மீகாமன் - சினிமா விமர்சனம்

28-12-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எப்போதும் வருடக் கடைசியில் ஏதாவது ஒரு படம் ரசிகர்களைக் கவரும்வகையில் வந்து பரபரப்பை கூட்டும். சென்ற வருடம் ‘விடியும் முன்’ படமும் ‘மதயானைக் கூட்டமும்’. இந்த வருடம் ‘மீகாமன்’ மட்டுமே..!
கதை நடக்கும் இடம் கோவா. ஆனாலும் தமிழ் ரசிகர்களுக்கு புரிவதற்காக ‘அனைத்து கதாபாத்திரங்களும் தமிழில் வசனம் பேசுகிறார்கள்’ என்று டைட்டிலின் துவக்கத்திலேயே கார்டு போட்டு பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர். நன்று.

கோவாவின் மிகப் பெரிய போதை கடத்தல் மன்னனாக இருப்பவன் ஜோதி. பெயர்தான் தெரியுமே தவிர.. ஆள் எப்படி இருப்பான்..? எங்கே இருக்கிறான்..? குடும்பம் இருக்கிறதா இல்லையா..? அடியாட்கள் யார், யார் என்ற எந்த விவரமும் போலீஸுக்கு தெரியாது.
வெகு நாட்களாக தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் ஜோதியைப் பிடிக்க ஒரு அண்டர்கிரவுண்ட் நாடகம் போடுகிறது போலீஸ். போலீஸ் அதிகாரிகள் இருவரை போதை மருந்து கடத்தல்காரர்களின் கூட்டத்தில் ஊடுருவ வைக்கிறது. இதன்படி ஆர்யா ஜோதியின் தளபதி மகாதேவனுடனும், ரமணா ஆஷிஷ் வித்யார்த்தியுடனும் இணைகிறார்கள்.
ஜோதியை வெளியே கொண்டு வர கோவாவிற்குள் 1000 கிலோ போதைப் பொருள் வந்திருப்பதாக தகவலைப் பரப்புகிறது போலீஸ். செய்தியறிந்து அந்த போதைப் பொருளை விலை பேசுகிறான் ஜோதி. ஆனால் அவன் நேரடியாக வராமல் டீலிங் முடியாது என்கிறது போலீஸ் டீம்.
இந்த நேரத்தில் இந்த ஆபரேஷனை செய்யும் போலீஸ் உயரதிகாரிகளின் மீது தனிப்பட்ட ஈகோவினால் கோபப்படும் போலீஸ் துறை மேலதிகாரிகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து.. முதல்கட்டமாக 100 கிலோ போதைப்பொருள் ஜோதி டீமுக்கு கை மாறும் நேரத்தில் மும்பை போலீஸால் அது கைப்பற்றப்படுகிறது.
அந்த போதை பொருளை வைத்திருந்த தங்களுடன் நட்பாக இருந்த ரமணாவை பிடித்து ஜோதி டீமிடம் ஒப்படைக்கிறார் ஆஷீஷ். கடுமையான சித்ரவதையினால் மகாதேவன் டீமில் இருக்கும் ஆர்யாவைக் காட்டிக் கொடுக்கிறார் ரமணா. இதையறிந்த ஆர்யா கடைசி நிமிடத்தில் அனைவரையும் கொலை செய்துவிட்டுத் தப்பித்துப் போகிறார்.
இப்போது போலீஸ் ஒரு பக்கமும், ஜோதி அண்ட் ஆஷிஷ் வித்யார்த்தி டீம் இன்னொரு பக்கமுமாக ஆர்யாவைத் தேடத் துவங்குகிறார்கள். ஆர்யாவின் இந்த ஆபரேஷனை தெரிந்து வைத்திருக்கும் இரண்டு போலீஸ் உயரதிகாரிகளான அனுபமா குமாரும், ஓ.ஏ.கே.தேவரும் சுட்டுக் கொல்லப்பட.. ஆர்யாவுக்கு போலீஸ் துறையில் இருந்து உதவி கிடைக்காமல் போகிறது.
தானே புதிதாக ஒரு டிராமா போட்டு, வாலண்டியராக ஜோதி டீமிடம் சென்று சரணடைகிறார் ஆர்யா. அங்கே ஜோதியை பார்த்து கதையை திருப்பிப் போட்டு தான் நல்லவன், நம்பிக்கையானவன் என்பதை நிரூபிக்க முயல்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதி கதை.
ஆர்யாவுக்கு டூயட் இல்லை. ஏமாற்றுத்தனமான சிரிப்பு இல்லை.. ஆனால் ஆக்சன் நடிப்பு உண்டு. ரொம்பவும் சொல்வதுபோல அவருக்கான நடிப்புக்கு வாய்ப்பில்லையென்றாலும் முழு நீள ஆக்சன் படம் என்பதால் அதையெல்லாம் யோசிக்கவே நேரமில்லை.
நடிப்பென்று பார்த்தால் முதலிடம் ஜோதியாக நடித்திருக்கும் வில்லன் அஷுடோஸ் ராணாதான்.. ஒரு வில்லனுக்கே உரித்தான கெட்டப்போடு தமிழ் வார்த்தைகளை நிதானமாக, அழகாக உச்சரித்து அந்தக் குரல் மூலமே தன்னுடைய கேரக்டரை பயமுறுத்த வைத்திருக்கிறார். டப்பிங் வாய்ஸ் கொடுத்தவருக்கும் பாராட்டுக்கள்..!
ஹன்ஸிகா இந்தப் படத்திற்கு தேவையே இல்லைதான். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஆர்யாவை சைட் அடிப்பது போலவும், அவரை காதலிப்பது போலவும் ஒரு லூஸுத்தனமான கேரக்டர். இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் தான் ஒரு பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டு அழுததாகச் சொன்னார் ஹன்ஸிகா. அந்தப் பாடல் காட்சியை பார்த்தால் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லையே என்றுதான் தோன்றுகிறது. இதைவிட நெருக்கமான காட்சிகளிலெல்லாம் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் ஹன்ஸிகா. ஒருவேளை தமிழில் இதுதான் முதல்முறை என்பதால் பயந்துவிட்டாரோ..?
ரமணா, மகாதேவன், ஆஷிஷ் வித்யார்த்தி, அனுபமா குமார், ஓ.ஏ.கே.தேவர் என்று நிறைய நட்சத்திரங்கள்.. அவரவர் கேரக்டர்களுக்கேற்றபடி படத்தின் தன்மை மாறாமல் நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் மகிழ் திருமேனி மிகப் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு கமர்ஷியல்.. ஆக்சன் படங்களுக்கு எப்படிப்பட்ட இறுக்கமான இயக்கம் தேவை என்பதை இந்தப் படத்தை பார்த்தாலாவது நமது இன்றைய இளைய இயக்குநர்கள் கற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு காட்சியும் புதிது புதிதாகத் தெரிவதை போல அமைத்திருக்கிறார்கள். ஷாட் பை ஷாட் வித்தியாசமான கோணங்கள்.. லைட்டிங்ஸ்கள் என்று நம்மை கவர்ந்திழுக்கிறது இயக்குநரின் இயக்கம்.
இதற்கு உறுதுணையாக இருப்பது சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு. ‘பேராண்மை’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சதீஷ்குமார்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்றே சொல்ல்லாம்.. அதிகமாக இரவு நேரக் காட்சிகள்தான் படமாக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் கண்ணைக் கவர்கின்ற கேமிராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளும், காட்சியமைப்புகளும்.. வெல்டன் சதீஷ்குமார்..
தமன் இசையமைப்பில் 2 பாடல்கள். இரண்டுமே மனதில் நிற்கவில்லை என்பது சோகமான விஷயம். முதலில் இந்தப் படத்திற்கு பாடல் காட்சிகளும், காதல் காட்சிகளும் தேவையே இல்லை.. ஹன்ஸிகாவினால் படத்திற்குக் கிடைத்த ஒரேயொரு லாபம்.. அவரது செல்போனை வைத்துத்தான் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களையும் தாண்டி ஒருவர் படத்தை பேச வைத்திருக்கிறார். அவர் எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த். இப்படியொரு கேங்ஸ்டர் படம் காட்சிக்கு காட்சி எந்த மாதிரியான மனநிலையை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டுமோ அதைக் காட்டுவதற்கு மிகப் பெரிய அளவுக்கு பிரயத்தனம் செய்திருக்கிறார் எடிட்டர். படத்தொகுப்பின் பிரமாதத்தோடு சவுண்ட் ரெக்கார்டிங்கிற்காகவும் இந்தப் படத்தை பாராட்டியே ஆக வேண்டும்.  மணிரத்னம் ஸ்டைல் உச்சரிப்புகூட தெளிவாக கேட்கும் அளவுக்கு ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..
கொஞ்சம் வன்முறை கலந்த காட்சிகள் இருப்பினும், ஆக்சன் படத்திற்கு அது அவசியம் தேவை என்பதாலும் இரண்டரை மணி நேர பொழுது போக்கிற்கு இந்தப் படம் உத்தரவாதம் அளித்திருக்கிறது..
‘மீகாமன்’ என்றால் ‘கப்பலின் கேப்டன்’ என்று அர்த்தமாம்.. இந்த ‘மீகாமனி’ன் ‘மீகாமன்’ நிச்சயமாக படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிதான்..! ‘தடையறத் தாக்க’ படத்திற்கு அடுத்து இந்தப் படத்திலும் தனது முத்திரையை ‘நச்’ சென்று பதிவு செய்திருக்கிறார். பாராட்டுக்கள்..
சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

