எல்லாரும் ஜோரா கை தட்டுங்க! - பாகம்-1

30-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


எல்லாரும் ஜோரா கை தட்டுங்க.. தட்டிட்டீங்களா.. இன்னும் கொஞ்சம் நல்லாத் தட்டுங்க.. டெல்லிவரைக்கும் கேக்க வேணாம்..

வார்டு கவுன்சிலர் தேர்தல்ல நிக்குறதுக்கே ஆள் பலம், படை பலம், இதோட புஜ, கஜ பலம்.. கடைசியா போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்டு எல்லாமே ஒரு வேட்பாளருக்குத் தேவைப்படுது. இதுல ஜனாதிபதி தேர்தல்ன்னா.. சும்மாவா..

யாரோ ஒரு அம்மாவைத் தேர்ந்தெடுத்து பெண்களுக்கு வாழ்க்கையில்தான் சம உரிமை கொடுக்க முடியவில்லை.. பாராளுமன்றத்தில்தான் 33 சதவிகிதம் கொடுக்க முடியவில்லை. இதிலாவது 12 ஆண்களுக்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.

அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..

"அந்தம்மா யாரு? அரசியல்வாதியா? என்ன அரசியல் பண்ணிருக்காங்க..? அரசியல்ன்னா என்னன்னாவது தெரியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்குன்னே உலகத்துல ஒரு தனி மரியாதை இருக்கு.. அது அந்தம்மாவுக்கு இருக்கா..? இல்லையே..? பின்ன எதுக்கு 'பிரதிபா..' 'பிரதிபா..' 'பிரதிபா'ன்னுட்டு ஒப்பாரி வைக்குறானுக எல்லா சேனல்காரனும்..?" என்று சொக்கலால் பீடி குடித்தபடியே நம்ம கபாலி அண்ணேன், கபாலி தியேட்டர் வாசல்ல, ஓசில சரக்கடிச்சு புலம்பிக்கிட்டிருந்தாருங்கோ..

இது எப்படியோ நம்ம அரசியல்வாதிகளின் பாசக்காரப் பயல்களுக்கு.. அதாங்க... பத்திரிகைகாரங்களுக்குத் தெரிஞ்சு போய் "அந்தம்மா யாரு? எவரு? குலம் என்ன? கோத்திரம் என்ன?"ன்னு நோண்ட ஆரம்பிச்சிட்டாங்க.. ஒண்ணொண்ணா வெளில வந்துக்கிட்டிருக்கு..

அதுல இதுவும் ஒண்ணு சாமி.. படிச்சுப் பாருங்க.. இன்னிக்கு 'தினமணி' பேப்பர்ல பத்திரிகையாளர் திரு.அருண்செளரி எழுதிருக்கார்.. இதுக்கும் ஜாதி சாயம் பூசிராதிங்க சாமிகளா.. 'மேட்டர்' என்னன்னு மட்டும் பாருங்க..

"என்னைத் தேர்வு செய்திருப்பது மற்றப் பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருந்து அவர்களும் அதிகாரம் பெற வழிவகுக்கும்" - இது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிபா பாட்டீலின் அடக்கமான ஏற்புரையாகும்.

மகளிர் முன்னேற்றத்திலும், பெண் கல்வியிலும் ஆர்வம் உள்ள சமூகத் தொண்டர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மகளிர் நலன் ஆகியவற்றுக்காக அயராது பாடுபடுகிறார் என்று பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் கூறப்படுகிறது.

மகிளாவிகாஸ் மகா மண்டல் ஆதரவில், "பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, மகாராஷ்டிரம்" என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை ஜலகாமில் அவர் தொடங்கியது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஷரம் சாதனா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஜலகாம் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர், ஏழை கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக பொறியியல் கல்லூரியை நிறுவியவர் என்ற பட்டங்களும் பிரதிபாவுக்கு உண்டு.

மற்றப் பெண்களுக்கு உதவ, தன்னுடைய பெயரிலேயே அவர் தொடங்கிய பிரதிபா மகிளா சஹகாரி கூட்டுறவு வங்கியின் கதையை முதலில் பார்ப்போம்.

அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் பத்திரிகைகளின் செய்திகளும் இந்த வங்கி குறித்து இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வங்கி தொடர்ந்து செயல்பட்டால், முதலீட்டாளர்களின் நலன் முற்றிலும் பாழ்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோடு ரிசர்வ் வங்கி அதை இழுத்து மூடிவிட்டது என்ற தகவல் எதிலும் இல்லை.

