வாங்க வினவு..! சந்திப்போம்..!

04-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த ஒரு வார காலமாக பதிவுலகில் நடந்து வரும் சர்ச்சைக்குரிய நமது பதிவர்கள் சந்தனமுல்லை-நர்சிம் இடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அத்தனை பதிவர்களுமே விரும்புகிறோம்..!

இரு நாட்களுக்கு முன்பு “வினவு கூட்டத்தினரைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்களே..!” என்று பதிவிட்டிருந்தேன்.

அந்தப் பதிவில்,

[[[சந்தனமுல்லை என்கிற பதிவருக்கும், நர்சிம் என்கிற பதிவருக்கும் இடையில் முட்டல், மோதல். இருவரையுமே பேச வைப்போம். முடிந்தால் பேசுங்கள். நேராகப் பேச விருப்பமில்லையெனில் இருவருக்குமே நெருக்கமான யாராவது சக பதிவர்களை அழையுங்கள். அவர்கள் மூலமாகப் பேசுங்கள்.

உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்க முடிந்ததெனில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பதிவர் சந்தனமுல்லை, பதிவர் நர்சிமின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன் என்று சொன்னால் தாராளமாக அதனைச் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்காக நச்சுப் பாம்பு போன்ற வெளியாட்களான வினவு போன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என்று சந்தனமுல்லையை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் நர்சிம் மீது தொடுக்கும் வினாக்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். ஆனால் அதனை நம்மிடையே பிளவை உண்டாக்க நினைக்கும் புல்லுருவிகளின் துணையோடு செய்யாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.]]]

இப்படி எழுதியிருந்தேன்.

இந்தக் கருத்தில் நான் இப்போதும் உறுதியுடனேயே இருக்கிறேன்.

நேற்று பதிவர் சந்தனமுல்லை எழுதிய “ரவியின் இடுகையில்” என்கிற பதிவில் நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதில் “பதிவர் நர்சிமின் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ.. அதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள்.. செய்யலாம்” என்கிற அர்த்தத்தில் பின்னூட்டம் இட்டிருந்தேன். இப்போது அந்தப் பின்னூட்டத்தையும் காணவில்லை. முல்லையிடமிருந்து பதிலும் இல்லை.

ஆனால், தற்போது வினவுத் தோழர்கள் “முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!” என்ற பதிவொன்றை எழுதியிருக்கிறார்கள். அதில்....

[[[முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும்.
 
ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி  முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது.

முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத்தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.

எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.]]]

இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

என்னுடைய பெயரை இட்டு வினவு தோழர்கள் எழுதியிருப்பதால் நான் பதில் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது.

இதனை நான் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் பதிவில் இவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களுக்குள் இருக்கும் நுண்ணரசியலை என்னால் இப்போதும் வெளிப்படு்த்த முடியும். ஆனால் அது இன்னமும் பிரச்சினையை வேறு திசையில் வளர்க்கத்தான் செய்யும் என்பதால் அதனைச் செய்ய விரும்பவில்லை..!

பதிவர் சந்தனமுல்லையே தனது பதிவில் தனது விருப்பம் என்ன..? நர்சிமுடனான தனது பிரச்சினையில் எப்படிப்பட்ட தீர்வை அவர் விரும்புகிறார் என்பதைச் சொல்லட்டும். பதிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செய்யலாம்..! தயாராக இருக்கிறோம்.. இருப்போம்..!

இந்த வினவுத் தோழர்களின் அட்வைஸின்படியோ அல்லது இவர்களது மேலாதிக்கத்திலோ, இவர்களது மேலான வழிகாட்டுதல்படியோ நடக்க வேண்டிய அளவுக்கு வலையுலகம் ஒன்றும் சீரழிந்து கிடக்கவில்லை. இங்கே இருப்பவர்களும் முட்டாள்களில்லை..!

இந்த ஒரு பிரச்சினையை வைத்தே வலையுலகமே இப்படித்தானோ என்கிற ஒரு பிரமையை உருவாக்க முயலும் வினவுத் தோழர்களை நான் முற்றிலும் நிராகரிக்கவே செய்கிறேன்..!

பதிவர் சந்தனமுல்லை எந்த மாதிரியான தீர்வு வேண்டும் என்று அவரே கேட்டுக் கொண்டால் அவருடைய விருப்பத்தை நர்சிமிடம் தெரிவித்து பிரச்சினையைத் தீர்க்க வைப்பதில் நானும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. வலையுலகத்தில் உள்ள பலரும் இதில் ஆர்வத்துடன் இருக்கிறோம்.. இனி சந்தனமுல்லைதான் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்..!

இனி.. வினவுத் தோழர்களிடம் எனது நேரடியான ஒரு பேச்சு..!

நீங்கள் நர்சிமின் கணக்கை முடிக்க ஒரு பதிவர் சந்திப்பு கூட்டத்தை கூட்டச் சொல்கிறார்கள். சரி.. இப்போது உங்களுக்கும் எங்களது சக பதிவர்களுக்குமான ஒரு கணக்கை முடிக்க வேண்டியுள்ளதே..!?

உங்களுடைய பதிவில்

“பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா - லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள்.”

 “சுஜம்லாவை எதிர்த்து பொங்கி எழுந்த மரண மொக்கை பதிவரான கலகலப்பிரியா என்ற வீராங்கனை இப்போது கயவன் நர்சீமுக்கு எதிராக ரவுத்திரம் பழகாமல் இருப்பது ஏன்? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.”

இப்படியெல்லாம் உங்களுடைய பதிவில் எங்களது சக பதிவர்களைப் பற்றி எழுதிக் குவித்திருக்கிறீர்கள்..

அபிஅப்பா, மங்களூர் சிவா, லதானந்த் இவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா..?

ஏனெனில் எங்களது சக பதிவர் சந்தனமுல்லைக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல இந்தப் பதிவர்களுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர். முல்லையின் கணவர் திரு.முகில் எவ்வளவு வேதனைப்பட்டாரோ அதே அளவுக்கு இந்த பதிவர்களின் மனைவிமார்களும் இப்போது துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மங்களூர் சிவாவின் துணைவியாரே ஒரு பதிவர்தான்.. அவர்களுடையது காதல் திருமணம்தான். பதிவுலகின் மூலம்தான் அது நடந்தது.. அவருடைய துணைவியார் இதைப் படித்துவிட்டு என்ன பாடுபட்டிருப்பார்..? சொல்லுங்கள்..?

அபிஅப்பாவைத் தெரியாத முன்னாளைய பதிவர்களே இருக்க முடியாது..! பல மூத்த பதிவர்களுடனும் குடும்ப நண்பராக இப்போதும் இருந்து வருபவர். உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டினால் அவருடைய துணைவியாரும் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.. இப்போது சந்தனமுல்லை அனுபவிக்கும் துயரம்தான் அவருடையதும்..!

பதிவர் லதானந்த் பொறுப்பான அரசு அதிகாரி. பதிவுலகிலும், பத்திரிகையுலகிலும் பலருக்கும் தெரிந்த ஒருவர். இவருக்கும் மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள்.

சமீபத்தில்கூட பல பதிவர்களை குடும்பத்துடன் டூருக்கு அழைத்துச் சென்று ஒரு பதிவர் சந்திப்பு விழாவையே கொண்டாடினார். அவர்களெல்லாம் பதிவர் லதானந்தை பற்றி இப்போது என்ன நினைப்பார்கள்..? இவருடன் பணியாற்றுபவர்கள் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தெரிந்தால் பதிவர் லதானந்த்தின் வெளியுலக நிலைமை என்ன..?

