ஜெயலலிதாவின் பைத்தியக்காரத்தனம்..!

02-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னதான் வேணுமாம் இந்த ஆத்தாவுக்கு..? வராது வந்த மாமணியாய் இந்தம்மாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்ததே பெரிய விஷயம். இதை வைத்து மக்கள் மனதில் நல்ல பெயர் எடுத்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் கெடுதல் வராமல் பார்த்துக் கொள்வார் என்றால் அப்படியே உல்டா அடிக்கிறார்..!


180 கோடி செலவில் கட்டியிருக்கும் ஒரு கட்டிடம்.. அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனையாக மாற்ற வேண்டும்..? உண்மையிலேயே மருத்துவமனை அவசியமெனில் தனியிடத்தில் கட்டிக் கொள்ளலாமா..? இத்தனை முன்னேற்பாட்டுடனான வசதி, வாய்ப்புகளுடன் நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு செய்திருக்கும் ஏற்பாட்டை சீர்குலைத்து கலைத்துப் போட இவருக்கு எப்படி யோசனை வருகிறது..? ஒருவேளை ஆத்தா லூஸாயிருச்சோ..?

ஒரு மருத்துவனையின் உள் கட்டமைப்பு எப்படியிருக்க வேண்டும் என்று கூட தெரியாதவரா இந்தம்மா..! இந்தக் கட்டிடத்தின் அமைப்பு எப்படிப்பட்டது.. இது மருத்துமனைக்கு ஒத்து வருமா..? குறைந்த செலவில் அமைக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா..? லட்சங்களில் இருக்கும் புத்தகங்களை வேறிடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கவே பல நாட்களாகும்.. அதுவரையில் நூலகத்தைப் பயன்படுத்தும் உரிமையை மக்களிடமிருந்தும் பிரித்தெடுக்கிறார். கொண்டு போகும் நூல்களின் கதி என்ன என்பதை இப்போதே நம்மால் உணர முடிகிறதே..! என்ன செய்வது..? படித்தால் மட்டும் போதாது.. பண்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என்பது இந்தம்மாவுக்குத் தெரியவில்லையே..!

கருணாநிதி கட்டினார் என்று பார்த்து, பார்த்து அத்தனையையும் சீர்குலைக்கத் துவங்கும் இந்தக் கேலிக்கூத்தான மனநிலை கொண்டவர்தான் நமது முதலமைச்சர் என்பதை நினைத்தாலே எனக்குப் புல்லரிக்கிறது. இப்படிப்பட்ட முதலமைச்சரை பெறுவதற்கு நாம் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்..!

ஊழல், அராஜகம் என்று சொல்லித்தான் சென்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் மக்கள். இப்போது இதே வழியில் ஆத்தாவும் அடிபோடுகிறார். கருணாநிதி மீதான அவரது கண்மூடித்தனமான வெறுப்புக்கு பாழாவது நமது மக்கள் பணம்தானே..? புதிய தலைமைச் செயலகத்தை இதேபோல பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, அதனை மருத்துவக் கல்லூரியாக்கப் போகிறேன் என்றார். இப்போது இந்தப் புகழ் பெற்ற நூலகத்தை இடம் மாற்றி இதையும் மருத்துவமனையாக்கப் போகிறேன் என்கிறார். இவ்வளவு ரோஷம் பார்ப்பவர்.. ஏன் கருணாநிதி கட்டிய பாலங்களில் பவனி வருகிறாராம்..? ஏன் தமிழ்நாடு முழுவதும் உள்ள கே.கே.நகர்களை முடிந்தால் நீக்கச் சொல்லுங்களேன்..! முடியுமா இவரால்..?

ஏதோ இவருடைய அப்பன், பாட்டன் வீட்டுச் சொத்து என்பதை போலவும், இவர் நினைத்ததையெல்லாம் செய்வதற்காகத்தான் இவரை மக்கள் முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது போலவுமான இவரது நம்பிக்கையை அடுத்த்த் தேர்தலில்தான் முறியடிக்க முடியும். அதுவரையிலான இவரது கோமாளித்தனங்களை எப்படி தாங்கிக் கொள்வது..? முகமது பின் துக்ளக்கின் வாரிசாக முதல் நபராக வரிசையில் நிற்கும் மாயாவதியுடன் போட்டியிட்டே தீருவது என்று கொள்கையில் இருக்கிறார்போலும்..!

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட பல குடியிருப்புகள் இன்றைக்கோ, நாளைக்கோ என்று இடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் அதனைக் காலி செய்ய விரும்பாமல் அதில்தான் ஓட்டை, ஒடிசலுடன் குடியிருந்து வருகிறார்கள். இதனைச் சரிப்படுத்த கிஞ்சித்தும் முயலவில்லை. சென்னையில் இருக்கும் குழந்தைகளுக்கான தனி சிறப்பு மருத்துவனை போல் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், ச்ட்டமன்றத் தொகுதிகளிலும் மருத்துவமனைகளைத் துவக்கலாம்.. இதனையெல்லாம் செய்ய மனமில்லை..! அதையெல்லாம் விட்டுவிட்டு, கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனைல வை என்று சொல்வதைப் போல ஜெயலலிதாவின் இந்த அராஜக அரசாணை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

நூலகங்களுக்கு அதிகம் பேர் போகவில்லை. வரவில்லை என்பதெல்லாம் ஒரு பேச்சே இல்லை..! சென்னையில் இருக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் வருடத்திற்கொரு முறை இந்த நூலகத்திற்கு அழைத்து வந்து காண்பித்து அவர்களிடத்தில் நூல்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்குப் பிடித்தமானவகையில் நிகழ்ச்சிகளை நடத்தி நூலக வாசகராக்கும் பணியினை பள்ளிக் கல்வித் துறை செய்யலாமே..?

ஒரு மாணவன் வந்து பார்த்துவிட்டு அதனை வீட்டில் இருப்போரிடம் சொல்லி அது 4 பேரிடம் பரவி, கூடுதலாக வாசகர்கள் வரத் துவங்குவார்களே.. இவ்வளவு விசாலமான இடமும், நூலகத்திற்கான வசதியையும் இனிமேல் எத்தனை கோடி செலவழித்து கட்டித் தருமாம் இந்த அம்மையார்..? அது யார் வீட்டுக் காசு..? இருக்கிற கட்டிடத்தை ஒழித்துவிட்டு, அரசு கஜானாவைச் சுரண்டியெடுக்கும் இந்தப் பிச்சைக்கார புத்தி இந்த அரசியல்வியாதிகளுக்கு அதிகமாகவே போய்க் கொண்டிருக்கிறது..! 

அகம்பாவம்.. எல்லாவற்றுக்கும் காரணம் இதுதான்.. அதிலும் ஜெயலலிதாவின் அகம்பாவம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே வேறு யாருக்கும் இருக்காது..! நீ என்னதான் கரடியா கத்தினாலும் நான் பாட்டுக்கு கண்டுக்காமல் எருமை மாடு மீது மழை பேய்ஞ்சது போல போகத்தான் செய்வேன் என்பதுதான் இந்தம்மாவின் ஒற்றை வரி அஜெண்டா..! தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.. அதற்குள் அப்பாவிகளும், நாடும் சிதைந்துவிடுமே..? முருகா..! கொஞ்சம் சீக்கிரமாகவே தண்டித்துவிடக் கூடாதா..? 

இந்தம்மா கண்டிப்பாக “உள்ளே” இருக்க வேண்டியவர். இந்திய அரசியமைப்பின் கேலிக் கூத்தான சட்டங்களினால் முதலமைச்சராகவே பவனி வந்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை..!

ஐயா.. பெங்களூரு ஊழல் சிறப்பு கோர்ட் நீதிபதி அவர்களே.. உங்களைக் கை எடுத்துக் கும்பிடுறேன். காலைப் பிடிச்சுக் கெஞ்சுறேன்.. சீக்கிரமா, அட்லீஸ்ட் 10 வருஷமாவது இந்த ஆத்தாவை உள்ளாற வைச்சிருங்க துரை அவர்களே.. இந்தியாவே உங்களுக்கு நன்றிக் கடன் படும்..! 

90 comments:

பழமைபேசி said...

கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??

Suresh Perumal said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

***என்னதான் வேணுமாம் இந்த ஆத்தாவுக்கு..? ***

That sounds like me! LOL

***பழமைபேசி said...

கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??***

அண்ணே நடராசன் வந்து விளக்கம் கொடுப்பாரு. :-)))

உடன்பிறப்பு said...

