நான் நலம்..! நீங்கள் நலம்..! யாவரும் நலமா..!? - முழு நீள திரை விமர்சனம்

14-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படத்தின் தோல்வியை வைத்து அதன் இயக்குநரின் திறமையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது..

கதையே இல்லாமல் வெறும் திரைக்கதையை வைத்து சினிமா எடுத்துவிடக் கூடாது என்று பத்தாம்பசலித்தனக் கொள்கையுடன் இருக்கக் கூடாது..

திரைக்கதை மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால் போதாது.. இன்ன பிற கூட்டணிகளும் நிறைவாக இருந்தால்தான் ஜெயிக்கக் கூடிய படமாக அது அமையும்..

இதையெல்லாம் நேற்றைக்கு நான் பார்த்த இந்தத் திகில் படம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது.


மனோகர் என்கிற அந்த இளைஞனும், அவனது குடும்பத்தாரும் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். புதிய அபார்ட்மெண்ட் ஒன்றை தவணை முறையில் விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். அவர்கள் அங்கே குடியேறும் முதல் நாளிலிருந்துதான் படமே துவங்குகிறது.

முதல் நாளே காய்ச்சிய பால் திரிந்து போகிறது. சகுனமே சரியில்லை என்கிறாள் அம்மா. “பாக்கெட் பால்” என்று சொல்லி சமாளிக்கிறாள் மருமகள்.

சீரியல் பார்ப்பதையே புண்ணியமாகக் கொண்ட அவனது அம்மாவும், துணைக்கு இரண்டு மருமகள்களுமாக அன்றைய முதல் நாளில் டிவி முன் அமர, அன்று மட்டும் அவர்களது பிரியத்துக்குரிய சீரியல் வராமல் டிவியே மக்கர் செய்கிறது. ஆனால் உறுத்துதல் இல்லாமல் கிடைக்கின்ற சீரியலையே பார்க்கத் துவங்குகிறார்கள். அந்த சீரியலின் பெயர்தான் ‘யாவரும் நலம்..!'

சீரியலிலும் இதே கதைதான்.. அண்ணன், தம்பி, இவர்களது மனைவிமார்கள், அண்ணனின் இரண்டு குழந்தைகள், அம்மா இவர்களும் புதிய வீட்டிற்கு குடி வருகிறார்கள். நம்ம கதை மாதிரியிருக்கே என்று சந்தோஷத்தோடு பெண்கள் மூவரும் சீரியலில் மூழ்குகிறார்கள்.


நமது மனோகருக்குத்தான் சோதனை ஆரம்பமாகிறது. அனைவருக்கும் ஒத்துழைக்கும் லிப்ட் அவனுக்கு மட்டும் வேலை செய்ய மறுக்கிறது.. 13வது மாடியிலிருந்து இறங்கி ஏற வேண்டியிருக்கிறது. சலிப்புடன் முதல் நாளைத் துவக்கும் அவனுக்குத் தினமும் அதுவே வேலையாகிவிடுகிறது. அன்றைக்கு அவனது செல்போனில் அண்ணன் மகன் எடுத்த அவனது முகம் மட்டும் அஷ்டகோணலாக காட்சியளிக்கிறது. இதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான் மனோகர்.

பூஜையறையில் சுவாமி படங்களை மாட்ட ஆணியடிக்கும்படி வாட்ச்மேனிடம் சொல்கிறான். ஆணி சுவற்றில் இறங்கவேயில்லை என்கிறான் வாட்ச்மேன். இதனால் தன்னுடன் பணியாற்றும் ஊழியரை அனுப்பி ஆணி அடிக்கச் சொல்கிறான். டிரில்லரை பிளக்கில் சொருகியவுடன் ஷாக்கடித்து கீழே விழுகிறான் வந்தவன்.. மாலை வீடு திரும்பியவுடன் இது தெரிந்த மனோகர் தானே அந்த வேலையைச் செய்வதாகச் சொல்லி வெறியோடு அடிப்பவன் தனது கையில் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்துகிறான்.

இரண்டாவது முறையாக அவனது செல்போனில் எடுக்கப்படும் அவனது புகைப்படம் கோணல்மானலாகத் தெரிகிறது. அந்த சந்தேகத்தை தீர்க்க அவனே சில புகைப்படங்கள் எடுத்துப் பார்க்கிறான்.

அலுவலகத்தில் இருந்து சந்தோஷத்தோடு வீடு திரும்பும் அண்ணன்காரன் தனக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது என்றும் இன்க்ரீமெண்ட்டாக மாதம் பத்தாயிரம் ரூபாய் தனக்கு இனிமேல் அதிகம் கிடைக்கும் என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்கிறான். அந்தப் பணம் கிடைக்கவிருப்பதால் வீட்டுக் கடனை இன்னும் குறுகிய காலத்திலேயே கட்டிவிடலாம் என்கிறான் அண்ணன்.. மறுநாள் அவனது தங்கை பரீட்சை ரிஸல்ட் கேட்பதற்காக கல்லூரிக்குக் கிளம்ப அவளைக் கிண்டல் செய்து அனுப்பி வைக்கிறான் மனோகர்.

பக்கத்து பிளாட்டில் வசிக்கும் கண் பார்வையற்ற ஒருவர் தனது நாயுடன் அறிமுகமாகிறார். அவரை வீட்டுக்கு வரும்படி அழைத்த அன்றைக்குத்தான் குடும்பமே வெளியே சென்றுவிட தானே அவரை வரவேற்கிறான். அவருடன் வந்திருக்கும் உடன்பிறவா உயிரினமான அந்த நாய் வீட்டுக்குள் எதையோ பார்த்து குரை.. குரை என்று குரைக்கிறது.. ஒன்றும் இல்லை என்று மனோகர் சொல்லியும், நாய் தன் எஜமானரிடமிருந்தே தப்பித்து ஓடி விடுகிறது.

வந்தவரும் வெளியேறிப் போக, நாய் நின்ற இடத்தில் இருந்து தன்னை செல்போனில் புகைப்படம் எடுத்துப் பார்க்கிறான். சரியாக இருந்தது. ஆனால் உள்வீட்டுக்குள் நின்று புகைப்படம் எடுத்துப் பார்க்கிறான். கோணல்மானலாக இருக்கிறது. திக்கென்றாகிறது மனோகருக்கு..


இந்த இனம் புரியாத கலவரத்திலேயே டிவி முன் அமர்பவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. தொலைக்காட்சியில் வேறு சேனல்களை மாற்ற முடியாமல் தவிப்பவன், வேறு வழியில்லாமல் அந்த 'யாவரும் நலம்' சீரியலை பார்க்க வேண்டி வருகிறது. பார்க்கிறான். முந்தைய நாள் அவன் வீட்டில் நடந்த அதே கதைதான்.. அண்ணனுக்கு பிரமோஷன்.. தங்கைக்கு ரிஸல்ட் என்று போகிறது.. நம்ப மாட்டாமல் பார்க்கிறான்.

கதையில் வருவதைப் போலவே நிஜத்திலும் அவன் தங்கை 69.3 சதவீதம் மதிப்பெண் வாங்கித் தேர்வாகி, சந்தோஷத்துடன் வீடு திரும்புகிறாள். திகைத்துப் போய் இருக்கிறான் மனோகர். இந்த சீரியலின்மேல் ஆர்வமாகி பார்க்கத் துவங்குகிறான்..

மறுநாளைய எபிஸோடில் தம்பி மனைவி தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்றெண்ணி தனது மனைவியிடம் சுற்றி வளைத்தெல்லாம் கேள்வி கேட்கிறான். அப்படி ஒன்றுமில்லை என்பதால் ஏதோ என்று நினைத்து வேலைக்குச் செல்பவனிடம் பகல் பொழுதில் போன் செய்து தான் கர்ப்பம் என்கிறாள் மனைவி.

சந்தோஷத்துடன் வீடு திரும்புகிறான் மனோகர். ஸ்வீட் கொடுத்து வரவேற்கிறார்கள் குடும்பத்தினர். மறுநாள் வரையில் அந்த சந்தோஷம் நீடிக்க.. இன்றைக்கு எபிஸோட் எப்படியிருக்கும் என்பதைப் பார்க்க ஆவலாகிறான். வீட்டுப் பெண்கள் நேருக்கு நேராக அமர்ந்து பார்க்க.. மனோகர் மட்டும் ஒளிந்திருந்து பார்க்கிறான்.

அன்றைய எபிஸோடில் கர்ப்பமாக இருக்கும் தம்பி மனைவி மாடிப்படிகளில் தவறி விழுந்து அடிபடுகிறாள். அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு மனோகரின் மனைவி சமையலறைக்குப் போனவள், போகும் வழியில் மனோகரைப் பார்த்து கிண்டல் செய்துவிட்டுப் போக.. மனோகர் குழப்பத்தில் நிற்க.. சமையலறையில் இருந்து மனைவியின் அலறல். ஓடிப் போய் பார்க்க வயிற்றில் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கிறாள்.

அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே வருகிறான் மனோகர். இப்போதும் அவனது கண்கள் தொலைக்காட்சியையே பார்க்கின்றன. அதிலும் இதேதான். மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் கணவன்..

மருத்துவமனையில் மனைவியைக் கிடத்திவிட்டு போர்டிகோவில் குடும்பத்தினரோடு தவம் கிடக்கிறான் மனோகர். அவர்களது ஆஸ்தான மருத்துவர் "நம்மளாலான முயற்சிகளை செய்வோம். இதுக்கும் மேல ஆண்டவன் இருக்கான்.." என்கிற வாடிக்கையான வசனத்தைச் சொல்லும்போது மனோகரின் கண்கள் அனிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்க்கின்றன. மனம் பரபரக்கிறது..

மருத்துவமனைக்குள் பேப்பர் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் பேப்பரை வாங்கி டிவி நிகழ்ச்சி நிரல்களைப் படிக்கிறான். யாவரும் நலம் 1 மணி என்று போட்டிருக்கிறது. கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான். 1 மணிக்கு இன்னும் 10 நிமிடங்கள். வேகவேகமாக மருத்துவமனைக்குள் ஓடிப் போய் தொலைக்காட்சிகளைப் போடுகிறான். அவைகள் இரண்டு நாட்களாக வேலை செய்யவில்லை என்கிறான் மருத்துவமனை ஊழியன்.

காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு ஓடுகிறான். காரை விட்டிறங்கி தான் மட்டும் சென்றால் லிப்ட் மக்கர் செய்யும் என்பதை உணர்ந்து வாட்ச்மேனை இழுத்துக் கொண்டு லிப்ட்டில் செல்கிறான். வீட்டிற்குள் வந்து அமர டிவியில் எபிஸோட் ஓடுகிறது. மருத்துவமனையில் இருக்கும் தம்பி மனைவியின் உடல் நிலை பற்றி ஒரு பெண் மருத்துவர் தம்பியிடம் சொல்கிறார். "குழந்தையைத்தான் எங்களால காப்பாத்த முடியல.. அவங்களுக்கு ஒண்ணும் அடிபடல.. பிரச்சினையில்லை.." என்கிறார். இப்போதுதான் மனோகர் திருப்தியடைகிறான். முழுமையாக இந்த சீரியல்தான் தங்களது உண்மையான குடும்ப வாழ்க்கையைத்தான் பிரதிபலிக்கிறது என்பதை இப்போதைக்கு உணர்கிறான்.


மருத்துவமனைக்கு திரும்பி வந்து மனைவியைக் கொஞ்சுகிறான். டாக்டரைக் கட்டிப் பிடித்து கொஞ்சி தேங்க்ஸ் சொல்கிறான். மருத்துவர் சொல்லும் மருந்துகளை வாங்கச் செல்பவன் மருந்துகள் கொடுக்கப்பட்ட பேப்பர் பையில் இருந்த டிவி நிகழ்ச்சி நிரலை பார்த்தவுடன் ஏதோ ஒரு நினைவு வந்தவனாக மீதிப் பணம்கூட வாங்காமல் ஓடுகிறான்.

ஏவிஎம் ஸ்டூடியோவில் 3-வது ப்ளோரில் 'யாவரும் நலம்' ஷூட்டிங். அங்கே வருகிறான். சும்மா பார்க்க வந்தேன் என்றால் உள்ளே விடமாட்டார்கள் என்பதால் "சீரியலில் விளம்பரம் செய்றது சம்பந்தமா பேசணும்.." என்கிறான். செக்யூரிட்டி அனுமதிக்க, உள்ளே செல்பவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

நம்ம குஷ்பூக்கா.. அம்சமா ஒரு கேம் ஷோவை நடத்திக்கிட்டிருக்காங்க. "இதுதான் யாவரும் நலம் நிகழ்ச்சி.." என்கிறான் செக்யூரிட்டி. மனதில் குழப்பம் மேலோங்க.. அங்கிருந்து ஓடுகிறான். ஒரு டிவி கடைக்குள் நுழைந்தவன் அனைத்து டிவிக்களிலும் அதே சேனலை வைத்துப் பார்க்க அது நிஜமாகவே குஷ்பூவின் கேம் ஷோதான்.. அப்படீன்னா வீட்டு டிவியில் பார்க்கும் அந்த சீரியல்.. அந்தக் கதை.. அந்த நடிகர்கள்.. அந்தச் சம்பவங்கள்.. பெரும் குழப்பமடைகிறான்.

