ஜெயலலிதா உண்ணாவிரதம்-தா.பாண்டியன் வெளியிட்ட உண்மை

09-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி ஜெயலலிதா அறிவித்த உண்ணாவிரதம் நடந்து கொண்டிருக்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகேதான் மேடை போட்டிருக்கிறார்கள். மேடையில் அவருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், வரதராசன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், பஷீர் அகமது, ஷேக் தாவூத் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். வைகோ இன்னும் வரவில்லை.

கூட்டம் அமோகமாக கூடியுள்ளது. மேடையின் கீழே பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு அதில் நிதியுதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் எப்படி என்றுதான் நமக்குத் தெரியவில்லை. நமக்குத்தான் பொருளாதார தட்டுப்பாடு போலிருக்கிறது. அம்மாவுக்கு இல்லை போலும்.. கத்தை, கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 5 லட்சம் ரூபாயை உண்டியலில் போட்டு முதல் போணியை ஆரம்பித்துவைத்தார்.

ஜெயலலிதா தனது பேச்சில் முட்டாள்தனமாக சீமானை ஒரு பிடிபிடித்தார். சீமானின் பேச்சு முழுவதும் கலைஞரின் முழு ஒப்புதலோடும், அவருடைய வழிகாட்டுதலின்படியும்தான் நடந்தது, நடக்கிறது என்று விஷயத்தை கலைஞரின் மேல் திருப்பினார். இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்.

வாழ்த்திப் பேச வந்த தா.பாண்டியன் சொன்ன ஒரு விஷயம் கலைஞர் பற்றிய பல பரிணாமங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது.

தா.பாண்டியன் பேசியதில் இருந்து சிலவைகள்..

"ஈழத்தில் போரை முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும்' என்றோம். 'அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுவோம்' என்றார். போனோம். பேசினோம்.. 'அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவைகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம்' என்றார். பல நாட்கள் ஆனது.. ஈழத்தில் தினமும் 1000 மக்கள் கொல்லப்பட்டார்கள். கடிதம் வந்ததா என்று இதன் பின்னர் கேட்டோம். 'வரவில்லை' என்றார். இப்போதும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் 'என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றோம். 'மனிதச் சங்கிலி' என்றார். 'சரி..' என்ற ஒத்துக் கொண்டோம்.. கொட்டுகின்ற மழையில் சங்கிலியில் கைகோர்த்து நின்றோம்.. அவரும் காரில் வலம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவருடைய வயது அப்படி. உடல்நலமில்லை. அது வேறுவிஷயம்.. சங்கிலியும் முடிந்தது. அங்கே ஈழத்தில் படுகொலைகள் நின்றபாடில்லை. இதையும் போய் சொன்னோம்.. 'வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றோம்.. 'என்ன செய்யலாம்' என்றார். 'சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்..' என்றோம். 'அ.தி.மு.க. இதனை எதிர்த்தால் என்ன செய்வது..?' என்றார். ‘அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.. நிச்சயம் ஆதரிப்பார்கள்..' என்றோம். அதே போல் இந்தச் சட்டப் பேரவையில் முதன்முதலாக ஒரு தீர்மானம் அனைத்துக் கட்சித் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்றால் அது ஈழத்தில் போரை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம்தான்.." என்றார் தா.பாண்டியன்.

பிழைக்க வழியற்று உயிருக்குப் பிழைத்து காடுகளுக்குள் தப்பியோடிக் கொண்டிருக்கும் சக மக்களுக்காக எதைச் செய்தாவது போரை நிறுத்தச் சொல்லி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னால், நம்மால் முடிந்ததைத்தான் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு தீர்வைச் சொல்லும்போதுகூட உள்ளூர் அரசியலை நினைத்து மறுதலிக்கும் கேவலமான அரசியலைத்தான் இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

அ.இ.அ.தி.முக. ஆதரித்தால் என்ன..? ஆதரிக்காமல் போனால் என்ன..? உங்களுடைய கடமையை நீங்க செய்ய வேண்டியதுதான..? அ.தி.மு.க. ஆதரிக்காவிட்டால் என்ன செய்ய என்று கேட்பது செய்ய மனசில்லாமல் நடிக்கின்ற ஒப்பனைக்கார மனதைத்தான் காட்டுகிறது.

அப்படியென்றால் அனைத்து அரசு முடிவுகளிலும் அ.தி.மு.க.வின் ஆதரவைக் கேட்டுப் பெற்று, அவர்களுடைய ஆலோசனையின்படிதான் தி.மு.க. அரசு நடந்து கொள்கிறதா..? அவர்கள் வேண்டாம் என்றால் இவர்கள் விட்டுவிடுகிறார்களா..? அல்லது அவர்கள் வேண்டும் என்றால்தான் செய்து கொண்டும், கொடுத்துக் கொண்டுமிருக்கிறார்களா..? என்னே கலைஞரின் நகைச்சுவை..

இதற்குப் பதிலாக, “எனக்கு எதுவும் செய்ய மனமில்லை..” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போய் விடலாமே..

எதற்கு இந்த நடிப்பு..?

47 comments:

Anonymous said...

are you mental? if one party does not support a view from assembly that gives a wrong signal to other states/centre as if the entire state is not on the same opinion.

are you mental my dear friend?

Anonymous said...

இவங்கள் (அதிமுக) என்ன எமக்காக (ஈழ தமிழன்) வா? உண்ணா விரதம் இருக்கிறாங்கள்?
என்னவோ ஜோக் அடித்து கைதட்டி விசிலடித்து கூத்தடித்து கொண்டு இருக்கிறாங்கள்.
பார்க்கவே நெஞ்சு வலிக்குது . எம்மை வைத்து (ஈழ தமிழனை) தேர்தலுக்கு ஓட்டு சேர்க்கிறார்கள்.
தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக.
எமக்காக உங்களுக்காக உண்மையாக செயற்படும் தலைமையை தெரிவு செய்து , அவர்களை பலப்படுத்தி , அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தி , எம்மை காப்பாற்றுங்கள்.

