சென்னையில் உள்ள திரைப்பட அமைப்புகள் - ஒரு அறிமுகம்

23-02-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
திரைப்படங்கள் பற்றிய எனது பார்வை பல்நோக்கில் பரவிச் சென்றதற்குக் காரணம் நான் உற்று நோக்கிய பல வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான்..

எனக்கு மட்டுமல்ல, திரைப்பட ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் என்று பலருக்குமே வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் திரைப்படம் பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பு நோக்கில் இன்னமும் தமிழ் சினிமா உயர்வடைய தேவையிருக்கிறது என்ற உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

பல நாட்டுத் திரைப்படங்கள் மீதான ஆர்வம் சென்னை வாழ் திரைப்பட ரசிகர்களிடையே பெருமளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பதிப்பகங்களின் எண்ணிக்கைகள் கூட, கூட, புத்தகங்கள் உருவாக்குதலும், புத்தக விற்பனையும், புத்தக வாசிப்பும் கணக்கற்ற எறும்புகள் கணக்கில் தமிழ் மண்ணில் ஊர்ந்து போக ஆரம்பிக்கும் இந்த வேளையில்..

திரைப்படத் துறையும் வெகுவேகமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தனி அமைப்புகள் மூலம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னையில் Madras Film Society மற்றும் ICAF(Internatioanl Cine Appreciation Foundation) என்ற இரண்டு தனியார் அமைப்புகள் நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவைகள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 15-க்கும் குறையாத வெளிநாட்டுத் திரைப்படங்களை தனது உறுப்பினர்களுக்காகத் திரையிட்டு வருகின்றன.

தற்போதுகூட பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவை Madras Film Society-யும், ICAF அமைப்பும் இணைந்து நடத்தி வருகின்றன.


பெரும்பாலும் இவற்றின் திரைப்படங்கள் அனைத்தும் சென்னை நகரின் மத்தியப் பகுதியான ஜெமினி மேம்பாலத்தின் அருகில் அமைந்திருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில்தான்(FILM CHAMBER THEATRE) திரையிடப்படுகின்றன. இது திரைப்படம் பார்க்க வரும் ஆர்வலர்களுக்கு ஏதுவாக உள்ளது.

மேலும் தினமும் மாலை 6.15 அல்லது 6.30 மணிக்கு திரைப்படங்கள் திரையிடப்படுவதால் பல்வேறு பிரிவினருக்கும் இது வசதியாகவும் உள்ளது.

இதில் மெட்ராஸ் பிலிம் சொஸைட்டி என்பது பழம் பெருமை வாய்ந்த ஒரு அமைப்பு. சென்னையில் முதன்முதலில் துவக்கப்பட்ட பிலிம் சொஸைட்டி இதுதான்..

இதன் அலுவலக முகவரி :

36, லஸ் சர்ச் ரோடு
மைலாப்பூர்
சென்னை-600 004.
போன் : 044-24958691

இந்த அமைப்பில் தனி நபருக்கான ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.700.

கணவன்-மனைவியாக வர நினைப்பவர்களுக்கு ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.850.

இதனுடன் அனுமதிக் கட்டணமாக ரூ.100-ஐ முதன்முறையாக சேரும்போது மட்டும் செலுத்தினால் போதும்.

இது அல்லாமல் 20 வருடங்களுக்கு மொத்தமாக ரூ.6000 செலுத்தி உறுப்பினராகிக் கொள்ளலாம் என்றும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு மாதந்தோறும் 15 வெளிநாட்டுத் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.

ICAF (INTERNATIONAL CINE APPRECIATION FOUNDATION)

இதன் அலுவலக முகவரி

E-Block, 4, 2nd Floor
Gemini Parsn Apartments
Cathedral Garden Road
Chennai-600 006.
Phone : 044-65163866
Telefax : 044-28212652
Mobile : 98401-51956.
Website : chennaifilmfest.org

இந்த அமைப்பில் தனி நபருக்கான ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.500.

தம்பதிகளாக வர நினைப்பவர்களுக்கு ஆண்டு நுழைவுக் கட்டணம் ரூ.750.

இதனுடன் நுழைவுக் கட்டணமாக ரூ.50, முதல் முறையாக இணைகின்ற போது உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும்.

இந்த அமைப்பும் மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.

இந்த ICAF அமைப்பு சென்ற 5 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அமைப்புகளுமே உறுப்பினர் அட்டையின் ஒரு ஆண்டு என்பதை, ஏப்ரல் மாதம் முதல் மார்ச் வரையில் என்று நிர்ணயித்துள்ளார்கள்.

அந்த வகையில் தற்போது புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.

இவை போக NFDC என்கிற தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஒரு பகுதி அமைப்பான NFC(National Film Circle) என்கின்ற அமைப்பும் தேசிய விருதுகள் பெற்ற பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்கள் மற்றும் புகழ் பெற்ற இந்தியத் திரைப்படங்களை மாதந்தோறும் திரையிட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகள் தோறும் இந்தத் திரைப்படங்களும் அதே Film Chamber Theatre-ல்தான் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பில் சேர்வதற்கான ஆண்டு நுழைவுக் கட்டணம் ஒரு தனி நபருக்கு ரூ.400.

