கலைஞரின் வள்ளல்தனம்..! மருத்துவர் ராமதாஸின் சுதாரிப்பு..!

16-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்கள், “குடியைப் புகுத்தி தமிழ்நாட்டை நாசமாக்கிய பெருமைக்குரியவர்” என்று அவராலேயே புகழப்பட்ட தாத்தாவிடமே, வாயெல்லாம் பல்லைக் காட்டி 30 தொகுதிகளை வாங்கியது மிகப் பெரிய சாமர்த்தியம்தான்..!

கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பாட்டாளி மக்கள் கட்சியைக் காட்டி காங்கிரஸை மிரட்டுகிற வேலையை தாத்தா செய்தபோதெல்லாம் பட்டென்று பலூனை உடைப்பதுபோல் வார்த்தைகளை வீசியெறிந்து கூட்டணி முறிந்தது என்ற நிலைமைக்குக் கொண்டு போயிருந்தார் மருத்துவர்.

ஆனாலும் விதி விடவில்லை. டெல்லி பாதுஷாக்களை ஒரு கட்டுக்குள் வைக்க வேண்டுமெனில் பக்கத்து வீட்டு பசுக்களை சீராட்டி, பாலூட்டி தேற்றி வைக்க வேண்டுமென்ற கணக்கை நன்கு அறிந்தவர் நமது தாத்தா. அதனால்தான் காங்கிரஸ் 90 தொகுதிகளுக்கு கணக்குப் போடுகிறது என்றவுடனேயே சாதாரணமாக கல்யாணப் பத்திரிகை அளிக்க வந்தவரையே மடக்கிப் போட்டு “கல்யாணப் பரிசாக தொகுதிகளை தருகிறேன். அள்ளிச் செல்லுங்கள்..” என்று வாரி வழங்கியனுப்பி வைத்தார் தாத்தா.


பாட்டாளி மக்கள் கட்சி கடந்து வந்த அரசியல் பாதை அப்படியொன்றும் மிக எளிதானதல்ல. எத்தனை, எத்தனை கூட்டணிகள்..? எத்தனை, எத்தனை தாவல்கள்..? அத்தனைக்கும் அடிப்படையில் இருந்தது, அவருடைய குடும்பப் பாசம் என்பதை அவராலேயே மறுக்க முடியாது..!

1991 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. கட்சி சார்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் - ஒரே ஒரு எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார். அப்போது கட்சி வாங்கிய ஓட்டு சதவீதம் 5.91.

1996 சட்டமன்றத் தேர்தல். பா.ம.க. அப்போதும் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஓட்டு சதவீதம் 3.84.

1998 - பாராளுமன்றத். தேர்தல். அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க. கூட்டணியுடன்  5 தொகுதிகளில் போட்டியிட்டதில் 4-ல் வெற்றி பெற்றது. தலித்எழில்மலை, என்.டி. சண்முகம், எம்.துரை, பாரிமோகன் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றவர்கள். ஓட்டு சதவீதம் 6.05.

1999-நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குத் தாவியது. 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. என்.டி.சண்முகம், துரை, ஏ.கே.மூர்த்தி, பு.தா.இளங்கோவன், பொன்னுசாமி என்று ஐந்து எம்.பிக்கள். ஓட்டு சதவீதம் 8.21.

2001 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்குத் தாவியது. 27 இடங்களில் போட்டியிட்டு 22 இடங்களைக் கைப்பற்றியது. வாக்கு சதவிகிதம் 5.56.


2004 பாராளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க. கூட்டணிக்கு மறுபடியும் தாவியது. 6 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலுமே வெற்றி கண்டது. வாக்கு சதவிகிதம் 6.71.

2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 சட்டமன்ற தொகுதிகளைக் கைப்பற்றியது பா.ம.க. பெற்ற வாக்கு சதவிகிதம் 5.65.


2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணிக்குத் தாவியது பா.ம.க. ஆனால் அந்தத் தேர்தலில் தான் போட்டியிட்ட 6 தொகுதிகளிலுமே தோல்வியைத் தழுவியது. பெற்ற ஓட்டுக்களின் சதவிகிதம் 5.71.