தொப்பி...தொப்பி...(தமிழக மக்களுக்கு)

ஊர்சுற்றி said...

எங்கள் ஊரிலிருந்து வந்த உறவுக்கார சிறுவர்கள்(பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள்), ''அண்ணா நூலகம் போகணும், செம்மொழிப்பூங்கா போகணும்னு'' அடம் பிடிச்சு வந்தாங்க! அவங்க சுத்திப்பார்த்து வியந்துபோனது இந்த இரண்டு இடமும்!

எல்லா படிக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த இடமாக நிச்சயம் இது இருக்கிறது! ஆனா, ஆத்தாவுக்கு என்னமோ ஆகிடுச்சு! ஒருவேளை, எல்லோரும் அம்மா புகழ் பாடத் தொடங்கியிருப்பது அவங்களுக்கே புடிக்கலியோ?!!!

ஊர்சுற்றி said...

அடுத்ததா, செம்மொழிப்பூங்காவ - சென்னையோட மின்பற்றாக்குறையைப் போக்க, மின்சாரம் தயாரிக்கும் இடமா மாத்துவாங்களோ?!!!!

#சரியாகக் கணிக்கும் அரசியல் ஜோதிடர்களுக்கு அம்மா கையால் ஒரு லட்சம் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்!!! :)

முனிசாமி. மு said...

அகம்பாவம்.. எல்லாவற்றுக்கும் காரணம் இதுதான்.. அதிலும் ஜெயலலிதாவின் அகம்பாவம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே வேறு யாருக்கும் இருக்காது..! நீ என்னதான் கரடியா கத்தினாலும் நான் பாட்டுக்கு கண்டுக்காமல் எருமை மாடு மீது மழை பேய்ஞ்சது போல போகத்தான் செய்வேன் என்பதுதான் இந்தம்மாவின் ஒற்றை வரி அஜெண்டா..!

Read more: http://truetamilans.blogspot.com/2011/11/blog-post.html#ixzz1cZmyhXcR

Suresh Perumal said...

Annae Neenga Ennoda commen'ta Neekalaam..Aaana Unga veetukku Auto varamaa Paathukonga..Neenga kooda Andha pombalaya Loosu'nnu eluthi irukeengaa...

Thiagarajan.S PMP said...

Nice post

புகல் said...

என்ன சொல்லுறதுனு தெரியல
இந்த மனநிலை பாதித்த அம்மையாருக்கு மருத்துவம் தேவைதான் அதற்காக இருக்க எல்லாத்தை இடிச்சட்டு மருத்துவமை கட்டுவேன் என்றால் என்ன சொல்லுவது
சுத்தியிருக்க சில பார்ப்பன கூட்டங்கள் இந்த அம்மையாரை வைத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

ஏன் அம்மையார் கோயில்களை இடித்து மருத்துவமனை கட்ட வேண்டியதானே
இது மட்டும் பார்ப்பனர்களுக்கு வேப்பங்காய் கடித்த மாதிரியிருக்கும்

அம்மையாரின் கூத்து எங்கபோய் முடிய போகிறதோ
ஆனால் திண்ணமாக நூலகத்தை இடிப்பதை தடுக்க வேண்டும் ,
ஒர் உயிரை காபாற்ற இன்னொறு உயிரை பலியிடுவது நன்றன்று
மருத்துவமனைக்கு வேறு சிறந்த இடம் தேர்வு செய்வதே சிறந்தது

சூனிய விகடன் said...

புகல் அண்ணன் ஒரு பகுத்தறிவுச்சிந்தனையாளர் என்று நினைக்கிறேன். பாப்பானைத் திட்டினாத்தானே பகுத்தறிவே......... அதுக்கு மேல கோயிலை இடிக்கிரதுன்னு அரம்பிச்சிட்டாலே அவன் ஒரு உன்னத பகுத்தறிவுத்தமிழன் என்று ஊர் போற்றும்....... முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் முடிவை விமரிசிப்பதற்கும் கும்பிடும் கோயிலை இடி என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம் ?... இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களெல்லாம் போன ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் அரசு செலவில் கட்டியதா....?....அப்படியே இருந்தாலும் உங்கள் உன்னத பகுத்தறிவு அவர் போன ஐந்து வருடங்களில் ஏதாவது சர்ச், மசூதிகள் கட்டினாரா என்று ஆராயவில்லையா....?

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??]]]

இது எமது மக்களுக்கு வாடிக்கை.. பட்டாலும், திருப்பித் திருப்பி அவர்களிடமே அடி வாங்குவது என்பது எமது தலைவிதி..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***என்னதான் வேணுமாம் இந்த ஆத்தாவுக்கு..? ***

That sounds like me! LOL..

***பழமைபேசி said...

கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??***

அண்ணே நடராசன் வந்து விளக்கம் கொடுப்பாரு. :-)))]]]

எந்த நடராசன் அண்ணே..?

உண்மைத்தமிழன் said...

[[[உடன்பிறப்பு said...

தொப்பி. தொப்பி.(தமிழக மக்களுக்கு)]]]

முக்காடுதான் தேவை.. தொப்பி தேவையில்லை..!

kasupanamthutu said...

உண்மையில் நூலகத்திற்கு வரும் பாதிபேர் சுகமான பேன் காற்றில் தூங்கியதைத்தான் பார்க்க முடிகிறது. நூலகம் மாற்றம் விஷயம் என்னவோ கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் இந்த நூலகத்தை தமிழர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை.

உண்மைத்தமிழன் said...

[[[ஊர்சுற்றி said...

எங்கள் ஊரிலிருந்து வந்த உறவுக்கார சிறுவர்கள்(பள்ளிக்கூடத்தில் படிப்பவர்கள்), ''அண்ணா நூலகம் போகணும், செம்மொழிப்பூங்கா போகணும்னு'' அடம் பிடிச்சு வந்தாங்க! அவங்க சுத்திப் பார்த்து வியந்துபோனது இந்த இரண்டு இடமும்! எல்லா படிக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த இடமாக நிச்சயம் இது இருக்கிறது! ஆனா, ஆத்தாவுக்கு என்னமோ ஆகிடுச்சு! ஒருவேளை, எல்லோரும் அம்மா புகழ் பாடத் தொடங்கியிருப்பது அவங்களுக்கே புடிக்கலியோ?!!!]]]

தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக்குறாங்க.. இறந்த பின்பும் பேர் கிடைத்திருப்பது மக்களுக்காக உழைத்தவர்களுக்குத்தான்.. தனக்காகவும், தன் குடும்பத்துக்காக உழைத்தவர்களுக்கும் அல்ல என்பதை இவரிடம் யார் போய்ச் சொல்வது..?

உண்மைத்தமிழன் said...

[[[ஊர்சுற்றி said...

அடுத்ததா, செம்மொழிப் பூங்காவ - சென்னையோட மின்பற்றாக் குறையைப் போக்க, மின்சாரம் தயாரிக்கும் இடமா மாத்துவாங்களோ?!!!! #சரியாகக் கணிக்கும் அரசியல் ஜோதிடர்களுக்கு அம்மா கையால் ஒரு லட்சம் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்!!! :)]]]

அதற்கான முன்னோட்டம்தான் இது. இதன் ரியாக்ஷன் எப்படியிருக்குன்னு பார்த்துட்டுதான் அதுல கை வைக்கப் போறாங்க..!

உண்மைத்தமிழன் said...

முனுசாமி ஸார்..

வருகைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Suresh Perumal said...

Annae Neenga Ennoda commen'ta Neekalaam.. Aaana Unga veetukku Auto varamaa Paathukonga.. Neenga kooda Andha pombalaya Loosu'nnu eluthi irukeengaa...]]]

வேறு சில வார்த்தைகள் கடுமையாக உள்ளன நண்பரே. அதனால்தான் நீக்கினேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thiagarajan.S PMP said...

Nice post..]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[புகல் said...

என்ன சொல்லுறதுனு தெரியல.
இந்த மனநிலை பாதித்த அம்மையாருக்கு மருத்துவம் தேவைதான். அதற்காக இருக்க எல்லாத்தை இடிச்சட்டு மருத்துவமை கட்டுவேன் என்றால் என்ன சொல்லுவது?]]]


இதுவரைக்கும் ஓகே.. இதுக்கு மேல இதெல்லாம் எதுக்காம்..?

