டிவி சேனல்களுக்கு ஆப்பு..! - சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடா உத்தரவு..!!!

07-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்படி எங்களது பெயரை 'அந்த' லிஸ்ட்டில் சொல்லலாம் என்று நடிகைகள் பலரும் கொதித்துப் போய் புவனேஸ்வரியை கரித்துக் கொண்டிருக்க.. திரையுலகம் இதன் பிரச்சினையால் தகதகவென புகைந்தபடியேதான் உள்ளது.

இதற்கிடையில் வேறொரு பொருமல் வேறொரு இடத்தில் அமுங்கிக் கிடக்கிறது. பொருமிக் கொண்டிருப்பது சில தனியார் தொலைக்காட்சிகள்தான்.

தமிழ்நாட்டில் பெரிய கையாக இருக்கும் சன், கலைஞர், ஜெயா, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற சேனல்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் முன்னணியில் உள்ள இரண்டு சேனல்கள் கண்ணும், கருத்துமாக இறங்கியிருப்பதாக மற்ற சேனல்கள் வட்டாரத்தில் கோபத்துடன் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை மேற்கோள்காட்டித்தான் பல சேனல்காரர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள்.

"ஒவ்வொரு டிவி சேனலும் ஆண்டுக்கு நேரடி தமிழ்ப் படங்களில் 10 முதல் 15 படங்களாவது வாங்க வேண்டும். அப்படி வாங்காத சேனல்களுக்கு வரும் பொங்கல் முதல் எந்தவித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை"

- இது அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று.


இப்போதே சன் தரப்பிற்கும், கலைஞர் தரப்பிற்கும் இடையில் படங்களை வாங்குவதில் போட்டோபோட்டி. இவர்கள் போட்டியிடுவது முதல் தரமான திரைப்படங்களைத்தான்.. பெரிய பேனர்கள், பெரிய நடிகர்கள் என்ற தரத்துடன் கூடிய திரைப்படங்களை இந்த சேனல்கள் இரண்டுமே வாங்கிவிடுகின்றன.

இதற்கு அடுத்த நிலையில், ஏதாவது ஒரு பிரிவில் முன்னணி வகிக்கும் நடிக, நடிகையரை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஜெயாவும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும் வாங்கி வருகின்றன.

ஒரு வருடத்திற்கு 85 திரைப்படங்கள் வெளியானால் அதில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களே ஹிட்டாகின்றன. அவற்றை சன்னும், கலைஞரும் சுருட்டிக் கொள்கின்றன. மிச்சம் இருப்பவற்றில் 8 அல்லது 9 ஆகியவை விளம்பர நிறுவனங்களிடம் பெயர் சொல்லவாவது உதவும் என்பதால் அவற்றை ஜெயாவும், ஜீ தமிழும் வாங்கிக் கொள்கின்றன.

மிச்சமிருக்கும் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களில், அனைத்தையுமே பெரிய சேனல்கள் வாங்குவதில்லை. காரணம், தங்களது சேனலில் வெளியிடவும் ஒரு குறிப்பிட்டத் தகுதி வேண்டும் என்று அவைகள் நினைப்பதுதான்.

உதாரணத்திற்கு சன் தொலைக்காட்சி 'நாடோடிகள்' திரைப்படத்தை ஒளிபரப்பும்போது, கலைஞர் தொலைக்காட்சி 'சிவகிரி' திரைப்படத்தை திரையிட்டால் சேனல் என்னவாகும்..? இது போன்ற போட்டா போட்டியை மனதில் கொண்டு அவைகள் வியாபாரம் செய்ய முடிந்தவைகளை மட்டுமே அள்ளிக் கொண்டு போகின்றன.

வியாபாரத்தை அள்ள முடியாத சில நோஞ்சான் படங்கள் ஒரு லட்சம், 2 லட்சம் என்றுகூட விற்க முடியாத சூழலில் மாட்டிக் கொள்கின்றன. இவர்கள்தான் சிறு தயாரிப்பாளர்கள். ஒரு பெரிய நோட்டில் படம் எடுத்தவர்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்களது எண்ணிக்கைதான் அதிகம். பெரிய அளவுக்கு காசை இறக்குபவர்கள், படத்தின் டிவி ரைட்ஸிலும் காசை அள்ளிக் கொள்ள.. தங்களது படத்தினை 1 லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர்.இவர்களது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சில சேனல்கள், அடிமாட்டு விலைக்கு சில திரைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போது சப்தமில்லாமல் வெளியிட்டுக் கொள்கின்றன. இப்படிகூட விற்க முடியாத திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள்தான் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு தயாரிப்பாளர் சங்கம் தங்களது உறுப்பினர்களின் விற்க முடியாத திரைப்படங்களை பெரிய சேனல்களிடம் சொல்லி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கருவாடுக்கு இருக்கும் மவுசு, எருமை சாணத்துக்கு கிடையாதே.. அவைகள் எங்களுக்கு வேண்டாம் என்று பெரிய சேனல்கள் சொல்லிவிட்டதால் வேறு சிறிய சேனல்களுக்கு தங்களது திரைப்படங்களைத் தர வேண்டிய கட்டாயம் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு..

சிறிய சேனல்களான ராஜ், வசந்த், மெகா, விண், இமயம் ஆகிய சேனல்கள் 'ஒரு முறை மட்டுமே படத்தைத் திரையிட்டுக் கொள்கிறோம்' என்று ஒரு வர்த்தக உடன்பாட்டை செய்து அதற்கு வெறும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பிப் போயிருக்கும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்பொருட்டுதான் இந்த புதிய விதிமுறையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னாலும் பெரிய இரண்டு சேனல்களின் மறைமுக ஆதரவும் இத்திட்டத்திற்கு உண்டு என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரம்.

