பெப்ஸி தொழிலாளர்களுக்கான வீடுகள்..! குழப்ப நிலையில் தமிழ்த் திரையுலகம்..!

08-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரும்.. ஆனால் வராது என்கிற வடிவேலுவின் காமெடிப் பேச்சுக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்காக பெப்ஸி அமைப்பு கட்டப் போவதாகச் சொல்லியிருக்கும் கலைஞர் திரைப்பட நகரத் திட்டம்.என்னதான் அரிதாரம் பூசிய அவதார நடிகர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் திரைப்படத் தொழிலுக்கு ஆணி வேராக இருப்பவர்கள் லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்கள்தான். திரைப்படத் துறை பணம் கொட்டும் துறையாக இருந்தாலும், இந்தத் தொழிலாளர்கள் மட்டும் இன்றைக்கும் பின் தங்கிய நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படங்களில் பிரம்மாண்டமான மாளிகைகளையும் பங்களாக்களையும் தங்களது கைகளால் கட்டி முடிக்கும் அவர்கள், தங்களின் நிஜ வாழ்க்கையில் தங்களுக்கென்று சொந்த வீடுகள் இல்லையே என்ற அவல நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

அன்றாடச் சம்பளமாக குறைந்தபட்சம் 250 ரூபாயில் இருந்து 450 ரூபாய் வரையிலும் ஊதியமாகப் பெறும் இவர்களுக்கு சிங்காரச் சென்னையில் வீடு கட்டுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலத்தான்.

அந்தத் தேன் கொடுக்கும் ஆசையை முதலில் ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். திரைப்படத் துறையினருக்காக பள்ளிக்கரணையில் 85 ஏக்கர் நிலத்தை 1995-ம் ஆண்டிலேயே இலவசமாக வழங்கினார்.

திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை முறைப்படி பதிவு செய்து, குடியிருப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் அப்போது நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை திரைப்படத் தொழிலாளர்களுக்காக இலவசமாகவே வழங்குவதாக அறிவித்தார். ஆனால் அது வெறும் அறிவிப்பாகவே  நின்றுவிட்டது.

காரணம், அந்த நேரத்தில் பெப்ஸி அமைப்பில் இருந்த நிர்வாகிகள் செய்த பெரும் தவறினால் தமிழக வீட்டு வசதி வாரியம் கேட்டிருந்த சில தகவல்களை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் போய் கடைசியில் அந்த நிலத்தை பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் பெயருக்கு முறைப்படி பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. 

இந்த நிலையில் 1996-ல் தி.மு.க. அரசு பதவியேற்றதும் அந்த நிலத்துக்கு அதிகாரிகள் ரூ.6 கோடியே 30 லட்சம் விலை நிர்ணயம் செய்து ஆணை பிறப்பித்தார்கள். அவ்வளவு தொகைக்கு நாங்கள் எங்கே போவது என்று பெப்ஸி அமைப்பினர் முதல்வர் கருணாநிதியிடம் முறையீடு செய்ய, அந்த 85 ஏக்கர் நிலத்தை இவலசமாக வழங்கி அதனை திரைப்படத் தொழிலாளர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் பெயருக்கு முறைப்படி மாற்றம் செய்து ஆணை  பிறப்பித்தார் கலைஞர்.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சி மாறி 2001-ல் ஜெயலலிதா முதல்வரானதும், அந்த நிலத்துக்கு ரூ.34 கோடியே 31 லட்சம் செலுத்தினால் மட்டுமே இடம் சொந்தமாகும் என்று புதிதாக உத்தரவை அரசு அதிகாரிகள் பிறப்பித்தார்கள். இந்த உத்தரவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட திரைப்படத் தொழிலாளர்களும், பிரமுகர்களும் ஜெயலலிதாவிடம் முறையிட வேண்டி இது விஷயமாக நெருங்க முயல அது முடியவே இல்லை.

ஆனால் தனது ஆட்சிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் 2004-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று திரைப்படத் துறையினர் நடத்திய பாராட்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்ட  ஜெயலலிதாவிடம்,  முன்பு பெப்ஸி தலைவராக இருந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இது பற்றி அந்த மேடையில் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க, “ஏற்கெனவே நான் கொடுத்திருக்கும் வாக்குறுதியை மீற மாட்டேன். அந்த நிலத்தை இலவசமாகவே திரைப்படத் துறையினருக்கு வழங்கி வீடு கட்டித் தருகிறேன்” என்று தனது பதிலுரையில் சொன்னார் ஜெயலலிதா.

ஆனால் அது நடக்கவேயில்லை. காரணம், ஜெயலலிதா அன்றைய தினம் அந்த மேடையில் இதைச் சொல்வதற்கு முன்பாகவே  அந்த நில ஒதுக்கீட்டை அவரது அரசு ரத்து செய்து ஆணை பிறப்பித்திருக்கிறது. இதுவும் கலைஞர் அரசு அமைந்த பின்பு அவர் வெளியிட்ட ஒரு அறிக்கைக்குப் பின்புதான் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தெரிய வந்தது.

சரி. போய்த் தொலையட்டும். நமது கலைஞர்தானே மீண்டும் வந்திருக்கிறார் என்ற உரிமையோடு இந்த ஆட்சியின் துவக்கத்தில் இருந்தே தங்களுக்கு வீடு கட்ட நிலம் வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள் பெப்ஸி தலைவர்கள்.

தனக்குச் செல்லப் பிள்ளையாக இருக்கும் திரைப்படத் துறையினருக்கு நல்லது செய்ய நினைத்தார் கலைஞர். கடந்த  ஆண்டு அக்டோபர் 9-ம் தேதியன்று தனக்கு வழங்கப்பட்ட கலை உலகப் படைப்பாளி விருது வழங்கும் விழாவில் பேசிய கலைஞர், “முதல் அறிவிப்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், விரைவில் கட்டித் தரப்படும் என்று சொன்னேன். என்ன திடீரென்று சொல்கிறாய் என்று நினைக்கக் கூடாது. காலையிலே நிதித்துறை செயலாளரை அழைத்துப் பேசி பணம் ஒதுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்கான இடத்தை பார்க்க வேண்டியது குகநாதனின் வேலை. திரைப்படத் தொழிலாளர்களின் வேலை. அந்த பணியினை அவர்கள் ஆற்றினால் உடன் இருந்து அதை நிறைவேற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இதற்கு நீங்கள் எதுவும் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது நன்கொடை வழங்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி கேட்கத் தேவையில்லை. அரசே திரைப்படத் துறையினருக்கு தனது சொந்த செலவில் வீடுகளைக் கட்டித் தரும்..” 

- என்றெல்லாம் பேசி திரைப்படத்துறையினருக்கு கை வலிக்கின்ற அளவுக்கு கைதட்டலை வாங்கிக் கொண்டு போனார் முதல்வர். பூரித்துப் போனார்கள் பெப்ஸி நிர்வாகிகளும், திரையுலகத் தொழிலாளர்களும்.

