20-03-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று காலையில் 'தினமலர்' பத்திரிகையில் படித்த ஒரு செய்தி இது. படித்தவுடன் ஏனோ பட்டென்று எழுதத் தோன்றியது. எழுதிவிட்டேன்..!
பகுத்தறிவு பிரசாரம் செய்யும் தி.மு.க., நாள், நட்சத்திரம் பார்த்துதான் அனைத்து காரியங்களையும் செய்து வருகிறது.
"தி.மு.க., வேட்பாளர் பட்டியல், மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என, கூறிய தி.மு.க., தலைமை, திடீரென 18-ம் தேதி வெளியிடப்படும்' என அறிவித்தது. அதற்கு காரணம் 18-ம் தேதி, "பிரதோஷ' நாள் என்பதுதான். குறிப்பாக பிரதோஷ காலம் எனப்படும், மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் எந்த காரியம் செய்தாலும், அதில் ஏற்படும் தீமைகளை சிவன் ஏற்றுக்கொண்டு, நன்மைகளை மட்டும் உலகுக்கு வழங்குவார் என்பது ஜதீகம்.
அதன்படி தி.மு.க., தலைவர் கருணாநிதி, பிரதோஷ காலமான மாலை 5.30 மணிக்கு பட்டியலை வெளியிட துவங்கினார். பவுர்ணமி அன்று செய்யப்படும் எந்த காரியமும் தோல்வியடைவதில்லை என்பது சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஊறிப் போனவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப மார்ச் 19-ம் தேதி பவுர்ணமி நாள் என்பதால், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியானது.
.
அடுத்ததாக அவர் வரும், 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக பிரசாரத்தை, தன் சொந்த, போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் துவக்குகிறார். அன்றும் விஷேசமான நாள்தான். பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி நாள் என்பர். அன்று துவக்கும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பது ஐதீகம். அதனால்தான் முதல்வர் கருணாநிதி, 23-ம் தேதி பிரசாரத்தை துவக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதற்கு பின், மார்ச் 24-ம் தேதி பஞ்சமி. பஞ்சமி திதியில் செய்யப்படும் எந்த காரியமும் நன்மையை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவும் பவுர்ணமிக்கு பின் வரும் பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என்றாலும், அன்றுவரை, நவக்கிரகங்களில் சந்திரன் பலமாக இருப்பார். சந்திரன் பலமாக இருக்கும்போது செய்யும் செயல்கள், செய்பவருக்கு பலமாகவும்,
சாதகமாகவும் இருக்கும் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட பஞ்சமி நாளில், நல்ல நேரமான காலை 10 முதல் 11.30 மணிக்குள்தான், முதல்வர் கருணாநிதி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு, அதற்கேற்ப பணிகள் நடந்து வருகிறது.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று காலையில் 'தினமலர்' பத்திரிகையில் படித்த ஒரு செய்தி இது. படித்தவுடன் ஏனோ பட்டென்று எழுதத் தோன்றியது. எழுதிவிட்டேன்..!
பகுத்தறிவு பிரசாரம் செய்யும் தி.மு.க., நாள், நட்சத்திரம் பார்த்துதான் அனைத்து காரியங்களையும் செய்து வருகிறது.
"தி.மு.க., வேட்பாளர் பட்டியல், மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என, கூறிய தி.மு.க., தலைமை, திடீரென 18-ம் தேதி வெளியிடப்படும்' என அறிவித்தது. அதற்கு காரணம் 18-ம் தேதி, "பிரதோஷ' நாள் என்பதுதான். குறிப்பாக பிரதோஷ காலம் எனப்படும், மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் எந்த காரியம் செய்தாலும், அதில் ஏற்படும் தீமைகளை சிவன் ஏற்றுக்கொண்டு, நன்மைகளை மட்டும் உலகுக்கு வழங்குவார் என்பது ஜதீகம்.
அதன்படி தி.மு.க., தலைவர் கருணாநிதி, பிரதோஷ காலமான மாலை 5.30 மணிக்கு பட்டியலை வெளியிட துவங்கினார். பவுர்ணமி அன்று செய்யப்படும் எந்த காரியமும் தோல்வியடைவதில்லை என்பது சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஊறிப் போனவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப மார்ச் 19-ம் தேதி பவுர்ணமி நாள் என்பதால், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியானது.
.
அடுத்ததாக அவர் வரும், 23-ம் தேதி அதிகாரப்பூர்வமாக பிரசாரத்தை, தன் சொந்த, போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் துவக்குகிறார். அன்றும் விஷேசமான நாள்தான். பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி நாள் என்பர். அன்று துவக்கும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பது ஐதீகம். அதனால்தான் முதல்வர் கருணாநிதி, 23-ம் தேதி பிரசாரத்தை துவக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதற்கு பின், மார்ச் 24-ம் தேதி பஞ்சமி. பஞ்சமி திதியில் செய்யப்படும் எந்த காரியமும் நன்மையை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவும் பவுர்ணமிக்கு பின் வரும் பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என்றாலும், அன்றுவரை, நவக்கிரகங்களில் சந்திரன் பலமாக இருப்பார். சந்திரன் பலமாக இருக்கும்போது செய்யும் செயல்கள், செய்பவருக்கு பலமாகவும்,
சாதகமாகவும் இருக்கும் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட பஞ்சமி நாளில், நல்ல நேரமான காலை 10 முதல் 11.30 மணிக்குள்தான், முதல்வர் கருணாநிதி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு, அதற்கேற்ப பணிகள் நடந்து வருகிறது.
