திருவாரூரூக்கு ஓட்டம் பிடித்த மு.கருணாநிதி..!

18-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வழியாய் தாத்தா கருணாநிதி தனது ஆட், படை, பரிவாரங்களை களத்தில் இறக்கியுள்ளார். பொதுவாக இதற்கு முந்தைய தேர்தல்களில் தேர்தல் கமிஷனின் கால அவகாசம் நிறைய இருந்தது. அதனால் யார், யாருக்கு எதனால் எப்படி சீட் கிடைத்தது என்று பல்வேறு பத்திரிகைகள் அலசி ஆராய்ந்து சொல்லிக் கொண்டிருந்தன.

ஆனால் இந்தத் தேர்தலில் மட்டும் அது முடியவில்லை. உடனுக்குடன் வேட்பாளர் பெயர்களை அறிவித்து மறுநாளே பிரச்சாரத்திற்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் உள்ளதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இப்போது அமைச்சர்களாக,  சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு சீட்டுக்களை திருப்பிக் கொடுத்து  அமைதியாக்கிவிட்டார் தாத்தா.

இவர்களில் புதுமுகங்கள் 58 பேர், பெண்கள் 11 பேர், பட்டதாரிகள் 70 பேர், வக்கீல்கள் 26 பேர், டாக்டர்கள் 3 பேர், முதுகலை பட்டம் பெற்றவர்கள் 27 பேர். 

அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவிய சேகர்பாபு, முத்துசாமி, ரகுபதி, ம.தி.மு.க.,வில் இருந்து தாவிய மு.கண்ணப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தி.மு.க.விற்கு தாவிய கோவிந்தசாமி ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழிக்கு மாதவரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.   நெல்லையில் அத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய மேயருமான ஏ.எல்.சுப்ரமணியத்தின் மகன் லட்சுமணனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. பழனி தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமாருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க.வின் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆனந்த் என்ற 29 வயது இளைஞர் நிறுத்தப்பட்டுள்ளார். 


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, துறைமுகம், கொளத்தூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என்ற சென்னை தொகுதிகளெல்லாம் இருக்கும் நிலையிலேயே தாத்தா, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு ஓடிப் போயிருக்கும் விஷயத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது..!

இந்த வயசான காலத்தில் தாத்தாவுக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டிருக்க வேண்டாம்தான். ஆனாலும் புத்திரப் பாசம் அளவுக்கதிகமான அநியாயங்களை செய்ய வைத்து அதன் கர்மப் பலனாக அவரை ஊரைவிட்டு துரத்தியிருக்கிறது..!

எந்த ஊருக்குச் சென்றாலும் தான்தான் தமிழினத்தின் தலைவன் என்று தானே சொல்லிக் கொண்ட இந்தத் தாத்தா கடைசியில் தனது பிறந்த ஊர் மக்கள் மட்டுமே தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று உண்மை நிலைமையறிந்து கதறுவது வருங்கால அரசியல்வியாதிகளுக்கு நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்..!

நான்கு முறை தன்னை ஜெயிக்க வைத்த ஆயிரம்விளக்கு தொகுதியைக் கை கழுவிவிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதிக்கு ஓட வேண்டிய நிலைமை மு.க.ஸ்டாலினுக்கு..!

ஒரு காலத்தில் தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்டிருக்கும் சென்னையில் தானைத் தளபதியின் சொந்தத் தொகுதியிலேயே நிற்க முடியாத சூழல் என்றால் தி.மு.க.வின் மீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியை அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது..!

தென் மண்டல சீட்டுக்களைப் பெற்றவர்களையெல்லாம் பார்க்கின்றபோது மதுரை தளபதி நீட்டிய சீட்டில் தாத்தா கை வைக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது..!

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், வயது மூப்பு காரணமாக அமைச்சர் கோ.சி.மணியும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. பாவம் ஆற்காடு..! நன்றாக வாழ வேண்டிய வயதில் இப்படி கஷ்டப்படுகிறார்..! சம்பாதித்தது போதும் என்று முருகன் நினைத்துவிட்டான் போலும்..!

இன்றைய இந்த இரவு நேரத்தில் ஆத்தா ஜெயலலிதா, வைகோவுக்கு 15 சீட்டுக்களை ஒதுக்க சம்மதம் தெரிவித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்ட தொகுதிகளை மீண்டும் விட்டுக் கொடுக்க முன் வந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன..!

அப்படியிருக்கும்பட்சத்தில் இறுதியான அதிமுக பட்டியல் நாளை இன்னொரு முறை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பின்புதான் தி.மு.க., அ.தி.மு.க. நேரடி மோதல் நடக்கும் தொகுதிகளின் பட்டியல் இறுதியாகும்.

அப்போது விலாவாரியாக மேலும் பேசுவோம்..!

இப்போது 2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடம் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை பார்ப்போம்..!

