எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-இறுதி பாகம்

05-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார். சோனியாகாந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார்? யாரால் கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்..? என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். கூடவே அகமது படேல், சுஷில்குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற காங்கிரஸ் உயர் தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டுவிரலைக்கூட ரஜினிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸாரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்து, பின்பு அவர்களிடமிருந்து எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

"எங்களுக்கு வேலைப்பளு அதிகம். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அல்ல. சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே எங்களுடைய விசாரணை இதற்குத் தேவையில்லை.." என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும், தொடர்புடையவர்களைத் தப்ப வைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜினி பாட்டீல் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

"இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.." என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜினி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான். 'முக்கிய எதிரிகள்' என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸார் அழைத்து விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜுமாலி, ராஜுசோனாவானே ஆகியோர் 03.01.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் சொல்லவில்லை. "எங்களை நிர்ப்பந்திக்கிறார்கள். குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளியுங்கள். இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்.." என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

"இந்த வழக்கை விசாரிக்க முடியாது' என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது.." என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. "உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இரு தரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜினிபாட்டீல் மீண்டும் ஒரு முறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். "எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன்.." என்றுகூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை தொகுத்து குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் மனு செய்தார். அப்படியும் எதுவும் நடைபெறாததால், "பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது அண்ணன் டாக்டர் ஜி.என்.பாட்டீலை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்.." என்று குற்றம்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு :

"பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறானப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.." என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸாரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரச்சாரம் என்றால், 'ஆஜ்தக்' தொலைக்காட்சி ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

"இத்தனை நாட்கள் விட்டுவிட்டு பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள்..?" என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாநிலங்களிலும் இதைப் போல ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரோ அல்லது அவருடைய உறவினரோ அல்ல.

எனவே, நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும், ஆட்சேபணை தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும்? அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா..?

"சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது. அதனால் தேர்வு செய்துவிட்டார்.." என்று மட்டும் கூறாதீர்கள்.

மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி அவருடைய மனைவியும், கட்சித் தலைவர்களும் அலையலையாகத் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இது சகஜமான விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம்.. அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியல் செல்வாக்கு இல்லாத மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதூர்யம் இல்லாவிட்டாலும், இன்னும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராகவே இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல், சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட்டால் பிரச்சினையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித் தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும், சொந்தச் செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது.. 'தலைமையின் தயவில்'தான் அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

முற்றும்

15 comments:

Unknown said...

//பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை தொகுத்து குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் மனு செய்தார். அப்படியும் எதுவும் நடைபெறாததால்,//

இதுதான் இவரிடம் உள்ள பிரச்சனை.

விவேக்குடன் பேச நேரம் ஒதுக்குகிறார்.
பாபா,காஞ்சி மடவாதிகளைப் பார்க்கிறார் ஆனால், இப்படிப்பட்ட முக்கியமான விசயங்களை விட்டுவிடுகிறார்.

ஒரு குடிமகன் கடைசியாக இவரைத்தான் அணுக முடியும். இவருக்கும் வேலைப்பளுவா?

தனக்கு உள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். கலாம் சில நேரங்களில் வித்தியாசமாக நடந்து கொண்டாலும் பல முறை மற்றவர்களைப் போல் சாதாரண ஜனாதிபதியாகவே இருந்திருக்கிறார். :-(((

****

தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க , ம.தி.மு.க இவருக்கு வாக்களிக்கப் போவது இல்லை.
(அம்மாவின் செய்ல்கள் பிரதீபாவின் செயல்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதால் அம்மா சொல்வதை மற்றவர்கள் ஏற்க மாட்டார்கள்)

தி.மு.க வாக்களிப்பது மட்டும் அல்லமால் இவரை மகளிரின் உதாரணச் சின்னமாக ஆக்கிவிட்டது (சென்னைப் பேரணி)

தமிழக காங்கிரஸ்...அன்னை சோனியா சொன்னால் மறு பேச்சு பேச முடியாது.

தோழர்கள் .. சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சீனப் பிரதமர் சொன்னால் கேட்பார்களோ?

*

பா.ம.க ?????

குடிப்பதே தவறு என்றும் அப்படிப்பட்டவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் சொல்லும் அய்யா, இவ்வளவு விசயங்களில் சிக்கியுள்ள இந்த பிரதீபாவுக்கு ஓட்டுப்போடுவாறா?

உண்மைத் தமிழன்,
அய்யாவுக்கு ஒரு கடிதமாக இந்த ஜோரா கைதட்டுங்க மேட்டரைப் போடுங்க .அவராவது தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பை பதிவு செய்யட்டும்.

ALIF AHAMED said...

