25-10-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எனக்கு மட்டும் ஏன் இப்படீன்னு தெரியலை..! ஏதாவது முக்கியமான விஷயம்ன்னு புரோகிராம் போட்டா, அன்னிக்குத்தான் அத்தனை கெரகங்களும் ஒண்ணா சேர்ந்து விளையாட்டு காட்டுதுக..!
இன்னிக்கு ஆபீஸுக்கு காலைல 10 மணிக்குள்ள வந்தாகணும்ன்னு உத்தரவு..! காலைல 8.25-க்கெல்லாம் வீட்ல இருந்து கிளம்பிட்டேன்.. ஜாபர்கான்பேட்டைக்குள்ள வரும்போது டூவீலரின் செயின் கழன்றுச்சு.. பக்கத்துல அப்போதுதான் ஒரு மெக்கானிக் கடையைத் திறந்திருந்தாங்க. சின்னப் பையன்தான் இருந்தான். “கடை ஓனர் வராமல் நான் எதுவும் செய்ய மாட்டேண்ணே..!” என்றான். எனக்கு இருக்கிற அவசரத்தைச் சொல்லி கால்ல விழுகாத குறையா கெஞ்சின பின்னாடி, பரிதாபப்பட்டு செயினை சரி செஞ்சு கொடுத்தான்..
அவசரமா வண்டியைக் கிளப்பிட்டு போனா.. கிண்டி ஒலிம்பியா தாண்டி மேம்பாலத்துக்கு கீழ வரும்போது செயின் உடைஞ்சு வண்டி நின்றுச்சு.. விதியேன்னு நினைச்சு அப்படியே வண்டியை தள்ளிட்டுப் போனா கூப்பிடு தூரத்துலேயே மெக்கானிக் கடை(இந்த வழி செஞ்சு கொடுக்குறதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை அந்தப் பரதேசியப் பயபுள்ளைக்கு..!) “ஸ்பேர் பார்ட்ஸ் கடை 10 மணிக்குத்தான் திறக்கும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸார்”ன்னாரு மெக்கானிக். விதியே என்று நின்றிருந்தேன்.
வவுத்துப் பசியைத் தீர்க்க அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயை அடித்து முடித்த பின்புதான் தெரிந்தது கையில் 200 ரூபாய்தான் உள்ளது என்று..! அடித்துப் பிடித்து அந்த வழியே சென்ற ஆட்டோவில் ஏறி கிண்டி பேருந்து நிலையத்திற்கு வந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த மெக்கானிக் கடைக்கு அவசரமா வேறொரு ஆட்டோவை பிடித்து வந்து சேர்ந்தேன்..!
எஃப்.எம்.மில் தோல்வி நிலையென நினைத்தால் பாடலை கேட்டபடி கடையில் இருந்த நேரத்தில்தான் தெரிந்தது வீட்டில் இருந்து கொண்டு வந்த எனது பேக்கை ஜாபர்கான்பேட்டை மெக்கானிக் கடையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்பது..! மீண்டும் ஆட்டோ.. 50 ரூபாய்தான் தருவேன் என்றால் மேலும், கீழுமாய் பார்க்கிறார்கள் ஆட்டோ அண்ணன்மார்கள்.. 80-லேயே 5 பேர் உறுதியாய் நிற்க.. இனியும் தாமதித்தால் நமக்குத்தான் கஷ்டம் என்றெண்ணி அந்தத் தொகைக்கே சவாரி செய்து அவர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துவிட்டேன்..! கெட்டதுலேயும் ஒரு நல்லது.. அந்தச் சின்னப் பையனே பேக்கை பத்திரமாக எடுத்து கடையில் வைத்திருந்தான்.. நன்றி சொல்லி அதை எடுத்துக் கொண்டு மீண்டும் வேறொரு ஆட்டோவில் அதே 80 ரூபாய் செலவில் கிண்டி மெக்கானிக் கடைக்கு பயணம்..!
