வந்தே மாதரம் - சினிமா விமர்சனம்

22-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தலைப்பைப் பார்த்தும், படத்தில் அர்ஜூன் இருக்கிறார் என்பதைப் பார்த்தும் கதை என்ன என்பது இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.தமிழ்ச் சினிமாவில் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒரே அடையாளமாகத் திகழும் அண்ணன் அர்ஜூனுக்கேற்ற கதைதான். ஆனால் விதைத்தது நான்காண்டுகளுக்கு முன்பாக. 'அறுவடை' என்ற பெயரில்தான் இந்தப் படத்தைத் துவக்கினார்கள்.

தயாரிப்பாளர் பங்கஜ் ஹென்றியும் இந்திய தேசத்தின் மீது அசாத்திய பற்றும், நேசமும் கொண்டவர். அவரேதான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். இயக்கியிருப்பவர் அரவிந்த் என்னும் புதுமுகம்.(என்று நினைக்கிறேன்)

தேசிய நதிநீர்த் திட்டத்தைத் துவக்கி வைக்க கன்னியாகுமரிக்கு வரும் இந்தியப் பிரதமரை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து மாலிக் என்னும் தீவிரவாதி இந்தியாவுக்குள் புகுந்திருப்பதாகவும், அவனைக் கண்டுபிடிக்க மம்முட்டி தலைமையில் ஒரு டீமை அமைத்து, அவர்கள் போராடி, அடித்துப் பிடித்துச் சண்டையிட்டு அந்த ஒரேயொரு தீவிரவாதியை அடியோடு ஒழித்துக் கட்டி தாய்த்திரு நாட்டின் ஒளிவிளக்கான நமது பிரதமரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை..
முதல் பாதி ஜெட் வேகத்தில் பறந்தது.. இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் தூங்கியது.

முதல் ரீலில் தலையைக் காட்டிவிட்டு நான்கு நிமிட பாடலுக்கு ஆடிய புன்னகை இளவரசி சினேகா, அதன் பிறகு இடைவேளைக்குப் பிறகு எட்டாவது ரீலில்தான் தலையைக் காட்டுகிறார். அந்தப் பாடல் காட்சியிலும் சினேகாவை மிகப் பெரிய குண்டாசட்டிக்குள் குளிக்க வைத்து அதையும் எடுக்கத் தெரியாமல் எடுத்து, கவர்ச்சியைக் கூட காட்ட முடியாமல் வைத்திருப்பது இயக்குநர் மேல் கோபத்தை வரவழைக்கிறது. கொடுத்த காசுக்கு இதுகூட இல்லைன்னா எப்படிங்க..?
ஆனாலும் ஜில்பான்ஸ் ரசிகர்களுக்காக இரண்டு குத்துப் பாட்டுக்களை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.மம்முட்டி இது போன்ற வேடங்களில் பல முறை மலையாளத்திலேயே திறமை காட்டிவிட்டதால் இதில் ஏதோ இன்வால்வ் ஆகாமலேயே நடித்திருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு சிங்கிள் ஷாட்டில்கூட மம்முக்காவின் ஆக்ஷனையே காணோம்.. ஒருவேளை இயக்குநரின் திறமை இவ்வளவுதானோ.. என்னவோ..?

அர்ஜூனுக்கு ஜோடி இல்லாததால் அவரால் டூயட் பாட முடியாத கோபத்தில் படம் முழுக்க கடுகடுப்பாகவே இருக்கிறார். மம்முட்டி உதவியாளர் என்பதாலும் தனித்தக் காட்சிகளில் தவிர மற்றவைகளில் ஒப்புக்குச் சப்பாணிதான். சண்டைக் காட்சிகளில் மனிதர் இன்னமும் இளைஞராகத்தான் இருக்கிறார். இது ஒன்றுக்காகவே அவரை பாராட்டலாம்.
ஈ.சி.ஆர். ரோட்டில் இருக்கும் சவுக்குத் தோப்பில் நடக்கும் சண்டைக் காட்சியில் அர்ஜூன் அண்ணன் மரத்திலேயே தாவி, தாவி சண்டையிடும் காட்சியைப் பார்த்து வாய்விட்டு அழுக வேண்டும்போல் இருந்தது. இயக்குநருக்கு ஏன் இந்த கற்பனை வறட்சி..? நிலம் முழுவதும் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருக்கிறானாம் மாலிக். அவன் ஒருத்தனே அந்த ஏக்கர் முழுவதும் புதைக்க முடியுமா என்று சின்ன லாஜிக்கைக் கூடவா துணை இயக்குநர்கள் யோசிக்கவில்லை.. மேலும், இதே போன்ற சண்டைக் காட்சியை வரவிருக்கும் இரண்டு திரைப்படங்களில் காணத் தவறாதீர்கள்.முற்பாதியில் அடிக்கடி வரும் ட்விஸ்ட்டுகளால் மட்டுமே படம் வேகமாக பெடலெடுத்தது.. ராஜ்கபூரை ஏமாற்றி உண்மையை வரவழைப்பதற்காக செய்யும் ஒரு டிவிஸ்ட்டும், இடைவேளைக்குப் பின்பு சினேகாவை வைத்து செய்யும் டிவிஸ்ட்டும் ரசனைக்குரியவைதான். ஆனால் இது இரண்டில் ஒன்றை மாவீரனிலும், மற்றொன்றை வேறு ஏதோவொரு ஆங்கில சினிமாவிலும் பார்த்த ஞாபகம் வேறு வந்து தொலைக்கிறது.