தன்னைத் தலைவராகவும், தன்னுடைய உறவினர்கள் சிலரை இயக்குநர்களாகவும் கொண்டு 1973-ல் இந்த கூட்டுறவு வங்கியை பிரதிபா பாட்டில் தொடங்கினார். அவர் இயக்குநராகப் பல முறை தொடர்ந்திருக்கிறார். அவருடைய உறவினர்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மாறி, மாறி வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அந்த வங்கி தொடங்கியது முதல் இழுத்து மூடப்படும்வரை அதன் நிறுவனம், தலைவர் என்ற அந்தஸ்திலேயே பிரதிபா தொடர்ந்து செயல்பட்டார்.

அந்த வங்கி முறையாக நிர்வகிக்கப்படாததால் 1995-ல் ரிசர்வ் வங்கி அதை நலிவடைந்த வங்கிகளின் பட்டியலில் சேர்த்தது. 1994-மார்ச்சில் கிடைத்த ஆய்வறிக்கையின்படி அதன் மூலதன ஆதாரம் வெகுவாகச் சிதைந்துவிட்டதால், அதை மறுசீரமைப்புக்கான வங்கிகளின் பட்டியலில் ரிசர்வ் வங்கி சேர்த்தது.

2002-ல் மீண்டும் அந்த வங்கியின் நிதி இருப்பு, இதர செயல்பாடுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டது ரிசர்வ் வங்கி. அதன் நிர்வாக இயக்குநர் பி.பி.மாத்தூர் அந்த ஆய்வுக்குப் பிறகு பின்வரும் நிதி முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1. வங்கியின் உண்மையான அல்லது மாற்றத்தக்க செலுத்தப்பட்ட மூலதனம், ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றின் மதிப்பு மைனஸ் ரூ.197.67 லட்சமாக இருக்கிறது. இந்த வங்கியின் சொத்து மதிப்பு அது செலுத்த வேண்டிய கடனை முழுமையாக அடைப்பதற்கு பற்றாத நிலையில் இருக்கிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மூலனதப் பங்கு அதன் வசம் இல்லை. இது மொத்த டெபாசிட் தொகையின் மதிப்பில் 26% சதவீதம்.

2. வங்கியின் மொத்தச் சொத்து மதிப்புக்கும் அது செலுத்த வேண்டிய கடனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் சொத்தைப் போலவே கடன் 312.4% இருக்கிறது. அதாவது கடனை அடைக்க முற்பட்டால் வங்கியின் மூலதனம் முழுக்கத் தீர்ந்து அது திரட்டியுள்ள டெபாசிட்டுகளிலிருந்தும் ரூ.197.67 லட்சம் தேவைப்படும். அதாவது கால்பங்கு டெபாசிட்டுகளைத் தியாகம் செய்தால்தான், கடனே அடையும் என்ற நிலைமை.

3. அந்த வங்கி அளித்தக் கடனில் 65.8% அளவு வாராக்கடன்களாக, அதாவது திரும்ப வசூலிக்க முடியாத கடனாகப் போய்விட்டது.

4. வங்கி நிர்வாகம் இந்தக் கடன்களைத் திரும்ப வசூலிக்கவோ, அதன் நிதியாதாரத்தை வலுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வங்கியைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் இப்போதுள்ள டெபாசிட்தாரர்கள் மட்டுமல்ல. இனி எதிர்காலத்தில் விவரம் தெரியாமல் இதில் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால் வங்கியை உடனடியாக மூடிவிடுமாறு உத்தரவிடப்படுகிறது. வங்கி நடத்துவதற்கு அளித்த உரிமமும் ரத்து செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியிருக்கிறது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் பிரதிபாவைத் தவிர, இதர இயக்குநர்கள் அனைவரும் அவருடைய சகோதரர்கள் அல்லது உறவுக்காரர்கள். அதாவது அனைவருமே ஆண்கள். மகளிருக்கு அதிகாரம் வழங்க மூடு திரைக்குள் ஆண்கள் என்று இதை கருதலாம்.

ஒரு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படும் இந்த வங்கி தொடர்ந்து மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி வங்கியை போண்டியாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் உயர் நிர்வாக அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை மாநில கூட்டுறவுத் துறை, மாநில அரசு, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி கொண்டேயிருந்தது.

பிரதிபா பாட்டீலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுகூட தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது. மகாராஷ்டிரத்தில் உரிய அரசு அமைப்புகளுக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும்கூட புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது.

