கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

29-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.

'சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது' என்பதைப் போல பதிவுகளை போட்டே தீர வேண்டும் என்கிற அவசியத்தையும் என் அப்பன் முருகன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்.

நேற்று பாருங்கள்.. நேரு உள் விளையாட்டரங்கில் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவன்' தனது கலையுலகத்தின் 50-வது வருட பொன்விழாவை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க.. அவருக்கு இன்னுமொரு சிறப்பு சேர்க்கும்விதமாக 'தசாவதாரம்' படத்தில் பத்து வேடங்களில் வந்து கலக்கியதற்காக 'சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது' கிடைத்திருக்கிறது.

இந்தத் 'தேர்வுப் பட்டியல்' பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், நேற்றுதான்.. அதிலும் அண்ணன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடக்கும் தினத்தன்றுதான் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்கிற 'கோபாலபுரத்தாரின்' ஆசையை அரசு அதிகாரிகள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதற்கான நன்றிக் கடனை கடந்த சில நாட்களுக்கு முன்பேயே கமலஹாசன் கோபாலபுரத்தின் படியேறிச் சென்று செலுத்திவிட்டு வந்துவிட்டார். இவர் 2008-ம் ஆண்டுக்கு..

2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு விருது கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு கிளைமாக்ஸ் காட்சிக்காக காத்திருந்த 'எந்திரன்' டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு, கோபாலபுரத்தாரின் கவிதை பாடல் நிகழ்ச்சிக்கு சென்று மூன்றரை மணி நேரம் முக்காலிட்டு உட்கார்ந்திருந்து தனது 'நன்றிக் கடனை' செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

தேர்வு செய்வது தேர்வுக் கமிட்டி. அந்தத் தேர்வுக் கமிட்டியை நியமித்தது தமிழக அரசு. தேர்வு செய்தால் கமிட்டி அதனை அரசிடம் சமர்ப்பிக்கும். அரசு அதனை நாள், நேரம், நட்சத்திரம் பார்த்து வெளியிடும். அதற்கிடையில் அந்த நடிகர்களுக்கே இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது ஏன் என்றெல்லாம் சின்னப்புள்ளைத்தனமா கொஸ்டீன் கேக்கக் கூடாது..? இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்..

இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை.

பரிசுக்காகத் தேர்வு செய்திருக்கும் திரைப்படங்களையும், தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களையும் பார்க்கும்போதுதான் பி.பி. தாறுமாறாக எகிறுகிறது. சில தேர்வுகள் பேலன்ஸ் செய்வதற்காக செய்யப்பட்டிருக்க.. பல தேர்வுகள் பல நல்ல கலைஞர்களை புறக்கணித்து, ஓரம்தள்ளிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கொடுமையாக உள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டை பார்ப்போம். வெற்றி பெற்ற பட்டியலைப் பாருங்கள்.

சிறந்த படம் - முதல் பரிசு - சிவாஜி

சிறந்த படம் - இரண்டாம் பரிசு - மொழி

சிறந்த படம் - மூன்றாம் பரிசு - பள்ளிக்கூடம்

சிறந்த படம் - சிறப்பு பரிசு - பெரியார்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு - தூவானம்

சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி)

சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)

சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு - சத்யராஜ் (பெரியார்)

சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு - பத்மப்பிரியா (மிருகம்)

சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவாஜி)

சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக் (சிவாஜி)

சிறந்த குணசித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)

சிறந்த குணசித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த இயக்குநர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)

சிறந்த கதை ஆசிரியர் - வசந்த் (சத்தம் போடாதே)

சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல் (கல்லூரி)

சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)

சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)

சிறந்த பின்னணிப் பாடகர் - ஸ்ரீனிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (சிவாஜி)

சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)

சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)

சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)

சிறந்த கலை இயக்குநர் - தோட்டாதரணி (சிவாஜி)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)

சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தீபாவளி)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன் (பெரியார்)

சிறந்த தையல் கலைஞர் - அனுவர்த்தன் (பில்லா)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) - கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)

சிறந்த பின்னணி குரல்(பெண்) - மகாலட்சுமி (மிருகம்)

2007-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது விருதுகளை வழங்கலாம் என்று கருதக்கூடிய திரைப்படங்களின் பட்டியல் இது.

சிவாஜி, பருத்தி வீரன், மொழி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், மிருகம், சென்னை 600028, அம்முவாகிய நான்

இதில் 'பருத்தி வீரன்' திரைப்படம் 2006-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கி 2007-ம் ஆண்டில் வெளியானதால் 2006-ம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து வெளியேறிவிட்டது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்திருக்கின்ற ஒரே காரணத்திற்காக 'பெரியார்' திரைப்படத்திற்கு சிறப்பு பரிசு வழங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் 'மிருகம்' பெண்களை மிக உயர்வாகக் காட்டிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பட்டியலில் தனி இடம் பெற்று விட்டது.

சிறந்த திரைப்படமாக 'சிவாஜி'யை தேர்வு செய்திருக்கிறார்கள் நமது கலை வல்லுநர்கள். என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.. ஆனால் அது சிறந்த திரைப்படத்திற்கு தகுதியான திரைப்படம்தானா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

'சிவாஜி' திரைப்படத்துடன் சிறந்த படத்திற்காக போட்டியிட்ட படங்கள் லிஸ்ட்டை பாருங்கள்.. மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், அம்முவாகிய நான்..

இந்தப் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் 'மொழி' திரைப்படம்தான் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதியும் அத்திரைப்படத்திற்கு உண்டு. சினிமா மொழியின் அடிப்படையில் பார்த்தால் 'சிவாஜி'யைவிட பல மடங்கு தரமான திரைப்படம் மொழி. மற்ற திரைப்படங்களும் வலுவான போட்டியைக் கொடுத்தாலும் கதை, நேர்த்தி, நடிகர்களின் நடிப்புத் திறன், திரைக்கதை ஆக்கம் என்று அனைத்திலும் மொழிதான் சிறப்பு வாய்ந்தது என்பது எனது கருத்து.

ஆனால் இவர்கள் 'சிவாஜி'யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா..?

இரண்டாவது சிறந்த படமாக 'மொழி'யையும், மூன்றாவது சிறந்த படமாக 'பள்ளிக்கூடத்தையும்' தேர்வு செய்து பேலன்ஸ் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். கூடவே இன்னொரு கூத்தாக ரெடிமேட் தாக்குதலாக அறிக்கைவிடத் தயாராகக் காத்திருந்த தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி அவருக்கு 'சிறந்த இயக்குநருக்கான பரிசைக்' கொடுத்து சமாளித்துவிட்டார்கள். உண்மையில் இந்த விருதைப் பெற ராதாமோகனே தகுதியானவர் என்பது எனது தாழ்மையான கருத்து.

'பள்ளிக்கூடமும்', 'ஒன்பது ரூபாய் நோட்டு'வும் சிறந்த படைப்புகள்தான் என்றாலும் மதிப்பெண் விகிதத்தில் 'மொழி' திரைப்படத்திற்குப் பின்னால்தான் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும் 'மொழி'யில் நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருப்பதில் இயக்குநரின் பங்குதான் அதிகம். ஆனால் ராதாமோகனுக்கு இங்கே பப்பே சொல்லிவிட்டு 2008-ம் ஆண்டு 'அபியும் நானும்' படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைக் கொடுத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

'மொழி'யில் இருந்த திரைக்கலை உணர்வும், படமாக்கிய திறனும் 'அபியும், நானும்' திரைப்படத்தில் பாதிதான் இருந்தது. ஆனால் எதற்காக அத்திரைப்படத்திற்கு என்று புரியவில்லை.

'சத்தம் போடாதே' படத்தின் கதையைவிட மாயக்கண்ணாடியின் கதை எவ்வளவோ பெஸ்ட்.. ஆனால் பேலன்ஸ் செய்யும் நோக்கில் வசந்திற்கு தரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

கற்றது தமிழ், இராமேஸ்வரம், பச்சைக்கிளி முத்துச்சரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஒரு பிரிவில்கூட இத்திரைப்படங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது அவர்களுடைய துரதிருஷ்டம்தான்.

