கலைஞரின் சி.பி.ஐ. விசாரணை உத்தரவு-படம் காட்டும் உண்மை

நன்றி : துக்ளக்

25 comments:

துளசி கோபால் said...

:-))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
:-))))))))))))))))))//

ம்.. டீச்சர் மேடம்.. சிரிப்பா..? இருக்கும்ல.. இருக்கும்...

உண்மையைச் சொன்னா எல்லாருக்கும் சிரிப்பாத்தான் இருக்கும்..

ம்.. நாங்க ஒரு முட்டாளுக டீச்சர்.. எத்தனை தடவை அடி வாங்கினாலும் எங்களுக்கு உரைக்காது.. அப்படியே வளர்ந்துட்டோம்..

ஜோ/Joe said...

ஐயா,
உள்ளூர் போலிசை வச்சு விசாரிச்சாலும் குறை சொல்லுவீங்க ..சி.பி.ஐ கிட்ட கொடுத்தாலும் குறை சொல்லுவீங்க ..என்ன தான் சொல்ல வர்றீங்க ? ஐ.நா கவுன்சில விசாரிக்க சொல்லியிருக்கணும்கிறீங்களா?

உண்மைத்தமிழன் said...

//ஜோ / Joe said...
ஐயா,
உள்ளூர் போலிசை வச்சு விசாரிச்சாலும் குறை சொல்லுவீங்க ..சி.பி.ஐ கிட்ட கொடுத்தாலும் குறை சொல்லுவீங்க ..என்ன தான் சொல்ல வர்றீங்க ? ஐ.நா கவுன்சில விசாரிக்க சொல்லியிருக்கணும்கிறீங்களா?//

ஜோ ஸார்.. குற்றம் நிகழ்ந்து 9 நாட்களாகியும் தாக்கப்பட்டவர்கள் பல முறை காட்டுக் கத்தலாக கதறியும் அவர்கள் குற்றம்சாட்டிய மு.க.அழகிரி என்பவரிடம் போலீஸார் ஒரு சம்பிரயாத்துக்குக்கூட விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் முயலவில்லை. மாறாக விமான நிலையத்தின் விஐபி கேட்டில் அவரை வெளியே அழைத்து வந்து போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

மாலையில் பிரதமர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்திற்கு அவரும் வருகிறார். போலீஸ் சல்யூட் மட்டும்தான் அடிக்கவில்லை. மற்றபடி அவரும் மதுரையின் ஜனாதிபதி என்கிற அளவுக்கு மரியாதை தருகிறார்கள். அன்றைக்கே தமிழ்நாட்டின் காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரை அவரதுஇ இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாற்றுகிறார் இந்த தேசத்தலைவர்.. இப்போதும் போலீஸாருக்கு அவர் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களால் குற்றம்சாட்டப்பட்டவர் என்கின்ற அறிவுகூட இல்லாமல் அங்கே சல்யூட் அடித்துத்தான் வரவேற்றார்கள்.

இது எப்படி இருக்கு? இன்னமும் வழக்கு சி.பி.ஐ.யின் கைகளுக்குச் செல்லவில்லை. சி.பி.ஐ. இதை எடுத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அரசின் சார்பாக தலைமைச் செயலாளர் கடிதம் ஒன்றைத்தான் வெளியிட்டுள்ளார். பத்திரிகைகளில் செய்தியையும் வெளியிட்டுள்ளார்கள். அவ்வளவே.. ஆனால் வழக்கு இன்னமும் ஊமச்சிக்குளம் போலீஸ் ஸ்டேஷனின் பைல்களில்தான் தூங்குகிறது.

இன்னமும் சொல்கிறேன்.. மு.க.அழகிரி சொல்லித்தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்க வேண்டும் என்றே நான் நம்புகிறேன். இல்லையெனில் காவல்துறை இந்த அளவுக்கு சாகும்வரை வேடிக்கை பார்த்திருக்காது. தொடர்ந்து, ந்தத் தாக்குதல்களினால் 3 உயிர்கள் பறி போய் இருக்கின்றன. இதற்கும் அழகிரிதான் பொறுப்பேற்க வேண்டும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது இப்படி அப்பாவித்தனமாக இறந்து போயிருந்தால் நாம் ஒரு நிமிடம் யோசிப்போமா இல்லையா? "அந்தப் பாவியை என்ன துன்னாச்சும் கேட்டானுகளா போலீஸ்..?" என்று..