இனி நான்...!
தி.மு.க. தலைவரின் மஞ்சள் துண்டு மகிமையைப் பற்றிச் சொல்லும்போது நம்பிக்கை என்று ஒரு வார்த்தையில் சொல்லி ஒதுக்குகிறார்கள் உடன்பிறப்புக்கள். அதேபோல் அவரவர் பக்தி கொள்கையையும் அவரவர் நம்பிக்கை என்று எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதானே என்று கேட்டால் தங்கள் வாயைப் பொத்திக் கொண்டு ஓடுகிறார்கள்..!
ஆதிசங்கர் என்ற கட்சியின் எம்.எல்.ஏ. தனக்கான நம்பிக்கையில் தன் நெற்றியில் தானே பொட்டு வைத்துக் கொண்டதற்கு கவிதை பாடி திட்டித் தீர்த்த கருணாநிதிக்கு, தனதருமை துணைவியார் சந்திரன் சைஸுக்கு பொட்டு வைத்திருப்பதை வருடக்கணக்கில் பார்த்தும் கவிதை எழுத தைரியம் வரவில்லை..
பெரியகருப்பன் என்ற எம்.எல்.ஏ.வின் பக்தி பரவசத்தைப் பார்த்தவுடன் அவரைத்தான் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்கிற தீர்மானம் தன் மனதுக்குள் உதித்ததாகச் சொல்லும் கருணாநிதிக்கு, ஆதிசங்கரின் பொட்டு ஏன் அந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கவில்லை..?
நாத்திகத்தை பகலவன் பெரியாரிடம் இருந்து கற்றுக் கொண்டவன் என்று வருடக்கணக்காக ரீல் விட்டு வரும் தாத்தா, மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்ததில் இருந்து தனது வாழ்க்கையையே ஜோதிட, ஆன்மீக அடிப்படையில் மாற்றிக் கொண்டுவிட்டார். ஆனாலும் இன்னமும் பெரியாரைவிட மனமில்லாமல் அவரது வழித்தோன்றலாக தன்னைக் காட்டிக் கொள்கிறார்..!
புட்டபர்த்தி சாய்பாபாவின் லீலைகள் என்று சொல்லி தனிப் பிரச்சாரமே செய்து வரும் திராவிடர் கழகத்தின் வாரிசான இந்த திராவிடக் கொழுந்துதான், அதே சாய்பாபாவை தனது வீட்டுக்கு அழைத்து, தனது மனைவியை அவர் காலில் விழச் செய்து, தனது மந்திரி பிரதானிகளுக்கு அருள் பாலிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இத்தனையும் செய்துவிட்டு இன்னமும் நா கூசாமல் தான் பெரியாரின் பாசறையில் பகுத்தறிவு பயின்றவன் என்று கதை கட்டி வருகிறார்..!
தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாது, தி.மு.க. கட்சியின் செயல்பாடுகளைக்கூட நாத்திக கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு வடிவமைத்துக் கொண்ட கருணாநிதிக்கு நாத்திகம் பேசவோ, பெரியார் புகுத்திய பகுத்தறிவு பற்றிப் பேசவோ என்ன தகுதி இருக்கிறது..? அந்தத் தகுதி நிச்சயம் எனக்குமில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் இப்படியொரு கேள்வியை கருணாநிதியிடம் கேட்க எனக்குத் தகுதியுண்டு..! ஏனெனில் நான் வெளிப்படையான ஆத்திகன்..!
தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்லாது, தி.மு.க. கட்சியின் செயல்பாடுகளைக்கூட நாத்திக கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு வடிவமைத்துக் கொண்ட கருணாநிதிக்கு நாத்திகம் பேசவோ, பெரியார் புகுத்திய பகுத்தறிவு பற்றிப் பேசவோ என்ன தகுதி இருக்கிறது..? அந்தத் தகுதி நிச்சயம் எனக்குமில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் இப்படியொரு கேள்வியை கருணாநிதியிடம் கேட்க எனக்குத் தகுதியுண்டு..! ஏனெனில் நான் வெளிப்படையான ஆத்திகன்..!
|
Tweet |
61 comments:
என்னண்ணே, கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலைக்குப் போய் அடிப்பிரதட்சணம் செய்தது, திருவேற்காடு போனது என்று இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய சங்கதி நிறைய மிச்சமிருக்கே? :-)
இன்னும் தலீவரு பெரியார் வழியைத்தான் கடைபிடிக்கிறாருன்னு நம்புற தொண்டன்தான் பாவம்! :-)
அய்யா சரவணா, இதெல்லாம் ஒரு மேட்டரு? அதுவும் இந்த தினமலம் சொல்றத வெச்சு நீங்க கேக்குறீங்க?
ஜெயா செஞ்சா, சமாதானம்.
கலைஞர் செஞ்சா, பணிந்தார்.
அடப் போங்க சார், தினமலம், சீனியர் சீடன், தினசனி,தி ஜந்து இவனுங்கெல்லாம் சொல்லாறனுங்கன்னு வெளிய சொல்லாதீங்க.
அப்பட்டமா ஒன்சைடு வாங்றது, எங்கூறு முனியாண்டிக்கே தெரியுது.
இன்னும் நல்லா முயற்சி பண்ணுங்க.
இவர்களுக்கு பெரியாரும் காசுக்காக தான், கடவுளும் காசுக்காக தான்.. ஆட்சியும் அதிகாரமும் போய்விடாமல் இருக்க ஒரு பக்கம் பெரியாரை நம்புகிறார்கள் மற்றொரு பக்கம் கடவுளை நம்புகிறார்கள் அவ்ளோ தான்...
