திட்டக்குடி - திரை விமர்சனம்


28-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு சிறுகதைக்கே உரித்தான அத்தனை இலக்கணங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் திரைப்படம் இது..!


'பருத்தி வீரன்' டைப் கதைதான்.. ஆனால் அதில் இருந்த அளவுக்கான  உருக்கமான காட்சியமைப்புகளும், இயக்கமும் இதில் இல்லாததால் மனதை வருடச் செய்கிறதே தவிர.. 'பருத்தி வீரனைப்' போல் உட்புகவில்லை.

“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.. இதற்கொரு உதாரணம் இத்திரைப்படம்..

பால்ய வயதில் ஏற்பட்ட மோதலின் வடு வளர்ந்தும் மறையாமல் இருக்கும் இரண்டு இளைஞர்களுக்குள் நடைபெறும் மோதலில் ஒரு அப்பாவிப் பெண் பலியாகும் கதை..

ரஜினி ரசிகன் தனது நீண்ட கால எதிரியான கமல் ரசிகனை எப்படி பழிக்குப் பழி வாங்கினான் என்ற கதை..

வாலிப வயதுக்கேரிய அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண் சூழ்நிலையில் தன்னைத்தானே பலியாக்கிக் கொள்ளும் கதை..

குடி குடியைக் கெடுக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் கதை..

எத்தனையோ காதல்களை பெரியவர்களுக்குள் இருக்கும் வீம்பான ஈகோ மோதலே கெடுத்துவிடுகிறது என்பதைச் சொல்லியிருக்கும் கதை..

இப்படி ஒவ்வொரு கோணத்தில் இருந்து இத்திரைப்படத்தைப் பார்த்தாலும் அது ஒரு தனிக்கதையைச் சொல்வதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு..

இது எதையுமே இத்திரைப்படம் முழுமையாகவும், அழுத்தமாகவும் சொல்ல முற்படாததால் காலச்சக்கரத்தில் சிக்கிய ஒரு இளைஞனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிய நிலையில் இத்திரைப்படம் முடிக்கப்பட்டுவிட்டது.

வேலு என்கிற அந்தச் சிறுவனுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பு ஏறவில்லை. ஆனால் தானைத் தலைவர் ரஜினி மட்டுமே அவனுக்குக் கடவுளாகத் தெரிகிறார். அவருடைய திரைப்படங்களே வேலுவுக்கு பாடங்களாகத் தெரிகிறது..

பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்லும் பழக்கம், காசு வேண்டி பள்ளியை முற்றிலுமாகத் துறந்துவிட்டு செங்கல் சுமக்கும் வேலைக்குப் போக வைக்கிறது. அந்தத் தொழிலைக் கச்சிதமாகக் கற்றுக் கொள்கிறான். கண்டிக்கவோ, தண்டிக்கவோ, திசை மாற்றவோ, அறிவுரை சொல்லவோ ஆள் இல்லாத காரணத்தினால் வாழ்க்கை திசை மாறுகிறது..

கற்கக் கூடாததையெல்லாம் அந்த வயதிலேயே கற்றுத் தெளிந்து கொள்கிறான். பெண் மோகமும், ரவுடித்தனமும், குடிப் பழக்கமும் அவனைத் தொற்றிக் கொள்கிறது.


சிறு வயதில் இருந்தே அவனை நேசித்து வரும் ஹீரோயினின் அன்பு அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அடைய முடியாததை அடைந்துவிடும் அந்த வெறி மட்டுமே அவனுக்குள் இருக்கிறது. தனது வருங்காலக் கணவன்தானே என்று நினைத்து ஹீரோயின் தன்னை அவனிடம் ஒப்படைக்க.. அவனோ இதுவும் ஒரு கேஸ் போலத்தான் என்றெண்ணி பணத்தை அவளிடம் விட்டெறிந்துவிட்டுப் போகிறான்.

சுக்குநூறாகிப் போன மனதுடன் இருக்கும் ஹீரோயினை அதே கோலத்திலேயே கண்டுபிடிக்கிறான் அப்பன்காரன். காதும் காதும் வைத்தாற்போல் முடிக்க வேண்டியதை ஊருக்கே ஒப்பாரி வைத்துச் சொல்லி சூட்டைக் கிளப்ப.. அதுவரையில் ஹீரோயினின் அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கும் வேலுவின் தந்தை திருமணத்திற்கு மறுக்கிறார்.

