தி.மு.க.வின் மோசடி ஆர்ப்பாட்டம்..!

02-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மே-13-ல் கிடைத்த தோல்வி சாசனத்திற்குப் பிறகு இன்றைக்குத்தான் தி.மு.க.வினர் வெளியில் தலைகாட்டியுள்ளனர்.

தி.மு.க. ஆட்சி பறிபோனதற்கு முக்கியக் காரணமாக இருந்து வந்த நில அபகரிப்பு, அதிகார துஷ்பிரயோகம், கட்சிக்காரர்களின் அடாவடித்தனம் இவற்றுக்கெல்லாம் இன்றைக்கு ஜெயல்லிதாவின் மூலமாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தி.மு.க.வினருக்கு..!

ஒவ்வொரு மாவட்டத்தில் கண்ணீருடன் புற்றீசல்போல் கிளம்பி வந்து கொண்டிருக்கும் பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இத்தனை ஆண்டு கால தி.மு.க.வின் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கிறது. இன்றைய தேர்தலில் ஏற்பட்டிருக்கும் அவப் பெயரை துடைத்தெறிந்து இனிவரும் காலங்களில் தி.மு.கழகமே இருக்குமா என்கிற சந்தேகத்தையே அக்கட்சியின் செயல்பாடுகள் ஏற்படுத்தியிருக்கிறது.

கண்ணீர்த்துளிகள் என்ற அவப்பெயரோடும், தலைவரான ஈ.வெ.ரா.பெரியாரின் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தாங்கிக் கொண்டும் 18 ஆண்டு காலம் இந்த்த திமுகவை வளர்த்தெடுக்க அண்ணா எத்தனை, எத்தனை தியாகங்களை செய்திருக்கிறார் என்பதையெல்லாம் வருங்கால தமிழ் சந்த்தியினர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தமிழகத்துக்கு மட்டுமல்ல தி.மு.க.வுக்கு சேர்த்தே துரோகம் இழைத்திருக்கிறார் கருணாநிதி.


தி.மு.க. துவக்கப்பட்ட முதல் கூட்டத்தில் ஐம்பெரும் தலைவர்களில் தன்னை அமர வைத்துப் பார்க்காத தி.மு.க.வை அழித்தே விடுவது என்றே கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

கட்சியினரின் அராஜகத்தைக் கண்டும் காணாத்து போல் இருந்து.. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒருவர் இந்த லட்சணத்தில் ஆட்சியை நடத்தியிருக்கிறார் என்பதே தி.மு.க. கட்சிக்கே கேவலமானது..!

ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்.. கொலை செய்தார்கள்.. அராஜகம் நடத்தினார்கள் என்பதையெல்லாம்கூட அரசியல் என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்..!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜூலை 10-ம் தேதிவரையிலும் ஆயிரத்து 449 தமிழர்கள் நில மோசடி புகார்களைக் கொடுத்துள்ளனர். இந்த லிஸ்ட் இன்றைய தேதியில் நான்காயிரத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

1. திருப்பூரில் நில மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட 137 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நில மோசடி தொடர்பாக 137 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.218.87 கோடி மதிப்பிலான, 551.78 ஏக்கர் நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஜூலை.20 - நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக கடந்த 15 நாட்களில் சென்னை நகரில் மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் கமிஷனர் ஜே,கே. திரிபாதி தெரிவித்தார்.

3. திருவண்ணாமலை மாவட்டத்தில் நில மோசடி புகார் பிரிவு துவங்கப்பட்டதில் இருந்து, 55 புகார்கள் வந்துள்ளன. இதில், மூன்று வழக்கு பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளோம். மூன்று பேருக்கு நிலத்தை மீட்டு கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி.

4. தூத்துக்குடி மாவட்டத்தில் நில மோசடி வழக்கு தொடர்பான சிறப்பு பிரிவுக்கு இதுவரை 120 புகார்கள் வந்துள்ளன. அவைகளில் 8 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 8 எதிரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நில மோசடி, நில அபகரிப்பு தொடர்பாக 200&க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, கோடிக்கணக்கான சொத்துக்களை மீட்டு, புகார்கள் மீது தீர்வுகான அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த 1ந் தேதி முதல் 9ந் தேதி வரை மட்டும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6. கோவையில் சுமார் 55 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஈரோட்டில் 134 புகார்கள் பெறப்பட்டு, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் 76 புகார்கள் பெறப்பட்டு 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தைப் பொருத்தவரை, நிலமோசடி தொடர்பாக 710 புகார்கள்  பெறப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 162.73 கோடியாகும். இதில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் உள்ள கோவைபுதூர் என்னுமிடத்தில் ராக் இண்டோர் என்ற நிறுவனத்தினருக்காக சுமார் 950 ஏக்கர் நிலத்தினை அப்போதைய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தனது அதிகார பலத்தால் மிரட்டி, உருட்டி குறைந்த விலைக்கு வாங்கி, மிக அதிக விலைக்கு அந்நிறுவனத்திற்குத் தாரை வார்த்து கோடிகளை குவித்திருப்பதாகவும் இப்போது ஒரு புகார் எழுந்துள்ளது.

வாலுகளையெல்லாம் குறி வைத்து வழக்குகள் வந்து கொண்டிருந்தபோது இன்றைக்கு நல்ல நாள்.. தலையைக் குறி வைத்துவிட்டது ஜெயல்லிதா அரசு. தி.மு.க.வினர் தங்கள் மீது போடப்படும் நில பேர ஊழல் வழக்குகளெல்லாம் பொய்யானவை என்று அறைகூவல் விட்டு அறப்போராட்டத்தில் இறங்கிய இன்றைக்கு பார்த்து, தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மீதே குற்றம்சுமத்தப்பட்டு ஒரு வழக்கு காவல்துறையில் பதிவாகியுள்ளது.

சென்னையில் உள்ள தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் ரெங்காரெட்டிதான் இன்றைக்கு ஒரு புகாரை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அதில், “தர்மதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத்தை அப்போதைய அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் ககாரி என்பவர் போலி பத்திரம் தயாரித்து,  தனி நபர் ஒருவரிடமிருந்து ஐந்தரை கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்கியதாக கணக்குக் காட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும். இந்த போலி பத்திரம் தயாரிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும், இந்த பத்திரத்தில் அப்போதைய அமைச்சர் பரிதிஇளம்வழுதி, மாவட்ட திமுக பிரதிநிதி சிப்கோ வாசு, முன்னாள் திமுக பகுதி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்” என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சுகாரி உடனுக்குடன் இந்த நிலத்தை ஜோஷி பில்டர்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றுள்ளதாகவும், இது கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் கூறப்படு கிறது. இது குறித்து 2010-ம் ஆண்டே போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது எங்களை கடத்திச் சென்று சிட்டிபாபுவின் வீட்டில் வைத்து மிரட்டினார்கள். இதில் தலையிடக்கூடாது. தலையிட்டால் விபரீதம் ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோய் புகாரை வலியுறுத்தவில்லை. மேலும் அறங்காவலர் வீடுகள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி மிரட்டினார்கள். மேலும் இந்த சொத்து கருணாநிதியின் குடும்பத்திற்குத்தான் சென்றுள்ளது. முதல்வர்  உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க முடியாது. மேலும் தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோருக்கு பெருந்தொகையை கொடுத்துவிட்டு இந்த மோசடியை செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தை சுற்றி காம்பவுண்டு போடப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  எனவே இதனை தடுத்து நிலத்தை மீண்டும் அறக்கட்டளைக்கு கிடைக்க செய்ய வேண்டும். அத்துடன் இந்த மோசடியில் ஈடுபட்ட பரிதி இளம்வழுதியின் உதவியாளர் ககாரி, பரிதிஇளம்வழுதி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுவரையிலும் நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க. புள்ளிகள்