சிறிய சேனல் ஒன்று, குறைந்தபட்சம் 10 திரைப்படங்களையாவது வாங்கியே ஆக வேண்டுமெனில் ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாயையாவது இதற்குச் செலவழித்தாக வேண்டும்.

'விண் டிவி'யில் இப்போது விளம்பரக் கட்டணம் 100 ரூபாய்க்கெல்லாம் கிடைக்கிறது.. 'வசந்த் டிவி'யில் 1000 ரூபாய், 'மெகா டிவி'யில் 500 ரூபாய், 'ராஜ் டிவி'யில் 300 ரூபாய் என்று எதை எடுத்தாலும் நூறு ரூபாய் கணக்கில் விளம்பரங்கள் வாங்கப்படுகின்றன. இவர்களும் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை போட்டு புரட்ட வேண்டுமெனில் சத்தியமாக முடியாது.

ஏனெனில் புதிய திரைப்படமாகவே இருந்தாலும் இவர்களுக்கு வருகின்ற விளம்பரம் என்னவோ கத்திரிக்காய் வியாபாரம் மாதிரிதான்.. வாராவாரம் இப்படி நஷ்டக்கணக்கில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது இந்த சேனல்களால் முடிகிற காரியமா என்பது தெரியவில்லை.

இப்போதே 'விண் டிவி'யும், 'தமிழன் டிவி'யும், தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் மிகுந்த சுணக்கம் காட்டுகின்றன. தயாரிப்பாளர்கூட பார்த்திராத திரைப்படங்களைக்கூட வாங்கி ஓட்டி வருகின்றன. ஆனால் சினிமா கிளிப்பிங்ஸ்குகளை மட்டுமே நாள் முழுக்க திருப்பித் திருப்பிக் காட்டி வருகின்றன.

மக்கள் டிவியில் தமிழ்த் திரைப்படங்கள் அறவே கிடையாது. அவர்கள் ரஷ்ய திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு கூடவே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் அவற்றில் இல்லை என்பதால் அவர்கள் லிஸ்ட்டிலேயே இல்லை.

இதில் 'விஜய் டிவி', சுப்பிரமணியசுவாமி மாதிரி.. நடுவாந்திர நிலைமை. தன்னிடமிருக்கும் திரைப்படங்களையே திருப்பித் திருப்பிப் போட்டு மக்களை இம்சித்து வருகிறது. 'கோழி கூவுது' திரைப்படம் இதுவரையில் 100 முறையாவது இந்த டிவியிலேயே ஒளிபரப்பாகியிருக்கும். விஜய் டிவி புதிய திரைப்படங்களை வாங்குவதற்கு விருப்பமில்லாமல் 'ஒன் டைம் டெலிகாஸ்ட்' என்கிற ரீதியில்தான் திரைப்படங்களை வாங்குவதற்கு முன் வருகிறது. ஸோ இதற்கும் ஆப்புதான்..

இப்போதைக்கு பெரிய சேனல்களுக்கும் விளம்பரக் கட்டணங்கள் குறைந்து கொண்டேதான் போகின்றன என்கிறார்கள். பல்வேறு சேனல்கள் வந்துவிட்டதால் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வராமல் போகின்றன என்கிறார்கள்.

இந்த நிலைமையில், இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஒத்து வராத சேனல்களுக்கு சினிமா டிரெய்லர்கள், கிளிப்பிங்ஸ், பாடல் காட்சிகள் வழங்கப்படுவது, பட பூஜை மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அனுமதி ரத்து என்று 'தடா', 'பொடா' சட்டப் பிரிவுகளையெல்லாம் மிஞ்சி போடப்பட்டிருக்கும் இந்தத் தடை உத்தரவால் பணத்தை இறக்க வேண்டிய நிலைமைக்கு சேனல்களைத் தள்ளியிருக்கிறது தயாரிப்பாளர்கள் கவுன்சில்.

இந்த சேனல்கள் அனைத்துமே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்தத்தான் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. புதிய பாடல்களும், கிளிப்பிங்ஸ்களும் கிடைக்கவில்லையெனில் ஊத்தி மூட வேண்டியதுதான்.. இதைத்தான் பெரிய சேனல்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள்.

இதில் இவர்கள் தேறுவார்களா இல்லையென்றால் மூடுவிழா நடத்துவார்களா என்பது தயாரிப்பாளர்கள் கவுன்சில் பொங்கலுக்குப் பின்பு நடந்து கொள்ளப்போகும் விதத்தை பொறுத்ததுதான் அமையும்..

இப்படியொரு நிலைமை வந்தால் பல நடுவாந்திர திரைப்படங்களுக்கான விளம்பரங்கள் தம்மிடம்தான் வரும். அப்போது அவற்றை வளைத்துப் பிடிப்பது சுலபம் என்று பெரிய சேனல்களின் எண்ணம். இந்த எண்ணத்திற்கு உரம் போட்டு, பயிர் வளர்த்தவர்கள் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள்.


இவர்களுக்கு ஒரு எண்ணம்.. அடுத்தத் தேர்தலிலும் தாங்கள் சுலபமாக ஜெயித்துவிட வேண்டும் என்று. அதற்காக சங்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் சாதாரண சிறிய தயாரிப்பாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லி இப்படியொரு இக்கட்டை உருவாக்கியிருப்பதாக பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.

