06-07-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்த கூகிள் பஸ் வந்தாலும் வந்துச்சு.. நமது வலையுலகப் பதிவர்களில் பாதி பேரின் பதிவுகளை குறைத்துவிட்டது. உடனுக்குடன் பதில்கள்.. கிறுக்கல்கள்.. சிணுங்கல்கள்.. சண்டைகள்.. கெஞ்சல்கள்.. சச்சரவுகள்.. என்று சுவாரசியமாகச் செல்வதால் அதிக நேரத்தை உறிஞ்சியெடுத்து பதிவு எழுதவே பதிவர்களுக்கு இப்போது சோம்பேறித்தனமாகிவிட்டது..!
"இட்லி-வடை பதிவுகள் ஏன் எழுதவில்லை..?" என்று ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து அன்புடன் மிரட்டிய டாக்டர் பிரகாஷுக்கும், ருவாண்டாவில் இருந்து அலைபேசியில் ஆடிய தோழருக்கும், சாட்டிங்கில் வந்து எழுதும்படி அன்புக் கட்டளையிட்ட அண்ணன் சீமாச்சுவுக்கும் நன்றி..!
ஏதாவது பெரிய, அரிய விஷயங்கள் கிடைத்தால் மட்டும்தான் இட்லி-வடை பதிவு போடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்.. அதில் எழுதலாம் என்று வைத்திருந்த செய்திகளையெல்லாம் உடனுக்குடன் செய்தியை முந்தித் தருவது என்ற 'தினத்தந்தி' ஆசையில் கூகிளாண்டவரின் பஸ்ஸில் வெளியிட்டு, என் 'வெறி'யைத் தீர்த்துக் கொண்டதால்(நமது மணிஜி, பஸ்ஸில் வெளுத்துக் கட்டுவதால் “வெறி” என்று சொல்ல வேண்டியிருக்கிறது) இட்லி-வடைக்கு கடும் பஞ்சமாகிவிட்டது..!
இப்படியேவிட்டால் 'இட்லி-வடை' என்கிற வார்த்தையே வலையுலகத்தினருக்கு மறந்துவிடும் அபாயம் இருப்பதை அறிந்து இந்த மாதத்தில் இருந்து அதனைச் செப்பனிட்டு, சீராக்கி, உருவாக்கி அளிக்கலாம் என்று புதிய கொள்கை முடிவொன்றை எடுத்திருக்கிறேன்..!
இனி 'இட்லி-வடை'யின் ஸ்டைலை மாற்றி அந்த வாரத்திய அரசியல் செய்திகள், சினிமா செய்திகள் பற்றிய எனது விமர்சனமாக மாற்றித் தருவதாக முடிவெடுத்துள்ளேன்..! வாராவாரம் புதன்கிழமையன்று இந்தக் கொடுமையை நீங்களெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது உங்களது தலையெழுத்து..! வேறு வழியில்லை.. அனுபவிங்க..!
சக்ஸேனா கைது..!
அம்மாவின் அதிரடியில் முதல் ஆளாகச் சிக்கியிருப்பது ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

நித்தி-ரஞ்சிதா விஷயத்தை 2 நாட்களாக விடாமல் ஒளிபரப்ப தெரிந்த சன் டிவிக்கு, இந்தக் கைது மேட்டரை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மனமில்லை.. "இந்தக் கைது விவகாரத்தை சட்டப்படி அணுகப் போகிறோம்"னு பிரஸ்ஸுக்கு நியூஸ் மட்டும் கொடுத்திருக்காங்க..! சக்ஸேனா கைது என்றவுடனேயே சன் டிவியின் பங்குகளின் விலையும் கொஞ்சூண்டு குறைஞ்சிருக்காம்.. நேற்று மட்டும் 11 ரூபாய் குறைந்ததாகச் சொல்கிறார்கள்..!
