கெளரவர்கள் - சினிமா விமர்சனம்

22-10-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சினிமாவுக்கு போய் 20 நாளாச்சு. கடந்த 1-ம் தேதியன்று 'எந்திரன்' பார்த்ததுதான். அதன் பின்பு புதிய படங்கள் வராததாலும், அதன் பின்பு வந்தவைகள் பார்க்க வேண்டிய படங்களாக அவை இல்லாததாலும் போகவில்லை. சென்ற வாரம் வந்த படங்களில் ஒச்சாயி, தொட்டுப் பார் இரண்டு படங்கள் மட்டுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தது.

எப்படியும் இந்த இரண்டில் ஒன்றை கருமாரி காம்ப்ளக்ஸில் போட்டிருப்பார்கள் என்று நினைத்துதான் அங்கே சென்றேன். என் அப்பன் முருகனின் திருவிளையாடல் அபாரம். அங்கே இந்த இரண்டுமே இல்லாமல் புரட்சித் தமிழன் சத்யராஜ் நடித்த 'கெளரவர்கள்' படம் போட்டிருந்தார்கள்.

வேறு வழி.. அப்போதே பத்து மணி ஆகியிருந்தபடியால் வேறு எங்கும் போக நேரம் கிடைக்காத சூழலால் சரி. வந்தது வந்துவிட்டோம். பார்த்து தொலைவோம் என்று முனங்கிக் கொண்டுதான் சென்றேன். அதேதான்.. அதேதான். எப்பவாச்சும் ஒரு தடவைதான் நமக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கிடைக்கும். நேத்திக்கு கிடைக்கலை..

புரட்சித் தமிழனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அதிர்ச்சியாயிருக்கு. தியேட்டருக்குள்ள மொத்தமே 9 பேர்தான். அதுல இரண்டு பேர் தியேட்டர்ல வேலை பார்க்குறவங்க.. என்ன செய்யறது? புரட்சித் தமிழனின் ரசிகர் மன்றங்களெல்லாம் என்ன ஆச்சு..? அவருடைய தீவிர ரசிகர்களெல்லாம் இப்ப எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க.. வலைவீசித் தேடணும் போல இருக்கே..

அப்புறம், இப்பல்லாம் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறதைவிட டிவி சீரியல் முக்கியமா போயிருச்சு.. மொதல்ல நாட்டுல செய்தி சேனல்களை தவிர மீதி சேனல்கள் அத்தனையையும் தடை செய்யணும்பா. அப்பத்தான் சினிமா தொழில் வளரும். சினிமா தொழிலாளர்கள் வாழ்வாங்க. அவங்க குடும்பம் நல்லாயிருக்கும். தமிழ்க் கலாச்சாரம் வளர்ந்து கொண்டே போகும்..

யார் கேக்கப் போறா..? 'முதல்வன்' படத்துல வர்ற மாதிரி எனக்கு ஒரு நாள் பிரதமர் பதவி கிடைச்சா இதை செஞ்சிருவேன்.. சரி.. நம்ம புலம்பலை விட்ருவோம்.. படத்துக்கு வருவோம்.

சினிமாவுலகத்துல புயல் அடிச்ச வேகத்துல அண்டா, குண்டாவே தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கறப்போ சில்வர் டம்ளர்களையெல்லாம் கணக்குல எடுத்துக்க முடியுமா? அப்படித்தான் விக்னேஷ் அப்படீன்ற நடிகர் ஓய்ஞ்சு போய் நடிக்க வாய்ப்பில்லாம தவியாய், தவிச்சு கடைசியா ஒரு தயாரிப்பாளரைப் புடிச்சு இதுல ஹீரோவா நடிச்சிருக்காரு..

அவர் மட்டும் நடிச்சா அவர் குடும்பம் மட்டும்தான பார்க்க முடியும்..? கிண்டலாவே இருந்தாலும் இதுதானே உண்மை. அதுனால துணைக்கு புரட்சித் தமிழனை வளைச்சுப் போட்டு தனக்கேத்தாப்புல ஒரு கதையை ரெடி பண்ணி கொண்டாந்துட்டாரு..


'தளபதி' ஸ்டைல் கதைதான். மம்முட்டி-சத்யராஜ், ரஜினி-விக்னேஷ். வேலைவெட்டி இல்லாம தண்டச்சோறா தாய் மாமனோட சேர்ந்து ஊர்ல லூட்டி அடிச்சிக்கிட்டிருக்குறவரு விக்னேஷ். ஒரு நாள் இவங்க அடிச்ச லூட்டியால கோவில் உண்டியலை காவாளிப் பயபுள்ளைக கூட்டம் ஆட்டையைப் போட்டுட்டு போயிடறாங்க. இதுனால தண்டப் பணமா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை விக்னேஷோட குடும்பம் கொடுக்கணும்னு ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்த சினிமா பஞ்சாயத்து கோர்ட்டு, தீர்ப்பு சொல்லுது.

வீட்டைச் சுத்தமா கழுவி, மொழுகிவிட்ட மாதிரி அத்தனை உருப்படியையும் தூக்கிட்டுப் போன பின்னாடிதான் நம்ம விக்னேஷுக்கு புத்தி வருது.. “இனிமேலாச்சும் உருப்படியா நான் வேலைக்குப் போறேன்ம்மா..” என்று தனது அம்மாவிடம் கெஞ்சி, உருகி, மருகி அழுகிறார்.