வேறு வழியில்லாத நிலையில் ஊரில் இருந்தால் நாலு பேர் வாயில் விழுந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதால் வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறாள் ஹீரோயின்.

தன் உடல் சூட்டைத் தணிக்க வந்த இடத்தில் இருந்த காமக்கிழத்தி ஒருவள், அவனுக்கு அறிவுரை சொல்லி ஹீரோயினின் காதலைப் பற்றி அவனிடம் சொல்ல இப்போதுதான் அவனுக்கு உறைக்கிறது. திருமணத்திற்கு சம்மதிக்கிறான். இது தெரிந்த வேலுவின் அப்பா அன்றைக்கு பார்த்து விஷத்தைக் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக.. சரியான நேரத்துக்கு தனது திருமணத்திற்காக கோவிலுக்குப் போக முடியாத சூழல் வேலுவுக்கு..


வேலு இந்த முறையும் ஏமாற்றிவிட்டான் என்று தவறாக நினைத்த ஹீரோயினின் தந்தை, தனது மகளை எப்போதும் பிச்சையெடுத்தே குடிக்கும் பழக்கமுள்ள பெரும் குடிகாரன் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தன்னை வழி மறித்ததால் தன்னால் அதனை மீற முடியவில்லை என்பதை வேலுவால் வெளியில் சொல்ல முடியவில்லை..

பிச்சைக்கார கணவனால் தன்னை நேசித்த, தன்னால் கெடுக்கப்பட்ட ஹீரோயின் விபச்சாரியாக உருமாற்றப்பட்டிருப்பதை அறிந்த சோகத்துடன் இருக்கும் வேலுவுக்கு விதி, அவளது அண்ணி ரூபத்தில் வந்து விளையாடுகிறது.

வேலுவின் பால்ய எதிரியோடு அண்ணி தொடுப்பு வைத்துக் கொள்ள இதை வேலு பார்த்து அவனுடன் சண்டையிட.. அண்ணியோ தன்னை அவன்தான் கரும்புக் காட்டுக்குள் வைத்து கெடுத்துவிட்டதாக ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துத் தொலைக்கிறாள்.


இப்படியொரு சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தாற்போல் ஊரும், சுற்றமும் அவனைத் திட்டித் தீர்க்க.. தனது தாயே தன்னை மோக வெறி பிடித்தவனாக பார்ப்பதை உணர்ந்தவன் இறுதியில் தன்னை புரிந்து கொள்ளாத இந்த உலகத்தில் இருந்து பயனில்லை என்பதால் தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் அவன் இறந்துவிட்டானா..? அல்லது உயிருடன் இருக்கிறானா..? என்பதை நமக்குச் சொல்லாமலேயே முடித்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் முதலில் பாராட்டுக்குரியவர்கள் அத்தனை நடிகர்களும்தான். லோக்கல் முகங்களையே தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்.. அத்தனை நேட்டிவிட்டி. ஹீரோயினின் தந்தையும், ஹீரோவின் தந்தையும் உருக்கியிருக்கிறார்கள்.

அதிலும் ஹீரோயினின் தந்தை குடி போதையில் தனது மகளின் நிலைமையை எண்ணி புலம்புகின்ற காட்சியும், பஞ்சாயத்தார் முன்னிலையில் தலை குனிந்து நின்று அமைதிப் பார்வை பார்க்கின்றபோதும், தனது மகளுக்காக தனது அக்கா வீட்டுக்குப் போய் பெண்ணை எடுத்துக்க என்று கெஞ்சுகின்ற காட்சியிலும், ஹீரோவை மருமகனாக்க ஒப்புக் கொண்டு அவனுக்காக சாராய பாட்டிலை வாங்கி உபசரிக்கும் இடத்திலும் வெகு இயல்பான நடிப்பு..

இதேபோல் ஹீரோ வேலுவின் குடும்பத்தினர்.. அவனது அப்பா, அம்மாவோடு அண்ணியாக நடித்த மீனாளும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.. அந்த நடுவீதி ஒப்பாரி பாட்டு ஒன்றே போதும்.. கிராமத்து மண்ணில் அறிவார்ந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் எப்போதுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அத்தனையும் உணர்ச்சி வேகத்தில் செய்யப்படுபவையாகத்தான் இருக்கும்.. இதற்கு நல்லதொரு உதாரணம் இந்தக் காட்சி..