இப்படிக்கு
உங்களின் இளைய சகோதரன்
ஈழ தமிழன்

நித்யன் said...

அண்ணாத்த...

வர வர உங்க அப்டேட் அலும்புக்கு அளவே இல்லாம போயிடுச்சு.

கருணாநிதி சொன்னா இந்த அம்மா கேக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் அதுனால பிரச்சனை ஆயிடும்னு சொல்லுறதுக்கு பேரு “பசப்புதல்”.

கரன்ஸிக்கு ஓட்டுப்போடும் மக்கள் உள்ளவரை நமக்கு இப்படிப்பட்ட அரசியல்வியாதிகள்தான் கிடைப்பார்கள். We deserve them only.

அன்பு நித்யன்

Karthikeyan G said...

//Anonymous said...
are you mental? if one party does not support a view from assembly that gives a wrong signal to other states/centre as if the entire state is not on the same opinion.

are you mental my dear friend?

//

Anony, you have a valid point behind your rough words.

Anonymous said...

//. இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்//

த. பாண்டியன் அவர்கள் சொன்னதில் என்ன அபத்தம் இருக்கு அண்ணே ??

(த. பாண்டியன் இத்தனை நாள் இதை சொல்லாமல், செல்வி.ஜெ உண்ணாவிரதம் இருக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று காத்திருந்தது அபத்தம்!!)

குவாட்டர் கோயிந்தன் said...

இப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ! போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.

Anonymous said...

தா. பாண்டியன் சொன்னபடியெல்லாம் கலைஞர் செய்திருக்கிறார். அவர்களால் முடிந்த வரை. ஆனாலும் போர் நின்ற பாடில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டபோது எல்லாம் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து விட்டு ஈழத்தில் போரில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம்.

அம்மாவுடைய உண்ணா விரதத்தினால் ஈழத்தில் போர் நின்று விடுமா.

வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு ஓட்டு போடலாம்? அவர்கள் வென்றால் ஈழப்போர் நின்று விடுமா?

எதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை சொல்வதை புலிகளின் வால்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

அபி அப்பா said...

தம்பி சரவணா!நிலவரத்தை மட்டும் சொல்! உன் க்ருத்தை நாங்கள் கேட்கவில்லை!(சொன்னா இது என் வலைப்பூஎனக்கு கட்டற்ர சுதந்திரம் இருக்குன்னு சொல்ல்வே)

வால்பையன் said...

இந்த தேர்தலிலும் பணமழை பொழியுமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க!
கொஞ்சம் கடன் இருக்கு எல்லாத்தையும் அடைச்சிபுட்டு நிம்மதியா இருக்கலாம்.

Anonymous said...

Eela Thamilan said...
தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக.

இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாது தானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.

Anonymous said...

Can Pandiyan agitate against China
for it's help to Srilankan army?

Anonymous said...

உண்மைத் தமிழன்,

உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தா நீங்கள் போர் நிறுத்தத்தினை ஆதரிப்பதுபோல் இருக்கு. அப்படியா ?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பரே,
இலங்கையில் நடக்கும் விதயங்கள் பற்றிய நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

முதலில் முக.காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது.இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டது.அவர்கள் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்துவிட்டார்கள்.எனவே அதை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் முக.வுக்கு ஆளும் முதல்வராக இருக்கிறது.

இரண்டாவது காரணம்,மாநில ஆட்சியும் காங்கிரஸ் ஆதரவில்தான் இருக்கிறது.எனவே,மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற அளவில் பெரிய அளவில் ஸ்டண்ட் அடித்தும் அரசியல் செய்ய முடியாது,ஏனெனில் மாநில அரசியலுக்கும் மூக்கணாம் கயிறு காங்கிரஸ் வசம்.ஒரு வேளை மாநில அளவில் முக்.அறுதிப் பெறும்பான்மையுடன் இருந்தால் இன்னும் சிறிது முறுக்கிப் பார்ப்பார்.

மூன்றாவது,தெளிவான இன்னொரு விதயம்,அப்படியே மாநில அளவில் பெரும்பான்மையுடன் இருந்தாலும் மாநில அரசாக இருந்து கொண்டு செய்யக் கூடிய,செய்ய சாத்தியப்பட்ட நடவடிக்கை ரீதியான விதயங்கள் மிகக் குறைவு.

அரசியல் ரீதியாக மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் தேவையான ஒன்று.அதை செய்ய அவர் முயற்சிக்கவே இல்லையோ அல்லது முயற்சித்தும் ஒன்றும் பப்பு வேகாத போது என்ன செய்வது என்று குழம்பினாரோ தெரியவில்லை...

மாநில ஆட்சியில் இல்லாத மற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் சுத்த அரசியல் அயோக்கியத்தனமன்றி வேறு ஒன்றும் அல்ல.

அவர்கள் எவர் ஆட்சியில் இருந்திருந்தாலும் ஒன்றும் கிழித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை..

இவ்வளவு சீன் போடும் டாக்டர் அன்புமணியின் மூலம் கேபினட் கூட்டங்களில் தனது கருத்தை வலிய எடுத்து வைத்ததிருக்கலாமே,செய்தாரா?அவ்வாறு பேசிய செய்திகளாவது வந்ததா?

ஆக வெளியிலிருந்து கொண்டு எல்லோரும் முக.வை டிரில் எடுத்துக் கொண்டிருக்காறார்கள்;அவர் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி பதிவியில் இருப்பது,மீண்டும் பதவிக்கு வருவது என்றி இரண்டு விதயங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஜெ.வுக்கு தேர்தல் பயம் வந்து சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்.வேறு ஒன்றும் இல்லை...


