இன்றைய (த)மலைப்புச் செய்திகள்-11-08-2010

11-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எழுதறதுக்கு மேட்டர் இல்லை..! என்னதான் செய்யறது..? அதுதான் இப்படி..!

நாட்டு நடப்பை நீங்களும் துல்லியமா தெரிஞ்சுக்கணும்கிறதுக்காக நேற்றைய முக்கிய (த)மலைப்புச் செய்திகளை இங்க தொகுத்து போட்டிருக்கேன்..! கொஞ்சம்தான்.. படிச்சுத் தெரிஞ்சுக்குங்க..

இதுக்கு நீங்க கொடுக்கப் போற அமோகமான ஆதரவைப் பொறுத்துதான், தினம்தோறும் இது போன்ற (த)மலைப்புச் செய்திகள் இத்தளத்தில் வெளிவரும்..!

--------------------------

ஜெயலலிதா மீதான பரிசுப் பண வழக்கை ஒத்தி வைக்க சி.பி.ஐ. கோர்ட் மறுப்பு..!

1991- ம் ஆண்டில் இருந்து 96-ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக பணியாற்றினார். 1992-ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள 57 வங்கி டிமாண்ட் டிராப்டுகள் அவருக்கு பரிசாக வந்தன என்றும், அந்த பணத்தை அரசு கஜானாவில் செலுத்தாமல் தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்தார் என்று புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி முகமது இசாத் அலி விசாரித்து வருகிறார். ஜெயலலிதா உள்பட 3 பேரும் இந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறார்கள் என்றும், ஆகவே, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய நாள் குறிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதி அன்று மனு தாக்கல் செய்தார்.

இந்தப் பின்னணியில் இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்ல் மேல் முறையீடு செய்ய விருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் தர சிபிஐ மறுப்பு தெரிவித்தது. மேலும், மனுவை தள்ளுபடி செய்து வாதத்தை முடிக்க உத்தரவிட்டது.

அதேபோல, செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோரின் வாதத்தையும் ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய அழகு திருநாவுக்கரசு சமீபத்தில்தான் தி.மு.க.வில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

--------------------
அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வாங்கித் தந்ததே நான்தான் - சொல்கிறார் வீரபாண்டி ஆறுமுகம்..!

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டையும், அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்ததே நான்தான். ஆனால் பழசை மறந்து விட்டார் அன்புமணி, மலிவான அரசியலை நடத்துகிறார் என்று பாய்ந்துள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,  “சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார் அன்புமணி. அது பா.ம.க கொண்டு வந்தது அல்ல. 2004-ல் ஆ.ராசா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எயிம்ஸ் போல இந்தியாவில் 5 இடத்தில் மருத்துவமனை கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார்.

அதில் திருச்சியும் ஒன்று. அது காபினெட்டில் முடிவாகி பார்லிமென்ட்டிலும் பேசி முடிவான பின்புதான் சுகாதாரதுறைக்கு அன்புமணி அமைச்சரானார். அப்போது அவரிடம் ஏப்பா திருச்சியில் உள்ளத சேலத்துக்கு கொண்டு வந்தால் சிறப்பா இருக்குமே என்று சொன்னேன். சரிங்க அங்கிள் என்றார்.

இப்போ அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை அப்போது அங்கிள் என்றுதான் கூபிடுவார். அவர் திருச்சியில் உள்ளதை மாற்றும்படி சொல்லாமல் சேலத்திற்கு என்று தனியாக திட்டமிட்டார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்தார்.

பின்பு ராசா 'ஏற்கனவே திருச்சியில் அப்ரூவல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பிரதமருக்கு முறையாக சொல்லாமல் அன்புமணி புதிய ஒன்றுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என புகார் கொடுத்தார். அப்பொழுது அமெரிக்கா போயிருந்த அன்புமணி பதறிப்போனார். உடனே அவர், அங்கிள், ராசா பிரதமரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று புலம்ப, அதன்பின் நான் ராசாவிடம் பேசினேன். பின்பு தலைவரிடமும் பேசி ராசாவை புகாரை வாபஸ் பண்ண வைத்தோம்.

அதன்பின் தான் திருச்சிக்கு போக இருந்த மருத்துவமனை சேலத்திற்கு வந்தது. தலைவர், உனக்கு வேண்டுமானால் மாநில நிதியில் தனியா அதே இடத்தில் மருத்துவமனை கட்டிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லிதான் ராசாவை சம்மதிக்க வைத்தார்.

நிலைமை இப்படி இருக்க, பா.ம.க. உரிமை கொண்டாடுவதில் எந்த நியாமுமில்லை. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சேலம் வருவதற்கு துரும்புகூட பா.ம.கவிற்கு சம்மந்தமில்லை.

ஆனால், தான்தான் கொண்டு வந்தேன் என்று சீப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் அன்புமணி. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி மந்திரியாகவே நான்தான் காரணம். நான்தான் ராஜ்ய சபா சீட் வாங்கி தந்தேன்.

மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதுன்னு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கிளம்ப இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் முன்னாடி வந்து நின்றார். தலைவர்தான், பொறுமை காக்க சொன்னார். பின் நாங்கள் எல்லாம் பேசித்தான் மத்திய அரசு அத்துறையை அன்புமணிக்கு தந்தது.

பழசை மறக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.3 கோடி மாநில அரசு தந்தது. அது இல்லாமல் நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை கொடுத்திருக்கிறோம். இதன் மதிப்பு 229 கோடி ஆகும். அதே போல் மற்ற இடங்களை விட இங்குதான் முதலில் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளனர். இதை என்ன சொல்வார் அன்புமணி..?” என்று கேள்வியெழுப்பினார் வீரபாண்டியார்.

---------------------

டாஸ்மாக் கடைகளை வழக்கம்போல திறந்து வைக்க அரசு தீவிரம்

டாஸ்மாக் பணியாளர்களின் ஸ்டிரைக் இன்று நடைபெறுவதையொட்டி வழக்கம் போல் கடைகளை திறந்து வைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. வேலைக்கு வராத, வருபவர்களை தடுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6,717 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 36 ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்தது. இதற்கு விளக்கம் கேட்டு அரசின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே தொடர் போராட்டம் நடத்தப் போவதில்லை என்றும், இன்று (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தை நடத்தப் போவதாக டாஸ்மாக் பணியாளர்கள் அறிவித்தனர்.

வேலை நிறுத்த போராட்டத்தை அவர்கள் அறிவித்தபோதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இன்று திறந்து வைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் பெரும்பாலான ஊழியர்கள் இன்று பணிக்கு வழக்கம் போல் வருவார்கள் என்றும் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே அனைத்து கடைகளின் சாவிகளை வாங்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. பணிக்கு ஊழியர்கள் வராத இடங்களில் மக்கள் நல பணியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தை சேர்ந்த ஊழியர்களை கொண்டு வழக்கம் போல் கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் தாசில்தார், வருவாய்த்துறை ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். எல்லா கடைகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. வேலை நிறுத்தம் அன்று பணிக்கு வராத, பணிக்கு வரும் ஊழியர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பி.எஸ்.சவுந்தரபாண்டியன் கூறும்போது, "டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டப்படி நடக்கும். இந்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசின் எந்த நடவடிக்கையாலும் ஒடுக்க முடியாது. எப்படிப்பட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள டாஸ்மாக் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்'' என்றார்.

கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, இது தொடர்பாக நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் சுமார் 400 `டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. `டாஸ்மாக்' ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க சென்னை முழுக்க போலீசார் குவிக்கப்படுவார்கள். முக்கியமான இடங்களில் உள்ள `டாஸ்மாக்' கடைகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். மற்ற இடங்களில் `டாஸ்மாக்' கடைகள் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து `டாஸ்மாக்' நிர்வாக இயக்குனரோடு பேசியுள்ளேன். `டாஸ்மாக்' அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். திறந்திருக்கும் `டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடச் சொல்லும் ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சஞ்சய் அரோரா தெரிவித்தார்.

------------------

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது  -  கருணாநிதி அறிக்கை

"அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் பார்க்காமல், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளது'' என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் பணியாளர்கள் அ.தி.மு.க. ஆட்சியிலே நியமிக்கப்பட்டவர்கள் என்ற போதிலும், கழக அரசு 2006-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, அவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பி விடாமல் அவர்களுக்கு தொடர் பணி வழங்கியது.

அவர்கள் நியமிக்கப்பட்டபோதே பகுதிநேர / ஒப்பந்த / தற்காலிக ஊழியர்களாக, தொகுப்பூதியத்தில்தான் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டபோது, மேற்பார்வையாளர்களுக்கு மாதம் 2000 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 1000 ரூபாயும் தொகுப்பூதியமாக அ.தி.மு.க. ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

2006-ம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.3000மும், விற்பனையாளர்களுக்கு ரூ.2000மும், மதுக்கூட உதவியாளர்களுக்கு ரூ.1500-ம் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த அரசு பதவியேற்ற பின், இந்த பணியாளர்களுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் மேற்பார்வையாளர்களின் ஊதியத்தை 3000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், விற்பனையாளர்களின் ஊதியத்தை 2000 ரூபாயிலிருந்து 2,400 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளரின் ஊதியத்தை 1,500 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

2009-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் இந்த ஊதியம் மீண்டும் உயர்த்தப்பட்டு மேற்பார்வையாளர்கள் ரூ.4000, விற்பனையாளர்கள் ரூ.2,800, மதுக்கூட உதவியாளர்கள் ரூ.2,100 மாத ஊதியமாக பெற்று வருகிறார்கள்.

மதுபான கடைகளின் பணி நேரம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 16 மணி - இந்த ஆட்சி பணியேற்ற பின் தற்போது 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஷிப்ட் முறையில் 8 மணி நேரமே தற்போது பணி செய்து வருகிறார்கள். சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறையும் விடப்படுகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறையில் இருந்த ஆண்டுக்கு ஐந்து நாள் பொது விடுமுறையைத் தவிர - இந்த ஆண்டு மே முதல் நாளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு - அன்றைய தினம் பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் காப்புத் தொகைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் வட்டி ஏதும் வழங்கப்படவில்லை. கழக ஆட்சியில்தான் 1-7-2007 முதல், ஆண்டு ஒன்றுக்கு 3.5 சதவிகிதம் வட்டி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்பார்வையாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ1,750-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.525ம், மற்றும் மதுக்கூட உதவியாளர்களுக்கு ரூ.350-ம் வழங்கப்படுகிறது. இதுவரை மொத்த பணியாளர்களுக்கும் இதற்காக ரூ.7.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறையில் இருந்த முந்தைய ஊக்கத் தொகைத் திட்டத்தின்படி குறிப்பிட்ட பணியாளர்கள் மட்டுமே இந்த பயனை பெற்று வந்தனர். 2005-2006-ம் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.26 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு அமலில் இருந்த ஊக்கத் தொகை திட்டம், இந்த அரசு பதவியேற்ற பின் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் திருத்திஅமைக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆட்சியில் 2009-10-ம் ஆண்டில் இந்தப் புதியத் திட்டத்தின்படி ஊக்கத் தொகையாக ரூ.33.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் 2005-06-ல் போனஸ் மற்றும் கருணைத் தொகை 10 சதவிகிதமாக ரூ.8 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போனஸ் மற்றும் கருணைத் தொகை 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 2009-10-ம் ஆண்டில் ரூ.18.64 கோடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பணியாளர் இறக்க நேரிட்டால் குடும்ப நல நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆட்சிக் காலத்தில் ஜுலை 2007 முதல் இந்த தொகை ரூபாய் ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தி.மு.க. ஆட்சியில்தான் முதல் முறையாக 1-11-2009 முதல் மேற்பார்வையாளர்களுக்கு மாதாந்திர பயணப்படி ரூ.150 முதல் ரூ.250 வரை அளிக்கப்படுகிறது.

இந்த அளவிற்கு டாஸ்மாக் பணியாளர்கள் எந்த ஆட்சியிலே பணியிலே நியமிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் பார்க்காமல், எந்த அளவிற்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியுமோ, அந்த அளவிற்கு கழக ஆட்சியில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் அந்த பணியாளர்களில் ஒரு சிலர் மட்டும் போராட்டம் என்கிறார்கள்.. வேலைநிறுத்தம் என்கிறார்கள்.. அரசை மிரட்டி பார்க்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கடந்த காலத்தையும், இந்த காலத்தையும் சீர்தூக்கி பார்த்து பெரும்பாலோர் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்வது? ஏதோ பிரசாரத்தை, அதிலும் குறிப்பாக தி.மு.க. அரசாங்கத்தை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் அந்தக் குரலோடு இணைந்து கொண்டு நமது அரசைக் குதறுவதைத் தொழிலாக கொண்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்தச் சிலர் "அம்மாவுக்கு ஆதரவு'' என்ற அகலமான நீண்ட சுவரின் முன்னால் நின்று கொண்டு ஓங்கார கூச்சலிடுகிறார்கள். ஆனால் அந்தக் கூச்சல் அந்த சுவரிலே மோதி "சூன்யக்காரி! சூழ்ச்சிக்காரி! சண்டாளி!'' என்றெல்லாம் எதிரொலிக்கிற ஓசையை இந்த நாடு கேட்டு சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

--------------------

காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து - பரிசீலிக்க தயார் என்று மன்மோகன்சிங் அறிவிப்பு

கருத்து ஒற்றுமை ஏற்பட்டால் காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது பற்றி பரிசீலிக்க மத்திய அரசு தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார்கள்.

மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத், பரூக் அப்துல்லா ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் 4 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.

காஷ்மீரில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், ஜனநாயக வரைமுறைகளுக்கு உட்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அப்போது மன்மோகன்சிங் கூறினார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை தான் புரிந்துகொள்வதாகவும், அங்குள்ள இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்றுதான் பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும், அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்கள் அமைதி முயற்சிக்கு இடையூறாக அமையும் என்றும் மன்மோகன்சிங் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது பற்றி அரசியல் சாசன வரைமுறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

---------------------
“தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுக் கொள்ளுங்கள்'' - காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து மத்திய மந்திரியின் பதில்

காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான எந்தவித விசாரணையையும் அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு நடத்த தயார் என்றும் செலவுகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறலாம் என்றும் மத்திய விளையாட்டு துறை மந்திரி எம்.எஸ்.கில் தெரிவித்தார். இதையடுத்து, பாராளுமன்றத்தில் இருந்து பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

டெல்லியில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றன.

போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடந்தது. டெல்லி முழுவதும் கட்டிட இடிபாடுகள் கிடப்பது பற்றியும் விளையாட்டு மைதானங்கள் இன்னமும் முழுமையாக தயாராகாமல் இருப்பது பற்றியும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இந்த விவாதத்துக்கு பதிலளித்து, மத்திய விளையாட்டு துறை மந்திரி எம்.எஸ்.கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவது என 2003-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியின்போது முடிவு செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி, விளையாட்டு போட்டிகளை நடத்த மூன்று வழியான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்படுகளை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரதிநிதியாக, காமன்வெல்த் ஒருங்கிணைப்புக்குழு செயல்படும். அந்த குழுவுக்கு மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கும்.

கடந்த 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்தபோது ராஜீவ் காந்தி வசம் ஒட்டு மொத்த கட்டளை பொறுப்பும் இருந்தது. தற்போது, அப்படி இல்லை. அதிகாரங்கள் சிதறி விட்டன.

தற்போது, பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் சார்பாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு இருக்கும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. விளையாட்டுத் துறை மந்திரி என்ற முறையில் எனது பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கிறேன்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக விரைவில் 12 ஆயிரம் வீரர்கள் வருகை தர உள்ளனர். மாலை மாற்றுவதற்காக, வாசலில் மணமகன் காத்திருக்கும் நிலையில் வேறு விஷயங்களுக்கு இடம் தரக் கூடாது. எனவே, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எந்தவித விசாரணையாக இருந்தாலும், அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகு நடத்த தயாராக இருக்கிறோம். அக்டோபர் 15-ந் தேதிக்கு பிறகும் எங்களுடைய அரசு இருக்கும். எந்தவொரு பிரச்சினையையும் மூடி மறைக்கவோ அல்லது ஒதுக்கவோ விரும்பவில்லை. இணை இயக்குனர் தர்பாரி மற்றும் சில அதிகாரிகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உறுதியாக செயல்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளுக்கான மைதானங்களை தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவிலேயே, அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். இன்னும் 10 நாட்களில் அவற்றை எம்.பி.க்கள் பார்வையிடலாம்.

இவ்வாறு எம்.எஸ்.கில் கூறினார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர் பேசியபோது, பல்வேறு எதிர்க்கட்சியினரும் குறுக்கிட்டனர். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் சில எம்.பி.க்கள் குறுக்கிட்டு, "காமன்வெல்த் போட்டி கமிட்டி உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய நேரடி பதிலை அளிக்க வேண்டும்'' என்று எம்.எஸ்.கில்லிடம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த கில், `அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். தற்போது பொறுமையாக கேளுங்கள்' என தெரிவித்தார். ஆனால், பின்னர் அவர் கூறும்போது, "எந்தவொரு குறிப்பிட்ட கேள்விக்கும் தேவையான பதிலை எந்த உறுப்பினராவது எதிர்பார்த்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்'' என்றார்.

இதனால், பா.ஜனதா எம்.பி.க்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து, "பாராளுமன்றத்தை எம்.எஸ்.கில் அவமதித்துவிட்டார். பாராளுமன்றத்தின் கவுரவத்தைவிட தகவல் அறியும் உரிமை சட்ட நடைமுறை உயர்வானது என்று பாராளுமன்றத்திலேயே அவர் தெரிவிக்கிறார்'' என்றார்.

அதைத் தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்து நேரடியாக பதில் சொல்லாததை கண்டித்து பா.ஜனதா எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, `பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை' என கோஷம் எழுப்பியபடியே பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் வெளியேறினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது.

---------------------

மத நல்லிணக்கம் மிகுந்த மாநிலம் தமிழகம் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பாராட்டு

மத நல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசினார்.

வக்கீல்கள் மிலாது கூட்டமைப்பு சார்பில் மிலாது நபி கொண்டாட்டம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-

நாம் செய்யக் கூடிய பணி, முதலில் நமது மனச்சாட்சியை திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். கடந்த 14 ஆண்டுகள் நீதிபதி பணியில் இதுவரை என் மீது அவச்சொற்கள் கூறப்பட்டதில்லை. இந்த கூட்டமைப்பில் சாதி, சமய வேறுபாடில்லாமல் உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதும், எந்த வேறுபாடு பார்க்காது ஏழை மக்களுக்கு அதன் மூலம் உதவி செய்கின்றனர் என்பதும் மிகுந்த சந்தோஷம். நம்மைப் பற்றிய நபிகள் நாயகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான்.

நாகூர் தர்க்காவையும், சென்னை அண்ணாசாலை தர்காவையும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பட்ட மக்கள் சென்று பார்வையிடுகின்றனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் நிலவுவதை என்னால் பார்க்க முடிகிறது.

உலகத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பெண்கள். உலகத்தில் போர்கள், கலவரங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும்தான் என்பது மிகுந்த வேதனை. உலகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். அதுபோல் இஸ்லாமிய சமுதாயத்தில்தான் படிக்காதவர்கள், குறிப்பாக பெண்கள் அதிகம் உள்ளனர்.

படிப்பறிவு இல்லாததுதான், சமுதாயம் பிற்பட்டு போகும் நிலையை ஏற்படுத்துகிறது. படிப்பு உள்ளிட்ட அம்சங்களில் தங்களுக்கு உரிமை உள்ளது என்பதை இஸ்லாமியர்கள் என்று உணர்கிறார்களோ, அதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாது. நான் மிகுந்த கடவுள் பக்தி உடையவன். அப்படிப்பட்ட பக்தியுள்ளவன் தவறு செய்ய மாட்டான். கடவுளும் அவனை தவறு செய்யவிட மாட்டார். இது உலகமெங்கும் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

----------------------------

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ரெயில்வே மந்திரி மம்தா பேசுவதா? - பாராளுமன்றத்தில் பா.ஜனதா, இடதுசாரிகள் அமளி

மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மத்திய மந்திரி மம்தா பேசியது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க கோரி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜனதா மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மத்திய ரெயில்வே மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் உள்ள லால்கார் நகரில் மாபெரும் பேரணி நடத்தினார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், `மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் செர்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு உண்மையிலேயே வருத்தம் அடைந்தேன்` என கூறினார்.

மேலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாராளுமன்றம் நேற்று காலையில் கூடியதும் பா.ஜனதா மூத்த தலைவரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கோபிநாத் முண்டே எழுந்து, `கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மம்தா பேசியது குறித்து விவாதிக்க வேண்டும்` என வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக இடதுசாரி கட்சி எம்.பி.க்களும் கோஷம் எழுப்பினர்.

இதனால், பாராளுமன்றத்தில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் அமளி நீடித்தது.

பின்னர், கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய முண்டே, ``மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ஒருவரே பேசும்போது, பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கையை நிறுத்துமாறு ரெயில்வே மந்திரி பேசி உள்ள நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு தொடருகிறதா?`` என கேள்வி எழுப்பினார்.

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பன்சா கோபால் சவுத்திரி பேசும்போது, ``மாவோயிஸ்டுகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மறைமுகமான உறவு இருந்து வருகிறது. மம்தா கூறுவதால், மாவோயிஸ்டு தீவிரவாதி ஆசாத் என்கவுண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுமா?`` என்றார்.

கூட்டணி கட்சித் தலைவரான மம்தா பேச்சால் மத்திய அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டதால், அவை முன்னவரும் நிதி மந்திரியுமான பிரணாப் முகர்ஜி எழுந்து, ``இந்த விவகாரம் குறித்து ரெயில்வே மந்திரியிடம் விளக்கம் பெற்று, அதை நன்கு ஆய்வு செய்த பிறகே மத்திய அரசால் எதுவும் சொல்ல முடியும்`` என்றார்.

