பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!

02-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இன்றைய ஜூனியர் விகடனைப் புரட்டியவுடன் முதல் பக்கத்தில் பட்டது இந்தக் கவிதை..!

விமர்சனங்கள் பலவற்றைத் எதிர்கொள்ளவேண்டிய தருணத்திலும், களத்திலும் கவிஞர் வாலி தற்போது இருந்தாலும், மனிதரிடம் தமிழ் என்னமாய் விளையாடுகிறது..!

மீண்டும், மீண்டும் படிக்க வைத்தது வாலியின் தமிழ்..! பாடுபொருளின் ஒரு பகுதியை மட்டுமே செப்பியிருக்கும் வாலி, பழியை ஏற்றுக் கொண்ட பாவத்தின் மீதியையும் இதேபோல் தன் வாழ்நாளுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..!


சொல்லைக் கல்லாக்கி.. கவிதையைக் கவண் ஆக்கி.. வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது..

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

* * * * *

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

* * * * *

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

* * * * *

இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

* * * * *

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

* * * * *

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!

நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011



60 comments:

Unknown said...

//இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!//

வாலி வாலிதான்.

ரிஷி said...

யாரென்று சொல்லாவிட்டாலும் சொற்பிரயோகங்களை வைத்தே வாலி என அடையாளங்கண்டு விடலாம். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தது வாலியின் நடை.

Anonymous said...

பல கவிகளைக் கண்ட செந்தமிழ்நாட்டிலே இப்படி அருமையான கவிதகளைத் தரும் வாலிக்கு ! '' சோற்றுக்கு கவிபாடினார் '' என்றப் பட்டத்தை வழங்கி சிறப்பிக்கின்றோம் !!!

சமுத்ரா said...

வாலியின் அருமையான கவிதையை வெளியிட்டதற்கு நன்றிகள்..

pichaikaaran said...

beatiful poem..

but what happened u ?

why u r not writing lengthy entries...

not a days mostly u r doing cut and paste only..

why? whats problem ?

this poem is good... u could have write shared thoughts also ..

a said...

பகிர்விற்க்கு நன்றி...
வாலியின் வலி வரிகள்..

Indian Share Market said...

ராஜராஜனால் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கி, தமிழர்களை காப்பாற்ற படை நடத்தி சென்று, வெற்றியுடன் திரும்பிய சோழர்படை இளவல் இளங்கோவேளைப் போன்ற வீரமிகு தன்மானத் தமிழனை பெற்றெடுத்த தாயே! உன் பாதங்களில் எங்கள் கண்ணீரைத்தான் எம்மால் காணிக்கையாக்க முடிகிறது.

JEE creative corner said...

நெகிழ்ச்சியான கவிதை...மனது வலிக்கிறது ...இனமானமற்ற தமிழ்நாட்டில் இயலாமையில் இருந்து விட்டதை எண்ணி நெஞ்சம் கொதிக்கிறது!

vasu balaji said...

/மாமனிதனின்
பிதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;/

உ.த. அண்ணே. இங்க பிதா தப்பில்லையோ? மாதாதானெ சரி?

உண்மைத்தமிழன் said...

[[[கலாநேசன் said...

//இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!//

வாலி வாலிதான்.]]]

என்ன செய்தும் வாலி சுடுகிறாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
யாரென்று சொல்லாவிட்டாலும் சொற்பிரயோகங்களை வைத்தே வாலி என அடையாளங்கண்டு விடலாம். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தது வாலியின் நடை.]]]

அடுக்கு மொழிச் சொற்களே காட்டிக் கொடுத்துவிடும்..! இது வாலியின் தனிச் சிறப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[இக்பால் செல்வன் said...
பல கவிகளைக் கண்ட செந்தமிழ் நாட்டிலே இப்படி அருமையான கவிதகளைத் தரும் வாலிக்கு! ''சோற்றுக்கு கவி பாடினார்'' என்ற பட்டத்தை வழங்கி சிறப்பிக்கின்றோம் !!!]]]