உண்மையில் சர்வதேச நாடுகளே,இலங்கை கண் மண் தெரியாமல் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணரும் கட்டத்தில் இருப்பதால் மத்தியில் ஆளும் அரசும் போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டிருக்கிறது...

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
are you mental? if one party does not support a view from assembly that gives a wrong signal to other states/centre as if the entire state is not on the same opinion. are you mental my dear friend?//

ஓ.. மை டியர் பிரெண்ட்.. மிக்க நன்றி தங்களுடைய கருத்திற்கு..!

வர, வர பின்னூட்டங்களை பார்க்கவே பயமாயிருக்கு.. இப்ப மென்டல் வரைக்கும் போயிருச்சா..! சந்தோஷம்..

உண்மைத்தமிழன் said...

//Eela Thamilan said...
இவங்கள் (அதிமுக) என்ன எமக்காக (ஈழ தமிழன்)வா? உண்ணா விரதம் இருக்கிறாங்கள்? என்னவோ ஜோக் அடித்து கைதட்டி விசிலடித்து கூத்தடித்து கொண்டு இருக்கிறாங்கள்.
பார்க்கவே நெஞ்சு வலிக்குது . எம்மை வைத்து (ஈழ தமிழனை) தேர்தலுக்கு ஓட்டு சேர்க்கிறார்கள். தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக. எமக்காக உங்களுக்காக உண்மையாக செயற்படும் தலைமையை தெரிவு செய்து, அவர்களை பலப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தி, எம்மை காப்பாற்றுங்கள்.
இப்படிக்கு
உங்களின் இளைய சகோதரன்
ஈழ தமிழன்//

ஈழத்தமிழண்ணே..

அப்படி உங்களுக்காகவே உயிரை விடுற கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் வேறு பல காரணங்களுக்காக செல்வாக்கு இல்லாமல் இருக்குண்ணே.. அதுதான் பிரச்சினையே..!

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
கரன்ஸிக்கு ஓட்டுப் போடும் மக்கள் உள்ளவரை நமக்கு இப்படிப்பட்ட அரசியல் வியாதிகள்தான் கிடைப்பார்கள். We deserve them only.
அன்பு நித்யன்//

அன்பு நித்தி.. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறாய்..

நம் மக்கள் மனநிலை மீதுதான் நம்மூர் அரசியல்வியாதிகளுக்கு அபார நம்பிக்கை.. பணத்தையும், சலுகைகளையும் வாரி வழங்கிவிட்டால் மற்றதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறார்கள்.

இனி எல்லாமே மக்களின் கையில்தான் உள்ளது..

உண்மைத்தமிழன் said...

///Karthikeyan G said...
//Anonymous said...
are you mental? if one party does not support a view from assembly that gives a wrong signal to other states/centre as if the entire state is not on the same opinion. are you mental my dear friend?//
Anony, you have a valid point behind your rough words.///

கார்த்தி மென்டல் அனானி கேட்ட கேள்வியின் சாரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்..

ஆனால் பிரச்சினையை கையில் எடுக்கவே பயந்து போய் பிரச்சினைக்குள் ஒரு பிரச்சினை இருப்பதாக நினைத்து எடுத்த எடுப்பிலேயே அதற்குத் தடைக்கல் போட முயல்வது நல்ல ஜனநாயக மரபு அல்ல..

முதலில் அவர்தான் எதிர்க்கட்சிகளை ஆறுதல்படுத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.அப்படியா செய்கிறார்..?

உண்மைத்தமிழன் said...

///அப்பாவி தமிழன் said...
இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக் கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites///

இணைத்துவிட்டேன்.. நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
//. இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்//
த. பாண்டியன் அவர்கள் சொன்னதில் என்ன அபத்தம் இருக்கு அண்ணே ??
(த. பாண்டியன் இத்தனை நாள் இதை சொல்லாமல், செல்வி.ஜெ உண்ணாவிரதம் இருக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று காத்திருந்தது அபத்தம்!!)///

ஓ.. அந்த அர்த்தத்தில் போய்விட்டதா அது..? தமிழ் மொழிக்குத்தான் எத்தனை வலிமை இருக்கு..!

நான் சொ்ன்னது கலைஞர் செய்த அபத்தமான காரியத்தை.. அது தா.பாண்டியன் செய்ததாக மாறியிருக்கிறது..

மன்னிக்கவும்..

உண்மைத்தமிழன் said...

//குவாட்டர் கோயிந்தன் said...
இப்பதான், எனக்கு ஓசிலே சரக்கும் பிரியாணியும் கெடைக்கிற நேரம். அதை கெடுக்க பாக்குரானுவலெ! போங்கப்பு, போங்க, எங்க பொலப்புலெ மண்ணள்ளி போட்டுறாதீங்க.//

குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு உன் பொழைப்பை நீயே கெடுத்துக்காத கோயிந்தா..!

அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் உன்னை அவுங்களுக்கு ஞாபகம் இருக்கும்.. மத்த நாள்ல..?

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பிச்சைக்காரனாவே இருக்குறது.. கொஞ்சம் யோசிப்பூ..!

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தா. பாண்டியன் சொன்னபடியெல்லாம் கலைஞர் செய்திருக்கிறார். அவர்களால் முடிந்தவரை. ஆனாலும் போர் நின்றபாடில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டபோது எல்லாம் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து விட்டு ஈழத்தில் போரில் கலந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம். அம்மாவுடைய உண்ணாவிரதத்தினால் ஈழத்தில் போர் நின்று விடுமா. வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு ஓட்டு போடலாம்? அவர்கள் வென்றால் ஈழப்போர் நின்று விடுமா?
எதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை சொல்வதை புலிகளின் வால்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.//

அவர்கள் கேட்கின்ற முதல் கோரிக்கையே இலங்கை அரசுக்கு இனிமேற்கொண்டும் எந்தவித ராணுவ உதவியும், பொருளாதார உதவியும் செய்யாதீர்கள் என்பதைத்தான்..