கொச்சியில் நடைபெறும் கொலை சம்பவத்தில் இருந்து சூடு பிடிக்கும் அந்தத் திரைக்கதையை இடைவேளைக்கப்புறம் எப்படி நகர்த்துவது என்பது தெரியாமல் விட்டுவிட்டதாக நினைக்கிறேன். செல்போனில் டிரேஸ் செய்வது ஒரு புறம் இருக்க.. மாலிக் சென்னைக்குள் கால் வைக்க குண்டுவெடிப்பை நடுரோட்டில் ஏற்படுத்தி தப்பிக்கின்ற காட்சியை கொஞ்சம் பாராட்டலாம். கஷ்டப்பட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள்.தீவிரவாதம் என்றவுடனேயே எடுத்த எடுப்பிலேயே முஸ்லீம்கள்தான் என்று கருதுவதில் இந்தக் கதாசிரியரும் தப்பவில்லை. அப்படியொரு முஸ்லீம் தீவிரவாதியை வேட்டையாடும் கதைதான் இது என்று அவர் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஏன் இந்தப் பயங்கரவாதம் என்கிற விஷயத்திற்குள் அவர் போகவே இல்லை.. நான்கு மெஷின் கன்கள் பாதுகாப்போடு ஏதோ ஒரு கால்வாய்க்குள் முழு நீள சொக்காய் போட்ட பட்டாணியர்களுடன் பேச வைத்து பாகிஸ்தான் லின்க்கை காட்டி முடித்திருக்கிறார்கள்.

முஸ்லீம்-இந்து பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதால் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். படத்தில் மம்முட்டியின் பெயர் கோபிகிருஷ்ணன், அர்ஜூனின் பெயர் அன்வர்.. பிரதமராக நாசர் என்ற பிம்பம்.. இவற்றோடு மாலிக்கை மோத வைத்து.. அவர்களுக்கு முஸ்லீம் என்பது பிரச்சினையில்லை.. இந்தியாதான் பிரச்சினை என்பதைப் போல் சொல்லியிருக்கிறார் கிறிஸ்துவரான கதாசிரியர் ஹென்றி. கூட்டிக் கழிச்சுப் பாருங்க.. எல்லாம் சரியா வரும்.. இந்தக் கூத்தை விசாரிக்கணும்னா இன்னொரு சினிமாதான் எடுக்கணும்.
ராஜ்கபூர் முஸ்லீம். இவர்தான் ஆயுத வியாபாரி. மாலிக்கிற்கு ஆயுதங்களை சப்ளை செய்தவர். இவரைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான ராஜன் பி.தேவ் ஒரு முஸ்லீம். “உன்னை மாதிரி ஆளுகதாண்டா.. நம்ம நாட்டுக்கே முதல் எதிரி” என்று ராஜன் பி.தேவ் சொல்வதைப் போல் வசனத்தை வைத்து பேலன்ஸ் செய்ய பார்த்திருக்கிறார். முடியலை..
இது போன்ற படங்களில் நடிப்பையெல்லாம் நீங்கள் பெரிதாக பார்க்கக் கூடாது.. ஐயோ.. அம்மா.. காட்சியெல்லாம் அதிகமாக இல்லை என்பதால் நடிப்பவர்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தாமல், அவர்களும் அலட்டிக் கொள்ளாமல் வந்தவரைக்கும் நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். சினேகா மரிக்கும் காட்சியில்கூட கண் கலங்காமல் இருந்ததைக் கண்டு எனக்கே வருத்தமாகிவிட்டது. என்ன இயக்கம் இது?  இதனால்தான் படம் வெளியாக இத்தனை நாட்களானதோ..?