03.12.2002-ல் அனுப்பியிருந்த விரிவான புகாரில் வங்கியின் நிர்வாகியும், தலைவருமான பிரதிபா பாட்டீல், வங்கியின் பணத்தைத் திட்டமிட்டு சுயலாபத்துக்குப் பயன்படுத்த, எந்தவித ஜாமீனும் இல்லாமல் தனது உறவினர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு லட்சணக்கணக்கில் எப்படி கடன் அளித்து வருகிறார் என்று தொழிலாளர்கள் சங்கம் பட்டியல் இட்டிருந்தது.

வங்கியின் நிதி நிலைமை படு மோசமாக இருந்த நிலையிலும் தனது உறவினர்கள் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, மற்றும் அபராத வட்டி போன்றவற்றை பிரதிபா பாட்டீல் தள்ளுபடி செய்ததையும் சங்கம் தனது புகாரில் சுட்டிக் காட்டியிருந்தது.

பிரதிபாவின் உறவினர்களான அஞ்சலி திலீப் சிங் பாட்டீலுக்கு ரூ.21.86 லட்சமும், கவிதா அரவிந்த்பாட்டீலுக்கு ரூ.8.59 லட்சமும், ராஜ்கெளர் திலீப்சிங் பாட்டீலுக்கு ரூ.2.47 லட்சமும் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த வங்கிக் கணக்குகளை அவருடைய உறவினர்கள் மூடி விட்டனர். இவ்வாறாக இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரூ.32.93 லட்சம் மக்களுடைய பணம் ஏப்பம் விடப்பட்டது என்று சங்கம் சுட்டிக் காட்டுகிறது.

ஊழியர் சங்கங்களின் புகார்கள் குறித்து வங்கியில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வங்கியின் சட்ட ஆலோசகர் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல்தான். இந்தக் கடன் தள்ளுபடியில் பலன் அடைந்ததே திலீப்சிங்கின் மனைவிதான். இந்த வகையில் மட்டும் பிரதீபாவும் அவருடைய உறவினர்களும் ரூ.2 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டதாக ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

கடன் பெற்ற பிரதிபாவின் உறவினர்கள்

1. திலீப்சிங் என்.பாட்டீல் - அண்ணன் - ரூ.3,09,562

2. திலீப்சிங் என்.பாட்டீல் - அண்ணன் - ரூ.5,62,840

3. ராஜேஸ்வரி கிஷோரி சிங் பாட்டீல் - சகோதரரின் மருமகள்-ரூ.45,82,670

4. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - அண்ணன் மகன் - ரூ.51,02,183

5. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - அண்ணன் மகன்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர் - ரூ.43,87,680

6. உதவ்சிங் தக்டு ராஜ்புத்
ஜெயஸ்ரீ உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர்கள் - ரூ.42,89,602

7. ரந்தீர்சிங் திலீப்சிங் ராஜ்புத்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் - உறவினர் - ரூ.21,44,800

8. ஜோதி விஜயசிங் பாட்டீல்
கிஷோர் திலீப்சிங் பாட்டீல் - உறவினர் - ரூ.10,69,893


இப்பச் சொல்லுங்க.. திருமதி பிரதிபா பாட்டீல் அரசியல்வாதியா..? இல்லையா..? ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா..? இல்லையா? யோசிங்க.. யோசிச்சுக்கிட்டே இருங்க..

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

47 comments:

Anonymous said...

அடுத்தக் கதையோட வர்றேன்..

//

வாங்க கதையோடு

சும்மா அதிருதுல said...

இருக்கட்டுமே
ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல

Anonymous said...

கொஞ்ச நாளைக்கு அமைதியாத்தான் இருந்துத் தொலைக்கலாம்ல!

ஏன் இந்த வீண் பிடிவாதம்! இப்போ அவஸ்தைப் படுறது யாரு?

Anonymous said...

அமைதியா இருக்கறதா எங்க தலயா,
முடியாது
நீ கலக்கு தல, ஆனா எங்கேர்ந்துதான் உனக்கு இவ்வளவு கதை கிடைக்குதுனு தெரியலயே

Anonymous said...

//
இருக்கட்டுமே
ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல

//

இதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல

Anonymous said...

அடப்பாவி இது தினமனிலேந்து காப்பி பேஸ்டா எப்பவும் துக்ளக்ளேந்துதன காப்பி பேஸ்ட் பண்ணுவ...