ஒருவன் குடிகாரனாகவே இருந்து தொலைந்துவிட்டால் அவன் செய்யாத தவறுகளெல்லாம் அவன் செய்தது போலவே இந்த உலகத்தில் கற்பிக்கப்படும். இந்தக் கொடுமையைச் சுமக்கும் அப்பாவி கேரக்டர் வேலுவுக்கு.. புதுமுகம் என்றாலும் கொடுத்த பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். பாராட்டுக்கள் உரித்தாகுக..


அடுத்த அதிர்ச்சி பிளஸ் ஆச்சரியம். ஹீரோயின்.. சின்ன வயது.. கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்தான்.. வயதுக்கு வந்த விழாவில் ஊரே திரண்டு தனக்கு மஞ்சத்தண்ணி ஊற்றியதையும், இப்போது தான் கெட்டுப் போனவள் என்பது தெரிந்தவுடன் ஊரே திரும்பிப் பார்க்காமல் போவதையும் தனது கண்களாலேயே சொல்லிவிடும் அந்தக் காட்சி நினைத்துப் பார்க்க வைக்கிறது. ஹீரோவிடமிருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்க நினைத்து முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு  காட்சியிலும் இயக்கம் அருமை.

ஒவ்வொரு காட்சியும் அதன் இயல்புத் தன்மையோடுதான் இருக்கிறது என்றாலும் மிகக் குறைவான கால நேரங்களே கொடுக்கப்பட்டிருப்பதால்  மனதை டச் செய்ய மறுக்கின்றன. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும்..


ஹீரோயினின் அப்பாவுக்கும், சித்தாளுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கத்தை எந்தவித விரசமும் இல்லாமல் வெறும் ஈர்ப்பாகக் காட்டியிருப்பதற்கு இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்.

பருத்திவீரனை விடவும் விரசக் காட்சிகள் குறைவாகவே இருந்தாலும் அதற்கான முனைப்புகள் இதில் சீரியஸாக இருப்பதால் அது போன்ற திரைப்படமோ என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது. ஆனாலும் நெருக்கமான காட்சிகளில்கூட விரசமில்லாமல் எடுத்துக் காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு ஒரு நன்றி..


ஊரில் அக்மார்க் முத்திரையுடன் இருக்கும் மல்லிகா என்ற விபச்சாரப் பெண் தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகச் சொல்கிற காட்சியில் வேண்டுமென்றே ஒரு பாடல் காட்சியைத் திணிக்க அந்தச் சூழலில் ஸ்பீடாக போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் டெம்போ குறைந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது. அந்தப் பாடல் காட்சியை தூக்கியிருக்கலாம்.

மகனது திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கும் தந்தைகளும், தாய்களும் கையாளுகின்ற அதே விஷம் குடித்தல் என்கிற விஷயத்தை அவனது தந்தை பயன்படுத்துவதையும், ஹீரோ அதனால் தடுக்கப்பட்டு பாதிக்கப்படுவதையும் காட்சிகளாக அழகுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால் கூடவே நம்மை டென்ஷனாக்கும் அந்த ரீரெக்கார்டிங் என்னும் வாஸ்து இந்த இடத்தில் சுத்தமாக படுத்துவிட்டதால் நமக்கு ஒன்றும் தோன்றவில்லை..

கமல் ரசிகனான ஹீரோயினின் முறைப் பையனை அசிங்கப்படுத்தத்தான் ஹீரோயினை தான் மடக்கியதாக வேலு சொல்லியிருந்தால் கதையின் போக்கு மாறியிருக்கும்.. இப்படி இந்தக் கதையின் போக்கு மாறும் சூழல் படத்தில் பல இடங்களில் இருந்தாலும் இயக்குநர் அனைத்திற்கும் தொடர்பளிக்காமல் போனது ஏன் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. ஒரு சிறுகதையாக புத்தகத்தில் படிப்பதற்கு இது தோதான கதை. ஆனால் நமது திரைப்படங்களின் தற்போதைய போக்கில் கதைக்கருவும், கதை எதைப் பற்றியது என்பதைச் சொல்லியாக வேண்டிய கட்டாயமும் இருப்பதால் இந்தப் படத்தில் அந்தக் குழப்பம்தான் ஏற்பட்டிருக்கிறது.

சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் எப்படி ஒரு இளைஞனின் கதையை முடித்திருக்கின்றன என்பதற்கு இந்தப் படமும் சாட்சியம் அளித்திருக்கிறது.

