பதிவர் சந்திப்பு அமங்கலமான துயரம்..!

30-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வீட்டில் முதன்முதலாக நடக்கப் போகின்ற திருமணம்.. ஆசைஆசையாக முதன்முதலில் கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசம்.. குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா.. இப்படி நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கிற நாளில் அது அமங்கலமாகி முடிந்தால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கும் அன்றைய நாளில் இருந்தது..!

நானும், தண்டோராவும், கேபிள் சங்கரும், சூர்யாவும் சந்திக்கின்றபோதெல்லாம் ஏதாவது ஒரு அமைப்போ, சங்கமோ வலைப்பதிவர்களுக்காக அமைத்தால் நன்றாக இருக்குமே.. எப்போது செய்யலாம்.. எப்படி செய்யலாம்.. என்று பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகாமல் மனதிற்குள்ளேயே கிடந்தமைக்கு முக்கியக் காரணம் அவரவர்க்கு இருந்த சொந்த வேலைகள்.

எந்தவொரு முயற்சியின் வெற்றியின் பின்னாலும் ஒரு வெறியான பொறி இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டும். அது யாருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு வந்தது கடந்த 20-ம் தேதியன்று சென்னையில் நடந்த இண்டிபிளாக்கர் கூட்டத்தில்.

அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோது அங்கு வந்திருந்த பதிவர்களின் கூட்டத்தையும், அவர்கள் நிகழ்ச்சியை நடத்திய பாங்கையும், எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பையும் யோசித்தபோது(இத்தனைக்கும் அவர்கள் இந்தியா முழுமைக்குமான ஆங்கிலப் பதிவர்கள்) பிரமிப்பாக இருந்தது.

இத்தனை தூரம்.. தமிழ்.. தமிழ் என்றெல்லாம் மாநிலம் முழுவதும், பதிவுகள் முழுவதும் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்ற நம்மால் ஏன் இது போல் செய்ய முடியாது.. அவர்களும் நட்பை வளர்ப்பதையும், தொடர்வதையும், எழுத்து ஆர்வத்தை தூண்டுவதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பினை நடத்துவதாகச் சொன்னார்கள். நல்ல விஷயம்தானே.

அமைப்பு என்கிறபோது யார் நடத்துகிறார்கள் என்கிற கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிடுகிறது. தனி நபர்கள் இது போன்று மிகப் பெரும் அளவுக்கு நடத்திவிட முடியாது. அதற்காக சில தனி நபர்களின் பணத்திலேயே நிகழ்ச்சியை நடத்திவிட்டு அதனை பின்னாளில் விமர்சனம் செய்கின்றபோது இரு தரப்பாருக்குமே மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டே.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடனேயே அண்ணன் தண்டோராவுக்கு போன் செய்து அமைப்பு பற்றிய பேச்சைத் துவக்கினேன். இடைமறித்த அவர், "அண்ணே.. நானும் அந்த மூட்லதான் இருக்கேன். இப்பத்தான் கேபிள்கிட்ட பேசினேன்.. அடுத்த வாரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னோடியா ஒரு நிகழ்ச்சியை அறிவிச்சிரலாம்.. நீங்களும் போஸ்ட் போடுங்க.." என்றார்.

மட்டற்ற மகிழ்ச்சி. நானே அது பற்றிப் பேசலாம் என்று போனை போட.. அவரும் அதையே சொல்கிறார் என்றால் ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் பொறியாக இருந்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டேன்.

கவனிக்க.. சங்கம் அமைக்க ஆலோசனைகளையும், கருத்துரைகளையும் கேட்கத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டுகிறோம் என்று பதிவில் எழுதியிருந்தார் தண்டோரா அண்ணன். கேபிளும் அதையேதான் முன் மொழிந்திருந்தார். நானும் எனது பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக கேள்விகளையும் கேட்டு இதற்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டும். வாருங்கள் என்று அழைத்திருந்தேன். சங்கம் அமைக்கலாமா வேண்டாமா என்பது பற்றிய ஆலோசனைக்கு அல்ல.. சங்கத்தை அமைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்காகத்தான்..

அடுத்தது அந்த டிராப்ட் பேப்பர். தண்டோரா அண்ணனிடம் "நான் ஒரு டிராப்ட்டை வடிவமைப்பு அனுப்புகிறேன். பாருங்கள்.. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.. ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.." என்றேன். கேபிளிடமும் இதையே சொன்னேன். சரி என்றார்கள். ஆனால் என் நேரம் பாருங்கள்.. என் அப்பன் முருகன் இடையில் புகுந்து விளையாடிவிட்டான்.

நான் அனுப்பிய பாண்ட் தண்டோரா அண்ணன் சிஸ்டத்தில் ஓப்பன் ஆகவே இல்லை.. கேபிளுக்கும் இதே கதிதான்.. சரி.. சூர்யாவிடமாவது கருத்துக் கேட்கலாம் என்று சொல்லி அவருக்கும் அனுப்பி வைத்தேன். அவரும் இதையேதான் சொன்னார்.. நேரமும் கடைசி நாள் என்பதாகிவிட்டதால் "நீங்க பிரிண்ட் அவுட் எடுத்திட்டே வந்திருங்க.. பார்த்துக்கலாம்.." என்று தண்டோரா அண்ணனும், கேபிளும் சொல்ல.. எடுத்து வந்தேன்.

அதில் இருந்த வாசகங்கள்.. கருத்துக்கள்.. கேள்விகள்.. அனைத்தும் நானே என் சொந்த புத்தியில் எழுதியவைதான்.. பிரிண்ட் அவுட்டாகத்தான் தண்டோராவும், கேபிளும் மற்றவர்களும் பார்த்தார்கள்.

நான் முதலில் மைக்கை பிடித்தவுடனேயே தெளிவாகச் சொன்னேன். "சங்கம் ஆரம்பித்தால் என்னென்ன செய்ய வேண்டும்..? எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்..? யார், யாரெல்லாம் இருக்க வேண்டும்..? அதற்கான அரசு வழிமுறைகள் என்னென்ன..? அதை நாம் எப்படி பின்பற்றுவது.. இதைத்தான் இந்தக் கேள்விகளில் கேட்கப்பட்டிருக்கிறது. பதிவர்கள் தயவு செய்து இந்தக் கேள்விகளுக்கு தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறுதான்" நான் கேட்டுக் கொண்டேன்.

"நமக்காக ஒரு அமைப்பை ஆரம்பிக்கலாமா? வேண்டாமா?" என்று நான் கேட்பதாக இருந்தால், எதற்கு இப்படி ஒரு வில்லங்கத்தை தட்டச்சு செய்து கொண்டு வர வேண்டும்..? ஒரு அமைப்பு நமக்கு வேண்டும் என்று நினைத்துதான் நான் அதனை கொண்டு வந்து கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது..? அமைப்பு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பதுதான் அன்றைய அஜெண்டா என்றால் கடைசி நேரத்தில் அண்ணன் ஞானி கேட்டதுபோல் கையைத் தூக்கும்படி நான் முதலிலேயே கேட்டிருப்பனே..?

மேதகு சிவராமன் எங்களது பதிவுகளைப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன, எப்படி படித்தார் என்று எனக்குத் தெரியவில்லை.

அமைப்பைத் துவக்க ஆலோசனைக்காகத்தான் அழைத்திருந்தோம். அமைப்பாக உருவெடுக்க எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கலாம். தேவையில்லாமல் நாங்கள் ஏதோ திட்டமிட்டே முன்பே சதி வேலை செய்து அமைப்பை உருவாக்கிவிட்டு பின்பு வெறும் கண்துடைப்புக்காக அவர்களை அழைத்ததாக கதையைத் திரித்துவிட்டார் மேதகு சிவராமன்.

வலையுலகத்திற்கு அமைப்பு எதற்காக இப்போது தேவை என்று இந்த மேதகுதான் கேட்டார். வெறும் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி மாதந்தோறும் ஒரு திரைப்படத்தினை காட்டும்போது, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 வலைப்பதிவர்கள் இயங்கி வரும் இந்தத் தமிழ்ச் சூழலில் அவர்களை வைத்து ஒரு அமைப்பாக்கி என்னவெல்லாம் செய்யலாம் என்று ஏன் இந்த பின்னவீனத்துவ ஐயாவுக்குத் தோணவில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை.

எதற்குத் தேவை என்று கேட்டதற்குக்கூட நான் ஒரு இடத்தில் பதில் சொன்னேன்..

அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இணையத்தில் எழுதும் ஆர்வமுள்ளவர்களை நாம் வலையுலகத்திற்குள் இழுக்கலாம்.

அவர்களுக்கு வலையுலகத்தை அறிமுகப்படுத்தலாம்.

ஒரு அலுவலகம் அமைத்து அங்கே வலையுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நாமே சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மாநகராட்சி பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அமைப்பின் சார்பாக வலைப்பதிவர் பட்டறையை நடத்தலாம்.

வலையுலகத்திற்குள் பலரும் வருவதால் அவர்களுக்கு நிச்சயமாக பலன்கள் கிடைக்கும். நட்புகள் கிடைக்கும்.. இதனால் எனக்குக் கிடைத்ததுபோல் நல்லவைகளும் நிச்சயம் நடக்கும்..

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

இதையெல்லாம் தனி நபர்களாக இருந்து செய்கின்றபோது பல்வேறு விமர்சனங்களும் பணச்சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழல் உண்டு. ஒரு அமைப்பின்கீழ் என்றால் உடனடியாக எங்கே வேண்டுமானாலும் அனுமதி கிடைக்கும்.. ஏன் ஸ்பான்ஸர்ஷிப்கூட உடனடியாக கிடைக்கும். அதனை வைத்து நாம் நடத்த வேண்டியவைகளை பெரிய அளவில் பேர் சொல்லக் கூடிய அளவுக்கு நடத்தலாமே.. தனி நபர்களாக இருக்கின்றபோது இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்..

ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இனி வரும் காலங்களில் அரசும், ஆட்சி நிர்வாகமும், அரசியல் சட்டமும் வலையுலகத்தினரை பத்திரிகையாளர்களில் ஒருவராக அங்கீகரிக்காவிட்டால் பலவித பிரச்சினைகள் பதிவர்களுக்குத்தான் ஏற்படப் போகிறது. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் வழக்கொன்றில் "வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.." என்று தீர்ப்பு சொல்லியுள்ளது.

இது எப்படி இருக்கிறது எனில், ஒரு பத்திரிகையில் ஒரு அரசியல்வாதியை ஊழல்வாதியாக எழுதியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் செய்தியை நீங்கள் உங்களது பதிவில் காப்பி செய்து வெளியிட்டீர்களேயானால் அந்த ஊழல் அரசியல்வாதி உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அந்த அரசியல்வாதி ஊழல் செய்தார் என்பதை நீங்கள்தான் நிரூபித்தாக வேண்டும். அந்தப் பத்திரிகையில் இருந்ததை நான் காப்பி செய்தேன் என்று சொல்லி ஜகா வாங்க முடியாது.

இதே செய்தி பத்திரிகையில் வந்திருந்தால் கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் நமது நிருபர் என்று எழுதியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது அது பத்திரிகையின் ஆசிரியரைத்தான் தாக்கும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..?

அதற்காக "அதையெல்லாம் ஏன் எழுதுற.. போய் நாலு சினிமா விமர்சனம் எழுதிட்டு போய்க்கிட்டே இரு"ன்னு சொல்லாதீங்க.. யோசித்துப் பாருங்கள்.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றுதான் இதனை சொல்கிறேன். அதற்காக இதுவே முக்கியக் காரணமும் அல்ல.. முக்கியக் காரணங்கள் நான் மேலே சொன்னவைகள் மட்டுமே..

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம் என்று அவர்கள்கூட ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தங்களது தொழிலுக்கு எந்தவிதத்தில் யாரால் பங்கம் வந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள் அமைப்பின் சார்பில்.. யாரும் தனி நபராகக் குரல் கொடுப்பதில்லை. நமக்குத்தான் பிரச்சினையே இல்லையே.. நாமதான் ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கோம்னு சொன்னால் எப்படி..?

கிட்டத்தட்ட 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வலைப்பதிவுகள் அறிமுகமாகி அதில் தலைநகரான சென்னையில் மட்டும் முகம் தெரிந்து வெறும் 60 பதிவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? சென்னையில் இருக்கின்ற வார்டுகளின் எண்ணிக்கையே நூற்றுக்கும் மேல்..

பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு யாருக்கு, எத்தனை பேருக்கு இங்கு இப்போது நேரம் இருக்கிறது..? நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..? நாம் நினைத்தால் முடியும்.. மனம் வைத்தால் முடியும்..

அமைப்பை உருவாக்குவோம்.. சந்தா உருவாக்குவோம்.. அவரவர் முடிந்த அளவுக்கு பணத்தைக் கொடுப்போம்.. நிதியினை மேம்படுத்துவோம்.. அதனை முறைப்படி பராமரிப்போம். பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்போம். வலைப்பதிவுகளை ஆரம்பிக்க நினைப்போர், எழுத நினைப்போர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அழையுங்கள் என்று நாம் அவர்களை அழைப்போம்.

அழைப்பு விடுத்தவர்களை சங்க அல்லது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு நாளில் பயிற்சி கொடுத்தனுப்புவோம்.. அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைப்போம்.. மாதத்தில் 15 நாட்களில் ஒரு நாளைக்கு ஒருவர் என்றால்கூட மாதம் 15 பேர், வருடத்திற்கு 180 பேரை நமது அலுவலகத்தின் வாயிலாகவே நாம் உருவாக்கலாமே..?

இதன் பின் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது தனியார் கல்லூரியில் அமைப்பின் சார்பில் பேசி பட்டறைகளை நடத்தினால் எத்தனை பேரை நாம் வலையுலகத்திற்குள் இழுக்க முடியும்..?

இதற்கு முதலில் என்ன தேவை..? ஒரு அலுவலகம்.. போதுமான கணினிகள்.. சொல்லித் தருவதற்கு ஒரு நபர்.. முதலில் அமைப்பில் இருப்பவர்கள் முறை வைத்து சொல்லித் தருவோம். பின்பு இதற்கென்றே தனியாக ஒருவரை சம்பளத்திற்கு நியமித்து செய்வோம்.. ஏன் முடியாது..?

எடுத்த எடுப்பிலேயே ஏன்.. எதுக்கு.. என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தால் அடுத்தக் கட்டத்திற்கு எப்படிச் செல்வது..?

இப்படியே மாதந்தோறும் நமக்கு நாமே ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஒப்பேத்திவிட்டு.. சென்னை வரும் பதிவர்களுக்கு வரவேற்பு கொடுத்து அவர்களை மனம் குளிரவைத்து அனுப்பிவிட்டு டாட்டா.. பை.. பை.. சொல்லிவிட்டுச் செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..?

ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்களில் சமூக சேவைகளையும் செய்கிறார்கள். அதோடு தங்களுக்கிடையிலான குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி குடும்பமாக பழகுகிறார்கள். நாம் என்றைக்காவது இதனைச் செய்திருக்கோமா..?

இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்தவொரு பதிவர் சந்திப்பிலும் "எங்க வேலை பார்க்குறீங்க..?" அப்படீன்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது.. ஏதோ ஒரு கம்பெனின்னு மட்டும்தான் சொல்வாங்க.. "வீடு எங்க இருக்கு?"ன்னு கேட்டாலும் அதுக்கும் அதுதான் பதில் கிடைக்கும். அப்போதிருந்த சூழல் அப்படி.. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல..

இரண்டு மாதங்களுக்கொரு முறை அமைப்பின் சார்பில் எங்கேயாவது அனைத்துப் பதிவர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.. பரஸ்பரம் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ளலாம்.. தனி நபர்களாக இருந்து இதனை எப்படிச் செய்ய முடியும்..?

இது எதுவுமே வேணாம்.. ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? எதுக்காக அங்க வாங்க. இங்க வாங்கன்னு சொல்லிக் கூப்பிட்டு பெட்ரோலையும் வேஸ்ட் பண்ணி.. நேரத்தையும் ஏன் நாம வீணாக்கணும்..? நாம செத்த பின்னாடி நூறு பேரு இரங்கல் தெரிவிச்சு பதிவு மட்டும் போட்டுட்டு அதை நம்ம பிள்ளைககிட்ட காட்டிட்டு அமைதியா இருக்கவா..?

மெஜாரிட்டியாக ஆரம்பிக்கலாம் என்பது தெரிந்த பின்பு "நான் அதனை எதிர்க்கவில்லை. ஏன் முன்பே பிளான் செய்தீர்கள் என்பறுதான் கேட்டேன்.." என்று இடக்கு மடக்காக கேள்வி கேட்டு மீண்டும் பிரச்சினையைத் திரித்ததும் 'மேதகு' பார்ட்டிதான்.. அந்தப் படபடப்பில், அனைவருமே நண்பர்களாக இருந்ததினாலும் யாரையும் கண்டித்துப் பழக்கமில்லாத காரணத்தினாலும் எனக்கும், கேபிளுக்கும் வேறு வழியே இல்லாமல் மீட்டிங்கை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

இத்தனையும் செய்துவிட்டு "இப்போது நீங்கள் அமைப்பை ஆரம்பித்தால் நிச்சயம் நான் சேருவேன்" என்று சொல்கின்றவரை என்னவென்று சொல்வது..? பின்பு எதற்காக இவ்வளவு பெரிய வெட்டி ஆர்ப்பாட்டம்..? இந்த அறிவுஜீவித்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் இந்த அர்த்தராத்திரியில் கண் முழித்து பதில் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது..

இதிலும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் மாதிரி கதை ஒன்றையும் சொல்கிறார் மேதகு சிவராமன்.. அவர் கீழே இறங்கி வந்தபோது தண்டோராவும், கேபிளும் அங்கே இல்லவே இல்லையாம்.. எப்படி இருப்பார்கள்..? யாருக்காவது பேசுவதற்கு மனசு வருமா..?

பந்தல் கட்டி, தோரணம் அமைத்து தாலி கட்டுற நேரத்துல பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுறவன், சொல்லிட்டுப் போறதுக்கு மாப்பிள்ளை சொந்தங்களையே காணோம்னு புலம்பினானாம்.. இப்படித்தான் இருக்கு இது..

எனக்கும் அங்கே இருப்பதற்கு மனசில்லைதான். ஆனால் டிவிஆர் ஸார், "கண்டிப்பா டீ வாங்கிக் கொடுத்தே ஆகணும்.." என்று வற்புறுத்தியதால் கடைக்கு வந்து நிற்க வேண்டியதாகிவிட்டது.

கேபிள் மற்றும் தண்டோரா, சூர்யா, அகநாழிகை வாசுதேவன், பலாபட்டறை இவர்களுடன் நானும் இரவு பத்தே கால் மணிவரையில் அந்தப் பகுதியில்தான் இருந்தோம்.

ஏதோ எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று பக்கத்தை நிரப்பும் பத்திரிகை பாணியில் மேதகு சிவராமன் எழுதியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை படித்துப் பார்த்தபோது ழான்சத்தார் ஏன் முன்பே செத்துப் போனார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது..

இதில் இன்னுமொரு காமெடி அருமைத் தம்பி அதிஷா. ஆதரித்துப் பேசிய அனைவரையும் குறுக்குக் கேள்வி கேட்டு அமைப்பை உருவாக்க எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர், கடைசியில் வீட்டிற்குப் போகும்போது கேபிளிடம் "நானும் சேர்கிறேன்" என்றாராம்.