அண்ணே, இவரைப் பத்தி தெரியாதா ? இவரோட டுபாக்கூர் கதை எல்லாம் , மஞ்ச துண்டு போடறதுக்கு முன்னாடி இப்ப இல்லை
"VJR said...
சந்தேகம்;1.
ஊழல் பற்றிப் பேச ஜெயாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
சந்தேகம்;2.
ஊழல் பற்றிப் பேச ஜெயா விசுவாசிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?"
ஆமா..ஆமா.. இது இரண்டையும் செய்வதற்க்குதான் ஒரு குட்டி தமிழகமே அவர் குடும்பமாய் இருக்கே.. அவுக மட்டும்தான் செய்வாக!!
நண்பா் VJR, பதிவை ஒழுங்காக படித்தீா்களா?? பதிவின் பேசுபொருள் என்ன என்பதை விளங்காமல் கலைஞரைப்பற்றி ஜல்லியடிக்கிறீா்களே. ஒழுங்கா படித்து கருத்து சொல்லுங்கோ ராஜா
கருணநிதிக்கும் நாத்திகத்துக்கும் என்ன ’சம்பந்தம்’?
24ம் தேதி 11 மணி முதல் 1 மணிக்குள் வேட்புமணு தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்கிறவர்களும் திராவிட என்ற பெயரோடு தான் கட்சி நடத்துகிறார்கள்.
பெரியார் நினைவு நாளன்று பெரியார் படத்துக்கு மாலை போட்டு கற்பூரம் காட்டியவர்களும் திராவிட என்ற பெயரோடு தான் கட்சி நடத்துகிறார்கள்.
குறைந்தபட்சம் இது குறித்த குற்ற உணர்வுள்ள கட்சி திமுக என்ற வகையில் அதனைச் சகித்துக் கொள்ளலாம். மற்றபடி பகுத்தறிவு என்ற அளவுகோலின்படி இவர்கள் அனைவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இன்னா தல நீங்க இவ்வளோ அப்பாவியா ? கருணாநிதி பேச்சையெல்லாம் சீரியஸா எடுத்துக்குவீன்களா என்ன ? அவரு ஏதோ "வேலைக்காகாத" அரசு ஊழியனுங்களுக்காக ஏதோ பேசிகிட்டு இருப்பார். அதுக்கெல்லாம் ஒரு பதிவ போட்டு .... போங்க ..போங்க ... போய் ... குழந்தைக்காக நல்ல கார்ட்டூன் படத்த டவுன்லோட் பண்ற வேலைய பாருங்க.
//VJR said...
சந்தேகம்;1.
ஊழல் பற்றிப் பேச ஜெயாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
சந்தேகம்;2.
ஊழல் பற்றிப் பேச ஜெயா விசுவாசிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?
//
எலுமிச்சை ... எலுமிச்சை ... பழத்த வாங்கி நல்லா தேச்சி .. ஒரு நாளைக்கு ரெண்டு வேல குளிச்சா ... கேள்விக்கு தானே பதில கண்டுபிடிக்கலாம்.
ஆமாம் நண்பர்களே, வைகோ தெளிவாக விளக்கிவிட்டார்.
எனக்கும் புரிந்துவிட்டது. கலைஞர் நாத்திகம் பேசக்கூடாது.
ஜெயா மட்டும் நாலு யானையை நாலு கோவிலுக்கு அனுப்பலாம்.
எஞ்சாய் மக்கள்ஸ்.
இந்த VJR ன்ற உடன்பிறப்பு (அல்லகை), திமுக தனியே நின்றாலும் மகுடம் சூடிக்கொள்ளும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்னால் திருவாய் மலர்ந்துள்ளார். ஆனால் பாவம் அவர் தலைவரோ காங்கிரஸுக்காக அவர்களின் பூ... ச்சீ தப்பா நினைக்ககூடாது. பூட்ஸை நக்கி உறவு வைத்து கொண்டுள்ளார். இவரின் கருத்தையெல்லாம் நான் சீரயஸா எடுக்கலாகாது.
உங்கள் பதிவுகள் மட்டும் அம்மாவின் பார்வைக்கு போயிருந்தால் நிச்சயமாக உங்களைத்தான் பெரியவருக்கு எதிராக நிறுத்த்தியிருப்பார்.
வட போச்சே! :)
ஆத்திகத்திற்கு மாறி விட்டதாய் வெளிப்படையாகச் சொல்ல முடிந்திருந்தால் சொல்லியிருப்பாரே! கொள்கைகளை மெயின்டைன் செய்ய வேண்டும்! இல்லையென்றால், அண்ணன் தம்பியை - அப்பாவே ராவணன், கும்பகர்ணன் போல இருக்கட்டும் என்று வாழ்த்துவாரா?!!
பெரியார், பகுத்தறிவு, இதெல்லாம் தொண்டனுக்கு மறந்து போச்சுப்பா... எல்லாமே நம்பிக்கைதான்.... யார் கண்டா, தினமும் சாமியை நினச்சுட்டுதான் மஞ்சள் துண்ட தோள்-ல மாட்டிகிறாரோ..என்னவோ
ஏமாற மக்கள் இருக்கும் வரை ஏமாற்ற தயாராக ஒரு கூட்டம் இருக்கிறது. நம் நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா. வெட்கமாகவும்,வே தனையாகவும்,கவலை யாகவும் இருக்கிறது. ஏழை மேலும் ஏழையாகிறான்.பணம் படைத்தவன் மேலும் பணத்த பெருக்கிக் கொண்டிருக்கிறான ். கல்வியும்,மருத் துவமும் வியாபாரமாக ஆகி விட்ட பின் மக்கள் சிந்திக்க முடியாமல் இலவசம் என்ற போதையில் மூழ்கிக் கிடக்கின்றான்ர் .