கப்பல் - சினிமா விமர்சனம்

27-12-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் ஷங்கருக்கு நகைச்சுவை என்றால் மிகவும் பிடிக்கும். நகைச்சுவை நடிகர்களின் பேச்சுக்களை விரும்பிக் கேட்பார். அவர்களுடன் நிறைய பேசுவார். நகைச்சுவை படங்களை விரும்பிப் பார்ப்பார். எல்லாம் சரிதான். இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் அவருக்கு படத்தை வாங்கி வெளியிடும் அவரை கொண்டு போயிருக்கிறது என்றால் இது நிச்சயம் கடவுள் அருள்தான்.

சின்ன வயதில் இருந்தே திருமணம் செய்யக் கூடாது என்ற கொள்கையில் இருக்கும் நண்பர்களுடன் இருப்பவன் ஹீரோ வாசு. வாலிப வயது வந்தவுடன் காதலிக்க மனசு துடிக்கிறது. ஆனால் நண்பர்களுக்கு செய்த சத்தியம் தடுக்கிறது. அதையும் மீறி சென்னைக்கு ஓடி வந்து ஒரு காதலியைத் தேடிப் பிடிக்கிறார். அதற்குள் அவரது நண்பர்களும் சென்னைக்கு வந்துவிட அவர்களுக்குத் தெரியாமல் தனது காதலை வளர்க்கத் தெரியவில்லை ஹீரோவுக்கு. நண்பர்கள் ஹீரோவின் காதலை முறியடிக்க நினைக்கிறார்கள். இதைச் செய்து முடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை..
நகைச்சுவை படம் என்றாலே லாஜிக் தேவையில்லைதான். ஆனால் இந்த அளவுக்கா..?
இப்படியொரு நண்பர்கள் குழாமை இந்தியாவில் எந்த மூலையிலும் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் குடும்பத்தில் பார்க்கலாம்.. இப்படியொரு குரூர மனம் கொண்டவர்கள் நமக்கு நண்பர்களாகவும் இருக்க முடியாது. நட்பின் வலிமையைக் காட்டுவதற்கு வேறு மையக் கருத்தே கிடைக்கலியா இயக்குநர் ஸார்..?
காட்சியமைப்புகளில்தான் நகைச்சுவையைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்கத் திறமையுள்ளவர்தான். நன்கு தெரிகிறது.. விடிவி கணேஷின் ஒரு சின்ன ஆக்சனிலேயே சிரிப்பை வரவழைக்கிறார் இயக்குநர். ஆனாலும் அநியாயத்திற்கு காட்சிக்கு காட்சி லாஜிக் உதைப்பதால் இடைவேளைக்கு பின்பு ரசிக்கவே முடியவில்லை. காட்சிகளால் சிரிக்கப்பட்டு ஏதோ கடமையை ஆற்ற வேண்டியதாகிவிட்டது.
ஹீரோயின் குடிபோதையில் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டார் என்பதற்காக ஹீரோ அடுத்த நாளே அவரது வீட்டில் போய் நிற்பதெல்லாம் கொட்டாம்பட்டியில்கூட நடக்காதே இயக்குநர் ஸார்..? இத்தனை பெரிய கோடீஸ்வர பெண்.. யாரோ ஒருவன்.. முன் பின் தெரியாதவன்.. பார்த்தவுடன் அவன் தகுதியென்ன என்பதுகூட தெரியாமல் காதலித்துவிடுவாளா..?
நண்பர்கள் செய்யும் கலாட்டாக்களை சிரித்துக் கொண்டே ஜஸ்ட் லைக் தேட் பாணியில் வைபவ் எதிர்கொள்வதெல்லாம் நமக்கே கோபத்தைக் கிளப்புகிறது. அவ்ளோ பெரிய கோடீஸ்வரப் பெண்ணிற்கு கடுப்பாகாதா..? நட்புதான் முக்கியம் என்பதற்கு ஹீரோ எதை முன் வைக்கிறார் என்பதை மட்டும் படத்தில் சொல்லவேயில்லை. இதனாலேயே நட்பு என்று சொல்லும்போதெல்லாம் எரிச்சல்தான் வருகிறது.!
முதலில் இந்தப் படத்திற்கு எப்படி ‘யு’ சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரணை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். சிறந்த படங்களில்கூட ஏதாவது ஒரு லொட்டு, லொசுக்கை சொல்லி ‘யு’ தர மறுக்கும் சென்சார் போர்டு ‘ஏ’ சர்டிபிகேட் பெறும் முழு தகுதியுள்ள இந்தப் படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்தது மோசடித்தனம் என்றே தோன்றுகிறது.
நகைச்சுவையில் பிளாக் காமெடி என்ற ஒரு வகையும் உண்டு. குழந்தைகளைக் கவரும் காமெடியும் உண்டு. இது பிளாக் காமெடி படம். இதைப் போய் குடும்பத்துடன் பாருங்கள் என்றால் எப்படி..?
கேரக்டர் ஸ்கெட்ச்கூட முற்றிலும் அர்த்தமற்றதாக இருக்கிறது. நண்பர்களின் குடும்பத்தினரை காணவில்லை. இந்த நண்பர்கள் வேலை வெட்டிக்கே போகவில்லையெனில் சோத்துக்கு என்ன செய்கிறார்கள். இவர்கள் திருமணம் செய்ய மாட்டோம் என்ற கருத்திற்கு அவர்களது குடும்பத்தினர் ஏதும் சொல்லவில்லையா..?
இரட்டை அர்த்த வசனங்கள்.. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்.. கொஞ்சமும் நட்பை உயர்வாகக் காட்டிவிடாத திரைக்கதை.. இப்படி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்தான் மகா சொதப்பல்..
ஏதோ சில காமெடி சீன்களினால் கிளைமாக்ஸ் தள்ளாடி தள்ளாடி செல்கிறது. ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை. மணமகனை ஜட்டியோடு மண்டபத்துக்குள் ஓட விட்டால் எப்படி..? நம் மக்கள் எதையும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்துவிட்டார்களோ..?
இதில் நடிகர்களின் நடிப்பெல்லாம் எதற்கு..? இசையும் சுமார்தான்.. பாடல் காட்சிகளை எடுத்திருக்கும் விதம் மட்டுமே ரசனையானது. ஹீரோயினிடம் கோடம்பாக்கம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
பெண்கள் பக்கமே போகாதவர்கள்.. பெண் வாடையை நுகராதவர்களுக்கு பெண்கள் கிடைத்தால் என்னாகும் என்பதை ஹீரோவும், அவரது திருமணம் செய்யப் போகும் நண்பனும் காட்டிவிடுகிறார்கள்.
ஹீரோ எப்போதும் ஹீரோயினை கட்டிப் பிடிப்பதையே  கொள்கையாக வைத்திருக்கிறார். இன்னொரு நண்பரோ பெண் பார்க்கச் சென்ற இடத்தில் “தனியா பேசணும்..” என்று சொல்லி பொண்ணை அழைத்துச் சென்று கட்டிலில் கட்டிப் பிடித்து உருள்கிறார். இந்த விபரீதத்தை தெரிந்தோ, தெரியாமலோ படமாக்கியிருக்கும் ஒரு விஷயத்திற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு மிகப் பெரிய இயக்குநரிடம் வேலை பார்த்தவர்.. தொழில் கற்றுக் கொண்டவர் என்பதால் அவரது படம் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்போடு வந்தவர்களை வெறுமனே ஏமாற்றி அனுப்பியிருக்கிறார் இயக்குநர்.
அடுத்தடுத்த படங்களை நிச்சயம் சமூகப் பொறுப்போடு எடுக்கிறேன் என்று சமீபத்திய பிரஸ்மீட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் கிரீஷ். அதைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்..