அதேபோல் எங்களது இன்னொரு சக பதிவர் கலகலப்பிரியாவும் நீங்கள் அள்ளித் தெளித்திருக்கும் “இந்து பதிவர்” என்கிற வார்த்தையினால் அளவு கடந்து மனம் புண்பட்டிருக்கிறார். சந்தனமுல்லை எந்த அளவுக்குப் பட்டாரோ அதே அளவுக்கு..! அதில் இருந்து துளியும் குறைவில்லாமல்..!

இவரும் தன் மீதான அவதூறான இந்தக் குற்றச்சாட்டுக்கு நியாயம் கேட்கிறார்.. தன்னை எப்படி ஒரு மத சம்பந்தப்பட்ட பதிவராக நியாயப்படுத்தலாம் என்கிறார்.. நியாயம்தானே..!? இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறீர்கள்..? என்ன பதில் வைத்துள்ளீர்கள்..?

மேதகு.சிவராமன்தான் இதனை எழுதிக் கொடுத்தார். நாங்கள் அதனை படித்துப் பார்த்துவிட்டு கொஞ்சம் சேர்த்து, கொஞ்சம் நீக்கி, எடிட் செய்து வெளியிட்டோம் என்று நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பதால் இதற்கு நீங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்..!
இதற்கான ஆதாரங்கள் எங்கே..?

இருக்கிறது எனில் சந்தனமுல்லையிடம் நர்சிம் மன்னிப்புக் கேட்கும் அதே பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் நீங்களும், சிவராமனும் எங்கள் முன்பு ஆஜராகி அந்த ஆதாரங்களை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்..!

“அதெல்லாம் இல்லை.. கேள்விப்பட்டோம்.. ச்சும்மா யாரோ சொன்னாங்க..” என்று ஒண்ணாங்கிளாஸ் பிள்ளை போல உளறக் கூடாது. ஆதாரங்கள் இல்லையெனில் நீங்கள் சொல்வது அனைத்தும் அவதூறாகிவிடும்.

நர்சிம், சந்தனமுல்லை மீது வீசிய அதே ஆக்ரோஷமான வன்மத்தை வேறு வடிவத்தில் இப்போது நீங்களும், மேதகு.சிவராமனும் சேர்ந்து எங்களது சக பதிவர்கள் மீது வீசியிருக்கிறீர்கள்..!

இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கும் பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் சிவராமனோடு சேர்ந்து நீங்களும் வந்திருந்து எங்களது பதிவர் கூட்டத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

ல்லாவற்றுக்கும் மேலாக “எழுத்தால் ஒரு பெண் பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே...?”

என்று எங்களது சமூகத்தவர்களான அனைத்துப் பதிவர்களையும் “நாய்கள்” என்று பழித்துப் பேசியதற்கும் கூடுதலாக ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட்டு, உங்களுடைய தளத்திலும் இதற்காக மன்னிப்பு பதிவையும் இட வேண்டும்..!

மனித நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று உங்களைப் போன்று கேட்கும் கூட்டமல்ல எங்களுடைய வலையுலகக் கூட்டம்..!
 
முதலில் சிநேகம், பின்பு, நட்பு, பின்பு உரிமை, பின்பு கூட்டம், பின்பு குடும்பம் என்று தங்களுக்குள்ளேயே ஒரு வலைப்பின்னல் போல் சங்கிலித் தொடரான ஒரு சமூகத்தை நடத்தி வருகின்ற ஒரு மனிதக் குலக் கூட்டம்.

இப்போது நடந்தது போன்ற கொடுமைகள், இதற்கு முன்பும் போலி டோண்டு விஷயத்திலும் எங்களிடையே நடந்திருக்கிறது. அப்போதும் நாங்கள் இதே ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவியுடன்.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குடிமகன்களாகிய எங்களுக்குக் கொடுத்திருந்த ஒரு உரிமையின் கீழ் போராடித்தான் அதனை முற்றிலுமாக துடைத்தெடுத்தோம்..! இப்போது இதனையும் எங்களால் இதுபோல் சுயமாகவே செய்து கொள்ள முடியும்..!

எழுத்தில் கம்பீரமாக உலவுவதாகச் சொல்லிக் கொள்ளும் உங்களது வினவு கூட்டம், நீங்கள் செய்த தவறுகளை வெளிப்படையாக எங்களிடம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க இனிமேலும் வெட்கப்படத் தேவையில்லையே!

என்றைக்கு வைத்துக் கொள்ளலாம்?

எங்கு வைத்துக் கொள்ளலாம்.. 

சொல்லுங்கள் வினவு..!

கூட்டத்திற்கு உடனேயே ஏற்பாடு செய்கிறேன்..!

வாருங்கள்.. சந்திப்போம்..!

89 comments:

நிலவகன் said...

அதானே!
கற்பழித்தவனுக்கு மரண தண்டனை கொடுத்த பின்பும் அவனின் சவத்தையும் வெட்டிக் கூறு போடுங்கள் என்றா இந்த சந்தன முல்லையும் வினவும் கேட்கிறார்கள்..

நிலவகன் said...

முதன் முறையாக வாக்குப் போடுகிறேன் !
+

நிலவகன் said...

முதன் முறையாக வாக்குப் போடுகிறேன் !
+

ILA (a) இளா said...

இந்த நாள் இந்நேரத்துக்கு நீங்க ஏற்பாடு பண்ணுங்க உ.த, நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம் என்கிறார்கள். அதாவது, அவர்கள் சொல்லும் நேரம், இடத்தில் நீங்க சந்திக்க வைக்கனுமாம். இதுல ஒன்னும் புரியலையா?

உடன்பிறப்பு said...

வினவு கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்

mootoo said...

அருமையான பதில். நியாயமான நேர்மையான செயல்.

Unknown said...

இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கும் பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் சிவராமனோடு சேர்ந்து நீங்களும் வந்திருந்து எங்களது பதிவர் கூட்டத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.///

Perfect. Otherwise no use of this meeting.

க ரா said...

இந்த பதிவில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உடன்படுகிறேன். மன்னிப்பு கேக்குமா வினவு ?

பிரபாகர் said...

அண்ணா! உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன்! தெளிவான கருத்துக்கள், நியாயமான கேள்விகள். உங்களுக்கு என் சிரம் தாழ் வணக்கம்!

பிரபாகர்...

vasu balaji said...

நீங்களாவது பாதிக்கப்பட்ட மத்தவங்களுக்காக கேட்டீங்களே. காரணமே இல்லாம ஷுடவுட்ல காயம்பட்டவங்க. நியாய்ம்னு பேசினா இதை மறுக்க முடியாது. அவர்கள் வலியும் குறைந்ததல்ல. இதை சாக்கு வைத்துக் கொண்டு ஒரு சிலர் கொடுத்த டார்ச்சருக்கும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

பழமைபேசி said...

வணக்கம். ஏற்கனவே உங்களுக்கு சொல்லியும் இருக்கேன்.

நீள நீளமா இடுகை இடுறீங்க... பின்னூட்டங்களா வாங்கித் தள்ளுறீங்க...

