ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்

15-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ராஜபாட்டை' என்ற கொடுமையைக் கொடுத்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் மீண்டும் தன் பெயரை இதில் மீட்டெடுத்திருக்கிறார்..!

எங்கு பார்த்தாலும் காதல்.. காதலர்கள்.. காலையில் பார்த்து மாலையில் ஐ லவ் யூ சொல்லி மறுநாளிலேயே கல்யாணம் பற்றிப் பேசும் அளவுக்கு பாஸ்ட் ரைடிங்கில் போய்க் கொண்டிருக்கும், கல்லூரி காதலினால் ஏற்படும் இன்னொரு அவலத்தை தொட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..!


நண்பர்களாக இருக்கும் ஹீரோவும், ஹீரோயினும்..... ஹீரோவின் வழக்கமான 'செத்துருவேன்' என்ற மிரட்டலிலும், செய்து காட்டும் வீரத்திலும் ஈர்க்கப்பட்டு 'ஐ லவ் யூ' சொல்லித் தொலைகிறாள். இந்தக் காதல் இப்போதைய டீன் ஏஜ் காதலை போலவே வேகமாக போய் மகாபலிபுரத்தில் ரூம் போடுவதில் முடிகிறது.. 5 ரூபாய்க்கு சிக்கனப்பட்டு கடைசியில் ‘அது’ ஹீரோயின் வயிற்றில் உதித்தேவிடுகிறது.. கருவைக் கலைக்க அல்லலோ அல்லல்படுகிறார்கள் கல்லூரி மாணவர்களான ஹீரோவும், ஹீரோயினும்..

விஷயம் வீட்டுக்குத் தெரிந்து பஞ்சாயத்து கூடுகிறது.. ஒரு பக்கம் பையனின் அப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பதுபோல் நடித்து கம்பி நீட்ட பார்க்கிறார். இன்னொரு பக்கம் பெண்ணின் அப்பா கல்யாணத்திற்காக எதிர்த் தரப்பினர் காலில் விழுகவும் தயாராக இருக்கிறார்.. இடையில் காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்சினை பெற்றவர்களைவிடவும் படு ஸ்பீடாக போய் அவர்களை பிரித்தேவிடுகிறது.. 

உதயமாகும் ஒரு புது ஜீவன் எங்கோ ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்து வர.. இங்கே காதலர்கள் அவரவர் போக்கில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடர.. அந்த பாவப்பட்ட ஜீவனை அழுக வைத்து, நம்மையும் கண் கலங்க வைத்து இதில் யார் செய்தது சரி.. தவறு.. என்று நம்மையே யோசிக்க வைத்துவிட்டு... இப்போது மதுரையில் விஷாலை வைத்து ‘பாண்டியநாடு’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..! வெல்டன் ஸார்…!

ஹீரோ புதுமுகம்.. அப்படி தெரியவில்லை.. அந்தக் கேரக்டருக்கு ஏற்ற தேர்வு.. லேசாக கோக்குமாக்காக இருக்கும் நிலையில் இவனை அழகுப் பெண் காதலிப்பதுதான் விதி என்பதாக வைத்திருக்கிறார் போலும்..! காதலனாக நடிக்க வேண்டிய காட்சியில் நடித்தும், பதற்றத்துடன் அலையும் காட்சிகளிலும் அப்பாவியாய் நடித்தும், தனது அப்பாவை எதிர்த்து தீர்க்கமாக பேசும் காட்சிகளில் இன்றைய இளைய தலையமுறையையும் பார்க்க வைத்திருக்கிறார். 

வழக்கு எண்ணில் நடித்த மனீஷாதான் ஹீரோயின்.. தன்னைத்தான் காதலிக்கிறான் என்று தெரிந்த கணத்தில் இருந்துதான் இந்தப் பெண்ணும் நடித்திருக்கிறது..! ஒரு காட்சியில்கூட இயக்குநர் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பதே தெரியவில்லை..! தனது காதலை மறைக்கவும், கர்ப்பத்தை மறைக்கவும் இவர் படும்பாட்டில் நமக்கே சிரிப்பும், சோகமும் சேர்ந்தே வருகிறது..!   படத்தின் துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிவரையிலும் இயக்கத்திற்கு பக்கபலமாக இருக்கும் வசனங்களுக்காக ரகளை செய்த டீன் ஏஜ் கூட்டம் இறுதியில் குழந்தையைக் காட்டியவுடன் கப்சிப்பானதுதான் இயக்கத்தின் சிறப்பு..! 