நான் கடையருகே பார்த்தபோது அதிஷாவிடம் பேசினேன். "நீ பத்திரிகையாளர் சங்கத்தில் சேர்ந்துவிட்டாயா..?" என்றேன். "ஆமாண்ணே.. சேரப் போறேன்.." என்றார். "அங்க ஏன் சேரப் போற..?" என்றேன். "முதல்வர் வீடு கொடுக்கப் போறாரு.. எனக்கு வீடு வேணும்.. அதுக்காக சேரப் போறேன்.." என்றார். "சந்தோஷம்.. அதே மாதிரி நாம ஒரு அமைப்பா சேர்ந்து நாலு பேருக்கு உதவி செய்யலாமே.. இதை ஏன் எதிர்க்குற..?" என்று கேட்டேன்.. "ஏன் இப்படியே செய்யலாமே..?" என்று திருப்பிப் பதில் சொன்னார். "அப்ப உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா..?" என்று என் தொண்டைவரையில் கேள்வி எழுந்தது.. ஆனாலும் அப்போதைய நாகரிகம் காரணமாக அடக்கிக் கொண்டேன். இப்போது இங்கே எழுதிவிடத் தோன்றுகிறது. எழுதிவிட்டேன்.

இவருக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக இவர் ஒரு அமைப்பில் உறுப்பினராகச் சேரலாமாம். ஆனால் நாம் யாராவது ஒருத்தருக்கு ஒரு நூறு ரூபாய் உதவி செய்வதற்குக்கூட அமைப்பை உருவாக்கக் கூடாதாம்.. ம்ஹும்.. தாங்க முடியவில்லை..

எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..

மீண்டும் சந்திப்போம்..

150 comments:

உண்மை said...

தமிழனுக்கு எதிரி தமிழன் தான்னு பல பேர் சொல்லுவாங்க அப்ப நான் நம்பலை. இப்ப கண்டிப்பா நம்புகிறேன்.

ஒரு சின்ன அமைப்ப உருவாக்க இத்தனை எதிர்ப்பா?

ரவி said...

me the first.

அண்ணே சங்கம் பற்றி என்
கருத்துக்களை இங்கே வீடியோவாக கொடுத்துள்ளேன்

சுப்புடு said...

Good write up !

Radhakrishnan said...

மனதில் இருக்கும் ஆதங்கத்தை அழகாச் சொல்லி இருக்கீங்க சார். அமைப்பின் நோக்கத்தை நல்லாத் தெளிவு படுத்திக்கோங்க சார், அது ஒன்றே போதும் அமைப்பின் வெற்றிக்கு. என்ன நோக்கம் சார்? மத்தவங்களுக்கு உதவுறதா? தெளிவுபடுத்திக்கோங்க சார்.

இராகவன் நைஜிரியா said...

//இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..//

நன்றிங்க..

அரவிந்தன் said...

பலரும் கடந்த இரண்டு நாட்களாக சொல்லத்தயங்கியதை நெத்தியடியாக சொல்லிவிட்டீர்கள்..

பாராட்டுகள் உண்மைத்தமிழன்.

தம்பி அதிஷா வை விட்டுவிடுங்கள் புது மாப்பிள்ளை அல்லவா

துபாய் ராஜா said...

எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.

பாலா said...

ஏன்ணே... சங்கத்துல சேரணும்னா... ”தமிழ்லதான் தலைப்பு வைக்கணு”- ம்னு ரூல் போடுவாங்களாண்ணே??

லூஸ்ல விடுங்கண்ணே!! இவிங்களையெல்லாம்... கணக்குல சேர்த்துகிட்டு.

பழமைபேசி said...

//எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது//

வாழ்த்துகள்!

தமிழ் மதுரம் said...

தூற்றுவோர் தூற்றட்டும்... போற்றுவோர் போற்றட்டும்..நீங்கள் உங்கள் முயற்சியில் குறியாக இருந்தால் வெற்றி பெறலாம். வாழ்த்துக்கள்.

vasu balaji said...

ஊர் கூடித் தேரிழுப்போம்:)

முகமூடி said...

மொதல்ல இது மாதிரி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கிய சமாச்சாரம் :: ஒரு கண்டிப்பான ஒருங்கிணைப்பாளர், ஒரு தெளிவான அஜெண்டா. இது ரெண்டுமே இல்லாம வாங்க பேசிக்கலாம்னு ஒரு கூட்டத்த கூட்டிட்டு அப்புறம் சரியாவே முடிவு ஏற்படலன்னா எப்பூடி?

பக்கத்து வூட்டுக்காரன் புள்ள பெத்துக்குரானேன்னு நாமளும் புள்ள பெத்துக்க ஆசைப்பட்டா இப்படித்தான்... முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. விஜய் கூடத்தான் முதல்வர் ஆகணும்னு (அவங்கப்பன் கவர்னர்?) ஆசைப்படுறான்.

//ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..? //

பத்திரிக்கைகாரனுக்கு கிடைக்கும் அதிகாரமும் அங்கீகாரமும் சங்கம் வைச்சா கிடைச்சிடுமா? அது பத்திரிக்கையின் ரீச்சை பொறுத்தது அல்லவா? உண்மையான ‘சுதந்திர’ நாட்டில் என்னதான் மட்டமான பத்திரிக்கைனாலும் தராசு பத்திரிக்கையிலும் முரசொலியிலும் நடத்திய கூத்தையெல்லாம் செய்துவிட்டு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்துவிட முடியாது... ஆனால் தமிழகத்தில்...?

//ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு... ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம்..//

மேற்கண்ட எல்லா சங்கத்திலும் அதன் உறுப்பினர்களுக்கென்று ஒரு பொது புள்ளி உண்டு. அப்புளிக்கென்று ஒரு பாதிப்பு வரும்பட்சத்தில் அதில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு தொழிலை செய்துகொண்டு குடும்பத்திற்கும் இதர பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிட்டது போக மிச்சமிருக்கும் நேரத்தில் மீத பர்ஸ்டேய் போடும் சிலர் சங்கம் வைத்துதான் நட்பு வளர்க்க வேண்டும் என்பதில்லை. சும்மா காந்தி சிலைக்கருகில் சுண்டல் சாப்பிட்டும் வளர்க்கலாம்.

முகமூடி said...

//ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? //

அதாங்க வலைப்பதிவளர்களின் அடிப்படை சோலியே.. எவனவனுக்கு எழுத்து வருதோ, அல்லது எழுதறதுக்கு ஏதாவது ஒண்ணு நம்மகிட்ட இருக்கோன்னு தோணுதோ அவனவன் தன்னளவில் கட்டற்ற சுதந்திரத்தோட எந்தவித நிர்பந்தமோ கவலையோ இல்லாமல் எழுதுவதுதான் வலைப்பதிவு. ஏற்கனவே அதெல்லாம் மாறிப்போய் கொஞ்ச கொஞ்சமா கூட்டணி சேர்ந்துகிட்டு இப்படி எழுதினா அந்த பிரபல பதிவருக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு சென்சர்... தனக்கு பிடிச்ச பதிவர் எழுதினா அது குப்பைனா கூட ஆகா ஓகோன்னு முதுகு சொறிதல்னு இருக்கிற கூத்து போதாதுன்னு இப்போ சங்கம் வேறயா...

// அமைப்பை உருவாக்குவோம்.... to ....செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..? //

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

// பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு // இது எப்படி சேவை என்ற கணக்கில் வருகிறது?

மீண்டும்.. முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. சங்கத்தின் சட்ட திட்டங்கள் என்ன? அடிப்படை அம்சங்கள் என்ன? என்ன குறிக்கோள், அதை அடையும் வழிமுறைகள் என்ன? சங்கத்தின் எல்லை எது? மூர்த்தி மாதிரி ஆட்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சங்கம் வக்கீல் அமைக்குமா? உறுப்பினர்களுக்கு தகுதிகள் என்ன? ஜோக்குகள் காப்பி பேஸ்ட் செய்து அதை பதிவாக்கி மற்ற பதிவுகளில் மீதபர்ஸ்டேய் அல்லது ரிப்பீட்டேய் சொல்பவர்கள் பதிவர்களா இல்லை பர்ஸ்டு பெஞ்சில் உட்கார்ரவ்ன் எல்லாம் பூணுல் போடுறானா என்று உன்னிப்பாக பார்த்து பதிவு எழுத வேண்டுமா? இதெல்லாம் முதல்ல சொல்லுங்க... அவசியமில்ல அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று (என்ன எழவுடா இது, இதுல கூட எதுன்னே தெரியாம எதையாவது ஒன்னா) அமைச்சே தீருவோம் அப்படீன்னு வெறியோட இருந்தீங்கன்னா.. ஆல் த பெஸ்ட்...

- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்தில் ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)

முகமூடி said...

- நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத (உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்த சொல்லல..அதில் சேரும் குறிக்கோளும் இல்லை) ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)

Jerry Eshananda said...

மங்களம் கிட்டும்.

என் நடை பாதையில்(ராம்) said...

எந்த ஒரு அமைப்பானாலும் ஒரு தலைவர்(எல்லாராலும் விரும்பப்படுபவர்/தேர்ந்தெடுக்கப்பட்டவர்) என்று ஒருவர் இல்லாமல் பலரது முயற்சியில் நடந்தால் இப்படித்தான் முடியும். ஆனால் அப்படிப்பட்ட ஒருவரை யாரும் ஏற்றுக் கொள்ளவிரும்பாததுபோலவும், எல்லாரும் அதற்கு ஆசைப்படுவது போன்றதுமான ஒரு கூட்டம் நடந்து முடிந்து விட்டது என நினைக்கிறேன்.

என் நடை பாதையில்(ராம்) said...

இப்படி ஒரு பதிவை முன்பே எழுதியபின் பதிவர் சந்திப்பை நடத்தியிருக்கலாம்.

அக்கினிச் சித்தன் said...

//அருமைத் தம்பி அதிஷா. //
அதிஷா ஆம்பிளைப் பையனா? ஏனுங்க, நான் பொண்ணுன்னு நெனைச்சேனுங்களே!

Sridhar Narayanan said...

வலைப்பதிவு என்பது உங்கள கருத்துகளை எடுத்து சொல்லும் ஒரு வடிவம் மட்டுமே. அதுவும் கூகுள் போன்றோர் இலவசமாக இடம் தருவதால் டைரி போல எல்லாரும் எழுதிக் குவிக்கிறோம்.

நீங்கள் கருத்து ஒருங்கிணைந்து செயல்பட, சேவை செய்ய என அமைப்பு உருவாக்க நினைப்பதெல்லாம் சரி. அதற்கு வலைப்பதிவு என்பதை ஒரு உபயோகமான கருவியாக (tool) வைத்துக் கொள்ளலாம். Blog போலவே Facebook, Orkut, Twitter என்று பல சாதனங்களை உங்கள் கருத்து ஒருங்கிணைப்பு அமைப்பிற்கு நீங்கள் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். எழுதுபவருக்கு நேற்று காகிதம், இன்று இணையம் நாளைக்கு இன்னொரு ஊடகம். என்ன எழுதுகிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர எதில் எழுதுகிறீர்கள் என்பது அல்லவே.

உதாரணத்திற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளை இன்று வலையில் பதிகின்றீர்கள். நாளை அவற்றை புத்தக வடிவத்தில் கொண்டு வரலாம். அதையே ஒரு ரேடியோ நிகழ்ச்சியாக, காட்சி ஊடகமாகக் கூடச் செய்யலாம். புத்தகங்கள் Kindle போன்ற கருவிகளில் படிக்கக் கிடைக்கலாம். ஆக... உங்கள் கருத்துதான் முக்கியம். அதற்கு இணையத்தை நீங்கள் பலவகையில் உபயோகித்து உங்கள் குறிக்கோளை அடைய முயற்சிக்கலாம்.

இணையத்தைப் பொறுத்தவரை கட்டமைப்புகளுக்கு எதிரிடையான செயல்பாடுகளுக்கான களன் இது. Un-conference, un-organization போன்ற ந்டைமுறைகள்தான் பிரபலம். அவைதான் தேவையும் கூட.

நீச்சல்காரன் said...

அண்ணே, சங்கம் வேண்டுமா? வேண்டாமா? என்று சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவமில்லை. எனக்கு தெரிந்த ஒரு கருத்து, படைப்பிலக்கிய பதிவரானாலும், பொது விமர்சகப் பதிவரானாலும், மொக்கைப் பதிவரானாலும், தொழிற்நுட்ப பதிவரானாலும் தமிழ் பதிவுலகம் என்றுமே ஒற்றுமையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.

Unknown said...

அண்ணே சந்திப்பு நடந்த அன்று உங்களுடைய முகத்தில் தெரிந்த வருத்தம், தண்டோரா, கேபிள் இருவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி நான் நன்கு அறிவேன், ஏதோ நீங்களாக முடிவு செய்துவிட்டு எல்லோரையும் வந்து சேந்துக்குங்க இல்லாட்டி போங்கன்னு சொன்னது மாதிரி நெனச்சுட்டாங்க, அங்கு பேசிய சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பேசியது நாகரிகமாக இல்லை. பெங்களூர் அரவிந்தன் முகத்தில் வந்தபோது இருந்த சந்தோசம் போகும்போது இல்லை, நல்ல நண்பர்களிடம் பேசலாம் என வந்திருப்பார், அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரைப்போல நம்முடன் ஒத்த கருத்துடையவர்கள் முதலில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம், ஏற்படுத்தியும் விட்டோம்,.சேர்பவர்கள் சேரட்டும் மற்றவர் அவரவர் விருப்பபடி இருக்கட்டும்.

உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது, நாம் ஒரு பெரிய அமைப்பாக நிச்சயம் வருவோம்.

seethag said...

uNmaithamizhan ,உங்கள் பதிவுகளை சில சமயங்களில் ,படிப்பேன்.
பதிவாலர்களுடைய சங்கம் குறித்த தங்கள் பதிவு படித்தேன். அதற்கான பதிலை ,பைத்தியக்காரன் பதிவில் எழுதியுள்ளே.தயவுசெய்து நேரமிருந்தால் படிக்கவும்.

என்னளவில், என்னைபோன்ற 'எல்லாம் தெரிந்த தலைக்கனம் பிடித்த பெண்ணிய வாதிகளுக்கு" உங்கள், simplicity , உங்கள் பதிவை படிக்க தோன்றும்.தட்டச்சு சரியாக வராத நிலையில் இவ்வளவு தான் எழுத முடிந்தது.

Unknown said...

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழினம் இன்று சங்கம் வைக்கச் சண்டை போடுகிறது...

பிரபாகர் said...

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும். நல்ல குறிக்கோள்கள் இருக்கிறது அண்ணா, திட்டங்களை வகுங்கள், திட்டு வாங்கித் தொடரவும் உங்கள் தம்பிகள் தயாராய் இருக்கிறோம்...

பிரபாகர்...

smart said...

நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் சங்கம் வைத்தால் அது அவர்களின் வாழ்வாதாரம் அவர்கள் சம்பாரிக்கும் இடம். பதிவு எழுதும் பலர் அதை வியாபாரமாகச் செய்யவில்லையே, வியாபாரமாக எழுதுபவர்கள் சங்கம் வைத்துக்கொண்டால் அது சரியான யுக்தி. சேவை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கையில் ஏன் பதிவர் சங்கம் வைத்து செய்ய வேண்டும்? விருப்பமுடையவர்கள் மட்டும் சேர்ந்து செய்யலாமே?

இங்கு தனி நபர்களை குறிப்பிட்டு சாடியிருப்பது சரியாகப்படவில்லை நாளை அடுத்தவர் நம்மை கேள்வி கேட்கும் முன் நம்மை நாமே கேள்வி கேட்டு தயார் படுத்திக்கொள்வது நல்லதுதானே.

இவையெல்லாம் எனக்கு தோன்றிய கருத்து. அனால் புதிய எழுத்தாளர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள் ஒரு வாசகர் வட்டம் கிடைக்கும் என்கிற பட்சத்தில் சங்கம் வைத்தால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் பணம், பதவி, கெளரவம் போன்றவைகள் நடமாடுவதால் சங்கத்தை வெளிப்படையாக தூய்மையாக நடத்தும் பட்சத்தில் இது அருமையான விஷயம்தான்

கே.என்.சிவராமன் said...

இடுகைக்கு நன்றி உண்மைத்தமிழன்...

தோழமையுடன்
மேதகு
பைத்தியக்காரன்

Romeoboy said...

அதை ஏன் அமங்கலம் என்று எடுத்துகொள்ள வேண்டும் அண்ணே ?? அன்று நடந்ததை எல்லாம் பெரியவிஷயம் எடுப்பதற்கு பதில் ஒரு எடுத்துக்காட்டை எடுத்து கொள்வோம்.

தீப்பெட்டி said...

//நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..?//

இதுதான் நமக்கு வேண்டியது.. நாம் இருக்கலாம், நாளை இல்லாமல் இருக்கலாம், பணச்சிக்கலோ, மனச்சிக்கலோ நம்மை முடக்கிவிடலாம்.. அமைப்பை உருவாகினால் யாரேனும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள்.. நாமே அழிந்தாலும் நமது செயல்பாடுகள் சமூகத்திற்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.. அதுதான் சங்கம்/குழுமத்தின் பயன்பாடு..

தற்கொலைப்படைகள், நாளை மனச்சிக்கலோ பணச்சிக்கலோ வரும் போது, தங்களது இலக்கிய குறுநில மன்னர்களின் மனோபாவத்தில் மாற்றமேற்ப்பட்டு இலக்கியத் தொண்டை தொடராமல் போகலாம்.. அமைப்பிருந்தால் அமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களையொட்டி முடிவெடுக்கலாம்..

பொதுவாக அவர்களுக்கு அமைப்பை ஏற்படுத்திவதில் எந்த வருத்தமும் இல்லை, ஆனால் அதை நீங்கள் அந்த இலக்கிய குறுநில மன்னர்களிடம் காட்டி அவர்கள் ஒப்புதலைப் பெற்று, கூட்டம் நடத்த இடமும், நேரமும் அவர்களுக்கு வசதியானது தானா? கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் வலைப்பூக்களை வாழவைக்கும் இலக்கிய சிற்றரசர்களின் இறுமாப்புக்கு உகந்தவகையில் இருக்கிறதா எனப்பார்த்து அவர்களின் மனம் குளிர வைத்துவிட்டு பின் செய்திருக்க வேண்டும். எதுவுமில்லாமல் பிரிண்ட் அவுட் எடுத்து வந்துவிட்டால் ஆயிற்றா விஷயம்..

சங்கம்/குழுமம் என்றால் சும்மாவா பாஸ்.. இவையெல்லாம் ஆரம்பம் தான்.. இதற்கு மேலான பிரச்சனைகளையும் எதிர்பார்க்கத் தான் வேண்டும்.. இவையெல்லாம் தாண்டித்தான் எல்லா சஙகங்களும்/குழுமங்களும்/கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு எல்லாத்திற்கும் பதிவுகளிட்டு கொண்டிருந்தால் இனி பதிவுலகின் பாதி பதிவுகள் சங்கப்பிரச்சனைகளை மட்டுமே பேசும் நிலை ஏற்படக்கூடும்..

எதிர்கருத்து எப்போதும் வரவேற்க்கப்பட வேண்டும், அது அபத்தமாக இருந்தாலும், அப்போதுதான் சங்கத்தின்/குழுமத்தின் செயல்பாடுகளின் ஜனநாயகத்தன்மை மீது மற்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும், அந்த வகையில் அவர்களை நாம் பாராட்டுவதும், அவர்களுக்கு நம்மை/நம் செயல்பாடுகளை புரியவைப்பதும் அவசியம்.. நாங்கள் உணர்ச்சிவசப் படலாம், ஆனால் நீங்கள் கொஞ்சம் நிதானித்து பதிவெழுதி இருந்திருக்கலாம், உங்களுக்குள் புரிதல் ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்..

இதை அமங்கலமாக கருதுவதும் ஆராக்கியமாக கொள்வதும் நமது கையில்தான் இருக்கிறது..


மற்றபடி உங்களுக்கும்,கேபிளாருக்கும்,மணிஜீக்கும்,சிவராமனுக்கும்

வாழ்த்துகள், தொடருங்கள்..

மணிஜி said...