அடுத்து 2008-ம் ஆண்டினை பார்ப்போம்..

முதலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை பார்ப்போம்..

சிறந்த படம் - முதல் பரிசு - தசாவதாரம்

சிறந்த படம் - இரண்டாம் பரிசு - அபியும் நானும்

சிறந்த படம் - மூன்றாம் பரிசு - சந்தோஷ் சுப்ரமண்யம்

சிறந்த படம் - சிறப்பு பரிசு - மெய்ப்பொருள்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு - வல்லமை தாராயோ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - இரண்டாம் பரிசு - வண்ணத்துப்பூச்சி

சிறந்த நடிகர் - கமலஹாசன் (தசாவதாரம்)

சிறந்த நடிகை - சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு - த்ரிஷா (அபியும் நானும்)

சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)

சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)

சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)

சிறந்த குணசித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)

சிறந்த இயக்குநர் - ராதாமோகன் (அபியும் நானும்)

சிறந்த கதை ஆசிரியர் - சா.தமிழ்ச்செல்வன் (பூ)

சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)

சிறந்த பாடலாசிரியர் - வாலி (தசாவதாரம்)

சிறந்த பின்னணிப் பாடகர் - பெள்ளிராஜ் (சுப்ரமண்யபுரம்)

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (நெஞ்சத்தைக் கிள்ளாதே)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)

சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)

சிறந்த எடிட்டர் - ப்ரவீன் காந்த் (சரோஜா)

சிறந்த கலை இயக்குநர் - ராஜீவன் (வாரணம் ஆயிரம்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)

சிறந்த நடன ஆசிரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)

சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - லட்சுமி (வண்ணத்துப்பூச்சி)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)

சிறந்த பின்னணி குரல்(பெண்) - சவிதா (பல படங்கள்)

2009-ம் ஆண்டு வெளியானாலும் 2008-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டதால் 'நான் கடவுள்' திரைப்படம் 2008-ம் ஆண்டு படங்களுடன் போட்டியிட்டுள்ளது.

கமலஹாசன் சிறந்த நடிகர்தான். பெற வேண்டிய விருதுதான். சந்தேகமில்லை. வாழ்த்துவோம். ஆனால் 'தசாவதாரம்' சிறந்த படமா..?

2008-ம் ஆண்டில் அத்திரைப்படத்துடன் போட்டியிட்டிருக்கும் படங்களை பாருங்கள்.. நான் கடவுள், பிரிவோம் சந்திப்போம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, பொய் சொல்லப் போறோம், வாரணம் ஆயிரம், பூ, பொம்மலாட்டம், அபியும் நானும்.

இந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக 'பூ', 'அஞ்சாதே', 'சுப்ரமணியபுரம்' ஆகிய மூன்று திரைப்படங்களும் சிறந்த திரைப்படங்களுக்கான லிஸ்ட்டில் இருக்க வேண்டிய திரைப்படங்கள். ஆனால் இவற்றில் 'பூ' படத்திற்கு பெண்களை உயர்வாகக் காட்டுவதாகச் சொல்லி சிறப்புப் பரிசு கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். என்னே தேர்வுக் கமிட்டியினரின் கலைத்திறமை...?

இதில் காமெடியாக 'அபியும் நானும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்' என்னும் இரண்டு கமர்ஷியல் குடும்பக் கதைகள் விருதை பெற்றுள்ளன. இவைகளும் நல்ல திரைப்படங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் சினிமா மொழி இவற்றில் இல்லையே.. இவைகள் சாதாரணமான மேடை நாடகங்கள் போன்ற திரைப்படங்கள்தானே.. திரைப்படத்தின் உடற்கூற்றுக்கான ஒரு அடையாளம்கூட இத்திரைப்படங்களில் இடம்பெறவில்லை.

ஆனால் 'அஞ்சாதே'யும், 'சுப்ரமணியபுரமும்' தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

இன்னும் எனக்கு இந்த மூன்றில் எதை சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்வது என்கிற குழப்பமே உள்ளது. அந்த அளவுக்கு சிறந்த காவியப் படைப்புகளை கையில் வைத்துக் கொண்டு விருதுகளை இரண்டரை மணி நேர நாடகங்களுக்கு வழங்கியிருப்பது கொடுமையான விஷயம்.

அடுத்த கொடுமை சிறந்த இயக்குநருக்கான விருது. நிச்சயம் இதில் போட்டியிடுபவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், மிஷ்கினும், சசிகுமாரும், சசியும்தான். ராதாமோகன் லிஸ்ட்டில் இல்லவே இல்லை. ஆனாலும் ராதாமோகனுக்குத்தான் கிடைத்திருக்கிறது. காரணம் நான் முன்பே சொன்னதுபோல தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி ராதாமோகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு இது. முறைகேடான விஷயம் இது.

சசிகுமார் பாவம்.. தமிழக அரசின் விருதைத் தவிர மற்ற அத்தனை குறிப்பிடத்தக்க விருதுகளையும் 'சுப்ரமணியபுரம்' படத்திற்காக வாங்கிக் குவித்துவிட்டார். சரி.. அந்த அளவுக்கு தமிழக அரசின் விருதிற்கு மரியாதை இல்லை என்பதை இப்போதைக்கு புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

இதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் 'பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.

சந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.

இரண்டாவது சந்தோஷமான விஷயம், 'பூ' படத்திற்காக சிறந்த கதையாசிரியருக்கான விருதை நமது சக பதிவரும், எழுத்தாளரும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு.சா.தமிழ்ச்செல்வன் பெற்றிருப்பதுதான்.

'அஞ்சாதே' நரேனும், 'சுப்ரமணியபுரம்' சசிகுமாரும், 'பொம்மலாட்டம்' நானே படேகரும் 'வாரணம் ஆயிரம்' சூர்யாவைவிட பல மடங்கு நடித்திருக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை. ஆனால் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் கிடைக்கவில்லை.

சிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் 'அஞ்சாதே' பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே 'நான் கடவுள்' படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பாரோ. ஆனால் 'டக் அஃப் வார்'தான்.. சந்தேகமில்லை..! பிரசன்னா தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார். நிச்சயம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால் ராஜேந்திரன் கதை அப்படியில்லை. அவருடைய இயல்பான உடல் வாகுவும், பேச்சுத் திறனும் அப்படியே அமைந்துவிட்டதாலும், அவர் கவரப்பட்டார் என்று நினைக்கிறேன்..!

'சுப்ரமணியபுரம்' ஸ்வாதியும், 'பொம்மலாட்டம்' நாயகி ருக்மணியும், 'பூ'வில் பார்வதியும் நடித்த நடிப்பைவிடவா 'அபியும் நானுமில்' த்ரிஷா நடிப்பைக் கொட்டியிருக்கிறார்..? சிறப்புப் பரிசில்கூடவா இவர்களுக்கு இடமில்லை..!

இதில் இன்னுமொரு அபத்தம் 'நான் கடவுள்' படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு குணசித்திர நடிகைக்கான பரிசைக் கொடுத்து ஒதுக்கிவிட்டதுதான். இனிமேல் கதாநாயகி யார்? குணசித்திர நடிகை யார் என்பதையெல்லாம் தமிழக அரசிடம் கேட்டுவிட்டுத்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் போலும்..!

இதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..

அவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.

இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.

முதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..?

உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..

'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..

இந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம்? தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.

ஏன்? இப்படி? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..

“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.

ஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..

இதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து "வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க"ன்னு அறிக்கையே விட்ரலாம்.

எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!

உன்னைப் போல் ஒருவன் - சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

"ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்" என்றார் பாரதி. அதைபோல ஒரு தனி மனிதனின் பேரன்பும், பெரும் கோபமும்தான் இப்படத்தின் கதை.

ரயில் பெட்டி, பேருந்து நிலையம், ஷாப்பிங் மால், அண்ணாசாலை காவல் நிலையம் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கனமான பேக்கைக் கொண்டு வந்து மறைத்து வைக்கிறார் கமல்ஹாசன். அதன் பிறகு மார்க்கெட்டுக்குச் சென்று மனைவி தந்தப் பட்டியல்படி காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பும் அவர், பாதி கட்டிய நிலையில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் ஏறுகிறார். மாடியில் ஒரு பலகையை எடுத்து அதை மேஜை போல் அமைத்து தன்னிடம் இருக்கும் இன்னொரு பையை எடுத்து அதிலிருந்து லேப்-டாப், செல்ஃபோன் சிம் கார்டு போன்றவற்றை எடுத்து அமர்கிறார்.