டெல்லி மேல்-சபையிலும் இந்த பிரச்சினை நேற்று எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி எழுந்து, `கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு மம்தா பிரச்சினை குறித்து பேச நோட்டீஸ் அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள் அவரை பேசவிடவில்லை.

அமளி நீடித்ததால் பகல் 12 மணி வரையிலும் மேல்-சபையை, தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.

பின்னர், அவை கூடியதும் பேசிய அருண் ஜெட்லி, ``நக்சலைட் தீவிரவாதமே நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என பிரதமர் கூறுகிறார். ஆனால், அவருடைய மந்திரிகளில் ஒருவரே மாவோயிஸ்டுகளை பகிரங்கமாக ஆதரித்து பேசுகிறார். லால்கார் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தகர்ப்பு வழக்கில் தேடப்படும் மாவோயிஸ்டு இயக்க தளபதி ஒருவர், மம்தாவின் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். எனவே, இது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும். இனியும் அவர் அமைதியாக இருப்பது ஏன்? அமைதியை சில நேரங்களில் ஒரு ஆயுதமாக கொள்ளலாம். ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் பயங்கர சதி இருப்பதை அனுமதிக்க முடியாது`` என்று தெரிவித்தார்.

அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய இணை மந்திரி தினேஷ் திரிவேதி எழுந்து, `லால்கார் கூட்டத்தை மாவோயிஸ்டுகள் ஏற்பாடு செய்யவில்லை` என்றார். அதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, ``நாட்டின் கொள்கை குறித்த விஷயத்தில் உள்துறை மந்திரி அல்லது பிரதமர் மட்டுமே குறுக்கிட முடியும். மேல்-சபை உறுப்பினர் கிடையாது என்பதால் எம்.பி. என்ற முறையிலும் திரிவேதி குறுக்கிட உரிமை கிடையாது. அவருடைய துறை தொடர்பான விவாதம் என்றால் குறுக்கிட்டு பேசலாம்`` என்றார்.

இதற்கிடையே, பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரிதிவிராஜ் சவான், `இந்த பிரச்சினை குறித்து முழு தகவல்களையும் சேகரித்து, அதுபற்றி ஆய்வு செய்த பிறகு சபையில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும்` என அறிவித்தார். ஆனால், அதை பா.ஜனதா எம்.பி.க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதமர், உடனடியாக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

------------------------
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி நீட்டித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், தாழ்த்தப்பட்ட-பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுதிப்பினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது.

மண்டல் கமிஷன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக, கடந்த 1993-ம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பொது நல அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 3 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் (ஜுலை) 13-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதன்படி, தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஆண்டுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

"தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீதம் அளவுக்கு உள்ளனரா? என்பது போன்ற விவரங்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிசீலித்து இட ஒதுக்கீடு பிரச்சினையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை எதிர்த்து, `நுகர்வோர் நல கவுன்சில் குரல்' என்ற பொது நல அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவில், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதியை நீடித்து இருப்பது, மண்டல் கமிஷன் வழக்கில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் இட ஒதுக்கீடு அளவு பற்றி சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்றும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. "18 ஆண்டுகளுக்கு முன்பு மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் (கிரீமி லேயர்) விவரம் குறித்து தமிழக அரசு இன்னும் அடையாளம் காணவில்லை'' என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, மறு ஆய்வு மனுக்களைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அறியாமல், நீதிபதிகளே தங்கள் அறையில் முடிவு எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

---------------------------------

கூட்டணி பற்றி முடிவு செய்ய டாகடர் ராமதாசுக்கு அதிகாரம்

கூட்டணி பற்றி பேசி முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பா.ம.க. நிர்வாகக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காடுவெட்டி குருவை தீர்த்துக்கட்ட சதி நடப்பதாகவும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக பா.ம.க. தலைமை நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரியலூர் மாவட்டம், அரியலூரில் ஜுலை 28-ந் தேதி வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ. குரு அரசுக்கு எதிராக வன்னிய மக்களை தூண்டிவிடும் வகையில் பேசியதாக அவர் மீது மிகவும் காலம் கடந்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ, 153-ஏ, 153-பி மற்றும் 555 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினரைக் கொண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவர் தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனமக்கள் தனி இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதையும், அதன் விளைவாக அவர்கள் தனி இடஒதுக்கீடு பெற்றதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

இப்படி, குஜ்ஜார் இனமக்களின் போராட்டத்தை நினைவு கூர்ந்தது இங்குள்ள வன்னிய மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுகின்ற நோக்கத்தில் அல்ல. போராடினால்தான் சலுகை கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில்தான் குஜ்ஜார் இனமக்களின் போராட்டத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். இதில், மக்களை தூண்டிவிடும் எண்ணம் துளியும் இல்லை.

எனினும், நமது மாநிலத்தில் ஏதாவது ஒரு தேர்தல் நடைபெறும்போதெல்லாம் அல்லது தேர்தல் நெருங்கி வரும்போதெல்லாம் ஜெ. குரு மீது ஏதாவது ஒரு வகையில் வழக்குப்போடுவது என்பது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து கொண்டு வருகிறது.

வன்னியர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்துவரும் குரு மீது வேண்டும் என்றே வழக்குகளை பதிவு செய்து தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்றும், இந்த வழக்குகள் மூலம் அவரை தீவிரமாகச் செயல்படவிடாமல் முடக்கிப்போட முயற்சி நடக்கிறது என்றும் பரவலான சந்தேகம் வன்னிய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இத்துடன், புதிதாக அவரை தீர்த்துக்கட்டிவிடவும் இப்போது திட்டம் தீட்டப்பட்டு அதற்காக ஒரு கூலிப்படையும் ஏவிவிடப்பட்டிருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்திருக்கிறது. இந்தச் சதியின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சக்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தக் கூலிப் படையினரின் முதல் முயற்சி அண்மையில் தற்செயலாகவே தோல்வியில் முடிந்திருக்கிறது. இதுகுறித்த தகவல் மாநில ரகசிய காவல்துறையின் மூத்த அதிகாரிகளுக்கு உரியமுறையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் மாநில உள்துறைச் செயலாளர், மாநிலக் காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கும் இந்தச் சதி குறித்த புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. அவருக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொறுப்பும், அவரது உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கும், அரசுக்கும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மீறி ஜெ. குருவுக்கு ஆபத்து ஏதேனும் நேரிடுமானால், அதற்கான முழு பொறுப்பும் காவல்துறையையே சேரும் என்று நினைவூட்ட விரும்புகிறோம்.

அத்துடன் ஜெ. குரு மீது வேண்டும் என்றே போடப்பட்டுள்ள வழக்குகளை காவல்துறையினர் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கடந்த பா.ம.க. பொதுக்குழுவில் கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரத்தின் அடிப்படையில், தொடர்ந்து கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்க டாக்டர் ராமதாசுக்கு இந்த நிர்வாகக் குழுவும் முழு அதிகாரம் வழங்குகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

---------------------

மேல் முறையீடு செய்த 6,400 பள்ளிகளிலும், கல்விக் கட்டணத்தில் மாற்றம் இல்லை - நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவிப்பு

கல்விக் கட்டணம் தொடர்பாக மேல் முறையீடு செய்த 6,400 தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இந்த ஆண்டு மாற்றம் இல்லை. புதிதாக நிர்ணயிக்கப்படும் கட்டணம் அடுத்த ஆண்டுதான் அமலாகும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ஒரு கமிட்டியை அமைத்தது.