1. ஆயிரம் விளக்கு - அசன் முகம்மது ஜின்னா
2. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஜே. அன்பழகன்
3. விருகம்பாக்கம் - தனசேகரன்
4. சைதாப்பேட்டை - மகேஷ்குமார்
5. வில்லிவாக்கம் - க. அன்பழகன்
6. ஆர்.கே. நகர் - பி.கே.சேகர்பாபு
7. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
8. எழும்பூர் (தனி) - பரிதிஇளம்வழுதி
9. பொன்னேரி (தனி) -மணிமகேலை
10. திருவள்ளூர் - இ.ஏ.பி. சிவாஜி
11. அம்பத்தூர் - புரசை ரங்கநாதன்
12. மாதவரம் - டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் - கே.பி.பி. சாமி
14. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் - எஸ்.ஆர். ராஜா
16. உத்திரமேரூர் - பொன்குமார்
17. காட்பாடி - துரைமுருகன்
18. கே.வி. குப்பம் - சீதாராமன்
19. ராணிப்பேட்டை - காந்தி
20. குடியாத்தம் (தனி) - ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் - ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை - எ.வ.வேலு
23. கீழ்ப்பென்னாத்தூர் - பிச்சாண்டி
24. ஆரணி - சிவானந்தம்
25. வந்தவாசி - கமலக்கண்ணன்
26. வானூர் - புஷ்பராஜ்
27. விழுப்புரம் - டாக்டர் பொன்முடி
28. விக்கிரவாண்டி - ராதாமணி
29. திருக்கோவிலூர் - தங்கம்
30. சங்கராபுரம் - உதயசூரியன்
31. பண்ருட்டி - சபா ராஜேந்திரன்
32. கடலூர் - இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
34. திருவிடைமருதூர் (தனி) - கோவி செழியன்
35. கும்பகோணம் - கா.அன்பழகன்
36. திருவையாறு - செல்லக்கண்ணன்
37. தஞ்சாவூர் - எஸ்.எம்.உபயதுல்லா
38. ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர் (தனி) - மதிவாணன்
40. மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா
41. திருவாரூர் - மு.கருணாநிதி
42. நன்னிலம் - இளங்கோவன்
43. திருச்சி மேற்கு - கே.என்.நேரு
44. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி
45. திருவெறும்பூர் - சேகரன்
46. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்
47. லால்குடி - சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் - செல்வராஜ்
49. துறையூர் - பரிமளா தேவி
50. பெரம்பலூர் - பிரபாகரன்
51, குன்னம் - சிவசங்கரன்
52. அரவாக்குறிச்சி - கே.சிபழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம் (தனி) - காமராஜ்
54. குளித்தலை - இரா.மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை - கவிதைப்பிதத்ன்
56. விராலிமலை - எஸ்.ரகுபதி
57. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி (தனி) - சின்னத்துரை
59. ஏற்காடு - தமிழ்ச்செல்வன்
60. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு - சிவலிங்கம்
62. வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்
64. ராசிபுரம் தனி - வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி
66. குமாரபாளையம் - செல்வராஜ்
67. பென்னாகரம் - இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்
69. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன்
70. தளி - ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் - அருண் குமார்
72. கவுண்டம்பாளையம் - டி.பி. சுப்பிரமணியம்
73. கோவை வடக்கு - வீரகோபால்
74. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்
76. தாராபுரம் தனி - ரா.ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் - சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி
80. அந்தியூர்- என்.கே.கே.பி. ராஜா
81. பவானிசாகர் (தனி) - லோகேஸ்வரி
82. கூடலூர் (தனி) - திராவிடமணி
83. குன்னூர் - ராமச்சந்திரன்
84. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
86. திருமங்கலம் - மணிமாறன்
87. உசிலம்பட்டி - ராமசாமி
88. மதுரை மத்தி - எஸ்.எஸ். கெளஸ் பாட்ஷா
89. மதுரை மேற்கு - கோ.தளபதி
90. பழனி - செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
92. நத்தம் - விஜயன்
93. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94. ஆண்டிப்பட்டி - மூக்கையா
95. கம்பம் - கம்பம் ராமகிருஷ்ணன்
96. பெரியகுளம் (தனி) - அன்பழகன்
97. போடிநாயக்கனூர் - லட்சுமணன்
98. திருவாடானை - சுப தங்கவேலன்
99. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் - கே.என்.பெரியகருப்பன்
101. ராஜபாளையம் - தங்கபாண்டியன்
102. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - துரை
103. சாத்தூர் - கடற்கரை ராஜ்
104. சிவகாசி - வனராஜா
105. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
106. திருச்சுழி - தங்கம் தென்னரசு
107. மானாமதுரை (தனி) - தமிழரசி
108. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
109. சங்கரன் கோவில் (தனி) - உமா மகேஸ்வரி
110. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்
111. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
112. பாளையங்கோட்டை - மைதீன்கான்
113. தூத்துக்குடி - கீதா ஜீவன்
114. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
115. ஒட்டப்பிடாரம் - ராஜா
116. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
117. கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன்
118. நாகர்கோவில் - மகேஷ்
119. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்


70 comments:

ILA (a) இளா said...

கலைஞருக்கு ஓட சொந்த ஊராவது இருக்கு. அம்மாவுக்கு? உடன்பாடில்லாத பதிவு.

அபி அப்பா said...

கலைஞர் என்னவோ கேரளாவுக்கோ, கார்நாடகவுக்கோ போனது மாதிரி ஒரு பதிவு. அடுத்து ஸ்டாலின் கூட சென்னையிலே தான் இருக்கின்றார். என்ன உனா தானா தம்பி? நடுநிலை தவறலாம். அதுக்காக இப்படியா? அதிலும் கூட எப்படியாவது அதிமுக கூட்டணி உறுவாகிவிட வேண்டும் என்பது போல சில வரிகள். ஊகூம் என் ஓட்டு மைனஸ் தான். ரொம்ப நாள் கழிச்சு வர்ரேன். (ஆனா எல்லா பதிவையும் படிக்க சொல்லியாவது கேட்டுடுவேனாக்கும்)

Unmaivirumpi said...

கடைசி காலத்திலேயாவது சொந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற நல் எண்ணம் கூட இருக்கலாம். அதோடு சென்னையில் தொகுதி வேண்டும் என்று சென்ற முறை கொடி தூக்கிய காங்கிரசை 'அரவனைத்து' செல்ல அவர்களுக்கு தொகுதி ஒதுக்கி இருக்கலாம். இப்படியும் பேசலாம் நீங்க சொல்ற மாதிரியும் பேசலாம்.

pichaikaaran said...

"இன்றைய இந்த இரவு நேரத்தில் ஆத்தா ஜெயலலிதா, வைகோவுக்கு 15 சீட்டுக்களை ஒதுக்க சம்மதம் தெரிவித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்ட தொகுதிகளை மீண்டும் விட்டுக் கொடுக்க முன் வந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன..!"

அட ..ராத்திரி கண் முழிச்சு உங்க பதிவை பார்த்தது வீண் போகல... புதுசா நியூஸ் கொடுத்து இருக்கீங்க...

உண்மை தமிழன் அண்ணன்னா, உண்மை தமிழன் அண்ணன் தான்...

Stock said...

////சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 95 சதவிகிதத்தினருக்கே////
next line
//புதுமுகங்கள் 58 பேர்///

anne kanakku thappa varuthee.
nan kanakkula weekko :-)

செங்கோவி said...

வைகோ மறுபடி போனா அதைவிடக் கேவலம் இல்லை!

VJR said...

ஜெயலலிதாதான் இப்படின்னா, அவங்கள ஃபாலோ பன்றவாளுக்கும் கண்ணு தெரியாதோ?

எப்பா முருகா, ஏண்டா அபிஸ்ட்டுகளையெல்லாம் பக்தனா வெச்சுண்டு இருக்கே?

VJR said...

கூட்டனியே கலகலத்துட்டு துண்டக் காணோம் துணியக்காணோமுன்னு ஓடிட்டு இருக்கான், இவருக்கு திருவாரூர் ஒரு பெரிய விசயமாப் போச்சு.

வாழ்க உண்மை தமிழன்...???

ராஜரத்தினம் said...