அரசே வீடு கட்டிக் கொடுக்கிறது என்றால் நமக்கென்ன..? சாவியை வாங்கி பால் காய்ச்ச வேண்டியதுதான் பாக்கி என்று நினைத்து மறுநாளில் இருந்தே பெப்ஸியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சங்கங்களின் வாசலிலும் கூட்டம் குவியத் தொடங்கியது. புதிதாக உறுப்பினர்களாக சேர்வதற்கு விண்ணப்பங்கள் கேட்டு கூட்டம் அலைமோத.. சில சங்கங்களில் ஆட்சேர்ப்பும், பல சங்கங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அறிவிப்புமாக அதிரடி ஆக்ஷன்கள் அரங்கேறியிருந்தன.

எல்லாம் ஒரே மாதந்தான். சென்ற ஆண்டு நவம்பர் 6-ம் தேதியன்று நடந்த புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த கடைசி சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் முதல்நாள் நிகழ்வில் ஆளுநர் உரை யாருக்கு தித்திப்பாக இருந்ததோ தெரியாது.. ஆனால் திரைப்படத் துறை தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் தங்கள் தலையில் குண்டு விழுந்ததுபோல் உணர்ந்தார்கள்.

“திரைப்படத் துறையினருக்கு வீடுகள் கட்ட 95 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். அதில் அவர்கள் தங்களுக்குத் தேவையான குடியிருப்புகளை அவர்களே அடுக்கு மாடி வீடுகளாகக் கட்டிக் கொள்வார்கள்” என்று ஆளுநர் உரையில் சொல்லப்பட்டிருந்ததுதான் இதற்கான காரணம்.

விக்கித்துப் போனார்கள் திரையுலக பிரமுகர்களும், தொழிலாளர்களும். அரசே வீடு கட்டித் தரும் என்று சொன்ன ஒரு மாதத்திற்குள்ளேயே பிளேட்டை திருப்பிப் போட்டு இப்போது அவர்களே கட்டிக் கொள்வார்கள் என்றால் எப்படி? ஏன் இந்தக் குளறுபடி..? முதல்வர் ஏன் இப்படி மனம் மாறினார் என்றெல்லாம் மாறி, மாறி வந்த கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள் பெப்ஸி நிர்வாகிகள்.

பதில் சொல்ல முடியாமல் திணறிய பெப்ஸி நிர்வாகிகள் பழியை அஜீத் மீது தூக்கிப் போட்டார்கள். அவர் அடுத்து நடந்த பெப்ஸியின் பொன்விழாக் கொண்டாட்டக் கூட்டத்தில் கட்டாயப்படுத்தி அழைப்பதாகச் சொல்லி புகார் சொன்னதால்தான் கலைஞர் கோபப்பட்டு திட்டத்தை மாற்றிவிட்டார் என்று ஆஃப் தி ரிக்கார்டாக அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளிடமும் சொன்னார்கள்.

உண்மையில் விசாரிக்கப் போனால் தெரிந்தது வேறு.. பெப்ஸி தொழிலாளர்களுக்கான வீடுகள் முழுவதையும் அரசே கட்டிக் கொடுப்பதாக இருந்தால் நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.. அவ்வளவு தொகையை இவர்களுக்காக ஒதுக்கீடு செய்ய முடியாது.. பின்பு மற்றத் துறையினரின் பங்கில் கை வைக்க நேரிடும். ஆட்சியும் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. தேர்தல் அறிக்கையின்போது கவர்ச்சியான திட்டங்களை அறிவிக்க நேரிடும். அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அப்போது மிகத் தேவையானதாக இருக்கும். இந்த நேரத்தில் இவர்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டுமா என்று கோட்டையில் அதிகாரிகள் தரப்பில் இருந்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்ட காரணத்தினால்தான் முதல்வர் கடைசி நிமிடத்தில் மனம் மாறியதாகச் சொல்கிறார்கள்.

சரி.. வருவது வரட்டும்.. நிலத்தையாவது இலவசமாகக் கொடுக்கிறார்களே.. அதை முதலில் வாங்கிக் கொள்வோம் என்று நினைத்த பெப்ஸி அமைப்பினர் அரசு கொடுத்த நிலத்தை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இது தொழிலாளர் பெருமக்களை இன்னமும் அதிர்ச்சியடைய வைத்த விஷயம்.

ஏதோ சென்னையைச் சுற்றி ஒரே பேருந்தில் சென்று வரக்கூடிய அளவுக்கு அருகில் இருந்திருந்தால் பரவாயில்லை. சென்னையைத் தாண்டி பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் என்னும் ஊரின் அருகே சுமார் 110 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியிருக்கிறது.

இனாமா கொடுத்த மாட்டை பல் புடிச்சு பார்க்கக் கூடாது என்பதால் வாங்கிக் கொண்டதாக நிர்வாகிகள் சொன்னாலும், சென்னையில் திரைப்படத் துறையினரின் தலைநகரமான வடபழனியில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்த இடத்திற்கு எப்படி ஷிப்ட் ஆவது என்பது பற்றித்தான் இப்போது  கோடம்பாக்கத்தில் பரபரப்பு பேச்சு..!

இதில் ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம்.. அரசு அந்த நிலத்தை 99 வருடத்திற்கு குத்தகைக்குத்தான் கொடுத்திருக்கிறது.. முழுமையான சுயாதீனத்திற்காக அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி அக்டோபர் 9 கூட்டத்தில் பேசும்போது “முதல்வர் எங்கே இடம் கொடுத்தாலும் வாங்கிக்குங்க.. இடத்தை விட்ராதீங்க.. அதுதான் நமக்கு நல்லது” என்று சொல்லியிருந்ததை தொழிலாளர்களுக்கு நினைவுபடுத்திய பெப்ஸி நிர்வாகிகள், “மொதல்ல அந்த இடத்தை நம்ம பேருக்கு வாங்கிருவோம். அப்புறம் நாமளே கன்ஸ்ட்ரக்ஷன் ஆட்களை வைச்சு வீடுகளை கட்டி தவணை முறைல வாங்குற மாதிரி நம்ம தொழிலாளர்களுக்கு கொடுப்போம்” என்று அவர்களுக்குள்ளேயே பேசி வைத்து அதனைச் செயல்படுத்திவிட்டார்கள்.

இப்போது அந்த இடத்தைச் சுற்றிலும் கல் நட்டு, வேலி போட்டு, அளவு குறித்து, பெப்ஸி அமைப்பில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களுக்கும் எந்தெந்த இடம் என்பதையெல்லாம் பிரித்து வைத்து அனைத்து ஏற்பாடுகளையும் வெகு ஜோராகச் செய்துவிட்டார்கள் நிர்வாகிகள்.

