Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

கலவரம் - சினிமா விமர்சனம்

29-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒரு பிளாஷ்பேக்கை முடிச்சிட்டு அப்புறமா மெயின் பிக்சருக்குள்ள நுழையலாம். 2000-ம் வருஷம். பிப்ரவரி 2-ம் தேதி. பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயல்லிதாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இந்த்த் தீர்ப்பு வந்தவுடன் கொதித்தெழுந்த அ.தி.மு.க.வின் அடிமை தொண்டர்கள் தமிழ்நாடெங்கும் போராட்டங்களையும், எதிர்ப்பு ஆர்ப்பாடங்களையும், கலவரமும் செய்தனர்.

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர் தர்மபுரிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இலக்கியம்பட்டி அருகே அவர்கள் வந்த பஸ் கலவரத்தில் சிக்கியதில் அந்த பேருந்துக்கு அ.தி.மு.க. தொண்டர்களே தீ வைத்தனர்.. இதில் 3 அப்பாவி மாணவிகள் சிக்கி உயிரிழந்தனர்.. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ்செல்வன்..!

அதையும் ஆத்தாவின் இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிலீஸ் செய்யும் அளவுக்கு தைரியமாக இருந்த இந்த டீமுக்கு எனது பாராட்டுக்கள்..!
ஏற்கெனவே கல்லூரி படத்தில் பாலாஜி சக்திவேல் இதனை கிளைமாக்ஸ் காட்சியாக வைத்திருந்தாலும், அதன் தாக்கம் தியேட்டர் கேண்டீன்காரர்களைக்கூட தாக்கவில்லை. இப்போது இந்தப் படம் டிக்கெட் விற்பவர்களைக்கூட தாக்கவில்லை..!

இதுவும் மதுரையைக் களமாகக் கொண்ட கதைதான்..! ஏதோ மதுரையே ரவுடிக் கும்பல்களின் கையில் இருப்பதுபோல சினிமாக்காரர்களின் நினைப்பு..! இப்பத்தான் ஜில்லால மதுரைக்காரய்ங்களை கொத்து புரோட்டா போட்டாங்க. இப்போ இது அடுத்தது..! ஆதிமூலம், மூலமான ஒரு மெகா ரவுடி. மாவட்ட அமைச்சரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். கட்டதுரை, பட்டறை பரமன் போன்ற மிகச் சிறந்த துணை ரவுடி தளபதிகளை களத்தில் இறக்கிவிட்டு மதுரையில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர்..!

தன்னுடைய எதிர்ப்பையும் மீறி தேர்தலில் ஜெயிக்கும் எம்.எல்.ஏ.வை நட்ட நடு ரோட்டில் குத்திக் கொல்கிறார். இந்தக் கேஸில் போலீஸ் அவரை கைது செய்கிறது.. இதனை எதிர்த்து தனது அடிப்பொடி தளபதிகள் மூலமாக நகரில் கலவரத்தை உண்டு செய்கிறார் ஆதிமூலம்.. இந்தக் கலவரத்தில்தான் கதையின் ஹீரோக்களான சக்தி பொறியியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டு 4 மாணவிகள் கருகி சாம்பலாகிறார்கள்..! 

மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க.. அவர்களைச் சமாளிக்க வேண்டி டெல்லியில் இருந்து அஸிஸ்டெண்ட் கமிஷனர் வெற்றிச்செல்வனை விசாரணை அதிகாரியாக கொண்டு வருகிறார்கள். இவர் வந்து விசாரித்து முடிக்கும்போது கேஸை குளோஸ் செய்யும்படி லோக்கல் அமைச்சர் அட்வைஸ் செய்கிறார். போடா நீயாச்சு.. உன் கேஸாச்சுன்னு சொல்லி பைலை தூக்கியெறிந்துவிட்டு செல்கிறார் வெற்றிச்செல்வன்..! ஆனால்.. அவர் அமைதியாக இல்லை.. 

இன்னொரு பக்கம் தங்களது தோழிகள் நால்வரை பலி கொடுக்கும் மாணவர்கள் நேர்மையாக முயன்றும் கலவரத்தில் ஈடுபட்ட அரசியல்வியாதிகள் தப்பித்துவிடுவார்கள் என்பதால் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொண்டு அவர்களை அழிக்க புறப்படுகிறார்கள். இவர்களுக்கு வெற்றிச்செல்வன் உதவிகள் செய்து எப்படி அந்தக் கயவர்களை பரலோகத்திற்கு பார்சல் செய்ய வைக்கிறார் என்பதுதான் படமே..! இவர் ஏன் உதவி செய்கிறார் என்கிற மகா, மகா சஸ்பென்ஸையும், எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதையும் தங்களால் முடிந்த அளவுக்கு தெலுங்கு பட லெவலுக்கு எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்..!