சக்ஸேனா கைது என்றதும் யார் சந்தோஷப்பட்டார்களோ இல்லையோ.. நிச்சயமாக விஜய் சந்தோஷப்பட்டிருப்பார்..! 'வேட்டைக்காரன்' படத்தின் பிரமோஷனுக்காக தன்னை பாடாய்ப்படுத்திய சன் பிக்சர்ஸை, விஜய்யால் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

குடும்பத்திற்காக படம் பார்க்க வேண்டும் என்று சொல்லி, 'வேட்டைக்காரன்' படப் பெட்டியைக் கேட்டு ஒரு மெளனப் போராட்டமே நடத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். ம்ஹூம்.. அசைந்து கொடுக்கவில்லை சக்ஸேனா. கடைசியாக சன் டிவி அலுவலகத்துக்கே போய் பஞ்சாயத்து பேசித்தான் பெட்டியையும், பெர்மிஷனையும் வாங்கி வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அத்தோடு தலை முழுக வேண்டிய லிஸ்ட்டில் சன் பிகசர்ஸையும் சேர்த்திருந்தார் விஜய்..!
சன் பிக்சர்ஸின் சி.இ.ஓ. என்ற பதவியை தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ரேஞ்ச்சுக்கு பயன்படுத்தியவர் என்றுதான் திரையுலகத்தில் சக்ஸேனாவைக் குற்றம்சாட்டுகிறார்கள். இப்போது அவர் கைதாகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகூட அதே தயாரிப்பாளரால் சென்ற வருடமே தயாரிப்பாளர் சங்கத்திலும், விநியோகஸ்தர் சங்கத்திலும், திரைப்பட வர்த்தக சபையிலும் புகாராக அளிக்கப்பட்டதுதான்.
யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற தயக்கத்தில், “நீங்களே சமாதானமா பேசித் தீர்த்துக்குங்களேன்” என்றுதான் சொல்லி டபாய்த்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தில்..! சங்கப் பதிவேட்டில் பதியக்கூட வேண்டாம் என்றார்களாம் நிர்வாகிகள்.
இந்த அளவுக்கு ஆளும் கட்சியின் பேரன்கள் மீதே பயம் கொண்டு ஆட்சி நடந்திருக்கிறது என்றால் ம்ஹும்.. இவர் நிச்சயம் தண்டனை பெற வேண்டியவர்தான். இன்னும் செக்கர்ஸ் ஹோட்டல் கேஸ் ஒன்றும் பாக்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து ஜாமீன் கேட்கும் சூழல் வரும்போது அந்த வழக்கும் பாயும் என்று நினைக்கிறேன்..! சரத்குமார் ரெட்டிக்கு ஒரு நீதி.. அவரது இனிய நண்பர் சக்ஸேனாவுக்கு இன்னொரு நீதியாகிவிடக் கூடாது..!
சூப்பர் ஸ்டார்களுக்குள் ஒற்றுமை..!
இது இமெயிலில் வந்த செய்தி. கன்னட சூப்பர் ஸ்டார்கள் ராஜ்குமாருக்கும், விஷ்ணுவர்த்தனுக்கும் இருந்த ஒற்றுமைகளாக சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்..!
Kannada cinema has lost both its eyes in the space of 44 months: Dr Raj Kumar in April 2006 and Dr Vishnuvardhan in December 2009.
1. Raj Kumar was born on the 24th: 2+4 =6; Vishnuvardhan was born on the 18th: 1+8 =9, both 6 and 9 are multiples of 3.
2. Raj Kumar died on the 12th: 1+2 =3; Vishnuvardhan died on the 30th: 3+0 =3, again multiples of 3.
3. Raj Kumar died in ‘06; Vishnuvardhan in ’09; both years are multiples of 3.
4. Raj Kumar died two days before new year’s day as per the Souramana calendar; Vishnuvardhan died two days before new year’s day in the Gregorian calendar.