//கூட்டனியே கலகலத்துட்டு துண்டக் காணோம் துணியக்காணோமுன்னு ஓடிட்டு இருக்கான், இவருக்கு திருவாரூர் ஒரு பெரிய விசயமாப் போச்சு.//

இவாளாவ‌து கூட்ட‌ணிக‌ளை ஓட்ட‌ம் பிடிக்க‌ வெச்சா! ஆனா நீங்க‌ டெல்லிக்கே ஓடினேளா இல்லியோ? லெட்ட‌ர் குடுக்க‌னும்னா த‌ந்தி அடிச்சா போற‌து. மித்துக்கில்லாம் அப்டிதானே செஞ்சாள்? ஏன் ஷொல்றேனா சோப்லாங்கிக்கு சோம்பேறி பெட்ட‌ரில்லியோ?

எல் கே said...

//சேலம் தெற்கு - சிவலிங்கம்
62. வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்


///

மூனும் தோல்வி சர்வ நிச்சயம்

எல் கே said...

//ஸ்டாலின் கூட சென்னையிலே தான் இருக்கின்றார்//

சிட்டி லிமிட் இல்லை

பழமைபேசி said...

அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...
எம்சிஆருப் போல
கெரமாங்கெல்லாம்
சூரியனுக்குன்னு ஆகிப் போச்சுண்ணே....
அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...

நகரமெல்லாம் பிரிஞ்சி நிக்க
ஊருப்பக்கம் ஒத்த ரூவா அரிசிக்குப் பின்னால்...
பெண்டு புள்ளையெல்லாம் டிவீப் பொட்டி பின்னால்...
மொத்தத்துல ஊருப்பக்கம் நல்ல மகசூலுண்ணே....
அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...

பழமைபேசி said...

அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...
எம்சிஆருப் போல
கெரமாங்கெல்லாம்
சூரியனுக்குன்னு ஆகிப் போச்சுண்ணே....
அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...

நகரமெல்லாம் பிரிஞ்சி நிக்க
ஊருப்பக்கம் ஒத்த ரூவா அரிசிக்குப் பின்னால்...
பெண்டு புள்ளையெல்லாம் டிவீப் பொட்டி பின்னால்...
மொத்தத்துல ஊருப்பக்கம் நல்ல மகசூலுண்ணே....
அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...

Anonymous said...

என்ன உனா தானா Sir? நடுநிலை தவறலாம். அதுக்காக இப்படியா?

sasibanuu said...

அம்மா கூட சொந்த ஊருக்கு தானே போய்ட்டாங்க .....
கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க

Unknown said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே

ரிஷி said...

அண்ணே! எனக்கும் இது உடன்பாடில்லாத பதிவு. கருணாநிதி தன் கடைசி காலத்தில் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் பணி ஆற்ற எண்ணியிருக்கலாம். அதை நாம் குறைகூற முடியாது. ஜெயாவும் ஸ்ரீரங்கம் சொந்த ஊர் என்பதுபோலத்தான் சொல்கிறார்கள். அங்கே பிராமின் அதிகமிருப்பதாலேயேதான் அவர் அங்கே போட்டியிடுகிறார். இதையெல்லாம் பெரிதுபடுத்தி பதிவுபோடத் தேவையில்லை.

இதற்கு மேலும் வைகோ ஜெயாவின் பக்கம் போனால் அந்தக் காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? நாயிடம் சில நேரங்களில் விளையாட்டுக் காட்டுவோம். கையில் வைத்திருக்கும் பிஸ்கட்டைப் போடாமல் கொஞ்ச தூரம் உச் உச்சென்று சொல்லிக்கொண்டே இழுத்துச் சென்று அப்புறம் போடுவோம். விசுவாச நாயும் அதை அப்படியே கவ்விக்கொள்ளும். இதுதான் என் மனக்கண்ணில் நிற்கிறது!!

இதுவே கருணாநிதி அணியில் கொஞ்சம் ரிவர்ஸ்! அங்கே நாய் தன் எஜமானன் போட்ட பிஸ்கட்டுகளை மதிக்காமல் குரைத்துக்கொண்டே கூடுதல் பிஸ்கட்கள் கேட்டது. கடித்துக் குதறிவிடுமோ எனப் பயந்த எஜமானர் கூடுதல் பிஸ்கட்கள் போட்டுவிட்டார்.

(டிஸ்கி : அரசியல்வியாதிகளுடன் ஒப்பிட்டு நாயைக் கேவலப்படுத்திவிட்டேன் என யாரும் எண்ண வேண்டாம். சும்மா ஒரு உதாரணத்திற்குத்தான்..!)

ரிஷி said...

எனது நண்பர்களிலேயே சிலர் ஜெயாவின் இந்தப் பிற்போக்கான முடிவைப் பார்த்துவிட்டு, இதற்கு கருணாநிதியே தேவலாம் என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. அதிரடியாக முடிவெடுப்பது என்பது ஒரு நல்ல திறமைதான். ஆனால் அதுவே நகைப்புக்குள்ளாகிவிடக்கூடாது.

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...
கலைஞருக்கு ஓட சொந்த ஊராவது இருக்கு. அம்மாவுக்கு? உடன்பாடில்லாத பதிவு.]]]

இளா..

கலைஞர் திருவாரூரில் போட்டியிடுவது ஏன் என்பதற்கான காரணத்தை பதிவில் விளக்கியிருக்கிறேன்..! அதனைப் புரிந்து கொள்ளாமல் எடக்கு மடக்கு கேள்வி கேட்டால் எப்படி..?

ஜெயலலிதாவுக்கு சொந்த ஊர் கர்நாடகாவில் இருக்கிறது என்பது காலத்தின் செயல். அதனை யாரால் மாற்ற முடியும்..!?

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

கலைஞர் என்னவோ கேரளாவுக்கோ, கார்நாடகவுக்கோ போனது மாதிரி ஒரு பதிவு. அடுத்து ஸ்டாலின்கூட சென்னையிலேதான் இருக்கின்றார். என்ன உனா தானா தம்பி? நடுநிலை தவறலாம். அதுக்காக இப்படியா? அதிலும்கூட எப்படியாவது அதிமுக கூட்டணி உறுவாகிவிட வேண்டும் என்பது போல சில வரிகள். ஊகூம் என் ஓட்டு மைனஸ்தான். ரொம்ப நாள் கழிச்சு வர்ரேன். (ஆனா எல்லா பதிவையும் படிக்க சொல்லியாவது கேட்டுடுவேனாக்கும்)]]]

பின்ன.. உங்க ஐயாவை வீட்டுக்கு அனுப்பணும்னு ஒத்தக் கால்ல நின்னுக்கிட்டிருக்கேன். அப்புறம் எப்படி இப்படி எழுதாம இருப்பேன்..? மைனஸ் ஓட்டா குத்துறீங்க..? இருங்க.. எனக்கும் ஒரு நேரம் வரும். அப்போ பார்த்துக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Unmaivirumpi said...
கடைசி காலத்திலேயாவது சொந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற நல் எண்ணம் கூட இருக்கலாம். அதோடு சென்னையில் தொகுதி வேண்டும் என்று சென்ற முறை கொடி தூக்கிய காங்கிரசை 'அரவனைத்து' செல்ல அவர்களுக்கு தொகுதி ஒதுக்கி இருக்கலாம். இப்படியும் பேசலாம் நீங்க சொல்ற மாதிரியும் பேசலாம்.]]]