அண்ணே ! ஏதோ ஒரு தொனி தப்பாக இருக்கிறது இந்தப் பதிவில். இதை பற்றி மேலும் விவாதிப்பதை நிறுத்தி விட்டு ஆக வேண்டியதை பாருங்கள் ப்ளீஈஸ்..

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

பத்து பய படிக்கிற எடத்துல என்ன லவுடாவ எழுதிக்கிழிச்சு இந்த சமூகத்துல மாற்றம் ஏற்படுத்தப்போறிங்கன்னு தெரியல.இதுக்கு ஒரு சங்கம் வேற.

கூடிப்பேசவேண்டியது. கொல்லைக்கு போறேன் கூட வாங்கிறது.சரக்கப்போட்டுட்ட்டு ஜல்சா பண்ணவேண்டியது.அப்புறம் செண்டுக்கறிய பிச்சு மண்டைய தெறந்து விடுறது.

இந்தமாதிரி அதிமுக்கியமான நிகழ்வுகளுக்கு சங்கம் ரொம்ப முக்கியம்தாண்டாப்பா.

கே.என்.சிவராமன் said...

அன்பின் உண்மைத்தமிழன்,

உணர்ச்சிவசப்பட்டு இடுகையை எழுதியிருக்கிறீர்கள்.

உணர்ச்சியில் புத்தி அல்லது அறிவு அல்லது மனம் தடுமாறும்.

இண்டிப்ளாகர் கூட்டத்துக்கு சென்றதும் உங்களுக்குள் இருந்த பொறி சட்டென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. இது நல்ல விஷயம். பாராட்ட வேண்டிய செயல்.

ஆனால், உண்மைத்தமிழன்... உடனே சூடு போட்டுக் கொள்வது ஆபத்தானது. இரவு அரசியல் மாற்றத்தை குறித்து யோசித்துவிட்டு காலையில் எழுந்ததுமே மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று அறிவிக்க முடியாது. ஒரே இரவில் தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் திரைப்படமும் தயாராகிவிடாது. எந்தக் கனவும் செயல் வடிவத்துக்கு வர அதற்கே உரிய கால அவகாசம் தேவை. அதற்கான உழைப்பு தேவை.

முதலில் குழுமம் அல்லது சங்கம் எதற்கு என்பதை அனைத்து பதிவர்களுக்கும் உணர வைக்க வேண்டும். குழுமம் குறித்து ஒவ்வொருத்தரும் தங்கள் மனதில் ஒவ்வொரு கற்பனை - கனவுடன் இருப்பார்கள். கனவு வேறு. நிஜம் வேறு. எனவே ஒவ்வொருவரின் தனித்தனி கனவும் இணையும் ஒரு புள்ளியை தேர்வு செய்து அதை அனைவருக்குமான கனவாக மாற்ற வேண்டும். இதை அனைவரும் ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த அடிப்படை, முதலில் அவசியம் என என்னளவில் நினைக்கிறேன்.

அடுத்து குழுமம் அல்லது சங்கமாக இணைந்தால் இது இது செய்யலாம், செய்ய முடியும். நாம் இணையாமல் இருந்தால் இது இது சாத்தியமில்லை என்பதை அழுத்தம்திருத்தமாக புரியவைத்த பிறகு -

குழுமம் அல்லது சங்கம் மூலமாக இப்படி இப்படி நிகழ்ச்சிகளை நடத்தலாம் என நினைக்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் என்னென்ன செய்யலாம்? என அனைவருமாக ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும்.

இறுதியாகவே சங்கத்துக்கு அல்லது குழுமத்துக்கு அலுவலகம், தலைவர், செயலாளர், லோகோ இத்யாதி... இத்யாதி குறித்து உரையாட முடியும்.

//வீட்டில் முதன்முதலாக நடக்கப் போகின்ற திருமணம்.. ஆசைஆசையாக முதன்முதலில் கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசம்.. குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா.. இப்படி நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கிற நாளில் அது அமங்கலமாகி முடிந்தால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கும் அன்றைய நாளில் இருந்தது..!//
இந்த முதல் பத்தியே எவ்வளவு தவறு... திருமணம், கிரஹப்பிரவேசம், குழந்தையின் முதல் பிறந்தநாள்... இதெல்லாம் தனிப்பட்ட மனிதர்கள் சார்ந்தது...
ஆனால், குழுமம் அல்லது சங்கம் என்பது பல தனிமனிதர்கள் ஒன்றிணைந்து செயல்படுத்துவது.
நிதானமாக யோசியுங்கள். நான் சொல்ல வந்தது புரியும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நந்தா said...

உ. த அண்ணே இந்த பதிவிலும் சரி, வேறு சிலரோட பத்விலும் சரி சிவராமன் உள்ளிட்ட மாற்றுக் கருத்து கேட்டவர்களை ஏதோ கெட்டவனாய் காட்ட வேண்டும் என்ற நோக்கிலோ அவர்களே வேணுமின்னே செய்யறாங்க என்றோ நிறுவ முயற்சிப்பதாய் எனக்கு படுகின்றது. இந்த தொனி எனக்கு சுத்தமாய் பிடிக்க வில்லை.

நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்து வேறு வழியே இல்லாமல் பதில் போட வேண்டியதாய் இருக்கிறது. குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்பதெல்லாம் ஓ.கேதான்.

ஆனால் குழுமத்திற்கான நோக்கம் என்ன, வரையறை என்ன, Minimum Common Program என்ன, முக்கியமாக எதில் எதிலெல்லாம் குழுமம் தலையிடாது என்பது குறித்து இதுவரை எவரும் பதில் சொல்ல வில்லை. அதை கேட்ட்டால் ஒருத்தர் உங்களுக்கு தப்பானவராய் ஆகின்றாரா?

நான் அழுத்தம் திருத்தமாய் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், சிவராமன், லக்கி உள்ளிட்டு நாங்கள் கேட்ட கேள்விகள் குழுமம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்கல்ல, குழுமம் எப்படி செயல்படவேண்டும் முக்கியமாய் எதை எதை எல்லாம் செய்யக் கூடாது என்பதற்கான வடிவமே.

நிற்க குழுமம் ஆரம்பிப்பதைத்தான் சரி என்று சொல்லி இருக்கிறோமே தவிர, குழுமம் குறித்து நடந்த அனைத்து விஷயங்களிலும் இம்மெச்சூரிட்டி என்று சொல்லிக் கொள்ளும்படியானவை பல நடந்திருக்கின்றன. இதோ இப்போது சங்கத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறார்களே அதில் இருக்கும் ஒரு தவறைக் கூட என்னால் சுட்டி காட்ட முடியும். நானும் சொல்லாமலிருந்து பொது வெளியில் வேண்டாமே என்பது மட்டும்தான்.இதை மற்றவர்கள் சுட்டிக் காட்ட வில்லை அல்லது ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதற்காக கேள்வி கேட்டவர்களை குற்றம் சொல்லாதீர்கள்.

அதிலும் வேறு சில பதிவுகளில் பின்னூட்டங்களில் நையாண்டிகள் உச்சகட்டம்.

இந்த வாரத்திலோ, வேறு என்றாயினும் இது குறித்து நான் நேரில் பேச தயாராகவே இருக்கின்றேன்.

ஸ்ரீ.... said...

உண்மைத்தமிழன்,

சர்ச்சைகளைத் தவிர்த்துவிட்டு குழுமத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம். இதற்காக மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தாலும் சம்மதமே.

ஸ்ரீ....

Athisha said...

ஓஹோ நாம தனியா பேசினா அதையும் தூக்கி பதிவா எழுதிடுவீங்க இல்லையா. அசிங்கமா இல்லை உங்களுக்கு. விளையாட்டுக்கு பேசினதெல்லாம் எடுத்து சீரியஸா பதிவுல போட்டு உங்க மேட்டிமைத்தனத்தை காட்டுவீங்கனு தெரிஞ்சிருந்தா உங்கள மாதிரி ஆளுகிட்ட பேசிருக்கவே மாட்டேன் பிரதர். என்னை செறுப்பால அடிக்கணும்.

பத்திரிகையாளர் சங்கத்துக்கும் பதிவர் சங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுகிட்ட என்னத்த பேசறது.. வெங்காயம்

கேபிளிடம் நான் அன்றைக்கு பேசவேயில்லை. நான் பேசினது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க சங்கமா செயல்பட்டா நிச்சயம் அதுக்கு என்னாலான உதவிகளை செய்றேனு நான் சொன்னது தண்டோரா மணியிடம்தான்.

சரவணன்-சாரதி said...

அண்ணே.... உங்களிடம் இருந்து இப்படிப்பட்ட பதிவா.......
நீங்கள் எழுதியுள்ள விசங்களே முரண்பாடாக இல்லையா?

//நான் கலந்து கொண்டபோது அங்கு வந்திருந்த பதிவர்களின் கூட்டத்தையும், அவர்கள் நிகழ்ச்சியை நடத்திய பாங்கையும், எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பையும் யோசித்தபோது(இத்தனைக்கும் அவர்கள் இந்தியா முழுமைக்குமான ஆங்கிலப் பதிவர்கள்) பிரமிப்பாக இருந்தது.//

நம்முடைய கூட்டம் எப்படி நடந்தது அண்ணா? அண்ணன் பைத்தியக்காரன் கேட்டது எந்தவிதத்தில் தவறு? சங்கம் ஆரம்பிக்கலாமா என்று ஆலோசிக்க முதலில் ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விதான் கேட்கப்படவேண்டும். அன்றைய செஞ்சிலுவை சங்கம், அரசியலில் காங்கிரஸ், மறுமலர்ச்சியில் திராவிடர் கழகம்............. ஏன்? ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கக் கூட அந்தக் கேள்வி தேவை இல்லையா? அமைப்பு வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் எதற்காக எல்லோருடனும் ஆலோசனை? நாங்கள் ஆரம்பிக்கபோகிறோம் வந்து சேருவோர் சேரலாம் என்று அறிவித்திருக்கலாமே? அடிப்படையில் இருந்து ஆரம்பிக்காமல், 10 வது மாடி கட்ட முயலலாமா? சரி உங்களுக்கு இந்த வெசயம் தோன்றக் காரணமான இண்டிபிளாக்கர் நிகழ்வு எத்தனை பேருக்குத் தெரியும். தெரிந்தும் கலந்து கொள்ளாத என்னைப் போன்றவர்களுக்கு அதைப் பற்றிய முழு விபரத்தையும் பதிவாகத் தெரிவித்து விட்டு நாமும் இப்படி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறோம். எல்லோரின் கருத்து என்ன என்று கேட்டு இருக்கலாமே? ஒரு அடிப்படைக் கேள்வி உங்களுக்கு - இண்டிபிளாக்கர் குழுமம் இப்படித்தான் அவசரமாகத் தொடங்கப் பெற்றதா என்று முதலில் யோசித்து சொல்லுங்கள்.

சரவணன்-சாரதி said...

மற்றொன்று யாரோ முதலில் பேசும்போது சிவராமன் சிறுகதைப் பட்டறை நடத்திய போது பணத்திற்காகக் கஷ்டப் பட்டதாகச் சொன்னார்கள். அது நடந்த போதே, தன்னுடைய விருப்பத்தின் பேரில் செய்வதாகவும் யாரும் பணம் குறித்தும், அவருடைய நிதிநிலை பற்றிப் பேசவேண்டாம் என்றும் (அல்லது அதைப்போல ) சொல்லி இருந்தார். இந்நிலையில் அதைப் பற்றியெல்லாம் பேசப்பட்டது எனக்கே சற்று எரிச்சல் ஏற்படுத்தியது.
இன்னொன்று நரசிம் போஸ்ட் போட்டதால் உதவி செய்யப் பட்டது என்று வருவதற்குப் பதிலாக ப்ளாக்கர்கள் உதவி என்று வரலாமே என்று இரண்டு மூன்று பேர் சொன்னார்கள். இது நர்சிம்மைக் காயப்படுத்தியதோ இல்லையோ என்னைக் காயப்படுத்தியது.
(நான் சிவராமன் அண்ணனையும், நர்சிமையும் 2 ,3 முறை பார்த்திருக்கிறேன் .... ஹாய் ஹலோ என்பது தான் ஏன் அதிக பட்ச பேச்சு.)

தனி நபர் ஒருவர் பேர் பெறுவதற்காகத்தான் போஸ்ட் போடுகிறார் அதனால் அதைத் தடுத்து ப்ளாக்கர்கள் பேரில் வருமாறு செய்ய வேண்டும் என்பதைப் போல ஒரு தொனியில் இருந்தது அந்தப் பேச்சு. இங்கு உதவ நினைக்கும் யாரும் போஸ்ட் போடலாம் .... உதவ நினைக்கும் யாரும் உதவலாம் ..... பேர் பெறுவதற்காக யாரும் உதவவில்லை இது உங்களுக்கும் தெரியும். நாளை சங்கம் ஆரம்பித்த பிறகு நான் தனியே உதவி கேட்டு ஒரு போஸ்ட் போட்டால் நீங்கள் என்னைத் தடுப்பீர்கள் அப்படித்தானே? எல்லாம் சங்கம் வழியேதான் நடக்க வேண்டும் என்பீர்கள் இல்லையா? அப்படி ஒரு கட்டுப்பாடு இந்த விர்சுவல் உலகில் தேவையே இல்லை.

மற்றபடி தமிழ் பதிவர்களுக்கு ஏற்ப்படப் போகும் எதிர்காலப் பிரச்சனை குறித்த உங்கள் கருத்து ஓகே. ஆனால் ஒரு ஊழல் செய்தியை USA இல் இருக்கும் ஒரு பதிவர் பதிவிட்டு நாளை பிரச்சனையை வந்தால், நீங்கள் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பீர்கள். NRI களுக்கு என்றே இருக்கும் பிரச்சனைகளை யார் சொல்வார். இந்த சங்கம் தமிழ் பதிவர்களுக்குப் பொதுவானது என்றால் உலகெங்கும் இருக்கும் எல்லாத் தமிழ்ப் பதிவர்களிடம் விவாதித்துவிட்டல்லவா நாம் ஆரம்பித்திருக்க வேண்டும்? சென்னையில் இருக்கும் 60 பேர் முடிவு செய்தால் போதுமா? அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் சேர்த்து முடிவெடுக்க நாம் யார்?

நீங்கள் சொல்லும் market the blog , train the others எல்லாம் இங்கேயே பண்ணலாம். ஏற்க்கனவே நாம் ஆரம்பித்தவேலைகள் எல்லாம் முடிக்கப் படவே இல்லை. விர்சுவல் உலகிலேயே நேரம் ஒதுக்கி செய்யாத நாம் கூட்டம் கூட்டி என்ன செய்யப் போகிறோம்.

60 பேர் கூட்டத்தையே ஒருங்கமைத்து கட்டுப்பாட்டோடு நடத்தாத நாம் எப்படி அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தப் போகிறோம்?
கேள்வி கேட்டார் என்ற ஒன்றிற்காகவே "உரையாடல் அமைப்பினருக்கு" சங்கம் தொடங்குவதில் விருப்பம் இல்லை என்று சொல்லி உள்ளார் தண்டோரா. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். அடிப்படைக் கேள்விகூடக் கேட்கக்கூடாது என்றா? இதைத் தண்டோராவிடம் கேள் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

//ஆதரித்துப் பேசிய அனைவரையும் குறுக்குக் கேள்வி கேட்டு அமைப்பை உருவாக்க எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர், கடைசியில் வீட்டிற்குப் போகும்போது கேபிளிடம் "நானும் சேர்கிறேன்" என்றாராம். //

எதிர்ப்புக் கேள்வி கேட்டவர்கள் சங்கத்தில் சேரக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா? அவர் கேள்வி கேட்டதினால்தான் சற்றேனும் மையக் கருத்தை நோக்கி விவாதம் நடந்தது இல்லாவிட்டால் மொக்கை மேலும் அதிகம் ஆகி இருக்கும்.

சரவணன்-சாரதி said...

வந்திருந்த 60 பேருக்கும் தலா 3 நிமிடம் வீதம் பேசச் சொல்லியிருந்தால் 2 .30 மணி நேரத்தில் எல்லோருடைய கருத்துக்களையும் அறிந்திருக்கலாம். மேலும் அரை மணிநேரத்தில் (9 மணிக்கு ) ஏதாவது ஒரு முடிவைக் கொண்டுவந்திருக்கலாம். அதை விட்டுவிட்டுக் குட்டிக் கதைபேசுவது, தங்களின் அனுபவம் என்று மொக்கை போடுவது என்று பல மொக்கை விஷயங்கள் நடந்ததைத் தவிர வேறென்ன செய்தோம் அன்று......
ஏன் இவ்வளவு அவசரமாக சங்கம் தொடங்குகிறீர்கள்? 10 நாளில் சங்கம் தொடங்கி என்ன சாதிக்கப் போகிறோம்?

இது வரை நான் உங்களிடம் பேசியதுகூட இல்லை. இந்தக் கேள்வியெல்லாம் கேட்கும் அளவிற்கு சுதந்திரம் அளித்துள்ள வலை உலகிற்கும், சூழலுக்கும் நன்றி.
அண்ணே இது உங்களுக்கு சற்றேனும் எரிச்சல் தந்தால் கமெண்டை அழித்துவிடவும். அவ்வாறு செய்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.

முகில் said...

என்னைப்போல சின்னபசங்கவெல்லாம் ஆட்டத்தில சேர்த்திக்க இல்லையா?

சென்ஷி said...

கொடுமையான பதிவு.. அதைவிட கொடூரமான முறையில் பதியப்பட்டுள்ளது.

Rajan said...

கருத்துகளில் பெரும்பான்மையும் உடன் படுகிறேன் ! பதிவர்களை ஒன்றிணைக்கும் அமைப்பு சமூகத்துக்கு ஒரு மயிரும் செய்யாவிடினும் தவறல்ல ! உறுப்பினர் ஒருவர்க்கு பின்னாளில் ஏதேனும் ஒரு சிறிய உதவி கிடைக்குமாயின் அது மிகவும் போற்றத்தக்கது ! இங்கு எதிர்த்திட ஏதுமிருப்பதாகதோன்றவில்லை

Rajan said...

//எதிர்ப்புக் கேள்வி கேட்டவர்கள் சங்கத்தில் சேரக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா? அவர் கேள்வி கேட்டதினால்தான் சற்றேனும் மையக் கருத்தை நோக்கி விவாதம் நடந்தது இல்லாவிட்டால் மொக்கை மேலும் அதிகம் ஆகி இருக்கும்.//

ஹா ஹா ஹா ! சூப்பர் கமென்ட்

Rajan said...

//இதற்காக மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தாலும் சம்மதமே.//


யோவ் ! நீ சும்மாவே இருக்க மாட்ட ! ஏற்க்கனவே பத்திகிட்டு எரியுது சன்னமா வந்து என்னை ஊத்திட்டு போறது நியாயமா ?

குசும்பன் said...

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

இதுக்கு மேல் எதுவும் சொல்வதுக்கு இல்லை.

தனிப்பட்ட முறையில் பேசுவதை (அதிஷாவிடம்) எல்லாம் என்னைக்கு பதிவா போடுவதை நிறுத்தப்போறீங்களோ:((

butterfly Surya said...

மனம் நோக வேண்டாம். உங்களின் ஆதங்கம் புரிகிறது.

பொறுமையை கடைபிடித்து ஆக வேண்டியதை பார்ப்போம்.

அனைவரும் வாருங்கள்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

வாழ்த்துகள்.

கிரி said...

உண்மைத்தமிழன் நீங்கள் அவசரப்பட்டு இந்த பதிவு எழுதி விட்டீர்கள் என்பது என் கருத்து.

அதே போல அதிஷாவுடன் பேசியதை இங்கே இடுகையில் போட்டது மிகப்பெரிய தவறு. அவருக்கு மிகவும் தர்ம சங்கடமாக போய் இருக்கும். பொதுவாக இதனாலே பதிவர்களுடன் எதுவும் பேசப்பயப்படுவேன், தற்போது இன்னும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இது உணர்த்துகிறது.

