2011-ஆஸ்கர் திரைப்பட விருதுகள்..!


28-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


உலக சினிமாவுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கர் விருதுகள் இன்று காலை வழங்கப்பட்டுவிட்டன. இந்த முறையும் 2 விருதுகளையும் வாங்கிவிடுவார் என்று எதிர்பார்ப்பில் இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிட்டியுள்ளது. ரஹ்மான் போட்டியிட்ட இரண்டு பிரிவுகளிலுமே அவர் தேர்வாகவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.



தேர்வானவர்களின் முழுப் பட்டியல் இங்கே :

1. Best Picture - பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள்

·    “Black Swan” Mike Medavoy, Brian Oliver and Scott Franklin, Producers
·    “The Fighter” David Hoberman, Todd Lieberman and Mark Wahlberg, Producers
·    “Inception” Emma Thomas and Christopher Nolan, Producers
·    “The Kids Are All Right” Gary Gilbert, Jeffrey Levy-Hinte and Celine Rattray, Producers
·    “The King's Speech” Iain Canning, Emile Sherman and Gareth Unwin, Producers
·    “127 Hours” Christian Colson, Danny Boyle and John Smithson, Producers
·    “The Social Network” Scott Rudin, Dana Brunetti, Michael De Luca and Ceán Chaffin,    

      Producers
·    “Toy Story 3” Darla K. Anderson, Producer
·    “True Grit” Scott Rudin, Ethan Coen and Joel Coen, Producers
·    “Winter's Bone" Anne Rosellini and Alix Madigan-Yorkin, Producers

விருது பெற்ற திரைப்படம்

“The King's Speech”

2. Best Director - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Black Swan” Darren Aronofsky
·    “The Fighter” David O. Russell
·    “The King's Speech” Tom Hooper
·    “The Social Network” David Fincher
·    “True Grit” Joel Coen and Ethan Coen

விருது பெற்றவர்

Tom Hooper - “The King's Speech”


3. Best Writing (Original Screenplay) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Another Year” Written by Mike Leigh
·    “The Fighter” Screenplay by Scott Silver and Paul Tamasy & Eric Johnson;
      Story by Keith Dorrington & Paul Tamasy & Eric Johnson
·    “Inception” Written by Christopher Nolan
·    “The Kids Are All Right” Written by Lisa Cholodenko & Stuart Blumberg
·    “The King's Speech” Screenplay by David Seidler

விருது பெற்றவர்

David Seidler for “The King's Speech”
 
4. Best  Writing (Adapted Screenplay) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “127 Hours” Screenplay by Danny Boyle & Simon Beaufoy
·    “The Social Network” Screenplay by Aaron Sorkin
·    “Toy Story 3” Screenplay by Michael Arndt; Story by John Lasseter, Andrew Stanton        

      and Lee Unkrich
·    “True Grit” Written for the screen by Joel Coen & Ethan Coen
·    “Winter's Bone” Adapted for the screen by Debra Granik & Anne Rosellini

விருது பெற்றவர்

Aaron Sorkin For “The Social Network”
 
5. Best Actor in a Leading Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Javier Bardem in “Biutiful”
·    Jeff Bridges in “True Grit”
·    Jesse Eisenberg in “The Social Network”
·    Colin Firth in “The King's Speech”
·    James Franco in “127 Hours”

விருது பெற்றவர்

Colin Firth in “The King's Speech”
 
6. Best Actor in a Supporting Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Christian Bale in “The Fighter”
·    John Hawkes in “Winter's Bone”
·    Jeremy Renner in “The Town”
·    Mark Ruffalo in “The Kids Are All Right”
·    Geoffrey Rush in “The King's Speech”

விருது பெற்றவர்

Christian Bale in “The Fighter”
 
7. Best Actress in a Leading Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Annette Bening in “The Kids Are All Right”
·    Nicole Kidman in “Rabbit Hole”
·    Jennifer Lawrence in “Winter's Bone”
·    Natalie Portman in “Black Swan”
·    Michelle Williams in “Blue Valentine”

விருது பெற்றவர்

Natalie Portman in “Black Swan”
 
8. Best Actress in a Supporting Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    Amy Adams in “The Fighter”
·    Helena Bonham Carter in “The King's Speech”
·    Melissa Leo in “The Fighter”
·    Hailee Steinfeld in “True Grit”
·    Jacki Weaver in “Animal Kingdom”

விருது பெற்றவர்

Melissa Leo in “The Fighter”
 
9. Best Cinematography - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Black Swan” Matthew Libatique
·    “Inception” Wally Pfister
·    “The King's Speech” Danny Cohen
·    “The Social Network” Jeff Cronenweth
·    “True Grit” Roger Deakins

விருது பெற்றவர்

Wally Pfister  - “Inception”
 
10. Best Film Editing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Black Swan” Andrew Weisblum
·    “The Fighter” Pamela Martin
·    “The King's Speech” Tariq Anwar
·    “127 Hours” Jon Harris
·    “The Social Network” Angus Wall and Kirk Baxter

விருது பெற்றவர்கள்

Angus Wall and Kirk Baxter  - “The Social Network”
 
11. Best Costume Design - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Alice in Wonderland” Colleen Atwood
·    “I Am Love” Antonella Cannarozzi
·    “The King's Speech” Jenny Beavan
·    “The Tempest” Sandy Powell
·    “True Grit” Mary Zophres

விருது பெற்றவர்

Colleen Atwood - “Alice in Wonderland”
 
12. Best Makeup - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Barney's Version” Adrien Morot
·    “The Way Back” Edouard F. Henriques, Gregory Funk and Yolanda Toussieng
·    “The Wolfman” Rick Baker and Dave Elsey

விருது பெற்றவர்கள்

Rick Baker and Dave Elsey - “The Wolfman”
 
13. Best Art Direction - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Alice in Wonderland”
     Production Design: Robert Stromberg; Set Decoration: Karen O'Hara
   
·    “Harry Potter and the Deathly Hallows Part 1”
     Production Design: Stuart Craig; Set Decoration: Stephenie McMillan
   
·    “Inception”
     Production Design: Guy Hendrix Dyas; Set Decoration: Larry Dias and Doug Mowat
   
·    “The King's Speech”
      Production Design: Eve Stewart; Set Decoration: Judy Farr
   
·    “True Grit”
      Production Design: Jess Gonchor; Set Decoration: Nancy Haigh

விருது பெற்றவர்கள்

Production Design : Robert Stromberg ; Set Decoration : Karen  O'Hara - “Alice in Wonderland”
 
14. Best Music (Original Score) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “How to Train Your Dragon” John Powell
·    “Inception” Hans Zimmer
·    “The King's Speech” Alexandre Desplat
·    “127 Hours” A.R. Rahman
·    “The Social Network” Trent Reznor and Atticus Ross

விருது பெற்றவர்கள்

Trent Reznor and Atticus Ross  - “The Social Network”
 
15. Best Music (Original Song) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Coming Home” from “Country Strong” Music and Lyric by Tom Douglas, Troy Verges  

      and Hillary Lindsey
·    “I See the Light” from “Tangled” Music by Alan Menken Lyric by Glenn Slater
·    “If I Rise” from “127 Hours” Music by A.R. Rahman Lyric by Dido and Rollo Armstrong
·    “We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman

விருது பெற்றவர்

“We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman
 
16. Best Sound Editing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Inception” Richard King
·    “Toy Story 3” Tom Myers and Michael Silvers
·    “Tron: Legacy” Gwendolyn Yates Whittle and Addison Teague
·    “True Grit” Skip Lievsay and Craig Berkey
·    “Unstoppable” Mark P. Stoeckinger

விருது பெற்றவர்

Richard King - “Inception”
 
17. Best Sound Mixing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Inception” Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick
·    “The King's Speech” Paul Hamblin, Martin Jensen and John Midgley
·    “Salt” Jeffrey J. Haboush, Greg P. Russell, Scott Millan and William Sarokin
·    “The Social Network” Ren Klyce, David Parker, Michael Semanick and Mark Weingarten
·    “True Grit” Skip Lievsay, Craig Berkey, Greg Orloff and Peter F. Kurland

விருது பெற்றவர்கள்

Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick - “Inception”
 
18. Best Visual Effects - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Alice in Wonderland” Ken Ralston, David Schaub, Carey Villegas and Sean Phillips
·    “Harry Potter and the Deathly Hallows Part 1” Tim Burke, John Richardson, Christian 

      Manz and Nicolas Aithadi
·    “Hereafter” Michael Owens, Bryan Grill, Stephan Trojansky and Joe Farrell
·    “Inception” Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb
·    “Iron Man 2” Janek Sirrs, Ben Snow, Ged Wright and Daniel Sudick

விருது பெற்றவர்கள்

Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb - “Inception”
 
19. Best Foreign Language Film - பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள்

·    “Biutiful” Mexico
·    “Dogtooth” Greece
·    “In a Better World” Denmark
·    “Incendies” Canada
·    “Outside the Law (Hors-la-loi)” Algeria

விருது பெற்ற திரைப்படம்

“In a Better World” - Denmark
 
20. Best Short Film (Animated) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “Day & Night” Teddy Newton
·    “The Gruffalo” Jakob Schuh and Max Lang
·    “Let's Pollute” Geefwee Boedoe
·    “The Lost Thing” Shaun Tan and Andrew Ruhemann
·    “Madagascar, carnet de voyage (Madagascar, a Journey Diary)” Bastien Dubois

விருது பெற்றவர்கள்

Shaun Tan and Andrew Ruhemann - “The Lost Thing”
 
21. Best Short Film (Live Action) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

·    “The Confession” Tanel Toom
·    “The Crush” Michael Creagh
·    “God of Love” Luke Matheny
·    “Na Wewe” Ivan Goldschmidt
·    “Wish 143” Ian Barnes and Samantha Waite

விருது பெற்றவர்

Luke Matheny - “God of Love”
 
22. Best Documentary (Feature) - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

·    “Exit through the Gift Shop” Banksy and Jaimie D'Cruz
·    “Gasland” Josh Fox and Trish Adlesic
·    “Inside Job” Charles Ferguson and Audrey Marrs
·    “Restrepo” Tim Hetherington and Sebastian Junger
·    “Waste Land” Lucy Walker and Angus Aynsley

விருது பெற்ற படம்

“Inside Job” - Charles Ferguson and Audrey Marrs
 
23. Best Documentary (Short Subject) - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

·    “Killing in the Name” Jed Rothstein
·    “Poster Girl” Sara Nesson and Mitchell W. Block
·    “Strangers No More” Karen Goodman and Kirk Simon
·    “Sun Come Up” Jennifer Redfearn and Tim Metzger
·    “The Warriors of Qiugang” Ruby Yang and Thomas Lennon

விருது பெற்ற படம்

“Strangers No More” - Karen Goodman and Kirk Simon
 
24. Best Animated Feature Film - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

·    “How to Train Your Dragon” Chris Sanders and Dean DeBlois
·    “The Illusionist” Sylvain Chomet
·    “Toy Story 3” Lee Unkrich

விருது பெற்ற படம்

“Toy Story 3” - Lee Unkrich

தி.மு.கழகம் குடும்பச் சொத்தா..?

26-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'இந்திரா காந்தியின் வாரிசு அரசியலுக்கு வரலாம்... என் மகன் அரசியலுக்கு வரக் கூடாதா? என்.டி.ஆர் பேரன் நடிக்கலாம், என் பேரன் நடிக்கக் கூடாதா?' - தங்களது குடும்பத்தைப்  பற்றி யாராவது விமர்சனம் செய்தால், இப்படிப் பேசி வாரிசு அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், ''உங்களுக்கு அடுத்து ஸ்டாலின்தான் கட்சித் தலைவரா?'' என்று கேட்டால், ''திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல...'' என்று சொல்வார். அதாவது, கேள்வி கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அவரது பதில்கள் அமையும்!