தி.மு.க. கட்சி எம்.பி.க்களின் உதவியினால்தானே காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.. மத்திய ஆட்சியிலிருந்து விலகுங்கள்.. விலகப் போகிறார்கள் என்றாலே அடுத்தது தன்னாலேயே நடக்குமே..?

இதைக் கூடவா யாராவது சொல்லித் தர வேண்டும்..?! கொடுமை..

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
தம்பி சரவணா! நிலவரத்தை மட்டும் சொல்! உன் க்ருத்தை நாங்கள் கேட்கவில்லை!(சொன்னா இது என் வலைப்பூ.. எனக்கு கட்டற்ர சுதந்திரம் இருக்குன்னு சொல்ல்வே)//

இதென்ன அநியாயமா இருக்கு..?!

நிலவரத்தை மட்டும் சொல்றதுக்கு நான் என்ன ரிப்போர்ட்டரா..? ஆசிரியர்ண்ணே.. ஆசிரியர்.. என் தளத்துக்கு நான்தானே ஆசிரியர்.. அதான் சொன்னேன்..

இது எப்படி இருக்கு..?!

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
இந்த தேர்தலிலும் பணமழை பொழியுமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க! கொஞ்சம் கடன் இருக்கு எல்லாத்தையும் அடைச்சிபுட்டு நிம்மதியா இருக்கலாம்.//

நிச்சயமா பொழியும் வாலு..

என்ன வீட்டுக்கு பத்தாயிரம் ரூபா உறுதி.. கொஞ்சம் முரண்டு பிடிங்க.. கூட ஐயாயிரம் கிடைக்கும்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Eela Thamilan said...
தமிழக மக்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் எம்மை காப்பாற்றுங்கள் உடனடியாக. இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாதுதானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.//

எங்களால் முடிந்ததை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம் அனானி.. ஆனால் எங்களூர் அரசியல்வியாதிகளால்தான் அது முற்றிலுமாகத் தடைபடுகிறது..

தயவு செய்து எங்கள் மக்கள் மீது சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Can Pandiyan agitate against China
for it's help to Srilankan army?//

இதுவரைக்கும் இல்லை.. இனிமேலும் சொல்வாரா என்று தெரியவில்லை..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மைத் தமிழன், உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தா நீங்கள் போர் நிறுத்தத்தினை ஆதரிப்பதுபோல் இருக்கு. அப்படியா?//

இதுல என்ன சந்தேகம் அனானி..?!

உண்மைத்தமிழன் said...

//அறிவன்#11802717200764379909 said...
நண்பரே, இலங்கையில் நடக்கும் விதயங்கள் பற்றிய நடவடிக்கைகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
முதலில் முக.காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது.இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டது. அவர்கள் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்துவிட்டார்கள். எனவே அதை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் முக.வுக்கு ஆளும் முதல்வராக இருக்கிறது.//

அப்படியானால் மக்களைவிட அவருக்கு ஆட்சியும், அதிகாரமும்தான் முக்கியமாகப் போய்விட்டதா என்பதுதான் இப்போதைய கேள்வி..?

//இரண்டாவது காரணம், மாநில ஆட்சியும் காங்கிரஸ் ஆதரவில்தான் இருக்கிறது. எனவே,மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற அளவில் பெரிய அளவில் ஸ்டண்ட் அடித்தும் அரசியல் செய்ய முடியாது, ஏனெனில் மாநில அரசியலுக்கும் மூக்கணாம் கயிறு காங்கிரஸ் வசம். ஒரு வேளை மாநில அளவில் முக். அறுதிப் பெறும்பான்மையுடன் இருந்தால் இன்னும் சிறிது முறுக்கிப் பார்ப்பார்.//

எப்படியிருந்தாலும் மு.க.வுக்கு ஆட்சிக் கட்டில் மீதுதான் கண்ணு என்கிறீர்கள்..!

//மூன்றாவது, தெளிவான இன்னொரு விதயம், அப்படியே மாநில அளவில் பெரும்பான்மையுடன் இருந்தாலும் மாநில அரசாக இருந்து கொண்டு செய்யக் கூடிய, செய்ய சாத்தியப்பட்ட நடவடிக்கை ரீதியான விதயங்கள் மிகக் குறைவு. அரசியல் ரீதியாக மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் தேவையான ஒன்று. அதை செய்ய அவர் முயற்சிக்கவே இல்லையோ அல்லது முயற்சித்தும் ஒன்றும் பப்பு வேகாத போது என்ன செய்வது என்று குழம்பினாரோ தெரியவில்லை...
மாநில ஆட்சியில் இல்லாத மற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் சுத்த அரசியல் அயோக்கியத்தனமன்றி வேறு ஒன்றும் அல்ல. அவர்கள் எவர் ஆட்சியில் இருந்திருந்தாலும் ஒன்றும் கிழித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.. இவ்வளவு சீன் போடும் டாக்டர் அன்புமணியின் மூலம் கேபினட் கூட்டங்களில் தனது கருத்தை வலிய எடுத்து வைத்ததிருக்கலாமே, செய்தாரா? அவ்வாறு பேசிய செய்திகளாவது வந்ததா? ஆக வெளியிலிருந்து கொண்டு எல்லோரும் முக.வை டிரில் எடுத்துக் கொண்டிருக்காறார்கள்; அவர் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி பதிவியில் இருப்பது, மீண்டும் பதவிக்கு வருவது என்றி இரண்டு விதயங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது ஜெ.வுக்கு தேர்தல் பயம் வந்து சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை...//

தமிழக அரசியலை மிகக் கவனமாக அவதானித்து வைத்திருக்கிறீர்கள் அறிவன் ஸார்..