உண்மைத்தமிழன் said...

[[[அதிஷா said...
ஓஹோ நாம தனியா பேசினா அதையும் தூக்கி பதிவா எழுதிடுவீங்க இல்லையா. அசிங்கமா இல்லை உங்களுக்கு. விளையாட்டுக்கு பேசினதெல்லாம் எடுத்து சீரியஸா பதிவுல போட்டு உங்க மேட்டிமைத்தனத்தை காட்டுவீங்கனு தெரிஞ்சிருந்தா உங்கள மாதிரி ஆளுகிட்ட பேசிருக்கவே மாட்டேன் பிரதர். என்னை செறுப்பால அடிக்கணும்.]]]

என்னைத்தான் செருப்பால அடிக்கணும் தம்பி..! நீ விளையாட்டாக பதில் சொல்லியிருக்கலாம்.

ஆனால் நான் சீரியஸாகத்தான் நீயும் சேர்ந்து எதிர்க்கிறாயே என்கிற ஆதங்கத்தில்தான் கேட்டேன்.. நீ நிச்சயம் பிரஸ் கிளப்பில் சேருவாய் அல்லது சேர்ந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் அது மட்டும் நியாயமா என்று அன்றைய நிகழ்வு தொடர்பாக கேட்கத்தான் நான் கேட்டேன்.

நான் எதற்கு அந்தச் சூழலில், இருக்கிற கோபத்தில் உன்னிடம் விளையாட வேண்டும்..? நீ விளையாட்டாகச் சொல்கிறாய் என்றால் நீதான் அதனை சொல்லியிருக்க வேண்டும். இரண்டு முறை கேட்டேன். இரண்டு முறையும் நீ அதே பதிலைத்தான் சொன்னேன்..

அதனால்தான் எழுதினேன். என்னைப் பொறுத்தவரையில் இது அன்றைய இன்றைய நிலைமைக்குத் தப்பில்லை!


[[[பத்திரிகையாளர் சங்கத்துக்கும் பதிவர் சங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆளுகிட்ட என்னத்த பேசறது.. வெங்காயம்..]]]

வெங்காயம்தான் தம்பி.. நமக்குன்னு நாலு காசு சம்பாதிச்சுக்குறதுக்கும், வாங்கிக்கிறதுக்கும், அடுத்தவங்களுக்கு நம்மாளால முடிஞ்சதை கொடுக்கிறதுக்கும் கொஞ்சமாச்சும் வித்தியாசம் இருக்குல்ல தம்பி..!

இதுதான் வெங்காயம்..!

[[[கேபிளிடம் நான் அன்றைக்கு பேசவேயில்லை. நான் பேசினது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க சங்கமா செயல்பட்டா நிச்சயம் அதுக்கு என்னாலான உதவிகளை செய்றேனு நான் சொன்னது தண்டோரா மணியிடம்தான்.]]]

இந்த ஒரு விஷயத்தில் நான் தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்..

மற்றபடி நான் எப்போதும் நட்புக்கும், உறவுக்கும் முதலிடம் கொடுப்பவன் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் இவ்வளவு தூரம் கடுமையாக எழுதக் காரணம், அன்றைக்கு இருந்த சூழலில் நீங்கள்ல்லாம் நட்பாக கேட்டிருக்க வேண்டிய கேள்விகளையெல்லாம் சண்டைக்காரனைப் போல் கேட்டதினால்தான்..!

எனக்கும் வேறு வழியில்லை..! புரிந்து கொள்ள முயற்சி செய். கஷ்டமாக இருந்தால் விட்டுவிடு..!

உண்மைத்தமிழன் said...

மற்றவர்களுக்கு..

இரவு வீடு திரும்பியவுடன் பதில்களைச் சொல்கிறேன்..!

சுகுணாதிவாகர் said...

கட்டளையிடுங்கள், காத்திருக்கிறோம்! முடிவெடுப்பது தலைவர் பணி, முடித்து வைப்பது எமது அணி.

அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய லெனினிய மாவோயிய ஏங்கெல்சிய ஸ்டாலினிய பின்நவீனத்துவ பின்காலனியிய இருத்தலியப் புரட்சிகர சமூக ஜனநாயக வலைப்பதிவர் குழும முன்னணி, மவுண்ட்ரோடு, சென்னை.

ராஜேஷ், திருச்சி said...
This comment has been removed by the author.
ராஜேஷ், திருச்சி said...

1. இன்று இலவசம் - நாளையே பிளாக்கர் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால்? .. பாதி பேர் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.

2. பலருக்கும் ப்ளாக் எழுதுவது முழு நேர வேலை இல்லை. கிடைக்கும் நேரத்தில் எழுதுகின்றார்கள்.. நேரம் கிடைக்காவிட்டால் எழுதுவது நின்று போகும்.

3. பதிவர்கள் பல கட்சி, அமைப்பு , நம்பிக்கை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. பல விஷயங்களில் இணைய முடியாது என்பது திண்ணம்

4. கூட்டத்தில் பல கேள்விகள் வரும் இது இயற்கை.. அதற்கு இவ்ளோ டென்ஷன் ?

5. பதிவர் சந்திப்பு . .எழுத்து.. நட்பு , இப்படியே போவது மேல்

தமிழ் குரல் said...

உண்மை தமிழன்,

நீங்கள் சங்கம் வைக்க வேண்டும் என்றால்... பெயர் எப்படி இருக்க வேண்டும் என்றால்... ஜெயலலிதா அடிவருடி வலைபதிவாளர்கள் சங்கம் என அறிவித்து விட்டு... மற்றவர்கள் கூப்பிட்டு இருக்க வேண்டும்...

தமிழ் வலைபதிவாளர்கள் சங்கம் பற்றி தமிழர்களாகிவர்கள் கவனித்து கொள்ளட்டும்...

கூலிக்கு மாரடிப்பது போல்... தமிழை கொண்டு நடித்து கொண்டிருப்பவர்கள்... தமிழர்கள் சங்கம் பற்றி கவலைபட வேண்டாம்...

உங்களுக்கு வேறு வேலை இல்லையா? இப்போது சங்கம் வைக்க கிளம்பி விட்டீர்கள்?

சங்கம்... கிங்கம் என நேரத்தை வீணாக்குவதை... ஜெவுக்கு அடிவருடிவது... பார்ப்பனர்களுக்கு பல்லக்கு தூக்குவது போன்ற... உங்கள் சொந்த பணிகளை கவனியுங்கள்...

வாழ்த்துக்கள்...

குசும்பன் said...

//நட்பாக கேட்டிருக்க வேண்டிய கேள்விகளையெல்லாம் சண்டைக்காரனைப் போல் கேட்டதினால்தான்..!
//

சங்கம் ஏன் என்று கேள்வி கேட்ட சிவராமனையும்,அதிஷாவையும் இப்படி கட்டம் கட்டுகிறீர்களே, சங்கம் ஏதும் தவறு செஞ்சு கேள்வி கேட்டா என்ன செய்வீங்க? உங்க ரியாக்சன் எப்படி இருக்கும்?:(

K.S.Nagarajan said...

ஏதாவது கமெண்ட் போட்டாகனுமே! என்ன போடுறதுன்னு தெரியலையே!

இல்லாட்டி நான் பதிவர் இல்லைன்னு சொல்லிடுவாங்களோ?

சரி.. விடுங்க!

மீ த ஃபிஃப்டி தேர்ட்..

geethappriyan said...

அண்ணே ஏன் இவ்வளவு சோகம்?
முதலில் உடம்பை பாத்துக்கங்கண்ணே,வேலை தான் முக்கியம் முதலில்.
ஓட்டுக்கள் போட்டாச்சு அண்ணே

geethappriyan said...

அண்ணே ஏன் இவ்வளவு சோகம்?
முதலில் உடம்பை பாத்துக்கங்கண்ணே,வேலை தான் முக்கியம் முதலில்.
ஓட்டுக்கள் போட்டாச்சு அண்ணே

Unknown said...

இந்தப் பதிவைப் படிக்கும்போது தமிழ்ப்ளாக்கர்ஸ்ஃபோரம் மின்னஞ்சல் குழுமத்தில் இருந்து அன்ஸப்ஸ்க்ரைப் செய்துவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அவசரப்பட மாட்டேன். பொறுத்திருந்து முடிவெடுப்பேன்.

அதிஷா குறித்த பத்திகளுக்கு என் கண்டனங்கள்.

பிகு: நீ ஒருத்தன் போனா ____ச்சுன்னு நீங்க நினைக்கலாம், உன் கண்டனத்தைக் குப்பையிலே தூக்கிப் போடுன்னும் சொல்லலாம். அது உங்க உரிமை :-)

அக்னி பார்வை said...

உதா,

க‌ண்ட‌ன‌த்திற்குறிய‌ ப‌திவு.. அன்று என்ன‌ ந‌ட‌ந்த்து என்று தெரியாது ஆனால்,

குழுவை எதிர்ப‌வ‌ர்க‌ள், திட்டுப‌வ‌ர்க‌ள், விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் என் அனைவ‌ருக்குமே குழு ச‌மமாக‌ தான் செய‌ல்ப‌ட‌ வேண்டும். நான் குழுவில் சேருவேன் என‌க்கு குழுவின் ஒரு ந‌ட‌வ‌டிக்கை பிடிக்க‌ வில்லை என்றால் எதிர்பேன், திட்டுவேன்.. அதையெல்லாம் செய்ய‌கூடாது என்று க‌ட்டிப்போட்டால் எப்ப‌டி.. த‌னி ம‌னித‌ சுத‌ந்திர‌ம் என்ப‌து முக்கிய‌ம்..

குழு ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்று 4 பேர் சொன்னால் அப்ப‌டி சொல்ல‌ உரிமை இருக்கிற‌து என்றால், குழு தேவையில்லை என்று சொல்ல‌வும் 4 பேருக்கு உரிமை இருக்கிறது. அதை தான் சிலர் செய்திருக்கிறார்கள்.. கேள்வி தானே கேட்டிருக்கிறார்கள், தவறில்லையே... குதர்க்கமாக ஏன் , மனதில் என்ன நோக்கத்துடன் கேள்வி கேட்டிருந்தாலும் அவர்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது.. கூடி தேர் இழுக்கும் போது வரும் பிரச்சணைகளுக்கு சற்றே மனம் வருத்தம் அடைந்திருக்க்லாம் ஆனால் மன வருத‌த்தை இப்படி ஒரு பதிவை போட்டு ஆற்றிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் ஒன்று , நேற்றோடு ஒருவ‌ழியாக‌ குழுவின் மின் முக‌வ‌ரிக்கு ப‌லோய‌ர்க‌லும், மெம்ப‌ர்க‌ளும் சேர‌ ஆர‌ம்பித்து க‌லை க‌ட்டும் நேர‌த்தில் திருஷ்டியாக பதிவை போட்டிருப்பது நீங்கள் தான்.. ‌

Santhappanசாந்தப்பன் said...

எங்கெங்கு காணினும் அரசியல்!

நல்ல முயற்சி எடுக்கும் போது சோதனைகள் வரத்தான் செய்யும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

என்னுடைய முழு ஆதரவு உண்டு.

உண்மைத்தமிழன் said...

[[[உண்மை said...
தமிழனுக்கு எதிரி தமிழன்தான்னு பல பேர் சொல்லுவாங்க அப்ப நான் நம்பலை. இப்ப கண்டிப்பா நம்புகிறேன்.
ஒரு சின்ன அமைப்ப உருவாக்க இத்தனை எதிர்ப்பா?]]]

இதுதான் எனக்கும் புரியவில்லை உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

me the first.

அண்ணே சங்கம் பற்றி என் கருத்துக்களை இங்கே வீடியோவாக கொடுத்துள்ளேன்.]]]

ஸாரி செகண்ட்டு..!

ரொம்ப மெதுவாக வருதுப்பா..! முழுசா பார்த்துட்டு திரும்பவும் பேசுறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சுப்புடு said...
Good write up!]]]

மிக்க நன்றி சுப்புடு..!

உண்மைத்தமிழன் said...

[[[V.Radhakrishnan said...
மனதில் இருக்கும் ஆதங்கத்தை அழகாச் சொல்லி இருக்கீங்க சார். அமைப்பின் நோக்கத்தை நல்லாத் தெளிவுபடுத்திக்கோங்க சார், அது ஒன்றே போதும் அமைப்பின் வெற்றிக்கு. என்ன நோக்கம் சார்? மத்தவங்களுக்கு உதவுறதா? தெளிவுபடுத்திக்கோங்க சார்.]]]

அதான் இதுலயே சொல்லியிருக்கனே ஸார்..!

வலைப்பதிவுகளை இன்னமும் அதிகமாக மக்களிடத்தில் கொண்டு போகணும்.. நிறைய எழுத்தார்வம் கொண்டவர்களை உள்ள இழுக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...

//இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..//

நன்றிங்க..]]]

உங்களுக்கும் எனது நன்றிங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[அரவிந்தன் said...
பலரும் கடந்த இரண்டு நாட்களாக சொல்லத் தயங்கியதை நெத்தியடியாக சொல்லிவிட்டீர்கள்.. பாராட்டுகள் உண்மைத்தமிழன். தம்பி அதிஷாவை விட்டுவிடுங்கள் புது மாப்பிள்ளை அல்லவா?]]]

ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கிறது அரவிந்தன்..

ஒரு சாதாரண பிரச்சினையை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தி நமது நோக்கத்தையே குறை சொல்லி நிகழ்ச்சியை ஸ்பாயில் செய்ய வேண்டும்..???

உண்மைத்தமிழன் said...

[[[துபாய் ராஜா said...
எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.]]]

அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறோம் துபாய்ராஜா..

வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
ஏன்ணே சங்கத்துல சேரணும்னா ”தமிழ்லதான் தலைப்பு வைக்கணும்"னு ரூல் போடுவாங்களாண்ணே??
லூஸ்ல விடுங்கண்ணே!! இவிங்களையெல்லாம் கணக்குல சேர்த்துகிட்டு.]]]

பாலா.. ரொம்ப நல்லாத் தெரிஞ்சவங்களே இப்படி செஞ்சா எப்படின்றதாலதான் எழுதினேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

//எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது//

வாழ்த்துகள்!]]]

வாழ்த்துக்களுக்கு நன்றி பழமைபேசி..!

உண்மைத்தமிழன் said...

[[[கமல் said...
தூற்றுவோர் தூற்றட்டும். போற்றுவோர் போற்றட்டும். நீங்கள் உங்கள் முயற்சியில் குறியாக இருந்தால் வெற்றி பெறலாம். வாழ்த்துக்கள்.]]]

நன்றி கமல்..! உங்களை மாதிரி முகம் தெரியாதவர்களே ஆதரிக்கின்றபோது முகம் தெரிந்தவர்கள் என்னென்ன செய்திருக்க வேண்டும்..?

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...
ஊர் கூடித் தேரிழுப்போம்:)]]]

அதுக்குத்தான் ஸார் காத்துக்கிட்டிருக்கோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[முகமூடி said...
மொதல்ல இது மாதிரி ஆலோசனை கூட்டத்துக்கு முக்கிய சமாச்சாரம் :: ஒரு கண்டிப்பான ஒருங்கிணைப்பாளர், ஒரு தெளிவான அஜெண்டா. இது ரெண்டுமே இல்லாம வாங்க பேசிக்கலாம்னு ஒரு கூட்டத்த கூட்டிட்டு அப்புறம் சரியாவே முடிவு ஏற்படலன்னா எப்பூடி?]]]

தப்புதான் ஸார்.. முதல் முறை என்பதாலும், அனைவருமே எங்களது நண்பர்கள் என்பதாலுமே இப்படி ஆகும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை..!

[[[பக்கத்து வூட்டுக்காரன் புள்ள பெத்துக்குரானேன்னு நாமளும் புள்ள பெத்துக்க ஆசைப்பட்டா இப்படித்தான். முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. விஜய் கூடத்தான் முதல்வர் ஆகணும்னு (அவங்கப்பன் கவர்னர்?) ஆசைப்படுறான்.]]]

அதுக்கு இந்தப் பதிவுலேயே தெளிவான ஒரு பதிலை சொல்லியிருக்கனே ஸார்..!

சங்கம் அமைச்சா நாம என்னவெல்லாம் செய்யலாம்னு..?

//ஆனால் எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போதைய நிலையில் பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து மறுப்பு அறிக்கை போடச் சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் நமக்கு என்ன பாதுகாப்பு..? //

பத்திரிக்கைகாரனுக்கு கிடைக்கும் அதிகாரமும் அங்கீகாரமும் சங்கம் வைச்சா கிடைச்சிடுமா? அது பத்திரிக்கையின் ரீச்சை பொறுத்தது அல்லவா? உண்மையான ‘சுதந்திர’ நாட்டில் என்னதான் மட்டமான பத்திரிக்கைனாலும் தராசு பத்திரிக்கையிலும் முரசொலியிலும் நடத்திய கூத்தையெல்லாம் செய்துவிட்டு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்துவிட முடியாது. ஆனால் தமிழகத்தில்?]]]

சன் டிவியையும், நக்கீரனையும், குமுதத்தையும் இப்போது நித்தியானந்தம் விஷயத்தில் யாராவது கேள்வி கேட்க முடிந்ததா..? ஆனால் இதுவே ஒரு வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தால் என்னவாயிருக்கும்..?

//ஒரு அமைப்பின் கீழ் இருந்தால் நாளை எந்தவொரு அதிகார வர்க்கத்திடமும் நாம் தைரியமாகப் பேசலாம். குரல் கொடுக்கலாம். தனி நபர்களாக போய் பேசுவதற்கும், அமைப்பின் பெயரில் போய் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு... ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மீன்பாடி ஓட்டுநர்கள் சங்கம், டிரைகிளீனர்ஸ் சங்கம்..//

மேற்கண்ட எல்லா சங்கத்திலும் அதன் உறுப்பினர்களுக்கென்று ஒரு பொது புள்ளி உண்டு. அப்புளிக்கென்று ஒரு பாதிப்பு வரும்பட்சத்தில் அதில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு தொழிலை செய்துகொண்டு குடும்பத்திற்கும் இதர பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிட்டது போக மிச்சமிருக்கும் நேரத்தில் மீத பர்ஸ்டேய் போடும் சிலர் சங்கம் வைத்துதான் நட்பு வளர்க்க வேண்டும் என்பதில்லை. சும்மா காந்தி சிலைக்கருகில் சுண்டல் சாப்பிட்டும் வளர்க்கலாம்.]]]

எத்தனை நாளைக்குத்தான் தனியாகச் சென்று சுண்டல் சாப்பிடுவது.. இனிமேல் நாங்கள் அனைவரும் எங்களது குடும்பத்தாருடன் இணைந்து அதே இடத்தில் சாப்பிடுகிறோமோ.. இதிலென்ன தவறு..?

உண்மைத்தமிழன் said...

[[[முகமூடி said...
//ச்சும்மாவே இருப்போம் என்றால் என்ன மயித்துக்கு, என்ன எழவுக்கு.. என்ன வெங்காயத்துக்கு.. பின்னவீனத்துவத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும், சினிமாவையும் எழுதணும்.. அதையும் எழுதாம விட்டுட்டு அவங்கவங்க சோலியைப் பார்த்துட்டுப் போகலாமே..? //

அதாங்க வலைப்பதிவளர்களின் அடிப்படை சோலியே.. எவனவனுக்கு எழுத்து வருதோ, அல்லது எழுதறதுக்கு ஏதாவது ஒண்ணு நம்மகிட்ட இருக்கோன்னு தோணுதோ அவனவன் தன்னளவில் கட்டற்ற சுதந்திரத்தோட எந்தவித நிர்பந்தமோ கவலையோ இல்லாமல் எழுதுவதுதான் வலைப்பதிவு. ஏற்கனவே அதெல்லாம் மாறிப்போய் கொஞ்ச கொஞ்சமா கூட்டணி சேர்ந்துகிட்டு இப்படி எழுதினா அந்த பிரபல பதிவருக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு சென்சர்... தனக்கு பிடிச்ச பதிவர் எழுதினா அது குப்பைனாகூட ஆகா ஓகோன்னு முதுகு சொறிதல்னு இருக்கிற கூத்து போதாதுன்னு இப்போ சங்கம் வேறயா.]]]