ஜூன் 28: நில மோசடி வழக்கில், சேலம் மாநகராட்சி 9-வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி நிதிக் குழுத் தலைவருமான ஆட்டோ மாணிக்கம் (எ) ராமசாமி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஜூன்-29 : ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் நில மோசடி செய்தது தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஆனந்த் என்கிற ஆனந்தன் என்பவரைக் கைது செய்தனர். இவர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சொக்கம்புதூர் இளங்கோவனின் மகன் ஆவார். மேலும் தற்போது தி.மு.க.வின் கோவை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

கொடைக்கானலில் திமுக நகராட்சித் தலைவர் உள்பட 3 பேரையும், சிவகங்கையில் 4 பேரையும் நில அபகரிப்புப் புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜூலை 16 :  ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் என்று கூறப்படும் அட்டாக் பாண்டி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை, 26 - மதுரையில் நில மோசடியில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜூலை-27 - நில மோசடி வழக்கில் முன்னாள் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு கேரளாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது தம்பி மகனும் 6 பேர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி ஆகியோர் உள்ளிட்ட 13 பேர் மீது அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமியர் மில்ஸ் நிலம் அபகரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், தி.மு.க. மாநகர துணை செயலாளர் அழகாபுரம் முரளி உள்ளிட்ட 13 பேர் மீதும் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜூலை. 30- நில மோசடி வழக்குத் தொடர்பாகத் திமுகவைச் சேர்ந்த ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம் இரு மகன்களுடன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

ஜூலை-30 - திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கைது! தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் நில மோசடி வழக்கிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.  உடுமலைப்பேட்டையில் பல லட்சம் மதிப்புள்ள மில் ஒன்றை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக அவர் மீது புகார் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜூலை-30 : சேலம் நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது!

இப்படி ஊர்தோறும் பந்தி வைப்பதுபோல் புகார்கள் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிக்கார்ர்கள் மீது கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன. புகார் கொடுப்பவர்களெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களா? இல்லையே..? 90 சதவிகிதம் பொதுமக்கள்தான். பலரும் அப்பாவிகள்.. உலக நடப்பு தெரியாதவர்கள். சிலர் உயிருக்குப் பயந்தவர்கள்.. தங்களுக்காக இல்லையென்றாலும், தங்களது குடும்பத்துக்காக அதிகார வர்க்கத்தை எதிர்க்கத் துணியாமல் அமைதியாக இருந்தவர்கள்..!

மதுரையில் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் நடத்திய அராஜகத்தின் ஒரு பகுதி பற்றி சென்ற வாரத்திய ஜூ.வி.யில்கூட பெயர் போடாமல் எழுதியிருக்கிறார்கள். வேறு வழி. அவமானப்பட்டவர்கள் மேலும் அவமானப்படுவார்களா என்ன..? இது போன்ற ரவுடிகளையெல்லாம் கட்சித் தொண்டர்கள், கட்சியின் தலைவர்களாக வைத்திருந்ததற்காக கருணாநிதிதான் வெட்கப்பட வேண்டும்..!

மதுரை வில்லாபுரத்தில் இருக்கும் மது தியேட்டர், வெற்றி தியேட்டராக கை மாறியதில்கூட தற்போது கைதாகியிருக்கும் மதுரையின் தி.மு.க. ரவுடிகளின் அராஜகம்தான் காரணம் என்று நேற்று மதுரையில் இருந்து போன் செய்த வலையுலக வாசகர் ஒருவர் தெரிவித்தார். அந்த தியேட்டரின் முன்னாள் உரிமையாளர் பற்றிய உண்மைகளை நான் சொல்ல.. அந்தத் தியேட்டர் கை மாறியபோது நடந்த நிகழ்வுகளை பற்றி அவர் சொல்ல.. எனக்குத் திக்கென்றானது.

இப்போதுதான் மதுரை மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் மதுரையில் உள்ள நண்பர்கள். தி.மு.க. ஆட்சியில் எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாலும் தி.மு.க. கட்சிக்காரனுக்கு எதிராக ஒரு புகாரைகூட பதிவு செய்ய முடியாது. கோர்ட்டிற்கு போய் ஆர்டர் வாங்கி வந்துதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டியிருந்த்து என்றார் ஒரு மதுரை வக்கீல் நண்பர்..! இவர்களெல்லாம் இந்த அளவுக்கு ஆட்டம் போட இடம் கொடுத்த்து கருணாநிதியின் மகன். அந்த மகன் இளவரசாக வலம் வர இடம் கொடுத்தவர் கருணாநிதி. ஆக மொத்தம், கோவை பொதுக்குழுவில் அவரே சொன்னதுபோல தி.மு.க.வின் இந்த்த் தோல்விக்கு கருணாநிதியேதான் காரணம்..

இன்றைக்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் கூட்டம் எதிர்பார்த்த்தைவிட அதிகமாக இருந்ததாக உளவுத்துறை ஆத்தாவிடம் அறிக்கை கொடுத்திருக்கிறதாம். வழக்கமாக காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் ஜெயில் என்றால் பயப்படுவார்கள். ஆனால் இப்போது தி.மு.க.வினரும் ஜெயில் என்றாலே, உச்சா போகும் நிலையில் இருக்கிறார்கள். எப்படியும் தத்தமது பலத்தைக் காட்டி நின்றால் மட்டுமே உள்ளே போகாமல் இருக்க முடியும் என்பதால் தங்களால் முடிந்த அளவுக்கு தொண்டர்களைத் திரட்டிக் கணக்குக் காண்பித்திருக்கிறார்கள் தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

ஆனால் இது மக்களின் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். “ஆடுறவரைக்கும் ஆடிட்டு இப்போ அவங்களுக்கு அடி விழுந்தவுடனேயே ஐயோ, அம்மான்னு ஓடி வர்றாங்க பாருங்க..” என்ற டயலாக்குதான் தமிழகம் முழுக்கவே கட்சி சாராத பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது..!


மணிக்கணக்கில், நாள் கணக்கில் நின்று கொண்டே நிதியுதவிகளை வழங்கினேன் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலின் அந்த நின்ற நேரத்தில் சில மணித்துளிகள் செவிமடுத்து தனது கட்சிக்கார்ர்களின் மீதான புகார்கள் மீது அக்கறை கொண்டு நீதி வழங்க ஆவண செய்திருந்தால் இன்றைக்கு அவர் மீதாவது லேசான ஒரு கரிசனம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டு இன்றைக்கு செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடைக்கும் நேரத்தில் இது அராஜகம், தங்களது கட்சியினரை அழிக்கும் முயற்சி என்றெல்லாம் தி.மு.க.வினர் ஒப்பாரி வைப்பது காலம் கடந்த செயல். தி.மு.க.வை அழிக்க தற்போதைய நிலையில் ஜெயலலிதா தேவையே இல்லை. வாக்காளப் பெருமக்களே போதும்..!

காவல்துறையில் தொடுக்கப்படும் புகார்களில் சிக்கியிருக்கும் கட்சியினரை அப்புறப்படுத்தி, தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப ஊழல் உறுப்பினர்களைத் துரத்தியடித்து தான் கைப்பற்றிய அண்ணாவின் தி.மு.க.வை, அவர்தம் உண்மையான தொண்டர்களிடம் சேர்ப்பித்தால் மட்டுமே வருங்காலத்தில் தி.மு.க. என்ற பெயரோடு கருணாநிதியின் பெயரும் நிலைத்திருக்கும்..!