இது மாதிரியான சென்சிட்டிவ்வான பிரச்சினைகளை படமாக்கும்போது லாஜிக் மீறல்கள் அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.. அரசு நடைமுறைகளும், நாட்டு நடப்புகளும் உடனுக்குடன் காட்சி ரீதியாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் இன்றையச் சூழலில் இந்த அரசியல்-மாணவர்கள்-போலீஸ்-கலவரம் காட்சிகளின் நம்பகதன்மை எந்த அளவுக்கு இருக்க வேண்டும்..? அவற்றின் நம்பகத்தன்மை இல்லையேல் படத்தின் மீதான பிடிப்பும் ரசிகனுக்கு இருக்காது..! இதுவும் அப்படித்தான்..!

வெற்றிச்செல்வனாக வரும் சத்யராஜ் டெல்லியில் இருந்து கூப்பிட்டவுடன் வருகிறாராம்..! சாதாரணமாக மதுரைக்குள் நடந்த ஒரு கலவரத்திற்கு மத்திய அரசு அதிகாரியை இழுப்பதென்றால் சாதாரணமா..? சரி.. வருபவர் யாரென்று அமைச்சருக்கே தெரியாது என்று ரீல் விடுகிறார்கள். 4 மாணவிகள் எரிந்தார்கள்.. இவர்களின் குடும்பத்தினர் யார் என்பது தெரியாமலா இருக்கும்.. இறந்தவர்களில் ஒரு மாணவி சத்யராஜின் மகள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் வெடிக்கிறார்களாம்.. உளுத்துப் போன வெடி..! யாராவது நம்ப முடிகிறதா..?

ஊரில் 2 கொலைகள் நடக்கின்றன.. அதிலும் முக்கியமான ரவுடிகள்.. போலீஸ் தேடாதா..? இருக்கிற போலீஸெல்லாம் ஆதிமூலத்திடம் லஞ்சம் வாங்கித் திளைப்பவர்கள் என்று சொல்லும்போது எந்தளவுக்கு அவர்களின் போர்ஸை காட்டியிருக்க வேண்டும்..? 
வெற்றிச்செல்வனாக சத்யராஜ்.. வந்திறங்கும்போதே கெட்டப்போடுதான் இறங்குகிறார்.. பேச்சிலேயே தனது ஆக்சனை காண்பித்துவிட்டு போகிறார்.. இவரை வைத்து இயக்கி.. பழைய சத்யராஜை காட்ட வேண்டுமென்றால் அது மணிவண்ணனால்தான் முடியும் என்பது உறுதி போலிருக்கு..! சில காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார்.. மிச்சம், மீதியெல்லாம் அந்த இயக்குநருக்கே வெளிச்சம்..!

நான்கு ஹீரோக்கள்.. அவ்வளவு நடிக்க வாய்ப்பில்லை.. நான்கு ஹீரோயின்களையும் படத்தின் பிற்பாதியில்தான் காட்டுகிறார்கள்.. முதல் ஷாட்டிலேயே படத்தின் கதையைச் சொல்லத் துவங்கிவிட்டதால் படம் ரன் வேகத்தில் பறக்கிறது..! முதல் பாடல் காட்சி ஏன்.. எதற்கு என்று தெரியவில்லை.. சொய்ங்.. சொய்ங் என்று கானா பாலா பாடுகிறார்.. இரண்டாவது பாடல் காட்சி இடைவேளைக்கு பின்பு அந்த மாணவர்களுக்காக கொடைக்கானலில் எடுத்திருக்கிறார்கள்.. எதுக்குன்னுல்லாம் கேட்கப்படாது..! 

பல காட்சிகளும சட்டு, சட்டென்று பறப்பதால் அடுத்த காட்சி இதுதான் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.. இதுவே படத்தின் பெரிய பலவீனம்..! மிகப் பெரிய டிவிஸ்ட்டுகளைக்கூட சர்வசாதாரணமாக காட்டியிருக்கிறார்கள்..! ஆதிமூலமாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் தணிகலபரணி மட்டுமே ஒரேயொரு ஆறுதல்..! அன்னார் இன்னும் பல படங்களில் நடித்து தனது திறமையைக் காட்ட்ட்டும்..!

சந்திரனின் ஒளிப்பதிவில் கலவரம் நடக்கும் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்..! கொடைக்கானல் பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் அனல் பறக்கிறது. என்றாலும் சண்டை துவங்கியவுடனேயே படம் முடிஞ்சிருச்சு என்ற பீலிங்கோடு சீட்டில் இருந்து எழும் 80-களின் காலத்துக்கே கூட்டிச் சென்றுவிட்டார் இயக்குநர்..!

கொஞ்சம் அழுத்தமான இயக்கம்.. சிறப்பான நடிப்பு.. இறுக்கமான திரைக்கதை இவற்றோடு வந்திருந்தால் இந்த டீமுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்..! ஏமாற்றமே மிஞ்சியது..!

2013-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்கள் பட்டியல்

29--1-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..! 

2013-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ச் சினிமாக்கள் மற்றும் மொழி மாற்று படங்களை மாதவாரியாக தொகுத்துள்ளேன்..!

வரிசை எண்-வெளியான தேதி-படத்தின் தலைப்பு-தயாரிப்பாளர்கள்-இயக்குநர் - 

மேற்குறிப்பிட்ட வரிசையில் இந்தப் பட்டியல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.

வாசகர்களுக்கும் ஏதேனும் தவறுகள் தென்பட்டால் உடனடியாக பின்னூட்டத்தில் குறிப்பிடவும்..! 