பஸ்ஸ்டாண்டில் டூவிலர் ஸ்டேண்ட்டை கவனிக்கும் பொறுப்பை வாங்கித் தருகிறார் அவருடைய சித்தப்பாவாக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன். வேலைக்குப் போன இடத்தில் தானாகத் தேடி வரும் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்கிறார். தானே விட்டாலும் அடிதடி தன்னை விட மறுப்பதால் அடித்தவர்களை நொறுக்கியெடுத்துவிட்டு லாக்கப்பில் வந்து குத்த வைத்து உட்கார்ந்து கொள்கிறார்.

“ஒரு சுண்டைக்காய் பயலா எல்லாரையும் அடிச்சான். கொண்டாங்கடா அவனை..” என்று ஊரில் இருக்கும் ஒரேயொரு தாதா விஜயரகுநாததொண்டைமான் ஆணையிட எஃப்.ஐ.ஆர். போட்ட பின்பும் தாதாவின் ஆட்கள் விக்னேஷை கடத்திக் கொண்டு போய் தொண்டைமானின் முன்னால் அதாங்க புரட்சித் தமிழன் சத்யராஜ் - நிறுத்த.. அன்றிருலிருந்து சத்யராஜுக்கு தளபதியாகிறார் விக்னேஷ்.


விக்னேஷ் செய்த அடிதடிக்கு மூல காரணமாக இருந்த ஹீரோயினுடன் அவ்வப்போது கொஞ்சம் லவ்வுகிறார். அதே நேரத்தில் அடிதடியில் அடிபட்ட ஊர் எம்.எல்.ஏ.வின் மகனோ, “ஹீரோயினும் வேணும்; விக்னேஷும் சாகணும்” என்று கருவிக் கொண்டிருக்கிறான்.

இடையில் தொண்டைமானின் தொண்டையில் முள் வைக்காத குறையாய் அவருடைய பழைய மாப்பிள்ளை(பானுசந்தர்) அவ்வப்போது கொல்வதற்கு ஆளை அனுப்பி காமெடி செய்து கொண்டிருக்கிறார்.


இடையில் எம்.எல்.ஏ. திடீரென்று உள்துறை மந்திரியாகிவிட தொண்டைமானுக்கு சனி தசை துவங்குகிறது. தனது மனைவியின் தங்கையான ஹீரோயினை மந்திரியின் மகனுக்கு கட்டிவைத்துவிட்டு தான் சென்னைக்கு கமிஷனராகிவிட எண்ணுகிறார் தற்போதைய ஊர் கமிஷனர் ரஞ்சித். இதற்காக அவர் தனது காய்களை மூவ் செய்கிறார்.

சத்யராஜிடம் விக்னேஷ் வேலை செய்வது தெரிந்தும் அவரிடம் ஹீரோயினை கொலை செய்யணும். இல்லைன்னா அவர் மேல இருக்குற பழைய கேஸையெல்லாம் கைல எடுக்க வேண்டி வரும் என்று ரஞ்சித் சொல்ல.. விக்னேஷின் காதல் பற்றித் தெரியாத சத்யராஜ் விக்னேஷிடமே ஹீரோயினை கைமா பண்ணும் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

விக்னேஷ் காதலையும் விட முடியாமல், நன்றிக் கடனையும் தீர்க்க முடியாமல் அல்லாட.. பானுசந்தர் மனம் தளராமல் தொண்டைமானை போட்டுத் தள்ள அடுத்த ஆளை அனுப்பி வைக்க.. உள்துறை மந்திரி தனது மகனுக்கு ஹீரோயினை மணமுடிக்க நெருக்கடி கொடுக்க.. ரஞ்சித் தனது கொழுந்தியாளை வைத்து கமிஷனர் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டிருக்க.. யார் ஜெயித்தார்கள் என்பதுதான் மிச்ச மீதிக் கதை..


ஏதோ அடிச்சுப் பிடிச்சு கதையைச் சொல்லிப்புட்டேன்னு நினைக்கிறேன்.

‘தூத்துக்குடி', ‘பூவா, தலையா?', ‘வீரமும், ஈரமும்' என்று ஏற்கெனவே 3 திரைப்படங்களை இயக்கிய அனுபவமுள்ள சஞ்சய்ராம்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த பத்து திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்களாம்.

ஆடியோ ரிலீஸ் சமயத்தில் அந்தத் தயாரிப்பாளர்களை வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள் அனைவரும். நாமும் இப்போது அவர்களை பாராட்டிக் கொள்ளுவோம். ரொம்ப தில்லுங்க உங்களுக்கு..!

விக்னேஷோட மார்க்கெட் என்ன? சத்யராஜோட மார்க்கெட் என்னன்றதையெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கிட்டுத்தான் படத்தை தயாரிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். லோ பட்ஜெட் படம்கிறது தெளிவா தெரியுது.

குறைஞ்ச நாள்ல ஷூட்டிங் எடுத்திருக்காங்க போலிருக்கு.. ஒரே காஸ்ட்யூம் அடுத்தடுத்து வந்து நிக்குது.. பிராப்பர்ட்டீஸ்கூட மாத்தாம விட்டிருக்கிறதை பார்த்தா எடுத்துத் தள்ளியிருக்கிற ஸ்பீடு நல்லாத் தெரியுது...


விக்னேஷ் அருவா மீசையோட வர்றார்.. அவர் நடிச்சு அதிகமா நான் பார்த்ததில்லை. ஆனா அவரோட கேரக்டர் என்னன்றதையே பதிவு செய்யாம ஏதோ குழந்தைத்தனமானவர்ன்னே காட்டி கடைசிவரைக்கும் கொண்டு போனதால ஹீரோன்ற மெஸேஜே நம்ம மண்டைல ஏறலை..