உண்மையும் இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சமுத்ரா said...
வாலியின் அருமையான கவிதையை வெளியிட்டதற்கு நன்றிகள்.]]]

வருகைக்கு நன்றி சமுத்ரா..!

உண்மைத்தமிழன் said...

பார்வையாளன் said...

beatiful poem.. but what happened u? why u r not writing lengthy entries. not a days mostly u r doing cut and paste only. why? whats problem ?
this poem is good... u could have write shared thoughts also..]]]

எழுதலாம் பார்வை.. அதுவரைக்கும் நல்ல விஷயங்களையெல்லாம் கொண்டு போய் சேர்த்திருவோமே..? நாம என்ன எங்கயாவது ஓடியா போயிருவோம்.. மெதுவா கூட எழுதிக்கலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
பகிர்விற்க்கு நன்றி. வாலியின் வலி வரிகள்..]]]

யோகேஷ்.. ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க..? என்னாச்சு..?

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
ராஜராஜனால் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கி, தமிழர்களை காப்பாற்ற படை நடத்தி சென்று, வெற்றியுடன் திரும்பிய சோழர்படை இளவல் இளங்கோவேளைப் போன்ற வீரமிகு தன்மானத் தமிழனை பெற்றெடுத்த தாயே! உன் பாதங்களில் எங்கள் கண்ணீரைத்தான் எம்மால் காணிக்கையாக்க முடிகிறது.]]]

அந்தப் பழைய கதையை இப்போது திருப்பித் திருப்பிச் சொல்லித்தான் பொழைப்பை கெடுக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[JEE creative corner said...
நெகிழ்ச்சியான கவிதை. மனது வலிக்கிறது. இனமானமற்ற தமிழ்நாட்டில் இயலாமையில் இருந்துவிட்டதை எண்ணி நெஞ்சம் கொதிக்கிறது!]]]

எல்லோருக்குமே இந்த கையாலாகதத் தனத்தின் பச்சாபதம் உண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[வானம்பாடிகள் said...

/மாமனிதனின்
பிதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;/

உ.த. அண்ணே. இங்க பிதா தப்பில்லையோ? மாதாதானெ சரி?]]]

ஐயா.. பெரியவரே.. நான் உங்களுடைய அன்புத் தம்பி.. அண்ணன் இல்லை..!

மன்னிக்கணும்.. நீங்கள் குறிப்பிட்டதுதான் சரி.. தவறாக தட்டச்சு செய்துவி்ட்டேன். இப்போது திருத்திவிட்டேன். நன்றி..!

ராஜ நடராஜன் said...

//மன்னிக்கணும்.. நீங்கள் குறிப்பிட்டதுதான் சரி.. தவறாக தட்டச்சு செய்துவி்ட்டேன். இப்போது திருத்திவிட்டேன். நன்றி..!//

ஓ!இந்த தருமி வேலையா இது?

மாயாவி said...

அண்ணே சொந்த சரக்கு பதிவு போடுங்கண்ணே.... ரொம்ப நாளா ஜுவி ஆவி ரிப்போட்டர் சரக்கை மறு பிரதி போட்டுட்டு இருக்கீங்க. உங்க சுய சிந்தனையில் விழைந்த கட்டுரைகள்தான் எங்களுக்கு தேவை.

http://mugamuddi.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//மன்னிக்கணும்.. நீங்கள் குறிப்பிட்டதுதான் சரி.. தவறாக தட்டச்சு செய்துவி்ட்டேன். இப்போது திருத்திவிட்டேன். நன்றி..!//

ஓ! இந்த தருமி வேலையா இது?]]]