இல்லை.. சென்னையில் நின்றால் தோற்றுவிடுவோம் என்கிற பயம்தான் காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"இன்றைய இந்த இரவு நேரத்தில் ஆத்தா ஜெயலலிதா, வைகோவுக்கு 15 சீட்டுக்களை ஒதுக்க சம்மதம் தெரிவித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்ட தொகுதிகளை மீண்டும் விட்டுக் கொடுக்க முன் வந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன..!"

அட ராத்திரி கண் முழிச்சு உங்க பதிவை பார்த்தது வீண் போகல. புதுசா நியூஸ் கொடுத்து இருக்கீங்க.
உண்மை தமிழன் அண்ணன்னா, உண்மை தமிழன் அண்ணன்தான்.]]]

நன்றிகள் தம்பி.. எல்லாம் உங்களுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Stock said...

////சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 95 சதவிகிதத்தினருக்கே////
next line
//புதுமுகங்கள் 58 பேர்///

anne kanakku thappa varuthee.
nan kanakkula weekko :-)]]]

மன்னிக்கணும். நீங்கள் குறிப்பிட்ட செய்தி பின் இணைப்பாக இணைத்தேன். முன்னர் எழுதியதை நீக்க மறந்துவிட்டேன்..

நான் கணக்கில் கொஞ்சம் வீக்குதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
வைகோ மறுபடி போனா அதைவிடக் கேவலம் இல்லை!]]]

வேறு வழியில்லை.. பொது எதிரியை வீழ்த்தணும்னா இதையெல்லாம் பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[VJR said...
ஜெயலலிதாதான் இப்படின்னா, அவங்கள ஃபாலோ பன்றவாளுக்கும் கண்ணு தெரியாதோ? எப்பா முருகா, ஏண்டா அபிஸ்ட்டுகளையெல்லாம் பக்தனா வெச்சுண்டு இருக்கே?]]]

முருகனின் பக்தர்கள் எப்போதும் அபிஷ்டுகளாக இருக்க முடியாது ஸார்..! உங்க கண்ணை நல்லா தொறந்து பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//கூட்டனியே கலகலத்துட்டு துண்டக் காணோம் துணியக் காணோமுன்னு ஓடிட்டு இருக்கான், இவருக்கு திருவாரூர் ஒரு பெரிய விசயமாப் போச்சு.//

இவாளாவ‌து கூட்ட‌ணிக‌ளை ஓட்ட‌ம் பிடிக்க‌ வெச்சா! ஆனா நீங்க‌ டெல்லிக்கே ஓடினேளா இல்லியோ? லெட்ட‌ர் குடுக்க‌னும்னா த‌ந்தி அடிச்சா போற‌து. மித்துக்கில்லாம் அப்டிதானே செஞ்சாள்? ஏன் ஷொல்றேனா சோப்லாங்கிக்கு சோம்பேறி பெட்ட‌ரில்லியோ?]]]

ஹி.. ஹி.. ஹி.. இப்படியெல்லாம் எனக்கு எழுத வர மாட்டேன்றது.. ஏனோ..?

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

//சேலம் தெற்கு - சிவலிங்கம்
62. வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்///

மூனும் தோல்வி சர்வ நிச்சயம்]]]

உங்க வாக்கு நிச்சயம் பலிக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[எல் கே said...

/ஸ்டாலின் கூட சென்னையிலேதான் இருக்கின்றார்//

சிட்டி லிமிட் இல்லை.]]]

சென்னை மாவட்டத் தொகுதி. ஆனால் அவுட்டர்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...
எம்சிஆருப் போல கெரமாங்கெல்லாம்
சூரியனுக்குன்னு ஆகிப் போச்சுண்ணே....
அண்ணே... அண்ணே... உத அண்ணே...
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...

நகரமெல்லாம் பிரிஞ்சி நிக்க
ஊருப் பக்கம் ஒத்த ரூவா அரிசிக்குப் பின்னால்...
பெண்டு புள்ளையெல்லாம் டிவீப் பொட்டி பின்னால்...
மொத்தத்துல ஊருப் பக்கம் நல்ல மகசூலுண்ணே....
அண்ணே... அண்ணே... உத அண்ணே.
நம்ம ஊரு, நல்ல ஊரு... நெம்ப மாறிப் போச்சுண்ணே...]]]

இந்தத் தடவையும் இவங்க முழிக்கலைன்னா அதோ கதிதான்.. அவ்ளோதான் சொல்ல முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...
என்ன உனா தானா Sir? நடுநிலை தவறலாம். அதுக்காக இப்படியா?]]]

பதிவில் என்ன தவறு இருக்கிறது..?

உண்மைத்தமிழன் said...

[[[sasibanuu said...
அம்மாகூட சொந்த ஊருக்கு தானே போய்ட்டாங்க. கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க]]]

அ.தி.மு.க. பத்தி எழுதும்போது பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே.]]]

தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி விக்கி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

அண்ணே! எனக்கும் இது உடன்பாடில்லாத பதிவு. கருணாநிதி தன் கடைசி காலத்தில் சொந்த ஊருக்குச் சென்று மக்கள் பணி ஆற்ற எண்ணியிருக்கலாம். அதை நாம் குறை கூற முடியாது. ஜெயாவும் ஸ்ரீரங்கம் சொந்த ஊர் என்பது போலத்தான் சொல்கிறார்கள். அங்கே பிராமின் அதிகமிருப்பதாலேயேதான் அவர் அங்கே போட்டியிடுகிறார். இதையெல்லாம் பெரிதுபடுத்தி பதிவு போடத் தேவையில்லை.