சண்டைக் காட்சில எல்லாரும் இருக்குற இடத்துல இருந்தே அடிப்பாங்க. இதுலதான் தப்பிச்சு ஓடிக்கிட்டே அடிக்கிறாரு. கொஞ்சமாச்சும் யதார்த்தத்தைத் திணிப்போம்னு இயக்குனர் நினைச்சுக்கிட்டாரு போலிருக்கு..

டீ காசு கொடுக்கலேன்னு கோபப்படுறவரு, “எங்க கணேசனை கல்யாணம் செஞ்சுக்குங்க.. உங்களை நல்லா வைச்சுக்குவாரு”ன்னு சின்னப் புள்ளைக சொன்னவுடனேயே கன்னத்துல அறையற ஹீரோயின்கிட்ட ஒரு சின்ன முறைப்பு.. கோபம்.. ம்ஹூம்.. ஒண்ணும் இல்லாம.. அப்பிராணியா பின்னாடியே ஓடுறதை பார்த்தா “இன்னாங்கடா கூத்து இது..”ன்னு கேக்கத் தோணுது..

நிறைய சீன்களை டிவி சீரியல்கள்லேயே பார்த்ததால் அலுப்புத் தட்டுது.. அதுக்காக டிவி சீரியல் மாதிரியேவா எடுக்குறது.. All Artistes Combination-ல இயக்குநர் கஷ்டப்பட்டு டைம் மேனேஜ் செஞ்சு ஷூட் செஞ்சிருக்காரு.. பாவம் அவரும்தான் என்ன செய்வாரு..?

இப்போ பாருங்க. ஹீரோயினுக்கே சம்பளம் தரலையாம். படத்தை ரிலீஸ் செஞ்ச அன்னிக்கு நடிகர் சங்கத்துல கம்ப்ளையிண்ட் கொடுத்து அந்தப் பொண்ணு 2 லட்சம் ரூபாய் பாக்கியை வாங்கியிருக்கு. அட ஹீரோயின் யாருன்னு சொல்லலியே..? அதாங்க நம்ம கிளி மூக்கு மோனிகா..

சிலந்தி படத்துல கடைசி நேரத்துல போட்டோவுக்கு அப்படியொரு போஸ் கொடுத்து தயாரிப்பாளரையும், இயக்குநரையும் வாழ வைச்ச பொண்ணு அது. அதையே கண்ணு கலங்க வைக்கலாமா?


எந்தக் கோணத்துல பார்த்தாலும் இந்தப் பொண்ணை அடையாளம் கண்டுபிடிக்கிறது மகா கஷ்டமா இருக்குப்பா. டைட் குளோஸப் ஷாட் வைச்சாத்தான் தெரியுது மோனிகான்னு.. இது யாரோட குற்றம்? கேமிராமேன் செஞ்ச சதியா? இயக்குநர் செஞ்ச லொள்ளான்னு தெரியலை..

இரண்டு பாட்டுக்கு வஞ்சகமில்லாம ஆடிக் காண்பிச்சிருக்கு. பார்க்கலாம்.. நடிப்பு.. ம்.. சத்யராஜூக்கு அப்புறம் கொஞ்சூண்டு நடிப்பைக் காமிச்சிட்டு கிளிசரினுக்கு கொஞ்சம் வேலை கொடுத்திருக்கு.

புரட்சித் தமிழனுக்கு நிறைய சீன்ல வேலையே முகத்துல தோரணம் காட்டுறதுதான். அப்படியொண்ணும் பெரிய வேலையில்லீல்ல. அண்ணன் எத்தனை படம் பார்த்திருப்பாரு. ஒரே காஸ்ட்யூம்தான்.. ஒரே ஒரு சீன்ல மட்டும்தான்.. சின்னப்பதாஸ் மாதிரி வாய்ல பீடிய வழிச்சுக்கின்னு உள்துறை அமைச்சர் வீட்ல வந்து சவுண்டு விடுற சீனை மட்டும் இனிமேல் அடிக்கடி சின்னச் சின்ன சேனல்ல பார்க்கலாம். அந்தப் பழைய தெனாவெட்டு சத்யராஜை எங்க போய் பார்க்குறது..? இன்னமும் ஆளுக்கு தானா வருதுய்யா அது..

பானுசந்தர் பாவம்.. தெலுங்கு அடிதடி படங்களில் அநேகமாக புரட்சிக்காரனாகவோ, இல்லாவிடில் நேர்மையான போலீஸ்காரனாகவோ நடித்து முடித்து ரிட்டையர்டானவரை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தணுமோ அந்த அளவுக்கு செஞ்சுப்புட்டாங்க..

தன்னோட பழைய தரை டிக்கெட்டான உள்துறை அமைச்சரோட பேசுற அந்த ஒரு சீன்தான் மனுஷனுக்கு வசமா சிக்கிருக்கு.. நல்ல டிவிஸ்ட்டான காட்சி அது.. பானுசந்தரின் நடிப்பும் இந்த ஒரு காட்சியில் பேர் சொல்லும் விதமாக உள்ளது.

எம்.எல்.ஏ.வா இருந்து அமைச்சரா அவதாரமெடுக்குறவரு இயக்குநர் மனோஜ்குமார். பையனுக்கு பீர் பாட்டிலை உடைச்சுக் கொடுத்து “இதைக் குடிடா மவனே.. கொஞ்சம் சோகமும் தீரும்.. உடம்பு வலியும் போகும்..”ன்னு அன்பா சொல்ற ஒரு அப்பன். எனக்கெல்லாம் இப்படியொரு அப்பன் வாய்ச்சிருக்கக் கூடாதா..?

