09-03-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தேர்தல் கமிஷன் வானளாவிய அதிகாரம் படைத்தது என்பதை முதன்முதலில் நிரூபித்துக் காட்டிய டி.என்.சேஷனை இந்தச் சமயத்தில் நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்..!
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கைக் காண்பிக்க வேண்டும் என்கிற விதிமுறையின் காரணமாகத்தான் தற்போதைக்கு ஒரளவுக்காகவாவது அரசியல்வியாதிகளின் நேரடி கொள்ளை கொஞ்சம் நிறுத்தப்பட்டு பினாமி பெயரில் சொத்து சேகரிக்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..!
தேர்தலின்போது அரசியல்வியாதிகள் சமர்ப்பிக்கும் சொத்துக் கணக்கிற்கும், அடுத்தத் தேர்தலின்போது சமர்ப்பிக்கப்படும் சொத்துக் கணக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடே அவர்களை கொள்ளையர்களாக இனம் காட்டிவிடுகிறது. இந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு முதன்முதலில் அகில இந்திய ரீதியில் மிகவும் பிரபலமானவர் நமது ஆத்தா ஜெயலலிதாதான்.
அவருக்குப் பின்பு இன்றுவரையிலும் பலரும் மாட்டினாலும் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தித் தப்பிக்க வழியெடுத்துக் கொடுக்கும் ஆடிட்டர்களும், வழக்கறிஞர்களும் இருக்கின்றவரையில் இவர்களை சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிரூபிப்பது மிகவும் கடினம்தான்..!
சமீபத்தில் கனிமொழிகூட தனது எம்.பி. தேர்தலின் வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்த சொத்துப் பட்டியலில் தான் கலைஞர் டிவியில் இயக்குநராக இருந்ததையும், அதில் தனக்கு பங்குகள் இருந்ததையும் குறிப்பிடாதது கண்டறியப்பட்டு சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்தத் தேர்தல் கமிஷனிடம் புகார் சொல்லி என்னவாகப் போகிறது என்றே தெரியவில்லை. ஒரு வேட்பாளர் இரண்டிற்கு மேற்பட்ட தொகுதிகளில் நிற்கவே கூடாது என்கிற மிக முக்கிய விதிமுறையைத் தெரிந்து வைத்துக் கொண்டும் நான்கு தொகுதிகளில் அசாத்திய தைரியத்துடன் நின்று காட்டிய ஜெயலலிதாவின் மீதே இதுவரையில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதற்கா எடுக்கப் போகிறார்கள்..? எனக்கு நம்பிக்கையில்லை..
அமைச்சர் சுரேஷ்ராஜன் முதல்முறையாக 1997-2001 திமுக ஆட்சிக் காலத்தில்தான் அமைச்சராகப் பணியாற்றினார். அமைச்சராக இருந்தபோதுதான் இவருக்குத் திருமணமானது என்பதும் எனக்கும் நினைவிருக்கிறது..! அப்போதுதான் கன்னியாகுமரி மாவட்ட அரசியலிலும் இவரது பெயரை நான் கேள்விப்பட்டிருந்தேன்.

இப்போது அமைச்சர் சுரேஷ்ராஜன் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தேர்தல் கமிஷன் முன்பு தாக்கல் செய்த சொத்துக்கள் பட்டியலையும் தாண்டி, கடந்த ஐந்தாண்டுகளில் நியாயமான முறையில் சம்பாதித்திருக்கும் வருமானத்தையும் மீறி அமோக விளைச்சலை அறுவடை செய்திருக்கிறார் என்று அவர் மீது ஒரு புதிய புகார் எழுந்துள்ளது.
இது பற்றி சென்ற வார ஜூனியர்விகடன் பத்திரிகையில் வெளி வந்த செய்தியை முதலில் படித்துவிடுங்கள்..!
'தமிழக சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வருமானத்துக்கும் மேலாகக் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. இந்த விவரங்களை கவர்னருக்கும், சி.பி.ஐ-க்கும் தெரியப்படுத்திவிட்டேன். எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்...’ - இப்படி ஒரு தகவலை நமது ஆக்ஷன் செல்லில் (044 4289 0005) சொல்லி இருந்தார், நாகர்கோவிலைச் சேர்ந்த வாசகர் ஒருவர்.
