கருணாநிதியை மிஞ்சிய ஜெயலலிதா..!

25-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நேற்று வேட்பு மனு தாக்கலின்போது, தங்கள் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளனனர். கடந்த தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் இருந்த சொத்து மதிப்பு இப்போது மூன்று  மடங்கு உயர்ந்துள்ளது.

முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரங்களில் தன் பெயரில் உள்ள பணம் கையிருப்பு அசையும், அசையா சொத்துக்கள், தன் மனைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை காட்டியுள்ளார்.

ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். இந்த கடனை ராஜாத்தி மற்றும் கனிமொழியிடம் இருந்து வாங்கியுள்ளாராம். கடந்தாண்டு வருமான வரித்துறைக்கு வழங்கிய கணக்கின்படி, கருணாநிதிக்கு 37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தயாளுக்கு 64 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், ராஜாத்திக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. மற்ற அசையும், அசையா சொத்துக்களையும் சேர்த்து மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளையும் தனது சொத்தாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால், அவற்றின் மதிப்பை குறிப்பிடவில்லை. போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத், கோடநாடு சொத்துக்கள் பற்றியும் தனது சொத்துப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவிடம் இருக்கும் சொத்துக்கள் என்னென்ன..?

ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய். 
 
அசையும் சொத்துக்கள்

1. கையிருப்பு ரொக்கம்- 25,000 ரூபாய்

2. பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டிபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டிபாசிட் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இவை சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

3. பாண்டுகள், கம்பெனிகளில் பங்கு முதலீடு-50,000 ரூபாய். இவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது.

4. சொந்தமான வாகனங்களில் மொத்த மதிப்பு 8.35 லட்சம் ரூபாய்.

5. நிறுவனங்களில் முதலீடுகள் விவரம்:

* ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ்-8.5 கோடி ரூபாய்.

* சசி எண்டர்பிரைஸஸ்-75 லட்சம் ரூபாய்.

* கோட நாடு எஸ்டேட்-1 கோடி ரூபாய்.

* ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட்-65 லட்சம் ரூபாய்

உட்பட நிறுவனங்களில் முதலீட்டின் மொத்த மதிப்பு 10.9 கோடி ரூபாய்.

அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979 ரூபாய்.

அசையாச் சொத்துக்கள் :

* ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.1968. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.

* செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கியபோது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.

*  79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கியபோது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.

* 8-3-1099 மற்றும் 8-3-1099-ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கிய தேதி: 11.02.1967. வாங்கிய போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.

* ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கியபோது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.

* எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

* 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கியபோது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய்.

அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை.

இந்தப் பட்டியலின்படி ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய்.

கருணாநிதியின் சொத்து மதிப்பு :

தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் சொத்து பட்டியல் விவரம் வருமாறு :

கருணாநிதி பெயரில் ரொக்கமாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு பெயரில் 30 ஆயிரம் ரூபாய், மற்றொரு மனைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.

வங்கிக் கணக்குகளில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய், கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய். கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். 15, கோபாலபுரம் 4-வது குறுக்குத் தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம்.

அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய்.

திரைப்படம் எடுப்பதற்காக மும்பையில் உள்ள மோசர்பேர் நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் முன் பணம் வாங்கிய வகையில் கருணாநிதிக்கு கடன் உள்ளது. வருமான வரியாக 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய்.

அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் இடையில் 1 கோடி ரூபாய்தான் வித்தியாசம் என்றாலும், ஆத்தா ஆட்சியில் இல்லாத நிலையிலேயே.. 10, 12 பேரப் பிள்ளைகள் இல்லாத சூழலிலேயே முறையான கணக்குக் காட்டுவதில்  தாத்தாவை தோற்கடித்திருப்பதைப் பார்த்தால் தாத்தா விட்டுப் பிடிக்கிறாரோ என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்திலாவது கருணாநிதியைத் தோற்கடித்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுவோம்..!