பதிவர்கள் எழுதுவதை எந்தவிதத்திலும் அமைப்பு கட்டுப்படுத்த முடியாது.. கட்டற்ற சுதந்திரம் என்றாலும் எல்லா விஷயத்திலும் ஒருவித எல்லைக் கோட்டுடன் நிற்கத்தான் வேண்டும்.. இது எங்கள் அனைவருக்குமே தெரியும் முகமூடி ஸார்..!

//அமைப்பை உருவாக்குவோம்.... to ....செல்வதில் யாருக்கு என்ன புண்ணியம்..? //
சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.]]]

செண்டிமெண்ட் பீலிங் பிய்ச்சுக்கிட்டு போயிருச்சு. இனிமே அதைத் திரும்பப் பிடிச்சு சீசாவுக்குள்ள அடைக்க முடியாது..!

//பலரும் வாசிக்கிறார்கள்.. ஆனால் எழுதத் தயங்குகிறார்கள். அவர்களை நாம் எப்படி இழுப்பது..? இப்படி பொதுச் சேவை செய்வதற்கு //

இது எப்படி சேவை என்ற கணக்கில் வருகிறது? மீண்டும்.. முதல்ல வலைப்பதிவாளர்களுக்கு எதுக்கு சங்கம்? உங்க mission statement என்ன? இதுக்கு தெளிவான ஒரு பதில முடிவு பண்ணுங்க. சங்கத்தின் சட்ட திட்டங்கள் என்ன? அடிப்படை அம்சங்கள் என்ன? என்ன குறிக்கோள், அதை அடையும் வழிமுறைகள் என்ன? சங்கத்தின் எல்லை எது? மூர்த்தி மாதிரி ஆட்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சங்கம் வக்கீல் அமைக்குமா? உறுப்பினர்களுக்கு தகுதிகள் என்ன? ஜோக்குகள் காப்பி பேஸ்ட் செய்து அதை பதிவாக்கி மற்ற பதிவுகளில் மீதபர்ஸ்டேய் அல்லது ரிப்பீட்டேய் சொல்பவர்கள் பதிவர்களா இல்லை பர்ஸ்டு பெஞ்சில் உட்கார்ரவ்ன் எல்லாம் பூணுல் போடுறானா என்று உன்னிப்பாக பார்த்து பதிவு எழுத வேண்டுமா? இதெல்லாம் முதல்ல சொல்லுங்க. அவசியமில்ல அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று (என்ன எழவுடா இது, இதுல கூட எதுன்னே தெரியாம எதையாவது ஒன்னா) அமைச்சே தீருவோம் அப்படீன்னு வெறியோட இருந்தீங்கன்னா.. ஆல் த பெஸ்ட்.]]

மறுபடியும் பதிவைப் படிக்கவும்..!

[[[நேர்மையான தலைமையோ தேவையான குறிக்கோளோ இல்லாத எந்த சங்கத்திலும் இதுவரை சேராத உங்க பெயர் தெரியாத கன்ப்யூஸ்ட் குழுமத்தில் ரிடையர்டு பதிவர் (ரிடையர்டு பதிவர்கள எல்லாம் உங்க சங்கத்துல உண்டா?)]]]

முகமூடியாகிய நீங்களே வந்தாலும் இணைத்துக் கொள்வோம்.. நீங்கள் நேர்மையானவர் என்றால் நாங்களும் நேர்மையானவர்கள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெரி ஈசானந்தன். said...
மங்களம் கிட்டும்.]]]

அட்சதை தட்டை நீங்களும் சேர்ந்துதான் பிடிக்க வேண்டும் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[என் நடை பாதையில்(ராம்) said...
எந்த ஒரு அமைப்பானாலும் ஒரு தலைவர் (எல்லாராலும் விரும்பப்படுபவர் / தேர்ந்தெடுக்கப்பட்டவர்) என்று ஒருவர் இல்லாமல் பலரது முயற்சியில் நடந்தால் இப்படித்தான் முடியும். ஆனால் அப்படிப்பட்ட ஒருவரை யாரும் ஏற்றுக் கொள்ள விரும்பாதது போலவும், எல்லாரும் அதற்கு ஆசைப்படுவது போன்றதுமான ஒரு கூட்டம் நடந்து முடிந்துவிட்டது என நினைக்கிறேன்.]]]

அப்படியல்லை ராம்.. இது அதீதமான அறிவுஜீவித்தனத்தால் விளைந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[என் நடை பாதையில்(ராம்) said...
இப்படி ஒரு பதிவை முன்பே எழுதியபின் பதிவர் சந்திப்பை நடத்தியிருக்கலாம்.]]]

அட என்ன ராம் இப்படி..? ஏற்கெனவே எழுதியதையே சரியாப் படிக்காம போயிட்டாங்க..

இதையெழுதி என்ன ஆயிருக்கப் போகுது..?

உண்மைத்தமிழன் said...

[[[அக்கினிச் சித்தன் said...
//அருமைத் தம்பி அதிஷா. //
அதிஷா ஆம்பிளைப் பையனா? ஏனுங்க, நான் பொண்ணுன்னு நெனைச்சேனுங்களே!]]]

சுத்தம்.. அந்தத் தம்பியோட பதிவையெல்லாம் படிச்சுமா இப்படி நினைச்சீங்க..!

ஆச்சரியம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீதர் நாராயணன் said...

வலைப்பதிவு என்பது உங்கள கருத்துகளை எடுத்து சொல்லும் ஒரு வடிவம் மட்டுமே. அதுவும் கூகுள் போன்றோர் இலவசமாக இடம் தருவதால் டைரி போல எல்லாரும் எழுதிக் குவிக்கிறோம். நீங்கள் கருத்து ஒருங்கிணைந்து செயல்பட, சேவை செய்ய என அமைப்பு உருவாக்க நினைப்பதெல்லாம் சரி. அதற்கு வலைப்பதிவு என்பதை ஒரு உபயோகமான கருவியாக(tool) வைத்துக் கொள்ளலாம். Blog போலவே Facebook, Orkut, Twitter என்று பல சாதனங்களை உங்கள் கருத்து ஒருங்கிணைப்பு அமைப்பிற்கு நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். எழுதுபவருக்கு நேற்று காகிதம், இன்று இணையம் நாளைக்கு இன்னொரு ஊடகம். என்ன எழுதுகிறீர்கள் என்பதுதான் முக்கியமே தவிர எதில் எழுதுகிறீர்கள் என்பது அல்லவே. உதாரணத்திற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துகளை இன்று வலையில் பதிகின்றீர்கள். நாளை அவற்றை புத்தக வடிவத்தில் கொண்டு வரலாம். அதையே ஒரு ரேடியோ நிகழ்ச்சியாக, காட்சி ஊடகமாகக் கூடச் செய்யலாம். புத்தகங்கள் Kindle போன்ற கருவிகளில் படிக்கக் கிடைக்கலாம். ஆக உங்கள் கருத்துதான் முக்கியம். அதற்கு இணையத்தை நீங்கள் பலவகையில் உபயோகித்து உங்கள் குறிக்கோளை அடைய முயற்சிக்கலாம்.
இணையத்தைப் பொறுத்தவரை கட்டமைப்புகளுக்கு எதிரிடையான செயல்பாடுகளுக்கான களன் இது. Un-conference, un-organization போன்ற ந்டைமுறைகள்தான் பிரபலம். அவைதான் தேவையும்கூட.]]]

ஸார்.. தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..!

அதேசமயம் வெறுமனே எழுதி, எழுதி என்ன செய்யச் சொல்கிறீர்கள்.. அந்த எழுத்தின் மூலம் யாராவது ஒருத்தருக்காவது உதவிகள் செய்யலாமே..?

அதனை நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே.. எங்களைப் போலவே எழுதும் திறனுள்ளவர்களுக்கு வழி காட்டலாமே..!!!

தனி நபர்களாகச் செய்கின்றபோது நிறைய சுமைகளை சிலரே சுமக்க வேண்டி வரும்.. அமைப்பாக இருந்தால் பலரும் சேர்ந்து ஒரு குடும்பமாக செய்யலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[நீச்சல்காரன் said...
அண்ணே, சங்கம் வேண்டுமா? வேண்டாமா? என்று சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவமில்லை. எனக்கு தெரிந்த ஒரு கருத்து, படைப்பிலக்கிய பதிவரானாலும், பொது விமர்சகப் பதிவரானாலும், மொக்கைப் பதிவரானாலும், தொழிற்நுட்ப பதிவரானாலும் தமிழ் பதிவுலகம் என்றுமே ஒற்றுமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.]]]

உங்களுடைய எண்ணத்திற்கு ஒரு நாளும் ஊறு நேராது நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே சந்திப்பு நடந்த அன்று உங்களுடைய முகத்தில் தெரிந்த வருத்தம், தண்டோரா, கேபிள் இருவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி நான் நன்கு அறிவேன், ஏதோ நீங்களாக முடிவு செய்துவிட்டு எல்லோரையும் வந்து சேந்துக்குங்க இல்லாட்டி போங்கன்னு சொன்னது மாதிரி நெனச்சுட்டாங்க, அங்கு பேசிய சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பேசியது நாகரிகமாக இல்லை. பெங்களூர் அரவிந்தன் முகத்தில் வந்தபோது இருந்த சந்தோசம் போகும்போது இல்லை, நல்ல நண்பர்களிடம் பேசலாம் என வந்திருப்பார், அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரைப் போல நம்முடன் ஒத்த கருத்துடையவர்கள் முதலில் ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம், ஏற்படுத்தியும் விட்டோம். சேர்பவர்கள் சேரட்டும் மற்றவர் அவரவர் விருப்பபடி இருக்கட்டும்.
உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது, நாம் ஒரு பெரிய அமைப்பாக நிச்சயம் வருவோம்.]]]

ஆறுதலான அறிவுரைக்கும், நம்பிக்கைக்கும் எனது நன்றிகள் செந்தில்..!

நாம் நினைத்தது நிச்சயம் நடக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[seetha said...

uNmaithamizhan, உங்கள் பதிவுகளை சில சமயங்களில், படிப்பேன்.
பதிவாலர்களுடைய சங்கம் குறித்த தங்கள் பதிவு படித்தேன். அதற்கான பதிலை, பைத்தியக்காரன் பதிவில் எழுதியுள்ளே. தயவுசெய்து நேரமிருந்தால் படிக்கவும்.
என்னளவில், என்னை போன்ற எல்லாம் தெரிந்த தலைக்கனம் பிடித்த பெண்ணியவாதிகளுக்கு" உங்கள், simplicity, உங்கள் பதிவை படிக்க தோன்றும்.தட்டச்சு சரியாக வராத நிலையில் இவ்வளவுதான் எழுத முடிந்தது.]]]

நன்றிகள் சீதா..

தட்டச்சு போகப் போக வந்துவிடும்.. தொடர்ந்து தட்டச்சு செய்து கொண்டேயிருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[முகிலன் said...
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழினம் இன்று சங்கம் வைக்கச் சண்டை போடுகிறது...]]]

ஆஹா.. முகிலா.. எங்களுக்கெல்லாம் இந்த வார்த்தை சிக்கவில்லையே..!!! ம்.. நல்லாயிருங்க..

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும். நல்ல குறிக்கோள்கள் இருக்கிறது அண்ணா, திட்டங்களை வகுங்கள், திட்டு வாங்கித் தொடரவும் உங்கள் தம்பிகள் தயாராய் இருக்கிறோம்...

பிரபாகர்]]]

ஐயோ.. திட்டு வாங்கியல்ல.. நீங்கள் எங்களைக் கண்டிக்கலாம்..! அதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது..! உங்களை நம்பித்தான் துவங்கவிருக்கிறோம் பிரபாகர்..!

உண்மைத்தமிழன் said...

[[[smart said...

நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் சங்கம் வைத்தால் அது அவர்களின் வாழ்வாதாரம் அவர்கள் சம்பாரிக்கும் இடம். பதிவு எழுதும் பலர் அதை வியாபாரமாகச் செய்யவில்லையே, வியாபாரமாக எழுதுபவர்கள் சங்கம் வைத்துக் கொண்டால் அது சரியான யுக்தி. சேவை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கையில் ஏன் பதிவர் சங்கம் வைத்து செய்ய வேண்டும்? விருப்பமுடையவர்கள் மட்டும் சேர்ந்து செய்யலாமே? இங்கு தனி நபர்களை குறிப்பிட்டு சாடியிருப்பது சரியாகப்படவில்லை. நாளை அடுத்தவர் நம்மை கேள்வி கேட்கும் முன் நம்மை நாமே கேள்வி கேட்டு தயார்படுத்திக்கொள்வது நல்லதுதானே.
இவையெல்லாம் எனக்கு தோன்றிய கருத்து. அனால் புதிய எழுத்தாளர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள் ஒரு வாசகர் வட்டம் கிடைக்கும் என்கிற பட்சத்தில் சங்கம் வைத்தால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் பணம், பதவி, கெளரவம் போன்றவைகள் நடமாடுவதால் சங்கத்தை வெளிப்படையாக தூய்மையாக நடத்தும் பட்சத்தில் இது அருமையான விஷயம்தான்]]]

இங்கே என்ன பணமும், பொருளும் வந்துவிடப் போகிறது..? நீங்களே சொல்லுங்கள்..

அவரவர் கைக்காசைப் போட்டும், எங்களால் முடிந்ததை வசூல் செய்தும்தான் நடத்தப் போகிறோம்.. இதில் என்ன குழப்பம் வரப் போகிறது..? எனக்குப் புரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[~~Romeo~~ said...
அதை ஏன் அமங்கலம் என்று எடுத்து கொள்ள வேண்டும் அண்ணே ?? அன்று நடந்ததை எல்லாம் பெரிய விஷயம் எடுப்பதற்கு பதில் ஒரு எடுத்துக்காட்டை எடுத்து கொள்வோம்.]]]

சரி.. ஓகே.. இதுவும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்வோம்..!

சமாதானத்திற்கு நன்றி ரோமியோ..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//நாம் மட்டுமே போதுமா..? நாம் இந்த இடத்தில் இருந்து விலகும்போது நமக்குப் பின்பாக ஒரு ஐயாயிரம் பேராவது சென்னையில் இருக்க வேண்டாமா..?//

இதுதான் நமக்கு வேண்டியது. நாம் இருக்கலாம், நாளை இல்லாமல் இருக்கலாம், பணச்சிக்கலோ, மனச்சிக்கலோ நம்மை முடக்கிவிடலாம். அமைப்பை உருவாகினால் யாரேனும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள்.. நாமே அழிந்தாலும் நமது செயல்பாடுகள் சமூகத்திற்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.. அதுதான் சங்கம்/குழுமத்தின் பயன்பாடு. தற்கொலைப் படைகள், நாளை மனச்சிக்கலோ பணச்சிக்கலோ வரும் போது, தங்களது இலக்கிய குறுநில மன்னர்களின் மனோபாவத்தில் மாற்றமேற்ப்பட்டு இலக்கியத் தொண்டை தொடராமல் போகலாம். அமைப்பிருந்தால் அமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களையொட்டி முடிவெடுக்கலாம்.. பொதுவாக அவர்களுக்கு அமைப்பை ஏற்படுத்திவதில் எந்த வருத்தமும் இல்லை, ஆனால் அதை நீங்கள் அந்த இலக்கிய குறுநில மன்னர்களிடம் காட்டி அவர்கள் ஒப்புதலைப் பெற்று, கூட்டம் நடத்த இடமும், நேரமும் அவர்களுக்கு வசதியானதுதானா? கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் வலைப்பூக்களை வாழவைக்கும் இலக்கிய சிற்றரசர்களின் இறுமாப்புக்கு உகந்த வகையில் இருக்கிறதா எனப் பார்த்து அவர்களின் மனம் குளிர வைத்துவிட்டு பின் செய்திருக்க வேண்டும். எதுவுமில்லாமல் பிரிண்ட் அவுட் எடுத்து வந்துவிட்டால் ஆயிற்றா விஷயம்.. சங்கம்/குழுமம் என்றால் சும்மாவா பாஸ்.. இவையெல்லாம் ஆரம்பம்தான்.. இதற்கு மேலான பிரச்சனைகளையும் எதிர்பார்க்கத்தான் வேண்டும்.. இவையெல்லாம் தாண்டித்தான் எல்லா சஙகங்களும்/குழுமங்களும்/ கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு எல்லாத்திற்கும் பதிவுகளிட்டு கொண்டிருந்தால் இனி பதிவுலகின் பாதி பதிவுகள் சங்கப் பிரச்சனைகளை மட்டுமே பேசும் நிலை ஏற்படக்கூடும்.. எதிர் கருத்து எப்போதும் வரவேற்கப்பட வேண்டும், அது அபத்தமாக இருந்தாலும், அப்போதுதான் சங்கத்தின்/குழுமத்தின் செயல்பாடுகளின் ஜனநாயகத்தன்மை மீது மற்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும், அந்த வகையில் அவர்களை நாம் பாராட்டுவதும், அவர்களுக்கு நம்மை/நம் செயல்பாடுகளை புரியவைப்பதும் அவசியம்.. நாங்கள் உணர்ச்சிவசப்படலாம், ஆனால் நீங்கள் கொஞ்சம் நிதானித்து பதிவெழுதி இருந்திருக்கலாம், உங்களுக்குள் புரிதல் ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள். இதை அமங்கலமாக கருதுவதும் ஆராக்கியமாக கொள்வதும் நமது கையில்தான் இருக்கிறது. மற்றபடி உங்களுக்கும், கேபிளாருக்கும், மணிஜீக்கும், சிவராமனுக்கும் வாழ்த்துகள், தொடருங்கள்..]]]

ஐயோ தீப்பெட்டி ஸார்..

எனது அன்பு முத்தங்கள்..

ஆலோசனைக்கும், அக்கறையான பரிந்துணர்வுக்கும் மிக்க நன்றிகள்..!

மீதியே நேரில் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ said...
அண்ணே! ஏதோ ஒரு தொனி தப்பாக இருக்கிறது இந்தப் பதிவில். இதை பற்றி மேலும் விவாதிப்பதை நிறுத்திவிட்டு ஆக வேண்டியதை பாருங்கள் ப்ளீஈஸ்.]]]

நிறுத்திவிடுகிறேன்..

ஆனால் இப்பதிவுக்கும் வரப் போகும் குழுமத்திற்கும், உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..

இது உண்மைத்தமிழன் என்னும் பதிவரின் பதிவர் சந்திப்பு பற்றிய விமர்சனம்.. அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரிஜினல் "மனிதன்" said...
பத்து பய படிக்கிற எடத்துல என்ன லவுடாவ எழுதிக் கிழிச்சு இந்த சமூகத்துல மாற்றம் ஏற்படுத்தப் போறிங்கன்னு தெரியல. இதுக்கு ஒரு சங்கம் வேற. கூடிப் பேச வேண்டியது. கொல்லைக்கு போறேன் கூட வாங்கிறது. சரக்கப் போட்டுட்ட்டு ஜல்சா பண்ண வேண்டியது. அப்புறம் செண்டுக்கறிய பிச்சு மண்டைய தெறந்து விடுறது. இந்த மாதிரி அதிமுக்கியமான நிகழ்வுகளுக்கு சங்கம் ரொம்ப முக்கியம்தாண்டாப்பா.]]]

சரிங்கண்ணே..!

முகவரி தெரிந்தால் வீடு தேடி வந்து பதில் சொல்லலாம்னு நினைக்கிறேன். யாருன்னு தெரியலையேண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பைத்தியக்காரன் said...