2014 - வெளியான திரைப்படங்கள் - ஒரு புள்ளி விபரம்..!

26-12-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2014-ம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் மற்றும் டப்பிங் படங்களை கணக்கில் கொண்டு சில புள்ளி விபரங்களை இங்கே தருகிறோம் :
2014-ல் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் – 213
2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31
2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11
2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5
2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4

 2014-ல் வெளியான கன்னட டப்பிங் திரைப்படம் – 1
நேரடி தமிழ்ப் படங்களின் வெளியீடு – மாதங்களின் கணக்கில் :
ஜனவரி – 19
பிப்ரவரி – 19
மார்ச் – 19
ஏப்ரல் – 14
மே – 14
ஜூன் – 20
ஜூலை – 11
ஆகஸ்ட் – 19
செப்டம்பர் – 20
அக்டோபர் – 15
நவம்பர் – 22
டிசம்பர் – 22
குறைவு – ஜூலை மாதம் – 11 படங்கள்
அதிகம் – நவம்பர்-டிசம்பர் மாதங்கள் – 22 படங்கள்
——————————–
1 தமிழ்ப் படம் மட்டுமே ரிலீஸான நாட்கள்

03-01-2014 - செல்லாயி முருகேசன் 

08-03-2014 – நிமிர்ந்து நில்
10-05-2014 – வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
17-05-2014 – என் நெஞ்சைத் தொட்டாயே
23-05-2014 –  கோச்சடையான்
04-07-2014 –  அரிமா நம்பி
24-07-2014 –  திருமணம் என்னும் நிக்காஹ்


03-10-2014 - நான் பொன்னொன்று கண்டேன்

ஒரே நாளில் அதிகமான தமிழ்ப் படங்கள் ரிலீஸான நாட்கள் :
5-12-2014 – 8 நேரடி தமிழ்ப் படங்கள்
10-10-2014 – 7 நேரடி தமிழ்ப் படங்கள் + 3 டப்பிங்
14-11-2014 – 7 நேரடி தமிழ்ப் படங்கள்
———————————
டப்பிங் படம் மட்டுமே ரிலீஸான நாட்கள் :
14-01-2014 – சக்தி வினாயகம் - தெலுங்கு படம் மட்டும்
26-06-2014 – டிரான்ஸ்போர்ட்டர்ஸ் – ஆங்கில படம் மட்டும்
17-10-2014 – Flight 257 – Newyork to London – ஆங்கில டப்பிங் படம் மட்டும்
24-10-2014 – ஹேப்பி நியூ இயர் – ஹிந்தி டப்பிங் படம் மட்டும்
————————————
14-03-2014 – ஆயிரத்தில் ஒருவன் – டிஜிட்டல் ரிலீஸ்

14-04-2014 - 'இதுவும் கடந்து போகும்' திரைப்படம் யூடியூபில் மட்டுமே வெளியிடப்பட்டது.

2014-ல் வெளியான டப்பிங் படங்களின் பட்டியல்..!

