ஜெகன்மோகினி - ஜெகத்தையும் காணோம்..!! மோகினியையும் காணோம்..!!!

20-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விட்டலாச்சார்யா என்னும் கலைவித்தகர் காட்டிய இந்தப் பூச்சாண்டி திரைப்படம் நான் பார்த்த அந்த பால்ய வயதில் எனக்குள் பல்வேறு புதிய அனுபவங்களைக் கொடுத்திருந்தது. முக்கியமானது விழுந்து விழுந்து சிரிக்க வைத்த அந்த மூன்று குள்ளர்களின் நகைச்சுவைக் காட்சிகள்.

ஆவிகளின் பேயாட்டமும், மந்திர தந்திர காட்சிகளுமே என்னைப் போன்ற அக்கால சிறுவர்களை ஈர்த்திருந்தது. அந்தக் காலத்திய குறைவான வசதிகளை கையில் வைத்துக் கொண்டே வித்தையை முழுமையாகக் காட்டியிருந்தார் வித்தகர் விட்டாலாச்சார்யா.

பருவமெய்தி வயசுக்கு வந்த பின்பு மீண்டும் ஒரு முறை இத்திரைப்படத்தை பார்த்தபோது அந்தக் குள்ளர்களைவிடவும் 'கவர்ச்சி சுனாமி' ஜெயமாலினி என் மனதை ரொம்பவே ஆக்கிரமித்துக் கொண்டார். அவருடைய உடலில் இருந்த நெகிழ்வைவிட, முகத்தில் இருந்த ஒரு களையே சுள்ளென்று தமிழர் ரசிகர்களை இழுத்து வைத்திருந்தது.

படங்களை ரீமேக் செய்வது கத்திமேல் நடப்பது போன்றதுதான்.. அதிலும் மெகா ஹிட்டடித்த திரைப்படங்களை மீண்டும் ஒரு சூப்பர்ஹிட்டுக்கு கொண்டு போக வேண்டுமெனில் நிச்சயம் இயக்குநர் அதற்குத் தகுதியுள்ள ஆளாக இருக்க வேண்டும்.

தற்போதைய 'கவர்ச்சி சூறாவளி'யான 'மச்சான்ஸ் புகழ்' நமீதாவை வைத்து இத்திரைப்படம் உருவாகிறது என்பது தெரிந்து ஒரு த்ரில்லிங் இருந்தாலும் இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் என்றவுடன் பொசுக்கென்றானது. இராம.நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகப் பல படங்களுக்கு பணியாற்றிய அனுபவம் இருப்பதினாலும், நகைச்சுவைத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கிய அனுபவம் இருப்பதாலும் இவரை இயக்கத்திற்கு சிபாரிசு செய்திருந்தார் இராம.நாராயணன்.


விழிமேல் விழி வைத்து காத்திருந்ததற்கு போதும், போதும் என்கிற அளவுக்கு போட்டு புரட்டி எடுத்துவிட்டார்கள் தியேட்டரில்..

நமீதா, துட்டு, கிராபிக்ஸ் வசதிகள், விநியோக சுதந்திரம் என்று பல்வேறு வசதி, வாய்ப்புகள் இருந்தும் இப்படி ஆட்டுக்கல்லில் அரைக்க வேண்டிய அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்ததுபோல் செய்து கொடுக்க அந்த இயக்குநருக்கு எப்படி மனசு வந்ததோ தெரியவில்லை..? கொடுமை..

ஒரிஜினல் 'ஜெகன்மோகினி'யில் கதாநாயகனாக நடித்த நரசிம்மராஜூதான் இத்திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார். இவரது மனைவி மங்கையர்க்கரசியாக நடிக்க ஜெயமாலினியை அணுகியிருக்கிறார்கள். விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம்.. தப்பிச்சது ஆத்தா..

கதை அதேதான்.. ஆனால் எடுத்தவிதம்தான் கோரமானது..

பச்சைத்தீவின் மாமன்னன் நரசிம்மராஜூவுக்கும், மங்கையர்க்கரசி(யுவராணி)க்கும் ஒரே மகன் ஜெகதலப்பிதாபன்(ராஜா). இவனுக்கு கழுத்தை நீட்ட இவனது மாமன் மகள் அழகு நாச்சியார்(நிலா) காத்திருக்கிறாள். பிரதாபன் கடல் கொள்ளைக்கூட்டத் தலைவனான அலைக்கள்ளனை(ரியாஸ்கான்) பிடிக்க சங்குத் தீவுக்குச் செல்கிறான்.