என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமும்கூட.!!!

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com
 

42 comments:

அபி அப்பா said...

\\ரீரெக்கார்டிங் என்னும் வாஸ்து இந்த இடத்தில் சுத்தமாக படுத்துவிட்டதால் நமக்கு ஒன்றும் தோன்றவில்லை..
\\

வஸ்து என்பதுக்கு பதில் வாஸ்துன்னு எழுத்து பிழை வந்துடுச்சு. தம்பி சரவணா, எனக்கு எழுத்து பிழைன்னா சுத்தமா பிடிக்காதுன்னு உனக்கு தான் தெரியுமேப்பா. நான் ரொம்ப ரென்சன் ஆகிடுவேன் ஆமா சொல்லிட்டேன்;-))


மத்தபடி கேபிள் விமர்சனம் படிச்சதுக்கும் இந்த விமர்சனம் படிச்சதுக்கும் 180 டிகிரி வித்யாசத்தை உணர்கின்றேன்.Edit

kanagu said...

/*மத்தபடி கேபிள் விமர்சனம் படிச்சதுக்கும் இந்த விமர்சனம் படிச்சதுக்கும் 180 டிகிரி வித்யாசத்தை உணர்கின்றேன்*/

enakku athukkum mela vidhyasam theriyuthu :)

அபி அப்பா said...

அடுத்து, விமர்சனத்தால் படம் வியாபாரம் பாதிக்குதுன்னு பல பேர் சன் டிவியை முன்னர் குறை சொல்லுவதை நானும் ஒத்துக்கலை. ஆனா இப்ப கண்கூடாக பார்க்கிறேன்.

எப்போதும் உனா தானா பதிவு போட்டா வந்து குமியும் கூட்டம் இன்னிக்கு இந்த பக்கம் வராமல் போனதுக்கு காரணம் அனேகமாக கேபிளாரின் திட்டக்குடி விமர்சனமேயாகும்.

நான் கூட முதலில் அந்த கண்றாவி படத்துக்கு எல்லா விமர்சனமும் படிக்கனுமான்னு நினைத்து நினைத்து இந்த விமர்சனத்தை பார்க்காம விட்டேன். ஆக ஒரு விமர்சனத்தால் இன்னும் ஒரு விமர்சனமே பாதிக்கப்படுதே அப்படின்னா படம் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை உணர்கின்றேன்.

நல்லா இருங்க சாமீ!

பாலா said...

// தவிர.. 'பருத்தி வீரனைப்' போல் உட்புகவில்லை.
//

இப்படியே.. அந்த இத்துப்போனப் படத்தை ஏத்திவிட்டுக்கிட்டே இருங்க.

rajasundararajan said...

//ரஜினி ரசிகன் தனது நீண்ட கால எதிரியான கமல் ரசிகனை எப்படி பழிக்குப் பழி வாங்கினான் என்ற கதை..//

இதன் மறுதலை அல்லவா கதை? அதாவது, கமல் ரசிகன் ரஜினி ரசிகனை எப்படிப் பழிவாங்கினான் என்று... (கமல் ரசிகன் ரஜினி ரசிகனின் அண்ணியோடு படுத்ததுதான் resolution-கு இட்டுச் செல்வதால்.)

அது கிடக்கட்டும், நாடுகெட்டதுக்கு ரஜினி, கமல் காரணம் என்று கருத்துச் சொன்னது செறிவா? நகைப்பா?

ஈர்ப்பும் இரக்கமும் யார்மேல் விழவேண்டும் என்னும் தெளிவுகூட இல்லாமல் இயக்குநர் களம் இறங்கிவிட்டார், அதுதான் கோளாறு. நாயகியின்பால் ஈர்ப்பும் இரக்கமும் தோற்றுவித்துவிட்டு, நாயகனுக்காய்ப் பிறகு மடியேந்துகிறார்.

நல்லவராய் இருப்பீர்கள் போல, இப் படத்திலும் கூட நல்லதையே கண்டிருக்கிறீர்கள்!

Santhosh said...

யப்பா சாமி அந்த படத்தோட திரைக்கதை கூட இவ்வுளவு நீளமா இருக்காது.. முன்னாடியெல்லாம் உ.தா அண்ணாச்சி பக்கம் பக்கமா எழுதி டவுசர் தான் அவுப்பாரு.. இப்ப ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பனித்துளி சங்கர் said...