5. Raj Kumar and Vishnuvardhan both died on Wednesday.
6. Muthuraju: 9 letters; Sampath Kumar: 12 letters, again both multiples of 3.
7. Raj Kumar was born on the 24th and died on the 12th, a difference of 12 days; Vishnuvardhan was born on the 18th and died on the 30th, again a difference of 12 days.
8. Raj Kumar died in Ramaiah hospital: Rajkumar and Ramaiah, both starting with R; Vishnuvardhan died in Vikram Hospital: Vishnuvardhan and Vikram, both starting with V.
9. Raj Kumar’s birth and death was in the same month, April; Vishnuvardhan’s birth and death was in the same city, Mysore.
10. Raj Kumar’s film career started in ’54: 5+4 = 9; Vishnuvardhan’s film career started in ’72: 7+2 = 9.
11. Raj Kumar received honorary doctorate from Mysore University in 1976, 22 years after his first film; Vishnuvardhan received honorary doctorate from Bangalore University in 2005, 33 years after his first film.
12. Raj Kumar’s 100th film was released in 1968; Vishnuvardhan’s 100th film was released in 1986.
13. Raj Kumar and Vishnuvardhan both took 14 years to reach the 100 film mark.
14. Both Raj Kumar and Vishnuvardhan died after a massive heart attack. Raj Kumar died on the 12th day; Vishnuvardhan died in the 12th month.
15. Raj Kumar was cremated in Kanteerava Studio, north Bangalore; Vishnuvardhan was cremated in Abhiman Studio, south Bangalore.

ராணுவம் வழங்கிய நீதி..!
பழம் பறிக்க வந்த சிறுவர்களை விரட்ட கடைசியில் துப்பாக்கிதான் கிடைத்ததா அந்த லெப்டினன்ட் கர்னலுக்கு..?
எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அப்பட்டமான படுகொலை இது.. சிறுவன் குடியிருப்புக்குள் நுழைந்து அதிகப்பட்சமாக என்ன செய்ய முடியும்..? மிலிட்டிக்காரர்கள் எதிர்பார்க்கும் நியாயத்தையும், ஒழுங்கையும் வெளி ஆட்களிடம் எதிர்பார்க்கலாமா..?
பையனை விரட்டியிருக்கலாம். திட்டி அனுப்பியிருக்கலாம்.. இதையெல்லாம் விட்டுவிட்டு குருவி சுடுவதைப் போல பொசுக்கென்று சுட்டுவிட்டு இன்றுவரையில் அந்த நபரை போலீஸின் கையில் ஒப்படைக்காமல் இருப்பதை பார்த்தால் இந்த நாட்டில் ராணுவத்திற்கும் ஏதோ பெரிய மரியாதையும், சக்தியும் இருப்பதுபோல் தோன்றுகிறது..!
இ.பி.கோ. செக்ஷனில்கூட லோக்கலில் குடியிருக்கும் ராணுவத்தினர் அடங்க மாட்டார்கள் என்றால் ம்ஹூம்.. சத்தியமாக இந்தியாவில் ஜனநாயகம் ஓஹோவென்றுதான் இருக்கிறது..!
இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திச் சென்ற இந்திய ராணுவ வாகனங்களை மதுக்கரை அருகே தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிடர் கழகத்தினரையும், பொதுமக்களையும் வெறி கொண்டு தாக்கிய ராணுவத்தினரைக்கூட இன்னமும் தமிழகத்து போலீஸ் கைது செய்யவில்லை..! அடையாளம் தெரியாத யூனிபார்ம் அணிந்த நபர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதாகச் செய்தி..!
ஒருவேளை யாராவது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் உயரதிகாரிகளின் பிள்ளைகளை இதுபோல் சுட்டுத் தள்ளியிருந்தால், இன்றைக்கு போலத்தான் அமைதியாக விசாரித்துக் கொண்டே இருப்பார்களோ..?
சத்தியமா இந்தியப் பொண்ணுங்கதாங்கோ..!