பிறகு சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு ஃபோன் செய்து ஐந்து இடங்களில் அதி பயங்கர வெடி குண்டுகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார். இதை அவர் நம்ப மறுக்க, அண்ணாசாலை காவல் நிலையத்தில் வைத்திருக்கும் குண்டுப் பற்றி சொல்கிறார்.

அங்கு போலீஸ் படையை அனுப்பி சோதனை செய்து பார்க்கும் கமிஷனர், அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதை கண்டு பிடிக்கிறார். அதனை செயல் இழக்க வைப்பதற்கான வழியையும் சொல்லும் கமல், அதன் பிறகு மற்ற குண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி கெடு வைக்கிறார்.

போலீஸ் கமிஷனர் கோபமாகிறார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை தகர்க்கப் போகும் தீவிரவாதியின் திட்டங்களையும், அவனது கெடுவையும் உள்துறை செயலாளரிடம் கூறுகிறார்.

உள்துறை செயலாளர் லட்சுமி அதிர்ந்து போவதோடு, முதல்வர் தரும் அதிகாரத்தை வைத்து மிரட்டல்காரனைப் பிடிக்கவும், முடியாவிட்டால் அவன் கேட்பதுபோல் அந்த தீவிரவாதிகளை அவனிடம் ஒப்படைத்து குண்டு வெடிக்காமல் நாட்டை பாதுகாக்கும்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்.

கமல் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொலைபேசியில் இருந்து பேசுகிறார். போலீஸ் அந்த நம்பரை தேடிப் பார்த்தால் அது இறந்து போனவர்களின் எண்களாகவே இருக்கிறது. அதனால் கமல் எங்கிருந்து பேசுகிறார்? அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது தெரியாமல் போலீஸ் கமிஷனரும் அவரது உளவுத் துறையும் திணறுகிறது.

இந்நிலையில் கமல் வைத்த கெடு முடிவடையும் நிலையில் வேறு வழியில்லாமல் அவரது கோரிக்கையை ஏற்கிறார் கமிஷனர். நான்கு தீவிரவாதிகளையும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றனர்.

அவர்களிடம், "மேலிட உத்தரவுபடி உங்களை விடுவிக்கிறேன், வேனில் தப்பிச் செல்லுங்கள்'' என்று கமல் ஃபோனில் கூறுகிறார். தங்கள் இயக்கம் தங்களை மீட்டதாக நினைத்துச் செல்லும் அந்த தீவிரவா

திகள் அடுத்து என்ன நிலைக்குஆளாகிறார்கள் என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்படுவதால் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற பரபரப்பை உண்டு பண்ணுகிறார்கள். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் அந்த பரபரப்பின் டெம்போ கூடிக்கொண்டே போகிறது.

கதாநாயகன் மக்களை கொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது? இவர் ஏன் தீவிரவாதிகளை விடுவிக்கப் போராடுகிறார்? போன்ற கேள்விகளோடும், பரபரப்போடும் படம் ஜெட் வேகத்தில் செல்கிறது. கிளைமாக்ஸில் நியாயமும், சென்டிமென்டும் வெளிப்படும்போது நம் மனம் கனக்கிறது.

ஆரம்பக் காட்சியிலேயே பத்து பேரை பறந்துப் பறந்து அடிப்பது, அறிமுக பாடல் காட்சியில் மக்களுக்கு நல்லது செய்வதான அறிவுரை பாடலுக்கு ஆட்டம் போடுவது, வில்லனிடமிருந்து கதாநாயகியை காப்பாற்றி, அவளைத் திருமணம் செய்துகொண்டு, வில்லனுக்கு வில்லனாக இருந்து வெளிநாட்டு தெருக்களில் பாட்டுப் பாடி, நடனமாடுவது, சண்டை காட்சி என்ற பெயரில் சர்க்கஸ் சாகசங்களை காட்டி ஹீரோயிஸம் காட்டும் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் "இதுதாண்டா ஹீரோயிஸம்" என்று திரைக்கதையை நம்பி கமல் ஏற்றிருக்கும் வேடத்துக்கும், அவரது நடிப்புக்கும் முதலில் ஒரு 'சல்யூட்' அடிக்கலாம்!

படம் முழுக்க அவருக்கு ஒரே லோகேஷன், ஒரே உடை! ஆனால் என்ன? நடிப்பில் அசத்தியிருக்கிறாரே!

ஒரு போலீஸ் கமிஷனரின் பொறுப்பு, வேகம், கேள்விகள், மனிதாபிமானம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது இயல்பான நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் மோகன்லால்.

'அடி என்றால் இதுதாண்டா அடி' என்பதுபோல் சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு மிரட்டும் கணேஷ் வெங்கட்ராம், 'அபியும் நானும்' படத்தில் த்ரிஷாவின் 'சிங்' கணவராக வந்தவரா இவர்? என வியக்க வைத்திருக்கிறார் தனது இயல்பான நடிப்பின் மூலம். கடைசியில் கணேஷ் வெங்கட்ராம் மீது சொல்லாமல் சுடும் பரத்ரெட்டி, போலீஸ்காரர் சக்ரியாக வரும் பிரேம்குமார் ஆகியோரும் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்.

மற்றும் லட்சுமி, ஸ்ரீமன், ஆர்.எஸ்.சிவாஜி, சந்தானபாரதி, அனுஜா, பூனம் ஆகியோரின் பாத்திரங்களும் மனதில் நிற்கின்றது.

ஸ்ருதி ஹாசனின் இசையும், மகேஷ் சோனியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கும் சிறப்பு அம்சங்கள்.

தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். ஆனால் அந்தத் தீவிரவாதத்துக்கு காரணமானவர்களுக்கான தண்டனைகள் அவர்களுக்கு வலிக்காமல், தாமதமாக வழங்கப்படுகின்றன.

"தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே" என்ற ஒரு தனி மனிதனின் கோபத்தை நம்மில் ஒருவராக இருந்து முடித்து வைத்திருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் சக்ரி டொலேடி. அவரது மன ஓட்டமும், அதை படமாக்கியிருக்கும் விதமும் அசத்தல், பாராட்டுக்குரியது. அதற்கு இரா.முருகன் எழுதியுள்ள வசனங்கள் துணை நிற்கிறது.

பார்க்க வேண்டிய படம்.

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் - தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - தமிழன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்

முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் அழிக்க முடியும் என நினைக்கும் ஒரு தனி மனிதனின் கோபத்தைச் சொல்லும் படம். ஒரு வரி கதைதான். அதை பிரமிக்க வைக்கும் திரைக்கதையின் மூலம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கின்றனர்.

கமிஷனர் மாறாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. "நகரில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகள் வைத்துள்ளேன். அது ஆறு மணிக்கு வெடிக்கும். நான் சொல்லும் நான்கு தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அமைதியான நாட்டை அமைதியாகவே விட்டுவிடுகிறேன்" என்கிறார் தொலைபேசியில் பேசியவர்.

இந்த மிரட்டலைக் கேட்டு கமிஷனரும், உள்துறைச் செயலாளரும் அதிர்ந்து போகிறார்கள். "முடிந்தால் குண்டு வைத்தவனைப் பிடி. இல்லையேல் தீவிரவாதிகளை விடுதலை செய்து மக்களைக் காப்பாற்று" என்கிறார் உள்துறை செயலர். கையில் அதிகாரம் கிடைத்ததும் அதிரடி வேலையில் இறங்குகிறார் கமிஷனர். எவ்வளவோ முயன்றும் மிரட்டல்காரரின் இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பாலும் தீவிரவாதத்தால் இறந்தவர்களின் பெயர்களில் அவர்களின் முகவரியில் சிம்கார்டு வாங்கியிருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொள்கிறார் கமிஷனர்.

வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை விற்கும் ஒரு நபரைக் கொண்டு வந்து விசாரித்து அடையாளங்களைத் தெரிந்து கொள்வதற்குள் நேரம் கடந்து விடுகிறது. கெடு நேரம் நெருங்கியதால் வேறு வழியின்றி நான்கு தீவிரவாதிகளையும் மிரட்டல்காரர் சொன்ன இடத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.

தமது இயக்கம்தான் தம்மை விடுவிக்கிறது என்று மகிழ்ச்சியோடு செல்லும் தீவிரவாதிகள் என்ன ஆனார்கள்? தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரின் நோக்கம் என்ன என்பதுதான் மீதிப்படம்.

இந்தியில் வெளியான 'எ வெட்னெஸ் டே' படத்தின் ரீமேக். இந்தியில் நஸ்ரூதின்ஷா நடித்த பாத்திரத்தில் கமலும், அனுபம்கெர் நடித்த பாத்திரத்தில் மோகன்லாலும் நடித்திருக்கின்றனர்.

இரவு, பகல் பாராமல் உழைத்து மர்ம பைகளை முக்கியமான இடங்களில் வைக்கும் கமல் அதில் ஒன்றை போலீஸ் நிலையத்திலேயே வைக்கிறார். நல்ல பிள்ளையாக மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு வருபவர் ஓர் உயரமான கட்டிடத்தில் ஏறுகிறார். அங்கே இருக்கைகளைத் தயார் செய்து லேப்டாப் முன்பு அமர்கிறார். அதன் மூலம் கமிஷனரிடம் பேசத் தொடங்கும்வரை அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் கமல், வெடிகுண்டு மிரட்டலை ஆரம்பித்ததும் பீதியைக் கிளப்புகிறார்.

"வழக்கமாக கதாநாயகன் நல்லதுதானே செய்வான்? கெட்டது ஏன் செய்கிறான்?" என்ற குழப்பம் படம் பற்றிய சுவாரஸ்யத்தைத் தூண்டுகிறது. ஃப்ளாஷ்க்கில் இருந்து காபியை எடுத்துக் குடித்துவிட்டு ஃப்ளாஷ்பேக்கில் கதையைச் சொல்லும்போது நமது கண்களிலும் ஈரத்தை வரவழைக்கிறார் கமல்.

உள்துறைச் செயலாளருடன் பேசும் காட்சிகளில் சிரிக்க வைக்கும் மோகன்லால் கடமையில் கறாராக இருக்கும் காட்சிகளில் கம்பீரமாக நிற்கிறார். அவருக்கு உதவியாக வரும் அதிரடி போலீஸ்காரர் கணேஷ் வெங்கட்ராம், பிரேம்குமார் ஆகியோரின் நடிப்பும் பிரமாதம். உள்துறை செயலாளராக லட்சுமி நடித்திருக்கிறார்.

இரா.முருகனின் வசனம், ஸ்ருதிஹாசனின் பின்னணி இசை, மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்குப் பக்க பலம். உயரமான மொட்டை மாடி, கமிஷனர் அலுவலகம் என இரண்டு இடங்களும் கதையின் முக்கியக் களங்கள். அதனால் அங்கு இடம் பெறும் பல காட்சிகளை வேறு, வேறு கோணங்களில் ஒளிப்பதிவாளர் உதவியுடன் மிரட்டும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சக்ரி டெலோடி.

கமலின் சினிமா பயணத்தில் அடுத்த மைல் கல் "உன்னைப் போல் ஒருவன்".

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் - குங்குமம் இதழ் விமர்சனம்

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - குங்குமம் விமர்சனம்

பயங்கரவாதத்தை எதிர்க்கும் துணிவும், தெளிவும் இருந்துவிட்டால் சாமானியர்கள்கூட தீவிரவாதிகளை நடுங்கச் செய்துவிட முடியும் என்று உணர்த்தியிருக்கும் புதிய சிந்தனைப் படம். இந்தியில் நீரஜ் பாண்டே எழுதிய கதையை தமிழில் சக்ரி டோலடி இயக்கியிருக்கிறார்.

ஒரே நாளில் நடக்கும் இந்தக் கதை, பணியில் இருந்து விடுவித்துக் கொண்ட போலீஸ் கமிஷனர் மோகன்லாலின் நினைவுகளில் கடந்த காலத்துக்குப் போகிறது. வெடிகுண்டுகள் தயார் செய்து கொண்டு போய் சென்னையின் முக்கியப் பகுதிகளில் கமல் வைத்துவிட்டு வரும் ஆரம்பக் காட்சி அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்தது. அதன் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகளில் கைதான தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி அவர் பேரம் பேசுவது அதைவிட அதிர்ச்சி.

சாமானிய மனிதனாக வரும் கமலுக்கு ஒரே காஸ்ட்யூம்தான். எடுத்துக் கொண்ட பாத்திரத்தில் இருந்த இடத்தைவிட்டு நகராமல் அடக்கி வாசித்திருக்கும் கமலின் நேர்மை பாராட்டத்தகுந்தது. ஒரு தீவிரவாதிபோல் ஆரம்பித்து, நம்மில் ஒருவனாக நிலை பெறுகிறவரை மிகையில்லாமல் நடித்திருக்கிறார்.

தன் செயலுக்கான நியாயத்தை அவர் விளக்கும் காட்சியில் பெண்ணுறுப்பு வழியே கைவிட்டு குழந்தையை எடுத்துக் கர்ப்பிணிப் பெண்ணை சமூகவிரோதிகள் கொன்ற கொடுமையைச் சொல்லி, "அது என் மகள். இல்லைன்னா என் சகோதரன், நண்பனின் மகளா இருந்தாத்தான் அதை உணர முடியுமா?" என்று கேட்டு உடையுமிடம் உருக வைக்கிறது.

மோகன்லாலின் முதிர்ச்சியும், கண்டிப்பான பார்வையுமே அவரை ஒரு போலீஸ் கமிஷனராக ஒத்துக் கொள்ள வைக்கிறது. ஒரு மலையாளியாகவே நடித்திருப்பதால் அவரது தமிழும் உறுத்தாத இயல்புடன் ஒட்டிக் கொள்கிறது.

அச்சுறுத்தல் ஒரு பக்கம்.. அதிகார எல்லைகள் ஒரு பக்கமுமாக அழுத்தும் சுமையில் கமலுடன் அவர் நடத்தும் கிளைமாக்ஸ் பேச்சு குறிப்பிடத்தகுந்த பதிவு, அதிகாரியாகக் கையாலாகாத நிலையில், சம்பந்தப்பட்டவரைக் கண்ணாலாவது பார்த்துவிட முடிவு செய்து கமலை அவர் சந்திக்கும் கடைசிக்கட்டம் அற்புதம்.

தலைமைச் செயலாளராக வரும் லட்சுமியும் இருக்கும் எல்லைக்குள் தனது ஆற்றலைப் பதிவு செய்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராம், பரத் ரெட்டி, எஸ்.பிரேம்குமார் இளம் போலீஸ் அதிகாரிகளுக்கு பொருத்தமாக இருக்கிறார்கள். கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆக்ஷனிலும் கலக்க அருமையான வாய்ப்பு. ஆளுக்கேற்ற வேடத்தில் அடக்காமாகப் பொருந்தியிருக்கிறார் சேனல் நிருபராக வரும் அனுஜா.

ஆங்கிலம், புத்திசாலித்தனம் கலந்த வசனங்களில் ஆங்காங்கே எள்ளலும் கலந்து எழுதியிருக்கிறார் இரா.முருகன். தனக்குப் பாதுகாப்பு கேட்டு வரும் நடிகர் ஸ்ரீமன் "நான்தான் தமிழ்ல நம்பர் ஒன் ஸ்டார்.." எனும்போது "அதுதான் உங்க கம்ப்ளையிண்ட்டா..?" என்று மோகன்லால் கேட்குமிடம். உதாரணம்.

ரெட் ஒன் கேமிராவில் பதிவு செய்த மனோஜ்சோனியின் ஒளிப்பதிவில் குறிப்பிடத்தகுந்த ஆச்சரியம் எதுவும் இல்லை. பின்னணி இசையோடு முடிந்துபோகும் ஸ்ருதிகமலின் இசை படத்தோடு ஒன்றியிருக்கிறது.