வாசகர் தகவல் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டோம். கிரினிவாச பிரசாத் என்பவர் பேசினார். ''சார், நான் ஒரு வக்கீல். நாகர்கோவிலில் 'மனித உரிமைக்கான இலவச சட்ட உதவி மைய’த்தை நடத்திட்டு வர்றேன். சமீபகாலமாக, குமரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் அமைச்சர் சுரேஷ்ராஜனின் பெயரைச் சொல்லிக்கிட்டு பலர், இடங்களை வாங்கிக் குவிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால் அவரோட சொத்து விவரம் பற்றி விவரங்களைச் சேகரிச்சேன். அப்பதான் அதிர்ச்சியான தகவல்கள் கொட்டுச்சு...'' என்றவர் தொடர்ந்தார்..
''கடந்த 2006 தேர்தலில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன் தன்னோட சொத்துக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருக்கார். அவர் பெயரில் 7 லட்சம், மனைவி பாரதி பெயரில் 15 லட்சமும், மகன் நீலதமிழரசன், மகள் பூமாலை பெயரில் சுமார் 2 லட்சம் மதிப்பிலும் சொத்து மற்றும் ரொக்கம் இருப்பதாக தெரிவிச்சிருக்கார். அதாவது ஐந்து வருஷங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தோட மொத்த சொத்து மதிப்பு சுமார் 24 லட்சம் மட்டுமே. அதே சுரேஷ்ராஜன் அமைச்சரானதும் சொத்து மதிப்பு பல கோடியா மாறிடுச்சு.
மூணு வருஷங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் தங்க நாற்கர சாலைக்கு அருகில் எட்டு ஏக்கர் நிலம் சுரேஷ்ராஜனின் மனைவியான பாரதி பெயரில் வாங்கப்பட்டு இருக்கு. இதன் சந்தை மதிப்பு பல கோடி. ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறைவான விலைக்கு பத்திரப் பதிவு செஞ்சு, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பணகுடி சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செஞ்சப்ப, தவறான முகவரி, தகவல்களைத் தந்திருக்காங்க. பாரதியின் கணவர் பெயராக சுரேஷ்ராஜன் என்று போட்டால் வெளியே தெரிஞ்சுடும்னு என்.எஸ்.ராஜன்னு போட்டிருக்காங்க.

இது தவிர, பழவூரில் 'என்.எஸ்.ஆர். ஸ்டீல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ பெயரில் பெரிய உருக்கு ஆலையை நிறுவி இருக்கிறார். இதன் மதிப்பும் 100 கோடியைத் தாண்டும். இந்த கம்பெனி தொடங்கவும் அரசிடம் இருந்து முன் அனுமதி எதுவும் வாங்கியதா தெரியலை. இந்த ஆலையில் கடந்த நவம்பர் மாதம் கலால் துறை அதிகாரிங்க அதிரடியாக சோதனை நடத்தினாங்க. அப்போ, அரசுக்கு முறையாக கலால் வரி செலுத்தாமல் 64 லட்சத்தை வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிச்சாங்க. சில ஆவணங்களில், பாரதி தன்னை உருக்கு ஆலையின் மேலாண்மை இயக்குநர் என்றும் வேறு சில ஆவணங்களில் கம்பெனிப் பிரதிநிதி என்றும் தவறான தகவல்களைக் கொடுத்திருக்காங்க.
குமரி மாவட்டம் கோணம் என்ற இடத்தில் தொடங்கப்பட்ட ஃபிஷ் நெட் கம்பெனியும் சுரேஷ்ராஜனுக்குச் சொந்தமானது. வேறொருவரின் பெயரில் இந்த கம்பெனி செயல்பட்டாலும், அதில் சுரேஷ்ராஜனின் மனைவி பாரதி நிர்வாக இயக்குநராக இருப்பதால், பினாமி பெயரில் இந்த கம்பெனி நடக்கிறதோ என சந்தேகம் ஏற்படுது...'' என்றவர், ''அமைச்சரா இருப்பதன் மூலம் சுரேஷ்ராஜனின் மாத வருமானம் 47 ஆயிரம் மட்டும்தான். அப்படியிருக்க... ஐந்து வருடங்களுக்கு முன்பு, தேர்தல் கமிஷனிடம் தன்னுடைய சொத்து மதிப்பை 24 லட்சம்னு காட்டிய சுரேஷ்ராஜனின் தற்போதைய சொத்து மதிப்பு 500 கோடியைத் தாண்டி இருப்பது எப்படி? இந்த விவரங்களை கவர்னருக்கு தெரியப்படுத்தி அவர் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டிருக்கேன். அத்துடன் சி.பி.ஐ., விஜிலென்ஸுக்கும் ஆதாரங்களை இணைத்து புகார் அனுப்பி இருக்கேன். நடவடிக்கை எடுக்கல்லேன்னா கோர்ட்டுக்குப் போகத் திட்டமிட்டு இருக்கேன்...'' என்றார் சூடாக.