அன்பின் உண்மைத்தமிழன், உணர்ச்சிவசப்பட்டு இடுகையை எழுதியிருக்கிறீர்கள்.]]]

இல்லை.. கொந்தளிப்போடு எழுதினேன்..!

[[[உணர்ச்சியில் புத்தி அல்லது அறிவு அல்லது மனம் தடுமாறும்.]]]

இதற்குப் பெயர்தான் அறிவுஜீவித்தனம்..! எனக்கு இல்லாததை நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுபோன்ற தொனி இது..!

[[[இண்டிப்ளாகர் கூட்டத்துக்கு சென்றதும் உங்களுக்குள் இருந்த பொறி சட்டென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. இது நல்ல விஷயம். பாராட்ட வேண்டிய செயல்.
ஆனால், உண்மைத்தமிழன்... உடனே சூடு போட்டுக் கொள்வது ஆபத்தானது. இரவு அரசியல் மாற்றத்தை குறித்து யோசித்துவிட்டு காலையில் எழுந்ததுமே மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று அறிவிக்க முடியாது. ஒரே இரவில் தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் திரைப்படமும் தயாராகிவிடாது. எந்தக் கனவும் செயல் வடிவத்துக்கு வர அதற்கே உரிய கால அவகாசம் தேவை. அதற்கான உழைப்பு தேவை.
முதலில் குழுமம் அல்லது சங்கம் எதற்கு என்பதை அனைத்து பதிவர்களுக்கும் உணர வைக்க வேண்டும். குழுமம் குறித்து ஒவ்வொருத்தரும் தங்கள் மனதில் ஒவ்வொரு கற்பனை - கனவுடன் இருப்பார்கள். கனவு வேறு. நிஜம் வேறு. எனவே ஒவ்வொருவரின் தனித்தனி கனவும் இணையும் ஒரு புள்ளியை தேர்வு செய்து அதை அனைவருக்குமான கனவாக மாற்ற வேண்டும். இதை அனைவரும் ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த அடிப்படை, முதலில் அவசியம் என என்னளவில் நினைக்கிறேன்.
அடுத்து குழுமம் அல்லது சங்கமாக இணைந்தால் இது இது செய்யலாம், செய்ய முடியும். நாம் இணையாமல் இருந்தால் இது இது சாத்தியமில்லை என்பதை அழுத்தம்திருத்தமாக புரியவைத்த பிறகு - குழுமம் அல்லது சங்கம் மூலமாக இப்படி இப்படி நிகழ்ச்சிகளை நடத்தலாம் என நினைக்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் என்னென்ன செய்யலாம்? என அனைவருமாக ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும்.
இறுதியாகவே சங்கத்துக்கு அல்லது குழுமத்துக்கு அலுவலகம், தலைவர், செயலாளர், லோகோ இத்யாதி... இத்யாதி குறித்து உரையாட முடியும்.]]]

இதைத்தான் நானும் கைட்லைன்ஸாக டைப் செய்து கொடுத்தேன். அவ்வளவுதான் விஷயம்.. இதில் எங்கே ஏற்கெனவே தி்டடமிட்ட சதி இருக்கிறது..?

//வீட்டில் முதன்முதலாக நடக்கப் போகின்ற திருமணம்.. ஆசைஆசையாக முதன்முதலில் கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசம்.. குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா.. இப்படி நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கிற நாளில் அது அமங்கலமாகி முடிந்தால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கும் அன்றைய நாளில் இருந்தது..!//

இந்த முதல் பத்தியே எவ்வளவு தவறு... திருமணம், கிரஹப்பிரவேசம், குழந்தையின் முதல் பிறந்தநாள்... இதெல்லாம் தனிப்பட்ட மனிதர்கள் சார்ந்தது...
ஆனால், குழுமம் அல்லது சங்கம் என்பது பல தனி மனிதர்கள் ஒன்றிணைந்து செயல்படுத்துவது.
நிதானமாக யோசியுங்கள். நான் சொல்ல வந்தது புரியும்.]]]

இது இரண்டாவது முறையாக அறிவுஜீவித்தனத்தை புகட்டுவது..!

முருகா..!

தோழமையுடன்
உண்மைத்தமிழன்]]]

உண்மைத்தமிழன் said...

[[[நந்தா said...
உ. த அண்ணே இந்த பதிவிலும் சரி, வேறு சிலரோட பத்விலும் சரி சிவராமன் உள்ளிட்ட மாற்றுக் கருத்து கேட்டவர்களை ஏதோ கெட்டவனாய் காட்ட வேண்டும் என்ற நோக்கிலோ அவர்களே வேணுமின்னே செய்யறாங்க என்றோ நிறுவ முயற்சிப்பதாய் எனக்குப் படுகின்றது. இந்த தொனி எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.]]]

எனக்கும்தான் தம்பி சுத்தமாய் பிடிக்கலை.. ஆனால் நான் என்ன செய்ய? நடந்ததைத்தான சொல்லணும்..!

[[[நானும் பொறுத்து பொறுத்துப் பார்த்து வேறு வழியே இல்லாமல் பதில் போட வேண்டியதாய் இருக்கிறது. குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்பதெல்லாம் ஓ.கேதான்.
ஆனால் குழுமத்திற்கான நோக்கம் என்ன, வரையறை என்ன, Minimum Common Program என்ன, முக்கியமாக எதில் எதிலெல்லாம் குழுமம் தலையிடாது என்பது குறித்து இதுவரை எவரும் பதில் சொல்ல வில்லை. அதை கேட்டால் ஒருத்தர் உங்களுக்கு தப்பானவராய் ஆகின்றாரா?]]]

அதைப் பத்தித்தான் பேசணும்.. பேசுங்கன்னு சொன்னோம். ஆனால் சங்கம் வேணுமா? வேணாமான்றதுலேயே ரெண்டு மணி நேரமா தொங்கிக்கிட்டிருந்தா அது யாரோட தப்பு..?

[[[நான் அழுத்தம் திருத்தமாய் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், சிவராமன், லக்கி உள்ளிட்டு நாங்கள் கேட்ட கேள்விகள் குழுமம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்கல்ல, குழுமம் எப்படி செயல்படவேண்டும் முக்கியமாய் எதை எதை எல்லாம் செய்யக் கூடாது என்பதற்கான வடிவமே.]]]

அதை அவரவர் கருத்தாகச் சொல்லுங்கள்.. அதனை ஒரு அளவில் வைத்து வடிவமைத்து பைனல் செய்துகொள்ளலாம் என்றுதான் அழைப்பிற்கான பதிவிலும் எழுதியிருக்கிறோம். அங்கேயும் நான் சொன்னேன்..!

[[[நிற்க குழுமம் ஆரம்பிப்பதைத்தான் சரி என்று சொல்லி இருக்கிறோமே தவிர, குழுமம் குறித்து நடந்த அனைத்து விஷயங்களிலும் இம்மெச்சூரிட்டி என்று சொல்லிக் கொள்ளும்படியானவை பல நடந்திருக்கின்றன. இதோ இப்போது சங்கத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறார்களே அதில் இருக்கும் ஒரு தவறைக்கூட என்னால் சுட்டி காட்ட முடியும். நானும் சொல்லாமலிருந்து பொது வெளியில் வேண்டாமே என்பது மட்டும்தான். இதை மற்றவர்கள் சுட்டிக் காட்டவில்லை அல்லது ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதற்காக கேள்வி கேட்டவர்களை குற்றம் சொல்லாதீர்கள்.]]]

நான் அந்த நோக்கத்தில் மேதகு சிவராமனை குற்றம் சொல்லவில்லை. எவ்வளவோ நெருக்கமான அவர் அதைக் கையாண்டவிதம் எங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன் தாக்கம் இன்னும் போகவில்லை..

[[[அதிலும் வேறு சில பதிவுகளில் பின்னூட்டங்களில் நையாண்டிகள் உச்சகட்டம். இந்த வாரத்திலோ, வேறு என்றாயினும் இது குறித்து நான் நேரில் பேச தயாராகவே இருக்கின்றேன்.]]]

தாராளமா வா.. பேசலாம்.. காத்திருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீ.... said...

உண்மைத்தமிழன், சர்ச்சைகளைத் தவிர்த்துவிட்டு குழுமத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம். இதற்காக மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தாலும் சம்மதமே.
ஸ்ரீ....]]]

ஆலோசனைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

இதுவும் கடந்து போகும்.. நிச்சயமாக..!

ஷாகுல் said...

//வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்..//

அன்னே இது எனக்கு தெரியாதே! இது தெரியாம ஏதோ எழுதீட்ட்னே அவ்வ்வ்வ்வ்

சண்டை இல்லாத கல்யான வீடா விடுங்க.

உண்மைத்தமிழன் said...

[[[சரவணன்-சாரதி said...

அண்ணே உங்களிடம் இருந்து இப்படிப்பட்ட பதிவா. நீங்கள் எழுதியுள்ள விசங்களே முரண்பாடாக இல்லையா?

//நான் கலந்து கொண்டபோது அங்கு வந்திருந்த பதிவர்களின் கூட்டத்தையும், அவர்கள் நிகழ்ச்சியை நடத்திய பாங்கையும், எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பையும் யோசித்தபோது(இத்தனைக்கும் அவர்கள் இந்தியா முழுமைக்குமான ஆங்கிலப் பதிவர்கள்) பிரமிப்பாக இருந்தது.//

நம்முடைய கூட்டம் எப்படி நடந்தது அண்ணா? அண்ணன் பைத்தியக்காரன் கேட்டது எந்த விதத்தில் தவறு? சங்கம் ஆரம்பிக்கலாமா என்று ஆலோசிக்க முதலில் ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விதான் கேட்கப்படவேண்டும். அன்றைய செஞ்சிலுவை சங்கம், அரசியலில் காங்கிரஸ், மறுமலர்ச்சியில் திராவிடர் கழகம் ஏன்? ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கக்கூட அந்தக் கேள்வி தேவை இல்லையா? அமைப்பு வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் எதற்காக எல்லோருடனும் ஆலோசனை? நாங்கள் ஆரம்பிக்க போகிறோம் வந்து சேருவோர் சேரலாம் என்று அறிவித்திருக்கலாமே? அடிப்படையில் இருந்து ஆரம்பிக்காமல், 10வது மாடி கட்ட முயலலாமா? சரி உங்களுக்கு இந்த வெசயம் தோன்றக் காரணமான இண்டிபிளாக்கர் நிகழ்வு எத்தனை பேருக்குத் தெரியும். தெரிந்தும் கலந்து கொள்ளாத என்னைப் போன்றவர்களுக்கு அதைப் பற்றிய முழு விபரத்தையும் பதிவாகத் தெரிவித்து விட்டு நாமும் இப்படி ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறோம். எல்லோரின் கருத்து என்ன என்று கேட்டு இருக்கலாமே? ஒரு அடிப்படைக் கேள்வி உங்களுக்கு - இண்டிபிளாக்கர் குழுமம் இப்படித்தான் அவசரமாகத் தொடங்கப் பெற்றதா என்று முதலில் யோசித்து சொல்லுங்கள்.]]]

தம்பி.. நாங்கள் எதையும் திட்டமிடவில்லை. இந்த சந்திப்பில் கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்து கொண்டு அதனை ஒரு ஐந்து பேர் கொண்ட கமிட்டியின் முன் வைத்து அதனை சீர்த்திருத்தி பின்பு அதனையும் பதிவர்களிடத்தில் கொண்டு சென்று அவர்களது ஒப்புதலைப் பெற்று கடைசியாகத்தான் துவக்கலாம் என்று நினைத்திருந்தோம்..

எங்களைச் சந்தேகப்பட்டு பேசி ஒவ்வொரு முறையும் கிணற்றைத் தாண்டவிடாமல் மீண்டும், மீண்டும் துவக்கலாமா? வேண்டாமா? என்றே இழுத்துவிட்டால் கூட்டம் எப்போது நிறைவடையும்..?

இண்டிபிளாக்கர் அமைப்பினர் பல்வேறு தரப்பினரிடமும் இது போல் கருத்துப் பரிமாற்றம் நடத்தி கருத்துக்களைக் கேட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள்..!

அதைத்தான் நாங்கள் செய்ய நினைத்தோம். அது இங்கே வேறு விதமாகிவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[சரவணன்-சாரதி said...
வந்திருந்த 60 பேருக்கும் தலா 3 நிமிடம் வீதம் பேசச் சொல்லியிருந்தால் 2.30 மணி நேரத்தில் எல்லோருடைய கருத்துக்களையும் அறிந்திருக்கலாம். மேலும் அரை மணிநேரத்தில் (9 மணிக்கு) ஏதாவது ஒரு முடிவைக் கொண்டுவந்திருக்கலாம். அதை விட்டுவிட்டுக் குட்டிக் கதைபேசுவது, தங்களின் அனுபவம் என்று மொக்கை போடுவது என்று பல மொக்கை விஷயங்கள் நடந்ததைத் தவிர வேறென்ன செய்தோம் அன்று......
ஏன் இவ்வளவு அவசரமாக சங்கம் தொடங்குகிறீர்கள்? 10 நாளில் சங்கம் தொடங்கி என்ன சாதிக்கப் போகிறோம்? இதுவரை நான் உங்களிடம் பேசியதுகூட இல்லை. இந்தக் கேள்வியெல்லாம் கேட்கும் அளவிற்கு சுதந்திரம் அளித்துள்ள வலை உலகிற்கும், சூழலுக்கும் நன்றி.
அண்ணே இது உங்களுக்கு சற்றேனும் எரிச்சல் தந்தால் கமெண்டை அழித்துவிடவும். அவ்வாறு செய்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.]]]

பத்து நாளில் துவக்க வேண்டும் என்று யார் சொன்னது..? நான் போன பின்னூட்டத்திலேயே இதற்கு விரிவாகப் பதில் சொல்லியிருக்கிறேன்.

எனது அனுபவத்தைச் சொன்னதற்குக் காரணம் அதன் தொடர்ச்சியாக நான் சொன்ன ஒரு காரணத்திற்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமு said...
என்னைப் போல சின்ன பசங்கவெல்லாம் ஆட்டத்தில சேர்த்திக்க இல்லையா?]]]

சரிதான்.. நானே சின்னப் பையன்தான் ராமு..!

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...
கொடுமையான பதிவு.. அதைவிட கொடூரமான முறையில் பதியப்பட்டுள்ளது.]]]

ஆட்டக் களத்தில் வந்து நின்றிருந்தால் அப்போது தெரிந்திருக்கும் எது கொடூரமானது என்று..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...
கருத்துகளில் பெரும்பான்மையும் உடன்படுகிறேன்! பதிவர்களை ஒன்றிணைக்கும் அமைப்பு சமூகத்துக்கு ஒரு மயிரும் செய்யாவிடினும் தவறல்ல ! உறுப்பினர் ஒருவர்க்கு பின்னாளில் ஏதேனும் ஒரு சிறிய உதவி கிடைக்குமாயின் அது மிகவும் போற்றத்தக்கது! இங்கு எதிர்த்திட ஏதுமிருப்பதாக தோன்றவில்லை]]]

நன்றி ராஜன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!
இதுக்கு மேல் எதுவும் சொல்வதுக்கு இல்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை (அதிஷாவிடம்) எல்லாம் என்னைக்கு பதிவா போடுவதை நிறுத்தப் போறீங்களோ:((]]]

நான் அதிஷாவிடம் தனிப்பட்ட முறையில் பேசவில்லை..

மீட்டிங் தொடர்பாகத்தான் பேசினேன்.. அதை அவர் அப்படி நினைத்து பதில் சொன்னார் என்று எனக்குத் தெரியாது..!

இது அவருடைய தவறு தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
மனம் நோக வேண்டாம். உங்களின் ஆதங்கம் புரிகிறது. பொறுமையை கடைபிடித்து ஆக வேண்டியதை பார்ப்போம். அனைவரும் வாருங்கள்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
வாழ்த்துகள்.]]]

பொறுமை.. பொறுமை.. பொறுமை..!

உண்மைத்தமிழன் said...

[[[கிரி said...
உண்மைத்தமிழன் நீங்கள் அவசரப்பட்டு இந்த பதிவு எழுதி விட்டீர்கள் என்பது என் கருத்து.]]]

இல்லை.. இரண்டு நாட்கள் காத்திருந்துவிட்டுத்தான் எழுதினேன்..!

[[[அதே போல அதிஷாவுடன் பேசியதை இங்கே இடுகையில் போட்டது மிகப் பெரிய தவறு. அவருக்கு மிகவும் தர்மசங்கடமாக போய் இருக்கும். பொதுவாக இதனாலே பதிவர்களுடன் எதுவும் பேசப்பயப்படுவேன், தற்போது இன்னும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இது உணர்த்துகிறது.]]]

உங்களுடைய பயம் தேவையில்லாதது.. நான் பேசியது மீட்டிங்கின் தொடர்ச்சிதான்..! அது அவருக்குப் புரியாமல் போனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்..!

அதோடு நான் அன்றைக்கு அந்தச் சமயத்தில் அவரோடு பேசிய முறையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கச் சொல்லுங்க.. அவருக்கே புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சுகுணாதிவாகர் said...
கட்டளையிடுங்கள், காத்திருக்கிறோம்! முடிவெடுப்பது தலைவர் பணி, முடித்து வைப்பது எமது அணி. அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய லெனினிய மாவோயிய ஏங்கெல்சிய ஸ்டாலினிய பின்நவீனத்துவ பின்காலனியிய இருத்தலியப் புரட்சிகர சமூக ஜனநாயக வலைப்பதிவர் குழும முன்னணி, மவுண்ட்ரோடு, சென்னை.]]]

உங்களுக்குத் தனியாக ஒரு ஆப்படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..

மாட்டும்போது வைத்துக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜேஷ், திருச்சி said...

1. இன்று இலவசம் - நாளையே பிளாக்கர் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தால்? .. பாதி பேர் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.]]]

ஆனால் நட்பு தொடருமே..!

[[[2. பலருக்கும் ப்ளாக் எழுதுவது முழு நேர வேலை இல்லை. கிடைக்கும் நேரத்தில் எழுதுகின்றார்கள்.. நேரம் கிடைக்காவிட்டால் எழுதுவது நின்று போகும்.]]]

ஆனாலும் நட்பு தொடருமே..!

[[[3. பதிவர்கள் பல கட்சி, அமைப்பு, நம்பிக்கை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. பல விஷயங்களில் இணைய முடியாது என்பது திண்ணம்.]]

அமைப்பு எழுதுவதில் தலையிட முடியாது..!

[[[4. கூட்டத்தில் பல கேள்விகள் வரும் இது இயற்கை.. அதற்கு இவ்ளோ டென்ஷன்?]]]

இது கேள்விகள் அல்ல.. கல்லெறிந்தது போன்று..!

[[[5. பதிவர் சந்திப்பு. எழுத்து.. நட்பு , இப்படியே போவது மேல்]]]

முதல் இரண்டைவிட மூன்றாவதை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளலாம்..!

இதற்காகவாவது அமைப்பு தேவை..!

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//நட்பாக கேட்டிருக்க வேண்டிய கேள்விகளையெல்லாம் சண்டைக்காரனைப் போல் கேட்டதினால்தான்..!//

சங்கம் ஏன் என்று கேள்வி கேட்ட சிவராமனையும், அதிஷாவையும் இப்படி கட்டம் கட்டுகிறீர்களே, சங்கம் ஏதும் தவறு செஞ்சு கேள்வி கேட்டா என்ன செய்வீங்க? உங்க ரியாக்சன் எப்படி இருக்கும்?:(]]]

தாராளமாகக் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லத் தயாராக இருப்பார்கள்..! அப்போது அதுவெல்லாம் மினிட்ஸ் புத்தகத்தில் ஏறும்.. சாட்சியங்களாக இருக்கும்..! கவலை வேண்டாம் ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[K.S.Nagarajan said...