இப்போது இந்தக் கடையில் வேலை செய்யும் பையன்தான் இருந்தான். கடைக்காரனை காணவில்லை. “அவரோட வீட்ல இருந்து ஒரு முக்கியமான போன் வந்துச்சு ஸார். அதான் என்னைய பார்த்துக்கச் சொல்லிட்டு போயிட்டாரு.. இருங்க.. நான் செஞ்சர்றேன்..” என்று சொல்ல எனக்கு பொசுக்கென்றானது.. அந்தப் பையன் இப்போதுதான் தொழில் கத்துக்குறான் போலிருக்கு.. எந்த வகை ஸ்பானரை பயன்படுத்தணும்னு கூட தெரியலை.. ஒவ்வொரு ஸ்பானாரையும் மாட்டிப் பார்த்துதான் கழட்டினான்.. யாரை நோவுவது என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தேன்..!
இந்தப் பையனும் முடிக்கிற பாடில்லை.. அதற்குள்ளாக 4 கடை தள்ளி இன்னொரு கடை வைத்திருந்த மெக்கானிக் அவசரமாக இந்தக் கடைக்கு வந்தார்.. “ரவி போன் செஞ்சு சொன்னாப்புல. ஏதோ அவசரத்துல இருக்கீங்களாம்.. இந்தப் பயலுக்கு சரியா தெரியாது.. என்னைய செய்யச் சொன்னான்..” என்று என்னிடம் சொல்லிவிட்டு துழாவிக் கொண்டிருந்த பையனை “டேய் தள்ளுடா..”ன்னு சொல்லிட்டு 20 நிமிடத்தில் அனைத்தையும் மாட்டிக் கொடுத்துவிட்டார்..!
“பணத்தை அந்தப் பையன்கிட்டயே கொடுத்திட்டு போயிருங்க..” என்று சொல்லிவிட்டு அவர் போக.. பில்லை நீட்டினான் அந்தப் பையன்.. செயின் மற்றும் செயின் வீலும் சேர்த்து 620 ரூபாய். பேரிங் 120. மெக்கானிக் சார்ஜ் 180.. ஆக மொத்தம் 920. இதில் நான்கு முறை ஆட்டோவில் பயணம்.. 80+80+40+40 ஆக 240 ரூபாய்.. இந்தக் காலையிலேயே 1160 ரூபா அவுட்டு..!
இந்த நாளின் பிரமாதமான துவக்கத்தோடு அலுவலகம் வந்து சேர்ந்தபோது மணி 11.20. இன்னிக்கு நான்தான் கடைசி ஆள்..! நல்லவேளை.. பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் நாரதர்கள் யாரும் என் அலுவலகத்தில் இல்லை என்பதால் தப்பித்தேன்..!
நேத்தெல்லாம் இது போன்று நடந்திருக்கலாம்.. அல்லது முந்தாநாள்.. அவசரம் இல்லாத நாட்களில் நடந்து தொலைந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு ஒரு வேலை வரும்போதுதான் இது போன்ற தடங்கல்கள் ஆயிரம் கூடவே வரும்.. பல முறை இது போன்ற சம்பவங்களை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்..! எப்படியாச்சும் சீக்கிரமா முடிக்கணும்னு ஒரு வேலையை ஆரம்பிச்சேன்னா.. அதுக்கு ஆயிரத்தெட்டு தடைக்கற்கள் வந்து நிற்கும்.. தடுக்கி விழும்போது தூக்கிவிடவும் பக்கத்தில் ஆள் இருப்பார்கள். அதே சமயம் அடியும் வாங்கத்தான் வேண்டும்.. இதுதான் நான் வாங்கி வந்த வரம்..!
ஏதோ புலம்பணும்னு தோணுச்சு.. புலம்பிட்டேன்..!

|
Tweet |
34 comments:
என்ன பண்றதுண்ணா? சில நேரம் இப்படித்தான்... சந்தர்ப்பம் சூழ்நிலை தவிர வேறென்ன... மனசை சமாதானமாக்கிக்கொள்ள வேண்டியதுதான்!
இதைத்தான் பட்ட காலிலே படும் என்று சொல்லி வச்சுருக்காங்க. துன்பம் எப்பவுமே ஒத்தையா வராது. கூட ஒரு பத்து வந்தாத்தான் அதுக்குத் திருப்தி.
போகட்டும் ,.... இவ்ளோ செலவு பண்ணக்கூடிய நிலையில் வச்சுருக்கானே அதுக்கே நாம் நன்றி சொல்லிக்கணும் அந்தக் கோவணாண்டிக்கு.