 'கட்சித் தலைவருக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை’ என தி.மு.க-வின் அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வாரிசு அரசியலை வளர்க்கிறார்கள். காலம் காலமாகக் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் அடிமட்டத்திலேயே கிடக்க... வாரிசு என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, கட்சியில் பதவிக்கு வந்து 'சரசர’வென உச்சத்தைத் தொட்டுவிடப் பலரும் துடிக்கிறார்கள். கழகக் குடும்பங்களின் கதை இதோ...!

மருமகன் மட்டும் போதாது!


சுகாதாரத் துறை அமைச்சரும், கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொடக்க காலத்தில் இருந்து தன் அக்காள் மகன் செந்தில்​குமாரைத் தன் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார். 'மருமகன் மட்டும் போதாது’ என நினைத்த பன்னீர்செல்வம், தற்போது தனது 21 வயது மகனான கதிரவனை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு புதிய வாரிசாக வளர்த்து வருகிறார். 'கட்சி போஸ்டர்கள், பேனர்களில் கதிரவனின் படம் மெகா சைஸில் இடம் பெற வேண்டும்’ என்பது எம்.ஆர்.கே-வின் தற்போதைய வாய்மொழி உத்தரவு.  'நாளைய கடலூர் மாவட்டமே’, '2016-ல் தமிழக விடிவெள்ளியே...’ என்றெல்லாம் கதிரவனை வாழ்த்தும் பேனர்கள், கடலூர் மாவட்டம் முழுக்க பளபளக்கிறது!

சிகாமணி அண்டு கோ!


தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்​முடியின் மகன் கவுதம் சிகாமணி தளபதி நற்பணி மன்றத்தின் தலைவர். அப்பா நடத்தும் சூர்யா பொறி​யியல் கல்லூரியின் தாளாளரும் இவரே. கட்சி விழாக்கள், அரசு விழாக்களில் தனது ஆதரவாளர்களுடன் ஆஜராகி​விடுவார் கவுதம். 'தளபதியின் தளபதியே’, 'உயர் கல்வியின் வாரிசே...’ என்றெல்லாம் இவரது ஆதரவாளர்கள் முழங்குவார்கள். இப்போதெல்லாம் விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் அடிக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும் பொன்முடி, பொன்முடியின் மனைவி, கவுதம் சிகாமணி, அவர் மனைவி, குழந்தைகள், பொன்முடியின் தம்பிகளான அந்த சிகாமணி, இந்த சிகாமணி என்ற 'சிகாமணி வகையறா’க்களின் படங்கள் கட்டாயம் இடம் பெறுகின்றன. பொன்முடி, வரும் தேர்தலில் விழுப்புரம் தொகுதியை மகனுக்கு விட்டுக் கொடுத்து,  தொகுதியையே மாற்றிக் கொள்ளக்கூடும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது!

'கம்பன் எங்கே போனான்?'


விழுப்புரத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் நடந்து திருவண்ணாமலைக்கு வந்தால்... அமைச்சர் தண்டராம்பட்டு எ.வ.வேலு அமைத்த கல்வி வளாகங்களைக் கவனித்து வருகிறார் அவரது மகன் கம்பன். அதை மட்டும் பார்த்தால் போதுமா? தனக்குப் பின்னால் மாவட்டக் கழகம் இவரது கைக்குத்தான் போக வேண்டும் என்று வேலுவும் விரும்புகிறாராம். கட்சிக்காரர்கள் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம், 'கம்பன் எங்க போயிட்டான். அவனை வரச் சொல்லுங்க...’ என கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக்கொள்வாராம் வேலு. கம்பன் பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு கலைக் கல்லூரியின் இயக்குநரான கம்பன், இப்போதெல்லாம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கிறார். விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்று நடுதல் என்று கட்சியில் வேரூன்றி வருகிறார்!

கில்லாடி தம்பி!


அமைச்சர் துரைமுருகனின் அரசியல் வாரிசாக அவரது தம்பி துரைசிங்காரம் வளர்ந்துகொண்டு இருக்கிறார். மாவட்டம் முழுவதும் தொண்டர்களால் நன்கு அறியப்பட்ட சிங்காரம், மேல்மட்ட அரசியல் செய்வது, தன் அண்ணன் கலந்துகொள்ள முடியாத தொகுதி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது போன்றவற்றைச் செய்கிறார்.  அதே சமயம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் தற்போது அரசியலை ஏக்கமாகப் பார்த்து வருகிறார். 'தம்பியா... மகனா?’ என்ற சிக்கல் துரைமுருகனுக்கு வரலாம்!

துணைவியின் மகன்!


அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி​யின் மகன் ராஜாவுடன், வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவி லீலாவின் மகன் பிரபுவும் அரசியலில் தற்போது வளர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சேலத்தில், முதல்வர் தலைமையில் கோலாகலமாக பிரபுவுக்குத் திருமணம் நடந்தது. வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில்... அநாதை இல்லத்துக்கு சாப்பாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாக போஸ்டர் அடித்து பிரகடனப்படுத்திக்​கொண்டது பிரபு தரப்பு. பிரபு தோற்றத்தில் வீரபாண்டியாரின் சாயலில் இருப்பதால், 'சின்ன வீரபாண்டியாரே!’ என்றுதான் கட்சி வட்டாரம்  அழைக்கிறது. இப்போது கட்சியின் போஸ்டர்​களிலும் பிரபுவின் படம் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது!

மகனா... மருமகனா?


பைந்தமிழ் பாரி - அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன். கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவர். இவரையே தனது அரசியல் வாரிசாகக் கொண்டுவர தொடக்கத்தில் திட்டமிட்டார் பொங்கலூரார். ஆனால், பரபர அரசியலில் சின்னச் சின்னச் சர்ச்சைகளில் பாரி சிக்கிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தன் மருமகன் டாக்டர் கோகுலைக் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர். கோகுல் துணை முதல்வருக்கும் மிக நெருக்கமானவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்கு அவரை வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது கட்சித் தலைமை. ஆனால், பொங்கலூராரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், வேட்பாளர் மாற்றப்பட்டார் என்று தகவல். இந்த முறை, 'ஸீட்டை மகனுக்காகக் கேட்பதா... அல்லது மருமகனுக்காகக் கேட்பதா?’ என்ற புரியாத குழப்பத்தில் இருக்கிறாராம் பொங்கலூரார்!

ஆணையிட்டால் அலறும்!


கே.என்.நேருவுக்கு நிகரான மரியாதை அவரது சகோதரரான கே.என்.ராமஜெயத்துக்கு திருச்சி மாவட்டக் கட்சிக்காரர்களால் வழங்கப்படுகிறது. ஏராளமான நிலபுலன்கள், ஆசியாவின் நவீன அரிசி ஆலைகள், பொறியியல் கல்லூரி நிர்வாகம், ஜனனி குரூப் எனப் பல தொழில்கள் இருப்பதாலும், அண்ணன் நேருவுக்கு சகலமுமாக இருப்பதாலும், இவரிடம் மரியாதை அளிப்பவர்களைவிட... பயத்தில் பம்மிக் கிடப்பவர்கள் அதிகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார் ராமஜெயம். ஆனால், அதை நெப்போலியன் தட்டிப் பறித்தார் (அவரும் இவர்கள் குடும்பத்துக்காரர்தானே!). இப்போது தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்  ராமஜெயம்!

கலக்கும் கருணைராஜா!


திருச்சி தி.மு.க-வில் நேருவுக்கு சீனியர் வனத் துறை அமைச்சர் செல்வராஜ். இடையில், ம.தி.மு.க-வுக்குப் போய்விட்டு வந்ததால், திருச்சி மாவட்டத்தில் அவருக்கு கொஞ்சம் இறங்கு முகமாகிவிட்டது. ஆனால், அமைச்சராகி மீண்டும் தன் பவரைத் தக்க​வைத்து வருகிறார். இவரது மகன் கருணைராஜா திருச்சி புறநகரில் கலக்குகிறார். கான்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்து வந்தாலும், சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்தி முத்தரையர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். செல்வராஜின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்தால், கட்டாயம் கருணைராஜாவின் படத்தையும் போட்டு, இனி அண்ணனின் அரசியல் வாரிசு இவர்தான் என்று சொல்லி புளகாங்கிதம் அடைகிறார்கள்!

'உனக்கு இன்னும் வயசு இருக்கு!'


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தம்பி, கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் விருதுநகர் மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத அமைச்சர்! இந்த முறை தனக்கு ஸீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அண்ணனிடம் கறாராகவே சொல்லி இருக்கிறாராம் சுப்பாராஜ். தம்பி ஒரு பக்கம் எம்.எல்.ஏ. கனவில் மிதக்க... அமைச்சரின் மகன் ரமேஷுக்கும் அதே ஆசை. 'உனக்கு இன்னும் வயசு இருக்குடா தம்பி. சித்தப்பாவும் ஸீட் கேட்குறாரு. அதனால், நீ கொஞ்சம் பொறுமையா இரு...’ என மகனை அடக்கிக்கொண்டு இருக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்! ரமேஷ் என்ன நினைக்கிறார் என்பது தேர்தலில் தெரியும்!

விடாப்பிடி அப்பா!


அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.த.சம்பத், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். தந்தைக்குத் தொகுதி தரப்படும்போது, தனியாகத் தனக்கும் கேட்கும் வழக்​கம் இதுவரைக்கும் சம்பத்துக்கு இல்லை. இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்​பதில் உறுதியாக இருக்கிறார். 'எனக்கு ஸீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என் மகனுக்கு ஸீட் கொடுத்தே ஆக வேண்டும்’ என்பதில் தங்கவேலன் விடாப்பிடியாக இருக்கிறாராம். தங்கவேலனுக்கு வயதாகிவிட்டதால் இந்தத் தேர்தலில் அவர் மகனை களத்தில் இறக்கிவிட்டு அரசியலில் அமைதியாகிவிடுவார் என்றே எதிர்​பார்க்கப்படுகிறது!

ஐ.பி.எஸ்-க்கு மரியாதை!


திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வாரிசு ஐ.பி.செந்தில்குமார். கட்சி வட்டாரத்​திலோ, 'ஐ.பி.எஸ்.’ என்று சொன்னால் போதும்! கடந்த ஐந்து வருடங்களில் ஐ.பி.எஸ்-ஸின் வளர்ச்சி அசுர வேகமானது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ.பி.எஸ். தலை​யீடு இல்​லாத அரசுத் துறைகளே இல்லை. கட்சிக்​காரர்​களும் சரி... அதிகாரிகளும் சரி... அமைச்​சருக்கு என்ன மரியாதை கொடுக்கிறார்​களோ, அதைவிட ஒரு மடங்கு மரியாதை ஐ.பி.எஸ்-க்கு அதிக​மாகவே கொடுக்கிறார்கள். இரண்டு பேருமே இப்போது தொகுதியை எதிர்பார்க்கிறார்கள்!

'எனக்கு பிறகு இவன்தான்!'


கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. அதனால், தன் மகன் இளங்கோவனைக் கட்சி​யில் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். தான் போகும் இடமெல்லாம் இளங்கோவனையும் அழைத்துக்​கொண்டு போய், 'எனக்குப் பிறகு எல்லாமே இவன்தான்... நீங்கதான் இவனைப் பொறுப்பா பார்த்துக்கணும்...’ என்று அறிமுகப்​படுத்துகிறாராம்.  'இனிமே எனக்கு ஸீட் வேண்டாம் தலைவரே... எம் பையனுக்கு ஸீட் கொடுத்துடுங்க!’ என்று கருணாநிதியிடம் இவர் சொல்லிவிட்டாராம்!