ராமதாஸ் செய்வதும் கள்ளத்தனம்தான்.. ஒரு நிமிடத்தில் மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறுவதை விட்டுவிட்டு சும்மா ஒப்பேத்திக் கொண்டிருக்கிறார். இது உண்மைதான்..

அம்மாவின் உண்ணாவிரதமும் தேர்தலால் ஏற்பட்ட வினைதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் மற்றவர்களைவிட சீன் காட்டாமல் வெளிப்படையாக தனது கொள்கை இதுதான் என்று சொல்லிவிட்டுச் செய்கிறாரே.. அதுவரைக்கும் சந்தோஷம்தான்..

//உண்மையில் சர்வதேச நாடுகளே, இலங்கை கண் மண் தெரியாமல் மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணரும் கட்டத்தில் இருப்பதால் மத்தியில் ஆளும் அரசும் போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டிருக்கிறது...//

பேசி என்ன ஸார் புண்ணியம்..!? கடைசி ஆள் வரையிலும் காலி செய்துவிட்டு பின்பு போர் நிறுத்தம் என்று சொன்னவுடன் பாராட்டப் போகிறீர்களா..? அதன் பின் அங்கே யார் இருக்கப் போகிறார்கள்..? யாருக்கு என்ன கவலை..?

Anonymous said...

//இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாது தானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.//

அனானிமஸ் , உங்களின் கருத்து மிகப்பிரமாதம்.
உதாரணத்துக்கு , ஒரு கதை சொல்கிறேன் .
உமது தந்தை மிகவும் கஷ்டபட்டு உழைத்து , உம்மையும் உமது குடும்பத்தையும் பிறர் உதவியின்றி காப்பாத்துகிறார் என்று வைப்போம். எனினும் உமக்கு ஒரு உறவினர் இருக்கிறார் . அவர் மிகவும் செல்வந்தர். அத்துடன் உமக்கு உதவி செய்ய அவருக்கு விருப்பம் இருக்கு. ஆனால் அந்த உறவினருக்கும் உமது தந்தைக்கும் ஒத்துவராது.
அதனால் அவரின் உதவி உங்களிற்க்கு கிடைக்கவில்லை.
ஆக , உமக்கு அந்த உதவி கிடைப்பதற்காக, நீர் உமது தந்தையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, அந்த உறவினரிடம் போய் சேருவீரா?

ஈழ தமிழன்.

தமிழ்மணி said...

அன்பரே,

தேர்தல் கூத்துகளுக்காகவும் சுயப்பிரதாபங்களுக்காகவும் இங்கே தகுதிக்கு மீறி அலம்பல் செய்யும் தமிழக இந்திய அரசியல்வாதிகளை கண்டு காயாதீர்கள்.

ஈழத்தில் நடக்கும்போரில் இலங்கைக்கு இந்திய ஆயுதங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அங்கே நடக்கும் போர் சீனா நடாத்துவது. பாகிஸ்தான் போலவே இலங்கையும் சீனாவின் காலனி ஆக ஆகிவருகிறது. (சொல்லப்போனால் ஆகிவிட்டது) அதனை தடுக்கக்கூடிய வலிமை இந்திய அரசுக்கு இல்லை. இங்கே இந்திய அரசாங்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசினால் உங்களுக்கு விஷயம் தெரியும். இது ஜியோ பாலிடிக்ஸ். ஆப்பிரிக்காவில் சூடான் டார்பரை அடக்குவதற்கும், அங்குள்ள கருப்பினத்தவரை துரத்துவதற்கும் சீனாதான். இலங்கையில் ஈழப்போராட்டத்தை நசுக்கி அங்கு திரிகோணமலை, ஹம்பன்டோடா துறைமுகங்களை ஆக்கிரமிக்கவும் இந்தியாவை சுற்றி வளைக்கவும் முனைவதும் சீனாதான்.
http://search.japantimes.co.jp/cgi-bin/eo20090304bc.html
இந்த ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த கட்டுரையை பாருங்கள். இது வினவு இணையப்பக்கம் மாதிரி யாரும் கேள்வி கேட்கமுடியாத உளறல்கள் அல்ல. ஜப்பான் டைம்ஸ் இதழ் பரிசோதித்து பார்க்காத செய்திகளை வெளியிடாது.

Beijing began selling larger quantities of arms, and dramatically boosted its aid fivefold in the past year to almost $1 billion to emerge as Sri Lanka's largest donor. Chinese Jian-7 fighter jets, antiaircraft guns, JY-11 3D air surveillance radars and other supplied weapons have played a central role in the Sri Lankan military successes against the Liberation Tigers of Tamil Eelam (or "Tamil Tigers"), seeking to carve out an independent homeland for the ethnic Tamils in the island's north and east.

Beijing even got its ally Pakistan actively involved in Sri Lanka. With Chinese encouragement, Pakistan — despite its own faltering economy and rising Islamist challenge — has boosted its annual military assistance loans to Sri Lanka to nearly $100 million while supplying Chinese-origin small arms and training Sri Lankan air force personnel in precision guided attacks.

China has become an enabler of repression in a number of developing nations as it seeks to gain access to oil and mineral resources, to market its goods and to step up investment. Still officially a communist state, its support for brutal regimes is driven by capitalist considerations. But while exploiting commercial opportunities, it also tries to make strategic inroads. Little surprise thus that China's best friends are pariah or other states that abuse human rights.

இதுமாதிரி இந்தியா ஒரு பில்லியன் டாலரை இலங்கைக்கு தூக்கி கொடுக்குமா? கம்யூனிஸ்டுகள் வார்த்தையில் இந்தியாவே ஒரு பிச்சைக்கார நாடு. அதில் எப்படி ஒரு பில்லியன் டாலரை கொடுக்கமுடியும். இப்படி எய்த சீனாவை விட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவை திட்டுவது ஏன்?

