12-06-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
இதுதான் அந்தச் செய்தி..
1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
இதுதான் அந்தச் செய்தி..
1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.
சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.
தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.
தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். "கிருஷ்ணன் ஏறிட்டானா?" என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.
ஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.
தலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்.
"டேய் என்னாச்சு உனக்கு..? என்னது ரத்தம்?" என்று அதிர்ந்து போய் கேட்டார். "ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல.." என்றேன். "என்னா ஒண்ணுமில்லன்றேன்..? இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு..? என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற..? நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ.." என்று சத்தம் போட்டார்.
எங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.
அன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். "அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா..? மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..?" என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.
இரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, "என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு..? சாப்பிட்டியா..?" என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.
கட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.
நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, "டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி.." என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். "வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு..? பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா.." என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.
நான் ஆடிப் போனேன். "ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா.." என்று பதறினேன். "டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே.." என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.
நான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.
அந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.
- சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி
(நன்றி : சிகப்பு நாடா, ஜூன் 1-15, 2010)
|
Tweet |
94 comments:
ம்ம்ம்ம்.....அதெல்லாம் அந்தக்காலம்.........இப்ப இதப்பத்தி எதுக்கு அண்ணே...விடுங்க
நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஆறுதலாக இருக்கிறது..
நரகல் பதிவர்கள் இருக்கும் பதிவுலகில், உண்மை தமிழன் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது ஏற்படும் ஆறுதல் போல ...
பகிர்வுக்கு நன்றிகள்.
நல்ல பகிர்வு.அவர் போன்ற தலைவர்களை இப்போது காண்பதும் அரிது. 36 ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசமாய் ஒருவரிடம் பணிபுரிபவரைக் காண்பதும் மிக அரிது.
பழைய நினைப்புலத்தான் இப்ப பொழப்ப ஓட்ட வேண்டியிருக்குங்க.
மக்கள் தொண்டன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரண புருஷன்.
உண்மை! இப்படியும் முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள்! (அப்போது மக்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற உபகேள்வியும் எழுகிறது!)
விச ஜந்துக்களிடம் அவரை தோல்வியுற செய்த மக்கள்தான் பாவிகள்
Kamarajar was the fantastic man and we are very proud of him as a tamil person.
அண்ணே சரத்குமார் முயற்சித்துக்கொண்டுருக்கும் அந்த மண்டபம் முழுமையடையுமா?
காமராஜர் வாழ்க, ஆனால் கலைஞரும் இவருக்கு சமமானவரே, தன் கூடவே ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஸ்டாலினுக்காக எதைவேனுமேன்றாலும் செய்வார்.
காமராஜர் காமராஜர் தான்! நாம ஒரு தப்பு பண்ணிவிட்டோம். அவர் உடலை பதப்படுத்தி, மியூஸீயத்தில் வைத்து, " தமிழ் நாட்டின் கடைசி அரசியவாதி எழுதி வைத்திருக்க வேண்டும். நம் எதிர்கால சந்த்தியினரும் அவரை புரிந்து கொள்ள வாய்ப்பாயிருந்திருக்கும்.
இருக்கும்போது எப்ப மதிச்சிருக்கோம். தொலைச்சப்புறம்தான் மதிப்பு புரியுது நமக்கு.
இப்படி ஒரு மனிதர் எலும்பு, சதை, ரத்தத்தோடு உயிர் வாழ்ந்தாரா என விழிகளை விரிய வைக்கும் - வீரபாண்டியன்.
காமராஜரைப் பற்றி படிக்கும்போதெல்லாம் எனக்குள்ளும் ஏற்படும் எண்ணமும் இதுவே.