தினமும் எதாச்சும் நல்ல நாள்கேட்ட நாள் வந்துகிட்டே தான் இருக்கும், அதுக்காகக ஒரு ஜோசியக்காரனை வேலைக்கு அமர்த்தி எல்லா விதத்திலும் கெட்ட நாளா வரட்டும் என்று பார்க்கச் சொல்லி அன்றைக்கு வேட்பாளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல் என்று செய்து கொண்டிருக்க முடியுமா?? விவ்வேளிக்கு அனுப்பப் படும் ராக்கெட்டை ISRO தள்ளிப் போடுது, அமேரிக்கா டிஸ்கவரி விண்கலத்தை எப்போ அனுப்புவது என்று முடிவு செய்த பின் தள்ளிப் போடுது, நாங்கள் மட்டும் வேட்பாளர் வெளியீட்டை ஒரு தள்ளிப் போடக் கூடாதா? நல்ல நாள் பார்ப்பது உண்மை என்றால் முதலிலேயே பார்த்திருக்க மாட்டோமா? அவரவர் விருப்பத்திற்க்கேற்றவாறு வானத் துண்டு கூட போட்டுக் கொள்ள உரிமை இல்லியா? சாய் பாபாவை ஜனாதிபதி உட்பட எல்லோரும் அவரது ஆசிரமத்திற்கு சென்று தான் பார்த்தார்கள், ஆனால் அவரே தேடி வந்து பார்த்த ஒரே ஒரு VIP தாத்தா மட்டும்தான். உங்களுக்கு அவர் சாமியார், கடவுளாக இருக்கலாம், ஆனால் தாத்தாவைப் பொறுத்தவரை ஒரு இந்தியப் பிரஜையாகத்தான் அவரைப் பார்த்தார்.அவரைச் சந்தித்தது தமிழகத்திற்கு கூவம் ஆற்றை சுத்தப் படுத்த, கிருஷ்ணா நதி நீர் கால்வாய் தோண்ட என்று நிதி உதவி கிடைக்குமா என்று முயற்சிக்கத்தான். தாத்தாவோட துணைவியார், சாரி இணைவியார் ஏதோ வயசானவர் வீட்டுக்கு வந்திருக்காரேன்னு சொல்லி மரியாதை நிமித்தம் காலைத் தொட்டு வணகினார். மேலும் பெண்கள் நகை போடுவது, சிகை அலங்காரம் பண்ணுவது கண் மை வைத்துக் கொள்வது எல்லாம் தங்களது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள. அந்த மாதிரி COSMETIC REASONS களுக்குக்காக போட்டு வைத்தால் தப்பா? அப்படியே அவர் கோவிலுக்குச் சென்று சாமியே கும்பிட்டாலும் அது அவரது தனி மனித உரிமை அல்லவா, அதற்க்கு தாத்தா மதிப்பு கொடுக்க வேண்டுமல்லவா? தனது கொள்கையை யார் மீதும் திணிக்காமல் சுதந்திரம் கொடுக்கும் வள்ளல் என்பதற்கு இதை விட வேறு உதாரணமும் வேண்டுமா? [தாத்தா பேச்சிப் படிச்சு படிச்சு நானும் இப்படி ஆயிட்டேன்..அவ்................]
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே..நீ நதி போல ஓடிக்கொண்டிரு..!!
தினமலம் போடற செய்திய வெச்சு.. அட போப்பா தமிழா.
naal natchatthira kanakkup paartthaal ellaa naalilum aethaavathu oru vishayam undu. nalla kaariyamae nadakkaatha aadi maadhatthil kooda naalaindhu nalla naal kandu piditthullavan thamizhan. enavae aarokkiya vimarsanam seyyungal. maelae sonnadhellaam endha naalil nadandhaalum sollappadum.
Sir so much of hatred against kalainagar( is it his caste)if u analsye correctly and unbaised you must appreciated that in state govt you cannot pointout corruption
[[[சேட்டைக்காரன் said...
என்னண்ணே, கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலைக்குப் போய் அடிப்பிரதட்சணம் செய்தது, திருவேற்காடு போனது என்று இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய சங்கதி நிறைய மிச்சமிருக்கே?:-) இன்னும் தலீவரு பெரியார் வழியைத்தான் கடைபிடிக்கிறாருன்னு நம்புற தொண்டன்தான் பாவம்! :-)]]]
ஐயோ பாவம் அந்த அப்பாவித் தொண்டர்கள்..!
mr.ராஜரத்தினம் அதிமுக நல்லக் கையாம், இப்பயும் சொல்றேன், ஜெயாவின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், எனக்கு வராது. அதுக்குப்பேர் அல்லக்கையின்னா, ஜெயாவை நம்பும் நீங்கள் எடுப்புக்கையா?
உங்களுக்கும் இருக்கும் நம்பிக்கைப்போல், எனக்கும் ஒரு நம்பிக்கை ஒரு அரசியல், தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசும் முரட்டுத்தனம் செய்ய வேண்டாம்.
தனிப்பட்ட முறையில் பேச ஆசைப்பட்டால், sganeshmurugan@gmail.com தொடர்புகொள்ளுங்கள்.
[[[VJR said...