சிலர் கடந்த ஒரே பாதையில் ஏதோ ஒரு நம்பிக்கையில் செல்ல முயற்சித்து பாதை தொலைத்த இயக்குநர்களில் இவரும் ஒருவர் . பகிர்வுக்கு நன்றி நண்பரே
!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

\\ரீரெக்கார்டிங் என்னும் வாஸ்து இந்த இடத்தில் சுத்தமாக படுத்துவிட்டதால் நமக்கு ஒன்றும் தோன்றவில்லை..\\

வஸ்து என்பதுக்கு பதில் வாஸ்துன்னு எழுத்து பிழை வந்துடுச்சு. தம்பி சரவணா, எனக்கு எழுத்து பிழைன்னா சுத்தமா பிடிக்காதுன்னு உனக்கு தான் தெரியுமேப்பா. நான் ரொம்ப ரென்சன் ஆகிடுவேன் ஆமா சொல்லிட்டேன்;-))]]]

அது வாஸ்து இல்லையா..? வஸ்துவா..?

எந்த வஸ்துவோ..? அது டோட்டலா சரியில்ல அண்ணாச்சி..!

இதுக்காக போயெல்லாம் நீங்க ஏன் டென்ஷன் ஆவுறீங்க..?

இப்படியெல்லாம் செஞ்சாத்தான் நீங்க உடன்பிறப்புன்னு இல்லீங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

/*மத்தபடி கேபிள் விமர்சனம் படிச்சதுக்கும் இந்த விமர்சனம் படிச்சதுக்கும் 180 டிகிரி வித்யாசத்தை உணர்கின்றேன்*/

enakku athukkum mela vidhyasam theriyuthu :)]]]

படத்தைப் பார்த்திட்டுச் சொல்லுங்க கனகு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

அடுத்து, விமர்சனத்தால் படம் வியாபாரம் பாதிக்குதுன்னு பல பேர் சன் டிவியை முன்னர் குறை சொல்லுவதை நானும் ஒத்துக்கலை. ஆனா இப்ப கண்கூடாக பார்க்கிறேன்.

எப்போதும் உனா தானா பதிவு போட்டா வந்து குமியும் கூட்டம் இன்னிக்கு இந்த பக்கம் வராமல் போனதுக்கு காரணம் அனேகமாக கேபிளாரின் திட்டக்குடி விமர்சனமேயாகும்.

நான்கூட முதலில் அந்த கண்றாவி படத்துக்கு எல்லா விமர்சனமும் படிக்கனுமான்னு நினைத்து நினைத்து இந்த விமர்சனத்தை பார்க்காம விட்டேன். ஆக ஒரு விமர்சனத்தால் இன்னும் ஒரு விமர்சனமே பாதிக்கப்படுதே அப்படின்னா படம் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை உணர்கின்றேன்.
நல்லா இருங்க சாமீ!]]]

ஹி.. ஹி.. இன்னிக்கு கூட்டம் குறைஞ்சதுக்கு இதுவும் ஒரு காரணம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

//தவிர.. 'பருத்தி வீரனைப்' போல் உட்புகவில்லை.//

இப்படியே.. அந்த இத்துப் போனப் படத்தை ஏத்திவிட்டுக்கிட்டே இருங்க.]]]

படம் பார்த்தாச்சா பாலா..!?

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...
//ரஜினி ரசிகன் தனது நீண்ட கால எதிரியான கமல் ரசிகனை எப்படி பழிக்குப் பழி வாங்கினான் என்ற கதை..//

இதன் மறுதலை அல்லவா கதை? அதாவது, கமல் ரசிகன் ரஜினி ரசிகனை எப்படிப் பழிவாங்கினான் என்று. (கமல் ரசிகன் ரஜினி ரசிகனின் அண்ணியோடு படுத்ததுதான் resolution-கு இட்டுச் செல்வதால்.) அது கிடக்கட்டும், நாடுகெட்டதுக்கு ரஜினி, கமல் காரணம் என்று கருத்துச் சொன்னது செறிவா? நகைப்பா?]]]

இப்படிப் பார்த்தால் இன்னைக்கு வெளி வருகின்ற அத்தனை சினிமாக்களும் குப்பைகள்தான் அண்ணாச்சி..!