இதற்கு மேலும் வைகோ ஜெயாவின் பக்கம் போனால் அந்தக் காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? நாயிடம் சில நேரங்களில் விளையாட்டுக் காட்டுவோம். கையில் வைத்திருக்கும் பிஸ்கட்டைப் போடாமல் கொஞ்ச தூரம் உச் உச்சென்று சொல்லிக் கொண்டே இழுத்துச் சென்று அப்புறம் போடுவோம். விசுவாச நாயும் அதை அப்படியே கவ்விக்கொள்ளும். இதுதான் என் மனக்கண்ணில் நிற்கிறது!!

இதுவே கருணாநிதி அணியில் கொஞ்சம் ரிவர்ஸ்! அங்கே நாய் தன் எஜமானன் போட்ட பிஸ்கட்டுகளை மதிக்காமல் குரைத்துக்கொண்டே கூடுதல் பிஸ்கட்கள் கேட்டது. கடித்துக் குதறிவிடுமோ எனப் பயந்த எஜமானர் கூடுதல் பிஸ்கட்கள் போட்டுவிட்டார்.

(டிஸ்கி : அரசியல் வியாதிகளுடன் ஒப்பிட்டு நாயைக் கேவலப்படுத்திவிட்டேன் என யாரும் எண்ண வேண்டாம். சும்மா ஒரு உதாரணத்திற்குத்தான்..!)]]]

ரிஷி..!

ஜெயலலிதா அங்கே ஓடியிருப்பதுதான் இதே காரணத்திற்காகத்தான். வேறில்லை..! அதிமுக பற்றி எழுதும்போது குறிப்பிடலாம் என்று இருந்தேன்..!

வைகோவுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. கட்சியை நடத்த வேண்டுமெனில் இதைத்தான் செய்யாக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
எனது நண்பர்களிலேயே சிலர் ஜெயாவின் இந்தப் பிற்போக்கான முடிவைப் பார்த்துவிட்டு, இதற்கு கருணாநிதியே தேவலாம் என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. அதிரடியாக முடிவெடுப்பது என்பது ஒரு நல்ல திறமைதான். ஆனால் அதுவே நகைப்புக்குள்ளாகிவிடக் கூடாது.]]]

இது பிற்போக்குத்தனம் அல்ல. திமிர்த்தனமானது.. முட்டாள்தனமானது..! ஆதிக்கத்தனமானது..! உதிரிக் கட்சிகளை அழிக்கும் அபாயம்..!

உண்மைத்தமிழன் said...

[[[VJR said...

கூட்டனியே கலகலத்துட்டு துண்டக் காணோம் துணியக் காணோமுன்னு ஓடிட்டு இருக்கான், இவருக்கு திருவாரூர் ஒரு பெரிய விசயமாப் போச்சு.

வாழ்க உண்மை தமிழன்???]]]

முந்தைய பதிவைப் படிக்கலியா..?

Unknown said...

iyoo swmai mudiyala yappa ... thiruvaruku ponathu ivaruku mukiyama poochu ,,, sir electionku appuram nenga yenga poringa solunga anupi vakiren

Prakash said...

Unmai Anna,

Pls read : Good reply to your post.

http://lakaram.blogspot.com/2011/03/blog-post_9131.html

Anonymous said...

//பதிவில் என்ன தவறு இருக்கிறது..?
//

ஜாதி ஓட்டுகளைப்பெற இல்லா சொந்த ஊரை இருக்கும் சொந்த ஊராகக் காட்டி ஆண்டிப்பட்டியை விட்டு ஓடுகிறவரை சுட்டாமல், பிறந்த ஊர் மக்களிடம் ஜாதி ஓட்டுகள் கேட்காமல் பொதுவாக சென்று கேட்பது மேல்.

ஜாதியாளரை விட்டுவிட்டு மற்றவரை மட்டும் பிடித்ததுதான் தவறு.

Veliyoorkaran said...

@UnmaiTamilan.//

திருவாரூர்க்கு கலைஞர் ஓடிட்டாரா...! என்னங்க பேசறீங்க..?
உங்க வீட்டுக்கு நீங்க கொஞ்ச நாள் கழிச்சு போனா உண்மை தமிழன் அவர் வீட்டுக்கு பயந்து ஓடிட்டாருனு சொல்ற மாதிரி இருக்கு உங்க கட்டுரை..!

தேர்தல் முடிவுகளில் புரிஞ்சுபீங்க...யாரு ஓட போறதுன்னு...!

ரிஷி said...

//வைகோவுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. கட்சியை நடத்த வேண்டுமெனில் இதைத்தான் செய்யாக வேண்டும்..!//

சரவணன்
போன சட்டமன்ற தேர்தலிலேயே 22 தொகுதிகள் தருவதாக திமுக தரப்பு சொன்னது. போட்டியிட்டிருந்தால் குறைந்தபட்சம் 12லிருந்து 15 வரை ஜெயித்திருக்க வாய்ப்புண்டு. யாரும் விலகிப் போயிருந்திருக்க மாட்டார்கள். இப்போது வெறும் ஆறு எம்.எல்.ஏ கிடைத்து அவர்களிலும் மூன்று பேர் பறந்துவிட்டனர். அதனால்தான் ஜெயா வைகோவை ஏறி மிதிக்கிறார். தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அரசியல் செய்தால் இப்படித்தான்!

தமிழினியன் said...

//உண்மைத்தமிழன் said...
[[[Stock said...

////சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 95 சதவிகிதத்தினருக்கே////
next line
//புதுமுகங்கள் 58 பேர்///

anne kanakku thappa varuthee.
nan kanakkula weekko :-)]]]

மன்னிக்கணும். நீங்கள் குறிப்பிட்ட செய்தி பின் இணைப்பாக இணைத்தேன். முன்னர் எழுதியதை நீக்க மறந்துவிட்டேன்..

நான் கணக்கில் கொஞ்சம் வீக்குதான்..!//

இன்னமும் மாத்தலியே அண்ணே!!! ஒருவேளை இப்டி காமெடியா காலி பன்னனும்ன்றதுதான் நோக்கமா?

Swaminathan said...

so far Thiruvarur is a reserved constituency
Now it is a general constituency

so Karunanithi wanted that he is to be elected from his home town

so nothing wrong in this
[lease dont talk what ever you want before considering all the facts

Swaminathan said...

so far Thiruvarur is a reserved constituency
Now it is a general constituency

so Karunanithi wanted that he is to be elected from his home town

so nothing wrong in this
please dont talk what ever you want before considering all the facts

MANI said...