அய்யா சொந்தமா போட முடியலன்னா பரவால்ல அன்னைக்கி லிவ் விட்டுடுங்க ஒரு நாள் போஸ்ட் போடலண்ண பிளாகர் அக்கவுண்ட குளோஸ் பண்ணிட மாட்டாங்க

உண்மைத்தமிழன் said...

//சும்மா அதிருதுல said...
இருக்கட்டுமே ஜனாதிபதி ஒரு ஆளு மட்டும் யோக்கியாமா இருந்தா இந்தியா வல்லரசாயிடுமா..தல//

இல்லை.. ஆனால் இந்தியாவின் முதல் குடிமகளே.. மக்கள் பணத்தை வாரியிறைந்திருக்கும் கிரினமில் குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால் நாளைய வரலாற்றில் இது ஒரு தவறான முன் உதாரணமாகியும், வழி காட்டுதலாகவும் போய்விடும்.

இவர்தான் இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டுத் தலைவர்களுடன் நம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார். என்ன தகுதி என்று அவர்கள் நினைக்க மாட்டார்களா? இதெல்லாம் எந்த நாட்டுக்காரனுக்குத் தெரியப் போகிறது என்கிறீர்களா?

இந்நேரம் இந்தப் பத்திரிகை செய்தியை Cut and Past செய்து தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் தொண்டா..

ஆமா.. அதென்ன இந்தியா இப்ப வல்லராசுகணும்றதுதான் முக்கியமா? வேணாம்.. இது பின்னூட்டம். அது பத்தி புதுசா.. பெரிய பதிவா போடுறேன்..

உண்மைத்தமிழன் said...

நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..

உண்மைத்தமிழன் said...

உண்மை ரசிகன்.. உன்னை மாதிரி ஒருத்தர், ரெண்டு பேர்தாம்பா என்னோட கண் கண்ட தெய்வம்.. உங்களுக்காகவேத்தான்யா நான் இம்புட்டு எழுதுறேன்.. கடைசிவரைக்கும் படிச்சீல்ல..

உண்மைத்தமிழன் said...

//ஏமாந்தவன் said...
அடப்பாவி இது தினமனிலேந்து காப்பி பேஸ்டா எப்பவும் துக்ளக்ளேந்துதன காப்பி பேஸ்ட் பண்ணுவ... அய்யா சொந்தமா போட முடியலன்னா பரவால்ல அன்னைக்கி லிவ் விட்டுடுங்க ஒரு நாள் போஸ்ட் போடலண்ண பிளாகர் அக்கவுண்ட குளோஸ் பண்ணிட மாட்டாங்க..//

முடியல சாமி.. முடியல..

உண்மைத்தமிழன் said...

மின்னலு.. ஸாரிப்பா.. மொதல்ல வந்து போட்டிருக்க.. நான் இப்ப கடைசியா தேங்க்ஸ் சொல்றேன்.. மன்னிச்சு விட்ரு.. அடுத்தக் கதைதான.? நாளைக்கு வரும்.. வெயிட் அண்ட் ஸீ..

துளசி கோபால் said...

அட! இதுதான் 'எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ?' ன்னு
சொல்றாங்களே, அதுவா?

துளசி கோபால் said...

அடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம்.
இல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது?
அதுக்குல்லாம் தெம்பு இல்லை:-))))

Anonymous said...

//நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..//

அதுக்குன்னு துக்ளக்ல இருந்துதான் ஸ்கேன் பண்னி போடணுமா?

குமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு! அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன்!

வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது? அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது!

:((

Anonymous said...

எங்களுக்கெல்லாம் எழுதத் தெரியாமயா பேசாம இருக்கோம்!

இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா!

பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான்! அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம... எதுக்கு இதெல்லாம்!

வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல்!

நல்லா யோசிச்சிப் பாருங்க!

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
அட! இதுதான் 'எந்தப் புத்துலே என்னபாம்பு இருக்கோ?' ன்னு சொல்றாங்களே, அதுவா?//