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாகவே தி.மு.க.வின் தலைமை செயல்பட்டால் இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மோசடியாகவும், தி.மு.க. என்னும் அமைப்புக்கே   தானே குழி தோண்டியதாகவும் அமைந்துவிடும்..!

62 comments:

எல் கே said...

ஆட்டோ மாணிக்கம் எனக்கு தெரிஞ்ச நபர். அந்த மனுஷனுமா ? ஒழுங்காதான இருந்தார் . கவுன்சிலர் ஆன உடனே ஆட்டம் போட்டா இப்படிதான். தப்பே இல்லை.

குரங்குபெடல் said...

திருந்தாத முன்னேற்ற கழகம் . . .

நன்றி

settaikkaran said...

//தமிழகத்துக்கு மட்டுமல்ல தி.மு.க.வுக்கு சேர்த்தே துரோகம் இழைத்திருக்கிறார் கருணாநிதி.//

நெத்தியடி!

//ஆனால் அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்..!//

காவல்துறை புகார்களை வாங்க மறுப்பார்கள் என்ற மிதப்பில்தானே எல்லாவற்றையும் அரங்கேற்றினார்கள்!

//ஆடுறவரைக்கும் ஆடிட்டு இப்போ அவங்களுக்கு அடி விழுந்தவுடனேயே ஐயோ, அம்மான்னு ஓடி வர்றாங்க பாருங்க.//

இதைத்தான் தி.மு.கவிலேயே பலர் சொல்லிப் புலம்புகிறார்கள்.

பொ.முருகன் said...

அழகிரி,கனிமொழி,தயாநிதி வருகைக்குப் பின்புதான் தி.மு.க நாறிவிட்டது.இனி தி.மு.க எழுந்து நிர்கவேண்டுமென்றல் ஜெ தனது ஆட்சியில் மாபெறும் தவறு செய்யவேண்டும்,அந்த மாதிரியான வரலாற்றுப்பிழையய் முதல்வர் செய்யமாட்டார் என நம்புவோம்.

jayaramprakash said...

very good article keep it up brother.

ராஜ நடராஜன் said...

அண்ணே!கருணாநிதியை நாம் விட்டாலும் அவர் விடமாட்டார் போலிருக்குதே? தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று பார்த்தால் மேலும் மேலும் தவறுகளைச் செய்கிறார்களே?நானும் ரவுடிதான்...நான் ஜெயிலுக்குப் போறேன் இனி வடிவேலுவுக்குச் சொந்தமில்லை.ஸ்டாலினுக்குத்தான்.

ராஜ நடராஜன் said...

குடும்ப அரசியலில் அதள பாதாளத்தில் கிடக்கும் தி.மு.கவின் மக்களின் பொதுவான எண்ணத்தை திசை திருப்பும் உள்நோக்கு கூட அற்ப போரின் காரணங்கள் எனலாம்.சமச்சீர் கல்வி ஒன்று மட்டுமே தி.மு.க குரல் எழுப்ப தகுதி வாய்ந்தது.அதுவும் தாத்தாவின் புகழ்பாடும் பக்கங்கள் கிழிக்கப்பட்ட நிலையில்,ஏனைய அவர்களின் தேர்தல் கூட்டணியின் துணையுடன்,ராமதாஸ் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளும் விருப்பத்துடன்.

சிந்திப்பவன் said...

இங்க நடக்கிறதல்லாம் தமாசு!
இப்போ இன்னொரு தேர்தல் வச்சாக்கூட தி.மு.க 30 சதவிகித வாக்குகள் பெறும்!
2016 வரை எல்லா கேசுகளும் நடந்துகொண்டே இருக்கும்..பிறகு ரத்துசெய்யப்படும்.முடிஞ்சா கிராமம் கிராமமாய் போய் மக்களுக்கு ஒட்டுன்னா என்னன்னு புரியவையுங்க!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

ஆட்டோ மாணிக்கம் எனக்கு தெரிஞ்ச நபர். அந்த மனுஷனுமா ? ஒழுங்காதான இருந்தார் . கவுன்சிலர் ஆன உடனே ஆட்டம் போட்டா இப்படிதான். தப்பே இல்லை.]]]

எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை எல்.கே.! பதவி வந்தால் தானாகவே ஆசையும் வந்துவிடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

திருந்தாத முன்னேற்ற கழகம்...

நன்றி.]]]

அய்.. இந்தப் பெயரும் நல்லாயிருக்கே..?

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//தமிழகத்துக்கு மட்டுமல்ல தி.மு.க.வுக்கு சேர்த்தே துரோகம் இழைத்திருக்கிறார் கருணாநிதி.//

நெத்தியடி!

//ஆனால் அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்..!//

காவல்துறை புகார்களை வாங்க மறுப்பார்கள் என்ற மிதப்பில்தானே எல்லாவற்றையும் அரங்கேற்றினார்கள்!

//ஆடுறவரைக்கும் ஆடிட்டு இப்போ அவங்களுக்கு அடி விழுந்தவுடனேயே ஐயோ, அம்மான்னு ஓடி வர்றாங்க பாருங்க.//

இதைத்தான் தி.மு.கவிலேயே பலர் சொல்லிப் புலம்புகிறார்கள்.]]]

நன்றி சேட்டைக்கார அண்ணாச்சி..!

உண்மைத்தமிழன் said...

[[[பொ.முருகன் said...

அழகிரி,கனிமொழி,தயாநிதி வருகைக்குப் பின்புதான் தி.மு.க நாறிவிட்டது.இனி தி.மு.க எழுந்து நிர்கவேண்டுமென்றல் ஜெ தனது ஆட்சியில் மாபெறும் தவறு செய்யவேண்டும்,அந்த மாதிரியான வரலாற்றுப் பிழையய் முதல்வர் செய்யமாட்டார் என நம்புவோம்.]]]

சமச்சீர் கல்வியைத் தவிர வேறு ஒன்றிலும் அவரைக் குற்றம் சொல்ல முடியவில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about]]]

இணைத்துவிட்டேன் நண்பரே.. அழைப்புக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[jayaramprakash said...

very good article keep it up brother.]]]

மிக்க நன்றி ஜெயராம்பிரகாஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அண்ணே! கருணாநிதியை நாம் விட்டாலும் அவர் விடமாட்டார் போலிருக்குதே? தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று பார்த்தால் மேலும் மேலும் தவறுகளைச் செய்கிறார்களே? நானும் ரவுடிதான். நான் ஜெயிலுக்குப் போறேன் இனி வடிவேலுவுக்குச் சொந்தமில்லை. ஸ்டாலினுக்குத்தான்.]]]

ஹா.. ஹா.. நான் சொல்லணும்னு நினைச்சிருந்தேன். நீங்க சொல்லிட்டீங்க. உண்மைதாண்ணே.. குற்றம்சாட்டப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதைவிட்டுவிட்டு அவர்களைப் பாதுகாப்பதுபோல் அவர்களுக்காகவே போராட்டம் நடத்தினால் எப்படி? மக்கள் சிரிக்க மாட்டார்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

குடும்ப அரசியலில் அதள பாதாளத்தில் கிடக்கும் தி.மு.கவின் மக்களின் பொதுவான எண்ணத்தை திசை திருப்பும் உள்நோக்கு கூட அற்ப போரின் காரணங்கள் எனலாம். சமச்சீர் கல்வி ஒன்று மட்டுமே தி.மு.க குரல் எழுப்ப தகுதி வாய்ந்தது. அதுவும் தாத்தாவின் புகழ்பாடும் பக்கங்கள் கிழிக்கப்பட்ட நிலையில், ஏனைய அவர்களின் தேர்தல் கூட்டணியின் துணையுடன், ராமதாஸ் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளும் விருப்பத்துடன்.]]]

