04-09-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
டைட்டில் கார்டுக்கு முன்பாகவே “இது நூறு சதவிகிதம் நடப்பதுதான். தினமும் நாம் பார்த்த கேட்ட கதைகளில் ஒன்றுதான்” என்று சொல்லிவிட்டார்கள்.
"ரஷ்ய எழுத்தாளரான இவான் துக்னோவ் என்பவர் எழுதிய 'முதல் காதல்' என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் படத்தின் கதை" என்று இரண்டாவது டைட்டில் கார்டு போடப்பட்டிருக்கிறது. கூடவே 'நாவல் வடிவம் - ஜெயமோகன்' என்றும் வருகிறது.
ஆனால் நிஜத்தில் என்னவோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.
1982-ம் ஆண்டு பி.கே.கிருஷ்ணன் என்பவரின் இயக்கத்தில் வெளி வந்த 'மழு' என்கிற மலையாளத் திரைப்படம், 'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
டைட்டில் கார்டுக்கு முன்பாகவே “இது நூறு சதவிகிதம் நடப்பதுதான். தினமும் நாம் பார்த்த கேட்ட கதைகளில் ஒன்றுதான்” என்று சொல்லிவிட்டார்கள்.
"ரஷ்ய எழுத்தாளரான இவான் துக்னோவ் என்பவர் எழுதிய 'முதல் காதல்' என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் படத்தின் கதை" என்று இரண்டாவது டைட்டில் கார்டு போடப்பட்டிருக்கிறது. கூடவே 'நாவல் வடிவம் - ஜெயமோகன்' என்றும் வருகிறது.
ஆனால் நிஜத்தில் என்னவோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.
1982-ம் ஆண்டு பி.கே.கிருஷ்ணன் என்பவரின் இயக்கத்தில் வெளி வந்த 'மழு' என்கிற மலையாளத் திரைப்படம், 'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது.
இப்போது இதே படத்தையே லேசுபாசாக தூசுத் தட்டி மறுபடியும் நமக்குக் கொடுத்திருக்கிறார். வருங்கால 'ஆஸ்கார் இயக்குநர்' திரு.சாமி.
ஏற்கெனவே இவர் எடுத்தத் திரைப்படங்களின் அடிநாதங்கள் அனைத்துமே காமத்தைக் கரை சேர்க்கும் விதமாகவே இருந்து தொலைய.. இத்திரைப்படத்தின் தயாரிப்பின்போதும், கடைசியாக திரையிடப்பட்ட இந்த ஒரு மாதக் காலக்கட்டத்திலும் இப்படத்தின் கதை பற்றி முடிந்த அளவுக்கு பரபரப்பை ஊட்டி படத்திற்கும், தனக்கும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டார்.
நாடோடிகள் என்றொரு திரைப்படத்தைத் தயாரித்துவிட்டு இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்க முன் வந்திருக்கும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம்.
வீட்டில் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ, பாட்டிக்கோ கண் வலி.. பேப்பர் படிக்க முடியவில்லை என்று கூறி நம்மிடம் தினத்தந்தியைக் கொடுத்து படித்துக் காண்பிக்கச் சொன்னால் நாம் என்ன செய்வோம்..? எது செய்தி என்று நமக்குத் தெரிந்ததோ, எது செய்திகள் என்று சொல்லப்படுகின்றனவோ அவற்றை மட்டுமேதான் சொல்வோம்..
தினத்தந்தியில் ஏழு காலம் அளவுக்கு கள்ளக்காதல் செய்திகள் இருக்கின்றன என்பதால் அவற்றை நாம் ஊர் முழுக்க கேட்பதுபோலவோ, நம் வீட்டிற்குள்ளேயே அடுத்த நபர்களுக்குக் கேட்பது போலவோ நாம் படிப்பதில்லை. இது நமக்கு நாமே போட்டுள்ள கடிவாளம்.