இங்கேயே நிலைமை இப்படியிருக்க சி.பி.ஐ.யின் கைகளுக்கு இந்த வழக்குச் சென்று என்ன ஆகப் போகிறது? முதல் கட்ட விசாரணையிலேயே அவர் மீது கை வைக்காமல் போனதே பிற்பாடு அவர் மீது முதலிலிருந்தே எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகத்தான்.. சட்ட ஆலோசகர்கள் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் சென்று கேட்டுக்கொள்ளுங்கள். இந்த நாடகம் எதற்காக என்று..?

தி.மு.க.வின் ஆதரவு இல்லாமல் அன்னை சோனியா இந்தியாவின் அன்னையாக ஒரு நிமிடம்கூட நீடிக்க முடியாது. பிரதமர் என்று நியமிக்கப்பட்டவர் அடுத்த நொடியே முன்னாள் பிரதமராகிவிடுவார். இவர்களைப் பகைத்துக் கொண்டு வழக்கை மு.க.அழகிரியை சி.பி.ஐ. விசாரித்து இதில் ஈடுபட்ட அனைவரும் தி.மு.க.வைச் சேர்ந்த ரெளடிகள்தான் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வரவா போகிறார்கள்? நீங்கள் இந்தியாவில்தானே இருக்கிறீர்கள். இந்திய அரசியல்வாதிகளின், ஆட்சியாளர்களின், ஜால்ரா போடும் அதிகாரிகளின், வளைந்து கொடுக்கும் சிபிஐயை பார்த்ததே இல்லை.

மூன்று மாதங்களுக்கு முன் குவித்ரோச்சி பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டதை மூடி மறைத்து எட்டு நாட்களுக்குப் பின் வெளியிட்டார்களே.. எந்த சி.பி.ஐ.?

சொந்தக் கட்சிக்கே இது என்றால்.. இப்போதைய அஸ்திவாரத்துக்கே வேட்டு வைக்கும் சக்தியுள்ள கட்சியையா பகைத்துக் கொள்ளப் போகிறார்கள்..?

ஜோ ஸார்.. உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது?

ஜோ/Joe said...

உண்மைத் தமிழன்,
3 பேர் சாவுக்கு காரணமாயிருந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் .அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

முதல் கட்டமாக அந்த தாக்குதலில் நேரடியாக இறங்கியவர்கள் படிப்படியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் .அழகிரி தூண்டிதலின் பேரில் தாக்குதல் நடைபெற்றதாக ஒரு வாதம் .அது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு .அதை கலைஞர் கையில் வைத்திருக்கும் தமிழக காவல் துறை விசாரித்தால் பாரபட்சம் காட்டப்படும் என்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருபதாக கலைஞர் சொல்லியிருக்கிறார் .என்ன நடக்கிறது என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும் .இப்போதே நீங்கள் தீர்ப்பு சொன்னால் என்ன செய்வது.

ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் .தர்மபுரி பஸ் எரிப்பில் ஜெயலலிதா நேரடியாக சம்பந்தப்படவில்லை .ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் தான் அந்த தாக்குதல் நடந்தது என்று ஒரு வாதம் வந்தால் ஜெயலலிதாவை கைது செய்திருப்பார்களா ?

சம்பவம் நடந்த அன்றே சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள் .கலைஞரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் ..ஆகா ..நடவடிக்கை இருக்காது ..சிபிஐ அவர் கைக்குள்ளே என்று சொன்னால் ...என்ன செய்ய வேண்டும் ? அழகிரியை கைது செய்து விசாரித்தால் மட்டும் நீங்கள் விட்டு விடுவீர்களா ? ஏன் இன்றே தண்டனை கொடுக்கவில்லை என்று கேட்டாலும் கேட்பீர்கள் போலிருக்கிறது..

அழகிரி இதை செய்திருந்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் .அதை கலைஞர் தடுத்தால் அதன் பலனை அனுபவிப்பார்.

உண்மைத்தமிழன் said...

அன்பு போலியாரே..

நீங்கள் அனானியாக வந்திருந்தாலோ அல்லது other options-ஐ பயன்படுத்தி ஏதேனும் பெயரில் வந்திருந்தாலோ உங்களுடன் நான் பேசலாம்.

ஆனால் நீங்கள் வந்திருப்பது என்னுடைய பெயரில் போலியான தோற்றத்தில்..

ஆனால் உங்களுடைய நிஜ டிஸ்பிளே நம்பர் 04330845515232444148 என்று என் சோதனையில் காட்டுகிறது.