ஜனவரி-2013

1. 4/1/2013 - நண்பர்கள் கவனத்திற்கு - வி.சகாதேவன், சுப்பராயன்                                                                                                        - கே.ஜெயக்குமார்
2. 4/1/2013 - குறும்புக்கார பசங்க கே.பாண்டியன், அருள்ராஜ்                                                                                                                   - டி.சாமிதுரை
3. 4/1/2013 - மயில் பாறை டி.சக்கரவர்த்தி - பி.சிவக்குமார்
4. 4/1/2013 - கனவு காதலன் - ட்ரீம் மெர்ச்சண்ட் - திருநா அண்ணன்
5. 4/1/2013 - நிமிடங்கள்- ஜெயந்தி கீதா கிருஷ்ணா - கீதா கிருஷ்ணா  
6. 4/1/2013 - கள்ளத்துப்பாக்கி - சி.எஸ்.முருகேசன் - தேவி ரவிதேவன்                                                                                                                      - லோகியாஸ்  
7. 4/1/2013 - டேபிள் நம்பர் 21  - HINDI
8. 4/1/2013 - அருந்ததி வேட்டை -  கே.ஜெயராமன்-எஸ்.வேல்முருகன்                                                                                                       - விஜி தம்பி - TELUGU
9. 4/1/2013 - மாயகத்தி - Cho ooog oh - ENGLISH
10. 4/1/2013 - கமாண்டோஸ் ஏகே 47 - Red Dawn - ENGLISH

11. 11/1/2013 - அலெக்ஸ் பாண்டியன் - கிரீன் ஸ்டூடியோ - சுராஜ்

12. 13/1/2013 - கண்ணா லட்டு தின்ன ஆசையா - தேனாண்டாள் பிலிம்ஸ்                                                                                                           - மணிகண்டன்
13. 13/1/2013 - புத்தகம் - ராம் பிக்சர்ஸ் - விஜய் ஆதிராஜ்
14. 13/1/2013 - சமர் - எம்.கே.எண்டர்பிரைசஸ் - திரு
15. 13/1/2013 - விஜயநகரம் - அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் - தன்வீர்

16. 25/1/2013 - பத்தாயிரம் கோடி - மாயா கிரியேஷன்ஸ்                                                                                                                                   - வி.சீனிவாசன் சுந்தர் 17 25/1/2013 - காதல் வலி

பிப்ரவரி - 2013

18. 1/2/2013 - கடல் - மெட்ராஸ் டாக்கீஸ் - மணிரத்னம்
19. 1/2/2013 - டேவிட் - ரிலையன்ஸ் மீடியா - பிஜோய் நம்பியார் - HINDI

20. 7/2/2013 - விஸ்வரூபம் - ராஜ்கமல் பிலிம்ஸ் - கமல்ஹாசன்

21. 8/2/2013 - மெளன விழிகள் - லேனா கிரியேஷன்ஸ் - முருகவேல்

22. 15/2/2013 - வனயுத்தம் - அக்ஷயா கிரியேஷன்ஸ் - ரமேஷ்
23. 15/2/2013 - சில்லுன்னு ஒரு சந்திப்பு - மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் -                                                                                                                ரவி லவ்லின்
24. 15/2/2013 - நேசம் நெசப்படுதே- செல்வா திரைக்கூடம் - ராஜசூர்யன்  
25. 15/2/2013 - ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் - யு டிவி
                                                                              -  ரெமோ டிசெளசா - HINDI

26. 22/2/2013 - பாட்டி - சுந்தரமூர்த்தி பிலிம்ஸ் - என்.ரமேஷ்குமார்
27. 22/2/2013 - ஆதிபகவன் - அன்பு பிக்சர்ஸ் - அமீர்
28. 22/2/2013 - ஹரிதாஸ் - ராம்தாஸ் புரொடெக்சன்ஸ் - குமரவேலன்
29. 22/2/2013 - டை ஹார்ட்-5 - ENGLISH

மார்ச் -2013

30. 1/3/2013 - வெள்ளச்சி - கீதாலயா மூவிஸ் - வேலு விஸ்வநாத்
31. 1/3/2013 - என் காதலுக்கு நானே வில்லன் - ஷோபா சினி கலர்ஸ்
                                                                              கே.எஸ்.மணி - TELUGU
32. 1/3/2013 - நான்காம் பிறை - சுதா ஸ்கிரீன்ஸ் - வினயன்-MALAYALAM
33. 1/3/2013 - சுண்டாட்டம் - பிலிம் பேம் பிரம்மா ஜி.தேவ்
34. 1/3/2013 - சந்தமாமா - கிளாஸிக் சினிமாஸ் - ஆர்.இராதாகிருஷ்ணன்  
35. 1/3/2013 - ஆண்டவ பெருமாள் - பராசக்தி சினிமாஸ் - ப்ரியன்
36. 1/3/2013 - லொள்ளு தாதா பராக் பராக் - ராஜ் கென்னடி பிலிம்ஸ்
                                                                                                       ஜெயக்குமார்
37. 1/3/2013 - காதல் போதை
38. 1/3/2013 - நரன் குல நாயகன் - ENGLISH