வளைத்து வளைத்து இடம் வாங்கி போடும் இன்றைய அரசியல் வியாதிகள் எங்கே இரண்டு வேட்டி சட்டை வைத்துவிட்டு இறந்து போன திரு கக்கன் எங்கே. இந்தியா ஒரு ராணுவ புரட்சியை நோக்கி செல்லுவதில் உள்ள வேகம் இந்த அரசியல் வியாதிகளால் அதிகம் என்றே எண்ணுகிறேன் அண்ணே....
There will not be any Military Coup in India because Military top brass are more corrupted than the Politicians
விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
correct
www.athiradenews.blogspot.com
காமராஜர் பற்றி மேலும் பல நிகழ்வுகள் பற்றி தெரிதுகொள்ள http://www.kumarikrishna.blogspot.com/ என்ற உலவிக்கு வந்து உயர்ந்த மனிதர் காமராஜர் -காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரு தொகுப்பு என்ற லிங்க் சொடுக்கி நூலை பதிவிர்ரம் செய்க
வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
காமராஜர் பத்தி நாம பல விஷயம் சொல்லலாம் அண்ணா... உண்மையிலேயே சிறந்த மனிதர்...
இந்த விஷயத்தை பற்றி எனக்கு தெரியாது,.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..
நாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா???
"நாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா???"
me too ... arrange a dinner for us...
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. தற்போதைய அரசியல் வியாதிகள் பண்ணுகிற அலம்பலையும் நம் புலம்பலையும் எண்ணி பார்க்க வைத்த பதிவு.
[[[அத்திரி said...
ம்ம்ம்ம். அதெல்லாம் அந்தக் காலம். இப்ப இதப் பத்தி எதுக்கு அண்ணே. விடுங்க]]]
எப்படி விடுறது தம்பி..? இப்படியெல்லாம் நமது முன்னார்கள் இருந்தாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா..?
[[[பார்வையாளன் said...
நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஆறுதலாக இருக்கிறது.]]]
இந்தச் சி்ன்ன மன ஆறுதலை மட்டுமே நம்மால் இப்போது பெற முடிகிறது..!
[[[சந்ரு said...
பகிர்வுக்கு நன்றிகள்.]]]
வருகைக்கு நன்றி சந்ரு..!
[[[ராமலக்ஷ்மி said...
நல்ல பகிர்வு. அவர் போன்ற தலைவர்களை இப்போது காண்பதும் அரிது. 36 ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசமாய் ஒருவரிடம் பணிபுரிபவரைக் காண்பதும் மிக அரிது.]]]
வரலாறு வரலாறாகத்தான் இருக்க முடியும்..!
உதிரப் போகும் இலைகள் மட்டுமே இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன..!
[[[இராகவன் நைஜிரியா said...
பழைய நினைப்புலத்தான் இப்ப பொழப்ப ஓட்ட வேண்டியிருக்குங்க. மக்கள் தொண்டன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரண புருஷன்.]]]
இவருடைய வழியில் நடக்கிறோம் என்று சொல்பவர்கள் இப்போது கொலைகாரர்களாக இருக்கிறார்களே என்பதுதான் வேதனை..!
எதற்காக இந்தப் பெருந்தலைவரின் பெயரை இழுக்கிறார்கள்..!
[[[சேட்டைக்காரன் said...
உண்மை! இப்படியும் முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள்! (அப்போது மக்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற உப கேள்வியும் எழுகிறது!)]]]
உண்மைதான் சேட்டைக்காரன் ஸார்..!
மக்களும் மாறித்தான் விட்டார்கள்.. ஒத்துக் கொள்கிறேன்..!
இதனால் விளைவுகள் தங்களுக்கே என்பதை எப்போது மக்கள் உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!
[[[பரதரசு said...
விச ஜந்துக்களிடம் அவரை தோல்வியுற செய்த மக்கள்தான் பாவிகள்.]]]
ஒட்டு மொத்தமாக அக்கட்சி மீது அவர்களுக்கிருந்த வெறுப்புதான் அப்படிச் செய்ய வைத்துவிட்டது என்று நம்புகிறேன்..!