[[[சுத்தியிருக்க சில பார்ப்பன கூட்டங்கள் இந்த அம்மையாரை வைத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்கிறார்கள்.
ஏன் அம்மையார் கோயில்களை இடித்து மருத்துவமனை கட்ட வேண்டியதானே.. இது மட்டும் பார்ப்பனர்களுக்கு வேப்பங்காய் கடித்த மாதிரியிருக்கும். அம்மையாரின் கூத்து எங்கபோய் முடிய போகிறதோ
ஆனால் திண்ணமாக நூலகத்தை இடிப்பதை தடுக்க வேண்டும்,
ஒர் உயிரை காபாற்ற இன்னொறு உயிரை பலியிடுவது நன்றன்று
மருத்துவமனைக்கு வேறு சிறந்த இடம் தேர்வு செய்வதே சிறந்தது.]]]

இதில் ஏன் பார்ப்பனர்களைத் திணிக்கிறீர்கள் புகல்..? கோவில்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

புகல் அண்ணன் ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளர் என்று நினைக்கிறேன். பாப்பானைத் திட்டினாத்தானே பகுத்தறிவே. அதுக்கு மேல கோயிலை இடிக்கிரதுன்னு அரம்பிச்சிட்டாலே அவன் ஒரு உன்னத பகுத்தறிவுத் தமிழன் என்று ஊர் போற்றும். முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் முடிவை விமரிசிப்பதற்கும் கும்பிடும் கோயிலை இடி என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களெல்லாம் போன ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் அரசு செலவில் கட்டியதா? அப்படியே இருந்தாலும் உங்கள் உன்னத பகுத்தறிவு அவர் போன ஐந்து வருடங்களில் ஏதாவது சர்ச், மசூதிகள் கட்டினாரா என்று ஆராயவில்லையா?]]]

-))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[sivalingamtamilsource said...

உண்மையில் நூலகத்திற்கு வரும் பாதி பேர் சுகமான பேன் காற்றில் தூங்கியதைத்தான் பார்க்க முடிகிறது. நூலகம் மாற்றம் விஷயம் என்னவோ கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் இந்த நூலகத்தை தமிழர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை.]]]

பொதுவாகவே நூலகங்களுக்கு நமது மக்கள் செல்வதே குறைவுதான்.. வாசகப் பழக்கம் உள்ளவர்களும், பொழுது போகாதவர்களும் மட்டுமே அந்தப் பக்கம் சென்று கொண்டிருப்பார்கள்..

ஆனால் இந்த நூலகத்தை வரும் காலத்தில் மாணவர்கள் அதிகம் பேர் பயன்படுத்தும் சூழல் வரும்.. அதற்கான வழிகளைத்தான் இந்த அரசு ஆராய வேண்டும்..!

Indian said...

1. இந்த நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் வழக்குத் தொடுப்பாரா?

2. //கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??//

ஜெ நல்லவருன்னு யாரும் மதி மயக்கத்தில இல்லைங்க. ஆனா, இவனுக்கு அவன் பரவாயில்ல அப்படிங்கற நிலமைக்கு தமிழக மக்களைத் தள்ளியது யாருங்க?

Need less to say, மக்களின் வாக்கு relatively குறைவாக (in perception) தப்பு செய்தோருக்கு.

அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வருவது ஜெ கையில்தான் உள்ளது.

கிருஷ்ண மூர்த்தி S said...

இருக்கும் நூலகங்களை ஒட்டடை படிய சீரழிய விட்டு விட்டு நூற்றெண்பது கோடி ரூபாய் செலவில் புது நூலகம் காட்டியது பைத்தியக்காரத் தனமாகத் தெரியவில்லையோ? அரசியல்வாதிகள், அது எவராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், உருப்படியாக வரிப்பணத்தைப் பயன்படச் செய்திருக்கிறார்களா? உதாரணம், மாயாவதியின் சிலைகள், பூங்காக்கள்!

ஆத்தா மீது கோபம் இருப்பதற்காக இப்படி சாமியாட வேண்டுமா என்ன! சாமியாடுவது கூட ஒரு வகையில் பைத்தியக்காரத்தனம் தான்!

சிவானந்தம் said...

நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க என்ற வகையில் இருக்கிறது இந்த பதிவு. குறைவாக எழுதினாலும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடிதான். என்னுடைய விருப்பமும் இந்த பதிவின் கடைசி வரிகள் நிஜமாக வேண்டும் என்பதுதான்.

தலைகால் தெரியாமல் ஆடிய ஒருவரை மக்கள் ஒதுக்கி வைத்தார்கள். இந்த முறை அந்த புண்ணியத்தை நீதிமன்றங்கள் தேடிக்கொள்ளட்டும்.

lokesh said...

its totally a bullshit!!!! its known thing when you tamil ppl make one dictator as your leader!! wake up ppl

snkm said...

நாம் இப்போதைய ஜெயலலிதாவின் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதுமே மக்களுக்கு நன்மை செய்வது தான் ஆட்சியாளர்களுக்கு அழகும் சரியான செயலும் ஆகும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு விஷயம் நீங்கள் கருணாநிதி இந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதாவினால் அடிக்கல் நாட்டப் பட்ட தலைமைச் செயலக இடத்திலேயே தான் கட்ட நினைத்த தலைமைச் செயலகத்தை கட்டி இருக்கலாமே என்று ஒரு கட்டுரையிலாவது குறிப்பிட்டு இருக்கிறீர்களா?.
கருணாநிதி எது செய்தாலும் தவறு என்றோ ஜெயலலிதா எது செய்தாலும் அதில் அவரின் அகம்பாவம் மட்டும் இருக்கிறது என்றோ நினைப்பது தவறு இல்லையா?.
ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தங்களின் முக்கியமான கருத்து மாணவர்களை இந்த நூலகத்திற்கு அழைத்து வந்து பிரபலப் படுத்துவது, சரியான ஒன்று தான்.
நன்றி. வாழ்க பாரதம்.

snkm said...

நாம் இப்போதைய ஜெயலலிதாவின் செயலை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதுமே மக்களுக்கு நன்மை செய்வது தான் ஆட்சியாளர்களுக்கு அழகும் சரியான செயலும் ஆகும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு விஷயம் நீங்கள் கருணாநிதி இந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதாவினால் அடிக்கல் நாட்டப் பட்ட தலைமைச் செயலக இடத்திலேயே தான் கட்ட நினைத்த தலைமைச் செயலகத்தை கட்டி இருக்கலாமே என்று ஒரு கட்டுரையிலாவது குறிப்பிட்டு இருக்கிறீர்களா?.
கருணாநிதி எது செய்தாலும் தவறு என்றோ ஜெயலலிதா எது செய்தாலும் அதில் அவரின் அகம்பாவம் மட்டும் இருக்கிறது என்றோ நினைப்பது தவறு இல்லையா?.
ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தங்களின் முக்கியமான கருத்து மாணவர்களை இந்த நூலகத்திற்கு அழைத்து வந்து பிரபலப் படுத்துவது, சரியான ஒன்று தான்.
நன்றி. வாழ்க பாரதம்.

Unknown said...

தமிழரே வணக்கம்,

நேற்று இரவு வெகு சீக்கிரமாகவே நானும் இதே விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஏறக்குறைய நீங்கள் எழுதிய கருத்துக்களின் அடிப்படியிலேயே என்னுடைய பதிவும் இருக்கிறது. சில விஷயங்களை பெரும்பான்மையானவர்களைத் தாண்டி நாமும் ஒரே மாதிரி கருத்தை வைக்கிற போது அதிலுள்ள உண்மைகளை வாசிப்பாளர்கள் உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.
மற்றபடி, வழக்கத்திற்கு மாறாக, சிறிய கட்டுரை உங்கள் கட்டுரை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் நறுக்.
வாழ்த்துக்கள்.

உண்மையா பொய்யா?

ஓசூர் ராஜன் said...

இப்படியே ஏடாகூடமாய் பண்ணி மறுபடியும் தி.மு.க.தான் நம்மை காப்பதும் போலன்னு சொல்லவட்சுடுவாங்க! மனுதர்மத்தை மதிப்பவர்களுக்கு மற்றவர்கள் அறிவுபெருவது இடஞ்சலைதான் தருவதாக நினைப்பார்கள்! டாஸ்மாக் விறபனையை, தமிழர்களின் நலன் கருதி அதிகரிக்கப் போறாங்கலாம்,தெரியுமா?

