an amount of Rs 1650 crores or so and Bank Guarantee, etc. and (iii) the announcement of the time for submission was given only a few hours earlier in the morning for submission of a demenad draft, etc
shows the process was blatantly carried out to favour a few; whether any consideration was there is not the issue. That a few bidders were favoured is somehting noone can disprove. Even diehard supporters of Mr.Raja and his leader can not defend him.

ramalingam said...

பூவண்ணனுக்கு ஒரு கேள்வி. நீங்கள் சொல்வது உண்மையானால்கூட அது முறையாக நடக்கவில்லை என்பதே குற்றச்சாட்டு. நடுவில் ராசா இடைத்தரகர் வேலை செய்து விட்டார் என்பதுதான் இப்போதைய புகார்.

karthi said...

Murugan IAS , till with Sharath kumar's party?

R.Gopi said...

”தல” - விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் அகில உலக விஞ்ஞானிகளையும் மிஞ்சியவர் - சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் நம் தானை தலைவர், தமிழின காவலர் (அவரோட பேரன்கள் சுத்த தமிழில் தத்தம் கம்பெனிகளுக்கு பெயரிட்டுள்ளனர் - ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ்..), ஆஹா, என்னே தமிழ்ப்பற்று...

இந்தாள பத்தி பேசி பேசி ஆயுசுல பாதி போச்சு...

ரிஷி said...

இது ஏற்கெனவே துவைத்து காயப்போட்ட மேட்டர்தானே! புதிதாக துக்ளக்கில் என்ன எழுதிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. விற்பனைக்கு உண்டான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது எப்போதோ தெளிவாகிவிட்ட விஷயம்தான்! அதற்கு ஆளும் தரப்பிலிருந்து எவ்வித நேரடியான பதிலும் இதுவரை இல்லை! இனிமேலும் கிடைக்கப் போவதில்லை!!

ரிஷி said...

சரவணன்!
ஆன்லைன் ரீடர்ஸ் - ஒரு விட்ஜெட்டில் 13 என்று காட்டுகிறது. மற்றொரு விட்ஜெட்டில் 19 என்று காட்டுகிறதே! ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக்கொள்வது நலமோ?!

ரிஷி said...

பாமாயில் இறக்குமதி ஊழல் புகார் புகழ் மிஸ்டர்.தாமஸை தகவல் தொடர்புத்துறையில் நான் தெரிந்தேதான் பதவியில் அமர்த்தினேன். அது என் தவறுதான் என்று பிரதமர் ஒப்புதல் கொடுத்துள்ளார். யாரால் இப்போது என்ன செய்ய முடியும்?? தாமஸுக்கு இன்று வரை ப.சிதம்பரம் வக்காலத்துதான் வாங்கிக்கொண்டிருக்கிறார். யாரால் என்ன செய்ய முடியும்??

பூவண்ணன் said...

அண்ணே இது அசையா சொத்து அல்ல பின்னி மில்/ஸ்டாண்டர்ட் மோட்டோர்ஸ் தொழிற்சாலை போல .அவற்றை கூட அரசாங்கம் சும்மா கொடுக்கிறது /இல்லை ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் கொடுக்கிறது தொழிலாளர் நலன் காக்க
இது ஒரு உரிமம்.உதாரணத்திற்கு கோவை சென்னை பஸ் ரூட் உரிமம் 1 ரூபாய்க்கு 100 பேருக்கு கொடுத்தால் மக்களுக்கு குறைந்த செலவில் பேருந்து கட்டணம் கிடைக்குமா இல்லை KPN 100 கோடி கொடுத்து ஏலம் எடுத்தால் குறைந்த விலைக்கு கிடைக்குமா
ஏர் டெக்கான் என்றொரு ஒரு விமான கம்பெனி ஆரம்பித்த நாளிலிருந்து நஷ்டத்தில் ஓடியது.ஆனால் அதை பல நூறு கோடி கொடுத்து மல்லய வாங்கினார்.
அதே போல் சஹாரா கம்பெனிஐ பல நூறு கோடி கொடுத்து வாங்குவதாக ஆட்டம் ஆடி பங்கு விற்பனைகளை பெருக்கி/ஏமாற்றி இப்படி எத்தனியோ தில்லுமுல்லுகள் பங்கு விற்பனையில் உண்டு.அப்படி இருக்கும் போது பங்கு விற்பனையை வைத்து கோடி நஷ்டம் (ஊழல் என்று CAG சொல்லவில்லை ) என்று சொல்வது உண்மையாகி விடாது
கட்ட வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்தது எல்லாம் சரி ஆனால் முன்று நான்கு கம்பனிகளுக்கு மட்டும் கிடைக்காமல் 132 கம்பனிகளுக்கு கொடுத்தது தவறா