அங்கு அலைக்கள்ளனை பிடிப்பதற்கு முன்பாகவே முத்தெடுக்கும் மீனவப் பெண்ணான மோகனியைப்(நமீதா) பிடித்துவிடுகிறான் பிரதாபன். இருவருக்குள் காதல் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்க.. அலைக்கள்ளனையும் பிடித்துவிடுகிறான் பிரதாபன்.

அழகு நாச்சியாருக்கு டாட்டா காண்பித்துவிட்டு மோகினியை கரம் பிடிக்க பெற்றோரிடம் ஆதரவு கேட்கிறான் பிரதாபன். அம்மா கோபப்பட, அப்பா நம்ம ஊர் டிபிக்கல் வில்லன் கம் அப்பனைப் போல் ஆக்ட்டிங் கொடுத்து பிரதாபனை நம்ப வைக்கிறார்.

அலைக்கள்ளனின் அப்பா(பாலாசிங்)வான சங்குத்தீவின் சிற்றரசனிடம் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து மோகினியை அவர் கொலை செய்தால், அவர் மகனான அலைக்கள்ளனை விடுவிப்பதாகச் சொல்கிறார் நரசிம்மராஜூ. அதன்படியே மோகினி கொல்லப்படுகிறாள். ஆனால் பிரதாபனிடம் மோகினி வேறொரு அரசனுடன் ஓடிப் போய்விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் ஓதப்பட அவனும் நம்பி விடுகிறான்.

இடையில் நாகபஞ்சமி என்னும் சக்தியை அடைய சித்தரான ஒரு மந்திரவாதி(கோட்டா சீனிவாசராவ்) முயற்சி செய்கிறார். அதற்கு பிரதாபனை பலி கொடுக்க முயற்சி செய்கிறார். இதற்காக அரண்மனையில் நல்லவர்போல் வேடம் காட்டி பிரதாபனின் உயிருக்கு உலை வைக்கும் பாக்கியத்தைச் செய்கிறார்.

தன் காதல் நிறைவேறாமலேயே இறந்துபோய்விட்ட கொடுமையினால் ஆவியாக வரும் மோகினி, பிரதாபன், அழகுநாச்சியார் திருமணத்தைத் தடுத்து நிறுத்துகிறாள்.

நான் எப்படியாவது பிரதாபனை அடைந்தே தீருவேன் என்று அலையோ அலை என்று ஆவியாகவே அலைகிறாள் மோகினி.

இன்னொரு பக்கம், மணந்தால் பிரதாபன்; இல்லையெனில் வீரப்பிராப்தம் அடைவேன் என்கிறாள் அழகு நாச்சியார்.

நாகபஞ்சமியை அடைந்தே தீருவேன்.. இல்லையெனில் நானும் வீரமரணம்தான் என்கிறான் மந்திரவாதி..

மூன்றும் நடந்ததா என்பதே திரைப்படம்.

ம்ஹும்.. நேற்றைய தினம் காலண்டரில்கூட எனது ராசிக்கு முன்னேற்றம் என்றுதான் போட்டிருந்தார்கள். அதை நம்பி போய்த் தொலைந்துவிட்டேன். இந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ரீமேக் திரைப்படங்கள் எனில் காட்சிக்கு, காட்சி அப்படியே எடுக்க வேண்டும் என்பதில்லை. அந்தக் காட்சியில் இருந்த உணர்வுகள் மீண்டும் எடுக்கப்பட்டதில் இருக்க வேண்டும். இங்கே டோட்டல் வேஸ்ட்டு..

ராஜா காலத்து கதை என்று சொல்லத் துவங்கி பேச்சுத் தமிழை எவ்வளவு கொலை செய்யணுமோ அவ்வளவுக்கு கொலை செய்து துப்பியிருக்கிறார்கள். "மச்சான் அரண்மனைக்கும் வரவில்லை.. அந்தப்புரத்திற்கும் வரவில்லை.. வராமலேயே எனக்கு வைச்சான் ஆப்பு.." என்று ராஜாவே பேசுகிறார்.


எந்த வருஷத்து ராஜா என்பதைச் சொல்லவில்லை என்றாலும் இவர்களாகவே குத்துமதிப்பாக ஒரு காலத்தை நினைத்து எடுத்திருக்கிறார்கள். இடையில் கோட்டு, சூட்டு போட்டு அன்னிய சக்திகளெல்லாம் முத்துக்கள் வாங்க கடற்கரைக்கு வருகிறார்களாம்.. இன்னும் கிழக்கிந்திய கம்பெனியை மட்டும்தான் காட்டவில்லை.