நேற்றே டோண்டு ஸாரும் இதைச் சுட்டிக் காட்டியிருந்தார். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மறுபடியும், மறுபடியும் என்னுடைய போலி பெயரில் வருவது எந்த விதத்தில் நியாயம்?

அதிலும் நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி மிகவும் அநாகரீகமானது. வேறு ஒருவராக இருந்தால் வேறு மாதிரி பதிலளித்திருப்பார். எனக்கு அப்படிப் பழக்கமில்லை.

தயவு செய்து உங்களுடைய உண்மையான முகத்தைக் காட்டி வாருங்கள்.. பேசுவோம். இத்தோடு என்னைத் தொந்திரவு செய்வதை விட்டுவிடுங்கள்..

Anonymous said...

நன்பர் ஜோவிற்கு இரண்டே இரண்டு கேள்விகள்.

1) தாக்குதல் நடந்த பொழுது 'தேமே' என்று இருந்த போலீஸ் இப்பொழுது 'படிப்படியாக' யார் யாரையோ கைது செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களே... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? கண்முன் நடந்த கலவரத்தையும், பொது / தனியார் சொத்துகளுக்கு ஆன சேதத்தையும் / மூன்று உயிர்கள் பலியான கோரத்தையும் எல்லாவற்றையும் பார்த்து / கேட்டுவிட்டு... இப்படி சொல்கிறீர்களே... உங்கள் கட்சி பாசத்திற்கு அளவேயில்லையா?

2) இவ்வளவு சம்பவங்கள் நடந்திருக்கு, உங்கள் அபிமான கட்சியில் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? கருத்து கணிப்பு நடத்திய பத்திரிகையில் எந்த பொறுப்புமில்லாத, கலவரம் செய்த மேயர் மற்றும் பல உடன்பிறப்புகளை தூண்டி விட்டதாக கூட குற்றம் சொல்லப்படாத ஒரு மத்திய அமைச்சரை ராஜிநாமா செய்யச் சொன்ன செயற்குழு, உதிர்ந்த உயிர்களுக்கு ஏதாவது பதில் சொன்னதா? பிறகு எப்படி ஐயா உங்கள் நடவடிக்கையில் நம்பிக்கை வரும்?

இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் 'நக்கலாக' ஐநா சபை விசாரனை வேண்டுமா என்று கேட்கிறீர்கள். வேண்டாம் ஐயா... வேண்டாம். கட்சி அபிமானத்தையும், மனிதாபிமானத்தையும் போட்டு குழப்பி நீங்களே உங்கள் மனமாச்சரியத்தை வெளியே கொட்டிவிடாதீர்கள்.

இதில் தர்மபுரி வழக்கை பற்றிய reference வேறு. அதுவும் கொலை. இதுவும் கொலை. இங்கு மட்டும் வக்காலத்து வாங்க வரிந்து கட்டிக் கொண்டு... வேதனை! வேறு என்ன சொல்ல...

aathirai said...

குமுதத்தில் ஒரு தமாஷ் வந்திருக்கு. உண்மையிலேயே
கருணாநிதி இப்படி சொன்னாரா அல்லது குமுதம் செய்யும்
திரிப்பா என்று தெரியாது.

தினகரன் ஆபீசில் இறந்தவர்கள் மூச்சு திணறியதால் மட்டுமே
இறந்தனர். அதனால் இது கொலை இல்லையாம்.

இனி மேல் யாராவது யாரையாவது சுட்டால், அவர் புல்லட்
பட்டு இறந்துவிட்டார். இது கொலையல்ல என்று
சொல்லலாம்.

உண்மைத்தமிழன் said...

//aathirai said...
குமுதத்தில் ஒரு தமாஷ் வந்திருக்கு. உண்மையிலேயே
கருணாநிதி இப்படி சொன்னாரா அல்லது குமுதம் செய்யும்
திரிப்பா என்று தெரியாது.

தினகரன் ஆபீசில் இறந்தவர்கள் மூச்சு திணறியதால் மட்டுமே
இறந்தனர். அதனால் இது கொலை இல்லையாம்.

இனி மேல் யாராவது யாரையாவது சுட்டால், அவர் புல்லட்
பட்டு இறந்துவிட்டார். இது கொலையல்ல என்று
சொல்லலாம்.//

நானும் படித்தேன்.

இறந்து போன அப்பாவிகளின் தலையில் இருந்த வெட்டுக் காயத்தை டிவியில் தெளிவாகக் காட்டினார்கள்.

