புத்தாண்டில் புது நம்பிக்கை!!!03-01-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


தாமதத்திற்கு மன்னிக்கவும்.

முதற்கண் வலையுலகப் பதிவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வழமைபோல அப்பன் முருகனின் திருவிளையாடலால் வருடத்தின் முதல் நாளே என்னால் பதிவு போட இயலாமல் போய்விட்டது. பரவாயில்லை. இதுவும் நல்லதற்கே என்று நினைத்துக் கொள்கிறேன்.

கடந்த வருடத்தில் எதை, எதையெல்லாம் செய்ய நினைத்தேனோ அதையெல்லாம் செய்து முடித்தேனா என்ற எண்ணவோட்டத்தில் எனது கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் அதில் எவ்விதக் குறிப்புமில்லாமல் வாழ்க்கைப் பாதை வெறிச்சோடிக் கிடக்கிறது.

நினைத்ததெல்லாம் நடக்கவில்லை என்றாலும், சிலவற்றை செய்து முடித்த திருப்தியும் உண்டு. இந்தாண்டு மிச்சத்தையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

நிறைய குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்திலாவது கதை, திரைக்கதை, வசனம் என்று பணி செய்ய வேண்டும். மனதுக்குப் பிடித்தமான வேலை கிடைக்க வேண்டும். சின்னத்திரையிலாவது எழுத்து பணியினைத் தொடர வேண்டும் என்கிற ஆசையும், எண்ணமும் சென்ற வருடமும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இந்தாண்டாவது முடிகிறதா என்று பார்ப்போம்.

இப்போதிருக்கும் வலைப்பதிவைத் தவிர புதிய ஆன்மிகப் பதிவொன்றை அப்பன் முருகன் பெயரால் துவக்க வேண்டும் என்கிற எண்ணமும் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இதையும் செய்து முடித்தாக வேண்டும்.

சென்ற வருடம் செய்து முடித்த ஒரு சாதனையாக எதையும் சொல்ல முடியாத நிலை அடுத்த வருடமும் இருக்கக் கூடாது. முயற்சியும், ஆக்கமும், உழைப்பும் தொடர்ந்து செய்து, பின் அவனருள் கிடைத்து இந்தாண்டாவது பெயர் பெற்றிடல் வேண்டும் என்பது, எனது உள்ள அவா. பார்ப்போம்.

இப்பதிவு எனது 250-வது பதிவு என்பதும் தற்செயலாக நடந்ததுதான்.

ஆனால் கடந்து வந்த பாதையில் எத்தனை, எத்தனையோ எதிர்ப்புகள், முகமூடித் தாக்குதல்களால் சோர்வடைந்து விலக நினைத்த நேரத்தில் தட்டிக் கொடுத்து, ஆறுதல் சொல்லி, தைரியம் தந்து அரவணைத்த வலையுலக நல்இதயங்களின் அன்பான வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும், மீண்டும் புத்துயிர்ப்பு தந்து வலையுலகில் வலம் வர வைத்தது. இன்றுவரையில் என்னை வலையுலகில் இருக்க வைத்து, தோள் கொடுத்திருக்கும் அந்த நல்ல உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறையும், மோதல்களும், தாக்குதல்களும், மனித உயிரிழப்புகளும் குறைந்து ஒரு அதிகப்படியான அமைதியையும், மக்களின் நிம்மதிப் பெருமூச்சுக்களும் உலகில் தழைத்தோங்கிட வேண்டும் என்பதை இந்தாண்டு நமது எதிர்பார்ப்பாக வைத்துக் கொள்வோம்.

புத்தாண்டு வாழ்த்தாக எனக்குக் கிடைத்த ஒரு காலண்டரில் இருந்த கீழ்க்கண்ட கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

“ஜாதிகள் இல்லையடா மனிதா!
உலகத்தில் இல்லாமல் இருப்பது சாதி!

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வீதி!

இவற்றில் பலவகை மோதி

மனித உயிர்கள் ஆனது பாதி

என்று தினம்தினம் ஒரு சேதி!!

இதை கேட்க இல்லை நாதி!

இதற்கு கிடைக்க வேண்டும் நீதி!

சாதி, மதம் இல்லை என்ற மந்திரம் ஓதி

வேற்றுமை என்னும் தீயை அணைப்போம் ஊதி!!

