சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி - சினிமா விமர்சனம்

10-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஏற்கெனவே மதுரை டூ தேனீ - வழி ஆண்டிப்பட்டி என்கிற வித்தியாசமான தலைப்பில் பேருந்து ரூட்டை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்த அதே நிறுவனம், அதே போன்று ஒரு வித்தியாசமான தலைப்பையும், சம்பவ சூழ்நிலையையும் மையமாக வைத்து இப்படி எடுத்திருக்கிறார்கள்..!

ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்குத் துவங்கும் கதை, அடுத்த வார சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு முடிவடைகிறது..!




மகா என்னும் காதலி, சக்தி என்னும் காதலனை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்வதற்காக வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் ஓடி வருகிறாள்.

அவளுக்காகக் காத்திருக்கும் காதலன் சக்தி அவள் சொன்ன நேரத்துக்கு வராததால் அவளைத் தேடுகிறான். அவளது பெற்றோர்கள் தேடுகிறார்கள். போலீஸ் தேடுகிறது.. அவளைக் கடைசியில் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதைத்தான் ஒரு வார எபிஸோட் கதையாக எடுத்துத் தந்திருக்கிறார்கள்.

HDSLR  என்னும் சமீபத்திய அதிநவீன கேமிராவில் படத்தினை ஷூட் செய்திருக்கிறார்கள். இது ஸ்டில் கேமிரா.. ஆனால் மூவியையும் பதிவு செய்ய முடியும்.. இந்த கேமிராவை இதற்கு முன் ஹாலிவுட்டில் சில திரைப்படங்களில் சில காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க படம் ஸ்லம்டாக் மில்லினியர்.. ஆனால் இத்திரைப்படம் முழுவதையுமே இந்த ஸ்டில் கேமிராவில்தான் ஷூட் செய்திருக்கிறார்களாம். இதற்காக லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்தப் படக் குழு இடம் பெற்றிருக்கிறது.. வாழ்த்தலாம். வாழ்த்துகிறேன்..

படப்பதிவின் தரம் எப்படி இருக்குமோ என்று அவர்களுக்கு சந்தேகம் வந்ததோ தெரியவில்லை. திரைப்படத்தின் கதை முழுவதும் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்பறங்களில் பச்சைப் பசேல் என்ற இடங்களிலேயே நடப்பதாக எடுத்து முடித்திருக்கிறார்கள்.

புதுமுகங்களான சரத் ஹீரோவாகவும், மாலினி ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். ஹீரோ பரவாயில்லை என்ற ரகம்தான்.. அழுகைக் காட்சிகளில்கூட கண்ணீர் விடாமல் அழுக முயற்சிக்கிறார். நடிக்கவும் சிறிது முயற்சித்திருக்கிறார். அடுத்தப் படங்களில் இந்த முயற்சி தொடர்ந்தால் அவருக்கு நல்லது..

ஹீரோயினே சில காட்சிகளில் மட்டுமே வருவதால் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் பேருந்தில் போனில் பேசுகின்ற சின்னச் சின்ன காட்சிகளில் நடிப்புத்தனம் தெரிந்தது.. இன்னொரு படத்தில் 14 ரீலிலும் வர வேண்டி முருகனை வேண்டிக் கொள்வோம்..

படத்தில் மேற்கொண்டு நடித்தவர்கள் பலருமே அறிமுகங்கள் என்று நினைக்கிறேன்.. அதிலும் ஹீரோயினின் அம்மாவாக நடித்தவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மகளைக் காணோம் என்று அவருடைய பதட்டம் மட்டுமே முற்பாதியில் கொஞ்சம் திரையின் மீது கவனத்தை ஈர்க்க வைத்தது..

குடும்பத்தினரின் பல உறவுகளை இந்த ஒரு பிரச்சினையை வைத்தே அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு சின்ன விஷயத்திற்காக இயக்குநரை கொஞ்சூண்டு பாராட்டலாம்.. ஹீரோதான் போலீஸ் தேடும் நபர் என்பது தெரிந்தவுடனும் பின்பு போலீஸ் விசாரணையில் இருந்து விடுபட்ட பின்பும் நடக்கும் சம்பவங்கள்தான் படத்திற்கு மெயினானது. ஆனால் அங்கேதான் அழுத்தம் இல்லாமல் போய்விட்டது.