யதார்த்தமாக கதையை உணரச் செய்ய இந்திய நிகழ்வுகளையே படத்தின் பின்னணிச் செய்தியாக்கியிருப்பது நல்ல பலனைத் தந்திருக்கிறது. அந்த வகையில் முதல்வரின் கோபாலபுரம் இல்லமும் படத்துக்குள் இடம் பெற்றிருப்பது அட..

முக்கியப் பாத்திரங்கள் கவனத்தைக் கவர்ந்தாலும், துணைப்பாத்திரங்களிடம் தெரியும் நாடகத்தனமான நடிப்பு ஒரு குறை. அதேபோல் கமலின் நியாயம் தெரிய வந்ததும், அவரது போன் நம்பரை டிரேஸ் செய்யும் இளைஞரும், புகைப்படத்தை வைத்து அடையாளம் சொன்ன போலீஸும் பின்வாங்குவது வழக்கமான கமர்சியல் டிராமா.

சீரியஸான கட்டத்தில் கமிஷனருக்கு வரும் பெர்சனல் போன் கால் காமெடி பல படங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய சரக்கு. நூற்றுக்கணக்கான மீடியாக்கள் குவிந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சேனலில் இப்படியொரு செய்தி வந்தால் மற்றவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்க மாட்டார்களா..?

தீவிரவாதத்தை வேரறுக்க தீவிரவாதம்தான் சரியான வழி என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பது எதிர்வினையாகும் நீதிதான்.

ஒன்பது வருடங்களுக்கு முன் தீவிரவாதம் தவிர்த்து அஹிம்சையை வலியுறுத்திய கமலை காலம் இப்படி மாற்றியிருப்பது விந்தைதான்..

ஹே ராம்..!!!

நன்றி : குங்குமம் விமர்சனக் குழு

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் - ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்..!

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - 'ஆனந்தவிகடன்' விமர்சனம்

நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம்.

காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார். வேறு வழியில்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இருபது நிமிடங்களுக்கு பளீர், சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ் டே படத்தின் தமிழாக்கம்.

காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிக்கூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் படத்தின் ரியல் ஹீரோ.

பிரேமுக்கு பிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்குச் சமமான ஸ்கோப், சொல்லப் போனால் தன்னைவிடக் கூடுதலாக வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், ஒரு பெர்ஃபெக்ட் ஃபிட், அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார்.

தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும், தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும், கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும் வெல்டன் லால்.(த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்புகளைத் தவிர்த்திருக்கலாம்)

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமல் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபித்திருக்கிறார். சின்சியருக்கு சின்சியர்.

ஜூனியர்களாக வரும் பரத்ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு. நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், ணோகன்லாலிடம் "கேன் ஐ ஸ்மோக் ஹியர்..?" எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.

ஒரு காமன்மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால் அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும், துணிச்சலும்தான்.

ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதாநாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் கிளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இங்கே கமலின் கோபத்திற்குச் சொல்லப்படுவதோ இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் தூண்டாத சமாச்சாரங்கள் பல(பெஸ்ட் பேக்கரிகூட..!) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம்கூடாது என்ற நியாயமான உண்மையை பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம்.

அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்(நாலில் மூவர் முஸ்லீம், ஒருவர் ஹிந்து) திரைக்கதை, வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால், கிளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது?

இருந்தாலும், 'இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்' என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

மதிப்பெண் : 42 / 100

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் - குமுதம் இதழ் விமர்சனம்..!

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - 'குமுதம்' விமர்சனம்

பயங்கரவாதத்துக்கு பயங்கரவாதிகளின் மொழியிலேயே தீர்வு தேடிப் புறப்படுகிற ஒரு பொதுஜனம்தான் உன்னைப் போல் ஒருவன்..

சமூகக் கோபத்தை ஆழ்ந்த மெளனத்தில் ஒளித்து வைத்திருக்கிற தேவைப்படுகிறபோது அதை அழுத்தமான கிண்டலாக வெளிப்படுத்துகிற குடும்பஸ்தனாக கமல் முழுமை பெறாத கட்ட மாடியில் தனி ஆளாய் லேட்பாட், டெலஸ்கோப், செல்போன்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு காவல்துறையையே மிரட்டுவது திரையில் ஐம்பது வருடங்களைக் கடந்த கமலுக்குப் பொருத்தமான ஹீரோயிசம்.

'அன்டர்ப்ளே' செய்ய வேண்டிய சில இடங்களில் தீவிர இலக்கியப் பத்திரிகைகளுக்குத் தலையங்கம் எழுதுவதுபோல் பேசுவதை மட்டும் எப்போது தவிர்ப்பாரோ..?

கமிஷனராக வருகிற மோகன்லால் புத்திசாலித்தனமான காட்சிகளாலும் முதிர்ச்சியான நடிப்பாலும் அழகாக கமலுக்கு ஈடு கொடுக்கிறார்.

தமிழக அரசியலில் அதி முக்கியமான ஒருவரின் தொனியில் ஒலிக்கிற முதல்வர் குரல், உள்துறைச் செயலாளராக மிடுக்காக வந்திறங்கும் லட்சுமியின் நாசூக்கான பல்டி ஆகியவை தேவையற்ற மெனக்கெடல்கள்.

காவல்துறையின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கமல் தனது மிஷினில் ஒரு தொலைக்காட்சி நிருபரை இழுத்துப் போடுவது சைலண்ட் சாணக்கியத்தனம். லாடம் கட்டுவதற்குப் பேர் போன போலீஸ் கணேஷும் என்கவுண்ட்டர் முடிந்த பிறகு டிவிக்கு சம்பிரதாய இண்டர்வியூ தருகிற பரத்ரெட்டியும் விறுவிறுப்பு சேர்க்கிற கேரக்டர்கள்.

ஸ்ருதிஹாசனின் பின்னணி இசை மிரட்டலுக்கு உதவுகிறது.

என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே 'சிவப்பு வயரை அத்துவிடுங்க..', 'பச்சை வயரை கழற்றி விடுங்க' என்று யோசனை சொல்வது டூ மச்.

யாரோ ஒருவரிடமிருந்து வருகிற ஒற்றைத் தொலைபேசி மிரட்டலுக்கே கமிஷனர், முதல்வர்வரைக்கும் போவதையும் நம்ப முடியவில்லை. தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளுவதற்கு கமல் கொடுக்கிற விளக்கத்தில் எக்கச்சக்க குழப்பம்.

வருடத்துக்கு இரு முறையாவது குண்டு வெடிப்புகளை அனுபவிக்கிற மும்பைவாசிகளின் கோபத்தை வெளிப்படுத்திய 'எ வெட்னெஸ் டே'யை நம்மூரில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் கமல்.

அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல், வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.

உன்னைப் போல் ஒருவன் - மூளைக்காரன். ஆனால் மேதையல்ல..!

டைரக்டர் வாய்ஸ்

கேள்வி : தன்னை சராசரி குடிமகன் என்று சொல்லிக் கொள்கிற கமல் துப்பாகி சகிதம் செயல்படுவது நெருடலாக இருக்கிறதே..?

சக்கி டோலட்டி : ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தையே வாங்க முடிகிற ஒருவரால் துப்பாக்கியையும், சுலபலமாக வாங்க முடியும். சாதாரண ஆள் என்றாலும், எதற்கும் தயாராக இருப்பதால்தான் கமல் துப்பாக்கி வைத்திருக்கிறார்.

வாசகர் கமெண்ட்

ப்ரவின்குமார் - கல்லூரி மாணவர்

"மோகன்லாலை பார்த்து கமல் பதட்டப்படும் க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப நல்லா இருக்கு.."

ரேட்டிங் : ஓகே

நன்றி : 'குமுதம்' இதழ் 30-09-2009

இணைப்புகள் :

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

விரயச் சனியின் முடிவும், ஜென்மச் சனியின் துவக்கமும்..!

