தடையறத் தாக்க - சினிமா விமர்சனம்

02-06-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மாமனாரின் பணத்தில், மச்சான் தயாரிக்க.. தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துக் காண்பித்திருக்கிறார் நடிகர் அருண்குமார். பாவம்.. இவரும்தான் எப்படி, எப்படியோ முயற்சி செய்து பார்த்தும் அதிர்ஷ்டம் என்னும் தேவதை மட்டும் கையில் சிக்கவே மறுக்கிறது..!





செல்வா டிராவல்ஸ் என்ற பெயரில் கால்டாக்சி ஓட்டும் அருண்குமார், மிச்சமிருக்கும் நேரத்தில் மம்தா மோகன்தாஸிடம் காதலை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடனை அடைக்கவில்லை என்பதற்காக தனது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போய், அது மோதலாக உருவெடுக்கிறது. போலீஸின் முழு ஆதரவுடன் திகழும் மகா என்னும் இந்த கேங்கின் தலைவன் கொலை செய்யப்பட அந்தப் பழி அருண் மீது விழுகிறது.. மகாவின் கும்பல் கொலை வெறியோடு அருணை துரத்தத் துவங்க.. தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!


110 இடங்களில் கட் செய்ய வேண்டும். இல்லாவிடில் ஏ சர்டிபிகேட்டுதான் என்று சென்சாரில் உறுதியாகச் சொல்லியும் ஏ சர்டிபிகேட்டே கொடுங்க என்று வேண்டி விரும்பி வாங்கி வந்திருக்கிறார்கள்..! இதனால் அரசிடம் வரிவிலக்கும் கோர முடியாது. தொலைக்காட்சிகளிலும் காண்பிக்க முடியாது. இதனால் சேனல் ரைட்ஸும் ஜீரோ. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாகவும் இது இல்லை..! மிக அதிகப்படியான வயலன்ஸ் காட்சிகளில் மட்டுமல்ல.. வசனத்திலும் அப்படியே..! பல இடங்களில் மியூட் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த வசனங்கள் புரிகின்றன.. ஒன்று மட்டும்தான் புரியவில்லை. இந்தப் படத்திற்கு, இந்த கதைக்கு எதற்காக இத்தனை வன்முறை காட்சிகளும், வரைமுறையற்ற ஆபாசப் பேச்சுக்களும்..?


இத்தனை பிரேக்கிங் பாயிண்ட்டுகளை வைத்துக் கொண்டும் இதனை திரைக்குக் கொண்டு வந்து 100 நாட்களாவது ஓட்டியாக வேண்டும் என்று முனைப்புக் காட்டும் இந்தத் தயாரிப்பாளருக்கு எனது சல்யூட்.. இருந்தாலும் இப்படித்தான் மாமனார்கள் அமைய வேண்டும்..! அருண்குமார் ஏதோ லக்கி செய்திருக்கிறார் போலும்..!


பட், நடிப்பில் அருண்குமாரை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். அமைதியான, அழுத்தமான நடிப்பு.. பாத்ரும் போயிட்டு வரேன் என்று மம்தாவிடம் சொல்லிவிட்டு ரவுடிகளை வேட்டையாட வரும், அந்த வேகத்திலும், நடிப்பிலும் எந்தக் குறையுமில்லை.. இறுதிவரையில் தனது கேரக்டரை யூகிக்க முடியாத அளவுக்கே நடித்திருக்கிறார். அமைதியாக, அலட்டலில்லாமல் லவ் செய்யவும் இவரால் முடிகிறது..! 


காதல் காட்சிகளில் இவரைவிடவும் ஸ்கோர் செய்திருப்பவர் மம்தாதான்..! நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்ற அறிகுறியே தெரியாமல், அருணை நினைத்து மருகுவது, உருகுவது, கெஞ்சுவது என்று பல வேடங்களில் ஜமாய்த்திருக்கிறார். என்ன குரல்தான் கொஞ்சம் உதைக்கிறது.. என்னடா என்று அருணை அழைக்கும்போது மட்டும்தான் குரல் பிடிக்கிறது..! சிவப்பதிகாரத்திற்குப் பிறகு இப்போதுதான் தமிழில் நடிக்கிறார் என்று நினைக்கிறேன். நல்ல நடிகைதான்.. ஆனால் நம்ம ஊர் இயக்குநர்களுக்கு இவரின் ஹோம்லி லுக் பிடிக்கவில்லை போலும்..!


“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க. வர்றதுக்கு அரை மணி நேரமாகும். அதுக்குள்ள உனக்கு வேணும்னா என்னை என்ன வேண்ணாலும் செஞ்சுக்க..” என்ற இந்த வசனத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஏ சர்பிடிகேட் கிடைத்திருக்கிறது என்றால் அது தப்புமில்லை.. மிகையுமில்லை..! 