ஆர்ட் டிபார்ட்மெண்ட் எவ்ளோ பெரிய ஓட்டை என்பது துவக்கத்திலேயே தெரிந்துவிட்டது.. பாசி மாலைக்கு ஒரு குளோஸப்பை வைத்துவிட்டு அதனை முத்து மாலை என்று பீலாவிடும் அந்த ஆர்ட் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். ஒரு மாடல் கூடவா கிடைக்கவில்லை..?

திருமலை நாயக்கர் மஹாலில் படப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்பதில் இயக்குநர் குறியாக இருந்ததால் மதுரையின் மாமன்னன் மு.க.அழகிரிக்கு படத்தின் துவக்கத்திலேயே தனி கார்டு போட்டு நன்றியையும், விசுவாசத்தையும் காட்டிவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்த படப்பிடிப்புகள் இப்போது நாயக்கர் மஹாலில் தங்குத் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தனை நாளைக்கு தாங்கும் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் அரண்மனைகளுக்கு பஞ்சம் போலிருக்கிறது..


அலைக்கள்ளனுக்கே போலிகளாம்.. மூன்று போலிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிய மார்பிங் முகங்கள் எகிறுவதைப் பார்த்து நமக்கு பகீரென்கிறது.. டைரக்டர் இவ்ளோ நல்லவராவா இருப்பாரு..?

எந்த வகையிலும் ஈர்க்காத திரைக்கதையும், நடிக்கவே நடிக்காத நட்சத்திரங்களின் நடிப்பும் சேர்ந்து நம்மை ரொம்பவே கொடுமைப்படுத்துகின்றன.

நமீதாவின் பிரம்மாண்டம் இன்னும் எத்தனை நாளைக்கு அம்மணிக்கு சோறு போடும் என்று தெரியவில்லை. நமீதாவிடம் இல்லாத ஒன்று.. ஜெயமாலினி காட்டிய முகக் கவர்ச்சி. ஈர்ப்புத் தன்மை.. சுத்தமா டோட்டல் அவுட்டாகி அம்போவென நிற்கிறார் நமீதா.

முதல் பாதி முழுக்க ஒரு செட் டிரெஸ்தான் அம்மணியின் காஸ்ட்யூம். ஒரே நாளில் எடுத்து முடித்தார்களோ என்னவோ..? அம்மணிக்கு நடிப்பாவது வருகிறதா என்றால்.. அதுவும் இல்லை. கீ கொடுத்த பொம்மையாட்டம் இருக்கும் அம்மணியின் பேச்சும், நடையையும் பார்த்தால் சீக்கிரமே சூரத்திற்கு பொட்டியைக் கட்டிவிடுவார் என்று நினைக்கிறேன்..

ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..


அழகு நாச்சியாராக நிலாவாம்.. மூஞ்சில ஒண்ணையும் காணோம்.. ஏதோ வாயைத் தொறக்குது.. பேசுது.. ஆடுது.. அம்புட்டுத்தான்.. மெயினே ஆடாமல் இருக்கும்போது சைடுகள் மட்டும் நடித்துவிடுவார்களா என்ன?


படத்தில் நடித்திருக்கும் ஒரே ஒருவர் கோட்டா சீனிவாசராவ்தான். மனிதருக்கு பொருத்தமான கேரக்டர்.. உருப்படியாகச் செய்திருக்கிறார். ஆனால் மேக்கப்தான் கண்ணை உறுத்துகிறது..

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் நம்மை அசத்துவது கிராபிக்ஸ்தான்.. சத்தியமா சொல்றேன் சாமிகளா.. இது போன்ற கிராபிக்ஸ் சித்து வேலைகளை நீங்க எந்த சினிமாவுலேயும் பார்த்திருக்க முடியாது.. அவ்வளவு அட்டகாசம் போங்க..

இந்த கிராபிக்ஸ் வேலையை பார்த்துதான் சினிமாக்காரங்கள்லாம் அசந்து போனாங்களாம்.. டிரெயிலர் ரிலீஸ் பங்ஷன்ல உருகி, உருகி பேசியிருக்காங்க.. எல்லாருக்கும் கண்டிப்பா கண் ஆபரேஷன் பண்ணணும்ப்பா..

அதிலும் சீனிவாசராவ் சிலந்தி வடிவில் வருவார் பாருங்கள்.. வடிவேலுவின் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானேன்ற வசனத்தைவிடவும் சூப்பர் காமெடி சீன்..