அந்த கமிட்டி, பள்ளி அமைந்துள்ள இடம், அங்குள்ள உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்கு சிபாரிசு செய்தது.

நீதிபதி கே.கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று புதிய கல்வி கட்டணத்தை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, மேல்நிலைப்பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், உயர்நிலைப்பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரமும், நடுநிலைப்பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வசூலிக்கலாம்.

இதேபோல், நகர்ப்புற தொடக்கப் பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரமும், கிராமப் புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகள் அதிகபட்சமாக ரூ.3,500-ம் வசூலிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய கல்விக் கட்டண விவரங்கள் தொடர்பாக 10,934 பள்ளிகளுக்கும் கடந்த மே மாதம் ஆணை வழங்கப்பட்டது. இந்த கல்வி ஆண்டிலேயே புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இவற்றில் 4,534 பள்ளிகள் புதிய கட்டணத்தை ஏற்றுக்கொண்டன. கட்டண உயர்வு தொடர்பாக மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 6,400 பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யுமாறு மேல்முறையீடு செய்தன.

அரசு நிர்ணயித்த கட்டணம் மிகக் குறைவாக உள்ளது, இந்த குறைந்த கட்டணத்தை வைத்துக் கொண்டு ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியாது. மாதாந்திர பராமரிப்புச் செலவினங்கள் மற்றும் பள்ளிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த கட்டணம் போதுமானது அல்ல, குறைந்த கட்டணம் நிர்ணயித்திருப்பது மாணவர்களின் கல்வித் தரத்தை வெகுவாக பாதிக்கும், தொடர்ந்து பள்ளிகளை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று அந்த பள்ளிகள் முறையிட்டன.

அந்த பள்ளிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டணம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி கூறியிருந்தது. புதிய கல்விக் கட்டணம் எப்போது வெளியிடப்படும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமின்றி பெற்றோரும் மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், மேல் முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என்றும், திருத்தப்பட்ட புதிய கல்வி கட்டணம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யக்கோரி 6,400 மனுக்கள் வந்தன. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மேல்முறை செய்துள்ள 6,400 பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகளை தர நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்வது பற்றி முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்து முடிவெடுக்கப்படும் புதிய கல்விக் கட்டணம் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து (2011-2012) நடைமுறைப்படுத்தலாம் என்று கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

----------------------------

துணைவேந்தர் மீதான தாக்குதல் மற்றும் உமாசங்கர் மீதான நடவடிக்கைக்கு வைகோ கண்டனம்

நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான தாக்குதல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான நடவடிக்கைக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தனக்குத் தனி மரியாதை செய்யவில்லை என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மலைராஜா துணைவேந்தர் காளியப்பன் அறைக்குள் சில குண்டர்களுடன் சென்று தாறுமாறாக ஏசியதோடு அவரைத் தாக்கி இருக்கிறார்.

தடுக்க முயன்ற உடல்கல்வி இயக்குநர் தேவதாசையும், சட்டமன்ற உறுப்பினருடன் சென்ற குண்டர்கள், கடுமையாக அடித்து உள்ளனர். சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயலுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

நேர்மையாகச் செயல்பட்ட ஒரே காரணத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் தி.மு.க. அரசால் பழிவாங்கப்பட்டு உள்ளார். நேர்மையான அந்த அதிகாரி மீது சொத்துக்குவிப்பு வழக்கு என்ற ஒரு பொய் வழக்கையும் அரசு போட்டு உள்ளது.

ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் இருந்து தன் அறிவாற்றலாலும், உழைப்பாலும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாகத் தேர்வு பெற்று நேர்மையாகப் பணிபுரிந்த உமாசங்கர் மீது தி.மு.க. அரசு மேற்கொண்டு உள்ள பழிவாங்குகின்ற நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். அவரது பணி இடைநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்து பொய்யாக அவர் மீது புனையப்பட்டு உள்ள வழக்கையும் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-------------------------

பட்டா வழங்கப்பட்டவர்களை உரிய நிலங்களில் குடியமர்த்தும் போராட்டம் - தா.பாண்டியன் பேட்டி

நில உச்சவரம்பு சட்டப்படி பட்டா வழங்கப்பட்டவர்களை உரிய நிலங்களில் குடியமர்த்தும் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடத்தி வருகிறது என்று தா.பாண்டியன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

ஆகஸ்டு 9-ந் தேதி `வெள்ளையனே வெளியேறு' இயக்க தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை தொடங்கியிருக்கிறோம்.

தமிழக அரசு அண்மையில் குடிசை இல்லாத தமிழகத்தை அமைப்போம் என்று அறிவித்து அதற்காக 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு 5 பேர் என்றாலும் ஒரு கோடியே 5 லட்சம் பேர் இன்னும் குடிசையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது 7 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படி என்றால் 2016-ல்தான் குடிசைகளற்ற தமிழகம் வரலாம்.

சொந்த குடியிருப்பு இல்லாத அனைவருக்கும் இந்த வருட இறுதிக்குள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும். பட்டா இல்லாமல் குடிசையில் வாழ்கிறவர்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.

புறம்போக்கு நிலங்களில் குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் தருவோம் என்பது தி.மு.க. வாக்குறுதி. உண்மையில் நிலமில்லாத மக்களை அத்தகைய புறம்போக்கு நிலங்களில் நாங்கள் குடியமர்த்துவோம். அதற்கு அவர்கள் பட்டா வழங்கட்டும். புறம்போக்கு நிலம் இல்லாத இடங்களில் தனியாரிடம் சில வருடங்களாக பயிரிடப்படாத நிலம் இருந்தால் அதை கையகப்படுத்தி அதனை வழங்க வேண்டும். அதை நாங்கள் அடையாளம் காட்டுவோம். காட்டியும் எடுக்கவில்லை என்றால் நாங்களே மக்களை குடியேற்றுவோம்.

நில சீர்திருத்த சட்டப்படி 1981-ல் உபரி நிலம் எடுக்கப்பட்டதாக கூறி, அதனை நிலமற்ற ஏழைகளுக்கு நஞ்சை என்றால் 3 ஏக்கர், புஞ்சை என்றால் 5 ஏக்கருக்கு மிகாமலும் வழங்கியதாக எழுதப்பட்டிருக்கிறது. 82-ல் அவர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. ஆனால் திருவாரூர், நாகப்பட்டினம் நீங்கலாக எந்த மாவட்டத்திலும் எந்த இடத்திலும் இந்த ஆவணம் பெற்றவர்கள் நிலத்திற்குள் நுழைய முடியவில்லை.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் தகவல் அறியும் சட்டப்படி பல்லாயிரம் ஏக்கர் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆவணம் உள்ளவர்களை அந்த நிலத்தில் குடியேற கலெக்டரிடம் வலியுறுத்துவோம். அவர் செய்யாவிட்டால் நாங்களே குடியமர்த்துவோம், பயிரிட வைப்போம்.

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 குறைந்தபட்ச கூலி என்றால் மாதம் 26 நாட்களுக்கு அவருக்கு ரூ.2600 கிடைக்கிறது. ஆனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.2000தான்.