தற்போது இருப்பவரும், அவருக்கு மாற்றாகச் சொல்லப்படுபவரும் நிச்சயம் ஏழைகள் அல்ல.. குபீர் பணக்காரர்கள்.. திடீர் செல்வந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்புகள் அனைத்தும் அவர் ஆட்சிக் காலத்தில் இருந்தபோதுதான் உயர்ந்துள்ளது என்பது கண்கூடு. அவர் வாங்கியிருக்கும் சொத்துக்களின் விபரங்களும் அதைத்தான் காட்டுகிறது..!


தாத்தா கருணாநிதியோ தனது பேரன்கள் சம்பாதிக்க வழி வகை செய்துவிட்டு, அந்தப் பேரன்கள் மூலமாகவே தனது பங்குத் தொகையை வாங்கி கோடீஸ்வரராகியிருக்கிறார்..! ஆனாலும் மேடைக்கு மேடை தான் ஒரு சமானியன் என்று பொய்யை வேறு புளுகிக் கொண்டிருக்கிறார்..! காந்தி கணக்குக் காட்டுவதற்காக மோசர்பேர் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது கதை, வசனம் எழுதுவதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்..! எழுத முடியலைன்னா திருப்பிக் கொடுக்க வேண்டியதுதானே..? சில சினிமாக்காரர்கள் மாதிரி, அட்வான்ஸை திருப்பிக் கூட மாட்டேன்ற பிச்சைக்காரத்தனம் என்னத்துக்கு? மானத்தை வாங்குறாருய்யா தாத்தா..!

ஜெயலலிதாவோ முதல் முறையாக ஆட்சி பீடத்தில் ஏறும்போது சரஸ்வதி சபதத்தில் பிச்சையெடுக்கும் கே.ஆர்.விஜயாவை போல் இருந்தவர்.. அந்த ஆட்சி முடிவதற்குள்ளாக திருவிளையாடல் சாவித்திரி போலாகிவிட்டார்..! ஆனால் மக்களாகிய நாம்தான் பிச்சையெடுத்த கே.ஆர்.விஜயாவைப் போலாகிவிட்டோம்..! அவர் ஒருவரின் சொத்துப் பட்டியல் மட்டும்தான் இது. மற்றபடி அவரைச் சூழ்ந்திருக்கும் மன்னார்குடி மாபியா கும்பலின் சொத்துக்கள் முழுவதையும் பட்டியலிட்டிருந்தால் அதைப் பார்த்து நமக்கு நெஞ்சே வெடித்திருக்கும். நல்லவேளையாக ஆத்தா நமக்கு அந்த சோதனையைத் தராமல் விட்டு வைத்திருக்கிறார்..

என்ன இருந்தாலும் நம்ம அப்பன் முருகன், இவ்வளவு நல்லவர்களை நமக்குத் தலைமை தாங்கக் கூடிய தலைவர்களாக நம் தலையில் கட்டியிருக்கக் கூடாது..!

என்னவோ போடா முருகா..! நம்மளால இப்படி புலம்பத்தான் முடியுது..!

30 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னுமா இவிங்க ஆசை அடங்க மாட்டிங்குது... தமிழக மக்களே, எல்லாம் நம்ம பணம் தான்...


எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

பழமைபேசி said...

//என்னவோ போடா முருகா..! நம்மளால இப்படி புலம்பத்தான் முடியுது..!
//

இப்படிச் சொன்னா எப்படி? நம்பிக்கையத் தளரவிடாதீங்கண்ணே!!

Unknown said...

மேலே குறிபிட்ட இருவரின் சொத்துகளையுமே இன்றைய சந்தை விலைக்கு விற்ப்பார்களா??///

ஜோதிஜி said...

அதென்னவோ ஜெ. புகைப்படம் என்றால் ரொம்ப அற்புதமா உங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் கலைஞர் முகம் மட்டும் பல சமயம் சோகமாகவே அமைந்து விடுகின்றது?

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...
இன்னுமா இவிங்க ஆசை அடங்க மாட்டிங்குது... தமிழக மக்களே, எல்லாம் நம்ம பணம் தான்...]]]