பேராசிரியரும்..!


நிதி அமைச்சர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், இம்முறை தேர்தலில் நிற்பதற்கான ஏற்பாடு​களில் இருக்கிறார். கடந்த எம்.பி. தேர்தலிலேயே தனக்கான கோட்​டாவாக வெற்றியழகனுக்கு வாய்ப்பை எதிர்பார்த்தார் அன்பழகன். இந்த முறையும் கேட்பார். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைத் தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே வென்ற வெற்றியழகன், கிரானைட் தொழிலில் இருக்கிறார். அன்பழகன் நிற்கவில்லை என்றால் வெற்றியழகன் நிச்சயம் நிற்பார்!

சமீபத்தில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி இல்லத் திருமணத்தை நடத்திவைத்த கருணாநிதி, ''அமைச்சராக இருந்த பிச்சாண்டி, அதன் பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்​கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழி விடுகின்ற இந்தப் பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை!'' என்று பேசியிருக்கிறார்!

யாருக்கு யார் விட்டுக்​ கொடுக்கிறார்கள் என்ற வீட்டு விவகாரத்தைவிட, மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நாட்டு விவகாரம்தான் கழக வாரிசுகளின் தகுதிக்கு மார்க் போட வேண்டும்!

ஒன்று மட்டும் நிச்சயம்... 'கட்சி என்ன குடும்பச் சொத்தா?' என்று இனிமேல் தி.மு.க-வில் யாரும் உரக்கப் பேச முடி​யாது!

நன்றி : ஜூனியர்விகடன் - 02-03-2011

ஞாநியின் பரீக்ஷா நாடகங்கள் - காணத் தவறாதீர்கள்..!

25-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நமது பெருமதிப்பிற்குரிய கலகக்காரர் அண்ணன் ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழு, நாளையும், நாளை மறுநாளும் இரண்டு தமிழ் நாடகங்களை சென்னையில் நடத்தவிருக்கிறார்கள்.




'பல்லக்குத் தூக்கிகள்', 'நாங்கள்' என்ற இந்த இரண்டு நாடகங்களும் நாளை சனிக்கிழமை(26-02-2011), மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(27-02-2011) என இரண்டு நாட்களிலும் மாலை 6.30 மணிக்கு ஸ்பேசஸ், 1 எலியட்ஸ் பீச் சாலை, பெசண்ட் நகர், சென்னை-90 என்ற முகவரியில் நிகழ்த்தப்படவுள்ளன.

சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு, நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம்தான் “பல்லக்குத் தூக்கிகள்.” 

இது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் பற்றிய நாடகம்.

நாடக நிகழ்வு 20 நிமிடங்கள்.

தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம்தான் “நாங்கள்”.

‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் நமக்குப் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள் .இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மை தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின், சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள்.

இதில் இருக்கும் எட்டு கதைகளில், ஆறு கதைகளை ஞாநியும், இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர்.

நாடக நிகழ்வு : 110 நிமிடங்கள்.

பரீக்‌ஷா நாடகக் குழு பற்றி சில வார்த்தைகள் :

1978-ல் ஞாநியால் தொடங்கப்பட்ட பரீக்‌ஷா, கடந்த 33 வருடங்களில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்கள்.

இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அம்பை, ஜெயந்தன், அறந்தை நாராயணன், பிரபஞ்சன், எஸ்.எம்.ஏ.ராம், ஞாநி, பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாவேததேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி.பிரீஸ்ட்லீ மற்றும் பலர் எழுதிய கதைகளை நாடமாக்கியிருக்கிறார்கள்.

பல்வேறு வாழ்க்கை நிலைகளிலும் வெவ்வேறு பணிகளிலும்  இருக்கும் பரீக்‌ஷா உறுப்பினர்களை இணைப்பது நாடகக் கலையின் மீதும் சமூகம் மீதும் இருக்கும் அவர்களுக்கு இருக்கும் அன்பேயாகும்.

நாடகங்களின் மீது ஈடுபாடு கொண்டோரும், அண்ணன் ஞாநியின் மீது பாசம் கொண்டோரும், பக்தியுடையோரும் நாளையும், நாளை மறுநாளும் பெசண்ட் நகருக்கு படையெடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

தொடர்புக்கு : ஞாநி 9444024947

அருமைத் தம்பிகள் சென்ஷி, குசும்பன் மட்டும் படிக்கவும்..!

25-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது சென்ஷி மற்றும் குசும்பனுக்கு மட்டுமான பதிவு..! மற்றவர்கள் படிக்க வேண்டாம். படித்தாலும் பின்னூட்டம் போட வேண்டாம். பின்னூட்டம் போட்டாலும் திரும்பியும் வர வேண்டாம்..! மீறினால் எதற்கும் நான் பொறுப்பில்லை..!

அருமைத் தம்பிகளா.. கழகத்தின் கண்மணிகளா.. உங்களுடைய கோரிக்கையை ஏற்று உங்களுடைய அருமை அண்ணனான நான் உங்களுக்காக, உங்களுக்காகவே, உங்களுடைய சந்தோஷத்திற்காக, உங்களுடைய விருப்பத்திற்காகவே, உங்களுடைய திருப்திக்காகவே.. "தப்பு" என்ற அந்தத் தப்பான படத்தைப் பார்த்துத் தொலைத்துவிட்டேன்.

படம் நீங்க சொன்ன மாதிரியே ‘ஒரு மாதிரி’யான படம்தான். ஆனால் லோ பட்ஜெட் படம்.. முழுக்க, முழுக்க கொடைக்கானலிலேயே ஷூட் செய்திருக்கிறார்கள். பகிரங்கமாக போஸ்டரிலேயே “படம் என்ன மாதிரியானது” என்று காட்டப்பட்டுவிட்டதால் தியேட்டரில் தாய்க்குலங்கள் யாரும் இல்லை.

கதை வழக்கமான கள்ளக் காதல் கதைதான்..!

மனைவியிருந்தும் காதலி ஒருத்தியை துணைவியாக வைத்திருக்கும் கணவன், மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டு வாடகை கொலையாளி ஒருவனை தனது வீட்டுக்கே அழைத்து வருகிறான்.

இதையறிந்த மனைவி, அதே கொலையாளியிடம் தனது உடலை மூலதனமாகக் காட்டி தனது கணவனை கொலை செய்யத் தூண்டுகிறாள்..

கொலையாளிக்கோ ஒரு பக்கம் பணம்.. இன்னொரு பக்கம் இலவசமாகக் கிடைக்கும் பெண்ணின் உடல் என்ற ஆசை.  இது வெறியாக மாறிவிட துணிந்து கணவனை கொலை செய்கிறான். பரிகாரமாக உடலைக் கொடுக்கிறேன் என்று வாக்குறுதியளித்த மனைவியோ வெற்றிப் புன்னகையுடன் சுகம் நாடி, தேடி, ஓடி வரும் கொலையாளிக்கு விஷத்தைக் கொடுத்து கொன்றுவிடுகிறாள். சுபம்..!

இதுதான் இந்த மகா காவியத்தின் கதை..!

கிளைமாக்ஸில் 'மனோகரா' படம்போல் பத்து நிமிடத்திற்கு தொடர்ந்து வீர வசனங்களை அள்ளி வீசுகிறாள் மனைவி. பாவம்.. கேட்கத்தான் தியேட்டரில் ஒரு தாய்க்குலம் கூட இல்லை..!

“பொம்பளைங்களை பத்தி என்னங்கடா நினைச்சுக்கிட்டிருக்கீங்க..?” என்று ஆரம்பிக்கும் அந்த வீர வசனங்கள் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே பொன்னெழுத்தில் பொறித்து வைக்கப்பட வேண்டியவை.

“இதுபோல மனைவியையும் வைத்துக் கொண்டு துணைவியையும் நாடும் கணவன்களையும், துணைவிக்காக மனைவியைக் கொல்ல நினைக்கும் கயவர்களையும், மனைவிக்காக துணைவியைக் கொலை செய்யத் துடிக்கும் பாவம் கொடூரன்களையும் பெருமாள் கோவில் எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கலாம்” என்கிறாள் இந்த பெண் குலத்தின் பிரதிநிதி..!

போதுமா இந்த விமர்சனம்..!

தம்பிகளா.. உங்க ரெண்டு பேருக்காகத்தான் பார்த்தேன். நீங்க இவ்வளவு தூரம் திருப்பித் திருப்பி அழுது கொண்டே சொன்னதாலதான் போய் பார்த்தேன்.. இல்லாட்டி இந்தக் கர்மத்தை நான் போய் பார்ப்பனா..?

'நடுநசி நாய்களை'யே குப்பைன்னு சொன்னவன்.. இந்தக் கஸ்மாலத்தை என்னன்னு சொல்லுவேன்..? இதற்கு மேலும் தமிழில் வேறு வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை என்பதால் நீங்களே ஏதாவது சொல்லிப் போட்டுக்குங்க..!

அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்தப் படத்துல கவர்ச்சிக்காகவே 'மலேசிய ஷகிலா' என்ற பட்டப் பெயருடன் ஒரு நடிகையை அறிமுகப்படுத்தியிருக்காங்க.. போட்டோவை பார்த்தாலே குசும்பனுக்கு ரொம்பப் புடிக்கும்னு நினைக்கிறேன்..! கூகிளாண்டவர்கிட்ட சொல்லித் தேடிப் பிடிச்சுப் பார்த்து புல்லரிச்சுக்க குசும்பா..!

கடைசியா ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. இனிமேல் இது மாதிரி நீங்க பார்க்க முடியாத படத்தையெல்லாம் என்னண்டை சொல்லி "பாருங்கண்ணே.. பார்த்திட்டு வந்து கதையைச் சொல்லுங்கண்ணே"ன்னு இம்சை பண்ணாதீங்கப்பா..! அண்ணனுக்கு எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா..? இந்தக் கர்மத்துக்காக 2 மணி நேரம் என்னோட பொன்னான நேரம் போச்சு..!

படத்துக்கு போன செலவு காசை, அடுத்த தடவை உங்க ரெண்டு பேர்ல யார் மொதல்ல சென்னைல கால் வைக்குறீங்களோ, அவங்கதான் தரணும்..!

டிக்கெட் விலை 50 ரூபாய். டூவீலர் பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய்.. இடைவேளையில் குடித்த காபிக்கு 10 ரூபாய்.. பெட்ரோலுக்கு 50 ரூபாய் வெட்டியா 2 மணி நேரம் செலவழிச்சதுக்கு 2000 ரூபாய்.. ஆக மொத்தம் 2120 ரூபாய்..!

மவனுகளா.. தரலைன்னு வைச்சுக்குங்க.. அந்த மலேசிய ஷகிலாகிட்ட உங்க ரெண்டு பேரையும் புடிச்சுக் கொடுத்திருவேன்..!  ஜாக்கிரதை..! 

தி.மு.க. ஆட்சியில் உருவான புதிய கல்வித் தந்தைகள்!

23-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.

''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.


ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார்.

''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக் கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.
 

'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.

வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.


முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.


ஆக மொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

- நன்றி : ஜூனியர்விகடன் - 27-02-2011

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்காக நடந்த இரங்கல் கூட்டம்..!

23-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் இருக்கும் தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சி.மகேந்திரன், ஓவியர் வீர.சந்தானம், தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகன்ஜி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாகுல்ஹமீது, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் அமீர், சேரன், கவுதமன், பாடகர் தேனிசை செல்லப்பா என்று பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

பொதுவாக கூட்டத்தை ஏற்பாடு செய்த கட்சியின் கிளைகளின் பொறுப்பாளர்கள்தான் எப்போதும் மேடை நிர்வாகத்தைக் கவனிப்பார்கள். ம.தி.மு.க.வின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் மேடையின் கீழேயே இருக்க.. வைகோவே  இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பு  வேலையையும் செய்தார்.