[[[kkchozhan said...
Kamarajar was the fantastic man and we are very proud of him as a tamil person.]]]
நன்றி சோழன் ஸார்..!
[[[ஜோதிஜி said...
அண்ணே சரத்குமார் முயற்சித்துக் கொண்டுருக்கும் அந்த மண்டபம் முழுமையடையுமா?]]]
நீங்க பணம் கொடுத்தீங்கன்னா உடனே கட்டி முடிச்சிருவார்..!
[[[எப்பூடி ... said...
காமராஜர் வாழ்க, ஆனால் கலைஞரும் இவருக்கு சமமானவரே, தன் கூடவே ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஸ்டாலினுக்காக எதை வேனுமேன்றாலும் செய்வார்.]]]
ஹி.. ஹி.. நக்கலு..! நல்லாத்தான் இருக்கு..!
[[[சட்டம் நம்கையில் said...
காமராஜர் காமராஜர்தான்! நாம ஒரு தப்பு பண்ணிவிட்டோம். அவர் உடலை பதப்படுத்தி, மியூஸீயத்தில் வைத்து, " தமிழ்நாட்டின் கடைசி அரசியவாதி எழுதி வைத்திருக்க வேண்டும். நம் எதிர்கால சந்த்தியினரும் அவரை புரிந்து கொள்ள வாய்ப்பாயிருந்திருக்கும்.]]]
தவறுதான் ஸார்..!
செஞ்சிருக்கலாம்.. குழி தோண்டி புதைக்கிறதுக்காகவே அவதாரம் எடுத்திருக்கிறவர்தான் அப்போ முதல்வரா இருந்ததால இதையெல்லாம் செய்யறது அவருக்கு எப்படி மனசு வரும்..? சொல்லுங்க..!
[[[வானம்பாடிகள் said...
இருக்கும்போது எப்ப மதிச்சிருக்கோம். தொலைச்சப்புறம்தான் மதிப்பு புரியுது நமக்கு.]]]
உண்மைகள் ஐயா..
இது என்றில்லை.. எல்லா விஷயத்திலுமே நம்ம மக்கள் அப்படித்தான்..!
[[[கும்மி said...
இப்படி ஒரு மனிதர் எலும்பு, சதை, ரத்தத்தோடு உயிர் வாழ்ந்தாரா என விழிகளை விரிய வைக்கும் - வீரபாண்டியன்.
காமராஜரைப் பற்றி படிக்கும் போதெல்லாம் எனக்குள்ளும் ஏற்படும் எண்ணமும் இதுவே.]]]
உண்மைதான் கும்மி.. எனக்கும் அதே ஆச்சரியம்தான் எழும்புகிறது..!
[[[தமிழ் உதயன் said...
வளைத்து வளைத்து இடம் வாங்கி போடும் இன்றைய அரசியல்வியாதிகள் எங்கே இரண்டு வேட்டி சட்டை வைத்துவிட்டு இறந்து போன திரு கக்கன் எங்கே.
இந்தியா ஒரு ராணுவ புரட்சியை நோக்கி செல்லுவதில் உள்ள வேகம் இந்த அரசியல் வியாதிகளால் அதிகம் என்றே எண்ணுகிறேன் அண்ணே.]]]
அப்படியொரு சூழல் வரட்டுமே..! வர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்..!
[[[வெத்து வேட்டு said...
There will not be any Military Coup in India because Military top brass are more corrupted than the Politicians.]]]
இதில் சிறிதளவு உண்மை இருக்கலாம் என்றே நம்புகிறேன்..!
நம்ம நாட்டுல லஞ்சம் இல்லாத இடம் எங்கதான் இருக்கு..?
[[[tamilnanbarkal.com said...
விமானத்தில் செல்பவரா நீங்கள்? எச்சரிக்கை வீடியோ
correct
www.athiradenews.blogspot.com]]]
எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே..!
[[[Krishnakumar said...