டோட்டலா இதுவே வாஷ் அவுட் என்பதால் பிரமிப்பும், மந்திர, தந்திர எழவுகள் ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை. அத்தனையும் வேஸ்ட்டாகிவிட்டது.

ஒரிஜினிலில் இருந்தவற்றில் பத்து சதவிகித பிரமிப்புகூட இந்த ரீமேக்கில் இல்லை. "ஆவிகளின் அட்டாகசத்தைப் பாரீர்" என்றுதான் திண்டுக்கல் சோலைஹால் தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அந்தக் காலத்தில் எங்களையெல்லாம் கூவி, கூவி அழைத்தது.

முக்கியமான நகைச்சுவையையும், மந்திரக் காட்சிகளையும் குப்பையாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த ஆவிகளின் சேட்டைகளையும், குள்ள ஆவிகளையாவது படத்தில் சேர்த்திருக்கலாம். ஒரிஜினிலை அப்படியே ரீமேக் செய்துதான் தொலைத்திருக்கலாமே..


இதில் வைகைப்புயல் வேறு கதையில் ஒட்டாமல் தனி ஆவர்த்தனமாக வருகிறார். இதுவும் ஒரு கொடுமை. எல்லாம் எடுத்து முடித்தும் விற்க முடியாமல் தவிக்க.. கை கொடுத்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அதையாவது உருப்படியாக செய்தார்களா..? அதுவும் இல்லை.. இயக்குநர் இன்னமும் 'பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்' காலத்திலேயே இருக்கிறார்..

'இசை இளையராஜா' என்று டைட்டிலில் பார்த்தேன். பின்னணி இசைக்கு ஏதோ ஒன்றை போட்டு தேற்றிக் கொடுத்திருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை ரகம். ஆனால் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை.. ராகம் மட்டுமே கேட்க வைக்கிறது.. படத்தின் விளம்பரத்திற்குத் தன்னால் முடிந்த உதவியினைச் செய்திருக்கிறார் இசைஞானி. அந்த மட்டுக்கும் உழைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் 'ஆனந்தா பிக்சர்ஸ்' சுரேஷ் இத்திரைப்படத்தின் வினியோகத்தை எதற்காக வாங்கினார் என்று தெரியவில்லை? மூணே மூணு படம்தான ரிலீஸ்.. கூட்டம் அள்ளிரும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. ஒரு படமே ரிலீஸானாலும்.. ரிசல்ட் எங்க காதுக்கு நல்லபடியா வந்தால்தான் வருவோம் என்று ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

'ஜெய் ஜ்வாலாமுகி.. இன்னுமொரு சந்திரமுகி' என்று எந்த தைரியத்தில் இதற்கு விளம்பரம் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை. தியேட்டர்கள் காத்தாடுகின்றனவாம். தமிழகம் முழுவதிலும் இருந்து தியேட்டர் ரிசல்ட்டுகள் அட்டகாசமாக வந்து கொண்டிருக்கின்றன.

நல்ல சினிமா, கெட்ட சினிமா இரண்டில் ஒன்றாக இருந்து தொலைத்தால்தான் யாருக்காச்சும் உதவிகரமா இருக்கும். இப்படி ரெண்டும்கெட்டானாக இருந்து தொலைத்தால் என்னவென்று சொல்வது?

"கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள்.. கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.. ஏதோ ஒன்று அசத்தலாக இருக்கிறது.. ஒரு முறை பார்க்கலாம்.." என்றெல்லாம் ஒரிஜினல் சினிமாக்காரனைப் போல் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.. இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள் புண்ணியவான்கள்..

நல்லவேளை.. வித்தகர் விட்டலாச்சார்யா உயிருடன் இல்லை...!

56 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

me the first

Starjan (ஸ்டார்ஜன்) said...

நான் தான் முதல்லயா

நல்லாருக்கு ... அப்படியே படமும் நல்லாருந்தா சரிதான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நம்பலாமா நம்பப்டாதா ... மோகினியை சொன்னேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

i`ll next meeting

எறும்பு said...

//கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள்.. கடுமையாக உழைத்திருக்கிறார்கள்//

அவங்க எப்படியோ... நீங்க ரெம்ப கஷ்டபட்டிங்க போல

ஜெட்லி... said...

//ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..
//

ச்சே உங்க டேஸ்ட் பயங்கர கேவலமா இருக்கே...

ஒரு வேலை உங்களுக்கும் ஜோதிலட்சுமிக்கும்
ஒரே வயசுன்னு நீங்க சொல்றிங்க போல.....