அய்யா சரவணா, இதெல்லாம் ஒரு மேட்டரு? அதுவும் இந்த தினமலம் சொல்றத வெச்சு நீங்க கேக்குறீங்க?
ஜெயா செஞ்சா, சமாதானம்.
கலைஞர் செஞ்சா, பணிந்தார்.
அடப் போங்க சார், தினமலம், சீனியர் சீடன், தினசனி, தி ஜந்து இவனுங்கெல்லாம் சொல்லாறனுங்கன்னு வெளிய சொல்லாதீங்க. அப்பட்டமா ஒன்சைடு வாங்றது, எங்கூறு முனியாண்டிக்கே தெரியுது. இன்னும் நல்லா முயற்சி பண்ணுங்க.]]]
ஆமாமாம்.. இதே தினமலமும், சீனியர் சீடனும், தினசனியும், தி ஐந்துவும் உங்க ஐயாவை வாழ்த்துப்பா பாடிவிட்டால் உடனேயே முரசொலியில் எடுத்துப் போட்டு புளகாங்கிதம் அடைகிறாரே.. அப்போ தெரியலையாக்கும் இது தினமலம் என்று..! இன்னும் எத்தனை நாளைக்கு இதைச் சொல்லியே எங்களை ஏமாத்துவீங்க..?
[[[VJR said...
சந்தேகம்;1.
ஊழல் பற்றிப் பேச ஜெயாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?]]]
ஒரு தகுதியும் இல்லை..!
சந்தேகம்;2.
ஊழல் பற்றிப் பேச ஜெயா விசுவாசிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?]]]
ஒரு தகுதியும் இல்லை. இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்..?
[[[குழலி / Kuzhali said...
இவர்களுக்கு பெரியாரும் காசுக்காகதான், கடவுளும் காசுக்காகதான்.. ஆட்சியும் அதிகாரமும் போய்விடாமல் இருக்க ஒரு பக்கம் பெரியாரை நம்புகிறார்கள். மற்றொரு பக்கம் கடவுளை நம்புகிறார்கள் அவ்ளோதான்...]]]
ஆனாலும் தாங்கள் நாத்திகர்கள் என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்களே.. இதுதான் சகிக்கவில்லை..!
\\you must appreciated that in state govt you cannot pointout corruption\\ ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..
ஐயோ அப்பா, வயிறு வலிக்குதுப்பா, யாராச்சும் கொஞ்சம் சோடா இருந்தா குடுங்கப்பா....
[[[எல் கே said...
அண்ணே, இவரைப் பத்தி தெரியாதா? இவரோட டுபாக்கூர் கதை எல்லாம், மஞ்ச துண்டு போடறதுக்கு முன்னாடி இப்ப இல்லை.]]]
மஞ்சள் துண்டு அணிவது பற்றிக் கேட்டபோது மாதத்துக்கு ஒரு கதைவிட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது..!
[[[Rafeek said...
"VJR said...
சந்தேகம்;1.
ஊழல் பற்றிப் பேச ஜெயாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
சந்தேகம்;2.
ஊழல் பற்றிப் பேச ஜெயா விசுவாசிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?"
ஆமா.. ஆமா.. இது இரண்டையும் செய்வதற்க்குதான் ஒரு குட்டி தமிழகமே அவர் குடும்பமாய் இருக்கே.. அவுக மட்டும்தான் செய்வாக!!]]]
ரபீக்.. அவுக குடும்பம் இன்னும் இந்த அளவுக்கு மனசாட்சி உள்ளவங்களா இல்லை..!
[[[anban said...
நண்பா் VJR, பதிவை ஒழுங்காக படித்தீா்களா?? பதிவின் பேசுபொருள் என்ன என்பதை விளங்காமல் கலைஞரைப்பற்றி ஜல்லியடிக்கிறீா்களே. ஒழுங்கா படித்து கருத்து சொல்லுங்கோ ராஜா.]]]
தீவிரமான உடன்பிறப்பு போலும்.. அதுதான் கண்ணை மூடிக் கொண்டு தாத்தாவை ஆதரிக்கிறார்..!
[[[கே.ஆர்.பி.செந்தில் said...
கருணநிதிக்கும் நாத்திகத்துக்கும் என்ன ’சம்பந்தம்’?]]]
அது தெரியாமல்தான் நானும் கேட்டிருக்கிறேன் செந்தில்..!
[[[விஜய்கோபால்சாமி said...
24-ம் தேதி 11 மணி முதல் 1 மணிக்குள் வேட்புமணு தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்கிறவர்களும் திராவிட என்ற பெயரோடுதான் கட்சி நடத்துகிறார்கள்.
பெரியார் நினைவு நாளன்று பெரியார் படத்துக்கு மாலை போட்டு கற்பூரம் காட்டியவர்களும் திராவிட என்ற பெயரோடுதான் கட்சி நடத்துகிறார்கள்.
குறைந்தபட்சம் இது குறித்த குற்ற உணர்வுள்ள கட்சி திமுக என்றவகையில் அதனைச் சகித்துக் கொள்ளலாம். மற்றபடி பகுத்தறிவு என்ற அளவுகோலின்படி இவர்கள் அனைவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.]]]
நானும் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா ஒருபோதும் தான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டதில்லை..!
[[[அஹோரி said...
இன்னா தல நீங்க இவ்வளோ அப்பாவியா? கருணாநிதி பேச்சையெல்லாம் சீரியஸா எடுத்துக்குவீன்களா என்ன ? அவரு ஏதோ "வேலைக்காகாத" அரசு ஊழியனுங்களுக்காக ஏதோ பேசிகிட்டு இருப்பார். அதுக்கெல்லாம் ஒரு பதிவ போட்டு.... போங்க.. போங்க... போய்... குழந்தைக்காக நல்ல கார்ட்டூன் படத்த டவுன்லோட் பண்ற வேலைய பாருங்க.]]]