26-12-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2014-ல் வெளியான அனைத்து மொழி டப்பிங் திரைப்படங்களின் முழு பட்டியல் இங்கே :
2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31
2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11
2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5
2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4

2014-ல் வெளியான கன்னட டப்பிங் திரைப்படம் – 1

2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31
24-01-2014
1.47 சாகச வீரர்கள் – (ஆங்கில டப்பிங் படம்)
07-02-2014
2. எண்டர்ஸ் கேம் – (ஆங்கில டப்பிங் படம்)
14-02-2014
3. மிஸ்டர் கோ – (ஆங்கில டப்பிங் படம்)
21-02-2014
4. பாம்பய் -3டி – (ஆங்கில டப்பிங் படம்)
28-02-2014
5. பறக்கும் கல்லறை மனிதன் – (ஆங்கில டப்பிங் படம்)
07-03-2014
6. 360 – Rise of an Emperor – (ஆங்கில டப்பிங் படம்)
7. Action Kids – (ஆங்கில டப்பிங் படம்)
14-03-2014
8. நான் ஸ்டாப் – (ஆங்கில டப்பிங் படம்)
21-03-2014
9. சினிஸ்டர் – (ஆங்கில டப்பிங் படம்)
10. Three Soldier Girls – (ஆங்கில டப்பிங் படம்)
28-03-2014
11. Airplane Vs. Volcano  – (ஆங்கில டப்பிங் படம்)
12.  Need For Speed  – (ஆங்கில டப்பிங் படம்)
04-04-2014
13. கேப்டன் அமெரிக்கா – (ஆங்கில டப்பிங் படம்)
11-04-2014
14. சபோடேஜ் – (ஆங்கில டப்பிங் படம்)
18-04-2014
15. டார்ஜான் – (ஆங்கில டப்பிங் படம்)
01-05-2014
16. தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – (ஆங்கில டப்பிங் படம்)
09-05-2014
17. Shark in Desert – (ஆங்கில டப்பிங் படம்)
18. The Tower – (ஆங்கில டப்பிங் படம்)
17-05-2014
19. காட்ஸில்லா – (ஆங்கில டப்பிங் படம்)
13-06-2014
20. Raid-2 – (ஆங்கில டப்பிங் படம்)
20-06-2014
21. சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ் – (ஆங்கில டப்பிங் படம்)
26-06-2014
22. டிரான்ஸ்போர்ட்டர்ஸ் -4 – (ஆங்கில டப்பிங் படம்)
11-07-2014
23. டான் ஆஃப் தி ஏப்ஸ் – (ஆங்கில டப்பிங் படம்)
08-08-2014
24. இன் டூ தி ஸ்டோர்ம் – (ஆங்கில டப்பிங் படம்)
22-08-2014
25. தி எக்ஸ்பெண்டபிள்ஸ் – (ஆங்கில டப்பிங் படம்)
29-08-2014
26. தி நவம்பர் மேன் – (ஆங்கில டப்பிங் படம்)
27. நின்ஜா டர்டின்ஸ் – (ஆங்கில டப்பிங் படம்)
12-09-2014
28. துடிக்கும் துப்பாக்கி – (ஆங்கில டப்பிங் படம்)
10-10-2014
29. 2014 ருத்ரம் (ஆங்கில டப்பிங் படம்)
30. டிராகுலா ஒரு மர்மம் (ஆங்கில டப்பிங் படம்)
17-10-2014
31. Flight 257 – Newyork to London – (ஆங்கில டப்பிங் படம்)
2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11
14-01-2014                            
1.சக்தி விநாயகம் – வம்சி பொன்னான் – கின்னஸ் பக்ரு – (தெலுங்கு டப்பிங் படம்)
28-02-2014
2. கரன்சி ராஜா – (தெலுங்கு டப்பிங் படம்)
07-03-2014
3. நாங்கெல்லாம் அப்பவே அப்படி – (தெலுங்கு டப்பிங் படம்)
21-03-2014
4. வெங்கமாம்பா – (தெலுங்கு டப்பிங் படம்)
28-03-2014
5. வேங்கை புலி – (தெலுங்கு டப்பிங் படம்)
6. வேட்டை – (தெலுங்கு டப்பிங் படம்)
04-04-2014
7.ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)
30-05-2014
8. மந்தாகினி – (தெலுங்கு டப்பிங் படம்)
27-06-2014
9. இனி ஒரு விதி செய்வோம் – (தெலுங்கு டப்பிங் படம்)
10. மீண்டும் அம்மன் – (தெலுங்கு டப்பிங் படம்)
10-10-2014
11. பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)
 2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5
02-01-2014
1.ஜெ.சி.டேனியல் – (மலையாள டப்பிங் படம்)
28-02-2014
2. வெற்றிமாறன் – வி.எஸ்.நாராயணன் – மேஜர் ரவி – (மலையாள டப்பிங் படம்)
04-04-2014
3. வெற்றிப் பயணம் – (மலையாள டப்பிங் படம்)
02-05-2014
4. மோக மந்திரம் – (மலையாள டப்பிங் படம்)
30-05-2014
5. அப்சரஸ் – (மலையாள டப்பிங் படம்)
 2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4
31-01-2014
1.பி.ஏ.பாஸ் – (ஹிந்தி டப்பிங் படம்)
25-07-2014
2.தி கிக் – (ஹிந்தி டப்பிங் படம்)
2-10-2014
3. பாங் பாங் – (ஹிந்தி டப்பிங் படம்)
24-10-2014
4. Happy New Year – (ஹிந்தி டப்பிங் படம்)

                             2014-ல் வெளியான கன்னட டப்பிங் திரைப்படம் – 1

1. 30-05-2014 - கல்பனா ஹவுஸ் (கன்னட டப்பிங் படம்)

2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

26-12-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2014-ம் ஆண்டின் இறுதி வாரமான இன்றுவரையிலும்  வெளியான நேரடி தமிழ், மற்றும் டப்பிங் படங்களின் முழு தகவல்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.



“படத்தின் பெயர்-தயாரிப்பு நிறுவனம் / தயாரிப்பாளரின் பெயர் – இயக்குநரின் பெயர்” – இந்த வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவியுங்கள். திருத்திக் கொள்கிறோம்.