சஸ்பென்ஸ் திரில்லர் வகை என்று சொல்லக் கூடிய அளவுக்கு படத்தினை கொண்டு சென்றாலும் படம் முடிய அரை மணி நேரத்துக்கு முன்பாகவே நிறைய சினிமா பார்ப்பவர்களால் முடிவு என்ன என்பதை ஊகிக்க முடிகிறது. அதிலும் மூணாறில் தனத்தை போலீஸ் பிடித்தவுடனேயே அனைத்தும் விளங்கிவிட்டது.

இதற்காகவா இத்தனை நாட்கள் என்று சப்பென்றாகிவிட்ட காரணத்தினால் இதற்குப் பின் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. போலீஸ் ஒரு பக்கம் மும்முரமாகத் தேடிக் கொண்டிருக்க ஹீரோ திடீர் திடீரென்று தானே ஒரு சிபிஐ ஆபீஸரைப் போல் ஐடியாவைச் சொல்லித் தேடத் துவங்க.. படம் ஏதோ துப்பறியும் நாவல் படிப்பதைப் போலாகிவிட்டது..

இதில் இடையிடையே பாடல் காட்சிகளை வேறு வைத்துத் தொலைக்க பாட்டு முடிந்ததும் என்ன காட்சி வரும் என்றுதான் யோசிக்கத் தோன்றியது.

திரைக்கதையை செதுக்கியிருப்பதாகச் சொன்னாலும் ஹீரோ மட்டும் கண்டுபிடிப்பதுபோல் திரைக்கதை அமைத்திருப்பது மகா சறுக்கல். டீக்கடைக்காரரிடம் கேட்பதும், செல்போனை எடுப்பதும், இங்கேதான் மகா இருந்திருக்கா என்று ஹீரோ சொல்வதும் அடுத்தடுத்து வந்து தொலைக்க.. அதான் இவரே முடிச்சிட்டாருல்ல.. அப்புறமென்ன என்ற ஆயாசமும் சேர்ந்து வருகிறது.

படத்தில் இடைவேளைக்குப் பின்பு அரைமணி நேரம் கழித்துதான் சிரிக்கவே முடிந்தது என்றால் படத்தின் இயக்கம் எந்த அளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும் பாருங்கள்? வித்தியாசம் தேவைதான்.. ஆனால் அதையும் மக்கள் ரசிக்கும்படியாகத்தான் வேண்டும். இயக்குநருக்கு மிக, மிக டீசண்ட்டான திரைப்படமாக எடுக்க ஆசை இருந்திருக்கும். ஆனால் அதே சமயத்தில் மக்கள் ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தாரா..? சந்தேகம்தான்..

இப்போதைய வழமையான திரைப்படங்களைப் போல் லோக்கல் மக்களைப் பிடித்துப் போட்டு இயல்பான பேச்சுவழக்குகளை வசனத்தில் திணித்து காட்சியை படம் பிடித்துவிட்டால் படம் ஓடி விடும் என்று யார் சொன்னது..? இதைத்தான் இதில் செய்திருக்கிறார்கள்..

படத்தில் பிரதானமாகத் தெரிவது ஒன்றே ஒன்றுதான். அது ஒளிப்பதிவு.. ஹீரோயின் காட்டுக்குள் தப்பி ஓடுவது போன்ற ஒரு கனவுக் காட்சியில் அற்புதமாக இருந்தது ஒளிப்பதிவு.. வெறும் ஒளிப்பதிவை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய..? சாதாரண சினிமா ரசிகனுக்கு ஒளிப்பதிவே தேவையில்லையே..?

படம் பற்றி வேறொன்றும் சொல்வதற்கில்லை.. குத்துப்பாட்டு இல்லை.. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. கண்ணை உறுத்தும் காஸ்ட்யூம்களும், நடனக் காட்சிகளும் இல்லை. இதுவெல்லாம் இல்லாமல் இருந்தாலே படம் ஓடும் என்றால், தூர்தர்ஷனில் வரும் நாடகங்களைக்கூட சினிமாவாக்கி வெளியிடலாமே..?