சாளரத்தோடை துணுக்கை கீழ, கீழ இருட்டி வந்து ஓட்டுப் போடுறதுக்குள்ள தாவு தீந்து போகுது....

இடுகைய ஒட்டினாப்புல, கீழ்ப்புறமா அந்த ஒப்பமுக்கு வில்லைய வையுங்கண்ணே.... அப்படியே, இந்தத் தம்பி சொல்லைக் கேட்காமப் போனதுக்கு ஒரு மன்னிப்பும் கேட்டுப் போடுங்க, சரியா?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

supen anne

மின்னுது மின்னல் said...

விளைவுகளை மெயிலில் பெற :)

நிலவகன் said...

அண்ணா ! இப்போதே மூன்று எதிர் ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன. அந்த மூன்று எதிர் ஓட்டுக்களையும் போட்ட நண்பர்களையும் எனக்குத் தெரியும் .

கலகலப்ரியா said...

//அதேபோல் எங்களது இன்னொரு சக பதிவர் கலகலப்பிரியாவும் நீங்கள் அள்ளித் தெளித்திருக்கும் “இந்து பதிவர்” என்கிற வார்த்தையினால் அளவு கடந்து மனம் புண்பட்டிருக்கிறார். சந்தனமுல்லை எந்த அளவுக்குப் பட்டாரோ அதே அளவுக்கு..! அதில் இருந்து துளியும் குறைவில்லாமல்..!//

_______________________________
ம்ம்... என்னை அழ வச்சிடுவீங்க போலருக்கே... :).. அங்க வர்றப்போ நேர்ல கண்ணைப் பார்த்து நன்றி சொல்லிக்கறேன் சார்.. :)
_______________________________

[நர்சிம்.. சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேக்கறாங்க... யாருக்கும் பயந்துன்னு நான் நினைக்கல... அவங்க மனசாட்சிக்கு பயப்டுறாங்க..

ஆனா... நீங்க சொன்ன மத்தவங்க... அதுவும் வினவு பக்கத்தில அந்தப் பதிவை எழுதிய நபர்.. (சார்... தெரியாத்தனமா அவங்க மேல ஒரு மரியாத வச்சிருந்தேன் சார்.. நண்பர்களுக்குத் தெரியும்.. மெச்சூர்ட்ன்னு நினைச்சேன்).. அவங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிற மாதிரியே தெரியல சார்...

யாரையோ திருப்திப் படுத்துறதுக்காக என்னோட பெயரையும் போட்டிருக்காங்க...

நீங்க சொன்ன மாதிரி ஒண்ணாங்கிளாஸ் ரேஞ்சுக்கு.. அவ சொன்னா.. இவன் சொன்னான்னு கேட்டு எழுதி இருக்காங்க.. (அப்டி நான் கேள்விப்பட்டதை எழுதினா என்ன ஆகும்.. எண்ட ராவணா..)

இல்லை இது இப்டி இருக்காது.. தீர விசாரிக்க வேண்டும்.. இது இங்கு பேச வேண்டிய விஷயமில்ல... பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டுமென்ற ஒரு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாதவர்கள் போடுற கூத்து அப்ப்ப்ப்பா...

அவங்க எல்லாம் மன்னிப்பு கேட்டா... உலகத்தில சாந்தி நிலவும்.. (மன்னிப்பு கேட்டுடுவாய்ங்களோ.. மேலோட்டமா கேட்டதுன்னு நீங்க போராட்டம் நடத்த மாட்டீங்களா?.. நாராயணா.. நாராயணா..)

நிறைய விஷயம் இடிக்குது... முழுப்பூசினிக்காய சோத்தில மறைக்கறாங்க.. சப்பைக்கட்டு கட்டுறாங்க... ம்ம்.. முடியல சார்..!]

__________________________
இவ்ளோ தெளிவா ஒரு விஷயத்த சொல்ற உங்க பக்குவம்... அந்தக் கூட்டத்தில ஒருவருக்கும் வராது சார்... அநேக நமஸ்காரங்கள்...

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள்
+ போட்டனா - போட்டனானு தெரியலை

டவுசர் பாண்டி... said...

அத்தனையும் நியாயமான வரிகள்...

வினவு தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள அருமையான தருணம்...

பயன் படுத்திக் கொள்வார்களா?

தங்களை பண்படுத்திக் கொள்வார்களா?

வாய்ப்பு உங்களின் வாசலில் நிற்கிறது தோழர்களே!

மின்னுது மின்னல் said...

கற்புக்காக போராடி கொண்டு இருக்கும் மங்களூர் சிவாவுக்காக இதனை ஆதரிக்கிறேன் :)

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ... ஹாட்ஸ் ஆஃப் டு யூ.

Unknown said...

அன்பின் உ.த.

உங்களின் மற்ற நீண்ட பதிவுகளுக்கு எத்தனை முறை பதிவர்கள் அனைவரும் கிண்டலடித்து பின்னூட்டம் போட்டிருக்கோம். அனைத்தையும் ரசித்தும் பொறுத்தும் பதில் சொல்வீர்கள்.

இந்த சர்ச்சையில் சக பதிவர்களின் மீது அன்பும் அக்கறையும் உங்கள் உயர்ந்த பக்குவமும் பொறுமையும் அறிய முடிந்தது.

உங்கள் எழுத்திற்கு தலை வணங்குகிறேன்.

எங்கள் அனைவர் மனதிலும் மிக மிக உயர்ந்து விட்டீர்கள்.

வாழ்த்துகள்.

நந்தா said...

//

நர்சிம், சந்தனமுல்லை மீது வீசிய அதே ஆக்ரோஷமான வன்மத்தை வேறு வடிவத்தில் இப்போது நீங்களும், மேதகு.சிவராமனும் சேர்ந்து எங்களது சக பதிவர்கள் மீது வீசியிருக்கிறீர்கள்..!

இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கும் பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் சிவராமனோடு சேர்ந்து நீங்களும் வந்திருந்து எங்களது பதிவர் கூட்டத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.//

உ.த அண்ணே, நியாயமான கேள்விகள். இந்த விஷயத்தில் நான் முழுக்க முழுக்க உடன்படுகின்றேன். பதிவுகளின் மற்ற இடங்களான வலைப்பதிவுகள் குறித்தான் உங்கள் அபிப்ராயம், நீங்கள், நாங்கள் என்ற சொல்லமைப்புகள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டாலும், பதிவின் அடி நாதமான இந்த விஷயத்தில் முழுதுமாய் உடன்படுகின்றேன்.

இதற்கு பதில் சொல்கின்றார்களா அல்லது தட்டிக் கழிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://blog.nandhaonline.com

Unknown said...

“பதிவர் நர்சிமின் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ.. அதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள்.. செய்யலாம்”

ச்சீ வெக்கமாயில்லை!
ஏன் அவர்கள் சொல்ல வேணடும் என்று எதிர்பார்க்கிறாய்
உமக்கு என்ன தோன்றுகிறது
உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு இந்த வன்கொடுமைக்கு தீர்வு என்ன என்று எண்ணமுடியவில்லையா

சினிமாதனமாக பேசாதீர்கள் உண்மை தமிழன்

Raghu said...