ரிஷி said...

//பாஜக ஆட்சியின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்று சொல்கிறார் தொலைதொடர்புத் துறை அமைச்சர், அதுவும் அனுமானிக்கப்பட்ட மதிப்பீடல்ல கணக்கிடப்பட்ட இழப்பு என்று அழுத்தமாக. சொல்வது ராசா மாதிரி ரெகமண்டேஷன் அமைச்சரோ அல்லது அழகிரி மாதிரி இனிஷியலால் அமைச்சரானவரோ அல்ல. அறிவார்ந்த காங்கிரஸ்காரராக சொல்லப்படும் கபில் சிபல். சொல்வது யாரிடம்? ஐம்பது ஆண்டுகள் திராவிட பென்ச்சை தேய்த்த கருணாவால்கூட மத்திய அரசில் சாதிக்க முடியாததை சாதிக்கும் வல்லமை கொண்ட பர்காவிடம். எங்கே சொல்கிறார்? சில நாட்களில் ஒருகோடி பேரிடம் கையெழுத்தை வாங்கும் அசுரபலம் கொண்ட ஊடகமான என்.டி.டி.வியில். அதன் பிறகு வேறொன்றையும் சொல்கிறார் “ஆனால் இதற்காக தாம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.. அவர்கள் (பாஜக) தெரிந்துகொள்வதற்காக இதை சொல்கிறேன்”.

இந்த பணம் இவரது ஆத்தா அப்பன் சம்பாத்தியமா அல்லது அண்டோனியோ மெய்னோ கொண்டுவந்த சீதனமா? இவர் யார் அதை விசாரிக்க மாட்டோம் என்று சொல்வதற்கு?. யார் வந்தாலும் ஊழல் இருக்கும்.. உன் முறை வரும் வரை காத்திரு என பாஜகவுக்கு சொல்கிறார் கபில். நமக்குத்தான் அது புரிந்த மாதிரி தெரியவில்லை.//

வில்லவன் அவர்களின் பதிவில் படித்த வரிகள்தான் இவை. கபில் சிபலின் அந்தப் பேட்டியை நானும் கூடப் பார்த்தேன். இதுதான் யதார்த்தம்! நாங்க இருக்கறவரைக்கும் கொள்ளையடிச்சிக்கறோம். உன் டர்ன் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுடா மவனே என்கிறார் ஆட்சியாளர். நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் இதுபோலவே நடக்கும் வாய்ப்புகள் அதிகம்!

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Sankar Gurusamy said...

Very much Shameful. That too one of our Tamil Minister is involved. Shame on these parties.

http://anubhudhi.blogspot.com/]]]

கூட்டணிக் கொள்ளை என்பது இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

Bastards!

Ram]]]

இப்படி நம்மளால் திட்டத்தான் முடிகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

இந்த முறை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தோற்காவிடில், தமிழகத்தை மறந்து விடலாம். ஒருபுறம் 2G ஊழலில் நடவடிக்கை எடுப்பதாக பாவலா காட்டிக் கொண்டே, அதே ஊழல் கட்சியான தி.மு.க.விடம் கூட்டணி வைக்க முற்படும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோற்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.]]]

தோற்பது என்றில்லை.. தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். இது நமது தமிழகத்து மக்கள் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று.!

உண்மைத்தமிழன் said...

