ஆடி அடங்கும் வாழ்க்கையடா..!

01-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அடுத்து நமது தேன்கிண்ணத்தில் எனதருமைத் தம்பியும், அமீரகத்தின் கவிஞர் குழாமின் தருமிப் புலவனும், அப்பாவிப் பதிவனுமான சென்ஷியின் நேயர் விருப்பமாக இந்தப் பாடல் ஒளிபரப்பாகிறது.

படித்து முடித்து அனுபவித்தவர்கள் உங்களுடைய நன்றியினை தம்பி சென்ஷிக்கு அனுப்பி வைக்கவும்..

பாவம் பயபுள்ளை.. டெய்லி பத்து வரில ஏதோ கவிதைன்னு ஒண்ணு எழுதி வைச்சுட்டு யாருக்கோ காத்திருக்கிறான்.. அவன் நேரம்.. ஒண்ணும் அகப்படலை போலிருக்கு.. இந்த வயசுலபோய் இந்தப் பாட்டை விரும்புறான் பாருங்க..



ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா

22 comments:

Unknown said...

நான் அதிகமாக ரசிக்கும் பாடல்களில் ஒன்று. வாழ்க்கையின் நிலையாமையை நன்றாக உணர்த்தும் பாடல். இதற்காக தங்களுக்கு ஒரு நன்றி.

ஜெட்லி... said...

//தீமைகள் செய்பவன் அழுகின்றான்
//

அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலியே அண்ணே...

கிருஷ்ண மூர்த்தி S said...

அழுகாச்சிப் பாட்டு, தத்துவப்பாட்டு, தோல்வியில் துவண்டு பாடும் பாட்டு இதெல்லாம் எப்படித் தேன் கிண்ணமாகும்?

தேன்கிண்ணம் என்கிற தலைப்பை மாத்துங்க!

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
நான் அதிகமாக ரசிக்கும் பாடல்களில் ஒன்று. வாழ்க்கையின் நிலையாமையை நன்றாக உணர்த்தும் பாடல். இதற்காக தங்களுக்கு ஒரு நன்றி.]]]

எனக்கெதற்கு நன்றி..

எனக்கும் இதுதான் நிலையானது என்று தோன்றுகிறது.

நம்முடைய நன்றிகள் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கும், பாடலை எழுதிய உவமைக் கவிஞர் சுரதா அவர்களையுமே போய்ச் சேரட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...

/தீமைகள் செய்பவன் அழுகின்றான்/

அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலியே அண்ணே...]]]

கண்டிப்பாக தன் வாழ்க்கையில் அழுதுவிட்டுத்தான் வீடுபேறு அடைவான் ஜெட்லி..

இது உலக நியதி..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...
அழுகாச்சிப் பாட்டு, தத்துவப்பாட்டு, தோல்வியில் துவண்டு பாடும் பாட்டு இதெல்லாம் எப்படித் தேன் கிண்ணமாகும்? தேன்கிண்ணம் என்கிற தலைப்பை மாத்துங்க!]]]

இல்லை ஸார்..

என்னைப் பொறுத்தவரையில் இதுதான் தேன்கிண்ணம்..!

மணிஜி said...

மகாத்மாவின் நினைவு நாளில் அந்த கசுமாலத்தை உங்களுக்கு நினைவு படுத்த வேண்டாம் என்று முந்திய கமெண்டை டெலிட் பண்ணி விட்டேன்

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
மகாத்மாவின் நினைவு நாளில் அந்த கசுமாலத்தை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டாம் என்று முந்திய கமெண்டை டெலிட் பண்ணிவிட்டேன்.]]]

ஓகே.. ஓகே..

சாந்தி.. சாந்தி.. சாந்தி..

Unknown said...

போன பதிவின் தாக்கமா தல. எல்லாம் விதி தல. நீங்க அடுத்த பிறவியில் ஆஞ்சநேய பக்தனா பிறப்பீங்க

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிஞர் சென்ஷிக்கு என் வாழ்த்துக்கள் !

சொல்லிடுங்க சரவணன் .

