இந்தாண்டு கலக்கப் போகும் சினிமா கானா பாடல்..!

11-02-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் குத்துப் பாடல்கள் இடம் பெறாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு காலம் கெட்டுப் போய்க் கெடக்கிறது. இதில் இசையமைப்பாளர் தேவாவால் புகழடைந்த சென்னைவாழ் கானா பாடல்களும் சத்தம் போடாமல் ஒரு பக்கம் ஜெயித்துதான் வந்திருக்கின்றன. சித்திரம் பேசுதடியில் ஒலித்த “வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற பாடலின் அசுர வெற்றி கானா பாடல்கள் பற்றி சமீபத்திய தமிழ் இளைஞர்களுக்கு ஒரு தேடுதல் வேட்கையை ஏற்படுத்திக் கொடுத்தது.


அந்த வரிசையில் வரவிருக்கும் பழைய வண்ணாரப்பேட்டை என்கிற படத்தில் ஒரு கானா பாடல் ஸ்பெஷலாக இடம் பெற்றிருக்கிறது. கிருஷ்ணா டாக்கீஸின் சார்பில் எம்.பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்தை மோகன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். பிரஜன், ரிச்சர், ரேணிகுண்டா நிஷாந்த் நடித்திருக்கும் இப்படத்தின் ஹீரோயின் டாசு. 


இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் மோகனே எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் “உன்னதான் நெனைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல” என்ற கானா பாடல். இதற்கு இசையமைத்திருப்பவர் ஜூபின். ஜூபினுக்கு இது 3-வது படமாம். இந்தப் பாடலை புகழ் பெற்ற நாட்டுப் புறப் பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லாலே என்ற பாடலை பாடியவர்.


ஒரேயொரு டிரம்பட் மற்றும் ஒரேயொரு டேப் கருவியை வைத்தே இந்த முழு பாடலுக்கும் இசையமைத்திருப்பதாகச் சொல்கிறார் ஜூபின். பொதுவாக இந்த மாதிரியான ஸ்பெஷல் பாடல்களை ஷூட் செய்து முதலில் தனியே வெளியிட்டு விளம்பரம் தேடுவார்கள். ஆனால் இந்தப் படக் குழுவினர் இதிலும் தனி ஸ்டைலாக இந்தப் பாடலுக்கு அமைக்கப்பட்ட பாடல் காட்சியை மட்டும் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சியில் பாடகர் வேல்முருகனே நடித்தும் இருக்கிறார்.  

பாடல் எடுக்கப்பட்ட காட்சிகயை உங்களுக்காக யூடியூபில் ஏற்றி இணைத்துள்ளேன்.. பாருங்கள். கேளுங்கள்..!


9 comments:

முத்தரசு said...

தகவலுக்கு நன்றி

ஹிம்...எந்த அளவுக்கு வரவேற்ப்பு இருக்குன்னு பார்ப்போம்

G.Ganapathi said...

நல்லா இருக்கு ன. அப்பறம் ஏன் இதுக்கு பேரு குத்து பாட்டு ?.. திரையிசை பாடல் களின் வடிவம் எப்படி இருந்தாலும் வரிகள் மட்டுமே பாடலை நிலை நிறுத்தி வைத்திருக்கும் .

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...

தகவலுக்கு நன்றி. ஹிம்... எந்த அளவுக்கு வரவேற்ப்பு இருக்குன்னு பார்ப்போம்.]]]

படம் ரிலீஸாகும்போது பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்று நான் நம்புகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

நல்லா இருக்குன. அப்பறம் ஏன் இதுக்கு பேரு குத்து பாட்டு? திரையிசை பாடல்களின் வடிவம் எப்படி இருந்தாலும் வரிகள் மட்டுமே பாடலை நிலை நிறுத்தி வைத்திருக்கும்.]]]

குத்தாட்டம் போடுவார்கள் என்பதால் இது குத்துப் பாட்டு..! அவ்ளோதான்..!

Unknown said...

கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

aotspr said...

நல்ல முயற்சி..............வெற்றிக்கு வாழ்த்துக்கள்....


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

நல்ல முயற்சி. வெற்றிக்கு வாழ்த்துக்கள்....]]]

உதவிக்கு மிக்க நன்றிகள் கண்ணன். தொடரட்டும் உமது சேவை..!

தனிமரம் said...

குத்துப் பாட்டுக்கள் அதிகம் நின்று நிலைப்பது குறைவு என்பது என் எண்ணம்.இந்தப்பாடலும் சில காலம் வேனும் என்றால் புதுவரவு என்று போட்டு ரசிப்பார்கள் அப்படி ரசிக்கக்கட்டும் தகவலுக்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[தனிமரம் said...

குத்துப் பாட்டுக்கள் அதிகம் நின்று நிலைப்பது குறைவு என்பது என் எண்ணம்.இந்தப் பாடலும் சில காலம் வேனும் என்றால் புது வரவு என்று போட்டு ரசிப்பார்கள். அப்படி ரசிக்கக்கட்டும். தகவலுக்கு நன்றி.]]]

இந்த வருடம் மட்டுமல்ல.. இனி வரும் காலங்களிலும் குத்துப் பாடல்களின் பட்டியலில் இதுவும் இடம் பெறும் என்பதே ஒரு சிறப்புதானே..!

வருகைக்கு நன்றிகள் ஸார்..!