ராமதாஸ் இனி தனித்துவம் காட்ட விரும்புகிறார். ஆகவே தாத்தாவுக்கும் பாடம் கற்பிக்கத்தான் உதவுவாரே தவிர, தாத்தாவுக்கே உதவுவார் என்று நான் நினைக்கவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[சிந்திப்பவன் said...

இங்க நடக்கிறதல்லாம் தமாசு!
இப்போ இன்னொரு தேர்தல் வச்சாக்கூட தி.மு.க 30 சதவிகித வாக்குகள் பெறும்! 2016-வரை எல்லா கேசுகளும் நடந்து கொண்டே இருக்கும். பிறகு ரத்து செய்யப்படும். முடிஞ்சா கிராமம் கிராமமாய் போய் மக்களுக்கு ஒட்டுன்னா என்னன்னு புரிய வையுங்க!]]]

மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை நண்பரே..!

Sunder said...

Well written bro !!!

Prakash said...

நில அபகரிப்பு வழக்குகளில் 85 % பொய் புகார்களினாலும் , விற்றவர்களை மிரட்டியும் போடப்பட்டவைகளாகும்

என்ன செய்வது திமுகவுக்கு அரசியல் நடத்த தெரியவில்லை.

1. 2006 இல் ஆட்சி பிடித்தவுடன், ஜெயந்திரர் மற்றும் சொர்ணமால்யாவை வைத்து புகார் அளித்து உண்மையோ பொய்யோ சில கேஸ்களை போட்டிருக்கவேண்டும்.

2. ஜெயந்திரர் மருத்துவ கல்லுரியை மிரட்டி வாங்க முயற்சித்தார்கள் என்று பொய் வழக்காவது போட்டிருக்கவேண்டும்.

3. கஞ்சா புகழ் செரீனாவை வைத்து, நடராஜன் சசிகலா மற்றும் ஜெயாவுக்கு பெரிய ஆட்டம் காட்டி இருக்கவேண்டும்.

4. கொடநாடு மற்றும் சிறுதாவூர் நில அபகரிப்பு பிரிச்சனைகளை வைத்து பல கைதுகள் செய்துருகவேண்டும்.

Prakash said...

ரத்தம் - தக்காளி ஜூஸ்


சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான நில ஆகிரமிப்பு வழக்கு வாபஸ்: புகார் கொடுத்தவர் சமரசம்
http://www.maalaimalar.com/2011/07/31112734/solavanthan-AIADMK-MLA-case-wi.html


அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில ஆகிரமிப்பு புகார் வாபஸ்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்
http://www.maalaimalar.com/2011/07/24174910/minister-agri-krishnamoorthy-c.html


சென்னையின் பிரதான பகுதியில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அமைச்சர் இசக்கி சுப்பையா ஈடுபட்டதாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் , நோ அரெஸ்ட்
http://www.dinamani.com/edition/story.aspx?

Prakash said...

ரத்தம் - தக்காளி ஜூஸ்


சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான நில ஆகிரமிப்பு வழக்கு வாபஸ்: புகார் கொடுத்தவர் சமரசம்
http://www.maalaimalar.com/2011/07/31112734/solavanthan-AIADMK-MLA-case-wi.html


அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில ஆகிரமிப்பு புகார் வாபஸ்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்
http://www.maalaimalar.com/2011/07/24174910/minister-agri-krishnamoorthy-c.html


சென்னையின் பிரதான பகுதியில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அமைச்சர் இசக்கி சுப்பையா ஈடுபட்டதாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் , நோ அரெஸ்ட்
http://www.dinamani.com/edition/story.aspx?

Prakash said...

நல்லா சொல்றாங்க டிடைலு, ...எப்படி எல்லாம் வழக்கு போடறாங்க...

1999-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார் - பின்னர் 2007-ம் ஆண்டு நான் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது...

இடைப்பட்ட 8 வருடகாலம் என்ன செய்து கொண்டு இருந்தார் ????

துப்பாக்கியைக் காட்டி வீட்டைப் பறித்ததாக ஜெ.அன்பழகன்-மன்னன் மீது புதுப் புகார்..


கடந்த 1994-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவருக்கு சொந்தமான தியாகராயநகர் வெங்கட நாராயணா ரோட்டில் உள்ள வீட்டை அடமானமாக வைத்து என்னிடம் ரூ.17 லட்சம் கடன் வாங்கினார். 3 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி தருவதாகவும் அப்படி தராவிட்டால் அந்த வீட்டை எனது பெயருக்கே பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் எழுதிக்கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார். ரூ.17 லட்சம் கடனை அவர் திருப்பி தராததால் அந்த வீடு எனக்கு சொந்தமானது. பின்னர் 2007-ம் ஆண்டு நான் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது கருணாகர் பெகரா என்பவர் வீட்டில் இருந்தார்.

அவர் என்னிடம் சீதா கிருஷ்ணமூர்த்தி இந்த வீட்டை தனக்கு கொடுத்து விட்டதாக கூறினார். இதற்காக உயில் எழுதி கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/02/dmk-mla-j-anbalagan-threatened-me-gun-point-aid0091.html

muthukumaran said...

திமுக ஜெ மீது கேஸ் போடல. அதனால அதிமுக வும் கேஸ் போட கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம் ன்னு தெரியல. எனக்கு தெரிஞ்ச வரை, என்னுடைய மதுரை மற்றும் சேலம் நண்பர்கள் ரவுடிகளிடம் இருந்து விடுதலை பெற்ற உணர்வை பெற்றுள்ளதாகவே கூறியுள்ளனர். எங்க ஊர்ல (பெரம்பலூர்) நான் கண் கூடாக பார்த்த சம்பவங்கள் பல. அதிமுக ஆட்சியில் சமரசம் செஞ்சதா செய்தியாச்சும் வருது. உங்க திமுக ஆட்சியில கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்பத்தோட கொளுத்தி விடுகிறீர்களே? அள்ளி விடறத கொஞ்சம் கம்மிய அள்ளி விடுங்க பிரகாஷ். வேற எதுவும் பேசணும் னா சொல்லுங்க. இன்னும் நல்லா சொல்றேன் டிடைலு. பேசனும்னு பேச கூடாது. உங்க நிலம் பறி போய் இருந்தா அப்ப தெரியும் வலி.

Prakash said...

பெரும்பாலும் அரசியல்வாதிகள் நில விஷயத்தில் தலையிட்டால் ஒன்று வில்லங்க சொத்து அல்லது ஏற்கனவே ஆகிரமிப்பு செய்யப்பட்ட பட்டா இல்லாத புறம்போக்கு நிலமாக இருக்கும்.

பட்டா இருக்கும் சொத்தை மிரடிவங்குவது மிக அரிதான சில கேஸ்கள் இருக்கலாம்..எனவே போடப்பட்டுள்ள பெரும்பாலான நில ஆக்கிரமிப்பு கேஸ்கள் தேராது, அவை பழிவாங்க போடப்பட்டுள கேசுகளாக இருக்கலாம்

Prakash said...

@முத்து குமார், நீங்கள் சொல்வது உண்மையென்றால், மதுரை மற்றும் சேலத்தில் திமுக டெபாசிட் இழதிருகவேண்டும்..மற்ற இடங்களை
இரண்டாம் இடதைதானே பிடித்தது..

கிராமத்து காக்கை said...