இந்த சீன அட்டூழியத்தை கம்யூனிஸ்டுகள் பேசட்டுமே. வாயே திறக்கமாட்டார்கள்.

சரி இப்படி நிலைமை இருக்கும்போது எப்படி மருத்துவர் அய்யாவோ, அல்லது கலைஞரோ இந்த நிலைமையை மாற்றமுடியும்? நாளை பாஜக ஆட்சிக்கு வந்தாலாவது சீனாவுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ அல்லது கம்யூனிஸ்டு ஆட்சியிலோ நடக்குமா? சிந்தித்து பார்க்கவேண்டும். சும்மா சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் கலைஞரையும் மருத்துவர் அய்யாவையும் திட்டுவது எதற்காக? சீனாவுக்கு எதிராக இலங்கையில் இந்திய படைகளை கொண்டு இறக்கமுடியுமா?

இன்று இலங்கைக்கு ஆதரவாக உலக சமுதாயத்தையே வளைத்து போட்டுவிட்டார்கள். ஐநா முதற்கொண்டு இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

ஆகவே மருத்துவர் அய்யாவோ கலைஞரோ இங்கு குற்றவாளிகள் அல்ல. சீனாவுக்கு வால் பிடிக்கும், இந்து ராம், சிபிஎம், சிபிஐ, மக இக கம்யுனிஸ்டுகளே முதல் குற்றவாளிகள்.

இந்த ஐந்தாம்படை துரோக கம்யூனிஸ்டுகளை திட்டினால், அது நியாயமானது.

Anonymous said...

//தயவு செய்து எங்கள் மக்கள் மீது சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்..//
உண்மை தமிழனே ,
எமக்கு தமிழக மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாம் தேர்தல் வரும்வரை காத்திருந்தால் இங்கு ஈழத்தில் எல்லாமே முடிந்துவிடும். அப்போது ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்க ஈழத்தில் யாரும் இருக்க மாட்டான். சிங்களவனும் இலங்கையின் இறையாண்மை என்று கூறி யாரையும் உள்ளனுமதிக்க மாட்டான்.
இந்தியா கூட உள் வரமுடியாது. அதனால்தான் இலங்கை கிரிகெட் வீரர்கள் மீதான தாக்குதலின் பின்பும் பாகிஸ்தானுடன் இலங்கை தொடர்ந்தும் உறவைப் பேணுகிறது.

அதற்காகத்தான் நான் உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் , எமக்கு உடனடியாக உதவுங்கள் என்று,

ஈழ தமிழன்.,

Anonymous said...

FYKI,

According to my knowledge following information are correct and it is provided by ALJAZEERA.
REF:
http://english.aljazeera.net/focus/blanktemplate/2008/11/2008111061193133.html

I have added some information which I feel encourage to choose arms. I hope u can write something about this :).

1948: Sri Lanka, then known as Ceylon, gains independence from British rule. Ethnic Tamils feel disenfranchised by the so-called "Citizenship Act" which denied citizenship to the Tamils and their descendents brought from India by the British to work on tea plantations
1956: Solomon Bandaranyake, then prime minister, enacts a law making Sinhala the only official language of Sri Lanka, alienating the Tamils. Peaceful protests by Tamils are broken up by a Sinhala mob and riots follow.
1957/65: Pacts are signed between the government and the Tamils giving them a measure of regional autonomy and freedoms in language and education, but the agreements remain largely on paper.
1970: New constitution enshrines earlier law making Sinhala Sri Lanka's official language and makes Buddhism the country's official religion, further alienating Tamils who are mainly Hindus and Christians.
1972: Ceylon becomes a Republic and is officially renamed the Republic of Sri Lanka. Velupillai Prabhakaran forms the Tamil New Tigers group to set up a separate homeland - the Tamil Eelam.
1975: Tamil New Tigers re-named Liberation Tigers of Tamil Eelam (LTTE).
1978: LTTE proscribed as an illegal organisation.

1981: Riots in Jafna. A state of emergency is declared.
1983: First guerrilla-style ambush by LTTE kills 13 soldiers. Rioting erupts killing hundreds of people. About 150,000 Tamil refugees flee to India where Tamil military training camps are established.
1987: The Indian government cracks down on armed Tamil groups in India.
First suicide attack by LTTE kills 40. Indo-Sri Lanka Peace Accord signed and India agrees to deploy peackeepers - the Indian Peace Keeping Force (IPKF), which quickly gets drawn into the civil war.
1990: IPKF withdraws from Sri Lanka. LTTE becomes the prominent Tamil armed group. Over 100,000 Muslims are expelled from LTTE dominated areas, many with just two hours notice.
1991: Rajiv Gandhi, then Indian prime minister, is assassinated by a female LTTE suicide bomber.
1993: Ranasinghe Premadasa, then president of Sri Lanka, is killed in a LTTE suicide bomb attack.
1999: Chandrika Kumaratunge, a former prime minister and later the first female president of Sri Lanka, is wounded in an assassination attempt during an election rally.

2002: Norway-brokered ceasefire between the LTTE and the Sri Lankan government comes into effect. It holds for five years despite many incursions from both sides. A road linking Jaffna peninsula and the rest of Sri Lanka opens after 12 years.
2004: The LTTE splits. Vinayagamoorthi Muralitharan, also known as Colonel Karuna, commander for the Batticaloa-Amparai, breaks from the LTTE forming a pro-government outfit.
2005: The government of Sri Lanka and LTTE sign Post-Tsunami Operational Management Structure (P-Toms) by which the two entities agreed to work together to offer relief to the communities devastated by the Asian Tsunami. Lakshman Kadirgamar, Sri Lankan foreign minister, is assassinated by the LTTE.