தீர்வு காண மருத்துவரிடம் செல்லாமல் தனது இன்ஸ்பெக்டரான ஒரு நண்பனிடம் செல்கிறான் மனோகர். விழுந்து, விழுந்து சிரிக்கிறான் இன்ஸ்பெக்டர். தன்னால் நம்ப முடியவில்லை என்கிறான். தியேட்டரில் படம் பார்க்கும் 500 பேராலேயே நம்ப முடியலை. அவரால் மட்டும் எப்படி முடியும்..? ஆனாலும் மனோகர் தனது கருத்தில் உறுதியாக இருக்க.. இன்ஸ்பெக்டர் நண்பனை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

அது மதிய நேரம். அதே 1 மணி.. சீரியல் துவங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் நண்பனை வீட்டினர் அனைவரும் வரவேற்கின்றனர். ஓரமாக அமர்ந்து பார்க்கின்றனர் நண்பர்கள் இருவரும். அந்த சீரியலிலும் இதே காட்சிதான். அந்தக் குடும்பத்திலும் ஒரு இன்ஸ்பெக்டர் அறிமுகமாகிறார். உள்ளே வந்ததும் மனோகரின் நண்பனான இன்ஸ்பெக்டர் செய்ததைப் போலவே சீரியலிலும் அம்மாவின் காலைத் தொட்டு வணங்குகிறான் சீரியல் இன்ஸ்பெக்டர். நிஜ இன்ஸ்பெக்டருக்கு வியர்க்கத் துவங்குகிறது.

"பார்த்தியா.. பார்த்தியா.. நான் சொன்னேன்ல்ல.." என்றெல்லாம் மனோகர் சொல்லிக் கொண்டிருக்க அங்கே சீரியலின் விறுவிறுப்புக்காக அடுத்த பரபரப்பு துவங்கிவிட்டது. சீரியல் இன்ஸ்பெக்டரின் வீட்டிலிருந்து போன். அவருடைய மனைவி கேஸ் வெடித்து தீக்காயம் அடைந்துவிட்டதாக. இங்கே மனோகர் பரபரப்பாகிறான். நிஜ இன்ஸ்பெக்டரை தரதரவென இழுத்துக் கொண்டு பறக்கிறான்.

காரில் செல்லும்போதே இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு போன் செய்கிறான். மிகச் சரியாக இன்ஸ்பெக்டரின் மனைவி கேஸை திறந்துவைத்துவிட்டு பற்ற வைக்கப் போக, போன் ஒலிக்கிறது. போனை எடுக்கும் இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் மனோகர், என்ன வேலை செஞ்சாலும் அப்படியே போட்டதை போட்டபடி வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வரும்படி சொல்கிறான். இன்ஸ்பெக்டரும் போனை வாங்கி அதையே தனது தர்மபத்தினியிடம் சொல்ல.. அவள் அப்படியே செய்கிறாள்.

அவர்கள் இன்ஸ்பெக்டரின் வீட்டிற்கு அவசரமாக வந்திறங்குகிறார்கள். வீட்டிற்குள் வர.. கியாஸ் வாடை ஆளைத் தூக்குகிறது. பதட்டத்துடன் ஜன்னல் கதவுகளைத் திறந்து கியாஸை வெளியேற்றுகிறார்கள். கடைசி நிமிடத்தில் வந்து தனது வாழ்க்கைத் துணைவியைக் காப்பாற்றியிருப்பதை உணர்கிறார் இன்ஸ்பெக்டர். தானும் அந்த சீரியல் கதையை நம்புவதாக இப்போதுதான் இன்ஸ்பெக்டர் சொல்கிறார். கூடவே இனிமேலும் அந்தக் கதையை கவனமாக வாட்ச் செய்து தனது கேரக்டரின் நிலைமையை அவ்வப்போது சொல்லும்படி கேட்டுக் கொள்கிறார்.

இந்த விஷயம் முழுவதையும் வீட்டாரிடம் மறைக்கும்படி முடிவு செய்து கொள்கிறார்கள் இருவரும். அடுத்து இருவரும் மனோகரின் ஆஸ்தான மருத்துவரிடம் சென்று விசாரிக்கிறார்கள். அவர் அதை நம்பிக்கையுடன் சொல்கிறார். ஆவிகளுக்கும் ஒரு கதை உண்டு. வாழ்க்கை உண்டு என்கிறார். அவரிடமும் சீரியல் கதையை மறைத்துவிட்டு ஒப்பீனியனை மட்டும் கேட்டுவிட்டு வீடு திரும்புகிறான் மனோகர்.

அபார்ட்மெண்ட்டில் வலம் வரும் கண் பார்வையற்றவரின் நாய் ஓரிடத்தைப் பார்த்துவிட்டு குரைக்கத் துவங்குகிறது. அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து ஓடுகிறது. வீடு திரும்பிய மனோகர் இதைப் பார்த்துவிட்டு, கீழே விழுந்த அவரது தடியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு நாயைத் தேடிச் செல்கிறான். நாய் குழந்தைகள் விளையாடுமிடத்தில் மணலைத் துழாவிக் கொண்டிருக்கிறது. மனோகர் அதனை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், நாயை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அவரிடம் ஒப்படைக்கிறான்.

இரவில் படுத்திருக்கும்போதுதான் அவனுக்குள் ஏதோ ஒரு எண்ணம் தோன்றுகிறது. நாய் எதையோ தோண்டிக் கொண்டிருந்தது அவனுக்குள் சந்தேகத்தைக் கிளப்ப.. அந்த நள்ளிரவு வேளையில் கொட்டுகின்ற மழையில் அந்த இடத்திற்குச் செல்கிறான். மணலைத் தோண்டுகிறான். ஒரு சிறிய பை கிடைக்கிறது. அதற்குள் இருப்பது புகைப்பட ஆல்பம்.

மறுநாள் அந்த ஆல்பத்தினை இன்ஸ்பெக்டர் நண்பனுடன் பகிர்ந்து கொள்கிறான் மனோகர். பிரித்துப் பார்க்க.. அதில் ‘யாவரும் நலம்' சீரியலில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களின் புகைப்படங்களும் இருக்கின்றன. நிஜமாகவே அந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் வாழ்ந்திருப்பதுபோல் தெரியவர இன்னுமொரு அதிர்ச்சி. அதில் ஒரு புகைப்படத்தில் 1977 என்று வருடம் தெளிவாக இருக்க.. ஒரு க்ளூ கிடைத்த மகிழ்ச்சியாகிறது அவர்களுக்கு..

இப்போது இருவரும் நூலகத்தைக் குடாய்ந்து கொண்டிருக்கிறார்கள். 1977-ம் வருடத்தில நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது ஒரு இடத்தில் கிடைக்கிறது. அதில் இருந்த செய்திகள் இப்போது விஷூவலாகக் காட்சியளிக்கின்றன.

1977-ம் ஆண்டில் தற்போதைய 'யாவரும் நலம்' சீரியலில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் சென்னையில் மைலாப்பூரில் ஒரு தனி வீட்டில் வாழ்கின்றனர். அண்ணன், தங்கைகள், அண்ணி, குழந்தைகள் என்று பாசக்காரக் குடும்பம். அவர்களது வீட்டில் முதல்முதலாக டிவி வாங்குகிறார்கள். அந்தக் குடும்பத்துக் கடைக்குட்டி தங்கை டிவியில் அறிவிப்பாளராக இருக்கிறாள். டிவியை போட்டவுடன் அவள்தான் முதலில் தோன்றி அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாள்.

அந்தக் காலம் போலவே அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்க வெளியில் கூட்டம் கூடியிருக்கிறது. அம்மா அவர்களை அழைத்துவரும்படி மகன்களிடம் சொல்கிறாள். அதே நேரம் அவர்கள் வீட்டிலேயே இருக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன் அறிமுகமாகிறான். பிறந்தது முதல் மூளை வளர்ச்சியில்லாத ஒரு பையன். தொலைக்காட்சியில் தெரியும் தனது சகோதரியைப் பார்த்து சந்தோஷப்படுபவன், தொலைக்காட்சியைப் பார்க்க வரும் அக்கம்பக்கத்தினரைப் பார்த்தவுடன் வெறி பிடித்தவன் போல் ஆகிறான். கத்துகிறான். அவர்களை அடிக்கப் பாய்கிறான். வந்தவர்கள் ஒரே ஓட்டமாக வெளியேறுகிறார்கள்.

அடுத்தக் காட்சியில் அதே 1977-ல் கொட்டுகின்ற மழை. பகல் பொழுது. அவர்கள் வீட்டைச் சுற்றிலும் குடையைப் பிடித்தபடியே கூட்டம் கூடியிருக்கிறது. காவல்துறை வருகிறது. கூட்டத்தை விலக்கிவிட்டு இன்ஸ்பெக்டர் உள்ளே செல்ல.. அங்கே அந்த மனநலம் குன்றியவன் தனது கையில் வைத்திருந்த நீண்ட சுத்தியலால் டிவி பெட்டியை அடித்து, உடைத்து ரணகளமாக்கியிருக்கிறான். கான்ஸ்டபிள்கள் உதவியுடன் அவனைப் பிடித்துவிட்டு வீட்டின் உள்ளே சென்று பார்க்க.. ஒட்டு மொத்தக் குடும்பமும் கொல்லப்பட்டிருக்கிறது. இன்ஸ்பெக்டர் அரண்டு போகிறார்.

இன்ஸ்பெக்டர் வெளியே வந்து விசாரிக்க, மனநலம் குன்றிய அந்தப் பையன்தான் செய்திருக்க வேண்டும் என்கிறான் ஒருவன். அவர்களது குடும்ப நண்பரான ஒரு வக்கீல், அவன் செய்திருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்கிறார். இன்னொரு பக்கத்து வீட்டுக்காரன் புதுக்கதை ஒன்றைச் சொல்கிறான். இந்தக் கதையும் படக்காட்சியாகவே விரிகிறது.

அந்தக் கடைக்குட்டி பெண்ணை ஒருவன் காதலித்து வந்ததாகவும், அவனைப் புறக்கணித்துவிட்டு வேறொருவனுக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடக்கும்போது அந்தக் காதலன் வீடு தேடி வந்து சலம்பல் செய்ததையும், அதை அண்ணன்மார்கள் தடுத்து அவனை அடித்துவிரட்ட.. "எல்லாரையும் கூண்டோட கொலை பண்ணிருவேன்.." என்று சொல்லி அவன் மிரட்டியதையும் பக்கத்து வீட்டுக்காரன் சொல்கிறான். "ஆள் அவன்தானா? அப்ப அலைய வேண்டியதில்லையே..?" என்று இன்ஸ்பெக்டர் சிறிய சந்தோஷத்தோடு அந்தக் காதலனைப் பற்றிக் கேட்க, "அவனும் கொஞ்ச நாளைக்கு முன்னால சூஸைட் பண்ணிக்கிட்டான் ஸார்.." என்று சொல்ல நம்மைப் போலவே இன்ஸ்பெக்டரும் கடுப்பாகி அவனை விரட்டி விடுகிறார்.

இதுவரையில் பத்திரிகைச் செய்தியாக படித்து முடிக்கிறார்கள் மனோகரும், இன்ஸ்பெக்டரும். சில நாட்கள் கழிந்த வேறொரு பத்திரிகையில் அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டரும் அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. மனோகருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் திகைப்போ திகைப்பு..

மனோகருக்கு இப்போது ஒன்று தெளிவாகப் புலனாகிறது. அந்தக் குடும்பத்தினர் வாழ்ந்த அந்த வீட்டை இடித்துத்தான் தனது அபார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது என்பதும், அப்போது இருந்த அதே டோர் நம்பரான 13-B தான் இப்போதைய தனது வீட்டு முகவரி என்பதும் தெளிவாகிறது.

தனக்கும், இந்த சீரியலுக்கும், இந்த வீட்டுக்கும் முக்கோணத் தொடர்பு இருப்பது புரிகிறது. அந்த மனநலம் குன்றியவனுக்காக வாதாடிய வக்கீலைத் தேடிப் பிடிக்கிறார்கள். அந்த வக்கீல் உறுதியாகச் சொல்கிறார்.. "இந்தக் கொலையை அந்தப் பையன் செஞ்சிருக்க மாட்டான் ஸார்.." என்கிறார். அவருடைய தகவல் உபயத்தில் மிகத் தீவிரமாக நோயின் பாதிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பையனைச் சந்திக்க மனநல மருத்துவமனைக்கு வருகிறார்கள் நண்பர்கள் இருவரும்.

"அவன் நல்லாத்தான் ஸார் இருந்தான்.. இப்ப மிகச் சமீபத்தில்தான் ஒரு நாள் தொலைக்காட்சியைப் பார்த்து பேயாய் கத்தினான்.. அன்னிலேர்ந்து ரொம்ப வெறியா மாறிட்டான். அதுனால தனி ரூம்ல அடைச்சு வைச்சிருக்கோம். அடிக்கடி தன் கைய கிழிச்சு ரத்தத்தால சுவத்துல எதையாவது கிறுக்கி வைக்கிறதுதான் அவனது வழக்கம்..." என்கிறார் மருத்துவர். அவர் சொன்னதை உண்மை என்று நிரூபிப்பதைப் போலவே அவனது நடத்தையும், அறையும் காட்சியளிக்க.. விசாரிக்க முடியாமல் திரும்புகிறார்கள் மனோகரும், இன்ஸ்பெக்டரும்.