இதன் மூலம் குறைந்தபட்ச கூலி சட்டத்தையே தமிழக அரசு மீறுகிறது. அவர்களது போராட்டத்தை ஆதரிப்பதுடன், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அதிகாரி உமாசங்கரை பதவி நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அவர் மீது விசாரணை நடத்தி, உண்மையாக இருக்குமானால் தண்டனை வழங்கலாம். இப்போது நடவடிக்கைக்கு பின்னர் அவர் மதம் மாறியிருக்கிறார் என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் நீங்கலாக உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசலாம் என்பதுதான் மத்திய தலைமை எங்களுக்கு வழிகாட்டியுள்ள நடைமுறை. அதன்படி தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

---------------------------

நித்யானந்தாவின் பெண் சீடர் பரபரப்பு புகார் - போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு

நித்யானந்தா சாமியாரின் பெண் சீடர் ஒருவர் நேற்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கிரிஜா என்ற சங்கீதா. இவர், நித்தியானந்தா சாமியாரின் சீடர் ஆவார். நேற்று காலையில் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரணை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனது 2 சகோதரர்கள் தங்க நகைகள் செய்யும் வேலை செய்கிறார்கள். நான் கடந்த 2-1/2 வருடங்களாக சன்னியாசினியாக மாறி நித்யானந்தா சாமியாரின் பெங்களூர் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். பி.பி.ஏ. பட்டப் படிப்பு படித்துள்ள நான், ஆசிரமத்தில் ஆன்மிக சேவை புரிந்தேன்.

நடிகை ரஞ்சிதாவோடு இணைத்து நித்யானந்தா மீது தவறான குற்றச்சாட்டுகள் கிளம்பியவுடன் எனது பெற்றோர்கள் வற்புறுத்தலின் பேரில், நான் திருவொற்றியூர் வந்துவிட்டேன்.

இப்போது எனது சன்னியாசினி கோலத்தை கலைத்துவிடும்படி எனது பெற்றோர் சொல்லுகிறார்கள். எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். நான் திருமணத்துக்கு மறுத்துவிட்டேன். நான் மீண்டும் ஆசிரமம் செல்ல விருப்பமாக உள்ளேன்.

ஆனால், எனது பெற்றோர் ஆசிரமத்துக்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆசிரமம் சென்றால் நித்யானந்தா மீது புகார் கொடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சியதால் நான் எங்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

எனது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது. அதன்படி நான் மீண்டும் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு செல்லுகிறேன். நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ஒரு ஆசிரமவாதியாகத்தான் இருந்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் என்னைப் போல் 60 பெண் சீடர்கள் உள்ளனர். சுமார் 200 பேர் அங்கு தங்கியிருக்கிறார்கள். நித்யானந்தாவின் ஆசியோடுதான் நான் சன்னியாசம் பெற்றுள்ளேன்.

ஒவ்வொரு மனித உடலிலும் 7 சக்கரங்கள் உள்ளது. 8-வது சக்கரமாக ஆனந்தகந்தம் என்ற சக்கரமும் மனித உடலில் இருக்கிறது. நான் இந்த 8 சக்கரங்களையும் கற்றுள்ளேன். நித்யானந்தாவிடம் நோய்களை குணப்படுத்தும் ஹீலர் என்ற முறையையும் கற்றுள்ளேன். ஹீலர் மூலம் புற்றுநோய்களைகூட குணப்படுத்த முடியும். ஆசிரமத்துக்கு சென்று மீண்டும் எனது சன்னியாச வாழ்க்கையை தொடங்க உள்ளேன். எனக்கு உரிய பாதுகாப்பு கேட்டுதான் நான் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்பாடா..! எனக்கே மூச்சு வாங்குது.. ஏதோ திக்கித் திணறி எடிட் செஞ்சு முடிச்சு போட்டுட்டேன்..!

மறக்காமல் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து இதனை வரவேற்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

48 comments:

ஷங்கர் said...

அண்ண்ன ....,
கண்ணை கட்டுது அண்ணே ....,:))))

ஷங்கர் said...

////எழுதறதுக்கு மேட்டர் இல்லை..! என்னதான் செய்யறது..? அதுதான் இப்படி..! ////

என்னது !!!! எழுதறதுக்கு மேட்டர் இல்லைனாலும் இப்படியா !!!!!!!!மேட்டர் கிடைச்சுதுன்னா ...,:))))))))

டுபாக்கூர் பதிவர் said...

பாவம் அந்த கீபோர்ட் :))

Menaga Sathia said...

//அண்ண்ன ....,
கண்ணை கட்டுது அண்ணே ....,:))))// repeat....

மணிஜி said...

மனுஷனாய்யா நீயீ?????????

ஷங்கர் said...

அண்ணே ..,
செறிவுள்ள பதிவு ...எல்லா பூத் ல வோட்டு போட்டாச்சு அண்ணே ....,

" சித் || sid " said...

வாழ்த்த வயதில்லை , வணங்குறேன் ..

அகல்விளக்கு said...

//^ சித் || sid ^ said...

வாழ்த்த வயதில்லை , வணங்குறேன் ..//

நானும்... நானும்....

pichaikaaran said...

ஒங்க உழைப்புக்கு தலை வணங்குறேன் . மிக நன்றாக இருந்தது.

உண்மைத்தமிழன் said...

[[[ஷங்கர் said...
அண்ண்ன ...., கண்ணை கட்டுது அண்ணே ....,:))))]]]

முகத்துல தண்ணி தெளிச்சுக்குங்க ஷங்கர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷங்கர் said...

/எழுதறதுக்கு மேட்டர் இல்லை..! என்னதான் செய்யறது..? அதுதான் இப்படி..!/

என்னது!!!! எழுதறதுக்கு மேட்டர் இல்லைனாலும் இப்படியா !!!!!!!! மேட்டர் கிடைச்சுதுன்னா ...,:))))))))]]]

இதைவிட அதிகமாக வரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபல பதிவர் said...
பாவம் அந்த கீபோர்ட் :))]]]

யார் சாமி நீங்க..? புதுசா இருக்கு..!?

பேரெல்லாம் தினுசா இருக்கு..!?

வெல்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Mrs.Menagasathia said...

//அண்ண்ன ....,
கண்ணை கட்டுது அண்ணே ....,:))))// repeat....]]]

நான் போட்ட பதிலையே ரிப்பீட்டா எடுத்துக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மணிஜீ...... said...
மனுஷனாய்யா நீயீ?????????]]]

ஹி... ஹி.. ஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[^ சித் || sid ^ said...

வாழ்த்த வயதில்லை , வணங்குறேன்.]]]

தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
ஒங்க உழைப்புக்கு தலை வணங்குறேன். மிக நன்றாக இருந்தது.]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷங்கர் said...
அண்ணே .. செறிவுள்ள பதிவு ... எல்லா பூத் ல வோட்டு போட்டாச்சு அண்ணே ....]]]

நன்றி ஷங்கர்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[அகல்விளக்கு said...

//^ சித் || sid ^ said...

வாழ்த்த வயதில்லை , வணங்குறேன் ..//

நானும்... நானும்....]]]

வந்ததுக்கு கும்பிட்டுக்குறேனுங்கோ..!

pichaikaaran said...

Just ten minutes journey from kk nagar. You hesistate to go and watch that film அவளின் உணர்ச்சிகள் . Is there any problem ? Our help needed ?

ஸ்ரீராம். said...