இந்த குற்றசாட்டு அனைத்துமே அரசியல் உள்நோக்கம் உள்ளது.
தவறனது - பிரதிபா பாட்டில்

எங்க
எல்லோரும்
ஜோரா
கை
தட்டுங்க...:)

Anonymous said...

Indiavukku 7 1/2 nattu sani 2 1/2 varusha discountoda 5 varusham vara pogudhu.,

உண்மைத்தமிழன் said...

///கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
//பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை தொகுத்து குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் மனு செய்தார். அப்படியும் எதுவும் நடைபெறாததால்,//
இதுதான் இவரிடம் உள்ள பிரச்சனை. விவேக்குடன் பேச நேரம் ஒதுக்குகிறார். பாபா,காஞ்சி மடவாதிகளைப் பார்க்கிறார் ஆனால், இப்படிப்பட்ட முக்கியமான விசயங்களை விட்டுவிடுகிறார். ஒரு குடிமகன் கடைசியாக இவரைத்தான் அணுக முடியும். இவருக்கும் வேலைப்பளுவா? தனக்கு உள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். கலாம் சில நேரங்களில் வித்தியாசமாக நடந்து கொண்டாலும் பல முறை மற்றவர்களைப் போல் சாதாரண ஜனாதிபதியாகவே இருந்திருக்கிறார். :-(((

பலூன் மாமா.. கலாமால் இந்த விஷயத்தில் என்ன செய்திருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்? அதிகப்பட்சம் போனால் மாநில அரசுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி ஒரு பரிந்துரைக் கடிதம் எழுத முடியும். அவ்வளவுதான்.. ஒரு நாளைக்கு அவருடைய இமெயிலிலேயே ஒரு லட்சம் கடிதங்கள் வருகின்றன என்றால் அவர் எத்தனை கடிதங்களைத்தான் படித்திருப்பார். ஒருவேளை இந்தக் கடிதத்தை அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு நடவடிக்கை எடுக்கும்படி திருப்பியனுப்பியிருக்கலாமே.. யார் கண்டது? அவரால் முடிந்த அதிகார வரம்பிற்குள் இதைத்தான் செய்ய முடியும்.

//தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க , ம.தி.மு.க இவருக்கு வாக்களிக்கப் போவது இல்லை. (அம்மாவின் செய்ல்கள் பிரதீபாவின் செயல்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதால் அம்மா சொல்வதை மற்றவர்கள் ஏற்க மாட்டார்கள்) தி.மு.க வாக்களிப்பது மட்டும் அல்லமால் இவரை மகளிரின் உதாரணச் சின்னமாக ஆக்கிவிட்டது (சென்னைப் பேரணி) தமிழக காங்கிரஸ்...அன்னை சோனியா சொன்னால் மறு பேச்சு பேச முடியாது. தோழர்கள் .. சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சீனப் பிரதமர் சொன்னால் கேட்பார்களோ?//

நீங்கள் சொல்வதும் நியாயம்தான் மாமா.. எதிர்க்கட்சிக்காரனை எதிரியாகவே பாவிக்கும் மனப்பாங்க திராவிடக் கட்சிகளிடம் மேலோங்கி இருப்பது வருந்ததக்கது. அல்பமான காரணங்களுக்குக்கூட ஒருவரையருவர் முறைத்துக் கொள்கிறார்கள். மாநிலத்தின் நலனை முன்னிட்டு வரும் பிரச்சினையில் யார் முதலில் சொன்னது? யார் முதலில் வாங்கிக் கொடுத்தது என்று அல்பத்தனமான சண்டை வேறு.. இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. கம்யூனிஸ்ட்கள் விஷயத்தில் யாராலும் அவர்களை புரிந்துகொள்ள முடியவே முடியாது. ஏனெனில் அவர்களுக்கே அவர்களைப் பற்றி புரியாது. பின்பு நாம் போய் என்ன செய்ய முடியும்?

//பா.ம.க ????? குடிப்பதே தவறு என்றும் அப்படிப்பட்டவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் சொல்லும் அய்யா, இவ்வளவு விசயங்களில் சிக்கியுள்ள இந்த பிரதீபாவுக்கு ஓட்டுப்போடுவாறா?//

இப்போது அவருக்கு அவருடைய அருமை மகன் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும். தன்னுடைய கட்சிக்கு மாநில கட்சி என்ற அந்தஸ்து நிரந்தரமாகக் கிடைக்க வேண்டும். டிவி நன்கு லாபத்துடன் ஓட வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டுமானால் கூட்டணியில் ஒட்டிக் கொண்டுதான் ஆக வேண்டும். ஸோ.. அவரால் எதுவும் செய்ய முடியாது மாமா..