தாங்கள் சேகரித்ததையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்ற மிதமிஞ்சிய குழப்பத்தில் மனோகர் இருக்க.. இங்கே சீரியலில் அந்த உண்மையான கொலைச் சம்பவத்தைத்தான் அரங்கேற்றியிருக்கிறார்கள். படுகொலைகள்.. பெண்கள் மூவருமே பார்க்கப் பிடிக்காமல் எழுந்து செல்கிறார்கள். வீடு திரும்பும் மனோகர், "இன்றைய சீரியல் என்னாச்சு?" என்று பதட்டத்தை மறைத்துக் கேட்க மனைவி வருத்தத்துடன் சொல்லிவிடுகிறாள்.. "அனைவரையும் படுகொலை செய்துவிட்டார்கள்.." என்று..!

திக்கென்றாகிறது அவனுக்கு. நம்ப முடியாமல் இருப்பவன் தொலைக்காட்சியை பார்க்க வேண்டி வர.. அவனுக்காகவே அக்காட்சி மட்டும் ஓடுகிறது.. ஒரு பெரிய சுத்தியல் ரத்தம் சிந்த, சிந்த தரையோடு தரையாக இழுத்துச் செல்லப்படுகிறது.. யார் அந்தக் கொலையாளி என்பதைப் பார்ப்பதற்காக ஆர்வத்தோடும், வெறியோடும் மனோகர் சோபா நுனிக்கே வந்து பதற.. அந்த முகம் திரும்ப.. அது மனோகர்தான்..

அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறான் மனோகர். இப்போது அவனுக்குள் பட்டென்று கதை புரிந்துவிட்டது. அடுத்து நடக்கப் போவது படுகொலைகள். அந்தக் கொலைகளைச் செய்யப் போவது தான்தான் என்று.. வீட்டைவிட்டு ஓடுகிறான். இன்ஸ்பெக்டர் நண்பனையும் அழைத்துக் கொண்டு காரில் மருத்துவரை பார்க்கப் பறக்கிறான் மனோகர்.

காரில் சென்றபடியே மனோகர் தனது மனைவிக்கு போன் செய்கிறான். தான் ஒரு அவசர வேலையாக வெளியே செல்வதாகவும், யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்றும், "நான் வந்து தொடர்ச்சியா 3 முறை காலிங்பெல்லை அடிப்பேன்.. அப்ப மட்டும் கதவைத் திற..." என்கிறான்.

மருத்துவரை இருவரும் சந்திக்கிறார்கள். மனோகர் தனது முழுக் கதையையும் சொல்கிறான். மருத்துவர் நம்ப மறுக்கிறார். "நல்ல மனநிலையில் இருப்பவன் சட்டென்று ஒரு நிமிடத்தில் மனம் மாறி யாரையும் கொலை செய்ய முடியாது.." என்கிறார் மருத்துவர். ஆனால் மனோகரனும், இன்ஸ்பெக்டரும் சேர்ந்து அவரது மனதை டெட்டால் போட்டு கழுவிச் சுத்தமாக்குகிறார்கள்.

"என் குடும்பத்தினரை ரெண்டு நாளைக்கு நான் பார்க்கவேகூடாது.. அவங்களை எங்கயாவது வெளியூருக்கு அனுப்பிரலாம்.." என்கிறான் மனோகர். அதைப் போலவே டெல்லி செல்வதற்கு அனைவருக்கும் டிக்கெட் போட்டு அந்த டிக்கெட்டை உடனுக்குடன் பிரிண்ட் அவுட் எடுத்து, மருத்துவரிடம் அதனைக் கொடுத்து, மனோகரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

'முன் ஜாக்கிரதை முத்தண்ணா'வாக மாறும் மனோகர் தன்னை ஒரு அறையில் போட்டு அடைக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறான். இன்ஸ்பெக்டரும் அதையே செய்ய.. இப்போது அறைக்குள்ளேயே நடந்தவைகளை ரீவைண்ட் செய்து பார்க்கிறான். மீண்டும், மீண்டும் யோசித்தபடியே ஜன்னல் வழியாக தோட்டத்தைப் பார்க்கிறான் மனோகர். அங்கே வாழை மரத்தின் அருகில் நட்டவாக்கில் நின்று கொண்டிருக்கும் ஒரு சுத்தியல் அவன் கண்களுக்குத் தெரிகிறது. இதை எங்கயோ பார்த்திருக்கோமே என்பது அவனுக்குள் உறைக்க.. காட்சி தொலைக்காட்சிக்குள் தாவுகிறது. அங்கே அடித்து வீழ்த்திவிட்டு சுத்தியலோடு வரும் காட்சி அவனுக்குள் ரீவைண்ட் ஆக.. ஆக.. ஒரு விஷயத்தை உணர்ந்து பதட்டமாகிறான்.

அந்த பெரிய சுத்தியல் இரண்டு வகையாக இருந்ததும், முதல் சுத்தியலில் ரத்தக் கறையே இல்லாமலும், இரண்டாவது சுத்தியலில் ரத்தம் சொட்டுச் சொட்டாக சிந்திக் கொண்டிருந்ததும் அவன் நினைவுக்கு வருகிறது. பட்டென்று அது மூளைக்குள் போய் அவனது ஹைப்போதலாமஸை உசுப்பிவிட அப்படியானால் கொலை செய்யப் போனது இரண்டு பேர்.. அவர்கள் வைத்திருந்தது இரண்டு சுத்தியல்கள் என்கிற உண்மை அவனுக்கு உறைக்கிறது.

ஐயோ மோசம் போய்விட்டோம் என்கிற நினைப்பில் கதவைத் திறக்கும்படி சொல்கிறான் மனோகர். இன்ஸ்பெக்டர் காரணம் கேட்க, சொல்கிறான். இன்ஸ்பெக்டருக்கு நேரம் நன்றாக இருப்பதால் அதனை ஏற்க மறுக்கிறான். "கதவைத் திறக்க மாட்டேன்.." என்கிறார். மனோகர் கெஞ்சுகிறான்.. மிஞ்சுகிறான்.. கத்துகிறான்.. பின்புறம் இருக்கும் கண்ணாடிக் கதவைக்கூட உடைக்கப் பார்க்கிறான். முடியவில்லை. அறையைவிட்டு வெளியேற வேறு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கிறான்.

மேலே இருந்த ஒரு சுவரைப் பிடித்து மேலே ஏறியவன் அங்கிருந்த பேப்பர் பண்டல்கள் சறுக்கவே கீழே விழுகிறான். அவன் விழுந்த வேகத்தில் அவன் இழுத்துவிட்ட பேப்பர் பண்டல்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறி விழுகின்றன. அதில் ஒன்றை எடுத்துப் பார்க்க அதில் அந்தத் தங்கையைக் காதலித்த பையனின் புகைப்படம் போட்டு அவனது மரணத்திற்கு அஞ்சலி என்று போடப்பட்டிருக்கிறது.

அந்த பேப்பர்கள் அனைத்துமே ஒருவகையில் அந்தப் பையனுடன் தொடர்புடையதாகவே இருக்க.. மனோகரனுக்குள் விஷயங்கள் புரியத் துவங்குகிறது. இந்த மருத்துவரின் சொந்தத் தம்பிதான் காதல் ஏமாற்றத்தில் இறந்து போனவன் என்றும், தம்பி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததால்தான் அவனது பெயரில் மருத்துவமனை கட்டி அதனை நடத்தி வருகிறார் என்பதும் புரிகிறது.

வழக்கை விசாரித்த அந்த 1977 இன்ஸ்பெக்டரை இந்த மருத்துவர்தான் கொலை செய்தார் என்பதையும் அவரே பதிவு செய்து வைத்திருப்பதையும் வாசிக்கிறான் மனோகரன். மொத்தமாக மோசம் போனோமே என்றெண்ணி பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிறான் மனோகரன். வெளியே நின்றிருந்த இன்ஸ்பெக்டர் என்ன ஒண்ணையும் காணோமே என்று கருதி பதட்டத்துடன் அழைக்க.. கதவு இடைவெளியில் அந்தப் பையனின் இறப்புக்கு வெளியிடப்பட்ட அஞ்சலிக் குறிப்பைத் தள்ளி விடுகிறான் மனோகர். எடுத்துப் பார்த்த இன்ஸ்பெக்டரும் மூச்சடைத்துப் போகிறார்.

இருவரும் காரில் ஏறி மனோகரின் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். வழியில் ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் இறங்கிக் கொண்டு, "உன் வீட்டுக்கு போலீஸ் செக்யூரிட்டி தர்றேன்.. ஆனா ஸ்டேஷனுக்குப் போயிட்டு அங்க நேரா வந்தர்றேன்.." என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

மனோகரின் வீட்டில் காலிங்பெல் 3 முறை ஒலிக்கிறது. மனோகரின் மனைவி எழுந்து லைட்டை போட கரண்ட் இல்லை என்பது தெரிகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்து கதவைத் திறக்க வாசலில் மருத்துவர் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்.

மருத்துவர் திக்கித் திணறி மனோகர் சொல்லச் சொன்னதை அவளிடம் சொல்கிறார். நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கும் மனோகரின் மனைவி மருத்துவரை உள்ளே அழைக்கிறாள். மழையில் நனைந்து வந்திருந்தபடியால் குளிருக்குக் குடிக்க காபி கேட்கிறார் மருத்துவர். மனோகரின் மனைவி உள்ளே போக.. சோபாவில் அக்காடாவென்று அமரப் போகிறார் மருத்துவர்.

அப்போது தொலைக்காட்சி தானாகவே உயிர் பெறுகிறது. அவருடைய பரம எதிரியான அந்த கடைக்குட்டி அறிவிப்பாளர் பெண் உயிர் பெற்று பேசுகிறாள். தனது குடும்பத்தை அழித்தவன் அந்த மருத்துவர்தான் என்று குற்றம் சாட்டுகிறாள். மருத்துவரின் முகம் மெல்ல, மெல்ல மாறுகிறது. அறிவிப்பாளர் பெண் கோபமும், ஆத்திரமும் அடைந்து சாபமிடுவதைப் போல் பேச மருத்துவரால் தாங்க முடியவில்லை. சட்டென்று அம்பி வேடத்தில் இருந்து அந்நியனாக உருமாறுகிறார். டேபிள் மேல் இருந்த சிறிய சுத்தியலை எடுத்து டிவியை அடித்து உடைக்கிறார். சுக்கு நூறாகிறது டிவி.

சத்தம் கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்து பார்க்கிறாள் மனோகரின் மனைவி. ஆனால் அவள் இப்போது முந்தைய 1977 குடும்பத்துப் பெண்ணாக மருத்துவரின் கண்களுக்கு மட்டும் தெரிகிறாள். கூடவே தூங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் எழுந்து வந்து பார்க்க, அவர்கள் அனைவருமே அந்த சீரியல் குடும்பத்தினரைப் போலவே காணப்படுகிறார்கள் மருத்துவருக்கு.

வெறி முற்றிப் போன நிலையில் தன்னைத் தடுக்க முன்னேறி வரும் மனோகரின் அண்ணனை அடிக்கப் பாய்கிறார் மருத்துவர். அப்போது மிகச் சரியாக வீட்டிற்குள் ஓடி வரும் மனோகர் கையோடு தான் கொண்டு வந்திருந்த மருத்துவர் வீட்டில் பார்த்த அதே சுத்தியலால் மருத்துவரை ‘சொத்..' ‘சொத்..' ‘சொத்ஸ' என்று சாத்தி கதையை முடித்துவிடுகிறான்.



மறுநாள் வீடு அமைதியாக இருக்க.. அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க வீட்டில் கூடுதல் உறுப்பினராக அந்த மனநலம் குன்றிய இளைஞனும் வீட்டில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கும் ஸ்பெஷலாக ஒரு பை சொல்லிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்புகிறான் மனோகர். லிப்ட்டில் கீழே வரும்போது செல்போனில் அழைப்பு வருகிறது.. "என்ன மனோகர்..? தப்பிச்சிட்டன்னே நினைப்பா..?" என்று கேட்டு பேசத் தொடங்க.. இந்தக் கதை தொடரும் என்பதைச் சொல்லாமல் சொல்லி படம் நிறைவடைகிறது.

இவைகள்தான் படத்தில் நான் பார்த்த காட்சிகளின் தொகுப்பு..

சஸ்பென்ஸ், திரில்லர், திகில் படம் என்பதை அனைத்துக் காட்சிகளிலும் உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால், முதல் ரீலில் இருந்தே அந்த உணர்த்துதலை காட்டிவிட்டார்கள்.

பால் திரிவது, செல்போனில் எடுக்கப்படும் புகைப்படம் கோணலாக இருப்பது, லிப்ட் இறங்க மறுப்பது.. நம்பரை பிரஸ் செய்தால் அது ஏற்கப்படாமல் ரிலீஸ் ஆவது.. நாய் குரைப்பது.. பாத்ரூம் கதவு மூடப்பட்ட பின்பும் தானாகவே திறப்பது.. என்று பலவிதங்களிலும் திகிலை இணைத்திருக்கிறார்கள்.

இந்த மிரட்டலுக்கு பின்னணி இசை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முதல் முறையாக அந்த நாயுடன் கண் பார்வையற்றவரை பார்க்கும்போதும், காருக்குள் அமர்ந்த பின்பு கண்ணாடிக் கதவருகே வந்து வாட்ச்மேன் நிற்பதும், கண் பார்வையில்லாதவர் கண்ணாடி இல்லாத நிலையில் மனோகரைப் பார்க்கின்ற நிமிடத்திலும் பி்ன்னணி இசையால் என் உடம்பு உலுக்கப்பட்டுவிட்டது.