முந்தைய பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்திற்கு பதிலையே காணோம் அண்ணாச்சி படிச்சீங்களா இல்ல சாய்ஸ்ல விட்டுடீங்களா.
கீழே மீண்டும் கொடுத்திருக்கேன் பாருங்க.
,,,,,,,
அண்ணே! நீங்க ஒருத்தரே போதும் ஜெயலலிதாவுகே தெரியாத வித்தையெல்லாம் எடுத்து விட்டு எங்க மக்களை கவுத்துடுவீங்களோன்னு பயமா இருக்கு.

ஸ்பெக்டரம் பிரச்சனையை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஜெயலலிதாவை விட கலைஞர் எவ்வளவோ தேவலாம் போல. இன்னிக்கு பட்டிதொட்டியெல்லாம் கலர்டிவி, காஸ் அடுப்பு இருக்குன்னா அதுக்கு காரணம் கலைஞர் தான். அரியணை ஏறிய முதல்நாளே 1 ரூபாய் அரிசி திட்டத்தில் கையெழுத்து போட்டவர். பலமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயரல, பலதரப்பு மக்களையும் அனுசரிச்சு அவங்க பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு செய்தவர். தன்னைவிட தகுதிகுறைந்தவர்களானாலும் அவர்களை கலந்தாலோசிச்சு முடிவுகள் எடுத்தார்.

அந்தம்மாவும் தான் ஆட்சி பண்ணிச்சு யாராச்சும் கிட்ட நெருங்க முடிஞ்சுதா, எல்லாரும் பொத்துன்னு கால்ல விழற சத்தம்தான் கேட்டுது. விலைவாசி, பஸ்கட்டணம் எல்லாம் எப்படி இருந்துச்சு, வீட்ல இருந்த செருப்பு, நகையெல்லாம் பார்தீங்கல்ல. அட எதாச்சும் சம்பாரிச்சா கூட பரவாயில்ல ஆனா மக்களுக்குன்னு உருப்படியா எதாச்சும் பண்ணினாங்களா. அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் பண்ணியது தான் சாதனை.

நாமெல்லாம் நினைக்கிறமாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் 1 லட்சத்து 76 கோடியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. சில பெரிய தொழிலதிபர்கள், பணமுதலைகள் ஸ்பெக்ட்ரம் மதிப்பு தெரியாத ராசாவுக்கு சில ஆயிரம் கோடிகள் பணம் கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டனர் என்றாலும் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட போட்டிகளால் பெரும் பயன் பெற்றவர்கள் பொதுமக்கள்தான் ஏனெனில் ஏலமுறையில் 2ஜி நடந்திருந்தால் இந்த அளவிற்கு குறைந்த விலையில் செல்போன் பயன்பாட்டிற்கு வந்திருக்காது. மேலும் 3ஜி விலையுடன் 2ஜி விலையை ஒப்பிடுவது என்பது மாட்டு வண்டியை காருடன் ஒப்பிடுவதற்கு சமம். இரண்டும் வேறுபட்ட தலைமுறை தொழில்நுட்பம் உடையவை.

ஊழலை கூட ஓரளவு சகித்துக் கொள்ளலாம் ஆனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பிய ஆணவமும், தான்தோன்றிதனமாகவும் நடக்கும் ஒரு பெண்மணி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று அந்த ஆண்டவனே நினைத்திருப்பான் போல அதான் அந்தம்மா புத்தியை இப்படி பேதலிச்சு போகச் செய்தான்.

எப்படியோ மூன்றாவது அணி அல்லது கூட்டணி ஆட்சி என்று இந்த முறை வந்தால் இந்த அளவிற்கு திருட முடியாது என்பது என் கருத்து.
,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த பதிவிலாவது உங்க பதில் என்னன்னு பார்ப்போம்.

உண்மைத்தமிழன் said...

[[[immie said...
iyoo swmai mudiyala yappa ... thiruvaruku ponathu ivaruku mukiyama poochu. sir electionku appuram nenga yenga poringa solunga anupi vakiren.]]]

கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு..! அனுப்பி வைக்குறீங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Unmai Anna,

Pls read : Good reply to your post.

http://lakaram.blogspot.com/2011/03/blog-post_9131.html]]]

மிக்க நன்றி..

உண்மைத்தமிழன் said...

[[[simmakkal said...

//பதிவில் என்ன தவறு இருக்கிறது..?//

ஜாதி ஓட்டுகளைப் பெற இல்லா சொந்த ஊரை இருக்கும் சொந்த ஊராகக் காட்டி ஆண்டிப்பட்டியை விட்டு ஓடுகிறவரை சுட்டாமல், பிறந்த ஊர் மக்களிடம் ஜாதி ஓட்டுகள் கேட்காமல் பொதுவாக சென்று கேட்பது மேல். ஜாதியாளரை விட்டுவிட்டு மற்றவரை மட்டும் பிடித்ததுதான் தவறு.]]]

அவர் சொந்த ஊரில் நிற்கணுமேன்னு நினைச்சு ஓடலை.. சென்னைல நின்னா ஜெயிக்க முடியாதுன்னு நினைச்சு ஓடுறாரு..

உண்மைத்தமிழன் said...

[[[திருவாரூர்காரன் said...

@UnmaiTamilan.//

திருவாரூர்க்கு கலைஞர் ஓடிட்டாரா...! என்னங்க பேசறீங்க..?
உங்க வீட்டுக்கு நீங்க கொஞ்ச நாள் கழிச்சு போனா உண்மை தமிழன் அவர் வீட்டுக்கு பயந்து ஓடிட்டாருனு சொல்ற மாதிரி இருக்கு உங்க கட்டுரை..!

தேர்தல் முடிவுகளில் புரிஞ்சுபீங்க. யாரு ஓட போறதுன்னு.!]]]

நன்றிங்கோ திருவாரூர்க்காரன்.. ஊர்ப்பாசம் பேச வைக்குது..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//வைகோவுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. கட்சியை நடத்த வேண்டுமெனில் இதைத்தான் செய்யாக வேண்டும்..!//

சரவணன் போன சட்டமன்ற தேர்தலிலேயே 22 தொகுதிகள் தருவதாக திமுக தரப்பு சொன்னது. போட்டியிட்டிருந்தால் குறைந்தபட்சம் 12லிருந்து 15 வரை ஜெயித்திருக்க வாய்ப்புண்டு. யாரும் விலகிப் போயிருந்திருக்க மாட்டார்கள். இப்போது வெறும் ஆறு எம்.எல்.ஏ கிடைத்து அவர்களிலும் மூன்று பேர் பறந்துவிட்டனர். அதனால்தான் ஜெயா வைகோவை ஏறி மிதிக்கிறார். தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அரசியல் செய்தால் இப்படித்தான்!]]]

