31-03-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நடிகை ஷகிலா தன்னுடைய வாழ்க்கைக் கதையை ‘ஷகீலாவின் ஆத்ம கதா’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் கேரளாவில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் புச்சிரெட்டி பாலம் என்ற ஊரில் பிறந்தவர் ஷகீலா பேகம். இந்த சுயசரிதை நூல் தன்னுடைய பெருமைக்காகவும், புகழுக்காகவும் எழுதப்படவில்லை. ஷகீலா என்ற நடிகை எப்படி இங்கே உருவாக்கப்பட்டாள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் இதனை எழுதியிருப்பதாக ஷகீலா சொல்லியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளை இணையத்தில் பலரும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
அது நமது வாசகர்களுக்காக இங்கே :
“என்னுடைய அம்மாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் எனக்கில்லை. அவரிடமிருந்து நான் எதிர்பார்த்த அன்போ, அக்கறையோ எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையை புறம்தள்ளி கெடுத்தவர் என்னுடைய அம்மா என்றும் சொல்லலாம். என்னுடைய அம்மா என்னுடைய இளம் வயதிலேயே என் மீது அன்பு செலுத்தாதவராகவே இருந்தார். என்னை மிகவும் புறக்கணித்தே வந்தார்.
ஒரு நாள் திடீரென்று எனது அழகைப் புகழ்ந்தார். அது எனது 16-வது பிறந்த நாளுக்குப் பின்பு.. ஒரு நாள், ஒரு ஆள் வந்து என்னை வெளியில் அழைத்துப் போவார் என்று என்னிடம் தெரிவித்தார் என் அம்மா. அவருடன் ஒரு இடத்திற்குப் போய், ஒரு பணக்காரரிடம் இணக்கமாகப் போகும்படியும் என்னிடம் சொன்னார். நம் குடும்பத்தின் பணத் தேவைக்காக இதைச் செய்வதாகவும் சொன்னார். அந்த பணக்காரர் சொல்படி நடக்கும்படியும் அவனுக்கு என்ன தேவையோ அதன்படி நடக்கும்படியும் என்னை எச்சரித்தார்.
இதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய அப்போதைய வயதில் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அம்மா சொன்னதுபோலவே ஒரு ஆள் வந்து என்னை அழைத்துப் போனார். நாங்கள் ஒரு ஹோட்டலை சென்றடைந்தோம். அங்கே எனக்காக ஒரு பெரிய பணக்காரர் காத்திருந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். நான் மனம் உடைந்து கண்ணீர்விட்டு அழுதேன். ஆனால் அந்த பணக்காரர் என்னுடைய உடைகளைக் களைந்து என்னை கற்பழித்தார். ஆனால் என்னைத் துன்புறுத்தவில்லை. இதுவொரு தொடக்கம்தான். இதற்குப் பின்னர் பல பணக்காரர்களிடம் கட்டாயமாக என் அம்மாவால் அனுப்பி வைக்கப்பட்டேன். அனைவருமே நினைத்துக் கொண்டார்கள், நான் அதுவரையிலும் கன்னித்தன்மையை இழக்காதவள் என்று..!
——————————————
சில்க் ஸ்மிதா முக்கிய கேரக்டரில் நடித்த ‘பிளே கேர்ல்ஸ்’ என்ற படத்தில்தான் நான் அறிமுகமானேன். இதில் சில்க் ஸ்மிதாவின் தங்கை கேரக்டர் எனக்கு.. சில்க் ஸ்மிதா மாதிரியான ஒரு அழகு நடிகையை நான் அதற்குப் பின் நான் பார்த்ததே இல்லை. அவருடைய உடல் அழகும், அவருடைய கருமையான விழிகளும்தான் அவருடைய சொத்து.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உமாசங்கர் எனது குடும்ப நண்பர். என்னை சிறு வயதில் இருந்தே அறிந்தவர். தான் ஒரு படம் எடுக்கப் போவதாகவும் அதில் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது நான் நான்சி என்ற டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன்.
உமாசங்கர் ஒரு நாள் தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு போய் இயக்குநர் ஆர்.டி.சேகரை சந்திக்கும்படி என்னிடம் சொன்னார். நானும் அதன்படியே ஏவி.எம். சென்று இயக்குநரை சந்தித்தேன். இயக்குநர் என்னைப் பார்த்துவிட்டு சில கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு ‘நாளைக்கே ஷூட்டிங்.. ரெடியா இரும்மா..’ என்றார்.
எனக்கு சில்க் ஸ்மிதாவின் தங்கச்சி கேரக்டர் என்று இயக்குநர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. அன்றைய இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை. ஆனாலும் கொஞ்சம் குழம்பிப் போயிருந்தேன். இது நிசமாகவே சாத்தியம்தானா..? என்னால் பெரிய நடிகையாக வர முடியுமா என்றெல்லாம் யோசனை செய்து கொண்டேயிருந்தேன் அந்த இரவில்.