புள்ளை, குட்டிகள் இருந்தால் நான் ஏன் இங்க உக்காந்து இப்படி கும்மியடிச்சுக்கிட்டிருக்கேன்..?
[[[அஹோரி said...
//VJR said...
சந்தேகம்;1.
ஊழல் பற்றிப் பேச ஜெயாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
சந்தேகம்;2.
ஊழல் பற்றிப் பேச ஜெயா விசுவாசிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?//
எலுமிச்சை... எலுமிச்சை... பழத்த வாங்கி நல்லா தேச்சி.. ஒரு நாளைக்கு ரெண்டு வேல குளிச்சா... கேள்விக்கு தானே பதில கண்டுபிடிக்கலாம்.]]]
ஹா.. ஹா.. ஹா.. இந்தப் பதில் நெத்தியடியா இருக்கே..! நன்றிங்கோ அஹோரி..!
[[[VJR said...
ஆமாம் நண்பர்களே, வைகோ தெளிவாக விளக்கிவிட்டார்.
எனக்கும் புரிந்துவிட்டது. கலைஞர் நாத்திகம் பேசக்கூடாது.
ஜெயா மட்டும் நாலு யானையை நாலு கோவிலுக்கு அனுப்பலாம்.
எஞ்சாய் மக்கள்ஸ்.]]]
ஜெயலலிதா என்றைக்கு தான் நாத்திகர் என்று சொல்லியிருக்கிறார்..?
[[[ராஜரத்தினம் said...
இந்த VJR ன்ற உடன்பிறப்பு (அல்லகை), திமுக தனியே நின்றாலும் மகுடம் சூடிக் கொள்ளும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்னால் திருவாய் மலர்ந்துள்ளார். ஆனால் பாவம் அவர் தலைவரோ காங்கிரஸுக்காக அவர்களின் பூ... ச்சீ தப்பா நினைக்ககூடாது. பூட்ஸை நக்கி உறவு வைத்து கொண்டுள்ளார். இவரின் கருத்தையெல்லாம் நான் சீரயஸா எடுக்கலாகாது.]]]
ம்.. நான் இப்போதுதான் இவரைப் பற்றிய டீடெயிலை படிக்கிறேன்.. நல்லா பாலோ பண்றீங்கப்பா..!
[[[மு.சரவணக்குமார் said...
உங்கள் பதிவுகள் மட்டும் அம்மாவின் பார்வைக்கு போயிருந்தால் நிச்சயமாக உங்களைத்தான் பெரியவருக்கு எதிராக நிறுத்த்தியிருப்பார்.
வட போச்சே! :)]]]
அட நீங்க வேற.. என்னால ஒரு நாள்கூட அதிமுகல தொண்டனா இருக்க முடியாது. ஆனால் திமுகவில் இருந்துவிடுவேன்..!
[[[middleclassmadhavi said...
ஆத்திகத்திற்கு மாறி விட்டதாய் வெளிப்படையாகச் சொல்ல முடிந்திருந்தால் சொல்லியிருப்பாரே! கொள்கைகளை மெயின்டைன் செய்ய வேண்டும்! இல்லையென்றால், அண்ணன் தம்பியை - அப்பாவே ராவணன், கும்பகர்ணன் போல இருக்கட்டும் என்று வாழ்த்துவாரா?!!]]]
ஹா.. ஹா.. இதுவும் நல்லாவே இருக்கு..! நன்றிம்மா..!
[[[Ponchandar said...
பெரியார், பகுத்தறிவு, இதெல்லாம் தொண்டனுக்கு மறந்து போச்சுப்பா. எல்லாமே நம்பிக்கைதான். யார் கண்டா, தினமும் சாமியை நினச்சுட்டுதான் மஞ்சள் துண்ட தோள்-ல மாட்டிகிறாரோ. என்னவோ]]]
இருந்தாலும் இருக்கும். யார் கண்டது..?
[[[Indian Share Market said...
ஏமாற மக்கள் இருக்கும்வரை ஏமாற்ற தயாராக ஒரு கூட்டம் இருக்கிறது. நம் நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா. வெட்கமாகவும், வேதனையாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஏழை மேலும் ஏழையாகிறான். பணம் படைத்தவன் மேலும் பணத்த பெருக்கிக் கொண்டிருக்கிறான். கல்வியும், மருத்துவமும் வியாபாரமாக ஆகி விட்ட பின் மக்கள் சிந்திக்க முடியாமல் இலவசம் என்ற போதையில் மூழ்கிக் கிடக்கின்றான்ர்.]]]
மக்கள் திருந்தாதவரையில் இந்த அரசியல்வியாதிகளையும் திருத்த முடியாது..!
ஜெயதேவ்..
உடனே முரசொலிக்கு இதனை அனுப்பி வைங்க.. உங்களுக்கு அங்க வேலை கிடைச்சாலும் கிடைக்கும்..!
[[[! சிவகுமார் ! said...
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு..!!]]]
அவன் முருகன்தானே..?
[[[ராஜேஷ், திருச்சி said...
தினமலம் போடற செய்திய வெச்சு.. அட போப்பா தமிழா.]]]
அப்போ முரசொலில இதே மாதிரி போடச் சொல்லுங்க. அதை எடுத்துப் போடுறேன்..!
