03-07-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே...
திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் மூன்றாம் பாகம் இது..
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், "அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு.." என்பதை எல்லோருமே மறந்து விடுவதுதான்.
இணையதளத்தில் பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில், 'பிரதிபா, மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்' என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி அனைவரும் எழுத ஆரம்பித்ததும், "அவருக்கு 1994 முதல் அந்த வங்கியிடுன் தொடர்பு ஏதும் கிடையாது.." என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.
'ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர்' என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலை பற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது, "அவருக்கும், சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தமே இல்லை.." என்று..
கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப் பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.
பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் வைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான்தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார். அவர் எப்படித் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும், அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.
ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும், உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸார் அவற்றையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு பிரேதபரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படித் தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள்? ஊதியம் தராமலும், பள்ளிக்கூடச் சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து, கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.
கிசான்தாகே உயிரோடு இருந்தபோது பட்டத் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக தேர்வெழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாகக்கூறி தொலைதூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்திற்கு அவரை மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலை பார்க்குமாறு கூறினர்.
அமராவதி நகரில் உள்ள சமூக நலத்துறை அதிகாரிக்கு இது பற்றி கடிதம் எழுதினார் தாகே. "ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல்.." என்று சமூக நலத்துறை அதிகாரி 1998, ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.
இதற்கிடையே மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998, ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார் தாகே. தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ம் தேதி நாகபுரி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது.
அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்தக் கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்தச் சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையே வீட்டில் உள்ள பண்டம், பாத்திரங்களையும், மனைவியின் நகைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் பாராமுகமாக இருந்துவிட்டனர்.
மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தாகேவைச் சிறுமைப்படுத்தியது.. வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது. பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது. மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை எதிர்மனுக்கள் மூலம் தாமதம் செய்தது என எல்லாவற்றையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
"இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது. போலீஸார் உரிய வகையில் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.." என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள் ஊதியமே இல்லாமல் 3 ஆண்டுகள் தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ.நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு பள்ளிக்கூட நிர்வாகத்தை கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. "தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது. எனவே இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." என்று தீர்ப்பளித்தார். அது 2005, ஜூலை 22-ல் வெளியானது.
அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத்தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் வருங்கால முதல் குடிமகளின் கணவர், அவ்வளவு லேசுப்பட்ட ஆளா? அந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
சமூக நலத்துறை அதிகாரி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல் ஒரு தீர்ப்பை அளித்தார்.
"இந்தத் தற்கொலை வழக்கில் சந்தர்ப்பச் சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன. அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல.." என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை.
ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்குமிங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார்.
இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத் குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?
நான்காம் பாகம்
|
Tweet |
29 comments:
ஸ்டார்ட் அதர் ஆப்ஷன்
ஆக்சன்
கும்மி
டண்டனக்க டனக்கு னக்க
நேற்றையப் பதிவில் நீங்கள் எங்கள் கும்மி அனானிகளிடம் பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் இடுகின்றனர் என்று வருத்தப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து மிக்க சந்தோசம் அடைந்தோம்.
நாங்க எல்லாம் உங்க பதிவைப் படிக்காம பின்னூட்டம் போகக் காரணம் ஏற்கனவே துக்க(ம்)லக் , தினமணி படிச்சுடுறதுதான்... அங்க பின்னூட்டம் போட்டு கும்ம முடியாது.. சோ இங்கே.. பிளீஸ் பிளீஸ் அண்ணா எங்களை கும்மி அடிக்க அனுமதிங்க
பின்னூட்டங்களை வெளியிடாமல் கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் உ.த வை கண்டிக்கிறேன்
நீங்க எவ்வளவு தான் காபி பேஸ்ட் பண்ணாலும் பிரதீபா தான் அடுத்த ஜனாதி"பதி" ???
ஆமாம் ஜனாதிபதி யின் பெண்ணுக்கான பெயர்ச்சொல் என்ன ??
அருமையான ஒரு கருத்தை நீங்கள் மக்களிடம் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள்.
இங்கிருக்கும் பல கருத்துக்களுக்கு பதில் இல்லை. நம் மக்களாட்சியின் இன்றைய பரிதாப நிலை இது.
தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
திசை திருப்பும், கேலி செய்யும் பின்னூட்டங்களை பொருட்படுத்த வேண்டாம்!
Anonymous said...
அருமையான ஒரு கருத்தை நீங்கள் மக்களிடம் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள்.
திசை திருப்பும், கேலி செய்யும் பின்னூட்டங்களை பொருட்படுத்த வேண்டாம்! //
உ. த இது உங்களுக்கே நீங்கள் போட்டுக் கொண்ட பின்னூட்டம் என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்துள்ளது
//Anonymous said...
அருமையான ஒரு கருத்தை நீங்கள் மக்களிடம் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள்
//
அய்யா அனானி பாராட்டுறதை பேரைப் போட்டு வந்து சொல்ல வேண்டியதுதானே!!!
நாங்கதான் இங்க கும்மி அடிக்கிறோம்...அதுல என்ன ஒரு உள்குத்து வைத்து அ.மு.க வை கிண்டலடிப்பது
கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டமாக
இருகின்றது.
என்னதான் அறிவியல் முன்னேற்றம் கணடாலும்....ஹூம் சில பதிவுகளைப் படித்தால் பேசாமல் இணைய இணைப்பை தூண்டித்து விடலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் உண்மைத் தமிழனின் பதிவில் நாகரிகமான எழுத்துக்கள் தென்பட்டதால்
என் உள்ளக் குமறலைக் கொட்டிவிட்டேன்.இதற்கும் உண்மைத் தமிழனை அர்ச்சித்தால் பரவாயில்லை உண்மைத் தமிழன், ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் கூறுவது சரியே பிரதீபா விஷ்யத்தில்....
அருமை அனானிகளே.. எனக்கு ஒரு விஷயம்தான் புரியல.. எந்நாளும் இல்லாத திருநாளா நமக்கு நேத்துல இருந்து ஒரே அனானி கமெண்ட்டாத்தான் வருது.. பிளாக்கர்ஸ் பேர்ல எதுவும் வர மாட்டேங்குது..
சம்திங்ராங்..?
//இதற்கும் உண்மைத் தமிழனை அர்ச்சித்தால் பரவாயில்லை உண்மைத் தமிழன், ஏற்றுக் கொள்ளுங்கள்.
//
உண்மைத்தமிழன் இது எல்லாம் "அண்ணனுக்கு ஹார்லிக்ஸ்" ன்னு சொல்லி தள்ளி விட்டு போறவங்க.. ஜாக்கிரதை... ஹிஹி
அனானி நெவர் மைண்ட்...ஜஸ்ட் கிட்டிங்... நம்ம உ.த எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு
உண்மைத்தமிழன்,
பிளாக்கர்ஸ் எல்லாம் உங்க பேரைக் கேட்டாலே அதிர்றாங்களாம்...
உண்மைத்தமிழன்,
சாரி கொஞ்சம் வேலை வந்துடுச்சு, அப்புறம் வந்து கும்மி அடிக்கிறேன்
//
சம்திங்ராங்..?
//
நத்திங்ராங்
காபி பேஸ்ட் பண்ணாம ஒங்க சொந்த படைப்பை பதிவா போடுங்க பிளாக்கர்ஸ் கமெண்ட் வரும்
இல்ல அது வரைக்கும் அனனி கமெண்ட்ஸ் தான்
எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்
இன்னமும் உங்களுக்கு பெட்ரோல் பாம் வரலயா....
நாடு ரொம்ப கெட்டுபோச்சு
அண்னே உண்மைத்தமிழன்
உங்க சரக்கு தீர்ந்தடிச்சு அதான் காபி பேஸ்ட் போட்டு மொக்கை போடுறிங்கனு பரவலா ஒரு பேச்சு அடிபடுதே அது உண்மைங்களா???
////
நத்திங்ராங்
காபி பேஸ்ட் பண்ணாம ஒங்க சொந்த படைப்பை பதிவா போடுங்க பிளாக்கர்ஸ் கமெண்ட் வரும்
இல்ல அது வரைக்கும் அனனி கமெண்ட்ஸ் தான்
எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய் ////
ஆமாங்க ஆமாம்
//// அருமை அனானிகளே.. எனக்கு ஒரு விஷயம்தான் புரியல.. எந்நாளும் இல்லாத திருநாளா நமக்கு நேத்துல இருந்து ஒரே அனானி கமெண்ட்டாத்தான் வருது.. பிளாக்கர்ஸ் பேர்ல எதுவும் வர மாட்டேங்குது..