எங்கள் பகுதியிலும் முன்னாள் MLA ரங்கநாதன் பல அட்டுழீயம் செய்துள்ளார் இன்று கைது என்ன நல்ல செய்தி எங்கள் பகுதியில் பொதுமக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் தொடரட்டும் கைது நடவடிக்கை

உண்மைத்தமிழன் said...

[[[Sunder said...

Well written bro !!!]]]

நன்றி சுந்தர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

நில அபகரிப்பு வழக்குகளில் 85% பொய் புகார்களினாலும் , விற்றவர்களை மிரட்டியும் போடப்பட்டவைகளாகும்.

என்ன செய்வது திமுகவுக்கு அரசியல் நடத்த தெரியவில்லை.

1. 2006-ல் ஆட்சி பிடித்தவுடன், ஜெயந்திரர் மற்றும் சொர்ணமால்யாவை வைத்து புகார் அளித்து உண்மையோ பொய்யோ சில கேஸ்களை போட்டிருக்க வேண்டும்.

2. ஜெயந்திரர் மருத்துவ கல்லுரியை மிரட்டி வாங்க முயற்சித்தார்கள் என்று பொய் வழக்காவது போட்டிருக்கவேண்டும்.

3. கஞ்சா புகழ் செரீனாவை வைத்து, நடராஜன் சசிகலா மற்றும் ஜெயாவுக்கு பெரிய ஆட்டம் காட்டி இருக்கவேண்டும்.

4. கொடநாடு மற்றும் சிறுதாவூர் நில அபகரிப்பு பிரிச்சனைகளை வைத்து பல கைதுகள் செய்துருக வேண்டும்.]]]

செய்திருக்கலாமே பிரகாஷ்.. ஏன் விட்டீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

ரத்தம் - தக்காளி ஜூஸ்

சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான நில ஆகிரமிப்பு வழக்கு வாபஸ்: புகார் கொடுத்தவர் சமரசம்

http://www.maalaimalar.com/2011/07/31112734/solavanthan-AIADMK-MLA-case-wi.html


அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில ஆகிரமிப்பு புகார் வாபஸ்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

http://www.maalaimalar.com/2011/07/24174910/minister-agri-krishnamoorthy-c.html

சென்னையின் பிரதான பகுதியில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அமைச்சர் இசக்கி சுப்பையா ஈடுபட்டதாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் , நோ அரெஸ்ட்

http://www.dinamani.com/edition/story.aspx?]]]

இப்போ சக்சேனா மேல இருந்த 2 வழக்குகள் சமரசமாகப் பேசித் தீர்க்கப்பட்டுள்ளன..! புகார் கொடுத்தும் போலீஸார் பெறவில்லை என்று இந்த வழக்குகளில் பெரும் புகார் இல்லை..!

இசக்கிபாண்டியனை நீக்கியதுபோல் ராஜாத்தியை, வீரபாண்டி ஆறுமுகத்தை, கனிமொழியை, தயாநிதியை, கலாநிதியை, ஆ.ராசாவை, ஈரோடு ராஜா.. சுரேஷ்ராஜனை.. அழகிரியை, காந்தி அழகிரியை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருக்கும் நீக்கியிருக்கலாமே..?

ஏன் தாத்தா செய்யலையாம்..?

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

நல்லா சொல்றாங்க டிடைலு, ... எப்படி எல்லாம் வழக்கு போடறாங்க...

1999-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார் - பின்னர் 2007-ம் ஆண்டு நான் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது...

இடைப்பட்ட 8 வருடகாலம் என்ன செய்து கொண்டு இருந்தார் ????

துப்பாக்கியைக் காட்டி வீட்டைப் பறித்ததாக ஜெ.அன்பழகன்-மன்னன் மீது புதுப் புகார்..


கடந்த 1994-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவருக்கு சொந்தமான தியாகராயநகர் வெங்கட நாராயணா ரோட்டில் உள்ள வீட்டை அடமானமாக வைத்து என்னிடம் ரூ.17 லட்சம் கடன் வாங்கினார். 3 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி தருவதாகவும் அப்படி தராவிட்டால் அந்த வீட்டை எனது பெயருக்கே பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் எழுதிக்கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார். ரூ.17 லட்சம் கடனை அவர் திருப்பி தராததால் அந்த வீடு எனக்கு சொந்தமானது. பின்னர் 2007-ம் ஆண்டு நான் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது கருணாகர் பெகரா என்பவர் வீட்டில் இருந்தார்.

அவர் என்னிடம் சீதா கிருஷ்ணமூர்த்தி இந்த வீட்டை தனக்கு கொடுத்து விட்டதாக கூறினார். இதற்காக உயில் எழுதி கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.]]]

ஆதாரங்களை இல்லாமல் அழித்துவிட்டாலும் முருகன் வேறொரு வாய்ப்பை குற்றவாளிகளுக்குக் கொடுத்தே தீருவான்.. அதில் இதுவும் ஒன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[முத்து குமரன் said...

திமுக ஜெ மீது கேஸ் போடல. அதனால அதிமுகவும் கேஸ் போட கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்ன்னு தெரியல. எனக்கு தெரிஞ்சவரை, என்னுடைய மதுரை மற்றும் சேலம் நண்பர்கள் ரவுடிகளிடம் இருந்து விடுதலை பெற்ற உணர்வை பெற்றுள்ளதாகவே கூறியுள்ளனர்.

எங்க ஊர்ல (பெரம்பலூர்) நான் கண் கூடாக பார்த்த சம்பவங்கள் பல. அதிமுக ஆட்சியில் சமரசம் செஞ்சதா செய்தியாச்சும் வருது. உங்க திமுக ஆட்சியில கம்ப்ளைன்ட் கொடுத்தா குடும்பத்தோட கொளுத்தி விடுகிறீர்களே? அள்ளி விடறத கொஞ்சம் கம்மிய அள்ளி விடுங்க பிரகாஷ். வேற எதுவும் பேசணும்னா சொல்லுங்க. இன்னும் நல்லா சொல்றேன் டிடைலு. பேசனும்னு பேச கூடாது. உங்க நிலம் பறி போய் இருந்தா அப்ப தெரியும் வலி.]]]

முத்துக்குமரன்.. இவரையெல்லாம் மதுரைல கொண்டு போய் உக்கார வைச்சிருக்கணும். அன்னிக்குத் தெரிஞ்சிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

பெரும்பாலும் அரசியல்வாதிகள் நில விஷயத்தில் தலையிட்டால் ஒன்று வில்லங்க சொத்து அல்லது ஏற்கனவே ஆகிரமிப்பு செய்யப்பட்ட பட்டா இல்லாத புறம்போக்கு நிலமாக இருக்கும்.

பட்டா இருக்கும் சொத்தை மிரடி வங்குவது மிக அரிதான சில கேஸ்கள் இருக்கலாம். எனவே போடப்பட்டுள்ள பெரும்பாலான நில ஆக்கிரமிப்பு கேஸ்கள் தேராது, அவை பழிவாங்க போடப்பட்டுள கேசுகளாக இருக்கலாம்.]]]

இத்தனைக்கும் மூல காரணம் பாழாய்ப் போன, கேடு கெட்ட அரசியல்வியாதிகளும், சில அதிகாரிகளும்தான்.. அவர்களை ஒழுங்காக கட்டி மேய்க்கத் தெரியாத குற்றத்திற்காகத்தான் தாத்தாவை இப்போது மக்கள் டிஸ்மிஸ் செய்துள்ளனர்...!

உண்மைத்தமிழன் said...

[[[கிராமத்து காக்கை said...

எங்கள் பகுதியிலும் முன்னாள் MLA ரங்கநாதன் பல அட்டுழீயம் செய்துள்ளார். இன்று கைது என்ன நல்ல செய்தி எங்கள் பகுதியில் பொதுமக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள். தொடரட்டும் கைது நடவடிக்கை.]]]