இன்றைய இன்ஸ்டண்ட் காதல்கள் எப்படி உருவாகிறது என்பதையெல்லாம் முதல் ரீலிலேயே பட்டவர்த்தனமாக காட்டியிருக்கிறார் சுசீந்திரன்.. காதல் ஒரு நேரத்தில் எப்படியெல்லாம் அலைபாய்கிறது. திசை மாறுகிறது என்பதை இதைவிடவும் சமீபத்திய எந்தப் படமும் காட்டியதில்லை.. ஹீரோவின் பிரெண்ட்டாக நடித்தவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது..  டைமிங்கில் பின்னியிருக்கிறார்.. காதலர்களுக்காக கூச்சப்படாமல் பேசும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்.. ஒருவனின் காதலுக்கு சப்போர்ட் செய்யப் போய். அது திசை மாறி உடன் இருக்கும் வேறொருவனை காதலிப்பதாக அந்தப் பெண் சொல்வதும், அதனை அவர்கள் சமாளிப்பதும் ஏக ரகளை..!

காதலருடன் போனில் பேசுவதை சந்தேகப்படக் கூடாது என்பதற்காக ‘அண்ணா’ என்று இழுத்து இழுத்து பேசிவிட்டு வெளியில் வந்து காதலனை திட்டுவது.. வீட்டில் தனித்திருக்க வந்த நிலையில் தெரிந்தவர் வர.. ஹீரோவை போஸ்ட் மேன் கணக்கில் வாசலில் நிற்க வைத்து பேசி சமாளிப்பது.. எப்படியெல்லாம் பொய் சொல்லி காதலர்கள் வெளியில் ஊர் சுற்றுகிறார்கள் என்பதைச் சொல்லியிருப்பது.. எதற்கெல்லாம் காதலர்கள் சண்டையிட்டு சட்டென்று மனம் மாறுகிறார்கள்.. காதல் எப்படியிருந்தால் உருவாகும்.. காதலி யாருக்கெல்லாம் கிடைப்பார்கள் என்கிற சூத்திரத்தையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக இதில் கொட்டித் தீர்த்திருக்கிறார் சுசீந்திரன்.. இதில் இவருக்கு பக்க பலமாக வசனம் எழுதியிருக்கும் தம்பி கிளைட்டனுக்கு எனது பாராட்டுக்கள்..! 40 பவுன் நகையை எடுத்திட்டு வந்திருக்கேன் என்பதற்கும், இன்னும் கொஞ்ச நாள்ல அப்பாவாயிருவான் என்ற வசனத்திற்கும் தியேட்டரே அதிர்ந்தது..!

முற்பாதி முழுவதும் ரகளையாக போய்க் கொண்டிருந்த படம் பிற்பாதியில் ஆஸ்பத்திரி, கருக்கலைப்பு, பெற்றோர்களின் சுமை என்று ஏகத்துக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் துளசிக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.. ஹீரோவின் வீடு தேடி வந்து அவர் பேசுகின்ற பேச்சும், நடிப்பும்.. அட்சரச்சுத்தம்.. இந்த ஒரு காட்சியிலேயே ஹீரோவும், ஹீரோயினும் மனசு மாறுகின்ற அந்தத் தருணம் பொய்யில்லாதது.. 

எதற்காகக் காதலிக்கிறோம் என்பது தெரியாமலேயே நிறைய பேர் காதலிக்கிறார்கள் என்பதைத்தான் நமது மெரீனா பீச் காதலர்களின் ‘சேட்டை’ காட்டுகிறது.. அதையேதான் இதிலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ‘காதல்’ என்பதே கல்யாணத்தின் முதற்படி.. கல்யாணம் பிள்ளை பெற்று வம்ச விருத்தியை செய்வதற்கான முதற்படி.. கல்யாணமும், பிள்ளை பெற்றலும், குடும்ப உறவு வளர்ப்பும் இல்லையெனில் பின்பு எதற்கு காதல்..? அந்தக் காதலை வைத்து என்னதான் செய்வது..?

குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள்..! பிள்ளைகள் வளர்ப்பு என்பதிலும், அவர்களுடைய விஷயத்தில் எந்த அளவுக்கு கண்காணிப்போடு இருத்தல் வேண்டும் என்பதையும் எச்சரிக்கை உணர்வுடன் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்..! அதே நேரம் காதலர்களுக்குள் இருக்கும் உறவு எந்த நிலையிலும் ஒரு எல்லையைத் தாண்டக் கூடாது என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி.. இவர்கள் இருவரின் தவறுகளால் அப்பாவி அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது..? 

