தி.மு.க.வை முந்திய அ.தி.மு.க...!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தலைப்பைப் பார்த்தவுடன் அவசரமாக கிளிக்கிவிட்டு உள்ளே வந்திருக்கும் அன்புத் தோழர்களே.. இது கண்டிப்பாக செம மொக்கைப் பதிவுதான்..! மன்னியுங்கள்..!

இந்தத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையில் முந்திய அ.தி.மு.க. இன்னுமொரு விஷயத்திலும் முந்தியுள்ளது. அதைப் பற்றியானதுதான் இந்தப் பதிவு..!

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள், ஆமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டும், டில்லியிலிருந்தும் செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

679 வேட்பாளர்களில் 125 பேர் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளதும், இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரிய வந்துள்ளன. இந்த வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரராகவும் உள்ளனராம்.

தி.மு.க., சார்பில் போட்டியிடும் 119 பேரில், 24 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளனர்.

பா.ம.க. சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தே.மு.தி.க.வின் வேட்பாளர்களில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 63 பேரில், 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 169 வேட்பாளர்களில், 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில், 3 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 3 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 1 நபர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களில்  43 பேர்  மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

இதுதான் இந்தப் பட்டியலில் அதிகம்..!

ஆக மொத்தம் தி.மு.க.வை இந்த ஒரு விஷயத்திலாவது அ.தி.மு.க. முந்தியிருக்கிறது என்று ரத்தத்தின் ரத்தங்கள் நிச்சயம் பெருமைப்படலாம்..!

கிரிமினல் பின்னணியில், நாகப்பட்டினம் பி.ஜே.பி. வேட்பாளர் முருகானந்தம்தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் மீது சீரியஸ் வழக்குகள் 13, ஐ.பி.சி. வழக்குகள் 34 உள்ளன. இவற்றில் 5 கொலை முயற்சி வழக்குகளும், பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக 3 வழக்குகளும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தலா ஒரு வழக்கும் உள்ளன!


அடுத்த இடத்தை ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளர் ஜெ.குருநாதன் என்ற காடுவெட்டி குரு பிடிக்கிறார். இவர் மீது சீரியஸ் ஐ.பி.சி. கேஸ் 8, சாதாரண ஐ.பி.சி. வழக்குகள் 38 உள்ளன. இதில் ஒரு கொலை முயற்சி வழக்கு, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக 3 வழக்குகள், ஆபாசமாகப் பேசியதாக 2 வழக்குகள் உள்ளன!

அந்தியூர் தி.மு.க. வேட்பாளர் என்.கே.பி.பி.ராஜா மீது திருட்டு தொடர்பான 2 வழக்குகள் (ஐ.பி.சி. செக்ஷன் 379), அவதூறாகப் பேசிய 2 வழக்குகள், கடத்தல் தொடர்​பான ஒரு வழக்கு, பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கு ஆகியவை நிலுவையில்!

பட்டுக்கோட்டை தே.மு.தி.க. வேட்பாளர் என்.செந்தில்​குமார் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகளும், பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது.

ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், மற்றும் பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளன.

திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி மீது இரு தரப்பினர் இடையே பகைமையைத் தூண்டியது உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. (தாத்தாவின் இத்தனை வருட சர்வீஸ்ல 3 கேஸ்தானா..?)

ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா மீது சீரியஸ் ஐ.பி.சி. வழக்குகள் எதுவும் இல்லை என்றாலும், அவதூறு, சொத்துக் குவிப்பு உள்ளிட்ட 8  வழக்குகளும் உள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைள்

26 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லில சப்மிட் பண்ணுங்க...

Indian Share Market said...

ஆகவே அனைவரும், மனைவி மட்டும் அல்ல துணைவி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவிக்கட்டும். ௧௩13 தேதி ஓட்டு போட மறந்து, கே(கோ)டீஸ்வரர்களை உருவாக்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.

pichaikaaran said...

இன்னுமொரு கட் பேஸ்ட் பதிவா என ஆர்வமில்லாமல் படிக்க தொடங்கினேன் . கடைசி இரண்டில் முத்திரை பதித்துவிட்டீர்கள் .

அமைதி அப்பா said...

நோ கமெண்ட்ஸ்!

Unknown said...

ஏன் இந்த பதிவு மட்டும் சின்னதா இருக்கு. ஏதாவது வேண்டுதலா

Unknown said...

திரு. உண்மைதமிழன்.