காசுக்கும் அலைய வேண்டி இருந்தால்.... ஐயோ அந்தக் கஷ்டம் வேணவே வேணாம்.
ஹேவ் அ குட் டே!
அண்ணாச்சி,
ரொம்ப கஷ்டம் தான் :-((
ஆனாலும் வண்டிய மெக்கானிக் ஷாப்பில் விட்டுட்டு இன்னும் ஒரு ஹவர்ல வந்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு அலுவலகம் வந்து தலைய காட்டிட்டு பின்னர், ஏடிஎம் எல்லாம் போய் பணம் தேத்திக்கிட்டு வன்டிய எடுத்துக்கலாம்னு தோனவே மாட்டேன்குதே... ஆரோக்கியா பால் வாங்கி காபி போட்டு குடிங்க :-))
ஒருமுறை இந்த மாதிரி பட்டால் இது போன்றது வர பல நாட்கள் ஆகும்.. அதனால நிம்மதியா இருங்க...
வவ்வால் said
எனக்கு தோனினதேதான் உங்களுக்கும் தோனிச்சி ஆனா அந்தநேரத்துல யாருக்கும் தோனாது.
Dont worry. All these happens to everybody at all times. thank your stars that you are here to narrate and share your bad experience. For many, things have gotten even worse.
Problems dont come alone. We have to brave it to survive. My sympathies to you.
அஞ்சி வருஷத்துக்கு ஒருக்காவாவது வண்டிய சர்வீஸ் உடனும்ணே.
ஆனாலும் வண்டிய மெக்கானிக் ஷாப்பில் விட்டுட்டு இன்னும் ஒரு ஹவர்ல வந்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு அலுவலகம் வந்து தலைய காட்டிட்டு பின்னர், ஏடிஎம் எல்லாம் போய் பணம் தேத்திக்கிட்டு வன்டிய எடுத்துக்கலாம்னு தோனவே மாட்டேன்குதே... ஆரோக்கியா பால் வாங்கி காபி போட்டு குடிங்க///////
அண்ணன் அப்படித்தான் பண்ணாரு!!!பதிவுக்காக இப்படி!!!ஒரு சுவாரஸ்யம் இருக்கணும் இல்ல.
Read more: http://truetamilans.blogspot.com/2012/10/blog-post_25.html#ixzz2AOGJEUGM
//அஞ்சி வருஷத்துக்கு ஒருக்காவாவது வண்டிய சர்வீஸ் உடனும்ணே.// super nakkal!!!
ஷங்கர்ஜி,
//அஞ்சி வருஷத்துக்கு ஒருக்காவாவது வண்டிய சர்வீஸ் உடனும்ணே.//
பாசமிகு,நேசமிகு பண்பாளர் அண்ணாச்சியை கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் :-))
சுமார் கடந்த அம்பது ஆண்டுகளாகவே சர்வீஸ் சென்டர் பக்கம் ஒதுங்கியிராத அண்ணாச்சியை அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய சொல்வது தமிழர் பண்பாடா?
(எதுக்கெல்லாம் தமிழர் பண்பாட்டை இழுக்குறாய்ங்களேன்னு திட்டுறது கேட்குது)
சீக்கிரம் கார் வாங்கி இப்படி பேசுறவங்க மூக்கை உடைங்க அண்ணாச்சி!!!
i repeat what thulasigopal have said
இப்படித் தான் சில நேரங்களிலில் தொல்லைகள் தொடர்ந்து வருவதுண்டு! நானும் பட்டிருக்கிறேன்
தொல்லையான அனுபவத்தினை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்! இது போன்ற அவஸ்தைகள் நானும் பட்டிருக்கிறேன்!
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...ன்னு ஒரு தனிப்பாடல் இருக்குதுண்ணே! அடி மேலே அடி விழுமாம் சில பேருக்கு! புலம்பினாலும் சுவாரசியமா இருக்கு! :-)
[[[Caricaturist Sugumarje said...
என்ன பண்றதுண்ணா? சில நேரம் இப்படித்தான். சந்தர்ப்பம் சூழ்நிலை தவிர வேறென்ன. மனசை சமாதானமாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!]]]
எழுதியாவது சமாதானம் ஆகிக்கலாம்னு பார்த்தேன். அதனாலதான் இந்தப் பதிவு..!
[[[துளசி கோபால் said...
