19-03-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
1991-ம் ஆண்டு 'கார்த்தவ்யம்' என்கிற பெயரில் தெலுங்கில் வெளிவந்து பட்டையைக் கிளப்பிய தமிழ் வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தை தூசி தட்டியெடுத்து மீண்டும் நேரடி தமிழாக்கியிருக்கிறார்கள்.. இல்லை.. படுத்தியெடுத்திருக்கிறார்கள். இதற்கு சும்மாவே இருந்திருக்கலாம்..!
கதையெல்லாம் எதுக்கு..? அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே..? விஜயசாந்தி அளவுக்கு கோபத்தைக் காட்ட முடியாத புன்னகை இளவரசி சினேகாவை இந்தக் கதைக்குத் தேர்வு செய்ததே முதல் தவறு.. எவ்வளவு முயன்றும் அம்மணியால் ஒரு சதவிகிதம்கூட புகையைக் கிளப்ப முடியவில்லை..! அப்புறம் எப்படி படம் நிக்குறது..?
சமீப காலங்களில் இது போன்ற கேவலமான சண்டைக் காட்சிகளை வேறெந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை.. (இதற்கடுத்த நிலையில் இருக்கும் படத்தையும் நேற்று பார்த்துத் தொலைத்துவிட்டேன்) ரோப் கட்டித் தொங்கவிடுவதுகூட தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கா சண்டைக் காட்சிகளை பதிவு செய்வார்கள்..? அட தேவுடா.. இத்தனைக்கும் அனுபவமிக்க தளபதி தினேஷ்தான் சண்டைப் பயிற்சியாளர்..!
வைஜெயந்தியில் விஜயசாந்தியின் சண்டைப் பயிற்சிக்கே அந்தக்கா மூணு மாசம் தனியா டிரெயினிங் எடுத்திட்டு அப்புறமா வந்து பறந்து பறந்து அடிச்சிருக்கு..! என்னதான் சொல்லுங்க.. தெலுங்கு.. தெலுங்குதான்..!
அதே கதைதான் என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் லேசுபாசாக மாற்றி தமிழுக்காக படுத்தியிருக்கிறார்கள். ம்ஹூம்.. அதுவும் தேறவில்லை. இயக்குநர் கிச்சா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..! இது புதிய கதையாக இருந்திருந்தால்கூட ஏதோ ஒரு படம் என்ற நினைப்பில் விட்டுத் தொலைந்திருக்கலாம்..
சினேகா பேசாமல் கோல்கேட் விளம்பரம் தரும்படியான படங்களிலேயே நடித்துவிட்டுப் போகலாம். எதற்கு இந்த பொங்கியெழும் புதுமைப் பெண் வேடம்.. ஸாரி சினேகா மேடம்..! கோச்சுக்காதீங்கோ..! முடியலைன்னா விட்ரலாமே..! ஆனால் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அதற்காக பாராட்டுக்கள்..!

போலீஸ் டிரெஸ்ஸை போட்டு மிடுக்கா காட்டுறதுக்கே ஒரு இடுப்பு வேணும். அது உங்களுக்கு மிஸ்ஸிங்.. லூஸ் மோகன் மாதிரி டிரெஸ்ஸை போட்டு நீங்க நடந்து வர்றதை பார்த்தா பயம் வர்றதுக்குப் பதிலா சிரிப்புதான் வந்துச்சு..! பொம்பளை போலீஸ்னா மலையாளத்துல வாணி விஸ்வநாத்துன்னு ஒரு அக்கா அப்படியொரு கேரக்டராவே வாழ்ந்து காட்டியிருக்காங்க. அவங்க போலீஸா நடிச்ச படத்தையெல்லாம் பாருங்க.. ஆம்பளை போலீஸ்கூட அப்படி சிக்குன்னு நிக்க முடியாது. அப்படியிருப்பாங்க..!