2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
02-01-2014
 1. நம்ம கிராமம் – குணசித்ரா மூவிஸ் – மோகன் சர்மா
2. முன் அந்திச் சாரல் – போகஸ் பிக்சர்ஸ் – தேவேந்திரன்
3. என் காதல் புதிது – வீரா மூவிஸ் – மாரீஷ் குமார்
4. அத்திமலை முத்துப்பாண்டி – கிருஷ்ணாலயா மூவிஸ் – தஞ்சை ஆர்.ரகுபதி
5. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு – டிஎஸ்கே புரொடெக்சன்ஸ் – ஸ்ரீகிருஷ்ணா
6. அகடம் – Last Bench Boys Productions – முகமது இசாக்
ஜெ.சி.டேனியல் – மலையாள டப்பிங் படம்
03-01-2014
7. செல்லாயி முருகேசன் – A.L.Star Entertainment – ஈ.அப்துல்லா – ஈ.அப்துல்லா
10-01-2014
8. ஜில்லா – சூப்பர்குட் பிலிம்ஸ் – ஆர்.டி.நேசன்
9. வீரம் – விஜயா புரொடெக்சன்ஸ் – சிவா
10. விடியும்வரை பேசு – ஏ.பி.முகன்
11. கலவரம் – சித்திரைச்செல்வன்
14-01-2014
சக்தி விநாயகம் – வம்சி பொன்னான் – கின்னஸ் பக்ரு        – தெலுங்கு டப்பிங் படம்
24-01-2014  
12. மாலினி 22 பாளையங்கோட்டை – ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா
13. கோலிசோடா – திருப்பதி பிரதர்ஸ் – எஸ்.டி.விஜய்மில்டன்
14. நேர் எதிர் – எம்.ஜெயபிரதீப்
47 சாகச வீரர்கள் – ஆங்கில டப்பிங்
30-01-2014  
15. இங்க என்ன சொல்லுது – விடிவி புரொடெக்சன்ஸ் – வி.செல்வா
16. நினைத்தது யாரோ – சுரேஷ் களஞ்சியம் – விக்ரமன்
31-01-2014
17. ரம்மி – Sreevalli Studio – கே.பாலகிருஷ்ணன்
18. நினைவில் நின்றவள் – அகஸ்திய பாரதி
19. மாலை நேரப் பூக்கள் – ஏஏஏ பிலிம்ஸ் – கேஜெஎஸ்
பி.ஏ.பாஸ் – ஹிந்தி டப்பிங்
07-02-2014
20. பண்ணையாரும் பத்மினியும் – மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் – எஸ்.எம்.அருண்குமார்
21. புலிவால் – மேஜிக் பிரேம்ஸ் – ஜி.மாரிமுத்து
22. கோவலனின் காதலி – ஜீவன் பிக்சர்ஸ் – அர்ஜூனராஜா
23. உ – பீனிக்ஸ் – ஆஷிக்
எண்டர்ஸ் கேம் – ஆங்கில டப்பிங்
14-02-2014
24. இது கதிர்வேலன் காதல் – ரெட் ஜெயண்ட் மூவிஸ் – பிரபாகரன்
25. மாதவனும் மலர்விழியும் – கிரிஜா புரொடெக்சன்ஸ் – மாசில்
26. சந்திரா – Indian Classic Arts – ரூபா ஐயர்
27. காதலில் யாரடி – ராஜேஷ் கிரவுண்
28. ரெட்டைக்கதிர் – H.ஹாயத்துல்லா – ராம்கிஷோர்-செல்வம்
மிஸ்டர் கோ – ஆங்கில டப்பிங் படம்
21-02-2014
29. பிரம்மன் – மஞ்சு சினிமாஸ் – சாக்ரடீஸ்
30. சித்திரை திங்கள் – மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் – ஆர்.மாணிக்கம்
31. வெண்மேகம் – சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் – ராம் லஷ்மண்
32. ஆஹா கல்யாணம் – ஆதித்ய சோப்ரா – கோகுலகிருஷ்ணன்
33. நிலா காய்கிறது – பிரபு
34. மனைவி அமைவதெல்லாம் – ஸ்ரீசாந்தி துர்கையம்மன் மூவிஸ் – உமா சித்ரா
பாம்பய் -3டி – ஆங்கில டப்பிங் படம்
28-02-2014
35. வல்லினம் – ஆஸ்கர் பிலிம்ஸ் – அறிவழகன்
36. பனிவிழும் மலர்வனம் – பி.ஜேம்ஸ் டேவிட்
37. தெகிடி – டிசிஎஸ் – ரமேஷ்
38. அமரா – எஸ்.ஏ.ஜலாலுதீன் – எம்.ஜீவன்
வெற்றிமாறன் – வி.எஸ்.நாராயணன் – மேஜர் ரவி – மலையாள டப்பிங் படம்
பறக்கும் கல்லறை மனிதன் – ஆங்கில டப்பிங் படம்
கரன்சி ராஜா – தெலுங்கு டப்பிங் படம்
07-03-2014
39. எதிர்வீச்சு – குணா
40. என்றென்றும் -  என்.ஓ.டி. புரொடெக்சன்ஸ் – சினீஷ் ஸ்ரீதரன்
41. காதலை உணர்ந்தேன் – உஷாதேவி பிலிம்ஸ் – பாரதி சுப்ரமணியம்
42. வீரன் முத்துராக்கு – கிருபாத்தி மூவிஸ் – கே.சண்முகம் – சி.ராஜசேகரன்
நாங்கெல்லாம் அப்பவே அப்படி – தெலுங்கு டப்பிங்
360 – Rise of an Emperor – ஆங்கில டப்பிங்
Action Kids – ஆங்கில டப்பிங்
08-03-2014
43. நிமிர்ந்து நில் – கே.எஸ்.சிவராமன் – சமுத்திரக்கனி
14-03-2014
44. காதல் சொல்ல ஆசை – எமர்சைன்ஸ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.தமிழ்சீனு
45. ஒரு காதல் ஒரு மோதல் – கந்தன் கியர்அப் எண்டர்டெயின்மெண்ட் – டி.ஜி.கீர்த்திகுமார்
46. ஆதியும் அந்தமும் – ரமணி – கெளசிக்
47. வங்கக் கரை – கே.டி.பிலிம்ஸ் – முருகன்
48. மறுமுகம் – கமல் சுப்ரமணியம் – சஞ்சய் டாங்கி
ஆயிரத்தில் ஒருவன் – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர்.பந்தலு
நான் ஸ்டாப் – ஆங்கில டப்பிங் படம்
21-03-2014
49. குக்கூ – பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் – ராஜூ முருகன்
50. பனிவிழும் நிலவு – வித்யாசங்கர் – கெளசிக்
51. யாசகன் – தாரிணி புரொடெக்சன்ஸ் – துரைவாணன்
52. விரட்டு – டி.குமார் – டி.குமார்
53. கேரள நாட்டிளம் பெண்களுடனே – எஸ்.எஸ்.குமரன்
வெங்கமாம்பா – தெலுங்கு டப்பிங் படம்
சினிஸ்டர் – ஆங்கில டப்பிங் படம்
Three Soldier Girls – ஆங்கில டப்பிங் படம்
28-03-2014
54. நெடுஞ்சாலை – பைன் போகஸ் – கிருஷ்ணா
55. இனம் – சந்தோஷ் சிவன்
56. மறுமுனை – எம்.பி.எல். பிலிம்ஸ் – மாரீஷ் குமார்
57. ஒரு ஊர்ல – விக்னேஷ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.வசந்தகுமார்
வேங்கை புலி – தெலுங்கு டப்பிங்
வேட்டை – தெலுங்கு டப்பிங்