பிராவை வைத்து பல காமெடிகளும், காட்சிகளும் ஏற்கெனவே நிறைய வந்துவிட்டன. ஜட்டி மட்டும்தான் பெண்டிங்கில் இருந்தது.. இப்போது அதையும் செய்துவிட்டார் இயக்குநர். வாரத்தின் 7 நாட்களும் மம்தா பயன்படுத்திக் கொள்ள ஜட்டி வாங்கிக் கொடுக்கும் அருண்குமாரின் அந்தக் காட்சியை அனைத்து சேனல்களும் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவி செய்யலாம்..!


எழுதி, இயக்கிய மகிழ் திருமேனி கெளதம் வாசுதேவன் மேனனின் உதவியாளராம். முதற்பாதியில் இடைவேளை போர்டு மாட்டும்வரையிலும் படத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பை கொண்டு சென்றவர்.. பின்புதான் கோட்டைவிட்டுவிட்டார்.. அதீதமான வன்முறைக் காட்சிகளாலும், ஒரேயொரு விஷயத்திலேயே கதை ராட்டினம் சுற்றுவதால் சிறிது அசதியும் ஏற்பட்டு கடைசியில் தலைவலியே வந்துவிட்டது..! ஆனாலும் சின்னச் சின்ன விஷயங்களால் சுவாரஸ்யப்பட வைத்துள்ளார். உதாரணமாக, மகாவின் சின்ன வீடு மேட்டரை பூடகமாகக் கொண்டு சென்று புதிரை விடுவித்ததைச் சொல்லலாம். 


ஆனால், அதற்கான கிளைக்கதையாக இறுதியில் அவர் காட்டுவது பெரிய லாஜிக் ஓட்டை என்றாலும் கதையே லாஜிக்கே இல்லாததுதான் என்பதால் இதையும் கண்டும் காணாமல் போக வேண்டியதுதான். இத்தனை கொலைகளை அலட்சியமாகச் செய்யும் இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க போலீஸுக்கு எத்தனை கோடிகளை வாரி இறைத்தார்களோ தெரியவில்லை..! ஊரில் ஒரு நல்ல போலீஸ்கூடவா இல்லை. ஒருவேளை பத்திரிகைகளே இல்லாத ஊராக இருக்குமோ..?


இடைவேளைக்குப் பின்பு கிடைத்த ஒரேயொரு நிம்மதி.. பாடல்கள் இல்லை என்பதுதான். முற்பாதியிலேயே காதல் பாடல்களையும், குத்துப் பாடலையும் கச்சிதமாக வைத்துவிட்டு மங்களம் பாடிவிட்டார். பிற்பாதியில் பாடல் வைத்திருந்தால் கூடுதல் தலைவலிதான் வந்திருக்கும். நன்றி இயக்குநரே..!


பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான் பாடலை எஃப்.எம்.மிலும், சேனல்களிலும் போட்டு வாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சி அடல்ட்ஸ் ஒன்லிதான்..!


மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு குறிப்பிட வேண்டியது. அதிலும் இரவு நேரக் காட்சிகளில் கண்ணை உறுத்தாமல் எடுத்திருக்கிறார்கள்..! பாடல் காட்சிகளில் மட்டுமே சோகை போனதுபோல் தெரிகிறது..! 


ஒரே ஆள் 50 பேரை அடித்து உதைப்பது.. 100 பேர் இருந்தாலும் ஸ்பாட்டில் இருந்து தப்புவிப்பது.. இதெல்லாம் சினிமா ரூல்ஸ்படி சரிதான் என்றாலும், இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கக் கூடாது..! ரத்தத்தைப் பார்த்து உறைந்து போய் உட்காரும் அளவுக்கான ரத்தச் சிதறல்களையும், அருணின் ஒரு நண்பனின் படுகொலையும் திகிலூட்டுகிறது..!


84 நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டேன் என்று இயக்குநர் சொன்னாலும், ஒன்றரை ஆண்டுகளாகியும் படத்தை ரிலீஸ் செய்யாமல், செய்ய விடாமல் தடுத்தது. செய்ய முடியாதது.. ஏன்..? யார்..? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தால் இன்னொரு சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது..!


ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலேயே இயக்குநருடன் மோதுகிற அளவுக்கு தயாரிப்பாளரின் கோபம் இருந்தது.. அது ஏன் என்று இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்தே நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்..! கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் செலவு என்றார் தயாரிப்பாளர். 8 கோடிக்கு இதில் அப்படியென்ன செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை..! யாராவது கேட்டுச் சொன்னால் புண்ணியமாக இருக்கும்..!