ஆமாம்.. மன்னிச்சுக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[முகமூடி said...
அண்ணே சொந்த சரக்கு பதிவு போடுங்கண்ணே. ரொம்ப நாளா ஜுவி ஆவி ரிப்போட்டர் சரக்கை மறு பிரதி போட்டுட்டு இருக்கீங்க. உங்க சுய சிந்தனையில் விழைந்த கட்டுரைகள்தான் எங்களுக்கு தேவை.

http://mugamuddi.blogspot.com/]]]

அதுவும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் பிரதர்..! என் தளத்தில் உள்ளவை எதுவுமே தேவையில்லாதது அல்ல..!

Namy said...

Idu varaikkum inda Valu(i), enda vala(karana) pudichikittu irundaru?

Namy said...

Sir, don't forget history... That show clearcut idea about who are 'enemy',... 'throgi' ete. what he did at the time of 'Eelam tamil genocide'.?... May 2009. Can you show Even a single 'ka(lu)vidai? For Tamil genocide. Ivar(n)ellam 'soddukkaga padum' onandi pulava(r)n.

ஜீவன்சிவம் said...

ஓட்டு பொருக்கி எச்சைகள் வழக்கம் போல் இப்போதும் மௌனம் காக்கிறது.
ஒரு பேச்சிற்கு கூட இரங்கலை தெரிவிக்கவில்லை. நன்றி கெட்ட நாய்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

//ராஜராஜனால் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கி, தமிழர்களை காப்பாற்ற படை நடத்தி சென்று, வெற்றியுடன் திரும்பிய சோழர்படை இளவல் இளங்கோவேளைப் போன்ற //
கொடும்பாளூர் இளங்கோவேள் நடத்திச் சென்றது ராஜேந்திரச் சோழனின் படையை
ராஜராஜனின் படையை அல்ல
அவர் தான் பாண்டியரின் மணி முடியையும், இரத்தினஹாரத்தையும் இலங்கையில் இருந்து மீட்டு வந்தவர்

Anonymous said...

அண்ணே என் வந்தனங்கள்...

தமிழ் அமுதன் said...

பகிர்விற்க்கு நன்றி..!

அரவிந்தன் said...

2009 மே மாத காலகட்டத்தில் கோமா வில் இருந்தாரா வாலி.?

Anonymous said...

அருமை! வாலியின் கவிதையை வாசிக்க வைத்த உண்மைத் தமிழா!வாழ்க.

Arun Ambie said...

//2009 மே மாத காலகட்டத்தில் கோமாவில் இருந்தாரா வாலி.?//
புரவலன் சொல் மீறிப் புலவன் பாடுவது தகாது என்பதால் அப்போது பாடவில்லை போலும். இப்போது தானே தேர்தல் அறிவித்திருக்கிறார்கள், இனி இனமானஸ்தர், ஏழைப்பங்காளர், நலம்விரும்பி போன்ற பல அவதாரங்களைப் புரவலர் எடுப்பார். பரிசில் பெறும் வரிசையில் இருக்கும் புலவர்கள் வரிசையிட்டுப் பாடுவர், புரவலர் வரிசைப்படுத்தியபடியே!!

உண்மைத்தமிழன் said...

[[[Namy said...

Idu varaikkum inda Valu(i), enda vala(karana) pudichikittu irundaru?]]]

ஹி.. ஹி.. அவர்கிட்டதான் கேக்கோணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜீவன்சிவம் said...
ஓட்டு பொருக்கி எச்சைகள் வழக்கம் போல் இப்போதும் மௌனம் காக்கிறது.
ஒரு பேச்சிற்குகூட இரங்கலை தெரிவிக்கவில்லை. நன்றி கெட்ட நாய்கள்.]]]

அவர்கள் எப்படி சொல்வார்கள்..? குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமே..?!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோசப் பால்ராஜ் said...