இந்த டான்ஸை முதல் முறை பார்த்தபோது பயந்து போனேன்.. "என்னங்கடா இது இந்தியப் பொண்ணுங்கதானா இவுங்கோ..?" என்று..! ஏதோ திருமண நிகழ்ச்சியாம்.. பிரான்ஸ் அல்லது கனடாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..! "இதுவெல்லாம் அங்க சகஜம்.." என்கிறார் வீடியோவை வெளியிட்டிருந்தவர்..! தமிழ்நாட்டிலும் இந்தக் கொண்டாட்டங்கள் உண்டுதான்.. என்ன வெளில வராது. அவ்வளவுதான்..!

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெறாத பாடல் காட்சி..!
இந்தப் பாடல் காட்சியையும் சமீபத்தில்தான் பேஸ்புக் வட்டாரத்தில் பார்க்க நேர்ந்தது..!
'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட பாடல் காட்சி என்று வெளியிட்டிருந்தார்கள்.
“அண்ணாத்த ஆளுதான் ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..” பாடலின் சிச்சுவேஷனில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட அதே இடத்திலேயே இந்தப் பாடலும் படமாக்கப்பட்டிருக்கிறது..! இந்தப் பாடலில் நடிகை காந்திமதியும் இருக்கிறார். ஆனால் வெளியான படத்தில் இல்லை. ஒருவேளை காந்திமதியையும் நீக்கிவிட்டு, ஜனகராஜுக்கு இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்து கதையை மாற்றி அந்தப் பாடலை ஜெகஜோதியாக எடுத்திருக்கிறார் போலிருக்கிறது..!

கமலின் இன்னுமொரு வெற்றிப் படத்திலும் இதே போன்ற ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு பின்பு உடன் நடித்த ஒரு மூத்த நடிகையின் எதிர்ப்பால்(உடன் நடித்த நடிகையுடன் நம்ம அண்ணன் அப்படி உருக்கி, உருட்டியிருந்தாராம்..) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அது என்ன படமென்று பதிவர்களுக்குத் தெரியுமா..? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்..!
பாவம் சாருநிவேதிதா..!
மத்தளத்துக்கு 2 பக்கமும் இடி என்பதைப் போல இணைய உலகில் அனைத்துத் தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றிருக்கும் சாரு, கூடவே இலவச இணைப்பாக “பாரதிக்குப் பிறகு நீதான்யா..” என்று தன்னால் புகழப்பட்டவராலேயே மறைமுகமாக “கெட் அவுட்” என்று சொல்லப்பட்டு வெளியில் தள்ளப்பட்டுள்ளார்..! ஒருவகையில் இது எல்லாவற்றுக்கும் சாருவேதான் காரணம்..! அவருடைய இயல்பான குணமே பல நண்பர்களை அவரிடமிருந்து தள்ளிவைத்துவிட்டது..!
காமம் என்பது கொண்டாடக் கூடியது என்றாலும், அதனை செய்வதற்கும் இடம், முறைகள் இருக்கின்றன..! ராஜேந்திரகுமாரும், புஷ்பா தங்கத்துரையும்கூட தனிப்பட்ட முறைகளிலும், பேச்சுக்களிலும் தங்களது எழுத்தை துளியும் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டவர்கள். ஆனால் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சாரு இன்றைக்கு செய்திருக்கும் செயலினால் அவரது கவர்ச்சியான எழுத்து நடையால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய அபிமானிகள்கூட கருத்துச் சொல்ல முடியாத தத்தளிப்பில் இருக்கிறார்கள்.
சாருவின் குணம் ஏற்கெனவே உலகமறிந்தது..! சாட்டிங்கில் பேசியிருக்கும், அவரது பேச்சுக்களில் குறைந்தது 60 சதவிகிதப் பேச்சு அவரது இணையத்தளத்திலேயே இருக்கிறது..! அதனால் இதுவொன்றும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இப்படியெல்லாம் சாரு பேசவில்லை என்றால்தான், எனக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்கும்..!