நம் முதல்வருக்கு பஞ்சாயத்து பண்ணவே நேரம் இருந்திருக்காது. இதில் எங்கே டிவி பார்க்க நேரம்?

ஜோ/Joe said...

//உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?//
//உங்கள் கட்சி பாசத்திற்கு அளவேயில்லையா?//
//கட்சி அபிமானத்தையும், மனிதாபிமானத்தையும் போட்டு குழப்பி நீங்களே உங்கள் மனமாச்சரியத்தை வெளியே கொட்டிவிடாதீர்கள்.//
//வக்காலத்து வாங்க வரிந்து கட்டிக் கொண்டு... வேதனை! //

நன்றாக முத்திரை குத்தியிருக்கிறீர்கள் .வச்சா குடுமி அடிச்சா மொட்டை மாதிரி கிட்டத்தட்ட நான் கொலையை நியாயப்படுத்துவதாகவே காட்டி விட்டீர்கள் .சபாஷ் .உங்கள் பதிவை படித்து விட்டு கருத்து சொல்லாமல் போயிருக்க வேண்டும் .மன்னிக்கவும் .இனிமேல் இந்த தவறு நடக்காது.

மாசிலா said...

//இனி மேல் யாராவது யாரையாவது சுட்டால், அவர் புல்லட்
பட்டு இறந்துவிட்டார். இது கொலையல்ல என்று
சொல்லலாம்.//
இறந்துவிட்டார்னு கூட சொல்லக்கூடாது, மூச்சு விட மறந்துவிட்டார்னு சொல்லனும். அதுதான் மருவாத.
:-)

உண்மைத்தமிழன் said...

///ஜோ / Joe said...
//உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?//
//உங்கள் கட்சி பாசத்திற்கு அளவேயில்லையா?//
//கட்சி அபிமானத்தையும், மனிதாபிமானத்தையும் போட்டு குழப்பி நீங்களே உங்கள் மனமாச்சரியத்தை வெளியே கொட்டிவிடாதீர்கள்.//
//வக்காலத்து வாங்க வரிந்து கட்டிக் கொண்டு... வேதனை! //

நன்றாக முத்திரை குத்தியிருக்கிறீர்கள் .வச்சா குடுமி அடிச்சா மொட்டை மாதிரி கிட்டத்தட்ட நான் கொலையை நியாயப்படுத்துவதாகவே காட்டி விட்டீர்கள் .சபாஷ் .உங்கள் பதிவை படித்து விட்டு கருத்து சொல்லாமல் போயிருக்க வேண்டும் .மன்னிக்கவும் .இனிமேல் இந்த தவறு நடக்காது.///

ஜோ ஸார்.. என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி.. பதிவை நன்றாகப் பாருங்கள்.. அது நான் எழுதியதில்லை. யாரோ ஒரு அனானி எழுதியது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

உங்களுடைய பதிலையும் அனுப்புங்கள். இதற்கு ஏன் என் மீது கோபப்படுகிறீர்கள்? கூல்டவுன் ஜோ.. பதிவு என்றாலே எதிர்ப்பு வரத்தானே செய்யும். அதுதானே வலையுலகம்..

உண்மைத்தமிழன் said...

///மாசிலா said...
//இனி மேல் யாராவது யாரையாவது சுட்டால், அவர் புல்லட்
பட்டு இறந்துவிட்டார். இது கொலையல்ல என்று
சொல்லலாம்.//
இறந்துவிட்டார்னு கூட சொல்லக்கூடாது, மூச்சு விட மறந்துவிட்டார்னு சொல்லனும். அதுதான் மருவாத.///

ஆஹா மாசிலா ஸார்.. நெத்தியடி பதில்.. இந்தப் பாயிண்ட்டு எனக்குத் தோணாமப் போயிருச்சே..

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஸார்..

ஜோ/Joe said...

உண்மைத்தமிழன்,
ஏன் உங்கள் பதிவுகளில் (பதிவோடு சேர்த்து பார்க்கும் போது)பின்னூட்டமிடுபவர் பெயர்கள் தெரிவதில்லை ? கொஞ்சம் சரி செய்யக்கூடாதா?

ஜோ/Joe said...

அப்புறம் உண்மைத்தமிழன்..ஸார்-ல்லம் வேண்டாம் .நான் உங்களை விட சின்னவன் தான். :))

வாசகன் said...