//ராஜராஜனால் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கி, தமிழர்களை காப்பாற்ற படை நடத்தி சென்று, வெற்றியுடன் திரும்பிய சோழர்படை இளவல் இளங்கோவேளைப் போன்ற//

கொடும்பாளூர் இளங்கோவேள் நடத்திச் சென்றது ராஜேந்திரச் சோழனின் படையை..
ராஜராஜனின் படையை அல்ல...
அவர்தான் பாண்டியரின் மணிமுடியையும், இரத்தினஹாரத்தையும் இலங்கையில் இருந்து மீட்டு வந்தவர்.]]]

இதுக்குத்தான் தம்பி மாதிரி ஹிஸ்டரி புரொபஸர்ஸ் வேணும்கிறது..! அப்பப்ப இது மாதிரி வந்து பின்னூட்டம் போடுங்கப்பா..! மிக்க நன்றி ஜோஸப்..!

உண்மைத்தமிழன் said...

[[[hrchennai said...

அண்ணே என் வந்தனங்கள்...]]]

தம்பிக்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[அரவிந்தன் said...

2009 மே மாத காலகட்டத்தில் கோமாவில் இருந்தாரா வாலி.?]]]

இல்லை.. மறதியில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[எசாலத்தான் said...
அருமை! வாலியின் கவிதையை வாசிக்க வைத்த உண்மைத் தமிழா! வாழ்க.]]]

தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

//2009 மே மாத காலகட்டத்தில் கோமாவில் இருந்தாரா வாலி.?//

புரவலன் சொல் மீறிப் புலவன் பாடுவது தகாது என்பதால் அப்போது பாடவில்லை போலும். இப்போதுதானே தேர்தல் அறிவித்திருக்கிறார்கள், இனி இன மானஸ்தர், ஏழைப் பங்காளர், நலம் விரும்பி போன்ற பல அவதாரங்களைப் புரவலர் எடுப்பார். பரிசில் பெறும் வரிசையில் இருக்கும் புலவர்கள் வரிசையிட்டுப் பாடுவர், புரவலர் வரிசைப்படுத்தியபடியே!!]]]

புரவலரும், புலவரும் எப்போது நேர்க்கோட்டுக்கு வருவார்கள்.. மீண்டும் அரியணை ஏறிய பின்பா..?

அரசூரான் said...

பகிர்விர்க்கு நன்றி.

வாலி கவிதை என்றும் இல்லை வேலி...

Kalee J said...

மு.க தமிழ்மக்களின் (ஈழம்) pulse பார்க்க வாலியின் மூலமாக நூல் விட்டு பார்க்கிறார்... அப்போதான் congress-ai கழட்டி விட்டுட்டு வரும்போது அப்படியே அர்ரெஸ்ட் ஆகும்போது நானும் ஈழத்தை ஆதரிக்கிறேன்னு ஒரு பிட் போட்டு ஓட்டு கேட்கலாம் இந்த இளிச்சவாய மறதியான தமிழர்களிடம்..

தாராபுரத்தான் said...

பகிர்வுக்கு நன்றிங்க.

Unknown said...

{இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!}

வாலியின் கவிதைகள் பொதுவாக சொல் நயமும் பொருள் நயமும் மிக்கவை
அதை மீண்டும் நிருபித்து உள்ளது இக்கவிதை

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்.

---
iambalamurugan

Unknown said...

வணக்கம் உண்மைத்தமிழன்,
தங்களது எழுத்தை மீண்டும் படிக்க வாய்ப்பு
தற்போதே கிட்டியுள்ளது. நிற்க ...

கவிஞர் வாலியின் கவிதை, தாள்தோன்றி ஈழத்தமிழர் தலைவன் பிரபாகரனது தாயாருக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி மட்டுமே.

திறமாக எழுதியுள்ளார் ... சொற்பிரயோகம் அபாரம்.

தனையன் பிரபாகரன் இப்படியான கவிதை அஞ்சலிக்கு உள்ளாகாதது மனதை மிகவும் நெருடுகிறது.

அல்லது, இணையத்தில் நான் இல்லாத காலத்தில் பதிவாகி நான் தான் கவனிக்கத் தவறி விட்டேனோ ...