காமராஜர் பற்றி மேலும் பல நிகழ்வுகள் பற்றி தெரிது கொள்ள http://www.kumarikrishna.blogspot.com/என்ற உலவிக்கு வந்து உயர்ந்த மனிதர் காமராஜர் -காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரு தொகுப்பு என்ற லிங்க் சொடுக்கி நூலை பதிவிர்ரம் செய்க]]]
நன்றி நன்றி நன்றி..!
பல விஷயங்கள்.. புதிய தகவல்கள்..
உங்களுக்கு எனது சல்யூட்..!
[[[sinhacity said...
வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்]]]
இதில் என்னுடைய தளமும் இடம் பெறுகிறதா..?
[[[mythoughtsintamil said...
காமராஜர் பத்தி நாம பல விஷயம் சொல்லலாம் அண்ணா... உண்மையிலேயே சிறந்த மனிதர்...
இந்த விஷயத்தை பற்றி எனக்கு தெரியாது,.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..
நாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா???]]]
போன் பண்ணுங்க பிரதர்.. சந்திப்போம்.. 9840998725
[[[பார்வையாளன் said...
"நாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா???"
me too ... arrange a dinner for us...]]]
வாங்க.. வாங்க.. பேசுவோம்..! 9840998725
[[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. தற்போதைய அரசியல் வியாதிகள் பண்ணுகிற அலம்பலையும் நம் புலம்பலையும் எண்ணி பார்க்க வைத்த பதிவு.]]]
இன்னும் எத்தனி காலம்தான் இப்படியே புலம்புறதுன்னு தெரியலையே..?
அண்ணே ஒரு சுமால் டவுட்...
இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சி காரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா?
இதெல்லாம் சரிதான்.
இவர் தென் தமிழகத்தில் தனது சாதிக்காக, அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மற்ற சமுதயத்தினரை வஞ்சித்ததைப் பற்றியும், பல ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்த கருவேல முள் மரங்களை விதைத்ததையும் எழுதுங்கள்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் எனத்திமிராகக் கூறியதனால் (வீட்டிலே போய் படுத்துக்கொள் என்று) மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
இவர் போன்ற உத்தமர்களால் தான் பூமியில் பருவ மழை பெய்கிறதென்றால் அது மிகையாகாது
தமிழ்நாட்டிற்கு இனி பருவமழையே கிடையாதாம்.
இன்றைய அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்டது காமராஜர் மட்டுமல்ல. ஏராளமான மரங்களும், காடுகளும்கூட. இன்றைக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டின் பேரில் கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையில் பருவமழை எப்படி பெய்யும்.
எனவே இனி தமிழ்நாட்டிற்கு மழை என்றால் புயல் மழை மட்டுமே.
காமராஜரை பற்றி நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய காணொளி youtube.com ல் கிடைக்கும். பார்த்து வியக்க வேண்டுகிறேன். காமராஜரின் ஆட்சி மிக நேர்மையான ஆட்சி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. உங்கள் பின்னூட்டத்தில் சதீஸ் குறிப்பிட்டுள்ள குற்றசாட்டை எங்கள் பகுதி மக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அவர் காலத்தில் நடந்த சாதி கலவரங்கள் அவருடைய ஆட்சியின் கரும்புள்ளியே. எனக்கு தெரிந்த அளவில், தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் மகிழ்சியாக இருந்தது M. G. R ஆட்சியில் தான்.
ஆச்சரியமான விசயம் தான்..
"me too ... arrange a dinner for us...]]]
வாங்க.. வாங்க.. பேசுவோம்..! "
சாப்பாடு வாங்கி தருவீங்களா , இல்லையா ?
ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பழசை நினைச்சு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்.
காமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே?.பதிவர்கள் வெட்டிப்பதிவுகளோடு (உங்களைச் சொல்வேனா!) இம்மாதிரி விஷயங்களையும் நிறைய எழுதவேண்டும் அப்போதுதான் இளைய தலைமுறைகளுக்கு முந்தைய தலைவர்களின் அருமையும், அவர்களின் எளிமையும் தெரியும்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நாம் முதலில் நல்லவர்களாக இருக்க வேண்டும்.. பின்னரே நல்ல தலைவரை எதிர்பார்க்க வேண்டும்.. அரசு கட்டிக் கொடுக்கும் ஒரு கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்திருக்க முடிகிறதா..? கழிவறைக்கு உள்ளே செல்லக் கஷ்டப்பட்டு அதன் சுவற்றிலேயே அசிங்கம் செய்து மற்றவர்களும் அதற்க்கு உள்ளே செல்ல முடியாதவாறு செய்யும் நம் நாட்டுக் குடிமகன்களை என்ன கேட்ட வார்த்தையில் திட்டலாம்...? அதே குடிமகன்களால் தானே அந்த தன்னிகரற்ற தலைவன் வீழ்த்தப்பட்டான்..? வேண்டாம்... தேவையில்லை.. இந்த நாட்டுக்கு நல்லவர்கள் தேவையில்லை.. அவர் வானுலகம் சென்றது நல்லதே.. அங்கே அவருக்கு கண்டிப்பாக சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருக்கும்.. இறப்பு என்பது இவர் போன்றோருக்கு இல்லவே இல்லை.. வாழ்க அவரது புகழ் என்றும் இப்பூவுலகில். நெஞ்சை நெகிழ வைத்த பதிவை அளித்தமைக்கு நன்றி..
அவரின் எளிமைதான் நண்பரே இன்றும் அவரை நினைக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி !
Nice entry about History of Kamaraj. I remember reading following information from Vikatan (or) Kumudham when I doing my school.
When Kamaraj died at his Chennai home Rs.67.50/- was taken from alimarah and 2 set of dhothi with shirt.
Sharing with younger generation will educate them and we may get good leader in future.
அதெல்லாம் கொடுத்து வைத்த மக்கள் வாழ்ந்த காலமுங்க.
பகிர்வு மெய் சிலிர்க்கிறது.
நல்ல பதிவு!
பெருந் தலைவரைப் பற்றி மேலும் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி!
//இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சி காரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா?//
சத்தியமா தெரிஞ்சியிருக்க வாய்ப்பே இல்லை அவுங்க தான் கலைஞரும் காமராசர் ஆட்சியைத் தான் நடத்துறார்னு அப்பப்ப அறிக்கை உட்டுக்கிறாங்களே ;-)
//நல்லதந்தி said...
காமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே?.//
என்னண்ணே, சந்தடி சாக்கில ராஜாஜி பேரையும் கொண்டு வரீங்க?
நெசமாவே அவ்ரும் இவ்வளவு எளிமையாவா இருந்தாரூ?!?!
இல்லே அவரும் ரவுடிதான்னு ஜீப்பில ஏத்துற பின்னோட்டமா ;-))
நல்ல பதிவு!பகிர்வுக்கு நன்றி!
[[[குசும்பன் said...
அண்ணே ஒரு சுமால் டவுட்... இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சிகாரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா?]]]
நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை குசும்பா..!
இதெல்லாம் தெரிஞ்சா அவங்க ஏன் இப்படி இருக்கப் போறாங்க..?
[[[சதீஷ் said...
இதெல்லாம் சரிதான். இவர் தென் தமிழகத்தில் தனது சாதிக்காக, அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மற்ற சமுதயத்தினரை வஞ்சித்ததைப் பற்றியும், பல ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்த கருவேல முள் மரங்களை விதைத்ததையும் எழுதுங்கள்.
படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் எனத் திமிராகக் கூறியதனால் (வீட்டிலே போய் படுத்துக்கொள் என்று) மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.]]]
சதீஷ்..