பானுசந்தரை டுமீல் செய்துவிட்டு தரையில் இருந்து சோபாவுக்கு ஜம்ப் செய்துவிட்டு “யாருடா தரை டிக்கெட்டு..?” என்று கேட்டு அதகளம் செய்யும் அந்த ஒரு காட்சிலதான் இவரும் நடிப்பைத் தொட்டுட்டாரு..


அப்புறம் நம்ம ரஞ்சித்.. கமிஷனர் ஆஃப் போலீஸ்.. ஆனால் போட்டிருக்கிற போலீஸ் டிரெஸ்ஸை பார்த்தா போலீஸ்காரங்களே சிரிப்பாங்க.. இதுக்கெல்லாம் மலையாளத்துல சுரேஷ் கோபி போலீஸா நடிக்குற படத்தைப் பார்க்கணும்ய்யா.. காக்கி டிரெஸ்ஸிங்ல அவரை அடிச்சுக்க முடியாது. அப்படியொரு பிட்னஸ் தெரியும்..

அழகன் தமிழ்மணி, சடுகுடு யுவராணி, குயிலி, சச்சு, அண்ணாமலை படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான மீனாட்சிசுந்தரம் என்று மிகப் பெரும் லிஸ்ட்டே இதுல நடிச்சிருக்கு.

இசை தினா. ஒரு குத்துப்பாட்டுக்கு பறையடி அடித்திருக்கிறார். “ஆஹா சொக்க வைச்சான்” பாட்டும் “நேசமா நினைச்சவ” பாடலும் கேட்கும்படியிருந்தது.. ரொம்ப நாள் கழித்து பாடல் வரிகள் காதுகளில் விழுந்து தெரித்தன. படத்தின் தீம் மியூஸிக்கையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. நன்றி தினா.

பெரும் லாஜிக்குகளை படு லாவமாகக் கடத்திக் கொண்டு போயிருக்கும் இயக்குநர் கிளாமாக்ஸில் செய்திருக்கும் படு சொதப்பல் தமிழ்த் திரையுலகம் இதுவரை காணாதது..

பொட்டல் காட்டில் சத்யராஜையும், அவரது ஆட்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு ஹீரோயினையும், விக்னேஷையும் கேட்டுத் துன்புறுத்தும் காட்சியின் இறுதியில் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது ரஞ்சித்தின் அஸால்ட்டான முடிவு.

ஹீரோயினும், விக்னேஷும் தாங்கள் பிரிவதாகச் சொன்ன பின்பு, சத்யராஜ் திடீர் என்று தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள.. “வாங்க போலாம்..” என்று ரஞ்சித் சக போலீஸாரிடம் சொல்லிவிட்டு நடையைக் கட்ட தாங்கள் வந்த போலீஸ் வேன், போலீஸ் ஜீப்களைக்கூட எடுக்காமல் போலீஸ் கூட்டம் அப்படியே பொடி நடையாய் நடப்பதைப் பார்த்து பேஸ்த்தடித்துப் போய் எழுந்த வேகத்தில் திரும்பவும் அமர்ந்துவிட்டேன். இப்படியுமா இந்தக் காலத்தில் ஒரு காட்சியை வைப்பார்கள்..? இயக்குநருக்குத்தான் தோணலைன்னா.. அஸோஸியேட். உதவி இயக்குநர்களெல்லாம் என்னதான் செஞ்சுக்கிட்டிருந்தாங்களோ தெரியலை..

என்ன செய்யறது? நமக்கு வாய்க்குறது அவ்ளோதான்.. படத்தை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஏழு நாள் படமும் ஓடி முடிஞ்சிருச்சு. கணக்குப் போட்டுப் பார்த்து மிச்சம், மீதியிருந்தா அந்த பத்து தயாரிப்பு தெய்வங்களும் பங்கு பிரிச்சுக்கட்டும்..

முடிவுல நான் என்னத்த சொல்றது..? என்னிக்காச்சும் ஒரு நாள் வீட்டு டிவில போடுவாய்ங்க.. அப்போ பார்த்துக்குங்க..

“படம் எடுக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரியாம.. மவனே.. ஓசில இடம் கொடுக்குறானேன்னு இஷ்டத்துக்கு விமர்சனம் எழுதி தள்ளிக்கிட்டிருக்க.. ஒரு நாளைக்கு இருக்குடி உனக்கு....!!!” - தயவு செய்து இப்படியெல்லாம் திட்டி மெயில் அனுப்ப வேண்டாம்..

எனக்குத் தெரிஞ்சது விமர்சனம் செய்ய மட்டும்தான். படம் எடுக்க இல்லை.. ஹி.. ஹி.. ஹி.. மன்னிச்சுக்குங்கோ..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

59 comments:

PARAYAN said...

Indha padathukkum vimarsanama?!?!?!?! AVVVVVVVVV

எல் கே said...

// சேலத்தைச் சேர்ந்த பத்து திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்களாம்.

//

ஏன் இப்படி ஆகிட்டாங்க எங்க ஊரு மக்கள்ஸ்

pichaikaaran said...

அடடா.. ஃபர்ஸ்ட் போச்சே !!

pichaikaaran said...

அடடா.. ஃபர்ஸ்ட் போச்சே !!

sriram said...