மறுநாள் காலை ஸ்டூடியோவுக்கு பறந்தேன். எனக்கு ஒரு டிரெஸ் கொடுத்தார்கள். மினி ஸ்கர்ட். எனக்கு அது பிடிக்கவில்லை. மிகவும் சின்னதாக இருந்தது. ஆனால் என் எதிர்ப்பை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இப்போதுதான் நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு கேமிரா முன்பாக நிற்கிறோம். பிரச்சினை வேண்டாம் என்பதால் விட்டுவிட்டேன்..
என் முதல் நடிப்பே சில்க் ஸ்மிதாவுடன்தான்.. ஸ்மிதா ஒரு அறைக் கதவைத் திறந்து வெளியில் வரும்போது நான் அவரிடம் டீயை நீட்டி ‘அக்கா டீ…’ என்று சொல்ல வேண்டும். அவர் கோபத்துடன் என்னை கன்னத்தில் அறைய வேண்டும். இதுதான் அந்தப் படத்தில் எனக்கு வைத்து எடுக்கப்பட்ட முதல் காட்சி.
ஸ்மிதாவும் கதவைத் திறந்து கொண்டு வந்தார். நானும் ‘அக்கா டீ…’ என்றேன். ஸ்மிதா கோபத்துடன் என்னை ஓங்கி அறைய.. நிசமாகவே வலித்தது. மிகவும் துடித்துப் போய்விட்டேன்.. சினிமாதான் என்றாலும் என்னால் பொறுக்க முடியவில்லை. வலியால் என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. கோபத்துடன் அழுதபடியே “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்றே படக் குழுவினரிடம் சொல்லிவிட்டேன்.
ஆனால் ஸ்மிதா என்னருகில் வந்து என்னைச் சமாதானப்படுத்தினார். என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். காட்சியின் பெர்பெக்ஷனுக்காக அப்படிச் செய்ததாகச் சொன்னார். ஆனால் எனக்கு மனசு கேட்கவில்லை. சிறிது நேரம் ஷூட்டிங் ஸ்தம்பித்து நின்றிருந்தது. அனைவரும் எனது வார்த்தைகளுக்காக காத்திருந்தார்கள்.
அப்போது தனிமையில் யோசித்த பின்பு ஸ்மிதா மிகப் பெரிய நடிகை. நாமோ இப்போதுதான் நமது பயணத்தைத் துவக்கியிருக்கிறோம்.. அவரே வந்து நம்மிடம் ஸாரி கேட்டுக் கொண்டாரே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். அடுத்தடுத்த நாட்களின் ஷூட்டிங்கின்போது சில்க் ஸ்மிதாவுடன் இருக்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மனித நேயம் மிக்கவர் என்பதைப் புரிந்து கொண்டேன்.
அடுத்த நாள் மதியச் சாப்பாட்டிற்காக என்னையும் எனது தங்கை ஷீத்தலையும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவருடைய மனித நேயம், வேலையில் ஈடுபாடு, நேரம் தவறாமை இதெல்லாம் என்னை அன்றைக்கே ஆச்சரியப்படுத்தியது. அவருடைய தற்கொலை செய்தி என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக துயரமான நிகழ்ச்சியாகவே கருதுகிறேன்.
——————————–
நான் நடித்த சினிமாவில் என்னுடைய உடல்தான் பிரதானப்படுத்தப்பட்டது. பாலியல் உணர்வைத் தூண்டும்விதமாக இருந்த உடல்தான் என்னுடையதே தவிர.. வேறெதுவும் என்னிடம் இல்லை.. நான் பெண் என்ற ரீதியில் இல்லாமல் ஒரு நடிகை என்ற ரீதியிலேயே அதிகமாகக் கவனிக்கப்பட்டேன்.
அந்த நேரத்தில் பல பெரிய நடிகைகளைவிடவும் அதிகச் சம்பளம் வாங்கினேன். ஷூட்டிங்கிற்காக பல ஊர்களுக்கும் பறந்து கொண்டிருந்தேன். இரவு, பகல் பாராமல் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தூங்குவதற்கே நேரம் கிடைக்காமல் இருந்தது. பல நேரங்களில் நான் நடித்த படுக்கையறை காட்சிகள் படமாக்கப்பட்டபோதுகூட தூங்கிவிட்டேன். திரையில் அதைக் கண்டவர்கள் ஏதோ நான் செக்ஸ் பீலிங்கை கண்ணை மூடி அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அது உண்மையில்லை. உண்மையாகவே நான் அப்போதெல்லாம் உறங்கிப் போயிருந்தேன். அதுதான் உண்மை. என்னுடைய செக்ஸ் உணர்ச்சிகளை நான் அப்படி வெளிப்படுத்தியதாக மக்கள்தான் நினைத்துக் கொள்கிறார்கள்..