[[[faqirsulthan said...
naal natchatthira kanakkup paartthaal ellaa naalilum aethaavathu oru vishayam undu. nalla kaariyamae nadakkaatha aadi maadhatthil kooda naalaindhu nalla naal kandu piditthullavan thamizhan. enavae aarokkiya vimarsanam seyyungal. maelae sonnadhellaam endha naalil nadandhaalum sollappadum.]]]
ம்ஹும்.. முழுசா படிக்கவே இல்லையா..? படிச்சும் புரியலையா..? முருகா..!
[[[IT PROFESSIONAL ASSOCIATION said...
Sir so much of hatred against kalainagar( is it his caste)if u analsye correctly and unbaised you must appreciated that in state govt you cannot point out corruption.]]]
நன்கு ஆராய்ந்துதான் கலைஞர் மீதான எனது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறேன்.. வெற்று காழ்ப்புணர்வால் அல்ல..!
[[[Jayadev Das said...
\\you must appreciated that in state govt you cannot pointout corruption\\
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..
ஐயோ அப்பா, வயிறு வலிக்குதுப்பா, யாராச்சும் கொஞ்சம் சோடா இருந்தா குடுங்கப்பா....]]]
எனக்கும்தான்.. என்னா தெனாவெட்டா அடிச்சு விட்டிருக்காரு பாருங்க..!
\\ஜெயலலிதா என்றைக்கு தான் நாத்திகர் என்று சொல்லியிருக்கிறார்..? \\ கொள்கைக்காக வாழ்ந்தது பெரியாரோடு போச்சு. பெரியாரோட கொள்கைகளை பின்பற்றும் உண்மையான ஒரே தொண்டன் நாந்தான்னு சொல்லிக்கிட்டு தத்தா மஞ்சள் துண்டை போட்டுக்கிட்டு, சாராயக் கடையில் கல்லா கட்டுறார். இந்தம்மா கோவில் குளம், ஜோசியக் காரன், கேரளாக்கார மாந்திரிகர் என்று அவர்கள் சொன்னதுக்கெல்லாம் ஆடும் போம்மையாயிட்டார். தி.க. வின் இன்றைய தலைவர், கட்சியின் சொத்துக்களை தனக்குப் பின் தனது வாரிசே அனுபவிக்க வேண்டுமென்று தத்தா மாதிரியே, இவரும் தனது மகனை அடுத்த தலைவராக்கப் போறார். ஆக எல்லோருமே ஒரு கொள்கையில் மட்டும் கெட்டியா இருக்காங்க, அது கொள்ளையடிக்கிறது, அந்த பணத்துல சுகமா வாழ்வது, மக்களை குட்டிச் சுவராக்குவது...... தமிழனுக்கு எப்ப விடியுமோ தெரியல.
[[[VJR said...
mr.ராஜரத்தினம் அதிமுக நல்ல கையாம், இப்பயும் சொல்றேன், ஜெயாவின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், எனக்கு வராது. அதுக்குப்பேர் அல்லக்கையின்னா, ஜெயாவை நம்பும் நீங்கள் எடுப்புக்கையா?
உங்களுக்கும் இருக்கும் நம்பிக்கைப்போல், எனக்கும் ஒரு நம்பிக்கை ஒரு அரசியல், தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசும் முரட்டுத்தனம் செய்ய வேண்டாம்.
தனிப்பட்ட முறையில் பேச ஆசைப்பட்டால், sganeshmurugan@gmail.com தொடர்பு கொள்ளுங்கள்.]]]
அல்லக்கை என்கிற வார்த்தை இணையத்தில் தீவிர ஆதரவாளர் என்கிற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. இது தகுதிக் குறைவானதோ, தாழ்ந்த சொல்லோ இல்லை நண்பரே.. இருந்தாலும் அவர் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..! மன்னியுங்கள்..!
சரவணன், என்னை மறந்தாச்சா? நான் v.r.jeyaraman பையன் சதீஸோட ஃப்ரெண்ட். ஒங்களுக்கு ஞாபகம் இருக்குமுன்னு பேசிகிட்டு இருக்கேன்.
anyway, எல்லாமே அரசியல், தனிப்பட்ட காழ்ப்பு எதுவுமில்லை. ஜெயராமனுக்காக ஓடிய காலமும் உண்டு.
[[[VJR said...
சரவணன், என்னை மறந்தாச்சா? நான் v.r.jeyaraman பையன் சதீஸோட ஃப்ரெண்ட். ஒங்களுக்கு ஞாபகம் இருக்குமுன்னு பேசிகிட்டு இருக்கேன்.]]]
ஓ.. நீங்களா..? எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பார்த்து..!? பை தி பை.. இது சாதாரணமான ஒரு கருத்துப் பரிமாற்றம்தான்..! விட்ருங்க..
[[[anyway, எல்லாமே அரசியல், தனிப்பட்ட காழ்ப்பு எதுவுமில்லை. ஜெயராமனுக்காக ஓடிய காலமும் உண்டு.]]]
இது போன்ற சலிப்புணர்வு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இருவருக்குமே உண்டு..!
வாழ்க வளமுடன்.. இனிமேல் உங்களை நியாபகம் வைத்துக் கொள்கிறேன்..!
