ஞாநியின் பரீக்ஷா நாடகங்கள் - காணத் தவறாதீர்கள்..!

25-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது பெருமதிப்பிற்குரிய கலகக்காரர் அண்ணன் ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழு, நாளையும், நாளை மறுநாளும் இரண்டு தமிழ் நாடகங்களை சென்னையில் நடத்தவிருக்கிறார்கள்.




'பல்லக்குத் தூக்கிகள்', 'நாங்கள்' என்ற இந்த இரண்டு நாடகங்களும் நாளை சனிக்கிழமை(26-02-2011), மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(27-02-2011) என இரண்டு நாட்களிலும் மாலை 6.30 மணிக்கு ஸ்பேசஸ், 1 எலியட்ஸ் பீச் சாலை, பெசண்ட் நகர், சென்னை-90 என்ற முகவரியில் நிகழ்த்தப்படவுள்ளன.

சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு, நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம்தான் “பல்லக்குத் தூக்கிகள்.” 

இது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் பற்றிய நாடகம்.

நாடக நிகழ்வு 20 நிமிடங்கள்.

தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம்தான் “நாங்கள்”.

‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் நமக்குப் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள் .இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மை தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின், சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள்.

இதில் இருக்கும் எட்டு கதைகளில், ஆறு கதைகளை ஞாநியும், இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர்.

நாடக நிகழ்வு : 110 நிமிடங்கள்.

பரீக்‌ஷா நாடகக் குழு பற்றி சில வார்த்தைகள் :

1978-ல் ஞாநியால் தொடங்கப்பட்ட பரீக்‌ஷா, கடந்த 33 வருடங்களில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்கள்.

இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அம்பை, ஜெயந்தன், அறந்தை நாராயணன், பிரபஞ்சன், எஸ்.எம்.ஏ.ராம், ஞாநி, பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாவேததேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி.பிரீஸ்ட்லீ மற்றும் பலர் எழுதிய கதைகளை நாடமாக்கியிருக்கிறார்கள்.

பல்வேறு வாழ்க்கை நிலைகளிலும் வெவ்வேறு பணிகளிலும்  இருக்கும் பரீக்‌ஷா உறுப்பினர்களை இணைப்பது நாடகக் கலையின் மீதும் சமூகம் மீதும் இருக்கும் அவர்களுக்கு இருக்கும் அன்பேயாகும்.

நாடகங்களின் மீது ஈடுபாடு கொண்டோரும், அண்ணன் ஞாநியின் மீது பாசம் கொண்டோரும், பக்தியுடையோரும் நாளையும், நாளை மறுநாளும் பெசண்ட் நகருக்கு படையெடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

தொடர்புக்கு : ஞாநி 9444024947

8 comments:

உண்மைத்தமிழன் said...

நமக்கு நாமே திட்டத்தின்படி இந்தப் பின்னூட்டம் போடப்படுகிறது. அனைவரும் வருக.. ஆதரவு தருக..!

ஒரு பின்னூட்டம்கூட வரலைன்னா எனக்குக் கேவலமில்லையா..? அதுனாலதான்..!

ராம்ஜி_யாஹூ said...

காணொளி எடுத்து வலையேற்றம் செய்வார்கள் தானே

ராம்ஜி_யாஹூ said...

காணொளி எடுத்து வலையேற்றம் செய்வார்கள் தானே

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
காணொளி எடுத்து வலையேற்றம் செய்வார்கள்தானே...]]]

இல்லையென்றுதான் நினைக்கிறேன். ஊர், ஊராக நாடகமாக போடுவதையே விரும்புகிறார் ஞாநி.

ரிஷி said...

முதலிலேயே நான் பார்த்தேன். ஆனால் பின்னூட்டம் போடவில்லை. பதிவு ரொம்ப சின்னதா இருக்குண்ணே!!

Arun Ambie said...

உருப்படியான பொழுது போக்கு. பகிர்வுக்கு நன்றி. சற்றே தாமதமாகத் தான் பார்த்தேன். நிற்க.

//மகாவேததேவி//
வங்கத்தின் முதிர்ந்த பெண் எழுத்தாளரைச் சொல்கிறீர்கள் என்றால் அவர் மகாவேததேவி இல்லை, மஹாஸ்வேதாதேவி!!

{பின்னூட்டம் போட்டு உயிரை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே உயிரை வாங்குபவர்களும் இருக்கிறார்கள், என்று நீங்கள் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி போலப் புலம்புவது கேட்கிறது. என்ன செய்யண்ணே! நம்மூரு மருதைக்கு நெருங்கில்ல இருக்கு!!}

abeer ahmed said...

See who owns scupconversations.org or any other website:
http://whois.domaintasks.com/scupconversations.org

abeer ahmed said...

See who owns canadaspace.com or any other website.