இந்த விஷயம் அவங்க எல்லாருக்கும் தெரியணுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

//என்னவோ போடா முருகா..! நம்மளால இப்படி புலம்பத்தான் முடியுது..!//

இப்படிச் சொன்னா எப்படி? நம்பிக்கையத் தளர விடாதீங்கண்ணே!!]]]

புலம்பாம அப்புறம் என்னதான் செய்யறது..? அடுத்து வரப் போறதும் இவுக ரெண்டு பேருல யாராவது ஒருத்தர்தானே..? வர்றவங்க சும்மா இருப்பாங்களா.. மிச்சம், சொச்சத்தையும் சுரண்டி எடுத்திர மாட்டாங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
மேலே குறிபிட்ட இருவரின் சொத்துகளையுமே இன்றைய சந்தை விலைக்கு விற்ப்பார்களா??///]]]

நோ.. நோ.. வாங்கின விலைக்குத்தான் விப்பாங்க..! அதுதான் இவர்களுக்குத் தெரிஞ்ச வியாபாரம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
அதென்னவோ ஜெ. புகைப்படம் என்றால் ரொம்ப அற்புதமா உங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் கலைஞர் முகம் மட்டும் பல சமயம் சோகமாகவே அமைந்து விடுகின்றது?]]]

கோர்த்து விடுறதுன்னா இதுதானுங்கண்ணா..!

ஐயா இறங்கு முகத்திலும், அம்மா ஏறு முகத்திலும் இருப்பதால் சிம்பாலிக்கா அப்படி போட்டிருக்கேன்..!

குறும்பன் said...

//ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில்//

ஆந்திராவில் குத்துபுல்லாபுர் என்ற பெயரில் மாவட்டம் இல்லை. சரிபாருங்க.
ஒப்புக்கு சொன்ன சொத்து மதிப்பே இவ்வளவுன்னா உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்ம்ம்ம்....

Anonymous said...

திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ...

அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது ...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..

திருடாதே பாப்ப திருடாதே ...

RAJESH said...

அய்யா அவர்கள் கலைஞர் டிவி யில் பங்கு வெறும் 6 கோடி என்று கூறுகிறார், ஆனால், DB realty இதில் ஷேர் வான்குவதற்காக 230 கோடி தந்தார்கள். ஆக தாத்தா தான் பணகாரர்

ராஜ நடராஜன் said...

சொத்துக்கணக்கு கண்ணக் கட்டுது...

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

//ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில்//

ஆந்திராவில் குத்துபுல்லாபுர் என்ற பெயரில் மாவட்டம் இல்லை. சரி பாருங்க.]]]

பத்திரிகைகளில் வந்ததைத்தான் எழுதியிருக்கிறேன். நானும் கேள்விப்படாத பெயராகத்தான் இருக்கிறது. சரி பார்ப்போம்..!

[[[ஒப்புக்கு சொன்ன சொத்து மதிப்பே இவ்வளவுன்னா உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்ம்ம்ம்..]]]

ம்ஹூம்.. நினைச்சுக் கூட பார்க்க முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[எடப்பாடி சிவம் said...
திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது ...
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே பாப்ப திருடாதே.]]]

நாம இப்படி பாடிக்கிட்டே இருக்க வேண்டியதுதானா..?

இன்னும் எவ்வளவு காலத்திற்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[raj said...
அய்யா அவர்கள் கலைஞர் டிவியில் பங்கு வெறும் 6 கோடி என்று கூறுகிறார், ஆனால், DB realty இதில் ஷேர் வான்குவதற்காக 230 கோடி தந்தார்கள். ஆக தாத்தாதான் பணக்காரர்]]]

அந்த டீல் ஓகேயாகியிருந்தால் இன்னும் கொஞ்சம் கோடீஸ்வரராகியிருப்பார்.. ச்சே.. வடை போச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
சொத்துக் கணக்கு கண்ணக் கட்டுது.]]]