இது குறித்து அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் விளக்கம் கேட்டோம். ''ஏற்கெனவே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்தார். அந்த மோசடி நபர் மீது மானநஷ்ட வழக்குப் போட்டு இருக்கிறேன். இப்போது வேறு யாரோ அதே மாதிரியான குற்றச்சாட்டுகளை சொல்வதாகச் சொல்கிறீர்கள். இந்த புகார்களில் துளியும் உண்மை கிடையாது. எனது குடும்பத்தினரின் சொத்துகள் அனைத்தும் முறையாக உழைத்து சம்பாதித்தது. முறைப்படி வருமான வரி கட்டுகிறோம். சுய விளம்பரத்துக்காக சிலர் இது மாதிரி புகார்களை கிளப்பி விடுகிறார்கள். எனது சொத்துபற்றி யாராவது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன்!'' என்றார் காட்டத்துடன்.
மடியில் கனம் இல்லை என்றால், விவரமாக பதில் சொல்லலாமே!
நன்றி : ஜூனியர்விகடன்
இனி நான்..!
பழவூர் ஸ்டீல் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு கலால் துறையினர் வரிச் சோதனை நடத்தியபோது அது தனது ஆலை இல்லை என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் மறுக்கவில்லை. எல்லாம் முறையாகத்தான் நடக்கிறது. அதிகாரிகள் சாதாரணமான விசாரணைக்காகத்தான் வந்து சென்றார்கள் என்று பதிலளித்திருந்தார்.
இது மாதிரியான ஸ்டீல் நிறுவனம் ஒன்று, சென்ற வாரம் திருச்சியருகே திறக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மூலதனச் செலவு 300 கோடி என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்கள். அந்த வகையில் சுரேஷ் ராஜனின் இந்த ஸ்டீல் நிறுவனமும் சுமாராக 100 கோடி ரூபாயைத் தொட்டிருக்கும்.. இது குறைந்த உற்பத்தி சார்ந்த நிறுவனம் என்கிறார்கள்.
மடியில் கனமில்லை என்பவர்கள் எதற்காக பெயரைச் சுருக்கி பதிவு செய்ய வேண்டும்..? மாண்புமிகு அமைச்சர் சுரேஷ்ராஜன் என்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு வாசலில் மட்டும் போர்டு தொங்குகிறதே.. இதிலும் சுருக்க வேண்டியதுதானே..? நேர்மையிருப்பின் சொந்தப் பெயரிலேயே சொத்துக்களை பதிவு செய்திருப்பார்களே..? எதற்கு இந்தப் பயம்..? இதுவே சந்தேகத்தைக் கிளப்புகிறதே..?
மத்தியில் ஆட்சி நடத்தும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது எதற்காக உதவுகிறதோ இல்லையோ, கொள்ளையடித்ததை சேப்டியாக பாதுகாக்கவும், சட்டப்படியான வரவுகளாகப் பதிவு செய்யவும் நிச்சயமாக உதவுகிறது.
வருமான வரித்துறை என்கிற ஒரு துறை மத்தியில் ஆளும் கட்சியினரையும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியினரையும் அதிகம் கண்டு கொள்வதில்லை. அவர்கள் கேட்பதுபோல், விரும்புவதுபோல் சர்டிபிகேட்டை தந்துவிட்டால் போதும், நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்டை தூக்கிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்..!