பூவண்ணன்..

மக்களுக்குச் சலுகை விலையில் வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் அரசின் சலுகைகள் கடைசியில் அம்பானி போன்ற முதலாளிகளின் பாக்கெட்டில்தான் போய் விழுகிறது. நீ இவ்வளவு கொடு. நான் இத்தனை சலுகைகளை உனக்குத் தருகிறேன் என்று சொல்லித்தான் இதனைச் செய்திருக்கிறார்கள். இது ஊழலன்றி வேறில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Sivakumar said...

மிகச் சிறப்பான கட்டுரை. துக்ளக்கில் எப்படி இதை படிக்கத் தவறினேனோ. "ஸ்பெக்ட்ரம் சர்ச்சை புகழ்" என்ன கூறப் போகிறார்.]]]

நானும்தான் முதலில் தவறிவிட்டேன். பின்புதான் படித்தேன்..!

ராசா என்ன செய்வார்..? மறுபடியும் அதே பல்லவியைத்தான் பாடுவார்..! நாட்டுக்காகத்தான் கொள்ளையடித்தேன் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்வார்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...
ஊழலுக்கேல்லாம் ஊழல் .... நச் கட்டுரை

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ]]]

இந்தியாவின் தலை சிறந்த ஊழல் இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீநாராயணன் said...

Badriyum karunandiyum, idhu ellam sagajam nu solluvanga. :-)]]]

-))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[Kalee J said...

இந்த அழகில் மு.க, இந்த ராஜாவால்தான் ஏழை எளிய மக்கள் அலைபேசி உபோயோகிப்பதாக ஒரு கதை விட்டாரே, என்ன ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அதற்கு ஒரு திருட்டுத்தனமான கேவலமான சப்பைக்கட்டு. MGR அவர்கள் 1972 -லும் அதற்கு பிறகும் மு.க-வை பற்றி சொன்னதை எல்லோரும் கேட்டு இருந்தால் அந்த வார்த்தைகளை மறக்காமல் இருந்து இருந்தால் இந்தியாவிற்கு எவ்வளவு இழப்பு தடுக்கபட்டு இருக்கும்.]]]

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்..! மக்கள் இப்போதாவது புரிந்து கொண்டால் சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[vignaani said...

Only one point on the long comment of Mr Manivannan:
That auction method followed in the initial stage of spectrum allotment in 1990's was recognised; and first-come-first method with the revenue-sharing method was followed since 2001 or so; This is what enaled low call charges for the user. Irregularities might have been there in the allotment during the period of Mr Mahajan; that can not justify the irregularities made in a bigger scale by Mr.Dayanidhi Maran and Mr.Raja.
Moreover, (i)the closing date of applications was foreclosed on a later date
(ii) the window was kept open for a mere 45 minutes for submission of the demand draft for an amount of Rs 1650 crores or so and Bank Guarantee, etc. and
(iii) the announcement of the time for submission was given only a few hours earlier in the morning for submission of a demenad draft, etc
shows the process was blatantly carried out to favour a few; whether any consideration was there is not the issue. That a few bidders were favoured is somehting noone can disprove. Even diehard supporters of Mr.Raja and his leader can not defend him.]]]

நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக காய்களை நகர்த்தி கொள்ளையடித்துள்ளார் ராசா..! இதில் சந்தேகமே இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ramalingam said...

பூவண்ணனுக்கு ஒரு கேள்வி. நீங்கள் சொல்வது உண்மையானால்கூட அது முறையாக நடக்கவில்லை என்பதே குற்றச்சாட்டு. நடுவில் ராசா இடைத்தரகர் வேலை செய்து விட்டார் என்பதுதான் இப்போதைய புகார்.]]]

அந்த இடைத்தரகருக்காக கிடைத்த கமிஷன் தொகையே சில ஆயிரம் கோடிகள் என்றால் மலைப்பாக அல்லவா இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[karthi said...

Murugan IAS, till with Sharathkumar's party?]]]