2005-லேயே இவர் மீது கை வைத்திருக்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் தி.மு.க.வுக்கு ஓடினார்..! வார்டு கவுன்சிலராக இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டியவர் என்று ரிப்பன் மாளிகையில் இவரைப் பற்றி பக்கம், பக்கமாக புகார் சொல்கிறார்கள் ஊழியர்கள்..!

மு.சரவணக்குமார் said...

நீங்கள் என்னதான் வரிந்து கட்டிக் கொண்டு நடுநிலைவாதியாக காட்டிக் கொண்டாலும் கூட பதிவின் நெடுகில் ஆளுங்கட்சியின் விசுவாசம் வெளிப் படுவதை உங்களால் தடுக்கவே முடியவில்லை.

நில அபகரிப்பு என்னவோ திமுக வினரின் அப்பன் வீட்டுச் சொத்து மாதிரி மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.ஒருவரி கூட அதிமுகவினர் மீதான புகார்களும்,சமரசம் பற்றி எழுதிட தோன்றவில்லை.

தோஷி பில்டர்ஸ் உதயநிதியின் பிணாமி நிறுவனம் என்பதற்கு உங்களிடம் ஏதும் ஆதாரமிருக்கிறதா? ஆதாரம் இல்லாத ஒரு செய்தியை போடும் போது தொடர்புடையவர்களின் பெயரை நேரடியாக சொல்வதை தவிர்க்க வேண்டும்.

சிறுதாவூர் நில அபகரிப்பு விஷயம் எல்லாம் உங்களின் நினைவுக்கு வரவே வராது.

வாழ்க உங்களின் நடுநிலை!!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

அன்பரே..

எனக்கு ஒரு விஷயத்தில் என்ன உண்மையாகத் தோன்றுகிறதோ அதனை அப்படியே எழுதிவிடுவேன். இந்தக் கட்டுரை நேற்றைய தி.மு.க.வினரின் போராட்டத்தைப் பற்றியது. தி.மு.க.வினர் தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள் என்கிறார்கள். அதனால்தான் எழுத வேண்டி வந்தது..

அ.தி.மு.க. மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகள் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தி.மு.க.வினர் மீதுதான் வண்டி, வண்டியாக வருகிறது.. அதனால்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சிறுதாவூர் நிலம் பற்றி நான் ஏற்கெனவே பல முறை எழுதியிருக்கிறேன். இந்த முறை ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்கக்கூட தகுதியில்லை. அவர் பதவியில் இருப்பதுகூட மரபுக்கு முரணானது என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்..!

ஜோதிஜி said...

இந்த அம்மா இந்த நில மோசடி வழக்கு விவகாரங்களை அரசியல் ரீதியாக பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்களை ஒரு வருடமாவது நிரந்தர களி திங்க வைக்க வேண்டும்.

ராஜநடா சொன்னது தான் என் கருத்தும்.

குறும்பன் said...

ஈரோட்டு ராசா செஞ்ச அலும்பு கொஞ்சமா நஞ்சமா.

நிலத்தை பறிக்க அவனுங்க அடிச்சு உதைச்ச குடும்பத்து அம்மா செயா டிவில செவ்வி குடுக்குது கேட்டு பாருங்க. கருணாநிதி, ஸ்டாலின் எல்லோரும் அவனுக்கு ஆதராவா தானே இருந்தாங்க.

G.Ganapathi said...

இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியே பணத்தாலும் மிரட்டலாலும் தீர்க்கப்படும் நீதி மன்றமும் தங்களுக்குள் உண்டன்படிக்கை வந்து விட்டதால் வழக்கை திரும்ப பெறுகிறேன் என்று கூறும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துகொள்ளாமல் வாதியும் பிரதிவாதியும் சமாதனம் ஆகிவிட்டபடியால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறது என்று கூறி தள்ளுபடி செய்யும் . சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை இருக்கு தவறு செய்தவன் தண்டனை அடையாமல் காப்பாற்ற படுகிறான் . வழக்கம் போல் உலகுமுரல்களை பதிவாக போட்டு விட்டிர்கள் படித்த நாங்களும் எங்கள் குமுறல்களை பின்னூட்டமாக செய்து விட்டோம் . இனி அடுத்து வருவதற்கு நம் எல்லாருடைய குமுறல்களையும் சேர்த்து வைக்க வேண்டியது தான் .

Senthil said...

ஜால்ரா சத்தம் காது கிழுயுது.

Senthil said...

நச்சுன்னு புள்ளி விவரத்தோடதான் பேசுறீங்க. அப்படியே அந்த அக்ரி கிருஷ்ணமுர்த்தி மேட்டரையும் சொல்லி இருந்திங்கன்னா உங்கள நடுநில்லையாளர் என்று சொல்லலாம்.

Raj... said...

//தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப ஊழல் உறுப்பினர்களைத் துரத்தியடித்து தான் கைப்பற்றிய அண்ணாவின் தி.மு.க.வை, அவர்தம் உண்மையான தொண்டர்களிடம் சேர்ப்பித்தால் மட்டுமே வருங்காலத்தில் தி.மு.க. என்ற பெயரோடு கருணாநிதியின் பெயரும் நிலைத்திருக்கும்..//

அண்ணே... சரியான சவுக்கடி, ஆனால் இது எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்...

R.Gopi said...

தமிழ்நாட்டுக்கு கருணாநிதி துரோகம் இழைக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்...

அடுத்தவன் சொத்துக்களை ஆட்டையை போடுதல் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்து ஊரை அடித்து உலையில் போட்டிருக்கிறார்கள் கழக குஞ்சுமணிகள்... இப்போது ஆப்பு ரிவர்ஸ் அடிக்கிறது... குய்யோ முய்யோ என்று அலறினால், யார் வந்து காப்பாற்றுவர்?

இன்னமும் பெரிய முதலைகள் மேல் கை வைக்கவில்லை... அது தான் கிளைமாக்ஸ்...

தமிழ் உதயன் said...

புதைகுழியில் விழுந்துவிட்ட திமுகவை காபாற்ற கடைசி கட்ட முயற்சிகள்... எப்படி ஈழ போரின் போது எப்படியாவது விடுதலைபுலிகள் சீக்கிரமாக தோற்கடிக்கப்படமாட்டார்களா என்று ஊமை கோட்டானாக கருணாநிதி இருந்தாரோ அது போல இந்த இயக்கம் சிதைந்து சின்னாபின்னமாவதை பொறுமையாக பாருங்கள். அதை விட்டுட்டு ஏன் டென்சன் ஆகிறீர்கள்?

San said...

Dear TT,
I know this man Kousika Bhoopathy for nearly a decade.He is not only a PA but above all to Veerapandi.If you want to see the minister you can not get appointment without Bhoopathi's knowledge.The last five years i would have met him atleast 50 times for various tenders and the way he deals with commission wow this man is a genius in manipulation.He has bought a huge mango farm near tiruttani andhra border apart from this you can find few petrol pumps in chennai especially in 100 feet road near moolakadai.these are few of the assets i know in chennai.

ISMAIL said...