திருமணம் என்ற குடும்பப் பந்தம் இருவருக்குமே பாதுகாப்பானது என்பதைவிட அடுத்து வருகின்ற ஜெனரேஷனுக்கு இதுதான் மிக முக்கியம் என்பதை காதலர்கள் மறந்துவிடக் கூடாது.. இந்தப் படம் வரும் நேரம்தான் கோடம்பாக்கத்திற்கு மிகப் பெரிய சோதனை காலமாக இருக்கிறது. அண்ணன் சேரனின் மகள் விஷயத்தில் மீடியாக்கள் கோடம்பாக்கத்தை போட்டு துவைத்து எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.. 'நீங்கதானே காதலை வளர்த்துவிட்டீங்க.. அனுபவிங்க' என்று சாபம் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இப்படியொரு படத்தைக் கொடுத்த இயக்குநர் சுசீந்திரனுக்கு எனது நன்றிகள்..!

இந்தப் படத்தை பார்க்கும் காதலர்களில் ஒரு சிலராவது தங்களை கட்டுக்குள் வைத்துக் கொண்டு வாழ்க்கையை புரிந்து காதலித்தாலே போதும்.. இப்படியொரு நிலைமை வருவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு காதல், கல்யாணம் பற்றி புரிந்து கொள்ள வைத்தாலே.. இந்தப் படத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

ஆதலால் காதல் செய்வீர் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

37 comments:

Shankar said...

Good straight forward review Mr Shankar. All the best for your debut picture.

AAR said...

Directors make such movies and teach all nonsense to youth then cry when their daughters fall in love.

Unknown said...

தலைப்பு ஆதலினால் காதல் செய்யாதீர் என்று இருந்திருக்க வேண்டும்.

geethappriyan said...

//லேசாக கோக்குமாக்காக இருக்கும் நிலையில் இவனை அழகுப் பெண் காதலிப்பதுதான் விதி என்பதாக வைத்திருக்கிறார் போலும்..!//
ஆமாம் பெர்சனாலிட்டியான ஆண்களை அழகுப்பெண்கள் அப்படியே காதலிச்சிட்டாலும்.

கல்யாணத்துக்கு முன் அது கூடாதா?அப்போ குஸ்பு கோபித்துக்கொள்ள மாட்டாரா?


geethappriyan said...

அண்ணே 3வருடம் முன்பு வந்த செய்தி இது //பள்ளிக்கூட கழிப்பறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி//http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1006/17/1100617039_1.htm

அருள் said...

முழுகதையையும் சொவது நியாயமா?

"ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்"

http://arulgreen.blogspot.com/2013/08/AadhalalKadhalSeiveer.html

Anonymous said...

Don't reveal the story in the name of review. A good reviewer should not do that. please don't repeat that mistake again. Read others review and learn.

soma said...

Your review become spoiler and led to guess the story and climax. don't do it.

soma said...

Otherwise you should have mentioned 'SPOLIER ALERT' in top. so that readers like us will be alerted and won't read

வருண் said...

***அருள் said...

முழுகதையையும் சொவது நியாயமா?

"ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்"***

அது நாயம் இல்லைதான்.. நீங்க செய்ற இந்த வேலை (பின்னூட்டம்போடுறாப்பில உங்க பதிவுக்கு கமர்சியல் கொடுக்கிறதுதான்) ரொம்ப ரொம்ப நாயம்!!

இப்போ என்ன காதலிச்சு நாசமாப் போயிட்டானுகனு கதையாக்கும், நம்ம அருள் "சாமி வந்து" ஆ ஆ னு ஆடுறாரு பாவம்!


Muthukumara Rajan said...

Wonderful and Awesome Movie.

This movie will surely create a big impact in everyone's mind.

A must watch for all parents along with their teenage family members.

It is all about the so called hormone induced college romance and its devastating impact over the victim's families.

The movie will have some really heart shaking movies which would drill our minds and one real heart touching climax which might bring tears.

All the actors did there job wonderfully. Specially Hero, Heroie . Heroie Mother, Heros Father and little kid (i dont know what to say about this kid. He is still in my eye).

Please watch this movie in thertre. Commercial success of this kind of movies only will create positive impact.