15 comments:

CS. Mohan Kumar said...

சுருக்கமான ஆனால் சரியான விமர்சனம். இதே அளவில் விமர்சனம் எழுதுங்க அண்ணே

ஜட்டி மேட்டர் டூ மச். அதனை தவிர்த்திருக்கணும். படம் ஓட வைக்க எவ்வளவு கேவலமாய் வேண்டுமானாலும் இறங்குவார்கள் என்பது தெரிகிறது

நம்பள்கி said...

///“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க. வர்றதுக்கு அரை மணி நேரமாகும். அதுக்குள்ள உனக்கு வேணும்னா என்னை என்ன வேண்ணாலும் செஞ்சுக்க..” என்ற இந்த வசனத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஏ சர்பிடிகேட் கிடைத்திருக்கிறது என்றால் அது தப்புமில்லை.. மிகையுமில்லை.///

இந்த வசனத்தை இப்படித் தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நமது பழம் தின்னு கொட்டை போட்ட காமெடியன்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்! ரசிகர்கள் மீது தவறு இல்லை.

சரி! இதை விட ஆபாசம் நிறைந்த ஒரு படம் விவேக் மற்றும் வெ.ஆ. மூர்த்தி, கவர்ச்சி அனுகுண்டு ஷகீலா நடித்தது. "தாத்தா சொம்பைக் காணோம் என்ரறு மூர்த்தி புலம்பும் படம்" படம் பெயர் தெரியவில்லை; அது A or U certification?

பாய்ஸ் படம் இந்தியாவில் பார்த்தேன்; கட்டில் காட்சியுடன்; அது A or U certification?

ராஜ நடராஜன் said...

கடை மாறி வந்துட்டேனோ?

rajamelaiyur said...

என்ன தல மத்த பிளாக்ளலாம் படம் நல்ல இருக்கு நல்லா ஓடும்னு சொல்றாங்க ?

rajamelaiyur said...

இன்று
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...

Subramanian said...

only the romantic scenes involving arun vijay & mamta are interesting.there is nothing else in the rest of the movie.dont know why heroes always try to be established or known as action heroes.there are so many other genres which they dont even want to explore.it may not have the same collection as a successful action movie but it will run if the content is good.

Rizi said...

மம்தா பார்க்கத்தான் ஹோம்லி லுக் தெலுங்கு பக்கமெல்லாம் ரொம்ப தாராளம்..


ஒரேயொரு ஸ்டிலுடன் நிறுத்திக்கொண்டதுக்கு கடும் கண்டனங்கள் :)

சூனிய விகடன் said...

அண்ணே...பொம்பளைங்க போடறதுக்குப் பாண்டீஸ் னு பேரு....ஜட்டியெல்லாம் நம்மளுக்குத்தான்.

எனக்கு உள்ளாடை ...வக்கிர வசனம் இதிலெல்லாம் கோபமில்லை .. ஆனால் இந்த சாக்கடைச் சிந்தனை மனிதர்களுக்கு வேறெங்கும் டைட்டில் கிடைக்காமல் கந்த சஷ்டிக்கவசத்தில் பிடித்திருக்குதுகளே ...அதை நினைத்தால்.....

கிராமப்புறங்களில் அந்தக்காலத்தில் "தூமச்சீலை" என்றொரு சொல்வழக்கு உண்டு. வெட்டாரவெளி பாத்ரூம்களில் பெண்கள் அவிழ்த்து வைத்திருக்கும் தீட்டுச்சேலைகளை திருடிக்கொண்டுபோகும் வக்கிரப்பேர்வழிகளுக்கு அந்தப்பெயர் சொல்லி அழைப்பார்கள்....

இந்த இயக்குனர் மாதிரியான ஆட்கள் பாண்டீஸ் தூக்கிகள் ...

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

சுருக்கமான ஆனால் சரியான விமர்சனம். இதே அளவில் விமர்சனம் எழுதுங்க அண்ணே.]]]

அடடா.. இதுக்கு மேல எழுதுற அளவுக்கு இந்தப் படம் பீல் பண்ண வைக்கலையேன்னு குறைச்சேன்.. அது நல்லாயிருக்கா..? ஓகே.. கன்ட்டினியூ பண்றேன்..!

[[[ஜட்டி மேட்டர் டூ மச். அதனை தவிர்த்திருக்கணும். படம் ஓட வைக்க எவ்வளவு கேவலமாய் வேண்டுமானாலும் இறங்குவார்கள் என்பது தெரிகிறது.]]]