350, 450, 600, 800, 1000 என்று ஐந்து டைப்புகளில் வீடுகளை கட்ட கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது பெப்ஸி.

இத்தோடு கூடவே தமிழக சின்னத்திரை கூட்டமைப்பும் தனியாகக் களத்தில் குதித்து தனது அங்கத்தினர்களுக்காக தான் தனியாக வீடுளைக் கட்டிக் கொள்வதாகக் கூறிவிட்டது.. இப்போது அந்த 110 ஏக்கர் நிலத்தில் சின்னத்திரை யூனியனுக்காகவும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

எல்லாம் ரெடிதான்.. ஆனால் தாலி கட்ட மாப்பிள்ளை வரணுமே என்பதைப் போல வீடுகள் கட்ட பணம் வேண்டும் என்கிற நிலையில் வீடுகளை பெப்ஸியின் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கட்டலாம் என்று முடிவு செய்து புதிதாக சங்கத்தையும் தோற்றுவித்து விட்டார்கள். இதற்காக உறுப்பினர்களிடமிருந்து 3000 ரூபாய் பணத்தையும் வசூலித்து விட்டார்கள்.

பெப்ஸியுடன் இணைந்த 23 சங்க உறுப்பினர்களும் சம பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல் கட்டமாக 7500 உறுப்பினர்களுக்கு அடுக்கு மாடி வீடுகளை ஐந்து வகையான பிரிவுகளாகக் கட்டி 2 ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார்கள். இதில் ஒவ்வொரு சங்கத்திற்கும் அதன் 40 சதவிகித நிரந்தர உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு 720 வீடுகள், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கு 403 வீடுகள், எழுத்தாளர்கள் சங்கத்திற்கு 136 வீடுகள், எடிட்டர்கள் சங்கத்திற்கு 197 வீடுகள் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரி.. அவங்களே கட்டித் தர்றாங்க.. நாம மொதல்ல பெயரை பதிவு செய்து வீட்டை வாங்கிருவோம். அதற்குப் பிறகு தவணை முறையில் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் விலை பற்றி விசாரித்த தொழிலாளர்களும் கரண்ட் ஷாக் அடித்த வேகத்தில் திரும்பியிருக்கிறார்கள்.

பெப்ஸி அமைப்பு கட்டப் போகும் வீட்டின் விலை விவரங்கள் அப்படியிருக்கின்றன.

350 சதுர அடி வீட்டின் விலை 3,10,000 ரூபாய். இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 46,500. 450 சதுர அடி வீட்டின் விலை 5,00,000. இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 75,000. 600 சதுர அடி வீட்டின் விலை 9,00,000. இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 1,35,000. 800 சதுர அடி வீட்டின் விலை 12,00,000. இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 1,80,000. 1000 சதுர அடி வீட்டின் விலை 15 லட்சம் ரூபாய். இதற்குக் கட்ட வேண்டிய முன் பணம் 2,25,000 ரூபாய்.


கட்டி முடிக்கப்படும் இரண்டாண்டுகளுக்குள் முழுத் தொகையையும் செலுத்தும் 20 சதவிகித உறுப்பினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை கூட்டமைப்பு மூன்று டைப்புகளில் மட்டுமே வீடுகள் கட்டுவதாகச் சொல்லியிருக்கிறது. அதன் விலைப் பட்டியல் பெப்ஸியைவிடவும் கொஞ்சம் குறைவுதான். 600 சதுர அடி வீட்டின் விலை 6 லட்சம் ரூபாய். கட்ட வேண்டிய முன் பணம் 60000 ரூபாய். 800 சதுர அடி வீட்டின் விலை 12 லட்சம் ரூபாய். கட்ட வேண்டிய முன் பணம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். 1000 சதுர அடி வீட்டின் விலை 17 லட்சம். கட்ட வேண்டிய முன் பணம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். ஜூலை மாதம் முதல் டிசம்பருக்குள் முன் பணத்தைக் கட்ட வேண்டும் என்று நிபந்தனையையும் சின்னத்திரை கூட்டமைப்பு தனது உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது..

இதில் சின்னத்திரை கூட்டமைப்பினர் புத்திசாலித்தனமாக மலேசியாவை இருப்பிடமாகக் கொண்ட Rimba mulia management sdn bhd என்கிற ஒரு கட்டுமான நிறுவனத்தை அழைத்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பாக முதல்வர் முன்னிலையில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்டார்கள்.

அத்தோடு மீதிப் பணத்தைக் கட்ட வேண்டிய காலத் தவணையும் 10, 15 ஆண்டுகள் என்று அளித்திருப்பதால் சின்னத்திரையில் இது பற்றிய முணுமுணுப்பு ஏதுமில்லை.

ஆனால் பெரிய திரை சங்கங்களிலோ. சட்டையைப் பிடிக்காத குறையாக பல சங்கங்களில் பெரும் ரகளையே நடந்துள்ளது. காரணம் பெப்ஸி போட்டிருக்கும் வேறொரு நிபந்தனை.. 23 சங்கங்களின் 40 சதவிகித தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும். அதில் 20 சதவிகிதத் தொழிலாளர்கள் வீடுகள் கட்டி ஒப்ப்படைக்கப்படவிருக்கும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக வீட்டிற்குண்டான முழுத் தொகையையும் கட்டி முடித்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதுதான் பல சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்தக் கோபத்தில் மேக்கப் யூனியன், காஸ்ட்யூம் யூனியன், டிரைவர்கள் யூனியன், லைட்மைன்ஸ் யூனியன், தயாரிப்பு உதவியாளர்கள் யூனியன் என்று முக்கியமான தொழிலாளர்களை உள்ளடக்கிய சில யூனியன்கள் இந்த வீடுகள் எங்களது சங்க உறுப்பினர்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டதுதான் இப்போது இந்த விஷயத்தில் நடந்திருக்கு்ம் ஹைலைட்டான ஒரு விஷயம்..!

காரணம், கோடம்பாக்கம், வடபழனியைச் சுற்றியிருக்கும் சினிமா தொழிலாளர்கள் அனைவருமே தினக்கூலிகளை போலத்தான் அவர்களது சம்பளம் அவர்களுடைய வேலையைப் பொறுத்து மாறுமே ஒழிய யாருக்கும் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கிடையாது..

செட் அஸிஸ்டெண்ட்டிற்கு ஒரு நாள் சம்பளம் 375 ரூபாய். கார் டிரைவர்களுக்கு 270 ரூபாய், பாத்திரம் கழுவும் நளபாக ஊழியர் சங்கத்திற்கு 450 ரூபாய், லைட்மேன்களுக்கு 350 ரூபாய், காஸ்ட்யூமர்களுக்கு 400 ரூபாய், கலை உதவியாளர்களுக்கு 350 ரூபாய் என்பதுதான் இன்றைய நிலவரம்.