மேலும் இந்த அமைப்பில் தமிழ்த் திரைப்படத் துறையில் உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு ரூ.200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள திரைப்பட ரசிகர் பெருமக்கள் இந்த அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது வலையுலக மக்களுக்காக எனக்குப் பிடிக்காத முறையில்(வேறு வழி) சின்னதான இப்பதிவு.

படித்தமைக்கு நன்றிகள்..

14 comments:

மணியன் said...

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன்.
உங்க பதிவை சொன்னேன்.

முரளிகண்ணன் said...

very informative post. Thankyou.
ANJATHEY review also very nice

உண்மைத்தமிழன் said...

//மணியன் said...
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.//

நன்றி மணியன்.. மும்பை எப்படியிருக்கிறது..?

வந்தாரை வாழ வைக்கிறதா..?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு உதவக் கூடிய நல்ல பதிவு. நன்றி.

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,

//ICAF (INTERNATIONAL CINE APPRECIATION FORUM)//

இந்த அமைப்பு பற்றி முன்னர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி வந்தது , அப்போது முகவரி சொன்னார்கள், சரியாக்கவனிக்காம விட்டுடேன், முகவரியை இணையத்தில் தேடனும் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வேன் , நீங்கப்பதிவா போட்டு வேலையை சுலபமாக ஆக்கிட்டிங்க!
நல்லப்படங்களை பார்க்க இது போன்ற அமைப்புகள் மூலம் தான் முடியும், எதாவது ஒரு அமைப்புலவாது சேர்ந்து வைக்கணும் என்று இருக்கேன், பார்ப்போம்.

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன். உங்க பதிவை சொன்னேன்.//

வாங்க வடுவூரார் அவர்களே.. நானும் உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. உங்க வீட்டுக்கும் வந்து நாளாகுது.. வந்ததுக்கு மிக்க நன்றிங்கோ..

உண்மைத்தமிழன் said...

//முரளி கண்ணன் said...
very informative post. Thankyou. ANJATHEY review also very nice.//

வாங்க முரளி.. தங்களின் முதல் வருகைக்கு எனது நன்றி..

அதென்ன ஒரே ஒரு பதிவு போட்டுட்டு அப்படியே நின்னுட்டீங்க.. ஆனா நிறைய இடத்துல உங்களோட கமெண்ட்ஸ் பார்த்தனே..?

கமெண்ட்ஸ்க்கு எடுக்குற நேரத்துல ஒரு பதிவைப் போட்டிரலாம் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்ல திரைப்படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு உதவக் கூடிய நல்ல பதிவு. நன்றி.//

நன்றி சுந்தர் ஸார்..

நானும் இந்த அமைப்பின் மூலம்தான் உலகப் புகழ் பெற்றத் திரைப்படங்களை பார்க்கத் துவங்கினேன்.. இன்றுவரை தொடர்கிறது.

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர்,
//ICAF (INTERNATIONAL CINE APPRECIATION FORUM)//
இந்த அமைப்பு பற்றி முன்னர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி வந்தது , அப்போது முகவரி சொன்னார்கள், சரியாக் கவனிக்காம விட்டுடேன், முகவரியை இணையத்தில் தேடனும் என்று அவ்வப்போது நினைத்துக ்கொள்வேன் , நீங்கப்பதிவா போட்டு வேலையை சுலபமாக ஆக்கிட்டிங்க!
நல்லப ்படங்களை பார்க்க இது போன்ற அமைப்புகள் மூலம தான் முடியும், எதாவது ஒரு அமைப்புலவாது சேர்ந்து வைக்கணும் என்று இருக்கேன், பார்ப்போம்.//

வவ்ஸ்.. இந்த அமைப்பு பற்றி ஜெயா டிவியில் 1 மணி நேர நிகழ்ச்சி வந்தது.. ஜெயா டிவி என்றவுடன் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

சரி.. பரவாயில்லை.. இப்போதாவது சேர்ந்து பயன் பெறுங்கள்.

அப்படியாவது உங்களது முகத்தைப் பார்க்கலாம். பேசலாம் என்றொரு ஆசை எனக்குண்டு..

எப்போது வருகிறீர்கள்?

Anonymous said...

small correction : ICAF explanation is "INTERNATIOAL CINE APPRECIATION FOUNDATION" (NOT : FORUM)

உண்மைத்தமிழன் said...

திருத்திவிட்டேன் அனானியே.. நன்றி.. நன்றி.. நன்றி..

ஆதவன் said...

thamizhstudio.com also conducting film screening on every month.. from march we also plan to screen world cinema.. but our focus is on short films..

thanks,
thamizhstudio.com

abeer ahmed said...

See who owns jungletorch.com or any other website:
http://whois.domaintasks.com/jungletorch.com