இன்னொரு பக்கம் தனது புத்தகம் விற்கவேயில்லை என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்த சாருவுக்கு அவல் போட்டுவிட்டது கிழக்கு பதிப்பகத்தின் ஒரு வரிச் செய்தி. “தங்களுடைய விற்பனை இணையத்தளம் மூலம், அதிகமாக விற்பனையான புத்தகம் சாருவின் 'தேகம்'தான்..” என்று என்றைக்கு கிழக்கு அறிவித்ததோ, அன்றைக்கே இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்தேன்.
'உயிர்மை' இல்லையேல் சாரு இல்லைதான்.. ஆனால் சாரு இல்லாமல் போயிருந்தாலும் 'உயிர்மை' இருந்திருக்கும். அதற்கு சுஜாதா இருக்கிறார்.. மாலை அணிவித்தவரே கழுத்தை நெரிக்கவும் செய்கிறார் என்றபோது ஹமீதுவால் என்ன செய்ய முடியும்..? தன்னைக் காப்பாற்றிக் கொண்ட பின்புதானே நியாயம் கேட்க முடியும்.. அதுதான் சாருவின் கைகளை வெட்டிக் கொண்டிருக்கிறார்..!
4 பக்க நோட்டீஸுக்காக பத்திரிகா தர்மத்தை மீறி, பத்திரிகை வெளிவரும் முன்பேயே அதில் எழுதப்பட்ட கட்டுரையை இணையத்தில் போட்டுவிட்ட சாருவின் செயல் நியாயமில்லைதான். ஆனால் இமயமலை ரேஞ்ச்சுக்கு உயர்த்திப் பேசிக் கொண்டிருப்பவனுக்கு, எலிக்குஞ்சுக்கு கொடுக்கும் மரியாதைகூட இல்லாமல் நோட்டீஸ் விட்டு எச்சரிப்பது அந்த எழுத்தாளனின் தன்மானத்தை உரசிப் பார்த்துவிட்டது போல..!
சாரு எங்கேயும் நீண்ட நாட்கள் நீடித்து நிலைத்திருந்ததில்லை. யாருடனும் நெடிய நட்பையும் வைத்துக் கொண்டிருந்ததில்லை. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் அமோகமாக முதலிடத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் 'துக்ளக்'கில் அருள் பாலித்து வரும் சாருவுக்கும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் பஞ்சாயத்து பெரிசு 'சோ'வுக்கும் எப்போது சண்டை மூளும் என்று எதிர்பார்த்து நாமும் காத்திருப்போமாக..!
இனி சாரு, தைரியமாக 'கிழக்கு' நோக்கி வீறு நடை போட்டுச் செல்லலாம்..! அங்கு போன பின்பாவது, வங்கிக் கணக்கு எண் கொடுத்து பணம் கேட்கும் நிலைமை அந்த அறிவழகனுக்கு வராமல் இருக்கட்டும்..!

விடைபெற்றார் நயன்ஸ்..!
பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு நடிகை நயன்தாரா, சினிமாவுலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றிருக்கிறார்..!
தெலுங்கின் மூத்த இயக்குநர் திரு.பாப்பு இயக்கிய “ஸ்ரீராம ராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு அன்றைய நாளின் முடிவில் கண்ணீருடன் விடைபெற்றிருக்கிறார் நயன்தாரா..!
“கல்யாணமானா என்ன? பிள்ளை பெத்துட்டும், கொஞ்ச நாள் கழிச்சும் எத்தனை பேர் நடிக்க வரலை.. நீயும் திரும்பி வரலாம்..” என்று ஆறுதல் கூறியவர்களிடம், நடிக்கக் கூடாது என்ற தனது காதலரின் உத்தரவைச் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்..!
ம்.. பொல்லாத சனி உச்சியில் இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்? எப்படியோ ஒரு நல்ல நடிகையை தமிழ்த் திரையுலகம் தற்போதைக்கு இழந்துவிட்டது..!