ஏதாவது கமெண்ட் போட்டாகனுமே! என்ன போடுறதுன்னு தெரியலையே!
இல்லாட்டி நான் பதிவர் இல்லைன்னு சொல்லிடுவாங்களோ?
சரி.. விடுங்க!
மீ த ஃபிஃப்டி தேர்ட்..]]]

நாகு.. நானே உங்களுக்கு போன் செய்யணும்னு நினைச்சேன். நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க..!

இட்லிவடை கண்டிப்பா நம்ம சங்கத்துல சேரணும்..! அப்ளிகேஷன் வந்து வாங்கிக்கிறீங்களா..? இல்ல நான் கொண்டு வந்து கொடுக்கட்டுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
அண்ணே ஏன் இவ்வளவு சோகம்?
முதலில் உடம்பை ாத்துக்கங்கண்ணே, வேலைதான் முக்கியம் முதலில். ஓட்டுக்கள் போட்டாச்சு அண்ணே]]]

ஆஹா.. கார்த்திகேயா.. முருகா..! நன்றிப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[KVR said...
இந்தப் பதிவைப் படிக்கும்போது தமிழ் ப்ளாக்கர்ஸ்ஃபோரம் மின்னஞ்சல் குழுமத்தில் இருந்து அன்ஸப்ஸ்க்ரைப் செய்துவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அவசரப்படமாட்டேன். பொறுத்திருந்து முடிவெடுப்பேன்.]]]

அவசரப்பட வேண்டாம்.. இந்த எனது பதிவிற்கும் குழுமத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.. இது உண்மைத்தமிழன் என்கிற தனி வலைப்பதிவர் ஒருவருடைய பதிவர் சந்திப்பு பற்றிய பகிர்வு.. அவ்வளவே..!

[[[அதிஷா குறித்த பத்திகளுக்கு என் கண்டனங்கள்.]]]

அது பற்றி நான் தெளிவாக பின்னூட்டமிட்டுள்ளேன் ஸார்..! தவறு என்னுடையதில்லை. தாங்கள் தவறாக நினைக்கும் அளவுக்குப் போய்விட்டதை நினைத்து வருந்துகிறேன்..!

[[[பிகு: நீ ஒருத்தன் போனா ____ச்சுன்னு நீங்க நினைக்கலாம், உன் கண்டனத்தைக் குப்பையிலே தூக்கிப் போடுன்னும் சொல்லலாம். அது உங்க உரிமை :-]]]

அப்படியல்ல..! எனக்கென்று சில தனிப்பட்ட கருத்துக்கள் இருக்குமே? அதையும் குழுமத்தையும் இணைத்துப் பார்க்காதீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[அக்னி பார்வை said...

உதா, க‌ண்ட‌ன‌த்திற்குறிய‌ ப‌திவு.. அன்று என்ன‌ ந‌ட‌ந்த்து என்று தெரியாது ஆனால், குழுவை எதிர்ப‌வ‌ர்க‌ள், திட்டுப‌வ‌ர்க‌ள், விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் என் அனைவ‌ருக்குமே குழு ச‌மமாக‌தான் செய‌ல்ப‌ட‌ வேண்டும். நான் குழுவில் சேருவேன். என‌க்கு குழுவின் ஒரு ந‌ட‌வ‌டிக்கை பிடிக்க வில்லை என்றால் எதிர்பேன், திட்டுவேன்.. அதையெல்லாம் செய்ய‌கூடாது என்று க‌ட்டிப் போட்டால் எப்ப‌டி? த‌னி ம‌னித‌ சுத‌ந்திர‌ம் என்ப‌து முக்கிய‌ம்..
குழு ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்று 4 பேர் சொன்னால் அப்ப‌டி சொல்ல‌ உரிமை இருக்கிற‌து என்றால், குழு தேவையில்லை என்று சொல்ல‌வும் 4 பேருக்கு உரிமை இருக்கிறது. அதைதான் சிலர் செய்திருக்கிறார்கள். கேள்விதானே கேட்டிருக்கிறார்கள், தவறில்லையே. குதர்க்கமாக ஏன் , மனதில் என்ன நோக்கத்துடன் கேள்வி கேட்டிருந்தாலும் அவர்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. கூடி தேர் இழுக்கும் போது வரும் பிரச்சணைகளுக்கு சற்றே மனம் வருத்தம் அடைந்திருக்க்லாம். ஆனால் மன வருத‌த்தை இப்படி ஒரு பதிவை போட்டு ஆற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் ஒன்று , நேற்றோடு ஒரு வ‌ழியாக‌ குழுவின் மின் முக‌வ‌ரிக்கு ப‌லோய‌ர்க‌லும், மெம்ப‌ர்க‌ளும் சேர‌ ஆர‌ம்பித்து க‌லை க‌ட்டும் நேர‌த்தில் திருஷ்டியாக பதிவை போட்டிருப்பது நீங்கள்தான். ]]]

நன்றி அக்னிபார்வை..!

அவர்களுக்கு எப்படி ஒரு பார்வை இருக்கிறதோ அதே போலத்தான் இது எனது பார்வை..! அவ்வளவுதான்..

இதற்கும் குழுமத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..!‌

உண்மைத்தமிழன் said...

[[[பிள்ளையாண்டான் said...
எங்கெங்கு காணினும் அரசியல்!
நல்ல முயற்சி எடுக்கும்போது சோதனைகள் வரத்தான் செய்யும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். என்னுடைய முழு ஆதரவு உண்டு.]]]

நன்றி பிள்ளையாண்டான் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷாகுல் said...

//வலைத்தளங்களில் யார் என்ன எழுதினாலும் அதற்கு அவரே பொறுப்பு.. அது குற்றச்சாட்டாக இருந்தாலும், அவதூறாக இருந்தாலும், வெளியில் இருந்து எடுத்துக் கையாண்டதாக இருந்தாலும் சரி.. அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்..//

அன்னே இது எனக்கு தெரியாதே! இது தெரியாம ஏதோ எழுதீட்ட்னே அவ்வ்வ்வ்வ் சண்டை இல்லாத கல்யான வீடா விடுங்க.]]]

ஆஹா.. இங்க பாருங்கப்பா.. நமக்கு ஒரு தோஸ்து கிடைச்சிருக்காரு..!

ஷாகுல் பயப்படாதீங்க.. நாங்க இருக்கோம் ஜாமீன் எடுக்க..!!! முதல்ல சங்கத்துல சேர்ந்திருங்க..!))))))))))))

ஷாகுல் said...

//ஷாகுல் பயப்படாதீங்க.. நாங்க இருக்கோம் ஜாமீன் எடுக்க// முடிவே பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்வ்வ்

K.R.அதியமான் said...

my comment in Sivaraman's post can be reposted here too :

அடக்கடவுளே ! ‘சங்கம்’ ஆரம்பிக்ககும் முன்னாலேயே இத்தனை குழப்பங்கள் மற்றும் ‘விவாதங்களா’ ? ஞாநி தம் அனுபவங்களை பற்றி சென்னதை நியாபகப்படுத்திக்க வேண்டும் !

நண்பர்களே, freeஆ உடுங்கப்பா. இத்தனை விவாதம் செய்யும் அளவிற்க்கு பெரிய விசியம் அல்ல இதில். தொழிற் சங்கங்கள் அல்லது லயன்ஸ் கிளப் அல்லது ’முற்போக்கு’ எழுத்தாளர் சங்கம் போல நாம் உருவாக்கப்போகும் சங்கம் அல்லது குழுமம் ’செயல்’ பட போவதில்லை. சும்மா ஒரு informal forum. Unregisteredஆக கூட முதலில் துவங்கலாம். பதிவர்கள் பற்றிய ஒரு data base இருந்தாலே கூட போதும்.
ஒரு managing committee இருந்தால் கூட போதும். (அண்ணன் தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், பொன் வாசுதேவன், உண்மை தமிழன், அய்யா T.V.R, பைத்தியக்காரன் போன்ற சில முன்னோடிகள் அந்த கமிட்டியில் இருந்தால் கூட போதும்) தலைவர், செயலாளர் போன்றவர்களை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அந்த கூகுள் group இல் அனைவரும் சேர்ந்து கொண்டால் கூட ஒரு ஆரம்பம்.

Non Resident Indian போல சென்னையில் வசிகாத உறுப்பினர்கள் என்றும் ஒரு வகை உறுப்பினர்களை சேர்க்கலாம். Chennai Resident member and Non-resident member. அவரவர் விருப்பம். அலுவலகம் யாராவது ஒருவர் தம் அலுவலகத்தில் ஒரு மூலையை அளித்தால் புண்ணியமுண்டாகும். (அண்ணன் தண்டோரா பெருந்தன்மையுடன் அளிப்பார் என்று நம்புகிறேன் !! ) சந்திக்கும் இடமாக வழக்கம் போல Discovery book palace அல்லது பூங்கா அல்லது மெரினா. தேவை பட்டால் ‘நன்கொடை’ அல்லது சந்தா வாங்கி செலவுகளை பகிர்ந்துகொள்ளாம். No hard and fast rules. Just an informal forum for better co-ordination and exchange of messeges and info. உரையாடல் அமைப்பினர் வழக்கம் போல தங்கள் செய்லபாடுகளை தொடரலாம். தேவை பட்டால் சங்கத்தின் ‘உதவியை’ கேட்டு பெறலாம். அதுவும் optional தான்.

இந்த விசியம் பற்றிய அடுத்த ‘விவாத’ சந்திப்பிற்க்கு வருவாதாக இல்லை. Too much ‘talk’. ஜாலிய இருங்கப்பா. Take it easy மக்களே.

மாதவராஜ் said...

//எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. //

யார் முடிவு செய்தார்கள் தம்பி?

அது சரி(18185106603874041862) said...

ஸாரிண்ணே... பல விஷயங்களில் முற்றிலும் முழுதாக வேறுபடுகிறேன். உங்கள் இடுகையில் மிக மிக சில இடங்களில் மட்டுமே ஒத்துப் போக முடிகிறது.

சிவராமன் எல்லோருக்கும் எழும் கேள்வியைத் தான் எழுப்பியிருக்கிறார். அதற்காக மேதகு என்று நக்கல் நடையில் எழுதுவது சரியா என்று எனக்கு தோன்றவில்லை..

kanagu said...

மன்னிக்கணும் அண்ணா... இரண்டு நாளுமே வர முடியவில்லை...

ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் பிரச்சனை என்றால் நமக்கு கோபம் வர தான் செய்யும்.. ஆனா கவலைப்படாதீங்க... எல்லாம் சரி ஆயிடும்...

நானும் சங்கத்துல சீக்கிரம் இணையுறேன் :) :) இது நிச்சயம் நல்ல பல விஷயங்களுக்கு பயன்பட்டு ஒரு நல்ல சக்தியாக மக்களிடத்தில் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் :)

Muthu said...

இதை எல்லாம் பேசத்தானேய்யா கூடுனீங்க..அப்புறம் என்ன அவனவன் தனிதனியா விளம்பரத்திற்கு பதிவு....

உண்மைத்தமிழன் said...

[[[ஷாகுல் said...

//ஷாகுல் பயப்படாதீங்க.. நாங்க இருக்கோம் ஜாமீன் எடுக்க//

முடிவே பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்வ்]]]

பின்ன..!?

உண்மைத்தமிழன் said...

[[[K.R.அதியமான் said...

my comment in Sivaraman's post can be reposted here too :

அடக்கடவுளே ! ‘சங்கம்’ ஆரம்பிக்ககும் முன்னாலேயே இத்தனை குழப்பங்கள் மற்றும் ‘விவாதங்களா’ ? ஞாநி தம் அனுபவங்களை பற்றி சென்னதை நியாபகப்படுத்திக்க வேண்டும் !

நண்பர்களே, freeஆ உடுங்கப்பா. இத்தனை விவாதம் செய்யும் அளவிற்க்கு பெரிய விசியம் அல்ல இதில். தொழிற் சங்கங்கள் அல்லது லயன்ஸ் கிளப் அல்லது ’முற்போக்கு’ எழுத்தாளர் சங்கம் போல நாம் உருவாக்கப்போகும் சங்கம் அல்லது குழுமம் ’செயல்’ பட போவதில்லை. சும்மா ஒரு informal forum. Unregisteredஆக கூட முதலில் துவங்கலாம். பதிவர்கள் பற்றிய ஒரு data base இருந்தாலே கூட போதும்.
ஒரு managing committee இருந்தால் கூட போதும். (அண்ணன் தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், பொன் வாசுதேவன், உண்மை தமிழன், அய்யா T.V.R, பைத்தியக்காரன் போன்ற சில முன்னோடிகள் அந்த கமிட்டியில் இருந்தால் கூட போதும்) தலைவர், செயலாளர் போன்றவர்களை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அந்த கூகுள் group இல் அனைவரும் சேர்ந்து கொண்டால் கூட ஒரு ஆரம்பம்.

Non Resident Indian போல சென்னையில் வசிகாத உறுப்பினர்கள் என்றும் ஒரு வகை உறுப்பினர்களை சேர்க்கலாம். Chennai Resident member and Non-resident member. அவரவர் விருப்பம். அலுவலகம் யாராவது ஒருவர் தம் அலுவலகத்தில் ஒரு மூலையை அளித்தால் புண்ணியமுண்டாகும். (அண்ணன் தண்டோரா பெருந்தன்மையுடன் அளிப்பார் என்று நம்புகிறேன் !! ) சந்திக்கும் இடமாக வழக்கம் போல Discovery book palace அல்லது பூங்கா அல்லது மெரினா. தேவை பட்டால் ‘நன்கொடை’ அல்லது சந்தா வாங்கி செலவுகளை பகிர்ந்துகொள்ளாம். No hard and fast rules. Just an informal forum for better co-ordination and exchange of messeges and info. உரையாடல் அமைப்பினர் வழக்கம் போல தங்கள் செய்லபாடுகளை தொடரலாம். தேவை பட்டால் சங்கத்தின் ‘உதவியை’ கேட்டு பெறலாம். அதுவும் optional தான்.

இந்த விசியம் பற்றிய அடுத்த ‘விவாத’ சந்திப்பிற்க்கு வருவாதாக இல்லை. Too much ‘talk’. ஜாலிய இருங்கப்பா. Take it easy மக்களே.]]]

அதியமான் ஸார், இவ்ளோ ஜாலியா கமெண்ட் போட்டு பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா..!

இதுக்காகவே நிறைய சங்கம் ஆரம்பிக்கலாம் போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[தீபிகா சரவணன் said...
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.]]]

அழைப்புக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாதவராஜ் said...

//எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது.//

யார் முடிவு செய்தார்கள் தம்பி?]]]

வந்தவங்கள்ல 2 பேரைத் தவிர மீதமுள்ளவர்கள் அமைப்பு துவங்க ஆதரவு கொடுத்துள்ளார்கள் அண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி said...
ஸாரிண்ணே. பல விஷயங்களில் முற்றிலும் முழுதாக வேறுபடுகிறேன். உங்கள் இடுகையில் மிக மிக சில இடங்களில் மட்டுமே ஒத்துப் போக முடிகிறது. சிவராமன் எல்லோருக்கும் எழும் கேள்வியைத்தான் எழுப்பியிருக்கிறார். அதற்காக மேதகு என்று நக்கல் நடையில் எழுதுவது சரியா என்று எனக்கு தோன்றவில்லை.]]]

அவர் இந்தப் பதிவில் எழுதியிருக்கும் பின்னூட்டத்தையும் படித்துப் பாருங்கள்..

யார் நக்கல் செய்திருக்கிறார்கள் என்பது புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

மன்னிக்கணும் அண்ணா... இரண்டு நாளுமே வர முடியவில்லை. ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் பிரச்சனை என்றால் நமக்கு கோபம் வரதான் செய்யும். ஆனா கவலைப்படாதீங்க. எல்லாம் சரி ஆயிடும். நானும் சங்கத்துல சீக்கிரம் இணையுறேன்:):) இது நிச்சயம் நல்ல பல விஷயங்களுக்கு பயன்பட்டு ஒரு நல்ல சக்தியாக மக்களிடத்தில் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்:)]]]

கண்டிப்பாக நல்ல விஷயங்களுக்காகத்தான் பயன்படப் போகிறது..! அதில் சந்தேகமில்லை கனகு..

அமைப்பில் சேர முன் வந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்..!

மரா said...

சீக்கிரமே எல்லா குழப்பங்களும் தீரும்..

உண்மைத்தமிழன் said...

[[[முத்து தமிழினி said...
இதை எல்லாம் பேசத்தானேய்யா கூடுனீங்க. அப்புறம் என்ன அவனவன் தனிதனியா விளம்பரத்திற்கு பதிவு.]]]

விளம்பரத்திற்கு இல்லீங்கண்ணே..! பரப்புரை..! விஷயம் நிறைய மக்களைச் சென்றடைய ஒரு வழி.. அம்புட்டுத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மயில்ராவணன் said...
சீக்கிரமே எல்லா குழப்பங்களும் தீரும்.]]]

வாங்கோ மயிலு..! தீர்ந்தாச்சு மயிலு..! போய்க்கிட்டிருக்கோம்..! மறக்காம வந்து சேர்ந்திருங்க..

குசும்பன் said...

//தாராளமாகக் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லத் தயாராக இருப்பார்கள்..! அப்போது அதுவெல்லாம் மினிட்ஸ் புத்தகத்தில் ஏறும்.. சாட்சியங்களாக இருக்கும்..! கவலை வேண்டாம் ராசா..!//

அண்ணே இனி நடக்கபோவதை பற்றி அப்புறம் பேசலாம், இப்ப என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு அவுங்களை கிழிச்சீங்களே அதுக்கு விளக்கம் சொல்லுங்க.

கேள்வி கேட்டாங்க கேள்வி கேட்டாங்க சண்டைகாரன் மாதிரி கேள்வி கேட்டாங்க என்று இப்படி கோவப்படுறீங்க? அண்ணே இப்ப பாருங்க பத்தாவது பசங்களுக்கு எக்ஸாமில் அவ்வளோ கேள்வி கேட்கிறார்கள்,கோவமா படுகிறார்கள்:))

Rajan said...

//பத்தாவது பசங்களுக்கு எக்ஸாமில் அவ்வளோ கேள்வி கேட்கிறார்கள்,கோவமா படுகிறார்கள்:))//

அதானே ! அதுவும் இங்குலீசுல எல்லாம் நாக்கப் புடுங்கிட்டு சாவறா மாதிரி கேட்டாங்களாம் . எதுனா இங்கிலீஸ் தெரிஞ்சவனா இருந்தா அந்தக் கேள்விக்கு தண்ணியில்லாத கெணத்துல தல கீழா குதிச்சுசெத்துருப்பான்

அகஆராய்ச்சியாளன் said...

என்னய்யா சளசளன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க.சட்டுப்புட்டுன்னு தீர்ப்ப சொல்ல விடுங்கப்பா.நாட்டாமை நீங்க சொல்லுங்க.

Thamira said...

அண்ணே,

பதிவின் பல விஷயங்கள் ஒப்புதலில்லை, ஏற்கனவே பல பின்னூட்டங்கள் அதைப்பற்றி பேசிவிட்டன. குறிப்பாக தனிநபர் தாக்குதல்கள்.

சங்கத்தின் நோக்கமாக நீங்கள் சொல்லியிருப்பது மிகுந்த சோர்வைத்தருகின்றன.

இது 'நண்பர்கள் குழுமம்' போல வேறு பெயரில் சில நண்பர்கள் இணைந்து மட்டுமே செய்யவிருக்கும் காரியங்கள் எனில் நண்பன் என்ற முறையில் கண்டிப்பாக நானும் இணைவேன்.

ஆனால் இந்த நோக்கங்களுக்காக ஒரு பதிவராக என்னால் குழுமத்தில் இணைய முடியாது. மேலும் பதிவர் என்ற முறையில் 'தமிழ் வலைப்பதிவர் குழுமம்' என்ற பெயரைப் பயன்படுத்தவும் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன்.

Rajan said...