சம்திங்ராங்..?///
டெபனிட்லி. உங்களை குறிவைத்து நடக்கும் பல விரும்பத்தகாத நிகழ்ச்சிகளின் பின் புலத்தை நன்றாக அறிந்தவர்கள் நம் பிளாக் மக்கள். அவர்கள் அருவருக்கும் நடவடிக்கை கொண்டு தங்கள் தோழர்களாக இரட்டை வேடம் போடும் அதிர்ஷ்டக்காரர்கள். அதனால், அவர்கள் பார்வையிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது. அதனாலேயே, நாங்கள் பெயர் போட தயங்குகிறோம். மற்றபடி நான் நீங்கள் நன்கு அறிந்த..
//
டெபனிட்லி. உங்களை குறிவைத்து நடக்கும் பல விரும்பத்தகாத நிகழ்ச்சிகளின் பின் புலத்தை நன்றாக அறிந்தவர்கள் நம் பிளாக் மக்கள். அவர்கள் அருவருக்கும் நடவடிக்கை கொண்டு தங்கள் தோழர்களாக இரட்டை வேடம் போடும் அதிர்ஷ்டக்காரர்கள். அதனால், அவர்கள் பார்வையிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பதே நல்லது. அதனாலேயே, நாங்கள் பெயர் போட தயங்குகிறோம். மற்றபடி நான் நீங்கள் நன்கு அறிந்த..
//
அய்யோ அனனி வந்து ஒரு குண்டை தூக்கி போடுதே
இனிமே உங்க பதிவுக்கு அனனியாவே வர்றேன் தல
என்ன செயவது?தமிழ் இணையத்தில் கொஞ்சி விளையாடுவதால் ஒரு முன் ஜாக்கிரதை உணர்வு தான்....
அனானி நாமம் வாழ்க!!!!
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அருமை அனானிகளே.. எனக்கு ஒரு விஷயம்தான் புரியல.. எந்நாளும் இல்லாத திருநாளா நமக்கு நேத்துல இருந்து ஒரே அனானி கமெண்ட்டாத்தான் வருது.. பிளாக்கர்ஸ் பேர்ல எதுவும் வர மாட்டேங்குது..
சம்திங்ராங்..?
Nan comment potuten pothuma, aana ungaloda pathivu innum patikala sikiram padichitu apparam tirumba vanthu comment poduren.
//இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத் குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?//
இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.கணவர் செய்யும் குற்றங்கள் எல்லாம் மனைவியை ஒன்றும் செய்யாது.சிபு சோரன் போன்று நேரடிக் குற்றவாளிகளே அமைச்சராகும்போது இதெல்லாம் சர்வ சாதாரணம். 2020 ம் நாம் இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்போம்.
குயவர்கள் ஒன்றுகூடி விமானம் தயாரிக்க முடியாது.அவர்களால் என்ன முடியுமோ அதையே அரசியல் தலைவர்கள் செய்துள்ளார்கள்.இவர்களால் இந்த அளவு நல்லவரையே அடையாளம் காண முடிந்தது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு நல்லவர்கள்,குற்றமே செய்யாதவர்கள் தான் வர வேண்டும் என்று ஏதேனும் சட்டம் உள்ளதா?
உண்மைத் தமிழன்,
ஹைதர் அலி காலத்தில் நடந்தது, தாத்தா சின்னப்புள்ளையா இருக்கும்போது நடந்தது போன்ற இந்த சமாச்சாரங்களை எழுதுகிறீர்களே...
மதுரை தினகரன் விசயம் நடந்து 30 நாட்கள் கழித்து நடந்த தேர்தலில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியதா? 75 % ஓட்டுகள் பதிவாகியுள்ளது.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற அளவிலேயே மக்கள் உள்ளனர்.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் குறைந்த பட்சம் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று "ஓ" போட்டு எதிர்ப்பை காட்டியிருக்கலாமே?