மிக மிக தெளிவான திரைக்கதை. இதைத்தான் எடுக்கப் போகிறோம் என்பதை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். இதற்குப் பெரிதும் கை கொடுத்திருப்பது ஒளிப்பதிவு. அற்புதம் என்றே சொல்லலாம்.. பொதுவாக பி.சி. ஸ்ரீராம் இப்போதெல்லாம் மற்ற வெளி நபர் படங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்தப் படத்திற்கு ஒத்துக் கொண்டு, இப்படியொரு மிரட்டலான ஒளிப்பதிவைக் கொண்டு வந்திருப்பதற்கு நாம்தான் அவருக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும்..!

இப்போதைய காலக்கட்டத்திலான காட்சியில் இருந்து பிளாஷ்பேக் காட்சிக்குச் சென்றுவிட்டு மீண்டும் இதே காலக்கட்டத்திற்கு திரும்பும்போதும் கொஞ்சமும் நெருடல் இல்லாமல் திரை அசத்தலாக இருக்கிறது.

இதேபோல்தான் படத்தொகுப்பும்.. கொஞ்சமும் பிசிறு தட்டாத இடைவெளியில் காட்சிகள் உருமாறுகின்றன. எத்தனை, எத்தனையோ குளோஸப் காட்சிகளை எடுத்துக் குவித்துள்ளார் இயக்குநர். அத்தனையையும் கவனமாகப் பார்த்து, பார்த்து சேர்ப்பித்துள்ளார் தொகுப்பாளர். நிச்சயம் விருதுக்குரிய திரைப்படத் தொகுப்பு என்று உறுதியாகச் சொல்லலாம்..

படம் இந்தியிலும், தமிழுமாக ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதால் அதிகமான நபர்கள் முற்றிலும் நமக்கு அந்நியம்தான்.. மாதவனுக்குத் தற்போதைய மார்க்கெட் நிலவரம் என்ன என்பது தெரிந்தும் இந்தப் படத்தினை மாதவனை வைத்து எடுத்திருக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். மாதவனுக்கு இந்தியில் இருக்கும் சிறிய மார்க்கெட்டைக்கூட கவனமாக அவதானித்து அதனை பிஸினஸ் வெற்றியாக மாற்றியிருக்கும் வித்தை நிச்சயம் பாராட்டுக்குரியது..


மாதவனின் மனைவியாக நீது சந்திரா. இதுதான் முதல் படமோ..? மாதவனின் அண்ணியாக வருபவரை நிறைய விளம்பரப் படங்களில் பார்த்திருக்கிறேன். அமுல் விளம்பரம் என்று நினைக்கிறேன்.. அழகுடன் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். ஆச்சரியம்தான்.. சரண்யா.. வழக்கம்போலத்தான்.. சொல்லவே வேண்டாம்.. படபடவென பொரிவதிலும், சலித்துக் கொள்வதிலும், நடுத்தர வயது மற்றும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு அம்மாவுக்கு இப்போதைக்கு இவரைவிட்டால் வேறு ஆள் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்..

அந்த மருத்துவரை சம்பந்தமில்லாமல் திணித்து காட்சிகளை உருவாக்கியிருக்கும்போதே சந்தேகம் எழுந்தது.. அது கடைசியில் நனவாகிப் போனது.. அவருக்கு அதிகமான ஸ்கோப் இல்லை.. அந்த கண்பார்வையற்றவராக நடித்தவர் நன்றாக நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டர் எதற்கு என்றுதான் புரியவில்லை. ஒருவேளை சந்தேகத்தை வலிமைப்படுத்துவதற்காக திணித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அனைத்து நடிகர், நடிகையர்களுமே வெகு இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். இயக்கம் அருமைதான்.. ஒரு ஷாட்டில்கூட ஒரு கதாபாத்திரம்கூட சும்மா மொன்னையாக வந்து நிற்கவில்லை. ஏதாவது ஒன்று செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அல்லது பேசுகிறார்கள். இயக்கத்தில் எந்த இடத்திலும் சோர்வோ, அதீத உணர்வோ இல்லை என்று அடித்துச் சொல்லலாம்..

அந்த சீரியல் கதையில் நடித்திருப்பவர்களும் அருமையாகவே நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நிஜமாகவே ஒரு சீரியல் பார்த்த திருப்தி.. சீரியல் போலவே அதில் நடித்திருப்பவர்களுக்கு டைம் லேப்ஸ் கொடுத்து டயலாக்குகளை பேச வைத்திருப்பதை பார்க்கும்போது இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது..

முன்பு 'அலை' என்றொரு தோல்வியடைந்த ஒரு திரைப்படத்தினை இயக்கியிருக்கும் இந்த இயக்குநருக்கு இதுதான் உண்மையான முதல் திரைப்படம் என்று சொல்லலாம். அந்த முதல் திரைப்படத்தின் தோல்வி நிச்சயம் இவரைப் பாதித்திருக்கக் கூடும். நிச்சயம் ஜெயிப்பேன் என்ற வைராக்கியத்துடன் உழைத்திருக்கிறார் போலும்.. எப்படி வேண்டுமானாலும் இவரைப் பாராட்டலாம்..!

'காமசூத்ரா' புத்தகத்தை தனது மனைவிக்கு வாங்கி வந்து கொடுத்துவிட்டு அதனை ரெஸிபி புக் என்று பொய் சொல்லி அசடு வழியும் மாதவனின் கள்ளங்கபடமில்லாத நடிப்பை நமது வலையுலக ரங்கமணிகள் தாராளமாக காப்பியடிக்கலாம்.. அதோடு கூடவே அந்தப் புத்தகத்தில் இருக்கும் அத்தியாயங்களை சிக்கன் 65, சிக்கன் 95, சிக்கன் மஞ்சூரி, சில்லி சிக்கன் என்று வகை, வகையாகப் பிரித்து மனைவியைக் கொஞ்சும் காட்சி கொஞ்சம் ரசனையையும், சிலிர்ப்பையும் நிச்சயம் நமது ரங்கமணிகளுக்குக் கொடுத்திருக்கும்.

பாடல்கள் ஏதோ கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது.. ஆனால் இரண்டே இரண்டு பாடல்கள்தான்(என்று நினைக்கிறேன்). அதில் ஒரு பாடல் ஏனோ பாதியோடு நின்றுபோய்விட்டது.. தியேட்டருக்கு வந்து கட் செய்தார்களோ என்னவோ..?!

திடுக்கிடும் உணர்வையும், பயம் கலந்த அசூசையும் காட்சிக்கு காட்சி தந்து கொண்டிருக்கும் இத்திரைப்படம் சிறு குழந்தைகள் நிச்சயம் பார்க்கக் கூடாத திரைப்படம். ஆனால் புகழ் பெற்ற நமது சென்சார் அமைப்பு எந்த நேரத்தில்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தார்களோ தெரியவில்லை.. இதற்கு 'யு' சர்டிபிகேட் கொடுத்துத் தொலைந்திருக்கிறார்கள். 'அஞ்சாதே' திரைப்படத்திற்கும் இதே போலத்தான் சர்டிபிகேட் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

இத்திரைப்படத்தில் எத்தனையோ லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன..!

மனோகருக்கு மட்டுமே தெரிய வருகின்ற சீரியல் கதை, ஏன் அதை விடாமல் தொடர்ந்து பார்க்கின்ற அவனது குடும்பத்தினருக்குப் புரியவில்லை.. தெரியவில்லை.. என்பதை நாம் கேட்காமல் இருக்க முடியாது.

ஒரு வீட்டில் டிவி சேனலை மாற்ற முடியவில்லை என்பது அதிகப்பட்சம் ஒரு நாள் இருக்கலாம். தினந்தோறும் அல்லது மாற்றவே முடியாததுபோல் இருக்கிறது என்றால் அதை எந்தக் கணக்கில் ஏற்றுக் கொள்வது..?

அந்த சீரியல் கேம் ஷோ என்று தெரிந்த பின்பும், கேபிளில் படம் தெரிவது எங்கேயிருந்து..? யார் காட்டுகிறார்கள்..? மனோகர் ஏன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை..?!

மருத்துவர் வரும்போது கரண்ட்டே இல்லாத வீட்டில் தொலைக்காட்சி மட்டும் சட்டென்று உயிர் பிழைத்து அறிவிப்பாளர் பெண்ணின் முகத்தோடு பேசுவது எப்படி..? ஏன்? எதற்கு..?

இந்த மருத்துவர்தான் 1977-ல் நடந்த படுகொலைகளைச் செய்த கொலையாளி என்றால் இவருக்கும், மனோகரின் குடும்பத்தாருக்குமான தொடர்பு தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதுதானா..? திட்டமிட்டது யார்..? மருத்துவரா..?

அப்படியானால் மருத்துவரின் சதிவேலைதான் இத்தனையுமா..?

அப்படின்னா அந்த சீரியல் காட்சிகளெல்லாம்..? ஒருத்தர் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சா ஒருத்தருக்கு மட்டும் ‘சித்தப்பிரமை'ன்னு சொல்லலாம்.. வீட்டுல இருக்குற எல்லாருக்கும் தெரியுதே.. அப்புறம் எப்படி..?

- இப்படியெல்லாம் சில்லித்தனமான கொஸ்டீன் எல்லாம் நீங்க கேக்கக் கூடாது..

ஏன்னா இதுக்கெல்லாம் பதில் கிடைக்கணும்னா, அடிப்படையான ஒரு விஷயம் நமக்கு கிடைக்கணும்.. கிடைச்சாகணும்..!

அந்த அடிப்படையான ஒண்ணு.. தேவையான ஒண்ணு..

'கதை..!' அதாவது இத்திரைப்படத்தின் கதை..!

ஆமாம் தோழர்களே.. இத்திரைப்படத்தினை பார்த்த அன்பர்கள், இத்திரைப்படத்தின் கதை என்ன என்பதைச் சொன்னார்களெனில், அதன் பின் மேலே சொன்ன லாஜிக் ஓட்டைகளுக்கான பதில்களை நானாகவே தெரிந்து கொள்வேன்.

யாராவது சொல்வீர்களா..?!

புகைப்பட உதவிக்கு நன்றி : WWW.INDIAGLITZ.COM

82 comments:

shabi said...

படம் பாக்கலாமா வேணாமான்னு சொன்னா போதும்்

மணிகண்டன் said...

ஹி ஹி ஹி. படம் பாக்காம நான் உங்க விமர்சனம் (கதை) படிக்கமாட்டேன் !

Anonymous said...

//மனோகருக்கு மட்டுமே தெரிய வருகின்ற சீரியல் கதை, ஏன் அதை விடாமல் தொடர்ந்து பார்க்கின்ற அவனது குடும்பத்தினருக்குப் புரியவில்லை.. தெரியவில்லை.. என்பதை நாம் கேட்காமல் இருக்க முடியாது.//

Because, only for manohar mysterious "incidents" happens... Why???? because, he is the one who is going to take the revenge on behalf of "them"

//ஒரு வீட்டில் டிவி சேனலை மாற்ற முடியவில்லை என்பது அதிகப்பட்சம் ஒரு நாள் இருக்கலாம். தினந்தோறும் அல்லது மாற்றவே முடியாததுபோல் இருக்கிறது என்றால் அதை எந்தக் கணக்கில் ஏற்றுக் கொள்வது..?//

Simple - Work of Ghost! and thats what the film is about - right??

அந்த சீரியல் கேம் ஷோ என்று தெரிந்த பின்பும், கேபிளில் படம் தெரிவது எங்கேயிருந்து..? யார் காட்டுகிறார்கள்..? மனோகர் ஏன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை..?!

He did enquired. after that only confirms those incidents as ghost work & approaches his inspector friend

//மருத்துவர் வரும்போது கரண்ட்டே இல்லாத வீட்டில் தொலைக்காட்சி மட்டும் சட்டென்று உயிர் பிழைத்து அறிவிப்பாளர் பெண்ணின் முகத்தோடு பேசுவது எப்படி..? ஏன்? எதற்கு..?//

hmm first for "how".. again, that's the work of ghost - so don't expect much logic in it.

Now for "why" - "they" explain the doc about their vengeance & ofcourse to the audience too.

இந்த மருத்துவர்தான் 1977-ல் நடந்த படுகொலைகளைச் செய்த கொலையாளி என்றால் இவருக்கும், மனோகரின் குடும்பத்தாருக்குமான தொடர்பு தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதுதானா..? திட்டமிட்டது யார்..? மருத்துவரா..?

Its not planned.

அப்படியானால் மருத்துவரின் சதிவேலைதான் இத்தனையுமா..?

His relation with this family is accidental. But his murders are well planned

அப்படின்னா அந்த சீரியல் காட்சிகளெல்லாம்..? ஒருத்தர் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சா ஒருத்தருக்கு மட்டும் ‘சித்தப்பிரமை'ன்னு சொல்லலாம்.. வீட்டுல இருக்குற எல்லாருக்கும் தெரியுதே.. அப்புறம் எப்படி..?

That's what I said ghost worrrrrrrkkkkkk!!!!!

உண்மைத்தமிழன் said...

//shabi said...
படம் பாக்கலாமா வேணாமான்னு சொன்னா போதும்்//

கண்டிப்பா பார்க்கணும்..!

பார்த்தாத்தான கதை என்னன்னு எனக்குச் சொல்ல முடியும்..?!