ம.பு.து-விடம் ஒப்படைத்தால், கண்துடைப்பு நாடகம் என்று இப்படி கார்ட்டூன் போடுவது!
மாநில பு.து. விடம் ஒப்படைத்தாலோ நீதி கிடைக்க வழியேயில்லை என்று ஒப்பாரி வைத்து கலகம் செய்வது,

அதிகாரத்துக்காக எதையும் செய்யத்தயங்காத அரசியல்வாதிகளைப் போலவே, தான் சொல்கிற 'நியாயத்துக்காக' எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்; பேசலாம் என்பது 'சோ'மா(தி)ரிகள் ஆசாமிகளின் வேலை. இதையெல்லாம் பெரிதாக அலட்டத்தேவையில்லை. அவரவர்க்கு அவரவர் சுயநலம்.

இப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

ஆனால், நேரம் பார்த்து கார்ட்டூன் போட்டு தன் அரிப்பைச் சொறிந்துக்கொள்கிற சோ மா(தி)ரி களிடம் கேட்க எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது:
சி.பி.ஐ குற்றஞ்சாட்டியிருந்த பின்னாலும், வெட்கங்கெட்டு உள்துறை (குறிப்பாக, CBI)க்கே மந்திரியாகி 'நிரபராதி' யென்று வெளியில் வந்து 'ராம' நெருப்பில் பத்தினித்தனத்தை நிரூபித்துவிட்டதாக பீற்றிக்கொண்ட இனவாத அரசியல் பீடைகளுக்கு கார்ட்டூன் எதுவும் போடவில்லையே..ஏன்?
உண்மைத்தமிழன், நீங்கள் அப்படி ஏதும் பார்த்த ஞாபகமுண்டோ?

Santhosh said...

கலக்கறீங்க உண்மைத்தமிழன், இப்ப உங்க பதிவு தான் ஹாட்டான அரசியல் பதிவு போல கலக்குங்க.

துளசி கோபால் said...

//நாங்க ஒரு முட்டாளுக டீச்சர்.. எத்தனை தடவை
அடி வாங்கினாலும் எங்களுக்கு உரைக்காது..
அப்படியே வளர்ந்துட்டோம்..//

இப்படி(யும்) இருக்கலாம்.

'நாங்க நல்லவங்க டீச்சர். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம்'

Boston Bala said...

கருத்துக்கணிப்பு வெளியிட்டவங்களை மந்திரி பதவியை விட்டு விலகச் சொன்னது சரி.

அதே போல் மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோரையும் 'கட்சிக் கட்டுப்பாட்டை' மீறி வன்முறையில் இறங்கியதற்காக ராஜினாமா கோரலாம்.

ஏன் இன்னும் அவ்வாறு திமுக 'செயற்குழு' தீர்மானம் எதுவும் நிறைவேற்றவில்லை?

மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே அரசு பஸ்களை சேதப்படுத்தியது எல்லாம் கண்டும் காணாமல் 'சட்டம் தன் கடமையை செய்யும்'.

கணிப்பு வெளியிட்டது குற்றம் என்றால், பொது சொத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஊறு விளைவித்தாலும் கட்சித்தலைமை 'சிபிஐ' முடிவுகளுக்கு காத்திருப்பதுதானே பொருத்தம் ;)

Anonymous said...

//சி.பி.ஐ குற்றஞ்சாட்டியிருந்த பின்னாலும், வெட்கங்கெட்டு உள்துறை//

இது யார் சொன்னான்னு தெரியல.

ஜெயின் டைரி விவகாரத்துல பெயர் வந்ததும் 'வெக்கங்கெட்டு' போய் எம்பி பதவிய ராஜிநாமா பண்ணிவிட்டு, அந்த வழக்கிலேர்ந்து விடுபட்ட பிறகுதான் தேர்தல்ல போட்டியிட்ட 'மானங்கெட்ட' அரசியல்வாதிகளைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு வந்து இங்கு கேள்வி எழுப்புங்கள்.

இந்த விஷயத்துல நினச்சாலும் விரல்ல வேறு எங்கும் நீட்ட முடியாது... 'நம்ம' கட்சியோட வரலாறு அப்படி!. குடும்பத் தகராறுக்காக கட்சிய காவு கொடுக்கறது ஒன்னும் புதுசு இல்ல... கலாச்சாரத்துல ஊறினதுதான்.

வேணும்னா... எல்லாரும் 'துள்ளும்போது' இவரும் 'துள்ளட்டும்' அப்படின்னு சுயமா சொறிஞ்சிகிட்டே குப்பி கடிக்க வேண்டிதான்.

உண்மைத்தமிழன் said...