Unknown said...

அய்யா புதிய பெயரில் வருவது முன்னைய பென் என்பவரும் தங்களது அபிமான முன்னைய விசிறி லேகாபக்ஷ என்பவரின் தந்தையுமே ...

உண்மைத்தமிழன் said...

[[[அரசூரான் said...

பகிர்விர்க்கு நன்றி. வாலி கவிதை என்றும் இல்லை வேலி...]]]

"கவிதைக்கு" என்று இருந்திருக்க வேண்டும் அரசூரான் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kalee J said...

மு.க தமிழ் மக்களின்(ஈழம்) pulse பார்க்க வாலியின் மூலமாக நூல் விட்டு பார்க்கிறார். அப்போதான் congress-ai கழட்டி விட்டுட்டு வரும்போது அப்படியே அர்ரெஸ்ட் ஆகும்போது நானும் ஈழத்தை ஆதரிக்கிறேன்னு ஒரு பிட் போட்டு ஓட்டு கேட்கலாம் இந்த இளிச்சவாய மறதியான தமிழர்களிடம்.]]]

இனி இது நடக்காது. தமிழகத்தில் உள்ள தமிழர்களைப் போல அல்ல ஈழத் தமிழர்கள். அவர்கள் விவரம் தெரிந்தவர்கள். நடிப்பவர்கள் யார்? உழைத்தவர்கள் யார் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[தாராபுரத்தான் said...

பகிர்வுக்கு நன்றிங்க.]]]

தாராபுரத்தான் வருகைக்கு நன்றி.. ரொம்ப நாள் கழிச்சு திரும்ப வந்திருக்கீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Vispl said...

வாலியின் கவிதைகள் பொதுவாக சொல் நயமும் பொருள் நயமும் மிக்கவை. அதை மீண்டும் நிருபித்து உள்ளது இக்கவிதை

ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்.]]]

இதுதான் இவரது தனிச் சிறப்பு. எவ்வளவுதான் தனிப்பட்ட கோபங்கள் இருந்தாலும், தமிழுக்காக வாலியைச் சகித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[gully said...

வணக்கம் உண்மைத்தமிழன்,
தங்களது எழுத்தை மீண்டும் படிக்க வாய்ப்பு தற்போதே கிட்டியுள்ளது. நிற்க.

கவிஞர் வாலியின் கவிதை, தாள்தோன்றி ஈழத் தமிழர் தலைவன் பிரபாகரனது தாயாருக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி மட்டுமே.

திறமாக எழுதியுள்ளார். சொற்பிரயோகம் அபாரம்.

தனையன் பிரபாகரன் இப்படியான கவிதை அஞ்சலிக்கு உள்ளாகாதது மனதை மிகவும் நெருடுகிறது.]]]

அப்போது வாலி நீண்ட தூக்கத்தில் இருந்தார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவருக்குள்ளும் தயக்கங்கள் உண்டோ தெரியவில்லை. ஏனெனில் பிரபாகரனின் மரணத்தை இன்றளவிலும் அவரது ஆதரவாளர்கள் பலரும் ஏற்கவில்லையே..?

உண்மைத்தமிழன் said...

[[[gully said...

அய்யா புதிய பெயரில் வருவது முன்னைய பென் என்பவரும் தங்களது அபிமான முன்னைய விசிறி லேகாபக்ஷ என்பவரின் தந்தையுமே]]]

எந்தப் பெயரில் வந்திருப்பது..? தாங்களா..? புரியவில்லை..!

Vaidhyee said...

True tamilian, can i post this in my facebook page. its touching and i want this to reach more tamil indians, my id is vaidhyee@gmail.com. reply me or just say ok in this forum

உண்மைத்தமிழன் said...

[[[Vaidhyanathan said...

True tamilian, can i post this in my facebook page. its touching and i want this to reach more tamil indians, my id is vaidhyee@gmail.com. reply me or just say ok in this forum.]]]