Hellow Mr VJR,
சரிங்க... நீங்க நல்லகையாகவே இருங்கள். உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் நம்பும் தலைவர் உங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நடந்தாரா என்பதை கடந்த 1989 முதல் 2009 (2011ஐ விட்டுவிடுபவோம் உங்களை வேதனை படுத்த விரும்பவில்லை) வரை நடந்த தேர்தலின் வெற்றிகளுக்காக எப்படியெல்லாம் தன் கொள்கைகளையும் தன் மதிப்பையும் அழித்துக் கொண்டார் என்பதையும், அதே தேர்தல்களில் கடுமையான் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளானபோதும் கூட ஜெயலலிதாவின் தேர்தல் கூட்டுகளையும் அதனால் அவர் இழந்தவைகளையும் பற்றியும் தெளிவு வருமேயானால் யாரின் அல்லகையாக இருப்பது என்ற தெளிவும் உங்களுக்கு வரும். உங்கள் தலைவர் பதவிக்காக, பணத்துக்காக எதை எல்லாம் இழந்தார் என்பதை நீரா ராடியா டேப் ஒன்றே சொல்லிவிடும்.
அட்ரா...அட்ரா....அட்ரா சக்கை....
சூப்பர்...
மஞ்சள் துண்டு மைனர் சமயத்திற்கு தக்கவாறு மாற்றி பேசுவதில் வல்லவர்..
ஆனா, அவரை தான் ஒலகம் இன்னமும் நம்பிட்டு இருக்கு...
இத்தனைக்கும் ”தல”க்கு நல்ல புத்தி வரணும்னு அவிய்ங்க வூட்டுக்காரய்ங்க எல்லா கோவிலுக்கு போயி வேண்டிட்டு வாராய்ங்க....
அன்பின் சரவணன்,
கருணாநிதி...
ஒரு ஆத்திகவாதியும் இல்லை
நாத்திகவாதியும் இல்லை
சனாதனவாதியும் இல்லை
பகுத்தறிவு வாதியும் இல்லை
பிராமண விரும்பியும் இல்லை
பார்பன துவேஷியும் இல்லை
ராஜாஜியும் இல்லை
காமராஜரும் இல்லை
பெரியாரும் இல்லை
ஜனநாயகவாதியும் இல்லை
சர்வாதிகாரியும் இல்லை
பின் யார்தான் அவர்?
அரசியலை வியாபாரமாக்கி
தந்திரமாக மக்களை ஏமாற்றி
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
அவர்களிடமே மூலதனம் பெற்று
வியாபாரம் செய்து
பணம் சேர்க்கும்
ஒரு கைதேர்ந்த வியாபாரி.
இருக்கும்பொழுது வாழ நினைப்பவர்!
இறந்தபின் வாழ அவருக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை!!.
90வயதில் அவர் நிகழ்த்தும் சாகசங்களை முறியடிக்க,
நம்மிடம் 45 வயதில் கூட போட்டியாளர் இல்லை என்பதுதான் நிதர்சனம்
ஒருவன் எல்லோரையும் சில காலங்களுக்கும், சிலரை எப்பொழுதும் ஏமாற்ற முடியலாம்;ஆனால் அவனால்
எல்லோரையும்,எப்பொழுதும்,ஏமாற்ற
இயலாது!!... என்றார் ஆப்ரஹாம் லிங்கன்
ஒருவன் எல்லோரையும் சில காலங்களுக்கும், சிலரை எப்பொழுதும் ஏமாற்ற முடிந்தால் அதுவே போதுமானது !!... என்கிறார் நம் மு.க.
நாம் விரும்பியது நிகழும் போது நாம் மகிழலாம்
ஆனால்
நாம் விரும்பாதது நிகழும் போது நாம் சிந்திக்க வேண்டும்
வருத்தப்படுவதிலோ,
கோபப்படுவதிலோ
பயனில்லை
[[[ராஜரத்தினம் said...
உங்கள் தலைவர் பதவிக்காக, பணத்துக்காக எதை எல்லாம் இழந்தார் என்பதை நீரா ராடியா டேப் ஒன்றே சொல்லிவிடும்.]]]
மறுக்க முடியாத வாதம்..! நன்றி ராஜரத்தினம்..!
[[[R.Gopi said...
அட்ரா...அட்ரா....அட்ரா சக்கை....
சூப்பர்... மஞ்சள் துண்டு மைனர் சமயத்திற்கு தக்கவாறு மாற்றி பேசுவதில் வல்லவர். ஆனா, அவரைதான் ஒலகம் இன்னமும் நம்பிட்டு இருக்கு. இத்தனைக்கும் ”தல”க்கு நல்ல புத்தி வரணும்னு அவிய்ங்க வூட்டுக்காரய்ங்க எல்லா கோவிலுக்கு போயி வேண்டிட்டு வாராய்ங்க.]]]
-)))))))))))))))
தோழர் கண்பத்..
அசரடிக்கிறீங்க.. சபாஷ்.. பாராட்டுக்கள்.. தாத்தா மேல பாசமா இருக்கிறதுல என்கூட போட்டிபோட நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு..!
//உண்மைத்தமிழன் said...
[[[! சிவகுமார் ! said...
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு..!!]]]
அவன் முருகன்தானே..?//
சந்தேகமே இல்லை சார்
[[[! சிவகுமார் ! said...
//உண்மைத்தமிழன் said...
[[[! சிவகுமார் ! said...
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு..!!]]]
அவன் முருகன்தானே..?//
சந்தேகமே இல்லை சார்.]]]
நன்றி முருகா..!
நான் ஏதோ 'நாகரிகம் பற்றி ' என்று நினைத்தேன். அதுவும்தானே?!!!
en peru stalin annae.
onnu note pannanae... pavurnami andru seithal... prathosham andru seithal... nu ellamey seithal nadakkumnu sollitaanganae..
itha naan ue pannikurenae.. tanks annae!
Post a Comment