Airplane Vs. Volcano  – ஆங்கில டப்பிங் படம்
Need For Speed  – ஆங்கில டப்பிங் படம்
04-04-2014
58. மான் கராத்தே – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் – மதன் – திருக்குமரன்
59. 1 கன்னியும் 3 களவாணிகளும் – மு.க.தமிழரசு – சிம்புதேவன்
60. கூட்டம் – சுமந்தகுமார் ரெட்டி
வெற்றிப் பயணம் – மலையாள டப்பிங் படம்
ரவுடி – தெலுங்கு டப்பிங் படம்
கேப்டன் அமெரிக்கா – ஆங்கில டப்பிங் படம்
11-04-2014
61. நான் சிகப்பு மனிதன் – விஷால் – திரு
62. காந்தர்வன் – தாமரை மூவிஸ் – சலங்கை துரை
63. ஆண்டவா காப்பாத்து – எல்.எம்.எல். கிரியேஷன்ஸ் – வெபின்
சபோடேஜ் – ஆங்கில டப்பிங் படம்
18-04-2014
64. தெனாலிராமன் – கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் – யுவராஜ் தயாளன்
65. டமால் டுமீல் – கேமியோ பிலிம்ஸ் – ஸ்ரீ
66. கற்பவை கற்றபின் – பட்டுராம் புரொடெக்சன்ஸ் – பட்டுராம் செந்தில்
67. தலைவன் – பாஸ்கரன் – ரமேஷ் செல்வன்
டார்ஜான் – ஆங்கில டப்பிங்
25-04-2014
68. என்னமோ நடக்குது – வினோத் குமார் – ராஜபாண்டி
69. வாயை மூடிப் பேசவும் – வருண் மணியன் – பாலாஜி மோகன்
70. போங்கடி நீங்களும் உங்க காதலும் – கேஆர்கே மூவிஸ் – ராமகிருஷ்ணன்
71. என்னமோ ஏதோ – ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் – ரவி தியாகராஜன்
01-05-2014
72. நீ எங்கே என் அன்பே – சேகர் கம்முலா
73. தாவணிக் காற்று – ஸ்டூடியோ சந்தோஷ் நிறுவனம் – வி.ஆர்.பி.மனோகர்
74. ஆதி தப்பு – கருணா பிலிம்ஸ் – எம்.சி.சுப்ரமணி – சி.கே.கருணாநிதி
தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – ஆங்கில டப்பிங்
02-05-2014
75. எப்போதும் வென்றான் – டிஜிஎஸ் ராஜாராம் – சிவசண்முகன்
76. நீ என் உயிரே – ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன்ஸ்
மோக மந்திரம் – மலையாள டப்பிங் படம்
09-05-2014
77. அங்குசம் – மனுக்கண்ணன் – மனுக்கண்ணன்
78. யாமிருக்க பயமே – எல்ரெட் குமார், ஜெயராமன் – டீகே
Shark in Desert – ஆங்கில டப்பிங் படம்
The Tower – ஆங்கில டப்பிங் படம்
10-05-2014
79. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – பிவிபி சினிமா – ஸ்ரீநாத்
17-05-2014
80. என் நெஞ்சைத் தொட்டாயே – குரு சூர்யா மூவிஸ் – அன்புச்செல்வன்
காட்ஸில்லா – ஆங்கில டப்பிங் படம்
23-05-2014
81. கோச்சடையான் – ஈரோஸ் இண்டர்நேஷனல் – செளந்தர்யா ரஜினிகாந்த்
30-05-2014
82. பூவரசம் பீப்பி – மனோஜ் பரமஹம்சா – ஹலிதா ஷமீம்
83. அது வேற இது வேற – களிகை எஸ்.ஜெயசீலன் – எம்.திலகராஜன்
84. அம்மா அம்மம்மா – மாம்பலம் சந்திரசேகர் – பாலு மணிவண்ணன்
கல்பனா ஹவுஸ் – கன்னட டப்பிங் படம்
அப்சரஸ் – மலையாள டப்பிங் படம்
மந்தாகினி – தெலுங்கு டப்பிங் படம்
06-06-2014
85. மஞ்சப்பை – திருப்பதி பிரதர்ஸ் – என்.ராகவன்
86. உன் சமையலறையில் – பிரகாஷ்ராஜ் – பிரகாஷ்ராஜ்
87. ஒகேனக்கல் – எழில் தயாரிப்பு நிறுவனம் – எம்.ஆர்.மூர்த்தி
88. அத்தியாயம் – ஆர்.எம்.ஏ. பிலிம் பேக்டரி – ஆர்.யுவன்
89. பூக்கடை சரோஜா – அரவிந்த் கிரியேஷன்ஸ் – எஸ்.ஆர்.ஆறுமுகம்
13-06-2014
90. முண்டாசுப்பட்டி – சி.வி.குமார் – ராம்குமார்
91. நான்தான் பாலா – ஜெ.ஏ.லாரன்ஸ் – ஆர்.கண்ணன்
92. உயிருக்கு உயிராக – மதர்லேண்ட் பிக்சர்ஸ் – மனோஜ்குமார்
93. திருடு போகாத மனசு – அஜந்தா பட நிறுவனம் – செல்லதங்கையா
94. ஓட்டம் ஆரம்பம் – வி.எஸ்.டி.ஜான்
95. வாழும் தெய்வம் – எஸ்.கே.பி.பிலிம்ஸ்
Raid-2 – ஆங்கில டப்பிங் படம்
20-06-2014
96. வடகறி – கிளைவுட் நைன் – சரவணராஜன்
97. வெற்றிச்செல்வன் – சிருஷ்டி பிலிம்ஸ் – ருத்ரன்
98. நேற்று இன்று – மாலதி – பத்மாமகன்
99. சூறையாடல் – திரிலோக் சுரேந்திரன் பிள்ளை – தாமரா கண்ணன்
சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ் – ஆங்கில டப்பிங்
26-06-2014
டிரான்ஸ்போர்ட்டர்ஸ் -4 – ஆங்கில டப்பிங் படம்
27-06-2014
100. சைவம் – ஏ.எல்.அழகப்பன் – ஏ.எல்.ஏ.விஜய்
101. என்ன சத்தம் இந்த நேரம் – ஏவிஏ புரொடெக்சன்ஸ் – குரு ரமேஷ்
102. தனுஷ் 5-ம் வகுப்பு – கே.வி.சினி ஆர்ட்ஸ் – கதாக திருமாவளவன்
103. அதிதி – கே.பி.ராதாகிருஷ்ணன் நாயர் – பரதன்
இனி ஒரு விதி செய்வோம் – தெலுங்கு டப்பிங் படம்
மீண்டும் அம்மன் – தெலுங்கு டப்பிங் படம்
04-07-2014
104. அரிமா நம்பி – கலைப்புலி எஸ்.தாணு – ஆனந்த் ஷங்கர்
11-07-2014
105. ராமானுஜன் – கேம்பர் சினிமா – ஞானராஜசேகரன்
106. பப்பாளி – அரசூர் மூவிஸ் – அம்பேத்குமார், ரஞ்சித்மேனன் – ஏ.கோவிந்தமூர்த்தி
107. சூரன் – அரோவணா பிக்சர்ஸ் – பாலுநாராயணன்
108. நளனும் நந்தினியும் – லிப்ரா புரொடெக்சன்ஸ் – ஆர்.வெங்கடேசன்
டான் ஆஃப் தி ஏப்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
18-07-2014
109. வேலையில்லா பட்டதாரி – வொண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ் – ஆர்.வேல்ராஜ்
110. சதுரங்க வேட்டை – மனோபாலா – வினோத்
111. இருக்கு ஆனா இல்ல – கே.எம்.சரவணன்
112. தலைகீழ் – ரெக்ஸ் ராஜ்
24-07-2014