இந்தச் சம்பளத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் நாங்கள் எப்படி 2 வருடத்திற்குள் 3 லட்சம், 5 லட்சம், 9 லட்சம் ரூபாய்களை கட்ட முடியும்..? அவ்வளவு தொகை கையில் இருந்தால் நாங்கள் எதற்காக இந்தச் சினிமாத் துறையில் நுழைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்? என்றெல்லாம் தங்களுடைய சங்கப் பொதுக் குழுவில் கேள்வியெழுப்ப இவர்களுக்குச் சரியான பதிலைச் சொல்ல முடியாமல் தவித்து விட்டார்களாம் நிர்வாகிகள்.

“இப்போது எங்கேயாவது கடனை வாங்கியாவது முதல் தவணையைக் கட்டிவிடலாம். பின்பு மாதத் தவணையாக ஆறாயிரம், ஏழாயிரம் என்று வந்தால் எங்களது தொழிலாளர்கள் எப்படி இதனைக் கட்ட முடியும்..? அவர்கள் கழுத்தில் கத்தியை வைப்பது போலல்லவா ஆகும்?” என்கிறார்கள் சில நிர்வாகிகள்..!

இதற்கு இவர்கள் சொல்லும் விளக்கங்கள்தான் இன்னும் சுவாரசியம்..!

“வீட்டை வாங்கி அங்கே குடி போறோம்னு வைச்சுக்குங்க.. அங்கேயிருந்து வடபழனிக்கு ஷூட்டிங்குக்கு நாங்க வர்றது எப்படி? ஷூட்டிங் முடிந்து திரும்ப போறது எப்படி? முதல் கால்ஷீட் காலைல 6 மணின்னா சென்னைக்குள்ளேயே இருக்கிறவங்க எப்படியாவது அடிச்சுப் புடிச்சு வந்திருவாங்க. இல்லைன்னா கம்பெனி கார், வேன்ல வைச்சு கூட்டிட்டுப் போயிரலாம்..!

நாளைக்கு சாலிக்கிராமத்துல ஷூட்டிங்.. பர்ஸ்ட் கால்ஷீட்லன்னு சொன்னா 52 கிலோ மீட்டர் தள்ளியிருக்குற அந்த ஊர்ல இருந்து தொழிலாளி எப்படி கிளம்பி வருவான்..? திரும்பவும் ராத்திரி அவனை கொண்டு போய் குடியிருப்புல விடுறது எப்படி?

இப்பவே ஆறு மணி கால்ஷீட்டுன்னா ஒவ்வொரு தொழிலாளியும் விடியற்காலை நாலரை மணிக்கே எழுந்திருச்சு கிளம்பி வர்றதாலதான் ஏவி.எம். ஸ்டூடியோ வாசல்ல பிக்கப் பண்ண முடியுது.. திருப்போரூர் குடியிருப்புன்னா அவன் 3 மணிக்கே எந்திரிச்சு கிளம்பி ஓடி வரணும்.. ராத்திரி திரும்ப அவனை கொண்டு போய்விடவும் 11 மணிக்கு மேலாயிரும்.. தொழிலாளர்கள் களைத்துப் போய் விட மாட்டார்களா..? எத்தனை நாட்கள் தாங்கிக் கொள்ள முடியும் இந்தக் கொடுமையை..?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

“குடியிருப்போடு அங்கேயே கலைஞரின் பெயரால் ஸ்டூடியோவும் கட்டப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எத்தனை ஸ்டூடியோ வேண்டுமானாலும் கட்டட்டும்.. ஆனால் அங்கே எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்..?” என்பது இன்னொரு தொழிலாளியின் கேள்வி..!

“இப்போதெல்லாம் ஒவ்வொரு இயக்குநருக்கும் பிடித்தமான தொழிலாளர்கள் குரூப்பாக தொடர்ந்து அதே இயக்குநரின் படங்களில் வேலை செய்து வருகிறார்கள். அப்படியிருக்கும்பட்சத்தில் அங்கேயே குடியிருக்கும் தொழிலாளர்களே அவர்கள் புறக்கணித்தால் அது இயக்குநரின் சுதந்திரம் என்று விட்டுவிடுவார்களா? அல்லது எங்களது சார்பில் பெப்ஸி நிர்வாகிகள் பேசுவார்களா..? நீங்களே சொல்லுங்க..” என்கிறார் ஒருவர்.

சென்னையில் ஷூட்டிங்கிற்குத் தேவையான அனைததும் உடனுக்குடன் கிடைக்கும். ஆனால் திருப்போரூர் அருகே கலைப் பொருட்கள், மற்றும் காஸ்ட்யூமுக்கான பொருட்கள் கிடைக்க வாய்ப்பில்லை. சென்னைக்குள்தான் வர வேண்டும்.. இப்படி சில நாட்கள் அலைகின்றபோது ஏற்படும் செலவுகளை வைத்து தயாரிப்பாளர்களே நாளடைவில் அந்த லொகேஷனை புறக்கணிக்கும் சூழல் நிச்சயம் ஏற்படுமே.. இதனை எப்படி பெப்ஸி சமாளிக்கும்..?

என்னதான் ரெக்கார்டிங் தியேட்டர், டப்பிங் தியேட்டர் என்று அங்கேயே அமைத்தாலும் பிலிம் ரோல்களை பாதுகாப்பாக வைக்க லேபிற்கு வடபழனிக்குத்தான் வந்தாக வேண்டும்.. தினந்தோறும் இது நடைபெற வேண்டுமென்றால் இது திரையுலகத்தினருக்குப் பாதுகாப்பானதுதானா..?

கோடம்பாக்கத்தில் காலையில் ஒரு ஷூட்டிங்கும், மதியம் திருப்போரூரில் வேறொரு ஷூட்டிங்கும் வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு நடிகர் பிரயாணத்திற்காக எவ்வளவு அல்லல்பட வேண்டியிருக்கும்..? இதனால் பொருட் செலவோடு நேரமும் அனாவசியமாக செலவாகுமே..? இதனை எத்தனை தயாரிப்பாளர்கள், எத்தனை நாட்களுக்குப் பொறுத்துக் கொள்வார்கள்..?

கொஞ்சம் வசதிப்பட்ட நடிகர், நடிகைகளுக்குக் கவலையில்லை. கார் இருந்தால் வரலாம்.. செல்லலாம்.. இல்லாத தொழிலாளர் பெருமக்கள் ஷூட்டிங் பொருட்களை வாங்க ஒவ்வொரு முறையும் சென்னைக்குள் வந்து செல்வதற்கு தயாரிப்பாளர்தான் கார், வேன்களை ஏற்பாடு செய்தாக வேண்டும். இது நிச்சயம் அவர்களுக்குக் கூடுதல் சுமையைத்தான் தரும்.