கேரளாவிலும் படம் போணியாக வேண்டும் என்பதற்காக மலையாள குணச்சித்திர நடிகர் ஜெகதீஷை மம்முட்டிக் துணையாக போட்டிருக்கிறார்கள்.

கடைசியில் பட்ஜெட்டுக்கேற்றாற்போல் விற்பனை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் கஷ்டப்பட்டிருக்கிறார். பாவம்.. அவர் என்ன செய்வார்..? ஆரம்பித்த ஜோரிலேயே முடித்து ரிலீஸ் செய்திருந்தாலாவது வட்டிக் காசாவது திரும்பக் கிடைக்கும்.

இப்போதும் போட்டிக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாத சூழலாக பார்த்து திட்டம் போட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். என்றாலும், கூட்டம் குறைவு என்பதுதான் ரிசல்ட்.
படத்தின் ஒளிப்பதிவைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நன்றாகவே எடுத்திருக்கிறார். அதிலும் கொச்சி கொலைக்களன்களை அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படம் முழுக்க கேமிரா வானத்திலேயே பறந்திருப்பதைப் போல் தெரிகிறது. சவுக்குத் தோப்புக் காட்சிகளும், தாம்பரம் குண்டுவெடிப்பு காட்சிகளும் படமாக்கிய விதம் ஒளிப்பதிவாளரைத் தனித்து பாராட்ட வைக்கிறது..

படத்திலேயே பாராட்டக் கூடிய ஒரு விஷயம்.. படத்தின் இடையில் வரும் ஒரு டாக்குமெண்ட்ரி படம். விவசாயிகள் பிரச்சினை பற்றியும், இந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பது பற்றியும் எடுத்திருப்பது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

பொதுவாக இது போன்ற தேச நலனை முன்னிட்டு எடுக்கும் படங்களில் ஏன் இந்தப் பிரச்சினை தோன்றியது என்பதை மட்டும் வசதியாக அத்தனை பேரும் மறந்துவிட்டு, இப்போதைய தீர்வுக்குக் காரணத்தை மட்டும் சொல்வார்கள். அதுவும் எந்தச் சமயத்திலும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போய்விடவும் கூடாது என்கிற ரீதியிலேயேதான் இருக்கும். இங்கேயும் அதேதான். இதுவே கொஞ்சம் கசப்பாக இருக்கிறது. சரி.. ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து படம் எடுத்திருக்கிறார் என்று திருப்திபட்டுக் கொள்ல வேண்டியதுதான்..

நீங்கள் இந்திய தேசியத்தின் ஆதரவாளரா..? 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலின் தீவிர ரசிகரா நீங்கள்..? 'வந்தே மாதரம்' என்பது உங்களது தாரக மந்திரமா..? 'ஆம்'  எனில் அவசியம் சென்று பாருங்கள்..!

ஜெய்ஹிந்த்..!புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

38 comments:

க ரா said...

ரெண்டே ரெண்டு சிநேகா போட்டோ போட்டு சிநேகாவ இருட்டடிப்பு செஞ்சதால இந்த பதிவ படிக்காம வெளிநடப்பு செய்யறேன்..

க ரா said...

பதிவு போட்டு மூனு நிமிசம் ஆகியும் ஏன் அண்ணாச்சி இன்னும் எந்த திரட்டியும் இணக்காம இருக்கீங்க...

Sugumarje said...

புள்ளி விவரங்களோடு, யோசனையோடு, பொறுமையோடு படம் பார்ப்பது எப்படி என்று அடுத்த பதிவுகளில் தெரியப்படுத்தவும்... :)

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
ரெண்டே ரெண்டு சிநேகா போட்டோ போட்டு சிநேகாவ இருட்டடிப்பு செஞ்சதால இந்த பதிவ படிக்காம வெளிநடப்பு செய்யறேன்..]]]

இருபது நிமிஷம்தாங்க சினேகா வர்றாங்க. அதுக்காக ரெண்டு போட்டோ போதாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
பதிவு போட்டு மூனு நிமிசம் ஆகியும் ஏன் அண்ணாச்சி இன்னும் எந்த திரட்டியும் இணக்காம இருக்கீங்க...]]]