————————————-
என்னுடைய தங்கை நூர்ஜஹான் பற்றியும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதைய காலக்கட்டத்தில் தென்னிந்தியாவிலேயே தினச்சம்பளம் பெறும் அளவுக்கு சம்பாதித்துக் கொண்டிருந்த எனது சொத்துக்கள் முழுவதையும் பறித்துக் கொண்டவள் இவள்தான். என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தையும் இவள்தான் பார்த்து வந்தாள். நான் அவளை முழுமையாக நம்பினேன். என்னுடைய சிறு வயதில் இருந்தே அவளுடன் வாழ்ந்து வந்ததால் அவளை அப்படி நம்பியிருந்தேன்.
சினிமாவில் மிக பிஸியாக ஓடிக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங்கிற்காக பல்வேறு லொகேஷன்களுக்கு சந்தோஷமே இல்லாமல், மிகவும் களைப்புடன் அலைந்து கொண்டிருந்தேன். சினிமா போதுமென்று நினைத்து கொஞ்சம் இடைவெளிவிட நினைத்தேன். என்னுடைய அம்மாவிடமும், நூர்ஜஹானிடமும் நான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், அவர்களைப் போலவே அமைதியான வாழ்க்கையை இனிமேல் வாழப் போவதாகவும் தெரிவித்தேன்.
அவர்கள் இருவருமே அதிர்ச்சியானார்கள். ஏதோ நான் கொலைக் குற்றம் செய்துவிட்டேன் என்பது போலவே என்னை பார்த்தார்கள். சில நிமிடங்கள் கழித்து நூர்ஜஹான் எனக்கு அட்வைஸ் செய்தாள். நான் முட்டாள்தனம் செய்வதாகச் சொன்னாள். அவர்கள் என்னுடைய பணத்தை மட்டுமே விரும்புவதாக எனக்கு அப்போதுதான் புரிந்தது. என்னுடைய வாழ்க்கை.. என்னுடைய குடும்பம் இதெல்லாம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது. நான் மிகவும் நொந்து போனேன். நூர்ஜஹானிடம் நான் சம்பாதித்த பணம் பற்றி கேட்டேன். மொத்தப் பணமும் குடும்பத்திற்காக செலவாகிவிட்டதாகச் சொன்னாள் நூர்ஜஹான். அதிர்ந்து போனேன் நான். அத்தனையும் ஒரு நொடியில் முடிந்துபோய் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் எல்லாமும் என் கையை விட்டுப் போயிருந்தது.
—————————
குடிப் பழக்கம் ஒருவகையில் என்னையும் தொற்றிக் கொண்டது. இது சிறு வயதிலேயே என்னுடைய தந்தையின் மூலமாக எனக்கு வந்தது. அப்போதெல்லாம் என்னுடைய தந்தை பீர் பாட்டிலை வீட்டிற்கே கொண்டு வந்து குடிப்பார். அதனைப் பார்த்து ஆசைப்பட்டு எனக்கும் கொஞ்சம் வேண்டும் என்று அடம் பிடிப்பேன். அப்போது சின்ன டம்ளரில் எனக்குக் கொஞ்சம் பீரை உற்றிக் கொடுப்பார் என்னுடைய தந்தை. அப்படி ஆரம்பித்த பழக்கம் பின்பு முழு பீரையே குடிக்க வைத்தது.
நான் ஆரம்பத்தில் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் மோகன்ராஜிடம் பீர் கேட்டு அடம் பிடித்தேன். அவர் வாங்கித் தர மறுத்தார். நான் அது வந்தால்தான் ஷூட் என்று பிடிவாதம் பிடிக்க.. வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்தார். அன்றைய ஷூட்டிங் பிரச்சினையில்லாமல் முடிந்தது. இது இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
ஒரு பீரில் துவங்கிய எனது குடி.. இன்றைக்கு மதுவில் இருக்கும் அத்தனை வகைகளையும் தொட்டுப் பார்த்துவிட வைத்துவிட்டது.. நான் செயின் ஸ்மோக்கரும்கூட.. பல நட்பு ரீதியிலான ஆண்-பெண்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக குடிக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான்.
நெருங்கிய ஆண் நண்பர்களுடன்தான் குடிக்கிறேன். ஆனால் அதுவே நட்பைத் தொலைத்துவிட வைக்கிறது.. முதல் பெக் அடித்தவுடன் எனக்கு அட்வைஸ் செய்வார்கள். மூன்றாவது பெக் அடித்தவுடன் என்னுடைய நடிப்பு பற்றியும், என்னுடைய உடல் பற்றியும் பேசத் துவங்கி தொடுவார்கள்.. 4-வது பெக் முடித்தவுடன் பாத்ரூம் போய்வருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். சென்று வந்தவுடன் என்னருகில் வந்து அமர்ந்து கொள்வார்கள். எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்..!