//விக்னேஷ் காதலையும் விட முடியாமல், நன்றிக் கடனையும் தீர்க்க முடியாமல் அல்லாட.. பானுசந்தர் மனம் தளராமல் தொண்டைமானை போட்டுத் தள்ள அடுத்த ஆளை அனுப்பி வைக்க.. உள்துறை மந்திரி தனது மகனுக்கு ஹீரோயினை மணமுடிக்க நெருக்கடி கொடுக்க.. ரஞ்சித் தனது கொழுந்தியாளை வைத்து கமிஷனர் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டிருக்க.. யார் ஜெயித்தார்கள் என்பதுதான் மிச்ச மீதிக் கதை.//

ஐயோ அம்மா தலை சுத்துதே, யாராவது சோடா கொண்டு வாங்களேன்னு கத்தணும் போல இருக்கு.

இதைப் படிக்கும் எங்களுக்கே இப்படி இருக்கே? எப்படியண்ணே படத்தை 150 நிமிஷம் ஒக்காந்து பாத்தீங்க.
ஆஸ்கர்ல மொக்கைப் படம் பாக்கும் கேட்டகரி ஒண்ணு ஆரம்பிச்சு மொதோ விருது உங்களுக்குத் தரணும் அண்ணே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

pichaikaaran said...

"பிராப்பர்ட்டீஸ்கூட மாத்தாம விட்டிருக்கிறதை பார்த்தா.."

அப்படீனா என்ன ?


”சிலந்தி படத்துல கடைசி நேரத்துல போட்டோவுக்கு அப்படியொரு போஸ் கொடுத்து தயாரிப்பாளரையும், இயக்குநரையும் வாழ வைச்ச பொண்ணு அது”

அந்த போட்டாவை ஏன் இணைக்கல?

”எனக்கெல்லாம் இப்படியொரு அப்பன் வாய்ச்சிருக்கக் கூடாதா..?”

வீட்டு போன் நம்பர் கிடைக்குமா ?

Unmaivirumpi said...

அண்ணே உங்கள நினைச்சா பாவமா இருக்கு இப்படி போய் இந்த படத்தில மாட்டிகிட்டீங்களே!!! அது சரி படத்துக்கு போன பேனா நோட்டோட தான் போவிங்களோ, இப்படி டீட்டைல எழுதி இருக்கீங்களே, இத படிச்சதுக்கு அப்புறமா யாராவது இந்த படத்துக்கு போவாங்க, இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ... அப்போ பாத்துக்கலாம்

ஸ்ரீ.... said...

அண்ணே,

விமர்சனம் அருமை! (ஒரு நாள் பிரதமர் இல்ல, ஒரு நாள் முதல்வர்!!!)

ஸ்ரீ....

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...
Indha padathukkum vimarsanama?!?!?!?! AVVVVVVVVV]]]

ஏன் இதுவும் சினிமாதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[LK said...
//சேலத்தைச் சேர்ந்த பத்து திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்களாம்.//

ஏன் இப்படி ஆகிட்டாங்க எங்க ஊரு மக்கள்ஸ்]]]

ஓ.. அப்ப நீங்க சேலமா..? செளக்கியமா?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
அடடா.. ஃபர்ஸ்ட் போச்சே !!]]]

விடுங்க.. அடுத்த தபா முந்திரலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//விக்னேஷ் காதலையும் விட முடியாமல், நன்றிக் கடனையும் தீர்க்க முடியாமல் அல்லாட.. பானுசந்தர் மனம் தளராமல் தொண்டைமானை போட்டுத் தள்ள அடுத்த ஆளை அனுப்பி வைக்க.. உள்துறை மந்திரி தனது மகனுக்கு ஹீரோயினை மணமுடிக்க நெருக்கடி கொடுக்க.. ரஞ்சித் தனது கொழுந்தியாளை வைத்து கமிஷனர் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டிருக்க.. யார் ஜெயித்தார்கள் என்பதுதான் மிச்ச மீதிக் கதை.//

ஐயோ அம்மா தலை சுத்துதே, யாராவது சோடா கொண்டு வாங்களேன்னு கத்தணும் போல இருக்கு.

இதைப் படிக்கும் எங்களுக்கே இப்படி இருக்கே? எப்படியண்ணே படத்தை 150 நிமிஷம் ஒக்காந்து பாத்தீங்க.

ஆஸ்கர்ல மொக்கைப் படம் பாக்கும் கேட்டகரி ஒண்ணு ஆரம்பிச்சு மொதோ விருது உங்களுக்குத் தரணும் அண்ணே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

ஹி.. ஹி.. எல்லாம் உங்களை மாதிரியான நண்பர்களுக்காகத்தான் அந்தக் கஷ்டத்தை அனுபவிக்கிறேன். இதை மறக்காம மனசுல வைச்சுக்குங்க..

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"பிராப்பர்ட்டீஸ்கூட மாத்தாம விட்டிருக்கிறதை பார்த்தா.."

அப்படீனா என்ன?]]]

வீட்டில் உள்ள பொருட்கள்..!


”சிலந்தி படத்துல கடைசி நேரத்துல போட்டோவுக்கு அப்படியொரு போஸ் கொடுத்து தயாரிப்பாளரையும், இயக்குநரையும் வாழ வைச்ச பொண்ணு அது”

அந்த போட்டாவை ஏன் இணைக்கல?]]]

எத்தனை தடவைதான் பார்க்குறது..?

[[[”எனக்கெல்லாம் இப்படியொரு அப்பன் வாய்ச்சிருக்கக் கூடாதா..?”
வீட்டு போன் நம்பர் கிடைக்குமா?]]]

எங்க அப்பன் செத்துப் போய் 25 வருஷமாச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[Unmaivirumpi said...