திருமணம் முடிந்தால் மணமக்கள் இரவில் எந்த அறையில் தங்குகிறார்களோ அந்த அறையில், அவர்களுக்கிடையில் என்ன நடக்கும் என்பது அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும்.. பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும்.. ஆனால் குழந்தைகளுக்கு மட்டும்தான் தெரியாது. திருமணம் முழுவதையும் குழந்தைகளிடம் காண்பிக்கும் நாம் இதனை மறைக்கத்தான் செய்கிறோம்.. அது ஒரு சாதாரண நிகழ்வாக ஒதுக்கித் தள்ளுகிறோம். காரணம், அது நம் மனதை பிசாசாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
அதற்காக எந்த அத்துமீறலான காதலும், காமமும் நம் சமூகத்தில் இல்லவே இல்லை என்று நாம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது. ஆனால் இதையெல்லாம் நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் என்று சொல்லி படமெடுத்து வைத்தால் இதனைக் குடும்பத்தோடு எப்படி வந்து பார்ப்பது..?
ஏற்கெனவே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் கூட்டம் மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த லட்சணத்தில் இது மாதிரி திரைப்படங்கள் வந்து தொலைவது நிச்சயம் திரையுலகத்தை இருட்டில்தான் தள்ளும்..
எவரோ ஒரு சென்சார் போர்டு உறுப்பினர் சொன்னாராம்.. “காலத்திற்கேற்றாற் போன்ற படம்தான்.. நல்லவிதமாகத்தான் கொடுத்திருக்கிறீர்கள்..” என்று.. படத்தைப் பார்த்த பின்புதான் தெரிகிறது.. சாமியும், அந்த சென்சார் போர்டு உறுப்பினரும் எந்த வகையான மனநிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று..
தென்னக சென்சார் போர்டு சர்டிபிகேட் தர மறுத்து ரீவைஸிங் கமிட்டிக்கு மும்பைக்குச் சென்று அங்குள்ளவர்கள் இரண்டு, மூன்று வசனங்களை மட்டுமே கட் செய்து ஏ சர்டிபிகேட் கொடுத்தனுப்பிவிட்டார்கள்.
மகனது டீன்ஏஜ் மனைவியான மருமகளை பெண்டாளத் துணியும் மாமனாரும்.. கணவன் அருகில் இல்லாத சூழலில் உடற்பசியின் தூண்டுதலில் மாமனாரையே கணவனாக்கிக் கொண்டு, கணவனாக இருப்பவனையே விரட்டியனுப்பும் மனைவியும்.. இவர்கள் இருவரின் கூட்டுக் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாலும், கல்லூரியில் படிக்கின்ற, போதிய பக்குவமில்லாத காரணத்தாலும்.. கணவன் ஏதும் சொல்ல முடியாமல் தவிக்க.. கடைசியில் இந்த மூவரின் கதி என்னாகிறது என்பதைத்தான் நம்ம அண்ணன் சாமி, திரைக்காவியமாக படைத்திருக்கிறார்.
நம் கண் முன்னே எடுக்கப்பட முடியாமல், தெரியாமல் எத்தனையோ கதைகள் இன்னமும் புதைந்துபோய் கிடக்க அதையெல்லாம் கிண்டாமல், கிளறாமல் வாலிப வயதின் அடையாளத்தையே மறுபடியும், மறுபடியும் உசுப்பிவிட்டு, அதன் ஒரு பகுதியைக் காட்டுகிறேன் என்று சித்து விளையாடுவது இயக்குநருக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதைத்தான் காட்டுகிறது.
ஒரு பக்கம் களவாணியும், வம்சமும் நம் தமிழ் மண்ணைக் கிளறி புத்தம் புது வாசனையையும், புதுவித கிறக்கத்தையும் திரையுலகின்பால் ஈர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது மாதிரி நெருஞ்சி முள் திரைப்படங்கள் நமக்குள் உட்புகக் கூடாது.