நிச்சயமாக..! காலத்திற்கேற்றாற் போல் மாறிக் கொள்ள வேண்டும்.. வைகோவின் பிடிவாதமே சில நேரங்களில் தவறான முடிவுக்கு கொண்டு போய்விடுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[சுப.தமிழினியன் said...

மன்னிக்கணும். நீங்கள் குறிப்பிட்ட செய்தி பின் இணைப்பாக இணைத்தேன். முன்னர் எழுதியதை நீக்க மறந்துவிட்டேன். நான் கணக்கில் கொஞ்சம் வீக்குதான்..!//

இன்னமும் மாத்தலியே அண்ணே!!! ஒருவேளை இப்டி காமெடியா காலி பன்னனும்ன்றதுதான் நோக்கமா?]]]

ஐயோ.. வெரி ஸாரி.. இப்போ மாத்திர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Swaminathan said...
so far Thiruvarur is a reserved constituency.
Now it is a general constituency
so Karunanithi wanted that he is to be elected from his home town
so nothing wrong in this
[lease dont talk what ever you want before considering all the facts.]]]

ஓகே.. உங்களது நம்பிக்கையை குலைக்க விரும்பவில்லை. அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[எப்படியோ மூன்றாவது அணி அல்லது கூட்டணி ஆட்சி என்று இந்த முறை வந்தால் இந்த அளவிற்கு திருட முடியாது என்பது என் கருத்து.]]]

மணி.. தங்களின் இந்தக் கருத்துடன் மட்டும் எனக்கு உடன்பாடு உண்டு.. ஒத்து ஊதுகிறேன்..!

மு.சரவணக்குமார் said...

பெரியவர் என்ன செய்தாலும் அதை ஊதிபெரிதாக்கி சந்தோஷப் படுவதைப் பார்த்தால் நீங்கள் கடுமையாக கருனாநிதிஃபோபியாவில் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

சென்னையில் ஓர் ஊடக தளத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவது வேறு,நிதர்சனம் வேறு என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்திய பின்னரும் அதே தவறை செய்து கொண்டிருக்கிறீர்களோ என நினைக்கிறேன்.

நீங்கள் நினைப்பது போல ஜெயலலிதா அத்தனை எளிதாக ஆட்சிக்கு வந்து விட முடியாது என்பதுதான் நிதர்சனம்.எனக்கென்னவோ திமுக முன்பை விட இப்போது தெளிவாக தேர்தலை அணுகுவதாகவே தோன்றுகிறது.தொகுதி பங்கீட்டில் அம்மாவிடம் காணப்படும் பதட்டம் இவர்களிடம் இல்லை என்பதை கவனியுங்கள்.

என் கணிப்புகள் சரியாக இருக்குமானால் திமுக 77-85 தொகுதிகளில் வெல்லும், அதிமுக 55-62 தொகுதிகள் வெல்லலாம். காங்கிரஸ் மண்ணை கவ்வும்.உதிரிக் கட்சிகள் தயவில் அடுத்து கூட்டணி ஆட்சிக்கு வழி கிடைக்கும்.

மு.சரவணக்குமார் said...

விஜயகாந்த் கட்சியினரிடம் தெரியும் அதீத நம்பிக்கையே அவர்களுக்கு வேட்டு வைக்கலாம். விஜயகாந்த் இந்ததடவை சொல்லிக் கொள்கிறார் போல் ஜெயிக்காவிட்டால் கட்சி கந்தலாகிவிடும் ஆபத்திருக்கிறது. வைக்கோவிற்கு அந்த பிரச்சினை இல்லை. அவர் யானை மாதிரி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.

ராஜரத்தினம் said...

//சென்னையில் ஓர் ஊடக தளத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவது வேறு,நிதர்சனம் வேறு என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்திய பின்னரும் அதே தவறை செய்து கொண்டிருக்கிறீர்களோ என நினைக்கிறேன்.//

பாராளுமன்றம் தேர்தலில் அதிமுக மோசமாக தோற்கவில்லையே. கூட்டணி கட்சிகள்தான் மோசமாக தோற்றன. கொஞ்சம் 1999 தேர்தலுக்கு போவோமா? அப்ப அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அவ்வுளவுதான். தாமாக தனித்து நின்றது. அப்ப காங்கிரஸ் என்ற பெரிய மத்திய கட்சியுடனே கூட அவர் 10 ஜெயித்தார். 2009 அதைவிட பலம் குறைவுதான். இருந்தும் 9 சீட் ஜெயித்தது அழகிரி factorஐயுன் மீறி. Only PMK lost all seat. I dont think she lost anything rather than to money power and ruling power. என்னுடைய கணிப்புபடி அதிமுக தனியே நின்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்கமுடியும். நிச்சயம் காங்கிரஸ் வெளியே வரும். ப.ம.க பற்றீ No comments. ஒரு எம்பி சீட் போதும் அவர் அதிமுக அணி வர. By all probabaility JJ will storm back to Power.

R.Gopi said...

"தல” தன் சொந்த ஊர்ல அப்பீட் ஆக சான்ஸ் இருக்குன்னு சொல்றாய்ங்களே!!

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

அப்பனும் புல்லையும் சென்னைய விட்டு போனதுக்கு காரணம் லோக்கல் கவுன்சிலர்கள் தான் காரணம் . இதே காரணத்தால் தான் காங்கிரசுக்கு சென்னையில் தொகுதியும் கொடுக்கப்பட்டது இந்த உள்குத்து தெரியாமல் காங்கிரச்கரர்கள் துள்ளிகுதிக்கிறார்கள்

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
என் கணிப்புகள் சரியாக இருக்குமானால் திமுக 77-85 தொகுதிகளில் வெல்லும், அதிமுக 55-62 தொகுதிகள் வெல்லலாம். காங்கிரஸ் மண்ணை கவ்வும்.உதிரிக் கட்சிகள் தயவில் அடுத்து கூட்டணி ஆட்சிக்கு வழி கிடைக்கும்.]]]

உங்களது கணிப்பு பலிக்க எனது வாழ்த்துக்கள் நண்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

விஜயகாந்த் கட்சியினரிடம் தெரியும் அதீத நம்பிக்கையே அவர்களுக்கு வேட்டு வைக்கலாம். விஜயகாந்த் இந்த தடவை சொல்லிக் கொள்கிறார் போல் ஜெயிக்காவிட்டால் கட்சி கந்தலாகிவிடும் ஆபத்திருக்கிறது. வைகோவிற்கு அந்த பிரச்சினை இல்லை. அவர் யானை மாதிரி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.]]]

