ICAF-மே மாதத்திய திரைப்பட விழாக்கள்

02-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் மே மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

06.05.2008 - செவ்வாய் முதல் 09.05.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Russian Film Festival நடைபெறப் போகிறது.

சென்னையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் அரங்கத்தில் இந்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

முதல் நாளான 06-05-2008-செவ்வாய்கிழமை மட்டும், மாலை 6.15 மணிக்கு படம் திரையிடப்படும். மற்ற நாட்களில் மாலை 6 மணிக்கே படம் துவங்கிவிடும்.

இத்திரைப்பட விழாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கு முன்பும், ஒரு டாக்குமெண்ட்டரி படமும் காட்டப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

06.05.08 - 6.15 pm - War is not woman(Documentary)
Destiny of a man(feature)

07.05.08 - 6.00 pm - Lesson of History(Documentary)
Not by bread alone(Feature)
White Sun of the Desert(Feature)

08.05.08 - 6.00 pm - Spring After Victory(Documentary)
The Driver for Vera(Feature)
Dejavu(Feature)

09.05.08 - 6.00 pm - Our Victories(Documentary)
They Fought for their(Feature)

12.05.2008 திங்கள்கிழமை முதல் 15.05.08 வியாழக்கிழமை வரை பிரெஞ்ச் இயக்குநர் திரு.Eric Rohmer-ன் சிறந்த படைப்புகள் என்ற வரிசையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

12.05.08 - 6.30 pm - My night at Maud's
13.05.08 - 6.30 pm - Claire's knee
14.05.08 - 6.30 pm - The Good Marriage
15.05.08 - 6.30 pm - Pauline at the beach

இத்திரைப்படங்கள் அனைத்துமே கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras அலுவலக அரங்கத்தில் திரையிடப்படும்.

19.05.08 திங்கள்கிழமை முதல் 22.05.08 வியாழக்கிழமை வரையிலும் Award Winning African Films திரையிடப்பட உள்ளன.

19.05.08 - 6.30 pm - Tilai(1990), Burkina Faso
20.05.08 - 6.30 pm - Guimba(1995), Mali
21.05.08 - Alizaoua(2000), Marocca
22.05.08 - Sarraounia(1986), Mauritanine

இத்திரைப்படங்களும் கல்லூரி சாலையில் உள்ள Alliance Francaise of Madras அலுவலக அரங்கத்தில் திரையிடப்படும்.

மேலும், 26.05.08 முதல் 29.05.08 வரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இத்திரைப்படங்கள் பற்றியத் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.

30.05.08 அன்று RED என்ற அமெரிக்கத் திரைப்படம் பிலிம் சேம்பர் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

இந்த அமைப்பில் சேருவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்கள் http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html-இந்தப் பதிவில் இருக்கின்றன.

அதில் குறிப்பிடத் தவறிய ஒரு விஷயம்..

இந்த அமைப்பினர், வருடாவருடம் ஏப்ரல் மாத முதல் தேதியிலிருந்து தங்களது உறுப்பினர்களின் கார்டை புதுப்பிப்பதால் ஆர்வமுள்ளவர்கள் இப்போதே இணைந்து கொள்வதும், புதுப்பித்துக் கொள்வதும் நல்லது.

இல்லையெனில் நீங்கள் வேறு எந்த மாதத்திலாவது சேர்ந்திருந்தாலும் மறுபடியும் அடுத்த ஏப்ரல் மாதத்தில் கண்டிப்பாக மீண்டும் கட்டணம் செலுத்த நேரிடும்.(அதாவது அடுத்தாண்டு ஜனவரி மாதம் நீங்கள் உறுப்பினராகச் சேரும்பட்சத்தில், தொடர்ந்த ஏப்ரல் மாதத்திலேயே மீண்டும் ஒரு முறை ஆண்டு கட்டணமான 500 ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும்.)

ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4 comments:

SP.VR. SUBBIAH said...

////ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.////

என்னைப்போன்ற non - chennai வாசிகளுக்கு நீங்கள் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதினால மட்டுமே விமோசனம் உண்டு; அதுவே எங்களுக்குப் பொதும்!

உண்மைத்தமிழன் said...

///SP.VR. SUBBIAH said...
//ஆர்வமுள்ளவர்கள் அமைப்பில் இணைந்து திரைப்படங்களைக் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.//
என்னைப் போன்ற non - chennaiவாசிகளுக்கு நீங்கள் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதினால் மட்டுமே விமோசனம் உண்டு; அதுவே எங்களுக்குப் போதும்!///

ஆஹா வாத்தியாரே.. எனது விமர்சனம் உங்களுக்கு விமோசனமா?

நல்லது.. தமிழ் என்னமாய் விளையாடுகிறது பாருங்கள்..

இந்த மாதம் நிச்சயம் பார்க்கின்ற அனைத்துப் படங்களையும் எழுத முயற்சிக்கிறேன்..

SP.VR. SUBBIAH said...

////ஆஹா வாத்தியாரே.. எனது விமர்சனம் உங்களுக்கு விமோசனமா?

நல்லது.. தமிழ் என்னமாய் விளையாடுகிறது பாருங்கள்..

இந்த மாதம் நிச்சயம் பார்க்கின்ற அனைத்துப் படங்களையும் எழுத முயற்சிக்கிறேன்../////

அதென்னமோ அன்பரே உங்களுக்கு எழுதும்போது
பழநியப்பன் வந்து பக்கத்தில் நின்று விடுகிறான்
அவனைக் கண்டவுடன் தமிழ் அதுவாக விளையாடுகிறது!

abeer ahmed said...

See who owns sevenforums.com or any other website:
http://whois.domaintasks.com/sevenforums.com