நல்ல அலசல் தல.... அதெப்படி நாம ரெண்டு பேரு
மட்டும் இந்த மாதிரி மொக்கை படம் பார்த்துட்டு
விமர்சனம் வேற எழுதுறோம்??....

ரவி said...

thank y o u

வால்பையன் said...

அப்பவே நினைச்சேன்!

Beski said...

//நமீதாவின் பிரம்மாண்டம் இன்னும் எத்தனை ...//

இந்த ஏரியாவுக்கு வர்றதுக்குள்ள.... மொதல்லயே இத எழுதவேண்டியதுதான?
ஆனாலும், எதிர்பார்த்த விசயங்கள் இங்கு இல்லை.

சிங்கக்குட்டி said...

தகவலுக்கு நன்றி, பதிவு நல்லா இருக்கு.

ஆனா அவ்வளவு பெரிய மோகினி உங்களுக்கு தெரியலையா? ...ஓகே ஓகே...சும்மா :-))

kanagu said...

vimarsanam super anna...

kandippa padatha paathuruva maaten... :)

உண்மைத்தமிழன் said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நான்தான் முதல்லயா? நல்லாருக்கு அப்படியே படமும் நல்லாருந்தா சரிதான்.///

இருந்திருந்தா நான் ஏன் இப்படி புலம்பியிருக்கேன் ஸ்டார்ஜன்..?

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நம்பலாமா நம்பப்டாதா. மோகினியை சொன்னேன்.]]]

மிக விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்துக்கலாம்.. பேசாம அடங்கியிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
i`ll next meeting.]]]

அண்ணே.. உங்களுக்கு என்ன கைமாறு செய்யறதுன்னே தெரியலையேண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[எறும்பு said...
//கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள்.. கடுமையாக உழைத்திருக்கிறார்கள்//

அவங்க எப்படியோ... நீங்க ரெம்ப கஷ்டபட்டிங்க போல]]]

பின்ன..? இம்புட்டு யோசிச்சு எழுதணும்னா ச்சும்மாவா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...

//ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..//

ச்சே உங்க டேஸ்ட் பயங்கர கேவலமா இருக்கே...]]]

என்ன கேவலம்..? மேக்கப்.. டிரெஸ்சென்ஸ்.. முகத்துல தெரியற களை. நடிப்பு.. எல்லாம் ஜோதிகிட்ட அம்சந்தான்..!

[[[ஒரு வேலை உங்களுக்கும் ஜோதிலட்சுமிக்கும் ஒரே வயசுன்னு நீங்க சொல்றிங்க போல.....]]]

அடப்பாவி மவனே..! நேர்ல சிக்குனன்னு வைச்சுக்க..!

[[[நல்ல அலசல் தல.... அதெப்படி நாம ரெண்டு பேரு மட்டும் இந்த மாதிரி மொக்கை படம் பார்த்துட்டு விமர்சனம் வேற எழுதுறோம்??]]]

வேலைவெட்டி இல்லாதவங்க நாம ரெண்டு பேர் மட்டும்தான்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

thank y o u]]]

எதுக்கு காப்பாத்தினதுக்கா..?

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
அப்பவே நினைச்சேன்!]]]

ஓவர் பில்டப்புல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...

//நமீதாவின் பிரம்மாண்டம் இன்னும் எத்தனை ...//

இந்த ஏரியாவுக்கு வர்றதுக்குள்ள மொதல்லயே இத எழுதவேண்டியதுதான?
ஆனாலும், எதிர்பார்த்த விசயங்கள் இங்கு இல்லை.]]]

தம்பீ..

இந்தப் படத்துக்கு இவ்ளோ போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கக்குட்டி said...
தகவலுக்கு நன்றி, பதிவு நல்லா இருக்கு. ஆனா அவ்வளவு பெரிய மோகினி உங்களுக்கு தெரியலையா? ஓகே ஓகே...சும்மா :-))]]]

தெரியலையே..! எனக்குக் கிட்டப் பார்வைல கோளாறுன்னு நினைக்கிறேன் சிங்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
vimarsanam super anna... kandippa padatha paathuruva maaten... :)]]]

குட்பாய்..!

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா..

340 பேர் பார்த்தும் ஒருத்தருக்குக் கூடவா ஓட்டுப் போடணும்னு தோணலை..?

என்ன உலகமடா இது..?

ஷாகுல் said...

நீங்க என்ன சொன்னாலும் நான் பார்க்கத்தான் செய்வேன்.

கவலை படாதிங்க ஓட்டு போட்டாச்சி அன்னே

ஸ்ரீராம். said...

தொவச்சிக் காயப் போடறதுங்கறது இதானா?