39. 8/3/2013 - ஒன்பதுல குரு - காஸ்மோ அண்ட் பாஸ் பிலிம்ஸ்
                                                                                  - பி.டி.செல்வக்குமார்
40. 8/3/2013 - மதில் மேல் பூனை - Sri Vishali Films - பரணி ஜெயபால்

41. 15/3/2013 - வத்திக்குச்சி - பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் - 
                                                                                    பி.கின்ஸ்லின்
42. 15/3/2013 - பரதேசி - பி ஸ்டூடியோ - பாலா
43. 15/3/2013 - நினைவோடு கலந்துவிடு - LULU Creations - 
                                                                அஜித் எம்.கோபிநாத்
44. 15/3/2013 - கரும்புலி - ENGLISH
45. 15/3/2013 - கருடபார்வை - நாராயணா பிலிம்ஸ் - விவேஹானந்தன்
                                                                                                     TELUGU

46. 22/3/2013 - கண் பேசும் வார்த்தைகள் - Sri Balaji Cine Creations - ஆர்.பாலாஜி 47. 22/3/2013 - நானும் என் ஜமுனாவும் - குருராஜா இண்டர்நேஷனல் -
                                                                                   ராஜா முத்துப்பாண்டியன்
48. 22/3/2013 - கருப்பம்பட்டி - சுந்தர் பிக்சர்ஸ் - பிரபுராஜசோழன்
49. 22/3/2013 - மறந்தேன் மன்னித்தேன் - மஞ்சு எண்டெர்டெயின்மெண்ட்
                                                                               குமார் நாகேந்திரா
50. 22/3/2013 - அழகன் அழகி - அண்ணாமலையார் பிக்சர்ஸ்
                                                        நந்தா பெரியசாமி
51. 22/3/2013 - கீரிப்புள்ள - ஏஞ்செல் பிலிம் இண்டர்நேஷனல் -
                                                 பெரோஸ்கான்
52. 22/3/2013 - மாந்தரீகன் - ஆர்.பி.பிலிம்ஸ் - அணில் - MALAYALAM

53. 29/3/2013 - சென்னையில் ஒரு நாள் - ரேடான் பிக்சர்ஸ் - ஷகீத் காதர்  
54. 29/3/2013 - மாமன் மச்சான் - ஏ.முகமது அனிபா - எம்.ஜெயராஜ்
55. 29/3/2013 - பிப்ரவரி 31 - எஸ்.எஸ்.பிரேம்குமார்
56. 29/3/2013 - கேடி பில்லா கில்லாடி ரங்கா - பசங்க புரொடெக்சன்ஸ்
                                                                                      பாண்டிராஜ்
57. 29/3/2013 - கந்தா - வி.பி.பிலிம்ஸ் - பாபு கே.விஸ்வநாத்

ஏப்ரல் - 2013
58. 12/4/2013 - சேட்டை - யூ டிவி - கண்ணன்
59. 12/4/2013 - 4 - பவர்ஸ்டார் மூவிஸ் - பகவதி பாலா
60. 12/4/2013 - உனக்கு 20 எனக்கு 40 - பண்ணாரியம்மன் மூவிஸ் -
                                                                     கே.பி.எஸ்.அக்சய்
61. 12/4/2013 - மறுவிசாரணை  - செந்தில் ஆண்டவர் சினிமாஸ் -
                                                              வி.எஸ்.விஜயகோபால் - TELUGU
62. 12/4/2013 - நினைவுகள் அழிவதில்லை - அக்னி கலைக்கூடம்
                                                                                    பகத்சிங்கண்ணன்
63. 12/4/2013 - அதிரடி வேட்டை - 14 ரீல்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட்
                                                               சீனு வைட்லா - TELUGU

64. 19/4/2013 - திருமதி தமிழ் - இராதே பிலிம்ஸ் - ராஜகுமாரன்
65. 19/4/2013 - கெளரவம் - டூயட் மூவிஸ் - ராதாமோகன்
66. 19/4/2013 - உதயம் என்ஹெச்-4 - தயாநிதி அழகிரி - மணிமாறன்
67. 19/4/2013 - ரெஜினா - ரெயின்போ ஆர்ட் புரொடெக்சன்ஸ் -
                                              எஸ்.எம்.மன்சூர்
68. 19/4/2013 - இரு கில்லாடிகள் - ஷான்ஸ் இண்டர்நேஷனல் - ஷான்
69. 19/4/2013 - யார் இவள் - விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ்
                                                   ஆர்.ஃபேக்டர் - MALAYALAM

70. 26/4/2013 - அயன்மேன்-3 - ENGLISH
71. 26/4/2013 - ஒருவர் மீது இருவர் சாய்ந்து - ஏட்ரியா டெக் பிலிம்ஸ்
                                                                                      பாலசேகரன்
72. 26/4/2013 - நான் ராஜாவாகப் போகிறேன் - உதயம் விஎல்எஸ் சினி 
                                                                               மீடியா - பிருத்வி ராஜ்குமார்
73. 26/4/2013 - யாருடா மகேஷ் - அன்பு பிக்சர்ஸ் - ரா.மதன்குமார்