// மேலும் பதிவர் என்ற முறையில் 'தமிழ் வலைப்பதிவர் குழுமம்' என்ற பெயரைப் பயன்படுத்தவும் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன்.//

ஏன் தலைவா ! நீங்க ஏற்க்கனவே ரெஜிஸ்டர் பண்ணிட்டீங்களா ?

அகஆராய்ச்சியாளன் said...

இன்றைய ஜூவியில் வந்துள்ள செய்தி.

"பாசிச,பிற்போக்கு,இந்துத்துவ சக்திகளால் ஆரம்பிக்கப்படவுள்ள வலைப்பதிவர் சங்கத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.உண்மை பதிவரையும்,தண்டு பதிவரையும் வினவு குழுமம் நின்னு கட்ட தயாராகவுள்ளதால் , அதிலிருந்து தப்பிக்க மேற்படி பதிவர்களால் சங்கம் அவசர கதியில் திறக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன"

அகஆராய்ச்சியாளன் said...

நின்னு இல்லை.டின்னு.

Rajan said...

//கசிகின்றன"//

சங்கத்தின் பிளம்பர் உடனடியாகச் சென்று கசியும் ஓட்டையை அடைக்கவும் !

Rajan said...

//நின்னு இல்லை.டின்னு.//

நின்னுகட்டுறது கோவணம்! டின்னு கட்டுறது தமிழ் மணம் ! அவ்வ்வ்வ் ! எப்பிடி கவிதை

கிருஷ்ண மூர்த்தி S said...

இவ்வளவையும்(பதிவு ப்ளஸ் பின்னூட்டங்கள் அத்தனையும்) படித்த பிறகு, எனக்குச் சொல்லத் தோண்டுவது இது ஒன்றுதான்!

இங்கே நீங்கள் எந்த அளவுக்குக் கொந்தளித்திருக்கிறீர்களோ அதே மாதிரி பதிவர் வெண்பூவின் இன்றைய இடுகையில், கும்மிகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. அவர் சொன்னதை ஒட்டியோ வெட்டியோ வந்ததை விட, கும்மிகள் தான் அதிகம். எம் எம் அப்துல்லா, நண்பர்களாகவே கூடி, நண்பர்களாகவே கலைவோம் என்ற தன்னுடைய மனவோட்டத்தைப் பதிந்திருப்பதைத் தவிர, பதிவின் மையக் கருத்துக்கு நேர்பதில் இல்லை.

வெண்பூ நேரடியாகவே, இந்த அமைப்பு இதைத் தொடங்குபவர்களின் சொந்த நலன்களுக்காகவே தொடங்கப் பட்டிருப்பதாகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அதுவும் தவிர, இப்படி ஒரு அமைப்புக்குத் தலைமை தாங்க எவருக்குத் தகுதி உண்டு என்ற தனது கருத்தையுமே சேர்த்து வெளியிட்டிருப்பதில், பூனை குட்டி சாக்கில் இருந்து வெளியே குதித்து ஓடுவது நன்றாகவே தெரிகிறது.

இத்தனை பிரச்சினை, கும்மிகளுக்கும் அது தான் உண்மையான காரணமாக இருக்குமோ?

முகமூடி தன்னுடைய பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல,உழைக்கும் பத்திரிகையாளர்கள், நிருபர்கள் மாதிரி வலைப் பதிவர்களை, மக்கள் பத்திரிகையாளர்களாகப் பார்க்க முடியாது. ஆகவும் முடியாது. இன்றைக்கு நான் இரண்டு பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறன், இந்த நிமிடம் கூட வேண்டாமென்றால் மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போகிற சுதந்திரம் எனக்கிருக்கிறது. ஆனால், கூலிக்கு வேலை செய்பவர்கள் நிலைமையே வேறு! அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாக சங்கம் அமைப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை....?

தனிப்பட்ட முறையில், பதிவுலகம் என்பது இந்த மாதிரியான அமைப்புக்கள், நிர்வாகம் இவைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் வரை மட்டும் தான் அதன் சுதந்திரம், சுயேட்சைத் தன்மை எல்லாம் இருக்கும், நிறுவனப் படுத்தப் பட்டால், எதற்காக நிறுவப்பட்டதோ அதற்கு எதிராகவே போகும் என்பது ஸ்தாபனங்களின் தன்மையை புரிந்து கொள்ள முடிகிற எவருமே சொல்லி விட முடியும்.

மறுபடியும், கருத்து வேறுபாடு உள்ளவர்களையும் அழைத்துப் பேசி, ஒரு தெளிவான, குறைந்தபட்ச செயல் திட்டத்தையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அமைப்பின் வடிவத்தையும் யோசித்து முடிவு செய்யுங்கள். தனிப்பட்ட ஈகோ ஒரு பொதுக் காரியத்துக்குத் தடையாக இருந்து விடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

எல் கே said...

nanbare ungalai intha sanga visayamaga todarbu kolla ninaikiren. en karuthai inge solla enaku viruppam illai. ungaluku neram irunthal karthik.lv@gmail.com mail anupungal

thanks

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//தாராளமாகக் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லத் தயாராக இருப்பார்கள்..! அப்போது அதுவெல்லாம் மினிட்ஸ் புத்தகத்தில் ஏறும்.. சாட்சியங்களாக இருக்கும்..! கவலை வேண்டாம் ராசா..!//

அண்ணே இனி நடக்கபோவதை பற்றி அப்புறம் பேசலாம், இப்ப என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு அவுங்களை கிழிச்சீங்களே அதுக்கு விளக்கம் சொல்லுங்க. கேள்வி கேட்டாங்க கேள்வி கேட்டாங்க சண்டைகாரன் மாதிரி கேள்வி கேட்டாங்க என்று இப்படி கோவப்படுறீங்க? அண்ணே இப்ப பாருங்க பத்தாவது பசங்களுக்கு எக்ஸாமில் அவ்வளோ கேள்வி கேட்கிறார்கள், கோவமா படுகிறார்கள்:))]]]

அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய பிறகு அது பற்றிய குழப்படி ஏதாவது உண்டானால் அதற்குத் தக்க பதில் அங்கேயே கிடைக்கும்..! கிடைக்காமல் போகாது..!

ஆரம்பிக்கத்தான போறோம்.. ஐடியா சொல்லுங்கன்னு கேட்கும்போதே தடங்கலை ஏற்படுத்தினால் கோபம் வராமல் என்ன செய்யும்..?

அமைப்பு தோன்றிவிட்டால் அங்கே முன்கூட்டியே எதற்காக, ஏன், எப்படி, என்னவாறு பேச வேண்டும்.. நடைபெற வேண்டும் என்பது சொல்லப்படும்..! அப்போது பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அந்தந்த பொறுப்புக்களில் இருப்பவர்களாகத்தான் பதில் சொல்வார்கள். சக நண்பர்களாக இல்லை..

ஆனால் இப்போது.. அத்தனை பேரும் உயிருக்குயிரான நண்பர்கள். இது நட்பாகவே பேசித் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினை..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//பத்தாவது பசங்களுக்கு எக்ஸாமில் அவ்வளோ கேள்வி கேட்கிறார்கள்,கோவமா படுகிறார்கள்:))//

அதானே அதுவும் இங்குலீசுல எல்லாம் நாக்கப்புடுங்கிட்டு சாவறா மாதிரி கேட்டாங்களாம். எதுனா இங்கிலீஸ் தெரிஞ்சவனா இருந்தா அந்தக் கேள்விக்கு தண்ணியில்லாத கெணத்துல தல கீழா குதிச்சு செத்துருப்பான்]]]

அப்படி கேட்டா எனக்குப் பிரச்சினையில்லை. எனக்கு சுத்தமா இங்கிலீபீஸு நஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[அகஆராய்ச்சியாளன் said...
என்னய்யா சளசளன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க. சட்டுப் புட்டுன்னு தீர்ப்ப சொல்ல விடுங்கப்பா. நாட்டாமை நீங்க சொல்லுங்க.]]]

இங்கே நாட்டாமைகள் என்ற பெயரில் யாரும் இல்லை என்பதை அன்போடும், பணிவன்போடும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆதிமூலகிருஷ்ணன் said...

அண்ணே, பதிவின் பல விஷயங்கள் ஒப்புதலில்லை, ஏற்கனவே பல பின்னூட்டங்கள் அதைப்பற்றி பேசிவிட்டன. குறிப்பாக தனி நபர் தாக்குதல்கள்.]]]

இது தாக்குதல் இல்லை.. விமர்சனங்கள்..! பேச்சு என்ற ஒன்று இருந்தால் இதுவும் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியவில்லை..!

[[[சங்கத்தின் நோக்கமாக நீங்கள் சொல்லியிருப்பது மிகுந்த சோர்வைத் தருகின்றன. இது 'நண்பர்கள் குழுமம்' போல வேறு பெயரில் சில நண்பர்கள் இணைந்து மட்டுமே செய்யவிருக்கும் காரியங்கள் எனில் நண்பன் என்ற முறையில் கண்டிப்பாக நானும் இணைவேன்.]]]

எனக்கு அதுதான் மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது..!

பரவாயில்லை. அது உனது கருத்து.. இது எனது கருத்து.. அவ்வளவுதான்..

[[[ஆனால் இந்த நோக்கங்களுக்காக ஒரு பதிவராக என்னால் குழுமத்தில் இணைய முடியாது.]]]

வேறு என்ன மாதிரி இருந்தால் இணைவீர்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொன்னால் கூடி பேசி முடிவெடுப்போம்..!

[[[மேலும் பதிவர் என்ற முறையில் 'தமிழ் வலைப்பதிவர் குழுமம்' என்ற பெயரைப் பயன்படுத்தவும் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன்.]]]

வேறென்ன பெயர் வைப்பது..? நாம் வலைப்பதிவர்கள்தானே.. தமிழில் எழுதுகிறோம்.. வேறெப்படி நம்மை அடையாளப்படுத்துவது..?

உன் கருத்தையும், ஐடியாவையும் சொன்னால் மக்கள் முன் வைத்து கருத்து கேட்டு செயலாற்றுவோம்..!

முதலில் இணைய வேண்டும் என்ற ஒருமித்தக் கருத்தோடு குழுமத்தின் செயல்பாடுகளை வகுக்கவும், அதன் நடைமுறைகளுக்கான உங்களது யோசனைகளைச் சொல்லவும் தயவு செய்து முன் வாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[அகஆராய்ச்சியாளன் said...

இன்றைய ஜூவியில் வந்துள்ள செய்தி. "பாசிச, பிற்போக்கு, இந்துத்துவ சக்திகளால் ஆரம்பிக்கப்படவுள்ள வலைப்பதிவர் சங்கத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உண்மை பதிவரையும், தண்டு பதிவரையும் வினவு குழுமம் நின்னு கட்ட தயாராகவுள்ளதால், அதிலிருந்து தப்பிக்க மேற்படி பதிவர்களால் சங்கம் அவசர கதியில் திறக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன"]]]

நாங்கள் ஒன்றும் சிவப்புச் சட்டைத் தோழர்கள் இல்லையே? பின்பு எதற்கு எங்களுக்கு டின்னு..!?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//கசிகின்றன"//

சங்கத்தின் பிளம்பர் உடனடியாகச் சென்று கசியும் ஓட்டையை அடைக்கவும் !]]]

பிளம்பர் இன்றைக்கு லீவு.. நாளைக்குத்தான் வருவார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜன் said...

//நின்னு இல்லை.டின்னு.//

நின்னு கட்டுறது கோவணம்! டின்னு கட்டுறது தமிழ்மணம் ! அவ்வ்வ்வ் ! எப்பிடி கவிதை?]]]

தமிழ்மணத்தை எதற்கு இங்கே இழுக்குறீர்கள் ராஜன்..?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...

இவ்வளவையும்(பதிவு ப்ளஸ் பின்னூட்டங்கள் அத்தனையும்) படித்த பிறகு, எனக்குச் சொல்லத் தோண்டுவது இது ஒன்றுதான்!

இங்கே நீங்கள் எந்த அளவுக்குக் கொந்தளித்திருக்கிறீர்களோ அதே மாதிரி பதிவர் வெண்பூவின் இன்றைய இடுகையில், கும்மிகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. அவர் சொன்னதை ஒட்டியோ வெட்டியோ வந்ததைவிட, கும்மிகள் தான் அதிகம். எம் எம் அப்துல்லா, நண்பர்களாகவே கூடி, நண்பர்களாகவே கலைவோம் என்ற தன்னுடைய மனவோட்டத்தைப் பதிந்திருப்பதைத் தவிர, பதிவின் மையக் கருத்துக்கு நேர் பதில் இல்லை.

வெண்பூ நேரடியாகவே, இந்த அமைப்பு இதைத் தொடங்குபவர்களின் சொந்த நலன்களுக்காகவே தொடங்கப் பட்டிருப்பதாகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அதுவும் தவிர, இப்படி ஒரு அமைப்புக்குத் தலைமை தாங்க எவருக்குத் தகுதி உண்டு என்ற தனது கருத்தையுமே சேர்த்து வெளியிட்டிருப்பதில், பூனை குட்டி சாக்கில் இருந்து வெளியே குதித்து ஓடுவது நன்றாகவே தெரிகிறது.

இத்தனை பிரச்சினை, கும்மிகளுக்கும் அதுதான் உண்மையான காரணமாக இருக்குமோ?

முகமூடி தன்னுடைய பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல, உழைக்கும் பத்திரிகையாளர்கள், நிருபர்கள் மாதிரி வலைப் பதிவர்களை, மக்கள் பத்திரிகையாளர்களாகப் பார்க்க முடியாது. ஆகவும் முடியாது. இன்றைக்கு நான் இரண்டு பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறன், இந்த நிமிடம்கூட வேண்டாமென்றால் மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போகிற சுதந்திரம் எனக்கிருக்கிறது. ஆனால், கூலிக்கு வேலை செய்பவர்கள் நிலைமையே வேறு! அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாக சங்கம் அமைப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை....?

தனிப்பட்ட முறையில், பதிவுலகம் என்பது இந்த மாதிரியான அமைப்புக்கள், நிர்வாகம் இவைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும்வரை மட்டும்தான் அதன் சுதந்திரம், சுயேட்சைத் தன்மை எல்லாம் இருக்கும், நிறுவனப்படுத்தப் பட்டால், எதற்காக நிறுவப்பட்டதோ அதற்கு எதிராகவே போகும் என்பது ஸ்தாபனங்களின் தன்மையை புரிந்து கொள்ள முடிகிற எவருமே சொல்லிவிட முடியும்.

மறுபடியும், கருத்து வேறுபாடு உள்ளவர்களையும் அழைத்துப் பேசி, ஒரு தெளிவான, குறைந்தபட்ச செயல் திட்டத்தையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அமைப்பின் வடிவத்தையும் யோசித்து முடிவு செய்யுங்கள். தனிப்பட்ட ஈகோ ஒரு பொதுக் காரியத்துக்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.]]]

தங்களுடைய கருத்துக்களும், ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

ஈகோ பார்க்காமல்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்..!

இங்கே பணம் இருக்கப் போவதில்லை என்பதால் அந்தப் பிரச்சினையும் இல்லை..!

என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்..! பதிவர்களின் கருத்துரைகள்தான் அமைப்பின் நோக்கமாக அமையும்..!

தங்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[LK said...

nanbare ungalai intha sanga visayamaga todarbu kolla ninaikiren. en karuthai inge solla enaku viruppam illai. ungaluku neram irunthal karthik.lv@gmail.com mail anupungal

thanks]]]

மெயில் அனுப்பியிருக்கிறேன்..! பாருங்கள்..!

Anonymous said...

வினவு ஒரு பதிவர் குழுமம அமைக்கப்போகிறேன் வாருங்கள் என்றால் டோண்டு ராகவன், ஆர்.வி. உணமைத்தமிழன் போக முடியுமா?
அதே வண்ணம், வினவை இவர்கள் அழைத்தால் சரியாகுமா? என்வே, உணமைத்மிழனிடம் நூற்றூக்குபேற்பட்ட விடாது துரத்துபவர்கள்
இருக்கிறார்கள். அவகளையே திரட்டி ஒரு பதிவர் குழ்மம் வைத்தால் பிரச்னைக்கு இடமேயில்லை. உ.தமிழன் யோசிக்கலாம்.

Rajan said...

//பிளம்பர் இன்றைக்கு லீவு.. நாளைக்குத்தான் வருவார்..!//

லீவு முடிஞ்சுதா தல

Sanjai Gandhi said...

//இவருக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக இவர் ஒரு அமைப்பில் உறுப்பினராகச் சேரலாமாம். ஆனால் நாம் யாராவது ஒருத்தருக்கு ஒரு நூறு ரூபாய் உதவி செய்வதற்குக்கூட அமைப்பை உருவாக்கக் கூடாதாம்.. ம்ஹும்.. தாங்க முடியவில்லை..//

அது சரி.. இதுக்கு முன்னாடி யாரும் யாருக்கும் உதவல பாருங்க.. அப்போ எல்லாம் எந்த சங்கம் மூலமா உதவினோம்.. பதிவர்களுக்கு சங்கம் என்பது வேண்டாத வேலை.. பிளவு பட்டு மேலும் பல சங்கங்கள் உருவாகி எதிரிகளை வளர்க்கத்தானுதவும்.. அதுவுமின்றி சென்னையில் இருப்பவர்கள் தான் தமிழ் பதிவுலகின் அத்தாரிட்டிகள் போல் செயல்படுவது கண்டிக்க வேண்டியது.. உங்கள் சோ கால்ட் சங்க டிஸ்கஷனுக்கு சென்னை தவிர வேறு எந்த ஊர் பதிவர்களிடம் விவாதித்தீர்கள்?. இந்த விவகாரத்தில் நான் படித்த முதல் பதிவு வெண்பூவுடையது தான்.. மனுஷன் மிக அற்புதமா எழுதி இருக்கார்.. ஊர் ஊருக்கு இருக்கும் குழுமம் என்பதைத் தாண்டி நிர்வாகிகளுடன் கூடிய சங்கம் என்பது வேஸ்ட்.. பகைவர்களை வளர்க்கத் தான் உதவும்..

Sanjai Gandhi said...

அண்ணே, அதிஷா பற்றிய வரிகளை நீக்க வேண்டியது உங்கள் கடமை. செய்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் ஒரு மோசமான நிகழ்வுக்கு முன்னாதரனமாக இருக்கக் கூடாது.

Prasanna Rajan said...

//

ஒரு அலுவலகம் அமைத்து அங்கே வலையுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நாமே சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

மாநகராட்சி பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு அமைப்பின் சார்பாக வலைப்பதிவர் பட்டறையை நடத்தலாம்.

//

வலைப்பதிவு என்பது என்னை பொறுத்த மட்டில், சொல்லிக் கொடுத்து வருவதல்ல. இப்படி எல்லாவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை மாணவர்களிடம் உருவாவதால் தான், அவன் 12ஆம் வகுப்பு முடித்த பின்னும் உலக நடப்பு அறியாதவனாகிறான்.

Anonymous said...

நல்ல ஐடியா... வலைத்தளத்தில் எழுதி மற்ற பதிவர்களிடம் நட்பை சம்பாதித்து அப்படியே கூட்டம் சேர்த்து அவர்களுக்கு டீ பிஸ்கட் வாங்கி கொடுத்து ஒரு சங்கமும் ஆரம்பித்து அதற்கு அலுவலகமும் வைத்து ரெண்டு கம்ப்யூட்டர் வாங்கி வைத்து சமூக சேவை செய்து அதை படம் பிடித்து அதையும் வலைத்தளத்தில் போட்டு அப்படியே அந்த சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலில் நின்று MLA ஆகி பிறகு மந்திரி ஆகி முதலமைச்சர் ஆக வாழ்த்துகிறேன்.

abeer ahmed said...

See who owns pendai.com or any other website:
http://whois.domaintasks.com/pendai.com

abeer ahmed said...

See who owns sakhr.com or any other website.