உண்மைத்தமிழன் said...

[[[ஷாகுல் said...
நீங்க என்ன சொன்னாலும் நான் பார்க்கத்தான் செய்வேன்.]]]

அப்புறம் உங்க தலையெழுத்து..!!!

[[[கவலைபடாதிங்க ஓட்டு போட்டாச்சி அன்னே]]]

நன்றி ஷாகுல்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
தொவச்சிக் காயப் போடறதுங்கறது இதானா?]]]

ஹி.. ஹி.. ஹி.. இது கம்மி..

எனதருமை தங்கத் தலைவி நமீதாவுக்காக காரத்தைக் கொஞ்சம் குறைச்சிருக்கேனாக்கும்..!

அது சரி(18185106603874041862) said...

//
ம்ஹும்.. நேற்றைய தினம் காலண்டரில்கூட எனது ராசிக்கு முன்னேற்றம் என்றுதான் போட்டிருந்தார்கள். அதை நம்பி போய்த் தொலைந்துவிட்டேன். இந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
//

டெய்லி எதுனா மொக்கைப் படத்துக்கு போயிட்டு பொலம்புறதே உங்களுக்கு வேலையா போச்சி...உங்களுக்கு புத்தி புகட்டவே முருகன் ஓவர்டைம் அடிக்கணும் போலருக்கே...:))))

அது சரி(18185106603874041862) said...

//
ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..
//

இதைத் தான் வயசுக் கோளாறுன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க...நீங்க யூத் தான்...ஆனா ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பதாம் வருஷ யூத்னு நினைக்கிறேன்....:0)))

அது சரி(18185106603874041862) said...

அந்த தமிழ் மணம் வோட்டு பட்டனை கொஞ்சம் மேல வைகக் கூடாது....வோட்டுப் போட்றதுக்கு பத்து கிலோ மீட்டர் போக வேண்டியதாருக்கே....

krish said...

பெண்கள் விரும்பி பார்த்த படம் ஒரிஜினல் ஜெகன்மோகினி. முரளிக்ரிஷ்ணா தியேட்டர் stopக்கு ஜெகன்மோகினி stopன்னு பேர் அப்போது. 75000 ரூபாய்க்கு டப்பிங் படம் வாங்கி 750000 விற்றார் வினியோகஸ்தர். படம் எடுக்கும் போதே எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போ வருவான் வடிவேலன் எடுத்தால் ஒடுமா?

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...

//ம்ஹும்.. நேற்றைய தினம் காலண்டரில்கூட எனது ராசிக்கு முன்னேற்றம் என்றுதான் போட்டிருந்தார்கள். அதை நம்பி போய்த் தொலைந்துவிட்டேன். இந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.//

டெய்லி எதுனா மொக்கைப் படத்துக்கு போயிட்டு பொலம்புறதே உங்களுக்கு வேலையா போச்சி. உங்களுக்கு புத்தி புகட்டவே முருகன் ஓவர்டைம் அடிக்கணும் போலருக்கே...:))))]]]

அது சரி தம்பீ...

முருகன்கிட்ட என்னைப் போட்டுக் கொடுக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு..!

சரி.. சரி.. பொழைச்சுப் போங்க.. நல்லாயிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...

//ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..//

இதைத்தான் வயசுக் கோளாறுன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. நீங்க யூத்தான். ஆனா ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பதாம் வருஷ யூத்னு நினைக்கிறேன்:)))]]]

அப்படீங்கிற..! படத்தைப் போய் பாரு கண்ணு.. அப்பால வந்து பேசு..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...
அந்த தமிழ்மணம் வோட்டு பட்டனை கொஞ்சம் மேல வைகக் கூடாது. வோட்டுப் போட்றதுக்கு பத்து கிலோ மீட்டர் போக வேண்டியதாருக்கே....]]]

பின்னூட்டத்தையெல்லாம் படிச்சிட்டு சட்டுன்னு ஓட்டுப் போடணும்னு சொல்லித்தான் அதுக்குக் கீழ வைச்சிருக்கேன்.. இது தப்பா..?

உண்மைத்தமிழன் said...

[[[krish said...

பெண்கள் விரும்பி பார்த்த படம் ஒரிஜினல் ஜெகன்மோகினி. முரளிக்ரிஷ்ணா தியேட்டர் stopக்கு ஜெகன்மோகினி stopன்னு பேர் அப்போது. 75000 ரூபாய்க்கு டப்பிங் படம் வாங்கி 750000 விற்றார் வினியோகஸ்தர். படம் எடுக்கும்போதே எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போ வருவான் வடிவேலன் எடுத்தால் ஒடுமா?]]]