மே - 2013
74. 1/5/2013 - சூது கவ்வும் -  திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
                                                        நலன் குமரசாமி
75. 1/5/2013 - எதிர் நீச்சல் - வுண்டர்பார் பிலிம்ஸ் - 
                                                  ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
76. 1/5/2013 - மூன்று பேர் மூன்று காதல் -மகேந்திரா டாக்கீஸ் - வசந்த்
77. 1/5/2013 - மனிதனாக இரு - சேதுமணி அனந்தா-சேதுமணி அனந்தா
78. 10/5/2013 - ராஜராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ. - வி கிரியேஷன்ஸ்
                                                                                                       மணிவண்ணன்
79. 10/5/2013 - சிபி - லேக்னா பிலிம்ஸ் - ஜார்ஜ் பிரசாத்
80. 10/5/2013 - அமெரிக்கா டூ அமிஞ்சிக்கரை - சக்ரா கிரியேஷன்ஸ்
                                                                                                     தசரத் - TELUGU
81. 10/5/2013 - யுத்தம் - Scott Waugh / Mouse Mccoy - ENGLISH
82. 10/5/2013 - வெற்றி வீரன் - வேல் பிலிம்ஸ் - ஜெயந்த் -TELUGU

83. 17/5/2013 - நேரம் - வின்னர் புல்ஸ் - 
                                                           விஸ்வநாதன் அல்போன்ஸ் புத்திரன்
84. 17/5/2013 - மாடப்புரம் - ஓயே புரொடெக்சன்ஸ் - பிரவீண்
85. 17/5/2013 - ருத்ராவதி - பிரிமியர் பிலிம்ஸ் - கே.ரவிசங்கர்
                                                                                         ஜெயசந்திரன் - TELUGU
86. 17/5/2013 - நீ எனக்காக மட்டும் - சேலம் நியூ மாடர்ன் சினிமாஸ் -
                                                                                                    கே.பி.சக்திவேல்
87. 17/5/2013 - வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் - வி.ராமச்சந்திரன்  தபூ சங்கர்
88. 17/5/2013 - கண்ணுக்கு இமையானால் - ஜெயதேவி மூவி மேக்கர்ஸ் குமரகுருநாதன்

89. 24/5/2013 - மாசாணி - SreeGreen Productions-சரவணன் பத்மராஜா-
                                                                                    எல்.ஜி.ஆர்.
90. 24/5/2013 - சோக்காலி - யுனைடெட் ஸ்டார் பிக்சர்ஸ்-நாவரசன்
                                                                                                              ஏ.சரணா
91. 24/5/2013 - கல்லாப்பெட்டி - பி.எஸ்.கருணாநிதி - ராரா
92. 24/5/2013 - நடிகையின் டைரி - ஆதிராம் - அனில் -MALAYALAM
93. 24/5/2013 - Fast & Furious - 6 - ENGLISH
94. 24/5/2013 - கரிமேடு - ஆப்பிள் பிளாஸ்ஸம் கிரியேஷன்ஸ் -
                                                                          சீனிவாசராஜூ - KANNADAM

95. 30/5/2013 - குட்டிப்புலி - வில்லேஜ் தியேட்டர்ஸ் - முத்தையா
96. 30/5/2013 - இசக்கி என்.கணேசன் - எம்.கணேசன்
97. 30/5/2013 - கண்ணாடி பிசாசு - Charlie Vaughen - ENGLISH
98. 30/5/2013 - போலீஸ் தாதா - சக்ரா கிரியேஷன்ஸ் - பூரி ஜகன்நாத்
                                                                                                                     TELUGU

ஜூன் - 2013
99. 7/6/2013 - யமுனா - எஸ்.எஸ்.ஸ்டூடியோஸ் - எஸ்.சிவா
                                                                                               ஈ.வி.கணேஷ்பாபு
100. 7/6/2013 - சொல்ல மாட்டேன் - பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்
                                                                                                என்.பி.இஸ்மாயில்
101. 7/6/2013 - அபாய கிரகம்(After Earth) -  ENGLISH
102. 7/6/2013 - நாயக் - கிரெளன் மூவிஸ் - வி.வி.விநாயக் - TELUGU

103. 14/6/2013 - தீயா வேலை செய்யணும் குமாரு - யூ டிவி - சுந்தர் .சி
104. 14/6/2013 - தில்லுமுல்லு - வேந்தர் மூவிஸ் - பத்ரி
105. 14/6/2013 - சூப்பர்மேன் - ENGLISH

106. 21/6/2013 - தீக்குளிக்கும் பச்சை மரம் - மில்லினியம் விஷுவல் மீடியா
                                                                                எம்.வினீஷ்-எம்.பிரபீஷ்
107. 21/6/2013 - வேல்ட் வார் - ENGLISH