அ. வேல்முருகன் said...

நல்ல கேள்வி
பதில்தான் கிடைக்காது அம்மா ஆட்சியில், நீங்கள் சொன்ன மாதிரி 5 ஆண்டு காத்திருக்க வேண்டும்.

நிவாஸ் said...

இதுபோன்ற விடயங்கள் தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல, சகித்துக் கொள்வார்கள், நூலகமும் முக்கியம், மருத்துவமனையும் முக்கியம், இதை எடுத்துவிட்டு இதைத்தான் வைக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்

இங்கு முட்டாள் முதலமைச்சரா, இல்லை மக்களா? இருக்கும் நூலகம் அனைத்தையும் மூடிவிடுங்கள், சமச்சீ ர் கல்வியையும் எடுத்துவிடுங்கள். மக்கள் நன்றாக சிந்திப்பார்கள். நீங்கள் ஆண்டுகொண்டே இருக்கணும், அறிவில்லாதவன் அறிவில்லாதவனாவே இருக்கணும்.

மிக நல்ல பதிவு

Prakash said...

Good Comment in a News Site :

முதல்வர் மம்மியின் இந்த நடவடிக்கைகளால் திமுக தன் ஆட்சி காலத்தில் தான் செய்த சாதனை திட்டங்களுக்கு மட்டுமல்ல, மம்மியின் ஆட்சியில் வரவிருக்கும் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, உயர் குழந்தைகள் மருத்துவமனை போன்று எல்லா நல திட்டங்களுக்கும் திமுகவே அடித்தளமாக திகழ போகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் எந்த நலத்திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டின் அடையாளமாக எந்த கட்டிடம் திகழ்ந்தாலும் அது திமுகவினால் தான் இருக்கும் என்ற கருத்து மேலும் வலுப்படும். இது முதல்வர் மம்மி தன் காழ்ப்புணர்ச்சியால் தனக்கு தானே வெட்டி கொள்ளும் குழி!

தன் மன்னார்குடி மாபியாவின் மூலம் ஏழை பாழைகளுக்கு இலவசமா கொடுத்த நிலங்களை கூட அடித்து பிடுங்கி சொகுசு பங்களா கட்டி கொள்வது முதல் சுடுகாட்டு கொட்டகை ஊழல் வரை மக்களை கொள்ளையடித்தே பழக்க பட்ட எங்க முதல்வர் மம்மிக்கும், திமுகவின் ஆட்சியில் செய்ய பட்ட எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை பார்த்தப் பின் மனந்திருந்தி தானும் அது போல் நல்லவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் திமுகவை போல் பிரமாண்ட மக்கள் நல திட்டங்களை தரமான வகையில் சுயமாக செய்ய தனக்கு வக்கில்லை, திராணியில்லை.. தாம் ஒரு கையாலாகாதவள் என்பதை எங்க முதல்வர் மம்மி நல்லா உணர்ந்து வச்சிருக்காங்க. இது போன்ற உலகத் தரமான கட்டிடங்களை தன் ஆட்சியில் கட்டவே முடியாது என்பதை மம்மி நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க. அதனால் தான் எந்த திட்டத்தையும் தனியாக துவங்காமல் ஏற்கனவே செய்யப்பட்ட திட்டங்களை மாற்றியமைத்து செய்துகிட்டு வர்றாங்க. இதை தான் "காண மயிலாடக் கண்டிருந்த வான்கோழி....!" என்று சொல்றாங்க.

Sivakumar said...

/அட்லீஸ்ட் 10 வருஷமாவது இந்த ஆத்தாவை உள்ளாற வைச்சிருங்க துரை அவர்களே//

அடுத்து யாரு முதல்வர் எடத்துக்கு வரணும்னு கேட்டா மட்டும் பதில் சொல்லத்தெரியாமல் முழிக்கும் கோடான கோடா உண்மைத்தமிழர்கள் இருக்கையில் என்ன செய்து என்ன பயன்? அடுத்து வருபவர் இவர் சொல் கேட்டுத்தான் ஆட்சி செய்யப்போகிறார். அங்கே மன்மோகன் செய்வதைப்போல. கோவப்பட்டாலும் அதுல லாஜிக் வேணும் சார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தலைப்பை மாற்றவும். " ஜெயலலிதாவுக்குப் பைத்தியம்" .

settaikkaran said...

தலைப்போடு முழுமையாக ஒத்துப்போகிறேன்!

சீனு said...

உத வீட்டுக்கு ஒரு ஷேர் ஆட்டோ பார்சல்... ;)

ராஜ நடராஜன் said...

//கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??***

அண்ணே நடராசன் வந்து விளக்கம் கொடுப்பாரு. :-)))//

வருண்!வந்துட்டோமில்ல:)Netflix பார்த்துட்டிருந்தவனை உசுப்பி விட்டிட்டீங்களே!பழமைண்ணே!இன்னும் கண் கெட்டுப்போகக்கூடாதுன்னுதான் கதிரவனுக்கு வணக்கமே சொல்லல தமிழகம்:)உ.த.அண்ணே!ஆத்தாவுக்கும்,தாத்தாவுக்கும் டாட்டா காட்ட(அந்த டாடா இல்ல)யாராவது வரமாட்டாங்களா?

ராஜ நடராஜன் said...

//அண்ணே நடராசன் வந்து விளக்கம் கொடுப்பாரு. :-)))]]]

எந்த நடராசன் அண்ணே..?//அது சரி:)

புகல் said...

@சூனிய விகடன்
[[புகல் அண்ணன் ஒரு பகுத்தறிவுச்சிந்தனையாளர் என்று நினைக்கிறேன். ]]

நான் பகுத்தறிவாளன் என்று சொல்லவில்லை அப்படி நிங்கள் நினைத்தால் அதை நான் தடுக்கவில்லை,
இது உங்களின் தனிபட்ட கருத்து.

[[அதுக்கு மேல கோயிலை இடிக்கிரதுன்னு அரம்பிச்சிட்டாலே அவன் ஒரு உன்னத பகுத்தறிவுத்தமிழன் என்று ஊர் போற்றும்.......
]]
ஆனால் நிங்கள் போற்றவில்லையே

[[முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் முடிவை விமரிசிப்பதற்கும் கும்பிடும் கோயிலை இடி என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம் ?...
]]
அதைதான் தோழரே மக்களும் சொல்கிறார்கள்,
மருத்துவமனை கட்டுவதற்க்கு யாரும் எதிரக்கவில்லை ஏன் ஒரு நூலகத்தை இடித்துதான் கட்ட வேண்டிய அவசியம் என்ன? காழ்ப்புணர்ச்சியை தவிர வேற என்ன இருக்க முடியும்.

புகல் said...

@சூனிய விகடன்
[[பாப்பானைத் திட்டினாத்தானே பகுத்தறிவே.........]]
கண்டிப்பாக அறியாமை என்ற இருளை போக்கினால்தான் தெளிவு என்ற அறிவு பிறக்கும்.
தமிழர்களை சுரண்டி பிழைப்பு நடத்திகொண்டு தமிழர்களையே இருட்டடிப்பு செய்ய நினைக்கும்
பார்ப்பனர்களை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

மக்களின் வரிபணத்தில்தான் பெரும்பான்மையான கோயில்கள் கட்டபட்டுள்ளன,
அப்படி தமிழ்மக்களின் வரிபணங்களில் கட்டபடும் கோயிலகளில்
தமிழர்களுக்கு உள்ளே சென்றுவர அனுமதியில்லை,
தமிழ் வழிபாடு கிடையாது,
அனைவரும் அர்ச்சகர் என்ற சட்டத்தை எதிப்பது.
கடவுள் கிட்ட இவா மட்டும்தான் போய்வர அனுமதி
மற்ற எல்லோரும் எட்ட நின்னு கடவுளை வணங்கி செல்ல வேண்டும்
அதை ஏன் என்று கேட்டால்,
மற்ற குலத்தவர் கடவுளின் சிலை அருகே சென்றால் கடவுளின் புனிதம் கேட்டுவிடுமாம்.
அது தவறானது என்று எதிர்த்தால்
உடனே நம்ம** இந்து கோயில் சடங்குகளில் தேவையில்லலாமல் தலையிடுகிறார்கள் என்று ஒப்பாரி வைப்பது
** நம்ம என்பது அவா, அவாளின் இனத்தை மட்டுமே குறிக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்து என்று சொல்லிகொள்ளும்
பார்ப்பனர்கள் அல்லாத மக்களும்
அதானே நம்ம கோயில்களில் எப்படி எடந்தால் என்ன?
என்பது போல் ரொம்ப அறிவிலியாக பேசுவார்கள்.