26-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் போலத்தான் சென்ற வியாழக்கிழமையும் இருந்தது. காலையில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளும், வர வேண்டிய வரவுகளும் வழக்கம்போல தட்டிக் கழித்துப் போனபடியே இருக்க.. முருகன் கூடத்தான் இருக்கான் என்கிற அதே எண்ணத்தில்தான் இருந்தேன்.

மாலை ஆறு மணி இருக்கும். நடிகர் சிவக்குமார் எழுதிய 'டைரி குறிப்புகள்' என்னும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தவன் தலையில் கிர்ரென்று ஏதோ சத்தம். தொடர்ந்து புத்தகத்தில் இருந்த எழுத்துக்கள் கோணல், மாணலாகத் தெரியத் துவங்கின.

தலை சுற்றுவது புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்குவதில் இருந்து தெரிந்தது. 'என்னடா இது சோதனை..? நல்லாத்தான இருந்தோம்.. எல்லாம் நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு' என்று நினைத்தபடியே எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு திரும்பியவன் ஒரு கதவில் மோதி இன்னொரு கதவின் மீது விழுந்து திரும்பி நின்றபோது ஆஹா.. முருகன் விளையாட்டை ஆரம்பிச்சிட்டானே என்று தோன்றியது.

அவ்வளவுதான். அதற்கு மேல் முருகனைப் பற்றி யோசிக்கவெல்லாம் நேரமில்லை. வயிறு கலங்கியது. தலை கனத்தது. தலை சுற்றியது. அந்த அரைத் தள்ளாட்டத்துடன் டாய்லெட் சென்று அமர்ந்துவிட்டு கதவை உடைத்துவிட்டு வெளியே வந்தவன் வீட்டுச் சுற்றுச் சுவரில் மோதிதான் நின்றேன்.

உடலெங்கும் தெப்பமாக தண்ணீர் கொட்டியது. மூன்று வாளி தண்ணீரை ஊற்றியதுபோல் இருந்தது எனக்கு. வீட்டுக்குள் போக முடியாமல் வாசலிலேயே படுத்துவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரம்மா.. மேல் வீட்டுக்காரம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடி வந்தார்.

"இருங்க.. இருங்க.. எலுமிச்சம்பழம் கொண்டாரேன்.." என்று சொல்லிவிட்டு ஓடினார். அதற்குள்ளாக மதியம் சாப்பிட்டது மேலே வந்தே தீருவேன் என்று அடம்பிடிக்க சாக்கடையின் முன்பாக வாயைத் திறந்தேன்.. வாந்தியோ வாந்தி.. எடுத்து எவ்ளோ நாளாச்சு..? அப்படியே வாசலில் சுருண்டு விழுந்தேன்.

பக்கத்து வீட்டம்மாவின் எலுமிச்சம் பழச் சாறு கலந்த தண்ணீரைக் குடித்தும் போதை தெளியவில்லை. "யார் நீங்க..?" என்று கேட்க வேண்டும்போல் இருந்தது.

அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர் கைப்பிடித்துத் தூக்கிவிட ஆட்டோவில் அமர்த்தப்பட்டேன். வண்டி நெசப்பாக்கம் ஆரோக்யா மருத்துவமனையில் வந்து நின்றது. குடிகாரனைப் போல் சட்டை பட்டனைக்கூட போடாமல் தள்ளாடி தள்ளாடி வந்து நின்றவனை மருத்துவமனை அதிசயமாகப் பார்த்தது.

அவசரமாக ஒரு வெள்ளுடை தேவதை அருகில் வந்து "ஸார் வாங்க" என்று கையை நீட்ட நானும் வேகமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு உடன் ஓடினேன். என் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து அந்தத் தேவதையும் உடன் ஓடி வந்து ஒரு பெட்டை காட்ட.. அவ்வளவுதான் அப்படியே சுருண்டு படுத்தேன்.

மருத்துவர் ஒருவர் ஓடி வந்தார். "என்ன ஸார் பண்ணுது? என்ன சூஸைட் அட்டெம்ட்டா..?" என்று கேட்டு குரல்வளையில் கை வைத்தார். "ஐயோ.. அதெல்லாம் இல்ல ஸார்.. தலை சுத்துச்சு.. உடம்பு வேர்த்திருச்சு.. இப்ப வாந்தி வருது.." என்று சொல்லி முடிப்பதற்குள் வாந்தி குமட்டிக் கொண்டு வர.. அங்கேயும் ஒரு அக்கப்போர். பட்டென்று டப்பாவை எடுத்து நீட்டி அந்த தேவதையின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.. நல்ல ஸ்பீடுதான் போங்க..

சலைன் ஏற்றினார்கள்.. மயக்கத்தில் இருந்தவனைத் தட்டித் தட்டி பேர், ஊர், பிறந்த தேதி கேட்டார்கள். மயக்கத்தில் உளறியவனிடம் திரும்பித் திரும்பிக் கேட்டது ஒரு தேவதை. வேறு யாராவது கேட்டிருந்தால், எரிந்து விழுந்திருப்பேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்..

இ.சி.ஜி. எடுத்தார்கள். சுகர் செக் செய்தார்கள். பிளட் செக் செய்தார்கள். சலைன் அசுர வேகத்தில் இறங்கியது.. மூன்று மணி நேரத்தில் நான்கு பாட்டில்களை காலி செய்தது எனது உடம்பு.

கொஞ்சம் கொஞ்சமாக தேவதைகளின் முகத்தினை அடையாளம்காணும் அளவுக்கு தெம்பு வந்த பின்பு மருத்துவர் வந்து சொன்னார் "உங்களுக்கு பிளட்ல சுகர் கம்மியாயிருச்சு ஸார். அதான் பிராப்ளம்.." என்றார்.

"எனக்கு இதுவரைக்கும் அப்படியொரு பிரச்சினை வந்ததே இல்லையே.." என்றேன். "சரி.. இப்ப வந்திருச்சு.. இனிமே பார்த்து நடந்துக்குங்க.." என்று சொல்லி "இன்னும் இரண்டு சலைன் ஏற்ற வேண்டும்" என்றார்.

அலுவலகத்தில் இருந்து அரக்கப் பரக்க ஓடி வந்த என் மாப்ளை "மாமா.. இப்பவே ஆயிரம் ரூபா அவுட்டு.. சலைன் ஏத்திட்டு வீட்டுக்குப் போலாம்" என்றான். நம்ம நினைப்புதான் அம்பானிக்கே ஆப்பு வைக்குறவன் மாதிரில்ல இருக்கு..

ஒரு மணி நேரம் கழித்து வந்து நலம் விசாரித்த பெரிய டாக்டரம்மாவிடம், "இன்னும் கொஞ்சம் தலை சுத்துற மாதிரியிருக்கு.. எந்திரிச்சு உக்கார முடியலை.." என்றேன்.. "அப்புறம் அதுக்குள்ள எதுக்கு வீட்டுக்கு? மேல பெட்ல சேருங்க.. ராத்திரி இன்னும் ஒரு பாட்டில் ஏத்திரலாம்.." என்று சொல்லிவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்ட.. மாப்ளை தூக்கிப் போட்டு மிதிப்பது மாதிரி முறைத்தான்.

இரவு பத்து மணிக்கு ஏற்றத் துவங்கிய சலைன் மிக மெதுவாக போய்க் கொண்டிருக்க பொறுமை இழந்து நானே அதன் ஸ்பீடை கூட்டி வைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்த ஒரு தேவதை "என்னாச்சு? இவ்ளோ ஸ்பீடா போகுது..? யார் வைச்சது..?" என்றார். "ஸ்பீடா..? அப்படீன்னா..?" என்று அப்பாவியாய் நான் கேட்டதும், "கையை இப்படி, அப்படி நகத்தாதீங்க.. ஒரே மாதிரி வைங்க." என்று அட்வைஸை அள்ளிவீசிவிட்டு ஸ்பீடை குறைத்து என் நெஞ்சில் பாறாங்கல்லை புதைத்துவிட்டுப் போனது அந்தத் தேவதை.

விடுவேனா நான்.. மறுபடியும் ஸ்பீடை கூட்டி வைத்து முடியப்போகும் நேரத்தில் சற்றுக் குறைத்துவைத்து பெல் அடித்தேன். வந்து பார்த்த தேவதை, "எப்படி அதுக்குள்ள முடிஞ்சது..?" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே குழாயை உருவிவிட்டுப் போனது.