இவ்வளவு தொகை கொடுத்து ஆலையைத் துவக்குகிறார்களே..? இத்தனை லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்குகிறார்களே..? எங்கேயிருந்து வந்தது பணம்? எப்படி வந்தது பணம்..? இது போன்ற கேள்விகளையெல்லாம் கட்சி சார்பற்று நேர்மையாக உழைத்து சம்பாதித்த இந்தியர்களிடம் தோண்டித் துருவிக் கேட்கும் வருமான வரித்துறை, சுரேஷ்ராஜன் போன்ற அரசியல்வியாதிகளிடம் மட்டும் மண்டியிட்டு கண்டும், காணாததுபோல போய்விடுகிறார்கள்..!
இந்த ஆட்சியில் இவர் மட்டுமல்ல.. அனைத்து அமைச்சர்களுமே இன்றைக்கு நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிட்டதுதான் உண்மை. வரும் தேர்தலில் இவர்கள் தோற்றால்கூட இவர்களது 5 தலைமுறைகள் நிச்சயமாக பிழைத்துக் கொள்வார்கள்..!
ஆகவே வாக்காளப் பெருங்குடி மக்களே..! இந்த முறை வாக்களிக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள்..! இந்த சுரேஷ்ராஜன் மீண்டும் வாக்கு கேட்டு வந்தால் இதுவரையில் சம்பாதித்த கணக்கை தவறாமல் கேளுங்கள்...! அந்தக் கணக்கு காந்தி கணக்காக இருந்தாலும் சரி.. மொய்க் கணக்காக இருந்தாலும் சரி.. உங்களது வாக்குக் கணக்கை மறக்காமல் எதிர் ஓட்டுக்களாக குத்தி உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!
இதைவிடவும் வேறொரு சிறந்த வழி உங்களுக்கு இனிமேல் கிடைக்காது..!

|
Tweet |
22 comments:
ரொம்ப நாள் கழிச்சு பழைய உண்மை தமிழனை பார்க்கிறேன் . காரசார பதிவு . கண்டிப்பாக பலனிருக்கும்
பினாமிகள் பெயரில் பொறியியல் கல்லூரி ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களும் செய்து வருகிறார் . ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டியை மனதில் வைத்து கொண்டே குமரி மாவட்டத்தில் வன பாதுகாப்பு சட்டம் போட்டு தனியார் காடுகளை பதிவு செய்ய விடாமல் அரசாணை பிறப்பிக்க பட்டுள்ளது .
ada vidappa. oru tamilan thaane saappidattum. avarudaia thalaivar adicchathula ithellam thoosu.
அண்ணே இத்தனை வருஷம் எழுதறீங்க உங்களால ஒரு சொத்து வாங்க முடிஞ்சதா ?? போங்கண்ணே போய் அதுக்கு வேலைய பாருங்க. என்ன எழுதி என்ன ஆக போது
[[[பார்வையாளன் said...
ரொம்ப நாள் கழிச்சு பழைய உண்மைதமிழனை பார்க்கிறேன். காரசார பதிவு. கண்டிப்பாக பலனிருக்கும்.]]]
நன்றி பார்வை..!
[[[Suresh Kumar said...
பினாமிகள் பெயரில் பொறியியல் கல்லூரி ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களும் செய்து வருகிறார் . ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டியை மனதில் வைத்து கொண்டே குமரி மாவட்டத்தில் வன பாதுகாப்பு சட்டம் போட்டு தனியார் காடுகளை பதிவு செய்ய விடாமல் அரசாணை பிறப்பிக்கபட்டுள்ளது.]]]
ம்.. இது வேறய்யா..? ஒரு தனி மனிதன் சம்பாதிப்பதற்காக அரசு சட்டம் போட்டு வளைந்து கொடுக்கிறது என்றால் தி.மு.க. கொள்ளைக்காரர்களாக் கூடி வாழ்ந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..!
[[[Unmai said...
ada vidappa. oru tamilanthaane saappidattum. avarudaia thalaivar adicchathula ithellam thoosu.]]]
இப்படிச் சொல்லியே நாம் ஒதுங்கிட்டோம்ன்னா கடைசீல நமக்கு குடியிருக்க ஒண்ணும் இருக்காது.. ஞாபகத்துல வைச்சுக்குங்க..!
[[[எல் கே said...