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
ஹி ஹி ஹி. படம் பாக்காம நான் உங்க விமர்சனம் (கதை) படிக்கமாட்டேன்!//

பார்த்துட்டு வந்தாவது படிச்சிட்டு கதை என்னன்னு சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//மனோகருக்கு மட்டுமே தெரிய வருகின்ற சீரியல் கதை, ஏன் அதை விடாமல் தொடர்ந்து பார்க்கின்ற அவனது குடும்பத்தினருக்குப் புரியவில்லை.. தெரியவில்லை.. என்பதை நாம் கேட்காமல் இருக்க முடியாது.//
Because, only for manohar mysterious "incidents" happens... Why???? because, he is the one who is going to take the revenge on behalf of "them"

//ஒரு வீட்டில் டிவி சேனலை மாற்ற முடியவில்லை என்பது அதிகப்பட்சம் ஒரு நாள் இருக்கலாம். தினந்தோறும் அல்லது மாற்றவே முடியாததுபோல் இருக்கிறது என்றால் அதை எந்தக் கணக்கில் ஏற்றுக் கொள்வது..?//

Simple - Work of Ghost! and thats what the film is about - right??

அந்த சீரியல் கேம் ஷோ என்று தெரிந்த பின்பும், கேபிளில் படம் தெரிவது எங்கேயிருந்து..? யார் காட்டுகிறார்கள்..? மனோகர் ஏன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை..?!

He did enquired. after that only confirms those incidents as ghost work & approaches his inspector friend

//மருத்துவர் வரும்போது கரண்ட்டே இல்லாத வீட்டில் தொலைக்காட்சி மட்டும் சட்டென்று உயிர் பிழைத்து அறிவிப்பாளர் பெண்ணின் முகத்தோடு பேசுவது எப்படி..? ஏன்? எதற்கு..?//

hmm first for "how".. again, that's the work of ghost - so don't expect much logic in it.

Now for "why" - "they" explain the doc about their vengeance & ofcourse to the audience too.

இந்த மருத்துவர்தான் 1977-ல் நடந்த படுகொலைகளைச் செய்த கொலையாளி என்றால் இவருக்கும், மனோகரின் குடும்பத்தாருக்குமான தொடர்பு தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதுதானா..? திட்டமிட்டது யார்..? மருத்துவரா..?

Its not planned.

அப்படியானால் மருத்துவரின் சதிவேலைதான் இத்தனையுமா..?

His relation with this family is accidental. But his murders are well planned

அப்படின்னா அந்த சீரியல் காட்சிகளெல்லாம்..? ஒருத்தர் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சா ஒருத்தருக்கு மட்டும் ‘சித்தப்பிரமை'ன்னு சொல்லலாம்.. வீட்டுல இருக்குற எல்லாருக்கும் தெரியுதே.. அப்புறம் எப்படி..?

That's what I said ghost worrrrrrrkkkkkk!!!!!///

அடப் போங்கப்பா..

விட்டா படத்தை இயக்கியதே பேய்தான்னு சொல்லி முடிச்சிருவீங்க போலிருக்கே..

Cable சங்கர் said...

இவ்வளவு பெரிசா எழுதியிறுக்கீங்களே.. அதுவே ஒரு படத்தில கதை இருக்கிறதுக்கு சாட்சி.. அந்த கொஞ்சூண்டு கதையில்லைன்னா.. திரைக்கதை எழுத முடியாது.. அண்ணே.. உங்களூக்கு தெரியாததா..?

புருனோ Bruno said...

// தியேட்டரில் படம் பார்க்கும் 500 பேராலேயே நம்ப முடியலை. //

:) :) :)

அத்திரி said...

திகில் படம்னாலே அடுத்துவர்ற காட்சி என்னன்னு ஆரவமா பாக்கனும்,..... ஆனா இப்படி சீன் பை சீன் எழுதிட்டீங்களே... இது நியாயமா......

புருனோ Bruno said...

Saturday, March 14, 2009 4:25:00 AM மறுமொழி எழுதியிருக்கும் அனானியின் கருத்துகள் நச்

--

உண்மைத்தமிழன் அண்ணாச்சி

//இந்த மிரட்டலுக்கு பின்னணி இசை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முதல் முறையாக அந்த நாயுடன் கண் பார்வையற்றவரை பார்க்கும்போதும், காருக்குள் அமர்ந்த பின்பு கண்ணாடிக் கதவருகே வந்து வாட்ச்மேன் நிற்பதும், கண் பார்வையில்லாதவர் கண்ணாடி இல்லாத நிலையில் மனோகரைப் பார்க்கின்ற நிமிடத்திலும் பி்ன்னணி இசையால் என் உடம்பு உலுக்கப்பட்டுவிட்டது.//

வழி மொழிகிறேன்

Thamiz Priyan said...

நான் படத்தை பதிவிறக்கி விட்டேன். பார்த்து விட்டுத் தான் இந்த சி...ன்னப் பதிவைப் படிக்கனும்.

புருனோ Bruno said...

சரோஜா படம் திரில்லரா, காமெடியா என்ற குழப்பத்தில் ஒரு தெளிவற்ற தன்மை இருந்தது - பல நேரங்களில் பயமோ சிரிப்போ வருவதற்கு பதில் எரிச்சல் வந்தது

--

இங்கு திரில்லர் படத்தின் feel கொஞ்சமும் குறையாமல், சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளார்கள்

உதாரணம் :

1. தம்பி மகனிடம் அதிகம் காசு கொடுத்து செல்போன் வாங்கியதாக கூறுவது

2. கூட வேலை பார்ப்பவரிடம் டிஸ்கௌண்டில் வாங்கியதாக கூறுவது

3. 69 !!

இயக்குனருக்கு பாராட்டுக்கள்

Shajahan.S. said...

செயற்கையான கிராபிக்ஸ் அனிமேசன்,சர்ச்,கோவில்,மசூதி,பயங்கர ரத்தக்காட்டேரி,கும்மிருட்டில் கண்களை கூசும் ஒளி... இதுபோன்ற எதுவுமே இல்லாமல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை, வெகுநாட்களுக்குப்பின் ஸ்ரீராம் அவர்களின் கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு, மாதவனின் மிகவும் யதார்த்தமான நடிப்பு,அவருடைய அந்த சினிமாத்தனம் இல்லாத குடும்பம் என்று அனைத்தும் இப்படத்தின் ஜெய் ஹோ!....

ராமய்யா... said...

you have broken the suspense.. what is this tamilan?

butterfly Surya said...

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்... உண்மைதழிழன் அப்படி போடவேண்டியதுதான் பாக்கி..

எப்படி தலை இவ்வளவு பொறுமையாக எழுதறீங்க...

விமர்சனமா..??? திரைப்பட திறனாய்வு கட்டுரையா..??

தருமி said...

//அத்திரி said...
திகில் படம்னாலே அடுத்துவர்ற காட்சி என்னன்னு ஆரவமா பாக்கனும்,..... ஆனா இப்படி சீன் பை சீன் எழுதிட்டீங்களே... இது நியாயமா......//

ஏங்க அத்திரி,
இவரு என்ன சொன்னா கேக்குற ஆளா? அவரு அப்படித்தான். உங்கள யாரு அவரு பதிவை முழுசா படிக்கச் சொன்னது?

Ganesan said...

படத்தின் கதய விவரமாய் சொல்லி படத்தையே போட்டு காட்டி, எனக்கு 50 ரூபாய் மிச்சப்படுத்திய உ.த வாழ்க‌

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பாலகுமாரன் நாவல்களை எல்லாம் படிக்கறதுக்கு விவேகா மெத்தட் ஒன்று வைத்திருக்கறேன்.(விவேகா-நம்ம விவேகானந்தர்);அதாவது இரண்டு பக்கம் படிச்சா அடுத்த பக்கம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை,நான்கு ஐந்தாவது பக்கம் போயிடலாம்;கதை புரியலைன்னால் மட்டும் திரும்ப வந்து பாத்தா போதும்.ஆனால் பெரும்பாலும் எனக்கு திரும்ப வந்து பார்க்கும் தேவைகள் ஒரு புத்தகத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தேவைப்படும்.

வர வர உங்க பதிவுகளும் அது போல மாறிக் கொண்டு இருக்கிறது சுவாமி..ஒரு அன்பான எச்சரிக்கை...

முரளிகண்ணன் said...

அண்ணா, ஸ்க்ரிப்ட் படிச்ச மாதிரி இருக்குண்ணா

Anonymous said...

அண்ணே,
எல்லோரும் இந்த படம் நல்லா இருக்குங்கறாங்க, நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன்.. சரி உங்க விமர்சனத்தையும் படிக்கலாம்னு வந்ந்தேன்.. நீங்க சீன் பய் சீன் கத சொல்லற மாதிரி இருந்துது, அதனால பாதியில அபீட் ஆகிகறேன்!! படம் பாத்துட்டு வந்து மீதிய படிக்கிறேன்!!

கொடும்பாவி-Kodumpavi said...

மொத்த படம் பார்த்த திருப்தி. நீங்க கொஞ்ஞ்சூண்டு சஸ்பென்ஸ விட்டு வச்சிருக்கலாம்.. இப்படி மட்ட மணக்க எல்லாத்தையும் சொல்லி.. படத்தோட சஸ்பென்ஸ் இப்போ புஸ்ஸுன்னு ஆச்சு.. படத்தில் பார்ப்பதை விட உங்க எழுத்து அதனை படம் பிடித்து எடுத்து செல்கிறது .. உங்க பொறுமைக்கு வானமே எல்லை.

Anonymous said...

முருகா,

இதே ரேஞ்ச்ல கதைய முழுசா போட்டீங்கனா, தயாரிப்பாளர் கேஸ் போடப் போறார். பாத்துக்கோங்க.

பாலா said...

என்னங்க...இது...! படத்துக்கு.. ஸ்கிரிப்டே.. இவ்ளோ பெரிசா இருக்காதே...!

ஏதாவது ‘வாய்ஸ் ரெககனிசன்’ சாஃப்ட்வேர் வச்சிருக்கீங்களா..? நான் ஒரு மாசம் முழுக்க டைப் பண்ண வேண்டிய மேட்டருங்க இது.

:-)))

இந்தியா வரும்போது.. உங்ககிட்ட ட்ரெய்னிங் எடுத்துக்கனும்.

பரிசல்காரன் said...

//இவைகள்தான் படத்தில் நான் பார்த்த காட்சிகளின் தொகுப்பு..//

Moththap padame ivvalavu thaan!!

கிரி said...

படத்தை விட உங்க பதிவு நீளத்தை பார்த்தால் திகிலா இருக்கு

குசும்பன் said...

திரை விமர்சனம் என்ற பெயரில் முழு படகதையும் அப்படியே வரிக்கு வரி சொல்வது சரியா?

திரைவிமர்சனத்தை இப்படி யார் வேண்டும் என்றாலும் எழுதலாம், மக்கள் டீவி குறும்பட புகழ் உண்மை தமிழன் அண்ணாச்சி எழுதலாமா?

ஒருவரை மற்றவர்களோடு ஒப்பிடுவது சரி இல்லை இருந்தாலும், மற்றவர்கள் எழுதும் விமர்சனத்தில் இருந்து தாங்கள் எழுதும் விமர்சனம் எப்படி வேறுபடுகிறது என்பதை பாருங்கள்!


(போன முறை நீங்கள் எதுவாக இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லு என்றதால் இந்த வெளிப்படையான பின்னூட்டம்)!

Raju said...

\\இந்த மிரட்டலுக்கு பின்னணி இசை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முதல் முறையாக அந்த நாயுடன் கண் பார்வையற்றவரை பார்க்கும்போதும், காருக்குள் அமர்ந்த பின்பு கண்ணாடிக் கதவருகே வந்து வாட்ச்மேன் நிற்பதும், கண் பார்வையில்லாதவர் கண்ணாடி இல்லாத நிலையில் மனோகரைப் பார்க்கின்ற நிமிடத்திலும் பி்ன்னணி இசையால் என் உடம்பு உலுக்கப்பட்டுவிட்டது.\\

\\சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட்.. இம்மாதிரியான படங்களுக்கு பாடலகள் ஒரு மிகப் பெரிய தடை.. நல்ல வேளை சில பாடல்களை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பிண்ணனி இசை பரவாயில்லை..\\ ( நம்ம "கேபிள்" அண்ணன் எழுதுனது....)\\

என்னங்க நினைச்சிக்கிட்டு இருக்கீங்க..எங்க தல "கேபிள்" அண்ணன எதுக்குறதுக்காகவே நீங்க எழுதுறீங்களா...
(ரஜினி‍‍பாலா மேட்டர்)"கேபிள்" அண்ணன் என்னாடன்னா இசை சுத்த வேஸ்ட்ங்குறாரு.. நிங்க என்னாடான்னா இசை சூப்பருங்கிறீங்கோ...எனக்கு "உண்மை" தெரிஞ்சாகனும் "உண்மைத்தமிழன்".....சொல்வீங்களா...இல்ல அதுக்கும் ஒரு
நீளளளளளளளளளளளளப் பதிவு போடுவீங்களா பாசு.....

உடல் மண்ணுக்கு உயிர் "கேபிள் "அண்ணனுக்கு.....


\\ஒருவரை மற்றவர்களோடு ஒப்பிடுவது சரி இல்லை இருந்தாலும், மற்றவர்கள் எழுதும் விமர்சனத்தில் இருந்து தாங்கள் எழுதும் விமர்சனம் எப்படி வேறுபடுகிறது என்பதை பாருங்கள்! (குசும்பன் சொன்னது)\\

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
இவ்வளவு பெரிசா எழுதியிறுக்கீங்களே.. அதுவே ஒரு படத்தில கதை இருக்கிறதுக்கு சாட்சி.. அந்த கொஞ்சூண்டு கதையில்லைன்னா.. திரைக்கதை எழுத முடியாது.. அண்ணே.. உங்களூக்கு தெரியாததா..?//

அந்த கொஞ்சூண்டு கதையையாவது நம்புற மாதிரி சொல்லியிருந்தா கதை, கதையா இருந்திருக்கும். இப்ப எடுத்திருக்கிறது எல்லாமே சீன்ஸ்தான்..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...