108. 28/6/2013 - அன்னக்கொடி - மனோஜ் கிரியேஷன்ஸ் - பாரதிராஜா
109. 28/6/2013 - துள்ளி விளையாடு - ஆர்பி ஸ்டூடியோஸ் 
                                                                                          வின்சென்ட் செல்வா
110. 28/6/2013 - மங்கா டிபன் சென்டர் - ஜெயம் நந்தா பிலிம்ஸ் - வெங்கி
                                                                                                                           TELUGU
111. 28/6/2013 - அம்பிகாபதி - கிரிஷிகா லூல்லா - ஆனந்த் எல்.ராய் HINDI

ஜூலை - 2013
112. 5/7/2013 - சிங்கம்-2 - லஷ்மண்குமார் - ஹரி
113. 5/7/2013 - தி லோன் ரேஞ்சர் - ENGLISH

114. 12/7/2013 - சத்திரம் பேருந்து நிலையம் - ஹாஜி சினி கிரியேஷன்ஸ்
                                                                                    ரவிபிரியன்
115. 12/7/2013 - அன்பா அழகா - சுந்தரவள்ளி புரொடெக்சன்ஸ் -
                                                         எஸ்.சிவராமன்
116. 12/7/2013 - காதலே என்னை காதலி - ஆர்.எஃப்.சினிமாஸ் - 
  ஐ.ஏ.எம்.ஷண்
117. 12/7/2013 - ருத்ரநகரம் - ENGLISH
118. 12/7/2013 - வேட்டைப்புலி - எஸ்.பிரபாகர்-ஆர்.கண்ணன்
                                                                             திரில்லர் மஞ்சு - KANNADAM

119. 19/7/2013 - மரியான் - ஆஸ்கர் பிலிம்ஸ் - பரத்பாலா

120. 26/7/2013 - பட்டத்து யானை - செராபின் சேவியர் - ஜி.பூபதி பாண்டியன் 121. 26/7/2013 - சொன்னா புரியாது - 360 டிகிரி பிலிம் கார்ப்பரேஷன்
                                                                                         கிருஷ்ணன் ஜெயராஜ்  
122. 26/7/2013 - களியாட்டம் - MALAYALAM
123. 26/7/2013 - வோல்வர் - ENGLISH

ஆகஸ்ட் - 2013
124. 2/8/2013 - நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - மூன் ஸ்டார்
                                                                                             எஸ்.ஓ.நபிதாஸ்
125. 2/8/2013 - புல்லுக்கட்டு முத்தம்மா - கே.வி.கே.சினி ஆர்ட்ஸ்
                                                                          முத்துப்பாண்டி - MALAYALAM
126. 2/8/2013 - ரவுடி ராஜா - சேலம் பி. சங்கர் - ஒக்குடு குணசேகர் - TELUGU
127. 2/8/2013 - ஜமீன் - சுசித்ரா துரை - ஜி.அசோக் - TELUGU
128. 2/8/2013 - ஞாபகங்கள் தாலாட்டும் - எம்.எஸ்.ராஜூ - TELUGU
129. 2/8/2013 - கொலை வெறியன் - ENGLISH
130. 2/8/2013 - இரும்புக் கை மாயாவி - ENGLISH

131. 9/8/2013 - தலைவா - சந்திரபிரகாஷ் ஜெயின் - விஜய்

132. 10/8/2013 - 555 - சென்னை சினிமா இந்தியா - சசி

133. 15/8/2013 - ஆதலால் காதல் செய்வீர் - தாய் சரவணன் - சுசீந்திரன்
134. 15/8/2013 - தி காலனி - ENGLISH

        15/8/2013 - பாசமலர் - கே.வி.பி.பூமிநாதன் - பீம்சிங்

135. 23/8/2013 - தேசிங்கு ராஜா - எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் - எழில்
136. 23/8/2013 - அன்றொரு நாள் நடந்தது என்ன? - கருப்பையா கிருஷ்ணன்
                                                                                               சக்திசிவம்
137. 23/8/2013 - Skyline - 2 - ENGLISH

138. 30/8/2013 - பொன்மாலைப் பொழுது - அமிர்தகெளரி - ஏ.சி.துரை
139. 30/8/2013 - தங்கமீன்கள் - கெளதம் வாசுதேவ் மேனன் - ராம்
140. 30/8/2013 - சும்மா நச்சுன்னு இருக்கு - எஸ்தல் புரொடெக்சன்ஸ்
                                                                              ஏ.வெங்கடேஷ்
141. 30/8/2013 - சுவடுகள் - ஜெய்பாலா

செப்டம்பர் - 2013
142. 6/9/2013 - வருத்தப்படாத வாலிபர் சங்கம் - எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்  
                                                                                          பொன்ராம்

143. 7/9/2013 - ஆர்யா சூர்யா - தேனாண்டாள் பிலிம்ஸ் - இராம.நாராயணன்

144. 13/9/2013 - மத்தாப்பூ - சுடலைக்கண் ராஜா - தினந்தோறும் நாகராஜ்  
145. 13/9/2013 - மூடர்கூடம் - நவீன்  
146. 13/9/2013 - உன்னோடு ஒரு நாள் - ஜார்ஸி புரொடெக்சன்ஸ்
துரை கார்த்திகேயன்
147. 13/9/2013 - சூப்பர் - S.G.R.பிரசாத் - பூரிஜெகன்னாத் - TELUGU
148. 13/9/2013 - தி கான்ஜூரிங் - ENGLISH