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...
போன பதிவின் தாக்கமா தல. எல்லாம் விதி தல. நீங்க அடுத்த பிறவியில் ஆஞ்சநேய பக்தனா பிறப்பீங்க]]]

அப்படீங்கிறீங்க..! உங்க ஆசீர்வாதம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிஞர் சென்ஷிக்கு என் வாழ்த்துக்கள்! சொல்லிடுங்க சரவணன்]]]

சொல்லிடறேன்..!

மங்களூர் சிவா said...

/

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
/

இப்பல்லாம் ஸ்விச்ச போட்டா ஒரு சட்டில குடுத்திடறாங்களாம் ஆறடியும் கிடையாது மூனடியும் கிடையாது
:))

சென்ஷி said...

ஹைய்.. சூப்ப்பர் :-)))))))

//வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை//

எனக்கு ரொம்பப் பிடிச்ச வரிகள்ல சிலது இது.

இந்தப் பாட்டு நிலையாமையை உணர்த்துறதுங்கறதுக்கு மேலா நிலைச்சு நிக்கற உண்மையை உணர்த்தறதாத்தான் தோண வைக்குது!

சென்ஷி said...

//பாவம் பயபுள்ளை.. டெய்லி பத்து வரில ஏதோ கவிதைன்னு ஒண்ணு எழுதி வைச்சுட்டு யாருக்கோ காத்திருக்கிறான்.. அவன் நேரம்.. ஒண்ணும் அகப்படலை போலிருக்கு.. இந்த வயசுலபோய் இந்தப் பாட்டை விரும்புறான் பாருங்க..
//

ஓஹ்.. நான் இந்தப் பாட்டை யாருக்கு டெடிகேட் செய்யறேன்னு சொல்லாம போயிட்டேனோ :-))))

சென்ஷி said...

//சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்//

உண்மைண்ணே.. உண்மை.. அதான் டெய்லி நம்ம குரு எல்லோரையும் சிரிக்க மாத்திரமே வச்சவரு!

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...

/ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா/

இப்பல்லாம் ஸ்விச்ச போட்டா ஒரு சட்டில குடுத்திடறாங்களாம் ஆறடியும் கிடையாது மூனடியும் கிடையாது. :))]]]

400 கிராம் எடையுள்ள சட்டி.. கால் அடி உயர சொம்பு.. முடிஞ்சது மேட்டர்..!

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

ஹைய்.. சூப்ப்பர் :-)))))))

//வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை//

எனக்கு ரொம்பப் பிடிச்ச வரிகள்ல சிலது இது. இந்தப் பாட்டு நிலையாமையை உணர்த்துறதுங்கறதுக்கு மேலா நிலைச்சு நிக்கற உண்மையை உணர்த்தறதாத்தான் தோண வைக்குது!]]]

அந்த நிலைச்சு நிக்குற உண்மை என்னன்னா.. நிலையாமைதான் நிலையானது என்பது..

புரியுதா தம்பீ..?

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

//பாவம் பயபுள்ளை.. டெய்லி பத்து வரில ஏதோ கவிதைன்னு ஒண்ணு எழுதி வைச்சுட்டு யாருக்கோ காத்திருக்கிறான்.. அவன் நேரம்.. ஒண்ணும் அகப்படலை போலிருக்கு.. இந்த வயசுலபோய் இந்தப் பாட்டை விரும்புறான் பாருங்க..//

ஓஹ்.. நான் இந்தப் பாட்டை யாருக்கு டெடிகேட் செய்யறேன்னு
சொல்லாம போயிட்டேனோ :-))))]]]

ஆமா தம்பீ.. நான் உனக்காகன்னுதான் நினைச்சேன்..

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

//சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்//

உண்மைண்ணே.. உண்மை.. அதான் டெய்லி நம்ம குரு எல்லோரையும் சிரிக்க மாத்திரமே வச்சவரு!]]]

ஆனா அவர் சொந்த வாழ்க்கையில கதடைசிவரைக்கும் சிரிக்கவே இல்லை தம்பி..

இது எவ்ளோ பெரிய கொடுமை..?

செண்பகபிரியன் said...

super nga

உண்மைத்தமிழன் said...

[[[சித்திரை: said...
supernga]]]

எப்படிங்க தேடிக் கண்டுபிடிச்சீங்க..? நன்றி சித்திரை..!