4 மணி என்று சொல்லியிருந்தாலும் 5 மணிக்குத்தான் கூட்டம் துவங்கியது. துவக்கத்தில் பாடகர் தேனிசை செல்லப்பா, பார்வதியம்மாள் நினைவாக ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார். அந்தப் பாடல் இதுதான் :

தாய்க்கு பிள்ளைகளின் கண்ணீரஞ்சலி
தாயே உன் மேல் ஆணை!

புலியை முறத்தில் அடித்தவள் தமிழச்சி
பழம் பெருமை செய்தி

புலியையே தன் வயிற்றில் வளர்த்து
தன் இனத்திற்கு தாரை வார்த்த தமிழச்சி நீ

மேம்பட்ட மருத்துவமனைகள் இங்கிருந்தும்
நோய்பட்ட உனை ஏற்று கவனிக்க தடைகள்

இதையறிந்தா பிறந்த மண்ணிலிருந்தே
பிரிய நினைத்தாய் எங்களைவிட்டு

உன் பூத உடலைக் காணவும் முடியாதே..
புலம்புகிறது உம்மினம்

நொந்து நொந்து இருந்ததே..
வெந்து செத்த
முள்ளி வாய்க்காலையும் மறக்க மாட்டோம்!
நீ முள்வேலிக்குள் அடைபட்டதையும்
மறக்க மாட்டோம்!

தாயே உன் மேல் ஆணை
தமிழீழம் அடையாமல் தமிழினம் அடங்காது..!

இயக்குநர் கவுதமன் பேசும்போதுதான் முதல் திரியைப் பற்ற வைத்தார். “பார்வதியம்மாளின் சாவு சாதாரண மரணமல்ல. கொலை.. ஆம்.. தி்ட்டமிட்ட கொலை.. தமிழக அரசும், மத்திய அரசும் செய்த திட்டமிட்ட படுகொலை..” என்று நேரடியாகவே தாக்கினார்.

நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பேசிய சாகுல்ஹமீது, “இந்த நேரத்திலாவது நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நமக்குள் ஒற்றுமை பொங்க வேண்டும். ஈழ மண்ணின் விடுதலையோடு தமிழ் மண்ணின் விடுதலையும் நமக்கு வேண்டும். அந்த நோக்கத்தில்தான் நாம் போராட வேண்டும்..” என்று வேறொரு பாணியில் பேசி முடித்தார்.

இயக்குநர்கள் அமீரும், சேரனும் மேடைக்கு வராமல் கீழேயே அமர எண்ணி இடம் தேடியதைக் கண்ட வைகோ தானே மேடையின் மறுகோடிக்கு வந்து அவர்களைக் கையசைத்து மேடைக்கு வரும்படி அழைத்து அமர வைத்தார். அதிலும் அமீர் மட்டும் வைகோவின் அருகில் மாட்டிக் கொள்ள.. சேரன் ஒரு ஓரமாக சென்று அமர்ந்தார். கொஞ்ச நேரம் கழித்து பின் வரிசைக்கு மாறியும் அமர்ந்து கொண்டார் சேரன்.

அமீரை பேச அழைத்தபோது நிறைய பேசுவார் என்று ஆசையோடு காத்திருக்க அஞ்சலியை ஒரே வரியில் முடித்துக் கொண்டார். ஆனால் சேரன் ஏமாற்றவில்லை..! “நமக்கு என்ன செய்தால் ரோஷம் வரும்..? என்ன நடந்தால் வீரம் வரும்.. ஈழத்தில் நடந்ததைபோல தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மீதும் கற்பழிப்பு, படுகொலைகள் நிகழ்ந்தால்தான் அது வருமா..?  அதுவரைக்கும் நமக்கு சூடு, சொரணை வராதா..? அப்படியொன்று நடந்த பின்புதான் பார்வதியம்மாவின் ஆத்மாவும் சாந்தியடையும்..!” என்று கொஞ்சம் டென்ஷனை ஏற்றிவிட்டுப் போனார்.

தெய்வநாயகம் பள்ளியின் தாளாளர் தெய்வநாயகம் பேசும்போது, டாபிக் அடியோடு மாறியது. “ஈழத்துப் பிரச்சினை முடியாததற்குக் காரணமே பிராமணீயம்தான்..” என்றார். “பிராமணர்களால்தான் இந்தத் தமிழ்நாடு இந்த லட்சணத்தில் இருக்கிறது. எப்போதுமே தமிழர்களுக்கும், தமிழுக்கும் பிராமணர்கள்தான் எதிரி. நாம் வளர்வதை சிறிதளவும் பிராமணர்கள் விரும்பவில்லை. ஆகவேதான் எந்த வழியிலாவது நம்மை அழிக்க முற்படுகிறார்கள். காஷ்மீரில் அதிகளவு மக்கள் முஸ்லீம்கள்.. வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு மக்கள் கிறிஸ்தவர்கள்.. இவர்களை ஒழித்துக் கட்டத்தான் இப்போது பிராமணீயம் இங்கெல்லாம் இந்திய ராணுவத்தை நிறுத்தியிருக்கிறது. கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அத்தோடு நமக்குள்ளும் ஒற்றுமையில்லை. கூடவே மக்களும் தூங்கி வழிகிறார்கள். அவர்கள் பொங்கியெழுந்தால் மட்டுமே தமிழீழம் சாத்தியம்..” என்று பொங்கிவிட்டுப் போனார்..!

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இறுதிவரையிலும் குடிசையில் வாழ்ந்த ஒரு தேசியத் தலைவரின் குடும்பம் எது என்றால் அது நமது தேசியத் தலைவர் பிரபாகரனின் குடும்பம்தான்..” என்றார். ஈழப் பிரச்சினைகள் பற்றி முன்னொரு காலத்தில் இயக்குநர் மணிவண்ணனின் அலுவலகத்தில் வைகோ, தனக்கு வகுப்பு எடுத்ததை நினைவு கூர்ந்தார் சத்யராஜ். “இனி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படக்கூடாது. ஆனால் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் கட்சி பேதமில்லாமல் ஒன்றிணைந்து வழி காட்ட வேண்டும்..” என்று கோரிக்கையை வைத்தார். முடிக்கும்போது “நாடோடி படத்தில் வரும் ஒரு பாடலின் இடையில் இந்த வரிகள் வருகின்றன..” என்று சொல்லி “வருவான் தலைவன் வருவான். அவன் வரும் நாள் வரும்..” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி கைதட்டலை அள்ளிக் கொண்டு போனார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசும்போது, பிரபாகரன் குடும்பத்தினருடன் தனக்கு இருந்த நெருக்கத்தைக் குறிப்பிட்டு பேசினார். பிரபாகரன் சிறு வயதாக இருந்தபோது, மட்டக்களப்பில் குடியிருந்தார்களாம். அப்போது நடந்த சம்பவம் ஒன்றை பார்வதியம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்பாக தன்னிடம் சொன்னதாகச் சொல்லி அந்த விஷயத்தைச் சொன்னார் காசி ஆனந்தன்.

மட்டக்களப்பில் பிரபாகரன் குடும்பம் வசித்த வீட்டுக்கு எதிரில் வைத்தியர் நாகமணி பண்டிதர் என்பவர் தனது சகோதரருடன் குடியிருந்து வந்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுத் திண்ணையில் ஈஸிசேரில் சாய்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது பிரபாகரன் எதற்கோ அவரைப் பார்த்து கல்லெறிய அது நாகமணி பண்டிதரின் நெற்றியில் பட்டு ரத்தத்தை வரவழைத்துவிட்டதாம்.

பண்டிதரை கல் தாக்கியதைப் பார்த்தவுடன் பிரபாகரன் தனது வீட்டுக்குள் ஓடிப் போய் தனது அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டாராம். நாகமணி பண்டிதர் பின்னாலேயே தேடி வந்தவர், பார்வதியம்மாளிடம், “உன் பையனை இதுக்கெல்லாம் தி்ட்டாத.. ஆனா அவன் பின்னாடி பெரிய ஆளாகப் போறது நிச்சயம். ஏன்னா, இப்பவே அவன் குறி தப்பாம அடிக்கிறான்..” என்று பாராட்டினாராம்.

வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இருந்த பனகொடை முகாம் பற்றிக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், அதே முகாமில் தான் சில ஆண்டுகள் கைதியாக இருந்ததையும், அங்கே தான் சித்ரவதைப்பட்டதையும் எடுத்துச் சொன்னார். அங்கேயிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது தனது முகம் ஒட்டப்பட்ட போஸ்டரைத்தான் பயன்படுத்துவார்கள் என்கிற செய்தியையும் சொன்னார்.

ஈழம் முழுவதும் தற்போது சிங்கள மயமாகிவருவதைக் குறிப்பிட்ட காசி ஆனந்தன், ஈழத்தில் தற்போதுவரையிலும் 2076 சைவ ஆலயங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். “இந்த ஆலயங்கள் இதுவரையில் மீளவும் கட்டப்படவில்லை. ஆனால் அதே சமயம் அனைத்து கிராமங்களிலும் தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள்..” என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக சென்ற மாதம் மன்னார் பகுதி ஆர்ச் பிஷப் வெளியிட்ட ஒரு அறிக்கையை சுட்டிக் காட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் பேசும்போது, “உலகத்தின் தலை சிறந்த அறிவாளிகளைப் பெற்றெடுத்தவர்கள் அனைவருமே தமிழ்த் தாய்கள்தான்.. அவர்களுடைய பிள்ளைகள் ஒருபோதும் சோடை போனதில்லை..” என்றார்.

“பார்வதியம்மாளின் இந்த மரணம் நிச்சயம் திட்டமிட்ட படுகொலைதான். இது படுகொலை இல்லை என்று சொல்ல கருணாநிதிக்கு தைரியம் உண்டா..?” என்று கேள்வியெழுப்பினார். கூடவே தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்குள் ஈழம் தொடர்பான விஷயத்துக்காக ஒற்றுமை அவசியம் என்று வலியுறுத்தினார். “தமிழன் நின்றுதான் போரிடுவான். புறமுதுகிட்டு ஓட மாட்டான். அதிலும் ஒருபோதும் மண்டியிட்டு மடிய மாட்டான்” என்றார்.
 
கடைசியாக பேச வந்த வைகோ பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரவழைத்தபோது சென்னை விமான நிலையத்தில் நடந்த விஷயங்கள் முழுவதையும் கோர்வையாகச் சொன்னார்.

“ஈழ மக்களுக்காக தற்போது இங்கேயிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தேவையெனில் கடல் கடந்து செல்லவும் தயங்க மாட்டோம். இது அரசியல் கலப்பில்லாத மேடை. நம்பிக்கையுடன் இருக்கிறோம். அனைவரிடமும் கலந்து பேசுகிறோம். இணைந்துதான் போராட வேண்டும்..” என்றார்.

பார்வதியம்மாளை பற்றி உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட இரங்கல் கவிதையை உணர்ச்சிப் பெருக்கில் அவர் வாசித்துக் காட்டிய விதமே உருக்கத்தைக் கூட்டியது..!

பார்வதியம்மாள் பற்றி வைகோ பேசும்போது சில இடங்களில் கண் கலங்கி அழுதார். பார்வதியம்மாளும், வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் இருந்தபோது தனது வீட்டிற்கு வந்ததையும், அவர்களுடைய காலடியில் தனது முதல் பேரனை கிடத்தி அவனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கச் சொன்னதையும் கம்மிய குரலில் நினைவுபடுத்தினார் வைகோ.