ஏற்கெனவே தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இது போன்ற திரைப்படங்களும் நிறைய தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் போனால் நஷ்டம் அடுத்து வரும் திரைப்படங்களையும் பாதிக்கும் என்பதை திரையுலகத்தினர் உணர வேண்டும்.

இத்திரைப்படமும் பல தடைகளைத் தாண்டித்தான் இப்போது திரைக்கு வந்திருக்கிறது. முதலில் டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ் என்று முடிவானபோது சென்னையில் ஒரு தியேட்டர்கூட கிடைக்கவில்லையாம். படத்தின் தயாரிப்பாளரும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளருமான குகனின் சொந்த ஊரான மதுரையில்கூட தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடியிருக்கிறார்கள். சென்னையில் ஒரு தியேட்டர் கிடைத்தால்கூட படத்தை ரிலீஸ் செய்து காட்டுவேன் என்று குகன் வெறுத்துப் போய் சொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை. கடைசியில் இப்போது 4 தியேட்டர்களில் மட்டும் 2 காட்சிகளாக ரிலீஸாகியுள்ளது.

லோ பட்ஜெட் என்றாலும், இது போன்ற சில திரைப்படங்களே இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் இருக்கும் பலரையும் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுகின்றன.  இதுதான் சாமான்யனின் திரை ஆக்கம்..!

இயக்குநர் ரவிபாரதி அடுத்த படைப்பில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

விருப்பமுள்ளவர்கள் போகலாம்..

51 comments:

க ரா said...

epadi thatha imutu mokkai padatha partum onga thalaila otha mudi kuda kottama iruku... :)

ipadiku
ungal anbu perandi,
Ramasamy .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

adappavi raams. vadai poche

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விருப்பமுள்ளவர்கள் போகலாம்..//

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே. மழை பெய்யலாம். பெயாமலும் இருக்கலாம்னு..

ம.தி.சுதா said...

என் சொறு போச்சே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி//
இந்த படத்தை ஏன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணினாங்க? # டவுட்டு

ம.தி.சுதா said...

பார்ப்போம் எப்படிப் போகுதுண்ணு....

க ரா said...

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே
---
ele rameshu thatha va annenu solra.. onoda vayasu theriuthu ithulla...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
adappavi raams. vadai pocheஃஃஃஃஃஃஃ

அப்ப இன்டைக்கு இருவரும் பட்டினியா...?? வாங்க வேற கடைக்குப் போவோம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இராமசாமி said...

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே
---
ele rameshu thatha va annenu solra.. onoda vayasu theriuthu ithulla...////

hehe

Ramesh said...

நீங்க சொல்றத பாத்தா.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி ஷோ வரைக்கும் கூட ஓடாது போலருக்கே....

Prabu M said...

//பிரியமுடன் ரமேஷ் said...
நீங்க சொல்றத பாத்தா.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி ஷோ வரைக்கும் கூட ஓடாது போலருக்கே....//

ஹஹஹா...
ரிப்பீட்டு!!

pichaikaaran said...

இதற்கெல்லாம் விமர்சனம் எழுத உங்களை விட்டா யார் இருக்கா ?

மாணவன் said...

//விருப்பமுள்ளவர்கள் போகலாம்.. //

ஓகே ரைட்டு....

மாணவன் said...

//Blogger இராமசாமி said...

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே
---
ele rameshu thatha va annenu solra.. onoda vayasu theriuthu ithulla...//

யாருப்பா அது எங்க ரமேஷ் தாத்தாவபத்தி பேசறது...

ஹாஹாஹா.......

மாணவன் said...

ஹய்யா 15 ஆவது வடை...

சி.பி.செந்தில்குமார் said...

படம் தேறாது போல

Thomas Ruban said...

//விருப்பமுள்ளவர்கள் போகலாம்.. //

விருப்பாபட்டாலும் போகமுடியாது பெங்களூரில் ரிலீஸ் செய்யவில்லை. நந்தலாலாவே ஓசூர் லக்ஷ்மிதேவில் தான் பார்த்தேன் நன்றி அண்ணே.