அண்ணே இத்தனை வருஷம் எழுதறீங்க உங்களால ஒரு சொத்து வாங்க முடிஞ்சதா?? போங்கண்ணே போய் அதுக்கு வேலைய பாருங்க. என்ன எழுதி என்ன ஆக போது?]]]
கரீக்ட்டுத்தான்..! நியாயமான பேச்சு..! என்னத்த எழுதி என்ன புண்ணியம்..? ஓட்டுப் போடுற அன்னிக்கு மட்டும் இதை மறந்திடாதீங்க.. உங்க கோபத்தை நச், நச்சுன்னு குத்தணும்..!
தலைவா...
இந்த மாதிரி பணப்பேய்களை எல்லாம் அடையாளம் காட்டும் பதிவுகளை எழுதினால் நீங்கள் கடைசியில் இப்படி எழுதியதற்கு வலு சேர்க்கும்...
//உங்களது வாக்குக் கணக்கை மறக்காமல் எதிர் ஓட்டுக்களாக குத்தி உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!
இதைவிடவும் வேறொரு சிறந்த வழி உங்களுக்கு இனிமேல் கிடைக்காது..!//
தொடர்ந்து தோலுயிரியுங்கள்...
y not replied my previous questioions ?
1 .குருதிபுனல் தோல்வி படம் . எனவே தியேட்டர் ஓனர் கமலுக்கு நன்றியுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன ? நஷ்ட ஈடு அல்லவா கேட்டிருக்க வேண்டும்
2. துக்ளக்கில் அல்டிமேட் ரைட்டர் சாரு எழுதும் கட்டுரை தொடர் குறித்து உங்கள் கருத்து ?
Wednesday, March 09, 2011 7:30:00 PM
[[[R.Gopi said...
தலைவா... இந்த மாதிரி பணப் பேய்களை எல்லாம் அடையாளம் காட்டும் பதிவுகளை எழுதினால் நீங்கள் கடைசியில் இப்படி எழுதியதற்கு வலு சேர்க்கும்...
//உங்களது வாக்குக் கணக்கை மறக்காமல் எதிர் ஓட்டுக்களாக குத்தி உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!
இதைவிடவும் வேறொரு சிறந்த வழி உங்களுக்கு இனிமேல் கிடைக்காது..!//
தொடர்ந்து தோலுயிரியுங்கள்.]]]
ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி கோபி..!
[[[பார்வையாளன் said...
y not replied my previous questioions ?]]]
கொஞ்சம் நேரம் கழிச்சு சொல்லலாம்னு இருந்தேன்..!
1. குருதிபுனல் தோல்வி படம் . எனவே தியேட்டர் ஓனர் கமலுக்கு நன்றியுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன ? நஷ்ட ஈடு அல்லவா கேட்டிருக்க வேண்டும்]]]
வெற்றி, தோல்வி என்பதை அதிக நாட்கள் தியேட்டரில் ஓடவில்லை என்கிற நோக்கில் பார்வையாளர்களும், ரசிகர்களும் சொல்வது.
ஆனால் திரைப்படத் தொழிலில் இருப்பவர்களோ முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் ஓகே என்பார்கள். கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் போச்சு என்பார்கள். அவ்வளவுதான்..
ராமநாதன் இதன்படிதான் தனது நன்றியினை கமலுக்குச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்..!
[[[2. துக்ளக்கில் அல்டிமேட் ரைட்டர் சாரு எழுதும் கட்டுரை தொடர் குறித்து உங்கள் கருத்து ?]]]
முதல் பாகம் ஓகே.. இரண்டாம் பாகத்தில் பாதி ஓகே. மீதி இழுவை..!
Only common-man is suffering in this country. All Babus and politicians are looting and enjoying the life without fear.
http://anubhudhi.blogspot.com/
இந்த மாநிலம் உருப்பட மோடி அல்லது நிதீஷ் குமார் போன்ற முதல்வர்கள் தேவை.இங்கே இருப்பதோ மு.க வும், ஜெயாவும் ..எனவே பிரச்சினைகள் தொடரும்
இன்னொரு முக்கிய விஷயம்.மத்திய அரசு கையாலாகத அரசு என நிரூபித்தாகி விட்டது.இதுவரை நமக்கு வாய்த்த பிரதமர்களில் சுத்தமான அக்மார்க் உதாவாக்கரை திரு MMS அவர்கள்.