போஸ்ட் போட்டு ரெண்டு செகண்ட்ல கமெண்ட் போட்டீங்கன்னா எப்படிங்கண்ணா..?

உண்மைத்தமிழன் said...

[[[Sugumarje said...
புள்ளி விவரங்களோடு, யோசனையோடு, பொறுமையோடு படம் பார்ப்பது எப்படி என்று அடுத்த பதிவுகளில் தெரியப்படுத்தவும்... :)]]]

செஞ்சிருவோம்..!

நசரேயன் said...

//படத்தின் ஒளிப்பதிவைத் தனியாகக்
குறிப்பிட்டுச் சொல்லலாம்.//

நீங்க இணைத்து இருக்கிற படத்திலே தெரியுது

காலப் பறவை said...

//தேசிய நதிநீர்த் திட்டத்தைத் துவக்கி வைக்க கன்னியாகுமரிக்கு வரும் இந்தியப் பிரதமரை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து மாலிக் என்னும் தீவிரவாதி

அடப்பாவிங்களா... சும்மா இருக்கிற எங்க ஊருக்குள்ளும் தீவிரவாதிங்கள வரவளச்சுட்டான்களா
:(

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//படத்தின் ஒளிப்பதிவைத் தனியாகக்
குறிப்பிட்டுச் சொல்லலாம்.//

நீங்க இணைத்து இருக்கிற படத்திலே தெரியுது.]]]

இவ்ளோ அறிவாளியா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லீங்கண்ணே..! வாழ்க..!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...

//தேசிய நதிநீர்த் திட்டத்தைத் துவக்கி வைக்க கன்னியாகுமரிக்கு வரும் இந்தியப் பிரதமரை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து மாலிக் என்னும் தீவிரவாதி

அடப்பாவிங்களா... சும்மா இருக்கிற எங்க ஊருக்குள்ளும் தீவிரவாதிங்கள வரவளச்சுட்டான்களா:(

என்னது? உங்க ஊரு ச்சும்மா இருக்குதா..? யார்கிட்ட காது குத்துறீங்க..? மதவாதத்திற்கு முதல் அடையாளம் கொடுத்தது உங்க ஊர்தான்..!

அலைகள் பாலா said...

வழக்கமான அர்ஜுன் படமா? ஒருவேளை எடுக்க ஆரம்பிச்சுட்டமேனு ரிலிஸ் பண்ணிட்டாங்களா?

pichaikaaran said...

“ஆனாலும் ஜில்பான்ஸ் ரசிகர்களுக்காக……”
அதாவது நம்மை போன்றவர்களுக்காக.. ஹ்ம்ம்.. தகவலுக்கு நன்றி..

”அறுவடை' என்ற பெயரில்தான் இந்தப் படத்தைத் துவக்கினார்கள்.”

இது புலனாய்வு செய்திகள் , விமர்சனத்தை மேலும் அழகூட்டுகின்றன,, நன்று..

அடுத்து அந்தரங்கம் பட விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

பிரபல பதிவர் said...

அண்ணாச்சி உங்களுக்காகத்தானே கமலி, வாலிபமே வா எல்லாம் ஓடுது.... அத வுட்டுட்டு பஞ்சமுகி, வந்தே மாதரம்னு போறீங்களே என்ன ஆச்சி உங்களுக்கு???

R.Gopi said...

//நீங்கள் இந்திய தேசியத்தின் ஆதரவாளரா..? //

ஆமாம் சார்....


//'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலின் தீவிர ரசிகரா நீங்கள்..? //

உண்மை சார்....


//'வந்தே மாதரம்' என்பது உங்களது தாரக மந்திரமா..? //

பின்ன.... இது தாரக மந்திரமாக இல்லாமல் இருக்கும் ஒருவர் ”உண்மை இந்தியனா”??

//'ஆம்' எனில் அவசியம் சென்று பாருங்கள்..!//

அய்யோ.... ஆள விடுங்க சாமி.............. இப்போ தான் இவ்ளோ நாள் கழிச்சு “சுறா” எஃபெக்ட்ல இருந்து வெளியே வந்திருக்கோம்... உடனே அடுத்ததா??

//ஜெய்ஹிந்த்..!//

நாங்களும் சொல்லிக்கறோம் ஜெய் ஹிந்த்.........

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றி! உங்கள் விமர்சனத்திற்கு....