பார்ப்பனர்களை யாரும் எதிர்க்ககவில்லை
என்றாவது ஒரு தமிழன் பார்ப்பனனை தாக்கியது உண்டா,
இவர்கள் செய்யும் இந்த தேவையற்ற செயல்களைதானே எதிர்க்கிறார்களை,
மண்ணில் தோன்றும் அனைத்து மாந்தரும் ஒன்றுதானே
அப்படியிருக்கையில் வேளாண்மை செய்து
இந்த உலகுக்கு படி அளக்கும் அவன் தாழ்ந்த குலம் என்றும்
வேதம் ஓதுபன் உயர் குலம் என்றும் பிரிவினை உண்டாக்கி
அவர்களை மடையாக்கி வைத்திருக்க நினைக்கும்
இந்த மக்களை எதிர்ப்பதில் என்ன
தவறு இருக்க முடியும் தோழரே.

புகல் said...

@சூனிய விகடன்
//இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களெல்லாம் போன ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் அரசு செலவில் கட்டியதா....?....அப்படியே இருந்தாலும் உங்கள் உன்னத பகுத்தறிவு அவர் போன ஐந்து வருடங்களில் ஏதாவது சர்ச், மசூதிகள் கட்டினாரா என்று ஆராயவில்லையா....?
//
எந்த கோயிலும் மக்களின் வரிபணத்தில் இருந்து கட்டபட்டவைதான்
எந்த கடவுளும் தானாகவே கோயில்கள் கட்டியது இல்லை.

இப்ப இந்து கோயில்களை பற்றி நாம் பேசும்போது நிங்கள் ஏன் தேவையில்லாமல்
தேவலாயங்கள், மசூதிகளை வம்புக்கு இழுக்கிறிர்கள்.
யாரும் கோயில்களை இடித்து தேவலாயங்கள், மசூதிகளை கட்டவில்லையே.

நூலகத்தை இடித்து, அந்த இடத்தில்தான் மருத்துவமனை கட்டுவேன் என்பதை எவ்வாறு எற்றுகொள்வது.

வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமன தமிழர்களை பேரறிஞர் அண்ணா வற்புறுத்தினார்.
ஆனால் அம்மையாரோ இருக்கிற நூலகத்தை இடிக்க துடிக்கிறார்

இதோ பேரறிஞர் அண்ணா உரைத்தது
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர்.
பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால்.
மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார்.
ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார்.
படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது.
அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”.

vsankar said...

I remember to have read in my history lessons during my school days that one Mohammed Bin Thuglak during his rule had changed his capital from Delhi to Devanagari.Changing things all of a sudden with out any reason or rhyme is the fallacy and privilege of the rulers.

vsankar said...

Innamum 5 aandugalukku indhamaadhiri koothugalai sagithukkollavendiyathu namadhu thalaividhi.Peykku vaqzkkaippattaal puliamaram erithan aaga vendum.

Unknown said...

எல்லோர் மனதிலும் உள்ள குமுறலை கொட்டியிருக்கிறீர்கள். என் மனநிலையும் அதேதான்.

Kite said...

அடுத்த அறிவிப்பு: தலைமைச்செயலகம் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது.

Sunantha said...

//படித்தால் மட்டும் போதாது.. பண்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என்பது இந்தம்மாவுக்குத் தெரியவில்லையே..!
//

இந்தம்மா எங்கங்க படிச்சுது ? ப்ளஸ்டூ கூட படிக்கலைங்க ...இவ்ளோ வெவரமா எழுதுறிங்க .. english பேசுனா படிச்சவங்கன்னு சொல்றீங்க ...அப்புறம் பாமர சனங்கள சொல்லி என்ன பண்ண ??

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

1. இந்த நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் வழக்குத் தொடுப்பாரா?]]]

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்திருக்கிறார். என்ன ஆகிறதென்று பார்ப்போம்..!

[[[2. //கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??//

ஜெ நல்லவருன்னு யாரும் மதி மயக்கத்தில இல்லைங்க. ஆனா, இவனுக்கு அவன் பரவாயில்ல அப்படிங்கற நிலமைக்கு தமிழக மக்களைத் தள்ளியது யாருங்க?
Need less to say, மக்களின் வாக்கு relatively குறைவாக (in perception) தப்பு செய்தோருக்கு.
அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு வருவது ஜெ கையில்தான் உள்ளது.]]]

இதுதான் நாம் செய்யும் தவறு..! இன்னமும் அடித்தள மக்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், உணர்வுப்பூர்வமாகவே சிந்தித்து முடிவெடுக்கிறார்கள். இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

இருக்கும் நூலகங்களை ஒட்டடைபடிய சீரழிய விட்டுவிட்டு நூற்றெண்பது கோடி ரூபாய் செலவில் புது நூலகம் காட்டியது பைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லையோ?]]]

உண்மைதான். ஆனால் என்ன செய்வது..? கட்டி முடித்துவிட்டார்களே.. வேறு வழியில்லை. இருப்பதை வைத்துக் கொள்வோமே..! இருப்பதை இவர் இடிக்க.. அடுத்து வருபவர் புதியதை திருப்பிக் கட்ட.. செலவு மக்கள் தலையில்தானே விழுகிறது.

[[[அரசியல்வாதிகள், அது எவராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், உருப்படியாக வரிப் பணத்தைப் பயன்படச் செய்திருக்கிறார்களா? உதாரணம், மாயாவதியின் சிலைகள், பூங்காக்கள்!]]]

சென்ற ஆண்டு செம்மொழி மாநாடு நடத்தினார்களே.. அதுவும் ஒரு முறைகேடான வெட்டிச் செலவுதான்..!

[[[ஆத்தா மீது கோபம் இருப்பதற்காக இப்படி சாமியாட வேண்டுமா என்ன! சாமியாடுவதுகூட ஒரு வகையில் பைத்தியக்காரத்தனம்தான்!]]]

கோபத்தை வெளிப்படுத்துவதும் நல்லதுதானே.. நான் எழுத்தில்தானே காட்டினேன்..! இதுக்குப் பெயரா சாமியாடுவது..?

உண்மைத்தமிழன் said...

[[[சிவானந்தம் said...

நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க என்ற வகையில் இருக்கிறது இந்த பதிவு. குறைவாக எழுதினாலும் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடிதான். என்னுடைய விருப்பமும் இந்த பதிவின் கடைசி வரிகள் நிஜமாக வேண்டும் என்பதுதான். தலைகால் தெரியாமல் ஆடிய ஒருவரை மக்கள் ஒதுக்கி வைத்தார்கள். இந்த முறை அந்த புண்ணியத்தை நீதிமன்றங்கள் தேடிக் கொள்ளட்டும்.]]]

ஒருமித்தக் கருத்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[lokesh said...

its totally a bullshit!!!! its known thing when you tamil ppl make one dictator as your leader!! wake up ppl.]]]

ம்க்கும்.. இப்படிச் சொன்னாப்புல மக்கள் விழிச்சிருவாங்களா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[snkm said...

ஒரு விஷயம் நீங்கள் கருணாநிதி இந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதாவினால் அடிக்கல் நாட்டப்பட்ட தலைமைச் செயலக இடத்திலேயேதான் கட்ட நினைத்த தலைமைச் செயலகத்தை கட்டி இருக்கலாமே என்று ஒரு கட்டுரையிலாவது குறிப்பிட்டு இருக்கிறீர்களா?]]]

இல்லை.. வெட்டி விரயம் என்றுதான் எழுதியிருக்கிறேன்..!

[[[கருணாநிதி எது செய்தாலும் தவறு என்றோ ஜெயலலிதா எது செய்தாலும் அதில் அவரின் அகம்பாவம் மட்டும் இருக்கிறது என்றோ நினைப்பது தவறு இல்லையா? ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தங்களின் முக்கியமான கருத்து மாணவர்களை இந்த நூலகத்திற்கு அழைத்து வந்து பிரபலப்படுத்துவது, சரியான ஒன்றுதான். நன்றி. வாழ்க பாரதம்.]]]

ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே தங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் மக்களிடமிருந்து வெகுதொலைவில் விலகிப் போய்விட்டார்கள்..! தங்களுடைய கருத்துக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[அப்பு said...