ஓட்டுப் போட போகும்போது இதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்குங்க..!

Jayadev Das said...

\\ஜெயலலிதாவோ முதல் முறையாக ஆட்சி பீடத்தில் ஏறும்போது சரஸ்வதி சபதத்தில் பிச்சையெடுக்கும் கே.ஆர்.விஜயாவை போல் இருந்தவர்.. அந்த ஆட்சி முடிவதற்குள்ளாக திருவிளையாடல் சாவித்திரி போலாகிவிட்டார்..! ஆனால் மக்களாகிய நாம்தான் பிச்சையெடுத்த கே.ஆர்.விஜயாவைப் போலாகிவிட்டோம்..! \\ஹா..ஹா..ஹா.. தங்களுக்கு நல்ல நகைச் சுவை உணர்வு. நீங்க புள்ளி விவரங்களைக் கொடுக்கும் ஸ்டைல் விஜயகாந்தை ஞாபகப் படுத்துகிறது. ஹா...ஹா..ஹா.. யாராச்சும் இந்த நம்பர் அத்தனையும் ஒன்னு விடாம படிச்சி முடிச்சிட்டீங்கன்ன பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா... ஹா.ஹா.ஹா..

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

\\ஜெயலலிதாவோ முதல் முறையாக ஆட்சி பீடத்தில் ஏறும்போது சரஸ்வதி சபதத்தில் பிச்சையெடுக்கும் கே.ஆர்.விஜயாவை போல் இருந்தவர்.. அந்த ஆட்சி முடிவதற்குள்ளாக திருவிளையாடல் சாவித்திரி போலாகிவிட்டார்..! ஆனால் மக்களாகிய நாம்தான் பிச்சையெடுத்த கே.ஆர்.விஜயாவைப் போலாகிவிட்டோம்..!\\

ஹா..ஹா..ஹா.. தங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. நீங்க புள்ளி விவரங்களைக் கொடுக்கும் ஸ்டைல் விஜயகாந்தை ஞாபகப் படுத்துகிறது. ஹா...ஹா..ஹா.. யாராச்சும் இந்த நம்பர் அத்தனையும் ஒன்னு விடாம படிச்சி முடிச்சிட்டீங்கன்ன பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா. ஹா.ஹா.ஹா..]]]

நம்ம பொழைப்பை பார்த்து நமக்கே சிரிப்பாகத்தான் இருக்கு ஜெயதேவ்.. இதுதானே உண்மை..!

மு.சரவணக்குமார் said...

பெரிய வெற்றி கிடைக்கவிருந்த வாய்ப்பினை ஜெயலலிதா கோட்டை விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வரானால் ஆச்சர்யபட ஏதுமில்லை.

Namy said...

Both are looters.... Why don't we support 49(O)..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
பெரிய வெற்றி கிடைக்கவிருந்த வாய்ப்பினை ஜெயலலிதா கோட்டை விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வரானால் ஆச்சர்யபட ஏதுமில்லை.]]]

எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது!

உண்மைத்தமிழன் said...

[[[Namy said...

Both are looters.... Why don't we support 49(O)..?]]]

இப்போதெல்லாம் 100, 200 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகள் தோற்கின்றன. இந்த நிலைக்கு 49ஓ-வும் ஒரு காரணம்.. ஆளும் கட்சி வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனில் எதிர்க்கட்சியை வரவேற்றுத்தான் ஆக வேண்டும். நமக்கு வேறு வழியில்லை.!

Guna said...

தாத்தாவை மிஞ்சிய ஆத்தா

Prakash said...

கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ளவர்களுக்கு உண்டா. சமூக நீதி என்றால் என்ன என்று ஒரு 10 வரி எழுத முடியுமா. கேப்டனால். ஒரு பத்து வரி பேச முடியுமா நடிகர் சரத்குமாரால். ஒரு பத்து வரி மேடைகளிலே உரையாற்ற முடியுமா அம்மா அவர்களால். சமூக நீதி என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் கலைஞரை எதிர்க்கிறார்கள்.