வைஜெயந்தில சரண்ராஜை முதன்முதல்லா பார்க்கும்போது கொஞ்ச நேரம் பேசவிட்டுட்டு அப்புறமா ஆட்காட்டி விரலை காட்டி ஒரு மிரட்டு மிரட்டுவாங்க பாருங்க.. அப்பத்தான் ரசிகனுக்கே தோணுச்சா.. ஆத்தாடி.. இந்தப் பொண்ணு என்னமோ பெரிசா பண்ணப் போகுதுன்னு..! ஆனா நீங்க இன்னா செஞ்சிரு்ககீங்க..?
சரி வேணாம் விட்ருவோம்..! டைரக்டர் சொன்னாரு. நீங்க நடிச்சிருக்கீங்க.. அவ்ளோதான்.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம வந்த நடிப்பை வஞ்சகமில்லான கொட்டிட்டுப் போயிட்டீங்க..! உங்க கேரியர்ல ஒரு படம் அவ்ளோதான்..!

படத்துல ஒரேயொரு நல்ல காரியம் மட்டும் செஞ்சிருக்காரு டைரக்டர். அது கோட்டா சீனிவாசராவை வில்லனா நடிக்க வைச்சதுதான்..! ஏதோ அவர் அளவுக்குக் கொஞ்சம் தேத்திக் கொடுத்திருக்காரு..! வில்லனும் சொதப்பலாயிருந்தா அவ்ளோதான்..! இந்த அளவுக்கு பேருகூட கிடைச்சிருக்காது..!
லோக்கல் சினிமாக்களில் இன்னமும் மறக்க முடியாத வில்லத்தனங்களில் வைஜெயந்தியில் மீனாவை ரேப் செய்யும் வில்லனாக நடித்த உதய்பிரகாஷ் கேரக்டரும் ஒன்று. தன் தலை மொட்டையடித்த நிலையில் கண்ணாடி முன் நின்று பார்த்து கத்தும் அந்தக் காட்சி இன்னமும் மறக்க முடியாதது..! இங்கே அதுவும் சொதப்பலாகி, வில்லத்தனமும் போலியாகிவிட்டது.
வைஜெயந்தியில் வினோத்தின் கேரக்டரை இதில் சம்பத் செய்திருக்கிறார். விஜயசாந்தியின் அதிரடிகளின்போதெல்லாம் தப்பெடுத்து ஆட்டம் ஆடிய வினோத்தின் அந்த கேரக்டர் இதில் சுத்தமாக கட்..! துவக்கத்தில் ஒரு பாட்டு பாடியதோடு சரி..! சம்பத்தின் சோகக் கதை மட்டுமே நமக்கு ஆறுதல்..!
எல்லாம் எடுத்து முடித்த பிறகு இப்படியே போனால் தேறாது என்று நினைத்து விவேக்கின் காமெடி காட்சிகளை தனியே எடுத்து ஒட்டியிருக்கிறார்கள். ஹெல்மெட் போடாததாலதாண்டா புள்ளையே பொறந்திருக்கு என்று அக்மார்க் விவேக்கின் குசும்பே குசும்பு..! அவரும் செந்திலும் அடிக்கிற மூன்று லூட்டிகள் தனி டிராக்கில் போவதால் கதையோடு ஒட்டவில்லை..!
ம்ஹும்.. அரசியல் அக்கப்போரில் இருந்து தப்பிச்சு கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னு நினைச்சுத்தான் இந்தப் படத்துக்குப் போனேன்.. கடைசீல ஏண்டா போனோம்னு ஆயிப் போச்சு..!
இது போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களை மீண்டும் படமாக்கும்போது முந்தையதைவிடவும் மிக அற்புதமாகத் தரப்பட வேண்டும் என்கிற வெறியோடும், அறிவோடும் உழைத்திருக்க வேண்டும். ஆனால் இதில் ஏதோ ஒரு படத்தை எடுத்துச் சுருட்டிக் கொடுப்போம் என்கிற மாதச் சம்பளக்காரனின் மனநிலையோடு எடுத்திருக்கிறார் இயக்குநர் கிச்சா..!
வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்கிற மறக்க முடியாத படத்தின் ரீமேக் என்பதால் அதே மனநிலையோடு போய் உட்கார்ந்து, கிடைத்த ஏமாற்றத்தினால் இயக்குநர் மேல்தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது..!

வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தை ஒரு மதிய ஷோவில் பார்த்துவிட்டு வெளியே வந்தபோதே பிளாக்கில் டிக்கெட் விற்ற அந்த ஆள் சிக்கினால் நாலு சாத்து சாத்திவிட வேண்டும் என்கிற வெறிதான் மனதில் இருந்தது. அந்த அளவுக்கு அந்தப் படத்தின் தாக்கம் ரசிகர்களின் மனதில் மேலோங்கி இருந்தது..! ஆனால் இதில் படத்தின் இயக்குநரை நாலு சாத்து சாத்தினால் என்ன என்றுதான் தோன்றியது..!
போகணும்னா போயிக்குங்க..!
போகணும்னா போயிக்குங்க..!
|
Tweet |
26 comments:
பரவாயில்லை,மனசை தேற்றிக் கொள்ளுங்க,என்ன செய்வது,நமது தலை எழுத்து அப்படி.
ஏற்கனவே உங்கள் விமர்சனத்தைப் பிந்திப்படிச்சு புழல் என்ற அரும் காவியத்தை பார்த்து நொந்துபோனேன் இந்த விமர்சனத்தை படித்தபடியால் பவானி என்னும் காவியம் இலவசமாக கிடைத்தாலும் பார்க்கமாட்டேன்.
எம்மைப்போன்றவர்களை இந்த ஆபத்துகளில் இருந்து காப்பாத்தும் சக்தியை அந்த முருகன் தான் உங்களுக்கு கொடுத்திருக்கின்றார்.
நல்ல வேலை! படம் பாக்கிறதுல இருந்து தப்பிக்க வச்சுட்டிங்க..
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
சினேகாவை பிடிக்காதவங்க ஒன்னு சேர்ந்து சினேகாவை குப்புற கவுத்துட்டாங்க....
பூ பிடிக்கிற சினேகா கை துப்பாக்கி பிடிச்சதுமே எனக்கு புரிஞ்சி போச்சி மக்கா படம் அட்ட பிலாப்புன்னு ஹே ஹே ஹே ஹே....
சினேகாவ பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, இதையும் விட்டா அவ்வளவுதான், அதுக்காகவே பார்க்கோனும் :-)
நல்ல விமர்சனம்.
சினேகா.. இந்த மாதிரி கேரக்டருக்கு எல்லாம் ஆசைப் பட்டிருக்கக்கூடாது..
பிளாக்கில் டிக்கெட் விற்ற அந்த ஆள் சிக்கினால் நாலு சாத்து சாத்திவிட வேண்டும் என்கிற வெறிதான் மனதில் இருந்தது. --- ipdi sollitingale...black la tiket vaangi paakra alavukka kootam irunthathu!!!! ethirpaakkave illanga
[[[உருத்திரா said...
பரவாயில்லை, மனசை தேற்றிக் கொள்ளுங்க, என்ன செய்வது, நமது தலை எழுத்து அப்படி.]]]
ம்.. இதை நினைச்சுத்தான் அப்பப்போ மனசைத் தேத்திக்கிறேன்..!
[[[வந்தியத்தேவன் said...
ஏற்கனவே உங்கள் விமர்சனத்தைப் பிந்திப் படிச்சு புழல் என்ற அரும் காவியத்தை பார்த்து நொந்து போனேன். இந்த விமர்சனத்தை படித்தபடியால் பவானி என்னும் காவியம் இலவசமாக கிடைத்தாலும் பார்க்க மாட்டேன். எம்மைப் போன்றவர்களை இந்த ஆபத்துகளில் இருந்து காப்பாத்தும் சக்தியை அந்த முருகன்தான் உங்களுக்கு கொடுத்திருக்கின்றார்.]]]