[[[ஈர்ப்பும் இரக்கமும் யார் மேல் விழ வேண்டும் என்னும் தெளிவுகூட இல்லாமல் இயக்குநர் களம் இறங்கிவிட்டார், அதுதான் கோளாறு. நாயகியின்பால் ஈர்ப்பும் இரக்கமும் தோற்றுவித்துவிட்டு, நாயகனுக்காய்ப் பிறகு மடியேந்துகிறார்.]]]

நல்லதொரு விளக்கம்ண்ணே.. உண்மையும்கூட.. இயக்குநரின் தவறுதான் இது..!

உண்மைத்தமிழன் said...

[[[சந்தோஷ் = Santhosh said...
யப்பா சாமி அந்த படத்தோட திரைக்கதைகூட இவ்வுளவு நீளமா இருக்காது.. முன்னாடியெல்லாம் உ.தா அண்ணாச்சி பக்கம் பக்கமா எழுதி டவுசர் தான் அவுப்பாரு.. இப்ப ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..]]]

தம்பி சந்தோஷூ...

சினிமால திரைக்கதை என்பது குறைந்தபட்சம் 250 பக்கங்கள் வரும்..!

இதற்குக் குறைந்தும் எழுதலாம்.. கூட்டியும் எழுதலாம்..!

நான் எழுதியிருப்பது வெறும் 5 பக்கங்கள்தான்..!

வால்பையன் said...

//“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.//


திருப்பி நான் கொடுத்தா துண்டை காணோம், துணியை கானோம்னு ஓடுவான்!

pichaikaaran said...

"ஹி.. ஹி.. இன்னிக்கு கூட்டம் குறைஞ்சதுக்கு இதுவும் ஒரு காரணம்தான்..!"


அதுவல்ல காரணம்...

சினிமா விமர்சனம், செய்தி விமர்சனம் இதற்கெல்லாம் ஊடகங்களை விட , பதிவர்களைத்தான் இப்போதெல்லாம் நம்ப வேண்டி இருக்கிறது... ( நான் பத்திரிகை விமர்சங்களை இப்போதெல்லாம் படிப்பதில்லை )

இந்த நிலையில், சினிமா விமர்சனத்தில் கில்லாடிகளான இரு பதிவர்கள் ( உ த, கே ச ) வெவ்வேறு விதமாக எழுதி இருப்பதால், சற்று குழப்பமாகி விட்டது...
படம் பார்த்து விட்டு நம் கருத்தை சொல்லுவோம் என பலரும் நினைத்து விட்டனர்...
எப்படியோ, இந்த படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள், பார்த்து விட்டு இருவர் பார்வையையும் ஒப்பிடுகிறேன்

முரளிகண்ணன் said...

//“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.//

அண்ணே அனுபவிச்சு சொல்லி இருக்கீங்க.

ஜோதிஜி said...

இப்படியே.. அந்த இத்துப்போனப் படத்தை ஏத்திவிட்டுக்கிட்டே இருங்க.

பாலா என்னாச்சு. அதுல என்ன கொறச்சலு?


திருப்பி நான் கொடுத்தா துண்டை காணோம், துணியை கானோம்னு ஓடுவான்!

ரொம்பவும் சிரிக்க வைத்த வரிகள் .......

தமிழா படங்களை இடுகையில் சரியான இடத்தில் இடது வலமாக பொருத்த முயற்சிக்கவும்.

விமர்சனம் நல்லாயிருந்தது.

பிரபல பதிவர் said...

/*மத்தபடி கேபிள் விமர்சனம் படிச்சதுக்கும் இந்த விமர்சனம் படிச்சதுக்கும் 180 டிகிரி வித்யாசத்தை உணர்கின்றேன்*/

தவறு. இருவருமே படத்தை ரசித்து பார்த்துள்ளார்கள்.
இருவருக்குமே கண்களுக்கு விருந்தாகத்தான் இருந்துள்ளது.....

kishore said...

உங்களுக்கு வேறவேலையே இல்லையா..? நீங்க வெட்டியா..?

Unknown said...

யாரு ராசா நீ, எங்க இருக்க , என்ன பண்ணுற, பக்கம் பக்கமா இப்படி அடிச்சி தள்ளுற யாரு மேல உனக்கு கோபம் இந்த கொல கொல்லுற,வேற வேலவெட்டி இல்லயா உனக்கு நீ தியேட்டர்ல உண்மையா படம் பாற்குறியா இல்லா பார்த்தவங்கள கேட்டு எழுதிறியா

ச.முத்துவேல் said...