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...

epadi thatha imutu mokkai padatha partum onga thalaila otha mudi kuda kottama iruku... :)

ipadiku
ungal anbu perandi,
Ramasamy.]]]

அடேய் பேராண்டி.. முடி உதிர்நதிருந்தாலும் பரவாயில்லப்பா.. இப்ப மொத்தமா வெள்ளி முடியாயிருச்சே.. இதுக்கு என்ன செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
adappavi raams. vadai poche]]]

இதுக்குத்தான் சொல்றது தூங்கக் கூடாதுன்னு..! எப்பவுமே முழிச்சிருக்கணும். அவன்தான் ஜெயிப்பான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விருப்பமுள்ளவர்கள் போகலாம்..//

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே. மழை பெய்யலாம். பெயாமலும் இருக்கலாம்னு.]]]

பின்ன..? அங்க போயிட்டு என்னை கன்னாப்பின்னான்னு திட்டுனீங்கன்னா..?

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...
என் சொறு போச்சே...]]]

விடுங்க சுதா.. அடுத்த பதிவுல பார்த்துக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி//
இந்த படத்தை ஏன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணினாங்க? # டவுட்டு]]]

இது பிஸினஸ் தம்பி.. சனிக்கிழமை ரிலீஸ் செஞ்சா வசூல் குறையும்ல. அதுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...
பார்ப்போம் எப்படிப் போகுதுண்ணு.]]]

அப்போ போய்ப் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே
---
ele rameshu thatha va annenu solra.. onoda vayasu theriuthu ithulla...]]]

ஆமாம்.. தம்பி ரமேஷ் உங்களுக்குச் சின்னத் தாத்தாதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

adappavi raams. vadai pocheஃஃஃஃஃஃஃ

அப்ப இன்டைக்கு இருவரும் பட்டினியா...?? வாங்க வேற கடைக்குப் போவோம்...]]]

நல்லது..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...
நீங்க சொல்றத பாத்தா.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி ஷோவரைக்கும்கூட ஓடாது போலருக்கே.]]]

சென்னையில் மட்டும் ஓடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு . எம் said...

//பிரியமுடன் ரமேஷ் said...

நீங்க சொல்றத பாத்தா.. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி ஷோவரைக்கும் கூட ஓடாது போலருக்கே....//

ஹஹஹா... ரிப்பீட்டு!!]]]

ரொம்ப ஆசை வேணாம்.. மெட்ரோ சிட்டீஸ்ல மட்டும் ஓடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
இதற்கெல்லாம் விமர்சனம் எழுத உங்களை விட்டா யார் இருக்கா?]]]

இன்னும் நிறைய பேர் எழுதுவாங்க தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//விருப்பமுள்ளவர்கள் போகலாம்.. //

ஓகே ரைட்டு.]]]

போயிட்டு வாங்க மாணவன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//Blogger இராமசாமி said...

இப்படி வானிலை அறிக்கை மாதிரி சொன்னா எப்படி அண்ணே
---
ele rameshu thatha va annenu solra.. onoda vayasu theriuthu ithulla...//

யாருப்பா அது எங்க ரமேஷ் தாத்தாவ பத்தி பேசறது...

ஹாஹாஹா.......]]]

பேராண்டி இராமசாமிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...
ஹய்யா 15 ஆவது வடை...]]]

இப்படியும் ஒரு மகிழ்ச்சியா..?

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
படம் தேறாது போல..]]]

ம்ஹும்..

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

//விருப்பமுள்ளவர்கள் போகலாம்.. //

விருப்பாபட்டாலும் போக முடியாது பெங்களூரில் ரிலீஸ் செய்யவில்லை. நந்தலாலாவே ஓசூர் லக்ஷ்மிதேவில்தான் பார்த்தேன் நன்றி அண்ணே.]]]

என்னாங்கப்பா இது அக்கிரமமா இருக்கு..? இது அமெரிக்கால 8 தியேட்டர்ல ரிலீஸ்ப்பா.. பக்கத்துல இருக்குற பெங்களூர்ல ரிலீஸ் ஆகலையா..?