அதோடு கூடவே "100 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கான சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 100வது நாளிலும், 100 தியேட்டர்களுக்குக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 50-வது நாளிலும் விற்கலாமா?" என்பது குறித்தும் தயாரிப்பாளர் கவுன்சில் யோசித்து வருகிறதாம்.

இது பற்றி வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படியொன்றை கொண்டு வந்தால் வசூல் சுத்தமாக குறையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஒரு மூணு மாசம் பொறுத்துக்க.. மெதுவாக பார்த்துக்கலாம் என்று பலரும் தியேட்டர்களை புறக்கணிக்கப் போவது நிச்சயம்.

இதேபோல் ஒரு மூணு மாசம் பொறுத்துக்குங்க.. எத்தனை சேனல்கள் தமிழ்நாட்டுல நிரந்தரமாக இருக்கும்ன்றதை சொல்லிரலாம்..!

65 comments:

gulf-tamilan said...

ம் !!!

கல்வெட்டு said...

சினிமாவை மட்டுமே நம்பி அல்லது சினிமா சம்பந்தமான ஆயிரெத்தெட்டு நிகழ்ச்சிகளை மட்டும் நம்பி எந்தவித சுய அடையாள‌மும் உழைப்பும் நோக்கமும் இல்லாமல் இருக்கும் எல்லாச் சேனல்களும் நாசமாய்ப்போவதால் நல்லதே.

சினிமாவை நம்பாமல் (ஒரு உதாரணம்:நேசனல் ஜியாகிராபி) புதிய விசயங்களை கொண்டுவந்தால் நல்லது.

புரவலர்களின் உதவியைக்கொண்டும் மக்களின் நன்கொடையாலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை கண்ணு கருத்துமாய் தரும் பிபிஎஸ் போல இந்தியாவில் ஏதும் வரவே வராது.
http://www.pbs.org/aboutpbs/pbsfoundation/index.html

பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.

ILA (a) இளா said...

//ணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.//

Repeatuuuuuuuuuuuu

பீர் | Peer said...

வருடத்திற்கு 10-15 தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்களா?


கல்வெட்டின் வரிகள் 'கல்வெட்டு'.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹைய்யா

kanagu said...

ella edathulayume panam indha aatam poduthe...


indha sun tv, kalaignar tv sendhu podura aatatha thaanga mudiyala...

urupadinu solra maari oru vishayam podalanaalum... indha mathiri adutha channel ah kavukaruthula avangala minja aal illa... :((

Anonymous said...

good good good

ஸ்ரீராம். said...

பேக்கேஜ் என்ற பெயரில் நாம் கேபிள் டிவிக்கு தண்டம் அழ வைக்கிறார்களே...அந்த திட்டத்தில் கொடுத்த காசுக்கு நாம் பார்க்கவே பார்க்காத சில சேனல்களும் இருக்கும். அது போல சில பெரிய படங்களை வாங்கினால் இந்த ரெண்டு ஊர் பேர் தெரியாத படம் இலவசம்னு குடுத்துட வேண்டியதுதான்...அந்தத் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் பெரிய தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தந்து விட வேண்டியதுதான்...

இது ஒருபுறமிருக்க இவ்வளவு சேனல்கள் இங்கு தேவைதானா? சினிமாவை நம்பியே இருக்கும் இந்த மாதிரி சேனல்கள் போவது நல்லதே..டிஸ்கவரி போலவோ நேஷனல் ஜ்யோகிராபிக் போலவோ தமிழில் இல்லாதது துரத்ரிஷ்டம்.

பிரபாகர் said...

ம.... அண்ணே எத்தனை நாளைக்கு இந்த தீர்மானம்னு பாப்போம். புவனேஸ்வரியா ரிலீஸ் பண்ணனும்னுதான் சினிமாக்காரங்க தீர்மானம் போட்டிருக்காங்க..

ஓட்டுக்கள போட்டாச்சுன்னே..

பிரபாகர்.

எம்.எம்.அப்துல்லா said...

//வருடத்திற்கு 10-15 தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்களா

//

LOL :)))

நாமக்கல் சிபி said...

//பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்
//

ட்ரிப்பிள் ரிப்பீட்டேய்!

நாமக்கல் சிபி said...

சினிமாவையே திருப்பி திருப்பி போட்டுக் காட்ட எதுக்கு அவ்வளவு சேனல்?

சினிமா இல்லாட்டு விளங்காத சீரியல்! இதையெல்லாம் விட்டா வேற விஷயமே இல்லையா>?

நாமக்கல் சிபி said...

என்னதான் இருந்தாலும் இதை நீங்க சொல்லிருக்கீங்க என்ற ஒரே காரணத்தால் மட்டும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்!

(பழமை பேசி ஓக்கேவா?)

நாமக்கல் சிபி said...

மேலுக்கு ஏதும் சொகமில்லையா?

நாலே ஸ்க்ரோலிங்க்ல பதிவு முடிஞ்சிருச்சு!

உண்மைத்தமிழன் said...

[[[gulf-tamilan said...
ம் !!!]]]

அப்படீன்னா..? அப்புறம் என்னங்குறீங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[கல்வெட்டு said...

சினிமாவை மட்டுமே நம்பி அல்லது சினிமா சம்பந்தமான ஆயிரெத்தெட்டு நிகழ்ச்சிகளை மட்டும் நம்பி எந்தவித சுய அடையாள‌மும் உழைப்பும் நோக்கமும் இல்லாமல் இருக்கும் எல்லாச் சேனல்களும் நாசமாய்ப் போவதால் நல்லதே.

சினிமாவை நம்பாமல் (ஒரு உதாரணம்:நேசனல் ஜியாகிராபி) புதிய விசயங்களை கொண்டுவந்தால் நல்லது.