நாகப்பட்டிணம் வேட்பாளர் திரு. முருகானந்தம் துணிச்சல்காரர், ஆனால் அடாவடி பேர்வழியல்ல. அவர் ஒவ்வொரு வருடமும் முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எதிர்ப்புகிடையில் நடத்தி வருகிறார். பெரும்பாலானவை காவல் துறையால் போடப்பட்ட பொய் வழக்குகளே! பழகுவதற்க்கு இனியவர், பண்பாளர். நான் இவருக்கு உறவுக்காரனோ, நன்பனோ இல்லை. பக்கத்து தாலுகா மதுக்கூரை சேர்ந்தவன். ம.தி.மு.க தொண்டன்.

அன்புடன்,
மதுமணி,

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே....]]]

ஏதோ பெரிய ஆஸ்கார் ரேஞ்ச்சுக்கு கொண்டு போறீங்களே மனோ..?

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லில சப்மிட் பண்ணுங்க.]]]

பண்ணிட்டேன் மனோ..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
ஆகவே அனைவரும், மனைவி மட்டும் அல்ல துணைவி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவிக்கட்டும். 13 தேதி ஓட்டு போட மறந்து, கே(கோ)டீஸ்வரர்களை உருவாக்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.]]]

எவ்வளவுதான் புதுசு புதுசா வந்தாலும், அவங்களும் கொள்ளையோ கொள்ளைன்னு அடிச்சிர்றாங்களேப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

இன்னுமொரு கட் பேஸ்ட் பதிவா என ஆர்வமில்லாமல் படிக்க தொடங்கினேன். கடைசி இரண்டில் முத்திரை பதித்துவிட்டீர்கள்.]]]

கட்-பேஸ்ட்டாக இருந்தாலும் மேட்டர் என்னன்னு பாருங்க பார்வை..!

உண்மைத்தமிழன் said...

[[[அமைதி அப்பா said...

நோ கமெண்ட்ஸ்!]]]

இப்படியொரு பெயரா..? முதல் வருகைக்கு எனது நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

ஏன் இந்த பதிவு மட்டும் சின்னதா இருக்கு. ஏதாவது வேண்டுதலா?]]]

அண்ணே.. அந்தப் பத்திரிகைகளிலேயே இவ்ளோதான் எழுதியிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுக்கூர் மணி.. said...

திரு. உண்மைதமிழன்.
நாகப்பட்டிணம் வேட்பாளர் திரு. முருகானந்தம் துணிச்சல்காரர், ஆனால் அடாவடி பேர்வழியல்ல. அவர் ஒவ்வொரு வருடமும் முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை எதிர்ப்புகிடையில் நடத்தி வருகிறார். பெரும்பாலானவை காவல் துறையால் போடப்பட்ட பொய் வழக்குகளே! பழகுவதற்க்கு இனியவர், பண்பாளர். நான் இவருக்கு உறவுக்காரனோ, நன்பனோ இல்லை. பக்கத்து தாலுகா மதுக்கூரை சேர்ந்தவன். ம.தி.மு.க தொண்டன்.

அன்புடன்,
மதுமணி,]]]

தகவலுக்கு நன்றிகள் ஸார்..!

இது விஷயமாக உண்மைகள் நீதிமன்றத்தின் மூலம்தான் நிரூபிக்கப்படுதல் வேண்டும்.. இப்போதெல்லாம் போலீஸார் போடுகின்ற வழக்குகளில் முக்கால்வாசி பொய்கள்தானே..?

ராஜ நடராஜன் said...

//இன்னுமொரு கட் பேஸ்ட் பதிவா என ஆர்வமில்லாமல் படிக்க தொடங்கினேன் . கடைசி இரண்டில் முத்திரை பதித்துவிட்டீர்கள் //

இப்படியாவது செய்தி சொல்கிறாரே என்று சந்தோசபடுங்க...

உங்க எதிர்பார்ப்புக்கெல்லாம் சி.ஐ.டி சரவணன்னு பேர் இருந்தால்தான் முடியும்:)

Sailash said...

ஆம் என்னக்கு கூட திரு முருகானந்தம் பற்றி தெரியும் , அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் உள்ளன , அத்துணையும் அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதால் , சில பத்வா வும் உள்ளன அவரை கொள்ள , அவரை கொள்ள கொலை முயற்சி மூன்று தடவை நடந்தது . அவர் போலீஸ் மிரட்டலையும் மீறி ஊர்வலம் நடத்துவதால் , அவர் மீதி ஏராள பொய் வழக்கள் போடப்பட்டு உள்ளன.