நான் இது பற்றி பலரிடமும் கேட்டேன். முழுமையான வதந்தி என்கிறார்கள்..!
நான் நம்பத் தயாராக இல்லை..!
தலைவர் அப்படி கூறியது திமிரினால் அல்ல மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையினால்..!
[[[goma said...
இவர் போன்ற உத்தமர்களால்தான் பூமியில் பருவ மழை பெய்கிறதென்றால் அது மிகையாகாது]]]
நிச்சயமாக..!
[[[வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
தமிழ்நாட்டிற்கு இனி பருவமழையே கிடையாதாம்.
இன்றைய அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்டது காமராஜர் மட்டுமல்ல. ஏராளமான மரங்களும், காடுகளும்கூட. இன்றைக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டின் பேரில் கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையில் பருவமழை எப்படி பெய்யும்.
எனவே இனி தமிழ்நாட்டிற்கு மழை என்றால் புயல் மழை மட்டுமே.]]]
அண்ணே சரண்டர்..! ஒத்துக்குறேன்..!
நம்மளால என்னதான் செய்ய முடிகிறது..? சொல்லுங்கள்..!
[[[kicha said...
எனக்கு தெரிந்த அளவில், தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் மகிழ்சியாக இருந்தது M. G. R ஆட்சியில்தான்.]]]
அப்போதைய காலக்கட்டம் அப்படி..! மக்கள் வாழ நினைத்த சூழல் எளிதாக கிடைத்ததால் இப்படியொரு எண்ணம் இருந்திருக்கலாம்..!
[[[முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஆச்சரியமான விசயம்தான்..]]]
எனக்கும்தான் மேடம்..!
[[[பார்வையாளன் said...
"me too ... arrange a dinner for us...]]]
வாங்க.. வாங்க.. பேசுவோம்..! "
சாப்பாடு வாங்கி தருவீங்களா , இல்லையா?]]]
கண்டிப்பா.. வாங்களேன்.. பேசுவோம்..!
[[[துளசி கோபால் said...
ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. பழசை நினைச்சு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்.]]]
வேற வழியில்லை டீச்சர்..! ஆத்திக்குவோம்..!
[[[நல்லதந்தி said...
காமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே?. பதிவர்கள் வெட்டிப் பதிவுகளோடு (உங்களைச் சொல்வேனா!) இம்மாதிரி விஷயங்களையும் நிறைய எழுத வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறைகளுக்கு முந்தைய தலைவர்களின் அருமையும், அவர்களின் எளிமையும் தெரியும்.]]]
வருகைக்கு நன்றி நல்லதந்தியாரே..!
[[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நாம் முதலில் நல்லவர்களாக இருக்க வேண்டும்.. பின்னரே நல்ல தலைவரை எதிர்பார்க்க வேண்டும். அரசு கட்டிக் கொடுக்கும் ஒரு கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்திருக்க முடிகிறதா..? கழிவறைக்கு உள்ளே செல்லக் கஷ்டப்பட்டு அதன் சுவற்றிலேயே அசிங்கம் செய்து மற்றவர்களும் அதற்க்கு உள்ளே செல்ல முடியாதவாறு செய்யும் நம் நாட்டுக் குடிமகன்களை என்ன கேட்ட வார்த்தையில் திட்டலாம்...? அதே குடிமகன்களால்தானே அந்த தன்னிகரற்ற தலைவன் வீழ்த்தப்பட்டான்..? வேண்டாம்... தேவையில்லை.. இந்த நாட்டுக்கு நல்லவர்கள் தேவையில்லை.. அவர் வானுலகம் சென்றது நல்லதே.. அங்கே அவருக்கு கண்டிப்பாக சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருக்கும்.. இறப்பு என்பது இவர் போன்றோருக்கு இல்லவே இல்லை.. வாழ்க அவரது புகழ் என்றும் இப்பூவுலகில். நெஞ்சை நெகிழ வைத்த பதிவை அளித்தமைக்கு நன்றி.]]]