உண்மைதான் கிரீஷ்..

ஒரிஜினல் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்ததற்கான காரணம் ஜெயமாலினி அல்ல..

நகைச்சுவைக் காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும்தான்..

இங்கே அது குப்பையாகி இருக்கிறது..!

ராஜ நடராஜன் said...

//பின்னூட்டத்தையெல்லாம் படிச்சிட்டு சட்டுன்னு ஓட்டுப் போடணும்னு சொல்லித்தான் அதுக்குக் கீழ வைச்சிருக்கேன்.. இது தப்பா..?//

அது சரி சொன்ன பத்து மைல் போக வேண்டியிருக்குதே பொலம்பலை நைசா வுட்டுட்டீங்களே:)

ராஜ நடராஜன் said...

//ஒரிஜினல் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்ததற்கான காரணம் ஜெயமாலினி அல்ல..

நகைச்சுவைக் காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும்தான்..//

நகைச்சுவை சிரிப்பர்களுக்கு,மாயாஜாலம் குழந்தைகளுக்கு,ஜெயமாலினி உங்க மாதிரி யூத்களுக்குன்னு விட்டலாச்சார்யா கன்னித்தீவு மன ரசிகர்களின் மனதை படம் பிடித்தது.

ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் மாதிரி ஆளுகளுக்கான தொழில் நுட்ப வசதிகள் கிடைச்சிருந்தா விட்டலாச்சார்யா இன்னும் பல தொழில் ரகசியங்களை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்திருந்திருப்பார்.

மச்சான்ஸ் நமிதாவின் சேவை இன்னும் தமிழ்நாட்டுக்கு தேவை.சென்ற வாரம் மானாட மயிலாட பார்க்கும் போதே நீங்கள் குறிப்பிடும் கவலைக் கோடுகள் தெரிகிறது.

ராஜ நடராஜன் said...

ஓட்டுப் பெட்டி எங்கய்யா வெச்சிருக்கிருக்கிறீங்க:)

ராஜ நடராஜன் said...

இடுகைதான் அவ்ளோ நேரம் எடுக்குதுன்னா பின்னூட்டமும் அதே!அதே:)

நாமக்கல் சிபி said...

//அலைக்கள்ளனுக்கே போலிகளாம்.//

அங்கயுமா? எ.கொ.ச.இ?

நாமக்கல் சிபி said...

//ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..
//

பின்னே உம்ம வயசுக்கு நமீதாவா பிடிக்கும்?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//பின்னூட்டத்தையெல்லாம் படிச்சிட்டு சட்டுன்னு ஓட்டுப் போடணும்னு சொல்லித்தான் அதுக்குக் கீழ வைச்சிருக்கேன்.. இது தப்பா..?//

அது சரி சொன்ன பத்து மைல் போக வேண்டியிருக்குதே பொலம்பலை நைசா வுட்டுட்டீங்களே:)]]]

அதுக்கென்ன செய்யறது..? உங்களை மாதிரியான அன்பர்கள் அனேகம்பேர் வருகை தரும்போது இடுகை நீளத்தானே செய்யும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//ஒரிஜினல் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்ததற்கான காரணம் ஜெயமாலினி அல்ல..
நகைச்சுவைக் காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும்தான்..//

நகைச்சுவை சிரிப்பர்களுக்கு, மாயாஜாலம் குழந்தைகளுக்கு, ஜெயமாலினி உங்க மாதிரி யூத்களுக்குன்னு விட்டலாச்சார்யா கன்னித்தீவு மன ரசிகர்களின் மனதை படம் பிடித்தது.]]]

ஐயா.. அப்போது இந்தப் படத்தை நான் பார்த்தது எனது அம்மாவோடுதான்.. கூட்டமோ கூட்டம்.. அத்தனையும் பெண்கள், குழந்தைகள் கூட்டம்தான்..!

ஜெயமாலினியின் உடல் கவர்ச்சி அப்போது ஒரு பொருட்டாகவே இல்லை..

[[[ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் மாதிரி ஆளுகளுக்கான தொழில் நுட்ப வசதிகள் கிடைச்சிருந்தா விட்டலாச்சார்யா இன்னும் பல தொழில் ரகசியங்களை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்திருந்திருப்பார்.]]]

நிச்சயம் செய்திருப்பார்..! குறைவான வசதிகளை வைத்தே எந்த அளவுக்கு ஜில்பான்ஸ் காட்டியிருக்கிறார் பாருங்கள்..?