அரசியல் கட்சிகளைத் தவிர மக்கள் பொதுப் பிரச்சனைக்காக கூடுவது இல்லை. :-((( இப்படிப்பட்ட மக்களை வைத்துக் கொண்டு என்ன எழுதியும் பிரயோசனம் இல்லை. களத்தில் இறங்கி ஒரு வார்டு மக்களையாவது திருத்தினால் புண்ணியம். ஆனால் நிச்சயம் நமது உயிரை விலையாகக் கொடுக்கவேண்டும்.
//சந்தேகம் கேட்பவன் said...
அண்னே உண்மைத்தமிழன் உங்க சரக்கு தீர்ந்தடிச்சு அதான் காபி பேஸ்ட் போட்டு மொக்கை போடுறிங்கனு பரவலா ஒரு பேச்சு அடிபடுதே அது உண்மைங்களா???//
தம்பீ.. இந்த விஷயம் முழுசா தெரிஞ்சிருக்கணும்னா நான் மும்பைல பிறந்து வளர்ந்தவனா இருக்கணும்.. இல்ல முன்னாடியே அதைப் பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அதுக்கான வாய்ப்பே இல்லையே தம்பி..
எல்லாருமே பத்திரிகைல வர்ற நியூஸை அடிப்படையா வைச்சுத்தான் தெரியாத விஷயங்களை எழுத முடியும். நானும் இதை அப்படியே எழுதியிருக்கலாம். ஆனால் எப்படி எழுதுறது? 20 பாகம் வந்திராது? உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தக்கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான் காப்பி பேஸ்ட் பண்றேன்.. இது எல்லாமே நீங்க கேள்விப்படாத விஷயம்தானே.. அப்புறமென்ன? சந்தோஷப்பட்டுக்க தம்பி..
//இம்சை said...
Nan comment potuten pothuma, aana ungaloda pathivu innum patikala sikiram padichitu apparam tirumba vanthu comment poduren.//
இம்சை.. நிசமாவே நீ இம்சைதான்யா..
//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.கணவர் செய்யும் குற்றங்கள் எல்லாம் மனைவியை ஒன்றும் செய்யாது.சிபு சோரன் போன்று நேரடிக் குற்றவாளிகளே அமைச்சராகும்போது இதெல்லாம் சர்வ சாதாரணம். 2020 ம் நாம் இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்போம்.
குயவர்கள் ஒன்றுகூடி விமானம் தயாரிக்க முடியாது.அவர்களால் என்ன முடியுமோ அதையே அரசியல் தலைவர்கள் செய்துள்ளார்கள்.இவர்களால் இந்த அளவு நல்லவரையே அடையாளம் காண முடிந்தது.//
பலூன் மாமா.. நான்கு திருடர்கள் ஒன்று கூடி சங்கம் வைத்தால் இன்னொரு திருடனைத்தான் தங்களக்குத் தலைவராக கொண்டு வருவார்கள். அதைத்தான் சோனியா அம்மா செய்திருக்கிறார். நீங்களும் இதே கருத்தோடு வந்தமைக்கு எனது நன்றி..
//குடியரசுத் தலைவர் பதவிக்கு நல்லவர்கள்,குற்றமே செய்யாதவர்கள் தான் வர வேண்டும் என்று ஏதேனும் சட்டம் உள்ளதா?//
பஞ்சாயத்து போர்டு உறுப்பினருக்கே அது மாதிரியான சட்டம் இல்லை.. தண்டனை பெற்றிருந்தால் மட்டும்தான் பிரச்சினை.. ஆனால் இடையில் அப்துல்கலாம் வந்து உட்கார்ந்து ஒரு முன் மாதிரியை ஏற்படுத்திவிட்டதால்தான் இவ்ளோ பிரச்சினை. அடுத்த முறையும் அவரை மாதிரி ஒரு பொது வாழ்வில் நேர்மையானவர் வர மாட்டாரா என்ற ஏக்கத்தை அனைவருக்குள்ளும் ஏற்படுத்திவிட்டது. அதுதான் இப்போதைய பிரச்சனை..
//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
உண்மைத் தமிழன்,
ஹைதர் அலி காலத்தில் நடந்தது, தாத்தா சின்னப்புள்ளையா இருக்கும்போது நடந்தது போன்ற இந்த சமாச்சாரங்களை எழுதுகிறீர்களே...//
இஇல்லை பலூன் மாமா. இது 1998-ல் தான் நடந்துள்ளது. ஆனால் நடந்த ஒரு கொடுமைக்கு இன்னும் போலீஸ் விசாரணைகூட ஆரம்பிக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. அதிலும் உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும்கூட.. அரசியல்வாதிகளைவிட நீதி உயர்ந்ததா? அல்லது நீதியைவிட அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயர்ந்ததா?