//சி.பி.ஐ குற்றஞ்சாட்டியிருந்த பின்னாலும், வெட்கங்கெட்டு உள்துறை (குறிப்பாக, CBI)க்கே மந்திரியாகி 'நிரபராதி' யென்று வெளியில் வந்து 'ராம' நெருப்பில் பத்தினித்தனத்தை நிரூபித்துவிட்டதாக பீற்றிக்கொண்ட இனவாத அரசியல் பீடைகளுக்கு கார்ட்டூன் எதுவும் போடவில்லையே..ஏன்? உண்மைத்தமிழன், நீங்கள் அப்படி ஏதும் பார்த்த ஞாபகமுண்டோ?//

பார்த்திருக்கிறேன். அத்வானியை கிண்டல் செய்து அட்டைப்படத்தில் கார்ட்டூன் வரையப்பட்டிருந்தது.. இப்போது கிடைத்தால் கொடுங்கள். அதையும் போடுகிறேன். நான் வலையுலகில் நுழைந்து 58 நாட்கள்தான் ஆகிறது..

உண்மைத்தமிழன் said...

//Boston Bala said...
கருத்துக்கணிப்பு வெளியிட்டவங்களை மந்திரி பதவியை விட்டு விலகச் சொன்னது சரி.

அதே போல் மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோரையும் 'கட்சிக் கட்டுப்பாட்டை' மீறி வன்முறையில் இறங்கியதற்காக ராஜினாமா கோரலாம்.

ஏன் இன்னும் அவ்வாறு திமுக 'செயற்குழு' தீர்மானம் எதுவும் நிறைவேற்றவில்லை?//

அவர்களிடம் ராஜினாமா ஏன் டிஸ்மிஸ்கூட செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் தி.மு.க.வினரே வன்முறையில் இறங்கியதை அக்கட்சியே ஒத்துக் கொண்டதைப் போலாகும். இதைச் செய்யவா இந்த 83 வயதிலும் தாத்தா இப்படி உழைக்கிறார்?

//மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே அரசு பஸ்களை சேதப்படுத்தியது எல்லாம் கண்டும் காணாமல் 'சட்டம் தன் கடமையை செய்யும்'.//

கட்சிக்காக இது கூட செய்யவில்லை என்றால் அடுத்து எப்படி எம்.எல்.ஏ. ஆவது? எம்.பி.யாவது.. திராவிடக் கட்சிகளின் அரிச்சுவடி பாடமே இதுதான் ஸார்..

கணிப்பு வெளியிட்டது குற்றம் என்றால், பொது சொத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ஊறு விளைவித்தாலும் கட்சித்தலைமை 'சிபிஐ' முடிவுகளுக்கு காத்திருப்பதுதானே பொருத்தம் ;)//

சி.பி.ஐ. தன் முடிவைச் சொல்லுமா என்பதிலேயே எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஏன்.. அப்படியரு முடிவைச் சொல்ல விடுவார்களா தி.மு.க.வினர் என்பதும் சந்தேகம்தான் ஸார்..

கட்சியும் வேண்டும். ஆட்சியும் நிலைக்க வேண்டும். உற்றார், உறவுகளும் வேண்டும் என்றால் யாரைப் பலி கொடுக்க முடியும்..? சட்டம், நீதி, நியாயம், தர்மம் இவைகளைத்தான்.. காரணம் இவைகள்தான் ஊமைகளாச்சே.. யார் இவர்களுக்காக குரல் கொடுக்கப் போகிறார்கள்..?

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
இப்படி(யும்) இருக்கலாம்.
'நாங்க நல்லவங்க டீச்சர். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம்'//

ஐயோ.. டீச்சரம்மா.. கொன்னூட்டீங்க.. இம்புட்டு டேலன்ட்டை வைச்சுக்கிட்டு இதுல இறங்கி கலக்க மாட்டேங்குறீங்களே மேடம்.. வாங்க.. கொஞ்சம் ஒத்தாசைக்கு கை கொடுங்க மேடம்..

உண்மைத்தமிழன் said...

//சந்தோஷ் aka Santhosh said...
கலக்கறீங்க உண்மைத்தமிழன், இப்ப உங்க பதிவு தான் ஹாட்டான அரசியல் பதிவு போல கலக்குங்க.//

நன்றி சந்தோஷ்.. தாமதமாகத் தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். நிறைய வேலைகள்.. அதுதான்..

abeer ahmed said...

See who owns scbt.com or any other website:
http://whois.domaintasks.com/scbt.com