சாட்டைய‌டி ப‌திவு ஸார், ஆனா ப‌தில் அங்க‌ருந்து வ‌ராதுன்னுதான் நினைக்கிறேன்

ம‌ங்க‌ளூர் சிவாவுக்கு இன்னும் ப‌தில் வ‌ர‌ல‌, ஏன் பெரும்பாலான‌ ப‌திவ‌ர்க‌ள் அவ‌ருக்கு ஆத‌ர‌வு தெரிவிக்க‌ல‌? ஒரு பெண்ணுக்கு ம‌ட்டும் ஏதாவ‌து பிர‌ச்னைன்னா, க‌ள‌த்துல‌ இற‌ங்க‌ற‌ ந‌ம்ம‌ த‌மிழ் சினிமா ஹீரோக்க‌ளுக்கு, ப‌திவ‌ர்க‌ள் எந்த‌ வித‌த்துல‌யும் குறைஞ்ச‌வ‌ங்க‌ இல்ல‌ன்னு நிரூபிச்சிட்டாங்க‌ ஸார்! ஆஃப்ட‌ரால் சிவா ஒரு ஆண்தானே!

ILA (a) இளா said...

//ஆஃப்ட‌ரால் சிவா ஒரு ஆண்தானே!//இதான் உண்மையே..

வினவுன்னுயாரு வந்து நிப்பாங்க,சிவராமன் மட்டும் வந்தாப் போதுமில்லை, அவரும்தானே வினவு

smart said...

அன்பரே,
உங்கள் இந்த பதிவு திறக்க சில எச்சரிக்கையை எனது அண்டிவைரஸ் சொல்கிறது. கொஞ்சம் சோதித்துக் கொள்ளவும். http://reclassify.wrs.trendmicro.com/wrsonlinequery.aspx

அதை மீறி ஒரு விஷயத்தை சொல்லனும். இந்த பதிவர்களைப் பற்றி நான் முதன் முதலில் நானும் இவர்களை தவறாகத் தான் நினைத்தேன். சிவா அவர்களின் இடுகையைப் பார்த்தபின் தான் உண்மை புரிந்தது.

பதிவுகை நன்கு கவனிக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

தமிழ்மணம் சொல்லுது //இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

tamilsaran robin thamilmarunthu butterflysurya ilamurugu vijiram udanpirappu cnu77 prabhagar radhikaram thandora mootoo jncheran vaanampadigal jeevaa mailtoviki jackiesekar mithranesamithran pvsenthilnathan prognosticsage ilanthendral minnaluae biogenes Vazhippokkann Priya karikalan dhans Raghavan adhusari iniya tlbhaskar //

இது Security Breach இல்லீங்களா?

Soona Paana said...

சபாஷ் அண்ணா .. நாளுக்கு நாள் உங்கள் மீது மதிப்பு கூடி கொண்டே போகிறது .. பதிவுலகின் அமைதிக்காக .. போலி டோண்டு விவகாரத்தில் நீங்கள் போராடியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு இப்போ இவங்க கூட ..//இவ்ளோ தெளிவா ஒரு விஷயத்த சொல்ற உங்க பக்குவம்... அந்தக் கூட்டத்தில ஒருவருக்கும் வராது சார்... அநேக நமஸ்காரங்கள்...// இதையே நானும் சொல்லிக்குறேன் ..

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
K.MURALI said...

பாலோஅப்புக்காக!!!!

Anonymous said...

* தெளிவான கருத்துக்கள் *நியாயமான கேள்விகள்.Well said uncle.

வினவு கண்டிப்பாக பதில் சொல்லாது. மனைவிக்கு பின்னே ஒழிந்து கொண்டு வெட்டிவீரம் பேசும் சூரர் எப்படி வெளியே வருவார்கள். =))

இனியா said...

I support Vinavu and Sivaraman on this issue!!! Hats off to them!!!

vasu balaji said...

for follow up

kanagu said...

அண்ணா... அட்டகாசமான பதிவு... இதுக்கு அவங்க பதில் சொல்றாங்களான்னு பார்ப்போம்...

தொடர்ந்து கவனித்து சிறப்பான இடுகையிட்டமைக்கு ஒரு சல்யூட்..

ஓட்டும் போட்டாச்சு... :)

கல்வெட்டு said...

.

//ராம்ஜி_யாஹூ said...
மூன்றாம் நபர் நாட்டாமை செய்யும் அவசியம் இல்லை இந்த பிரச்னையில்.

Read more: http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_7821.html#ixzz0puxVMoXX
//


ராம்ஜி_யாஹூ/ உண்மைத் தமிழன்,

மூன்றாம் நபர் தலையிடாவிட்டால் நர்சிம் மன்னிப்பு கேட்டிருக்கவே மாட்டார் என்பது என் எண்ணம்.

வரின் பூக்காரிப் பதிவு வந்தபோது அல்லது அதற்குமுன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் , புனைவு என்று சொல்லி வன்மமாக எழுதிய அந்தப்பதிவை அவர் எடுத்தது மூன்றாம் நபர்களின் கண்டனங்களுக்குப் பின்னர்தான். எனது எண்ணம் தவறு என்றால் சொல்லுங்கள்.

மேலும், அதையடுத்து அவர் இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் முல்லை என்ற ரீதியில் அடுத்த http://www.narsim.in/2010/05/blog-post_31.html
ஒரு பதிவைப் போட்டாரே தவிர , உண்மையில் தவற்றை உணர்ந்து வருந்தியதாகத் தெரியவில்லை.


மேலும் மூன்றாம் நபர்களின் தலையீடு...அதற்கு அடுத்தே அவர் மனப்பூர்வமாக மன்னிப்பு என்று எழுதினார்.
http://www.narsim.in/2010/06/blog-post.html

அவராக பூக்காரியை எழுதியவுடன் தவற்றை உணர்ந்துவிடவில்லை என்பதே உண்மை.
இவைதான் வெளியில் தெரிந்து நடந்தது. ஏதாவது கட்டப்பஞ்சாயத்துகள் உள்ளடியாக நடந்ததா என்று எனக்குத் தெரியாது.

***

மூன்றாமவரின் தலையீடு இல்லாமல் நர்சிம் தன் தவற்றை உணரவே இல்லை. மேலும் அவர் மன்னிப்பு கேட்க முன்வந்ததும் அடுக்கடுக்கான தலையீடுகளால்தான். இதில் அவர் மேலும் தனது நம்பகத் தன்மையை இழக்கிறார். :-(((


**

சரி ...
தன் தவற்றை இப்போது உணர்ந்துவிட்டார். மன்னிப்பு கோருகிறார். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் சந்தனமுல்லை அவரின் மீது அடுத்த குற்றச்சாட்டையும் வைக்கிறார்

http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html
//'' அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே ...//

இங்கே அவர் என்பது நர்சிமையே குறிக்கிறது என்று எண்ணுகிறேன்.

இது எப்படி நடந்தது? இவ்வளவு பிரச்சனைக்கிடையில் இது என்ன ? :-((((

இதைக் குற்றச்சாட்டாக சந்தனமுல்லை வைக்கும் போது அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கலாம்.

இந்தப் பிரச்சனை வளர்ந்து கொண்டே போகிறது. :-(((


***


இறுதியாக சந்தனமுல்லை இப்படிச் சொல்கிறார்.

// இப்படிப்பட்ட ஒரு நபரை நான் மன்னிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்....

நர்சிம் மற்றும் கார்க்கி செய்த குற்றத்தை, தவறை என்னால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.
//


எனவே மன்னிக்கவே முடியாது என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்.