2007: After weeks of heavy fighting, the Sri Lankan army takes back the LTTE-held town of Vakarai. LTTE air force attacks various Sri Lankan targets including Colombo airport. SP Thamilselvan, leader of the LTTE's political wing, is killed in an air raid.
2008: The Sri Lankan government formally withdraws from the ceasefire with the LTTE and renewed fighting erupts. Amid attacks and counter-attacks, Sri Lankan forces seem to gradually gain the upper hand.
2009: The government claims its forces have captured the town of Kilinochchi, the political hub of the Tamil Tigers and the the last rebel-town of Mullaittivu. Remaining LTTE fighters thought to be trapped in a small area in northeast of the island prompting military claims that the war could end in days.

============================


1971 : A system of standardisation of marks was introduced for admissions to the universities, obviously directed against Tamil-medium students

'The qualifying mark for admission to the medical faculties was 250 (out of 400) for Tamil students, whereas it was only 229 for the Sinhalese. Worse still, this same pattern of a lower qualifying mark applied even when Sinhalese and Tamil students sat for the examination in English. In short, students sitting for examinations in the same language, but belonging to two ethnic groups, had different qualifying marks.'

Ref : http://www.tamilnation.org/indictment/indict010.htm
http://www.tamilnation.org/indictment/indict011.htm




1981 : The burning of the Jaffna library was an important event in the ongoing Sri Lankan civil war. An organized mob went on a rampage on the nights of May 31 to June 2, 1981, burning the Jaffna public library. It was one of the violent examples of ethnic biblioclasm of the twentieth century.Term[›][1] The library at the time of destruction was one of the biggest in Asia containing over 97,000 unique books and unique manuscript.
[ FROM : Wiki]
Ref : http://www.sangam.org/ANALYSIS/Library_6_01.htm

http://jyovramsundar.blogspot.com/2009/02/blog-post_21.html

வெத்து வேட்டு said...

Elathamilan: If you want help from the Rich person accept the truth that your dad can't do anything...
because of your impotent dumb dad you are still toiling in hardships..do you understand that???
your dad is not trying hard to bring you up...he is like a drunkard who expolites all his family members...

வெத்து வேட்டு said...

Elathamilan: you are the one who is begging the rich guy to help you ;)

உண்மைத்தமிழன் said...

///Ela Thamilan said...
//இளைய சகோதரன் ஈழ தமிழனே, பிரகாகரனால் ஒன்றும் இயலாது தானே. அந்த உதவாகரையை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்கள் தமிழக மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.//

அனானிமஸ் , உங்களின் கருத்து மிகப் பிரமாதம். உதாரணத்துக்கு, ஒரு கதை சொல்கிறேன் .
உமது தந்தை மிகவும் கஷ்டபட்டு உழைத்து, உம்மையும் உமது குடும்பத்தையும் பிறர் உதவியின்றி காப்பாத்துகிறார் என்று வைப்போம். எனினும் உமக்கு ஒரு உறவினர் இருக்கிறார். அவர் மிகவும் செல்வந்தர். அத்துடன் உமக்கு உதவி செய்ய அவருக்கு விருப்பம் இருக்கு. ஆனால் அந்த உறவினருக்கும் உமது தந்தைக்கும் ஒத்துவராது. அதனால் அவரின் உதவி உங்களிற்க்கு கிடைக்கவில்லை. ஆக, உமக்கு அந்த உதவி கிடைப்பதற்காக, நீர் உமது தந்தையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, அந்த உறவினரிடம் போய் சேருவீரா?
ஈழ தமிழன்.//

உதாரணம் ஓகேதான் ஈழத் தமிழரே..

ஆனால் உங்களது தந்தை உங்களை கண் கலங்காமல் காப்பாற்றினாரா என்பதுதான் பிரச்சினை.. இல்லை என்கிறபோது குடும்பத்திற்காக செல்வந்தரின் உதவியை, தந்தையை மீறியும் நாடுவதுதான் சாலச் சிறந்தது..

தந்தை ஒரு மனிதருக்காக, குடும்பமே சாவது முட்டாள்தனம்..

உண்மைத்தமிழன் said...

தமிழ்மணி ஸார்..

உங்களது பின்னூட்டத் தகவல்கள் அனைத்தும் எனக்குப் புதிது.. இந்த விவகாரத்தில் தோண்டத் தோண்டப் புதையலைப் போல பல புது, புது விஷயங்கள் வெளியே வருகின்றன.

உண்மையாக சீனாவே இலங்கைக்கு உதவி வருகிறது என்றாலும், இந்தியா தனது எதிர்ப்பையும், இலங்கைத் தமிழர்களுக்கான உதவியையும் மறுக்காமல் வழங்க வேண்டும்.

இலங்கையை இந்த விஷயத்தில் அடிபணியச் செய்ய எத்தனையோ ராஜதந்திர வேலைகள் செய்யலாம்.. ஐ.நா.வுக்கு கொண்டு போகலாம்.. விடுதலை பெற்றுத் தந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா உழைத்தால் எண்ணற்ற வழிகள் உள்ளன.

ஆனால் எண்ணம்தான் இப்போது வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

///Ela Thamilan said...
//தயவு செய்து எங்கள் மக்கள் மீது சந்தேகமோ, அவநம்பிக்கையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்..//

உண்மை தமிழனே, எமக்கு தமிழக மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாம் தேர்தல் வரும்வரை காத்திருந்தால் இங்கு ஈழத்தில் எல்லாமே முடிந்துவிடும். அப்போது ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்க ஈழத்தில் யாரும் இருக்க மாட்டான். சிங்களவனும் இலங்கையின் இறையாண்மை என்று கூறி யாரையும் உள்ளனுமதிக்க மாட்டான். இந்தியா கூட உள் வரமுடியாது. அதனால்தான் இலங்கை கிரிகெட் வீரர்கள் மீதான தாக்குதலின் பின்பும் பாகிஸ்தானுடன் இலங்கை தொடர்ந்தும் உறவைப் பேணுகிறது.