தற்போது சூடான் நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை போல் ஈழத்தில் தமிழ் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ஈழ விடுதலை பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “தேவையெனில் தமிழ்ப் பெண்களும் ஆயுதங்களை ஏந்த வேண்டும். அப்படியொரு கட்டாயத்திற்கு உலகச் சமுதாயம் நம்மை தள்ளிவிடக் கூடாது..” என்றும் எச்சரித்தார்.

“ராஜபக்சே போனால் இன்னொரு ராஜபக்சே வருவான். அவன் வந்து நமக்கு விடுதலை தருவான் என்று நாம் எதிர்பார்க்கவே கூடாது. இந்த ராஜபக்சேயைக்கூட அப்படியே விட்டுவிடக் கூடாது. எந்த ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி கொலை செய்தானோ அதேபோல் இந்த ராஜபக்சேயும் கொல்லப்பட வேண்டும்..” என்றார் ஆவேசமாக..


“இந்திய அரசு தெற்கே ஒரு காஷ்மீரத்தை உருவாக்குகிறது என்றும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை இதுவரையில் நாங்கள் கேட்கவில்லை. ஆனால் இனி கேட்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்..” என்றும் எச்சரிக்கையுடன் முடித்தார் வைகோ.

வைகோ வாசித்த உலகத் தமிழர் பேரமைப்பின் கவிதை இதுதான்:

கொண்ட தவம் பலிக்கும்..!
கோடியாண்டு பேர் நிலைக்கும்..!

பருவதத்தில் வதியும் அம்மா
பார்வதி அம்மா!
தெய்வப் பெயரம்மா - இன்று
தெய்வமானீர் அம்மா!

வேலனை எங்கள்
வெற்றித் திருமகனை
மூலனை எங்கள் முதல்வனை
முத்தமிழர் பகையழிக்கும்
காலனை எங்கள் காவலனை
கரிகால் வளவனைக்
கண்ணகிக்குக் கல்லெடுத்த
சேரனைச் செந்தமிழ்
மாமதுரை மன்னன் பாண்டியனை
ஓருருவாய்ப்
பிரபாகரன் என்னும்
பெரும்பெயரில் பெற்றளித்த
தாயே வணக்கங்கள்!
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

வேலுப்பிள்ளையெனும்
வீரத்திருமகனார்
பேர்விளக்க வேண்டிப்
பிரபாகரன் என்னும்
புலியீன்ற தாய்ப்புலியாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்

எட்டு கோடித் தமிழர்
எடுத்து அடி வைப்பதற்குக்
கிட்டாத தலைவன் எனும்
எட்டாத இமயத்தை
ஈன்றளித்த பேரிமயத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உரிமைக்குப் படை திரட்டி
ஓயாத அலையெழுப்பி
நரிமைக்குக் கரி பூசி
நயவஞ்சகர் அழித்து
நாடாண்ட பெரும் புயலை
ஈன்ற பெரும் புயலாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

ஊரறுத்த சிங்களனை
உறவறுத்த காடையனை
பேரறுத்து ஆர்க்க
பிரபாகரன் என்னும்
பேரிடியை வல்லிடியைப்
பெற்றளித்த பெருவானத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!

உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம்பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று!
உரைக்கும் சொல் ஒன்று!

கொள்ளி வைப்பானா பிள்ளை
கொள்ளி வைப்பானா பிள்ளை - எனக்
கோடிமுறை நினைந்து
நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!
நாடி தளர்ந்திருப்பாய்!

கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடியிடியாய் முழக்கமிட்டு
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை

கொண்டவுன் தவம் பலிக்கும்
கோடியாண்டு உன் பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!

பார்வதியம்மாளின் இறுதிச் சடங்கு வீடியோக்கள் :



ராசாத்தியம்மாளின் தளபதிகள் பட்டியல்..!

22-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலைஞரின் துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் அவருடைய சந்தேகத்திற்கிடமான தொடர்பாளர்கள் பற்றிய ஜூனியர் விகடனின் கட்டுரை இது..!

ரத்னம், சரவணன், டேனியல் சாமுவேல், டேனியல், ராஜப்பா, சக்தி​வேல், சந்திரமௌலி, முரளி, சஜீவ் ஆர்யன், அலீமா... இந்த 10 பேர்தான் ராஜாத்தி அம்மாளை சுற்றிவரும் மனிதர்கள்.

 ''தனது வீட்டுக்கு யார் வருகிறார்கள்..? யார் போகிறார்கள்..? என்பதே தலைவருக்குத் தெரியாத அளவுக்கு, இவர்களது நட​மாட்டம் சி.ஐ.டி. காலனி வீட்டில் தயக்கமின்றி நடக்கிறது. ராஜாத்தி அம்மாளைக் கைக்குள் வைத்துக்கொண்டு, இவர்கள் நடத்தி வரும் காரியங்கள் பகீர் ரகமானவை! இவர்களது கொட்டம் அடக்கப்படாவிட்டால், ராஜாத்தி அம்மாளையே கபளீகரம் செய்துவிடுவார்கள்...'' என்கிற அளவுக்கு தி.மு.க. வட்டாரம் கவலை தோய்ந்த வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்​திருக்கிறது!




இந்த விவகாரங்களின் சில இழைகளை வெளிப்படையாகப் போட்டு உடைத்திருந்தார் ஜெயலலிதா. ''கனிமொழியின் தாயார் ராஜாத்தியின் வீட்டில் பணிபுரிபவர்களின் நிதி நிலைமையை கவனித்தாலே, ராஜாத்தியின் நிதி நிலைமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ராஜாத்திக்கு சொந்தமான ராயல் என்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராகப் பணிபுரிந்த சரவணன் என்பவர், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச்சைக்குரிய 350 கோடி மதிப்புடைய வோல்டாஸ் நிலம், மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு வெறும் 25 கோடிக்கு விற்கப்பட்டபோது, தரகராகச் செயல்பட்டவர் சரவணன்தான். இந்தச் செய்தி அண்மையில் பத்திரிகைகளிலும் வெளியானது.

இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்த ராஜாத்தி, இந்த நிலம் குறித்த தனது கவலையை, நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்திருக்கிறார். சொற்ப விலைக்கு வோல்டாஸ் நிலத்தை வாங்கிய மலேசியாவின் சண்முகநாதன், கோத்தகிரியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டத்தை வெறும் 25 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.

சென்னை சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள ராஜாத்திக்குச் சொந்தமான புதிய வீட்டின் குளிர்சாதனப் பெட்டிகளைப் பழுது பார்த்த ஏ.ஸி. மெக்கானிக் டேனியல் சாமுவேல், இன்று பல பி.எம்.டபிள்யூ. சொகுசு வாகனங்களின் உரிமையாளர்! தமிழ்நாட்டின் இரண்டாவது பெண்மணிக்காக மூணாறு, கோட்டயம் மற்றும் கேரளாவில் உள்ள இதர இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.
 
டேனியல் சாமுவேலின் மகள் திருமணம் கொச்சியில் நடைபெற்றபோது ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட சென்னையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர், விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்...'' என்று தொடர்கிறது அந்த அறிக்கை!

வோல்டாஸ் குறித்த பணப் பரிமாற்றங்கள் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பல முறை தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். வோல்டாஸ் பரிவர்த்தனையை ஜூ.வி. 26.12.10 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதி இருந்தது. இந்த நபர்கள் பற்றி முழுமையாகத் தகவல் திரட்டியபோது நமக்கே மூச்சு முட்டியது!

''இவர்கள் ராஜாத்தி அம்மாள் பெயரை சர்வ சாதார​ணமாகப் பயன்படுத்துவார்கள். இவர்கள் மீது பல புகார்கள் அரசல் புரசலாகக் கிளம்பியபோது... ராஜாத்தி அம்​மாளும் கருணாநிதியும் கண்டுகொள்ளாததால்... தங்களது அதிகார துஷ்பிரயோகத்தைத் தொய்வில்லாமல் தொடர்கிறார்களாம்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்தில் நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாள் பேசுவதாக ரிலீஸான டேப்பில் வரும் முக்கியப் பெயர் ஆடிட்டர் ரத்னம். ராஜாத்தி அம்மாவால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத நிலையில், போன் ரிசீவரை ரத்னத்திடம் கொடுக்கச் சொல்வார் ராடியா. அப்போது ராடியாவும், ரத்னமும் பேசுவார்கள். அதில் சென்னையில் உள்ள வோல்டாஸ் நிறுவனம் இயங்கும் இடம்பற்றிய தகவல்கள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு ராஜாத்தி அம்மாளுக்கு நெருக்கமாக இருப்பவர் ரத்னம்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ரத்னம் வந்தது முதல் ராஜாத்தி அம்மாளின் முக்கிய ஆலோசகரானார். தனது அலுவலகத்தில் சரவணனின் மனைவி வேலைக்குச் சேர்ந்ததன் மூலம் ரத்னம் - சரவணன் நட்பு ஏற்பட்டது. ராஜாத்தி அம்மாள் தொடர்புடைய ராயல் ஃபர்னீச்சர், வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிட்டெட் போன்ற நிறுவனங்களை கவனித்துக்கொள்ள, விசுவாசமான ஆள் தேவை என்று இவர்கள் தேட ஆரம்பிக்க... சரவணன் உள்ளே நுழைந்தார்.

 அவரே ராயல் ஃபர்னீச்சர் கடையை முழுமையாக கவனிக்கத் தொடங்கினார். அவர் வந்த நேரம், நல்ல நேரமாக இருந்ததாம். அதனால், செல்வாக்கு அதிகமானது. ராயல் ஃபர்னீச்சர் கடையைக் கவனித்துக்​கொள்வது மட்டுமல்லாமல், ராஜாத்தி அம்மாளின் முக்கிய ஆலோசகர்களுள் ஒருவராகவும் சரவணன் மாறினார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஃபர்னீச்சர் கடைக்கு சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து மரச் சாமான்களை இறக்குமதி செய்​வார்கள். அதைத் தேர்ந்தெடுக்க ராஜாத்தி அம்மாளே அந்த நாடுகளுக்கு நேரில் செல்வார். அப்போது உடன் பாதுகாவலராகச் செல்லும் அளவுக்கு சரவணன் முக்கியத்துவம் பெற்றார்.  பெசன்ட் நகரில் 52.75 லட்சம் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய வீட்டு மனை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமூக சேவகர் என்ற அடிப்படையில் இவர் இந்த ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளார்.

பாரூக் என்பவர் நடத்தி வரும் எ.கே.ஆர். என்ற வியாபார நிறுவனத்தின் முக்​கியப் பங்குதாரர் சரவ​ணன். இவர்கள், திருக்​கழுக்குன்றத்தில் மார்க்​கெட் அமைக்க நிலங்கள் வாங்குவதில் ராஜாத்தி அம்மாள் பெயரைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகமே இவர்கள் பின்னால் அலைந்ததாம்.

சென்னை விமான நிலையம் அருகே கிருஷ்ணரெட்டி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பிரச்னை... 33 கிரவுண்ட் நிலம்... அதில் 17,000 சதுர அடிக்கு ஒரு கட்டடமும் உண்டு. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கடன் வாங்கிக் கட்டமுடியாமல் அது ஏலத்துக்கு வந்துவிட்டது. கேள்விப்பட்ட சரவணன் அங்கு சென்று ஏலம் எடுத்து இடத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார். இந்த இடத்தில்தான் ஃபர்னீச்சர் கம்பெனியின் குடோன் இரண்டு ஆண்டுகள் செயல்பட்டது...'' என்கிறார்கள்  உள்விவரங்கள் அறிந்தவர்கள்.