[[[மச்சான்ஸ் நமிதாவின் சேவை இன்னும் தமிழ்நாட்டுக்கு தேவை. சென்ற வாரம் மானாட மயிலாட பார்க்கும் போதே நீங்கள் குறிப்பிடும் கவலைக் கோடுகள் தெரிகிறது.]]]

நீங்க கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது..? அம்மணில்ல கவலைப்படணும்..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
ஓட்டுப் பெட்டி எங்கய்யா வெச்சிருக்கிருக்கிறீங்க:)]]]

வரச் சொல்லும்போது வந்திராதீங்க.. இப்ப எல்லாம் முடிஞ்சு வெத்தலை பாக்குபோடும்போது வந்து பாயாசம் கேட்டு அழுங்க..

அடப் போங்கப்பா.. இனிமே ஓட்டுப் போட்டு என்ன? போடாட்டி என்ன..? தமிழ்மண முகப்புக்கு வராது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
இடுகைதான் அவ்ளோ நேரம் எடுக்குதுன்னா பின்னூட்டமும் அதே!அதே:)]]]

இனிமே பி்ன்னூட்டத்துக்கும் எழுத்து அளவு, வரி அளவு வைச்சிர வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

//அலைக்கள்ளனுக்கே போலிகளாம்.//

அங்கயுமா? எ.கொ.ச.இ?]]]

ஆமா சிபி.. ஒருத்தர் இல்லே.. மூணு பேரு போலிகளா வர்றாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

//ஒரே ஆறுதல் அம்மணியின் ஆத்தாவாக வருகிற ஜோதிலட்சுமி.. பொண்ணைவிட மாமியார் சூப்பரோ சூப்பர்..//

பின்னே உம்ம வயசுக்கு நமீதாவா பிடிக்கும்?]]]

அடப்பாவி.. இதுக்கெதுக்குடா வயசைக் குத்திக் காமிக்கிற..?

அங்க போய் அழகைப் பாருடா ராசா..!

பித்தன் said...

ஆபத்பாந்தவன் ஆனாத ரட்சகன் ஸ்ரீ ஸ்ரீ தமிழானந்தா வாழ்க வாழ்க...

என்னை இந்த கருமத்தில் இருந்து காப்பற்றியதர்க்காக... நமிதா இருந்துச்சேன்னு கொஞ்சம் சபலப் பட்டேன் ஆனால் நீங்கள் இவ்வளோ சொன்ன பிறகு நான் போக என்ன மாக்கானா....

felix said...

Move on guys

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
ஆபத்பாந்தவன் ஆனாத ரட்சகன் ஸ்ரீ ஸ்ரீ தமிழானந்தா வாழ்க வாழ்க...

என்னை இந்த கருமத்தில் இருந்து காப்பற்றியதர்க்காக. நமிதா இருந்துச்சேன்னு கொஞ்சம் சபலப்பட்டேன் ஆனால் நீங்கள் இவ்வளோ சொன்ன பிறகு நான் போக என்ன மாக்கானா....]]]

மருவாதையா அந்த டிக்கெட் காசை செக்கா போட்டு கூரியர்ல அனுப்புங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[rarepersonality said...
Move on guys]]]

What..???

butterfly Surya said...

இப்பதான் தண்டோரா அண்ணன் கிட்ட நாளைக்கு படம் பார்க்கலாமான்னு கேட்டுட்டு வரேன்..

பகீர்... வுடு ஜீட்...

நண்பரே.. நீங்க நல்லாயிருக்கணும்...

Jackiesekar said...

இந்த படத்தை பார்த்துட்டு பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி...

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

இப்பதான் தண்டோரா அண்ணன்கிட்ட நாளைக்கு படம் பார்க்கலாமான்னு கேட்டுட்டு வரேன்..

பகீர்... வுடு ஜீட்...

நண்பரே.. நீங்க நல்லாயிருக்கணும்...]]]

இப்படியே வாய்ல சொல்லிட்டுப் போனா எப்படி?

நேரா வர்றேன்.. ட்ரீட் தரணும்.. சொல்லிப்புட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[jackiesekar said...
இந்த படத்தை பார்த்துட்டு பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி...]]]

ஹி.. ஹி.. ஹி..

ஜாக்கி.. படம் பார்த்ததே கொழுப்பு.. இதுல பதிவு வேறய்யான்னு மறைமுகமா திட்டுற..?!!!

abeer ahmed said...

See who owns pharmamedics.com or any other website:
http://whois.domaintasks.com/pharmamedics.com

abeer ahmed said...

See who owns bahauni-edu.com or any other website.