புரவலர்களின் உதவியைக் கொண்டும் மக்களின் நன்கொடையாலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை கண்ணு கருத்துமாய் தரும் பிபிஎஸ் போல இந்தியாவில் ஏதும் வரவே வராது. http://www.pbs.org/aboutpbs/pbsfoundation/index.html

பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள் படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.]]]

கல்வெட்டு அண்ணே..

கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்..!

இந்த சேனல்கள் விடியற்காலையில் ஆரம்பித்து இரவுவரையிலும் சினிமாவைக் காட்டியே திகட்ட வைத்துவிட்டன..

இதனால்தான் அவர்களது சேனல்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் வரவில்லை என்பதைக்கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை.

ஹிந்தி, ஆங்கிலத்தில் இருக்கின்ற செய்தி சேனல்களை பாருங்கள். அந்த எண்ணிக்கைகூட தமிழில் கிடையாது.

தமிழில் இப்போதைக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கக்கூடிய செய்தி சேனல்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

தயாரிப்பாளர்களின் இந்தத் திட்டம் வெற்றியடைய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
.]]]

அடப்பாவிகளா..

என்னோட இந்த மூணு வருஷ பிளாக் சர்வீஸ்ல இப்படியொரு பின்னூட்டத்தை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை..!

ஹாலிவுட் பாலா ஸார்.. உங்க நல்ல மனசுக்கு எனது நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...

//ணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.//

Repeatuuuuuuuuuuuu]]]

மெகா ரிப்பீட்டு இளா..!

உண்மைத்தமிழன் said...

[[[பீர் | Peer said...
வருடத்திற்கு 10-15 தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்களா?

கல்வெட்டின் வரிகள் 'கல்வெட்டு'.]]]

தரமானத் திரைப்படம் எது என்பதில் அவர்களுக்குள்ளேயே குழப்பம் இருக்கு பீர் ஸார்..!

அந்தக் குழப்பத்தை முதலில் தெளியவைத்துவிட்டுத்தான் பின்பு இந்தக் கேள்வியை கேட்க முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...
ஹைய்யா]]]

டிவி சேனல்களை இழுத்து மூடினால் சந்தோஷமா..?

ம்..

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

ella edathulayume panam indha aatam poduthe...

indha sun tv, kalaignar tv sendhu podura aatatha thaanga mudiyala...

urupadinu solra maari oru vishayam podalanaalum... indha mathiri adutha channel ah kavukaruthula avangala minja aal illa... :((]]]

அடிப்படையில அவங்க அரசியல்வியாதிங்க இல்லையா..? அதுதான் எல்லாத்துலேயும் அரசியல் நடத்துறாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[shirdi.saidasan@gmail.com said...
good good good]]]]

நன்றி..

எல்லாரும் பெயரைத்தான் முகவரியாக வைப்பார்கள். நீங்கள் வித்தியாசமாக மெயில் முகவரியை வைத்திருக்கிறீர்கள்.

என்ன காரணம்..?

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

பேக்கேஜ் என்ற பெயரில் நாம் கேபிள் டிவிக்கு தண்டம் அழ வைக்கிறார்களே. அந்த திட்டத்தில் கொடுத்த காசுக்கு நாம் பார்க்கவே பார்க்காத சில சேனல்களும் இருக்கும். அது போல சில பெரிய படங்களை வாங்கினால் இந்த ரெண்டு ஊர் பேர் தெரியாத படம் இலவசம்னு குடுத்துட வேண்டியதுதான். அந்தத் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் பெரிய தயாரிப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தந்து விட வேண்டியதுதான்...]]]

இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே..!

[[[இது ஒருபுறமிருக்க இவ்வளவு சேனல்கள் இங்கு தேவைதானா? சினிமாவை நம்பியே இருக்கும் இந்த மாதிரி சேனல்கள் போவது நல்லதே. டிஸ்கவரி போலவோ நேஷனல் ஜ்யோகிராபிக் போலவோ தமிழில் இல்லாதது துரத்ரிஷ்டம்.]]]

டிஸ்கவரி மாதிரி நம்மூர்ல வைக்கணும்னா அதுக்கு மொதல்ல டேலண்ட் உள்ள ஆட்கள் வேணும்..

இங்க பணம் பண்றதுக்குத்தான் டேலண்ட் இருக்கே தவிர.. அறிவை வளர்க்குற டேலண்ட் யாருக்கும் இல்லே..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

ம.... அண்ணே எத்தனை நாளைக்கு இந்த தீர்மானம்னு பாப்போம். புவனேஸ்வரியா ரிலீஸ் பண்ணனும்னுதான் சினிமாக்காரங்க தீர்மானம் போட்டிருக்காங்க..

ஓட்டுக்கள போட்டாச்சுன்னே..

பிரபாகர்.]]]

புவனேஸ்வரி வெளில வந்து வாயைத் தொறப்பாங்கன்னு நினைக்குறீங்க..?

ம்ஹும்.. நோ சான்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...

//வருடத்திற்கு 10-15 தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்களா//

LOL :)))]]]

ரொம்ப ஆசைப்படுறாரு அப்துல்லாஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

//பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்//

ட்ரிப்பிள் ரிப்பீட்டேய்!]]]

இங்க பார்றா.. சமூகப் பொறுப்போட ஒரு பின்னூட்டம் வருது..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

சினிமாவையே திருப்பி திருப்பி போட்டுக் காட்ட எதுக்கு அவ்வளவு சேனல்?

சினிமா இல்லாட்டு விளங்காத சீரியல்! இதையெல்லாம் விட்டா வேற விஷயமே இல்லையா?]]]

