உன்னைப் போல் ஒருவன் - ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்..!

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - 'ஆனந்தவிகடன்' விமர்சனம்

நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம்.

காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார். வேறு வழியில்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இருபது நிமிடங்களுக்கு பளீர், சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ் டே படத்தின் தமிழாக்கம்.

காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிக்கூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் படத்தின் ரியல் ஹீரோ.

பிரேமுக்கு பிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்குச் சமமான ஸ்கோப், சொல்லப் போனால் தன்னைவிடக் கூடுதலாக வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், ஒரு பெர்ஃபெக்ட் ஃபிட், அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார்.

தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும், தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும், கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும் வெல்டன் லால்.(த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்புகளைத் தவிர்த்திருக்கலாம்)

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமல் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபித்திருக்கிறார். சின்சியருக்கு சின்சியர்.

ஜூனியர்களாக வரும் பரத்ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு. நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், ணோகன்லாலிடம் "கேன் ஐ ஸ்மோக் ஹியர்..?" எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.

ஒரு காமன்மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால் அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும், துணிச்சலும்தான்.

ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதாநாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் கிளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இங்கே கமலின் கோபத்திற்குச் சொல்லப்படுவதோ இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் தூண்டாத சமாச்சாரங்கள் பல(பெஸ்ட் பேக்கரிகூட..!) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம்கூடாது என்ற நியாயமான உண்மையை பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம்.

அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்(நாலில் மூவர் முஸ்லீம், ஒருவர் ஹிந்து) திரைக்கதை, வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால், கிளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது?

இருந்தாலும், 'இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்' என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

மதிப்பெண் : 42 / 100

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

9 comments:

SurveySan said...

இப்படி மொத்தமா காப்பி/பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். ரொம்ப தப்பு.

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
இப்படி மொத்தமா காப்பி/பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். ரொம்ப தப்பு.]]]

அப்புறம் எப்படி செய்றதாம்..? குமுதம், ஆனந்தவிகடன் இரண்டுமே பே சைட்டா மாறியாச்சு..

லின்க் கொடு்க்க முடியாதே..!

PRINCENRSAMA said...

அண்ணன் உண்மைத் தமிழனின் பதிவுகளிலேயே நீளம் குறைந்த இந்தப் பதிவுகளை வரவேற்பதை விட்டுவிட்டு தப்பு சொல்லு சர்வேசனுக்கு எனது கண்டனங்கள்!

நீங்க copy பண்ணி போடுங்கண்ணே! அப்புறம் நாங்கள்லாம் எப்படி படிக்கிறதாம். நான் உங்களுக்கு சப்போர்ட்டு!

உண்மைத்தமிழன் said...

[[[PRINCENRSAMA said...
அண்ணன் உண்மைத் தமிழனின் பதிவுகளிலேயே நீளம் குறைந்த இந்தப் பதிவுகளை வரவேற்பதை விட்டுவிட்டு தப்பு சொல்லும் சர்வேசனுக்கு எனது கண்டனங்கள்! நீங்க copy பண்ணி போடுங்கண்ணே! அப்புறம் நாங்கள்லாம் எப்படி படிக்கிறதாம். நான் உங்களுக்கு சப்போர்ட்டு!]]]

ஆஹா.. இது யாரு? பிரின்ஸ் தம்பியா..? எம்புட்டு நாளாச்சு பார்த்து?

நம்ம வீட்டுப் பக்கம் வர்றது இதுதான் பர்ஸ்ட் டைம்ன்னு நினைக்கிறேன்.

நல்லாயிருக்கீகளா தம்பீ..!

ஏதோ இந்த அண்ணனை கொஞ்சம் ஞாபகத்துக்கு வைச்சுக்கிட்டா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது..!

PRINCENRSAMA said...

உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போற ஆளுதான்ணே நானு!
எப்பவாவது comment போட்டிருப்பேனே தவிர, வராம இருக்க மாட்டேன்.. இந்த படம் பார்க்கப் போயி உங்களுடைய வீரசாகசக் கதை உள்ளிட்ட எல்லாமே நாங்க படிச்சவங்கதாண்ணே!

உண்மைத்தமிழன் said...

[[[PRINCENRSAMA said...
உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போற ஆளுதான்ணே நானு!
எப்பவாவது comment போட்டிருப்பேனே தவிர, வராம இருக்க மாட்டேன்.. இந்த படம் பார்க்கப் போயி உங்களுடைய வீரசாகசக் கதை உள்ளிட்ட எல்லாமே நாங்க படிச்சவங்கதாண்ணே!]]]

ஏற்கெனவே கமெண்ட்டு போட்டியா? எங்க ஒண்ணை காட்டிரு பார்ப்போம்..

செலக்டிவ் அம்னீஷியா ராவ்காருக்கு மட்டுமில்ல.. எல்லாருக்குமே வரும் தம்பீ..!

PRINCENRSAMA said...

அண்ணே! சவால் விட்டுட்டீகளேண்ணே!
http://truetamilans.blogspot.com/2007/04/x.html
"நன்றி திரு.பிரின்ஸ்." அப்படின்னு நன்றி கூட சொல்லிருக்கிகளேண்ணே!

abeer ahmed said...

See who owns jlynnecosmetics.com or any other website:
http://whois.domaintasks.com/jlynnecosmetics.com

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Ayurveda Schweiz
Ayurveda Suisse
Ayurveda.ch
Diät Küche Berner Oberland
Fisch Küche Brienz
Indische Küche Interlaken
Seehotel Bären Brienz
Boutique Ganesha
Wohlfühltag Schweiz
Seeterrasse Berner Oberland
Kinderspielplatz Interlaken