நான் இந்தப் படத்தை பார்ப்பேன்....


என்றும் எப்போதும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!

உண்மைத்தமிழன் said...

[[[அலைகள் பாலா said...
வழக்கமான அர்ஜுன் படமா? ஒருவேளை எடுக்க ஆரம்பிச்சுட்டமேனு ரிலிஸ் பண்ணிட்டாங்களா?]]]

இல்லை. எடுத்து முடிச்சாச்சேன்னு ரிலீஸ் பண்ணிட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

“ஆனாலும் ஜில்பான்ஸ் ரசிகர்களுக்காக……”

அதாவது நம்மை போன்றவர்களுக்காக. ஹ்ம்ம்.. தகவலுக்கு நன்றி.

”அறுவடை' என்ற பெயரில்தான் இந்தப் படத்தைத் துவக்கினார்கள்.”

இது புலனாய்வு செய்திகள் , விமர்சனத்தை மேலும் அழகூட்டுகின்றன. நன்று..

அடுத்து அந்தரங்கம் பட விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்]]]

பார்வையாளன் ஸார்..

அந்தரங்கம் படத்துக்கு எப்பவோ விமர்சனம் எழுதியாச்சு.. தேடிப் பாருங்க கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
அண்ணாச்சி உங்களுக்காகத்தானே கமலி, வாலிபமே வா எல்லாம் ஓடுது. அத வுட்டுட்டு பஞ்சமுகி, வந்தே மாதரம்னு போறீங்களே என்ன ஆச்சி உங்களுக்கு???]]]

சிவகாசி மாப்ளே.. கமலி என்ற படம் ஏற்கெனவே அந்தரங்கம் என்ற பெயரில் வந்த படம்தான். அதில் வைக்காத சில பிட்டுக் காட்சிகளை வைத்து தலைப்பை மாற்றி போஸ்டர் ஒட்டி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போய் ஏமாந்து விடாதீர்கள்..

வாலிபமே வா வா படம் என்னைப் போன்ற சின்னஞ்சிறுசுகளுக்கு இல்லை. அது வயசுப் பசங்களுக்காம்..! அதுனால நான் போகலை..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

//நீங்கள் இந்திய தேசியத்தின் ஆதரவாளரா..? //

ஆமாம் சார்....

//'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலின் தீவிர ரசிகரா நீங்கள்..? //

உண்மை சார்....

//'வந்தே மாதரம்' என்பது உங்களது தாரக மந்திரமா..? //

பின்ன. இது தாரக மந்திரமாக இல்லாமல் இருக்கும் ஒருவர் ”உண்மை இந்தியனா”??

//'ஆம்' எனில் அவசியம் சென்று பாருங்கள்..!//

அய்யோ. ஆள விடுங்க சாமி. இப்போதான் இவ்ளோ நாள் கழிச்சு “சுறா” எஃபெக்ட்ல இருந்து வெளியே வந்திருக்கோம். உடனே அடுத்ததா??

//ஜெய்ஹிந்த்..!//

நாங்களும் சொல்லிக்கறோம் ஜெய்ஹிந்த்.]]]

கோபி ஸார்.. சுறாவுக்கெல்லாம் இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை. அதுனால தாராளமா பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றி! உங்கள் விமர்சனத்திற்கு....

நான் இந்தப் படத்தை பார்ப்பேன்....

என்றும் எப்போதும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி அம்பட்டன் அல்லது அமெரிக்கா அம்பட்டன்!]]]

பாருங்க அம்பி.. யார் வேணாம்கிறா..?

Anonymous said...

add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

பிரபல பதிவர் said...

//கமலி என்ற படம் ஏற்கெனவே அந்தரங்கம் என்ற பெயரில் வந்த படம்தான். அதில் வைக்காத சில பிட்டுக் காட்சிகளை வைத்து தலைப்பை மாற்றி போஸ்டர் ஒட்டி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போய் ஏமாந்து விடாதீர்கள்..
//


அண்ணே அப்ப கமலி பாத்துட்டீங்க.... சொல்லவே இல்லை

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பார்லிமென்டில் குண்டு வைச்சது, காஸ்மீரில் கலவரம் செய்வது, மும்பையில் சுட்டது எல்லாம் தீவிரவாதிகள். அவர்கள் எல்லோரும் முஸிலிம்கள். பதிவருக்கு கொஞ்சம் ஞாபக மறதி போல, இருக்கிறதை சொன்னா கோபம் வருகிறதே.