இருக்கு.. ஆனா அதை யோசிக்கிறதுக்கு எங்க ஆளுங்களுக்கு கொஞ்சூண்டு அறிவு வேணும்.. அதுதான் இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

என்னதான் இருந்தாலும் இதை நீங்க சொல்லிருக்கீங்க என்ற ஒரே காரணத்தால் மட்டும் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்!
(பழமை பேசி ஓக்கேவா?)]]]

ஓ.. உள்குத்தா..? உருப்பட மாட்ட..! உருப்படவே மாட்ட..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...
மேலுக்கு ஏதும் சொகமில்லையா? நாலே ஸ்க்ரோலிங்க்ல பதிவு முடிஞ்சிருச்சு!]]]

ஆமாம்.. தூக்கம் கண்ணைச் சொக்கிருச்சு.. அதுனால போதும்னு முடிச்சுட்டேன்..!

சென்ஷி said...

//பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.//

superrrrrrrrrr......

துளசி கோபால் said...

வேலைவெட்டியைப் பார்க்கவிடாம எதுக்கு இத்தனை சேனல்கள்?


முதலில் கட்சிகள் சேனல் ஆரம்பிக்கறதை நிறுத்தணும்? எதையெடுத்தாலும் டிவியில் வந்து அரிதாரம்பூசின முகத்தோடு சொன்னால்தான் மக்களுக்கு ரீச் ஆகுமா?

என்னமோ போங்க. உங்க உள்ளுர் விஷயங்கள் எல்லாம் விவகாரமாவே இருக்கு(-:

ஒன்னும் புரியலை

(இதுக்கும் எதாவது சேனல்லே வந்து பதில் சொல்வாங்களொ என்னவோ)

தீப்பெட்டி said...

இதெல்லாம் நடக்குற கதையில்ல பாஸ்..

இதே மாதிரி 108 தடவை தயாரிப்பாளர் சங்கமும், இயக்குனர் சங்கமும் தீர்மானம் போட்டு இருக்காங்க..

மாஸ் ஹீரோ, இயக்குனர்களை தவிர்த்து மத்தவுங்க எல்லம் சின்ன திரை கிளிப்பிங்ஸ் தர்ற விளம்பரத்த நம்பித்தான் படமே எடுக்குறாங்க..

Unknown said...

டிஸ்கவரிதான் இப்ப தமிழ்ல வருதுங்க. அதானால இனி கவலைப்படாதீங்க.

வால்பையன் said...

அவுங்க ரெண்டு பேர் மட்டும் தான் தமிழகத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கனும்னு நினைக்கிறாங்க போல!

டிஸ்கவரி தமிழில் வருது பாருங்க, அறிவாவது வளரும்!

மங்களூர் சிவா said...

/
கல்வெட்டு said...

சினிமாவை மட்டுமே நம்பி அல்லது சினிமா சம்பந்தமான ஆயிரெத்தெட்டு நிகழ்ச்சிகளை மட்டும் நம்பி எந்தவித சுய அடையாள‌மும் உழைப்பும் நோக்கமும் இல்லாமல் இருக்கும் எல்லாச் சேனல்களும் நாசமாய்ப்போவதால் நல்லதே.
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//வருடத்திற்கு 10-15 தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்களா

//

:))))))))))))

பின்னோக்கி said...

சூப்பர் தகவல்.
discovery, national geo, history, animal planet
மட்டும் ஒளிபரப்புனா போதும்க..தமிழ்நாட்டு மக்களுக்கு மருந்து செலவு கம்மியாகிடும்.

vanathy said...

நல்ல சினிமாவை நானும் வரவேற்பவள்தான்,ரசிப்பவள்தான் .ஆனால் தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளில் சினிமா ,சினிமாவை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளையும் தொடர் நாடகங்களையும் மட்டும் போட்டு தமிழ்மக்களின் ரசனையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடித்துக்கொண்டு வருகிறார்கள் ,இதைத் தொடக்கிவைத்ததே சன் டிவிதான் ,இப்போது மற்றவர்களும் இதைப் பின்பற்றுகிறார்கள்.பொழுது போக்கு நிகழ்ச்சிகள் கூடாது என்று நான் சொல்லவில்லை ஆனால் அதை மட்டும் கொடுக்காமல் கொஞ்சம் அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளையும் கலந்து கொடுப்பது நல்லது
தமிழர்களுக்கு கற்பனைத்திறன் சுயசிந்தனை எல்லாமே வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது.சினிமா என்றால் பழைய வெற்றிப் படங்கள் அல்லது வேற்று மொழிப் படங்களை ரீமேக் பண்ணுகிறார்கள் ,பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகள் எல்லாம் புகழ் பெற்ற சர்வதேச டிவி நிகழ்ச்சிகளின் காப்பிகள்தான்.
London ITV's 'family fortune' programme has become jackpot in jaya tv.
BBC 1's 'strictly come dancing' has become vijay tv's jodhi no.1
ITV's 'X factor' has become supersinger.

where is the innovation and imagination of Tamil people?

TV is supposed to entertain,inform and educate .
In Tamil TV channels there is only entertainment ,no information, no education.

செய்திகள் கூட ஊடக தரம் இல்லாமல்தான் வருகின்றன பக்கத்துநாட்டில் நாலு நாட்களில் இருபதாயிரம் பேர் போரில் இறந்த செய்தியைக் கூட இருட்டிப்பு செய்த பெருமை தமிழ்நாடு டிவி ஊடகங்களுக்கு உண்டு.