தமிழரே வணக்கம்,

நேற்று இரவு வெகு சீக்கிரமாகவே நானும் இதே விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஏறக்குறைய நீங்கள் எழுதிய கருத்துக்களின் அடிப்படியிலேயே என்னுடைய பதிவும் இருக்கிறது. சில விஷயங்களை பெரும்பான்மையானவர்களைத் தாண்டி நாமும் ஒரே மாதிரி கருத்தை வைக்கிற போது அதிலுள்ள உண்மைகளை வாசிப்பாளர்கள் உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.
மற்றபடி, வழக்கத்திற்கு மாறாக, சிறிய கட்டுரை உங்கள் கட்டுரை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் நறுக். வாழ்த்துக்கள்.]]]

நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஓசூர் ராஜன் said...

இப்படியே ஏடாகூடமாய் பண்ணி மறுபடியும் தி.மு.க.தான் நம்மை காப்பதும் போலன்னு சொல்ல வட்சுடுவாங்க! மனுதர்மத்தை மதிப்பவர்களுக்கு மற்றவர்கள் அறிவு பெருவது இடஞ்சலைதான் தருவதாக நினைப்பார்கள்! டாஸ்மாக் விறபனையை, தமிழர்களின் நலன் கருதி அதிகரிக்கப் போறாங்கலாம்,தெரியுமா?]]]

செய்யட்டும்.. குடிமக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசர்களும்..! குடிச்சே சாவட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[அ. வேல்முருகன் said...

நல்ல கேள்வி. பதில்தான் கிடைக்காது அம்மா ஆட்சியில், நீங்கள் சொன்ன மாதிரி 5 ஆண்டு காத்திருக்க வேண்டும்.]]]

5 வருஷம் கழிச்சும் திரும்பி ஆத்தாவே வந்துச்சுன்னா..?

உண்மைத்தமிழன் said...

[[[நிவாஸ் said...

இதுபோன்ற விடயங்கள் தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல, சகித்துக் கொள்வார்கள், நூலகமும் முக்கியம், மருத்துவமனையும் முக்கியம், இதை எடுத்துவிட்டு இதைத்தான் வைக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.]]]

ரேஷன் கடை, மருத்துவம், கோவில்.. இதைத் தாண்டி மக்கள் சிந்திப்பதில்லை. இப்போதே பாருங்கள்.. இத்தனை கோடி செலவு செய்து கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கூட்டம் அள்ளியிருக்க வேண்டாமா..? எத்தனை பேர் அதனைப் பார்வையிட வந்தார்கள்..? தவறு மக்களிடமிருந்துதான் கிளம்புகிறது..! இனியும் அப்படியேதான் இருக்கப் போகிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Good Comment in a News Site :

முதல்வர் மம்மியின் இந்த நடவடிக்கைகளால் திமுக தன் ஆட்சி காலத்தில் தான் செய்த சாதனை திட்டங்களுக்கு மட்டுமல்ல, மம்மியின் ஆட்சியில் வரவிருக்கும் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, உயர் குழந்தைகள் மருத்துவமனை போன்று எல்லா நல திட்டங்களுக்கும் திமுகவே அடித்தளமாக திகழ போகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் எந்த நலத்திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டின் அடையாளமாக எந்த கட்டிடம் திகழ்ந்தாலும் அது திமுகவினால்தான் இருக்கும் என்ற கருத்து மேலும் வலுப்படும். இது முதல்வர் மம்மி தன் காழ்ப்புணர்ச்சியால் தனக்குத்தானே வெட்டி கொள்ளும் குழி!]]]

இப்படியொரு அப்பாவியா நீங்க.. அப்புறம் ஏன் தி.மு.க. தோத்துச்சாம்..?

[[[தன் மன்னார்குடி மாபியாவின் மூலம் ஏழை பாழைகளுக்கு இலவசமா கொடுத்த நிலங்களைகூட அடித்து பிடுங்கி சொகுசு பங்களா கட்டி கொள்வது முதல் சுடுகாட்டு கொட்டகை ஊழல் வரை மக்களை கொள்ளையடித்தே பழக்கபட்ட எங்க முதல்வர் மம்மிக்கும், திமுகவின் ஆட்சியில் செய்யபட்ட எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை பார்த்தப் பின் மனந்திருந்தி தானும் அது போல் நல்லவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் திமுகவை போல் பிரமாண்ட மக்கள் நல திட்டங்களை தரமான வகையில் சுயமாக செய்ய தனக்கு வக்கில்லை, திராணியில்லை.. தாம் ஒரு கையாலாகாதவள் என்பதை எங்க முதல்வர் மம்மி நல்லா உணர்ந்து வச்சிருக்காங்க. இது போன்ற உலகத் தரமான கட்டிடங்களை தன் ஆட்சியில் கட்டவே முடியாது என்பதை மம்மி நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க. அதனால்தான் எந்த திட்டத்தையும் தனியாக துவங்காமல் ஏற்கனவே செய்யப்பட்ட திட்டங்களை மாற்றியமைத்து செய்துகிட்டு வர்றாங்க. இதைதான் "காண மயிலாடக் கண்டிருந்த வான்கோழி....!" என்று சொல்றாங்க.]]]

நல்லது பிரகாஷ்..! இப்போ ஆத்தா செய்றது நல்லதா? கெட்டதா?

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

/அட்லீஸ்ட் 10 வருஷமாவது இந்த ஆத்தாவை உள்ளாற வைச்சிருங்க துரை அவர்களே//

அடுத்து யாரு முதல்வர் எடத்துக்கு வரணும்னு கேட்டா மட்டும் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் கோடான கோடா உண்மைத்தமிழர்கள் இருக்கையில் என்ன செய்து என்ன பயன்? அடுத்து வருபவர் இவர் சொல் கேட்டுத்தான் ஆட்சி செய்யப்போகிறார். அங்கே மன்மோகன் செய்வதைப்போல. கோவப்பட்டாலும் அதுல லாஜிக் வேணும் சார்.]]]

ம்.. அதுக்காக தற்போதைய எனது எண்ணத்தை நான் எப்படிச் சொல்லாமல் இருப்பது..? உண்மைத்தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தலைப்பை மாற்றவும். "ஜெயலலிதாவுக்குப் பைத்தியம்".]]]

என் தலைப்பும் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது யோகன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

தலைப்போடு முழுமையாக ஒத்துப் போகிறேன்!]]]

நன்றி சேட்டைக்காரன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

உத வீட்டுக்கு ஒரு ஷேர் ஆட்டோ பார்சல்... ;)]]]

ஹா.. ஹா.. வரட்டும். பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

ராஜ நடராஜன் said...

//கண் கெட்ட பிறகு கதிரவனுக்கு வணக்கமா??***

அண்ணே நடராசன் வந்து விளக்கம் கொடுப்பாரு. :-)))//

வருண்!வந்துட்டோமில்ல:)Netflix பார்த்துட்டிருந்தவனை உசுப்பி விட்டிட்டீங்களே! பழமைண்ணே!இன்னும் கண் கெட்டுப் போகக் கூடாதுன்னுதான் கதிரவனுக்கு வணக்கமே சொல்லல தமிழகம்:)

உ.த.அண்ணே!ஆத்தாவுக்கும், தாத்தாவுக்கும் டாட்டா காட்ட(அந்த டாடா இல்ல)யாராவது வர மாட்டாங்களா?]]]

இதைத்தான் நானும் கேக்குறேன். இருக்கிறவங்களை ஆதரிக்கலாமே..? ஏன் இந்த மக்கள் அதைச் செய்ய மாட்டேன்றாங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//அண்ணே நடராசன் வந்து விளக்கம் கொடுப்பாரு. :-)))]]]

எந்த நடராசன் அண்ணே..?//அது சரி:)]]]

ஸாரிண்ணே.. மறந்திட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[புகல் said...

[[முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் முடிவை விமரிசிப்பதற்கும் கும்பிடும் கோயிலை இடி என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம் ?...]]

அதைதான் தோழரே மக்களும் சொல்கிறார்கள்,
மருத்துவமனை கட்டுவதற்க்கு யாரும் எதிரக்கவில்லை.. ஏன் ஒரு நூலகத்தை இடித்துதான் கட்ட வேண்டிய அவசியம் என்ன? காழ்ப்புணர்ச்சியை தவிர வேற என்ன இருக்க முடியும்.]]]

ம்.. இது பாயிண்ட்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[புகல் said...