இது மாதிரியான நேரத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களை கொண்டு ஷூட்டிங் நடத்துகின்றபோது  கால்ஷீட் நேரத்தைத் தாண்டிவிட்டால் அது டபுள் கால்ஷீட்டாகிவிடும்.. அப்போது தயாரிப்பாளரின் பர்ஸ் வீங்கிவிடும்..! ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினம்தோறும் என்றால் மறுபடியும் அதே தயாரிப்பாளர் அந்தக் குடியிருப்புக்கு ஓகே சொல்வாரா..?

தற்போது ஏவி.எம்., வாஹினி, பிரசாத், என்று புகழ் பெற்ற படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும் அதே வசதிகளை திருப்போரூர் ஸ்டூடியோவில் வைப்பது மிக, மிக கடினம். அதற்கு நிறைய செலவாகும். அத்தோடு தொழில் நுட்பம் நன்கு தெரிந்த, தொழில் தெரிந்த தொழிலாளர்கள் இந்த ஸ்டூடியோக்களில்தான் பணியாற்றுகிறார்கள். இவர்களை வைத்துத்தான் பணியாற்ற பெரும்பாலான இயக்குநர்களும் விரும்புவார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் கோடம்பாக்கத்தைவிட்டு நகராத இயக்குநர்களை பெப்ஸி எப்படி சமாளிக்கப் போகிறது..? என்றெல்லாம் சந்தேகங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள் தொழிலாளர்கள்..!

இத்தோடு இன்னொன்றையும் இந்தத் தொழிலாளர்கள் தங்களது குற்றச்சாட்டாகச் சொல்லி குமுறுகிறார்கள்..! “நிலம் பார்க்கப் போன சமயத்தில் பெப்ஸியுடன் இணைந்த 23 சங்கங்களில் எந்தவொரு சங்கத்தின் நிர்வாகிகளையும் அழைத்துப் போகாத பெப்ஸியின் தலைவர் குகநாதன் தான் ஒருவரே அந்த இடத்தைச் சென்று பார்த்து ஓகே செய்துவிட்டதாக இப்போது சொல்லி  வருகிறார். இதனை எப்படி எங்களது சங்கத்து நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் எங்களுக்குப் புரியவில்லை” என்கிறார்கள்.

“எங்களது நிர்வாகிகளையும் அழைத்துச் சென்றிருந்தால் தொழிலாளர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் வருமே என்றெல்லாம் அவர்கள் முன்கூட்டியே சொல்லியிருப்பார்களே..? இன்னும் சென்னைக்கு கொஞ்சம் அருகில் உள்ள இடம் பார்த்திருந்தால்கூட பரவாயில்லை.. 52 கிலோ மீட்டர் என்பது வேறொரு ஊருக்கு ஷிப்ட் ஆவதைப் போல.. எப்படி எங்களால் முடியும்…?” என்கிறார்கள் இன்னும் சில தொழிலாளர்கள்.

“நாங்களாவது வசதி, வாய்ப்பு இல்லாததால் படிக்க முடியாமல் போய்விட்டோம். எங்களது பிள்ளைகளாவது நன்கு படிக்கட்டுமே என்பதற்காக வடபழனியைச் சுற்றியுள்ள நல்ல பள்ளிக்கூடங்களாக பார்த்து படிக்க வைத்து வருகிறோம். குடும்பத்தோடு திருப்போரூர் போக வேண்டுமெனில் அங்கே இது போன்ற பள்ளிக்கூடங்கள் இருக்கின்றனவா? இல்லையெனில் அரசு கட்டித் தருமா? அரசுப் பள்ளிக்கூடங்கள் அல்லாமல் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் எங்களது குழந்தைகளின் எதிர்காலம் இதனால் என்னாவது..?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

பக்கத்திலேயே நல்ல மருத்துவமனைகள்கூட இல்லை. உடம்புக்கு ஏதாவது ஒன்று என்றால் மகாபலிபுரத்திற்கும், காஞ்சிபுரத்திற்கும் ஓட வேண்டும்..! சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக்கூட இப்படி 15 கிலோ மீட்டர் தூரம் போக வேண்டும் என்றால் எப்படி? என்கிறார்கள் சில தொழிலாளர்கள்.

பெப்ஸி அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்களின் இத்தனை பிரச்சினைகளும் தெரியும்தான். ஆனாலும் அவர்களாலும் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலை. காரணம், முதல்வர் எப்படியாவது தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே அந்த இடத்தில் குடியிருப்புகளைக் கட்டி தானே தன் கையால் திறந்து வைக்க வேண்டும் என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டாராம்..!

ஆளும் கட்சியினரை கண்மூடித்தனமாக ஆதரிக்கத் துவங்கியதன் பலனை திரையுலகப் புள்ளிகள் சுகமாக அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அதன் கொடுமையை திரையுலகத் தொழிலாளர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்.. இப்போது இது பற்றிய பிரச்சினைகளைக்கூட முதல்வர் பார்வைக்குக் கொண்டு போகாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்றே திரையுலகப் புள்ளிகள் சொல்லி வருகிறார்களாம்.

இத்தனை பேச்சுக்கள், குழப்பங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 22-ம் தேதியன்று முதல்வர் அடிக்கல் நாட்டிவிட்டார்..

ஆனால் வீடுகளை கட்டி முடித்து அவற்றைத் தொழிலாளர்கள் தலையில் கட்டி, அதன் வலியைத் தொழிலாளர்கள் மட்டுமே சுமக்கும்போதுதான், உண்மையில் இந்த கலைஞர் திரைப்பட நகரம் என்னும் திட்டத்தினால் யாருக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பது புரியும்..! 

நன்றி : சூரியக்கதிர் இதழ் - ஆகஸ்ட் 15-31

65 comments:

பாலா said...

//நன்றி : சூரியக்கதிர் இதழ் - ஆகஸ்ட் 15-31//

சூப்பர்ண்ணே!!!!!!!!!

பாலா said...

பதிவே மஹா பாரதம் சைஸுக்கு இருக்கு. இதுல போல்ட் லெட்டர்ல வேற.

கொஞ்சம் இருங்க. மவுஸுக்கு புதுசா பேட்டரி போட்டுட்டு வர்றேன்.

பாலா said...

ஏன்ணே.. வழக்கமா.. ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் தனித்தனியா பதில் சொல்லுறீங்களே...

இங்கே... கீழ நான் போடுற கமெண்ட்டுக்கு எல்லாம் அப்படி பதில் சொல்லுங்க பார்ப்போம்.

பாலா said...

2

பாலா said...

4

பாலா said...

6

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

பாலா said...

அப்படியே... க்,ங், க,ங,ச எல்லாம் எழுதிடவாண்ணே? :)

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
பதிவே மஹாபாரதம் சைஸுக்கு இருக்கு. இதுல போல்ட் லெட்டர்ல வேற. கொஞ்சம் இருங்க. மவுஸுக்கு புதுசா பேட்டரி போட்டுட்டு வர்றேன்.]]]