// தியேட்டரில் படம் பார்க்கும் 500 பேராலேயே நம்ப முடியலை. //

:) :) :)///

நிஜமாவே நம்ப முடியல டாக்டர்..!

உண்மைத்தமிழன் said...

//அத்திரி said...
திகில் படம்னாலே அடுத்துவர்ற காட்சி என்னன்னு ஆரவமா பாக்கனும்,..... ஆனா இப்படி சீன் பை சீன் எழுதிட்டீங்களே... இது நியாயமா......//

நியாயமில்லைதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியலையே..?

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
Saturday, March 14, 2009 4:25:00 AM மறுமொழி எழுதியிருக்கும் அனானியின் கருத்துகள் நச்//

அப்ப எல்லாமே பேயோட வேலைன்றீங்க..! நீங்களுமா டாக்டர்..

--

///உண்மைத்தமிழன் அண்ணாச்சி
//இந்த மிரட்டலுக்கு பின்னணி இசை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முதல் முறையாக அந்த நாயுடன் கண் பார்வையற்றவரை பார்க்கும்போதும், காருக்குள் அமர்ந்த பின்பு கண்ணாடிக் கதவருகே வந்து வாட்ச்மேன் நிற்பதும், கண் பார்வையில்லாதவர் கண்ணாடி இல்லாத நிலையில் மனோகரைப் பார்க்கின்ற நிமிடத்திலும் பி்ன்னணி இசையால் என் உடம்பு உலுக்கப்பட்டுவிட்டது.//
வழி மொழிகிறேன்///

நிஜமாத்தான் துள்ளிட்டேனாக்கும்..! தூள்..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
நான் படத்தை பதிவிறக்கி விட்டேன். பார்த்து விட்டுத்தான் இந்த சி...ன்னப் பதிவைப் படிக்கனும்.//

ரொம்ப சந்தோஷம்.. இதையே கடைசிவரைக்கும் பாலோ பண்ணுங்க தமிழ்பிரியன்..

Thamiz Priyan said...

செம திகிலாக இருந்தது... நல்லவேளை இப்ப தான் இதைப் படித்தேன்.. இப்படி சீன் பை சீன் எழுதும் போது முகப்பில் படம் பார்த்து விட்டு படிக்கச் சொல்லி போடலாம்.

Thamiz Priyan said...

செம திகிலாக இருந்தது... நல்லவேளை இப்ப தான் இதைப் படித்தேன்.. இப்படி சீன் பை சீன் எழுதும் போது முகப்பில் படம் பார்த்து விட்டு படிக்கச் சொல்லி போடலாம்.

Thamiz Priyan said...

அப்புறம் எங்க நாட்டில் தியேட்டரே கிடையாது.. இப்படி எல்லாருமா சேர்ந்து ஆர்வமூட்டும் படங்களை மட்டும் வேறு வழி இன்றி பதிவிறக்கி பார்க்க நேரிடுகின்றது.

Thamiz Priyan said...

நான் ஒரு தடவை தான் கமெண்ட் போட்டேன். ஆனால் ரெண்டு தடவை எப்படி வந்ததுன்னு தெரியலீங்க.. எனக்கு பயமா இருக்கு.. எதா இருந்தாலும் காலைல வர்ரேன்.. :((

உண்மைத்தமிழன் said...

//Shajahan.S. said...
செயற்கையான கிராபிக்ஸ் அனிமேசன், சர்ச், கோவில், மசூதி, பயங்கர ரத்தக்காட்டேரி, கும்மிருட்டில் கண்களை கூசும் ஒளி... இதுபோன்ற எதுவுமே இல்லாமல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை, வெகுநாட்களுக்குப் பின் ஸ்ரீராம் அவர்களின் கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு, மாதவனின் மிகவும் யதார்த்தமான நடிப்பு,அவருடைய அந்த சினிமாத்தனம் இல்லாத குடும்பம் என்று அனைத்தும் இப்படத்தின் ஜெய் ஹோ!....//

வழி மொழிகிறேன் ஷாஜகான்..

உண்மைத்தமிழன் said...

//ராம்ஜி said...
you have broken the suspense.. what is this tamilan?//

அதுதான் தலைப்புலேயே முழு நீள திரை விமர்சனம்னு எழுதிட்டனே ராம்ஜி..?

முழுசையும் சொல்லாம எப்படி நான் என் கேள்வியை கேக்குறது..?

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்... உண்மைதழிழன் அப்படி போடவேண்டியதுதான் பாக்கி..//

போட்டுக்குங்க.. நானே வேண்டாம்கிறேன்..?

//எப்படி தலை இவ்வளவு பொறுமையாக எழுதறீங்க...
விமர்சனமா..??? திரைப்பட திறனாய்வு கட்டுரையா..??//

விமர்சனம்தான்.. திறனாய்வுக் கட்டுரை எழுதற அளவுக்கெல்லாம் நமக்குத் திறமை இல்லீங்கோ..!

உண்மைத்தமிழன் said...

///தருமி said...

//அத்திரி said...
திகில் படம்னாலே அடுத்து வர்ற காட்சி என்னன்னு ஆரவமா பாக்கனும்,..... ஆனா இப்படி சீன் பை சீன் எழுதிட்டீங்களே... இது நியாயமா......//

ஏங்க அத்திரி, இவரு என்ன சொன்னா கேக்குற ஆளா? அவரு அப்படித்தான். உங்கள யாரு அவரு பதிவை முழுசா படிக்கச் சொன்னது?///

கரெக்ட்.. இதுக்குத்தான் நம்மளை பத்தி நல்லாத் தெரிஞ்ச ஒரு ஆளு ஊருக்கு ஒருத்தராச்சும் வேணும்கிறது..?!

உண்மைத்தமிழன் said...

//KaveriGanesh said...
படத்தின் கதய விவரமாய் சொல்லி படத்தையே போட்டு காட்டி, எனக்கு 50 ரூபாய் மிச்சப்படுத்திய உ.த வாழ்க‌.//

சேர்த்து வைங்க.. நேர்ல சந்திக்கும்போது வட்டி போட்டு வாங்கிக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//அறிவன்#11802717200764379909 said...

பாலகுமாரன் நாவல்களை எல்லாம் படிக்கறதுக்கு விவேகா மெத்தட் ஒன்று வைத்திருக்கறேன்.(விவேகா-நம்ம விவேகானந்தர்); அதாவது இரண்டு பக்கம் படிச்சா அடுத்த பக்கம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை, நான்கு ஐந்தாவது பக்கம் போயிடலாம்; கதை புரியலைன்னால் மட்டும் திரும்ப வந்து பாத்தா போதும். ஆனால் பெரும்பாலும் எனக்கு திரும்ப வந்து பார்க்கும் தேவைகள் ஒரு புத்தகத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தேவைப்படும். வர வர உங்க பதிவுகளும் அது போல மாறிக் கொண்டு இருக்கிறது சுவாமி..ஒரு அன்பான எச்சரிக்கை...//

சில இடங்களில், சில விஷயங்களில் இந்த முறை தவிர்க்க முடியாதது அறிவன்..

உண்மைத்தமிழன் said...

//முரளிகண்ணன் said...
அண்ணா, ஸ்க்ரிப்ட் படிச்ச மாதிரி இருக்குண்ணா.//

அப்பாடா.. சந்தோஷம்.. நீங்க ஒருத்தராச்சும் ஒத்துக்கிட்டீங்களே..?

உண்மைத்தமிழன் said...

//Bhuvanesh said...
அண்ணே, எல்லோரும் இந்த படம் நல்லா இருக்குங்கறாங்க, நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன்.. சரி உங்க விமர்சனத்தையும் படிக்கலாம்னு வந்ந்தேன்.. நீங்க சீன் பய் சீன் கத சொல்லற மாதிரி இருந்துது, அதனால பாதியில அபீட் ஆகிகறேன்!! படம் பாத்துட்டு வந்து மீதிய படிக்கிறேன்!!//

நல்ல தம்பி.. புத்திசாலி தம்பீ.. இப்படித்தான் இருக்கோணும்..

படம் பார்த்திட்டு வந்து மறக்காம பின்னூட்டம் போடணும்..!

உண்மைத்தமிழன் said...

//வெயிலான் said...

முருகா,

இதே ரேஞ்ச்ல கதைய முழுசா போட்டீங்கனா, தயாரிப்பாளர் கேஸ் போடப் போறார். பாத்துக்கோங்க.//

போட முடியாது முருகா.. சும்மாவா பார்த்தேன்.. 60 ரூவா கொடுத்துல்ல பார்த்திருக்கேன்..

உண்மைத்தமிழன் said...

///ஹாலிவுட் பாலா said...

என்னங்க...இது...! படத்துக்கு.. ஸ்கிரிப்டே.. இவ்ளோ பெரிசா இருக்காதே...!

ஏதாவது ‘வாய்ஸ் ரெககனிசன்’ சாஃப்ட்வேர் வச்சிருக்கீங்களா..? நான் ஒரு மாசம் முழுக்க டைப் பண்ண வேண்டிய மேட்டருங்க இது.

:-)))

இந்தியா வரும்போது.. உங்ககிட்ட ட்ரெய்னிங் எடுத்துக்கனும்.///

அண்ணே.. ஓவருங்கண்ணே இது..!

memonto படத்துக்கு நீங்க எழுதியிருக்கிறது என்னங்கண்ணா.. இருந்தாலும் உங்களுக்கு இவ்ளோ தன்னடக்கம் கூடாதுங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

///பரிசல்காரன் said...

//இவைகள்தான் படத்தில் நான் பார்த்த காட்சிகளின் தொகுப்பு..//

Moththap padame ivvalavu thaan!!//

நன்றி பரிசலு.. ஏதாவது விட்டிருக்குமோன்னு நினைச்சு பயந்துகிட்டிருந்தேன்..!

உண்மைத்தமிழன் said...

//கிரி said...
படத்தை விட உங்க பதிவு நீளத்தை பார்த்தால் திகிலா இருக்கு.//

கிரி சாமி..

படம் மொத்தம் 16 ரீல். அதுனால என் ரீலும் கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

///குசும்பன் said...

திரை விமர்சனம் என்ற பெயரில் முழு படகதையும் அப்படியே வரிக்கு வரி சொல்வது சரியா? திரை விமர்சனத்தை இப்படி யார் வேண்டும் என்றாலும் எழுதலாம், மக்கள் டீவி குறும்பட புகழ் உண்மை தமிழன் அண்ணாச்சி எழுதலாமா? ஒருவரை மற்றவர்களோடு ஒப்பிடுவது சரி இல்லை இருந்தாலும், மற்றவர்கள் எழுதும் விமர்சனத்தில் இருந்து தாங்கள் எழுதும் விமர்சனம் எப்படி வேறுபடுகிறது என்பதை பாருங்கள்!

(போன முறை நீங்கள் எதுவாக இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லு என்றதால் இந்த வெளிப்படையான பின்னூட்டம்)!///

ஐயா சாமிகளா.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களேப்பா..!

முழு கதையைத் தெரிஞ்சுக்கணும்னா திரைக்கதை புத்தகம் வந்தாத்தான் முடியும்.. இப்படியாச்சும் பி்ன்னாடி வர்றவங்க நாலு பேரு தெரிஞ்சுக்கட்டுமே.. என்ன தப்புங்குறேன்..?!

உண்மைத்தமிழன் said...

///டக்ளஸ்....... said...
\\இந்த மிரட்டலுக்கு பின்னணி இசை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முதல் முறையாக அந்த நாயுடன் கண் பார்வையற்றவரை பார்க்கும்போதும், காருக்குள் அமர்ந்த பின்பு கண்ணாடிக் கதவருகே வந்து வாட்ச்மேன் நிற்பதும், கண் பார்வையில்லாதவர் கண்ணாடி இல்லாத நிலையில் மனோகரைப் பார்க்கின்ற நிமிடத்திலும் பி்ன்னணி இசையால் என் உடம்பு உலுக்கப்பட்டுவிட்டது.\\

\\சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட்.. இம்மாதிரியான படங்களுக்கு பாடலகள் ஒரு மிகப் பெரிய தடை.. நல்ல வேளை சில பாடல்களை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பிண்ணனி இசை பரவாயில்லை..\\ ( நம்ம "கேபிள்" அண்ணன் எழுதுனது....)\\

என்னங்க நினைச்சிக்கிட்டு இருக்கீங்க.. எங்க தல "கேபிள்" அண்ணன எதுக்குறதுக்காகவே நீங்க எழுதுறீங்களா... (ரஜினி‍‍பாலா மேட்டர்)"கேபிள்" அண்ணன் என்னாடன்னா இசை சுத்த வேஸ்ட்ங்குறாரு.. நிங்க என்னாடான்னா இசை சூப்பருங்கிறீங்கோ... எனக்கு "உண்மை" தெரிஞ்சாகனும் "உண்மைத்தமிழன்".....சொல்வீங்களா...இல்ல அதுக்கும் ஒரு
நீளளளளளளளளளளளளப் பதிவு போடுவீங்களா பாசு..... உடல் மண்ணுக்கு உயிர் "கேபிள் "அண்ணனுக்கு.....///

இந்தப் படத்தில் பாடல்களின் இசைக்கு ஒருவர்.. பின்னணி இசைக்கு ஒருவர் என்று இரண்டு பேர் பணியாற்றி இருக்கிறார்களாம்..