//மதுரை தினகரன் விசயம் நடந்து 30 நாட்கள் கழித்து நடந்த தேர்தலில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியதா? 75 % ஓட்டுகள் பதிவாகியுள்ளது.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற அளவிலேயே மக்கள் உள்ளனர்.தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் குறைந்த பட்சம் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று "ஓ" போட்டு எதிர்ப்பை காட்டியிருக்கலாமே?//
மதுரை என்றில்லை. இந்தியா முழுக்கவே தேர்தல் என்பது பெண்களுக்கு தங்களுடைய உரிமையை வெளிப்படுத்த ஒரு ஆவணம். சந்தர்ப்பம். அதை அவர்கள் வரும் காலங்களில் நழுவவிட மாட்டார்கள். அதிலும் பக்கத்து வீட்டில் சாவு நிகழ்ந்திருந்தும்கூட கதவைச் சாத்திக் கொண்டு டிவி பார்க்கின்ற அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. அப்படியிருக்க.. யாரோ ஒருவருக்காக தங்களது தொகுதியில் அதை பிரதிபலிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அவர்களுக்குத் தேவை.. அவர்கள் குடும்பத்திற்குத் தேவையானது வேண்டும். அவ்வளவுதான்.. கொடுத்தால் சரி என்பார்கள். கொடுக்காவிட்டால் இல்லை என்பார்கள். அவ்வளவுதான் மேட்டர்.
//அரசியல் கட்சிகளைத் தவிர மக்கள் பொதுப் பிரச்சனைக்காக கூடுவது இல்லை. :-((( இப்படிப்பட்ட மக்களை வைத்துக் கொண்டு என்ன எழுதியும் பிரயோசனம் இல்லை. களத்தில் இறங்கி ஒரு வார்டு மக்களையாவது திருத்தினால் புண்ணியம். ஆனால் நிச்சயம் நமது உயிரை விலையாகக் கொடுக்கவேண்டும்.//
நீங்களே சொல்லிவிட்டீர்கள். மக்களுக்காக உயிரை இழந்து போராட்டம் நடத்தி ஜெயிக்க எந்தத் தலைவரும் முன் வருவதில்லை. அவரவர் குடும்பத்திற்கு சொத்து சேர்க்கவே வருகிறார்கள். வந்துள்ளார்கள். அதில் நடக்கும் போராட்டத்தில் மட்டுமே அவர்கள் தொண்டர்களின் உயிரை பலி கொடுக்கவும் தயாராக உள்ளார்கள். எழுதி ஒரு புண்ணியமும் இல்லைதான். ஆனால் எழுத்து என்பது பேச்சுரிமையின் ஒரு அங்கம்தானே. நமக்கு மேடை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால் எழுதி நமது எதிர்ப்புகளை பதிவு செய்கிறோம். சந்தோஷம்தானே..
ஓட்டுப்போட போகும் நம் MP கள் படிப்பார்களா/யோசிப்பார்களா?
//வடுவூர் குமார் said...
ஓட்டுப்போட போகும் நம் MP கள் படிப்பார்களா/யோசிப்பார்களா?//
படிக்காம.. மனப்பாடமே பண்ணிருப்பாங்க.. ஆனால் என்ன? அவுங்களும் அப்படி ஆளுங்கதான.. அதுனால கூட்டத்தோட சேர்ந்து கோவிந்தா போடத் தயாரா இருக்காங்க.. அவுங்களுக்கு கட்சியும், பதவியும்தான முக்கியம்..? கட்சி இல்லைன்னா பதவிக்கு வர முடியுமா? பதவிக்கு வர முடியலைன்னா சம்பாதிக்க முடியுமா? சம்பாதிக்க முடியலைன்னா எப்படி சீக்கிரமா பணக்காரனாகுறது..? அதுனால கட்சி உத்தரவுக்கு கண்ணை மூடிக் கொண்டு கீழ்ப்படிவார்கள்.
See who owns makershed.com or any other website:
http://whois.domaintasks.com/makershed.com
Post a Comment