செங்கோவி said...

அண்ணே, வழக்கம்போல் எங்களையெல்லாம் காப்பாத்தீட்டீங்க!..நன்றி..

அப்புறம் ஒரு (எனக்கு) முக்கியமான விஷயம்..நானும் பதிவர் ஆயிட்டேன்..உலகக் கடவுள் முருகன் பற்றிய பதிவுடன் என் வலைப்பூ “செங்கோவி” இன்றுமுதல் ஆரம்பம் ...முகவரி:
http://sengovi.blogspot.com/
வாருங்கள்..வாழ்த்துங்கள்..

--செங்கோவி

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
அண்ணே, வழக்கம் போல் எங்களையெல்லாம் காப்பாத்தீட்டீங்க! நன்றி..

அப்புறம் ஒரு (எனக்கு) முக்கியமான விஷயம். நானும் பதிவர் ஆயிட்டேன். உலகக் கடவுள் முருகன் பற்றிய பதிவுடன் என் வலைப்பூ “செங்கோவி” இன்று முதல் ஆரம்பம்.

முகவரி: http://sengovi.blogspot.com/
வாருங்கள். வாழ்த்துங்கள்..

--செங்கோவி]]]

வாழ்த்துக்கள் செங்கோவி.. நல்ல பெயரோடும், புகழோடும் வலையுலகில் வலம் வர வாழ்த்துகிறேன்..!

arasan said...

நல்ல விமர்சனம்,..

செங்கோவி said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..நீங்கள் சொன்னபடி நல்ல பெயர் எடுப்பேன் என்று நம்புகின்றேன்.
--செங்கோவி

உண்மைத்தமிழன் said...

[[[அரசன் said...

நல்ல விமர்சனம்..]]]

நன்றி அரசன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னபடி நல்ல பெயர் எடுப்பேன் என்று நம்புகின்றேன்.

--செங்கோவி]]]

ஹா.. ஹா.. இப்படியும் ஒரு பின்னூட்டமா..? வாழ்க செங்கோவி..!

a said...

//
இதற்காக லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்தப் படக் குழு இடம் பெற்றிருக்கிறது.. வாழ்த்தலாம். வாழ்த்துகிறேன்..
//
அண்ணே : நானும்.....

R.Gopi said...

"விருத்தகிரி” விமர்சனம் ப்ளீஸ்ஸ்ஸ்..

ப்ளாக்கர்களுக்காக டாக்டர் கேப்டன் விஜயகாந்திடம் பேசி ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்ய முடியுமா என்று பாருங்கள்.........

நான் எங்கிருந்தாலும் அந்த ஸ்பெஷல் ஷோவுக்கு வந்து விடுவேன்....

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//இதற்காக லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்தப் படக் குழு இடம் பெற்றிருக்கிறது.. வாழ்த்தலாம். வாழ்த்துகிறேன்..//

அண்ணே : நானும்.....]]]

சரி.. சரி.. ஓகே..

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

"விருதகிரி” விமர்சனம் ப்ளீஸ்ஸ்ஸ்..

ப்ளாக்கர்களுக்காக டாக்டர் கேப்டன் விஜயகாந்திடம் பேசி ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்ய முடியுமா என்று பாருங்கள்.

நான் எங்கிருந்தாலும் அந்த ஸ்பெஷல் ஷோவுக்கு வந்து விடுவேன்.]]]

கோபி ஸார்.. நான் நல்லாயிருக்கிறதும் உங்களுக்குப் பிடிக்கலையா..?

படம் முடிஞ்சு வெளில வந்தவுடனேயே நம்மாளுகளே விருதகிரி மாதிரியே என்னை பறந்து, பறந்து அடிப்பாங்க.. தேவையா எனக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[ரஹீம் கஸாலி said...
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

Unknown said...

its a fantastic artical.i liked to read it,well,its a nice post.

vanathy said...