கண்டிப்பாக அறியாமை என்ற இருளை போக்கினால்தான் தெளிவு என்ற அறிவு பிறக்கும். தமிழர்களை சுரண்டி பிழைப்பு நடத்தி கொண்டு தமிழர்களையே இருட்டடிப்பு செய்ய நினைக்கும் பார்ப்பனர்களை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.]]]

போச்சுடா.. இதைத் தனி பதிவு போட்டுத்தான் விலாவாரியா பேசணும்..

[[[மக்களின் வரி பணத்தில்தான் பெரும்பான்மையான கோயில்கள் கட்டபட்டுள்ளன. அப்படி தமிழ் மக்களின் வரி பணங்களில் கட்டபடும் கோயிலகளில் தமிழர்களுக்கு உள்ளே சென்று வர அனுமதியில்லை.]]

இன்னமும் கிராமப்புறங்களில் பல கோவில்களில் இந்தப் பிரச்சினையுள்ளது. இப்படிச் செய்வது ஆதிக்க ஜாதியினர்தானே தவிர, பார்ப்பனர்கள் இல்லை..!

பூஜை செய்யும் அர்ச்சகர்கள் உள்ள கோவில்களில் சாஸ்திரம், ஐதீகம் என்று சொல்லி கர்ப்பகிரஹத்துக்குள் மட்டும் நுழைந்து பூஜை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவே சொல்கிறது..! இப்போதுதான் தமிழ் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகரலாம் என்று சட்டம் போட்டு சொல்லித் தருகிறார்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[புகல் said...

வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமன தமிழர்களை பேரறிஞர் அண்ணா வற்புறுத்தினார்.
ஆனால் அம்மையாரோ இருக்கிற நூலகத்தை இடிக்க துடிக்கிறார்
இதோ பேரறிஞர் அண்ணா உரைத்தது
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது.
அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”.]]]

இதற்கு யார் காரணம்..? இதை மட்டும் சொல்லுங்கள்..!

புகல் said...

@Jagannath
[[அடுத்த அறிவிப்பு: தலைமைச்செயலகம் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது
வேடிக்கையாக சொன்னாலும் ]]
சரியாக சொன்னிர்கள் தோழரே.

உண்மைத்தமிழன் said...

[[[vsankar said...

I remember to have read in my history lessons during my school days that one Mohammed Bin Thuglak during his rule had changed his capital from Delhi to Devanagari. Changing things all of a sudden with out any reason or rhyme is the fallacy and privilege of the rulers.]]]

வரலாற்றில் ஜெயலலிதாவின் பெயர் கேலிக்கூத்தாக்கப்படும் என்று மட்டும் உறுதி..!

உண்மைத்தமிழன் said...

[[[vsankar said...

Innamum 5 aandugalukku indhamaadhiri koothugalai sagithukkollavendiyathu namadhu thalaividhi. Peykku vaqzkkaippattaal puliamaram erithan aaga vendum.]]]

ஹா.. ஹா.. சரியாகச் சொன்னீர்கள் சங்கர்.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

அடுத்த அறிவிப்பு: தலைமைச் செயலகம் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது.]]]

சீக்கிரம் மாறினாலும், மாறிவிடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sunantha said...

//படித்தால் மட்டும் போதாது.. பண்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என்பது இந்தம்மாவுக்குத் தெரியவில்லையே..!//

இந்தம்மா எங்கங்க படிச்சுது ? ப்ளஸ் டூகூட படிக்கலைங்க... இவ்ளோ வெவரமா எழுதுறிங்க.. english பேசுனா படிச்சவங்கன்னு சொல்றீங்க. அப்புறம் பாமர சனங்கள சொல்லி என்ன பண்ண ??]]]

கான்வென்ட்ல படிக்கிற அளவுக்கு வெவரமாத்தான இருந்திருக்காங்க.. போதாதா..?

புகல் said...

@Sunantha
சாட்டை அடி :
[[ இந்தம்மா எங்கங்க படிச்சுது ? ப்ளஸ்டூ கூட படிக்கலைங்க ...இவ்ளோ வெவரமா எழுதுறிங்க ..
english பேசுனா படிச்சவங்கன்னு சொல்றீங்க ...அப்புறம் பாமர சனங்கள சொல்லி என்ன பண்ண ?? ]]
சரியாக சொன்னிர்கள்

ஆங்கிலம் தெரிந்தால்தான் படிச்சவன் என்ற முட்டாள்தானமான கறை நம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது,
வேறு மாநிலத்தவர் இங்கு வந்து ஆங்கிலத்தில் பேசும்போது அட கடவுளே நமக்கு
ஆங்கிலம் தெரியாமல் போய்விட்டதே என்று நாணி குறுகும் இவர்களை என்னவென்று சொல்ல,
நிங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை தமிழ்ல பேசுங்க என்று அடக்கமாக சொல்வதால்
ஒன்றும் குற்றம் அல்ல என்பதை இவர்கள் என்று உணரபோகிறார்களோ?
அப்படி செய்யாமல் இருப்பதால்தான் பிற மாநிலத்தவர்
இங்கு பல வருடங்கள் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு தமிழை படிக்காமல் எமாற்றி வருகிறார்கள்,
பிற மாநிலத்தவருக்கு உதவுகிறேன் என்று சொல்லிகொண்டு
தமிழை ஒரு தேவையில்லாத மொழிபோல் மாற்றிவிடுகிறோம்.

பிற மாநிலத்தவர் :
தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் திமிர் பிடித்தவர் என்பார்கள்
இவர்களுக்கு பேசி உதவி செய்தால் தமிழர்களே ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள் என்று ஏளனம் செய்வது
ஆக நாம் நாமாக இருந்தால் எந்த குழப்பமும் இல்லை
அவர்களே நாள் அடைவில் புரிந்துகொள்வார்கள் திண்ணமாக தமிழை கற்று கொள்வார்கள்.

Pandi said...

மாற்றான் தோட்டத்துக்கும் மனம் உண்டு என்ற பொன் மொழியை
மலர்ந்த பேறிஞர் அண்ணா பெயரில் கட்சியை வைத்துகொண்டு
இந்த கொடுமை எல்லாம் நடக்கிறது.
கடமை, கண்ணியம், கட்டுபாடு இப்படி எதும் இல்லாமல் தான்தோறிதனமாக
இருக்கும் இவருக்கு சில கூட்டங்கள் கொடுக்கும் பெயர் துணிச்சல்.
ரொம்ப துணிச்சல்னா ஒடுற இரேயில் முன்னாடி நிற்க வேண்டியதானே.
பிடிச்ச பிணி தொலைந்தது என்று நிம்மதியாக இருக்கலாம்.

மருத்தவமனை ஒன்றுக்கு இரண்டு அல்லது கூடுதலாககூட கட்டுங்கள்
யாரும் தடுக்கவில்லை, வரவேற்கிறோம் ஆனால் நூலகத்தை இடித்து கட்டுவேன் என்பதை எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

செயலலிதாவின் இந்த செயலை உறுதியாக எதிர்க்கிறேன்.

Pandi said...

@உண்மைத்தமிழன்
[[கான்வென்ட்ல படிக்கிற அளவுக்கு வெவரமாத்தான இருந்திருக்காங்க.. போதாதா..? ]]
பரவாயில்லையே நிங்க கூட வெவரமாதான் இருக்கிங்க.
கான்வென்டல ஒருத்தன் படிச்சா வெவறமா இருப்பான் என்பது
தங்களின் கருத்தா இல்ல தங்களின் கண்டுபிடிப்பா?
ஆமா கான்வென்டல அம்மா அவங்களா போயி படிச்சி வெவரம் அடைந்துகிட்டாங்க
மக்களின் நலம், சிறந்த சிந்தனைகள், உயரிய பண்புகள் போன்றவற்றில் வெவரமா இருக்க வேண்டும்.
சும்மா கான்வென்டல படிச்சா மட்டும் ஒருத்தன் வெவரமாயிர முடியாது
படிப்பு மட்டும் போதாது,
{படித்தவனும் பணத்தை கொடுத்திட்டு எமாந்து போகிறான், படிக்காத மக்களும்
எமாறுகிறார்கள் என்ன வேறுபாடு
-- பொது அறிவு, பகுத்தறிவு, பட்டறிவு இல்லாததுதான்
படித்தவனும் சிறந்தவனாக இருக்கிறான், படிக்காத மக்களும் சிறந்தவர்களாக
வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்
காரணம் -- பொது அறிவு, பகுத்தறிவு, பட்டறிவு இருப்பதால்}
பொது அறிவு, பகுத்தறிவு, பட்டறிவு வேண்டும்
இவை நாட்டை ஆளும் தவைவர்களுக்கு இன்றியமையானவை, முதன்மையானவை
இதை அம்மா உணர்ந்தால் வெவரம் அடையலாம்.