தம்பி.. கொஞ்சம்தாம்பா எழுதியிருக்கேன்... இதுக்கெல்லாம் போய் இப்படி டிராமா போடலாமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

ஏன்ணே.. வழக்கமா.. ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் தனித்தனியா பதில் சொல்லுறீங்களே...

இங்கே... கீழ நான் போடுற கமெண்ட்டுக்கு எல்லாம் அப்படி பதில் சொல்லுங்க பார்ப்போம்.]]]

தம்பி.. இதைப் படிச்சிப் பார்த்துட்டு ஏன் பதிவு நீளமாச்சுன்னு கேட்டா நான் நிச்சயமா பதில் சொல்வேன்..!

இப்படி நட்ட நடுராத்திரில கொலைவெறித் தாக்குதல் செஞ்சா நான் என்ன செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
அப்படியே... க்,ங், க,ங,ச எல்லாம் எழுதிடவாண்ணே? :)]]]

அதெல்லாம் வேணாம் தம்பி.. இதுவே போதும்..

இதுக்குப் பதிலா உன்னால எத்தனை முடியுமோ.. அத்தனை கள்ள ஓட்டுப் போட்டிருந்தால்கூட சந்தோஷப்பட்டிருப்பேன்..!

சென்ஷி said...

ஹாலி பாலி,

உ.த. எம்புட்டு அடிச்சாலும் தாங்குவார்ங்கறது சரிதான். அதுக்காக இப்படியெல்லாமா அடிக்கறது :))

ராம்ஜி_யாஹூ said...

முப்பத்தி ஒன்றாம் பின்னூட்டம்.

கொடுத்த நிலத்தை வாங்குவதே மேல். சினிமா தொழிலாளர்கள் முப்பது நிமிடம் தாமதாமாக வந்தாலோ, ஒரு சினிமா சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல், மூன்று நாட்கள் தாமதம் ஆகி ரிலீஸ் ஆனாலோ வானம் ஒன்றும் கீழே விழப் போவதில்லை. யாருக்கும் எந்த நட்டமும் இல்லை.

ஏழைகளுக்கு உஅனவு கிடங்கியில் இருந்து உணவு வழங்குவது இல்லை என்று ஒரு பதிவு, இங்கே என்னடா என்றால் திரைப்பட டோளிள்ளர்கள், ஜோடி நம்பர் ஒன்று நடிகர்களுக்கு வீடு மாம்பலத்தில் தர வில்லை, மைலாப்பூரில் தர வில்லை என்று ஒரு கவலை.

ராம்ஜி_யாஹூ said...

me the 33 rd on 08-09-10

ராம்ஜி_யாஹூ said...

பத்து வருடங்களுக்கு முன்பு இரவு இரண்டாம் காட்சிக்கு செல்லும் கூட்டம் எல்லாம் , இப்போது கணினி முன்பு உக்காந்து கொண்டு பின்னூட்டம், கும்மி அடிக்கிறோம்.

நசரேயன் said...

அண்ணே இடுகையைய படிச்சிட்டு வரும் முன்னாடி இவ்வளவு கும்மியா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே நான் படிச்சிட்டேன். (சிரிப்பு போலீஸ்)

இயக்குனர் சார்லஸ் said...

தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் டென்னிஸ் கோர்ட்டில் இருபுறமும் நின்றபடி, தொழிலாளிகளைப் பந்தைப் போல அடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
திரைப்படத் துறையினர் நடத்தும் பாராட்டுக் கூட்டங்கள் மட்டும் முதல்வர்களுக்குத் தேவைப்படுகிறது. மேடையில் ஒன்றைச் சொல்லிவிட்டு அரசாணையில் வேறொன்றை எழுதுவது எத்தனை அக்கிரமம். அரசியல் நையாண்டிப் படங்களைத் தாண்டிவிட்டது இந்த யதார்த்தம்.

//ஆளும் கட்சியினரை கண்மூடித்தனமாக ஆதரிக்கத் துவங்கியதன் பலனை திரையுலகப் புள்ளிகள் சுகமாக அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அதன் கொடுமையை திரையுலகத் தொழிலாளர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்..// உண்மை.

சரவணகுமரன் said...

நல்லா டீட்டெயிலா எழுதியிருக்கீங்க... சூப்பர்...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் நீளத்தை குறைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் ஏகப பட்ட பேர்கள் நன்றாக எழுதுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. ஆதலால் உங்களுடை முழு உழைப்பையும் படிக்க முடியாமல் போகலாம்.

இதை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

நானும் சிந்து சமவெளி படத்தை விமர்சனம் செய்துள்ளேன்---உங்கள் அளவு இல்லா விட்டாலும். முடிந்தால் படியுங்கள்...கீழே link...

http://tamilkadu.blogspot.com

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...
ஹாலி பாலி, உ.த. எம்புட்டு அடிச்சாலும் தாங்குவார்ங்கறது சரிதான். அதுக்காக இப்படியெல்லாமா அடிக்கறது :))]]]

பாரு தம்பி..! இப்படியெல்லாம் செஞ்சா நாளைக்கு என்னை கும்மிக்காரன்னு எல்லாரும் நினைச்சுற மாட்டாங்களா..?

a said...

//
பதில் சொல்ல முடியாமல் திணறிய பெப்ஸி நிர்வாகிகள் பழியை அஜீத் மீது தூக்கிப் போட்டார்கள்
//
ஒரு அப்புராணீய போயி............

//
உண்மையில் இந்த கலைஞர் திரைப்பட நகரம் என்னும் திட்டத்தினால் யாருக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பது
//
இதுக்கு இப்பவே பதில் இருக்குன்னே ...... பலன் பெறப்போவது.. அந்த வீட்டை திரையுலகத் தொழிலாளர்கள்இடம் இருந்து வாங்குபவருக்கு....

பிரபல பதிவர் said...

//ஏழைகளுக்கு உஅனவு கிடங்கியில் இருந்து உணவு வழங்குவது இல்லை என்று ஒரு பதிவு, இங்கே என்னடா என்றால் திரைப்பட டோளிள்ளர்கள், ஜோடி நம்பர் ஒன்று நடிகர்களுக்கு வீடு மாம்பலத்தில் தர வில்லை, மைலாப்பூரில் தர வில்லை என்று ஒரு கவலை//

vazhi mozhikiren

யாசவி said...

Ramji Yahoo


Repeatu :))))

யாசவி said...

Ramji Yahoo repatuu..:)

வடுவூர் குமார் said...