நான் சொன்னது பின்னணி இசையைப் பற்றித்தான்.. அமர்க்களம் என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம். இந்தத் திகில் படத்திற்கு எப்படி இசை இருக்க வேண்டுமோ.. அதன்படிதான் இசை அமைத்துள்ளார்..

பாடல்களின் இசையைப் பொறுத்தமட்டில் பாடல் வரிகளே மனதில் நிற்காதபோது, அதுவும் அவர்களே மெனக்கெடாதபோது எப்படி மனதில் தங்கும்..? அதன் பின்தானே அதைப் பற்றிப் பேச முடியும்.. கேபிளார் சொன்னது சரிதான்..!

\\ஒருவரை மற்றவர்களோடு ஒப்பிடுவது சரி இல்லை இருந்தாலும், மற்றவர்கள் எழுதும் விமர்சனத்தில் இருந்து தாங்கள் எழுதும் விமர்சனம் எப்படி வேறுபடுகிறது என்பதை பாருங்கள்! (குசும்பன் சொன்னது)\\

குசும்பனாருக்கு நான் சொன்ன பதிலைப் படித்துப் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
செம திகிலாக இருந்தது... நல்லவேளை இப்பதான் இதைப் படித்தேன்.. இப்படி சீன் பை சீன் எழுதும் போது முகப்பில் படம் பார்த்து விட்டு படிக்கச் சொல்லி போடலாம்.//

திகில் படம்தானே.. அப்ப ஓகேதான் தமிழ்ப்பிரியன்.. இனிமே நீங்க சொல்ற மாதிரி படத்தைப் பார்த்துட்டு அப்பால வந்து படிச்சுக்குங்கோன்னு சொல்லிடறேன்.. நன்றிங்கோ சாமி..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...
அப்புறம் எங்க நாட்டில் தியேட்டரே கிடையாது.. இப்படி எல்லாருமா சேர்ந்து ஆர்வமூட்டும் படங்களை மட்டும் வேறு வழி இன்றி பதிவிறக்கி பார்க்க நேரிடுகின்றது.//

அப்படி எந்த நாட்டுல சாமி இருக்கீக.. அண்டார்டிகாவா..? ஆச்சரியமா இருக்கு.. ஐ.நா.சபைக்கு ஒரு புகார் மனுவைத் தட்டிவிடுங்க..!

உண்மைத்தமிழன் said...

//தமிழ் பிரியன் said...

நான் ஒரு தடவைதான் கமெண்ட் போட்டேன். ஆனால் ரெண்டு தடவை எப்படி வந்ததுன்னு தெரியலீங்க.. எனக்கு பயமா இருக்கு.. எதா இருந்தாலும் காலைல வர்ரேன்..:((//

காலைல வந்து பார்த்தாலும் ரெண்டு கமெண்ட்டும் அப்படியேதான் இருக்கும்ண்ணே..

நீங்க மெளஸை குத்தும்போது ஆர்வத்துல ரெண்டு தடவை குத்திருப்பீங்க.. அதுதான் ரெண்டு தடவை விழுந்திருக்கு.. திகில் படம்ல.. அதான் கை, கால் கொஞ்சம் நடுக்கம் இருந்திருக்கும்.. பயப்படாதீங்க.. காலைல எல்லாம் சரியாய் போயிரும்..!

Anonymous said...

//படம் பார்த்திட்டு வந்து மறக்காம பின்னூட்டம் போடணும்..!//

வந்தாச்சு அண்ணே..

Anonymous said...

//இரவில் படுத்திருக்கும்போதுதான் அவனுக்குள் ஏதோ ஒரு எண்ணம் தோன்றுகிறது. //
அண்ணே, இந்த இடத்துல சீரியல் கூட லிங்க் ஆகும்..அத நீங்க மிஸ் பண்ணிடீங்க!

Anonymous said...

//காரில் சென்றபடியே மனோகர் தனது மனைவிக்கு போன் செய்கிறான். தான் ஒரு அவசர வேலையாக வெளியே செல்வதாகவும், யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்றும், "நான் வந்து தொடர்ச்சியா 3 முறை காலிங்பெல்லை அடிப்பேன்.. அப்ப மட்டும் கதவைத் திற..." என்கிறான்.//


இப்படியா இருந்தது?? எனக்கு என்னமோ அவன் அந்த சீரியலின் கிளைமாக்ஸ் பார்ப்பதற்கு முன் இந்த சீன் வந்த மாதிரி ஞாபகம்!! அதுவம் ஒரு கனவு!! இது டாக்டர் வீட்டுக்கு போகும் போது இல்லை! லேட் ஆச்சு நீங்க ஏன் இன்னும் வீட்டுக்கு வரல என்று அவள் போன் செய்து கேப்பாள்!

Anonymous said...

//உன் வீட்டுக்கு போலீஸ் செக்யூரிட்டி தர்றேன்.. ஆனா ஸ்டேஷனுக்குப் போயிட்டு அங்க நேரா வந்தர்றேன்.."//

அண்ணா இப்படி இல்லனா!! இதுவும் அந்த கனவு சீன்!! மாதவன் கூட அந்த இன்ஸ்பெக்டரும் வருவாரு!!

Anonymous said...

//யார் காட்டுகிறார்கள்..? மனோகர் ஏன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை..?!//

அதை பற்றி டாக்டரிடம் (அவர் ஆவி பற்றி ஆராய்ச்சியும் செய்கிறார்!) கேட்கிறார்கள்!! அவர் மனுஷன் உடம்புல போகலாம்? சாதரண டி.வி க்குள்ள போகமுடியாதனு கேட்கறார் இல்ல? அதாவது கதைப்படி டி.வி க்கு பேய் பிடித்திருக்கிறது!

Anonymous said...

//அப்படியானால் மருத்துவரின் சதிவேலைதான் இத்தனையுமா..? //

அண்ணே, நான் சரியா புருஞ்சுகிட்டதை சொல்லறேன்..

"The Most Complex Maching - Humar Body" க்குள்ள ஒரு ஆவி போகுதுனா நாம இஸீயா நம்பறோம்! ஆனா டி.வி குள்ள போச்சுன்னா சொன்ன நம்ப கஷ்டமா இருக்கு" - இது அந்த டாக்டர் சொல்லும் வசனம்!!

அதாவது அந்த கொலைகளை செய்த டாக்டரை பழிவாங்க ஆவிகள் இப்படி டி.வியை பிடித்திருக்கிறது!! இது தான் நான் புரிந்து கொண்டது!!

இதத்தான் கடைசி காட்சியிலும் சொல்லியிருப்பார்கள்

"மனோகர்.. 13B ல யாவரும் நலமா?? நாமெல்லாம் செத்தா செல்போன்ல ஆவியா வருவோம்!" - இது கடைசியா டாக்டர் வாய்ஸ்ல வரும் வசனம்!
இப்போ லாஜிக் ஒகே வா ?

Anonymous said...

நாங்க எழுதன திரைக்கதையே இதை விட 10 பக்கம் கம்மி!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//காரில் சென்றபடியே மனோகர் தனது மனைவிக்கு போன் செய்கிறான். தான் ஒரு அவசர வேலையாக வெளியே செல்வதாகவும், யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்றும், "நான் வந்து தொடர்ச்சியா 3 முறை காலிங்பெல்லை அடிப்பேன்.. அப்ப மட்டும் கதவைத் திற..." என்கிறான்.//


இப்படியா இருந்தது?? எனக்கு என்னமோ அவன் அந்த சீரியலின் கிளைமாக்ஸ் பார்ப்பதற்கு முன் இந்த சீன் வந்த மாதிரி ஞாபகம்!! அதுவம் ஒரு கனவு!! இது டாக்டர் வீட்டுக்கு போகும் போது இல்லை! லேட் ஆச்சு நீங்க ஏன் இன்னும் வீட்டுக்கு வரல என்று அவள் போன் செய்து கேப்பாள்!///

எதுவரைக்கும்தான் கனவு என்று சொல்லேன் தம்பீ.. எனக்கும்தான் குழப்பமாக உள்ளது..

இது கனவு என்றால், டாக்டர் எதற்கு சரியாக மூன்று முறை பெல் அடிக்க வேண்டும்..?!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//படம் பார்த்திட்டு வந்து மறக்காம பின்னூட்டம் போடணும்..!//

வந்தாச்சு அண்ணே..///

வாங்க தம்பி புவனேஷ்..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//இரவில் படுத்திருக்கும்போதுதான் அவனுக்குள் ஏதோ ஒரு எண்ணம் தோன்றுகிறது. //

அண்ணே, இந்த இடத்துல சீரியல் கூட லிங்க் ஆகும்..அத நீங்க மிஸ் பண்ணிடீங்க!///

நிஜமா இப்பவும் எனக்கு ஞாபகம் வர மறுக்கிறது.. இதுக்கு லீட் சீன் என்ன என்று..!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//உன் வீட்டுக்கு போலீஸ் செக்யூரிட்டி தர்றேன்.. ஆனா ஸ்டேஷனுக்குப் போயிட்டு அங்க நேரா வந்தர்றேன்.."//

அண்ணா இப்படி இல்லனா!! இதுவும் அந்த கனவு சீன்!! மாதவன் கூட அந்த இன்ஸ்பெக்டரும் வருவாரு!!///

தம்பீ நீ சொல்ற கனவுன்ற சீன் மாதவன் திடுக்கிட்டு எழுவதைத்தான் சொல்றன்னு நினைக்கிறேன்..

நான் என்ன நினைக்கிறேன்னா அன்னிக்கி ராத்திரி அவன் தூங்கிட்டிருக்கும்போது சட்டுன்னு எழுந்திருக்கிறான்னு.. ஏன்னா நீ கனவுன்னு நினைக்கிற இடத்துல வர்ற காட்சிகள்தான் கிளைமாக்ஸ் காட்சிக்கு உயிர்ப்பான காட்சிகள்.. அது கனவு எனில் கிளைமாக்ஸ் அடிபடும்..! ஒரே குயப்பமா கீதே..!

உண்மைத்தமிழன் said...

///BHuvanesh said...

//யார் காட்டுகிறார்கள்..? மனோகர் ஏன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை..?!//

அதை பற்றி டாக்டரிடம் (அவர் ஆவி பற்றி ஆராய்ச்சியும் செய்கிறார்!) கேட்கிறார்கள்!! அவர் மனுஷன் உடம்புல போகலாம்? சாதரண டி.வி.க்குள்ள போகமுடியாதனு கேட்கறார் இல்ல? அதாவது கதைப்படி டி.வி க்கு பேய் பிடித்திருக்கிறது!///

சுத்தம்.. தம்பி புவனேஷ்.. பாயிண்ட்டை இங்கதான் கொண்டு வந்து உடைச்சிருக்க.. இன்னும் நான் அந்தக் கோணத்துல சிந்திக்கவேயில்லை.. டிவிக்கு பேய் பிடிக்கும்னு..

ஒருவேளை நான்தான் டியூப் லைட்டோ..?

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//அப்படியானால் மருத்துவரின் சதிவேலைதான் இத்தனையுமா..? //

அண்ணே, நான் சரியா புருஞ்சுகிட்டதை சொல்லறேன்..
"The Most Complex Maching - Humar Body" க்குள்ள ஒரு ஆவி போகுதுனா நாம இஸீயா நம்பறோம்! ஆனா டி.வி.குள்ள போச்சுன்னா சொன்ன நம்ப கஷ்டமா இருக்கு" - இது அந்த டாக்டர் சொல்லும் வசனம்!!

அதாவது அந்த கொலைகளை செய்த டாக்டரை பழிவாங்க ஆவிகள் இப்படி டி.வியை பிடித்திருக்கிறது!! இதுதான் நான் புரிந்து கொண்டது!! இதத்தான் கடைசி காட்சியிலும் சொல்லியிருப்பார்கள்
"மனோகர்.. 13B ல யாவரும் நலமா?? நாமெல்லாம் செத்தா செல்போன்ல ஆவியா வருவோம்!" - இது கடைசியா டாக்டர் வாய்ஸ்ல வரும் வசனம்! இப்போ லாஜிக் ஒகேவா ?///

அப்பாடா.. தம்பி புவனேஷுக்கு ஒரு ஜே போட்டுக்கலாம்..

டிவிக்குள்ள ஆவி புகுந்து அது ஒரு கதையை கிரியேட் பண்ணி நடிகர்கள் நடிக்கிறதா நடிக்க வைச்சு டெலிகாஸ்ட் பண்ற மாதிரி காட்டுது.. அதைத்தான் மாதவன் பார்த்து பயப்படுறாரு.. மாட்டிக்கிறாரு.. அப்புறம் மாதவனுக்கு டார்ச்சர் மேல டார்ச்சர் கொடுத்து தான் பழி வாங்க நினைத்த டாக்டரை வீட்டுக்கே வரவழைச்சு மாதவன் மூலமா அவரைக் கொலை பண்ணி பழி தீர்த்துக்குது.. இதுதான கதை..?!

உஷ்.. அப்பாடா.. மூச்சு முட்டுது சாமி..

இல்லாத ஒரு சீரியலை இருக்குன்ற மாதிரி காட்டி அழகா, அம்சமா நடிக, நடிகையர் நடிக்கிற மாதிரி செட்டப் செஞ்சு காட்ட வைக்குற அந்த பேய்க்கு டாக்டரைத் தேடிப் பிடிச்சு கொலை பண்ணத் தெரியாதா? இல்லாட்டி முடியாதா..?