ஆஹா.. என் புண்ணியத்தில் நீங்கள் ஒருவர் நன்றாக இருக்கிறீர் என்றால் எது என் பாக்கியமே..!
[[[தமிழ்வாசி - Prakash said...
நல்ல வேலை! படம் பாக்கிறதுல இருந்து தப்பிக்க வச்சுட்டிங்க..]]]
ம்.. நல்லாயிருங்க..!
[[[MANO நாஞ்சில் மனோ said...
சினேகாவை பிடிக்காதவங்க ஒன்னு சேர்ந்து சினேகாவை குப்புற கவுத்துட்டாங்க.]]]
எடுக்கணும்னு நினைச்சது சரிதான். ஆனால் தவறான ஆளைப் போட்டுட்டாங்களோன்னு நினைப்பு வருது..!
[[[MANO நாஞ்சில் மனோ said...
பூ பிடிக்கிற சினேகா கை துப்பாக்கி பிடிச்சதுமே எனக்கு புரிஞ்சி போச்சி மக்கா படம் அட்ட பிலாப்புன்னு ஹே ஹே ஹே ஹே.]]]
ஒருவேளை சினேகாவை குத்துவிளக்காகவே பார்த்துட்டதால எனக்கு இப்படியொரு பீலிங்கா..?
[[[இரவு வானம் said...
சினேகாவ பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, இதையும் விட்டா அவ்வளவுதான், அதுக்காகவே பார்க்கோனும் :-)]]]
அப்படியா..? அப்ப போய்ப் பாருங்க..!
[[[பதிவுலகில் பாபு said...
நல்ல விமர்சனம். சினேகா. இந்த மாதிரி கேரக்டருக்கு எல்லாம் ஆசைப்பட்டிருக்கக் கூடாது.]]]
இல்லை. வேறொரு நல்ல இயக்குநரின் கைகளில் சிக்கியிருந்தால்கூட நன்றாக வந்திருக்கும் என்று இப்போது நினைக்கிறேன்..!
[[[உங்கள் தோழி கிருத்திகா said...
பிளாக்கில் டிக்கெட் விற்ற அந்த ஆள் சிக்கினால் நாலு சாத்து சாத்திவிட வேண்டும் என்கிற வெறிதான் மனதில் இருந்தது. --- ipdi sollitingale...black la tiket vaangi paakra alavukka kootam irunthathu!!!! ethirpaakkave illanga]]]
அப்போது இருந்தது.. படம் தமிழ்நாட்டில் 200 நாட்கள் ஓடியது..!
ரொம்ப நாள் கழிச்சு சினிமா பதிவு...
சந்தோஷமா இருந்தது...
தொடர்ந்து சினிமா பதிவுகள் தேவை...
தொடரட்டும் உங்க்ள் சேவை..
தவறான தகவல் கொடுத்தது ஏன்? கேபிள் சங்கர் விளக்கம்
தானை தலைவி தமிழகத்தின் விடிவெள்ளி
நைனாவின் மனம் கவர்ந்த கள்ளி
வருங்கால தமிழகத்தின் முதல்வர் சினேகாவை ஆதரிக்காத
அண்ணன் உண்மைத்தமிழனை வன்மையாக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
movie review after a long gap..
but sorry for that movie.
how you decide to go to this movies ?
Murugaaaaaaaaaaaaaaaaaaa
Tamilaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Murugaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
[[[பார்வையாளன் said...
ரொம்ப நாள் கழிச்சு சினிமா பதிவு.
சந்தோஷமா இருந்தது. தொடர்ந்து சினிமா பதிவுகள் தேவை. தொடரட்டும் உங்க்ள் சேவை..]]]