Don't miss this one, its a lesson for parents and for all.

உண்மைத்தமிழன் said...

[[[Shankar said...

Good straight forward review Mr Shankar. All the best for your debut picture.]]]

முதல் பின்னூட்டமே இப்படியா..? எனக்கு நேரம் நல்லாத்தான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

Directors make such movies and teach all nonsense to youth then cry when their daughters fall in love.]]]

உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார். இப்போது சேரன் விஷயத்தில் இதுதானே நடக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Ak Ananth said...

தலைப்பு ஆதலினால் காதல் செய்யாதீர் என்று இருந்திருக்க வேண்டும்.]]]

உண்மை.. எதிர்மறையென்றால் ரசிகர்கள் வர மாட்டோர்களோ என்று நினைத்திருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Karthikeyan Vasudevan said...

//லேசாக கோக்குமாக்காக இருக்கும் நிலையில் இவனை அழகுப் பெண் காதலிப்பதுதான் விதி என்பதாக வைத்திருக்கிறார் போலும்..!//

ஆமாம் பெர்சனாலிட்டியான ஆண்களை அழகுப் பெண்கள் அப்படியே காதலிச்சிட்டாலும். கல்யாணத்துக்கு முன் அது கூடாதா?அப்போ குஸ்பு கோபித்து கொள்ள மாட்டாரா?]]]

இப்படி தேவையில்லாம குஷ்புவை வம்புக்கிழுத்தா அவர் கோபித்துக் கொள்ள மாட்டாரா..?

உண்மைத்தமிழன் said...

[[[Karthikeyan Vasudevan said...

அண்ணே 3வருடம் முன்பு வந்த செய்தி இது //

பள்ளிக்கூட கழிப்பறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி

//http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1006/17/1100617039_1.htm]]]

படித்தேன். நினைவிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் காதலர்களில் ஒரு சிலராவது இதனைப் பார்த்த பின்பு சுதாரிப்புடன் இருந்து தங்களது வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டால் அது சமூகத்திற்கு நல்லதுதானே..?!

உண்மைத்தமிழன் said...

[[[அருள் said...

முழு கதையையும் சொவது நியாயமா?

"ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்"

http://arulgreen.blogspot.com/2013/08/AadhalalKadhalSeiveer.html]]]

தப்புதான்.. ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ssk said...

Don't reveal the story in the name of review. A good reviewer should not do that. please don't repeat that mistake again. Read others review and learn.]]]

சரிங்க.. உத்தரவுங்க.. நிச்சயமுங்க..! கத்துக்குறேங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[soma said...

Your review become spoiler and led to guess the story and climax. don't do it.]]]

சரிங்க.. உத்தரவுங்க.. நிச்சயமுங்க..! கத்துக்குறேங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[soma said...

Otherwise you should have mentioned 'SPOLIER ALERT' in top. so that readers like us will be alerted and won't read..]]]

சரிங்க.. உத்தரவுங்க.. நிச்சயமுங்க..! செய்றேனுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***அருள் said...

முழுகதையையும் சொவது நியாயமா?

"ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்"***

அது நாயம் இல்லைதான்.. நீங்க செய்ற இந்த வேலை (பின்னூட்டம் போடுறாப்பில உங்க பதிவுக்கு கமர்சியல் கொடுக்கிறதுதான்) ரொம்ப ரொம்ப நாயம்!!]]]

வருண் ஸார்.. இதையெல்லாம் குத்தமா சொல்லக் கூடாது..! அவரும் எழுதியிருக்காருன்னு சொல்றது சகஜம்தானே.. நானே சில இடத்துல இதையும் செஞ்சிருக்கேன்..!

[[[இப்போ என்ன காதலிச்சு நாசமாப் போயிட்டானுகனு கதையாக்கும், நம்ம அருள் "சாமி வந்து" ஆ ஆ னு ஆடுறாரு பாவம்!]]]

படத்தைப் பாரு சாமி.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumara Rajan sk said...

Wonderful and Awesome Movie. This movie will surely create a big impact in everyone's mind. A must watch for all parents along with their teenage family members.

It is all about the so called hormone induced college romance and its devastating impact over the victim's families.

The movie will have some really heart shaking movies which would drill our minds and one real heart touching climax which might bring tears.

All the actors did there job wonderfully. Specially Hero, Heroie . Heroie Mother, Heros Father and little kid (i dont know what to say about this kid. He is still in my eye).