இப்படித்தான் நடிகை ரேவதி, சுரேஷ் மேனனை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது பத்திரிகையாளர்களிடம் உறுதியுடன் சொன்னார் “இனிமேல் நோ ஷீட்டிங்” என்று..!
'புன்னகை மன்னன்' ஷூட்டிங்கின் இறுதி நாளில் கமலும், இயக்குநர் சிகரமும் ஆளுக்கொரு பொக்கே கொடுக்க அவர்களுக்கே கல்யாண பத்திரிகை கொடுக்காமல், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்து கொண்டார்..! என்ன ஆச்சு..? திரும்பவும் “அரங்கேற்ற வேளை”யில் ரீ என்ட்ரி..! இதேபோல நயனும் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்போம்..!

ரஜினியின் பேரன்கள்..!
இது எத்தனை நாளைக்கு என்றுதான் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!
பிள்ளைகளை மீடியாக்களின் பார்வையில் படாமலேயே வளர்க்கப் போவதாகச் சொல்லியிருந்த தனுஷ்-ஐஸ்வர்யாவின் சபதம், பிள்ளைகளின் பெரியப்பன் கல்யாணத்தில் புஸ்வானமாகிவிட்டது..!

சவுந்தர்யாவின் திருமணத்தில்கூட பிள்ளைகளை வெளிக்காட்டாமல் வேலைக்காரப் பெண்களிடம் கொடுத்து அரங்கத்தின் ஓரத்தில் அமர்த்தியிருந்தார்கள்.
'அது போன்ற குடும்ப வரலாற்று நிகழ்வுகளில் அந்தக் குழந்தைகள் இடம் பெறாதது பிற்காலத்தில் அவர்களுக்கு வருத்தமாக இருக்காதா?' என்றெல்லாம் பலவித கேள்விகளை எழுப்பிய தனுஷின் குடும்பத்தினரின் வற்புறுத்தலால்தான், இந்தக் கல்யாணத்தில் மீடியாக்களின் முன் காட்டினார்களாம் பெற்றோர்கள்..! அதிலும் பெரியவன் யாத்ரா, இத்தூணூண்டு வேஷ்டியுடன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் காட்சி சூப்பர்ப்..!
இதிலும் ஒரு சர்ச்சை. "புகைப்படக்காரர்கள் வர வேண்டாம்.. நாங்களே புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தனுப்புகிறோம்" என்ற தனுஷின் தந்தை, சொன்னதுபோலவே செய்தார். அதில் குழந்தைகளின் படங்களும் இடம் பெற்றிருந்தன. அதன் பின்பு திடீரென்று என்ன நினைத்தாரோ தனுஷ், அனைத்து பத்திரிகைகளுக்கும் போன் செய்து "பிள்ளைகள் போட்டோவை மட்டும் போட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாராம். அதற்குள்ளாகவே நக்கீரனிலும், பிற இணையத் தளங்களிலும் அதனை வெளியிட்டுவிட்டார்கள்.
மறுநாள் 'தினத்தந்தி'யை தவிர மற்றப் பத்திரிகைகளில் இந்தப் புகைப்படம் வரவில்லை. இதற்காக 'தினத்தந்தி' நிருபரை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளுத்துக் கட்டிவிட்டாராம் தனுஷ்.. இதற்காக ஒரு தனி பஞ்சாயத்து, தற்போது நிருபர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது..!
பதவி படுத்தும் பாடு..!
அதிகாரமிக்க பதவிகள் கைக்குக் கிடைத்துவிட்டால் மனிதர்கள் உடனுக்குடன் மாறிவிடுவார்கள் போலும்..! பலவித உதாரணங்கள் வாரத்துக்கு ஒன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்..!