எல்லாரும் இல்லை.. ஒரு சிலர் எல்லாத்தையும் ஜஸ்ட் லைக் தேட்டாக நினைப்பவர்கள் மட்டுமே இப்படி செய்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

///“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க. வர்றதுக்கு அரை மணி நேரமாகும். அதுக்குள்ள உனக்கு வேணும்னா என்னை என்ன வேண்ணாலும் செஞ்சுக்க..” என்ற இந்த வசனத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஏ சர்பிடிகேட் கிடைத்திருக்கிறது என்றால் அது தப்புமில்லை.. மிகையுமில்லை.///

இந்த வசனத்தை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நமது பழம் தின்னு கொட்டை போட்ட காமெடியன்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்! ரசிகர்கள் மீது தவறு இல்லை.]]]

இதில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்கிறது..!

[[[சரி! இதை விட ஆபாசம் நிறைந்த ஒரு படம் விவேக் மற்றும் வெ.ஆ. மூர்த்தி, கவர்ச்சி அனுகுண்டு ஷகீலா நடித்தது. "தாத்தா சொம்பைக் காணோம் என்ரறு மூர்த்தி புலம்பும் படம்" படம் பெயர் தெரியவில்லை; அது A or U certification?]]]

நிறையவே உண்டு..!

[[[பாய்ஸ் படம் இந்தியாவில் பார்த்தேன்; கட்டில் காட்சியுடன்; அது A or U certification?]]]

இதையெல்லாம்விட கண்றாவிக் காட்சியையெல்லாம் வைத்திருக்கும் நடுநசி நாய்கள் படத்திற்கு யு சர்டிபிகேட் கிடைத்தது..! இதுக்கென்ன சொல்றீங்க..? சென்சார் சர்ட்டிபிகேட்டுகளுக்கென்றே தனி பதிவு எழுதலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

கடை மாறி வந்துட்டேனோ?]]]

நோ.. நோ.. ட்ரூவான ட்ரூ தமிழன் பிளாக்குக்குத்தான் வந்திருக்கீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

என்ன தல மத்த பிளாக்ளலாம் படம் நல்ல இருக்கு நல்லா ஓடும்னு சொல்றாங்க?]]]

மாறுபட்ட கலாரசனை..!

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

only the romantic scenes involving arun vijay & mamta are interesting. there is nothing else in the rest of the movie. dont know why heroes always try to be established or known as action heroes. there are so many other genres which they dont even want to explore. it may not have the same collection as a successful action movie but it will run if the content is good.]]]

ஆக்சன் ஹீரோன்னா நடிப்பைக் காட்டணும்னு அவசியமில்லை. டான்ஸ், பைட்டு மட்டும் போதும்.. மத்த கேரக்டரா போயிட்டா நடிப்பைக் கொட்டணும்ல்ல. இருந்தாத்தான கொட்டுறதுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[Rizi said...

மம்தா பார்க்கத்தான் ஹோம்லி லுக் தெலுங்கு பக்கமெல்லாம் ரொம்ப தாராளம்..]]]

அதுவும் கொஞ்சம்தான..? தமன்னா, த்ரிஷா, நயன்தாரா, இலியானா, ஷ்ரேயா அளவுக்கு இல்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

அண்ணே. பொம்பளைங்க போடறதுக்குப் பாண்டீஸ் னு பேரு. ஜட்டியெல்லாம் நம்மளுக்குத்தான்.
எனக்கு உள்ளாடை. வக்கிர வசனம் இதிலெல்லாம் கோபமில்லை. ஆனால் இந்த சாக்கடைச் சிந்தனை மனிதர்களுக்கு வேறெங்கும் டைட்டில் கிடைக்காமல் கந்த சஷ்டிக் கவசத்தில் பிடித்திருக்குதுகளே. அதை நினைத்தால்.]]]

இதை வைச்சு ரொமான்ஸ் கன்றாவி பாட்டே பாடிட்டாங்களே.. அப்புறமென்ன..?

[[[கிராமப் புறங்களில் அந்தக் காலத்தில் "தூமச் சீலை" என்றொரு சொல் வழக்கு உண்டு. வெட்டாரவெளி பாத்ரூம்களில் பெண்கள் அவிழ்த்து வைத்திருக்கும் தீட்டுச் சேலைகளை திருடிக் கொண்டு போகும் வக்கிரப் பேர்வழிகளுக்கு அந்தப் பெயர் சொல்லி அழைப்பார்கள். இந்த இயக்குனர் மாதிரியான ஆட்கள் பாண்டீஸ் தூக்கிகள்.]]]

-)))))))))))))))