சதுரங்கம்-வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சி

03-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன்முதலில் வலைப்பதிவர்களுக்காக 'மந்திரப் புன்னகை' படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சியை ஏற்பாடு செய்து, நம்மை பெருமைப்படுத்திய இயக்குநர் கரு.பழனியப்பன், வலைப்பதிவர்களை மீண்டும் ஒரு முறை அன்போடு அழைக்கிறார்..!


தனது முதல் படமான 'பார்த்திபன் கனவு' படத்திற்குப் பின்பு இரண்டாவது படமாக 'சதுரங்கம்' என்னும் திரைப்படத்தை 2005-ம் ஆண்டு இயக்கியிருந்தார் பழனியப்பன். 

இதில் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன், சரண்யா, மனோபாலா, மகாதேவன், இளவரசு போன்றோர் நடித்திருந்தனர். திவாகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 

ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு அரசியல்வியாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளும், இதனால் வெகுண்டெழும் அந்தப் பத்திரிகையாளனின் சூரசம்ஹாரமும்தான் இந்தப் படத்தின் கதை என்று, ஒரு கழுகார் கூறுகிறார்..! 


இந்தத் திரைப்படம் சில வணிகக் காரணங்களினால் இதுவரையிலும் வெளிவராமல் இருந்தது. இப்போது கடைசியாக, 6 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி வியாழக்கிழமையன்று இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

வலைப்பதிவர்களுக்காக இத்திரைப்படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சி, வரும் அக்டோபர் 6-ம் தேதி மாலை 6.15 மணிக்கு சென்னை சாலிக்கிராமம், பிரசாத் பிரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னைவாழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இத்திரைப்படத்தை காண வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறார் படத்தின் இயக்குநர் கரு.பழனியப்பன்.

'மந்திரப்புன்னகை' திரைப்பட சிறப்புக் காட்சியின்போதே இயக்குநர் பழனியப்பன் சொல்லியிருந்த “வாக்குறுதி” இப்போதும் அமலில் இருப்பதால், படம் நமக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவோம். மாற்றுக் கருத்து இருந்தால் அதனையே விருப்பு, வெறுப்பில்லாமல் முன் வைப்போம்..! 

வாருங்கள்..!  


31 comments:

Anonymous said...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

அக்டோபர் 6 வெள்ளிக்கிழமையல்ல... வியாழக்கிழமை என்பதை மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

Philosophy Prabhakaran said...

வார நாட்களில் வைத்திருப்பதால் வர முடியாமல் போனது வருத்தமே... இருப்பினும் அந்த இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் வரேன். உங்களுக்கு போன் செய்தால் போதுமா?

சசிகுமார் said...

பதிவர்களை மதித்து சிறப்பு காட்சியை காண்பிக்கும் இயக்குனருக்கு என் மனதார பாராட்டுக்கள்... மற்றும் பதிவர்களும் படத்தை பார்த்து மாற்று கருத்து இருந்தால் உங்கள் விமர்சனத்தை ஆக்க பூர்வமாக எழுதுங்கள்..

Sivakumar said...

Thanks for the info. I have time to attend such shows only on sat and sundays because of work.

DHANS said...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

Right now i am not in chennai and cant able to come. I shall see it in theaters coming weekend.

உண்மைத்தமிழன் said...

[[[ஷீ-நிசி said...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.]]]

நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

அக்டோபர் 6 வெள்ளிக்கிழமையல்ல... வியாழக்கிழமை என்பதை மிகுந்த பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...]]]

தவறுக்கு மன்னிக்கணும்ண்ணே..! திருத்திட்டேண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

வார நாட்களில் வைத்திருப்பதால் வர முடியாமல் போனது வருத்தமே... இருப்பினும் அந்த இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...]]]

லீவு போட்டுட்டு வாங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் வரேன். உங்களுக்கு போன் செய்தால் போதுமா?]]]

போதும்ண்ணே..! வரும்போது உங்க பிளாக் சுற்றத்தையும் அள்ளிட்டு வாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

பதிவர்களை மதித்து சிறப்பு காட்சியை காண்பிக்கும் இயக்குனருக்கு என் மனதார பாராட்டுக்கள்... மற்றும் பதிவர்களும் படத்தை பார்த்து மாற்று கருத்து இருந்தால் உங்கள் விமர்சனத்தை ஆக்கபூர்வமாக எழுதுங்கள்..]]]

நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

Thanks for the info. I have time to attend such shows only on sat and sundays because of work.]]]

பரவாயில்லை நண்பரே.. சனி, ஞாயிறுகளில் போட முடியாத நிலைமை.. மன்னிக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[DHANS said...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

Right now i am not in chennai and cant able to come. I shall see it in theaters coming weekend.]]]

பரவாயில்லை நண்பரே.. அடுத்த முறை சந்திப்போம்..!

Mr.Vikatan said...

thalaiva id card kondu varanuma?

Roaming Raman said...