Unknown said...
This comment has been removed by the author.
Indian said...

**[[[Sunantha said...

//படித்தால் மட்டும் போதாது.. பண்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என்பது இந்தம்மாவுக்குத் தெரியவில்லையே..!//

இந்தம்மா எங்கங்க படிச்சுது ? ப்ளஸ் டூகூட படிக்கலைங்க... இவ்ளோ வெவரமா எழுதுறிங்க.. english பேசுனா படிச்சவங்கன்னு சொல்றீங்க. அப்புறம் பாமர சனங்கள சொல்லி என்ன பண்ண ??]]]

கான்வென்ட்ல படிக்கிற அளவுக்கு வெவரமாத்தான இருந்திருக்காங்க.. போதாதா..?
**

கான்வென்ட்ல படிக்க வெவரம் வேண்டியதில்ல, துட்டுதான் தேவை.

கான்வென்ட்ல படிச்ச எல்லோரும் ஐன்ஸ்டினாவோ, எடிசனாவோ ஆகணும்ங்கற அவசியம் இல்லைங்க. அவுங்க ஒரு ஜெ போலக் கூட ஆகலாம் :)

Indian said...

நடப்பதையெல்லாம் பார்க்கும்போது ராஜகுரு நெசமாவே இவருக்கு துக்ளக் வரலாற போதித்திருப்பாரோண்னு தோணுது.

ஸ்ரீகாந்த் said...

அடுத்தவர்கள் செய்யும் செயல்களை தவறு என்று சுட்டிகாட்டுவது மிக சுலபம்...ஆனால் அதற்கொரு தெளிவான தீர்க்கமான முடிவை சொல்லாமல் நீங்கள் பதிவு இடுவது .....?

Indian said...

//அடுத்தவர்கள் செய்யும் செயல்களை தவறு என்று சுட்டிகாட்டுவது மிக சுலபம்...ஆனால் அதற்கொரு தெளிவான தீர்க்கமான முடிவை சொல்லாமல் நீங்கள் பதிவு இடுவது .....?
//

இடுகையின் இறுதி இரண்டு பத்திகளை படித்துப் பார்க்கவும்.

வலிப்போக்கன் said...

இன்னும் நாலரை ஆண்டுகள் கழிந்தாலும்
இந்த பிசாசு போயி அடுத்து பேயோ (அ)
கொள்ளிவாய் பிசாசோதான் வரும் அய்யா,கத்தினாலும்,வேண்டினாலும் ஒரு
உண்டக்கட்டி வேணா கிடைக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[புகல் said...
சரியாக சொன்னிர்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான் படிச்சவன் என்ற முட்டாள்தானமான கறை நம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.]]]

சாமிகளோவ்..! கோடிகளைக் கணக்கிட்டு பார்க்கவும், தற்போதைக்கு எது முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. அந்தம்மா படிச்சதுக்கும், பேசுற பேச்சுக்கும் இந்த அளவுக்குக்கூட அறிவில்லாமய்யா இருக்கும்..?

உண்மைத்தமிழன் said...

[[[Pandi said...
மாற்றான் தோட்டத்துக்கும் மனம் உண்டு என்ற பொன் மொழியை
மலர்ந்த பேறிஞர் அண்ணா பெயரில் கட்சியை வைத்துகொண்டு
இந்த கொடுமை எல்லாம் நடக்கிறது.
கடமை, கண்ணியம், கட்டுபாடு இப்படி எதும் இல்லாமல் தான்தோறிதனமாக
இருக்கும் இவருக்கு சில கூட்டங்கள் கொடுக்கும் பெயர் துணிச்சல்.
ரொம்ப துணிச்சல்னா ஒடுற இரேயில் முன்னாடி நிற்க வேண்டியதானே.
பிடிச்ச பிணி தொலைந்தது என்று நிம்மதியாக இருக்கலாம்.]]]

ஹி.. ஹி.. ஹி.. ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Pandi said...

@உண்மைத்தமிழன்

[[கான்வென்ட்ல படிக்கிற அளவுக்கு வெவரமாத்தான இருந்திருக்காங்க.. போதாதா..? ]]

பரவாயில்லையே நிங்ககூட வெவரமாதான் இருக்கிங்க.
கான்வென்டல ஒருத்தன் படிச்சா வெவறமா இருப்பான் என்பது
தங்களின் கருத்தா இல்ல தங்களின் கண்டுபிடிப்பா? ஆமா கான்வென்டல அம்மா அவங்களா போயி படிச்சி வெவரம் அடைந்துகிட்டாங்க?
மக்களின் நலம், சிறந்த சிந்தனைகள், உயரிய பண்புகள் போன்றவற்றில் வெவரமா இருக்க வேண்டும்.
சும்மா கான்வென்டல படிச்சா மட்டும் ஒருத்தன் வெவரமாயிர முடியாது.
படிப்பு மட்டும் போதாது,
{படித்தவனும் பணத்தை கொடுத்திட்டு எமாந்து போகிறான், படிக்காத மக்களும் எமாறுகிறார்கள் என்ன வேறுபாடு? -- பொது அறிவு, பகுத்தறிவு, பட்டறிவு இல்லாததுதான்
படித்தவனும் சிறந்தவனாக இருக்கிறான், படிக்காத மக்களும் சிறந்தவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்கிறார்கள்
காரணம் -- பொது அறிவு, பகுத்தறிவு, பட்டறிவு இருப்பதால்}
பொது அறிவு, பகுத்தறிவு, பட்டறிவு வேண்டும் இவை நாட்டை ஆளும் தவைவர்களுக்கு இன்றியமையானவை, முதன்மையானவை
இதை அம்மா உணர்ந்தால் வெவரம் அடையலாம்.]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

கான்வென்ட்ல படிக்க வெவரம் வேண்டியதில்ல, துட்டுதான் தேவை.
கான்வென்ட்ல படிச்ச எல்லோரும் ஐன்ஸ்டினாவோ, எடிசனாவோ ஆகணும்ங்கற அவசியம் இல்லைங்க. அவுங்க ஒரு ஜெ போலக் கூட ஆகலாம்:)]]]

இந்தம்மா எப்படி கட்சிக்காரங்களை சமாளித்து, தாத்தாவை எதிர்த்து அரசியல் செஞ்சு முதலமைச்சராச்சு..?

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

நடப்பதையெல்லாம் பார்க்கும்போது ராஜகுரு நெசமாவே இவருக்கு துக்ளக் வரலாற போதித்திருப்பாரோண்னு தோணுது.]]]

சகவாச தோஷம் அதிகமாயிருச்சு போல..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

//அடுத்தவர்கள் செய்யும் செயல்களை தவறு என்று சுட்டிகாட்டுவது மிக சுலபம்...ஆனால் அதற்கொரு தெளிவான தீர்க்கமான முடிவை சொல்லாமல் நீங்கள் பதிவு இடுவது?//

இடுகையின் இறுதி இரண்டு பத்திகளை படித்துப் பார்க்கவும்.]]]

எடுத்துக் காட்டியமைக்கு நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[வலிபோக்கன் said...

இன்னும் நாலரை ஆண்டுகள் கழிந்தாலும்
இந்த பிசாசு போயி அடுத்து பேயோ (அ)
கொள்ளிவாய் பிசாசோதான் வரும் அய்யா, கத்தினாலும், வேண்டினாலும் ஒரு உண்டக்கட்டி வேணா கிடைக்கும்.]]]

என்னதான் செய்யறது..?

விச்சு said...

என்னதான் வேணும் இந்த ஆத்தாவுக்கு?
வடிவேலு சொன்னமாதிரி என்னதான் வேணும்? - செம சூப்பர்.

உண்மைத்தமிழன் said...

[[[விச்சு said...

என்னதான் வேணும் இந்த ஆத்தாவுக்கு?
வடிவேலு சொன்ன மாதிரி என்னதான் வேணும்? - செம சூப்பர்.]]]

விச்சு.. நீராவது கேட்டுச் சொல்லும். செஞ்சிருவோம்..!