காலையில் முழித்தால் ஒரு தேவதையின் முகத்தில்தான் முழிக்க வேண்டும் என்று நினைத்தபடியே தூங்கிப் போனவன் காலையில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டவுடன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு வேண்டுமென்றே படுத்திருக்க.. "ஸார்.." என்ற இனிய குரலைக் கேட்டவுடன் சந்தோஷமாக கண்ணைத் திறக்க கையில் விளக்கமாற்றுடன் ஒரு கூட்டுகிற அம்மா நின்றிருந்தார். நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான்..

இன்று வீட்டுக்குச் சென்றே தீர வேண்டும் என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு இருந்ததால் "எல்லாம் நல்லாயிருக்கு.." என்ற பொய்யைச் சொல்லித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு நாள் மருத்துவனை செலவு மொத்தமாக சேர்த்து 2500 ரூபாய் என்றானது. கொடுமைதான்.. என்ன செய்வது..?

வேலையில்லாத இந்த நேரத்தில் என்னத்துக்கு மூணு வேளையும் மூக்குப் பிடிக்கக் கொட்டிக்கணும் என்று நினைத்து காலை சாப்பாட்டை தியாகம் செய்தது முதல் காரணம்..

இருக்கின்ற டென்ஷனில் அத்தனை பிரச்சினைகளையும் ஒரு சேர இழுத்துக் கொண்டு பி.பி.யை பதற வைத்தது இன்னொரு காரணம்..

எல்லாம் சேர்த்து கஷ்டகாலத்திலும் ஒரு கஷ்டமாக செலவை இழுத்துவிட்டது.. இப்போதும் உடல்நிலை அப்படியேதான் உள்ளது.. ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல் மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது. எப்போது தெளிவாகும் என்று தெரியவில்லை..

எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்து கை அரித்ததினால் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து தமிழ்மணத்தை நோண்ட.. மிகச் சரியாகப் பாருங்கள்.. நமது சக பதிவர் தேவன்மாயம், சர்க்கரைக் குறைவு - என்ன செய்ய வேண்டும்? என்கிற தலைப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது எப்படி இருக்கு..? படித்துப் பாருங்கள் பதிவர்களே.. இந்தக் குறை உள்ளவர்கள் இனிமேலாச்சும் தேவன்மாயம் அண்ணன் சொல்ற மாதிரி சூதானமா நடந்துக்குங்க..

இதைத்தான் தெய்வச் செயல் என்பதா..?

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இன்னொன்று..

கடந்த இரண்டரை வருடங்களாக என்னை ஆட்டி வைத்தது 'விரயச் சனி'யாம்.. நமக்குத்தான் செலவே இல்லையே என்று தெம்பாக இருந்தவனுக்கு 'விரயச் சனி' முடிய இருந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் வேலையைக் காட்டிவிட்டான் சனி பகவான்..

இந்த லட்சணத்தில் இன்று பிற்பகல் 3.18 மணிக்கு எனது ராசியான கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து, அடுத்த இரண்டரை ஆண்களுக்கு எனக்கு 'ஏழரைச் சனி'யை வாரி வழங்கப் போகிறானாம் சனி பகவான்..

ஆக, அடுத்த மூன்றாண்டுகளில் பதிவர்களுக்கு என்னிடமிருந்து இது போன்ற நிறைய புலம்பல் பதிவுகள் வருவதற்குக் காத்திருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

அடேய் மயிறு கோவணான்டி..!!!

உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு

22-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நான் கடவுள்' திரைப்படத்திற்குப் பிறகு அண்ணன் கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படமே, வலையுலகத்தில் படம் வெளியாவதற்கு முன்பே மிகுந்த சர்ச்சையையும், ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது.


அதனை நிரூபிப்பதுபோல் இப்போது திரைப்படம் வெளியான பின்பு திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் நிரம்பி வழிகின்றன. திரைப்படம் மீதான விமர்சனம் தற்போது திசை மாறி கருத்து மோதல்கள்.. தனி மனித தாக்குதல்கள்.. என்ற திசையில் போய்க்கொண்டிருக்கிறது.

ஒருவரின் பதிவைப் படித்தால் ஒரு விஷயம் புரிகிறது. இன்னொருவரின் பதிவைப் படித்தால் அதே விஷயத்தின் வேறொரு பரிணாமம் தெரிகிறது. இப்படி இத்திரைப்படம் தொடர்பான புரிதல்கள் தொடர்கதையாக போய்க் கொண்டிருப்பதால் அனைத்து விமர்சனப் பதிவுகளையும் ஒரே இடத்தில் வைத்தால், படிப்பவர்களுக்கு வசதியாக இருக்குமே என்றெண்ணி என்னால் முடிந்த அளவுக்குத் தொகுத்து வைத்துள்ளேன்.

இதில் விமர்சனம் எழுதி இடம் பெறாத பதிவுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவர்கள் தயவு செய்து உடனடியாக அந்தப் பதிவுகளின் லின்க்குகளை அனுப்பவும்.

இது விமர்சனங்களை படிக்க விரும்பும், பல விஷயங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் வலையுலகப் பார்வையாளர்களுக்காக நம்மால் முடிந்த உதவி..

1. பதிவர் இட்லிவடை

2. பதிவர் கேபிள் சங்கர்

3. பதிவர் செந்தில்

4. பதிவர் குசும்பன்

5. பதிவர் இளா-1

6. பதிவர் பரிசல்காரன்-1

7. பதிவர் சுகுணாதிவாகர்-1

8. பதிவர் காட்டாமணக்கு-1

9. பதிவர் கோவி.கண்ணன்-1

10. பதிவர் மாதவராஜ்-1

11. பதிவர் சுபாங்கன்

12. பதிவர் உண்மைத்தமிழன்

13. பதிவர் ஆதிமூலகிருஷ்ணன்

14. பதிவர் பட்டர்பிளை சூர்யா

15. பதிவர் அதிஷா

16. பதிவர் யுவகிருஷ்ணா

17. பதிவர் கீர்த்தி

18. பதிவர் தர்ஷன்

19. பதிவர் முருகானந்தம்

20. பதிவர் வெண்பூ

21. பதிவர் வடகரைவேலன்

22. பதிவர் அதிரைபோஸ்ட்

23. பதிவர் ஆழியூரான்

24. பதிவர் மருதநாயகம்

25. பதிவர் விசா

26. பதிவர் கோவை ராம்

27. பதிவர் ஆர்.செல்வகுமார்

28. பதிவர் வந்தியத்தேவன்

29. பதிவர் கூல்கார்த்தி

30. பதிவர் அருண்

31. பதிவர் மகேஷ்

32. பதிவர் எட்வின்

33. பதிவர் மருதமூரான்

34. பதிவர் இளா-2

35. பதிவர் லோஷன்

36. பதிவர் சென்ஷி

37. பதிவர் பனிமலர்

38. பதிவர் பீர்

39. பதிவர் மோகன்தாஸ்

40. பதிவர் துரை

41. பதிவர் அபுல்கலாம் ஆசாத்

42. பதிவர் நர்சிம்-1

43. பதிவர் கோவி.கண்ணன்-2

44. பதிவர் காட்டாமணக்கு-2

45. பதிவர் தண்டோரா

46. பதிவர் சந்தோஷ்

47. பதிவர் லால்பேட்டை OPJ.அமீன்

48. பதிவர் பரிசல்காரன்-2

49. பதிவர் சுரேஷ்

50. பதிவர் கவிதா

51. பதிவர் அப்பாவி முரு

52. பதிவர் செல்வேந்திரன்

53. உன்னைப் போல் ஒருவனும் கரப்பான்பூச்சிகளும் - பதிவர் சுகுணா திவாகர்-2

54. தமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் - பதிவர் துக்ளக் மகேஷ்