மேலும், ''ரத்னம், சரவணனை அடுத்து முக்கியப் புள்ளியாக வலம் வருகிறார் டேனியல் சாமுவேல். கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ஏ.ஸி. மெக்கானிக்காக இந்த வீட்டுக்குள் நுழைந்தார். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி முதல் குறுக்குத் தெருவில் வசிக்கிறார். இவர் மகள் நான்சி சாமுவேலுக்கு சமூக சேவகர் ஒதுக்கீட்டில், திருவான்மியூர் புறநகர் விரிவாக்கத் திட்டத்தில் உள்ள பெசன்ட் நகரில் 71 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள 3,597 சதுர அடி வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தவணையாகவே 28.77 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால், வீட்டு வசதி வாரிய விண்ணப்பத்தில் நான்சி சாமுவேல், தனியார் விமான நிறுவனத்தின் எழும்பூர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, 'ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படிக்கும்போதே சமூக சேவை செய்தார்’ என்று பரிந்துரைக் கடிதம் தரப்பட்டு வீடு வழங்கப்பட்டுள்ளது.

நான்சி சாமுவேல் திருமணம் கொச்சியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு அதிகார மட்டத்தினர் அளித்த பரிசுப் பொருட்களின் தொகை மலை அளவாம். எர்ணாகுளத்தில் உள்ள தொழிற்சாலை மற்றும் வெஸ்ட் கேட் நிறுவனத்தின் பணிகளை இவர் கவனித்து வருகிறார். இவரை இதுவரை தலைவர் ஒரு முறைகூட நேரில் பார்த்ததே இல்லையாம்!'' என்றதோடு,

''மயிலாடுதுறையின் ராஜப்பா, கடந்த 15 ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாளுக்கு அறிமுகம். இவரும், இவரது நண்பரான கோட்டூர்​புரம் தேவேந்​திரனும்  நிலங்கள் தொடர்பான தரகு வேலைகளில்  கில்லாடிகளாம். தேவேந்திரன், ராஜப்பா, ராஜப்பாவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும், ஓர் இடத்தில் கூடினார்கள் என்றால் முக்கியமான டீலிங்குகள் இருக்கிறது  என்று அர்த்தமாம்.

விருகம்பாக்கத்தில் சுப்பையா, நெடுமாறன் இருவருக்கும் சொந்தமான 70 கிரவுண்ட் இடங்கள் இருந்தன. இதில் சுப்பையா இறந்ததும், இந்த இடத்தில் உள்ள வில்லங்கங்களை சரி செய்து, விற்பனை செய்ய நெடு​மாறன் முயற்சித்தார். அது பற்றி ராஜப்​பாவிடம் பேசுகிறார். எங்கேயோ வைத்துப் பேசாமல் ராயல் ஃபர்னீச்சர் அலுவலகத்திலேயே பஞ்சாயத்து நடந்தது. கடைசியில், மூலப்பத்திரம் ஒரு மார்வாடி பில்டருக்கு மாற்றப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை சாமுவேல் எடுத்துக்கொண்டார்...'' என்று சொல்கிறார்கள்.

''சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் பணிகளை கவனித்து வந்தார் சந்திரமௌலி. சென்னை துறைமுகக் கழகத்தின் சேர்மனாக சுரேஷ் இருந்தபோது சந்திரமௌலிக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைத்தது. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இடம் ஒதுக்கீடு கொடுக்க முடியாது!’ என்று மறுத்த தூத்துக்குடி துறைமுகக் கழகத்தின் சேர்மன் ரகுபதியை மாற்றிவிட்டு, சுரேஷ§க்குக் கூடுதல் பொறுப்பு கொடுக்கும் அளவுக்கு, சந்திரமௌலியின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது.

சேர்மன் சுரேஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஓர் ஆண்டுக்கு முன்பு ரெய்டு நடத்தினார்கள். அதில், சந்திரமௌலி மூலம் செய்த பரிந்துரைகள், பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்​கான ஆதாரங்கள் கிடைத்ததாம். அதில் இருந்து அவரைக் கொஞ்ச காலத்துக்கு அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார்களாம். இவர் கவனித்து வந்த வேலைகளை தற்போது கவனிப்பவர் சக்திவேல். கப்பல் போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக ஜி.கே.வாசன் வந்த பிறகும், ராஜாத்தி அம்மாள் சொன்னார் என்று செய்யப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் அவர் தட்டிக் கழிக்க... சமீபகாலமாக சக்திவேலும் சைலண்ட் ஆக்கப்பட்டுள்ளார்.

தற்போது சி.ஐ.டி. காலனி வீட்டின் செல்லக் குழந்தையாகச் சொல்லப்படுகிறார் முரளி. ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம், சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள சில நிறுவனங்களை இவர் மேற்பார்வை செய்​கிறார்.

பல நாட்கள் காலை வேளைகளில், டேனியல் சி.ஐ.டி. காலனியில் வந்து ஆலோசனை செய்துவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. ஃபைனான்ஸியரான இவரது ஆலோசனை இல்லாமல் எந்தக் காரியமும் செய்யப்படுவது இல்லை. தனியார் விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சஜீவ் ஆர்யன் மற்றும் பிரபலமான பியூட்டி பார்லர் பெண்மணியான அலீமா இருவரும் இந்த அணியில் வலம் வருபவர்கள். ராயல் ஃபர்னீச்சருக்குப் பின்புறம் உள்ள தெருவில் இவர்களுக்குத் தனியாக ஓர் அலுவலகமே இருக்கிறது. பல்வேறு பரிவர்த்தனைகள் இங்கேதான் நடக்கின்றன...'' என்றும் பேசிக்  கொள்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான உடன்பிறப்புகள்...

இப்படி ஒரு கறுப்பு வளையம் ராஜாத்தி அம்மாளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது அவருக்கோ, முதல்வருக்கோ, கட்சிக்கோ நல்லதா..? என்பதே நடப்பவற்றை ஊன்றிக் கவனிப்போரின் கேள்வியாக உள்ளது.

நன்றி - ஜூனியர் விகடன் - 23-02-2011

ஒரு நேர்மையான வி.ஏ.ஓ.வை இழந்துவிட்டனர் தமிழக மக்கள்..!

22-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தாய்த் தமிழகத்திற்கு ஒரு நன்றிக் கடனை செலுத்த ஆர்வமாக இருந்தேன். துடிப்புடன் இருந்தேன். ஆசையோடு காத்திருந்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது.

கிராம நிர்வாக அலுவலர் என்கிற வி.ஏ.ஓ. தேர்வுக்காக விண்ணப்பத்தினை அனுப்பிவிட்டு சமீபத்தில் புற்றீசல்போல் உடனுக்குடன் வெளியான அனைத்து சிறப்புப் புத்தகங்களையும் வாங்கிக் குவித்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் உருட்டிப் புரட்டிப் படித்து வைத்திருந்தேன். அத்தனையும் வீணாகிவிட்டது.


சென்ற வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் “Blind / Deaf  நபர்களுக்கு இந்த வேலை இல்லை. ஆகவே உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது..” என்று சொல்லியிருந்தார்கள். முதலில் படித்தபோது புரியவில்லை.(எதுதான் நமக்கு உடனே புரிஞ்சிருக்கு?)

கண் பார்வையற்றோருக்கு வேண்டுமானால் இது பொருந்தக் கூடியது என்று சொல்லலாம். ஆனால் காது காளாதோருக்கு ஏன் வேலை தரக் கூடாது..? தப்பாச்சே..? வரும் ஞாயிற்றுக்கிழமை(20-02-2011) தேர்வு நடக்கவிருக்கிறது.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடையுத்தரவு வாங்கிவிடலாம் என்றுகூட முதலில் யோசித்து, நண்பர், வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜனிடம் பேசினேன்.

“முதல்ல விதிமுறைகளை நல்லா படிச்சுப் பாருங்க.. அதுல எதுவும் போடலைன்னா எடுத்திட்டு வாங்க.. பேசுவோம்..” என்றார்.. அவரது அறிவுரையின்படி தேடிப் பிடித்துப் புரட்டியதில் தேர்வாணைய விளக்கக் குறிப்பில் எதுவுமில்லை. குழப்பம் கூடியது.

தேர்வாணைய அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டபோது “விண்ணப்பத்திற்கான குறிப்பாணையில் அது வெளியாகியுள்ளது. வாங்கிப் பாருங்கள்...” என்றார்கள். “அது எங்கே கொடுத்தீர்கள்..?” என்று நான் திருப்பிக் கேட்க.. “அதைத்தான் தெருத் தெருவா வித்தாங்களே.. பாக்கலையா..?” என்று திருப்பிக் கேட்டார்கள். நானும் விடவில்லை. “நீங்க போஸ்ட் ஆபீஸ்ல கொடுத்தீங்களே.. அதுல நான் பார்த்தவரைக்கும் இது இல்லையே..?” என்றேன். “போஸ்ட் ஆபீஸ்ல கொடுத்தது, தேர்வாணையம் நடத்தும் எல்லா தேர்வுகளுக்கும் பொதுவான அறிவுரை விளக்கம்.. இந்த வி.ஏ.ஓ. தேர்வுக்கு மட்டும் தனியா விதிமுறைகளைக் கொடுத்திருந்தோம். அதுல போட்டிருந்தோம்.” என்றனர். “அது எனக்குத் தெரியாதே..? உங்களுடைய விளம்பரத்துலேயும் இது பத்தி நீங்க ஒண்ணும் சொல்லலியே?” என்றேன். “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது ஸார்.. நாங்க பிரிண்ட் பண்ணிக் கொடுத்தாச்சு.  அவ்ளோதான்” என்று பொறுப்பாகச் சொல்லி போனை வைத்துவிட்டார்கள்.


மறுபடியும் போன் அடித்துக் கேட்டால், அந்த செக்ஷன், இந்த செக்ஷன் என்றார்களே ஒழிய யாரும் முறையாகப் பதில் சொல்லவில்லை. கடைசியாக கோபத்துடன், “கோர்ட்டில் வழக்குத் தொடரப்  போகிறேன். அதற்காகத்தான் கேட்கிறேன்..” என்று கத்தியவுடன் மிகவும் பதட்டமாக ஒருவர், “அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிடுங்க ஸார்.. கண்டிப்பா சொல்றேன் ஸார்..” என்றார்.

மீண்டும் மிகச் சரியாக ஐந்தாவது நிமிடத்தில் அழைத்தவுடன், “சரவணன் ஸார்.. உங்களுடைய உடல் ஊனத்தின் குறைபாடு என்ன அளவு ஸார்..?” என்று குழைந்து கேட்டது குரல்.. இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்காததால், “நிச்சயமாகத் தெரியலை. ஆனால் டாக்டரின் சர்டிபிகேட்டையும்கூட சேர்த்து வைச்சுத்தான் அனுப்பியிருக்கேன்..” என்றேன். “அது வந்து ஸார்.. காது கேக்காதவங்கன்னா அது 50 சதவிகிதத்துக்குள்ள இருந்தால்தான் அவங்களுக்கு அனுமதின்னு ரூல்ஸ் ஸார். இது அந்த விளக்கவுரைல இருக்கு. நீங்க அதை வாங்கிப் படிச்சுப் பாருங்க. உங்களோட சர்டிபிகேட்டை எடுத்துப் பாருங்க. 50-க்குள்ள இருந்தா போன் செய்யுங்க. பேசித் தீர்த்துக்குவோம். 50-க்கு மேல இருந்தால் நாங்க எதுவும் செய்ய முடியாது ஸார். நீங்க கோர்ட்டுக்கு போறதுன்னாலும் போகலாம்.. இவ்ளோ நேரம் பொறுமையா கேட்டதுக்கு நன்றி ஸார்..” என்று சொல்லி ஏர்டெல் கஸ்டமர் கேர் அடிமைகள் மாதிரி பேசி போனை டொக்கென வைத்தார்கள்.