அடுத்தபடியாக..அவரே இப்படியும் சொல்கிறார்

//இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!//

.

யார் அந்த தோழர்கள்?
யார் இவரின் நண்பர்கள்?
அவர்களே ஒரு முடிவைச் சொல்லிவிடுங்களேன்.

தண்டைக் கைதி போல தீர்ப்பை எதிர்பார்த்து ஒருவரை எவ்வளவு நாள் குற்ற உணர்விலேயே வைக்கலாம்?

பாதிக்கபட்டவர் நீங்கள்தான் , தவறை உணர்ந்தவருக்கு என்ன தண்டனை நீங்கள்தானே சொல்ல வேண்டும்?

வினவு குழுவும் , பைத்தியக்காரன், இரவியும்தான் நண்பர்கள் என்றால் அவர்கள் சொல்லும் தீர்வை , சந்தனமுல்லை அவர் பதிவிலேயே போட்டுவிடலாம்.

லீனா விசயத்தில் வினவுன் முரண்பட்ட கருத்தும் மற்ற பதிவர்களை கிசுகிசுவாகச் சொன்னதும் அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.


**

தனக்கான முடிவைத் தானே எடுக்கும் சந்தனமுல்லை அவர்கள் நண்பர்கள் எடுக்கும் முடியு எதுவாக இருந்தாலும் அதை அவராகவே அவர் பதிவில் போட்டுவிடலாம்.

(பின்னாளில் மறுபடியும் , எனக்காக கருத்துச் சொல்ல அவர்கள் யார் என்று கேட்கும் அபாயம் இருப்பதால். )

சந்தனமுல்லை அவர் பதிவிலேயே தீர்வை அவராகவே சொன்னபின் , நர்சிம் அதைச் செய்யலாம்.

அதுவரை இந்தப்பிரச்சனையை சற்று ஒத்தி வைக்கலாம்.

**


.

வானமே எல்லை said...

You are talking about the peripheral things, not the core issue. I see the writing by Narsim as absolute hatred against that woman. Her mockery on him demands no such punishment.

I wish not even my worst enemy faces such hatred.

The writings by vinavu on 3 male bloggers and the female blogger are in no way comparable with the writing by Narsim.

Don't blow the non issues as big. Lets talk about the core issue. I strongly support the views expressed by Vinavu on fair justice.

I heard in some parts of India and Pakistan they do " honour killing' which you will call it unfair.

Lets us not do that.

All over the tamil blogs, the bloggers take a stand based on whom they dislike.

Rather the core issue should prevail upon and the fair justice should be given to the offended in this case sandanamullai.

BIGLE ! பிகில் said...

பதிவை தூக்குடா நாயே !!
என்னா கேக்க நாதியில்லன்னு நெனச்சியா? செருப்பு பிஞ்சிடும் .....

உங்கள இல்லீங்கன்னா இஞ்ச பாருங்கோ

http://nilavakan.blogspot.com/2010/06/blog-post_04.html

VJR said...

hi dear friend, really r u tru tamilan or fraud tamilan, what type of nonsense questions u r rising?

if u have problem with vinavu, u deal with them seperate.

here the problem is between narsim and mullai. try to solve that.

is it coparable between narsim/mullai and others problem.

what type of person u r?

so for i never wish like this, but now i am willing that u must face like this problem to ur family girls.

then let us see, how ur going to deal that.

take care ur health.
ganesh

பா.ராஜாராம் said...

straight!

good.

ப.கந்தசாமி said...

நியாயமான கேள்விகள். எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற மாதிரி எல்லோர் மேலும் சேற்றை வாரி இறைக்க யாருக்கும் உரிமை இல்லை.

பெட்ரோவ்ஸ்கி said...

வானமே எல்லை said...

//The writings by vinavu on 3 male bloggers and the female blogger are in no way comparable with the writing by Narsim. //

Oh! Who are you to say that? The sufferings of the wives of the 3 male bloggers are nothing? Or did you verify with them and found out that the sufferings are not comparable? and they are only happy about your comments?

Can you tell us in what way their issue strengthen vinavu's case? If you say just to show that female bloggers are tortured by these people then bloody hell that mangalore siva is begging. why dont you answer him? What did the other lady do? She doesn't have any right to decide to condemn or keep quiet? Is it a sin? To day so many people have supported mullai in her blog. Have all of them recorded their condemnation in their blog or narsim's blog?

Is it not pheriperal Mr Sky is the limit? Before blaming someone try to correct your mistakes. Be true. Answer siva, and then come and preach.

before blaming narsim blog by blog remember vinavu has accepted that the original draft was from sivaraman later. Only after sivaraman has shamelessly accepted after cheating his readers that it was a gossip.

If you are true, add these facts too in your comments impartially.

vasu balaji said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//ILA(@)இளா said...
தமிழ்மணம் சொல்லுது //இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

tamilsaran robin thamilmarunthu butterflysurya ilamurugu vijiram udanpirappu cnu77 prabhagar radhikaram thandora mootoo jncheran vaanampadigal jeevaa mailtoviki jackiesekar mithranesamithran pvsenthilnathan prognosticsage ilanthendral minnaluae biogenes Vazhippokkann Priya karikalan dhans Raghavan adhusari iniya tlbhaskar //

இது Security Breach இல்லீங்களா?

//

Nope.... this is privacy breach!!

vasu balaji said...

I removed my earlier comments.
/ VJR said...

so for i never wish like this, but now i am willing that u must face like this problem to ur family girls.

then let us see, how ur going to deal that.//

What is this Mr.Ganesh. Already too many persons have suffered. you condemned vinavu for bring others not related to the issue in you blog and now you are dragging unmaitamilans family girls into the same shit. why the double face?
Dont complicate the issue please.

க ரா said...
This comment has been removed by a blog administrator.
க ரா said...

மற்றபடி பதிவுலகத்துக்கு நான் மிகவும் புதியவன். நீங்கள் சொல்லும் எதுவும் எனக்கு தெரியாது.

Santhose said...

This guys (vinavu) never wants to settle a problem. They want to prolong and take advantage with any problem for their existence.

பா.ராஜாராம் said...

//so for i never wish like this, but now i am willing that u must face like this problem to ur family girls.

then let us see, how ur going to deal that.

take care ur health.//

rubbish!

உணமைத்தமிழன்,,

இந்த மாதிரியான மயிறு பிடுங்கும் பார்டிகள் கூப்பிட்டால், ஒரு குரல் கொடுக்கவும். வாயில் அவ்வளவு கிராமத்து வசவு நிற்கிறது...

மணிஜி said...

அப்துல்லா தம்பி..அந்த பெண் உன்னிடம் பதிவில்தான் மன்னிப்பு கேட்டார். நேரில் பஞ்சாயத்தில் இல்லை. அது போல் நர்சிமும் ஒரு தடவைக்கு பல முறைகள் மன்னிப்பு கேட்டு விட்டார். அது என்ன 33% நியாயம் ? மீண்டும் அவர் இது சம்பந்தமாக இடுகைகள் இட்டுக் கொண்டிருக்கிறார் . அதில் எல்லாம் நர்சிம் மீதான் மெலிதான வன்மம் தொக்கியே இருக்கிறது. முகமறியா விட்டாலும் அவர் எனக்கு தோழிதான். ஆனால் அவருக்கு சென்ற வருடம் இவ்வளவு கண்டனங்கள் வந்ததாக தெரியவில்லை. மாதவராஜின் இடுகையில் பை..யின் பின்னூட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது பிரச்சனையின் உக்கிரத்தை தணிக்க முயன்ற திரு .பை . இப்போது அதை தூபம் போட்டு எரிய வைப்பது ஏன்?