ரெண்டு நல்ல பாட்டு கேட்டேன். அதப்பத்திச் சொல்லலையே. நெஞ்சுக்குள்ளே பாட்டு ரொம்ப நல்லாயிருக்கே. புதிய இசையமைப்பாளர் பற்றி எதுவும் சொல்லக்காணோம்?

முதமுறையா திட்டக்குடி படம் பத்தி நல்லமாதிரியான பார்வையில விமர்சனம் எழுதியிருக்கீங்க. நான் இன்னும் பாக்கலை.

ச.முத்துவேல் said...

ஃபாலோ அப்.

உண்மைத்தமிழன் said...

[[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிலர் கடந்த ஒரே பாதையில் ஏதோ ஒரு நம்பிக்கையில் செல்ல முயற்சித்து பாதை தொலைத்த இயக்குநர்களில் இவரும் ஒருவர் . பகிர்வுக்கு நன்றி நண்பரே]]]

இன்னும் காலம் இருக்கிறதே சங்கர்..! இவரும் மிளிர்வார் என்று நம்புகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...

//“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.//

திருப்பி நான் கொடுத்தா துண்டை காணோம், துணியை கானோம்னு ஓடுவான்!]]]

ஓடுறது யாருன்னு அப்போ பார்ப்போம்டி மவனே..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"ஹி.. ஹி.. இன்னிக்கு கூட்டம் குறைஞ்சதுக்கு இதுவும் ஒரு காரணம்தான்..!"

அதுவல்ல காரணம். சினிமா விமர்சனம், செய்தி விமர்சனம் இதற்கெல்லாம் ஊடகங்களைவிட , பதிவர்களைத்தான் இப்போதெல்லாம் நம்ப வேண்டி இருக்கிறது. ( நான் பத்திரிகை விமர்சங்களை இப்போதெல்லாம் படிப்பதில்லை )

இந்த நிலையில், சினிமா விமர்சனத்தில் கில்லாடிகளான இரு பதிவர்கள் ( உ த, கே ச ) வெவ்வேறு விதமாக எழுதி இருப்பதால், சற்று குழப்பமாகிவிட்டது.

படம் பார்த்து விட்டு நம் கருத்தை சொல்லுவோம் என பலரும் நினைத்து விட்டனர்...

எப்படியோ, இந்த படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள், பார்த்து விட்டு இருவர் பார்வையையும் ஒப்பிடுகிறேன்.]]]

அவசியம் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

//“நீ ஆடுறவரைக்கும் ஆடு.. ஆண்டவன் தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பான்.. ஆனா நீ என்னிக்கு ஆட்டத்தை நிறுத்திட்டு இனிமே நல்லா வாழணும்னு நினைக்கிறியோ.. அன்னிக்கு நீ ஆடுன ஆட்டத்துக்கெல்லாம் பதிலடியை ஆண்டவன் திருப்பிக் கொடுப்பான்..” - இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல் வாக்கியம்.//

அண்ணே அனுபவிச்சு சொல்லி இருக்கீங்க.]]]

முரளிகண்ணா.. பார்த்து, பேசி ரொம்ப நாளாச்சு..

எப்படி இருக்கீங்க..? போன் பண்ணுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

இப்படியே அந்த இத்துப் போன படத்தை ஏத்திவிட்டுக்கிட்டே இருங்க.
பாலா என்னாச்சு. அதுல என்ன கொறச்சலு? திருப்பி நான் கொடுத்தா துண்டை காணோம், துணியை கானோம்னு ஓடுவான்!
ரொம்பவும் சிரிக்க வைத்த வரிகள்.

தமிழா படங்களை இடுகையில் சரியான இடத்தில் இடது வலமாக பொருத்த முயற்சிக்கவும்.

விமர்சனம் நல்லாயிருந்தது.]]]

நன்றி ஜோதிஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

/*மத்தபடி கேபிள் விமர்சனம் படிச்சதுக்கும் இந்த விமர்சனம் படிச்சதுக்கும் 180 டிகிரி வித்யாசத்தை உணர்கின்றேன்*/

தவறு. இருவருமே படத்தை ரசித்து பார்த்துள்ளார்கள். இருவருக்குமே கண்களுக்கு விருந்தாகத்தான் இருந்துள்ளது.]]]

படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[kishore said...
உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? நீங்க வெட்டியா..?]]]