ஒருவனை கெட்டவன் என்று காட்ட எத்தனை, எத்தனை கொடுஞ்செயல்களை அவன் செய்கிறான் என்பதுபோல் காட்டிவிட்டு கடைசிக்கு முந்தின ரீலில் அவனுக்குத் தத்துவ மழையாக அட்வைஸை அள்ளிப் பொழிந்து, அவனைத் திருத்திவிட்டு இதோ பார் திருந்திவிட்டான். நீங்களும் திருந்திவிடுங்கள். இதுவொரு வாழ்க்கைப் பாடம்.. பலரது கண்களையும் திறக்கவே இப்படியெல்லாம் படம் எடுக்கிறேன் என்று சொல்வதெல்லாம் ச்சும்மா பம்மாத்து.
படத்தின் இரண்டாவது ரீலில் துவங்கி மாமனார் திருந்துவதற்கு முந்தின ரீல்வரையிலும் காமத்தை வசனங்களிலும், காட்சியமைப்பிலும், மாறி மாறி ஓவர் டோஸாக கொடுத்துவிட்டு கடைசியில் அட்வைஸ் செய்வது என்னவோ 1985 காலத்து மலையாள பிட்டு படங்களை பார்த்ததுபோலத்தான் இருந்தது. ஒரு உதாரணமான டயலாக்.. கோஹினூர் பாக்கெட்டை காட்டி “யூஸ் பண்ணிட்டீன்னா தூக்கிப் போட்டுராத.. அதைக் கழுவி, காய வைச்சு, அயர்ன் பண்ணி திருப்பி யூஸ் பண்ணிக்கலாம்..”
லாஜிக் ஓட்டை என்பதெல்லாம் கிளைமாக்ஸில் படகில் ஓட்டை விழுந்து குப்புறக் கவிழ்வதைப் போல காட்சிக்கு காட்சி பல்டிதான்.. லாஜிக் ஓட்டைதான். எப்படியும் காமத்தையும், முறையற்றதையும் காட்டுவதாக முடிவு செய்துவிட்டதால் மக்கள் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றெண்ணி இஷ்டத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.
முழுக்க, முழுக்க நம்ப முடியாத திரைக்கதை, ஏற்றுக் கொள்ள முடியாத காட்சியமைப்புகளில் அத்துமீறலான காமத்தால் அத்துமீறியவர்கள் மீண்டும், மீண்டும் அதை அடையத் துடிப்பது ஏன் என்பதற்கான நிஜமான காரணத்தைச் சொல்லவில்லை. இது முழுக்க முழுக்க காமத்தால் நடந்த கதை, நடக்கும் கதை என்றான பின்பு எதற்கு நமது ஒழுக்கம், பண்பாடு பற்றிய பக்கம், பக்கமான வசனங்கள்.
காமத்தில் இருந்து மீள முடியாமல் ஒருவன் தவிக்கும்போது அது ஒரு வகை நோய் என்று நாம் அறிவதில்லை. அதனுடைய சூழலில் இருந்து தப்பிக்கும் வழியைக் கண்டறிந்து நாம் செல்வதுதான் சிறந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் செய்வதில்லை. ஒரு முறை செய்த தவறுக்கு வேண்டுமானால் சந்தர்ப்பத்தையும், சூழ்நிலையையும் குற்றஞ்சாட்டலாம். ஆனால் தொடர்ச்சியான அந்தக் குற்றத்திற்கு நாமேதான் முழு காரணமாக வேண்டும்..
படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்தெடுக்கலாம் போலத்தான் தோன்றியது. ஆனால் இந்தப் படத்துக்குப் போய் எதுக்கு இப்படியொரு பில்டப் என்று சோர்வடையாத எனது கைகளே சொல்கின்றன என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
ஒன்றே ஒன்று.. இத்திரைப்படத்தில் மருமகளாக நடித்திருக்கும் அனகா என்ற இந்தப் புதுமுகத்திற்கு சரியான வழிகாட்டிகள் கிடைத்து, நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் அவர் கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம்.
மற்றபடி குடும்பத்தோடு பார்க்கவே கூடாத, முடியாத திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
வேறு ஏதாவது பொழைப்பு இருந்தால் போய்ப் பாருங்கள்..!
|
|
Tweet |