ஏற்றுவோம் ஒற்றுமை என்னும் ஜோதி!!!..”


இதே நம்பிக்கையுடன் இந்த வருடத்தையும் எதிர்கொள்வோம்.

வாழ்க வளமுடன்

நன்றி

17 comments:

gulf-tamilan said...

இதே நம்பிக்கையுடன் இந்த வருடத்தையும் எதிர்கொள்வோம்.

வாழ்க வளமுடன் !!!

அபி அப்பா said...

என்ன உண்மைதமிழரே! தலைப்பு மட்டும் போட்டு இருக்கீங்க பதிவு எங்க? எதுனா உடம்புக்கு முடியலையா?

இரா. வசந்த குமார். said...

happy new year wishes to u 2...!

when will the reviews of chennai film festival start....?

தருமி said...

டி. ஆர். எப்போ இருந்து காலண்டர் எல்லாம் போடுறாரு?

வளர வாழ்த்துக்கள்

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

உண்மைத்தமிழன் said...

//gulf-tamilan said...
இதே நம்பிக்கையுடன் இந்த வருடத்தையும் எதிர்கொள்வோம்.
வாழ்க வளமுடன்!!!//

நன்றி கல்ஃப் தமிழன் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//அபி அப்பா said...
என்ன உண்மைதமிழரே! தலைப்பு மட்டும் போட்டு இருக்கீங்க பதிவு எங்க? எதுனா உடம்புக்கு முடியலையா?//

அபியப்பா.. கண்ணு சரியாத் தெரியலையா..? நல்லா உத்துப் பாருங்கப்பா..

"புத்தாண்டில் புது நம்பிக்கை" என்பதுதான் தலைப்பு.

அதன் கீழ் இருப்பதுதான் பதிவு..

(இவ்ளோ சின்னப் பதிவுக்கு எவ்ளோ விளக்கமா சொல்ல வேண்டியிருக்கு..?)

உண்மைத்தமிழன் said...

//இரா. வசந்த குமார். said...
happy new year wishes to u 2...!
when will the reviews of chennai film festival start....?//

வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் வசந்தகுமார்.

விரைவில் உலகத் திரைப்பட விழா படங்களை பற்றிய எனது பார்வையை சமர்ப்பிக்கிறேன்.. சற்றுப் பொறுக்கவும்..

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
டி. ஆர். எப்போ இருந்து காலண்டர் எல்லாம் போடுறாரு?
வளர வாழ்த்துக்கள்//

அதுதான் எனக்கும் தெரியல ஸார்.. ஆனா நல்லா இருந்தது இல்ல.. அதுனாலதான் எடுத்துப் போட்டேன்..

இதுக்கு மேலேயும் நான் எப்படி 'வளரணும்னு' எதிர்பார்க்குறீங்க..? சரி.. உங்க வாய்முகூர்த்தத்துல எங்கிட்டாச்சும், எதுனாச்சும் வளர்ந்து பலிக்குதான்னு பார்ப்போம்..

நன்றிங்கோ பேராசிரியரே..

உண்மைத்தமிழன் said...

//வடகரை வேலன் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.//

வேலன் ஸார் மிக்க நன்றி..

தாங்கள் எனக்கு லின்க் கொடுக்க ஆரம்பித்த பின்பு பார்வையாளர்களின் வருகையும் உயரத் துவங்கியுள்ளது..

அதற்கும் இன்னொரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

அன்பு பதிவர்களே..

இந்தப் பதிவில் அப்படியென்ன நான் பெரிதாக எழுதிவிட்டேன் என்று தெரியவில்லை.

தமிழ்மணத்தின் பரிந்துரை எதிர்ப்பாக மைனஸ் குத்தை குத்தியிருக்கிறீர்களே.. இதெல்லாம் நியாயமா..?

வடுவூர் குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

cool blog

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 250வது பதிவிற்கும் நல்வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

வடுவூர் ஸார், காஸ்ட்யூம் ஜூவல்லரி, சீனா ஸார்..

உங்களது வாழ்த்துக்களுக்கு எனது நன்றி..

நித்யன் said...

அப்பன் முருகன் உங்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்க அவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்பு நித்யன்

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
அப்பன் முருகன் உங்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்க அவனை வேண்டிக்கொள்கிறேன்.
அன்பு நித்யன்//

அன்பு நித்யன்.. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்..