அதேதான் டீச்சர்.. இப்பவே ஜெயிச்ச மாதிரின்னு நினைச்சுட்டாங்க அம்மா. அதுனால அவுக ரத்தச் சொந்தப் பந்தங்கள் டெல்லில இப்பவே வந்து உக்காந்துட்டு.. ஜனாதிபதி மாளிகையோட மேப்பை கைல வைச்சுக்கிட்டு எந்தெந்த ரூம் யார் யாருக்கு? உள்ள எப்படி டெக்ரேஷன் பண்றது? விலையுயர்ந்த சோபாக்களை ஆர்டர் பண்றதுன்னு டெல்லியைக் கலக்கிட்டிருக்காக.. ஆனா இப்ப அவுங்களுக்கு மிகப் பெரிய தேவை ஒண்ணு இருக்கு. அது அவுக மராத்தி டேஸ்ட்டுக்குத் தகுந்தாப்புல சமைச்சுப் போடுறதுக்கு சமையல்காரங்க வேணுமாம்.. எம்புட்டுச் சம்பளம்னாலும் கொடுத்திருவாங்க. அவுங்க காசு இல்லீல்ல.. நம்ம காசுதான.. யாராச்சும் இருந்தா சொல்லியனுப்புங்க.. கூடவே இன்னொண்ணையும் அவுககிட்ட சேர்த்துச் சொல்லிக் கூப்பிடுங்க. முதல் குடிமகள்கூட அந்த பங்காள குடியேறப் போறது கூட்டிக் கழிச்சுப் பார்த்தா அவுக கொடுத்திருக்கும் லிஸ்ட்படி 18 பேராம்.. இது கூடலாம்.. அல்லது குறையலாம்..

//அடுத்த கதையைச் சொல்லுங்க. நாங்க நகர மாட்டோம். இல்லேட்டா யாரு ரத்தம் கக்கிச் சாவறது? அதுக்குல்லாம் தெம்பு இல்லை:-))))//

இதுக்கெதுக்கு ரத்தம் கக்கிச் சாகணும்? உள்ள வந்ததும் பாருங்க.. அந்தம்மா சொந்தங்கள் அலட்டுற அலட்டல்ல தானாவே..

உண்மைத்தமிழன் said...

//(அதே) நலம் விரும்பி said...
//நலம் விரும்பி ஸார்.. நானும் சும்மா இருக்கலாம்னுதான் பாக்குறேன். முடிய மாட்டேங்குது.. இப்ப எனக்கு வலைபோபியா புடிச்சுப் போச்சு.. கையையும், காலையும் கட்டிப் போட்டாத்தான் உண்டு..//
அதுக்குன்னு துக்ளக்ல இருந்துதான் ஸ்கேன் பண்னி போடணுமா? குமுதம், ஆனந்தவிகடன் ன்னு எத்தனை பொஸ்தவம் இருக்கு! அதுல இருந்து ஜோக் எல்லாம் ஸ்கேன் பண்ணி போட்டுத் தொலையேன்! வம்பை விலை கொடுத்து வாங்கியே தீருவேன்னு அடம்பிடிச்சா என்னதான் பண்ணுறது? அப்புறமா குத்துதே குடையுதேன்னு அலற வேண்டியது!//

ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும். அப்ப உங்களை மாதிரி நல்ல நாலு நலம் விரும்பிகள் துணையோட துணிஞ்சு எதிர்த்து நின்னுட்டா போகுது.. நன்றிங்கோ ஐயா..

உண்மைத்தமிழன் said...

//நலம் விரும்பி said...
எங்களுக்கெல்லாம் எழுதத் தெரியாமயா பேசாம இருக்கோம்! இல்லை பயந்துகிட்டுதான் பேசாம இருக்கமா! பிளாக் பக்கம் வர்ற நேரமே கொஞ்சம்தான்! அதுலகூட வம்பை இழுத்து விட்டுகிட்டு, அப்புறமா அவஸ்தைப் பட்டுகிட்டு, வேற எதுலயும் கான்சஸண்ட்ரேட் பண்ண முடியாம... எதுக்கு இதெல்லாம்! வந்தமா ரெண்டு கதை, (நீர் எழுதுறது எல்லாம் நாவல்) நெழுதினமா அதை வெச்சி கும்மியடிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேண்டாத அரசியல்! நல்லா யோசிச்சிப் பாருங்க!//

ஆ.. என் மனசை டச் பண்ணிட்ட முருகா.. டச் பண்ணிட்ட.. இதுல வம்புமில்ல.. தும்புமில்ல.. சில நட்டு கழன்ற பார்ட்டிக உள்ள வந்ததுனால வந்த வினை.. நீ இருக்கியே முருகா துணைக்கு.. அதுவே போதும்..

ஆமா.. முருகா.. நெசமா உன் மனசைத் தொட்டுச் சொல்லு.. நான் எழுதறதைப் பார்த்தா கதை மாதிரியா இருக்குது? அதுலேயும் நாவலா..? என் கதைய வைச்சுத்தான் நீ கும்மியடிக்கணுமா? வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறியே முருகா..

Anonymous said...

// சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. //

மனநோயாளிகிட்ட போய் யாராச்சும் மல்லுகட்டிகிட்டு இருப்பாங்களா!

அதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா?

எப்படியோ அனுபவிங்க!

என்ஜாய்!

Anonymous said...

//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//

நல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!

வேணாம்...! என்னை சொல்ல வெக்காதீங்க!

:(

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
// சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. //
மனநோயாளிகிட்ட போய் யாராச்சும் மல்லுகட்டிகிட்டு இருப்பாங்களா! அதுக்குத்தான் முன்னாடி ஒருத்தர் இருந்தார். இப்ப நீங்களா? எப்படியோ அனுபவிங்க! என்ஜாய்!///

மல்லு கட்டல சாமி.. கண்டுக்காமத்தான் போயிக்கிட்டிருக்கேன்.. அதென்ன எப்படியோ அனுபவிங்க.. என்ஜாய்ன்னு சொல்லிட்டு நீரு தப்பிக்கலாம்னு பாக்குதீயளா..? விட மாட்டேன்.. கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்..

Anonymous said...

///Anonymous said...
//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//

நல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது! வேணாம்...! என்னை சொல்ல வெக்காதீங்க! :(

Anonymous said...

தமிழ்நாடே எங்க தலைமையைத்தான் விரும்புது!

அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி!

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//ஐயா நலம்விரும்பியே.. பிளாக் எழுத வர்றது என்னோட விருப்பத்துக்காக.. எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் எழுதுவேன்.. நான் சொன்ன மாதிரியேதான் எழுதணும்னு சொன்னா.. சொல்றவன் கண்டிப்பா மனநோயாளிதான்.. இதுல வம்பை விலை குடுத்து வாங்குறதுன்றதுலதான் இல்லீங்கய்யா.. பொது வாழ்க்கைல இறங்கிட்டா இது மாதிரி எதிர்ப்புகள்லாம் வரத்தான் செய்யும்.//

நல்லதா கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது! வேணாம்...! என்னை சொல்ல வெக்காதீங்க! :( ///

சொல்லிரு சாமி.. ஏன் தொண்டைக்குழியோட முழுங்கிர்றே.. அதுல இருந்து ஒரு லைனை புடிச்சு பத்து பதிவு போட்டிர மாட்டேன்..

Anonymous said...

//கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்.. //

நாங்க இருப்போம் கடைசி வரைக்கும்!

பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா!

உண்மைத்தமிழன் said...

//கேப்டன் said...
தமிழ்நாடே எங்க தலைமையைத்தான் விரும்புது! அதுக்கு எங்களுக்கு கிடைச்ச இந்த 4000 அதிக ஓட்டுக்களே சாட்சி!//

உண்மைதான் கேப்டன்.. ரெண்டு கட்சிக்காரங்களும் வேணாம்னு நினைக்குறவுகளோட ஓட்டு உங்களுக்கு விழுந்து அதன் மூலமா உங்க கட்சிக்கான ஓட்டும் கூடிக்கிட்டே இருக்கு. இப்படியே கடைசிவரைக்கும் இருந்து ரெண்டு பேருக்கு பேதி மாத்திரை கொடுத்துக்கிட்டே இருங்க.. காலம் கைகூடி நிச்சயமா உங்க கைக்கு தங்க வளையல் கிடைக்காட்டியும், கண்ணாடி வளையலாச்சும் கிடைக்கும்...

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//கடைசி வரைக்கும் கூட இருக்கணுமாக்கும்.. //
நாங்க இருப்போம் கடைசி வரைக்கும்! பொறவு உம்ம நிலைமையப் பார்த்து சிரிக்க ஆள் வேணாமா!///

சரிங்க முருகா.. நீ சிரிக்காம யார் சிரிப்பா.. உன்னைச் சிரிக்க வைச்சப் புண்ணியமாச்சும் எனக்குக் கிட்டுமே..

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா இதுக்குப் பேரு கதையா..? இதை என் பதிவுல வேற போடணுமா? நீ நெசமாவே நலம் விரும்பித்தானா? கோபப்படாத கண்ணு.. இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்..

Anonymous said...

// இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்.. //

அதான் சொல்லலைன்னு சொன்னேன்!

திருப்பி கேட்டது யாரு?

Anonymous said...

//அதுல இருந்து ஒரு லைனை புடிச்சு பத்து பதிவு போட்டிர மாட்டேன்//

ஐய்யா!

