05-04-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளது.
தென்சென்னை - ஆர்.எஸ்.பாரதி
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
வடசென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
திருப்பெரும்புதூர் - டி.ஆர்.பாலு
திருவள்ளூர்(தனி) - காயத்ரி ஸ்ரீதரன்
அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்
தர்மபுரி - தாமரைச்செல்வன்
கிருஷ்ணகிரி - இ.ஜி.சுகவனம்
திருவண்ணாமலை - த.வேணுகோபால்
கள்ளக்குறிச்சி - ஆதி.சங்கர்
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
பெரம்பலூர் - து.நெப்போலியன்
நாமக்கல் - செ. காந்திசெல்வன்
கரூர் - கே.சி.பழனிச்சாமி
பொள்ளாச்சி - ம. சண்முகசுந்தரம்
நீலகிரி(தனி) - எம்.ராசா
மதுரை - மு.க.அழகிரி
நாகை(தனி) - ஏ.கே.எஸ்.விஜயன்
ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்
தூத்துக்குடி - எஸ்.ஆர்.ஜெயதுரை
கன்னியாகுமரி - ஜெ. ஹெலன் டேவிட்சன்
மத்திய அமைச்சர்கள் ரகுபதி, வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் ராமநாதபுரம் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை..
|
Tweet |
17 comments:
நேற்று ஒரு பதிவில் பார்த்த நினைவு.
"மத்திய அமைச்சர்கள் ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் ராமநாதபுரம் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.."
வேங்கடபதினு ஒரு மந்திரி இருந்தார் அவரையும் சேத்துக்கங்க .
//malar said...
நேற்று ஒரு பதிவில் பார்த்த நினைவு.//
அது அனுமானமாக பத்திரிகையாளர்களால் வெளியிட்டது..
கிட்டத்தட்ட அது உண்மைதான்..
ஏனெனில் இது முன்பே தீர்மானமானதுதான்.. முக்கியத் தலைவர்களே தொண்டர்களின் பல்ஸ் பார்ப்பதற்காக சில விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் வேண்டுமென்றே லீக் செய்வார்கள்.
அது போன்று சொன்னதுதான் நேற்று வெளியானது..
where is the GREAT RADHIKA SELVI.....VENGATESH PANNAYARODA PEYARAI KEDUKA VANTHA THANGA THALAVI
///பாட்டாளி said...
"மத்திய அமைச்சர்கள் ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் ராமநாதபுரம் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.."
வேங்கடபதினு ஒரு மந்திரி இருந்தார் அவரையும் சேத்துக்கங்க.///
சேர்த்துட்டேன் பாட்டாளியண்ணேன்.. மிக்க நன்றி..!
மத,ஜாதி அரசியல் மட்டுமே எஞ்சி இருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம்களுக்கு திமுகவில் முற்றிலும் பிரதிநிதித்துவம் இல்லையா?.. :((
மிக மிக கவலையளிக்கின்றது.
தமிழக திமுக வில் ஒரு முஸ்லிம் உறுப்பினருக்குக் கூட அந்த தகுதி இல்லையா.. என்ன கொடும கலைஞரே.. :(
//subash said...
where is the GREAT RADHIKA SELVI.....VENGATESH PANNAYARODA PEYARAI KEDUKA VANTHA THANGA THALAVI.//
தூத்துக்குடி பெரியசாமியின் மிரட்டலால்தான் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
///தமிழ் பிரியன் said...
மத, ஜாதி அரசியல் மட்டுமே எஞ்சி இருக்கும் இன்றைய சூழலில் முஸ்லிம்களுக்கு திமுகவில் முற்றிலும் பிரதிநிதித்துவம் இல்லையா?.. :(( மிக மிக கவலையளிக்கின்றது. தமிழக திமுகவில் ஒரு முஸ்லிம் உறுப்பினருக்குக்கூட அந்த தகுதி இல்லையா.. என்ன கொடும கலைஞரே.. :(///
கொடுக்கலாம்தான்..