ஹல்லோ அண்ணா ,
இப்படி இருக்கிறீங்க?
மன்னிக்கவும், நான் உங்கள் சினிமா விமர்சனம் வாசிக்கவில்லை .நீங்கள் கதையை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால். சின்ன பட்ஜெட் ஆனால் நல்ல படங்கள் என்றால் நான் டிவிடியில் பார்ப்பது உண்டு.இங்கு தியேட்டரில் சின்ன பட்ஜெட் படங்கள் போடமாட்டர்கள்.
நான் இங்கு வந்ததற்கு வேறு காரணம்.நான் முன்பு மாதிரி வலையத்தளங்கள் மும்முரமாக மேய்வதில்லை.நேரம் கிடைத்தால் எப்போதாவது தமிழ்மணம் பக்கம் வருவதுண்டு.அப்படி இன்று வரும்போது நீங்கள் அறுநூறு பதிவுகள் போட்டதை அறிந்துகொண்டேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா .
அங்கெ பழைய பதிவில் போட்டால் கவனிக்க மாட்டீர்கள் என்பதால் இங்கு போடுகிறேன்.
நீங்கள் எனது அபிமான பதிவர்களில் ஒருவர்.யார் என்ன கிண்டல் பண்ணினாலும் உங்கள்பாட்டுக்கு ஆர்வத்தோடு சளைக்காமல் சலிப்பு தட்டாமல் அடுத்தடுத்து நீங்கள் போடும் பதிவுகள் உங்கள் மேல் பலருக்கும் ஒரு வாஞ்சையை உண்டு பண்ணிவிட்டது தொடந்தும் பதிவுகளைப் போடுங்கள் நேரம் இருந்தால் நானும் படித்து மகிழ்கிறேன்.

-வானதி

உண்மைத்தமிழன் said...

[[[johnplayer said...
its a fantastic artical. i liked to read it, well, its a nice post.]]]

ஜான் பிளேயர் ஸார்..

எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது..! நான் எழுதியதிலேயே இதுதான் சுமாரான விமர்சனம்.. இதைப் போய் பென்டாஸ்ட்டிக்குன்னு..?

ம்ஹூம்.. ஓகே.. வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[vanathy said...

ஹல்லோ அண்ணா, இப்படி இருக்கிறீங்க? மன்னிக்கவும், நான் உங்கள் சினிமா விமர்சனம் வாசிக்கவில்லை . நீங்கள் கதையை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால். சின்ன பட்ஜெட் ஆனால் நல்ல படங்கள் என்றால் நான் டிவிடியில் பார்ப்பது உண்டு.இங்கு தியேட்டரில் சின்ன பட்ஜெட் படங்கள் போடமாட்டர்கள்.

நான் இங்கு வந்ததற்கு வேறு காரணம். நான் முன்பு மாதிரி வலையத்தளங்கள் மும்முரமாக மேய்வதில்லை. நேரம் கிடைத்தால் எப்போதாவது தமிழ்மணம் பக்கம் வருவதுண்டு. அப்படி இன்று வரும்போது நீங்கள் அறுநூறு பதிவுகள் போட்டதை அறிந்துகொண்டேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா .
அங்கெ பழைய பதிவில் போட்டால் கவனிக்க மாட்டீர்கள் என்பதால் இங்கு போடுகிறேன். நீங்கள் எனது அபிமான பதிவர்களில் ஒருவர்.யார் என்ன கிண்டல் பண்ணினாலும் உங்கள் பாட்டுக்கு ஆர்வத்தோடு சளைக்காமல் சலிப்பு தட்டாமல் அடுத்தடுத்து நீங்கள் போடும் பதிவுகள் உங்கள் மேல் பலருக்கும் ஒரு வாஞ்சையை உண்டு பண்ணி விட்டது. தொடந்தும் பதிவுகளைப் போடுங்கள் நேரம் இருந்தால் நானும் படித்து மகிழ்கிறேன்.
- வானதி]]]

என் மேல் இவ்வளவு கரிசனத்தோடு எழுதும் இந்தத் தங்கையை நான் என்னவென்று சொல்வது..?

இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.. உன்னைப் போன்றவர்களால்தான் நான் இன்றைக்கும் இந்த வலையுலகில் நீடித்து வருகிறேன்..!

நன்றி தாயே..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

உண்மைத்தமிழன் said...

ரமேஷ் தம்பிக்கு ரொம்ப நன்னி..!