இதைத்தான் பட்ட காலிலே படும் என்று சொல்லி வச்சுருக்காங்க. துன்பம் எப்பவுமே ஒத்தையா வராது. கூட ஒரு பத்து வந்தாத்தான் அதுக்குத் திருப்தி. போகட்டும். இவ்ளோ செலவு பண்ணக் கூடிய நிலையில் வச்சுருக்கானே.. அதுக்கே நாம் நன்றி சொல்லிக்கணும் அந்தக் கோவணாண்டிக்கு. காசுக்கும் அலைய வேண்டி இருந்தால் ஐயோ அந்தக் கஷ்டம் வேணவே வேணாம்.
ஹேவ் அ குட் டே!]]]
முடியல டீச்சர்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஜவ்வா இழுத்துக்கிட்டே இருக்கறது..! முடிவா அவன் என்னதான் சொல்றான்னு கேட்டுச் சொல்லுங்க..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, ரொம்ப கஷ்டம்தான் :-((
ஆனாலும் வண்டிய மெக்கானிக் ஷாப்பில் விட்டுட்டு இன்னும் ஒரு ஹவர்ல வந்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு அலுவலகம் வந்து தலைய காட்டிட்டு பின்னர், ஏடிஎம் எல்லாம் போய் பணம் தேத்திக்கிட்டு வன்டிய எடுத்துக்கலாம்னு தோனவே மாட்டேன்குதே... ஆரோக்கியா பால் வாங்கி காபி போட்டு குடிங்க :-))]]]
ஐயா வவ்வால் துரை..!
ஆபீஸ் இருக்குறது பெருங்குடில.. அங்க பஸ்ஸை புடிச்சு போய்ச் சேர்றதுக்கே 12 மணியாயிரும்.. திரும்பவும் தி.நகர்ல ஒரு நிகழ்ச்சி.. அதுக்குப் போயிட்டு தேனாம்பேட்டை போயிட்டு அப்புறமாத்தான் வீட்டுக்கு வரணும்.. இதுல வண்டியை எப்படி விட்டுப்புட்டு போறது..? எனக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கு தலைவா..?
[[[ஸ்கூல் பையன் said...
ஒரு முறை இந்த மாதிரி பட்டால் இது போன்றது வர பல நாட்கள் ஆகும்.. அதனால நிம்மதியா இருங்க...]]]
என்னத்த நிம்மதியா இருக்குறது..? இதெல்லாம் நமக்கு வாரந்தோறும் வர்ற கேஸுங்க..!
[[[agaligan said...
வவ்வால் said
எனக்கு தோனினதேதான் உங்களுக்கும் தோனிச்சி ஆனா அந்த நேரத்துல யாருக்கும் தோனாது.]]]
எனக்கும் தோணிச்சு.. ஆனா சாயந்தரம் அதே வழில வர முடியாது.. வேறு வேலைகள் இருந்ததால வண்டியை உடனேயே எடுத்தாக வேண்டிய கட்டாயம்..!
[[[Shankar said...
Dont worry. All these happens to everybody at all times. thank your stars that you are here to narrate and share your bad experience. For many, things have gotten even worse.
Problems dont come alone. We have to brave it to survive. My sympathies to you.]]]
சங்கர் ஸார்.. நிறைய பேருக்கும் இதே மாதிரி நடக்கத்தான் செய்யுது.. ஆனால ரொம்ப நிறைய பேருக்கு நடக்குறதே இல்லை..! இந்த வித்தியாசம்தான் என்னை மாதிரி ஆளுகளை புலம்ப வைக்குது..!
[[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அஞ்சி வருஷத்துக்கு ஒருக்காவாவது வண்டிய சர்வீஸ் உடனும்ணே.]]]
தம்பீ.. 6 மாசத்துக்கு ஒரு தடவை சர்வீஸ் செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன்..!
[[[ssr sukumar said...
ஆனாலும் வண்டிய மெக்கானிக் ஷாப்பில் விட்டுட்டு இன்னும் ஒரு ஹவர்ல வந்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு அலுவலகம் வந்து தலைய காட்டிட்டு பின்னர், ஏடிஎம் எல்லாம் போய் பணம் தேத்திக்கிட்டு வன்டிய எடுத்துக்கலாம்னு தோனவே மாட்டேன்குதே... ஆரோக்கியா பால் வாங்கி காபி போட்டு குடிங்க///////
அண்ணன் அப்படித்தான் பண்ணாரு!!! பதிவுக்காக இப்படி!!! ஒரு சுவாரஸ்யம் இருக்கணும் இல்ல.]]]