இப்போது அவர்கள் எதற்கும் தயார் என்ற ரீதியில்தான் என்னை பார்ப்பார்கள். அவர்களுடைய கண்களே அவர்களது பாசாங்கான நட்பையும், வேட்கையையும் எனக்குக் காட்டிக் கொடுத்துவிடும். சில நொடிகளில் என்னை அணைக்கத் தொடங்குவார்கள். எனது உடல் பாகங்களை தொட முயல்வார்கள்.. அவர்களது நோக்கம் அடுத்ததாக என்னை அவர்களது பெட்ரூமுக்கு அழைத்துச் செல்வதாகவே இருக்கும்..!
ஆண்கள் பாலியல் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் முன்பு அதற்காகவே குடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போதும் என்னையும் அப்படியே நினைத்துக் கொண்டார்கள். நான் பெண்களுடன் சுதந்திரமாக இருந்திருக்கிறேன். அவர்களைக் கட்டியணைப்பேன். நடனமாடுவேன். ஆனால் ஆண்களின் நோக்கம் முழுக்க முழுக்க செக்ஸாகத்தான் இருக்கும். அவர்களுடன் படுக்கையைப் பகிர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.. இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் உணர்ந்திருக்கிறேன்.
குடியைப் போலவே சிகரெட் பழக்கமும் தானாகவே என் வாழ்க்கையில் வந்து சேர்ந்த்து. ஒரு ஹிந்தி படப்பிடிப்பில் இருந்தபோது அதில் நடித்த நடிகை பூஜா பேடி சிகரெட் பிடித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் ஆர்வமோ என்று நினைத்து அவர் சிகரெட்டை கொடுக்க.. அதுதான் முதல் பழக்கம். பின்பு அதுவே தொற்றிவிட்டது. இப்போது அவரைவிட அதிகமாக நான் சிகரெட் பிடிப்பதாக நினைக்கிறேன்.
எதுவாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிகரெட்டை தொட மாட்டேன். குடித்துவிட்டு கேமிரா முன்பு வந்து நிற்க மாட்டேன். அப்படி ஒரு நாளும் நான் நடந்து கொண்டதில்லை. இரவில் எனக்குத் துணை குடி மட்டுமே.. வாழ்க்கையில் எத்தனையோ விசித்திரங்களை சந்திப்பதுபோல இதுவும் ஒன்று.. அவ்வளவே..!
———————————-
‘செக்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டுவிட மாட்டீர்களா..?’ என்ற கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அது மாதிரியாக நடிப்பது தனி இடங்களில் அல்ல.. படப்பிடிப்புக் குழு மொத்தமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாங்கள் எப்படி உண்மையாக செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும்..? செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த்து அல்ல.. அதுவும் பெண்களுக்கு..! அது உணர்ச்சிப்பூர்வமானதும் அல்ல.. உணர்வுப்பூர்வமானது.. செக்ஸை விரும்பி அனுபவிப்பதில் பெண்களுக்கு வெளிப்படையாக சில சங்கடங்கள் உண்டு.. எப்படியிருந்தாலும் நான் நடிப்பைத் தவிர வேறு எதையும் அந்தக் காட்சிகளில் காட்டிவிடவில்லை. என்னுடைய மிகையுணர்ச்சி நடிப்புதான் அதில் தென்பட்டிருக்குமே தவிர.. காம உணர்ச்சியாக இருக்கவே முடியாது..!
நன்றி : ஒலிவியா பப்ளிகேஷன்ஸ்
|
Tweet |
5 comments:
தலைப்பு - மாலைமலர் பட்டிக்கிற மாதிரி இருக்கு...
அப்பா, இந்த நடிகைகளுக்குனு ஒரு சில (அம்)மா(மா)க்களைப் படைத்து அல்லா அனுப்பி வைக்கிறாரே! அவருடைய கருணையே கருணை!
நம்ப முடியாத வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்(?) சகீலா... பாவமாகவும் இருக்கிறது... சோகத்தில் கண்களும் பனிக்கின்றன... கொடுமைடா சாமி....
என்னது ப்ளே கேள்ஸ் படத்துக்கு இசை இளையராஜா வா?
ஒரு பெண்ணிற்குள் இருக்கும் பெண்ணை தேடும் போது இவ்வளவு சிரமங்களா?
எவ்வளவு கட்டத்தை தாண்டி இருக்கிறாள் இந்தப்பெண், இவள் சிரமம் அத்தனையும் இவள் சார்ந்த இன்னும் இரண்டு பெண்களாலேயே வந்திருக்கிறது என தெரியும் போது யாரை என்ன சொல்ல?
Post a Comment