வருகைக்கு நன்றி பார்வை.. அரசியல் எழுதி, எழுதி போரடிக்குது..!
[[[நையாண்டி நைனா said...
தானை தலைவி தமிழகத்தின் விடிவெள்ளி
நைனாவின் மனம் கவர்ந்த கள்ளி
வருங்கால தமிழகத்தின் முதல்வர் சினேகாவை ஆதரிக்காத
அண்ணன் உண்மைத்தமிழனை வன்மையாக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.]]]
நைனானானானானானானானானானா..............
[[[muthukumar said...
movie review after a long gap..
but sorry for that movie.
how you decide to go to this movies ?
Murugaaaaaaaaaaaaaaaaaaa
Tamilaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Murugaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa]]]
அந்தந்த வாரத்தில் முக்கியமான படம் எது என்று நினைக்கிறேனோ அதற்குத்தான் செல்வேன். அதுவே இப்படியெனில்..?
போலீஸ் டிரெஸ்ஸை போட்டு மிடுக்கா காட்டுறதுக்கே ஒரு இடுப்பு வேணும். அது உங்களுக்கு மிஸ்ஸிங்.. லூஸ் மோகன் மாதிரி டிரெஸ்ஸை போட்டு நீங்க நடந்து வர்றதை பார்த்தா பயம் வர்றதுக்குப் பதிலா சிரிப்புதான் வந்துச்சு..!///
அப்போ இவங்க சிரிப்பு போலீஸா...
[[[சௌந்தர் said...
போலீஸ் டிரெஸ்ஸை போட்டு மிடுக்கா காட்டுறதுக்கே ஒரு இடுப்பு வேணும். அது உங்களுக்கு மிஸ்ஸிங்.. லூஸ் மோகன் மாதிரி டிரெஸ்ஸை போட்டு நீங்க நடந்து வர்றதை பார்த்தா பயம் வர்றதுக்குப் பதிலா சிரிப்புதான் வந்துச்சு..!///
அப்போ இவங்க சிரிப்பு போலீஸா...?]]]
அப்படின்னும் சொல்லலாம்..!
//அண்ணன் உண்மைத்தமிழனை வன்மையாக மிக வன்மையாக கண்டிக்கிறேன் // அச்சச்சோ, பிரச்சார பீரங்கி, தானைய தங்கத் தலைவி சைதை தமிழரசி தாக்கப்பட்டார். Kudimakkale ஒன்று சேர்வீர்.
நீங்க சாத்வீகம்னு நினைச்சா இப்படி சாத்துவீங்கனு நினைக்கலை. நாமக்கெதுக்கு anne இந்த விமர்சனமெல்லாம். இந்த படத்துக்கு ப்ளாக்ள டிக்கெட் வாங்கினது உங்க தப்பு. ரசிகர் மன்றத்தில் கேட்டு இருந்தா சும்மாவே தந்திருப்பாங்கள்.
[[[கடைக்குட்டி said...
//அண்ணன் உண்மைத்தமிழனை வன்மையாக மிக வன்மையாக கண்டிக்கிறேன் //
அச்சச்சோ, பிரச்சார பீரங்கி, தானைய தங்கத் தலைவி சைதை தமிழரசி தாக்கப்பட்டார். Kudimakkale ஒன்று சேர்வீர்.
நீங்க சாத்வீகம்னு நினைச்சா இப்படி சாத்துவீங்கனு நினைக்கலை. நாமக்கெதுக்கு anne இந்த விமர்சனமெல்லாம். இந்த படத்துக்கு ப்ளாக்ள டிக்கெட் வாங்கினது உங்க தப்பு. ரசிகர் மன்றத்தில் கேட்டு இருந்தா சும்மாவே தந்திருப்பாங்கள்.]]]
பிளாக் டிக்கெட் இந்தப் படத்துக்கு இல்லீங்கோ.. அது வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்துக்கு..!
Post a Comment