புதுக்கதையை கருவா வெச்சி நம்ம அண்ணன் 10 பதிவு போடப் போறாராம்!

சூப்பர்!

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
// இந்த மாதிரி கதையெல்லாம் எனக்கு வேணாம்.. //
அதான் சொல்லலைன்னு சொன்னேன்! திருப்பி கேட்டது யாரு?///

தெரியாம கேட்டுப்புட்டேன் சாமி.. ஆமா.. இது மாதிரி அசைவக் கதையையெல்லாம் ஏன் படிக்கிறப்பூ.. மனசு கெட்டு, அதால உடம்பும் கெட்டுப் போயிரும்.. டெய்லி ராத்திரி தூங்கும்போது விபூதியைப் பூசிட்டுத் தூங்கு.. அப்புறம் கண்ட கண்ட பதிவு பக்கமெல்லாம் போகாத.. சரியாப்பூ..

Anonymous said...

//தெரியாம கேட்டுப்புட்டேன் சாமி.. ஆமா.. இது மாதிரி அசைவக் கதையையெல்லாம் ஏன் படிக்கிறப்பூ.. மனசு கெட்டு, அதால உடம்பும் கெட்டுப் போயிரும்.. டெய்லி ராத்திரி தூங்கும்போது விபூதியைப் பூசிட்டுத் தூங்கு.. அப்புறம் கண்ட கண்ட பதிவு பக்கமெல்லாம் போகாத.. சரியாப்பூ..
//

இதெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டது இல்லை!

கிராமத்துல கேட்டு தெரிஞ்சிகிட்டது!

Anonymous said...

நல்லாயிருக்கே ஞாயம்?, நாங்க இந்தமாதிரி அரசியல்வாதிய முதல்குடி மகளாக்கினாத்தான் நாளை போபர்ஸ் புகழ் சோனியா பிரதமராக முடியும்.......அன்பழகன் துணை ஜனாதிபதி ஆகமுடியும்......

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இதெல்லாம் படிச்சி தெரிஞ்சிகிட்டது இல்லை! கிராமத்துல கேட்டு தெரிஞ்சிகிட்டது!//

யார்கிட்ட முருகா.. இதையெல்லாமா அங்கன சொல்லித் தர்றாக..? ஆச்சரியம்தான் போ..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
நல்லாயிருக்கே ஞாயம்?, நாங்க இந்தமாதிரி அரசியல்வாதிய முதல்குடி மகளாக்கினாத்தான் நாளை போபர்ஸ் புகழ் சோனியா பிரதமராக முடியும்.......அன்பழகன் துணை ஜனாதிபதி ஆகமுடியும்......//

இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய 'பெண்ணியத்தை உயர்த்திய' நாடகம்..

Anonymous said...

//இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய 'பெண்ணியத்தை உயர்த்திய' நாடகம்//

நன்றி உ.தமிழர்....இன்னும் ஒண்ணு, கனிமொழி அமைச்சராக்கப்பட வேண்டுமே.....

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//இன்னொன்னை விட்டுப்புட்டீகளே அனானி.. அருமைப் புதல்வன், பட்டத்து இளவரசன், திராவிடத்தின் ஒரே வாரிசு ஸ்டாலின் முதல்வராக முடியும்.. அதுக்குத்தான இம்புட்டுப் பெரிய 'பெண்ணியத்தை உயர்த்திய' நாடகம்//
நன்றி உ.தமிழர்....இன்னும் ஒண்ணு, கனிமொழி அமைச்சராக்கப்பட வேண்டுமே.....///

அனானி, இது 'புருஷோத்தம நாடகத்தின்' ஒரு பகுதி.. அது 'பெண்ணியத்தை உயர்த்திய' நாடகம்.. இரண்டு நாடகத்திற்கும் பொருத்தமான ஒரு அம்சம், கூட்டணியில் பலம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்ற மிரட்டல்..

Anonymous said...

//அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..//

இது மேட்டரு தலீவா.. சொல்ல வந்ததை இதுலேயே சொல்லியாச்சு. அப்புறம் எதுக்கு பத்து பக்கத்துக்கு கட்டுரை..? முடியல தலீவா.. கொஞ்சம் கருணை காட்டு..

Anonymous said...

Dear unmaithamizhan,

You really have lots of patience. At the same time I understand your concern towards our society. The obvious thing is we can not do anything other than writing in blogs. Anyways, keep it up...and Im a regular reader of your blog.

Good Luck.