55. உன்னைப் போல் ஒருவனை முன் வைத்து.. - பதிவர் மாதவராஜ்-2

56. பாக்ஸ் ஆஃபீஸில் உன்னைப் போல் ஒருவன் நிலவரம் - பதிவர் வருண்

57. கதையின் சுதந்திரம் - பதிவர் எவனோ ஒருவன்

58. உன்னைப் போல் ஒருவன் - முரண்களும், சந்தேகங்களும் - பதிவர் ஜோ

59. உ.போ.ஒ. - நா.இ.பா. - பதிவர் கார்க்கி

60. சில விளக்கங்கள் & பதிவர் சந்திப்பு - பதிவர் நர்சிம்-2

61. எவனைப் போல எவனும் இல்லை - பஞ்சாமிர்தம் - பதிவர் - நான் ஆதவன்

62. காமன்மேன் என்பவன் யார்..? - பதிவர் டி.வி.ராதாகிருஷ்ணன்

63. நம்மைப் போல் ஒருவன் - பதிவர் ஜெஸிலா

64. உ.போ.ஒ.கமலும், பிற்சேர்க்கையும் - பதிவர் இரும்புத்திரை அரவிந்த்-1

65. கார்ட்டூன்-23-09-09-உ.போ.ஒ. ஸ்பெஷல் - பதிவர் குசும்பன்

66. மனநோயாளிகளின் உலகம் - உ.போ.ஒ. ஒரு பார்வை - பதிவர் ஆசிப் மீரான்

67. பாட்டி சுட்ட கதையும், என்னைப் போல் ஒருவனும் - பதிவர் மணிவண்ணன்

68. உன்னைப் போல் ஒருவன் - எ வெட்நெஸ் டே ஒப்பீட்டுப் பார்வை - பதிவர் பிரசன்னா இராசன்

69. ஒரிஜினல் திருட்டு விசிடி - உன்னைப் போல் ஒருவன் - பதிவர் ரசனைக்காரி

70. உன்னைப் போல் ஒருவன் - க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன் - பதிவர் வருண்-2

71. உன்னைப் போல் ஒருவன், வருண், விகடன் - பதிவர் வந்தியத்தேவன்-2

72. நாங்களும் ரவுடிதாண்டியேய் - உ.போ.ஒ. - பதிவர் ராஜூ

73. உன்னைப் போல் ஒருவன் விமர்சனம் - பதிவர் கார்க்கிபேஜஸ்

74. உன்னைப் போல் ஒருவன் - வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம் - பதிவர் மது

75. உன்னைப் போல் ஒருவன் - மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும் - பதிவர் ஜ்யோவ்ராம்சுந்தர்

76. உன்னைப் போல் ஒருவன் - பதிவர் பழமைபேசி

77. கமலஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி - பதிவர் குடுகுடுப்பை

78. நண்பர்கள் என்று நம்பியவர்கள்... - பதிவர் சுகுணா திவாகர்-3

79. யார் இந்து பாசிஸ்டு? - பதிவர் மாதவராஜ்-3

80. உ.போ.ஒ. ஒன்பது ஓட்டைகள் - பதிவர் கோவி.கண்ணன்-3

81. ஒரு புதன்கிழமை - உ.போ.ஒ. இல்லை - பதிவர் கிருஷ்ணமூர்த்தி

82. கிச்சடி - உ.போ.ஒ. மவுனத்தின் மொழிக்கு எதிர்வினை - பதிவர் மணிகண்டன்

83. உன்னைப் போல ஒரு வாழைப்பழம் - ஒரு வெளிக்குத்து - பதிவர் இரும்புத்திரை அரவிந்த்-2

84. கவுண்டமணி, செந்தில், உ.போ.ஒ. - பதிவர் இரும்புத்திரை அரவிந்த்-3

85. உன்னைப் போல் ஒருவன் - திரை விமர்சனம் (சுடச்சுட) - பதிவர் வி.எஸ்.கே.

86. சுகுணா - சுயதம்பட்டம், ஆணாதிக்கம், ஆதிக்கச் சாதி மனப்பான்மை - பதிவர் பைத்தியக்காரன்

87. திசை மாறவும் வேண்டாம், குறி தவறவும் வேண்டாம் - பதிவர் மாதவராஜ்-4

88. உன்னைப் போல் ஒருவன் பற்றி - பதிவர் ராஜூ

89. உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் பற்றி - பதிவர் சரவணக்குமார் MSK

90. உ.போ.ஒ. வசனங்களும், வசனகர்த்தா இரா.முருகனும் - பதிவர் சரவணக்குமரன்

91. யாருமற்ற ஒருவனும், மோடியும் - பதிவர் பிரபு ராஜதுரை

92. கண்ணாடியில் தெரியும் பிம்பம் - பதிவர் சாருநிவேதிதா

93. குமுதம் இதழ் விமர்சனம்

94. ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

95. குங்குமம் இதழ் விமர்சனம்

96. தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

97. சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

98. உ.போ.ஒ. கமலின் குசும்பும், பொது புத்தியும், நம் ரசனையும் - பதிவர் சர்வேசன்

99. உன்னைப் போல் ஒருவன் - விடுபட்டவை - பதிவர் உறையூர்காரன்

100. உன்னைப் போல் ஒருவன் - திரை, சமூக விமர்சனம் - பதிவர் மணிவண்ணன்

101. உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம் - பதிவர் கார்த்திக்

102. ஏமாற்றிய கமல் - பதிவர் ஷாகுல்

103. உ.போ.ஒ. பதிவுலகம் மீதான ஒரு ஸ்டூப்பிட் காமன் பிளாக்கரின் கோபம் - பதிவர் குளோபன்

104. உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம் - பதிவர் தமிழர் செய்தி

105. உன்னைப் போல் ஒருவன் - நானும், நீயும் - பதிவர் ஸ்டார்ஜன்

106. புதன்கிழமையன்று பார்த்த உ.போ.ஒ. - பதிவர் சுரேஷ்கண்ணன்

107. மிஸ்டர் பொதுஜனமும், புதன்கிழமையும் - பதிவர் சுரேஷ்கண்ணன்

108. உன்னைப் போல் ஒருவன், எ வெட்னெஸ் டே - ஒரு ஒப்பீடு - பதிவர் ராஜநடராஜன்

109. உன்னைப் போல் ஒருவன் - பாசிசத்தின் இலக்கியம் - பதிவர் வினவு

110. உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம் - பதிவர் கே.ரவிஷங்கர்

111. காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம் - பதிவர் நல்லடியார்

112. உன்னைப் போல் ஒருவன் - சொல்ல வரும் செய்தி என்ன? - பதிவர் இனியவன்

113. நானும் காமன் பிளாக்கர் - என்னையும் ஆட்டையில சேர்த்துக்குங்க - பதிவர் ஊர்சுற்றி

114. ஒரு காமன்மேனின் பார்வையில் உன்னைப் போல் ஒருவன் - பதிவர் யோகா

115. உன்னைப் போல் ஒருவன் - யார் நீ??? - பதிவர்கள் கம்யூனிஸ்டு தோழர்கள்

116. பற்றியும் பற்றாமலும் - உன்னைப் போல் ஒருவனும், மற்றவர்களும் - பதிவர் அனுஜன்யா

117. உன்னைப் போல் ஒருவன் - பெரிய ஓட்டை - பதிவர் யோசிப்பவர்

118. உன்னைப் போல் ஒருவன் - My Views - பதிவர் வரதராஜூலு

119. ஒரு காமன்மேனின் பார்வையில் உன்னைப் போல் ஒருவன்

120. நான் முஸ்லீம் விரோதி அல்ல..! மக்கள் உரிமைக்காக மனம் திறந்த கமல்ஹாசன்-1

121. நான் முஸ்லீம்கள் விரோதி அல்ல..! கமலஹாசன் பேட்டி தொடர்ச்சி-2

122. உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் உருவாக்கிய காயங்கள்

123. விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் கமலஹாசன்-1

124. விமரிசனத்தை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் கமலஹாசன்-2

125. கலை ஒலக மாமேதை ஒலகநாயகன் அய்யா சமூகத்துக்கு-1-எழுத்தாளர் பாமரன்

126. உலக நாயகன் கமலுக்கு பகிரங்கக் கடிதம்-2-எழுத்தாளர் பாமரன்

127. உன்னைப் போல் ஒருவன்:கமலுக்கு பகிரங்கக் கடிதம்-3-எழுத்தாளர் பாமரன்


(பட்டியல் தொடரும்)