இந்த நில மோசடி புகார்களின் உண்மைத்தன்மை பற்றி கண்டிப்பாக யோசிக்கவேண்டி உள்ளது. திமுக காரன்மேல் மட்டும்
போட்டு ஆதிமுக காரனின் கேஸ் சமரசம் ஆவதற்காக அல்ல.
கிட்டத்தட்ட எல்ல நிலா பதிவும் ஸ்டாம்ப் டுட்டி, இன்கம் டாக்ஸ் பிரச்சினைக்காக விலை குறைத்து பதிவு செய்யப்பட்டிருக்கும். நிலம் விற்பனை செய்யப்பட்டபோது விற்பவன் எதோ நிதி பிரச்சினையின் காரணமாக விற்பனை செய்திருப்பான். இப்போது அந்த நிலத்தின் மதிப்பு கண்டிப்பாக அதிகம் ஆகி இருக்கும். மேலும் பதிவு செய்த விளைக்கும் உண்மையான மார்கட் மதிப்புக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருந்தே ஆகும்.
இப்போ இருக்கும் நிலையில் மிரட்டல் நிர்பந்தம், ஆகிரமிப்பு என்று புகார் கொடுத்தால் எதோ சமரசம் என்ற பெயரில் கூடுதல் காசு கிடைக்கும் என்ற பேராசையில் கூட வழக்குகள் கொடுக்கப்படிருக்கலம்.
அப்படி பார்த்தாலும் ஆதிமுக காரன் மட்டுமல்ல இடம் வாங்கிய எல்லார் மீதும் கேஸ் பதியப்பட வேண்டும். அதென்ன திமுக காரன்மீது மட்டும் கேஸ் பதியப்படுகிறது.
இப்படி ஒரு கோணம் கூட இருப்பதை ஏன் யாருமே யோசிக்கவே மறந்துவிடுகிறீர்கள்.

koodal kanna said...

பேய் ஆட்சியை விரட்ட சமச்சீர் கல்வி வழக்கு ஒன்றே போதும் .இதற்கு போய் இந்த ஆட்சி எந்த தவறுமே செய்யாது என்று நினைக்கிறின்களே!

உண்மைத்தமிழன் said...

[[[JOTHIG ஜோதிஜி said...

இந்த அம்மா இந்த நில மோசடி வழக்கு விவகாரங்களை அரசியல் ரீதியாக பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்களை ஒரு வருடமாவது நிரந்தர களி திங்க வைக்க வேண்டும். ராஜநடா சொன்னதுதான் என் கருத்தும்.]]]

அது முடியுமான்னுதான் தெரியலை.. ஆனால் கொஞ்சம் அடங்குவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

ஈரோட்டு ராசா செஞ்ச அலும்பு கொஞ்சமா நஞ்சமா. நிலத்தை பறிக்க அவனுங்க அடிச்சு உதைச்ச குடும்பத்து அம்மா செயா டிவில செவ்வி குடுக்குது கேட்டு பாருங்க. கருணாநிதி, ஸ்டாலின் எல்லோரும் அவனுக்கு ஆதராவாத்தானே இருந்தாங்க.]]]

இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள்தான். சந்தேகமே இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியே பணத்தாலும் மிரட்டலாலும் தீர்க்கப்படும் நீதி மன்றமும் தங்களுக்குள் உண்டன்படிக்கை வந்து விட்டதால் வழக்கை திரும்ப பெறுகிறேன் என்று கூறும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமல் வாதியும் பிரதிவாதியும் சமாதனம் ஆகிவிட்டபடியால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறது என்று கூறி தள்ளுபடி செய்யும். சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை இருக்கு தவறு செய்தவன் தண்டனை அடையாமல் காப்பாற்றபடுகிறான். வழக்கம் போல் உலகுமுரல்களை பதிவாக போட்டு விட்டிர்கள் படித்த நாங்களும் எங்கள் குமுறல்களை பின்னூட்டமாக செய்து விட்டோம். இனி அடுத்து வருவதற்கு நம் எல்லாருடைய குமுறல்களையும் சேர்த்து வைக்க வேண்டியதுதான்.]]]

வேறென்ன செய்வது கணபதி..! மக்கள் சுயநலவாதிகளாக இருப்பதுதான் இதற்குக் காரணம். எப்படியோ நம்ம பிரச்சினை முடிஞ்சா சரிதான்னு நினைக்குறாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Senthil said...

ஜால்ரா சத்தம் காது கிழுயுது.]]]

எதுல? பதிவுலேயா..? பின்னூட்டத்திலேயா..?

உண்மைத்தமிழன் said...

[[[Senthil said...

நச்சுன்னு புள்ளி விவரத்தோடதான் பேசுறீங்க. அப்படியே அந்த அக்ரி கிருஷ்ணமுர்த்தி மேட்டரையும் சொல்லி இருந்திங்கன்னா உங்கள நடுநில்லையாளர் என்று சொல்லலாம்.]]]

அந்தப் பட்டமெல்லாம் எனக்குத் தேவையில்லை. இது தி.மு.க.வினரின் ஊழல்கள் பற்றிய கட்டுரை. அ.தி.மு.க.வினரின் யோக்கியதையை பற்றி எழுதும்போது நிச்சயமாக அதுவும் இடம் பெறும்.

உண்மைத்தமிழன் said...

[[[Raj... said...

//தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப ஊழல் உறுப்பினர்களைத் துரத்தியடித்து தான் கைப்பற்றிய அண்ணாவின் தி.மு.க.வை, அவர்தம் உண்மையான தொண்டர்களிடம் சேர்ப்பித்தால் மட்டுமே வருங்காலத்தில் தி.மு.க. என்ற பெயரோடு கருணாநிதியின் பெயரும் நிலைத்திருக்கும்..//

அண்ணே... சரியான சவுக்கடி, ஆனால் இது எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்...]]]

திருந்திதான் ஆகணும். இல்லையென்றால் காலம் நிச்சயமாகத் திருத்தும்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

தமிழ்நாட்டுக்கு கருணாநிதி துரோகம் இழைக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்...

அடுத்தவன் சொத்துக்களை ஆட்டையை போடுதல் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்து ஊரை அடித்து உலையில் போட்டிருக்கிறார்கள் கழக குஞ்சுமணிகள், இப்போது ஆப்பு ரிவர்ஸ் அடிக்கிறது. குய்யோ முய்யோ என்று அலறினால், யார் வந்து காப்பாற்றுவர்? இன்னமும் பெரிய முதலைகள் மேல் கை வைக்கவில்லை... அதுதான் கிளைமாக்ஸ்.]]]

சீக்கிரம் அதுவும் நடக்கும் கோபி..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயன் said...

புதைகுழியில் விழுந்துவிட்ட திமுகவை காபாற்ற கடைசி கட்ட முயற்சிகள். எப்படி ஈழ போரின்போது எப்படியாவது விடுதலைபுலிகள் சீக்கிரமாக தோற்கடிக்கப்பட மாட்டார்களா என்று ஊமை கோட்டானாக கருணாநிதி இருந்தாரோ அது போல இந்த இயக்கம் சிதைந்து சின்னாபின்னமாவதை பொறுமையாக பாருங்கள். அதை விட்டுட்டு ஏன் டென்சன் ஆகிறீர்கள்?]]]

அ.தி.மு.க.வுக்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம் தேவை நண்பரே. இல்லையெனில் ஆத்தாவும் ஜூனியர் அழகிரியாகவோ அல்லது கருணாநிதியாகவோ உருவெடுத்துவிடுவார்..!

உண்மைத்தமிழன் said...

[[[San said...

Dear TT,

I know this man Kousika Bhoopathy for nearly a decade.He is not only a PA but above all to Veerapandi. If you want to see the minister you can not get appointment without Bhoopathi's knowledge. The last five years i would have met him atleast 50 times for various tenders and the way he deals with commission wow this man is a genius in manipulation. He has bought a huge mango farm near tiruttani andhra border apart from this you can find few petrol pumps in chennai especially in 100 feet road near moolakadai. these are few of the assets i know in chennai.]]]