மீண்டும் தி.மு க காங் கூட்டணி ஆட்சி அமைத்தால் அப்புறம் அதோகதிதான்.உதவாக்கரையும் ஊழலும் சேர்வது எவ்வளவு ஆபத்து என்பதை 5ஆண்டுகள் அனுபவித்தும் தமிழ் மக்களுக்கு புரியவில்லை என்றால் தமிழ் நாடு அழிவதில் தவறேதும் இல்லை
எனவே இப்போதைக்கு ஜெயா வை ஆட்சிக்கு கொண்டு வருவதுதான் தீர்வு.Atleast 2014 வரை ஜெயா vs Sonia சண்டையில் ஊழல் எதுவும் நடக்காது.(என நம்பலாம்)
unmai tamilan is rocking...savuku aduthu neenkal than engaluku thagavalgal pala tharukirirgal...kee procking bro...
ரொம்ப நாளாக ஒரே சீரியஸ் matters. நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் இடைஇடையியே மசாலாவும் கலகலப்பும் வேண்டும். சிங்கம்புலி விமர்சனத்தை எடுத்து விடுங்களேன் :-)
[[[Sankar Gurusamy said...
Only common-man is suffering in this country. All Babus and politicians are looting and enjoying the life without fear.
http://anubhudhi.blogspot.com/]]]
முடிந்த அளவுக்கு அவர்களைத் தடுக்க வேண்டுமெனில் நாம் தேர்தல் நேரத்திலாவது சுதாரிப்பாக இருக்க வேண்டும். வாக்குச் சீட்டை தவறாமல் பயன்படுத்துவோம்.. வேறு என்ன செய்வது..?
[[[Ganpat said...
இந்த மாநிலம் உருப்பட மோடி அல்லது நிதீஷ் குமார் போன்ற முதல்வர்கள் தேவை.இங்கே இருப்பதோ மு.க வும், ஜெயாவும். எனவே பிரச்சினைகள் தொடரும்
இன்னொரு முக்கிய விஷயம். மத்திய அரசு கையாலாகத அரசு என நிரூபித்தாகி விட்டது. இதுவரை நமக்கு வாய்த்த பிரதமர்களில் சுத்தமான அக்மார்க் உதாவாக்கரை திரு MMS அவர்கள். மீண்டும் தி.மு க காங் கூட்டணி ஆட்சி அமைத்தால் அப்புறம் அதோகதிதான். உதவாக்கரையும் ஊழலும் சேர்வது எவ்வளவு ஆபத்து என்பதை 5 ஆண்டுகள் அனுபவித்தும் தமிழ் மக்களுக்கு புரியவில்லை என்றால் தமிழ் நாடு அழிவதில் தவறேதும் இல்லை. எனவே இப்போதைக்கு ஜெயாவை ஆட்சிக்கு கொண்டு வருவதுதான் தீர்வு. Atleast 2014 வரை ஜெயா vs Sonia சண்டையில் ஊழல் எதுவும் நடக்காது.(என நம்பலாம்)]]]
உங்களுடைய நம்பிக்கையை சீர்குலைக்க விரும்பவில்லை. நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஜெயா ஆட்சிக்கு வந்துதான் தீருவார் போலிருக்கிறது..!
[[[cute photos said...
unmai tamilan is rocking. savuku aduthu neenkalthan engaluku thagavalgal pala tharukirirgal. kee procking bro.]]]
நன்றி நண்பரே.. தொடர்ந்து படியுங்கள். உங்களது ஆதரவைத் தாருங்கள்..!
[[[ஒரு வாசகன் said...
ரொம்ப நாளாக ஒரே சீரியஸ் matters. நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் இடைஇடையியே மசாலாவும் கலகலப்பும் வேண்டும். சிங்கம்புலி விமர்சனத்தை எடுத்து விடுங்களேன்:-)]]]
இது தேர்தல் நேரம். இந்த நேரத்திலாவது நமது ஜனநாயகக் கடமையை ஆத்தி விடுவோமே..? என்ன தப்பு..?
இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாம் விழிப்பாக இருக்க வேண்டிய தேர்தல் இது
Post a Comment