2 ஆண்டுகளுக்கு முன்பாக அதிரடியாக இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் நின்று ஜெயித்தபோது பாரதிராஜா-செல்வமணி கூட்டணியிடம் நிறையவே எதிர்பார்த்தார்கள் உதவி இயக்குநர்கள். சங்க அலுவலகத்தை ஹைடெக்காக மாற்றி, கூடுதல் அலுவலர்களை நியமித்து, இதுவரையில் அடையாள அட்டை பெறாதவர்களை போனில் வருந்தி, வருந்தி அழைத்து அடையாள அட்டைகளை அவர்களது பாக்கெட்டில் திணித்தது என்றெல்லாம் ஆரம்பத்தில் ஜரூர் காட்டத்தான் செய்தார்கள்..!
பின்பு போகப் போக தலைவர் பாரதிராஜாவின் இயல்பான குணத்தினால் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார்கள் சங்கத்தில்..! சுயேச்சையாக போட்டியிட்டு, ஜெயித்து பொருளாளரான ஆர்.சுந்தர்ராஜன் சங்க நிர்வாகிகளுக்கு கன்வேயன்ஸ் கொடுத்து மாளவில்லை என்ற கோபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து வந்த D.-40 இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா கணக்கு, வழக்குகளில் இன்றுவரையில் தகராறு என்கிறார்கள் சில இயக்குநர்கள். D-40 நிகழ்ச்சிக்காக சன் டிவி, இயக்குநர்கள் சங்கத்திற்கு கொடுத்த 2 கோடியே 60 லட்சம் ரூபாய் பணத்தில் 1 கோடி ரூபாயை செலவு கணக்காகக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் 60 லட்சத்திற்கு கணக்கு ரெடி. மீதிக்கு..? அதுதான் சிக்கல் என்கிறார்கள்..! முறையான கணக்குகளை சமர்ப்பித்தால் மட்டுமே பதவியேற்பேன் என்று தற்போது பொருளாளராக தேர்வாகியிருக்கும் இயக்குநர் ஜனநாதன் உறுதியுடன் சொல்லிவிட, சங்கத்தில் கடந்த 10 நாட்களாக ஒரே கசமுசா.. இந்தக் கலாட்டாவினால் கடந்த 22-ம் தேதி பதவியேற்றிருக்க வேண்டிய நிர்வாகிகள் வரும் 11-ம் தேதி பதவியேற்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்..!
இதேபோல் சின்னத்திரையிலும் கமுக்கமான முறையில் ஒரு சின்ன கசமுசா.. கலைஞரின் செல்லப் பிள்ளை போல் இருந்த சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளது.
பையனூர் அருகே வீடு கட்டுவதற்காக தொழிலாளர்கள் கொடுத்திருந்த பணத்தில் 47 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனத்திடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டாராம். எங்களைக் கேட்காமல் பணத்தைக் கொடுத்தது ஏன் என்று கேட்டு விடுதலையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற நிர்வாகிகள்.

கேள்விகள் அவருக்கு மிக, மிக நெருக்கமான நிர்வாகிகளிடமிருந்தே வந்துவிட்டதால் அவசரம், அவசரமாக செயல்பட்டு 17 லட்சம் ரூபாயை மீட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் விடுதலை. மீதி 30 லட்சம். ஸ்வாகாவாம்.. "ஏதோ வேலை செய்திருக்கிறார்கள். அதற்கான செலவு.." என்று கணக்கு சொல்கிறாராம் விடுதலை. என்னதான் வேலை செய்தார்கள் என்றால், கட்டுமான இடத்தில் மண்ணடித்தார்களாம்.. அதற்காக 30 லட்சம் செலவு என்பது டூ மச்சாக இல்லை..!
வரும் 10-ம் தேதி சின்னத்திரை இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம். அன்றைக்கு அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அனைத்துத் தரப்பினரும்.. அதே நாளில் சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் தேர்தல். விடுதலையிடம் சொல்லிவிட்டுத்தான் அந்தத் தேதியை தேர்தல் நாள் என்று தெரிவித்தார்கள் எழுத்தாளர்கள் சங்கத்தினர். ஆனாலும் விடுதலை வேண்டுமென்றே அதே 10-ம் தேதி இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் என்றும் அறிவித்துவிட.. இரண்டு பக்கமும் கோபக்கனல் வீசுகிறது..!