விஜயகாந்த் நிச்சயமாக இம்முறை கணிசமான தொகுதிகளை அள்ளுவார். வைகோவுக்கு சரியான தொகுதிகள் கிடைத்தால் ஜெயிக்க வாய்ப்புண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...
பாராளுமன்றம் தேர்தலில் அதிமுக மோசமாக தோற்கவில்லையே. கூட்டணி கட்சிகள்தான் மோசமாக தோற்றன. கொஞ்சம் 1999 தேர்தலுக்கு போவோமா? அப்ப அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அவ்வுளவுதான். தாமாக தனித்து நின்றது. அப்ப காங்கிரஸ் என்ற பெரிய மத்திய கட்சியுடனே கூட அவர் 10 ஜெயித்தார். 2009 அதைவிட பலம் குறைவுதான். இருந்தும் 9 சீட் ஜெயித்தது அழகிரி factorஐயுன் மீறி. Only PMK lost all seat. I dont think she lost anything rather than to money power and ruling power. என்னுடைய கணிப்புபடி அதிமுக தனியே நின்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்கமுடியும். நிச்சயம் காங்கிரஸ் வெளியே வரும். ப.ம.க பற்றீ No comments. ஒரு எம்பி சீட் போதும் அவர் அதிமுக அணி வர. By all probabaility JJ will storm back to Power.]]]

ம்.. எல்லோரின் கணிப்பும் ஐயாவை வீட்டுக்கு அனுப்பும் எதிர்பார்ப்பாகவே உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
"தல” தன் சொந்த ஊர்ல அப்பீட் ஆக சான்ஸ் இருக்குன்னு சொல்றாய்ங்களே!!]]]

ஆனாலும் ஆகலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[karthikeyan said...
அப்பனும் புல்லையும் சென்னைய விட்டு போனதுக்கு காரணம் லோக்கல் கவுன்சிலர்கள்தான் காரணம் . இதே காரணத்தால்தான் காங்கிரசுக்கு சென்னையில் தொகுதியும் கொடுக்கப்பட்டது இந்த உள்குத்து தெரியாமல் காங்கிரச்கரர்கள் துள்ளி குதிக்கிறார்கள்.]]]

எப்படியோ ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்தால் சரிதான்..!

MANO நாஞ்சில் மனோ said...

திமுக சென்னையை காலி பண்ண போறாங்களோ # டவுட்டு....

Unknown said...

Hi TT,
Have a look at this article in tehelka.
Really bold.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne260311Coverstory.asp

ராஜேஷ், திருச்சி said...

தோடா.. சொல்லிட்டரு.. அம்மா சிரிரங்கதுக்கு ஓடுச்சி ஆண்டிபட்டிய விட்டுட்டு .. அதுகென்ன பதிவு போடலையா..



எல்லோரும் கேட்டப்போ , அ தி மு க பத்தி பதிவு போடறப்போ எழுதலாம்னு இருக்கேனு சொன்னேங்க.. ஆனான் அப்படி எதுவும் இல்லையே உங்க அ தி மு க பதிவுல.. மோதல் பேரு அம்மா பேரு போட்ட சந்தோஷபட்டுகிட்டீங்க.. அவ்ளோதான். அம்மா ஏன் சிறிரங்கம் போனங்கன்னு போடலையே.. அப்போ உ தா போடறதெல்லாம் வெறும் வெட்டி சீனா?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜேஷ், திருச்சி said...

தோடா.. சொல்லிட்டரு.. அம்மா சிரிரங்கதுக்கு ஓடுச்சி ஆண்டிபட்டிய விட்டுட்டு .. அதுகென்ன பதிவு போடலையா. எல்லோரும் கேட்டப்போ, அ.தி.மு.க.பத்தி பதிவு போடறப்போ எழுதலாம்னு இருக்கேனு சொன்னேங்க. ஆனான் அப்படி எதுவும் இல்லையே உங்க அ.தி.மு.க.பதிவுல. மோதல் பேரு அம்மா பேரு போட்ட சந்தோஷபட்டுகிட்டீங்க. அவ்ளோதான். அம்மா ஏன் சிறிரங்கம் போனங்கன்னு போடலையே. அப்போ உ.தா.போடறதெல்லாம் வெறும் வெட்டி சீனா?]]]

ஆண்டிப்பட்டில நின்னு ஜெயிக்க முடியுமான்னு இந்த முறை அம்மாவுக்கே சந்தேகம் வந்திருச்சு. அதுனால இப்பவும் அதிமுக ஸ்டிராங்கா இருக்குற சிறீரங்கத்துக்கு ஓடிட்டாங்க.. அவ்ளோதான்..! எல்லாம் தேர்தல் ஓட்டுக்களுக்காகத்தான்..! பயம்.. பயம்.. பயம்.. ஒருவேளை இவங்க தோத்து, கட்சி ஜெயிச்சுட்டா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு வயிறு எரிஞ்சே சாகணும்ல்ல. அதனைத் தவிர்ப்பதற்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...
தி.மு.க. சென்னையை காலி பண்ண போறாங்களோ # டவுட்டு.]]]

"போறாங்களோ" இல்லீங்க ஸார்.. "காலி பண்ணிட்டாங்க".. இதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[Sanjeevi said...

Hi TT, Have a look at this article in tehelka. Really bold.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne260311Coverstory.asp]]]

படித்தேன். நன்றி.. யாரேனும் தமிழாக்கம் செய்து கொடுத்தால் போடலாம்..!

Ashok said...

ஏன் இவ்ளோ கேவலமா எழுதுறீங்க? திருவாரூர் திமுக காரர்களால் யாருமே சீட் கேட்க கூடாது, தலைவர் தான் நிற்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, அதற்கு பின் கருணாநிதி திருவாரூரில் நிற்கிறார். ஏன் உங்க ஈனப்புத்தி இப்படி வேலை செய்யுது? சாதிப் பேப்பரான தினமலரில் கூட இந்த செய்தி வந்திருந்துச்சு. உங்கள் மேல் இருக்கும் மரியாதையை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Don Ashok said...

ஏன் இவ்ளோ கேவலமா எழுதுறீங்க? திருவாரூர் தி.மு.க.காரர்களால் யாருமே சீட் கேட்க கூடாது, தலைவர்தான் நிற்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, அதற்கு பின் கருணாநிதி திருவாரூரில் நிற்கிறார். ஏன் உங்க ஈனப் புத்தி இப்படி வேலை செய்யுது? சாதிப் பேப்பரான தினமலரில்கூட இந்த செய்தி வந்திருந்துச்சு. உங்கள் மேல் இருக்கும் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.]]]

தங்களது புரிதலுக்கும், அறிவுரைக்கும் மிக்க நன்றி..!