"ஒரு வேளை பேய்க்கு கால் இல்லை. அதுனால நடக்க முடியாது.. தான் செத்துப் போன அதே வீட்ல இதுனாலதான் உயிர் வாழ்ந்திட்டிருக்கு. அந்த டாக்டரை வரவழைச்சு கொன்னுட்டுத்தான் அது மேலுலகம் போகணும் நினைச்சுச்சு. அதான் வசமா மாதவன் சிக்குனாரு.. கூடவே நாமளும் சிக்கிட்டோம்.. இயக்குநர் மிரட்டிட்டாரு...."

இப்படி நினைச்சுக்கிட்டு இந்தப் பதிவுக்கு மங்களம் பாடலாம்னு நினைக்கிறேன் தம்பி புவனேஷ் அவர்களே..

தங்களுடைய தொடர்ச்சியான, ஆர்வமான பின்னூட்டங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி தம்பீ..

உண்மைத்தமிழன் said...

//டைரக்டர் said...

நாங்க எழுதன திரைக்கதையே இதைவிட 10 பக்கம் கம்மி!//

ஹா.. ஹா.. செம பன்ச் டயலாக்கு.. விழுந்து, விழுந்து சிரித்தேன்..

நல்லாயிரு முருகா..!

உண்மைத்தமிழன் said...

ஏன் கண்ணுகளா..?

கிட்டத்தட்ட இந்தப் பதிவுக்கு ஹிட்ஸ் 900 வந்திருக்கு.. அதுல நான் கமெண்ட் போட்டதுக்கும், ஓப்பன் பண்ணி பார்த்ததுக்கும் ஒரு நூறை கழிச்சிருங்க..

மிச்சம் 800 பேருல ஒரு 20 பேராவது தமிழ்மணத்துல தம்ஸ்அப் கட்டைவிரல்ல குத்தியிருந்தா இன்னும் ஒரு 800 பேர் படிப்பாங்கள்லே.. ஏன்யா அல்லாருக்கும் இம்புட்டு சோம்பேறித்தனம்..?!

Anonymous said...

//நிஜமா இப்பவும் எனக்கு ஞாபகம் வர மறுக்கிறது.. இதுக்கு லீட் சீன் என்ன என்று..!//

எப்பவும் போல் இன்னக்கு சீரியலில் என்ன ஆச்சு என்று தன் மனைவியிடம் கேட்பான்.. அவள் அந்த நாய் ஏதோ ஒன்றை எடுக்க போனது என்று சொல்லுவாள் (இவன் அதை நிஜத்திலும் பார்த்திருப்பான்!!).. இவன் ஆர்வம் தாங்காமல் என்னது என்னது என்று கேட்க.. அதுக்குள்ள தான் தொடரும் போட்டுடானே என்று சொல்லுவாள்.. பிறகு அவள் தூங்கிய பின்பு அங்கு சென்று எடுப்பான்!!

Anonymous said...

//நான் என்ன நினைக்கிறேன்னா அன்னிக்கி ராத்திரி அவன் தூங்கிட்டிருக்கும்போது சட்டுன்னு எழுந்திருக்கிறான்னு.. ஏன்னா நீ கனவுன்னு நினைக்கிற இடத்துல வர்ற காட்சிகள்தான் கிளைமாக்ஸ் காட்சிக்கு உயிர்ப்பான காட்சிகள்.. அது கனவு எனில் கிளைமாக்ஸ் அடிபடும்..! ஒரே குயப்பமா கீதே..!//

தலைவா, கனவுல அந்த அடையாளம் தெரியாத உருவம் தான் மூணு தட்டி காலிங் பெல் அடிக்ற மாதிரி வரும்... டாக்டர் ஒரு தட்டி தான் அடிப்பாரு.. கனவுல அந்த கிளைமாக்ஸ் லீட் (மனோகர் கையில் சுத்தியுடன் நிற்கும் காட்சி!) வராது..
அந்த கனவு இன்ஸ்பெக்டர் பந்தபஸ்து தரேன் என்று சொல்லுவது முதல் அந்த அடையாளம் தெரியாத உருவம் காலிங் பெல்லை மூணு தடவை அமுத்தியவுடன் இவன் அலறி கொண்டு எந்திரிக்கும் வரை!
அது டி.வி ல தான் வரும்! எனக்கு இப்படி பாத்த மாதிரி தான் ஞாபகம்.. ரெண்டு பேரும் இன்னொரு தபா பாக்கணும் போல!

Anonymous said...

//காட்ட வைக்குற அந்த பேய்க்கு டாக்டரைத் தேடிப் பிடிச்சு கொலை பண்ணத் தெரியாதா? இல்லாட்டி முடியாதா..? //

அதுக்கு தான் டாக்டர் அந்த சீரியல் பாக்கும்போது வரும் பெண் (பேய்) உன்னை நான் எப்பவோ கொன்னுருக்க முடியும் நீ நாங்க செத்த அதே இடத்துல சாகனும் எங்க அண்ணனும் விடுதலை ஆகணும் னு சொல்லுதே?

டாக்டரை அந்த இடத்திருக்கு கொண்டு வர பேய்கள் போட்ட நாடகம் தான் இந்த நாடகம்!!

அனால் இப்படி செய்தால் அண்ணன் எப்படி விடுதலை ஆவான் என்று எனக்கு புரியவில்லை!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//நிஜமா இப்பவும் எனக்கு ஞாபகம் வர மறுக்கிறது.. இதுக்கு லீட் சீன் என்ன என்று..!//

எப்பவும் போல் இன்னக்கு சீரியலில் என்ன ஆச்சு என்று தன் மனைவியிடம் கேட்பான்.. அவள் அந்த நாய் ஏதோ ஒன்றை எடுக்க போனது என்று சொல்லுவாள் (இவன் அதை நிஜத்திலும் பார்த்திருப்பான்!!).. இவன் ஆர்வம் தாங்காமல் என்னது என்னது என்று கேட்க.. அதுக்குள்ளதான் தொடரும் போட்டுடானே என்று சொல்லுவாள்.. பிறகு அவள் தூங்கிய பின்பு அங்கு சென்று எடுப்பான்!!//

ஓ.. இப்போது ஞாபகம் வருகிறது தம்பி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//நான் என்ன நினைக்கிறேன்னா அன்னிக்கி ராத்திரி அவன் தூங்கிட்டிருக்கும்போது சட்டுன்னு எழுந்திருக்கிறான்னு.. ஏன்னா நீ கனவுன்னு நினைக்கிற இடத்துல வர்ற காட்சிகள்தான் கிளைமாக்ஸ் காட்சிக்கு உயிர்ப்பான காட்சிகள்.. அது கனவு எனில் கிளைமாக்ஸ் அடிபடும்..! ஒரே குயப்பமா கீதே..!//

தலைவா, கனவுல அந்த அடையாளம் தெரியாத உருவம்தான் மூணு தட்டி காலிங் பெல் அடிக்ற மாதிரி வரும்... டாக்டர் ஒரு தட்டிதான் அடிப்பாரு..///

இல்லை தம்பி.. டாக்டர் மூணு தடவைதான் பெல் அடிக்கிறாரு.

//கனவுல அந்த கிளைமாக்ஸ் லீட் (மனோகர் கையில் சுத்தியுடன் நிற்கும் காட்சி!) வராது.. அந்த கனவு இன்ஸ்பெக்டர் பந்தபஸ்து தரேன் என்று சொல்லுவது முதல் அந்த அடையாளம் தெரியாத உருவம் காலிங் பெல்லை மூணு தடவை அமுத்தியவுடன் இவன் அலறி கொண்டு எந்திரிக்கும் வரை!
அது டி.வி.லதான் வரும்! எனக்கு இப்படி பாத்த மாதிரிதான் ஞாபகம்.. ரெண்டு பேரும் இன்னொரு தபா பாக்கணும் போல!///

கண்டிப்பா இன்னொரு வாட்டி டிவிடிலயாவது பார்த்தே ஆகணும்..!

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...

//காட்ட வைக்குற அந்த பேய்க்கு டாக்டரைத் தேடிப் பிடிச்சு கொலை பண்ணத் தெரியாதா? இல்லாட்டி முடியாதா..? //

அதுக்குதான் டாக்டர் அந்த சீரியல் பாக்கும்போது வரும் பெண் (பேய்) உன்னை நான் எப்பவோ கொன்னுருக்க முடியும். நீ நாங்க செத்த அதே இடத்துல சாகனும்.. எங்க அண்ணனும் விடுதலை ஆகணும்னு சொல்லுதே? டாக்டரை அந்த இடத்திருக்கு கொண்டு வர பேய்கள் போட்ட நாடகம்தான் இந்த நாடகம்!!
அனால் இப்படி செய்தால் அண்ணன் எப்படி விடுதலை ஆவான் என்று எனக்கு புரியவில்லை!///

மொதல்ல பேய்கள் எப்படி இப்படி சீரியல் தயாரிச்சு டெலிகாஸ்ட் பண்ணுதுகன்னே புரியலை..? அப்புறம்ல அண்ணனை பத்தி யோசிக்கணும்..?!

ஆனாலும் தம்பீ.. இயக்குநர் ரொம்ப விவரக்காரரு.. இப்படி எதையுமே நம்மளை யோசிக்க விடாம கொண்டு போய் முடிச்சிருக்காரு.. பாரு.. கெட்டிக்காரரு.. நாம பாராட்டியே ஆகணும்..!

ஷண்முகப்ரியன் said...

//முரளிகண்ணன் said...
அண்ணா, ஸ்க்ரிப்ட் படிச்ச மாதிரி இருக்குண்ணா//
ஒரு திருத்தம்.ஷூட்டிங் ஸ்கிரிப்ட் படித்த மாதிரி!(கண் வலியுடன்)நன்றி சரவணன்.

உண்மைத்தமிழன் said...

///ஷண்முகப்ரியன் said...

//முரளிகண்ணன் said...
அண்ணா, ஸ்க்ரிப்ட் படிச்ச மாதிரி இருக்குண்ணா//

ஒரு திருத்தம்.ஷூட்டிங் ஸ்கிரிப்ட் படித்த மாதிரி!(கண் வலியுடன்)நன்றி சரவணன்.///

அப்பாடா இயக்குநருக்குப் புரிஞ்சிருச்சு.. இனிமேல் ஏதாவது ஷூட்டிங் ஸ்கிரிப்ட் எழுதணும்னா என்னைக் கூப்பிடலாம்.. ஏதோ எனக்கும் பொழைப்பு ஓடும்.. உங்களுக்கும் வேலை ஓடும்..

என்னங்க டைரக்டர் ஸார்.. சர்ரீங்களா..?!

ஊர்சுற்றி said...

நல்ல படம், கட்டாயமா பார்க்கணும்னு எல்லாரும் சொல்றாங்களே!!!

எதுக்கும் ஒருதடவை பார்த்துடறேன்.

உண்மைத்தமிழன் said...

//ஊர் சுற்றி said...

நல்ல படம், கட்டாயமா பார்க்கணும்னு எல்லாரும் சொல்றாங்களே!!!

எதுக்கும் ஒருதடவை பார்த்துடறேன்.//

கண்டிப்பா பார்த்திருங்க.. மிஸ் பண்ணிராதீங்க ஸார்..!

குமரன் said...

//விமர்சனமா..??? திரைப்பட திறனாய்வு கட்டுரையா..??//

இவ்வளவு நீளமா ஒரு விமர்சனம். தாங்க முடியலை.

இதுல திறனாய்வு கட்டுரையா? ன்னு வேற பில்டப் வேறு!

உண்மைத்தமிழனை இந்த ஊரும் பதிவர்களும் எப்படிதான் உசுப்பேத்தி, உசுப்பேத்தி விடுறாங்க!

Findindia said...

உங்களின் இந்த பதிவின் முதல் இரண்டு வரிகள் என்னை ரொம்பவே யோசிக்க வாய்த்தது உண்மை தமிழரே ....!!!

உண்மைத்தமிழன் said...

///நொந்தகுமாரன் said...
//விமர்சனமா..??? திரைப்பட திறனாய்வு கட்டுரையா..??//

இவ்வளவு நீளமா ஒரு விமர்சனம். தாங்க முடியலை.

இதுல திறனாய்வு கட்டுரையா? ன்னு வேற பில்டப் வேறு!

உண்மைத்தமிழனை இந்த ஊரும் பதிவர்களும் எப்படிதான் உசுப்பேத்தி, உசுப்பேத்தி விடுறாங்க!///

தம்பி நொந்தகுமாரா.. நீர் எந்த ஊரு..?

இங்க யாரு என்னை ஏத்திவிட்டுக்கிட்டிருக்கா..?

கைல ஒரு கட்டையை கொடுத்து யாரை வேண்ணாலும் அடிக்கலாம்னு சொல்லிப் பாரு..

மொதல்ல அல்லாரும் என்னைத்தான் தேடி வருவாங்க..

அவ்ளோ நல்ல பேராக்கும் எனக்கு..!

உண்மைத்தமிழன் said...

//Raj said...
உங்களின் இந்த பதிவின் முதல் இரண்டு வரிகள் என்னை ரொம்பவே யோசிக்க வாய்த்தது உண்மை தமிழரே ....!!!//

அப்படியா..? சந்தோஷம்.. மிக்க நன்றி..

ஒரு தோல்விப் படம் கொடுத்த இயக்குநர் என்றுதான் அவரைப் பற்றிச் சொன்னார்கள். படத்தைப் பார்த்தபோது அப்படி தெரியவில்லையே..

அதனால்தான் அதனைக் குறிப்பிட்டேன்..