113. திருமணம் என்னும் நிக்காஹ் – ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன் – அனீஸ்
25-07-2014
114. இன்னார்க்கு இன்னாரென்று – நாயகன் சினி ஆர்ட்ஸ் – நாயகம் – ஆண்டாள் ரமேஷ்
தி கிக் – ஹிந்தி டப்பிங் படம்
01-08-2014
115. சரபம் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சி.வி.குமார் – அருண்மோகன்
116. ஜிகர்தண்டா – குரூப் கம்பெனி – எஸ்.கதிரேசன் – கார்த்திக் சுப்புராஜ்
117. சண்டியர் – உயிர்மெய் புரொடெக்சன்ஸ் – சோழதேவன்
118. முதல் மாணவன் – ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் – கோபி காந்தி
08-08-2014
119. பரணி – ஜெஆர்பி எண்ட்டெர்டெயின்மெண்ட் – ராஜபிரபு, லீலாகுமார் – மாவணன்
120. மைதிலி – டார்வின் பிக்சர்ஸும், ஹானுசினி கிரியேஷன்ஸ் – சூர்யராஜன்
121. அக்னி – ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் – ஏ.ஜெ.ஆர்.ஹரிகேசவா
122. காமேஷ்வரி – வம்சி – செல்வா
இன் டூ தி ஸ்டோர்ம் – ஆங்கில டப்பிங் படம்
15-08-2014
123. அஞ்சான் – யுடிவி – திருப்பதி பிரதர்ஸ் – லிங்குசாமி
124. சிநேகாவின் காதலர்கள் – தமிழன் கலைக்கூடம் – கலைக்கோட்டுத்தயம் – முத்துராமலிங்கன்
125. கதை திரைக்கதை வசனம் இயக்கம் – Reves Entertainment – கே.சந்திரமோகன் – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
22-08-2014
126. கபடம் – மௌண்டன் மூவி மேக்கர்ஸ் – சோழா பொன்னுரங்கம் – ஜோதி முருகன்
127. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி – கவிதாலயா புரொடெக்சன்ஸ் – எல்.ஜி.ரவிசந்தர்
128. தொட்டால் விடாது – பிகாசஸ் புரொடெக்சன்ஸ் – அஜீத் ரவி பிகாசஸ்
தி எக்ஸ்பெண்டபிள்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
29-08-2014
129. சலீம் – ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ், ஸ்டூடியோ 9 புரொடெக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் – என்.வி.நிர்மல்குமார்
130. இரும்பு குதிரை – ஏஜிஎஸ் புரொடெக்சன்ஸ் – கல்பாத்தி அகோரம் – யுவராஜ் போஸ்
131. மேகா – ஜிபி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் – கார்த்திக் ரிஷி
132. காதல் 2014 – சரவணா பிலிம் மேக்கர்ஸ் – சுகந்தன்
133. புதியதோர் உலகம் செய்வோம் – நாகராஜன் ராஜா – பி.நித்யானந்தம்
தி நவம்பர் மேன் – ஆங்கில டப்பிங் படம்
நின்ஜா டர்டின்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
05-09-2014
134. அமரகாவியம் – தி ஷோ பீப்புள் – ஆர்யா – ஜீவாசங்கர்
135. பட்டையக் கெளப்பணும் பாண்டியா – முத்தியாரா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – எம்.ஆணிமுத்து – எஸ்.பி.ராஜ்குமார்
136. பொறியாளன் – Ace Maas Medias நிறுவனத்தின் சார்பில் ஏ.கே.வெற்றி வேலவன், எம்.தேவராஜூலு - மணிமாறன்
137. காதலைத் தவிர வேறொன்றுமில்லை –கே.செல்வபாரதி – கே.செல்வபாரதி
138. வலியுடன் ஒரு காதல் – Matha’s Blessing Studio – ஆர்.ரீத்தா – சி.எம்.சஞ்ஞீவன்
139. கள்ளச்சாவி – சிவா முருகா பிக்சர்ஸ்-டி.கே.எம்.புரொடெக்ஷன்ஸ் – ராஜேஷ்வரன்
12-09-2014
140. சிகரம் தொடு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – கெளரவ்
141. வானவராயன் வல்லவராயன் – மகாலட்சுமி மூவிஸ் – ராஜமோகன்
142. பர்மா – ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் – தரணிதரன்
143. வச்சிக்கவா – நளினி சினி சர்க்யூட் – ரபி
துடிக்கும் துப்பாக்கி – ஆங்கில டப்பிங் படம்
19-09-2014
144. ஆடாம ஜெயிச்சோமடா – ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயினுடன் இணைந்து பி அண்ட் சி பிலிம்ஸ் – பத்ரி
145. அரண்மனை – விஷன் ஐ மீடியாஸ் – சுந்தர்.சி
146. ஆள் – செளந்தர்யன் பிக்சர்ஸ் – விடியல் ராஜூ – ஆனந்த்கிருஷ்ணா
147. ரெட்டவாலு – ப்ரணவ் புரொடெக்சன்ஸ் – ஜெய இளவரசன் – தேசிகா
148. தமிழ்ச்செல்வனும், கலைச்செல்வியும் – ஏ.ஜெ.பிரதர்ஸ் – பி.பாண்டியன்
149. மைந்தன் – நவநீதகிருஷ்ணன் – சி.குமரேசன்
26-09-2014
150. ஜீவா – தி ஷோ பீப்பிள், தி நெக்ட்ஸ் பிக் பிலிம், வெண்ணிலா கபடி குழு புரொடெக்சன்ஸ் – சுசீந்திரன்
151. மெட்ராஸ் – ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – ரஞ்சித்
152. தலக்கோணம் – எஸ்.ஜே.எஸ்.இண்டர்நேஷனல் – திருமலை சிவம் – கே.பத்மராஜ்
153. அம்பேல் ஜூட் – மணிவேல்-மணி – டி.எஸ்.திவாகர்
2-10-2014
154. யான் – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ரவி கே.சந்திரன்
155. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் – டிரிபுள் வி ரெக்கார்ட்ஸ் – வினோத்குமார் – கே.ராமு
பாங் பாங் – ஹிந்தி டப்பிங்
03-10-2014
156. நான் பொன்னொன்று கண்டேன் – போரஸ் சினிமாஸ் – பிரேம் கல்லாட் & பிரின்ஸ் கல்லாட் – சஞ்சய் சீனிவாஸ்
10-10- 2014
157. குறையொன்றுமில்லை – PATHWAY PRODUCTIONS – ரவி கார்த்திக்
158. ஆலமரம் – PEACOCK MOTION PICTURES – S.N.துரைசிங்க
159. வெண்நிலா வீடு – ஆதர்ஷ் ஸ்டூடியோ – பி.அருண் – வெற்றி மகாலிங்கம்