தாராளமாகப் போட்டுக் கொள்ளலாம்.. நோ அப்ஜெக்ஷன்..!

Unknown said...

சென்ற வருடம் மூன்றாம் மாதத்திற்கு முன்னர் அவுஸ்த்திரேலியா வில் இருந்து
தமிழ்புலிகள் பற்றி எனது யாழ் அனுபவங்கள் எழுதுவேனே.
என்னை எதிர்த்து எனது மகள் லேகாபக்ஷ எனும் புனைப் பெயரில் எழுதுவா.
கடைசியாக நீங்கள் என்னிடம் கேட்டது, யாழ் சென்றால் புகைபடங்கள் எடுத்து அனுப்புங்கள் ...
இன்னும் தான் யாழ் போகின்றேன் ...

Unknown said...

[[[ அப்போது வாலி நீண்ட தூக்கத்தில் இருந்தார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவருக்குள்ளும் தயக்கங்கள் உண்டோ தெரியவில்லை. ஏனெனில் பிரபாகரனின் மரணத்தை இன்றளவிலும் அவரது ஆதரவாளர்கள் பலரும் ஏற்கவில்லையே..? ]]]

''History repeats itself'' என்பார்கள் ...

Adolf Hitler 1945 ல் தற்கொலை புரிந்து மரணித்த போதும் அவரது ஆதரவாளர்கள் அம் மரணத்தை ஏற்றுக்கொள்ள விருமபவில்லைத் தான்.
என் செய்வது ...

Jesus the Nazarene சிலுவவையில் இறந்தார் என்பதையும் கோடிக் கணக்கான மக்கள் நம்புகின்றார்களே ...

மனிதன் ஆராய்ந்து நம்புவது மிகக் குறைவு.

Thenammai Lakshmanan said...

அருமை அருமை.

muthu said...

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற தாய் சிகிச்சைக்காகக் கூட தன்னை தன் மகனின் பொருட்டு இந்த தேசம் உள்ளே வரக்கூட விடவில்லை எனும்போது இவர்களை நம்பி இவர்களால் வளர்ந்த மகன் செய்த தவறு என்ன என்று சிந்தித்திருப்பாரா?

உண்மைத்தமிழன் said...

[[[gully said...

சென்ற வருடம் மூன்றாம் மாதத்திற்கு முன்னர் அவுஸ்த்திரேலியாவில் இருந்து
தமிழ் புலிகள் பற்றி எனது யாழ் அனுபவங்கள் எழுதுவேனே.
என்னை எதிர்த்து எனது மகள் லேகாபக்ஷ எனும் புனைப் பெயரில் எழுதுவா. கடைசியாக நீங்கள் என்னிடம் கேட்டது, யாழ் சென்றால் புகைபடங்கள் எடுத்து அனுப்புங்கள் ...
இன்னும்தான் யாழ் போகின்றேன்.]]]

யாழ் செய்திகள் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை அருமை.]]]

வெகு தாமதமான நன்றிகள்.. பொறுத்தருள்க..!

உண்மைத்தமிழன் said...

[[[muthu said...

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற தாய் சிகிச்சைக்காகக் கூட தன்னை தன் மகனின் பொருட்டு இந்த தேசம் உள்ளே வரக்கூட விடவில்லை எனும்போது இவர்களை நம்பி இவர்களால் வளர்ந்த மகன் செய்த தவறு என்ன என்று சிந்தித்திருப்பாரா?]]]

இல்லை. அந்தச் சிந்திக்கின்ற மனநிலையையெல்லாம் தாண்டியிருந்தார் அந்த மூதாட்டி.. வயோதிகம் அவரை ஆட்கொண்டிருந்தது.. பாவம்..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

Pls visit VALAISARAM(www.blogintamil.blogspot.com)]]]

பரப்புரைக்கு மிக்க நன்றி ராஜா..!