--வானதி

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// மக்கள் டிவியில் தமிழ்த் திரைப்படங்கள் அறவே கிடையாது. அவர்கள் ரஷ்ய திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறார்கள். ////

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்ன்னு இருந்தவங்க ;, எங்க டி வி நிகழ்ச்சியில் சினிமாவே வராதுனுங்கவங்களுக்கு ரஷ்யா போன்ற அயல் நாட்டு படம் ஒளிபரப்பலாமா .... தப்பே இல்லை .


எல்லாம் காத்தோடு கலந்தா சரிதான் .....

பித்தன் said...

பாத்து உங்களுக்கு இலவச auto இருக்கு

ஷண்முகப்ரியன் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ஹாலிவுட் பாலா said...
.]]]

அடப்பாவிகளா..

என்னோட இந்த மூணு வருஷ பிளாக் சர்வீஸ்ல இப்படியொரு பின்னூட்டத்தை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை..!

ஹாலிவுட் பாலா ஸார்.. உங்க நல்ல மனசுக்கு எனது நன்றி..!ஹா!ஹா!ஹா!

puduvaisiva said...

தமிழா

வரும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் இரவில் பலான படம் ஒளிபரப்ப சட்டம் வருது, இதலையும் தனியார் தொல்லை காட்சிகள் இடையே போட்டி வருமா??

இரவில் மின்சாரம் தடைஇல்ல கிடைக்க ஆர்காட்டார் உதவுவாரா??

:-)))))))))))

நாமக்கல் சிபி said...

/வரும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் இரவில் பலான படம் ஒளிபரப்ப சட்டம் வருது,/

இலவச கலர் டிவியின் பயனை இனிமேல்தான் முழுமையாக உணரப் போகிறோம்!

அதிக மக்கள் தொகை! அதிக ஓட்டு!

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!

ஷாகுல் said...

/வரும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் இரவில் பலான படம் ஒளிபரப்ப சட்டம் வருது,/

பொதிகை டிவில் என்ன படம் பொடுவாங்க.

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

//பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.//

superrrrrrrrrr......]]]

நன்றி சென்ஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

வேலைவெட்டியைப் பார்க்கவிடாம எதுக்கு இத்தனை சேனல்கள்?
முதலில் கட்சிகள் சேனல் ஆரம்பிக்கறதை நிறுத்தணும்?]]]

டீச்சர்.. பத்திரமா நியூஸிலாந்து திரும்பணுமா? வேண்டாமா..?

[[[எதையெடுத்தாலும் டிவியில் வந்து அரிதாரம் பூசின முகத்தோடு சொன்னால்தான் மக்களுக்கு ரீச் ஆகுமா?]]]

நம்ம மக்களுக்கு அப்பத்தான் அது நடிப்புன்னு தெரியும் டீச்சர். அதுனாலதான்..

[[[என்னமோ போங்க. உங்க உள்ளுர் விஷயங்கள் எல்லாம் விவகாரமாவே இருக்கு(-:]]]

பார்த்தீங்களா..? "உங்க" அப்படீன்னு சொல்லி நம்மளை பிரிச்சுப் பேசுறீங்களே..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

இதெல்லாம் நடக்குற கதையில்ல பாஸ்.. இதே மாதிரி 108 தடவை தயாரிப்பாளர் சங்கமும், இயக்குனர் சங்கமும் தீர்மானம் போட்டு இருக்காங்க..

மாஸ் ஹீரோ, இயக்குனர்களை தவிர்த்து மத்தவுங்க எல்லம் சின்னதிரை கிளிப்பிங்ஸ் தர்ற விளம்பரத்த நம்பித்தான் படமே எடுக்குறாங்க..]]]

இப்ப தூண்டிவிடப்பட்டுள்ளதும் அவர்கள்தான்..!

உங்களை வைத்து அவர்கள் லட்சம், லட்சமாக சம்பாதிக்கிறார்கள். நீங்கள் இப்படி ஓட்டாண்டியா ஆயிட்டீங்களே என்று உசுப்பிவிடப்படுகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வாய்ப்பாடி குமார் said...
டிஸ்கவரிதான் இப்ப தமிழ்ல வருதுங்க. அதானால இனி கவலைப்படாதீங்க.]]]

கவலையே அதுதான்..!

தமிழ்ல பேசி கொல்றாங்க பாருங்க..! கொடுமை..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
அவுங்க ரெண்டு பேர் மட்டும்தான் தமிழகத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கனும்னு நினைக்கிறாங்க போல!]]]

அதுதான் உண்மை..!

[[[டிஸ்கவரி தமிழில் வருது பாருங்க, அறிவாவது வளரும்!]]]

டிஸ்கவரி பார்த்தா அறிவு வளர்றதோட கொஞ்சம் மனசும் சேர்ந்து இரும்பாகுது..!

என்ன செய்யறது வாலு..!

மாயவரத்தான் said...

விஜய் டி.வி.ய விட்டுத் தள்ளுங்க. முனி, 23-ம் புலிகேசி, பேரு மறந்து போன அர்ஜூன் படம் அப்படீன்னு ஒரு பத்து படப் பொட்டிய வாங்கி வெச்சுக்கிட்டு அடிக்கடி ப்லிம் காட்டுறாங்களே பெரிய டி.வி. அதை என்னன்னு சொல்றீங்க?!

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...
/கல்வெட்டு said...
சினிமாவை மட்டுமே நம்பி அல்லது சினிமா சம்பந்தமான ஆயிரெத்தெட்டு நிகழ்ச்சிகளை மட்டும் நம்பி எந்தவித சுய அடையாள‌மும் உழைப்பும் நோக்கமும் இல்லாமல் இருக்கும் எல்லாச் சேனல்களும் நாசமாய்ப் போவதால் நல்லதே./

ரிப்பீட்டு]]]

ம்ஹும்.. கல்வெட்டு அண்ணனுக்கு நிறைய ரிலேஷன்ஸ் இருக்காங்க போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...