இப்போது மறுபடியும் 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணியை தி.மு.க.வுடன் இடம் மாற்றியுள்ள பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தொகுதிகள் பட்டியல் :

1.திருப்போரூர்

2.செங்கல்பட்டு
 
3.காஞ்சிபுரம்
 
4.ஆற்காடு
 
5.போளூர்
 
6.ஜோலார்பேட்டை
 
7.செஞ்சி
 
8.மயிலம்
 
9.நெய்வேலி
 
10.மேட்டூர்
 
11.ஓமலூர்
 
12.எடப்பாடி
 
13.பவானி
 
14.தர்மபுரி
 
15.பூம்புகார்
 
16.திண்டுக்கல்
 
17.ஆலங்குடி
 
18.மதுரவாயல்
 
19.அணைக்கட்டு
 
20.ஜெயங்கொண்டம்
 
21.பர்கூர்
 
22.வேளச்சேரி
 
23.கும்மிடிப்பூண்டி
 
24.புவனகிரி
 
25.கோவில்பட்டி
 
26.திண்டிவனம்
 
27.சோழவந்தான்
 
28.வேதாரண்யம்
 
29.பரமத்திவேலூர்
 
30.பாலக்கோடு

எப்படியோ மருத்துவர் தான் நினைத்ததை சாதித்தபடியேதான் உள்ளார். இந்த முறையும் அலுங்காமல், குலுங்காமல் ராஜ்யசபா பதவியை தனது மகனுக்காக உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்..!

“கலைஞரின் இனியவை நாற்பது ஒன்றே போதும் தமது கூட்டணி ஜெயிப்பதற்கு..” என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். அதே சமயம் “தற்போது தி.மு.க.வுடன் அமைந்துள்ள கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான்” என்று உஷாராகவே பதில் சொல்லியுள்ளார் மருத்துவர். இதுவே வயிற்றைக் கலக்குகிறது. மனிதர் இப்படியே எத்தனை முறைதான் கூட்டணி மாறுவார்..? தாவுவதற்கு கூச்சப்படவே மாட்டேன்றாரே..!

தொகுதிப் பட்டியல்களில் திண்டுக்கல்லை பார்த்தவுடன் திகைப்பாக இருக்கிறது. அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலம் வாய்ந்ததாகவும், தற்போது தி.மு.க. வசமும் இருக்கும் அந்த ஊரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிற்க ஆட்களும் இருக்கிறார்களா..? ஆச்சரியமாக இருக்கிறது..! தி.மு.க. நின்றால் ஒருவேளை தோற்கலாம் என்ற மனநிலையில் இவர்களிடம் தள்ளிவிட்டுவிட்டார்களோ.. தெரியவில்லை..!

இதே போல் ஆலங்குடி, மதுரவாயல், பர்கூர், வேளச்சேரி, கோவில்பட்டி, சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு ஆகிய தொகுதிகளில் நிச்சயமாக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் பா.ம.க. வெற்றியைப் பற்றியே கனவு காண முடியும்..!

பிரதான கூட்டணிக் கட்சிகளையே மொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கின்ற நாம், இவர்களோடு கூட்டணியில் இணைந்ததற்காக இந்தக் கட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான். வேறு வழியில்லை..!

25 comments:

க ரா said...

தாத்தா உங்க கண்ண குத்த போராரு பாருங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

அவுத்து விட்டுட்டாங்க தொகுதிகளை... பாவம் மக்கள்....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

செங்கோவி said...

உண்மை தான்..அந்த 10 தொகுதிகள் கஷ்டம் தான்!

Sundar said...

ப.ம.க (அல்லது வன்னியர்) பார்வையில் யோசித்துப் பாருங்கள். தங்கள் சமூகத்திற்க்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைத்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சிதானே? தலைவரின் குடும்பம் கோடிகளை குவித்தாலும், தங்கள் சமூகத்தில் சிலர் அரசியல் ரீதியில் பெரிய ஆளாக இருப்பது அவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சிதானே. பொதுவாகவே, நாட்டுக்காக எவ்வளவு நல்லது செய்தாலும், பரவலாக எல்லோரும், தாங்கள் சார்ந்த சாதி சங்கங்களில் சேர்ந்துதான் இருக்கிறார்கள். மற்ற சாதி சங்கங்கள் நேறிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். இது ஒருசில நடிகரின் ரசிகர் மன்றங்களுக்கும் பொருந்தும். அப்படி இருக்கும்போது, அதையே இவர்கள் ஒரு கட்சி ஆரம்பித்து செய்கிறார்கள்.

இதில் இவர்களை (ப.ம.க) மட்டும் குறை சொல்லி என்ன பயன்? இவர்கள் சிறிய கட்சி, அதனால் மாறி மாறி தாவுகிறார்கள். இதுவே பெரிய கட்சியெனில், அவர்கள் மாறி மாறி கூட்டணிவைக்கிறார்கள். வேறு வித்தியாசமே இல்லை!

ஒட்டு மொத்தமாக வேறு ஏதாவது மாற்றம் வந்தால் ஒழிய, இந்த மாதிரி (மானம்கெட்ட) தாவுதல் இருக்கத்தான் செய்யும்!!!

Raveendran Chinnasamy said...