Santhosh said...

//இது விஷயமாக உண்மைகள் நீதிமன்றத்தின் மூலம்தான் நிரூபிக்கப்படுதல் வேண்டும்.. இப்போதெல்லாம் போலீஸார் போடுகின்ற வழக்குகளில் முக்கால்வாசி பொய்கள்தானே..?//

அப்படின்னா அதை ஏன் ஒரு அளவு கோலாக்கி பதிவா போடணும்...வர வர நீங்க ரொம்ப சரியில்லை அண்ணே.

மு.சரவணக்குமார் said...

கலைஞரை எதிர்த்து நிக்கறவர் மேல கூட நிறைய வழக்குகள் இருக்கறதா சொல்றாங்களே!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//இன்னுமொரு கட் பேஸ்ட் பதிவா என ஆர்வமில்லாமல் படிக்க தொடங்கினேன் . கடைசி இரண்டில் முத்திரை பதித்துவிட்டீர்கள் //

இப்படியாவது செய்தி சொல்கிறாரே என்று சந்தோசபடுங்க. உங்க எதிர்பார்ப்புக்கெல்லாம் சி.ஐ.டி சரவணன்னு பேர் இருந்தால்தான் முடியும்:)]]]

சி.ஐ.டி. சரவணன். பேர் நல்லாத்தான் இருக்கு. நன்றி..! படிக்காதவங்ககூட இதைப் படிச்சாவது விஷயத்தைத் தெரிஞ்சுக்குவங்களே.. அதுக்காகத்தான்..! நன்றி ராஜநடராஜன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sailash said...

ஆம் என்னக்கு கூட திரு முருகானந்தம் பற்றி தெரியும், அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் உள்ளன, அத்துணையும் அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதால், சில பத்வாவும் உள்ளன அவரை கொள்ள, அவரை கொள்ள கொலை முயற்சி மூன்று தடவை நடந்தது . அவர் போலீஸ் மிரட்டலையும் மீறி ஊர்வலம் நடத்துவதால், அவர் மீதி ஏராள பொய் வழக்கள் போடப்பட்டு உள்ளன.]]]

ம்.. தெரிந்து கொண்டேன்..! இது மாதிரியான செய்திகளைப் போடும்போதுதான் புதிய, புதிய பதிவர்களெல்லாம் வெளிப்படுகிறார்கள்.. நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[சந்தோஷ் = Santhosh said...

//இது விஷயமாக உண்மைகள் நீதிமன்றத்தின் மூலம்தான் நிரூபிக்கப்படுதல் வேண்டும்.. இப்போதெல்லாம் போலீஸார் போடுகின்ற வழக்குகளில் முக்கால்வாசி பொய்கள்தானே..?//

அப்படின்னா அதை ஏன் ஒரு அளவு கோலாக்கி பதிவா போடணும். வர வர நீங்க ரொம்ப சரியில்லை அண்ணே.]]]

மிச்ச சொச்சம் 25 சதவிகிதம் இருக்கே.. இதுல காடுவெட்டி குருவை எடுத்துக்கிட்டீங்கன்னா அவர் மேல போட்ட கேஸைவிட, போடாமல் விட்ட கேஸ்தான் அதிகம்.. இப்படியும் சில ஆளுக இருக்காங்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
கலைஞரை எதிர்த்து நிக்கறவர் மேல கூட நிறைய வழக்குகள் இருக்கறதா சொல்றாங்களே!]]]

ஆமாம்.. குடவாசல் ராஜேந்திரன்..! கொலை வழக்குகள்கூட உண்டு..!

ரிஷி said...

125 பேர் தவிர மீதமுள்ள 554 பேரும் தேர்தலில் நின்று மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிமன்றத்திற்கு செல்லும் தகுதியை இழக்கிறார்கள். :-)

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

125 பேர் தவிர மீதமுள்ள 554 பேரும் தேர்தலில் நின்று மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி மன்றத்திற்கு செல்லும் தகுதியை இழக்கிறார்கள். :-)]]]

ரிஷி.. நீங்கள்தான் முகமது பின் துக்ளக்கா..?

Unknown said...

Nagappatinam BJP vetpalar nallavare,Inimaiyanavar,Police potta poi valakkugal oru nallavar meethu thavarana karuthai erpaduthi ullathu...

Unknown said...

Nagappatinam BJP vetpalar nallavare,Inimaiyanavar,Police potta poi valakkugal oru nallavar meethu thavarana karuthai erpaduthi ullathu...