இப்படியும் ஒரு ரசிகரா.. மனிதரா..? வாழ்க பிரகாஷ்..!
[[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அவரின் எளிமைதான் நண்பரே இன்றும் அவரை நினைக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி !]]]
வருகைக்கு நன்றி சங்கர் ஸார்..
[[[entry about History of Kamaraj. I remember reading following information from Vikatan (or) Kumudham when I doing my school.
When Kamaraj died at his Chennai home Rs.67.50/- was taken from alimarah and 2 set of dhothi with shirt.
Sharing with younger generation will educate them and we may get good leader in future.]]]
கரத்.. 300 ரூபாய் அவருடைய அலமாரியில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது..!
இதுதான் ஒரு உத்தம அரசியல்வாதியின் உன்னதமான மரணம்..!
[[[சி. கருணாகரசு said...
அதெல்லாம் கொடுத்து வைத்த மக்கள் வாழ்ந்த காலமுங்க. பகிர்வு மெய் சிலிர்க்கிறது.]]]
நாமளும் முன்னாடியே பொறந்து அவர் பின்னாடியே போய்ச் சேர்ந்திருக்கலாம்..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
நல்ல பதிவு!
பெருந் தலைவரைப் பற்றி மேலும் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி!]]]
நன்றி கரிகாலன்..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
//இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சிகாரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா?//
சத்தியமா தெரிஞ்சியிருக்க வாய்ப்பே இல்லை.. அவுங்கதான் கலைஞரும் காமராசர் ஆட்சியைத்தான் நடத்துறார்னு அப்பப்ப அறிக்கை உட்டுக்கிறாங்களே ;-)]]]
அறிக்கை விட்டாத்தான சூட்கேஸ் கிடைக்கும்..! அதுனாலதான்..!
[[[Karikal@ன் - கரிகாலன் said...
//நல்லதந்தி said...
காமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே?.//
என்னண்ணே, சந்தடி சாக்கில ராஜாஜி பேரையும் கொண்டு வரீங்க?
நெசமாவே அவ்ரும் இவ்வளவு எளிமையாவா இருந்தாரூ?!?!
இல்லே அவரும் ரவுடிதான்னு ஜீப்பில ஏத்துற பின்னோட்டமா ;-))]]]
உண்மைதான் கரிகாலன்..!
ராஜாஜியும் பொது வாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்தவர்தான்..!
"கண்டிப்பா.. வாங்களேன்.. பேசுவோம்..!"
அன்புக்கு நன்றி. போன் செஞ்சு , உங்கலுக்கு வசதியான நேரத்தை தெரிஞ்சுட்டு வர்றேன்...நிறைய டிஸ்கஸ் செய்ய வேண்டி இருக்கு,,,
அது ஒரு கனாக் காலம்.
[[[மோகன் குமார் said...
நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி!]]]
நன்றி மோகன்குமார்..!
இன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு!!
சார், இதெல்லாம் அந்தக் காலத்துல பேச ஆளில்ல.
பொதுவாவே நம்மத் தமிழனுக்கு, இல்லாதவங்கள, பொதுவா கடவுளாக்க ட்ரைப்பண்றதும், உயிரோடு இருக்குறப்போ,குப்புறக்கவுக்குறதுதான் தொழிலே(காமராஜையும் விடல)
ஒரு சாதாரண விசயத்தப் பாராட்டுர அளவுக்கும் நல்ல விசயம் குறஞ்சு போச்சுங்றதுதான் உண்மையோ, என்னமோ?
நல்ல பகிர்வு!
இப்பொதெல்லாம் இப்படிப் பட்ட மனிதர்களைப் பார்க்க முடியுமா.. தமிழன்..
[[[தேவன் மாயம் said...
இன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு!!]]]
வழி மொழிகிறேன்..!
[[[திருவாரூரிலிருந்து சரவணன் said...
அது ஒரு கனாக் காலம்.]]]