கோவில்பட்டி ? This is Strong Communist /AIADMK /MDMK place . There is not even 100 people supports PMK there . This area ADMK MLA moved to DMK last year so they push to PMK ?

செம்மலர் செல்வன் said...

Anne,Dindigul la Amaithi Arakkattalai PaulBaskar nikka porar. ippo irukkira Communist MLA Balabharathi nikkirangala nu theriyala. dgl la DMK ninna jeikkiradhu kastam. caste,christian vote a PMK target pannum.

R.Gopi said...

இந்த தடவை “முழு ஆப்பு” கொடுக்க மக்கள் தயாராகி விட்டார்கள்...

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...
தாத்தா உங்க கண்ண குத்த போராரு பாருங்க.]]]

அய்.. என் அப்பன் முருகன் இருக்கான். பதிலுக்கு அவன் குத்துவான்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

அவுத்து விட்டுட்டாங்க தொகுதிகளை... பாவம் மக்கள்.]]]

புத்திசாலித்தனமா ஓட்டுப் போட்டா பொழைச்சாங்க.. இல்லைன்னா அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

உண்மைதான். அந்த 10 தொகுதிகள் கஷ்டம்தான்!]]]

மகா கஷ்டம்.. ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருக்கிற செல்வாக்கே குறைஞ்சு போய் இருக்கு. இதுல ஆள், அட்ரஸே இல்லாத தொகுதில நின்னு என்ன செய்யப் போறாங்களோ..? சரி விடுங்க. நமக்கும் நல்லதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

ப.ம.க (அல்லது வன்னியர்) பார்வையில் யோசித்துப் பாருங்கள். தங்கள் சமூகத்திற்க்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைத்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சிதானே? தலைவரின் குடும்பம் கோடிகளை குவித்தாலும், தங்கள் சமூகத்தில் சிலர் அரசியல் ரீதியில் பெரிய ஆளாக இருப்பது அவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சிதானே. பொதுவாகவே, நாட்டுக்காக எவ்வளவு நல்லது செய்தாலும், பரவலாக எல்லோரும், தாங்கள் சார்ந்த சாதி சங்கங்களில் சேர்ந்துதான் இருக்கிறார்கள். மற்ற சாதி சங்கங்கள் நேறிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். இது ஒரு சில நடிகரின் ரசிகர் மன்றங்களுக்கும் பொருந்தும். அப்படி இருக்கும்போது, அதையே இவர்கள் ஒரு கட்சி ஆரம்பித்து செய்கிறார்கள்.
இதில் இவர்களை (ப.ம.க) மட்டும் குறை சொல்லி என்ன பயன்? இவர்கள் சிறிய கட்சி, அதனால் மாறி மாறி தாவுகிறார்கள். இதுவே பெரிய கட்சியெனில், அவர்கள் மாறி மாறி கூட்டணி வைக்கிறார்கள். வேறு வித்தியாசமே இல்லை! ஒட்டு மொத்தமாக வேறு ஏதாவது மாற்றம் வந்தால் ஒழிய, இந்த மாதிரி (மானம் கெட்ட) தாவுதல் இருக்கத்தான் செய்யும்!!!]]]

சரி.. இப்படியே நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை இப்போதைக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Raveendran Chinnasamy said...

கோவில்பட்டி ? This is Strong Communist /AIADMK /MDMK place . There is not even 100 people supports PMK there . This area ADMK MLA moved to DMK last year so they push to PMK ?]]]

ஹா.. ஹா.. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சில தொகுதிகளை டாக்டர் தலையில் கட்டியிருக்கிறார் இன்னொரு டாக்டர்.. வாழ்க தாத்தா..!

உண்மைத்தமிழன் said...

[[[செம்மலர் செல்வன் said...
Anne, Dindigul la Amaithi Arakkattalai PaulBaskar nikka porar. ippo irukkira Communist MLA Balabharathi nikkirangala nu theriyala. dgl la DMK ninna jeikkiradhu kastam. caste, christian vote a PMK target pannum.]]]

எப்படியோ பாட்டாளி மக்கள் கட்சி தோத்தா சரிதான். பாலபாரதிக்கே மீண்டும் கொடுக்கலாம்..! நிச்சயமாக ஜெயிப்பார்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...

இந்த தடவை “முழு ஆப்பு” கொடுக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.]]]

இப்போதுவரைக்கும் இதனை நான் நம்புகிறேன். கடைசி நாள் எப்படி இருக்குமோ..?

குழலி / Kuzhali said...