//வருடத்திற்கு 10-15 தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற மாட்டார்களா//
:))))))))))))]]]

எடுப்பாங்க.. திறமைக்காரங்க கிடைச்சா..!

உண்மைத்தமிழன் said...

[[[பின்னோக்கி said...
சூப்பர் தகவல். discovery, national geo, history, animal planet
மட்டும் ஒளிபரப்புனா போதும்க தமிழ்நாட்டு மக்களுக்கு மருந்து செலவு கம்மியாகிடும்.]]]

ஐயையோ.. அப்புறம் மக்களுக்கு மிருக உணர்ச்சி அதிகமாயிருமே..

அதுக்கு யார் பொறுப்பாகுறது..?

உண்மைத்தமிழன் said...

[[[vanathy said...
நல்ல சினிமாவை நானும் வரவேற்பவள்தான், ரசிப்பவள்தான். ஆனால் தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளில் சினிமா, சினிமாவை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளையும் தொடர் நாடகங்களையும் மட்டும் போட்டு தமிழ்மக்களின் ரசனையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடித்துக்கொண்டு வருகிறார்கள். இதைத் தொடக்கிவைத்ததே சன் டிவிதான். இப்போது மற்றவர்களும் இதைப் பின்பற்றுகிறார்கள்.பொழுது போக்கு நிகழ்ச்சிகள் கூடாது என்று நான் சொல்லவில்லை ஆனால் அதை மட்டும் கொடுக்காமல் கொஞ்சம் அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளையும் கலந்து கொடுப்பது நல்லது. தமிழர்களுக்கு கற்பனைத் திறன் சுயசிந்தனை எல்லாமே வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. சினிமா என்றால் பழைய வெற்றிப் படங்கள் அல்லது வேற்று மொழிப் படங்களை ரீமேக் பண்ணுகிறார்கள். பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகள் எல்லாம் புகழ் பெற்ற சர்வதேச டிவி நிகழ்ச்சிகளின் காப்பிகள்தான்.
London ITV's 'family fortune' programme has become jackpot in jaya tv.
BBC 1's 'strictly come dancing' has become vijay tv's jodhi no.1
ITV's 'X factor' has become supersinger.
where is the innovation and imagination of Tamil people?

TV is supposed to entertain,inform and educate. In Tamil TV channels there is only entertainment, no information, no education.

செய்திகள்கூட ஊடக தரம் இல்லாமல்தான் வருகின்றன பக்கத்து நாட்டில் நாலு நாட்களில் இருபதாயிரம் பேர் போரில் இறந்த செய்தியைக்கூட இருட்டிப்பு செய்த பெருமை தமிழ்நாடு டிவி ஊடகங்களுக்கு உண்டு.

--வானதி]]]

அப்பாடா.. வானதி அக்காவின் பொறுமல் கொஞ்சம் கோபம் கலந்து இத்தோடு முடிந்ததே..

அக்கா சொல்வது உண்மைதான்.. இங்கே பொழுதுபோக்குக்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது.. எட்டு மணி நேர வேலை என்று தொழிலாளர் சட்டத்தை பொதுமக்கள் மத்தியிலும் செயல்படுத்தி வருகிறார்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுது போகாமல் இருப்பதும் ஒரு காரணம். நமது கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது. சிறுக சிறுகத்தான் மாறும்.

கடைசியாக சொல்லியிருக்கும் அவலத்திற்கு அத்தனை டிவிக்காரர்களும் உடந்தை அல்ல. விதிவிலக்காக சன், கலைஞர் தொலைக்காட்சிகளைத் தவிர மற்றவர்கள் நேர்மையாக செயல்பட்டார்கள் என்பது எனது கருத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
///மக்கள் டிவியில் தமிழ்த் திரைப்படங்கள் அறவே கிடையாது. அவர்கள் ரஷ்ய திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறார்கள்.////

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்ன்னு இருந்தவங்க; எங்க டி வி நிகழ்ச்சியில் சினிமாவே வராதுனுங்கவங்களுக்கு ரஷ்யா போன்ற அயல் நாட்டு படம் ஒளிபரப்பலாமா. தப்பே இல்லை .
எல்லாம் காத்தோடு கலந்தா சரிதான்.]]]

ரஷ்யத் திரைப்படங்களின் கதைகள் அப்படிப்பட்டவை.. அதனால்தான்..!

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு நாள் பாருங்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
பாத்து உங்களுக்கு இலவச auto இருக்கு.]]]

வரட்டும். எதை, எதையோ பார்த்தாச்சு.. இதைப் பார்த்துக்க மாட்டோமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[ஷண்முகப்ரியன் said...

உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
[ஹாலிவுட் பாலா said...
.]

அடப்பாவிகளா.. என்னோட இந்த மூணு வருஷ பிளாக் சர்வீஸ்ல இப்படியொரு பின்னூட்டத்தை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை..!
ஹாலிவுட் பாலா ஸார்.. உங்க நல்ல மனசுக்கு எனது நன்றி..!]

ஹா!ஹா!ஹா!]]]

நல்ல சிரிப்பு வருதுல்ல ஸார்..! சிரிங்க.. சிரிச்சுக்கிட்டே இருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[♠புதுவை சிவா♠ said...