எப்படி சார் டைப் பண்றீங்க.... அசர வைக்கறீங்க...

Unknown said...

அன்பிற்கினிய அண்ணனே ..,

தவறாக நினைக்க வேண்டாம் - இது போன்ற செய்திகளை உங்கள் சொந்த அனுபவத்தையும்,கற்பனையும் கலந்து எழுதினால் சுவையாக இருக்கும்.

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் S.ரமேஷ்.

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
Just ten minutes journey from kk nagar. You hesistate to go and watch that film அவளின் உணர்ச்சிகள் . Is there any problem ? Our help needed?]]]

நோ பார்வையாளன். அதான் அப்பவே சொல்லிட்டனே.. நீங்க போய் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதுங்க.. நான் படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
எப்படி சார் டைப் பண்றீங்க.... அசர வைக்கறீங்க...]]]

கொஞ்சம் டைப்பிங்.. கொஞ்சம் காப்பி பேஸ்ட்.. நிறைய எடிட்டிங்..!

உண்மைத்தமிழன் said...

[[[S.ரமேஷ். said...

அன்பிற்கினிய அண்ணனே..

தவறாக நினைக்க வேண்டாம் - இது போன்ற செய்திகளை உங்கள் சொந்த அனுபவத்தையும், கற்பனையும் கலந்து எழுதினால் சுவையாக இருக்கும்.

நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் S.ரமேஷ்.]]]

எழுதலாம். ஆனால் இதுவே 30 பக்கங்கள்.. இன்னும் நம்ம கருத்தையும் எழுதினா என்ன ஆகும்..?

pichaikaaran said...

"அதான் அப்பவே சொல்லிட்டனே.. நீங்க போய் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதுங்க.."

no ,,, never...

இந்த விமர்சனம் எல்லாம் உங்களை மாதிரி யாரும் எழுத முடியாதுண்ணே... மயில் மயில் தான்.. வான்கோழி வான்கோழிதான்...

இந்த கதையை படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ...
http://pichaikaaran.blogspot.com/2010/08/aunty.html

பிரபல பதிவர் said...

//எழுதலாம். ஆனால் இதுவே 30 பக்கங்கள்.. இன்னும் நம்ம கருத்தையும் எழுதினா என்ன ஆகும்..?///


சேகர் செத்துருவான்

geethappriyan said...

நீங்க உங்க ஸ்டைல்ல எழுதுவதை தான் நாங்க விரும்புறோம்,இது நல்லாயில்லை

தமிழ் உதயன் said...

அண்ணே...

கலக்குங்கள்...ஆனா ஒண்ணு உங்க வலைப்பக்கத்தில் தினமும் பதிவு இல்லைன்னா ரொம்ப கஷ்டமா இருக்கண்ணே... எழுதுங்க கொஞ்சம் சுருக்கி எழுதுங்க...

நன்றி

தமிழ் உதயன்

Sugumarje said...

அப்பாடா..! எனக்கே மூச்சு வாங்குது... எனக்கும் மூச்சுவாங்கிருச்சு... ஐயோடா சாமி, ரொம்மம்மம்ப பொறுமை சார் உங்களுக்கு...

Unknown said...

மொத்தத்தில் எல்லா செய்திகளையும்
கதம்ப மாலையாக தொகுத்து தந்துள்ளீர்கள்.

Raghu said...

ச்சும்மா ஆறு ப‌த்தி கொண்ட‌ ப‌திவு ரெடி ப‌ண்ற‌துக்கே ரெண்டு ம‌ணி நேர‌ம் ஆகுது. நீங்க‌ எப்ப‌டித்தான்...ஸ்ஸ்ஸ்....

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"அதான் அப்பவே சொல்லிட்டனே.. நீங்க போய் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதுங்க.."

no ,,, never...

இந்த விமர்சனம் எல்லாம் உங்களை மாதிரி யாரும் எழுத முடியாதுண்ணே. மயில் மயில்தான். வான்கோழி வான்கோழிதான்.]]]

எப்படியிருந்தாலும் எனக்கு மூடில்லை. நான் போக மாட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...

//எழுதலாம். ஆனால் இதுவே 30 பக்கங்கள்.. இன்னும் நம்ம கருத்தையும் எழுதினா என்ன ஆகும்..?///


சேகர் செத்துருவான்]]]

ஹா.. ஹா.. ஹா.. அதேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
நீங்க உங்க ஸ்டைல்ல எழுதுவதைதான் நாங்க விரும்புறோம், இது நல்லாயில்லை.]]]

அப்படியா.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயன் said...
அண்ணே. கலக்குங்கள். ஆனா ஒண்ணு உங்க வலைப்பக்கத்தில் தினமும் பதிவு இல்லைன்னா ரொம்ப கஷ்டமா இருக்கண்ணே... எழுதுங்க கொஞ்சம் சுருக்கி எழுதுங்க...

நன்றி

தமிழ் உதயன்]]]

ஐயோ தமிழ் உதயன் ஸார்.. நெஞ்சைத் தொட்டுட்டீங்களே..! சரி இனிமே டெய்லி போஸ்ட் போட்டுடறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sugumarje said...
அப்பாடா..! எனக்கே மூச்சு வாங்குது... எனக்கும் மூச்சு வாங்கிருச்சு... ஐயோடா சாமி, ரொம்மம்மம்ப பொறுமை சார் உங்களுக்கு.]]]

ஹி.. ஹி.. நன்றி தங்களின் முதல் வருகைக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[abul bazar/அபுல் பசர் said...
மொத்தத்தில் எல்லா செய்திகளையும் கதம்ப மாலையாக தொகுத்து தந்துள்ளீர்கள்.]]]

நன்றி அபுல்பசர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ர‌கு said...
ச்சும்மா ஆறு ப‌த்தி கொண்ட‌ ப‌திவு ரெடி ப‌ண்ற‌துக்கே ரெண்டு ம‌ணி நேர‌ம் ஆகுது. நீங்க‌ எப்ப‌டித்தான். ஸ்ஸ்ஸ்....]]]

அப்படித்தான்.. கொஞ்சம் பொறுமை வேணும் ரகு..

புதுசு புதுசா வர்றாங்களேப்பா ஆளுக..!

ஒரு காசு said...

அண்ணே, எந்த பத்திரிக்கையில இருந்து சுட்டிங்கன்னும் சொல்லிடுங்க, சார்பு நிலைய தெரிஞ்சிக்கலாம்.

R. Gopi said...

அண்ணே ​வேணாம்னே. விட்டிருங்கண்ணே. பிபிசி, சிஎன்என் சானல் எல்லாம் படுத்துடும்ணே:)

செய்தியைச் சின்னதாவும் அதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை ஒங்க பாணியிலும் (அதான், நீநீநீநீநீநீளமா)எழுதுங்கண்ணே:)

அப்பப்போ ஒங்க சம்பந்தமான ​செய்தியும் படிங்கண்ணே:)(http://www.mmabdulla.com/2010/08/blog-post_12.html)


அன்புடன்

ஆர் கோபி

San said...

Dear TT,
Oru mudivodu kalam irangivittergal endru nambugiren!!!!
Idhu varai marana mokkai padangulakku review eludhi engalai oru vazhi panniteenga!!!!!
Ippa idhu veraiya?

Andha vadivelan than engalai kaapatra vendrum.

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு காசு said...
அண்ணே, எந்த பத்திரிக்கையில இருந்து சுட்டிங்கன்னும் சொல்லிடுங்க, சார்பு நிலைய தெரிஞ்சிக்கலாம்.]]]