//உண்மைத் தமிழன், அய்யாவுக்கு ஒரு கடிதமாக இந்த ஜோரா கைதட்டுங்க மேட்டரைப் போடுங்க .அவராவது தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பை பதிவு செய்யட்டும்.//

போட்ருவோம்.. அதுக்கொரு சமயம் வராமலா போகப் போகுது.. (இதுல போட்டு வேஸ்ட்டு மாமா.. அவரோட பங்கு இதுல எதுவுமில்லை. ஏன்னா துணை ஜனாதிபதி வேட்பாளர் யாருன்னு தெரியும்போதுதான் இந்த நாடகம் எதுக்குன்னு நமக்கெல்லாம் தெரியும். அதுவரைக்கும் வெயிட் அண்ட் ஸீ)

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா
இன்னைக்காவது முடிஞச்சதே

கைதட்டி கைதட்டி களைச்சு போச்சப்பா

ஒரு சோடா குடப்பா காசை நம்ம உண்மைத்(தலைவன்) தமிழன் கணக்கில எழுதிக்கப்பா....

Anonymous said...

தல நாளைக்காவது சொந்தக்கதை போடுவிங்கள்ல

உண்மைத்தமிழன் said...

மின்னலு.. ஒரு வரில இத்தனையையும் கவுத்துட்டியேப்பூ.. நல்லாயிரு.. ஆமா கும்மி கோஷ்டிகள் அல்லாரும் செளக்கியமா? கேட்டேன்னு சொல்லுப்பா..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Indiavukku 7 1/2 nattu sani 2 1/2 varusha discountoda 5 varusham vara pogudhu.//

இது யாருய்யா புதுசா ஜோஸியம் சொல்றது..? சனி பகவான் டிஸ்கவுண்ட்டெல்லாம் கொடுப்பாரா? அப்ப எனக்கு மட்டும் கொடுக்க மாட்டேங்குறாரு.. கொஞ்சம் ரெகமண்ட் பண்ணு அனானி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தல நாளைக்காவது சொந்தக்கதை போடுவிங்கள்ல..//

கண்டிப்பா.. கண்ணுல தண்ணி வருதுய்யா உங்க பாசத்தை நினைச்சா..? இதுக்கு முன்னாடி என் கை வலியெல்லாம் சும்மா..

நாகு (Nagu) said...

உங்க வலைப்பதிவுல எந்த ஆவி வந்து சாபம் போட்டுதோ தெரியல - எனக்கு தமிழ்மணம் கருவிப் பட்டை ரெண்டு ரெண்டாத் தெரியுது :-)

துளசி கோபால் said...

இனி இந்தியாவை அந்த ஆண்டவந்தான் காப்பாத்தணும்.

Unknown said...

Unmai thamizhan...Read this first.....

SC rejects petition seeking cancellation of Pratibha Patils's nomination

New Delhi, July 3 : The Supreme Court today quashed a petition seeking cancellation of United Progressive Alliance (UPA)-Left presidential candidate Pratibha Patil's nomination papers.

Justices Tarun Chatterjee and P K Balasubramanyan said that there was insufficient evidence to support the case against Patil.

Advocate Manohar Lal Sharma, in the petition, has alleged Patil of defaulting on a loan of Rs.17.5 crore granted by the Bombay Pune Cooperative Bank. However, Patil has already described the allegations as 'false and malicious'.

Last week, former Union Minister Arun Shourie raised questions about the closure of Patil's co-operative bank in Maharashtra, how her relatives had defaulted on big loans and that she had shielded her brother in a murder case.

Shourie had claimed that the Reserve Bank of India (RBI) had shut down her bank—the Pratibha Mahila Sahakari Bank—because of poor loan recovery and an abnormal increase in non-performing assets.

Patil had set up the bank in her own name in 1973. With many members of her family as directors, she was the founder-chairperson till its closure in 2003, Shourie's booklet said.

In February 2003, P B Mathur, RBI's executive director, said the inspection revealed many irregularities. As a consequence, Shourie says, the RBI cancelled the bank's licence.

--- ANI

உண்மைத்தமிழன் said...

//நாகு (Nagu) said...
உங்க வலைப்பதிவுல எந்த ஆவி வந்து சாபம் போட்டுதோ தெரியல - எனக்கு தமிழ்மணம் கருவிப் பட்டை ரெண்டு ரெண்டாத் தெரியுது :-)//

உங்களுக்குன்னுல்ல.. என் வலைப்பதிவுக்குள்ள யார் வந்தாலும் கருவிப்பட்டை ரெண்டு, ரெண்டாத்தான் தெரியும் நாகு.. எனக்கே எங்க மிஸ்டேக் செஞ்சேன்னு தெரியல.. ஆனா ஏதோ மிஸ்டேக்குன்னு மட்டும் தெரியும்.. ஒன்றை நீக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
இனி இந்தியாவை அந்த ஆண்டவந்தான் காப்பாத்தணும்.//

அவன் வர மாட்டான் டீச்சர். அதுனாலதான் புதுசு புதுசா 'ஆண்டவர்கள்' தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

abeer ahmed said...

See who owns bezaat.com or any other website:
http://whois.domaintasks.com/bezaat.com