இதென்ன புது கதை என்று எனது மருத்துவச் சான்றிதழைத் தேடிப் பிடித்துப் பார்த்தால்.. நிசம்தான்.. அதில் "எனக்கு 56 சதவிகிதம் செவித்திறன் குறைபாடு.." என்று குறிப்பிட்டிருந்தார்கள். அடங்கொய்யால.. இந்த மருத்துவர்களும் சேர்ந்தே எனக்கு எதிரா சதி பண்ணியிருக்காங்களே..?

50-க்குள்ள இருந்தாலும் ஒழுங்காக தேர்வெழுதி வெற்றி பெற்று பொறுப்பாக வேலைக்கு போய் உக்காந்திருப்பனே..! 1 பைசா கூட லஞ்சம் வாங்காத, 99 சதவிகிதம் உண்மையான மக்கள் தொண்டனாக.. ஒரு நல்ல அரசு ஊழியனாக உழைத்திருப்பேனே..! எல்லாத்தையும் கெடுத்திருச்சே இந்தக் காது..! போனதுதான் போனது.. கொஞ்சமா போயிருக்கக் கூடாதா..?

அதென்ன 50 சதவிகிதக் கணக்கு? எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. இப்போது நான் காது கேட்கும் கருவியைப் பயன்படுத்துகிறேன். நேருக்கு நேராக நின்று பேசினால் ஓரளவுக்குக் கேட்கும். முடியாதபட்சத்தில் உதட்டசைவை வைத்து கண்டுபிடித்துவிடுவேன். அப்படியும் இல்லையெனில் அவர்களே எனது மிஷினைப் பார்த்துவிட்டு சத்தமாகப் பேசிவிடுவார்கள். பிரச்சினையில்லை. பின்பு எதற்கு இந்தச் சதவிகிதக் கணக்கு..?

ரொம்பப் பிரச்சினை என்றால் இரண்டு காதுகளிலுமே மிஷின் வைத்துக் கொண்டு சமாளித்துவிடலாம். இதையெல்லாம் யாரேனும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தியிருக்கக் கூடாதா..?

இந்த மருத்துவச் சான்றிதழைக்கூட சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் செய்தேன். அவர்கள்தான் சான்றிதழைக் கொடுத்தார்கள். கொடுக்கும்போது, “பணி புரிய முழுத் தகுதியுடையவர்” என்பதற்கான வாசகங்கள் எழுதப்பட்டு ஒரு தனிச் சான்றிதழ் கேட்டிருப்பதையும் அவர்களிடத்தில் சொன்னேன்.

பரிந்துரை செய்த பெண் மருத்துவரோ, “அப்படியொரு சான்றிதழை நேர்முகத் தேர்வின்போதுதான் தருவோம். இப்போது தர மாட்டோம்” என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். ஆனால் இந்த வி.ஏ.ஓ. பதவித் தேர்வுக்கு நேர்முகத் தேர்வே கிடையாது என்பது ஒரு தனிக் கதை. இதையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். “இல்லை ஸார். அப்படி நாங்க கொடுக்க முடியாது. அதுக்கு எங்க டிபார்ட்மெண்ட்ல ரூல்ஸ் இல்லை..” என்று மறுத்துவிட்டார். கடைசியில் எனது காதுகளின் செவித்திறன் குறைபாடு எத்தனை சதவிகிதம் என்பதை மட்டுமே குறித்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

மக்கள் நல்வாழ்வுத் துறையும், கல்வித் துறையும், வேலை வாய்ப்புத் துறையும் ஒரே அரசுகளின் கீழ் இருப்பதுதான். ஆனால் அவர்களுக்குள்ளேயே இத்தனை குழப்பங்கள். இதற்கு பலிகடா என்னை மாதிரியானவர்கள்தான்..! ஒவ்வொரு இலாகாக்களின் விதி்முறைகளும் இப்படி ஏறுக்குமாறாக இருந்தால் எப்படி..?

வேலை வாய்ப்புக்காக இப்படியொரு சான்றிதழை பெற்று வர வேண்டும் என்று ஒரு துறை கூறினால், அத்துறையினர் முன்னரே சான்றிதழ் வழங்கும் துறையினரிடம் இது பற்றிப் பேசி முடித்திருக்க வேண்டாமா..? மக்கள் நல்வாழ்வுத் துறையில் அப்படியொரு சான்றிதழ் தரக் கூடாது என்று விதிமுறை இருக்கும்போது அதனை தெரிந்து கொள்ளாமல் அது போன்ற சான்றிதழை வாங்கி வாருங்கள் என்று இன்னொரு துறை கேட்கின்ற கொடுமையை எங்கே போய்ச் சொல்லி முட்டிக் கொள்வது..?

காது கேட்காதுதான். ஆனால் கை, கால், பேச்சு எல்லாம் நன்றாக உள்ளது. ஆகவே இவரால் இந்தப் பணியினைத் திறம்பட செய்ய முடியும் என்று மருத்துவர்கள் உறுதிமொழியளித்தால் அவருக்கு வேலை தரலாம் என்று விதிமுறைகளை அமைத்திருந்தால் நிச்சயம் நான் தப்பித்திருப்பேன். இதுதான் முறையும்கூட..! 

காது கேளாதோர் அனைவருமே முழு உடல் ஊனமுற்றவர் இல்லை. இப்போது நானே வீட்டில் இருக்கும்போது மெஷினை பயன்படுத்துவதில்லை. பைக்கில் செல்கின்றபோதுகூட மெஷினை மாட்டுவதில்லை. அலுவலகத்தில், கூட்டத்தில், யாருடனாவது பேசும்போதுதான் அதனைப் பயன்படுத்துவேன்.. அப்போதுதான் அது அவசியமும்கூட..!

இந்தப் பணி மக்கள் நலனில் தொடர்புடையது என்பதால் இது முக்கியத் தேவைதான் என்பதையும் நான் அறிவேன். ஆனால் கை, கால், பேச்சு நன்றாக இருந்து மெஷினின் உதவியாலேயே தெளிவாகக் கேட்கவும் முடியும் என்றால் அனுமதிக்கலாமே..? ம்.. என்னத்த சொல்றது..?

எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்று வந்த கடிதத்தில்கூட “Blind / Deaf  நபர்களுக்கு இந்த வேலை இல்லை. ஆகவே உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது..” என்றுதான் மொட்டையாக போட்டிருக்கிறார்கள். "உங்களது ஊனத்தின் குறைபாடு தேர்வாணையத்தின் விதிமுறைக்கு அதிகமாக உள்ளது. இதனால், உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.." என்றாவது மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டாமா..?

இதற்காக கோர்ட்டு, கேஸ் என்றெல்லாம் போய் நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது தற்போதைய எனது அன்றாடங்காய்ச்சி வாழ்க்கை நிலையில் முடியாத காரியம் என்பதை உணர்ந்து  அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.

அந்தக் கோவணாண்டி முருகன் ஏன் இப்படி என்னை விதம்விதமா சோதிக்கிறான்னு தெரியலை..! இந்த வயசுக்கு மேல இனிமேல் நான் எந்த அரசு வேலைக்குப் போறது..? கிடைச்ச ஒரு வாய்ப்பும் போச்சு.. வயசான காலத்துல ஏதாவது பென்ஷனாவது கிடைக்கும்.. யார் தயவும் இல்லாம, கால் வயிறுன்னாலும் நாமளே கஞ்சி காய்ச்சி குடிக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன். மண்ணையள்ளிப் போட்டுட்டான் அந்த பழனி பரதேசிப் பய..!

இதோ... நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வி.ஏ.ஓ. தேர்வும் நடந்து முடிந்துவிட்டது. 3,484 இடங்களுக்கு மொத்தம் 9 லட்சம் தமிழர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் 104 இடங்களில் தேர்வு மையங்களை அமைத்திருக்கிறார்கள்.

ஏதோ பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு படிப்பதுபோல்  முழு அக்கறையோடு படித்து தயாராக இருந்தனே..? அனைத்தும் வீண்.. இதில் வயித்தெரிச்சலான இன்னொரு விஷயம். தேர்வில் கேள்வி கேட்டிருக்காங்க பாருங்க..

கேள்வி : கோர்ட் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையைக் கூறுக..?

சாய்ஸ் : நீதிமன்றம், நகர மன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம்..

அடப்பாவிகளா..? இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா..? இந்தக் காலத்துல 5 கிளாஸ் படிக்கிற பையனே  சொல்லிருவான்யா. கேட்ட கேள்விகளெல்லாம் இந்த லட்சணத்துலதான் இருந்துச்சாம். என்னைய எழுத விட்டிருந்தா அட்லீஸ்ட் முதல் பத்து பேருக்குள்ளயாச்சும் வந்து சீட்டை பிடிச்சிருப்பனே..?  கெடுத்துட்டானே.. கெடுத்துட்டானே அந்த முருகன்..!

அடுத்த வருடத்தில் தமிழகத்தில் எங்காவது லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது என்று எழுதியிருந்தால், என்னை நினைத்துப் பார்த்து தமிழக அரசை கண்டியுங்கள்..! ஒருவேளை கைதான அந்த வி.ஏ.ஓ.வுக்குப் பதிலாக நான் இருந்திருந்தால் நிச்சயம் இந்தச் சம்பவமே நடந்திருக்காதே என்று நினைத்துக் கொள்ளுங்கள்..!

எப்படியோ.. தமிழக அரசு தலை சிறந்த ஊழியன் ஒருவனை இழந்துவிட்டது.. தமிழக மக்கள் சிறந்த, நேர்மையான வி.ஏ.ஓ. ஒருவரை இழந்துவிட்டார்கள்..!

அவர்களுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..!

கலைஞரின் டாஸ்மாக் கொள்ளை..!

19-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக மக்களிடமிருந்து சுரண்டப்படும் தொகையை வைத்துத்தான் தமிழக அரசு பல இலவசத் திட்டங்களை வாரி வழங்கி வருகிறது..! ஒரு பக்கம் நம்மை பிச்சைக்காரனைப் போல வெளியில் காட்டிக் கொண்டு இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே பெரும் குடிகாரர்கள் தமிழகத்து மக்கள்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லி வருகிறது. வருடாவருடம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயே இதற்குச் சாட்சி..!

இதற்கிடையில் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யும் பிராண்டுகளைத் தயாரிக்கும் மதுபான ஆலைகள் அமைக்க முதல்வர் கருணாநிதி தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருப்பதும் தெரிகிறது.

தமிழகத்தில் இருக்கும் மதுபான ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி சென்ற வார ஜூனியர்விகடனில் வெளி வந்த இந்தக் கட்டுரை வெகு சுவாரசியமானது. எத்தனை, எத்தனை இடங்களிலெல்லாம் இந்த அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வளைந்து கொடுக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.. படித்துப் பாருங்கள்.

''விரைவில் மதுவிலக்கு கொண்டு வரலாமா என்பதைப் பற்றி யோசித்து வருகிறோம்...'' என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடிக்கு மது வகைகளை விற்று சாதனை படைத்திருக்கிறது தி.மு.க. அரசு.

''ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துக்கொண்டே, ஏழையின் பாக்கெட்டிலிருந்து நோட்டுகளை உருவும் 'டாஸ்மாக்' தந்திரம் ஒரு வேதனை என்றால்... மதுபான கம்பெனிகளுக்கு அனுமதி கொடுத்த பின்னணி 'ஃபுல்'லான இன்னொரு வேதனை!'' என்கிறார்கள் மெதுவாகப் பேச ஆரம்பித்திருக்கும் கோட்டை நடுநிலை அதிகாரிகள்.