Anonymous said...

dear unmai tamilan,
Thanks for your detailed information about pradeepa...next president. very useful. Making comments are easy. yes. we reject pradeepa...then whom you suggest...hindu fanatic sheghavat... a very good tourist abdul kalam...
who?
president post is total humbug, foolish like the present british queen.
media, social activists, intellectuals, people... weast their time to discuss about this issue.
But one thing is clear, Sonia plans to have another rubber stamp other than manmohan.
Anyway till now we have only dumb presidents. Hereafter, we will have a joker in president chair Nomore vadivel, goundamani are needed.
Budhan

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Dear unmaithamizhan, You really have lots of patience. At the same time I understand your concern towards our society. The obvious thing is we can not do anything other than writing in blogs. Anyways, keep it up...and Im a regular reader of your blog. Good Luck.//

நன்றி நண்பரே.. நம்மால் எழுதத்தான் முடியுமே தவிர, வேறு எதையும் செய்ய இயலாது. சாமான்யர்களால் இதுதான் முடியும் நண்பரே.. முடிந்த அளவுக்கு நம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வோமே.. இதுவும் மக்களின் எதிர்ப்பு வகைகளில் ஒன்றுதான்..

உண்மைத்தமிழன் said...

//budhan said...
dear unmai tamilan, Thanks for your detailed information about pradeepa...next president. very useful. Making comments are easy. yes. we reject pradeepa...then whom you suggest...hindu fanatic sheghavat... a very good tourist abdul kalam... who?//

புத்தன் ஸார், ஏன் அப்துல்காலமை டூரிஸ்ட் என்கிறீர்கள். குறைந்தபட்ச நியாயவானாக நடந்து கொண்டிருக்கிறாரே.. அது போதாதா? 100 சதவிகிதம் நேர்மையாளராக நாம் இந்தக் காலத்தில் எந்தவொரு மனிதரையும் எதிர்பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது தன் சுற்றத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்திருந்த அப்துல்கலாம் ஏன் மீண்டும் வரக்கூடாது?

president post is total humbug, foolish like the present british queen. media, social activists, intellectuals, people... weast their time to discuss about this issue.

வேஸ்ட்தான்.. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே.. என்ன செய்ய? இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்று அப்துல்கலாம் கேட்டதற்குத்தான் நாகரிகமாக வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

But one thing is clear, Sonia plans to have another rubber stamp other than manmohan.

இது கன்னியாகுமரில இருந்து காஷ்மீரைத் தாண்டி இஸ்லாமாபாத்வரைக்கும் தெரிஞ்ச விஷயம்ண்ணேன்..

Anyway till now we have only dumb presidents. Hereafter, we will have a joker in president chair No more vadivel, goundamani are needed.
Budhan

அதேதான்.. இனி வரப் போகிறவர்கள் செய்யப் போகின்ற அரசியல் காமெடி கவுண்டமணி-செந்தில் ஜோடியையே தோற்கடிக்கச் செய்யும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

பதிவுக்கு எனது நன்றி புத்தன்..

gullycan said...

வணக்கம் அண்ணா,
2011 வாழ்த்துக்கள்,
ரொம்ப நாளைக்கு பின்னர் ---
உங்களை வாசிப்பதால், அறிவுக்கு புத்துயிர் கிடைக்கின்றது ---
காய்க்கும் மரத்திற்கே கல்லெறி என்பர் ---
நீடூழி எழுத்துவன்மை வாழ்க ---
benedict aloysius
sri lanka

abeer ahmed said...

See who owns forget-flowers.co.uk or any other website:
http://whois.domaintasks.com/forget-flowers.co.uk

pushparaj said...

தமிழ் புத்தாண்டு பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல் கொண்டுள்ளேன்.வரலாற்று உண்மைகளை உண்மைதமிழன் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

உண்மைத்தமிழன் said...

[[[gullycan said...

வணக்கம் அண்ணா,
2011 வாழ்த்துக்கள்,
ரொம்ப நாளைக்கு பின்னர் ---
உங்களை வாசிப்பதால், அறிவுக்கு புத்துயிர் கிடைக்கின்றது ---
காய்க்கும் மரத்திற்கே கல்லெறி என்பர் ---
நீடூழி எழுத்துவன்மை வாழ்க ---
benedict aloysius
sri lanka]]]

மிக மிக தாமதமான நன்றிகள்.. மன்னிக்கவும் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[pushparaj said...

தமிழ் புத்தாண்டு பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல் கொண்டுள்ளேன். வரலாற்று உண்மைகளை உண்மைதமிழன் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...]]]

செஞ்சிருவோம்..!