ப‌திவே ப‌ட‌ம் மாதிரி இருக்கு.
பிர‌ச்ச‌னையின் ஆழ‌ம் அதிக‌மாக‌வே தெரிகிற‌து.இன்றைய‌ தேதிக்கு சென்னைக்குள் எங்கு நில‌ம் இருக்கிற‌து இவ்வ‌ள‌வு பெரிய‌ குரூப்புக்கு கொடுக்க‌?
நில‌ம் 52 கி.மீ தொலைவையில் இருந்தாலும் தேவைப்ப‌டும் வ‌ச‌திகளை அதைச்சுற்றியே ஏற்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும் ஆதாவ‌து ம‌ருத்துவ‌ம‌னை/ப‌ள்ளி/தொட‌ர்புடைய‌ வேலை வாய்ப்புக‌ள்.வ‌ட‌ ப‌ழ‌னியை சுற்றியேதான் ந‌ட‌க்க‌னும் என்று ஏதாவ‌து க‌ட்டுப்பாடா?
இதெல்லாம் ந‌ம் இருவ‌ர் கையில் இல்லை என்ப‌து ந‌ன்றாக‌ புரிகிற‌து.

Anonymous said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

Thomas Ruban said...

அண்ணே இந்த கதையை வெச்சு ஒரு திரைப்படம் தயாரித்தால் ஹிட் ஆகும் அல்லது சீரியல் தயாரித்தால் மெகாஹிட் ஆகும் உங்குக்கு எப்படி வசதி அண்ணே நன்றி....

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

முப்பத்தி ஒன்றாம் பின்னூட்டம்.

கொடுத்த நிலத்தை வாங்குவதே மேல். சினிமா தொழிலாளர்கள் முப்பது நிமிடம் தாமதாமாக வந்தாலோ, ஒரு சினிமா சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல், மூன்று நாட்கள் தாமதம் ஆகி ரிலீஸ் ஆனாலோ வானம் ஒன்றும் கீழே விழப் போவதில்லை. யாருக்கும் எந்த நட்டமும் இல்லை.

ஏழைகளுக்கு உஅனவு கிடங்கியில் இருந்து உணவு வழங்குவது இல்லை என்று ஒரு பதிவு, இங்கே என்னடா என்றால் திரைப்பட டோளிள்ளர்கள், ஜோடி நம்பர் ஒன்று நடிகர்களுக்கு வீடு மாம்பலத்தில் தரவில்லை, மைலாப்பூரில் தரவில்லை என்று ஒரு கவலை.]]]

அவரவர்க்கு அவரவர் கவலை ராம்ஜி..!

இங்கேயும் கூலித் தொழிலாளர்களும் இருக்கிறார்களே..!

தினம்தோறும் வேலைக்குப் போனால் 250 ரூபாய் கிடைக்கும். இதுவும் நிரந்தரமில்லை. மாதத்தில் 10 நாட்கள் வேலை கிடைத்தால் பெரிய விஷயம்..! இவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
பத்து வருடங்களுக்கு முன்பு இரவு இரண்டாம் காட்சிக்கு செல்லும் கூட்டம் எல்லாம், இப்போது கணினி முன்பு உக்காந்து கொண்டு பின்னூட்டம், கும்மி அடிக்கிறோம்.]]]

உண்மைதான். இப்போது சினிமா போரடிக்க.. இணையம் இனிக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
அண்ணே இடுகையைய படிச்சிட்டு வரும் முன்னாடி இவ்வளவு கும்மியா?]]]

எல்லாம் நம்ம ஹாலிபாலியோட சேட்டை..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே நான் படிச்சிட்டேன். (சிரிப்பு போலீஸ்)]]]

அவ்ளோதானா..? கருத்து..?

butterfly Surya said...

சூரியகதிருக்காக நீங்க எழுதியதா..? சூரிய கதிரிலிருந்து நீங்க எடுத்து போட்டதா..?

உண்மைத்தமிழன் said...

[[[இயக்குனர் சார்லஸ் said...

தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் டென்னிஸ் கோர்ட்டில் இருபுறமும் நின்றபடி, தொழிலாளிகளைப் பந்தைப் போல அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படத் துறையினர் நடத்தும் பாராட்டுக் கூட்டங்கள் மட்டும் முதல்வர்களுக்குத் தேவைப்படுகிறது. மேடையில் ஒன்றைச் சொல்லிவிட்டு அரசாணையில் வேறொன்றை எழுதுவது எத்தனை அக்கிரமம். அரசியல் நையாண்டிப் படங்களைத் தாண்டிவிட்டது இந்த யதார்த்தம்.]]]

கேட்டால், அவர் காலைப் பிடித்துவிடவில்லையாம்.. அவரென்ன அவங்க அப்பன் வீட்டுச் சொத்தையா கொடுக்குறாரு..?

//ஆளும் கட்சியினரை கண்மூடித்தனமாக ஆதரிக்கத் துவங்கியதன் பலனை திரையுலகப் புள்ளிகள் சுகமாக அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அதன் கொடுமையை திரையுலகத் தொழிலாளர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்..//

உண்மை.]]]

பாவம் தொழிலாளர்கள்..! வீட்டின் விலை குறைவாக இருந்தாலாவது அவர்கள் கட்டுவார்கள். ஆனால் அவர்களது சக்திக்கு மிஞ்சியதாக இருந்தால் அவர்களென்ன செய்வார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[சரவணகுமரன் said...

நல்லா டீட்டெயிலா எழுதியிருக்கீங்க... சூப்பர்...]]]

நன்றி சரவணக்குமரன்..! சில விஷயங்களை முழுமையாக எழுதினால்தான் எல்லோருக்கும் நல்லது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் நீளத்தை குறைத்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் ஏகபபட்ட பேர்கள் நன்றாக எழுதுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. ஆதலால் உங்களுடை முழு உழைப்பையும் படிக்க முடியாமல் போகலாம்.
இதை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.]]]

தங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றிகள் அம்பி..!

இப்போது கொஞ்சம், கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறேன்..!

சில விஷயங்களில் மட்டுமே முழுத் தகவலையும் குறிப்பிட வேண்டியிருப்பதால் பெரிதாகிவிடுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//பதில் சொல்ல முடியாமல் திணறிய பெப்ஸி நிர்வாகிகள் பழியை அஜீத் மீது தூக்கிப் போட்டார்கள்//

ஒரு அப்புராணீய போயி]]]

அவங்களுக்கு தப்பிக்க வேற வழியில்ல போலிருக்கு..! அதுனால அஜீத் சிக்கிட்டாரு..!

//உண்மையில் இந்த கலைஞர் திரைப்பட நகரம் என்னும் திட்டத்தினால் யாருக்கு பலன் கிடைத்திருக்கிறது என்பது//

இதுக்கு இப்பவே பதில் இருக்குன்னே.. பலன் பெறப் போவது. அந்த வீட்டை திரையுலகத் தொழிலாளர்கள் இடம் இருந்து வாங்குபவருக்கு....]]]