ஆமாம்.. வெட்டி ஆபீஸர்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...
யாரு ராசா நீ, எங்க இருக்க , என்ன பண்ணுற, பக்கம் பக்கமா இப்படி அடிச்சி தள்ளுற யாரு மேல உனக்கு கோபம் இந்த கொல கொல்லுற, வேற வேல வெட்டி இல்லயா உனக்கு? நீ தியேட்டர்ல உண்மையா படம் பாற்குறியா? இல்லா பார்த்தவங்கள கேட்டு எழுதிறியா?]]]

படத்தை பார்க்காம இப்படியெல்லாம் எழுத முடியுமான்னு மொதல்ல நீ நினைச்சுப் பாரு ராசா..?

goma said...

பார்த்துவுடோம்ல.....
ஆரு அங்கே? ரெண்டு டிக்கெட்டு ரிசர்வு பண்ணு..

Romeoboy said...

\\என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமும்கூட.!!!//

என்ன அண்ணே இப்படி சொல்லிடிங்க. கனகவேல் காக்க படத்தின் எப்பெக்டா ??

உண்மைத்தமிழன் said...

[[[goma said...
பார்த்துவுடோம்ல. ஆரு அங்கே? ரெண்டு டிக்கெட்டு ரிசர்வு பண்ணு..]]]

வெரி வெரி குட்பாய்..!

உண்மைத்தமிழன் said...

[[[♥ ℛŐℳΣŐ ♥ said...

\\என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமும்கூட.!!!//

என்ன அண்ணே இப்படி சொல்லிடிங்க. கனகவேல் காக்க படத்தின் எப்பெக்டா??]]]

மிஸ்டர் ரோமியோ..! கனகவேல் காக்க படத்தின் கதை நன்றாகத்தான் இருந்தது..! ட்ரீட்மெண்ட்தான் மனதைக் கவருவதைப் போல இல்லை..!

இது இரண்டுமே இருந்தும், வெகுஜன மக்களைக் கவரவில்லை.. காரணம்தான் என்னவென்று தெரியவில்லை..!

pichaikaaran said...

"என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.."

சரி ண்ணே. ஒத்துக்கிறோம் .. அதுக்காக , இலக்கியம், சிறுகதை, அப்படியெல்லாம் சொன்னது, கொஞ்சம் ஓவர்னே..

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
"என்னளவில் இதுவொரு சிறந்த திரைப்படம்தான்.."
சரிண்ணே. ஒத்துக்கிறோம். அதுக்காக, இலக்கியம், சிறுகதை, அப்படியெல்லாம் சொன்னது, கொஞ்சம் ஓவர்னே..]]]

என்னளவில் அதுவும் சரியானதுதான் ஸார்..!

Thenammai Lakshmanan said...

ஐயோ தலை சுத்துது.. எப்பிடிப் பார்த்தீங்க சரவணா இந்தப் படத்தை

pichaikaaran said...

"என்னளவில் அதுவும் சரியானதுதான் ஸார்..!"

ரொம்ப சந்தோசம்... இந்த படத்தை பொறுமையா பார்த்து ரசித்த உங்களுக்கு கோயில் கட்டி கும்பிட போறோம்.. கோயில் திறப்பு விழாவுக்கு , மறக்காம வந்துடுங்க

உண்மைத்தமிழன் said...

[[[thenammailakshmanan said...
ஐயோ தலை சுத்துது.. எப்பிடிப் பார்த்தீங்க சரவணா இந்தப் படத்தை?]]]

வழக்கம் போலத்தான்..!

பார்க்கிறது வெறும் சினிமாதான் அப்படீன்னு பார்த்தா ஒண்ணும் தெரியாதுக்கா..!?

ஆமா.. நீங்க எதுக்கு இப்படி பதறுறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"என்னளவில் அதுவும் சரியானதுதான் ஸார்..!"

ரொம்ப சந்தோசம்... இந்த படத்தை பொறுமையா பார்த்து ரசித்த உங்களுக்கு கோயில் கட்டி கும்பிட போறோம். கோயில் திறப்பு விழாவுக்கு, மறக்காம வந்துடுங்க]]]

மொதல்ல பத்திரிகையை வைங்க.. அப்பால பார்ப்போம்..!

abeer ahmed said...

See who owns free-fonts.com or any other website:
http://whois.domaintasks.com/free-fonts.com

abeer ahmed said...

See who owns boltertekelo.hu or any other website.