படம் வெற்றியடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

//லீவு போட்டுட்டு வாங்கண்ணே..!- உண்மைத்தமிழன்//
அன்னிக்கு எல்லாருக்கும் பண்டிகை லீவுதானே அண்ணே?
எனக்கு வாய்ப்பு தவறிப் போகிறது- ஊர் மாறிவிட்டதால்!

மேவி... said...

எனக்கு லீவ் தான் ...வர பார்க்கிறேன், அப்படியே சாலிகிராமத்துல இருக்குற மூலிகை உணவகத்துக்கு போகலாம்ன்னு இருக்கேன்

IlayaDhasan said...

கரு ஒரு நல்ல படைப்பாளி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

உண்மைத்தமிழன் said...

[[[Mr.Vikatan said...

thalaiva id card kondu varanuma?]]]

விகடனாரே.. உமக்கு மட்டும் அடையாள அட்டை காட்டினால்தான் அனுமதி..!

உண்மைத்தமிழன் said...

[[[Roaming Raman said...

படம் வெற்றியடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி நண்பரே..!

//லீவு போட்டுட்டு வாங்கண்ணே..!- உண்மைத்தமிழன்//

அன்னிக்கு எல்லாருக்கும் பண்டிகை லீவுதானே அண்ணே? எனக்கு வாய்ப்பு தவறிப் போகிறது- ஊர் மாறிவிட்டதால்!]]]

அதனால் என்ன.. தியேட்டரில் அவசியம் பார்த்துவிடுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[மேவி said...

எனக்கு லீவ்தான்... வர பார்க்கிறேன், அப்படியே சாலிகிராமத்துல இருக்குற மூலிகை உணவகத்துக்கு போகலாம்ன்னு இருக்கேன்.]]]

அவசியம் வாங்க மேவி..!

உண்மைத்தமிழன் said...

[[[IlayaDhasan said...

கரு ஒரு நல்ல படைப்பாளி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.]]]

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே..!

சூனிய விகடன் said...

பார்த்திபன் கனவு பார்த்த போதே கரு.பழனியப்பன் சரக்கு தெரிந்து போனது....சிவப்பதிகாரம் வந்தபோது முடிவுக்கே வந்து விட்டேன்...இடையில் பிரிவோம் சிந்திப்போம் வந்து கொஞ்சம் மறுபடியும் நம்பிக்கை துளிர்த்தது.....மந்திரப்புன்னகையில் மீனாட்சியை கதாநாயகியாக தேர்வு செய்தபோது இவரின் ரசனை மேல் ஒரு பயங்கரக்கோபம் வந்தது. கரு.பழனியப்பன் தன்னையும் தொந்தரவு செய்து கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்துகிறார் என்றுதான் நினைக்கிறேன்....

Mr.Vikatan said...

@Soonia vikatan enna solla varaaru? Varuvaara? Mataara?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

பார்த்திபன் கனவு பார்த்தபோதே கரு.பழனியப்பன் சரக்கு தெரிந்து போனது. சிவப்பதிகாரம் வந்தபோது முடிவுக்கே வந்து விட்டேன். இடையில் பிரிவோம் சிந்திப்போம் வந்து கொஞ்சம் மறுபடியும் நம்பிக்கை துளிர்த்தது. மந்திரப் புன்னகையில் மீனாட்சியை கதாநாயகியாக தேர்வு செய்தபோது இவரின் ரசனை மேல் ஒரு பயங்கரக் கோபம் வந்தது. கரு.பழனியப்பன் தன்னையும் தொந்தரவு செய்து கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்துகிறார் என்றுதான் நினைக்கிறேன்.]]

சூனியம்.. ஏன் இப்படி சூனியமாகவே பேசுகிறீர்கள்..? அவரவர் ரசனை ஒன்று போலவா இருக்கும்.. எனக்கும், என் நண்பர்களுக்கும் அப்படி இல்லை.. அவர் ஒரு சிறந்த இயக்குநர்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Mr.Vikatan said...

@Soonia vikatan enna solla varaaru? Varuvaara? Mataara?]]]

வருவாருன்னுதான் நினைக்கிறேன்..!

aotspr said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நன்றி,
கண்ணன்]]]

மிக்க நன்றி கண்ணன்..!

உண்மைத்தமிழன் said...

குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்திருந்து பெருமைப்படுத்திய வலைப்பதிவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும், வாசக தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

நித்யன் said...

மிக்க நன்றி அண்ணே...

மனைவி குழந்தையுடன் வந்து படம் பார்த்தேன். படம் முடிந்தவுடன் படம் குறித்தும் மற்றும் பல விடயங்கள் குறித்தும் இயக்குநர் கரு. பழனியப்பன் அவர்களிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. திறந்த மனதுடன் உரையாடிய இயக்குநருக்கு மிகுந்த நன்றிகள்.

இப்படிப்பட்ட வாய்ப்புகள் தலைநகரில் இருப்பதால்தான் அமைகினறன.

மீண்டும் உங்களுக்கு நன்றிகள் பல...

அன்பு நித்யன்

உண்மைத்தமிழன் said...

வருகைக்கு நன்றி நித்யன். இது போல் தொடர்ச்சியான தங்களுடைய ஒத்துழைப்பை நல்குகிறேன்..!