ஆமாம்.. அவருடன்தான் இருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

”தல” - விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் அகில உலக விஞ்ஞானிகளையும் மிஞ்சியவர் - சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் நம் தானை தலைவர், தமிழின காவலர் (அவரோட பேரன்கள் சுத்த தமிழில் தத்தம் கம்பெனிகளுக்கு பெயரிட்டுள்ளனர் - ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ்..), ஆஹா, என்னே தமிழ்ப்பற்று...
இந்தாள பத்தி பேசி பேசி ஆயுசுல பாதி போச்சு.]]]

எல்லாருக்கும்தான்..

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இது ஏற்கெனவே துவைத்து காயப்போட்ட மேட்டர்தானே! புதிதாக துக்ளக்கில் என்ன எழுதிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. விற்பனைக்கு உண்டான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது எப்போதோ தெளிவாகிவிட்ட விஷயம்தான்! அதற்கு ஆளும் தரப்பிலிருந்து எவ்வித நேரடியான பதிலும் இதுவரை இல்லை! இனிமேலும் கிடைக்கப் போவதில்லை!!]]]

அருமையான முன்னுரை.. இதுபோல் நானே எழுதவில்லை ரிஷி. அதனால்தான் இங்கே போட்டிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
சரவணன்! ஆன்லைன் ரீடர்ஸ் - ஒரு விட்ஜெட்டில் 13 என்று காட்டுகிறது. மற்றொரு விட்ஜெட்டில் 19 என்று காட்டுகிறதே! ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக் கொள்வது நலமோ?!]]]

எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
பாமாயில் இறக்குமதி ஊழல் புகார் புகழ் மிஸ்டர் தாமஸை தகவல் தொடர்புத்துறையில் நான் தெரிந்தேதான் பதவியில் அமர்த்தினேன். அது என் தவறுதான் என்று பிரதமர் ஒப்புதல் கொடுத்துள்ளார். யாரால் இப்போது என்ன செய்ய முடியும்?? தாமஸுக்கு இன்று வரை ப.சிதம்பரம் வக்காலத்துதான் வாங்கிக் கொண்டிருக்கிறார். யாரால் என்ன செய்ய முடியும்??]]]

இவர்களையெல்லாம் தேர்வு செய்த நம்மை நாமளேதான் அடித்துக் கொள்ள வேண்டும்.. வேறென்ன செய்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[poovannan said...

அண்ணே இது அசையா சொத்து அல்ல பின்னி மில்/ஸ்டாண்டர்ட் மோட்டோர்ஸ் தொழிற்சாலை போல. அவற்றை கூட அரசாங்கம் சும்மா கொடுக்கிறது /இல்லை ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் கொடுக்கிறது தொழிலாளர் நலன் காக்க
இது ஒரு உரிமம்.

உதாரணத்திற்கு கோவை சென்னை பஸ் ரூட் உரிமம் 1 ரூபாய்க்கு 100 பேருக்கு கொடுத்தால் மக்களுக்கு குறைந்த செலவில் பேருந்து கட்டணம் கிடைக்குமா இல்லை KPN 100 கோடி கொடுத்து ஏலம் எடுத்தால் குறைந்த விலைக்கு கிடைக்குமா?

ஏர் டெக்கான் என்றொரு ஒரு விமான கம்பெனி ஆரம்பித்த நாளிலிருந்து நஷ்டத்தில் ஓடியது. ஆனால் அதை பல நூறு கோடி கொடுத்து மல்லய வாங்கினார். அதே போல் சஹாரா கம்பெனிஐ பல நூறு கோடி கொடுத்து வாங்குவதாக ஆட்டம் ஆடி பங்கு விற்பனைகளை பெருக்கி/ஏமாற்றி இப்படி எத்தனியோ தில்லுமுல்லுகள் பங்கு விற்பனையில் உண்டு.

அப்படி இருக்கும் போது பங்கு விற்பனையை வைத்து கோடி நஷ்டம் (ஊழல் என்று CAG சொல்லவில்லை ) என்று சொல்வது உண்மையாகி விடாது. கட்ட வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்தது எல்லாம் சரி... ஆனால் முன்று நான்கு கம்பனிகளுக்கு மட்டும் கிடைக்காமல் 132 கம்பனிகளுக்கு கொடுத்தது தவறா?]]]