ஆனால் கலைஞர் வீட்டுக் கிச்சன் காபினெட்டுக்குத் தெரிந்த, பழக்கமான, நெருக்கமான ஒரு முஸ்லீம்கூட கட்சியில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது..!
ஜே கே ரித்தீஷ் திமுக வேட்பாளர்
என்ன கொடுமை சரவணன் சார் இது?
செ.குப்புசாமி ???
///Arun Kumar said...
ஜே கே ரித்தீஷ் திமுக வேட்பாளர்
என்ன கொடுமை சரவணன் சார் இது?///
பணம்.. பணம்.. பணம்.. இதைத் தவிர இந்த அரசியலில் எதுவுமில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த வேட்பாளர் தேர்வுதான்..!
புரிந்து கொள்ளுங்கள்..!
///T.V.Radhakrishnan said...
செ.குப்புசாமி ???///
இவரை மட்டுமா..? ராதிகா செல்வியையும்தான் மறந்துவிட்டேன்..!
ஏஞ்சாமிகளா இவ்வளவு கோபம்..?
வெறும் தகவலைத்தான சொல்லியிருக்கேன்..
இதுலேயுமா கொலை வெறியோட மைனஸ் குத்து குத்தறது..?!
இது ஜூனியர் விகடன்லே (மிஸ்டர் கழுகு) வந்தது.
''ராமநாதபுரத்துக்குதான் அதிகப் போட்டி. எல்லோரும் கரைவேட்டியில் வந்துபோக - நடிகர் ரித்தீஷ், கண்ணில் அடிக்கிற மிட்டாய் கலர் சட்டையும், கறுப்பு ஜீன்சுமாக, கூலிங் கிளாசுடன் வந்தவர்... தலைவரைப் பார்க்கச் சென்றபோது வித்-அவுட் கூலிங் கிளாசுடன் சென்றார். 'எவ்வளவு செலவு செய்வீங்க?' என்ற கேள்வி வந்தபோது, 'எவ்ளோ வேணா..!' என்றதோடு 'பக்கத்துல இருக்கிற ரெண்டு தொகுதி செலவையும் சேர்த்துப் பார்த்துக்கிறேன்' என பதில் வந்ததாகத் தகவல்!''
///ஒரு காசு said...
இது ஜூனியர் விகடன்லே (மிஸ்டர் கழுகு) வந்தது.
''ராமநாதபுரத்துக்குதான் அதிகப் போட்டி. எல்லோரும் கரைவேட்டியில் வந்துபோக - நடிகர் ரித்தீஷ், கண்ணில் அடிக்கிற மிட்டாய் கலர் சட்டையும், கறுப்பு ஜீன்சுமாக, கூலிங் கிளாசுடன் வந்தவர்... தலைவரைப் பார்க்கச் சென்றபோது வித்-அவுட் கூலிங் கிளாசுடன் சென்றார். 'எவ்வளவு செலவு செய்வீங்க?' என்ற கேள்வி வந்தபோது, 'எவ்ளோ வேணா..!' என்றதோடு 'பக்கத்துல இருக்கிற ரெண்டு தொகுதி செலவையும் சேர்த்துப் பார்த்துக்கிறேன்' என பதில் வந்ததாகத் தகவல்!''///
இப்ப புரிஞ்சிருக்குமே..
இப்போதைய அரசியலில் எதற்கு மரியாதை என்று..!
நீலகிரி (தனி) - எம்.ராசா
நீலகிரி (தனி) - அ.ராசா
எது சரி?
பார்த்து சொல்லுங்க.
அன்புடன், கி.பாலு
//மடல்காரன்_MadalKaran said...
நீலகிரி (தனி) - எம்.ராசா
நீலகிரி (தனி) - அ.ராசா
எது சரி?
பார்த்து சொல்லுங்க.
அன்புடன், கி.பாலு//
மன்னிக்கணும் மடல்காரன் ஸார்..
அ.ராசா என்பதுதான் சரி.. விரைவில் மாற்றி விடுகிறேன்..!
அறிவுருத்தியமைக்கு நன்றி..!
Post a Comment