எல் கே said...

உ .தமிழன் அண்ணே, என்னைக்கும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு

pichaikaaran said...

அண்ணே , வினவின் தலையீட்டுக்கு பிறகுதான் மன்னிப்பு வந்தது. அது வரை கிண்டலாகவும் அலட்சியமாகவும் இருந்தனர்

Jackiesekar said...

நிதானமா ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க.. உத..முக்கியமா கடைசி வரி எல்லாத்தையும் சொல்லிட்டு.. எப்ப வச்சிக்கிலாம் என்பது போலான கட்டுரை முடிவு அற்புதம்....

மங்களுர் சிவா பத்தி நான் உட்பட எல்லோரும் கேள்வி கேட்டுவிட்டோம் பதில்தான் இல்லை...

smart said...

//வினவின் தலையீட்டுக்கு பிறகுதான் மன்னிப்பு வந்தது. அது வரை கிண்டலாகவும் அலட்சியமாகவும் இருந்தனர்//
அண்ணே எதிர் பக்கத்திலிருந்து அது கூட வரவில்லையே! பதிவெழுத தூண்டியவர்கள் நல்லவர்கள் என்கிறீர்களா?

Sanjai Gandhi said...

மொக்கைகளும் மரண மொக்கைகளும் ஜொள்ளுபார்டிகளும் நாய்களும் இயக்கும் இந்துப் பதிவுலகத்துக்கு நாட்டாமை செய்யும் புரட்சியின் அடுத்த கட்டத்தில் உள்ள தோழர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்..

உத அண்ணா, பின்னிட்டிங்க.. வேற ஒண்ணும் சொல்றதுகில்லை..

butterfly Surya said...

நிதானமா ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க...

மங்களுர் சிவா பத்தி நான் உட்பட எல்லோரும் கேள்வி கேட்டுவிட்டோம் பதில்தான் இல்லை...////

ஜாக்கியை மறுமொழிகிறேன்.

smart said...

// இந்துப் பதிவுலகத்துக்கு நாட்டாமை//
சஞ்சய் அண்ணே!
மதவாத பதிவுலகிற்கு எனது கண்டனங்கள்

Sanjai Gandhi said...

Smart அண்ணே, அதைக் கண்டுபிடித்த வினவு புலனாய்வு “புளி”களுக்கு ஒரு பாராட்டுக் கூட கிடையாதா? :(

pichaikaaran said...

அவதூறு செய்தர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். விமர்சனம் செய்தவர்கள் அல்ல . இரு தரப்பையும் ஒன்றாக பார்க்க கூடாது

Unknown said...

சாமிகளா ...நடந்தது தவறுதான் . ...

இதுவும் கடந்து போகும் என்பதுபோல ....காலமே மருந்தாக அமையும்.

எல்லோரும் கொஞ்சம் அரைத்த மாவை அரைப்பதை நிறுத்துங்கள்.

smart said...

//அவதூறு செய்தர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். விமர்சனம் செய்தவர்கள் அல்ல . இரு தரப்பையும் ஒன்றாக பார்க்க கூடாது//
ஒன்றாக பார்க்க கூட வேண்டாம் நீங்கள் அவதுறாக கருதுவதற்கு தரும் தண்டனையில் 33%மாவது விமர்சித்தவர்களுக்கும் தரலாமே

smart said...
This comment has been removed by the author.
K.R.அதியமான் said...

////முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.////

இதை வினவு சொல்வது பெரிய முரண்நகை. இது வினவு மற்றும் அவரின் பல ‘தோழர்’களுக்குதான் பொருந்தும்.

K.R.அதியமான் said...

////முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.////

இதை வினவு சொல்வது பெரிய முரண்நகை. இது வினவு மற்றும் அவரின் பல ‘தோழர்’களுக்குதான் பொருந்தும்.

Unknown said...

தில்லு தொர... வருவார்களா?

K.R.அதியமான் said...

இந்த விசியத்தில் வினவு குழுவின் இரட்டை வேடம் பற்றி எழுத்தாளர் ஷோபாசக்தி சமீபத்தில் எழுதிய பதிவு இது :

http://www.shobasakthi.com/shobasakthi/?p=697
ஆளில்லாத ஊரில் நரி நாட்டாமை

pichaikaaran said...

" ஒன்றாக பார்க்க கூட வேண்டாம் நீங்கள் அவதுறாக கருதுவதற்கு தரும் தண்டனையில் 33%மாவது விமர்சித்தவர்களுக்கும் தரலாமே"

ஹா ஹா... கருத்து சுதந்திரம் என்பதையே , கேலி கூத்து ஆக்குகிறீர்கள்.. ஒரு கருத்தையோ, பேட்டியையோ கிண்டல் செய்வது இயல்பான ஒன்றுதான்.. பத்திரிகைகள் செய்வது இதைதான்... இதற்கெல்லாம் யாரும் மனிப்பு கேட்பதில்லை.. பிரதமரையே கூட கிண்டல் செய்யலாம் ( அவரது கருத்தை, பேட்டியை )..

ஆனால், பெண்மையை இழிவு செய்ததுதான் இப்போது பிரச்சினை.. நீயும் தவறு செய்தாய், நானும் தவறு செய்தேன் என்ற போக்கில் அந்த நரகல் நடை பதிவர் நடந்து கொண்டதால்தான் , வினவு தலையிட வேண்டியது ஆயிற்று..

பெட்ரோவ்ஸ்கி said...

/கருத்து சுதந்திரம் என்பதையே , கேலி கூத்து ஆக்குகிறீர்கள்.. ஒரு கருத்தையோ, பேட்டியையோ கிண்டல் செய்வது இயல்பான ஒன்றுதான்.. பத்திரிகைகள் செய்வது இதைதான்... இதற்கெல்லாம் யாரும் மனிப்பு கேட்பதில்லை.. பிரதமரையே கூட கிண்டல் செய்யலாம் ( அவரது கருத்தை, பேட்டியை )../

Perfect. I totally agree with you. The same goes in for not commenting too. its also freedom of opnion. to Remain silent. Didn't vinavu question this?

Will you please post the so called criticism one by one and clarify is it a comment on the interview or the views? Can you classify spending money to get good comments, boozing, partying etc are not character assassination.
Can you tell me the comments on abi appa, mangalore siva are comments only on their writings, or interviews. Be fair sir. I hate that shit of a post by narsim. but on the other hand i cant accept that mullais comments are not personal criticism. And vinavu's too. Its absolute slander.

டவுசர் பாண்டி... said...

//பார்வையாளன் said...

பெண்மையை இழிவு செய்ததுதான் இப்போது பிரச்சினை.. நீயும் தவறு செய்தாய், நானும் தவறு செய்தேன் என்ற போக்கில் அந்த நரகல் நடை பதிவர் நடந்து கொண்டதால்தான் , வினவு தலையிட வேண்டியது ஆயிற்று..//

பிரச்சினைக்கு சம்பந்தமே இல்லாத ஐஞ்சாறு பதிவர்களை இழிவு பண்ணீருக்கீங்களே, அது இழிவு இல்லையா?, அது நரகல் நடை இல்லையா?...