//1991 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது//
அண்ணே பாமக முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டது 1989 நாடாளுமன்ற தேர்தலில், அப்போது அது பெற்ற வாக்கு விழுக்காடு ஏழு (7%), சிறப்பாதான் தரவுகளை தேடுறிங்க எழுதறீங்க இருந்தாலும் அரசியல் பதிவு புள்ளிவிபரங்கள் எழுதும்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்குங்க

krishna said...

ஒருவேளை திண்டுக்கல் பகுதிகளில் வாழும் வன்னிய கிருத்துவர்களை தனது இனமாக நினைத்து அங்கு போட்டி இடுகிறாரோ??

பிரசன்னா கண்ணன் said...

//ஒருவேளை திண்டுக்கல் பகுதிகளில் வாழும் வன்னிய கிருத்துவர்களை தனது இனமாக நினைத்து அங்கு போட்டி இடுகிறாரோ??

கிறிஸ்துவ வன்னியர்கள் அப்படி ஒன்றும் பெரும்பான்மையாக திண்டுக்கலில் இல்லை..
(முழுக்க கிறிஸ்துவ வன்னியர்கள் கொண்ட பகுதி என்று பார்த்தால் மேட்டுப்பட்டி தவிர வேறு ஒரு பகுதியும் இல்லை)..
ஊருக்குள் பாலபாரதிக்கு பரவலாக நல்லா மரியாதை உண்டு.. அவர் நின்றால் கண்டிப்பாக ஜெயிப்பார்..

ttpian said...

ஆஹா மஞ்சள் துண்டு மனம் மகிழ குஷ்பு நாட்டியம்

priyamudanprabu said...

ULLEN AYYA...

விருச்சிககாந்த் said...

சாரி அண்ணே! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு வந்து மைனஸ் ஓட்டு போட, தோ போட்டாச்சு. இண்ட்லில என் வலைப்பூவை சேர்த்தாச்சு. வந்து அந்த பதிவுக்கு ஒரு ஓட்டு போடுங்க அண்ணே. உங்களை வச்சுதான் யாவாரம் ஆரம்பிச்சு இருக்கேன்!

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...

//1991 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது//

அண்ணே பாமக முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டது 1989 நாடாளுமன்ற தேர்தலில், அப்போது அது பெற்ற வாக்கு விழுக்காடு ஏழு(7%). சிறப்பாதான் தரவுகளை தேடுறிங்க. எழுதறீங்க. இருந்தாலும் அரசியல் பதிவு புள்ளி விபரங்கள் எழுதும்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்குங்க.]]]

மிக்க நன்றிண்ணே..! இனிமேல் கவனமாக இருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...

ஒருவேளை திண்டுக்கல் பகுதிகளில் வாழும் வன்னிய கிருத்துவர்களை தனது இனமாக நினைத்து அங்கு போட்டி இடுகிறாரோ??]]]

அப்படியில்லை. ஜெயிக்க முடியாது என்று சொல்லித் தள்ளி விட்டிருப்பார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரசன்னா கண்ணன் said...

//ஒருவேளை திண்டுக்கல் பகுதிகளில் வாழும் வன்னிய கிருத்துவர்களை தனது இனமாக நினைத்து அங்கு போட்டி இடுகிறாரோ??]]

கிறிஸ்துவ வன்னியர்கள் அப்படி ஒன்றும் பெரும்பான்மையாக திண்டுக்கலில் இல்லை..
(முழுக்க கிறிஸ்துவ வன்னியர்கள் கொண்ட பகுதி என்று பார்த்தால் மேட்டுப்பட்டி தவிர வேறு ஒரு பகுதியும் இல்லை)..
ஊருக்குள் பாலபாரதிக்கு பரவலாக நல்லா மரியாதை உண்டு.. அவர் நின்றால் கண்டிப்பாக ஜெயிப்பார்.]]]

பாலபாரதி நின்றால் நிச்சயம் ஜெயிப்பார் என்று எனக்கும் நம்பிக்கையுண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[ttpian said...

ஆஹா மஞ்சள் துண்டு மனம் மகிழ குஷ்பு நாட்டியம்.]]]

இந்தத் தேர்தலில் குஷ்பூ பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று அறிவாலய வட்டாரங்கள் சொல்கின்றன.. கிச்சன் காபினெட்டில் இருந்து தடா உத்தரவாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[விருச்சிககாந்த் said...

சாரி அண்ணே! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு வந்து மைனஸ் ஓட்டு போட, தோ போட்டாச்சு. இண்ட்லில என் வலைப்பூவை சேர்த்தாச்சு. வந்து அந்த பதிவுக்கு ஒரு ஓட்டு போடுங்க அண்ணே. உங்களை வச்சுதான் யாவாரம் ஆரம்பிச்சு இருக்கேன்!]]]

நடத்து.. நடத்து.. ஏதோ நல்லாயிருந்தா சரிதான்..!