149. 20/9/2013 - மெளன மழை - ஜாபர் அலி - ஆனந்த்
150. 20/9/2013 - அடுத்தக் கட்டம் - நவநீதன் கணேசன்-முரளிகிருஷ்ணன்                                                                                                               முனியன்
151. 20/9/2013 - 6 - அபி பிக்சர்ஸ் - வி.இஸட். துரை
152. 20/9/2013 - யா யா - டி.அஜய்குமார் - ஐ.ராஜசேகரன்

153. 27/9/2013 - ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின்
154. 27/9/2013 - ராஜாராணி - ஏ.ஆர்.முருகதாஸ் - அட்லி

அக்டோபர் - 2013
155. 2/10/2013 - இ.ஆ.பாலகுமாரா - ஜெ.எஸ்.சதீஷ்குமார் - கோகுல்
156. 2/10/2013 - பேஷ்ராம் - HINDI

157. 4/10/2013 - நிலா மீது காதல் - ராஜாராம் மூவிஸ்-ஆர்.மைக்கேல்சாமி
                                                                                                               இளையகுமார்  
        4/10/2013 - நினைத்தாலே இனிக்கும் - கவிதாலயா - கே.பாலசந்தர்

158. 11/10/2013 - கயவன் - SKY Productions - வெங்கி நிலா
159. 11/10/2013 - நய்யாண்டி - பைவ் ஸ்டார் புரொடெக்சன்ஸ் - ஏ.சற்குணம் 160. 11/10/2013 - வணக்கம் சென்னை - ரெட் ஜெயிண்ட் பிக்சர்ஸ்
                                                                                               கிருத்திகா உதயநிதி  

161. 18/10/2013 - ரகளபுரம் - கென் மீடியா - மனோ
162. 18/10/2013 - சித்திரையில் நிலாச் சோறு - செந்தூர் பிக்சர்ஸ்
                                                                                                   ஆர்.சுந்தர்ராஜன்
163. 18/10/2013 - நுகம் - சினர்ஜி புரொடெக்சன்ஸ் - ஜெஃபி
164. 18/10/2013 - நினைவுகள் உன்னோடு - கரூர் வி.வி.முருகேசன்
                                                                                           உசிலை டி.மகேஷ்பாபு
165. 18/10/2013 - நிர்ணயம் - PCSM - Sree Saravanan
166. 18/10/2013 - அஞ்சல்துறை - லதா சினி கிரியேஷன்ஸ் - ஏ.ஆர்.ரபி
167. 18/10/2013 - கேடி ராம்போ கில்லாடி அர்னால்டு - ENGLISH

168. 25/10/2013 - இங்கு காதல் கற்றுத் தரப்படும் - விஜயா கிரியேஷன்ஸ்
                                                                                           Sreedharan
169. 25/10/2013 - முத்து நகரம் - ஐ.பி.சினி ஆர்ட்ஸ் - திருப்பதி
170. 25/10/2013 - சுட்ட கதை - லிப்ரா புரொடெக்சன்ஸ் - சுபு
171. 25/10/2013 - ரவுடி கோட்டை - சிவம் அஸோஸியேட்ஸ் - ஈஸ்வர்
                                                                                                                    TELUGU
172. 25/10/2013 - வசந்தசேனா - ஜெ.ஜெ.விஷூவல்ஸ் - ராமன் -TELUGU

173. 31/10/2013 - ஆரம்பம் - Sree Sathyasai creations - விஷ்ணுவர்த்தன்

நவம்பர் - 2013

174. 2/11/2013 - பாண்டிய நாடு - விஷால் பிலிம் பேக்டரி - சுசீந்திரன்
175. 2/11/2013 - ஆல் இன் ஆல் அழகுராஜா - ஸ்டூடியோ கிரீன் - எம்.ராஜேஷ் 176. 2/11/2013 - KIRISH-2 - Raakesh Roshan - HINDI

177. 14/11/2013 - ஆப்பிள் பெண்ணே - பாண்டியன் - ஆர்.கே.கலைமணி
178. 14/11/2013 - பீட்சா-2 வில்லா -திருக்குமரன்                                                                                                                         எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் - தீபன்
179. 14/11/2013 - ராவண தேசம் - New Empire Celluliods - அஜய் நூதக்கி
                                                                                                                   KANNADAM
180. 14/11/2013 - மசாலா - TELUGU

181. 15/11/2013 - அந்த வீட்ல என்னமோ நடக்குது - விஜயராஜ் - ராஜேஷ்  
182. 15/11/2013 - தோர்-2 - ENGLISH

183. 22/11/2013 - மாயை - ஹாலம்மா டாக்கீஸ் - ஜெ.ஆர்.கண்ணன்
184. 22/11/2013 - இரண்டாம் உலகம் - பிவிபி - செல்வராகவன்
185. 22/11/2013 - மெய்யழகி - ஜி.ரிஸ்வான் - ஆர்.டி.ஜெயவேல்
186. 22/11/2013 - Night of Vegenance - ENGLISH
187. 22/11/2013 - மரண சாசனம் - விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட்
                                                            ஜான் ஆண்ட்டனி - MALAYALAM
 