தமிழா, வரும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் இரவில் பலான படம் ஒளிபரப்ப சட்டம் வருது, இதலையும் தனியார் தொல்லை காட்சிகள் இடையே போட்டி வருமா??
இரவில் மின்சாரம் தடை இல்ல கிடைக்க ஆர்காட்டார் உதவுவாரா??

:-)))))))))))]]]

முதல்ல சட்டம் வரட்டும். பின்பு பார்க்கலாம்..!

பி.ஜே.பியும், கம்யூனிஸ்ட்டுகளும் விட மாட்டாங்க போலிருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[நாமக்கல் சிபி said...

/வரும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் இரவில் பலான படம் ஒளிபரப்ப சட்டம் வருது,/

இலவச கலர் டிவியின் பயனை இனிமேல்தான் முழுமையாக உணரப் போகிறோம்!

அதிக மக்கள் தொகை! அதிக ஓட்டு!

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!]]]

எவ்ளோ பெரிய எதிர்காலத் திட்டம் என்பதை யோசித்துப் பார் உடன்பிறப்பே..!

வாழ்க கலைஞர்.. வளர்க தி.மு.க.!

உண்மைத்தமிழன் said...

[[[ஷாகுல் said...

/வரும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் இரவில் பலான படம் ஒளிபரப்ப சட்டம் வருது,/

பொதிகை டிவில் என்ன படம் பொடுவாங்க.]]]

என்ன போட்டாலும் யாரும் பார்க்கப் போறதில்லை.. அப்புறமென்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[மாயவரத்தான்.... said...
விஜய் டி.வி.ய விட்டுத் தள்ளுங்க. முனி, 23-ம் புலிகேசி, பேரு மறந்து போன அர்ஜூன் படம் அப்படீன்னு ஒரு பத்து படப் பொட்டிய வாங்கி வெச்சுக்கிட்டு அடிக்கடி ப்லிம் காட்டுறாங்களே பெரிய டி.வி. அதை என்னன்னு சொல்றீங்க?!]]]

இன்னிக்குக்கூட ஒரு மலையாளப் படத்தை டப்பிங் பண்ணி போட்டாங்க..!

வேற வழியில்லை.. டெய்லி சினிமா ஓட்டணும்னா எப்படி மாயம்ஸ்..?

Unknown said...

என்வழி ஜால்ராவை பார்த்தீர்களா?
அதன் ஆசிரியர் அவருக்கு ஜால்ரா அடிக்கும் கருத்துக்களை மட்டுமே வெளிஇடுவார். அல்லது அவரே பின்னோட்டம் இட்டு கொள்வார்.
இதை பாருங்கள்.
http://www.envazhi.com/?p=12208
http://www.envazhi.com/?p=12388
முதல் நாள் எழுதிய பதிவை அழித்து விட்டார். (அதில் தினமலரை கண்ணா பின்ன வென்று ஆதரித்து எழுதி இருந்தார்).

என்ன ஒரு முரண்பாடு ?
த்தூ....

vanathy said...

உண்மைத்தமிழன் அண்ணா!
என்னை அக்கா ஆக்கிவிட்டீர்களே ,உங்களை விட நான் வயது குறைந்தவள்தான் ,பரவாயில்லை. நான் கொஞ்சம் சீரியஸாக கருத்துகள் சொல்வதால் என்னை ரொம்பவும் சீரியஸாக நினைக்கிறீர்கள் போலும்,!
இனிமேல் நீண்ட பின்னூட்டங்கள் போட்டு உங்களைப் போரடிப்பதை தவிர்க்க முயற்சி செய்கிறேன் ,என்ன செய்வது! சிலவேளைகளில் அநீதியையும் அடக்குமுறையையும் கண்டால் ஏதாவது சொல்லவேண்டும் என்று மனமும் கையும் பரபரக்கிறது
--வானதி .

உண்மைத்தமிழன் said...

[[[Rakesh said...

என்வழி ஜால்ராவை பார்த்தீர்களா?
அதன் ஆசிரியர் அவருக்கு ஜால்ரா அடிக்கும் கருத்துக்களை மட்டுமே வெளிஇடுவார். அல்லது அவரே பின்னோட்டம் இட்டு கொள்வார்.
இதை பாருங்கள்.
http://www.envazhi.com/?p=12208
http://www.envazhi.com/?p=12388
முதல் நாள் எழுதிய பதிவை அழித்து விட்டார். (அதில் தினமலரை கண்ணா பின்ன வென்று ஆதரித்து எழுதி இருந்தார்).

என்ன ஒரு முரண்பாடு ?
த்தூ....]]]

-)))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[vanathy said...

உண்மைத்தமிழன் அண்ணா!
என்னை அக்கா ஆக்கிவிட்டீர்களே உங்களை விட நான் வயது குறைந்தவள்தான், பரவாயில்லை. நான் கொஞ்சம் சீரியஸாக கருத்துகள் சொல்வதால் என்னை ரொம்பவும் சீரியஸாக நினைக்கிறீர்கள் போலும்,!]]]

உண்மை.. உண்மை..

[[[இனிமேல் நீண்ட பின்னூட்டங்கள் போட்டு உங்களைப் போரடிப்பதை தவிர்க்க முயற்சி செய்கிறேன், என்ன செய்வது! சில வேளைகளில் அநீதியையும் அடக்குமுறையையும் கண்டால் ஏதாவது சொல்லவேண்டும் என்று மனமும் கையும் பரபரக்கிறது
--வானதி.]]]

இள வயசும்மா.. அப்படித்தான் இருக்கும். எதையும் நிறுத்திவிடாமல் எழுது.. போகப் போக சரியாகிவிடும்..!