160. ஜமாய் – CLASSIC CINE CIRCUIT – எம்.ஜெயக்குமார்
161. குபீர் – ஆர்ச்சர் சினிமாஸ் – திலீப்
162. யாவும் வசப்படும் – புதியவன்
163.  நீ நான் நிழல் – ஸ்ரீமுத்தாரம்மன் பிக்சர்ஸ் – ஜான் ராபின்சன்
பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)
2014 ருத்ரம் (ஆங்கில டப்பிங் படம்)
டிராகுலா ஒரு மர்மம் (ஆங்கில டப்பிங் படம்)
17-10-2014
Flight 257 – Newyork to London – English Dubbing
22-10-2014
164. கத்தி – லைகா புரொடெக்சன்ஸ் – ஏ.ஆர்.முருகதாஸ்
165. பூஜை – விஷால் பிலிம் பேக்டரி – ஹரி
24-10-2014
Happy New Year – Hindi Dubbing
31-10-2014
166. நெருங்கி வா முத்தமிடாதே – ஏவீஏ புரொடெக்சன்ஸ் – ஏ.வீ.அனூப் – லட்சுமி ராமகிருஷ்ணன்
167. சோக்கு சுந்தரம் – எம்.ஆர்.வி. மேக்கர்ஸ் – எம்.ராமசாமி – ஆனைவாரி ஸ்ரீதர்
168. கல்கண்டு – ராஜரத்னம் பிலிம்ஸ் – ஏ.எம்.நந்தகுமார்
169. காதலுக்குக் கண்ணில்லை – ஒய். இந்து – ஜெய் ஆகாஷ்
07-11-2014
170. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா – Global Infotainment Pvt Ltd – எஸ்.மைக்கேல் ராயப்பன் – ஆர்.கண்ணன்
171. ஜெய்ஹிந்த்-பாகம்-2 – அர்ஜூன்
172. பண்டுவம் – ஜி.எஸ்.டெவலப்பர் – பி.குணசேகரன் – எஸ்.சிவக்குமார்
173. முகப்புத்தகம் – WELLFAFE PRODUCTIONS – ஆர்.பி.பட்நாயக்
14-11-2014
174. திருடன் போலீஸ் – கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ்-கெனன்யா பிலிம்ஸ் – கார்த்திக் ராஜூ
175. விலாசம் – Sree Saana Films – பா.ராஜகணேசன்
176. புலிப்பார்வை – வேந்தர் மூவிஸ் – பிரவீன்காந்த்
177. ஞானகிறுக்கன் – தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் – இளையதேவன்
178. அப்புச்சி கிராமம் – Eye Catch Multimedia – வி.ஐ.ஆனந்த்
179. முருகாற்றுப்படை – சிகரம் விஷுவல் மீடியா – சரவணன்- கே.முருகானந்தம்
180. அன்பென்றாலே அம்மா – எம்.கே.எஸ். மூவிஸ் – கருப்பசாமி
21-11-2014
181. நாய்கள் ஜாக்கிரதை – நாதாம்பாள் பிலிம் பேக்டரி-சத்யராஜ் – சக்தி செளந்தர்ராஜன்
182. காடு – சக்கரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் – ஸ்டாலின் ராமலிங்கம்
183. விழி மூடி யோசித்தால் – Twister Films – செந்தில்குமார்
184. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – விஜயன்
185. வன்மம் – நேமிக்சந்த் ஜெபக் – ஜெய்கிருஷ்ணா
28-11-2014
186. காவியத்தலைவன் – ரேடியன் மூவிஸ்-ஒய்.நாட்.ஸ்டூடியோஸ் – வசந்தபாலன்
187. வேல்முருகன் போர்வெல்ஸ் – கஞ்சா கருப்பு – எம்.பி.கோபி
188. மொசக்குட்டி – ஷலோம் ஸ்டூடியோஸ் – எம்.ஜீவன்
189. விஞ்ஞானி – பார்த்தி – பார்த்தி
190. ஆ – கே.டி.வீ.ஆர். கிரியேட்டிவ் பிரேம்ஸ் – ஹரி-ஹரீஷ்
191. புளிப்பு இனிப்பு – ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் லிமிடெட் –  ரஞ்சித் போஸ்
5-12-2014
192. ர – அமர்-அக்பர் – பிரபு யுவராஜ்
193. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் – ரைசிங் சன் பிலிம்ஸ் – வீரா
194. நாங்கெல்லாம் ஏடாகூடம் – குருந்துடையார் புரொடெக்சன்ஸ் – விஜயகுமார்
195. 13-ம் பக்கம் பார்க்க – ஆர்.கே.வி. பிலிம் மீடியா – புகழ்மணி
196. பகடை பகடை – வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிமிடெட் – சசி சங்கர்
197. அழகியபாண்டிபுரம் – தாய்மண் புரொடெக்சன்ஸ் – ந.ராயன்
198. மனம் கொண்ட காதல் – ஹரீஷ் மூவிஸ் – புகழேந்திராஜ்
199. அப்பா வேணாம்ப்பா – சாய்ஹரி கிரியேஷன்ஸ் – வெங்கட்ரமணன்
12-12-14
200. லிங்கா – ராக்லைன் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.ரவிக்குமார்
201. இன்னுமா நம்பள நம்புறாங்க – எஸ்.ஆர்.பாலாஜி – எஸ்.ஆர்.பாலாஜி
202. யாரோ ஒருவன் – நவகிரஹா சினி கம்பைன்ஸ் – கே.என்.பைஜூ
19-12-2014
203. பிசாசு – பாலா ஸ்டூடியோஸ் – மிஷ்கின்
204. சுற்றுலா – ஜெயக்குமார் புரொடெக்சன்ஸ் – ராஜேஷ் ஆல்பிரட்
205. பெண்ணின் கதை – கே.ராஜன் – பாபு கணபதி
206. நாடோடி பறவை – தனம் பிக்சர்ஸ் – டி.விஜயராக சக்கரவர்த்தி
207. சினிமா ஸ்டார் – ஸ்ரீதனலட்சுமி புரொடெக்சன்ஸ் – ஜி.நானி
208. நட்பின் நூறாம் நாள் – ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி – ராஜாதேசிங்கு
25-12-2014
209. கயல் – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் – மதன் – பிரபு சாலமன்
210. வெள்ளைக்கார துரை – கோபுரம் பிலிம்ஸ் – அன்புசெழியன் – எழில்
211.  கப்பல் – எஸ் பிக்சர்ஸ் – கார்த்திக் ஜி.கிரீஷ்
212. மீகாமன் – நேமிக்சந்த் ஜெபக் – மகிழ் திருமேனி
213. என்றுமே ஆனந்தம் – அன்னை சுகுணா சினி கிரியேஷன்ஸ் – க.விவேகபாரதி
2014-ல் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் – 213
2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31
2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11
2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5
2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4
2014-ல் வெளியான கன்னட டப்பிங் திரைப்படம்-1