அண்ணே உங்கள நினைச்சா பாவமா இருக்கு இப்படி போய் இந்த படத்தில மாட்டிகிட்டீங்களே!!! அது சரி படத்துக்கு போன பேனா நோட்டோடதான் போவிங்களோ, இப்படி டீட்டைல எழுதி இருக்கீங்களே, இத படிச்சதுக்கு அப்புறமா யாராவது இந்த படத்துக்கு போவாங்க, இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக. அப்போ பாத்துக்கலாம்]]]

நல்ல முடிவு தம்பி.. இதையே கடைசிவரைக்கும் பாலோ பண்ணுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீ.... said...

அண்ணே,

விமர்சனம் அருமை! (ஒரு நாள் பிரதமர் இல்ல, ஒரு நாள் முதல்வர்!!!)

ஸ்ரீ....]]]

இந்தக் கதைக்காக மாத்திக்கி்ட்டேன்..!

ராம்ஜி_யாஹூ said...

இந்தப் படத்திற்கு விமர்சனம் நீளம் தான்

Ramesh said...

Yenga ooru producersa. Dhairiyamana alungadhan.
10 per sendhu produce panna velanguma. Director avangalai vida pavam. Inime vaippunnu onnu avarukku kedacha, indha anubavathaiye oru nalla padama yeduthiduvar

எப்பூடி.. said...

//புரட்சித் தமிழனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அதிர்ச்சியாயிருக்கு. தியேட்டருக்குள்ள மொத்தமே 9 பேர்தான்.//


சந்திரமுகி வந்த வருஷம் (2005) சத்தியாராஜ் "பாபாவால படம் ஓடினதா சொல்ற ரஜினி இந்த வருஷம் ஒரு படந்தான் நடிச்சிருக்கிறாரு, கடவுள் இல்லையின்னு சொல்லுற நான் 6 படம் நடிச்சிருக்கிறன்" அப்பிடின்னு சொன்னது இப்ப ஞாபகம் வந்திச்சுது.

குழலி / Kuzhali said...

//எனக்குத் தெரிஞ்சது விமர்சனம் செய்ய மட்டும்தான். படம் எடுக்க இல்லை.. ஹி.. ஹி.. ஹி.. மன்னிச்சுக்குங்கோ.
//
அண்ணே இது தான் சூப்பர் :-)

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
இந்தப் படத்திற்கு விமர்சனம் நீளம்தான்.]]]

அப்படிங்கிறீங்க..!? சரிங்கண்ணே..

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் ரமேஷ் said...
Yenga ooru producersa. Dhairiyamana alungadhan. 10 per sendhu produce panna velanguma. Director avangalai vida pavam. Inime vaippunnu onnu avarukku kedacha, indha anubavathaiye oru nalla padama yeduthiduvar.]]]

படம் தயாரிக்க காரணமே இயக்குநர்தான் தம்பி.. அவர்தான் தயாரிப்பாளர்களை வளைச்சுப் பிடிச்சிருக்காரு.. இயக்குநர் தப்பிச்சிருப்பாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[எப்பூடி.. said...

//புரட்சித் தமிழனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அதிர்ச்சியாயிருக்கு. தியேட்டருக்குள்ள மொத்தமே 9 பேர்தான்.//

சந்திரமுகி வந்த வருஷம்(2005) சத்தியாராஜ் "பாபாவால படம் ஓடினதா சொல்ற ரஜினி இந்த வருஷம் ஒரு படந்தான் நடிச்சிருக்கிறாரு.. கடவுள் இல்லையின்னு சொல்லுற நான் 6 படம் நடிச்சிருக்கிறன்" அப்பிடின்னு சொன்னது இப்ப ஞாபகம் வந்திச்சுது.]]]

கொழுப்புதான். அனுபவம்தான் எல்லாருக்கும் சிறந்த ஆசான்..!

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...

//எனக்குத் தெரிஞ்சது விமர்சனம் செய்ய மட்டும்தான். படம் எடுக்க இல்லை.. ஹி.. ஹி.. ஹி.. மன்னிச்சுக்குங்கோ.//

அண்ணே இதுதான் சூப்பர் :-)]]]

உண்மையைத்தாண்ணே சொன்னேன்..! இனிமேல் யாரும் திட்ட மாட்டாய்ங்க பாருங்க..!

எல் கே said...

/
ஓ.. அப்ப நீங்க சேலமா..? செளக்கியமா?///

சௌக்கியம்தான் .. நீங்களும் சேலமா ??

Unknown said...

அண்ணன்
நீங்க ந்த படத்த பார்த்த "தில்லை" என்ன சொல்வது !!!!!!!!!
உங்க மாதரி அன்பனவர்கலள்தான் சினிமா வாழ்கிறது .
நண்பன்
ஞானம்

Unknown said...

அண்ணன்
நீங்க ந்த படத்த பார்த்த "தில்லை" என்ன சொல்வது !!!!!!!!!
உங்க மாதரி அன்பனவர்கலள்தான் சினிமா வாழ்கிறது .
நண்பன்
ஞானம்

முரளிகண்ணன் said...

கவுரவர்கள் படத்துக்கு பாண்டவர்கள் அளவுதான் கூட்டம்னு சொல்லுறீங்க

பித்தன் said...

//எனக்கு ஒரு நாள் பிரதமர் பதவி கிடைச்சா இதை செஞ்சிருவேன்.. //

naanthaan ulthurai paarthuppen solliputten

பித்தன் said...

//இப்பல்லாம் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறதைவிட டிவி சீரியல் முக்கியமா போயிருச்சு..//

intha maathiri padam eduththaa seriyalthaan besttu karant selavoda pogum, athaththaane intha arasum virumbuthu

Pradeep said...

Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai..

நித்யன் said...

அண்ணே நீங்க ரொம்ப நல்லவரு...

அன்பு நித்யன்

rghavan66 said...

இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கிறோம் சார், சும்மா லொலலாய்க்கு

ரவி said...

எந்திரன் இதுவரை வசூல் என்ன ?

ராஜ நடராஜன் said...

கோழி கூட்டுல மறுபடியும் பூந்துகிச்சா:)

ராஜ நடராஜன் said...

//மொதல்ல நாட்டுல செய்தி சேனல்களை தவிர மீதி சேனல்கள் அத்தனையையும் தடை செய்யணும்பா. அப்பத்தான் சினிமா தொழில் வளரும். சினிமா தொழிலாளர்கள் வாழ்வாங்க. அவங்க குடும்பம் நல்லாயிருக்கும். தமிழ்க் கலாச்சாரம் வளர்ந்து கொண்டே போகும்..

எல்லோரும் உலக அறிவை வளர்க்கிறோம்ன்னு முடிவு பண்ணிட்டா அப்ப என்ன செய்வீங்க?அப்ப என்ன செய்வீங்க?

எனக்கு முன்னாடி செந்தழல் ரவி டிக்கட் வரிசையில் நிற்கிறாரு.முதல்ல அவருக்கு டிக்கட்டு கொடுங்க.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மாச கடைசில எப்படி தான் படம் பாக்கிறீங்க ...,தெரியலை ...,ஸ்ஸ் அதுவும் இந்த மாதிரி படம் ........,

kanagu said...

இப்படி படங்களை தொடர்ந்து பார்ப்பது உடம்புக்கு நல்லதில்ல அண்ணா...

விக்னேஷ் நல்ல ஸ்மார்ட் ஆன ஹீரோ... ஆனா இதுல ரொம்ப கொடுமையா இருக்கார்... சத்யராஜூக்கு கூட கூட்டம் வரல அப்டின்னா கஷ்டம் தான் :(

a said...

//
முதல்வன்' படத்துல வர்ற மாதிரி எனக்கு ஒரு நாள் பிரதமர் பதவி கிடைச்சா இதை செஞ்சிருவேன்
//

அண்ணே : அது முதல்வர் பதவி...........

//
போலீஸ் வேன், போலீஸ் ஜீப்களைக்கூட எடுக்காமல் போலீஸ் கூட்டம் அப்படியே பொடி நடையாய் நடப்பதைப் பார்த்து பேஸ்த்தடித்துப் போய் எழுந்த வேகத்தில் திரும்பவும் அமர்ந்துவிட்டேன்
//

ஒத்துக்கிறேன்...... நீங்கள் பேஸ்த்தடித்து போய் இருக்கீங்க.........

Anonymous said...

படத்தோட ரிசல்ட் சத்யராஜ் தலையில் நன்றாக தெரிகிறது.

உண்மைத்தமிழன் said...

[[[LK said...

/ஓ.. அப்ப நீங்க சேலமா..? செளக்கியமா?///

சௌக்கியம்தான். நீங்களும் சேலமா??]]]

இல்லீங்கண்ணா.. திண்டுக்கல்லுண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[மிட்டாய் கனவுகள் said...

அண்ணன், நீங்க இந்த படத்த பார்த்த "தில்லை" என்ன சொல்வது !!!!!!!!!
உங்க மாதரி அன்பனவர்கலள்தான் சினிமா வாழ்கிறது.
நண்பன்
ஞானம்]]]

ஞானம் தம்பியின் வாழ்த்துக்கு நன்றி..!

என்னை மாதிரி ஊருக்கு 50 பேர் இருக்கிறதாலதான் தியேட்டர்கள் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...
கவுரவர்கள் படத்துக்கு பாண்டவர்கள் அளவுதான் கூட்டம்னு சொல்லுறீங்க.]]]

ஆஹா.. ரத்தினச் சுருக்கமா சுருக்கிட்டீங்களேண்ணே.. உண்மைதாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//எனக்கு ஒரு நாள் பிரதமர் பதவி கிடைச்சா இதை செஞ்சிருவேன்.. //

naanthaan ulthurai paarthuppen solliputten.]]]

ஆஹா.. அதுக்குள்ளேயே கிளம்பிட்டாங்கப்பா.. கிளம்பிட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//இப்பல்லாம் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறதைவிட டிவி சீரியல் முக்கியமா போயிருச்சு..//

intha maathiri padam eduththaa seriyalthaan besttu karant selavoda pogum, athaththaane intha arasum virumbuthu.]]]

அப்பத்தான் டைரக்டா அவங்க குடும்பத்துக்கு காசு போய்ச் சேரும்..! எல்லாம் ஒரு தொலை நோக்குப் பார்வைதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Pradeep said...
Enthiranukkum enthirikum enbathae endhiranin kathai.]]]

ஹா.. ஹா.. ஹா.. ஒண்ணும் சொல்ல முடியல..!

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...

அண்ணே நீங்க ரொம்ப நல்லவரு...

அன்பு நித்யன்]]]

யார் சொன்னது தம்பி.. அப்படீல்லாம் இல்லை.. நான் ரொம்ப, ரொம்பக் கெட்டவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[raghava said...
இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கிறோம் சார், சும்மா லொலலாய்க்கு.]]]

அப்புறம் உங்க தலையெழுத்து.. நான் ஒண்ணும் சொல்ல முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
எந்திரன் இதுவரை வசூல் என்ன?]]]