தினத்தந்தி, தினமலர், தினகரன் இந்த மூன்றிலிருந்தும் சுட்டதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[R Gopi said...
அண்ணே ​வேணாம்னே. விட்டிருங்கண்ணே. பிபிசி, சிஎன்என் சானல் எல்லாம் படுத்துடும்ணே:)
செய்தியைச் சின்னதாவும் அதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை ஒங்க பாணியிலும் (அதான், நீநீநீநீநீநீளமா)எழுதுங்கண்ணே:)]]]

தங்களுடைய அறிவுரைக்கு மிக்க நன்றி கோபி..!

[[[அப்பப்போ ஒங்க சம்பந்தமான ​செய்தியும் படிங்கண்ணே:)(http://www.mmabdulla.com/2010/08/blog-post_12.html)]]]

முன்னாடியே பார்த்துட்டேன்.. நிறைய வேலை இருந்ததால திரும்பி வர முடியலை..!

இப்போ போறேன்..!


அன்புடன்

ஆர் கோபி]]]

உண்மைத்தமிழன் said...

[[[San said...

Dear TT,
Oru mudivodu kalam irangivittergal endru nambugiren!!!!
Idhu varai marana mokkai padangulakku review eludhi engalai oru vazhi panniteenga!!!!!
Ippa idhu veraiya?

Andha vadivelan than engalai kaapatra vendrum.]]]

நன்றி சேன்..!

STUDENT said...

குடிசை வீடுகளை மாற்றி காங்கிரீட் வீடு கட்டும் தமிழக அரசின் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ. 45 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கும் நிலையில் அந்த திட்டத்திற்கு கருணாநிதியின் பெயரை வைத்தது நியாயமா என்று காங்கிரசுக் கட்சியின் இளங்கோவன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது எங்கள் காசைப்பயன்படுத்திக் கொண்டு உங்கள்பெயரை மக்களிடம் பிரபலமாக்குவது சரியா என்பதை அவரது கேள்வி.
இதற்குப் பதிலளித்த கருணாநிதி, இளங்கோவன் கூறும் திட்டம் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருக்கும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் என்றும், இது 1997 – 98 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் வீடில்லாத ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மற்ற பிரிவு மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுமென்றும், இதற்கு 75 : 25 என்ற விகிதத்தில் மத்திய – மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 21 இலட்சம் வீடுகளைக் கட்டும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் மூன்று இலட்சம் வீடுகள் ரூ. 1800 கோடியில் கட்டப்படும் என்றும் கருணாநிதி விளக்கியுள்ளார். இதன்படி மீதமுள்ள 18 இலட்சம் வீடுகளுக்கான நிதி 10,800 கோடி வருகிறது. இந்த தொகையை எப்படி ஒதுக்கப் போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க இத்திட்டத்தின்படியே ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 60,000 என்றுவருகிறது.
இந்த ரூபாய்க்கு குடிசை வீடு கூட கட்ட முடியாத இன்றைய காலத்தில் காங்கிரீட் வீடு எப்படி கட்ட முடியும்? ஒருவேளை கட்டினாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இறுதியில் இந்த வீடுகளைக் கட்டும் முகாந்திரத்தில் அதிகாரிகள், கட்சிக்காரர்கள், முதலாளிகளும்தான் சம்பாதிக்கப் போகிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க அரசு நிகழ்த்தப் போகும் மற்றுமொரு மோசடி. சரி, இது எப்போதும் உள்ள கதைதானே? இனி விசயத்திற்கு வருவோம்.
இந்த விளக்கத்தின் மூலம் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை, முற்றிலும் மாநில அரசு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு கலைஞர் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறுமில்லை என்பதே. அதாவது உங்க முதலாளிகளது பணத்தையல்ல, எங்கள் வீட்டுப் பணத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு எங்கள் பெயர்தானே வைக்கமுடியும் என்று நியாயம் கேட்கிறார் கருணாநிதி. கூடுதலாக இளங்கோவனது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாமல் ‘வலி’ப்படுத்துகிறது என்று வேறு புலம்பியிருக்கிறார்.
இறுதியில் இந்த அக்கப்போரிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்ன? மத்திய அரசு என்பது நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு என்பது கலைஞர் குடும்பத்தின் சொத்து. இருவரும் மக்கள் வரிப்பணத்தை வைத்தே அரசின் செலவுகளை செய்கிறார்கள் என்றாலும் ஏதோ அவர்களது சட்டை பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். அதனால்தான் அனைத்து திட்டங்களும் நேரு, இந்திரா, ராஜீவ், கலைஞர் என்ற பெயர்களைத் தாங்கி வருகின்றன.
இலவச டி.வி என்றால் அது கலைஞர் கொடுத்தது, இலவச மருத்துவக் காப்பீடு என்றால் அது கலைஞர் கொடுத்தது, ஒரு ரூபாய் ரேசன் அரிசியும் அவர் கொடுத்தது, இப்படி தமிழகத்தின் எல்லா திட்டங்களும் கலைஞர் தான் சேர்த்து வைத்த குடும்பச் சொத்திலிருந்து கொடுப்பது போல கருதிக் கொள்கிறார். நேரு குடும்பமும் அப்படியே கருதிக் கொள்கிறது. உண்மையில் கலைஞர் குடும்பத்தின் வருமானம் என்பது ஆசியப் பணக்காரர் பட்டியலில் வரும் தகுதி கொண்டது. அந்த ஆயிரக்கணக்கான கோடிகளே தமிழக மக்களை சுரண்டிச் சேர்த்த பணம்தான். அதிலிருந்து ஒரு காசு கூட சமூகத்திற்கு செலவழிக்காதவர்கள் மக்கள் பணத்தை செலவு செய்வதைக் கூட தமது சொந்த பணத்தை செலவு செய்வது போல பேசுவதும், எண்ணுவதும் எவ்வளவு அயோக்கியத்தனம்?
மக்களும் கூட அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் இத்தகைய நடைமுறைகளை பச்சையாகக் கையாள்கின்றன. மேலும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே இவை அமலாக்கப்பட்டாலும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்கள் போல சித்தரிப்பதும், காங்கிரசு, தி.மு.க கோமான்களை தர்மம் செய்யும் பண்ணையார்களாக காட்டுவதும் மகா மட்டமாக இருக்கிறது.
இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.

உண்மைத்தமிழன் said...

ஸ்டூடண்ட் ஸார்..!

தன் வீட்டுக் காசை எடுத்துத்தான் ஐயா தானதர்மம் செய்கிறார் என்பது நமது அப்பிராணி மக்களின் குருட்டுத்தனமான நம்பிக்கை..!

இவர்கள் திருந்தினால் ஒழிய இந்தத் திருடர்களை ஒழிக்க முடியாது..!

யாசவி said...

உலகிலேயே பலம் வாய்ந்த கைவிரல் என்றால் உங்களைத்தான் சொல்வேன்

:)

உண்மைத்தமிழன் said...

[[[யாசவி said...
உலகிலேயே பலம் வாய்ந்த கை விரல் என்றால் உங்களைத்தான் சொல்வேன் :)]]]

என்னைவிட அதிகமாக, வேகமாக தட்டச்சு செய்பவர்கள் இங்கே அதிகம் பேர் இருக்கிறார்கள்..!

உங்களுக்குத்தான் அது தெரியவில்லை..!