இதிலும் ஒரு நிபந்தனை விதிச்சிருக்காங்க..!

முழுத் தொகையையும் கட்டினாலும் முதல் 5 வருடங்களுக்கு நீங்கள் வீட்டை விற்க முடியாது.. கூடாது..

அப்படியே விற்பனை செய்தாலும் வேறொரு பெப்ஸி உறுப்பினருக்கு மட்டுமே விற்க முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

//ஏழைகளுக்கு உஅனவு கிடங்கியில் இருந்து உணவு வழங்குவது இல்லை என்று ஒரு பதிவு, இங்கே என்னடா என்றால் திரைப்பட டோளிள்ளர்கள், ஜோடி நம்பர் ஒன்று நடிகர்களுக்கு வீடு மாம்பலத்தில் தர வில்லை, மைலாப்பூரில் தர வில்லை என்று ஒரு கவலை//

vazhi mozhikiren]]]

இங்கேயும் தொழிலாளர்கள் இருக்காங்கண்ணே.. அவங்களையும் கொஞ்சம் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[யாசவி said...

Ramji Yahoo


Repeatu :))))]]]

உஷ்ஷ்ஷ்ஷ்.. அப்பா.. முடியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[வடுவூர் குமார் said...

ப‌திவே ப‌ட‌ம் மாதிரி இருக்கு.

பிர‌ச்ச‌னையின் ஆழ‌ம் அதிக‌மாக‌வே தெரிகிற‌து. இன்றைய‌ தேதிக்கு சென்னைக்குள் எங்கு நில‌ம் இருக்கிற‌து இவ்வ‌ள‌வு பெரிய‌ குரூப்புக்கு கொடுக்க‌?

நில‌ம் 52 கி.மீ தொலைவையில் இருந்தாலும் தேவைப்ப‌டும் வ‌ச‌திகளை அதைச் சுற்றியே ஏற்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும். ஆதாவ‌து ம‌ருத்துவ‌ம‌னை / ப‌ள்ளி / தொட‌ர்புடைய‌ வேலை வாய்ப்புக‌ள். வ‌டப‌ழ‌னியை சுற்றியேதான் ந‌ட‌க்க‌னும் என்று ஏதாவ‌து க‌ட்டுப்பாடா?

இதெல்லாம் ந‌ம் இருவ‌ர் கையில் இல்லை என்ப‌து ந‌ன்றாக‌ புரிகிற‌து.]]]

எனக்கும் புரிகிறது ஸார்..!

ஆனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர், பிள்ளைகளின் படிப்பு, மருத்துவ வசதிகள்.. இது எல்லாத்தையும் பார்க்கணும்ல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[d said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html]]]

அண்ணே.. யாருங்கண்ணே நீங்க..? தைரியமா முகத்தைக் காட்டிட்டு எழுதுண்ணே.. இன்னும் நல்லாயிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
அண்ணே இந்த கதையை வெச்சு ஒரு திரைப்படம் தயாரித்தால் ஹிட் ஆகும் அல்லது சீரியல் தயாரித்தால் மெகாஹிட் ஆகும் உங்குக்கு எப்படி வசதி அண்ணே நன்றி....]]]

சினிமாதான்.. எடுத்திருவோம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
சூரியகதிருக்காக நீங்க எழுதியதா..? சூரிய கதிரிலிருந்து நீங்க எடுத்து போட்டதா..?]]]

இப்படியெல்லாம் வெளிப்படையா கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்றது..?

யாரோ "நமது நிருபர்" அப்படீன்ற ஒருத்தர் சூரியக்கதிர் பத்திரிகைல எழுதியிருக்கார்..!

பித்தன் said...

//ஆளும் கட்சியினரை கண்மூடித்தனமாக ஆதரிக்கத் துவங்கியதன் பலனை திரையுலகப் புள்ளிகள் சுகமாக அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அதன் கொடுமையை திரையுலகத் தொழிலாளர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்.. இப்போது இது பற்றிய பிரச்சினைகளைக்கூட முதல்வர் பார்வைக்குக் கொண்டு போகாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்றே திரையுலகப் புள்ளிகள் சொல்லி வருகிறார்களாம்.//

unmaithaan enna pannamudiyum thaanaith thalaivar thamizh kaavalar vaazhga....

பித்தன் said...

evan eppadi ponaa namakkenna namma pinnaadi neruppu paththaatha varaikkum naama safe appadinnu perunthalaigal ninaichchirukkum pola.

மணிஜி said...

உங்களுக்கு மனசாட்சியே இல்லியா?

நாமக்கல் சிபி said...

//நன்றி : சூரியக்கதிர் இதழ் - ஆகஸ்ட் 15-31
//

Kastappattu ivlo type pannurathukku badhila Scan panni pottirukkalame!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//ஆளும் கட்சியினரை கண்மூடித்தனமாக ஆதரிக்கத் துவங்கியதன் பலனை திரையுலகப் புள்ளிகள் சுகமாக அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அதன் கொடுமையை திரையுலகத் தொழிலாளர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள்.. இப்போது இது பற்றிய பிரச்சினைகளைக்கூட முதல்வர் பார்வைக்குக் கொண்டு போகாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்றே திரையுலகப் புள்ளிகள் சொல்லி வருகிறார்களாம்.//

unmaithaan enna pannamudiyum thaanaith thalaivar thamizh kaavalar vaazhga....]]]

பித்தன்..! தாத்தா சொன்னா சொன்னதுதான். அவர் மனதைக் குளிர வைக்க வேண்டியதுதான் நம் கடமைன்னு இவுங்க நினைக்கிறாங்க.. அதான் சிக்கல்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
evan eppadi ponaa namakkenna namma pinnaadi neruppu paththaatha varaikkum naama safe appadinnu perunthalaigal ninaichchirukkum pola.]]]

இல்லை.. அவர்களையும் குளிர்விக்க சில ஏக்கர் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. பின்பு ஏன் அவர்கள் பேசுகிறார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
உங்களுக்கு மனசாட்சியே இல்லியா?]]]

இருக்கிறதாலதாண்ணே இதையே எழுதியிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[என்.ஆர்.சிபி said...

//நன்றி : சூரியக்கதிர் இதழ் - ஆகஸ்ட் 15-31//

Kastappattu ivlo type pannurathukku badhila Scan panni pottirukkalame!]]]

அது அவ்ளோ நல்லாயிருக்காது சிபி..!

புரட்சித்தலைவன் said...

what's your sugesstion??
where govt have land near vadapalani?

உண்மைத்தமிழன் said...

[[[புரட்சித்தலைவன் said...
what's your sugesstion?? where govt have land near vadapalani?]]]

இல்லை. 52 கிலோ மீட்டரெல்லாம் போகாமல் இன்னும் கொஞ்சம் பக்கத்தில் தேடியிருக்கலாம்..!