மீடியால வந்த நியூஸ்தான் எனக்கும் தெரியும்..! 340 கோடி வந்திருக்கும்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
கோழி கூட்டுல மறுபடியும் பூந்துகிச்சா:)]]]

ஆமாமாம்.. மறுபடியும் நாளைக்குப் பறந்திரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//மொதல்ல நாட்டுல செய்தி சேனல்களை தவிர மீதி சேனல்கள் அத்தனையையும் தடை செய்யணும்பா. அப்பத்தான் சினிமா தொழில் வளரும். சினிமா தொழிலாளர்கள் வாழ்வாங்க. அவங்க குடும்பம் நல்லாயிருக்கும். தமிழ்க் கலாச்சாரம் வளர்ந்து கொண்டே போகும்.

எல்லோரும் உலக அறிவை வளர்க்கிறோம்ன்னு முடிவு பண்ணிட்டா அப்ப என்ன செய்வீங்க?அப்ப என்ன செய்வீங்க?]]]

வளர்க்க வேண்டியதுதான். அறிவு வளர்ச்சிக்கு எல்லையில்லையே ஸார்.. அது தானா நல்லா வளரட்டும்..!

[[[எனக்கு முன்னாடி செந்தழல் ரவி டிக்கட் வரிசையில் நிற்கிறாரு. முதல்ல அவருக்கு டிக்கட்டு கொடுங்க.]]]

கொடுத்திட்டேன்..

உண்மைத்தமிழன் said...

[[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மாச கடைசில எப்படிதான் படம் பாக்கிறீங்க. தெரியலை. ஸ்ஸ் அதுவும் இந்த மாதிரி படம்.]]]

முருகன் செஞ்ச சதி.. வேறென்னத்த சொல்றது..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

இப்படி படங்களை தொடர்ந்து பார்ப்பது உடம்புக்கு நல்லதில்ல அண்ணா.]]]

வேறென்ன செய்யறது கனகு.. பொழுது போவணுமில்லை..

[[[விக்னேஷ் நல்ல ஸ்மார்ட் ஆன ஹீரோ... ஆனா இதுல ரொம்ப கொடுமையா இருக்கார்... சத்யராஜூக்குகூட கூட்டம் வரல அப்டின்னா கஷ்டம்தான்:(]]]

அவ்வளவுதான்.. காலம் மாறிப் போச்சு. மவுசு இருக்கிறவரைக்கும் கல்லா கட்ட முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//முதல்வன்' படத்துல வர்ற மாதிரி எனக்கு ஒரு நாள் பிரதமர் பதவி கிடைச்சா இதை செஞ்சிருவேன்//

அண்ணே : அது முதல்வர் பதவி.]]]

தெரியும் தம்பி.. பவருக்காக முதல்வரை பிரதமரா மாத்திட்டேன்.. அம்புட்டுத்தான்..

//போலீஸ் வேன், போலீஸ் ஜீப்களைக்கூட எடுக்காமல் போலீஸ் கூட்டம் அப்படியே பொடி நடையாய் நடப்பதைப் பார்த்து பேஸ்த்தடித்துப் போய் எழுந்த வேகத்தில் திரும்பவும் அமர்ந்து விட்டேன்//

ஒத்துக்கிறேன். நீங்கள் பேஸ்த்தடித்து போய் இருக்கீங்க.]]]

என்னத்த சொல்றது..? தமிழ்ச் சினிமா வளரலைன்னா யாராவது சொன்னா ஒத்துக்காதீங்க.. ரொம்பவே வளர்ந்திருச்சு. அதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...
படத்தோட ரிசல்ட் சத்யராஜ் தலையில் நன்றாக தெரிகிறது.]]]

ஹி.. ஹி.. ஹி..!

Thomas Ruban said...

//முருகன் செஞ்ச சதி.. வேறென்னத்த சொல்றது..!//

அண்ணே நீங்க தப்பு செய்திட்டு, முருகன் மேல் பழி போடுவது நியாயமா...

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

//முருகன் செஞ்ச சதி.. வேறென்னத்த சொல்றது..!//

அண்ணே நீங்க தப்பு செய்திட்டு, முருகன் மேல் பழி போடுவது நியாயமா.]]]

அப்போ ஒச்சாயி போட்டிருக்கலாம்ல. ஏன் இந்தப் படத்தைப் போட்டானுக..?

நாகை சிவா said...

எம்மய்யா... உனா.தானா... உண்மையில் படம் பாத்தீரா... இல்லை பாதியில் தூங்கிட்டீரா...

//சத்யராஜிடம் விக்னேஷ் வேலை செய்வது தெரிந்தும் அவரிடம் ஹீரோயினை கொலை செய்யணும்.//

ஹீரோவை கொலை செய்ய அதாவது விக்னேஷ் சை கொலை செய்ய விக்னேஷ் னிடம் பொறுப்பு வருகிறது.

//தனது மனைவியின் தங்கையான ஹீரோயினை மந்திரியின் மகனுக்கு கட்டிவைத்துவிட்டு//

மனைவி கிடையாது... துணைவி...

ஏது எப்படியோ நாம் இரண்டு பேர் மட்டும் தான் பதிவுலகில் இந்த படத்தை பார்த்த மக்களா இருப்போம் போல.. நாளை இளமை காதல் னு படம் பாக்கலாம் இருக்கேன்.. பாத்திகளா?

abeer ahmed said...

See who owns graines-et-plantes.com or any other website:
http://whois.domaintasks.com/graines-et-plantes.com

abeer ahmed said...

See who owns ittelligence.co.za or any other website.