ஆதரிக்கறேன் பேர்வழின்னு லூசுத்தனமா பேசாதீங்க...

pichaikaaran said...

கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளி உலகுக்கு வர ஆரம்பிச்சு இருக்காங்க... அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்குவதுதான் நம் முதல் கடமை..

மற்றவற்றை அடுத்துகவனிக்கலாம்..எல்லாவற்றையும் ஒன்றாக கலப்பது வாதத்துக்கு நன்றாக இருக்கலாம்,, ஆனால், நடைமுறை பயன் இல்லை

smart said...

//கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளி உலகுக்கு வர ஆரம்பிச்சு இருக்காங்க... அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்குவதுதான் நம் முதல் கடமை.//

எப்படி? புதிதாக வரும் அவர்களை நம்ம பதிவர்கள் டார்ச்சர் செவார்கள் என்று சொல்லி அச்சத்தைப் போக்குகிறீர்களா? பேஷ் பேஷ் இது நல்லாயிருக்கே!

பெட்ரோவ்ஸ்கி said...

பார்வையாளன் said...

//கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் வெளி உலகுக்கு வர ஆரம்பிச்சு இருக்காங்க... அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்குவதுதான் நம் முதல் கடமை..

மற்றவற்றை அடுத்துகவனிக்கலாம்..எல்லாவற்றையும் ஒன்றாக கலப்பது வாதத்துக்கு நன்றாக இருக்கலாம்,, ஆனால், நடைமுறை பயன் இல்லை//

பார்வையாளன் உங்களைப் பாராட்டுகிறேன். இதுதான் அவசியம். அபி அப்பாவின் வீட்டுப் பெண்கள், மங்களூச் சிவாவின் வீட்டுப் பெண்கள், மிஸஸ் டவுட், கலகலப்ரியா அனைவருக்கும் இது பொருந்துமா இல்லையா? வினவு இவர்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்களை நீக்குமா?

வினவு ஏன் முன்மாதிரியாக இருக்கக்கூடாது. பெரியண்ணன் மாதிரி அன்பாக, கண்டிப்பாக, பட்சபாதமில்லாமல் பிரச்சனையை மட்டும், வேறெந்தக் கலப்பில்லாமல் விவாதித்து கருத்துக்களை வரவேற்குமானால் மொத்தப் பதிவுலகும் வினவின் பின்னால் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா பார்வையாளன்? பிரச்சினை குறித்த ஒரு இடுகை. தனிமனிதத் தாக்குதலுக்கு இடமளிக்கா மட்டறுப்பு, அரோக்கியமான விவாதங்களுக்கு பயமின்றிச் சொல்ல வழி, அடுத்த நாள் முடிவுரையாக பின்னூட்டங்களையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுரை. ஒன்றே ஒன்று முயலுமா வினவு. செய்து பாருங்கள். நேசிக்கப் படுவீர்கள் தோழர்களே.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர் உண்மைத்தமிழன்,
கட்டுரையில் முழுவதும் உடன்பட முடியவில்லையெனினும் பல இடங்களில் உடன்படுகின்றேன். பதிவர்கள் முன்னிலையில் வினவு முடிந்தால் ஆதாரத்தை தர வேண்டும். இல்லையெனில் மன்னிப்பைக் கோர வேண்டும். அதுவும் மங்களூர் சிவா என்னும் சகோதரர் வினவு தளம் உட்பட பல தளங்களில் பின்னூட்டம் போட்டும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டும் அதை சட்டைக் கூட செய்யவில்லை வினவு தளம். இது கூட ஒருவகை திமிர்த்தனம்தான். அதைப்போன்றே லீனா மணிமேகலையிடம் வினவு கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். வினவுடைய ஆணாதிக்க அளவுகோலின்படி சந்தன முல்லை அடைந்த மனவேதனையை லீனாவும் தானே அடைந்திருப்பார். அவருக்கும் கணவன் இருக்கிறாரே? அவர் மனவேதனை அடைந்திருக்க மாட்டாரா? லீனாவிடம் வினவு மன்னிப்பு கேட்பதைப் பற்றி எதையும் தங்கள் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லையே உண்மைத்தமிழன்.

தவறு செய்தவர்களான நர்சிம், வினவு, லீனா ஆகிய மூவரையும் தமிழ்மனத்திலிருந்தும் மற்ற திரட்டிகளிருந்தும் விளக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை யாராவது முன்னெடுப்பார்களென்றால் அதை நான் ஆதரிக்கின்றேன். இது சரியான தீர்வாக இருக்க முடியும் என்று நான் எண்ணுகின்றேன். உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

for follow up

pichaikaaran said...

"Can you classify spending money to get good comments, boozing, partying etc are not character assassination."

சார், ஒரு விஷயம்.. காசு கொடுத்து பாராட்டு பெற்றார், பார்டி கொடுத்தார், மொக்கை பதிவர், இந்து வெறியர் என்றெல்லாம் ஒருவரை நோக்கி சொன்னால், எதிர்த்து பேச, வாதாட வாய்ப்பு இருக்கிறது... இந்த குற்ற சாட்டேல்லாம் இரு பாலருக்கும் பொதுவானது..

ஆனால், பெண்மையை அசிங்க படுத்துவது என்பது வேறு.. இதில் பாதிக்கப்டுவருக்கு ஏற்படும் வேதனையை எழுத்தில் கொண்டு வர முடியாது... இதில் பாதிக்கபட்டவர் வாதாட வாய்ப்பே இல்லை ... இதுதான் தமிழ்நாட்டின் நிலை.. இந்த பாதிப்பு ஆண்களுக்கு இல்லை ..

இதைத்தான் ஆணாதிக்க வாதிகள் பயன் படுத்தி கொள்கிறார்கள்..

smart said...

// நர்சிம், வினவு, லீனா ஆகிய மூவரையும் தமிழ்மனத்திலிருந்தும் மற்ற திரட்டிகளிருந்தும் விளக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை யாராவது முன்னெடுப்பார்களென்றால் அதை நான் ஆதரிக்கின்றேன். //
me too

smart said...

//பெண்மையை அசிங்க படுத்துவது என்பது வேறு.. இதில் பாதிக்கப்டுவருக்கு ஏற்படும் வேதனையை எழுத்தில் கொண்டு வர முடியாது... இதில் பாதிக்கபட்டவர் வாதாட வாய்ப்பே இல்லை ... இதுதான் தமிழ்நாட்டின் நிலை.. இந்த பாதிப்பு ஆண்களுக்கு இல்லை //

பார்வையாளரே,
இந்த பாதிப்பு பெண்களுக்கு மட்டும்தான் என்று ஏன் திணிக்கிறீர்கள்? அவர்களுக்கு மட்டும் கற்பு ஏன்கிற ரீதியான வாதமே பெண்ணடிமைத்தனம் என உணரவில்லையா? இப்படி உசிப்பேதி உசிப்பேதி பெண்களுக்கு சுமைகளைக்குடுக்காதீர்கள்.

பெட்ரோவ்ஸ்கி said...

//பார்வையாளன் said...
"Can you classify spending money to get good comments, boozing, partying etc are not character assassination."