இதேபோல் தொழிலாளர்கள் யூனியனிலும் கோல்மால். உறுப்பினர்களுக்காக வாங்கி வைத்திருந்த நிலத்தில் கொஞ்சத்தை ஒரு கல்லூரியினர் கேட்டார்கள் என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள் சங்க நிர்வாகிகள். இன்னும் கொஞ்சம் நிலங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்..! பாவம் அப்பிராணி தொழிலாளர்கள்.. வட்டிக்கு வாங்கியும், மனைவி தாலியை அடகு வைத்தும் கட்டிய பணத்தில் இப்படி ஆள், ஆளுக்கு கை வைத்து இனிமா கொடுத்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்..?
அரசியல்வியாதிகளைப் போல இந்தச் சங்க நிர்வாகிகளும் தனிக்காட்டு ராஜாபோல் காசு சம்பாதிக்கத் துவங்கியிருக்கும் இந்தச் சூழல், ஏற்கெனவே புதைகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு நல்லதல்ல..! ஏற்கெனவே பொறுப்பில் இருப்பவர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு 2 முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது என்று அனைத்து சங்கங்களிலும் இப்போதுதான் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். இது நடைமுறைக்கு வருவதற்குள்ளாக மொத்தத்தையும் சுருட்டிவிடுவார்களே..!
படித்ததில் பிடித்தது..!
கேள்வி : ‘உங்களை விமர்சனம் செய்யும்போது இந்துத்வாவுடன் தொடர்புப்படுத்தி விமர்சனம் செய்வது ஏன்?’’

எழுத்தாளர் ஜெயமோகனின் பதில் :
‘‘இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எந்த எழுத்தாளர்கள் மீது இது போன்ற விமர்சனங்கள் வரவில்லை என்பதுதான். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் என்று தமிழ் பண்பாட்டுக்கு பங்களித்த எல்லா எழுத்தாளர்கள் மீது இந்துத்வா, அடிப்படைவாதம், பார்ப்பனீயம் என்கிற அடிப்படையில் அவர்கள் மீது விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

இங்கு தமிழ்நாட்டில் இரண்டு வகையான அரசியல் கெடுபிடிகள் இருக்கின்றன. ஒன்று திராவிட இயக்கம் சார்ந்தது. மற்றொன்று மார்க்ஸிஸ்ட் சார்ந்தது. இதில் விவரமான மார்க்ஸிஸ்ட் உண்டு. அதாவது மார்ஸியம் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் குறைவு.
பெரும்பாலானவர்கள் இந்த கொள்கைகளை மேலோட்டமாக தெரிந்து கொண்டு மேலோட்டமாக பேசிக் கொள்கிறார்கள். நமது பல்லாயிர வருட பாரம்பரியமோ, தத்துவ சிந்தனையோ அதனுடைய கலையோ இந்து சம்பந்தமாக இருக்கிறது. அதைப் பற்றி ஒருவர் பேசினாலோ அவர் இந்துத்வா சார்ந்தவர் என்று கூறி விடுகின்றனர். இப்படி எல்லாம் சொல்பவர்கள் படிக்காதவர்கள். இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்து தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக் கொண்டவர்கள் பத்து பேர்தான் இருப்பார்கள். நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.
இது மாதிரி கருத்துகளை சொல்லக் கூடியவர்கள் உண்மையில் சொல்லப் போனால் எதையும் படித்திருக்க மாட்டார்கள். நேரில் அவர்களிடம் போய், “நீ என்ன படித்திருக்கிறாய்..? எந்த புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய்...?” என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. “எல்லோரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள்” என்பார்கள். அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.’’
நன்றி : சூரியக்கதிர்-ஜூலை-01-15 இதழ்
பார்த்ததில் பிடித்தது..!
|
|
Tweet |