Please watch this movie in thertre. Commercial success of this kind of movies only will create positive impact.

Don't miss this one, its a lesson for parents and for all.]]]

கருத்துரைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

AAR said...

This is a remake of telugu movie more than 10 yrs old.
It was Reema Sen's first movie.

மலரன்பன் said...

////வாழ்க்கையை புரிந்து காதலித்தாலே போதும்.. //

புரிந்து செய்தால் அதன் பேர் காதல் அன்று கணக்கு.

jroldmonk said...

அண்ணே தெரியாம இந்த பக்கம் விமர்சனம் படிக்க வந்துட்டேன்! இனிமே இந்த பக்கமே வரமாட்டேன்! நீங்க முழுகதை,காட்சிகள் எல்லாத்தையும் சொல்லுங்க,என்ன வேணா எழுதிக்கோங்க! நன்றி!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

This is a remake of telugu movie more than 10 yrs old. It was Reema Sen's first movie.]]]

அப்படியா..? நான் அதைப் பார்க்கலை..!

உண்மைத்தமிழன் said...

[[[மலரன்பன் said...

//வாழ்க்கையை புரிந்து காதலித்தாலே போதும்..//

புரிந்து செய்தால் அதன் பேர் காதல் அன்று கணக்கு.]]]

இதில் தப்பில்லையே.. வாழ்க்கைக் கணக்கு.. நமக்கு செட்டாகுமா..? நம்ம குணத்துக்கு ஒத்து வருமான்னு குணத்தை வைத்து காதலித்தால் போதும்.. வெறுமனே புற அழகை வைத்து ஆரம்பித்தால் சனியில்தான் போய் முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[jroldmonk said...

அண்ணே தெரியாம இந்த பக்கம் விமர்சனம் படிக்க வந்துட்டேன்! இனிமே இந்த பக்கமே வரமாட்டேன்! நீங்க முழு கதை,காட்சிகள் எல்லாத்தையும் சொல்லுங்க, என்ன வேணா எழுதிக்கோங்க! நன்றி!]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!

Nondavan said...

அண்ணாச்சி, சௌக்கியமா..??? வழக்கம் போல விமர்சனம் அருமை... படத்தை பார்த்திர வேண்டியது தான்

Unknown said...

links for tamil novels pdf free download

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் உண்மைத் தமிழன் அண்ணா,

உங்கள் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். இப்பொழுது கூட உங்கள் 'தலைவா'வைப் பார்த்துவிட்டுத்தான் 'ஆதலால் காதல் செய்வீர்'க்கு வந்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் உங்கள் விமர்சனம் பார்க்க வேண்டுமென பிடிவாதமாக இருந்தேன். நல்லதாகப் போயிற்று.

படத்தின் முழுக் கதையையும் சொல்லிவிட்டீர்கள். (வழமையாக இப்படிச் செய்ய மாட்டீர்கள்..என்னவாயிற்று?)
இனிமேல் இப்படிச் செய்ய வேண்டாம். உங்கள் பதிவுகளைப் பார்த்துவிட்டுத்தான் நல்ல படங்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து வருகிறேன். என்னைப் போல பலரும் இருப்பார்கள். நீங்களே இப்படிச் செய்தல் தகுமா? கிளைமேக்ஸையாவது சொல்லாமல் விட்டிருக்கலாம். :-(

//அந்த பாவப்பட்ட ஜீவனை அழுக வைத்து//

அழுக வைத்து அல்ல..அழ வைத்து..திருத்தி விடுங்கள்.

இதே போன்று 'ராட்டினம்' என்றும் ஒரு படம் வந்திருக்கிறது. நீங்களும் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். (அதைப் பார்த்துத்தான் நான் படத்தைப் பார்த்தேன்.நல்ல படம்.)

இம் மாதிரியான படங்களை வரவேற்கலாம். சுசீந்திரனின் முந்தைய திரைப்படங்களில் ராஜபாட்டை தவிர அனைத்துமே நல்ல படங்கள்தான்.. இனிமேலும் இவ்வாறே தொடர வேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..க்ளைமேக்ஸையாவது விட்டு விட்டு :-)

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, சௌக்கியமா..??? வழக்கம் போல விமர்சனம் அருமை... படத்தை பார்த்திர வேண்டியதுதான்.]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[raj anand said...

links for tamil novels pdf free download.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஆனந்த்..!

உண்மைத்தமிழன் said...