எல்லாம் தோற்றம் அளிக்கிற தலைவர்கள். கொஞ்சம் சிரமப்பட்டாவது சிரித்து பேசு மற்றவர்களிடம் என்று சொல்லி உட்காரவைத்து சிரிக்கச்சொல்வார்கள். மேடைக்கு வரும்போதாவது கொஞ்சம் நேரம் உள்ளுக்குள் போடாமல் பேசு என்று சொல்லி மேடையிலே ஏற்றி வந்து நிறுத்துவார்கள். ஏதாவது எழுதி தந்தாவது படி என, அறிக்கையை எழுதித் தந்து படிக்கச் சொல்வார்கள். அப்படி எழுதித் தருகிற அறிக்கையை படிக்கிற தலைவர்கள். அவர்கள் தோற்றம் அளிக்கிற தலைவர்கள்.

திராவிட இயக்க கொள்கைகள் என்றால் என்ன. அண்ணா சொன்ன கொள்கை எது. மாநில சுயாட்சிதான் அண்ணாவின் இறுதி மூச்சு கொள்கையாக இருந்தது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநில சுயாட்சியை பற்றி ஓரிரு வரிகளாகவது எழுதுகிற ஆற்றல் கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு உண்டா. என்ன தகுதி இருக்கிறது.



கலைஞரை போல குறளோவியம் எழுத வேண்டாம். கலைஞரைப் போல தொல்காப்பிய பூங்கா எழுத வேண்டாம். கலைஞரைப் போல இலங்கிய நடையிலே அறிக்கைகள் எழுத வேண்டாம். சொந்தமாக சுயமாக ஒரு பிரச்சனையைப் பற்றி அறிக்கை எழுதுகிற ஆற்றல் அந்த எதிரணியில் இருப்பவர்களுக்கு உண்டா. எந்த தகுதியுமே இல்லை. மக்களை நேரிக்கிற பண்பு உண்டா. கலைஞரை விமர்சிப்பது மட்டும்தான் அவர்களது கொள்கை.

- Thiruma's speach
http://www.nakkheeran.in/users/Election2011.aspx?E2011=436

உண்மைத்தமிழன் said...

[[[Guna said...

தாத்தாவை மிஞ்சிய ஆத்தா.]]]

ஆனால் அடுத்த ரவுண்ட்டில் ஆத்தாவை தாத்தா மிஞ்சிவிட்டார்..!

உண்மைத்தமிழன் said...

திருமா சொல்லாத ஒன்று..

கலைஞரைப் போல் கொள்ளையடித்த வித்தகர் வேறு யாரேனும் இந்தியாவிலேயே உண்டா..?

abeer ahmed said...

See who owns lah.cc or any other website:
http://whois.domaintasks.com/lah.cc

abeer ahmed said...

See who owns didaskalia.net or any other website.

Anuradhaateen said...

‘ஒரே கல்லில் மூன்று மாங்காய்’- கருணாநிதியையே அசத்திய ஜெயலலிதா!!!
http://tamil.unitymedianews.com/2011/08/20/jeyalalitha-stuns-karunanidhi-averts-judicial-defeat-and-gets-image-by-announcing-a-hospital-in-new-assembly-complex/

உண்மைத்தமிழன் said...

[[[Anuradhaateen said...

‘ஒரே கல்லில் மூன்று மாங்காய்’- கருணாநிதியையே அசத்திய ஜெயலலிதா!!!

http://tamil.unitymedianews.com/2011/08/20/jeyalalitha-stuns-karunanidhi-averts-judicial-defeat-and-gets-image-by-announcing-a-hospital-in-new-assembly-complex/]]]

கட்டிடம் ஸ்திரமானதாக இல்லை என்று சொல்லிக் கொண்டு அதே கட்டிடத்தில் மருத்துவமனை அமைக்கப் போவதாகச் சொல்வது என்ன நியாயம்..? செத்தால் சாதாரண மக்கள்தானே.. போகட்டும் என்று விடுகிறாரா ஜெயா..?