188. 29/11/2013 - நவீன சரஸ்வதி சபதம் - ஏஜிஎஸ்                                                                                                               எண்ட்டெர்டெயின்மெண்ட் - கே.சந்துரு
189. 29/11/2013 - விடியும்முன் - காயம் ஸ்டூடியோஸ் - பாலாஜி கே.குமார் 190. 29/11/2013 - ஜன்னல் ஓரம் - ஹேமந்த் மூவிஸ் - கரு.பழனியப்பன்
191. 29/11/2013 - சொன்னதை செய்வேன் - நவநீதம் பிலிம்ஸ்
                                                                              ஏ.ஆர்.வெங்கடேசன்
192. 29/11/2013 - என்னாச்சு - முகமது இஸ்மாயில் - Sreemani
193. 29/11/2013 - அப்பாவுக்குக் கல்யாணம் - எஸ்கேஎம் மீடியாஸ்
                                                                                  ஆறுமுகச்சாமி
194. 29/11/2013 - செயிண்ட் டிராகுலா - ENGLISH

டிசம்பர் - 2013

195. 6/12/2013 - கல்யாண சமையல் சாதம் - அபினேஷ் இளங்கோவன்
                                                                                ஆர்.எஸ்.பிரசன்னா
196. 6/12/2013 - ஈகோ - பெரியசாமி ரவிச்சந்திரன் - எஸ்.சக்திவேல்
197. 6/12/2013 - வெள்ளை தேசத்தின் இதயம் - விஸ்வா டிரீம் வேல்ர்டு
                                                                                      ஜூஹெய்ன்
198. 6/12/2013 - தகராறு - தயாநிதி அழகிரி - கணேஷ் வினாயக்
199. 6/12/2013 - பெண் அடிமை இல்லை - ரமணா பிலிம்ஸ் - ராஜ நாயுடு
                                                                                                                           TELUGU
200. 6/12/2013 - கும்கி வீரன் - ENGLISH
201. 6/12/2013 - Hunger Games Catching Fire - ENGLISH
 
202. 13/12/2013 - தேடி பிடி அடி - சஹானா மூவீஸ் - ஏகன்
203. 13/12/2013 - இவன் வேற மாதிரி - யூ டிவி-திருப்பதி பிரதர்ஸ்
                                                                                     எம்.சரவணன்
204. 13/12/2013 - கோலாகலம் - பி.ஜி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல்
                                                                                                        பி.ஜி.சுரேந்திரன்  
205. 13/12/2013 - சந்தித்ததும், சிந்தித்ததும் - சிபிசாம் - பாலு ஆனந்த்
206. 13/12/2013 - அச்சம் தவிர் - Ramadootha Creations - சின்னி கிருஷ்ணா

207. 20/12/2013  - பிரியாணி - ஸ்டூடியோ கிரீன் - வெங்கட்பிரபு
208. 20/12/2013 - என்றென்றும் புன்னகை - டாக்டர் ராம்தாஸ் -அஹமத்
209. 20/12/2013 - தலைமுறைகள் - கம்பெனி புரொடெக்சன்ஸ்
                                                              பாலுமகேந்திரா
210. 20/12/2013 - தூம் - 3 HINDI
211 - 25/12/2013 - மதயானைக் கூட்டம் - ஜி.வி.பிரகாஷ் - விக்ரம் சுகுமாரன்

212 - 27/12/2013 - புவனக்காடு - மலர் மீடியா - வி.எம்.மோகன்
213 - 27/12/2013 - என் காதல் புதிது - வீரா மூவிஸ் - மாரீஸ் குமார்
214 - 27/12/2013 - விழா - ஜே.வி.மீடியா டிரீம்ஸ் - பாரதி பாலகுமாரன்
215 - 27/12/2013 - சார் வந்தாரா - ATK Pctures - பரசுராம் - TELUGU
216 - 27/12/2013 - கும்கி வீரன் - ENGLISH

தமிழ் நேரடி படங்களின் மொத்த எண்ணிக்கை : 151

டப்பிங் படங்கள் : 63
தெலுங்கு : 20
கன்னடம் : 3
மலையாளம் : 7
ஹிந்தி : 7
ஆங்கிலம் : 26

இதில் அதிகப்பட்சமாக ஜனவரி 4-ம் தேதியன்று 6 தமிழ்ப் படங்கள் மற்றும் 4 மொழி மாற்றுப் படங்களோடு மொத்தம் 10 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன..!

மேலும் இதே ஆண்டில் மார்ச்-2, மார்ச் 22, அக்டோபர் 18  ஆகிய தேதிகளில் அதிகப்பட்சமாக 6 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன..

ஒரு மாறுதலாக ஆகஸ்ட் 2-ம் தேதியன்று 7 டப்பிங் படங்களும், 1 தமிழ்ப் படமும் வெளியாகியுள்ளது.

'பாசமலர்', 'நினைத்தாலே இனிக்கும்' என்ற 2 பழைய தமிழ்ப் படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டன. அது இந்தப் பட்டியலின் எண்ணி்ககையில் இடம் பெறவில்லை..!