[[[எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் உண்மைத் தமிழன் அண்ணா,

உங்கள் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். இப்பொழுது கூட உங்கள் 'தலைவா'வைப் பார்த்துவிட்டுத்தான் 'ஆதலால் காதல் செய்வீர்'க்கு வந்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் உங்கள் விமர்சனம் பார்க்க வேண்டுமென பிடிவாதமாக இருந்தேன். நல்லதாகப் போயிற்று.

படத்தின் முழுக் கதையையும் சொல்லிவிட்டீர்கள். (வழமையாக இப்படிச் செய்ய மாட்டீர்கள்.. என்னவாயிற்று?) இனிமேல் இப்படிச் செய்ய வேண்டாம். உங்கள் பதிவுகளைப் பார்த்துவிட்டுத்தான் நல்ல படங்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து வருகிறேன். என்னைப் போல பலரும் இருப்பார்கள். நீங்களே இப்படிச் செய்தல் தகுமா? கிளைமேக்ஸையாவது சொல்லாமல் விட்டிருக்கலாம்.:-(]]]

இனிமேல் முழுக் கதையையு்ம் சொல்லாமல் இருக்க முயல்கிறேன் நண்பரே..!

[[[//அந்த பாவப்பட்ட ஜீவனை அழுக வைத்து//

அழுக வைத்து அல்ல.. அழ வைத்து.. திருத்தி விடுங்கள்.]]]

நன்றி..!

[[[இதே போன்று 'ராட்டினம்' என்றும் ஒரு படம் வந்திருக்கிறது. நீங்களும் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். (அதைப் பார்த்துத்தான் நான் படத்தைப் பார்த்தேன். நல்ல படம்.)
இம்மாதிரியான படங்களை வரவேற்கலாம். சுசீந்திரனின் முந்தைய திரைப்படங்களில் ராஜபாட்டை தவிர அனைத்துமே நல்ல படங்கள்தான்.. இனிமேலும் இவ்வாறே தொடர வேண்டும்.
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. க்ளைமேக்ஸையாவது விட்டு விட்டு :-)

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்]]]

வருகைக்கு மிக்க நன்றி ரிஷான்..!

SANKAR said...

படத்தின் தலைப்பு ஆதலினால் காதல் "மட்டும்" செய்வீர் என்று இருக்கவேண்டும்-சங்கர் திருநெல்வேலி

உண்மைத்தமிழன் said...

[[[SANKAR said...

படத்தின் தலைப்பு ஆதலினால் காதல் "மட்டும்" செய்வீர் என்று இருக்க வேண்டும் - சங்கர் திருநெல்வேலி]]]

இதுவும் நல்லாத்தான் இருக்கு சங்கர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆதலினால் காதல் செய்வீருக்கு பின்னூட்டம் போட்டேன், என்னமோ தெரியலை பப்ளிஷ் ஆகலைபொரு வேளை ஸ்பாம்ல இருக்கலாம்.
சொல்ல வந்தது இதான், பின்னூட்டத்தில் ஒருத்தர் பழைய தெலுங்கு படத்தின் கதைனு சொல்லி இருந்தார்ல, அந்த தெலுகு படம் ரீமாசென், உதய் கிரண் நடிச்ச சித்ரம். படிக்கும் போதே காதல், கர்ப்பம், கருக்கலைக்க முயற்சி, பலிக்காமல் கல்யாணம், அப்புறம் பிரிவு, ஆனால் கிளைமேக்சில ஒன்னா குழந்தையோட படிக்க போவாங்கோ :-)) இப்போலாம் ஹிட்டான படத்தை பட்டி ட்ங்கரிங் பார்த்து புதுக் கதைனே சொல்லிடுறாங்க போல இருக்கு :-)0
சுஜாதா,மைக் மோகன், பூர்ணிமா எல்லாம் நடிச்ச விதி படம், ஆதலினால் விட நல்ல படம் எனலாம், ஹி...ஹி அதுல கூட மகாபலிபுரத்துல ரூம் போடுவாங்கோ :-))]]]

நன்றி வவ்வால்ஜி..!

விதி படத்தின் திரைக்கதை வேறல்லவா..? அதிலும் கோர்ட் சீன், வசனமெல்லாம் படத்தை எங்கயோ கொண்டு போயிருச்சு.. இதுல அந்தக் குழந்தையோட அழுகை ரசிகர்களையும் அழுக வைச்சிருச்சு..!