இதனை நிகழ் காலமாக நிகழ்த்திக் காட்டத்தான் ஆசை..!
முருகன்தான் வழி காட்டணும்..!
[[[பார்வையாளன் said...
"கண்டிப்பா.. வாங்களேன்.. பேசுவோம்..!"
அன்புக்கு நன்றி. போன் செஞ்சு , உங்கலுக்கு வசதியான நேரத்தை தெரிஞ்சுட்டு வர்றேன். நிறைய டிஸ்கஸ் செய்ய வேண்டி இருக்கு.]]]
நல்லது. விரைவில் சந்திப்போம் நண்பரே..!
//[[[தேவன் மாயம் said...
இன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு!!]]]
வழி மொழிகிறேன்..!//
எதுக்கு??
வேணாங்க. பாவம் அவரை விட்டுருங்க. இந்தியா அதுல்வும் நம்ம தமிழகம் நல்லா ஆகி இருக்கும் என்ற எண்ணத்தோட 'போனவர்' வந்தா.......
அந்த வினாடியே மாரடைப்பில் போயிருவார் :((
[[[VJR said...
சார், இதெல்லாம் அந்தக் காலத்துல பேச ஆளில்ல.
பொதுவாவே நம்மத் தமிழனுக்கு, இல்லாதவங்கள, பொதுவா கடவுளாக்க ட்ரை பண்றதும், உயிரோடு இருக்குறப்போ, குப்புறக் கவுக்குறதுதான் தொழிலே (காமராஜையும் விடல)
ஒரு சாதாரண விசயத்தப் பாராட்டுர அளவுக்கும் நல்ல விசயம் குறஞ்சு போச்சுங்றதுதான் உண்மையோ, என்னமோ?]]]
தமிழன் பட்டு பட்டே அனுபவித்தே உண்மையை உணர்கிறான் என்றால் இதற்கு எப்போதுதான் தீர்வு..?!
சாதாரண விஷயமா அல்லது அசாதாரணமான விஷயமா என்பது விஷயத்தின் கருவைக் கொண்டு முடிவு செய்யாமல் காரணிகள், செய்பவர்கள், சுற்றுச் சூழலையும் சேர்த்து யோசித்தால்தான் புரியும்..!
[[[எஸ்.ஏ.சரவணக்குமார் said...
நல்ல பகிர்வு!]]]
நன்றி சரவணக்குமார்..!
[[[thenammailakshmanan said...
இப்பொதெல்லாம் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடியுமா.. தமிழன்..]]]
முடியாமல்தானே அந்த பதைபதைப்பில் இருக்கிறோம்..!
[[[துளசி கோபால் said...
//[[[தேவன் மாயம் said...
இன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு!!]]]
வழி மொழிகிறேன்..!//
எதுக்கு?? வேணாங்க. பாவம் அவரை விட்டுருங்க. இந்தியா அதுவும் நம்ம தமிழகம் நல்லா ஆகி இருக்கும் என்ற எண்ணத்தோட 'போனவர்' வந்தா.......
அந்த வினாடியே மாரடைப்பில் போயிருவார் :((]]]
அப்படிங்கிறீங்க..?
அரசியல்வியாதிகள் மேலிருக்கும் கடுப்புலதான சொல்றீங்க..?
அப்பாடா.. டீச்சரை மாட்டிவிட்டாச்சு..!
படிக்காத மேதைக்கு எனது பணிவான வணக்கங்கள்!
உங்களுக்கு நன்றிகள்!
[[[அண்ணாமலை..!! said...
படிக்காத மேதைக்கு எனது பணிவான வணக்கங்கள்! உங்களுக்கு நன்றிகள்!]]]
படித்தமைக்கு நன்றிகள் அண்ணாமலை..!
See who owns 016.co.uk or any other website:
http://whois.domaintasks.com/016.co.uk
See who owns azcentrum.com or any other website.
Post a Comment