அதற்காகத்தான் நான் உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன், எமக்கு உடனடியாக உதவுங்கள் என்று..

ஈழ தமிழன்.,//

உதவுவதற்கு தமிழகத்து மக்களுக்கு ஆர்வமும் உண்டு. அனுதாபமும் உண்டு. மனமும் உண்டு.. ஆனால் சக்தியைத்தான் இந்த அரசியல்வியாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்களே..

அரசியல் வியாதிகளிடம் சிக்கிக் கொண்ட அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.. எங்களுக்காக அது சிறிதேனும் பயன்படுத்தப்படவில்லை. இதுதான் பிரச்சினை..

உண்மைத்தமிழன் said...

இலங்கை பிரச்சினையில் படிப்படியாக வளர்ந்த பிரச்சினையை ஆண்டு கணக்கில் வரிசைப்படுத்தி அனுப்பியிருக்கும் அனானி அவர்களுக்கு எனது நன்றி..

எனக்கும் மிக உபயோகமாக இருக்கும்..

நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//வெத்து வேட்டு said...
Elathamilan: If you want help from the Rich person accept the truth that your dad can't do anything...
because of your impotent dumb dad you are still toiling in hardships..do you understand that???
your dad is not trying hard to bring you up...he is like a drunkard who expolites all his family members...//

வெத்து வேட்டு ஸார்,

நானும் இதைத்தான் சொல்லியிருக்கிறேன்.. தந்தை சரியில்லையெனில் நம் மீது அக்கறை கொண்டோரின் உதவிகளை மறுக்காமல் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை..

உண்மைத்தமிழன் said...

//வெத்து வேட்டு said...
Elathamilan: you are the one who is begging the rich guy to help you ;)//

அப்படி நாங்கள் நினைக்கவில்லை வெத்துவேட்டு ஸார்..

அவர்களுடைய கஷ்டங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமை என்பதால் அதனைச் செய்ய மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்..

நையாண்டி நைனா said...

அண்ணே கொஞ்சம் நம்ம வீட்டு பக்கம் வந்து உங்க மேலான கருத்தை சொல்லிட்டு போங்க......

Anonymous said...

//அவர்களுடைய கஷ்டங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமை என்பதால் அதனைச் செய்ய மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்..//

இத படிக்கறதுக்கு நல்லா இருக்கு!! ஆனா நிஜத்துல இது பாதி தான் உண்மை!!
நீங்க நம்பலைனா தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!! காங்கிரஸ், தி.மு.க வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பாக்கலாம்!! (காங்கிரஸ் உடன் கூட்டு வைத்ததற்காக மட்டும் தான் தி.மு.க வை இங்கே குறிப்பிட்டுள்ளேன்!! மத்தபடி ௮.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை!!)

அத்திரி said...

ஹிஹிஹி..அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே..... நம்ம கட பக்கம் வர்றது

Anonymous said...

தந்தை ஒரு மனிதருக்காக, குடும்பமே சாவது முட்டாள்தனம்.

உண்மை தமிழன், மிக நன்றாக சொன்னீர்கள். இந்த தந்தை இவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவர்கள் பணத்தையும் வாழ்வையும் சுரண்டியதோடு இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே இந்த தந்தை தான்.

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
அண்ணே கொஞ்சம் நம்ம வீட்டு பக்கம் வந்து உங்க மேலான கருத்தை சொல்லிட்டு போங்க......//

வர்றோம்ண்ணே..

நேரமில்லாம வேற எங்கேயும் போக முடியாம கெடக்கோம்.. மன்னிச்சுக்குங்கண்ணேன்..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
//அவர்களுடைய கஷ்டங்கள் புரிந்து அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமை என்பதால் அதனைச் செய்ய மக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்..//

இத படிக்கறதுக்கு நல்லா இருக்கு!! ஆனா நிஜத்துல இது பாதிதான் உண்மை!! நீங்க நம்பலைனா தேர்தல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!! காங்கிரஸ், தி.மு.க. வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பாக்கலாம்!! (காங்கிரஸ் உடன் கூட்டு வைத்ததற்காக மட்டும்தான் தி.மு.க.வை இங்கே குறிப்பிட்டுள்ளேன்!! மத்தபடி ௮.தி.மு.க விற்கும் தி.மு.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை!!)///

இதில் எனக்கும் எந்த கருத்து மாறுபாடும் இல்லை..

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..

இருவரில் யார் பரவாயில்லை என்று எடுத்துக் கொண்டால் தி.மு.க.வே மேல் என்பேன்..

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
ஹிஹிஹி..அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே. நம்ம கட பக்கம் வர்றது.//

அத்திரியண்ணேன்..

வாரோம்ண்ணேன்.. நேரமில்லீங்கண்ணேன்.. அதுதான் வேற காரணமில்லீங்கண்ணேன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தந்தை ஒரு மனிதருக்காக, குடும்பமே சாவது முட்டாள்தனம்.

உண்மை தமிழன், மிக நன்றாக சொன்னீர்கள். இந்த தந்தை இவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவர்கள் பணத்தையும் வாழ்வையும் சுரண்டியதோடு இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே இந்த தந்தைதான்.//

அவர்கள் புரிந்து கொண்டால் சரி.. புரிய மறுத்தால் அது அவர்களது வயது அல்லது அனுபவத்தால் விளைவது என்று எடுத்துக் கொள்வோம்..

பாவம் அவர்களும்தான் என்ன செய்வார்கள்..? பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்பிலுமே இருக்கிறார்கள்..!