எல்லாஞ் சரி.. இதையெல்லாம் செய்வதற்கு பிச்சைக்காரன் மாதிரி லஞ்சம் வாங்கி ஆட்டையைப் போட்டிருக்கிறாரே தலைவரும், அவரது தொண்டனும்.. அதுதான் மாபெரும் தவறு..!

உண்மைத்தமிழன் said...

[[ரிஷி said...

//பாஜக ஆட்சியின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்று சொல்கிறார் தொலைதொடர்புத் துறை அமைச்சர், அதுவும் அனுமானிக்கப்பட்ட மதிப்பீடல்ல கணக்கிடப்பட்ட இழப்பு என்று அழுத்தமாக. சொல்வது ராசா மாதிரி ரெகமண்டேஷன் அமைச்சரோ அல்லது அழகிரி மாதிரி இனிஷியலால் அமைச்சரானவரோ அல்ல. அறிவார்ந்த காங்கிரஸ்காரராக சொல்லப்படும் கபில் சிபல். சொல்வது யாரிடம்? ஐம்பது ஆண்டுகள் திராவிட பென்ச்சை தேய்த்த கருணாவால்கூட மத்திய அரசில் சாதிக்க முடியாததை சாதிக்கும் வல்லமை கொண்ட பர்காவிடம். எங்கே சொல்கிறார்? சில நாட்களில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்தை வாங்கும் அசுர பலம் கொண்ட ஊடகமான என்.டி.டி.வியில். அதன் பிறகு வேறொன்றையும் சொல்கிறார் “ஆனால் இதற்காக தாம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.. அவர்கள் (பாஜக) தெரிந்து கொள்வதற்காக இதை சொல்கிறேன்”.

இந்த பணம் இவரது ஆத்தா அப்பன் சம்பாத்தியமா அல்லது அண்டோனியோ மெய்னோ கொண்டு வந்த சீதனமா? இவர் யார் அதை விசாரிக்க மாட்டோம் என்று சொல்வதற்கு? யார் வந்தாலும் ஊழல் இருக்கும். உன் முறை வரும் வரை காத்திரு என பாஜகவுக்கு சொல்கிறார் கபில். நமக்குத்தான் அது புரிந்த மாதிரி தெரியவில்லை.//

வில்லவன் அவர்களின் பதிவில் படித்த வரிகள்தான் இவை. கபில்சிபலின் அந்தப் பேட்டியை நானும் கூடப் பார்த்தேன். இதுதான் யதார்த்தம்! நாங்க இருக்கறவரைக்கும் கொள்ளையடிச்சிக்கறோம். உன் டர்ன் வர்றவரைக்கும் வெயிட் பண்ணுடா மவனே என்கிறார் ஆட்சியாளர். நாளை பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் இது போலவே நடக்கும் வாய்ப்புகள் அதிகம்!]]]

ஒட்டு மொத்தமாக அரசியல்வியாதிகளை ஒழித்துக் கட்டினால்தான் இந்த நாடு உருப்படும்..!

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html -

ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.]]]

படிக்கிறேன் நண்பரே..!

ரிஷி said...

//[[[நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html -

ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.]]]

படிக்கிறேன் நண்பரே..!//


மேலும் சில வலைப்பூக்களில் இந்த விளம்பரப் பின்னூட்டத்தைப் பார்த்தேன். சென்றுவிட்டு ஏண்டா வந்தோம் என மனம் நொந்து திரும்பினேன். யாரோ சிலரின் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளையும், சுயசொறிதல்களையும் பொதுவிடத்தில் காணுவது அருவருப்பாக இருக்கிறது!!

உண்மைத்தமிழன் said...

ரிஷி..

பொதுவெளியில் இது தவிர்க்க முடியாதது..!

எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை..!

சொல்லிவிட்டுப் போகிறார்கள். போகட்டும்..!