சார், ஒரு விஷயம்.. காசு கொடுத்து பாராட்டு பெற்றார், பார்டி கொடுத்தார், மொக்கை பதிவர், இந்து வெறியர் என்றெல்லாம் ஒருவரை நோக்கி சொன்னால், எதிர்த்து பேச, வாதாட வாய்ப்பு இருக்கிறது... இந்த குற்ற சாட்டேல்லாம் இரு பாலருக்கும் பொதுவானது..//

மிகச் சரி பார்வையாளன் சார். ஆனால் அபிஅப்பா, மங்களூர் சிவா, பொத்தாம் பொதுவாக வந்த கமெண்ட்ஸ், ஒன்றுமே சொல்லாமல் ஏன் இருக்கிறாய் என்ற அடாவடி இதற்கெல்லாம் என்ன சொல்லப் போகிறீர்கள். இது தனிமனிதத் தாக்குதலா இல்லையா? அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு இது உளைச்சலா இல்லையா?

பெட்ரோவ்ஸ்கி said...

ஆனால், பெண்மையை அசிங்க படுத்துவது என்பது வேறு.. இதில் பாதிக்கப்டுவருக்கு ஏற்படும் வேதனையை எழுத்தில் கொண்டு வர முடியாது... இதில் பாதிக்கபட்டவர் வாதாட வாய்ப்பே இல்லை ... இதுதான் தமிழ்நாட்டின் நிலை.. இந்த பாதிப்பு ஆண்களுக்கு இல்லை ..//

எப்படிச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லைங்க. மங்களூர் சிவா எவ்வளவு பாதிக்கப்பட்டார். மற்றவர்கள்? அவர்கள் வீட்டுப் பெண்களின் கண்முன்னால் ஒரு சந்தேக விஷவித்து ஊன்றப்பட்டதா இல்லையா? பெண்ணுக்கு நடந்தால் ஆணாதிக்கம். ஆணுக்கும் அதே வலிதான் சார். மறைமுகமாக அவரின் குடும்பப் பெண்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அவர்கள் அக்கம் பக்கத்தவர் அவர்களீன் இடுகையைப் படிக்கலாம். தவறான ஒரு எண்ணம் தோன்றலாம். அது ஊகமாகப் பரவலாம். ஆக இதுவும் மறைமுகமான ஆணாதிக்கம்தான். சம்மந்தமற்ற பெண்பதிவர்களை இழுத்ததும் ஆணாதிக்கமாகத்தான் கருதப்பட வேண்டும்.

pichaikaaran said...

" இந்த பாதிப்பு பெண்களுக்கு மட்டும்தான் என்று ஏன் திணிக்கிறீர்கள்? அவர்களுக்கு மட்டும் கற்பு ஏன்கிற ரீதியான வாதமே பெண்ணடிமைத்தனம் என உணரவில்லையா "

இதை நானோ நீங்களோ , திணிக்கவில்லை... இதை நாம் ஏற்கவும் இல்லை.. ஆனால் இன்றைய நிலை இதுதான்.. .. இது மாற நாம் எல்லோரும பாடுபடுவோம்.. அது வேறு விஷயம..

மனைவி , துணைவுயடன் தலைவர்கள் பெருமையாக உலவும் நாடு இது ... இது போன்று ஒரு பெண் இருந்தால், தலைவியாக ஏற்க மாட்டோம்நாம்

ஒரு சின்ன கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.. ஒரு பெண் ஒழுக்கம் கேட்டவள் என சொல்லுவதும், ஒரு ஆண் ஜொள்ளு விடுகிறான் என சொல்வதும் ஒரே மாதிரியான பாதிப்பை தான் ஏற்படுத்துமா ??

பெட்ரோவ்ஸ்கி said...

ஒரு சின்ன கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.. ஒரு பெண் ஒழுக்கம் கேட்டவள் என சொல்லுவதும், ஒரு ஆண் ஜொள்ளு விடுகிறான் என சொல்வதும் ஒரே மாதிரியான பாதிப்பை தான் ஏற்படுத்துமா ??//

இன்றைய காலகட்டத்தில் ஆம். பேச்சுக்கு இது சுலுவு. ஆனால் பாதிக்கபட்டவர்கள், அவர்கள் குடும்பத்தாருக்கு காயம் சமமே.

kathir said...

அண்ணே நல்ல கேள்விகள்தான்

ஆனா... கேட்ட ஆளுங்க இதுக்கு ”வொர்த்”தா..

பதில் சொல்வாங்களா...... என்ன?

smart said...

தமிழ் மணத்தில் வினவின் கள்ளஓட்டு நரித்தனம் தெரிந்துவிட்டதோ! தற்காலிகமாக ஓட்டு பகுதியை நிறுத்திவைத்துள்ளனர். சூட்டோடு சூட்டாக வினாவை தமிழ் மணத்திலிருந்து நீக்க வேண்டும்.

Prasanna said...

I have a small doubt. Should Narsim apologize to Pookari or Santhanamullai.. Vinavu is crossing their limits.. I believe Narsim is a better writer and he can move on to someother forums than here.. Sorry guys.. But even if you want to live neutral Tamilmanam wont let you. I pity for Mangalore Siva. Hope the allegations against him will get cleared soon.

Prasanna said...

I have a small doubt. Should Narsim apologize to Pookari or Santhanamullai.. Vinavu is crossing their limits.. I believe Narsim is a better writer and he can move on to someother forums than here.. Sorry guys.. But even if you want to live neutral Tamilmanam wont let you. I pity for Mangalore Siva. Hope the allegations against him will get cleared soon.

pichaikaaran said...

கொலை செய்து விட்டு , இனி மேல் கவிதை எழுத மாட்டேன் என சொல்லி விட்டால் முடிந்து விட்டதா... ? அவரை தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை... அவரும் மனிதர்தான்... ஆனால், இப்படி இனி நடக்காமல் இருக்க , வினவு சொல்லும் வழிதான் சரி என்பதே உண்மை.. அதாவது எல்லோரும் அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவது நல்லதுதானே...

Unknown said...

முல்லையால் முடக்கப்பட்ட என் பின்னூட்டம்!

http://vanakkamnanbaa.blogspot.com/2010/06/blog-post_04.html

இந்த பின்னூட்டம் 4-6-10 அன்று மாலை 3 மணி அளவில் என்னால் அவரது பதிவில் இடப்பட்டது. 5-6-10 மாலை 5 மணி வரை அவரால் வெளியிட்ப்படவில்லை!
சகோதரி மற்றவரின் நியாயமான கேள்விக்கு பதில் சொலல விரும்பவில்லை போலுள்ளது!

a said...
This comment has been removed by the author.
a said...

நல்ல பதிவு... பிரச்சினை வேறு திசைக்கு திரும்பாமல் இருக்க யோசனை சொல்லி இருக்கிறீர்கள்.

smart said...

உங்கள் பதிவுக்கு பலம் சேர்க்க எனது பதிவையும் இங்கு இணைக்கிறேன்.
வினவின் விஷமப் பட்டியல்கள்
உண்மைகள் ஊர்க்கு தெரியட்டும்.

உண்மைத்தமிழன் said...

ஆதரித்துப் பின்னூட்டமிட்டவர்களுக்கும், விமர்சித்துப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் எனது அன்பான நன்றிகள்..!

அத்தனை பேருக்கும் தனித்தனியாக பதிலளித்து மேலும் பிரச்சினையை கிளற எனக்கு விருப்பமில்லை..!

மன்னிக்கவும்..!

இப்படியே விட்டுவிடுவோம்..!