தமிழ் நாட்டில் மது வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனத்துக்கு   'தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்’ என்று பெயர். Tamil Nadu State Marketing Corporationஎன்பதைத்தான் சுருக்கி TASMAC என்கிறார்கள். மது வகைகளின் மொத்த விற்பனைக்காக 1983-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, ஒயின் மற்றும் பீர் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்க பாலாஜி டிஸ்டிலரீஸ், எம்.பி. டிஸ்டிலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்டு டிஸ்டிலரீஸ், சிவாஸ் டிஸ்டிலரீஸ், சாபில் டிஸ்டிலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்​தார்கள். வளம் கொழிக்கும் இந்த வர்த்தகத்துக்குள் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் வந்தால், வருமானம் பாதிக்கலாம் என்பதால் புதிய லைசென்ஸ் யாருக்கும் தர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது தனிக்கதை.

இதை உடைத்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோல்டன் மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் ஆசி பெற்ற மனிதர்களால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதுவரை மது விற்பனையை தனியாருக்கு ஏலம்விட்டு வந்த முறையை மாற்றி, டாஸ்மாக் மூலமே 'ஒயின்ஷாப்'கள் நடத்தி விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவை, கருணாநிதி மீண்டும் முதல்வராக வரும்வரை கண்டித்துக் கொண்டே இருந்தார். ''அரசாங்கம் மதுக் கடைகளை நடத்துவதா?'' என்று கேள்வி கேட்டார்.

ஆட்சிக்கு வந்தவுடன்தான் சுருதி மாறுமே..! டாஸ்மாக் மூலமாகக் கிடைத்த வருமானத்தைப் பார்த்த கருணாநிதி, ஜெயலலிதாவின் வழியையே தானும் பின்பற்றி விற்பனையைத் தொடர்ந்தார். இரண்டு ஆட்சியிலும் ஆண்டுவாரியாகக் கிடைத்த வருமானம்:

2003-04 - 3,639 கோடி, 2004-05 - 4,872 கோடி, 2005-06 - 6,030 கோடி, 2006-07 - 7,473 கோடி, 2007-08 - 8,821 கோடி, 2008-09 - 10,601 கோடி, 2009-10 - 12,491 கோடி.

அதாவது, 1983-ம் ஆண்டு வெறும் 183 கோடியாக இருந்த மது விற்பனை, இன்றைக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது. பணவீக்கம், விலை ஏற்றம் ஆகியவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும்... தமிழ்க் குடும்பங்களில் அரசாங்க மதுபானம் எப்படி வெள்ளமாக ஓடுகிறது என்பது புரியும்!

''நோகாமல் கோடிகளைக் குவிக்கும் இந்த வர்த்தகத்துக்குள் புதிய மனிதர்கள் பலர் உள்ளே நுழைந்து இருப்பதும், அவர்கள் தி.மு.க. சார்பானவர்களாக, அதுவும் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களாக இருப்பதும்தான் கடந்த ஐந்தாண்டுகளில் சத்தமில்லாமல் நடந்திருக்கும் மற்றொரு சாதனை!'' என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

மாகுன்ட சுப்புராமி ரெட்டியின் சகோதரர் சீனிவாச ரெட்டிக்கு சொந்தமானது பாலாஜி டிஸ்டிலரீஸ். எம்.பி. டிஸ்டிலரீஸ் உரிமையாளர் எம்.புருஷோத்தமன். ராமசாமி உடையார் குரூப், மோகன் புரூவரீஸ் நடத்தியது. பண்ணாரி அம்மன் சுகர்ஸ் பாலசுப்பிரமணியத்துக்குச் சொந்தமானது சிவாஸ். சாபில் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தை ஏ.சி.முத்தையா தொடங்கி இன்று எம்.ஜி.முத்து நடத்தி வருகிறார்.

2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராவதற்கு முன்புவரை ஆறு டிஸ்டிலரீஸ்  நிறுவனங்கள்தான் இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பு நான்கு புரூவரீஸ்  இருந்தன.  அதன் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது. (பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் போன்றவற்றை தயாரிக்கும் கம்பெனிகள் டிஸ்டிலரீஸ் என்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புரூவரீஸ் என்றும் அழைக்கப்படும்)

புதிய உரிமம் பெற்றிருக்கும் டிஸ்டிலரீஸ்:

1. எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ்.

2. கால்ஸ் டிஸ்டிலரீஸ்

3. எலைட் டிஸ்டிலரீஸ்

4. இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட்

5. கிங் டிஸ்டிலரீஸ்

புதிய உரிமம் பெற்றிருக்கும் புரூவரீஸ் :

1. எஸ்.என்.ஜே. புரூவரீஸ்

2. எலைட் புரூவரீஸ்

3. எம்.பி. புரூவரீஸ்

4. டிராபிக்கல் புரூவரீஸ்.

இந்த கம்பெனிகளுக்குள் 'மிக்ஸிங்' ஆகியுள்ள முகங்கள் யார் யார்?

1. எஸ்.என்.ஜே. டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜெயமுருகன், கீதா ஆகிய இருவர் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை - வசனத்தில் உருவான 'உளியின் ஓசை,’ 'பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் இந்த ஜெயமுருகன்.

2. எலைட் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தி.மு.க. மத்திய அமைச்சர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. இதன் மேலாண்மை இயக்குநராக ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த் என்பவரும், இயக்குநர்களாக ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசூயாவும், மகன் இளமாறனும் இருக்கிறார்கள்.

3. டிராபிக்கல் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக ரேணுகா குமார், சரத்குமார், பிரசன்னா நடராஜன் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். சரத்குமார் வேறு யாருமில்லை... கலைஞர் டி.வி-யில் 20 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், அதன் நிர்வாக இயக்குநர். அதன் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக கவனித்து வருபவர்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பெருமளவு பணத்தை லஞ்சமாகக் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டிருக்கும் மும்பை ஷாகித் பால்வாவிடம் 200 கோடிக்கும் மேலாக 'கலைஞர் டி.வி.'-க்குப் பெற்ற சர்ச்சையில் சி.பி.ஐ-யின் கண்காணிப்பில் இருப்பவர் இந்த சரத்குமார்.

4. கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜி.என்.எஸ். கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். அருள்மணி சேகரன், ராஜசேகரன், நடேசன், பழனிச்சாமி ஆகிய ஐந்து பேர் இதன் இயக்குநர்கள்.
''காரைக்கால் பகுதி மது வர்த்தகத்தில் நீண்ட காலமாக இருந்த வாசுதேவனின் குடும்பம் ஒரு காலத்தில் காங்கிரஸ் அனுதாபம் கொண்டது. கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாசுதேவன் விரும்பினார். ராஜாத்தி அம்மாளின் ஆசியைப் பெற்றுள்ள காரைக்கால் பகுதி தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் இவரை உரிய இடத்தில் அறிமுகப்படுத்தினார். தேர்தலில் போட்டியிட வாசுதேவனுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மது ஆலை நடத்தும் பம்பர் பரிசு கிடைத்தது!'' என்கிறார்கள் காரைக்கால் பகுதி தி.மு.க-வினர்.

5. கிங் டிஸ்டிலரீஸ் என்பது தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமானது.

6. இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் பிரைவேட் லிமிடெட், தரணிபதி ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மது ஆலைக்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது அரசு தரவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி தரப்பட்டது. தரணிபதி ராஜ்குமாரின் அப்பா கிருஷ்ணசாமி கவுண்டருக்கு தென்னை விவசாயிகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் பொறுப்பை முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.

''இந்தக் காலத்தில் யார் ஆளும் கட்சியாக வந்தாலும்,  தங்கள் கட்சி ஆட்களுக்கு சில சலுகைகள் காட்டுவார்கள். அது சகஜமாக நடக்கிற விஷயம்தான். ஆனால், இந்த மது ஆலைகள் விஷயத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துமே தி.மு.க. சார்பானவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

டான்சி வழக்கில் முக்கியக் குற்றச்சாட்டே, 'அரசு பதவியில் இருப்பவர் அரசாங்க நிலத்தை வாங்கக்கூடாது’ என்ற விதிமுறையை மீறியதுதான். முதல்வர் நாற்காலியில் இருக்கும் கருணாநிதி அமைத்த கோபாலபுரம் வீடு தொடர்பான அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பவர் ஜெகத்ரட்சகன். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர். அவருக்குத் தரப்பட்டுள்ள மதுபான அனுமதியைத் தொடர்ந்து வாலாஜாபாத்தில் ஆலை தொடங்கப்பட்டுவிட்டது. ஜெகத்ரட்சகனின் மகனும், மனைவியும் இதன் இயக்குநர்களாக அதிகாரபூர்வமாக இடம்பெற்று உள்ளார்கள்.

ஜெகத்ரட்சகனின் இன்னொரு நிறுவனமான ஏ.எம். புரூவரீஸ் பீர் தயாரிக்கும் அனுமதிக்கு காத்திருக்கிறது. 'ஏ' என்பது முதல் மனைவி அனுசுயா என்றும், 'எம்' என்பது இரண்டாவது மனைவியான மாலா என்றும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

''மாறன் குடும்பத்துடன் மோதல் வந்ததைத் தொடர்ந்து, போட்டியாக 'கலைஞர்' டி.வி-யை நிறுவியது முதற்கொண்டு தி.மு.க-வுக்கு மிக நெருக்கமாகிவிட்டார் சரத்குமார். அந்த டி.வி-யில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ள நிலையில்... குடும்பக் கூட்டாளி என்றே சொல்லக் கூடிய அளவுக்கு உள்ளவர் இந்த சரத்குமார். இவருக்கு மது ஆலை உரிமம் கொடுப்பது என்பது தன் குடும்பத்துக்கே கொடுத்துக் கொள்வதாகும்!'' என்று குறிப்பிடும் அதிகாரிகள், ''மதுராந்தகத்தில் அமைந்திருக்கும் எஸ்.என்.ஜே. நிறுவனத்துக்கு டிஸ்டிலரீஸ் மற்றும் புரூவரீஸ் ஆகிய இரண்டு உரிமங்களும் தரப்பட்டுள்ளன. ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் மூலமாக 'உளியின் ஓசை’, 'பெண் சிங்கம்’ படங்களை எடுத்த ஜெயமுருகனுக்கு இந்த உரிமம் தரப்பட்டது பளிச்சென்று கண்ணை உறுத்தத்தானே செய்யும்!'' என்கிறார்கள்.

டி.ஆர்.பாலுவுக்கு தரப்பட்டுள்ள உரிமங்களுக்கு ஆதாரம் காட்ட வேண்டியதில்லை. காரைக்கால் வாசுவுக்கு தரப்பட்டுள்ள லைசென்ஸுக்குப் பின்னணியாக ராஜாத்தி அம்மாளின் ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது. இப்படி அனைத்துமே கலைஞரின் சுற்றம் சூழலுக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது...'' என்ற ஆதங்கம் விஷயம் அறிந்தவர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இது போன்ற மதுபான அனுமதிகள் எந்த விதிமுறைப்படி தரப்படுகின்றன? ஆலைகளை அமைக்கும்போது அப்பகுதி மக்களிடம் வெளிப்படையான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளதே... அவை நடத்தப்பட்டதா? டி.ஆர்.பாலுவின் ஆலை அனுமதிக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் போலீஸால் தாக்கப்பட்டார்களே... அந்த விவகாரம் என்ன ஆனது? என்பது போன்ற சந்தேகங்கள் வலுப்பட்டே வருகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் தமிழக அரசு இருக்கிறது!

நன்றி : ஜூனியர் விகடன்