எல்லாம் மலை விழுங்கி மகாதேவன்களாக இருக்கிறார்கள் நண்பரே. இவரும் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளே போவார். காத்திருந்து பாருங்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[ismail said...

இந்த நில மோசடி புகார்களின் உண்மைத் தன்மை பற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டி உள்ளது. திமுக காரன்மேல் மட்டும் போட்டு ஆதிமுககாரனின் கேஸ் சமரசம் ஆவதற்காக அல்ல.
கிட்டத்தட்ட எல்ல நிலா பதிவும் ஸ்டாம்ப் டுட்டி, இன்கம் டாக்ஸ் பிரச்சினைக்காக விலை குறைத்து பதிவு செய்யப்பட்டிருக்கும். நிலம் விற்பனை செய்யப்பட்டபோது விற்பவன் எதோ நிதி பிரச்சினையின் காரணமாக விற்பனை செய்திருப்பான். இப்போது அந்த நிலத்தின் மதிப்பு கண்டிப்பாக அதிகம் ஆகி இருக்கும். மேலும் பதிவு செய்த விளைக்கும் உண்மையான மார்கட் மதிப்புக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருந்தே ஆகும். இப்போ இருக்கும் நிலையில் மிரட்டல் நிர்பந்தம், ஆகிரமிப்பு என்று புகார் கொடுத்தால் எதோ சமரசம் என்ற பெயரில் கூடுதல் காசு கிடைக்கும் என்ற பேராசையில் கூட வழக்குகள் கொடுக்கப்படிருக்கலம். அப்படி பார்த்தாலும் ஆதிமுககாரன் மட்டுமல்ல இடம் வாங்கிய எல்லார் மீதும் கேஸ் பதியப்பட வேண்டும். அதென்ன திமுககாரன் மீது மட்டும் கேஸ் பதியப்படுகிறது. இப்படி ஒரு கோணம்கூட இருப்பதை ஏன் யாருமே யோசிக்கவே மறந்து விடுகிறீர்கள்.]]]

எனக்குப் புரிகிறது. வந்திருக்கும் புகார்களில் 75% உண்மையாகத்தான் இருக்கும். மீதி வேண்டுமானால் நீங்கள் சொல்வதுபோல் இருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[koodal kanna said...

பேய் ஆட்சியை விரட்ட சமச்சீர் கல்வி வழக்கு ஒன்றே போதும். இதற்கு போய் இந்த ஆட்சி எந்த தவறுமே செய்யாது என்று நினைக்கிறின்களே!]]]

அது ஒன்றுக்காகவே ஆட்சி மாற்றம் செய்யும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் இல்லை..!

Prakash said...

தற்போது போடப்பட்டுள்ள நில புகார்களினால் எதோ திமுகவே அழிந்துவிட்டது போலவும், திமுக மீண்டும் தேர்தல்களில் வெற்றிபெறாது என்பதுபோல ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், 1991 - 96 அதிமுக ஆட்சி முடிந்தவுடன், திமுக ஆட்சியில் இப்போதைவிட அதிகமான ஊழல் வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , கட்சியினர் மீது போடப்பட்டது,

ஜெயா மீது மட்டும் 11 வழக்குகளும் சேர்த்து மொத்தம் 48 ஊழல் , சொத்துகுவிப்பு வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , கட்சியினர் மீது போடப்பட்டு, 3 தனி நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த 48 ஊழல் வழக்குகளின் அப்போதைய மதிப்பு சுமார் 500 கோடி என்று வைத்து கொண்டாலும், 2011 இல் அந்த ஊழல்களின் மதிப்பு சுமார் 2500 கோடி.

திமுகவினர் மீது போடப்பட்டுள்ள நில அபகரிப்புகளின் மொத்த மதிப்பே, பொய் புகார்களையும் சேர்த்து சுமார் 100 கோடி அல்லது 150 கோடிக்குள் உள்ளது,

2500 கோடி மதிப்புள்ள 48 ஊழல் வழக்குகளை சந்தித்த அதிமுகவே , 1996 - 01 இல் நல்லாட்சி வழங்கிய திமுகவை 2001 தேர்தலில் தோற்கடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, சுமார் 150 கோடிக்குள்ளன நில அபகரிப்பு வழக்குகளில் இருந்து மீண்டு வர திமுகவால் முடியாதா ?

வருண் said...

***ராஜ நடராஜன் said...

அண்ணே!கருணாநிதியை நாம் விட்டாலும் அவர் விடமாட்டார் போலிருக்குதே?***

ஆமா, கருணாநிதி, மேதைகள் ராசநடராசனையும், உம்மைத்தமிழனையும் பத்தி தன் வலைபதிவில் எழுதி இவங்கள விடமாட்டேன்கிறார்!!! ஏன்ப்பா காமெடி பண்ணுறீங்க!

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

தற்போது போடப்பட்டுள்ள நில புகார்களினால் எதோ திமுகவே அழிந்துவிட்டது போலவும், திமுக மீண்டும் தேர்தல்களில் வெற்றி பெறாது என்பதுபோல ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், 1991 - 96 அதிமுக ஆட்சி முடிந்தவுடன், திமுக ஆட்சியில் இப்போதைவிட அதிகமான ஊழல் வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியினர் மீது போடப்பட்டது.

ஜெயா மீது மட்டும் 11 வழக்குகளும் சேர்த்து மொத்தம் 48 ஊழல், சொத்து குவிப்பு வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியினர் மீது போடப்பட்டு, 3 தனி நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த 48 ஊழல் வழக்குகளின் அப்போதைய மதிப்பு சுமார் 500 கோடி என்று வைத்து கொண்டாலும், 2011-ல் அந்த ஊழல்களின் மதிப்பு சுமார் 2500 கோடி.

திமுகவினர் மீது போடப்பட்டுள்ள நில அபகரிப்புகளின் மொத்த மதிப்பே, பொய் புகார்களையும் சேர்த்து சுமார் 100 கோடி அல்லது 150 கோடிக்குள் உள்ளது,

2500 கோடி மதிப்புள்ள 48 ஊழல் வழக்குகளை சந்தித்த அதிமுகவே, 1996-01-ல் நல்லாட்சி வழங்கிய திமுகவை 2001 தேர்தலில் தோற்கடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, சுமார் 150 கோடிக்குள்ளன நில அபகரிப்பு வழக்குகளில் இருந்து மீண்டு வர திமுகவால் முடியாதா..?]]]

நிச்சயமாக முடியும். முயற்சி செய்யுங்கள். முட்டாள் மக்களும், மறதி வாக்காளர்களும் இருக்கின்றவரையில் இரண்டு கழகங்களையும் அடித்துக் கொள்ளவே முடியாது..!

உண்மைத்தமிழன் said...

வருண் said...

[[[***ராஜ நடராஜன் said...

அண்ணே! கருணாநிதியை நாம் விட்டாலும் அவர் விடமாட்டார் போலிருக்குதே?***

ஆமா, கருணாநிதி, மேதைகள் ராசநடராசனையும், உம்மைத்தமிழனையும் பத்தி தன் வலைபதிவில் எழுதி இவங்கள விடமாட்டேன்கிறார்!!! ஏன்ப்பா காமெடி பண்ணுறீங்க!]]]

வருண்.. ரொம்ப நாளாச்சு பார்த்து..? எப்படி இருக்கீங்க..? செளக்கியமா..?

arulgene said...

Sunday, August 07, 2011

6/7

கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்

நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.

நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.

மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன். ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது.

பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது.

சும்மா சொல்லக்கூடாது?

அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே? எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார். ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.

விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது. ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.

வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்.