பித்தன் said...

nattak kaappaaththa onnuvijayakanth innonnu arjun enna ivanungathan inthiyanaa naamaa illaiyaa yaaru ivanungala innum namburaa. paavam producer

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

//கமலி என்ற படம் ஏற்கெனவே அந்தரங்கம் என்ற பெயரில் வந்த படம்தான். அதில் வைக்காத சில பிட்டுக் காட்சிகளை வைத்து தலைப்பை மாற்றி போஸ்டர் ஒட்டி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போய் ஏமாந்து விடாதீர்கள்.//

அண்ணே அப்ப கமலி பாத்துட்டீங்க. சொல்லவே இல்லை]]]

இல்லை. அந்தரங்கம் என்ற படம்தான் கமலியாக உருவெடுக்கிறது என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால் போகவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெகதீஸ்வரன். said...
பார்லிமென்டில் குண்டு வைச்சது, காஸ்மீரில் கலவரம் செய்வது, மும்பையில் சுட்டது எல்லாம் தீவிரவாதிகள். அவர்கள் எல்லோரும் முஸிலிம்கள். பதிவருக்கு கொஞ்சம் ஞாபக மறதி போல, இருக்கிறதை சொன்னா கோபம் வருகிறதே.]]]

ஆமாம்.. குஜராத்தில் படுகொலைகளைச் செய்தது யாராம்..? மும்பையில் முஸ்லீம்களை உயிரோடு எரித்தது யாராம்..? உ.பி. மசூதியில் குண்டு வைத்து கைதான சாமியாரிணி யாராம்..?

ரெண்டு பக்கமும் இருக்காங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
nattak kaappaaththa onnu vijayakanth innonnu arjun enna ivanungathan inthiyanaa naamaa illaiyaa yaaru ivanungala innum namburaa. paavam producer]]]

படத்தின் முடிவு அதைத்தான் தயாரிப்பாளருக்கு உணர்த்தியிருக்கிறது..!

Anonymous said...

How to customize add this share button for your blog?

http://ramasamydemo.blogspot.com/2010/09/how-to-customize-add-this-share-button.html

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,வழக்கம் போல் பின்னீட்டீங்க.இப்பவெல்லாம் ஸ்டில்ஸ்லயும் கலக்கறீங்க,வாழ்த்துக்கள்
எனக்குப்பிடித்த வரிகள்
அர்ஜூன் ஜோடி இல்லாததால சரியா நடிக்கலைனு சொன்னது.

ம.தி.சுதா said...

நல்ல பார்வை படம் பார்க்க இப்போது நேரம் தான் இல்லை பதிவு அருமை ...
வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, வழக்கம் போல் பின்னீட்டீங்க. இப்பவெல்லாம் ஸ்டில்ஸ்லயும் கலக்கறீங்க, வாழ்த்துக்கள்.

எனக்குப் பிடித்த வரிகள்

அர்ஜூன் ஜோடி இல்லாததால சரியா நடிக்கலைனு சொன்னது.]]]

நன்றி சி.பி.சி..!

உண்மைத்தமிழன் said...

[[[ம.தி.சுதா said...

நல்ல பார்வை. படம் பார்க்க இப்போது நேரம்தான் இல்லை பதிவு அருமை.

வாழ்த்துக்கள் சகோதரம். தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச்செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்.

அசினின் சமூகப் பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!

http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html]]]

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழரே..!

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


(Hi, people can share your essays with my friends using email post link icon u have now in every posts only if they know their friends email id in their mind's memory...so place the tell a friend button below every posts as said in the above link of my dummy blog.)

உண்மைத்தமிழன் said...

D

நல்ல பயனுள்ள போஸ்ட்டுதான்.! நன்றி..!

ஜோதிஜி said...

கூடிய விரைவில் ஆயிரம் பட விமர்சனம் செய்த ஆபூர்வ தமிழன்ங்ற பேரு வந்துடும் போலிருக்கு

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
கூடிய விரைவில் ஆயிரம் பட விமர்சனம் செய்த ஆபூர்வ தமிழன்ங்ற பேரு வந்துடும் போலிருக்கு.]]]

அதுக்கெல்லாம் ரொம்ப வருஷமாகும்ண்ணே..!

abeer ahmed said...

See who owns blogspot.com or any other website:
http://whois.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns dotnetspider.com or any other website.