இதுக்கு நீங்க பின்னூட்டமே போடாமல் இருந்திருக்கலாம் பிரதர்..!
[[[ssr sukumar said...
//அஞ்சி வருஷத்துக்கு ஒருக்காவாவது வண்டிய சர்வீஸ் உடனும்ணே.//
super nakkal!!!]]]
இருக்கும் ஸார் இருக்கும்..!
[[[வவ்வால் said...
ஷங்கர்ஜி,
//அஞ்சி வருஷத்துக்கு ஒருக்காவாவது வண்டிய சர்வீஸ் உடனும்ணே.//
பாசமிகு, நேசமிகு பண்பாளர் அண்ணாச்சியை கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் :-))
சுமார் கடந்த அம்பது ஆண்டுகளாகவே சர்வீஸ் சென்டர் பக்கம் ஒதுங்கியிராத அண்ணாச்சியை அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய சொல்வது தமிழர் பண்பாடா? (எதுக்கெல்லாம் தமிழர் பண்பாட்டை இழுக்குறாய்ங்களேன்னு திட்டுறது கேட்குது) சீக்கிரம் கார் வாங்கி இப்படி பேசுறவங்க மூக்கை உடைங்க அண்ணாச்சி!!!]]]
காரா..? யாராவது வாங்கிக் கொடுத்தால்கூட ஓட்டத் தெரியாது..! நமக்கு ஒட்டுறதுதான் ஒட்டும் வவ்வால்ஜி..!
[[[siva gnanamji(#18100882083107547329) said...
i repeat what thulasigopal have said.]]]
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஐயா..!
உங்களது கவனிப்பில் நான் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது..!
[[[புலவர் சா இராமாநுசம் said...
இப்படித்தான் சில நேரங்களிலில் தொல்லைகள் தொடர்ந்து வருவதுண்டு! நானும் பட்டிருக்கிறேன்.]]]
படாதவர்கள் யாரும் இல்லையாமே..? ஆனால் பட்டுக் கொண்டே இருப்பது என்ன மாதிரியான தலையெழுத்து என்றுதான் புரியவில்லை ஐயா..!
[[[s suresh said...
தொல்லையான அனுபவத்தினை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்! இது போன்ற அவஸ்தைகள் நானும் பட்டிருக்கிறேன்!]]]
ஆஹா.. பங்காளிகள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போவுதே..? நன்றி சுரேஷ் ஸார்..!
[[[சேட்டைக்காரன் said...
ஆவீன மழை பொழிய இல்லம் வீழன்னு ஒரு தனிப்பாடல் இருக்குதுண்ணே! அடி மேலே அடி விழுமாம் சில பேருக்கு! புலம்பினாலும் சுவாரசியமா இருக்கு! :-)]]]
தயவு செய்து இந்தப் பதிவைப் படித்துப் பார்க்கவும் : http://truetamilans.blogspot.com/2010/03/blog-post_24.html
Annnee..Murphy's law nu google la oru search pootu parunga..;)
எல்லாம் ‘நம்ம’ முருகனின் திருவிளையாடல் தான் ...!
[[[Ramesh said...
Annnee.. Murphy's lawnu googlela oru search pootu parunga..;)]]]
ரமேஷ்.. இதுவெல்லாம் எந்த விதிகளுக்குள்ளும் சிக்காதவை.. இறைவன் விதித்தது..!
[[[தருமி said...
எல்லாம் ‘நம்ம’ முருகனின் திருவிளையாடல்தான் ...!]]]
அதே.. அதே.. அந்தப் பரதேசியாலத்தான இவ்வளவு பிரச்சினையும்..!
இப்படி யோசியுங்கள்! நீங்கள் மட்டும் அன்னிக்கு கரெக்ட் டைம்ல போயிருந்தா உங்களுக்கு இதைவிட பெரிய சங்கடங்கள் வந்திருக்க்கலாம்! முருகன் உங்கள் மீது கொண்ட அன்பே இத்தனை சின்ன சிரமம் உங்களுக்கு!
Post a Comment